All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

New teaser

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்- டீசர்


"அம்மா மாதவி! வாம்மா வேலன் தம்பிகிட்ட போகலாம்" தங்கராஜ் அவளை அழைத்தார்.

"நாம ஏன் போகணும்? அவங்களே பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். என்ன நடந்தாலும் பெர்மிஸ்ஸன் வாங்குனாதான் மரத்து மேல கை வைக்க விடுவேன்" என்பதோடு முடித்து கொண்டாள்.

"இவனுங்களும் இறங்கி வர மாட்டேங்குறானுங்க, இந்த பொண்ணும் அசைஞ்சு கொடுப்பேனாங்குது" என நொந்து கொண்டார்.


"இவளை இப்படியே விட கூடாதுண்ணா... இதுக்கு ஒரு முடிவு கட்டணும், நமக்கே ஆர்டர் போடறாளா இவ!" இளம் இரத்தம் சூடாக ஒருவன் ஆர்பரித்தான்.


ஆளாளுக்கு தங்களது எதிர்ப்பை கூச்சல் மூலமாக வெளிப்படுத்தி கொண்டிருந்த சமயத்தில்,

"டேய்!" என்று ஒரு அதட்டல் போட ஒட்டு மொத்தக் கூட்டமும் கப்சிப் என்று அமைதியாயிற்று.

"உன் வீட்டு பொண்ண இப்படி தான் அவ இவன்னு கூப்பிடுவியா? அவங்க ஒரு பொறுப்பில் இருக்கிறவங்க மரியாதையா பேச கத்துக்கோ, பொது பிரச்சனையை பொது பிரச்சனையா மட்டும் பாரு, எதனுடணும் கோர்த்துப் பார்க்காதே. எனக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதுக்கு? எல்லாரும் கொஞ்சம் அடக்கி வாசிங்க" என்று கண்டித்தவன்,

தன்னை சூழ்ந்திருந்தக் கூட்டத்தை விலக்கி விட்டு, அவள் மீது உள்ள பார்வையை விலக்காது அவள் நின்ற இடத்திற்குச் சென்றான். அவளும் சளைக்காது அவன் பார்வையை தாங்கி நின்றாள்.

இரண்டு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு, "நீங்க மரத்தை வெட்ட பெர்மிஸ்ஸன் கொடுங்க விஏஓ மேடம்!" அந்த மேடம் என்பதில் அழுத்தம் கொடுத்து உச்சரித்தான்.

எவன் வந்தால் எனக்கென்ன என்ற ரீதியில், அவள் பதில் சொல்லாமல் கல் போல் நின்றாள்.

"கோவில் வேலை நிறைய கிடக்கு, அதெல்லம் பார்க்கணும். நம்ம பிரச்சனையை அப்புறம் பார்த்துக்கலாம். பெர்மிஸ்ஸன் கொடுங்க" என்று தன்மையாகவே அவளிடம் கேட்டான்.

"நீங்க பெர்மிஸ்ஸன் வாங்கிட்டு மரத்தை வெட்டுவதில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல, என் வேலையை பார்க்க மட்டும் தான் இந்த ஊருக்கு வந்துருக்கேன் பகையை வளர்க்க இல்ல."

“நமக்குள் பிரச்சனையும் கிடையாது, அதேமாதிரி சுமுகமான நிலையும் கிடையாது. புதுசா நம்ம பிரச்சனைன்னு எதையும் உள்ளே இழுத்து விடாதீங்க. தேவை இல்லாத பிரச்சனை வேண்டாம்னு உங்க விசுவாசிங்கக்கிட்ட சொல்லுங்க" தெளிவாக எடுத்துரைத்தாள்.


"அப்போ உறவை வளர்க்க இந்த ஊருக்கு வரல?" ஏகநக்கலோடு கேட்டான்.


"தேவை இல்லாத பேச்சு எதற்கு" கத்தறித்தார் போல் கூறினாள்.


"அப்போ தேவை உள்ள பேச்சை உங்க வீட்டில் வச்சு பேசலாமா? இல்லை எங்க வீட்டில் வச்சு பேசிடுவோமா?" வினயமாகக் கேட்டான்.


'பழைய இம்சைகள் தாங்க முடியமால் தானே ஊரை விட்டு போனேன், இப்போது புது இம்சைகள் வேறு வந்து படுத்துதே' மனதில் அலுத்துக் கொண்டவள்,


"நாளைக்கு நீங்க மரத்தை வெட்டிக்கலாம். ஆனால், வேம்பு, பூவரசு இதையெல்லாம் வெட்டாதீங்க அதெல்லாம் செடியூல் டிம்பர், ஒரு மரம் வெட்டுன இடத்துல நாலு மரச்செடியை நட்டுறுங்க" என்று கூறிவிட்டு, தனது ஸ்கூட்டியை எடுத்து கிளம்பி விட்டாள்.


"இதெல்லாம் சரியா வருமான்னு தெரியலையே? வரணும், வர வைக்கணும்" என்று முணுமுணுத்தவாறு, அவள் இருசக்கர வாகனம் கண்ணை விட்டு மறையும் வரையிலும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு,


அங்கிருந்த கூட்டத்திடம் "நாளைக்கு மரத்தை வெட்டிக்கோங்க " என்று சத்தமிட்டு கூறினான்.
*************


ஹாய் ஃபிரண்ட்ஸ்! ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து, எல்லாரும் நல்லா இருக்கிங்கன்னு நம்புறேன். ஒரு வருடத்திற்கு பிறகு புது கதையின் டீசரோடு வந்துருக்கேன். படிச்சுட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

அன்புடன்
வியனி நாதன் ❤
 
Last edited:
Top