All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐம்பதாம் பகுதி..

ரஞ்சனி உடல் விறைத்து நின்றாள். அவள் கையிரண்டும் சேர்ந்தே பவித்ரன் கைக்குள் கண்டுண்டு கிடந்தன. அவள் குறைந்தது விரலைக்கூட அசைக்கவில்லை.

சுற்றி இருந்தவர்கள் வியந்து பார்த்தனர். பவித்ரன் பின்னே உள்ளே நுழைந்த மது கண்ட காட்சியில் மனமுடைந்தாள். அங்கிருந்த ரஞ்சனியின் குடும்ப வக்கீல் சிவம் மட்டும், அடக்கப்பட்ட சிரிப்பில் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

சட்டென ஒருவரும் அறியாமல் இதை படம் பிடித்தவர், ரஞ்சனியின் தந்தைக்கு அனுப்பினார்.

பவித்ரனுக்கு மெல்ல சுற்றுப்புறம் உறைக்க மெல்லிய சிரிப்பில் ரஞ்சனியை விடுவித்தான்.

எதுவுமே நடக்காதது போல், ரஞ்சனி பவித்ரனிடம், வணக்கம் நான் ரஞ்சனி என்றாள்.

பவித்ரன் கண்கள் கூறானது. உங்கள் கம்பெனி ஷேரை வாங்கியது நானே, இதைப்பற்றிய அடுத்த விளக்கத்தை என் வக்கீல் தெரிவிப்பார் என்றாள்.

பவித்ரன், இப்போது ஒரு தொழிற்சாலை முதலாளியாக பேச ஆரம்பித்தான்.

ஐ ம் பவித்ரன், பிளீஸ் பீ சீட்டட் என்றான் பொதுவாக, சிவம் தனது இரண்டு அசிஸ்டன்டுடன் பவித்ரன் முன் அமர்ந்தார்.

சிவம் பேச ஆரம்பித்தார். நீங்க இந்த கம்பெனிய சரியா வழிநடத்தவில்லை, அவர்களின் பங்கு மதிப்பை குறைப்பதாக ரஞ்சனி நினைக்கிறார். அதனால் இந்த கம்பெனியை ஏற்று நடத்த நினைக்கிறார். அதற்கான சட்ட ரீதியாக பத்திரங்கள் தயாரித்து வந்திருக்கிறோம் என தனது அசிஸ்டண்டைப் பார்த்தார், அவன் பையிலிருந்து ஒரு கட்டு பத்திரத்தை எடுத்தான்.

பவித்ரனுக்கு காட்சி விளங்க, ரஞ்சனியைப் பாத்து முறைத்தவன். சிவத்தின் முன் கை நீட்டி அவரது பேச்சைத் தடுத்தான்.

நான்கு வருடங்கள் இந்த தொழிலில் கொடிநாட்டியவன் நான். இன்று எழுந்த சிக்கலை எப்படி முறியடிப்பது என்பது எனக்குத் தெரியும் என்றான். இதில் முறியடிப்பது என்ற வார்த்தையில் அழுத்தம் கூட்டி, ரஞ்சனியைப் பார்த்து சொன்னான்.

இதை உங்களிடம் விளக்கவேண்டிய எந்தவித அவசியமும் எனக்கில்லை . உங்கள் பங்கு இப்போதும் நாற்பது சதவீதமே!! என்றான் தீர்கமாக. பவித்ரனின் பேச்சு சிவத்திடமிருந்தாலும், கண்கள் ரஞ்சனியை அவ்வபோது முறைக்கத் தவறவில்லை.

இப்போது ரஞ்சனி பேச ஆரம்பித்தாள். வெல், நீங்கள் என்னோடு ஒத்துழைத்து, என் தலைமையை ஏற்றால், உங்களுக்கும் உங்களை நம்பி வேலைக்கு சேர்ந்தவர்களுக்கும் நல்லது. இரண்டே மாதத்தில் நாற்பது சதவீத பங்குகளை விற்கவைத்த எனக்கு மற்றதையும் எப்படி வாங்குவது என்பது நன்றாகவே தெரியும் என்றாள்.

பவித்ரன், அப்படியானால்... நடந்த விபத்திற்கு நீதான் காரணமா?? என்றான் ரஞ்சனியிடம்.

அவள் மெல்லிய சிரிப்பில் இல்லை என்றாள். ஊழியர்களின் விஸ்வாசத்தை நீங்கள் சம்பாதிக்கவில்லை. வேலையில் கவனமில்லை. நான் பற்றவைத்தது சிறு பெறி, நீங்கள் ஏன் ஓலைக்குடிசையாக இருந்தீர்கள். இரும்புக் கோட்டையாக இருந்திருந்தால், நெருப்பாயினும் வீட்டை அழிக்க முடிந்திருக்காதே என்றாள்.

பவித்ரன், சட்ஆப் ... யூ... பிளடி சீட்.. என்னை ஏமாற்றிவிட்டு, எனக்கே பாடம் எடுக்கிறாயா!!! கெட் லாஸ்ட் என்றான் கடுமையாக...

