anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM ---17 தவம் -17
ஏழாவது அழைப்பில் "ஹல்லோ ....."என்று மதுராவின் குரல் தூக்க கலக்கத்துடன் ஒலித்தது .
"ஏய் ! எந்த ஹாஸ்பிடலில் இருக்கே ?"என்றாள் சோனா (அடியேய் ....உன்னை ...கல்லால் அடித்தே கொல்லனும் டீ ...பாவி பாவி )
"நான் எந்த ஹாஸ்பிடலிலும் இல்லையே ... ...."என்றாள் மதுரா தூக்கம் தெளியாமல் .
ஆங் ....ஹாஸ்பிடலில் இல்லையா ......எந்த பங்களாவில்,ஹோட்டலில் இருகேடீ ..."என்றாள் சோனா கடுப்பாக .
"நான் எந்த பங்களாவிலும் ,ஹோட்டலிலும் இல்லையே ...."என்றாள் மதுரா சோனாவின் ரத்த அழுத்தத்தை தான் ஏற்றி கொண்டு இருப்பதை அறியாமல் .
"ஏய் சனியனே ...கொன்னுடுவேன் ......எங்கே இருக்கே சொல்லி தொலை ....."என்று ஹை பிட்ச்இல் பைத்தியம் போலே கத்தினாள் சோனா .
"லூசாடீ நீயி ......நான் என் வீட்டில் ....ஐ மீன் சுபா வீட்டில் இருக்கேன் ....சண்டே அதுவுமா போன் செய்து தூங்கிட்டு இருக்கிறவளை தூங்க விடாம ....பைத்தியம் போல ஏண்டீ என் உயிரை வாங்கறே ......அட சீ போனை வைடி ....."என்றாள் மதுரா எரிச்சலோடு
"அங்...என்ன .....து ...உன் வீட்டில் இருக்கியா .....அடிப்பாவி அந்த சுமன் இடம் இருந்து எப்படி டீ தப்பினே ...."என்று உளறி கொட்டினாள் சோனா .
'சுமன் 'என்ற பெயர் தூக்கத்தை விரட்டி விட ,வாரி சுருட்டி எழுந்து அமர்ந்தாள் மதுரா .
"என்ன ...என்ன ...சொன்ன .....சு ...சுமன் ...சுமன் என்றா சொன்னே ?"என்று திகைப்புடன் கேட்டாள் மதுரா .
"அமாம் டீ ...சுமன் தான் ....உனக்காக தென்னம் தோப்பில் காரோடு நிற்க சொன்னேனே ....அவன் கிட்டே இருந்து எப்படி தப்பினே .....கரெக்ட் பிளான் போட்டோமே ....எப்படி தப்பினே .....நீ தப்பியது தெரிந்தால் அவன் என்னை கொன்று விடுவானே ....."என்று தன் பாட்டுக்கு புலம்பி கொண்டு இருந்தவள் அறியவில்லை மதுராவின் நிலையை .
சுமன் பற்றி ஆபீஸ் பேச்சு உண்டு ....அவன் வரும் போது எல்லாம் இவளை சுபாவோடு எங்காவது அனுப்பி விடுவான் விஜய் . அந்த கொடூரமானவன் ,ரோக் ,எதற்காக காத்து இருந்தான் என்கிறாள் இவள் .பயபந்து உருள அந்த ஏ .சி அறையிலும் வியர்த்து கொட்டியது மதுராவிற்கு .
"அய்யோஓஒ .....எங்கே போனான் ......தெரியலையே ....என்னை கொன்று விடுவானே .....எங்கே போய் தேடுவேன் .....போன் சுவிட்ச் ஆப் நு வருதே ....இவன் வந்து விட்டதாக கால் செய்த உடன் தானே நான் நேற்று கிளம்பினேன் ....."என்று புலம்பியவாறு அழைப்பை துண்டித்து விட உறைந்து போய் அமர்ந்து இருந்தாள் மதுரா .
'அந்த கேடு கெட்டவனின் அடுத்த குறி நானா ....????ஏற்கனவே பல பெண்களின் வாழ்வை அழித்தவன் ஆயிற்றே ....இப்போ தானே ஒரு தொழில் அதிபரின் மனைவி இறக்க காரணம் இவன் என்று கேள்வி பட்டேன் .....பாவி ...பாவி ...படுபாவி ....ராட்ஷட்சி ......பாதகி ...என்ன பாவமடீ செய்தேன் உனக்கு நான் ....என் மானத்தை அழிக்கவே துணிந்து விட்டாயே .....'என்று மனதிற்குள் அரற்றியவள் பிரமை பிடித்து எவ்வளவூ நேரம் அமர்ந்து இருந்தாலோ ,சுபாவும் ,பாலாஜியும் வந்து பல முறை உலுக்கிய பின்னர் தான் அதிர்ந்து விழித்தாள் .
