anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 24(4)
கணவன் பேச வருவதற்குள் அந்த வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள் ரூபிணி
அந்த அறையின் கதவை தட்டி ,"சாரி ரூபா ...ரொம்ப சாரி மா ...இன்னைக்கு ஆபீஸ் friend பொண்ணுக்கு பர்த்டேன்னு கூப்பிட்டான் போனேன் ....அந்த குட்டி பாப்பாவை பார்த்த உடன் எனக்கு நம்ம குழந்தை நியாபகம் வந்துடுச்சு ......நம்ம குழந்தை உயிரோடு இருந்தா அதற்கு நாலு வயசு ஆகி இருக்கும் இல்லை இந்நேரம் .....அந்த கொடுப்பினை தான் எனக்கு இல்லையே ...பேசுடீ .....என் கிட்டே நீ பேசி நாலு வருஷம் அச்சுடீ .....உயிர் போரா மாதிரி வலிக்குதுடீ .....வந்து பேசு ,சண்டை போடு ....அடிக்க கூட அடிச்சுடு ....இப்படி பேசாமல் கொள்ளாதே ..."என்று கதவை தட்டி அழுத திவாகர் ,அந்த வீட்டின் உள்ளே இருந்த மாடிப்படியின் கடைசி படியில் அமர்ந்தான் .அந்த படிக்கெட்டில் ஒரு விளக்கும் ,சிறு பூக்களும் ஏற்ற பட்டு இருந்ததை கண்டவன் முகத்தை மூடி அழுதான் .
"கண்ணா !....நீ சாக இந்த பாவியே காரணமாகிட்டேனே ....இந்த அப்பாவை மன்னிச்சுடு ...."என்று அழுதவன் அந்த படியில் தலை வைத்து படுத்து விட்டான் .
அந்த படியில் தான் ரூபிணி உருண்டு விழுந்து அவர்களின் குழந்தை கருவிலேயே இறந்து போனது .அது அவன் கருணாவிற்கு செய்த பாவத்திற்கான கடவுளின் தண்டனை என்று தான் அவனுக்கு தோன்றியது .
ரூபிணியும் ,அவனும் காதலித்தார்கள் .இரு குடும்பமும் சம்மதிக்க ,அவன் வீட்டில் கேட்டதற்கு மேலேயே கருணா வீட்டில் திருமணத்திற்கு செய்து கொண்டு இருந்தார்கள் .திவாகரின் பெற்றோரின் பேராசை ஊர் அறிந்த ஒன்று .இவர்களின் திருமணம் கை கூடும் சமயத்தில் தான் சோனாவும் ,அவள் தாத்தா கஜேந்திரனும் இவன் பெற்றோரை சந்தித்து ,வீடு ,வேலை ,பணம் என்று ஆசை காட்டியது .பதிலுக்கு இவர்கள் செய்ய வேண்டியது கருணா சோனாவை மணக்க சம்மதித்தால் மட்டுமே ரூபிணியின் கழுத்தில் தாலி ஏறும் என்று கருணாவிடம் சொன்னார்கள் .
கருணா அதற்கு சம்மதிக்கவேயில்லை .அதனால் ரூபிணி ,திவாகரின் திருமணம் நிற்கும் நிலைக்கு வந்து விட்டது ஆனால் விதி அங்கு தான் விளையாடி இருந்தது .திருமணம் ஆக போகிறதே என்று ரூபிணியும் ,திவாகரும் அளவுக்கு மீறி பழகி இருந்ததன் விளைவூ ரூபிணி தாய்மை அடைந்து இருந்தாள்.அதன் எதிரொலி கருணாகரன் சோனாவின் கணவனானது .
"கருணா !உங்க தங்கச்சி கழுத்தில் நான் தாலி கட்ட தயார் ......ஆனால் முதல் முகுர்த்ததில் என் தங்கையின் கழுத்தில் நீங்க தாலி கட்டி இருக்க வேண்டும் .....இல்லை என்றால் எங்க திருமணம் நடக்காது ...."என்றான் திவாகர் -சங்கரனை போலெ சோனா சொல்லிய 'கருணாவின் மேல் காதல் 'பொய்யில் ஏமாந்த இன்னொரு முட்டாள் .
"உங்க தங்கையை திருமணம் செய்கிறேன் .....ஆனா இப்படி நீங்க கேட்டதோ ,திருமணம் நடக்காமல் நின்ற விஷயமோ ரூபிணிக்கு தெரிய வேண்டாம் ....அவ தாங்க மாட்ட ....."என்ற கருணா சோனாவின் கழுத்தில் தாலி கட்டினான் .
