All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

New teaser

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரண்ட்ஸ் ஒரு புது கதையின் முன்னோட்டதோடு வந்துருக்கேன்.. படித்துவிட்டு உங்களது கருத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. யாரும் பொங்கிடாதீங்க..🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

முன்னோட்டம்..

அவள் அந்த தோப்பு வீட்டிற்குள் உள்ளே நுழைந்ததும்.. அவ்வீட்டின் கதவு இழுத்து பூட்டப் பட்டது.. அது அறியாதவள் தயங்கி தயங்கி கையில் வைத்திருந்த பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவளுக்கு முதுகு காட்டி பின்னால் கையை கட்டிக் கொண்டு நின்றவன் அருகில் மெதுவாகச் சென்றாள்.

"சார்" என்று உள்ளே போனக் குரலில் அழைத்தாள்.

அவள் அழைப்பில் உடல் விறைக்க, செவி சாய்க்காமல் அப்படியே நின்றான்.

தான் கொண்டுவந்த பையில் இருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து.. தலையை கீழே குனிந்துக் கொண்டு..

"சார்!! நேக்கு கல்யாணம்.. இந்த பத்திரிக்கையை வாங்கிக்கோங்கோ.." என்றாள்

அவள் 'எனக்கு கல்யாணம்'என்ற வார்த்தையில் வேகமாக திரும்பியவன்.. கண்கள் இரண்டும் சிவக்க.. வெடித்து சிதறும் எரிமலையாய் கனன்று கொண்டிருந்த உள்ளத்தை கடிவாளமிட்டு அடக்கியவன், அவளை பார்த்தபடியே கைகளை கட்டிக் கொண்டு அமைதியாய் நின்றான்.

இதற்க்கு மேல் இங்கு நின்றாள் தன்னையும் அறியாமல் தன் மனதை வெளிபடுத்தி விடுவோமோ என்ற பயத்தில்.. அருகில் இருந்த சிறு மேஜையில் அழைப்பிதழை வைத்தவள்.. கண்கள் இரண்டிலும் கண்ணீர் குளம் கட்டி வெளியேற தயாராக இருக்க.. அதை அவன் பாரா வண்ணம் உள்ளிழுத்துக் கொண்டவள்..

"நான் புறப்படுறேன் சார் பஸ்சுக்கு நாழியாயிடுத்து" என்று சொல்லிவிட்டு கதவருகே சென்று கதவை திறக்க.. அது வெளிபுறமாக பூட்டி இருந்தது.

மனதில் பயம் கவ்வ ஆரம்பிக்க.. "சார்" என சொல்லிக்கொண்டே திரும்பியவளை கதவோடு கதவாக அவள் மேல் மூச்சு காற்று படும் அளவிற்கு நெருங்கி நின்று இரு பக்கமும் கைகளை வைத்து ஆக்ரோஷமாக சிறை செய்தவனைக் கண்டதும் எச்சிலைக் கூட்டி விழுங்கியவள்..

"ஆத்துல எல்லாரும் காத்துண்டு இருப்பா.. நான் போகனும்"என்றாள்.

"நான் போக வேண்டாம்னு சொல்லலையே.."எனக் கூறிக் கொண்டே.. தனது மீசையை ஒற்றைக் கையால் நீவிவியவன், அடுத்த வினாடியே அவள் பிடரி முடியை கொத்தாகப் பற்றி.. அவன் முகம் அருகே அவள் முகத்தைக் கொண்டு வந்து "போகலாம்.. என்னை சந்தோஷப்படுத்திட்டு போகலாம்" என வெறி கொண்டவன் போல் கத்தியவன் அவள் அதரங்களைச் சிறை செய்தான்.

அவனின் திடீர் தாக்குதலில் கண்கள் இரண்டும் அன்று மலர்ந்த மௌவல் மலர் போல் அதிர்ச்சியில் விரிய, அவனை தன்னிடம் இருந்து பிரித்து எடுக்க தன் கரம் கொண்டு அவன் நெஞ்சு பகுதியில் குத்த.. அதை எல்லாம் முறியடித்து அவள் இதழ் தேனை பருகி விடுவித்து, அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க.. கண்களில் இருந்து நீர் துளிகள் உருண்டோடியது.

'அவ்வளவு கஷ்டமா இருக்கா..!! எனக்கும் இப்படி தானடி இருக்கும்.. இதோ இந்த கண்ணாளையே காதல் பாஷை பேசி என்னை ஏமாத்துனல அதுக்கெல்லாம் நீ அனுபவிக்கனும் டி'என மனதில் வன்மமாக நினைத்தான்.