தன் தோழியை கண்டதும் அவளை அணைத்து கதறி விட்டாள் மதுரா .அவர்கள் சொன்ன எந்த ஆறுதலும் அவள் காதில் விழவே இல்லை ....முடிவே இல்லாத கொடூரத்தில் மாட்டி இருப்பது போலெ ,மீளவே முடியாத பெரும் சூழலில் சிக்கி இருப்பது போல ,மூச்சு விடவே முடியாமல் திணறி போனாள் மதுரா .எந்த அழுகையும் ஒரு சமயம் நிற்கும் ....மதுராவின் கதறலும் மெல்ல நிற்க ,அவளை அணைத்து ஆறுதலாக தட்டி கொடுத்து ,,பாலாஜி கொண்டு வந்த டீ யினை மதுராவிற்கு குடிக்க கொடுத்தாள் சுபா ......
டீ யில் ஓவர் சர்க்கரை சேர்க்க பட்டு இருந்ததால் முகம் சுளி த்தாள் ம துரா ..."ம்ம்ம்ம் ...குடி ராணி ....அதிர்ச்சிக்கு இப்படி தான் குடிக்கணும் ...முழுசா குடி ...."என்றான் பாலாஜி ..
"என்னடி ...என்ன ....ஆச்சு ...கனவூ ஏதாவது கண்டு பயந்துட்டியா என்ன ?"என்றால் சுபா மதுராவை தட்டி கொடுத்த படி .
கேவல்களுக்கு இடையே திக்கி ,திணறி ,"அவ ....அவ ...அந்த சோனா .........என்னை வெளியே அனுப்பிட்டு ...அங்கே அந்த சுமன் ......சுமனை காரோடு காத்திருக்க வைத்து இருக்கிறாள் .......அவன் ....அவன் ....என்னை .....எனக்காக ......இவ போன் செய்து எந்த ஹாஸ்பிடலில் இருக்கே ...எந்த ஹோட்டலில் ,பங்களாவில் இருக்கே என்று கேட்கிறாடீ ...........அவன் ....என்னை ...."என்று மேல பேச முடியாமல் முகம் மூடி அழ ஆரம்பித்தாள் மதுரா .
தோழியை கெட்டியாக அணைத்து ,அவளின் அழுகை நிற்கும் வரை தட்டி கொடுத்த சுபா ,மதுரா தன்னை திட படுத்தி கொண்டதை அறிந்து ,"கண்ணை முதலில் துடை ......நீ பயப்படும் படி எதுவும் நடக்க போவதில்லை ......இது உனக்கு தான் நியூஸ் ....நேத்து மாலை முதல் இது எங்களுக்கு தெரியும் ."என்றாள் சுபா .
"திகைத்தவளாய் தோழியின் முகத்தையும் ,பாலாஜியின் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள் மதுரா .
"டீ ......சுபா .....சுபா ......அ .....அண்ணா .....இவ என்ன அண்ணா சொல்றா ?????"என்று திக்கி திணறினாள் .
"மதுரா பதட்ட படாதே .......ரிலாக்ஸ் ......உனக்கு ஒன்றும் ஆக விட மாட்டோம் .....முதலில் இதை மனதில் பதிய வை ....இரண்டாவது உன்னை காக்க உன்னை சுற்றி எவ்வளவூ பேர் இருக்கோம் தெரியுமா ???.....உனக்கு எதுவுமில்லை .....ரிலாக்ஸ் ...இந்தா தண்ணீர் குடி .....நேத்து நைட் எந்த வித ஆபத்தும் இல்லாமல் வீடு வந்தாயே அதை பற்றி மட்டும் நினை .....உனக்கு எந்த ஆபத்தும் வர விட மாட்டாங்க ......என்ன புரியுதா ?"என்றான் பாலாஜி மதுராவின் கைகளை பிடித்து கொண்டு
அவன் பேச்சால் பயம் நீங்கிய மதுரா ,"அப்போ ....அங்கே ...அங்கே சுமன் வருவான்னு தெரியுமா .....சொல்லி இருந்தா போய் இருக்க மாட்டேனே ....."என்றாள்
"சோனா ஏதோ பிளான் போடறான்னு தெரியும் ...அதுக்கு கம்பெனி செலவூ செய்ய மட்டும் தானே தெரியும் ....கணக்கு வழக்கு எல்லாம் அது எந்த காலத்துல பார்த்து இருக்கு ????? ஒரு வருடமாய் உன்னை சிக்க வைக்க இதே வேலையாய் தானே அலையறா .....ஆனா சுமனை இதில் இழுத்து விட்டு அவ்வளவூ கேவலமா போவான்னு நாங்க யாருமே நினைக்கலை .....விஷயமே அங்கு போன பிறகு தான் தெரிய வந்து இருக்கு .....எப்படியோ ஆபத்து எதுவும் நடக்கும் முன் ....உன்னை காப்பாற்றி விட்டோம் ."என்றான் பாலாஜி .