பவித்ரனது கெட் லாஸ்ட் பொதுப்படையாக அனைவருக்கும் இருக்க, ரஞ்சனி சிவத்திடம், சாரி அங்கிள், நான் ஒரு டீல் போசணும், நீங்க கொஞ்சம் வெளிய இருங்க என்று கிசுகிசுத்தாள்.

அவரும், அவருடைய அசிஸ்டண்டும் வெளியேற, அங்கு நின்றிருந்த மதுவை சொடுக்கிட்டு அழைத்தவள், ஆள்காட்டிவிரலால் வாயிலை சுட்டினாள்.

மதுவை விடு, என்னிடம் நேரடியாகப் பேசு. எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த மதுவை நீ கருவியாக பயன்படுத்தி, அவளது பெயரைக் கெடுக்காதே!! இது நல்லதல்ல என்றான் பவித்ரன்.

நான் பொய்யானது எதையும் கூறவில்லை. வேண்டுமானால் என்றவள், பட்டென மதுவின் கைபேசியை அவளிடமிருந்து பறித்து, அதன் பாஸ்வேடைப் போட்டாள்.

ரஞ்சனி சரியான பாஸ்வேடைப் போட, மது அதிர்ச்சியில் செயுவதறியாது, கையைப்பிசைந்து கொண்டு நின்றாள். அதன் புகைப்பட அடுக்கில் தேடிப்பிடித்து நோட்டிஸ் போடில் ஒட்டிய புகைப்படத்தை எடுத்துக் காட்டியவள், நான் எதையும் பொய்யாக நோட்கிஸ் போர்டில் ஒட்டவில்லை என்றாள்.

பவித்ரனுக்கு அந்த புகைப்படம் அதிர்ச்சியே, இது எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்று அவனுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.

என்ன மது?? இது ?? என்றான் கடுமையாக பவித்ரன்.

இதை உங்களை ஏமாற்றி, உங்களுடன் சல்லாபித்ததாகக் காட்ட, மிரட்டி பணம் வாங்கக்கூட எடுத்திருக்கலாம் என்றாள் ரஞ்சனி.

மது ரஞ்சனியின் வார்த்தைகளில், உடல் கூசினாள். இல்லை பவிசார். நான் அப்படிப்பட்டவள் இல்லை பவி சார் என்றாள் மது.

பவி சாரா??.கால் ஷிம் பவித்ரன் என்றாள் ரஞ்சனி தன்னையறியாமல்.

பவித்ரன் ரஞ்சனியை அதிசயமாய் பார்க்க, ரஞ்சனியும் பட்டென பவித்ரனைப் பார்த்து முறைத்தவள், தனது பேச்சைத் தொடந்தாள்.

ஓ... காதலா?? என்றாள் ஒருமாதிரியான குரலில்..

ரஞ்சனியின் வார்த்தைகள் எல்லைமீறுவதை உணர்ந்த பவித்ரன், ஸ்டாப் ரஞ்சனி. நான் விசாரித்துக் கொள்கிறேன். நீ எதற்கு வந்தாயோ, அதைப் பற்றி மட்டும் பேசு என்றான்.

அதபத்திதான் பேசறேன். உங்கள் கவனமின்மை.

ம்சூஊ. என்றான் பவித்ரன்.

நீங்கள் கவனமாக இல்லாததால்தான், நீங்கள் தூங்கும் போது, இந்த செல்பியை இவளால் எடுக்க முடிந்தது. நீங்கள் பாதுகாப்பாக இல்லாததால்தான், உங்கள் வீடு வரை வந்து இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறாள். அத்தனையும் மீறி, இவ்வளவு தூரம் மாட்டிக்கொண்ட பின்னும், இதை மது அழிக்காததற்கு காரணம் என்ன?? என்றாள் ரஞ்சனி.

மது பயத்துடன் காத்திருக்க,

பவித்ரனை நேராகப் பார்த்த ரஞ்சனி, நீங்கள் ஒரு முட்டாள் என்றாள் அறிவிப்பாக!!.

பவித்ரன் முறைத்தான்.

இதை நான் கூறவில்லை. இதை சொல்லாமல், சொல்வது மது. இதை மதுதான் எடுத்த புகைப்படம் என கண்டுபிடிக்கமுடியாது என்ற அவளின் உங்கள் மீதான நம்பிக்கை.ஆம் ஐ ரைட் மது என்றாள் ரஞ்சனி.

மது விக்கித்து நின்றாள்.


சாரி சார். உங்கள் அனுமதி இல்லாமல் செல்பி எடுத்தது தப்புத்தான். நான் ஒரு பைலைக் கொடுக்க உங்கள் வீட்டிற்கு வந்தேன். அப்போது நீங்கள் ஹால் சோபாவிலே உறங்கியவாறு இருந்தீர்கள். ஏதோ ஒரு ஆசையில் உங்களுடன் ஒரு செல்பி எடுத்துவிட்டேன் மன்னியுங்கள் என்றாள் மது.