அவளை புல்லு கட்டு போல் தோளில் தூக்கி போட்டுக் கொண்டு படுக்கையறைக்குச் செல்ல.. அவன் நோக்கத்தை உணர்ந்துக்கொண்டவள் தன்னை காப்பற்றிக் கொள்ள.. அவன் முதுகு பகுதியில் தன் கைகளை ஆயுதமாக்கி அடிக்க ஆரம்பித்தவள்..

"சார் ப்ளீஸ்!! இப்படி ஒரு துர்காரியத்தை செஞ்சு உங்களை நீங்களே தாழ்த்திக்காதேள்" என்று அழ.. முழு அரக்கனாக மாறியிருந்த அவன் காதில் அதெல்லாம் விழுந்தால் தானே.. !!

அவளை மஞ்சத்தி தொப்பென்று போட்டவன்.. நொடியும் தாமதிக்காது அவள் மேல் படர்ந்து அவள் முகம் அருகே தன் முகத்தை கொண்டு செல்ல.. அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

'ஓ.. பணக்காரன் கிடைச்சதும் என் முகம் பார்க்க கூட உனக்கு வெறுப்பா இருக்குல்ல' என எண்ணியவன் அவள் தாடையை அழுந்தப் பற்றித் திரும்பி..

"என்னை ஏமாத்துனதுக்கு உனக்கு இந்த தண்டனை தேவை தாண்டி" என்று உறுமியவன்.. அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பிக்க.. கைகள் அவள் மேனியில் கோலம் போட ஆரம்பித்தது.

"சார்.. தப்பு பண்ணாதீங்கோ.. என்னை விட்ருங்கோ!!"என்று கெஞ்ச.. அவள் கெஞ்சல் கூட அவள் மேல் கட்டுக்கடங்காத கோபத்தை விளைவித்தது.

அவள் கதற கதற.. அனிச்சம் மலர் போன்ற மனமும், தேகமும் கொண்ட பெண்ணவளை வெகு நாள் பசித்திருந்த சிங்கமாய் கசக்கி புசித்து திருப்தி கண்டவன் இதழ்களும், கண்களும் குரூர சிரிப்பை உதிர்த்தது.வெகு நேரம் இரக்கமே இல்லாமல் அவளை வதைத்து விட்டு பிரிந்தவன், அவள் மேல் சேலையை எடுத்து வீசினான்.

"இப்போ போய் அவனை தாராளமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்துடி. அவன் ஒவ்வொரு தடவையும் உன்னை தொடும்போது என் ஞாபகம் தாண்டி உனக்கு வரணும்.. என்னை காதலிச்சு ஏமாத்துன பாவத்துக்கு உனக்கு இதாண்டி தண்டனை!!"என கூறியவன் கதவை அடித்து சாத்திவிட்டு வெளியேறினான்

அவன் பேச பேச முகத்தில் எந்த வித உணர்ச்சியும் ப்ரதிபலிக்காமல் ஜடம் போல் கிடந்தவள்.. எழ முடியாமல் எழுந்து தனது ஆடையை சரி படுத்திக் கொண்டு வெளியே சென்றாள்.
 

Stella mary

Bronze Winner
டீஸர் அருமை sis 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 ஹீரோ இப்படி violent டா நடந்துகொண்டானே இவள் ஏன் இப்படி பண்ணனும் ஹீரோவை விட்டு வேறு யாரையோ கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லி இப்போ பத்திரிக்கையை கொண்டு வந்து நீட்டினா அவன் உன்னை சும்மா விடுவானா ஆனால் ஹீரோ சொல்லி புரியவைத்திருக்க வேண்டும் அதற்காக அவள் வாழ்க்கையில் இப்படி விளையாடிவிட்டானே இது ரொம்ப தப்பு
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் அருமை sis 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 ஹீரோ இப்படி violent டா நடந்துகொண்டானே இவள் ஏன் இப்படி பண்ணனும் ஹீரோவை விட்டு வேறு யாரையோ கல்யாணம் பண்ண சம்மதம் சொல்லி இப்போ பத்திரிக்கையை கொண்டு வந்து நீட்டினா அவன் உன்னை சும்மா விடுவானா ஆனால் ஹீரோ சொல்லி புரியவைத்திருக்க வேண்டும் அதற்காக அவள் வாழ்க்கையில் இப்படி விளையாடிவிட்டானே இது ரொம்ப தப்பு
Kandippa thappu sis..athukku semmaiya vaanguvaan..🤣🤣
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

"என் இதயத்தை கடத்தி சென்றவ(ளே)னே.. பார்ட்-2" அதிலிருந்து ஒரு சிறு முன்னோட்டம்.