"நான் அவளுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லையே அண்ணா ....நான் அவ தங்கை முறை ...என்னை போய் சுமனிடம் மாட்டி விட்டு ....ஐயோ கடவுளே ....."என்றாள் மதுரா உடல் நடுங்க .
"சும்மா அந்த சனியனை அக்கான்னு கூப்பிட்டு உறவூ முறைக்கு உண்டான மரியாதையை கெடுத்து விடாதே ....அவளின் சொந்த தங்கை பூரணியை அவளிடம் இருந்து காப்பாற்ற உன் பெரியப்பா ,பெரியம்மா ,பாட்டி ஹாஸ்டெலில் சேர்த்து இருக்காங்க ....அவளுக்கே அந்த நிலைமை என்றால் ....நீ சித்தப்பா மகள் தானேடீ ......புத்தி கெட்ட பைத்தியக்காரிக்கு யாராய் இருந்தா என்ன ....."என்றாள் சுபா வெறுப்போடு .
"அண்ணா ......உண்மையில் அங்கே தோப்பில் சுமன் இருந்தானா ?"என்றாள் மதுரா நம்ப முடியாமல்
"உன்னிடம் ஏன் நான் பொய் சொல்ல போகிறேன் ...சுமன் வந்தான் ......ஒன்றை நினைவில் வை ....ஆயிரம் சுமன் வந்தாலும் உன்னை காக்க ஆள் இருக்கு .....இந்த ஒரு வருடமாய் உன்னை உனக்கே தெரியாமல் காப்பாற்ற தெரிந்தவருக்கு இனியும் காக்க தெரியும் ....நீ சும்மா பயப்படாதே ..."என்றான் பாலாஜி .
"அவன் ...அந்த பொறுக்கி ....ரத்தன் சிங் மனைவியையே கொன்று விட்டவன் ஆயிற்றே ....அவர் எவ்வளவூ பெரிய கோடீஸ்வரர் .....அவராலேயே அவர் மனைவியை காக்க முடியவில்லையே அண்ணா .....நான் எல்லாம் எந்த மூலை .....சோனா வேறு உடன் இருந்தே அவனுக்கு உதவூகிறாளே ...."என்றாள் மதுரா கண்கள் கலங்க .
"மதுரா ! ரத்தன் சிங்க்கு வார்னிங் தர யாரும் இல்லை .....கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டார் .....ஆனால் உன் விஷயம் அப்படி பட்டது இல்லையே ......ஆரம்பம் முதல் உனக்கான ஏற்பாடுகள் பக்காவா செய்து இருக்கார் ...ஒரு வருடமாய் உன்னை சுற்றி உனக்கே தெரியாமல் பாதுகாப்பு வளையம் போட்டு இருக்கார் ....சுமன் ஆபீஸ் வரும் போது எல்லாம் கரெக்ட்டா நீ எப்படி சுபாவோடு வெளியே போனாய் ???நீ முதலில் தங்கி இருந்த ஹாஸ்டல் பக்கம் அடிக்கடி சுமன் வந்துட்டே இருந்தான் .....அதனால் தான் உன்னை இங்கே ,இந்த வீட்டில் எங்களோடு தங்க வைத்து இருக்கார் ....இந்த ரெண்டு தெரு முழுவதும் நமக்காக என்றால் உயிரை கொடுக்கவோ ,எடுக்கவோ தயங்காத சபரி மாதிரி ஆட்கள் உண்டு ....ஒரு குரல் கொடுத்தால் போதும் ....எனக்கே கார் ஓட்ட தெரியும் தான் ...ஆனால் ஒவ்வொரு முறையும் சபரி வந்து ஏன் கார் ஓட்ட வேண்டும் என்று யோசித்து இருக்கிறாயா ????எல்லாம் உன் பாதுகாப்பிற்காக தான் ......சுபா ,சபரி ,என்னிடம் கூட லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி உண்டும்மா ...."என்ற பாலாஜியின் பேச்சை கேட்டு பேந்த பேந்த விழித்தாள் மதுரா .
