All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

New teaser

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புத்தாண்டை முன்னிட்டு புது டீஸர்..படிச்சுட்டு சொல்லுங்க நண்பர்களே.. 🤩🤩 வழக்கம் போல் இன்னும் கதைக்கு பெயர் வைக்கல..😜😜

"ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ
இது தகுமோ இது முறையோ இது தர்மம் தானோ குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவோடு

அலைபாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானமதில்
அலைபாயுதே கண்ணா ஆ ஆ ஆ ஆ ஆ"

தன் மனம் கவர்ந்த கார்மேக வண்ணன், புல்லாங்குழலில் இசை மீட்டி மறைந்திருந்து மாயம் செய்யும் மாயவனை காதல் மனதுடன் தவித்து அழைக்கும் பாடலுக்கு, விரல்கள் அபிநயம் பிடிக்க, முகத்தில் நவரசம் வழிந்தோட.. உணர்ச்சி பொதிந்த நேத்திரங்கள் தன் நந்த கோபனை தேடி அங்குமிங்கும் அலைபாய.. காற்றில் ஆடும் கொடி போல்.. வளைந்து நெளிந்து உடல் சாகசம் செய்ய.. காண்போர் அனைவரையும் தன் பரதத்தால் கட்டி போட்டிருந்தாள் நிலானி ரவிச்சந்திரன்.

"கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ "

என்ற வரிகளுக்கு தன்னை தான் அழைக்கிறாளோ என்ற எண்ணம் மேலோங்க.. தாடி அடர்ந்த முகத்தில் யாருக்கும் தெரியாமல் அதரங்கள் மெல்லிதாக வளைய.. 'நான் இங்குதான் உன் முன்னால் அமர்ந்து இருக்கிறேன், அதை கவனிக்காமல் எங்கோ தேடிக் கொண்டிருக்கிறாயே..' எழுந்து சென்று கட்டி அணைத்து சொல்லிவிடலாமா..? என்று நினைத்தவனின் எண்ணத்தை பக்கத்தில் அமர்ந்திருந்தவள் அறிந்துகொண்டது போல்.. அவனையும், நடனமாடும் அவளையும் ஒரு நிமிடம் கவனித்துவிட்டு புன்னகைத்துக் கொண்டாள்.

************************************************

"இங்க பாருங்க மா.. உங்களை மாதிரி நாங்களும் அரசியல் குடும்பம் தான் இல்லைன்னு சொல்லல.. அது எங்க அப்பாவோட முடிஞ்சு போச்சு.

எனக்கு இந்த அடிதடி அரசியல் எல்லாம் வேண்டாமென்று தான் மருத்துவம் படிச்சு மருத்துவராகி என்னால் முடிஞ்ச அளவுக்கு நான், என் மனைவி, மகள் எல்லாம் சேவை பண்ணிக்கிட்டு இருக்கோம்.அது மட்டுமில்லாமல் உங்க தம்பி உங்களுக்கு ஒரு அடியாளு மாதிரி, நீங்க கண்ண காமிச்சா என்ன வேணும்னாலும் பண்ணுவார்னு ஊரறிந்த விஷயம், ஏன் நானே ஒரு தடவை ஒருத்தனை ஓட ஓட அடிச்சு துரத்திகிட்டு போனதே என் கண்ணால் பார்த்தேன்.

அப்படி பட்டவருக்கு என் பொண்ணை நான் கட்டி கொடுக்க விருப்பப்படலை, தயவு செய்து வெளில போய்டுங்க என்றார்" நிலானியின் தந்தை ரவிச்சந்திரன்.

"இங்க பாருங்க அய்யா..! எல்லா மனுஷங்களும் தப்பு செய்றவங்க தான்.. அதில் நல்லவன் கெட்டவன்னு தீர்மானிக்கிறது.. அவன் செய்யிற தப்போட அளவு தான், அதே மாதிரி தான் அரசியல் வாதியான நாங்கலும் உங்களை விட கொஞ்சம் அதிகத் தப்பு பண்றோம். கெட்ட விசயத்துக்காக மட்டும் நாங்க தப்பு பண்றது இல்லை, சில நல்ல விசயங்களை செய்யவும் தப்பு பண்ண வேண்டியது இருக்கு" என்று கோப்பெருந்தேவி கூற..