பவித்ரனுக்கு மதுவைப் பார்க்க பாவமாக இருந்தது. சரி நீ கொஞ்சம் வெளியில் இரு. அழாமல் போ!! என்றான்.

ரஞ்சனி கண்ணில் அனல் பறந்தது. மாறாக உதட்டில் சிரிப்புடன் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பவித்ரன் ரஞ்சனியிடம் திரும்பினான். மது செய்தது தவறாகவே இருந்தாலும், நீ செய்ததும் தவறுதான் என்றான் பவித்ரன்.

நான் வந்ததே பல தவறுகளை செய்யத்தான். அதில் இன்று பலியானது மது. நாளை என்றவள் ஆள் காட்டி விரலால் மேசையைத்தொட்டு, இந்த தொழிற்சாலை என்றாள் கண்ணில் நின்ற பளபளப்புடன்.

பவித்ரன் சிரித்தான். முடிந்தால் செய் என்றான்.

உனக்கு இன்சூரன்ஸ் பணம் வராது என நாளை போன் வரும். அன்று பாம் இருப்பதாக போன்தான் வந்தது. நாளை நிஜமாகக்கூட வெடிக்கலாம். நான் எனது பாதிப் பங்கை பன்னாட்டு நிறுவனத்தில் விற்க ஏற்பாடுகளை செய்துவிட்டேன் என்றாள் மிகவும் அமைதியான குரலில்....

பவித்ரன் பல்லைக் கடித்தான்.

என்ன சென்ன, என்னோடது 40% தானா, எனக்கு நன்றாகவே தெரியும் உன்னுடையதும் 40% தான். மீதி இருபது சதவீதம், தொழிலாளர்கள் மேல் எழுதி வைத்திருக்கிறார் உன் அப்பா. அதுவும் எனக்கு நன்றாகவே தெரியும் என்றாள் ரஞ்சனி.

பவித்ரன், நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றான் கடுப்புடன்.

ரஞ்சனி, ஒன்றுமில்லை. நன்றாக வேடிக்கை பார்த்தால் போதும், தொழிலாளர்கள் பங்கு என்கைக்கு மாறுவதையும், செங்கல், செங்கலாக உருவி எப்படி இந்த தொழிற்சாலையை தரை மட்டமாக்குகிறேன் என்று பார் என்றாள்.

ரஞ்சனி வேண்டாம். தொழில் செய்வோருக்கு என்று ஒரு நொறி இருக்கிறது. அதை நீ மீறுகிறாய். இதை அதற்குரிய இடத்தில் புகார் செய்வேன் என்றான் பவித்ரன்.

நல்லது. நீ அந்த வேலையைப்பார். நான் இந்த வேலையைப் பார்க்கிறேன் என்றாள் ரஞ்சனி.

விட்டா பேசிட்டே போற, நான் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறேன். என்னோட தொழிலைத் தொட்டால், நான் பதிலடி கொடுத்தால் உன் உடம்பு தாங்காது என்றான் பவித்ரன்.

ஓ... முயற்சித்துப் பார் என்றவள், பேச்சு முடிந்தது. எழுந்து எட்டு வைக்க, பவித்ரன் அவளது கையைப் பிடித்து தடுத்தான்.

ரஞ்சனி, தனது மற்றொரு கரத்தால் பவித்ரன் கரத்தில் ஓங்கி கராத்தே அடி வைத்தாள். பவித்ரன் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், பிடியை விட்டு, வலியில் கையை உதறினான்.

பவித்ரனைப் பார்த்து கனலாய் சிரித்தவள், இந்த ரஞ்சனி எதற்கும் தயாராகத்தான் இருக்கிறாள் என்றுவிட்டு மடமடவென வெளியேறினாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறு நாள் பவித்ரனுக்கு போன்வந்தது. பவித்ரன் அந்த ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்தான். இரவு உணவிற்காகவும், தொழில் பேச்சிற்காகவும் அழைக்கப்பட்டிருந்தான்.

ரஞ்சனியின் புடவையின் நிறம் மாறி இருந்ததே தவிர, கட்டும் விதமும், முழுக்கை ரவிக்கையும் மாறவில்லை. முடியை மொத்தமாக எடுத்து குதிரைவால் போட்டிருந்தாள். ஒப்பனைகள் பெரிதாக இல்லை. ஆனால் அவளது அழகு என்றும் குறையவில்லை.

பவித்ரன் கேசுவல் டீ சர்டிலும், ஒரு முக்கால் பேன்டிலும் வந்திருந்தான். தொழிற்சாலையில் இருந்த டையும், பார்மல் சட்டையும் பவித்ரனுக்கு பொருந்தியதைவிட, இது இன்னும் பொருத்தமாக இருந்தது.

உணவை பர்பே முறையில் எடுத்துக்கொண்டு எதிரெதிரே இருவரும் அமர்ந்தனர். அழகான மெல்லிய இசை எங்கிருந்தோ காதை குளிர்வித்துக்கொண்டிருந்தது.