"என் ஹாண்ட் பாகில் பெப்பர் ஸ்பிரே ,வெளிநாட்டு ஸ்டன் கன் ,சிறு கத்தி ,மிளகாய் போடி இருப்பதை பார்த்து அடிக்கடி கிண்டல் செய்வாயே ....'உன்னை எல்லாம் எவண்டீ கடத்த போறான் 'என்று ....நியாபகம் இருக்கா ???இவற்றை நான் வைத்து இருப்பது என் பாதுகாப்பிற்காக இல்லை ....உன் பாதுகாப்பிற்காக ....உன்னோடு நான் கராத்தே கிளாஸ் சேர்ந்ததும் உன் பாதுகாப்பிற்காக தான் ..... நள்ளிரவிலும் சபரி அண்ணனின் நண்பர்கள் ,கூர்க்காவோடு சேர்ந்து ரோந்து செய்வார்கள் அது உனக்கு தெரியுமா ???நேற்று கூட உன்னை ட்ராப் செய்து விட்டு சபரி அண்ணா எங்கேயும் போய் விடவில்லை .....அங்கேயே தான் நிற்க வைக்க பட்டு இருந்தார் .....அந்த இரவூ வேளையில் சுட சுட 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு கூட வந்ததேடீ ...கவனிக்கவில்லையா .....சுமன் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது .....நீ கவலை படாமல் இரு .....இந்த அக்ரீமெண்ட் .கடன் எல்லாம் கூட உப்பு பெறாத விஷயம் உன்னை காக்க இரவூ ,பகல் பாராமல் பம்பரமாய் சுழல ஆள் இருக்கும் போது எதற்கடி இப்படி பயப்படுறே ???பாரதியார் ,பாரதிதாசன் கவிதைகளை விரும்பி படிப்பாயே ,"அச்சமில்லை ...அச்சமில்லை ...அச்சம் என்பது இல்லையே ...''கோடைவாளினை எடுடா கொடியோர் செயல் அறவே 'என்று மறந்து போச்சா ?எழுந்துருடீ ....சும்மா அழுகாச்சி சீன் போட்டுட்டு இருக்கே ...உனக்காக தான் ஒன் மேன் ஆர்மி யே இருக்கே ....குளிக்க போடீ எருமை "என்றாள் சுபா .
"யார் ...யாரை சொல்றே சுபா .அப்பொழுதில் இருந்து ரெண்டு பேரும் யாரோ சொல்வதை நீங்க செய்வது போலவே பேசிட்டு இருக்கீங்க .....ஒரு வருடமாய் என்னை எனக்கே தெரியாமல் காப்பாற்றுகிறார் ,பம்பரமாய் சுழல்வது ,ஒன் மேன் ஆர்மி ,விஷயத்தை முன்னரே கண்டு பிடித்தது ,ஹோட்டல் சாப்பாடு ,நேற்று நைட் காப்பாற்றியது .......யார் சுபா ...யார் செய்தது இவ்வளவும் ....எனக்கு உங்களை தவிர இங்கு வேறு யாரையும் தெரியாதே !"தன்னை காக்க ஒரு வருடமாய் போராடும் அந்த உயர்ந்தவன் யார் ....இந்த ஊரில் சோனாவை ,சுமனை எதிர்க்கும் துணிவூ யாருக்கு உண்டு ????
"நம்ம கருணா தான் ....வேறு யார் உனக்காக போராடுவார்கள் ?"என்றான் பாலாஜி .
"என்ன ........து ......விஜய்யா ........அந்த ரோபோட்டா ......!"அதிர்ச்சியில் கட்டிலை விட்டு எழுந்தே விட்டாள் மதுரா.
"அடிங்க ....மவளே உன்னை காப்பாற்றினா ....நீ அவரை கிண்டலா பண்றே ....பாரு பாலு ...ரோபோட்டம் லே ரோபோட் .....நைட் ரெண்டு மணி வரை உனக்கு பாதுகாப்பாக பின்னாடியே வந்த மனுசனுக்கு நீ கொடுக்கும் மரியாதை இது தானடீ குரங்கே ......என்ன நேத்து உன் அக்காக்காரி உடன் இருந்ததால் அவள் காற்று வீசுதா .....உன் உயிரை ,மானத்தை காத்தவருக்கு ...ச்சே ....."என்று பொரிந்து தள்ளினாள் சுபா .
"இல்லை ...இல்லடீ ...அவர் எப்பவுமே என் கிட்டே எரிஞ்சு எரிஞ்சு விழுவாரில்லே ......அதான் ......உன் கிட்டேயே பல முறை சொல்லி இருக்கேன்னேடீ ......"என்றாள் மதுரா இறங்கி போன குரலில்
PENANCE WILL CONTINUE................ தவம் தொடரும்...................
anitha rajkumar

Last edited: