வணக்கம் தோழமைகளே.,
எல்லாரும் கதை துவங்கும் போது தான் டீசர் போடுவாங்க., நான் முடிந்த பிறகு போடுகிறேன்., பிடித்திருந்தால் கதையை படியுங்கள்., ஞாயிறு லிங்க் எடுத்து விடுவேன் தோழமைகளே
பிடிக்காதவர்கள் படித்துக்கொள்ளுங்கள்
அன்புடன்
மதிளா சுகி
#துறு_துறு_விழியே
துறு துறு விழியே..!
அவ்வளவு பெரிய அரங்கில் மேள தாளங்கள் முழங்க மணப்பெண் ஆடை அலங்காரத்துடன், முகம் முழுக்க மகிழ்ச்சி பரவி கிடக்க, திருமணம் நடக்க போகும் இடமே மங்கல இசையும், பூக்களின் நறுமணங்கள் நிறைந்திருக்க, உறவுகள் ஒன்று கூடி அன்பின் பரிமாற்றத்துடன் நாதஸ்வர இசை முழங்க, மணப்பெண்ணோ அன்ன நடையிட்டு மாலை சூடி தலைக்கவிழ்ந்து வர, மணப்பெண் மேல் இடித்துவிட்டு தரைதளம் நோக்கி பெண்ணொருத்தி ஓட அவள் பின்னே இன்ணொருத்தியும் ஓடினாள்.
சிறு சலசலப்புடன் திருமண நிகழ்வுகள் தொடங்கியது,
மூச்சு வாங்க தரை தளத்திற்கு வந்தவள், அவள் கண்ணெதிரே தெரிந்த தட்டை எடுத்தக்கொண்டு அவன் முன் போய் நின்றாள்.
அவனோ "நை நை” என்றான்.
"நான் அப்போவே வந்தப்ப என்ன சொன்ன, பொண்ணு ரூம்ல இருந்து வெளிய வரட்டும் தான சொன்ன, இப்ப பொண்ணும் வந்தாச்சு சாப்பிடுற டைமும் ஆச்சு பிரியாணிய போடு டா என் சிப்ஸ்" என பேசியவளின் மொழி புரியாது விழித்தவனின் கையிலிருந்த பிரியாணி கரண்டியை பிடிங்கி தனக்கு தேவையான உணவை எடுத்து வைத்தவள் அருகே இருந்த தன் தோழிக்கும் தட்டு நிறைய எடுத்து கொடுத்தாள், அது பஃபே அமைப்பு என்பதால் விரும்பிய உணவை எடுத்துக்கொண்டாள்.
“யார்கிட்ட பொண்ணு தோழிகிட்டயே வா..? கேட்டரீங்க்கு காசு கொறைச்சு தர சொல்றேன்” என சொல்லி நகர்ந்தவள், பிரியாணியை ரசித்து சுவைக்க ஆரம்பித்தாள்.
"ஹே பயமா இருக்குடி! யாரவது வந்து கேட்டா என்ன சொல்லுவ, எப்படி சமாளிப்பது” என அருகிலிருந்த தோழி கேட்க
'நான் பாத்துக்கிறேன்' என்பது போல் சைகை செய்தவள் முழு கவனத்தையும் உணவில் செலுத்தியிருந்தாள்
“யாருமா அது தாலி கட்டும் முன்னே பிரியாணி அண்டாவ திறந்தது“ என்ற படி பெண் வீட்டு உறவுக்காரன் கேட்க
“நீங்க மாப்பிளை வீடா பொண்ணு வீடா” என அதிகாரமாய் கேட்டவள் பிரியாணியை மென்ற படி நிற்க
“யாரை பார்த்து என்ன வார்த்தை கேட்ட, நான் பொண்ணுக்கு தாய் மாமன்” என மீசையை முறுக்கி விட்டவனை பார்த்து
“தாய் மாமன்னா சீர் செய்றதோட நிறுத்துத்திட கூடாது, பந்தகால்ல இருந்து பந்தி வர சரியா நடக்குதானு பார்க்கணும்” என்றவளை பார்த்து முறைத்தவன்
“இப்ப நாங்க என்னத்துல குறை வச்சிட்டோம்னு கத்துற” என கேட்ட தாய் மாமானை பார்த்து.,
“தயிர் வெங்காயத்துல உப்பே இல்ல, கேசரில இனிப்பே இல்ல, எங்க அந்த அவத்தார் குட்டி” என கேட்டரீங் பொறுப்பாளனை தேடியவள்.,
“இருங்க தாய் மாமா கை கழுவிட்டு வந்து பஞ்சாயத்தை முடிக்கிறேன்” என்றவள் கை கழுவியதோடு அவத்தார் குட்டியையும் கையோடு இழுத்து வந்தாள்
“இது என்ன டிஷ் டா” என மிரட்டியதிலே பயந்து நடுங்கி நின்றான் உணவு பரிமாறுபவன்.
“இது என்ன டிஷ்னே தெரியல இனிப்பாவும் இருக்கு புளிப்பாவும் இருக்கு, மாப்பிளை வீட்ல சாப்பிட்டு பாத்துட்டு பொண்ணு வேண்டாம் சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க, ரசத்துல உப்பு இல்லாமா நின்ன கல்யாணம்லா இருக்கு தெரியுமா?” என அவள் கேட்க இவள் பேசுவதை கண்டு ஒரு பக்கம் அதிர்ச்சியில் நின்றாள் தோழி
“இம்புட்டு விவரமா பேசுறியே யாருமா நீ?” என கேள்வியாய் பார்த்த தாய்மாமனை பார்த்தவள்
‘இவன் விடமாட்டான் போலயே’ என மனதுக்குள் கறுவியவள்
“நான் யாருன்றதா சார் முக்கியம், கல்யாணம் நல்ல படியா நடக்கணும் அது தான் முக்கியம்” என சொல்லி சமாளித்தவள் தோழியை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்
தரை தளத்திலிருந்து மேல் தளத்தை நோக்கி ஒரு கையில் புடவையும், மறுக்கையில் தோழியையும் பிடித்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டவளை தடுத்திருந்தார் தாய் மாமான்
‘சனியன தூக்கி பணியன்ல போட்ட கதையால இருக்கு, விட மாட்டான் போலயே, ஆபிஸ் வேற டைம் ஆகுது’ என தனக்குள் புலம்பியவள்
“நீங்க பொண்ணுக்கு நிஜமாவே தாய் மாமன் தானா, பார்க்க சினிமா நடிகர் மாதிரியே இருக்கீங்க அங்கிள்” என சொன்னவளை பார்த்து வழிந்தவன் அங்கிள் என்ற வார்த்தை கேட்டதும் கோபம் அடைந்தான்
“எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல மா, எதுக்கு அங்கிள் டிவிங்கள்னுகிட்டு, அழகா தமிழ்ல மாமானு சொல்லுமா, நீ மாப்பிளை வீட்டு ஆள, சொல்லு பேசி முடிச்சிருவோம்”
“நான் மாப்பிளையோட தங்கச்சி உங்களுக்கும் தங்கச்சி தான், அங்க பாருங்க தாய்மாமன் சடங்குக்கு கூப்பிடறாங்க” என அவனை திசை திருப்பியவள் மண்டபத்தை விட்டு வெளியே வந்து பெருமூச்சு விட்டாள்
“அடியே கிருத்தி, எப்படி த்ரில்லிங் எக்ஸ்பரியனஸ்” என முகம் பார்த்தவளை
“சோத்த திண்றதுல என்னடி த்ரில்லிங் எக்ஸ்ப்பீரியன்ஸ், நீ என்ன பத்து ரூபா, இருபது ரூபாயா சம்பாதிக்குற ஐம்பதாயிரம் சம்பாதிக்குற அப்பறம் எதுக்குடி இந்த சின்ன புள்ள தனமான விளையாட்டு அழகா ஹோட்டல் போய் பிடிச்சத வயிறு முட்ட சாப்பிட்டோமா, அப்படியே குட்டி தூக்கத்தை போட்டோமான்னு இல்லாம, இது என்னடி கிறுக்கு தனம் இதுல என்னையும் வேற சேர்த்துக்க” என கிருத்திக்கா சொல்ல கண்களில் நீர் வழிய நின்றவள்
“ஒரு காலத்துல, ஒரு வேளை சாப்பாட்டுக்கே எவ்ளோ கஸ்ட்டப்பட்டேன் தெரியமா உனக்கு . ? அதான் ஒவ்வொரு கல்யாண மண்டபமா போய் சாப்பிடுறேன் என் கதையா கேட்டா நீயே கதறி கதறி அழுவடி” என சொல்லி முகத்தை திருப்பிக்கொண்டு சிரித்தாள்
“ஹே சாரிடி, என்ன மன்னிச்சுரு நான் எதோ மாட்டிப்போம்ன்ற பதட்டத்துல சொல்லிட்டேன் திரும்புடி” என அவளை திருப்பிய கிருத்திகா அவளை முறைத்தபடி நின்றாள் .,
வாயெல்லாம் பல்லாக “ஈஈஈ” என இளித்தவளை பார்த்து
“எதை சொன்னாலும் நம்பு கிருத்தி, சும்மா அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்குறது ஒரு லைப், நமக்கு பிடிச்ச மாதிரி வாழணும்” என்றவளை.,
“இந்த விசயத்துல என்னைக்காவது வசமா மாட்ட போற அப்ப எப்படி தப்பிக்குற பாக்குறேன்” என கிருத்தி சொல்ல
“வாய்ன்னு ஒண்ணு இருக்கு அது போதும்டி எனக்கு, வாயுள்ள பிள்ளை பொழைச்சுப்பேன் இது வரைக்கும் எத்தனை கல்யாண வீட்டுக்கு போயிருப்பேன் யார்க்கிட்டையும் மாட்டமாட்டேன்” என்றாள் மிளிர்னா அதுவே அவளின் பெயர்
மிளிர்னா நவநாகரிக நங்கை இவள், அடர்ந்த கார் குழலி கருந் திராட்சை கண்ணழகி, கண்ணக்குழி அழகி நீரோடை போல் அவளின் பாதையில் தடைகள் இல்லை சேருமிடம் கடல் என்று அறிந்தாலும் அனைத்திலும் சுவாரசியமும் அசாதாரண எண்ணம் கொண்டவள் காப்பகம் எனும் குடும்பத்தில் அநாதை எனும் பெயரில் வளர்ந்தவள் கொஞ்சம், தனிமையில் நாட்களை கழித்த காரணத்தினால் அன்பு கிடைக்கும் இடத்தில் அடங்கியும் போவாள், ஆதிக்கத்தின் முன் அடங்கவும் மறுப்பாள்,அழகில் மிளிர்வதை விட குணத்தில் இன்னும் அழகாக மிளிர்வாள் அவளே மிளிர்னா..
கதையின் லிங்க்
வணக்கம் செல்லக்குட்டீஸ் நாளை முதல் இந்த திரியில் "துறு துறு விழியே" கதையின் அத்தியாயங்கள் பதிவிடப்படும்.. நீண்ட நாட்களுக்கு பின் எழுத்து வழியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி .. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஶ்ரீமா அவர்களுக்கு நன்றி இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழமைகளே...
www.srikalatamilnovel.com