All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தே !நீங்க என்னவோ நான் தான் உங்க வீட்டு மருமகன்னு சொல்லிட்டு இருக்கீங்க ...ஆனா உங்க புள்ளைக்கு இந்த போட்டோவில் ,வீடியோவில் உள்ள பெண்ணில் யாராவது ஒருத்தி தான் மனைவியாக வேண்டுமாம் ......நான் கிழவியும் .....சப்பையாம் .இதில் உள்ள பெண்கள் தான் சும்மா கும்முனு இருக்காங்களாம் ....."என்றவள் போனினை அவர்களிடம் கொடுத்து விட்டு அவன் வைத்த சிறு ஆப்புக்கு பெரிய கடப்பாறையை சொருகி விட்டாள் .

விளையாட்டுக்காக வேண்டும் கொடுத்தாளோ ,அவன் வேண்டாம் என்று கொடுத்தாளோ அது அவளுக்கு தான் வெளிச்சம் .இரு பக்க பெற்றோரும் திகைத்து போயினர் .அதன் பிறகு ஆறு மாதத்திற்கு நான்கு பெற்றோரும் எடுத்த கதா கலாபசேனையில் கார்த்திக் நொந்து நூலாகி பார்ட்டி ,சிப் ,பப் ,உடன் பணி புரியும் பெண்கள் என்றால் பாலை கண்ட தெனாலிராமன் பூனையாக அலற ஆரம்பித்தான் .

எவ்வளவூ சமாதானம் செய்தும் மதுரா மலை இறங்கவில்லை .மனதில் ஏற்பட்ட சுணக்கம் ,நீண்ட அகழியாகி இருந்தது .தன் கணவூ நாயகன் அவன் இல்லை என்பதால் அறிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி அவளுக்கு நீங்கவே இல்லை .அதனாலோ என்னவோ அவனுடனான திருமணத்தை தள்ளி போடவோ இல்லை நிறுத்தவோ,அவன் பேச்சை மீற வேண்டும் என்றோ யார் சொல்லியும் கேளாமல் தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று சோனாவிடம் வேலைக்கு சென்றது .

சங்கரனும் கார்த்திக் போட்டோ விவகாரத்தில் அதிர்ந்து தான் போய் இருந்தார் .சிறு வயது முதல் இவள் தான் மனைவி என்று சொல்லி வளர்த்தும் ,மற்ற பெண்களோடு இழைந்து நின்றது ஜீரணிக்க முடியாத ஒன்றாய் இருந்தது .தான் தூக்கி வளர்த்தவன் 'கார்ப்போர்ட்டட் கலாச்சாரத்தில் 'ஊறி இருந்ததை அவரால் ஏற்க முடியவில்லை .

அந்த போட்டோ விஷயம் மட்டும் இல்லை என்றால் இன்னேரம் மதுராவிற்கும் ,கார்திக்க்கும் திருமணமே முடிந்து இருக்கும் .அதை பற்றி தான் இரு வீட்டு பெரியவர்களும் அப்போது பேசி கொண்டு இருந்தனர் .கார்த்திக் தனக்கு தானே வைத்து கொண்ட ஆப்பில் ,சங்கரன் பொங்கி எழுந்து திருமணத்தை கால வரை இன்றி ஒத்தி வைத்தார் .மகளையும் சோனாவுடன் சென்னைக்கு அனுப்பி விட்டார் .விதி சோனா வடிவில் மதுராவின் வாழ்வில் மீண்டும் நுழைந்து இருந்தது .விஜய் விட்டு மதுரா பிரியும் ஒவ்வொரு தடவையும் அவர்களை இணைப்பதே சோனா தான் முதலில் இருந்தே அப்படி தான்.இருவருக்கும் புள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்ததே சோனா தான் ...அதுவும் 10 வருடங்களுக்கு முன்பே

மதுராவின் எதிர்பார்ப்பு நியாயமானதாக இருக்கலாம் .பெண்களின் கணவூ பற்றி நீயா -நானா வரை விவாதம் நடத்தியாகி விட்டது .ஆனால் PRACTICAL ஆக வேலைக்கு ஆகாத ,ஆக முடியாத எதிர்பார்ப்புகள் என்று தான் சொல்ல வேண்டுமோ !.ஸ்ரீ ராமன் போலெ 'மனதாலும் இன்னொரு மாதை தீண்டேன் 'என்பது இந்த காலத்தில் நடக்க கூடிய ஒன்றா ???/வாழ்வில் எத்தனையோ அழகான பெண்களை தினமும் ஒரு ஆண் சந்திக்க நேரும் .அப்படி ஒரு அழகான பெண்ணையோ /ஆணையோ பார்த்தால் ,ஒரு நொடி மனதளவில் 'அப்பா !என்ன அழகு 'என்று ரசிக்காமல் இருக்க முடியாது .அப்படி ரசிக்க தோன்றுவது இயற்கையும் கூட ....சினிமாவில் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை எத்தனையோ பெண்கள் கதாநாயகிகளாக வந்து ,கணவூ கன்னிகளாக இருந்து இருக்கிறார்கள் .அது கூட கூடாது என்று கண்ணோடு ,மனதையும் மூடி கொள்ள முடியுமா என்ன ????

பெங்களூரு ,ஆஸ்திரேலியா போன்ற ஹை டெக் நகரங்களில் ,கார்பொரேட் கலாச்சாரம் வெகுவாக பரவி விட்ட காலத்தில் ,பார்ட்டி ,பப் ,டான்சிங் ,வீகென்ட் கெட் டுகெதர் எல்லாம் சர்வ சாதாரணம் ஆகி விட்ட ஒன்று .உடன் பணி புரியும் ஆண்களை ,பெண்களை கட்டி பிடித்து பிரின்ட்லியாய் முத்தமிடுவது வெளிநாடுகளில் சகஜம் .இங்கேயே பரவி விட்ட ஒன்று .இவை நம் இந்திய கலாச்சாரம் இல்லை தான் என்றாலும் இன்றைய இளைஞ்சர்களில் பெரும் பாலானோர் பின்பற்றுவது.

ரோட்டில் செல்லும் போது ,சினிமா பார்க்கும் போது கூட யாரையும் ரசிக்காமல் ,குதிரைக்கு கண்களில் BLINDERS அணிவித்தது போலெ,மதுரா ஒருத்தியை தவிர மற்ற பெண்களை ரசிக்காமல் இருக்க முடியுமா ???/இவளை மட்டும் இதயராணியாக ,தன் வாழ்க்கையாக ,உயிராக ,எல்லாமாக பூஜிக்க ஒருவனால் முடியுமா ?முடியும் .உண்மையாக காதலித்தால் முடியும் என்பது மதுராவின் வாதம் .ஒட்டுமொத்த சரணாகதி .காதலில் சாத்தியம் என்கிறாள் .

அனைத்து காதல் கதைகளிலும் கேள்விப்படும் கான்செப்ட் தான் என்றாலும் நிஜ வாழ்கையில் அப்படி ஒருவன் கலியுக ஸ்ரீ ராமனாய் கிடைக்க முடியுமா மதுராவிற்கு ???

ஒன்றும் இல்லா போட்டோ விஷயத்தை பெருசாக்கி ,சங்கரன் நாட்டாமையாக மாறி தீர்ப்பு வழங்கி ,கார்திக்க்கை பெற்றோர்கள் ஜூஸ் பிழிய வைத்து,கொடுமை படுத்திய மதுராவை கண்டால் ஒட்டுமொத்த குன்னூர் அலறும் பொது ரகு எம்மாத்திரம்.இருவரும் பேயை கண்டது போலெ ஓடாத குறை .இன்று அவள் கையில் கிடைத்த அடிமை அவள் அண்ணன் ரகு

தரையில் விழுந்து கிடந்தவன் ,"அம்மா !"என்று பவானியை துணைக்கு அழைத்தான் .

(பய புள்ள ....நல்லா விவரமா தான் இருக்கு .....இவளை எல்லாம் தனியே எவன் ஹாண்டில் செய்வது ....சேதாரம் பெருசா ல இருக்கும் .)

ஹாலுக்கு வந்த பவானி ,மகளின் தலையில் குட்டி ,"வந்த உடனே அவனை வம்புக்கு இழுக்கணுமா ....அடங்குடீ ......வாலை அவுத்து விட்டே ஓட்ட நெறுக்கிடுவேன் .....பாவம் அவன் ...உன் கூட சாப்பிடனும்ன்னு பசியில் வெயிட் செஞ்சுட்டு இருக்கான் .அவனை போய் வம்பு பண்ணிட்டு ....போய் கை ,கால் கழுவிட்டு வா .....அப்படியே செஞ்சு வச்சு இருக்கறதை டினேனிங் டேபிள் எடுத்து வந்து வை ....கண்ணா போ பா ."என்றவர் சமையல் அறைக்கு சென்றார் .

"டேய் !அண்ணா பையா ......அவ்வளவூ பாசமா உனக்கு எம்மேல ......நம்ப முடியவில்லை .....வில்லை .....வில்லை ......"என்று ராகம் இழுத்தவள் ,"நீ எப்போதுமே அந்த ஜிராஃபீக்கு தானே சோம்பு தூக்குவே .....என்ன என் பக்கம் காத்து வீசுது ....."என்றாள் அவன் எழும்ப கை கொடுத்தபடியே

"ஐயோ !தாயே ......ஆதிபராசக்தி ......மஹாகாளி ......பரதேவதை ......உன் ஆட்டத்துக்கு நான் வரலை .....மீ ரொம்ப பாவம் .....நீயாச்சு அவனாச்சு ....நீ அவனை அடி ,ஓதை ,தூக்கி போட்டு மிதி ......ஆளை விடு .......வா போய் சாப்பிடலாம் ......உன் ஹிட்லர் உனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் செஞ்சு வைச்சு இருகாங்க ......"என்று முழுதும் சரண் அடைந்து ,சாப்பாட்டின் மேல் அவள் கவனத்தை திருப்பி விட்டான் .

PENANCE WILL CONTINUE................ தவம் தொடரும்......................
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மல்லிகை முல்லை பூப்பந்தல்
மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள்
பச்சை மாவிலை தோரணங்கள்
எல்லாம் எதற்காக மதுராக்ஷி
உனக்கு விஜய கருணாகரனுடன்
கல்யாணம் அதற்காக.............''

பாப்பூ, பாப்பூ-ன்னு செல்லம்
கொஞ்சினா அத்தைக்
கண்டுக்காம, கார்த்திக்
மாமனுக்கு இப்பிடி ஆப்பு
வைச்சுட்டியே, மதுக்குட்டி

அதெல்லாம், மகேந்திர பாகுபலி
மாதிரி, அஞ்சாதவன், அடங்காதவன்
அசாராதவன்=னு பேர் வாங்கின
எங்க விஜய கருணாகரன்
ஹீரோவாலே-தான் மதுராக்ஷியை
எல்லாரிடமிருந்தும், எல்லா
விதத்திலும் காப்பாற்ற முடியும்
அனிதா டியர்

pondra uyarntha comments podum natpoos ku thanks::p:p:p:D:D:devilish::devilish::devilish:;);)
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM ---23 தவம் 23

சாப்பாடு என்றதும் மதுராக்கு சண்டை எல்லாம் கூட பிறகு தான் .அதுவும் வெகு நாள் கழித்து பவானியின் கை பக்குவம் ஆயிற்றே !

"அம்மா !பாருங்க உங்க ஆசை புள்ளையை ....உங்களை போய் ஹிட்லர்ன்னு பெயர் வைச்சு கூப்பிடறான் ....பாருங்க நீங்க செல்லம் கொடுத்து கொடுத்து எப்படி குட்டிச்சுவர் ஆகி போய் இருக்கான் என்று "என்று வாயுக்கும் கைக்கும் சண்டை நடக்கும் போது கூட அண்ணனை மாட்டி விட மறக்கவில்லை .

சாப்பிட்டு கொண்டு இருந்த ரகு புரை ஏறி இரும்பவே ஆரம்பித்து விட்டான் .

"என்னடா அண்ணா .....பாவா அம்மா சாப்பாடு ரொம்ப நாள் கழிச்சு சாப்பிடறே தான் ஆன அதுக்குன்னு காணாததை கண்டது போல் இப்படியா அலைஞ்சுட்டு சாப்பிடுவே ....டூ பேட் அண்ணா பையா ....பொறுமை ....பொறுமை ....பவா கேட்ட இன்னும் செஞ்சு தர போறாங்க ....அதுக்கு ஏன் இப்படி ...?"என்றவளை கண்டு பற்களை நர நர என்று கடிக்க மட்டுமே முடிந்தது அவனால் .