ரூபிணிக்கும் ,திவாகருக்கும் அதே மேடையில் அடுத்த முகுர்த்ததில் திருமணம் நடந்தது .தாலி ஏறிய ஒரு மணி நேரத்தில் அதை கழற்றி வீசி விட்டு சோனா சுமன்னோடு சென்றதை கண்ட திவாகரின் திகைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாததாக இருந்தது .
மனைவியோடு தங்கள் வீடு வந்தவன் ,தாயை மாடிக்கு கூட்டி சென்று பொரிய ஆரம்பித்தான் ."என்னமா ...நீ என்னவோ சொன்னே அந்த சோனா உன் தங்கை ....அவ கருணாவை உயிருக்கு உயிராய் காதலிக்கறா ....அவன் இல்லை என்றால் செத்துடுவா .....உங்க கஜா பெரியப்பா தான் அவ உயிரை காப்பாற்றியது என்று சொன்னே .....இவ ஒரு மணி நேரத்தில் கட்டின தாலியை அவுத்து போட்டுட்டு இன்னொருத்தனோடு போறா ......என்ன மா இது .....நீ சொன்னே என்றதால் தானே நான் கருணாவிடம் 'உங்க தங்கை pregnant டா இருக்கா ...அவ கழுத்தில் நான் தாலி கட்டனும் என்றால் நீங்க என் தங்கையை திருமணம் செய்ய வேண்டும் இல்லை என்றல் உங்க தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துகோங்கோ என்று சொன்னேன் ....'"என்றான் திவாகர் .
"டேய் பைத்தியக்கார .....அது கோடீஸ்வர வீட்டு பொண்ணு ....வெளிநாட்டில் வளர்ந்தவ ....அப்படி இப்படி தான் இருப்பா .....அன்னாடம் காய்ச்சியான அந்த கருணாவுக்கு யோகம் அடித்து இருக்கு ....நமக்கும் பெங்களூருவில் வீடு ,உன் தம்பிக்கு தொழில் ,நமக்கு பணம் பெரியவர் இதற்காக தான் கொடுத்து இருக்கிறார் ....அவர் சொன்ன வேலையை செய்து விட்டோம் ....இனி அவங்களாச்சு ,கருணாவாச்சு ....நமக்கு என்ன ......போய் பொழைக்கும் வழியை பாரு ..."என்று சொல்லிய தாயை கண்டு இடிந்து நின்ற திவாகர் தாயின் பின் நோக்க அவர்கள் பேசியதை கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு நின்று இருந்த ரூபிணி மயங்கி சரிந்தாள் .
ரூபிணி மயங்கிய இடம் படிகளின் ஆரம்பமாக இருக்க,படிகளில் உருண்டு விழுந்தவளின் கரு களைந்து போனது .ரத்த வெள்ளத்தில் மனைவியை பார்த்த திவாகருக்கு மனதில் மரண அடி விழுந்தது .ஹாஸ்பிடலில் கொண்டு சேர்த்தால் அங்கு இரண்டாவது அடியாக அவர்களின் வாரிசு இறந்த செய்தி கிடைக்க நிலைகுலைந்து போனான் திவாகர்
ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது ரூபிணி வீடு திரும்ப ....வீடு வந்த பிறகும் ரூபிணியின் வெறித்த பார்வை மாறவில்லை .
"ரூபா !குழந்தை இறந்தது எனக்கும் வருத்தம் தான் .....அதற்குன்னு இப்படியே இருந்தா எப்படிம்மா .....வந்து சாப்பிடு ...."என்று அழைத்தவனுக்கு தெரியவில்லை மனைவியின் வெறிப்புக்கு ,உயிர் ஓட்டம் இல்லாத நிலைக்கு காரணம் குழந்தையின் இறப்பு அல்ல ,தங்களின் துரோகம் தான் காரணம் என்று .
"எனக்கு வருத்தம் இல்லை ......"என்றாள் ரூபிணி மெல்லிய குரலில் .
"வாட் ...என்ன சொன்னே ...."திவாகர் தான் அதிர்ந்து போனான் .ஒருவேளை தன் காதில் தான் ஏதாவது கோளாறா என்று குழம்பி விட்டான் .
