All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recipes And Cooking Tips

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விசில் வேணாம்டா ... ஒரு சில டைம் அரிசிய பொருத்து குழைஞ்சு போக chance இருக்கு...விசில் போடமா செய்ஞ்சா தம் பிரியாணி டேஸ்ட் கிடைக்கும்... Pressure இல்லாததால சாதம் உதிரி உதியா இருக்கும் ..but கண்டிப்பா அந்த nossila டம்பாளர் வைச்சு மூடணும்.... இது தண்ணி evaporate ஆகாம தடுக்கும் and slow fire தான் வைக்கனும்...
Superrr ka....na try panni pakren😍😘
 

Ananthi

Member
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கறிவேப்பிலை சட்னி:-

தேவையான பொருட்கள்

அரைக்க வேண்டிய பொருட்கள்:-

1. கறிவேப்பிலை 2 கைப்பிடி
2. கொத்தமல்லி ஒரு பிடி
3. தேங்காய் 2 பத்தை
4. பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப
4. புளி சிறிய அளவு
5. உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க தேவையான பொருட்கள்:-

1. நல்லெண்ணெய் ஒரு டீஸ்பூன்
2. கடுகு அரை டீஸ்பூன்
3. உளுந்து அரை டீஸ்பூன்
4. வரமிளகாய் 2
5. கறிவேப்பிலை சிறிது


செய்முறை:-

அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தும் மிக்சியில் அரைத்து கொள்ளவும் பிறகு தாளிப்பதற்கு தேவையான பொருட்கள் சேர்த்து தாளித்து பரிமாறவும்.
 

JefRi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மைதாபர்ஃபி

20825

தேவையானப் பொருட்கள்:-
மைதா-1 கப்,
நெய் + தேங்காய் எண்ணெய்- ½ கப்,
சர்க்கரை-1/2 கப்,
ஏலக்காய்-1,
பாதாம் மற்றும் முந்திரிப்பருப்பு – அலங்கரிக்க


செய்முறை:-

1)வாணலியில் கடாயை வைத்து, கடாய் சூடானதும் நெய் மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.

2)நெய் சூடானதும் அதில் ஒரு கப் மைதாவைச் சேர்த்து, குறைவான தீயில், மைதாவின் நிறம் மாறி வாசனை வரும் வரைக் கிளறவும்.

3)நெய் பிரிந்து வரும் வரை கிளறிய பின், நெருப்பை அணைத்து நெய்-மைதா கலவையை ஆறவிடவும்.

4)மிக்ஸி ஜாரில், ½ கப் சர்க்கரையுடன் ஒரு ஏலக்காயைச் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.

5)கலவை ஆறிய பின், பொடித்த சர்க்கரையை மைதா கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின், ஒரு பாத்திரத்தில் சிறிரு நெய் தடவி, துண்டுகளாக்கிய பாதாம் மற்றும் முந்திரியை தூவியபின், அதன் மேல் மைதா கலவையை பரப்பி, ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும். பின் உங்களின் விருப்பத்திற்கேற்ற வடிவத்தில் கட் செய்தால் ‘மைதா பர்ஃபி’ ரெடி....!
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பீர்க்கங்காய் குழம்பு

எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியாது ...ஆனால் ஒரு முறை செய்து பாருங்கள்.சுலபமானது.

பீர்க்கை -ஒன்று, வெட்டி வைக்க

வெங்காயம் சிறிது,

மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்

குழம்பு மிளகாய் தூள் -௧ரை டீஸ்பூன்,

உப்பு தேவைக்கு

அரைக்க:

கால்மூடி தேங்காய்

வருகடலை -அரை டீஸ்பூன்

சீரகம்-கால் டீஸ்பூன்

அரைப்பல்லு பூண்டு - எல்லாவற்றையும் மைய அரைக்கவும்

சிறிது என்னை ஊற்றி கடுகு வெங்காயம் தாளித்து, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், நறுக்கி வைத்த பீர்க்கங்காய் சேர்த்து கலந்து ஒரு நிமிடம் வதக்கவும், பின்னர் கொஞ்சம் நீர் ஊற்றி வேக விட, வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, கருவேப்பிலை மல்லி இலை தூவி இறக்க.சீக்கிரம் செய்யலாம்.சுவையும் நன்றாகவே இருக்கும்.
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோதுமை மாவு பகோடா...

கோதுமைமாவு..இரண்டு கப்

உப்பு: தேவைக்கு

மிளகாய் தூள்: தேவைக்கு

மல்லி இலை: பொடியாக நறுக்கியது ஒரு கப்

பெரிய வெங்காயம்: மூன்று, நறுக்கியது,

வேண்டுமானால் கொஞ்சம் முட்டைகோஸ் கூட சேர்க்கலாம்

ஒரு குழி கரண்டி இட்லி மாவு

ஒரு பின்ச் :சோடா உப்பு(இட்லி மாவு நன்கு உப்பி இருந்தால் இது தேவை இல்லை)

எல்லாம் நன்கு நீர் ஊற்றி கலந்து, பணியாரத்துக்கு ஊற்றும் பாகத்தில், எண்ணெயில் பொரித்தெடுக்க சுவையான கோதுமை மாவு பகோடா ரெடி..செய்ய எளிது.
 
ஹாய் பிரெண்ட்ஸ்,

நம் தோழமைகளில் பலர் சமையலில் நிபுணர்களாக இருப்பீர்கள்... நீங்க எல்லோரும் இங்கே உங்களது சமையல் திறமையை காட்டுங்கள்... நாங்கள் காத்திருக்கிறோம்...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
நான் புதிய உறுப்பினர்
எனது சமையல் குறிப்புகளை பதிவு செய்கிறேன். முதலில் இனிப்புடன் ஆரம்பிக்கிறேன்.

பூந்தி செய்யாமல் ஒரு மணி நேரத்தில் 100 லட்டு செய்யலாம்

 
Top