பவானி மீண்டும் ஒரு குட்டு மதுராவின் தலையில் வைத்தார் ."அம்மா ! இப்படி குட்டி குட்டியே அரை அடி குறைஞ்சுட்டேன் ......உங்க புள்ளை தானே உங்களை ஹிட்லர் என்று சொன்னான் ....என்னை ஏன் குட்டறீங்க ....."என்றாள் தலையை தடவிய படி .

"மகளே ! எல்லாம் தெரியுமடீ எனக்கு ...இந்த நாமகரணம் எல்லாம் உன் கைங்கரியம் என்று .....நீ ஆரம்பித்து வைத்தது தானேடீ ......அவன் அலைஞ்சுட்டு சாப்பிடுறானா இல்லை நீயா ?????....இரைக்காம சாப்பிடு ...."என்றவர் தன் மக்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார்.

மதுராவிற்கு பிடித்த எல்லா வெஜிடேரியன் ஐட்டம் லைன் கட்டி நின்றன டைனிங் டேபிள் மீது .மதுரா சைவ பட்சி .ஸிரோ சைஸ் ,நாலு பருக்கை சாப்பிடுவது எல்லாம் மதுராவிடம் கிடையவே கிடையாது .சாப்பாட்டை பாத்தி கட்டி ,குழம்பு குளம் அமைத்து ,ரவுண்டு கட்டி அடிக்கும் மாடர்ன் லேடி ராஜ்கிரண் அவள் .இவளுக்கு சமைச்சு போட்டே பவானியும்,சுபாவும் ஆள் தேய்ந்து போனது வேறு கதை .வெளியே சாப்பிட போனா அழைத்து செல்பவரின் பர்ஸ் இளைப்பது நிச்சயம் ....சேச்சே ...கண் வைக்க கூடாது .....

மகள் ஆசையாய் சாப்பிடுவதை கண்குளிர பார்த்தவர் ,மகனிடம் கண்களாலேயே "என்ன நடந்தது கேளு 'என்று கண்களால் சைகை காட்டவும் மறக்கவில்லை .

ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் தான் இருந்தார் .பெண் என்று வரும் போது அனைத்து தாய்க்கும் உண்டான முன்னெச்சிரிக்கை அதிகமாக தான் செயல்படுகிறது .

'இருமா சாப்பிடட்டும் ...'மகனும் சைகையாலேயே பதில் சொல்லி கொண்டு இருந்தான் .

இதை பார்த்தும் பார்க்காத மாதிரி ,எதையும் வெளியே காட்டி கொள்ளாதவளாய் உணவிலேயே கவனமாய் இருந்தாள் மதுரா .இவ கேரக்டர்ரை புரிஞ்சுக்கவே முடியலையையே .....ஒரு பெண்ணுக்குள் இவ்வளவூ ஆழமா ???பார்க்க அப்பாவியா இருக்கு ...ஆனா எல்லாத்தையும் நோட் செய்துட்டு கமுகமா இருக்கா .......சட்டென்று எதையும் செய்யும் முன் எல்லா சாதக ,பாதகங்களையும் அலசி ஆராய்கிறாள் .ஒரு பக்கம் அருந்த வாலு .இன்னொரு பக்கம் ருத்ரதாண்டவம் .ஒரு பக்கம் பயப்படுறா ......இன்னொரு பக்கம் தனக்கு பிடிக்காததை எதிர்க்கவும் துணிகிறாள்.:oops::oops::eek::eek:

அவர்களின் சைகை பாஷை வெகு நேரம் நீடிக்கவே ,அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை."அம்மா !நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க ...உங்க கிட்டே முக்கியான விஷயம் பேச வேண்டும் ...."என்றவுடன் பவானியும் அவர்களுடனே சாப்பிட அமர்ந்து விட்டார் .

சாப்பிட்டு முடித்து அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு மூவரும் வீட்டு தோட்டத்திற்கு வந்தனர் .சென்னை வீடு போலவே ,இந்த வீட்டினையும் ,மதுரா அதே விதத்தில் அமைத்து இருந்தாள் .வெகு நேரம் ஆகியும் அந்த தோட்டத்தை பார்த்து கொண்டு இருந்தாளே ஒழிய ,எதையும் பேசவில்லை .படபடவென்று பட்டாசு போலே எப்பொழுதும் பேசும் மகள் ,இன்று பேசவே தயங்குவது அந்த தாய்க்கு வியப்பாக இருந்தது .

"ராணிமா !......என்னடா கண்ணா ......என்ன ஆச்சு ...அம்மா கிட்டே என்னடா தயக்கம் உனக்கு .....பெட்டி படுக்கையோடு வந்து இருக்கே ...அவ சோனா ஏதாவது திட்டினாளா .....சொல்லுமா ...."என்றார் பவானி மகளின் தலையை வருடி .

"அப்படி எல்லாம் இல்லை மா ...அவ என்னை எதுவும் சொல்லலை ....நானாக தான் வேலை விட்டு வந்துட்டேன் ....இனி மேல் அவ கிட்டே வேலை செய்ய முடியாது போலெ இருக்குமா ....."என்றவள் தயங்கி தயங்கி நடந்த எல்லாவற்றையும் கூறி முடித்தாள் .

நெஞ்சிலே கை வைத்து அமர்ந்து விட்டார் பவானி .ரகு திகப்பிரமை பிடித்து அமர்ந்து இருந்தான் .ஏதோ மகளை திட்டி இருப்பாள் அதனால் மதுரா கிளம்பி வந்து இருப்பாள் என்று அவர்கள் இருவரும் நினைக்க ,கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாய் சோனாவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி அல்லவா இருக்கிறது .!!!

"என்னடீ சொல்றே ????நம்ம சோனாவா இப்படி ?நம்ப முடியலையேடீ ......கடவுளே ......மாப்பிளையை விட்டு ......"கேட்டதை நம்ப முடியவில்லை அந்த தாயால் .

"உண்மை தான்மா ....வேறு யாராவது இப்படின்னு சோனா பத்தி கூறி இருந்தால் நானே அவங்களை வெட்டி போட்டு இருப்பேன் ......ஆனா என் கண் முன்னே நடந்தது மா .....அவ சொன்னதை எல்லாம் என் காதால் நானே கேட்டேன் மா ......வாந்தியே வந்துடுச்சு ....மாமா எவளோ பெரிய ஆள் ....அவரை விட்டுட்டு ......குமட்டுது மா ...."என்றாள் மதுரா

"மாப்பிளை எதையும் சொல்லலையடீ ...அவளை தூக்கி போட்டு மிதக்கலை ????"என்றார் பவானி .

விஜய் தன்னிடம் சொன்னவற்றையும் ,கஜேந்திரனிடம் பேசியவற்றையும் அவர்களிடம் சொன்னாள் .

"இது போலெ நடப்பது அங்கு சாதாரணம் போலெ இருக்கு மா .....ரொம்பவே சகஜமானது போலெ இருக்கு .....ஏம்மா ...சோனா அவரை காதலித்து தானே மா மணந்தாங்க .....அப்புறம் எப்படி மா இவரை விட்டு மத்தவங்க கூட ......"மேலே சொல்ல முடியாமல் தலை குனிந்தாள் மதுரா .

அந்த தாயாலும் தான் என்ன என்று சொல்ல முடியும் ?கேவலத்தை எப்படி தான் நியாய படுத்த முடியும் ???சோனாவின் திமிர் ,கர்வம் ,ஆணவம் ,வெறி அறிந்தவர் தான் என்றாலும் கட்டிய கணவனை விட்டு வேறுஒரு ஆணோடு சுற்றுவது 'கணவனே கண் கண்ட தெய்வம் ' என்று வாழும் இவரை போன்ற தாய்மார்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம் அல்லவா ????

தன் மொபைலை எடுத்தவர் கனகாவிற்கு அழைத்தார் .நல விசாரிப்புகளுக்கு பிறகு தயங்கி தயங்கி விசயத்திற்கு வந்தார் .

"அக்கா !நம்ம மதுரா ....வேலையை விட்டு வந்துட்டா ...."என்றார் பவானி .

"தெரியும் பவா ......கருணா சொல்லிட்டான் ....ரொம்ப நல்ல முடிவூ ."என்றார் கனகா மகிழ்ச்சியுடன் .

"அக்கா !"என்று இழுத்தார் பவானி

"என்ன பவா ...என் கிட்டே என்ன தயக்கம் உனக்கு ....சொல்லுமா ...."என்றார் கனகா .

"மதுரா சொன்னாக்கா ....ஆஃபிஸில் நம்ம சோனா ....."என்றவர் முடிக்க முடியாமல் தடுமாறி நிறுத்தினார் .ஒரு தாயாய் மகளை பற்றி இன்னொரு தாயிடம் எப்படி கூற முடியும் ?

"ஓஒ ...எது பவா .....சோனா ட்ரின்க் எடுத்துட்டு ,போதை மருந்து இஞ்செக்ட் செஞ்சுட்டு ஆஃபிஸில் செய்த ரகளையை சொல்றியா நீ?'என்றார் கனகா ,என்னவூ 'காலை டிபன் இட்லி 'என்று மெனு சொல்லும் குரலில்.

பவானி தான் திகைப்பின் உச்சத்திற்கு சென்றவர் போனை கை நழுவ விட்டார் .சமாளித்து கொண்டு ..."அக் ....அக் ......அக்கா ......."என்று தந்தி அடித்தார் .

"எதுக்கு பவானி எப்படி ஷாக் ஆகுறே ....உனக்கு தான் இது நியூஸ் ....புது விஷயம் ...எங்களுக்கு பழகி போன ஒன்று ......சோனா இது எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் போதே ஆரம்பித்து விட்டா ....ட்ரிங்க்ஸ் ,போதை ,ஆண் நண்பர்கள் ,பார்ட்டி ,ரேவ் ,பப் ...எல்லாமே ......எப்பவும் நடக்கும் கூத்து தான் ....."என்றார் கனகா மரத்த குரலில் .

"அக்கா !"மீண்டும் நெஞ்சிலே கை வைத்து அலறியே விட்டார் பவானி ."அக்கா ! நம்ம சோனா குட்டியா இப்படி ....எப்படிக்கா ....இவளோ சாதாரணமா சொல்றீங்க ....கேக்கும் எனக்கே நெஞ்சு வலிக்குது .....நீங்க எப்படி ?"என்றார் பவானி அழும் குரலில் .

"சோனாவிற்காக நெஞ்சு வலிக்குதுன்னா ....இனி உனக்கு உன் இதயமே இருக்காது பவா .....தினமும் நெஞ்சு வலிச்சுட்டே இருக்க வேண்டி வரும் .....இவளை போன்ற ஜென்மத்திற்காக நான் ஏன் பவா நாம ..... நெஞ்சு வெடித்து சாகனும் ?????என்னை நம்பி அவர் இருக்கார் ....பூரணி ,அம்மா ,கருணா வேறு இருகாங்க ......நல்லவர்களுக்கு வருந்தலாம் .....இவளை போன்றவர்களுக்காக உன் வருத்தம் தேவை அற்றது ."என்றார் கனகா .

"அக்கா! நீங்க எதுவுமே அவளை சொல்லலையா ....."என்றார் பவானி விடாமல்

"இதில் நான் சொல்ல என்ன இருக்கு ......நீ சொல்ல வருவது புரியலை ..."என்றார் கனகா

"அக்கா !"மேலும் அதிர்ந்தார் பவானி ...."என்னக்கா !எப்படி பேசுறீங்க ....நீங்க தானே அக்கா அவ அம்மா .....நாலு அடி போட்டு ....."என்றவரை தடை செய்தது மரகதத்தின் குரல் .