அவனை நேர் கொண்டு பார்த்த ரூபிணி ,"உங்க குழந்தை இறந்ததில் எனக்கு வருத்தமே இல்லை ....ரொம்ப ரொம்ப சந்தோசம் தான் .......என் அண்ணன் எனக்கு அப்பா மாதிரி .....அவரின் வாழ்வூ அழிந்த பிறகு உங்களுக்கு மட்டும் மனைவி ,குழந்தை வேண்டி கிடக்குதா ......என் அண்ணன் வாழ்வூ அழிய காரணமான இந்த வீட்டு வாரிசு அழிந்ததில் எனக்கு நிம்மதி தான் .......என் வாழ்வுக்காக தன்னை பலி கொடுத்த என் அண்ணன் எங்கே ....கேவலம் பணத்துக்காக ,சொத்து சுகத்துக்காக விலை போன நீ எங்கே .....மனுஷனா நீ எல்லாம் ......உன்னை போய் உயிராய் நினைத்தேனே ,உன்னை நம்பி திருமணத்திற்கு முன்பே என்னை கொடுத்தேனே ............என் நம்பிக்கையை உடைச்சுட்டு ,என் பெண்மையை விலை பேசி இருக்காய் .....உன் வாரிசை நான் சுமக்க வேண்டுமா ........முடியாது ....என் அண்ணன் வாழாத வாழ்வூ நீ மட்டும் வாழ்ந்து விடுவாயா ......"என்று கொதித்து எழுந்தாள் ரூபிணி
"ஏய் !என்னா விட்டா ரொம்ப பேசிட்டு போறே ......வாழ முடியாதுன்னா கிளம்பி உங்க அப்பன் வீட்டுக்கு போடீ ...."என்றார் திவாகரின் அம்மா அகிலாண்டம் .
அவரின் கன்னத்தை பதம் பார்த்தது ரூபிணியின் கரங்கள் ."நான் இங்கு இருக்கும் வரை தான் உங்க உயிருக்கு உத்திரவாதம் .....திரும்பி நான் என் வீட்டுக்கு போனேன் ஒன்று என் அண்ணன் உங்களை வெட்டுவார் .....வெட்டிட்டு சோனவை விவாகரத்து செய்வார் ......அப்படி செய்தால் அந்த கஜேந்திரன் உங்களை சும்மா விடுவாரா .....அவர் கொடுத்த பணம் ,வீடு ,தொழில் என்று எல்லாத்தையும் புடுங்கிட்டு நடு தெருவில் நிற்க வைப்பார் ...."என்றவள் பேப்பரில் 'திவாகரை டைவோர்ஸ் 'செய்வதாக எழுதி கொடுத்து விட்டு வெளியே செல்ல முயன்றாள் .
நிதர்சனம் புரிய ,"தா தா இப்போ என்ன சொல்லிட்டோம் என்று போறே .....புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் ....நீ வா அகிலா "என்று மனைவியை உள்ளே கூட்டி போக முயன்றார் உலகநாதன் .கிடைத்த வீடு ,பணம் ,தொழில் விட அவர்கள் என்ன முட்டாள்களா ???
"ஒரு நிமிஷம் .....இங்கு நான் இருக்க வேண்டும் என்றால் இனி நீங்க யாரும் இங்கு இருக்க கூடாது .....போங்க வெளியே "என்றாள் ரூபிணி .
"ஏய் நாங்க ஏண்டீ வெளியே போகணும் ...இது எங்க திவா சம்பாதித்த சொத்து ....."என்று மீண்டும் எகிறினார் அகிலாண்டம் .
"ஓஹ் அப்படியா ....சரி நீங்க இருங்க ...நான் என் அண்ணனை அனுப்புகிறேன் ....."என்றவளின் பேச்சில் பேய் அறைந்தது போலெ நின்றனர் அவன் குடும்பத்தினர் .
"போனா....இந்த வயசான காலத்த்தில் நாங்க எங்கே போவது ....?"என்று மூக்கை சிந்தினார் அகிலாண்டம் .
"அதான் உங்க மூத்த பிள்ளையை விற்று பெங்களூருவில் ஒரு வீடு வாங்கி இருக்கீங்கல அங்கே போங்க ......நான் இங்கு உங்க மகனின் மனைவி என்ற போர்வையில் இருக்கும் வரை தான் உங்களுக்கு இவரை விற்று கிடைத்த எல்லாமும் இருக்கும் ....சாய்ஸ் ஹிஸ் யூர்ஸ் ...."என்று ரூபிணி நக்கலாக.சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று கதவை சாத்தி கொண்டாள் .அது தான் அவள் கடைசியாக பேசியது .அதன் பிறகு நான்கு வருடங்களாக அவள் பேசியதே இல்லை .

Last edited: