All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Recipes And Cooking Tips

Chris Raj

Well-known member
ஆப்பம் நல்லா மணமா,அழகா வருவதற்கு என்னவெல்லாம் போட வேண்டும்? (இரண்டு பேர்க்கு மட்டும்)
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆப்பம் நல்லா மணமா,அழகா வருவதற்கு என்னவெல்லாம் போட வேண்டும்? (இரண்டு பேர்க்கு மட்டும்)
அரை டம்லர் பச்சை அரிசி, ஒரு கை பிடி அளவு உளுந்து, 10வெந்தயம், மூன்றயும் ஒரு மணி நேரம் ஊர வைத்து அரைத்து பாதி நிலையில் அரை மூடி தேங்காய், பழைய சாதம் ரெண்டு கை பிடி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து துளி சோடா உப்பு,உப்பு அரைத்து லேசாய் புளிக்க விட்டு ஊற்றுங்க..
 
Samvaithi007

Bronze Winner
சுண்டைக்காய் தொக்கு:

தேவையான பொருட்கள்:

பச்சை சுண்டைக்காய். : 100கி
வெங்காயம். : 1
தக்காளி. :2
தேங்காய் துருவல். . :கால் மூடி அரைத்தது
பூண்டு :6பல்
கொழம்பு மிளகாய். :காரத்திற்கேற்ப
மஞ்சள் தூள் :சிறிதளவு
உப்பு :ருசிக்கேற்ப
கடலை எண்ணெய். : தேவைக்கேற்ப
சோம்பு :தாளிக்க
செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
இதனுடன் நசுக்கிய சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இந்த கலவை நன்றாக கலந்து வந்ததும் மஞ்சள்தூள், மிளாகாய்தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்....இறக்கும் பொழுது அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி கிளறி இறக்க வேண்டும்...

சுண்டைக்காயின் நன்மைகள்: வயிற்று பூச்சி போக்கும்....இது எலும்புகளுக்கு பலம் சேர்க்கும்.

இந்த முறையில் சுண்டைக்காயை செய்து சாப்பிட்டால்ருரு பிரமாதமாக இருக்கும்...சாப்பிடாதவர்களுக்கும் பிடிக்கும்...
 
பேபி கசக்காதா..:rolleyes::rolleyes::rolleyes:
 
Samvaithi007

Bronze Winner
தூதுவேளை கீரை சட்னி:

முள் நீக்கிய தூதுவேளை கீரை :2கைப்பிடியளவு

சின்ன வெங்காயம் :10

தக்காளி :1

காய்ந்த மிளகாய். :2

பச்சை மிளகாய். :4

தேங்காய். :1 துண்டு

நல்லெண்ணெய். :2டேபிள்ஸ்பூன்

உப்பு :தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய பொருட்களை( தேங்காயை

தவிர்த்து ) அனைத்தையும் நல்லெண்ணய்யில்

வதக்கவும்.. ஆறிய பின்பு உப்பு மற்றும்

தேங்காயையும் சேர்த்து நன்றாக அறைத்து கொள்ளவும்..

சுவையான சட்டினி தயார்...

குறிப்பு :மேலே குறிப்பிட்ட கலவையை

அரைக்காமல் சாத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

பயன்கள்: நாள் பட்ட சளி மற்றும் இருமல்
தொல்லைகள் நீங்கும்..

பச்சிளம் குழந்தைகளுக்கு 3 அல்லது 4 இலையை எடுத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி அந்த எண்ணெய்யை உள்ளுக்கு கொடுத்து வந்தால் சளி தொல்லை நீங்கும்.
 
Top