தொழிற்சாலையில் பார்த்தவுடன் கட்டிக்கொண்டவன், இப்போது ரஞ்சனியிடம் கைகுடுக்கக்கூட மனமில்லாதவனாய் அமர்ந்திருந்தான்.

ரஞ்சனியிடம், நீ பேசுவது தவறு, தொழிலை கையிலெடுக்கத்தான் என்னை அழைக்கிறாய் என நினைத்தேன். இவ்வாறு நசுக்குவதாக இருந்தால் ஐம் சாரி என்ற சிவம் , என்னால் உனக்கு உதவ முடியாது என்றுவிட்டு, ஊருக்கு சென்றுவிட்டார்.

அதை மனதில் நினைத்தவள், அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மேடம் எதுக்கு கூப்பிட்டீங்க??என்றான் பவித்ரன். ரஞ்சனி சட்டென நிமிர்ந்து பவித்ரனை பார்த்தவள், பல்லைக் கடித்தாள். பவித்ரனது மேடம் என்ற அழைப்பு தன்னை மிகவும் அன்னியப்படுத்தியதை அவள் மனது உள்வாங்க மறுக்க, மூளை அவளைப் பார்த்து சிரித்தது.

எதையும் வெளிக்காட்டாமல், தொழிற்சாலையைப் பற்றி பேசத்தான் என்றாள் ரஞ்சனி.

சொல்லுங்க என்றான் பவித்ரன்.

ரஞ்சனி என்ன நினைத்தாலோ, சாப்பிட்டதும் பேசுவோம் என உண்ண ஆரம்பித்தாள்.

பவித்ரன், என்னவானது இவளுக்கு, ஆபிசில் பாம் போடுவேன் என்றாள். இப்போது பேசவே தெரியாதவள் போல், சாப்பிடுகிறாள் என மனதில் நினைத்தவன், தானும் உண்ண ஆரம்பித்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வபோது, மாறி மாறி பார்த்துக்கொண்டே உண்டனர். சில சமயம் ஒரேநேரத்தில் பார்த்துக் கொண்டால், சில நொடிகள், உணவில் கவனம் சிதறுவதை இருவருமே உணர்ந்தனர். மெல்லிய இசையில், பேசாத மௌனமான பார்வைகள், மற்றவரின் உருவத்தை கண்ணில் படம்பிடித்து, மனதில் சேமித்து வைத்துக்கொண்டது.

இதில் அதிகம் உருகியது பவித்ரன்தான். சாரி... இதை நீ பிரிந்து போனதும் பலமுறை எதிரில் இல்லாத உன்னிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் நீ வந்தவுடன், கேட்க மறந்துவிட்டேன் என்றான் பவித்ரன்.

ரஞ்சனி பதில் சொல்லவில்லை. மௌனமாகவே அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

அவளது ஆழ்ந்த பார்வையில் மெய்மறந்தவன், என்னபேசினோம் என்பதே மறந்து மௌனமானான்.

இருவரும் வேகமானவர்களே!! ஆனால் இந்த நிமிடத்தை இழக்கவிரும்பாமல், இருவரும் மெதுவாகவே உண்டனர்.

ரஞ்சனி ஒருபடி மேலே போய், அவளுக்கென்று வந்த ஒரு வகை உணவை, அவனது தட்டில் சிறிது பரிமாறினாள். பவித்ரன் ரஞ்சனியைப் பார்த்து மௌனமாகச் சிரிக்க, ரஞ்சனிக்கு திணறியது.

அவளது மனமோ, அதே பிரகாசமான முகம் என்றது. இருவருக்குமே, பிரச்சனையை பேச மனமில்லை. ஆனால் பகை அவர்களை விடுவதாய் இல்லை.

எவ்வளவு மெதுவாக உண்டாலும், உணவு ஒரு கட்டத்தில் தீர்ந்து போக, பவித்ரன் தண்ணீர் குடித்தான். இன்னும் ஏதாவது சொல்லவா?? எனக்கேட்டாள் ரஞ்சனி.

பவித்ரன் கண்கள் விரிந்தது. ரஞ்சனியின் முதல் அனுசரனையான வார்த்தை.

வேண்டாம் என்றவன் கண்கள் ரசனையாக ரஞ்சனியைப் பார்த்தது.

பவித்ரனின் இந்த பார்வையை எதிர்கொண்டவளுக்கு தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டது. மனதின் சலசலப்பில், அத்துடன் அவளும் உணவை முடித்துக்கொண்டாள்.

மேசை சுத்தம் செய்ததும், இரண்டு காபியுடம் அமர்ந்திருந்தனர்.

ரஞ்சனிக்கு தொழில் பற்றி பேசமனமில்லை. பவித்ரனுக்கும் அதே மனநிலைதான்.

ஆனால் தொழிலைப்பற்றி பேசாமல் போனால் அவன் என்ன நினைப்பான் என அவளும், அவள் என்ன நினைப்பாளோ என அவனும் பேசத் தொடங்கினர்.