"பவானி !சோனா மதுரா இல்லை ......தெரியாமல் சிறு தப்பு செய்வதற்கு ......சோனா தெரிந்தே தவறு செய்பவள் .....தவறுக்கும் ,தப்புக்கும் வித்தியாசம் உண்டு....... செய்வது எல்லாம் மிகப்பெரிய தப்பு என்று தெரிந்தும் வேண்டும் என்றே செய்பவளிடம் எதை சொல்ல சொல்கிறாய்.....பெத்தது மட்டும் தான் கனகா . வளர்த்தது எல்லாம் சொர்ணா என்று உனக்கு தெரியாதா என்ன ????.....அதுவே ஒரு பேய் .....பேய் வளர்த்தது பின் வேறு எப்படி இருக்கும் ?????மத்தவங்க சொல் பேச்சு கேட்டு நடக்க சோனா மதுரா இல்லை ....பெத்த தாய் ,கட்டின கணவன் எல்லாம் சோனாவிற்கு மண்ணுக்கு சமம் ...மனுஷ ஜென்மங்களாய் கூட எங்களை அவள் மதித்தது கிடையாது ......எங்க பேச்சை கேட்டு விட்டு தான் மறுவேலை பார்க்க போகிறாளா என்ன ....சும்மா காமெடி செய்யாதே பவா "என்றார் மரகதம்

"அம்மா !மாப்பிளை தம்பி ...அவரை விரும்பி மணந்து விட்டு ....இப்போ சோனா ....வேறு ....வேறு......"என்றார் பவானி

என்னவென்று சொல்வார் மரகதம் ."சோனா ....கருணாவை விரும்பி மணக்கவில்லை .......வெறியில் மணந்தவள் .கருணாவின் கழுத்தில் கத்தியை வைக்க முடியாமல் ,அவர் தங்கையின் வாழ்வில் விளையாடி இவரை மணந்தாள் .......விஜய் தங்கை ரூபிணி மணந்து இருப்பது சோனா தாத்தாவின் உறவூ பையன் திவாகரை .......திவாகர் ரூபிணியை மணக்க வேண்டும் என்றால் கருணா சோனாவை மணந்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளி மணந்து இருக்கிறாள் .....கருணா அமைதியாய் இருப்பது தன் தங்கையின் வாழ்வுக்காக......இவளுடன் கருணா பேருக்காவது கணவனாக வாழவில்லை என்றால் , திவாகர் ரூபிணியுடன் வாழமாட்டான் .....சோனா,அவள் தாத்தா பிளான் இது .....திருமணம் ஆனா ஒரு மணி நேரத்தில் திருமாங்கல்யத்தை கழற்றி குப்பை தொட்டியில் போட்டு விட்டு போனவள் .....நாங்க அவளிடம் படுவது புதிது அல்ல .....ஆனா கருணா போன்ற தங்கமான புள்ளையும் சேர்ந்து கஷ்டப்படுது ......அந்த புள்ளைக்கு ஈடா உலகத்தில் வேறு யாரும் கிடையாது என்று தான் சொல்வேன் .....இனி ஒருத்தர் இவனை போலெ பொறப்பது கடினம் .....சொந்த தாயாய் என் மகளை தாங்கறான் .....என்னையும் தான் ....எந்த ஜென்மத்தில் நாங்க புண்ணியம் செய்தோமோ அதன் பலன் இவன் ரூபத்தில் எங்களுக்கு கிடைத்து இருக்கு .....நாங்க அந்த இறைவனிடம் வேண்டுவது எல்லாம் தொலைந்த அவன் வாழ்வு ,அவன் சந்தோசம் ,அவனுக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் என்பது தான் ."என்றார் மரகதம் .


penanace will continue...................... தவம் தொடரும்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம் பவானி ......கருணாவின் வாழ்வூ சீராக வேண்டும் .....ரொம்பவே கருணா பட்டுடான் .......அவன் வாழ்வில் இருந்து சோனா முற்றிலும் விலக வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் பிராத்தனை .......அது நடக்க சோனாவின் உயிர் போக வேண்டி வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை .....இவளை போன்ற கேடு கெட்ட ஜென்மங்கள் உயிரோடு இருந்து யார்க்கு தான் என்ன பயன் ?????சோனாவை பற்றி நீ இந்த அளவூ கவலை படும் அளவூ அவளுக்கு அதற்கான தகுதி இல்லை .......அவள் பாச பறவையை பறக்க விட்டு மதுராவை இங்கு வேலைக்கு அழைத்தது நிச்சயம் உன் மகளுக்கு நல்லதிற்காக மட்டும் இல்லை ......அவ எந்த அளவுக்கும் இறங்குவா ......மீண்டும் அவள் ஏதாவது பிளான் செய்து மதுராவை இங்கு வரவழைப்பதற்குள் ,மதுரா அப்பாவிடம் பேசி மதுராவுக்கும் ,கார்திக்க்கும் திருமணத்தை நடத்தி முடி .....உன் மகள் ,அவள் வாழ்வூ பற்றி மட்டும் கவலை படு .....வச்சிடுறேன் ..."என்ற கனகா அழைப்பை துண்டித்தார்

சர்வமும் ஆடி போய் ,பேய் அடித்தது போலெ கலங்கி அமர்ந்து இருந்தார் பவானி ....ஸ்பீக்கர்ரில் போட்டு இருந்த அழைப்பு என்பதால் ,மதுராவும் ,ரகுவும் கூட பவானியின் நிலையில் தான் இருந்தனர் .பவானியின் கை தானாக மகளை இறுக்கி அணைத்தது .---எதனிடமோ இருந்து மகளை காக்க முற்படுவது போலெ ....தாயின் உள்ளுணர்வூ என்பார்களே ....அது அவரை பதை பதைக்க வைத்து கொண்டு இருந்தது .

இத்தனை நாளாய் கவசமாய் தன் சின்ன சிறு கூட்டினை காப்பாற்றிய சில சம்பவங்கள் இனி மேலும் காக்குமா என்ற பயம் வந்துஇருந்தது பவானிக்கு .கஜேந்திரன் ,சொர்ணவிடம் இருந்து அந்த சிறு குயில் கூட்டினை காக்கவே சேதுபதி பல வருடங்களுக்கு முன் ,"பணத்திற்காக வந்து அட்டை போலெ ஒட்டி கொள்கிறான் "என்று சங்கரனை பார்த்து வேண்டும் என்றே வாய் விட்டது .....இல்லை என்றால் சொர்ணாவின் இரண்டாவது கணவனாக மாறி இருப்பார் சங்கரன் அப்பொழுதே .....அது நடவாமல் தடுக்க ,தம்பியின் ரோஷத்தை ,சுய கவுரவத்தை தூண்டி விடும் விதமாக சேது பேசி ,சண்டை கிளப்பி ,தன் குடும்பத்தை கஜேந்திரன் ,சொர்ணாவிடம் இருந்து காப்பாற்றியது .

சேதுவிற்கும் வேறு வழியில்லை ......அவர் தலைவிதி கஜேந்திரனுக்கு மருமகனாய் மாட்டியது .சங்கரனும் ,தன் குடும்பமாவது நிம்மதியாக இருக்கட்டுமே என்று விலக்கி வைத்தவர் அவர் .இந்த உண்மை அறிந்தவர்களில் ஒருவர் பவானி .

பதினைந்து ,இருபது வருடங்களாக உண்மை தெரிந்தும் பவானி வாய் திறந்தது இல்லை .தன் கணவர் நல்லவர் ----ரொம்பவே நல்லவர் -அது தான் அவரின் பிரச்சனை.அப்பாவி .குடும்பம் ,வேலை ,பிள்ளைகள் என்று மட்டுமே வாழும் சூது வாது தெரியாத அப்பிராணி .....ஆனால் பிடித்தால் உடும்பு பிடி ...குடும்ப தலைவர் என்ற அங்கிகாரம் தனக்கு மட்டுமே என்ற எண்ணம் அதிகப்படியாகவே உண்டு ...சேது ஏற்படுத்தி இருந்த காயம் காரணமாக இருக்கலாம் ....இவரின் இந்த குணத்திற்கும் பவானியின் ரொம்ப ஷார்ப் மனநிலைக்கும்,விட்டு கொடுத்து போகும் தன்மைக்கும் குடும்பம் இந்நாள் வரை எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடி கொண்டு இருந்தது .

ஆனால் ஆறு மாதம் முன்பு ,"சித்தப்பா !"என்று பேச்சில் தேன் ஒழுக வந்து நின்ற சோனாவை கண்டதும் அவர் வயற்றில் புளி கரைய ஆரம்பித்தது .பல மாணவர்களை கட்டி மேய்ப்பவர் ஆயிற்றே ...எது உண்மை ,எது நடிப்பு என்று அவரால் வெகு சுலபமாக எடை போட முடிந்தது ..சங்கரனோடு எவ்வளவூ போராடி பார்த்தார் மதுராவின் சென்னை வேலையை தடுத்து நிறுத்த .....எல்லாம் தோல்வியில் முடிந்தது

penanace will continue...................... தவம் தொடரும்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM ---23(1) தவம்----23(1)

சங்கரனோடு எவ்வளவூ போராடி பார்த்தார் மதுராவின் சென்னை வேலையை தடுத்து நிறுத்த .....எல்லாம் தோல்வியில் முடிந்தது.

"ஏய் ! பதினைந்து வருடம் ............என் அண்ணா என் கூட பேசாம இருந்து ........என் அண்ணா எனக்கு அப்பா மாதிரி டீ ...என்னை தூக்கி வளர்த்தவர் .............நானே எவ்வளவூ வருடம் போய் பேச வில்லை என்று மறுகி கிடந்தேன் .....அவர் பெரிய மனுஷன் என்பதை நிரூபித்து இறங்கி வந்து ,அவரே தன் மகளை அனுப்பி வைத்து மதுராவை வேலைக்கு அழைக்கிறார் .......என் அண்ணா கேட்டா உயிரை கூட கொடுப்பேன் ....என் மகளை வேலைக்கு தானா அனுப்ப மாட்டேன் ....போடீ போக்கத்தவளே .......வந்துட்டா .....ஊர் என்ன சொல்லும் ,உலகம் என்ன சொல்லும் என்று .....யார் கிட்டே டீ அனுப்பறேன் ....என் அண்ணா கிட்டே ,என் அம்மா மாதிரியான அண்ணி கிட்டே .....என் அம்மா மாதிரியான ...மாதிரி என்ன அம்மா தான் ...மரகதம் அம்மா கிட்டே அனுப்பறேன் .....அழைத்து போவது யாருடீ ...ஊர் பேர் தெரியாதவளா ......என் மூத்த மகடீ ....என் ரத்தம் .......என் மூத்த மக எவ்வளவூ பொறுப்பா ,பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கணும் என்று வந்து இருக்கா ....பேச வந்துட்டா ......என் முடிவூ இது தான் ...மதுரா சோனாவோடு சென்னைக்கு போவா .....அங்கு அவ கிட்டே பி .ஏ வா வேலை செய்வா ....."என்று பவானியை வறுத்து எடுத்தார் .

(உம்ம பாசத்துல தீயை வைக்க .......பவானி அம்மா ....ரொம்ப கஷ்டம் இவர் கூட ......நீங்க சான்ஸ்சே இல்லை பவாமா .....)

மதுராவும் ,சங்கரனும் கார்த்திக்கின் லீலையில் கோபமாய் இருந்த சமயம் .திருமண பேச்சை எடுத்து ,இதை தடுக்கவும் முடியவில்லை .மதுராவும் கார்த்திக் 'போக வேண்டாம் 'என்று சொல்லி விட்டான் என்பதற்காகவே வீம்புக்காக கிளம்பினாள் .அவளின் ஒத்துழைப்பு இருந்து இருந்தாலாவது பவானி மதுராவின் சென்னை பயணத்தை தடுத்து இருப்பார் .மகளோ கார்திக்க்கையும் ,அவரையும் வெறுப்பு ஏற்ற என்றே கிளம்பி விட்டாள் .

சோனாவின் பாச பறவையை ,நீலி கண்ணீரை ,அடக்க ஒடுக்கத்தை அப்பாவியான சங்கரன் வேண்டும் என்றால் நம்பி ஏமாந்து இருக்கலாம் .சோனாவின் போலி முகத்திரையை ,அதில் இருக்கும் வஞ்சக எண்ணத்தை ,மதுராவை கண்ட மறுநொடி அவள் முகம் மாறிய விதத்தை கண்டு விட்டவர் ,மகளுக்கு வரும் ஆபத்தை தடுக்க இயலாதவராக இறைவனை சரண் அடைந்தார் .

சேதுவை அந்த நிலையில் உதவிக்கு அழைக்க முடியவில்லை .....அவர் கனகா ,மரகதம் ,பூரணி ,கருணா எல்லோரும் சுற்றுலா சென்று இருந்தனர் .சோனாவின் இந்த நாடகத்தை பற்றி கூற கூட நேரம் இல்லை .அவர்கள் திரும்பி வர எடுத்து கொண்ட மூன்று வாரங்களில் ,சங்கரன் மூத்த மகள் ,மூத்த மகள் என்று சோனாவை தலையில் தூக்கி வைத்து ஆடாத குறை .