"நீங்க எதுக்கோ பண்ணுங்கம்மா.. அந்த விளக்கம் எல்லாம் எனக்குத் தேவை இல்லை.என் பொண்ணை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை.இப்போ நீங்க இடத்தை காலி பண்ணுங்க, நான் ஹாஸ்பிடல் போகனும்" என்றார்

அவர் கூறியதற்கு இதழ் பிரியாது மென்மையாக புன்னகைத்தவள், "அப்படி எல்லாம் நீங்க சொல்ல கூடாது. நல்லா யோசிச்சு ஒரு முடிவை சொல்லுங்க, உங்க பதிலுக்காகக் காத்துகிட்டு இருக்கேன், இது என் தம்பி வாழ்க்கை."

"முதலில் நீங்க உங்க புருசனோட வாழ வழிய பாருங்க.. அப்புறம், உங்க தம்பி வாழ்க்கையை பத்தி யோசிக்கலாம்" நக்கலாகச் சொல்ல..

அவரை திரும்பி உறுத்து விழித்தவள்.. எதுவும் கூறாமல் அங்கிருந்து அகன்றாள்.

************************************************

நோயாளி தான் உள்ளே வந்திருக்கிறார் என்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கு வந்தவனை கண்டு அதிர்ந்து, பின் தன்னை சமாளித்துக் கொண்டவள்"உங்களுக்குச் சாதாரண பிரச்சனை என்றால் ஜெனரல் டாக்டரை பாருங்க.. நான் கார்டியாலோஜிஸ்ட்" என்றாள் மாற்றி இங்க வந்துவிட்டானோ என்ற ஐயத்தில்..

அவள் சொன்னதை காதில் வாங்காமல்.. நோயாளி அமரும் இருக்கையில் அமர்ந்தான்.

'ஏதோ பிரச்சனை போல் அதனால் தான் வந்திருக்கிறான்' என நினைத்து..
"சொல்லுங்க என்ன பண்ணுது..?"என்றாள்.

பதில் பேசாமல் காற்றில் சுழன்று, சுழன்று ஆடிக் கொண்டிருந்த அவள் சுருள் குழலை அவன் பார்த்துக் கொண்டிருக்க..

"ப்ச்.. உங்களுக்கு அடுத்து நிறைய பேரு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க என்ன பண்ணுதுன்னு சொன்னால் தானே.. நான் உங்களை செக் பண்ண முடியும்" என்றாள்.

காணாததைக் கண்டது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்.. "நெஞ்சில் கை வைத்து இங்க பிரச்னை"என்றான்.

அவனை சந்தேகமாகப் பார்த்துவிட்டு அவன் நெஞ்சில் ஸ்டெதஸ்கோப்பை வைத்து செக் செய்தவள்.. "ஹார்ட் பீட் எல்லாம் நார்மலா இருக்கு, எதுக்கும் ஒரு ஈசிஜி(ECG) எடுத்து பார்த்துடலாம்,சில சமயம் வாயு தொல்லையால் கூட வலி வந்துருக்கலாம், வேறு பிரச்னை இருக்க வாய்ப்பில்லை" என நகர போனவளின் கையை பற்றி தன் நெஞ்சில் வைத்து பொத்திக் கொண்டவன்,

"இங்க இருந்துட்டு என்னை தூங்க விடாமல் நீ தான் பிரச்னை பண்ணிட்டு இருக்கே,நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் பக்கத்திலையே இருந்தால் என் பிரச்சனை சரியா போய்டும்" கண்களில் காதல் வழிந்தோட கூறினான்.

அவன் முரட்டு கைகளிலிருந்து.. தன் மென்மையான கைகளை பகீரத பிரயத்தனப் பட்டு பிரித்துக் கொண்டவள்.

"பத்து பேரை அடிச்சு போடற அளவுக்கு உடம்ப வளர்த்து வச்சுருக்கவனுக்கு என்ன பிரச்னை இருக்க போகுதுன்னு நினைச்சேன், அது சரி தான்" என்றவள்,

"கண்டதை எல்லாம் பேசி என் நேரத்தை வீணடிக்காமல் கிளம்புங்க, அடுத்த பேசன்டை நான் பார்க்கணும்" என்றாள் நிலானி.

"என் பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் நான் எப்படி போறது டாக்டர் மேடம்..? என்றான், ராஜராஜன்.. கோபெருந்தேவியின் அன்பு தமையன்.

"என்கிட்ட அதுக்கான ட்ரீட்மென்ட் இல்லை, நீங்க வெளில போகலாம்" முகத்தில் அடித்தார் போல் கூறினாள்.