என்னால் என் தொழிலை யாருக்கும் கொடுக்க இயலாது. அந்த எண்ணத்துடன் என்னை அழைத்திருந்தால், ஐ ம் சாரி என்றான் அமைதியாக. நேற்று பேசிய கடுமை அவனிடம் இல்லை. ஆனால் கருத்துமாறவில்லை.

என்னுடைய பங்குகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்?? என்றாள் ரஞ்சனி. அவளது குரலில் கடுமையில்லை. இனிமை கூடி இருந்தது.

என்னால் தொழிலில் பாட்னராகக்கூட உங்களை சேர்த்துக் கொள்ள முடியாது. நீங்கள் நஷ்டப்படவும் தேவையில்லை. அதற்கு இணையான எனது சொத்தை விற்று, திரும்ப என்னுடைய பங்குகளை வாங்கிக் கொள்கிறேன் என்றான்.

ரஞ்சனி காத்திருந்தது இந்த வார்த்தைக்காகத்தான். நீங்கள் ஏன் மற்றவரிடம் விற்க வேண்டும், என்னிடமே கொடுத்துவிடலாமே என்றாள்.

பவித்ரன் சற்று யோசித்தான். ரஞ்சனி நிசப்தமான மலர்ந்த முகத்துடன் காத்திருந்தாள்.

அது சரிவராது என வாயெடுத்தவன், அவளின் முகத்தில் என்ன கண்டானோ!! சரி என தலையசைத்தான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐம்பத்தி ஒன்றாம் பகுதி..

பவித்ரன் தனது நிலங்களை விற்க ரஞ்சனியை அழைத்தான்.

அவளும் நிலங்களைக் காண சென்றாள். அது ஒரு பரந்த வயல் வெளி பார்க்க குளிர்ச்சியாக இருந்தது.

பவித்ரன் இந்த நிலத்தின் மதிப்பும் பங்குகளின் மதிப்பும் ஒன்றே, இதை வாங்கிக்கொள்கிறாயா?? என்றான்.

என் காரிலே ஏறுங்களேன், போகும் வழியில் பேசிக்கொண்டே போகலாம் என்றாள்.

பவித்ரன் தனது காரை அசிஸ்டன்டிசம் கொடுத்துவிட்டு ரஞ்சனியுடன் அமர்ந்தான்.

ரஞ்சனி, அவள் டிரைவரை கூப்பிட்டாள்.

ரஞ்சனி யோசனையாக வர, பவித்ரன், நீ என்ன நினைத்தாலும், தயங்காமல் சொல்.எனக்குள்ள சொத்துக்கள் உனக்கும் நன்றாகவே தெரியும். அதற்கு ஈடாக வேறு என்ன வேண்டுமானாலும் கேள் என்றான்.

ரஞ்சனியின் கண்கள் பளபளத்தது.

ம்.. என்றவளின் கார் ஊட்டியை நோக்கி பயணித்தது.

பவித்ரன், அதை கண்டுகொண்டான். ரஞ்சனியின் கையை மென்மையாகப் பிடித்தவன். உனது திட்டம் என்ன?? என்றான் அவள் கண்ணில் எதையோ தேடியவாறு..

மௌனமாகச் சிரித்தவள், திட்டமா?? நிறையவே இருக்கிறது!! அவனது கண்களை ஆழமாகப் பார்த்தவள், திட்டங்களையெல்லாம் வெளியில் சொல்பவள் நானில்லை என்றாள்.

ரஞ்சனி, ஏனோ கையை உறுவ முயற்சிக்கவில்லை. ஊட்டி மலை ஏற ஏற என்ன தடுத்தும் இருவருக்குள்ளும், கடந்த கால கசப்பான நினைவுகள் எழுவதை தடுக்க முடியவில்லை.

கார் மலையை சுற்றிச் சுற்றி ஏற, பின் சீட்டில் அமர்ந்திருந்த பவித்ரனும் ரஞ்சனியும் அவ்வபோது லேசாக இடித்துக்கொண்டனர். காரின் ஆட்டத்தில் பவித்ரன் ரஞ்சனியின் கையை இறுக்கப் பிடித்தான்.

பவித்ரனின் ஊட்டி கெஸ்ட் ஹௌசுக்குள் கார் நுழைந்தது. பவித்ரன் மூச்சை இழுத்துப்பிடித்தான்.

மெய்ன் கேட்டைக்கடந்து, அழகிய தோட்டப் பகுதியைக் கடந்து, முன் வாசலுக்கு வந்து நின்றது கார். ரஞ்சனி காரை விட்டு இறங்கியதும் கம்பத்தில் அறுபட்டு தொங்கிக்கொண்டிருந்த கயிறு, அந்த கொலைகார இரவை ஞாயப்படுத்த தவறவில்லை.

சத்யாதேவி இறப்பிற்கு பின் பவித்ரன் ஊட்டி வந்ததே இல்லை. கயிறு இருப்பதே அவனுக்கு அதை பார்த்த பின்தான் நினைவு வந்தது.

உடனே ரஞ்சனியை திரும்பிப் பார்த்தான். அவள் அந்த கம்பத்தை நோக்கி நடந்து கொண்டிருக்க, ரஞ்சனி வேண்டாம். போகாதே என்றவன். அவளது கைப்பிடித்து நிறுத்தினான்.

ரத்தக்கரை படிந்த கயிறு அது. அது இத்தனை வருடமாக வீட்டின் முன் இருக்கிறது. அசிங்கமாக!! அதை எடுத்து எறியத்தான். வேறொன்றுமில்லை என்றாள் ரஞ்சனி.

பவித்ரன் ரஞ்சனியை உற்று நோக்கினான். அவள் முகத்தில் கவலையில்லை. அதிர்ச்சி கூட இல்லை. இருந்தாலும் ரஞ்சனி கோபத்தை தவிர எந்த உணர்ச்சியும் அவ்வளவு சீக்கிரத்தில் வெளிப்படுத்த மாட்டாள் என நன்கு அறிந்தவனால், இப்போது அவளின் மனப்போராட்டத்தையும் அறிய முடிந்தது.

நீ போக வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். நீ உள்ளே போ. நான் இதோ வருகிறேன் என்றான்.

ரஞ்சனி ஒன்றும் சொல்லாமல் செல்ல, பவித்ரன் அந்த கயிற்றை வெறுத்தவனாக, அதை பிடிங்கி எறிந்து, எரித்தே விட்டான்.

நான் இந்த வீட்டை வாங்கிக்கொள்கிறேன். இதன் மதிப்பைக் கூறுங்கள் என்றாள் ரஞ்சனி.

பவித்ரன், நான் இதை விற்பதாக இல்லை என்றான்.

ஏன்??, உங்களின் பல வெற்றிப் பதிப்புகள் இங்கே புதைந்து கிடக்கிறதோ என்றாள் ஒருமாதிரியான குரலில்...

இல்லை. ஒரு மனிதனாக, ஒரு கணவனாக, ஒரு மகனாக, என்றவன், ரஞ்சனியை அழுத்தமாகப் பார்த்து, ஒரு காதலனாக, ஒரு தகப்பனாக படு தோல்வி அடைந்த சுவடுகளே இங்கு மீதம் இருக்கிறது என்றான்.

ரஞ்சனி, தகப்பன் என பவித்ரன் கூறியதும், சற்றே உறைந்துதான் போனாள்.

பவித்ரன் தொடந்தான், அதை நான் தாங்கிக்கொள்கிறேன். ஆனால் உனக்கு திரும்பவும் வலியைக் கொடுக்கமாட்டேன் என்றான்.

ரஞ்சனி. நான் இதை வாங்கிக்கொள்வதாக முடிவெடுத்து விட்டேன். நீங்கள் யோசித்து விலை கூறுங்கள் என்றவள்.

மாடியில் அவளிருந்த அறைக்கு ஏறிச்சென்றாள்.

எனது முடிவு மாறாது. நான் விற்பதாக இல்லை. நான் போகிறேன் என பவித்ரன் திரும்பவும், இரண்டு உயரமான நாய்கள் அதன் டிரைனருடன், வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

பவித்ரன் திகைத்து நிற்க, ரஞ்சனி திரும்பி, அவன் திகைப்பைப் ரசித்துவிட்டு, முடிந்தால் போங்கள் என்றுவிட்டு அறைக்கு சென்று கதவடைத்தாள்.

இனி பவித்ரன் எங்கே போக முடியும்.

பவித்ரன், அந்த சோபாவை விட்டு எங்கும் நகரமுடியவில்லை. எதிர் சோபாவில் டிரைனரும், அவர்களின் அடுத்த கட்டளைக்கு தயாராக நாய்களும், பவித்ரனை காவல் காத்தனர்.

நன்றாக தூங்கி எழுந்து வந்த ரஞ்சனி, கூடத்தில் கண்ட காட்சியில் சிரிப்பை அடக்கியவாறு வந்து சேர்ந்தாள்.

நீண்ட நேரமாக அவரசத்தை அடக்கிக் கொண்டிருந்தவன், ஹே!! நான் டாய்லட் போகணும் ரஞ்சனி என்றான்.

ரஞ்சனி வாய்விட்டே சிரித்துவிட்டாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரவு உணவு டைனிங் டேபிளில் அடுக்கப்பட்டு இருந்தது.

அதை எடுத்து சுவைத்துப் பார்த்த ரஞ்சனி, ஆளைத் தேட சமையலறைக்கு சென்றாள்.

அவளது கணிப்பு சரியாக இருந்தது. சமைத்தது வள்ளியே!! தனது நான்கு வயது சிறுவனுக்கு அப்பளத்தை கொரிக்கக் கொடுத்துவிட்டு, இன்னும் சில அப்பளங்களை வறுத்துக்கொண்டிருந்தாள்.