சுற்றுலா முடிந்து திரும்பியவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி .மதுராவை வைத்து விஜய்க்கு அவள் வைத்த செக்க்மேட் அவர்களை ஸ்தம்பிக்க வைத்து இருந்தது .எங்கு ,எப்படி ,யாரால் விஜய்யின் கடந்த காலம் சோனாவிற்கு தெரிய வந்தது என்று புரியாமல் ,மதுராவை எப்படி காப்பாற்றுவது என்று முடியை பிய்த்து கொள்ளாத குறை .....இவர்கள் சுதரிப்பதற்குள் மதுரா விஜய்யின் பி .ஏ ஆக்க பட்டு இருந்தாள் .'இந்தர் போர்ட் "பங்களாவில் அனைவருடன் மதுராவை தங்க வைக்க வேறு ஏற்பாடு செய்து இருந்தாள் ....அதாவது விஜய்யின் கண் முன் ,அவன் அருகே 24 மணி நேரமும் மதுராவை இருக்க வைக்கும் திட்டம் .

எவ்வளவூ விஜய் சொல்லி பார்த்தும் சோனா தன் முடிவில் மாறவில்லை என்றதும் ,விஜய் நான்கு வாரம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்று விட்டான் .வேலை முடிவூ எடுக்க முடியாமல் மலை போலெ குவிய ,வெற்றி குரூப்ஸ் ஒரு பக்கம் நெருக்க ,சில பல கோடிகள் ,சில ஆர்டர்கள் கை நழுவி போன பின்னர்,கஜேந்திரனையும் ,சோனாவையும் விஜய் தலையால் தண்ணீர் குடிக்க வைத்த பிறகு ,மதுராவின் இருப்பிட பிளான் கை விட்டாள் சோனா .

அந்த நான்கு வாரங்களில் 'மதுரா rescue டீம் -1' மூளையை கசக்கி பிழிந்து பிளான் போட்டார்கள் .அந்த பிளான் படி சங்கரனிடம் மூன்று விஷயங்களை போனில் பேசினார்கள் .அதாவது மதுராவை மீண்டு குன்னூர் பேக் செய்ய முயன்றார்கள் .-விக்ரமாதித்தன் வேதாளம் போல தான் .ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் .

1.மதுரா நம்ம வீட்டு பெண் .---அவ வெளியிடத்தில் வேலை செய்யணுமா ????

2.மதுராவின் பாதுகாப்பு ----அவள் எங்கே தங்குவாள் ?ஹாஸ்டல் ,எல்லாம் பாதுகாப்பு இல்லை .

3.எவ்வளவூ காலம் மதுரா திருமணம் ஆகாமல் இருப்பாள் ....வயசு பெண் ....வேலைக்கு போய் தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எல்லாம் இல்லையே ...விரைவில் கார்த்திக்குடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவும் .

சுற்றி சுற்றி டீம் 1 பேசியதன் சாராம்சம் இது தான் ."மதுரா வேலைக்கு வர வேண்டாம் '....அது சங்கரனுக்கு புரிந்தால் தானே

"ஆமாம் அண்ணா !....ராணிக்குட்டி வெளியிடத்தில் வேலைக்கு என்று கிளம்பி இருந்தா நானும் உங்களை போலெ பயந்து இருப்பேன் .....இப்போ நம்ம மாப்பிளை கிட்டே தானே வேலைக்கு போகிறா ......கருணா தம்பியை போல் வருமா ......தம்பி தங்க கம்பி ஆயிற்றே ......அவர் கூட இருப்பதால் தான் நாங்க இங்கே நிம்மதியாக இருக்கிறோம் அண்ணா ....."என்றார் சங்கரன்

இதற்கு என்ன சொல்ல முடியும் ?????விஜய் சங்கரனின் பாராட்டை கேட்டு தலையில் இரு கைகளையும் வைத்து அமர்ந்து விட்டான் .....முதல் அடியே இவ்வளவூ பெருசாய் இருந்தா அவன் என்ன செய்ய முடியும் ????அவனுக்கு சிரிப்பதா ,அழுவதா என்று கூட தெரியவில்லை .முதல் பாலில் எதிராளியை அவுட் செய்து இருந்தார் சங்கரன் .

"அண்ணா !லேடீஸ் ஹாஸ்டல் ....பயமா தான் அண்ணா இருக்கு .....ஊர் ,உலகத்தில் எவ்வளவூ பயங்கரங்களை கேள்வி படறோமே ......நெஞ்சு படபவென அடித்து கொள்கிறது தான் ....அதனால் ....."என்று இவர் நிறுத்த டீம் ஒன்றுடன் பவானி ,ரகு கூட நிமிர்ந்து அமர்ந்தனர் ....'மதுரா வேலைக்கு போக வேண்டாம்'என்று கூற போகும் நல்ல செய்தியை கேட்க

"அதனாலே அண்ணா !.....கஜா மாமா கிட்டே கேட்டு மதுராவை உங்க வீட்டுக்கே கூட்டி போய்டுங்க அண்ணா ....உங்க வீட்டில் இருந்தால் அண்ணி ,அம்மா ,பூரணி கூட இருக்கான்னு நாங்க நிம்மதியா இருப்போம் ."என்றாரே

"என்ன ...............து !"சேதுபதிக்கு நெஞ்சு வலியே வந்து விடும் போலெ இருந்தது .மற்றவர்கள் தலையில் அடித்து கொண்டனர் .

போனினை mute போட்ட விஜய் ,"அப்பா !சான்ஸ் சே இல்லை .......full form ல இருக்காரு உங்க தம்பி .....அந்த பேய் இவரை நல்ல பிரைன் வாஷ் செய்து இருக்கு .......இவருக்கு எல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று உடைச்சு சொன்ன கூட புரியுமா என்பது சந்தேகம் தான் ......"என்றான் தவிப்பாக
(((பக்கத்துல சுவர் ஏதாவது இருக்கா ?????))))

"அண்ணா !மதுராவை எப்போ அண்ணா உங்க வீட்டுக்கு கூடி போறீங்க ?"என்றார் அந்த அப்பாவி தந்தை தன் மகளின் வாழ்வுக்கு தானே குழி பறிப்பதை அறியாதவராய் .

நான்கு வாரம் போராடி ,வீட்டை விட்டு வெளியேறி ,வனவாசம் போகாத குறையாய் சோனாவின் பிளான் உடைத்து விட்டு நிமிர்ந்தால் ,இவர் மறுபடியும் ஆப்பு வைக்கிறாரே என்று கைகளால் முகத்தை மூடி அமர்ந்தான் விஜய்

"சங்கரா !மாமாவுக்கு இது எல்லாம் பிடிக்காதுப்பா .....வயசு பெண் வீட்டில் தங்க வைக்க ஒற்று கொள்ள மாட்டார் .....தினமும் அவரை காண ஆயிரம் பேர் வருவார்கள் ,போவார்கள் .....யார் எப்படின்னு நமக்கு எப்படி பா தெரியும் .......நாங்களே அவர் சொல்லி தானே .....பூரணியை ஹாஸ்டெலில் தங்க வைத்து இருக்கிறோம் .....சென்னையில் இல்லாத கல்லூரியா ????...........ஏன் மாமாவின் "GM கல்லூரியே ' இல்லையா ???இருந்தாலும் சின்னவளை ஏன் ஊட்டிக்கு அனுப்பினோம் ...இதற்காக தானே ...."என்று உண்மையும் ,பொய்யும் கலந்து விட்டார் சேது .

(சுப்பா ...இப்பவே கண்ணை கட்டுதே ...........முடியலடா சாமி ......)

"ஓஹ் அப்படியா .....அண்ணா ....சாரி அண்ணா ......பெரியவர் பெரியவர் தான் இல்லையா ......எப்படி எல்லாம் யோசிக்கிறார் இல்லை ?????ரியலி கிரேட் அண்ணா .....ஆனா மதுராவை எங்கே அண்ணா தங்க வைப்பது ????"என்றார் சங்கரன்

"சங்கரா ! சொல்வதை கேளுப்பா .....மதுராவுக்கு வேலை என்ன அப்படி அவசியம் ????வயசாகுது இல்லை .....காலா காலத்தில் கார்த்திக்க்கொடு திருமணத்தை நடத்திடுப்பா ."என்றார் சேது .

"இல்லைன்னா ......கார்த்திக் ...மதுராவுக்கு சரி வருமான்னு யோசனையா இருக்கு ...உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன அண்ணா .....வேலைக்கு போனா பிறகு கார்த்திக் ரொம்ப மாறிட்டான் ......சிகரேட் ,குடி ,பார்ட்டி என்று .............. ....நான் தூக்கி வளர்த்த பிள்ளை தான் .....அவனுக்கு மதுரான்னு சொல்லி சொல்லி தான் வளர்த்தோம் ....இப்போ அவன் ஸ்டேட்டஸ் இணையான பெண்ணை விரும்பறான் போலெ இருக்கு ....அவன் வாழ்க்கை முறைக்கு நம்ம பொண்ணு தோது படுமான்னு தெரியலை .........அதான் சோனாம்மா மதுராவிற்கு ஏற்ற மாப்பிளை பார்க்கிறேன் என்று சொல்லிச்சு ....சரிம்மான்னு சோனா கண்ணு கிட்டேயே அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டேன் அண்ணா ......நம்ம பொண்ணு யாரை கை காட்டுதோ அவர் தான் மதுராவிற்கு கணவன் என்று முடிவூ பண்ணிட்டேன் ...சந்தோசமா அண்ணா ...."என்றார் சங்கரன்

:smiley52:
:oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::oops::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::eek::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::censored::(:(
மற்றவர்களின் ரியாக்ஷன் விவரிக்க இனி மேல் தான் நான் வார்த்தைகளை தேட வேண்டும் ..அவவாறு எதை சொன்னாலும் அது 1% மட்டுமே கூறுவதாக இருக்கும் .

(அப்பா .....சங்கர் ....அப்பாவியா இரு ....வேணாம்களை ....அதுக்குன்னு இப்படியா இருப்பே .............சத்தியமா சொல்றேன் ....வேணாம் ...முடியல ...அழுத்துடுவேன் .......உன்னையும் நம்பி பவானி அம்மாவை கட்டி கொடுத்தார் பார் ஒருத்தர் அவரை சொல்லணும் .........கண்ணை கட்டுதே .:eek::eek::eek:..)

பிளட் பிரஷர் -ஹை /லோ ,ஹார்ட் அட்டாக் ,நரம்பு தளர்ச்சி ,பைத்தியம் என்று எல்லாவற்றையும் வரவழைத்து விட்டார் சங்கரன் (சாமி நானே இவர் செய்த அலும்பில் டாக்டர் கிட்டே போகணும் போலெ இருக்கு ...யாருக்காவது நல்ல ஹார்ட் SPECIALIST நம்பர் தெரிந்தால் சொல்லுங்க பா ...நெஞ்சு வலிக்குது ....முடியல )

ஆனால் இவர்கள் பயந்தது போலெ சோனா இந்த மாப்ப்பிளையும் கொண்டு வரவில்லை(ப்ப்ப்ப்பா .....கொஞ்சமாவது மூச்சு விட டைம் கொடுங்கப்பா ...)

அவளுக்கு தான் மதுராவை அழிப்பது குறி ஆயிற்றே ....அவளா திருமண வாழ்க்கை அமைத்து தர போகிறாள் .....(நான் கூட ஒரு நொடி திகைத்து தான் போனேன் ...என்னடா இது எல்லாம் திருந்தி விட்டதா என்று .....அதானே பார்த்தேன் )

சோனாவின் பிளான் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மதுரா புரட்சி படையினர் மட்டுமே (ஓவியாவுக்கு இருக்கும் போது மதுரா நம்ம புள்ள பா அதுக்கு மூன்று படை இருந்துட்டு போகட்டுமே ....காசா ...பணமா ...;);).).இந்த டீமில் பவானி இல்லாதலால் சரிவர அவருக்கு விஷயம் தெரியவில்லை .தெரிந்து இருந்தால் சோனாவை கொன்று இருப்பார் .சங்கரனை விவாகரத்து செய்து இருப்பர் ...(கூடிய சீக்கிரம் செய்து விடுவார் ....அது மட்டும் கன்போர்ம் )

PENANCE WILL CONTINUE................ தவம் தொடரும்.........................

anitha rajkumar
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோனாவின் பிளான் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மதுரா புரட்சி படையினர் மட்டுமே (ஓவியாவுக்கு இருக்கும் போது மதுரா நம்ம புள்ள பா அதுக்கு மூன்று படை இருந்துட்டு போகட்டுமே ....காசா ...பணமா ....).இந்த டீமில் பவானி இல்லாதலால் சரிவர அவருக்கு விஷயம் தெரியவில்லை .தெரிந்து இருந்தால் சோனாவை கொன்று இருப்பார் .சங்கரனை விவாகரத்து செய்து இருப்பர் ...(கூடிய சீக்கிரம் செய்து விடுவார் ....அது மட்டும் கன்போர்ம் )

தாயின் உள்ளுணர்வூவால் மட்டுமே அவர் பயந்து கொண்டு இருந்தது .ஆனால் மகள் சொன்னதை கேட்ட பிறகு,கனகா ,மரகதம் மகள் சொன்னதை உறுதி செய்த பிறகு மகளை வேலைக்கு மட்டும் அல்ல ,பக்கத்துக்கு வீட்டுக்கு கூட அனுப்ப கூடாது என்று முடிவூ எடுத்து விட்டார்.

முடிவூ மட்டுமே அவரால் எடுக்க முடியும் என்பதையும் ,ஆனால் அது நிறைவேற வேண்டும் என்றால் அது சோனாவின் கையில் தான் உள்ளது என்பதை அன்று இரவே சோனா அவருக்கு புரிய வைத்து விட்டார் .

(சங்கர் அப்பா ............வேண்டாம் ..........உமக்கு சனிப்பெயர்ச்சி ஸ்டார்ட் ஆகி இருக்கு .......பவா சொல்றதை கேளுப்பா .......ஹ்ம்ம்ம் ............விதி யாரை விட்டது ?)

சங்கரன் வீடு திரும்ப மணி பதினொன்று ஆகி இருந்தது .மதுராவும் ,ரகுவும் உறங்க சென்று இருந்தனர் .வீடு திரும்பி இருந்தவரின் முகத்தில் நண்பரின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சி என்பது துளியும் இல்லை என்பதை கண்டு கொண்டது பவானியின் கண்கள்.மனைவிகளுக்கே உரிய சூட்சும உணர்வூ ஏதோ சரியில்லை என்பதை உடனே கண்டு கொண்டது .மனைவிமார்கள் கணவனின் முகத்தை கண்டே அவர் எந்த மூடில் இருக்கிறார் என்பதை கண்டு பிடித்து விடுவார்களே --அதுவும் கணவனின் சிறு அசைவை கொண்டே அவர் நினைப்பதை உணர்ந்து விடும் பவானி போன்ற அதி புத்திசாலி மனைவிக்கு உள்ளுர பதற ஆரம்பித்தது .என்றுமே சங்கரனை இத்தனை கோபத்தில் அவர் கண்டது இல்லை .இன்னும் சொல்ல போனால் பேய் அறைந்தது போலெ முகம் வெளுத்து ,கண்கள் கோபத்தில் கோவை பழமென சிவந்து கிடக்க ,அதையும் தாண்டி வலியை காட்டி சங்கரன் இருந்தது இல்லை .

."மதுரா !எதற்கு வந்து இருக்கா ?"என்ற சங்கரனின் கேள்வியில் ,இவர்க்கு யார் சொன்னது என்று சற்று திகைத்தவர் ,கணவனின் குரலின் பேதமும் ,முகத்தில் தென்பட்ட கோபத்தையும் கண்டு நிதானித்தார் பவானி .

"வேலையை விட்டு வந்துட்டாங்க ...."என்றார் மெல்ல ....சேலை மறைவில் இருந்த மொபைலை ஆன் செய்தவர் ,அழைத்து சேதுவிற்கு

"என்ன காரணம் ?"சங்கரனின் குரல் டெசிபல் உயர்ந்து கொண்டே இருந்தது .

கணவர் மூத்த மகளாக கருதும் சோனாவை பற்றி பாலீஷாக எப்படி சொல்வது ,சொல்லி எப்படி புரிய வைப்பது என்று சற்று திணறி போனார் .கணவர் இருந்த மனநிலை அதற்கு பொருத்தமற்றதாக தோன்றியது .
(அப்படியே நீங்க கிளாஸ் எடுத்தாலும் ..........இவர் புரிந்து கொண்டு தான் மறுவேலை பார்ப்பார் ....சும்மா காமெடி பண்ணாதீங்க பவா அம்மா:cautious::cautious::cautious: )

"உன்னை தான் பவானி கேட்டேன் ....என்ன காரணம் ?"என்றார் சங்கரன் மீண்டும்

அவரின் உயர்ந்த குரல் உறங்கி கொண்டு இருந்த மதுரா ,ரகுவை கூட எழுப்பி விட ,இருவரும் ஹாலுக்கு வந்து விட்டனர் .

(ஹி .....காமெடி பீஸ்ன்னு பார்த்தா இப்படி கோபக்கார விருமாண்டியா இருக்காரே ....அடி ஆத்தி ..... அனல் அடிக்குதே:oops::oops::oops::oops:

சங்கரனின் கவனம் ஒரு கணம் ஹாலுக்கு வந்த பிள்ளைகளின் மேல் திரும்ப அந்த கணத்தில் சேலையில் இருந்த மொபைலை அங்கு இருந்த சோபாவின் ஒரு மூலையில் வைத்து விட்டார் .அந்த இரவூ வேளையில் பவானி அழைக்க ,விஷயத்தின் தீவிரத்தை அறிந்த சேது,மற்றவர்களை தன் அறைக்கு அழைப்பை ஸ்பீக்கர்இல் போட்டார் .

"பதில் சொல் பவானி ....எதற்காக உன் மகள் வேலையை விட்டு நின்றாள் ....பதில் சொல் ....."என்று காது செவிடாகும் படி கத்தினார் சங்கரன் .

பெருமூச்சு வெளியிட்டு தன்னை தயார் படுத்திய பவானி ,'சோனா .....ஆபீஸ்யில் ட்ரின்க் பண்ணிட்டு ......அய்யோஓஒ .............அம்மா !"என்று கன்னத்தை பிடித்தவாறு தரையில் விழுந்தார் பவானி .சங்கரன் பவானியை சோனாவுக்காக அடித்து இருந்தார் .

"அம்மா !"அதிர்ந்து போன மதுராவும் ,ரகுவும் தரையில் கிடந்த தாயிடம் ஓடினர் .

"சே !....நீயெல்லாம் ஒரு பெண்ணா ......தயாடீ நீயி .........பெண்ணாய் பிறந்து என் அண்ணன் மகள் மேல் பழி போட எப்படிடீ துணிஞ்சே ......இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை ....பந்தமும் இல்லை .எல்லாம் இன்றோடு முடிஞ்சு போச்சு ........என் கண் முன் நிற்காதே ........ பாவி ....பாவி .....படுபாவி .....ராட்சசி ......சோனா நம்ம மூத்த பொண்ணுடீ ......திருமணம் ஆனவ .....இன்னொருத்தரின் மனைவி ......இதை மட்டும் கருணா தம்பி கேட்டு இருக்கனும் உன்னை வெட்டி பொலி போட்டு இருப்பார் ......சே ......நீயி எல்லாம் மனுஷ ஜென்மமே இல்லை ........நம்பினேன் .....உன்னை முழுசா நம்பினேன் .......சோனா போன் செய்து சொன்னப்ப கூட நான் நம்பலையே ......போனிலேயே கதறி அழுதுதுச்சுடீ அந்த பொண்ணு .......'சித்தி எனக்கு இன்னொரு அம்மா ....அவங்களா சித்தப்பா என்னை சந்தேக பட்டு தங்கச்சியை கூட்டிட்டு போய்ட்டாங்க ?'என்று கேட்டாடீ .....பாவி .....படுபாதகி ....கொலைகாரி .....ஒரு புள்ளைத்ச்சி பொண்ண இப்படி பேச எப்படிடீ மனசு வந்தது உனக்கு ......அய்யோஓஒ என் அண்ணன் வம்சத்தை கருவறுத்துடியெடீ .......அய்யோ ....ஐயோ ...."என்று முகம் மூடி குலுங்கி குலுங்கி அழுதார் சங்கரன் .

"என்ன ...............து ?...................குழந்தையா ?"என்று பல குரல்கள் ஏக காலத்தில் அலறியே விட்டன .
(என்னது ,,,,சோனா வயத்துல பாப்பாவா ......இது என்ன புது ட்விஸ்ட் ????? .......யார் குழந்தைன்னு போட்டி வேற வைக்கணும் போல இருக்கே .....விஜய் ......ஹனி வேற உன்னை பற்றி ரொம்ப BUILT UP கொடுத்துச்சே .....சினிமாவில் வருவது போலெ இடி ,மின்னல் ,மழைன்னு சிலிப் ஆகிட்டியா தம்பி ?::eek::eek::eek::eek::oops::oops::oops::oops:o_Oo_Oo_Oo_O:censored::censored::censored::censored:

PENANCE WILL CONTINUE......................... தவம் தொடரும்
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 23(2) தவம் 23(2)

"என்ன ...............து ?...................குழந்தையா ?"என்று பல குரல்கள் ஏக காலத்தில் அலறியே விட்டன .
(என்னது ,,,,சோனா வயத்துல பாப்பாவா ......இது என்ன புது ட்விஸ்ட் ????? .......யார் குழந்தைன்னு போட்டி வேற வைக்கணும் போல இருக்கே .....விஜய் ......ஹனி வேற உன்னை பற்றி ரொம்ப BUILT UP கொடுத்துச்சே .....சினிமாவில் வருவது போலெ இடி ,மின்னல் ,மழைன்னு சிலிப் ஆகிட்டியா தம்பி ?)

சொல்லி வைத்தது போலெ அனைவரும் அவர்கள் நெஞ்சிலேயே கை வைத்து கொண்டனர் (அட இருங்க பா ....எனக்கும் தான் நெஞ்சு வலிக்குது .....என்ன ஈழவூ டா இது ....)
1532461363-sunny_lot_hot_photo.jpg


"ஆமாடீ பாவி ......சோனாவுக்கு அபார்சன் ஆகிடுச்சு .......பாவி உன்னாலே தாண்டீ .....ஐயோ என் அண்ணன் ....கருணா தம்பி முகத்துல எப்படி விழிப்பேன் ......கடவுளே!............குழந்தை இறந்து விட்ட பிறகு கூட அந்த பொண்ணு ,"சித்தப்பா ! சித்தி பாவம் .....யார் பேச்சை கேட்டு இப்படி பேசிட்டாங்களோ .....அவங்களை எதுவும் சொல்லாதீங்க ....என்னால தாங்கவே முடியாது ......எனக்கு நீங்க முக்கியம் ......நீங்க கவலை படாதீங்க ......என் அபார்சன்னுக்கு காரணம் சித்தி தான்னு யாரிடமும் சொல்லவே மாட்டேன் .....நீங்களும் சொல்லிடாதீங்க ......'என்று உனக்காக அந்த நிலையையிலும் வக்காலத்து வாங்கி கதறி அழுவூராடீ ....."என்று நெஞ்சை பிடித்து கொண்டு சோபாவில் அமர்ந்தார் .
(இன்னும் எத்தனை பேருக்கு தான் இந்த சோனாவால் நெஞ்சு வலி வர போகிறதோ ........இப்படி எல்லாம் அடிச்ச தாங்க மாட்டேன் ......)

"ஏன் பவானி இப்படி செய்தே .....நம்ம வீட்டிலும் வாழ வேண்டிய பொண்ணு இருக்கே .....யாரோ சொன்னதை கேட்டு இப்படி ஒரு கரு அழிய காரணமாகி விட்டாயே .....ஏண்டீ .....அவ நம்ம மூத்த பொண்ணுடீ ......என் ரத்தம் ......ஏன் கல்லு மாதிரி நிற்கறே .....சொல்லி தொலை .....எவ அவ என் மகளை பத்தி தப்பா சொன்னவ....சொல்லுடீ .....அவ தலையை சீவிட்டு வரேன் .....என் குடும்ப வாரிசு அழிய காரணமாய் இருந்தவ உயிரோடு இருக்க கூடாது ....சொல்லுடீ யாருடீ அவ ?"என்று பவானியை உலுக்கியவர் பதில் வராது போகவே கன்னம் கன்னமாய் அறைந்தார் .

"நீங்க ......உங்க ...அண்ணா ....அண்ணி கிட்டேயே
கேளுங்க ...."என்று மேலும் பவானி சொல்வதற்குள் மேலும் அறை விழுந்தது அவர் கன்னத்தில் .