தன் இடத்திலிருந்து எழுந்து, அவள் இருக்கையில் இரு புறமும் கை வைத்து அவள் முகம் நோக்கி குனிய.. "ஏய் என்ன பண்ற தள்ளி போ!" என்றவள் தன் உடல் மேல் அவன் ஸ்பரிசம் தீண்டாதவாறு குறுக்கி அமர்ந்தவள்,

"எனக்கான மருந்து நீ தான்.. ! என் நோய்க்கான ட்ரீட்மென்டை நீ கொடுக்கிறேன்னு சொல்ற வரைக்கும் நான் இங்க வருவேன். இப்போ சின்ன ட்ரீட்மென்டை நானே எடுத்துட்டு போறேன்" என அவள் இதழ்களில் தன் இதழ்களை பட்டும் படாமல் பதித்தவனை வேகமாக தள்ளிவிட்டு எழுந்தவள், அவன் கன்னத்தில் தன் பிஞ்சு விரல்களை பதித்திருந்தாள்.

அவள் அடித்த தன் கன்னத்தில் கை வைத்தவன்.. உதட்டை வளைத்து "போர்ஸ் பத்தல.. குழந்தை தடவிக் கொடுத்தது மாதிரி சுகமா இருந்துச்சு, எப்படி அடிச்சா வலிக்கும்னு நான் கத்துத் தரேன்" என்றவன் அவள் அறையிலிருந்து வெளியே செல்லும் வரை இருந்த சிரிப்பு மறைந்து எப்போதும் போல் கடுமையாக மாறியது.

"சர்ஜிக்கல் நைஃப்பில் ஒரு கோடு போட்டிருந்தா.. தெரிந்திருக்கும், சுகமா இருந்துச்சா இல்லையான்னு,அரசியல்வாதில்ல அதான் சுரணை கெட்டவனா இருக்கான்" கோபத்தில் பொரிந்துக் கொண்டிருந்தாள்.

அன்புடன்
வியனி ❤
 

வியனி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

கதை பெயர்: "அன்பே சுகமா..? அழகே சுகமா..?"

இப்போதைக்கு டீஸர் போடறேன்.. எந்த கதை ஆரம்பிப்பேன்னு தெரியல.. எது ஆரம்பித்தாலும் ஜூலையிலிருந்து தான் கதைக்கான அத்தியாயங்கள் வரும்..😍😍 எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க..😊😊


டீஸர்..


அந்த ஊரில் பெரிய சாவு என்பதால்.. வீட்டு வாசலை மறைத்து தென்னங் கிடுகால் பந்தல் போட்டு.. நடுவில் இறந்த மூதாட்டியின் உடலை குளிப்பாட்டி.. நெற்றியில் பட்டை இட்டு.. ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து.. அவரின் இரு புறமும்.. வெள்ளி குடத்தில் தென்னம் பாலையை வெட்டி அதில் வைத்திருக்க.. அவரது மகளும், பேத்தியும் சடலத்தின் அருகே அமர்ந்து கண்ணீர் வழிந்தோட அவர் முகத்தையே பார்த்திருந்தனர்.. வயது முதிர்ந்த பெண்கள் வரும் பெண்களை கட்டி அணைத்தும் நெஞ்சில் அடித்துக் கொண்டும் இறந்த தன் கணவரையோ அல்லது தன் வீட்டில் உள்ளவர்களின் இழப்பை நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர்.


அந்த வீட்டின் பெரிய மனிதரான சதாசிவமும்.. அவருடைய பங்காளிகளும் வெளியில் நின்று துக்கம் விசாரிக்க வருபவர்களிடம் கை கொடுத்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.


அப்போது அந்த பெரிய மனிதரிடம் வந்த ஒருவர்.. "அண்ணே..! அவன் வந்து எதுவும் பிரச்னை பண்ணுனா என்ன பண்றது..? அதனால் தான்.. அவனுங்க உள்ளே வராத அளவுக்கு நம்ம சொந்தக்கார பயலுக ரெண்டு பேரை வெளில நிக்க வச்சுருக்கேன்" என்றார்


"நல்லது..! அப்படியே மாப்பிள்ளையையும் நிக்க வை.. ஏதாவது பிரச்சனை பண்ணுனா.. ரெண்டு தட்டு தட்டி விரட்டி விட சொல்லு.. வேற எதுவும் பண்ண வேண்டாம். இழவு விழுந்த வீடு.. போலீஸ் கேஸ்னு ஆச்சுன்னா.. நல்ல படியா அத்தையை அடக்கம் பண்ண முடியாது. பெரிய பிரச்சனை எதுவும் வராமல் பார்த்துக்கச் சொல்லு.. "என்றார் அவர் காதில் மெல்லியக் குரலில்..