வள்ளி!! என்றதும் திடுக்கிட்டு திரும்பியவள், அம்மா நீங்களா?? நான் நாயோன்னு பயந்துட்டேன். நல்லா இருக்கீங்களா?? ரஞ்சனிமா என்றாள் வள்ளி.

எப்போ வந்த??, எப்படி இங்க வந்த?? என்றாள் ரஞ்சனி.

பவித்ரன் ஐயாதான் கூப்பிட்டாக!! ஏம்மா கொஞ்சம் அந்த நாயக் கட்டுறீங்களா?? இவன் பயப்படுறான் என்றாள், தன் மகனை சுட்டிக்காட்டி.

ஓ... சாரி தம்பி, நீ போய் விளையாடு. நான் சொல்லீடுறேன் என்றாள்.

அவனோ இருந்த இடத்தை விட்டு நகராமல், தனது அன்னையை பார்த்துக்கொண்டு நின்றான்.

அரை டவுசரில், அப்பளம் சிந்திய சட்டையில், தாயின் அனுமதிக்காக காத்திருந்தவனை ரஞ்சனிக்கு மிகவும் பிடித்துவிட, உன் பேர் என்ன தம்பி?? என்றாள்.

ராஜா. என முணங்கினான்.

ராஜாங்கம்மா ணு சத்தமா சொல்லு டா என்றாள் வள்ளி.

ம்சூ என்ற ரஞ்சனி, அவனை கையில் தூக்கிக்கொண்டு, என்னை அத்தைனு கூப்பிடணும், இந்த அம்மாவெல்லாம், உங்கம்மாவே வச்சுக்கட்டும் என்றாள்.

அப்பளத்தை ஆசையாக பார்த்தவனிடம், அடுத்த அப்பளத்தை எடுத்துக்கொடுக்க, வள்ளி ரஞ்சனியை ஆச்சரியமாக பார்த்தாள்.

என்ன வள்ளி? என்ற ரஞ்சனியிடம், ஏதோ சொல்ல வாயெடுத்தவள், என்ன நினைத்தாலோ, ஒன்றுமில்லை என, அப்பளம் பொரிக்க ஆரம்பித்தாள்.

கேட்டு அப்பளம் கொடுக்காத அன்னையை விட, கேட்காமலே கொடுக்கும் அத்தையை ராஜாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஹாலில் செல்லை நோட்டிக்கொண்டிருந்த பவித்ரனிடம், மாமா அப்பளம் வேண்டுமா?? என கேட்ட ராஜாவை நிமிர்ந்து பார்த்து மலர்ந்த பவித்ரன், வா !! வா!! என அவனை ஆர்வமாக அழைத்தான்.

அத்தை என்ன இறக்குங்க, நான் மாமாட்ட போறேன் என ராஜா கூறியதும், ரஞ்சனி அதிர்ந்து பவித்ரனைப் பார்க்க, அவனோ சினேகமான புன்னகையில் அவளது பார்வையை எதிர்கொண்டான்.

ரஞ்சனிக்கு இப்போதுதான் வள்ளியின் எதற்காக அதிர்ந்தால் என புரிந்தது. சற்றே தர்ம சங்கடமாக உணர்ந்தாள் ரஞ்சனி.

அம்மா, ஐயா சாப்பிட வாங்க, என அழைத்தாள் வள்ளி.

எல்லா அழைப்புகளும், தன்னையும் பவித்ரனையும் சம்பந்தப் படுத்துவது போல் இருக்க ரஞ்சனியின் புருவம் சுருங்கியது.

சற்றுமுன், ராஜாவின் அத்தை மாமா, இப்போது வள்ளியின் அம்மா ஐயா!! இது சரியில்லையே என நினைத்தாள் ரஞ்சனி. சுற்றுப்புறம் என்னையும் பவித்ரனையும் இணைக்கிறதா?? இல்லை பவித்ரனின் சூழ்ச்சியா?? எனக் கணக்கிட்டாள்.

ரஞ்சனி டைனிங் டேபிளில் அமரவும், அவளுக்கு பக்கத்தில் பவித்ரன் அமர்ந்தான்.

ரஞ்சனிக்கு மனதில் அலாரம் அடிக்க, சாதம் பரிமாறும் வரை பொறுத்திருந்தவள், பவித்ரன் சாதத்தில் கைவைத்ததும், தட்டை பட்டென இழுத்தாள்.

எழுந்திரு!! என்றாள், பவித்ரன் முன் சொடுக்கிட்டு.

பவித்ரன் புரியாமல் எழ, பிடி!! என அவன் கையில் தட்டைத் திணித்தாள்.

பங்குக்கு இணையான எதையும் தருவேன் என்று சொன்னாயே, இப்போது எனக்குத் தேவையானதை நான் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வீடும், உன் மானமும் என்றவள், தரையை சுட்டிக்காட்டி போ!! போய் உட்கார்ந்து சாப்பிடு என்றாள். இனி எனக்கு இணையாக உட்காரவே கூடாது என்றாள்.