"புத்தி கெட்டு போச்சாடி உனக்கு .....சந்தேக படறதே தப்பு .....அவ நம்ம மூத்த மகன்னு சொல்லிட்டு இருக்கேன் ......அண்ணாவை கேளு .....அண்ணியை கேளுன்னு சொல்றே ........நம்ம மதுராவை பற்றி இப்படி யாராவது சொன்னால் தங்குவோமா நாம .....அண்ணாவுக்கும் அப்படி தாணேடீ இருக்கும் ......வலிக்கும் ....உங்க அப்பனுக்கு போன் செய்து இப்படி கேட்கவாடீ ....அந்த ஆளுக்கு குளுகுளுன்னு இருக்குதான்னு பார்ப்போம் ......நாமளும் பெண்ணை பெத்து இருக்கோம் .....ஊரார் சாபம் சும்மா விடுமாடீ ....எவ அவ ....என் மகளை தப்பா சொன்னவ .....சொல்லு "என்றார் சங்கரன் மீண்டும் அறைந்தவாறு

"அப்பா !"என்று சங்கரனை தடுத்த மதுரா ஏதோ சொல்வதற்குள் பவானி மகளின் கை பிடித்து அழுத்தி பின் இழுத்தார் .

"அம்மா !"என்று அதிர்ந்த மதுரா தாயின் ஒரே பார்வையில் வாயை மூடி கொண்டாள் .'எதையும் பேசாதே 'என்ற கட்டளை அந்த பார்வையில் இருந்தது

"ஏய் ...மதுரா !......எல்லா திங்ஸ் பேக் பண்றே .....பொழுது விடிஞ்ச உடனே உன்னை சென்னைக்கு கூடி போறேன் .....ஒண்ணும் இல்லாத காரணத்திற்காக எவளாவது வேலை விட்டு வா என்று கூப்பிடானு வந்தே நடக்கிறதே வேறு ........உன் அம்மாவுக்கு தான் அறிவூ இல்லை ....படிச்சவ தானேடீ நீயி .....யோசிக்க மாட்டியா ......அவ சொன்னலாம் இவ இது தான் சாக்குன்னு கிளம்பி வந்துட்டா ......கட்டினதும் சரி இல்லை......நான் பெத்ததும் சரி இல்லை ......சோனா சொல்படி இனி நடக்கற .......அந்த புள்ளைக்கு இனி ஏதாவது பிரச்சனை கொடுத்தீங்க ....என்னை உசிரோடு பார்க்க முடியாது ........உன் அப்பா உயிரோடு இருக்கணுமா வேணாமான்னு நீயே முடிவூ பண்ணிக்கோ ......."என்றவர் பவானியிடம் ,"சோனாவுக்கு போன் செய்யுறேன் ....செய்தது தப்புன்னு சொல்லி சாரி கேளு ."என்றவர் சோனாவுக்கு கால் செய்தார்

"நான் தான் சோனாமா ....தூங்கிட்டு இருந்தியா .....ஒஹ்ஹஹ் என் போன்னுக்கு தான் வெயிட் செய்துட்டு இருந்தீயா .....ஏம்மா ....நீயே உடம்பு சரி இல்லாம இருக்கே...... இல்லைம்மா ....உன் சித்தியை எதுவும் சொல்லலை ....நீ தான் சொல்லிட்டியே ......கண்டிப்பா .....மதுரா வேலைக்கு வாரா ....நாளைக்கு நானே கொண்டு வந்து விடறேன் ....இதோ சித்தி பேசணுமாம் ....."என்றவர் பவானியிடம் போனினை கொடுத்தவர் அதிர்ந்து நின்றார் பவானியின் கண்களை கண்டு

பவானியின் கண்களில் இருந்தது என்ன ?அந்த பார்வையின் வீச்சை தாங்க முடியாதவராய் சங்கரன் தான் முகத்தை திருப்பி கொண்டார் .அவரின் மனசாட்சிக்கு பவானி குற்றமற்றவர் என்பது புரிந்ததோ என்னவோ ?????

தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்த பவானி ,"த்ரீ திங்ஸ் cannot பி hidden for லாங் ---சன் ,மூன் ,truth "என்று சோனா ஏதும் பேசுவதற்குள் சொன்னவர் ,போனினை சங்கரனின் காலடியில் விட்டு எறிந்தவர் கெஸ்ட் ரூமிற்குள் சென்று கதவை சாத்தி கொண்டார் .
((செம ஷாட் பவானி அம்மா ....இந்த சனியன் கூட எல்லாம் நீங்க எல்லாம் பேசவே கூடாது .....
......ஏம்மா சாத்தான் கிட்டே வேதம் ஓதினால் அதற்கு தான் புரிய போகிறதா என்ன ......நீங்க சொன்னது போலெ உண்மை என்றும் மறையாது ....விதியின் விளையாட்டு எப்படி இன்னும் போகிறது என்று பார்ப்போமே))


அழவில்லை ,கதறவில்லை ...இவ்வளவூ வருடம் வாழ்ந்தேனே என்னை நம்பவில்லையா ,என்று போர்க்கொடி தூக்கவில்லை .அஞ்சி நடுங்கவில்லை .பவானியின் இந்த நிமிர்வூ ,ஒதுக்கம் சங்கரனை தான் உலுக்கி விட்டது.தவறு செய்யாதவரிடம் இந்த நிமிர்வு இருக்காதே என்று ஒரு கணம் திகைத்து போனார் சங்கரன்

பவானி சொல்லியது ஒரு புத்த தத்துவம் .சூரியன் ,நிலா ,உண்மை ஏதாவது காரணத்தால் மறையலாம் ,மறைக்க படலாம் ....ஆனால் இவை என்றுமே மறைந்து இருக்காது ......மறைத்து வைக்க முடியாதவை என்று புத்தர் கூறிய பொன்மொழிகள் .உண்மை ,சத்தியத்தின் சக்தியை மிக எளிதாக உலகிற்கு கூறும் வாக்கு .

'சோனாவின் வார்த்தை நீ நம்பிகோ ......ஆனால் உண்மை என்பது ஒன்று உண்டு .....உண்மை மறைந்தே இருக்காது .....ஒரு நாள் தானாகவே வெளி வரும்........ஒரு நாள் இதை நீ புரிந்து கொள்வாய் ....'என்று மறைமுகமாய் சொல்லி விட்டு சென்று விட்டார்

(எம்மா .......உங்க அளவுக்கு அவருக்கு அறிவூ இருந்தால் அவர் ஏன் அந்த பிசாசை மகள் என்று உறவூ கொண்டாட போகிறார் .....அவள் சொன்னதை நம்பி உங்களை அடிக்க போகிறார் .....இது எல்லாம் அவருக்கு புரியுமா ?)

சோனாவின் மாஸ்டர் பிளான் அப்படி பட்டது .முழு பூசணிக்காயை அவள் கையாலேயே மறைத்து இருந்தாள் .முழு பூசணிக்காயை அவள் கையாலேயே மறைத்து இருந்தாள் .மதுரா வேலை விட்டு போனாலும் ,இனி ஒரு முறை வேலையை எக்காரணம் கொண்டும் விட முடியாத படி சங்கரனை கொண்டே காய் நகர்த்தி மீண்டும் மதுராவை தன் கண் பார்வைக்கு கொண்டு வந்து விட்டாள் சோனா .

போன் செய்யாத பவானி போன் செய்து யார் பேச்சையோ நம்பி தன்னை கேவலமாக திட்டியதாகவும்,மதுராவை வேலையை விட்டு நிறுத்தி விட்டதாகவும் ,மன அழுத்தம் ,துக்கம் ,துயரம் தாங்காமல் இல்லாத குழந்தை கருவிலேயே அழிந்து விட்டதாகவும் ,இந்த விஷயம் தெரிந்து சங்கரன் பவானியை எதுவும் செய்ய கூடாது என்று சத்தியம் வேறு வாங்கி சங்கரனை கொண்டே மதுராவிற்கு செக்மேட் வைத்து விட்டாள் என்பது அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்தது .

இனி சோனாவே போன் செய்து தன்னை பற்றி உண்மையை கூறினாலும் சங்கரன் நம்ப போவதில்லை என்பது உறுதியாக விளங்கியது .பாசம் ,ஒரு குழந்தை தன் மனைவியால் இறந்து விட்ட குற்ற உணர்வூ அவரை ஆட்டி படைத்தது .

தன் குறுக்கு புத்தியால் இருபத்து எட்டு வருட மண வாழ்வில் சோனா புயலை கிளப்பி விட்டாள் .அன்று அவள் எழுப்பிய புயல் தொடர்ந்து ஆறு மாதமாய் மதுராவின் குடும்பத்தில் ,சங்கரன் -பவானியின் வாழ்வில் வீசி கொண்டு இருந்தது .ஆதர்ச தம்பதி என்று பேர் எடுத்த இருவரும் பேசுவது கிடையாது .கோர்ட் படி ஏறாமலே மன விவாகரத்தை இருவருக்கும் அந்த புண்ணியவதி பெற்று கொடுத்து விட்டாள் .

பவானி அஞ்சி நடுங்கி ,கதறி அழவில்லை .அவருடையது தார்மீக கோபம் .எந்த மனைவியும் கணவனிடம் எதிர்பார்க்கும் அடிப்படை விஷயம் நம்பிக்கை .அது தகர்ந்து போக எவளோ ஒருத்தியின் போன் கால் போதுமானதாக இருந்தால் அப்போது அவர்கள் வாழ்ந்த மணவாழ்வுக்கு அர்த்தம் தான் என்ன என்பது தான் பவானியின் கொதிப்பின்,அமைதியின் பின் இருந்த கேள்வி .

சங்கரனும் பவானியை பேசவே விடாமல் ,அவரே போலீஸ் ஆக விசாரித்து ,அவரே நீதிபதியாகி ,'பவானி குற்றவாளி 'என்று தீர்ப்பு வழங்கி விட்டார் .......குற்றம் தகுந்த சாட்சியுடன் நிரூபிக்க படும் வரை குற்றம் சாற்ற பட்டவரும் நிரபராதியே என்ற அடிப்படையை மறந்து விட்டார் .இது மனைவியின் கெளரவம் ,தன்மான பிரச்சனை என்பதை முக்கால்வாசி கணவன்மார்களை போலெ அவரும் உணரவில்லை .

திருமணம் இரு மனங்களை மட்டும் அல்ல ,இரு குடும்பத்தையும் இணைக்கிறது என்பதை இந்த வயதுக்கு பிறகு மறந்தது யாரின் தவறு ?

'என் குடும்பம் ......அதை தான் நம்புவேன் ...இதில் நீ தலையிடாதே 'என்று பிள்ளைகளின் முன்பே கூறுவது அந்த மனைவிக்கு எவ்வளவூ பெரிய மரண அடி என்பதை உணர தவறியது எப்படி ?இப்படி ஒரு காரியத்தை தன் மனைவி செய்வாளா என்று இவ்வளவூ வாழ்ந்த மனிதர்க்கு எப்படி மறந்து போனது ?இத்தனை வருடத்தில் மனைவியின் குணத்தை கூடவா இவர் புரிந்து கொள்ளவில்லை ???

அவரையும் முழு குற்றவாளி என்று சொல்ல முடியாது தான் .அவரின் ஒரே குற்றம் அளவூக்கு அதிகமான பாசம் வைக்க தகுதி இல்லாதவளின் மீது பாசம் வைத்து ,மகளாக ஏற்று கொண்டது .மகள் ஸ்தானத்தில் அவர் நினைத்து இருந்தவள் ,'உன் மனைவியால் என் கரு கலைந்து விட்டது 'என்று குற்றம் சாட்டி அழும் போது தந்தையாக துடித்து போனார் .இப்படி ஒரு பெண் ,அதுவும் தன் சொந்த ரத்தம் பொய்யும் சொல்வாள் அதற்கு மேலும் போவாள் என்று அந்த நல்ல உள்ளம் அறியாமல் போனது .

சங்கரன் நெஞ்சை ,நெஞ்சை பிடித்து கொள்ள ,சோனாவை பற்றிய உண்மை அவரிடம் தைரியமாக கூற கூடவிஜய் உட்பட யாருக்கும் தைரியம் வரவில்லை .அங்கு பணயமாய் இருப்பது அவரின் உயிர் அல்லவா ???

மறுநாள் விடாப்பிடியாய் மகளை சென்னைக்கு அழைத்து சென்றார் சங்கரன் .மதுரா தாயிடம்,தந்தையிடம் மாறி மாறி தூது சென்று நொந்து போனாள் என்றால் மிகையல்ல .இருவரும் தங்களின் நிலையில் இருந்து இறங்கவே இல்லை .இருவரின் கெளரவம் ,பிடிவாதத்திற்கு முன் மகளின் வாழ்வூ பலியானது .