"இங்க பார் இந்த கல்யாணம் எதிர் பாராமல் நடந்தது.. என்னை கண்ட்ரோல் பண்ற எந்த விஷயமும் எனக்குப் பிடிக்காது."

"ஏற்கனவே உன் புராணத்தைப் பாடிப் பாடி என்னை மட்டம் தட்டுவான் என் அப்பன். அதனாலையே உன் கூட பழகலைனாலும் உன்னை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கது."

"உன் ஆண்டாள் பாட்டி புட்டுகிற நிலைமையில என் கையைப் பிடிச்சு கெஞ்சுனதால உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அதுக்குப் பிறகுதான் நானும் யோசிச்சேன் உன்னை கட்டிக்கிட்டா பிசினஸ் முழுதும் நீ பார்த்துக்குவே.. என் அப்பன் நச்சரிப்பு இருக்காது, நானும் ஜாலியா என் ஃபிரண்ட்சோட ஊர சுத்தலாம், இதெல்லம் யோசிச்சு தான் உன்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்."

"அப்புறம் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கிறதால, இந்த கதையில வர்ற மாதிரி என்னைத் திருத்திறேன் திருகிறேன்னு சொல்லிக்கிட்டு என்னை மாத்த முயற்சி பண்ணே.. என் சுயரூபத்தைப் பார்ப்பே.. நான் இப்படித்தான் என் ஃபிரண்ட்ஸ் கூட ஊர சுத்துனோமா, சரக்கடிச்சோமா வாந்தி எடுத்து மட்டையானோமானு இருப்பேன்.. அதை எல்லாம் நீ கண்டுக்கக் கூடாது."

"மத்த எல்லாருக்கும் வேண்டுமென்றால் நீ 'A.V குரூப் ஆப் கம்பனிஸோட எம்.டி A.P'யாக இருக்கலாம், உனக்கு எல்லாரும் மரியாதை கொடுக்கலாம்.ஆனால், என்கிட்டே அதெல்லாம் நீ எதிர் பார்க்கக் கூடாது."

"முடிஞ்ச அளவு என் முகத்துலையே முழிக்காமல் இருக்க முயற்சி பண்ணு, உன்னைப் பார்த்தாவே எனக்கு எரிச்சலாக இருக்கு என்றவன் நான் சொன்னது எல்லாம் புரிஞ்சது தானே" என்று கேட்க..

தன் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவள், நக்கலாக புன்னகைத்து அவன் அருகில் நெருங்கி நின்றாள்.

"என்ன மிரட்டுறியா..? ஏழு கழுதை வயசாச்சு இன்னும் ஒரு வேலைக்கு போகாமல், அப்பா காசுல ஊரே சுத்திகிட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்லை"

"ஏய்.. என்னடி ரொம்ப பேசுற" என அவளை அடிக்க கையை உயர்த்த..

அவள் பார்த்தப் பார்வையில் அடிக்க உயர்ந்த கை அப்படியே நின்றது."என் கிட்ட இந்த கை நீட்டுற வேலை எல்லாம் வச்சுக்காதே தொலைச்சுடுவேன், என் அம்மா மாதிரி என்னால அன்பாவும் நடந்துக்க முடியும், என்கிட்டே வாலாட்டுறவங்ளை என் அப்பா மாதிரி அவங்க வாலை ஒட்ட நறுக்கவும் தெரியும். அதனால், இந்த பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்."

"உன்னை ஸ்கெட்ச் போட்டு கல்யாணம் பண்ண தெரிஞ்ச எனக்கு, உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரனும்னு தெரியாதா? " என்று கேலியாகக் கூறினாள்.

"என்ன டி சொன்ன பிளானா..!?" என்று அதிர்ச்சியில் வாயைப் பிளக்க.. அவன் உயரத்திற்கு எம்பி தாடியடர்ந்த அவன் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்து.. "ஆமா, எல்லாம் பிளான் தான் மாமோய்..!!"

"நாளைக்கு புருஷன் லட்சணமா ஆபீஸ்க்கு வந்துடு, உன் பொண்டாட்டி எல்லா வேலையும் உனக்கு கத்துத் தரேன் என்று கண் சிமிட்டிக் கூறிச் சென்றாள், ஆதித்யன், சாம்பவியின் இளவரசி 'ஆண்டாள் பிரியதர்ஷினி.'

அன்புடன்❤

வியனி
 
Top