பவித்ரன், ரஞ்சனியின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியிலும், கடந்து வந்த காட்சிகளை திரும்பவும் நடப்பதை நம்ப முடியாமலும் நின்றிருந்தான்.

பவித்ரன் அலட்சியமாக நிற்பதாக நினைத்தவள், பட்டென தட்டை பிடிங்கி கீழே ஓரத்தில் வைத்தவள், போ!! என்றாள்.

ரஞ்சனியின் கண்களை உற்றுப் பார்த்தவன், மடமடவென அவள் தட்டை வைத்த இடத்தில் கீழே உட்கார்ந்து உண்ண ஆரம்பித்தான்.

தங்கள் முதலாளி இன்றுபட்ட அவமானத்தை, அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் அதிர்ந்து பார்க்க, ரஞ்சனிக்கு பவித்ரனை இந்த கோலத்தில் பார்க்க அழுகையே வந்துவிட்டது.

எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், மடமடவென படியேறி தனது அறைக்குச் சென்று கதவடைத்துக்கொண்டாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் எதற்காக இப்படி ஒரு அவமானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அவன் வீடு, அவளுடைய பணியிளர்கள் செய்த உணவு. தட்டு முதல் டைனிங்டேபிள் வரை அவனுடையதே.

பேசிய என்னை ஒரு அறை விட்டிருக்கலாம். அப்போது கூட எனக்கு இவ்வளவு வலித்திருக்காது என நினைத்து கண்ணீர்விட்டாள்.

கதவு தட்டும் ஒலியில், வேகமாக கண்ணைத் துடைத்துக்கொண்டு, கதவைத் திறந்தாள்.

எதிரில் சாப்பாட்டுத் தட்டுடன் பவித்ரன் நின்றிருந்தான்.

அவனைப் பார்த்து முறைத்தவள், கதவை மூட எத்தனிக்க, அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் பவித்ரன்.

ரஞ்சனியின் முறைப்பை பொருட்படுத்தாது, அவளை சோபாவில் அமர்த்தியவன், தானும் அருகில் அமர்ந்தான்.

எனக்கு சாப்பாடு வேண்டாம். வேலைக்காரனாக சாப்பாடு எடுத்து வந்திருந்தால், அதை வைத்துவிட்டு வெளியில் போ!! என்றாள்.

பவித்ரன் சிரித்தான். வீட்டுக்காரனாக வந்திருந்தால்??? என எதிர்கேள்வி கேட்டான்.

கெட் அவுட், நாயக் கூப்பிடவா?? என்றான் ரஞ்சனி.

பவித்ரன் எழுந்தான். முன்னிருந்த டீபாயில் தட்டை வைத்தான். ரஞ்சனி, அடுத்து என்ன செய்யப்போகிறான்?? என படபடப்பாக காத்திருக்க, அவளது வலக்கையை இழுத்தான் பவித்ரன்.

கையை உதறியவளிடம், ச்சூ என வாயில் விரல்வைத்துக்காட்டியவன், அருகிலிருந்த திசுவை எடுத்து, அவளது விரலில் இருந்த உணவைத் துடைத்தான்.

ரஞ்சனி, மனது சற்று அமைதியானது. என்னை அவமானப் படுத்தியதற்கு என்னைவிட அதிக வலியை நீயே அனுபவித்திருப்பாய். எனக்கு இது நன்றாகவே தெரியும், என அவளது விரல்களை துடைத்தவாறு கூறினான்.

ரஞ்சனி, அதிர்ந்து அவனைப் பார்க்க, கண்களில் இன்னும் லேசான கண்ணீர் உள்ளது என்றான். நாம் நேசிப்பவர்களை காயப்படுத்தும் போது, நமக்கு உண்டாகும் வலி நரகத்தைவிட கொடுமையானது. நான் அதை பல முறை அனுபவித்துவிட்டேன் என்றான் பவித்ரன் எங்கோ பார்த்தவாறு...

ரஞ்சனி கையை உருவிக்கொண்டாள். சரி நீங்க போங்க!! என்ன செய்யவேண்டும் என நான் பார்த்துக்கொள்கிறேன!! என்றாள்.

பவித்ரன், தட்டை திரும்பவும் கையிலெடுக்க, ரஞ்சனி முறைத்தாள்.

ரஞ்சனியின் முறைப்பை அவன் கண்டுகொள்ளவில்லை. சாதத்தை உருட்டி ஊட்டினான். ரஞ்சனி மறுத்தாலும் அவன் விடுவதாக இல்லை.

ரஞ்சனி நான் ஒன்று கேட்கவா?? என்றான் பவித்ரன்.

ரஞ்சனி, பவித்ரனை முறைத்தவாறு தின்றுகொண்டிருந்தாள்.

அதைப் பார்த்து சிரித்தவன், எம்பையனும் இப்படித்தான் கோபப்படுவான!! என்றான்.

ரஞ்சனிக்கு தொண்டையில் உணவுசிக்கி புறை ஏறியது.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 
Top