மறுநாளே மதுராவை மீண்டும் 'இந்தர் இண்டஸ்ட்ரீஸ் 'யில் விட்டு ஆயிரம் தடவை விஜய்யிடம் மன்னிப்பு கேட்டு சென்றவரின் வெள்ளை உள்ளம் இன்று தன்னை நிறுத்தி இருக்கும் இடம் ----நடந்ததை மீண்டும் அசை போட்டவளிடம் இருந்து பெரு மூச்சு எழுந்தது .

ஒரு பக்கம் பெற்றோரின் வாழ்வூ ,மறுபுறம் தன் மானம் ,உயிர் என்று கிடைத்த இடத்தில எல்லாம் மிக பெரிய ஆப்பு ,செக்மேட் வைத்து விட்டு இருந்தாள் அ (எ )ருமை சகோதரி .

PENANCE WILL CONTINUE.................... தவம் தொடரும்...............
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1455_370334423090106_817133163_n.jpg

இவளுக்கு விஜய் மீது கோபம் ,வன்மம் என்றால் அவனை பிடித்து கொள்ள வேண்டியது தானே இந்த வேதாளம் ......இதுங்க ரெண்டுத்துக்கும் என்ன தான் அப்படி பிரச்சனையோ ....அதற்கு நான் தான் பலியாடு போல் இருக்கு ......மரமூஞ்சி ,ரோபோர்ட் ,சிரிக்க கூட தெரியாத பாறை .....சிரிப்பு என்றால் என்ன என்று கேட்பான் போலெ இருக்கு .....மனுஷியா கூட பார்க்க மாட்டான் ...கல்லையும் ,மண்ணையும் பார்ப்பது போல் ஒரு லுக் ....வாயை திறந்து ஆபீஸ் விஷயத்தை தாண்டி ,'சாப்பிட்டியா ....நல்லா இருக்கீயா ?'என்று கூட அவன் என்றுமே கேட்டது கிடையாது .

வைரல் பிவேர்ரால் ஹாஸ்பிடலில் ஒரு வாரம் கிடந்த போது கூட நலம் விசாரிக்காதவன் அவன் .இதுவே மற்ற யாருக்காவது சின்ன அடி என்றால் கூட அவர்களோடு ஹாஸ்பிடலுக்கே சென்று விடுவான் .பத்து முறை கால் செய்து விசாரிப்பான் .

'இவ லீவு எடுத்தா வேலையை யார் பார்ப்பது ?'என்று புலம்ப வேறு செய்தானாம் .

இப்படி பட்ட FRAKENSTEIN ,இயந்திர மனிதனோடு 'AFFAIR 'ஒன்று தான் குறைச்சல் .ஆள பார்த்து ஜோடி சேர்த்தா பாரு பைத்தியக்காரி .சரியான துர்வாச முனிவர் .உணர்ச்சியே இல்லாத ஒரு பார்வை ...என்ன பார்வையோ அது .....அந்த நாள் முழுவதும் இவள் தான் முழித்து கொண்டு ,'என்ன தவறு செய்து விட்டோம் 'என்று தலையை பிய்த்து கொள்வாள் .

'விட்டுடு ....நான் போகிறேன் ...'என்று சொன்னாலும் விடாமல் ,நாலு கோடி காரணத்தை உருவாக்கி ....விஜயயை விட்டு போக விடாமல் செய்பவளை என்ன தான் செய்வது ????அவனுக்கு மனைவியை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க தெரியாது .....மனைவியை அவள் இஷ்டம் போல ஆட விடுவானாம் .....அவ மன நிலை பாதிக்க பட்ட சைக்கோ மாதிரி இன்னொரு பொறுக்கியோடு சேர்ந்து பிளான் போட்டு கார்னெர் செய்வாளாம் ....இவர் 'திரைக்கு வராத கதை 'போலே யாருக்கும் தெரியாமல் ,'DAMSEL IN DISTRESS ',இருக்கும் போது ,எல்லா கதைகளிலும் வரும் ஹீரோ போல பின்னால் இருந்து காப்பாற்றுவாராம் ......எதுக்கு இப்படி தலையை சுற்றி மூக்கை தொடணும் ?????நேரே ரதிதேவியை ,மாதருள் மாணிக்கத்தை அழைத்து ,'அம்மா !தாயே !தர்ம பத்தினி .....ஐ லவ் ஒன்லி யூ மா .....பொறாமை படாதே ......நான் உன்னுடைய ஹோல் சேல் ப்ரொபேர்ட்டி .......'என்று சொல்லி தொலைக்க வேண்டியது தானே ....நட் போல்ட் கழன்ற கேஸுங்க .....'என்று விஜய்க்கு மனதில் மண்டகப்படி நடத்தி கொண்டு இருந்தாள் மதுரா .

தோட்டத்தில் பந்தலின் அடியில் அமர்ந்து ஒரு வருடமாய் நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டு கொண்டு இருந்தவளின் தோளின் மீது ஒரு ஆண் கரம் படிந்தது .அதிர்ந்து போய் திரும்பி பார்த்தாள் மதுரா .

அதே நேரம் மதுராவிற்கு சோனா கால் செய்து விட்டு ,சுமனை தேடி சென்ற அறை மணி நேரம் கழித்து ,'கஜா போர்ட் இல் 'இருந்த மரகதத்தின் அறைக்கு அடித்து பிடித்து ஓடி வந்தார் கனகா .

"அம்மா !....."என்றார் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க .....

"என்ன கனகா ......"என்றார் மரகதம் தான் படித்து கொண்டு இருந்த ராமாயணத்தை மூடி வைத்தவாறு .

"அதுக எல்லாம் வெளியே போய்டுச்சுமா ....."என்றார் கனகா நிம்மதி பெருமூச்சோடு

"சீக்கிரம் கதவை மூடு கனகா .....உன் வீட்டுக்காரரும் ...விஜய்யும் எங்கே ?"என்றவர் பேசியவாறே அந்த அறையில் மேடை மேல் வைக்க பட்டு இருந்த,ஆள் உயர பளிங்கு கிருஷ்ணர் சிலையை அதன் பீடத்தில் இருந்து நகர்த்தினார் ..இந்த பீடத்தின் அடியில் சிறிய துவாரம் தோன்ற அதனுள் கை விட்டு சாம்சங் மொபைல் ஒன்றை வெளியே எடுத்தார் .

"அவரும் தம்பியும் இப்போ தான் மா தூங்கறாங்க .....உங்க மாப்பிளை கருணாவை நினைத்து நைட் புல்லா புலம்பிட்டே இருந்தார் .கருணாவும் யார் யாருக்கோ போன் செய்து பேசிட்டே இருந்தான் மா .....சிட் அவுட்ல தூங்காம விடிய விடிய கிட்டார் வாசிச்சுட்டு இருந்தான் ......நான் தான் போய் தூங்க சொன்னேன் .........தினமும் அவன் படும் வேதனையை கண் கொண்டு பார்க்க முடியலை அம்மா ......ஏன் தான் இவனுக்கு போய் இப்படி எல்லாம் நடக்குதோ ....எப்போ தான் இவனுக்கு விடிவூ காலம் பொறக்குமோ ......"என்று புலம்பியவர் பெருமூச்சை விட்டார் .

"விடிவூ காலம் பொறந்தாலும் ,நம்ம பொறக்க வைச்சாலும் அவன் தான் தியாக செம்மல் பட்டம் வாங்கியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறானே ......இவன் நிலையில் தன் இருந்தே பேசறான் ....மதுரா மனசு பற்றி ,அவள் விருப்பம் பற்றி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் என்கிறான் ...... நாமளும் எங்கு எல்லாமோ விசாரித்து விட்டோம் .....ஒரு சின்ன CLUE கூட கிடைக்க மாட்டேங்குது ......அப்படி ஏதாவது கிடைத்தாலும் மதுரா கிட்டே நாம்ம பேசி விடலாம் .....கையில் சாட்சி ,ஆதாரம் எதுவும் இல்லாம எப்படி பேச முடியும் ....."என்றவர் அணைத்து வைத்து இருந்த மொபைலை உயிர்ப்பித்தார் .

மொபைல் ஆன் ஆன உடனே அதில் இருந்த மூன்றில் ஒரு நம்பரை அழைத்தார் .நான்காவது அழைப்பில் அழைப்பு ஏற்கப்பட்டது .
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படிக்கும் நட்பூஸ் ...கமெண்ட் SECTION இருக்கு ...அங்கே போய் உங்க கருத்துக்களை பதிவூ செய்து விடுங்க .காசா பணமா .....உங்க கமெண்ட் தானே கேட்கிறேன் ......உங்களின் கமெண்ட் மேலும் எழுதவூ நிறுத்தவூ காரணமாக அமையலாம் .
இந்த கதை பிடிக்காதவர்கள் உங்களின் ரியாக்ஷன் ,கமெண்ட் INBOX அனுப்புங்க விவரமாக ...... தொங்கி போன முகம் ,கை டவுன் சிம்பல் ,X மார்க் போடுறவங்க எதற்கு போடுறீங்க என்று சொல்லி விட்டு போடுங்க மக்கா ...இருக்கும் நாலு முடியையும் பிச்சுக்க வைக்காதீங்க ......;);););):p:p:p:devilish::devilish:
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM--23(3) தவம் 23(3)

மொபைல் ஆன் ஆன உடனே அதில் இருந்த மூன்றில் ஒரு நம்பரை அழைத்தார் .நான்காவது அழைப்பில் அழைப்பு ஏற்கப்பட்டது .

"என்ன மரகதம் ......என்ன பிரச்சனை ...யார் கிளப்பியது ?என்றது எதிர்முனை மிக கம்பீரமாக .---அட இது நம்ம சிவகாமி பாட்டி
(ஆமா இவங்க ரெண்டு பேரும் எப்போ பெவிகால் இல்லாம ஒட்டிக்கிட்டாங்க...ஆடு பகை குட்டி உறவா ???? ....அதானே பார்த்தேன் என்னடா ....ஒன்றுமே இல்லாத சிவகாமி பாட்டி ரஜினி படத்தில் வருவது போலெ ஒரே பாட்டில் எப்படி ஏழை சிவகாமி -கோடீஸ்வரி சிவகாமி ஆனாங்க என்று ..... பின்னால் இருந்து உதவுவது ,இந்த அளவுக்கு சிவகாமி பாட்டியை ஏற்றி விட்டது மரகதம் பாட்டியா ????மரகதம் பாட்டி வாய் இல்லா பூச்சினு உங்களை நினைத்தா கஜாவின் கண்ணில் மறைமுகமாக விரலை விட்டு ஆட்டுவது நீங்க தானா ??????அப்போ சிவகாமி பாட்டிக்கு இன்னொரு திருமணம் நடத்தி வைத்ததும் உங்க வேலை தானா .....தூள் போங்க ....பட்டய கிளப்புறீங்க .....கல் ஆனாலும் கணவன் ,புல் ஆனாலும் புருஷன் என்று இருக்கீங்க என்று பார்த்தா silent கில்லர் ரா இருக்கீங்க .....)

"பிரச்சனை என்றால் தான் உனக்கு நான் அழைக்கணுமா என்ன ....சும்மா பேச அழைத்திருக்க கூடாதா ?"என்றார் மரகதம் புன்னகையுடன்
(இது என்ன பாட்டி குடும்ப டயலாக் மாதிரி இருக்கே ......விஜய்யும் ஆல்வின் கிட்டே இதே தானே சொன்னான் !)

"சும்மா பேச நமக்கு என்று நேரம் கிடைத்து இருக்கிறது ?????போர் களத்தில் நிற்கிறோம் ....தினமும் ஏதாவது யுத்தம் நடந்து கொண்டு தானே இருக்கிறது .....சொல்லுமா ......இந்த தடவை யார் யாரிடம் மாட்டி இருப்பது ?
என்றார் சிவகாமி

"மதுராக்ஷி ...........மாப்பிளை சேதுவின் தம்பி சங்கரன் தெரியும் இல்லையா .....ஹ்ம்ம் ஆடிட்டர் ரா குன்னூர்ல இருக்கார்ல அவரின் மகள் ......சோனாவிடம் ....."என்று முன் தினம் இரவூ சுமனோடு சேர்ந்து சோனா நடத்திய கொடூரத்தை சொன்னார் ."அந்த படுபாவி சுமனை வேறு கூட்டு சேர்த்து இருக்கா .....அவனும் மதுராவிற்கு குறி வைத்து இருக்கிறான் .....மாசிலாமணி முகத்திற்காக பார்க்க வேண்டியதாக இருக்கிறது ........கருணா தக்க சமயத்திற்கு சென்றதால் எந்த விபரீதமும் நடக்காமல் தடுக்க முடிந்தது ......ஒண்ணு கடக்க ஒன்று நடந்து போச்சுன்னா .....நினைக்கவே பதறது ....."என்றார் மரகதம் வேதனையுடன் .