"சரிண்ணே..! அப்படியே பண்ணிடுவோம் "என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டின் முன் கருப்பு நிற கார் ஒன்று வழுக்கிக் கொண்டு வந்து நின்றது.


அதிலிருந்து இறங்கிய நான்கு பேரை வெளியில் நின்றவர்கள் உள்ளே செல்ல விடாமல் வழி மறித்தனர். அப்படி மறித்தவர்களை நெடுநெடுவென்று வளர்ந்திருந்த ஒருவன்.. அவர்கள் கன்னத்தில் இரண்டு அறை விட.. கிராமம் என்பதால் பங்காளி வீட்டு ஆட்களை அடித்ததும் மொத்த சொந்தமும் ஒன்று கூடி.. வேஷ்டியை மடித்துக் கொண்டு மல்லுக்குக் கிளம்ப.. அவர்கள் ஏற்கனவே உடன் அழைத்து வந்திருந்த இரு காவலர்கள்.. அவர்கள் முன் வந்து நின்றதும்.. தானாக பின் வாங்கினர்.


அவர்களின் செயலில்.. கோணலாக இதழ் வளைத்தவன்.. தன் தாய், தந்தை, தம்பியை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய அங்கு சதாசிவம் முகத்தில் ரௌத்திரம் குடி கொண்டு இறுகி போய் நின்றிருந்தார்.


அவர்களை உள்ளே செல்ல விடாமல் இடையில் வந்து நின்று.. "எங்க டா வந்தே..?" அந்த நெடியவனின் தந்தையை பார்த்துத் தீயாய் முறைத்துக் கொண்டு கேட்க..


அவன் தந்தையை பதில் சொல்ல விடாது.. "அவரோட அம்மா சாவுக்கு அவரோட வீட்டுக்கு வந்துருக்காரு.. அவரை பார்த்து எங்க டா வந்தேன்னு கேட்க நீங்க யாரு..?" என்றான் நெடியவன் விஜேயேந்திரன்..


"ஓ..! இப்போதான் அம்மான்னு உங்க அப்பனுக்கும் நினைவு வந்துருக்கு போல!" இகழ்வாய் கேட்டவர்.. "மரியாதையா எல்லாரும் வெளில போய்டுங்க.. எங்கத்தையை எந்த வித பிரச்னையும் இல்லாமல் அடக்கம் பண்ணனும்.."என்றார் சிவம்.


"கடைசி காரியம் பண்ண பெத்த மகன் இங்க இருக்கும்போது.. நீங்க அடக்கம் பண்றிங்களா..? நல்லா இருக்கே உங்க பேச்சு. என் அப்பாதான் அவரோட அம்மாவுக்கு கொல்லி வைப்பாரு.. இதை யாராலையும் தடுக்க முடியாது, அப்படி யாராவது தடுக்க வந்தா ஒருத்தன் உயிர் கூட மிஞ்சாது"தன்னை முறைத்துக் கொண்டு நின்றவர்கள் மீது பார்வையை சுழலவிட்டு.. அவருக்கு இணையாக அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவன், அவரை தாண்டி உள்ளே செல்ல முயல..


அவன் சட்டையை கொத்தாகப் பற்றியவர்.. "நான் சொல்லிகிட்டே இருக்கேன் எங்க டா உள்ளே போறே..?" என்க..


"வேண்டாம் பா.. அவங்களே எல்லாத்தையும் பண்ணட்டும் நீ வா.. நாம போகலாம் "அவனுடைய அன்னை அவன் கையை பற்றி இழுக்க.. அவர் கரத்தை விலக்கி விட்டவன்.

"என் அப்பாவுக்கும்.. எனக்குமான உரிமையை யாருக்காகவும் நான் விட்டு கொடுக்க மாட்டேன் மா" என்றவன் அவர் சட்டையிலிருந்து கையை பிரிக்கும் போராட்டத்தில்.. எதிர் பாராத விதமாக.. அவர் கீழே விழுந்து விட.. அனைவரும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றனர்.

இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அவரின் மகள் துளசி.. அவர் கீழே விழுந்ததும்.. "அப்பா..!" என்ற அலறலோடு அவர் அருகே ஓடி வந்து அவரை தூக்கி அருகிலிருந்த இருக்கையில் அமர வைத்து அவர் நெஞ்சை தடவிக் கொடுத்து.. தண்ணீரை பருக செய்துவிட்டு..