"மதுரா ! ஹ்ம்ம் ."மதுராக்ஷி ........மீட்டிங்கில் கருணாவோடு பார்த்து இருக்கேன் .....கண்ணனுக்கு லட்சணமா ,துலக்கி வைச்ச குத்துவிளக்கு கணக்கா அம்சமா இருப்பாளே .....வேலையிலும் படு சுட்டி என்று கேள்வி பட்டு இருக்கேன் ......ஏற்கனவே உங்க கிட்டே ,கருணாவிடம் அவளை பி.ஏவா சேர்த்த போதே சொன்னேன் தானே .....கருணாவின் காலேஜ் வாழ்வூ பற்றி ஏதோ clue கிடைத்து இருக்கு ...அதை வைத்து மதுராவை இங்கே கொண்டு வந்து இருக்கா .....மதுரா இங்கே வேலை செய்வது ரெண்டு பேருக்குமே நல்லது இல்லை என்று .....ஒன்று கார்த்திக்கோடு திருமணத்தை நடத்தி இருக்க வேண்டும் ....இல்லை விஜய் மனதையாவது மாற்றி இருக்க வேண்டும் .....ஒரு வருடமாய் எதையும் செய்யாமல் .....பின்னால் இருந்து காப்பது யாருக்கு தான் பயன் ?????முலையில் கிள்ளி இருக்க வேண்டிய விஷயத்தை ஆலமரமாக்கி விட்டு இருக்கிறாயே .....கருணாவை புத்திசாலி என்று நினைத்தேனே ...அவன் கூடவா இப்படி கோட்டை விட்டு நிற்கிறான் ?"என்றார் சிவகாமி கடுப்பாக

"கருணா ...மட்டும் என்ன செய்து விட முடியும் ?????சங்கரனை கொண்டு மதுராவை ரெண்டு முறை வேலைக்கு வர வரவழைச்சு இருக்கு இந்த பேய் .....நாங்க மதுராவிற்காக ஒரு விரலை அசைத்தால் கூட அது நூறு மடங்கு மதுராவிற்கே திரும்புது ....ஆறு மாசம் முன்பு ஆஃபிஸில் சோனா நடத்திய கூத்தை வைத்து மதுராவை வேலையை விட்டு நிறுத்தினான் கருணா ....என்ன ஆச்சு போன ஒரே நாளில் திரும்ப வர வழைச்சுட்டா ......சங்கரனும் ,பவானியும் கோர்ட் போகாத குறை .....இது உனக்கே தெரியும் தானே .....சோனாவிடம் மதுராவிற்கு மாப்பிளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைச்சு இருக்கும் சங்கரனின் மூளையை மியூசியத்தில் தான் வைக்க வேண்டும் ....அந்த கார்திக்க்கும் லூசு மாதிரி வேலை செஞ்சு வைச்சுட்டு இருக்கான் ....சோனா பத்தி பேச்சு எடுத்தாலே அந்த மனுஷன் நெஞ்சை நெஞ்சை பிடிச்சுக்கறார் .....சேது கூட இந்த அளவூ சோனாவால் நெஞ்சை பிடித்தது இல்லை ....அந்த மனுசனிடம் பேசவே பயமா இருக்கு .....இன்று காலை தான் சுபா மதுராவிடம் விஷயத்தை சொல்லி இருக்கா ....கொஞ்சம் அவளும் சூதனமா நடந்துப்பா இல்லை ...."என்றார் மரகதம் .

"நாலு கோடி எல்லாம் பெரிய விஷயமே இல்லை ....நாளை காலை சோனாவின் முகத்தில் அந்த பணத்தை வீசி எறிந்து மதுராவை நாங்க கூட்டி போறோம் .....கருணாவோ ...இல்லை நீங்களோ இன்வோல்வ் ஆனா தானே பிரச்சனை ....சோனாவால் எங்களை என்ன செய்து விட முடியும் ?????நாங்க இறங்கி இருக்கிறோம் என்று தெரிந்தாலே சோனா பல் பிடுங்கின பாம்பு ......இதற்கு எல்லாம் கவலை பட்டு உன் உடம்பை கெடுத்துக்காதே மாரா .....இத்தனை பேர் எதுக்கு இருக்கோம் ?????என் கிட்டே சொல்லிட்டேலே ......நான் பார்த்துகிறேன் .....நீ விஜய் மனதை மாற்றும் வழியை பாரு ......மதுரா என் பேத்தி ....என் பொறுப்பு ....வச்சிடறேன் "என்றவர் தொடர்பை துண்டித்தார் .

(இது தான் மதுரா டீம் நம்பர் 2 வா .....வெற்றி குரூப்ஸ் இப்போ மதுராவின் காவல் படையா .....???)

சிவகாமியிடம் மதுராவின் பொறுப்பு சென்று விட ,மன நிம்மதி அடைந்த மரகதமோ ,பொறுப்பை ஏற்று கொண்ட மரகதமோ அறியவில்லை ,மதுராவை எதிர் காலத்தின் பொறுப்பை இன்னொருவன் ஏற்று கொள்ள போகிறான் அதுவும் அன்றே ....அதுவும் மின்னல் வேகத்தில் என்பதை ......விஜய் இது வரை கெட்டவர்களை எதிர்த்து நின்றான் ....ஆனால் இனி யுத்தம் ஒரு நல்லவனோடு என்பதையும் ,இருவரும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் இருவரும் போராடுவது மதுராவின் பாதுகாப்பிற்காக என்பதையும் .

சிவகாமி பாட்டியுடன் ,மரகதம் பேசி கொண்டு இருந்த அதே வேளையில் சென்னை அண்ணா நகரில் ஹை டெக் பங்களாகள் இருக்கும் பிரதான தெருவில் நுழைந்தது ஆல்வின் பைக் .....அந்த தெருவையே அடைத்து கம்பீரமாக எழுந்து நின்றது அந்த மாளிகை .பங்களாவின் கம்பீரம் ,பழமை ,உச்சக்கட்ட பாதுகாப்பு சொல்லியது அந்த மாளிகையில் வசிப்பவர்களின் பின்புலத்தை .க்ரானைட் ,ரியல் எஸ்டேட் ,உணவூ பதனிடுதல் ,ஹோட்டல்கள் ,ரெஸ்டாரண்ட்கள் ,ஷாப்பிங் மால்கள் என்று அனைத்திலும் கொடி கட்டி பரந்த ரத்தன் சிங் குடும்பத்தின் பிரதான வீடு அது .ரத்தன் சிங் குடும்பத்தினர்---- 'ஜெய்ப்பூர் 'ராஜா வம்சத்தினர் . ரத்தன் சிங் என்பது வழிவழியாக வரும் குடும்ப பெயர் .நான்கு தலைமுறைக்கு முன்பே தமிழகத்தில் குடி ஏறி இருந்தனர் ....பல தொழில் வல்லுநர்கள் ,மல்டி -மில்லியனர்கள் ,தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவிலும் ,பிற நாடுகளிலும் தொழில் செய்பவர்கள் .அந்த குடும்பத்தின் இன்றைய வாரிசு சூரிய பிரதாப் ரத்தன் சிங் .அவனை காண தான் ஆல்வின் வந்து இருந்தது .

ஆல்வின் ,விஜய் ,பாலாஜி மூவரும் சூர்யாவிற்கு ஜூனியர்கள் .இவர்களிடம் சூர்யாவிற்கு நல்ல நட்பு உண்டு .சட்டென்று பார்க்க தெலுங்கு நடிகர் ராம் சரண் போலெ இருந்தான் .ஆறடி ரெண்டு அங்குல உயரம் ,6 பேக் உடல் அமைப்பு ,செதுக்கிய முகம் ,ராஜாக்களை ,கூர் விழிகள் என்று பல பெண்களின் கனவூ நாயகன் .மனைவி ரித்திகா இழந்த வேதனையில் இருந்தாலும் அவனின் ஆளுமை எந்தவிதத்திலும் குறைந்து இருக்கவில்லை .

அந்த பங்களா பாதுகாவலன் உத்தம் சிங் ஆல்வின்னை சூர்யாவின் மீட்டிங் ரூமிற்கு அழைத்து சென்றான் .போகும் வழியில் ஒரு கணம் தேங்கி நின்றான் ஆல்வின் .படிகளில் புள்ளி மான் என துள்ளி குதித்து இறங்கி கொண்டு இருந்தாள் சூர்யாவின் சகோதரி சந்திரகலா தேவி .

"ஹாய் ஆல்வின் அண்ணா ...என்ன ரொம்ப மாசமா ஆளையே பார்க்க முடியவில்லை இந்த பக்கம் ...."என்றாள் சந்திரா .ஆல்வினின் கைகளை பிடித்து கொண்டு .

"இல்லைம்மா ....கொஞ்சம் வேலை இருந்தது ....அதான் வரமுடியல்லை ...."என்றான் ஆல்வின் .சந்திராவின் ஆபத்து அசெஸ்மென்ட் ஆல்வின்னின் செக்யூரிட்டி கம்பெனி தான் ஏற்று இருந்தது .சுமனால் சந்திராவிற்கு ஆபத்து என்று முன்னரே எச்சரிக்கை அனுப்பியும் இருந்தான் ஆல்வின் .

ஆனால் எவ்வளவூ பாதுகாப்பாக இருந்தாலும் ,சந்திராவிற்கு பதில் ரித்திகா மாட்டி உயிர் இழந்து இருந்தாள் .சந்திராவிற்கு பதில் ரித்திகாவை கடத்தி இருந்தான் சுமன் .

"மிருதுளா அண்ணி எப்படி இருகாங்க .....ஐயோ ....வந்தவங்களுக்கு சாப்பிட கூட எதுவும் கொடுக்காம பேசிட்டு இருக்கேன் பாருங்க .....வாங்க அண்ணா சாப்பிடலாம் "என்றாள் சந்திரா

"மிருதுளா நல்ல இருக்கா மா ...உன்னை ரொம்ப விசாரிதா இல்லைம்மா ....சாப்பிட்டுட்டு தான் வந்தேன் ....நீ போய் சாப்பிடுமா .....ரத்தன்ஜீ நான் வெயிட் செய்துட்டு இருப்பாங்க ....."என்றான் ஆல்வின் .

"அடுத்த முறை வரும் போது மிருதுளா அண்ணியையும் கூட்டி வாங்க அண்ணா ....பை ..."என்றவள் சிட்டாக பறந்து மறைந்தாள் .

உத்தம் சிங் ஆல்வின்னை சூர்யாவின் அறைக்கு அழைத்து சென்றான் ...கதவை தட்டி விட்டு அனுமதி கிடைத்த உடன் உள்ளே நுழைந்தனர் இருவரும் .அந்த பெரிய ஆபீஸ் அறையில் தன் டேபிள்லில் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்த சூரிய பிரதாப் தலை அசைத்தான் அவர்களை வரவேற்கும் விதமாக.கருப்பு நிற tuxedoவில்,ஆண்மைக்கு இலக்கணமாக அமர்ந்து இருந்தான் சூர்யா .
1382305898-147.jpg

"ஏன் ஆல்வின் எங்க வீட்டிலில் எல்லாம் சாப்பிட மாட்டியா என்ன .....சந்திரா கூப்பிட்டா போய் சாப்பிட வேண்டியது தானே ...என் மேல் ஏன் பழி போடறே ?"என்றான் சூர்யா ஆல்வின் அமர்ந்ததும்.உத்தம் சிங் சூர்யாவிற்கு பின்னால் போய் நின்றவன் கைகளை கட்டி கொண்டு விறைப்பாக நின்றான் .

"சார் ...சார் ..."என்று தந்தி அடித்தான் ஆல்வின் .

"ஓகே ...ரிலாக்ஸ் ஆல்வின் .....என்ன ரொம்ப மாசம் கழிச்சு என்னை மீட் செய்யணும் என்று உத்தம் கிட்டே

பெர்மிஷஸின் கேட்டு இருக்கே .....என்ன விஷயம் ?நேத்து அந்த கஜா பார்ம் ஹவுஸ் மாட்டர் ரா ???"என்றான் சூர்யா வெகு நிதானமாக .

அதிர்ந்து போன ஆல்வின் ,"சார் !...........உங்களுக்கு எப்படி சார் ....தெரியும் ?என்றான் திகைப்புடன் .

PENANCE WILL CONTINUE.....................
 
Last edited:
Status
Not open for further replies.
Top