அந்த நெடியவன் பக்கம் திரும்பி.."வயசான பெரிய மனுசனை கீழே தள்ளிவிட்டுருக்கியே.. நீயெல்லாம் நல்ல ஆம்பளையாடா..?"என்றவள் தன் தந்தையை தள்ளி விட்டது பொறுக்காது அவன் உயரத்திற்கு எம்பி அவன் கன்னத்தில் 'பளார்' என அறைந்தே விட்டாள்.


************************************************

"என்ன அண்ணே தண்ணி பாய்ச்சுருயே.. ஒழுங்கா உருவி பிடிக்காமே.. எல்லா பாத்திலையும் உடைச்சுக்கிட்டு பாயுது பாருங்க.. தள்ளுங்க.. நான் வெட்டி அடைக்கிறேன்" என மண் வெட்டியை வாங்கிக் கொண்டவள்..


" நீங்க போய் கடலை விதைக்கிறவுகளுக்கு டீயும், பலகாரமும் வாங்கிட்டு வாங்க" என்று அவரை அனுப்பி வைத்தாள். தண்ணீர் பாய்ச்சுவதற்கு ஏற்றார் போல் பாவாடையை ஏற்றி இடுப்பில் சொருகிக் கொண்டு ஒவ்வொரு பாத்திக்கும் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த துளசியின் பின் புறம் வந்து நின்றான் விஜய்..!


அவள் பாட்டிற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்க.. ஒரு பிடி சேற்றை கையில் அள்ளி அவள் முதுகில் எறிந்தான். அதில் "கொழுத்துற வெயிலுல நானே காஞ்சு கருவாடா போய் தண்ணியை பாய்ச்சிகிட்டு இருக்கேன் இவளுக வேற..!"என தன் கூட்டாளி பெண்கள் தான் இந்த வேலையை செய்திருக்கிறார்கள் என எண்ணி திரும்பியவள்..





அங்கு நின்றவனை கண்டதும் கோபம் கொப்பளிக்க.. "எதிரி வீட்டு நிலத்துல கால் எடுத்து வச்சதும் இல்லாமல், தனியா இருக்கிற பொட்ட புள்ளை மேல சேறை வீசிறிக்கியே.. ஊருகாரங்க பார்த்தா பஞ்சாயத்து வச்சு தோலை உரிச்சுபுடுவாங்க தெரியுமில்ல.."

"எதிரி வீட்டு நிலத்துல.. கால் வச்சதுக்கே இந்த குதி குதிக்கிறியே எதிரி வீட்டு பொண்ணு மேல கையை வைக்கலாம்னு இருக்கேன்.. என்ன பண்ணுவே..?"என அவள் மீது பார்வையை ஓட விட..அவள் கைகள் தானாக ஏற்றி சொருகி இருந்த பாவாடையை கீழே இறக்கி விட்டது..


"பணத்தை வச்சு நினைச்சதை நடத்திட்டோம்ங்கிற மமதையில் இந்த பேச்சு பேசுறியா..! எங்களுக்கும் ஒரு காலம் வரும் அப்போ உங்க குடும்பத்தை என்ன பண்றோம்னு பாரு" என்க..


"அந்த அளவுக்கு எல்லாம் உன் குடும்பத்துக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேன். இத்தனை வருசம்.. என் அப்பாவை ஒதுக்கி வச்சு.. எங்களை இந்த ஊருக்குள்ளையே வர விடாமல் பண்ணி.. அவரோட அம்மாவை கடைசி காலத்தில் பார்க்க விடாமல் செய்து, எங்க உரிமையைத் தட்டி பறிக்க நினைத்த உங்களை எல்லாம் சும்மா விட மாட்டேன் டி.. முக்கியமா என்னை அடிச்ச உன்னை விடவே மாட்டேன்" என்றவன்.. "இனி இங்க தான் உங்க முன்னாடி இருக்க போறோம்..! வாழபோறோம்..!"

நம்ம பேரன் பேத்தி எல்லாம் இந்த ஊருல தான் பிறந்து வளரப்போறாங்க" என்று அவன் சொன்ன வார்த்தைகளை கவனியாதவள்..


"முதல்ல நீ இந்த ஊரில் இருக்க முடியுதான்னு பாரு..!.அப்புறம்.. உன் பேரன் பேத்தியை பத்தி யோசிக்கலாம்.."கேலியாகக் கூறினாள்.


"நீயும் அதை பார்க்க தானே போறே.. ஏன்னா என்னோட உரிமையை நான் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்" என்றவன் பார்வை அவளை தலை முதல் பாதம் வரை வருடி சென்றது.


அன்புடன்
வியனி❤
 
Top