All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பெண்ணின் உணர்வுகளை இரு ஆண்களுமே புரிந்து கொள்ளாத பதிவு..

அஞ்சலிக்காக தன் மாப்பிள்ளையாக ரன்வீரை தேர்ந்தெடுத்த அமர் முடிவில் அவனே ஆத்மியிடம் ரன்வீர் தான் வேண்டும் என்றால் என்னை மறந்து விடு என்பது அநியாயம்... அப்படியென்றால் அவனே தேர்ந்தெடுத்து இந்த கல்யாணம் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டானா? எதற்காக அவனை தேர்வு செய்து ஆத்மி முன்பு நிறுத்த வேண்டும்.. நேற்று கல்யாண மாப்பிள்ளையாய் ஒருவன் இன்று வேறொருவனா? இது அநியாயம் ஸ்ரீ மேம்... அஞ்சலியிடம் நிலையாக நின்று ராமையே ஆத்மி மணமுடிக்க முன்பே ஏற்பாடு செய்திருக்கலாமே? அமர் இது போல் செய்வான் என்று என்னால் நம்பவே முடியவில்லை...

அப்படி என்ன தான் ராமிற்கு துரோகம் செய்து விட்டான் அமர்?? இது ராமிற்கு தெரியுமா? தெரிந்திருந்தால் அமரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வானா? இல்லை அவன் மொத்த சொத்துக்களையும் அடைய ராம் நடிக்கும் நாடகமா? அந்த சேட்டுவை சரண் அடைய வைத்து ரன்வீர் விடுதலை ஆகி வந்தவுடன் நேராக அவன் வீட்டிற்கே கூட்டி கொண்டு ஆத்மி வாயாலேயே சொல்ல வைத்து விட்டான் ரன்வீர் முன்பே... அச்செயலால் அவள் மனது படும் பாடு நிச்சயமாய் ஒரு ஆணால் புரிந்து கொள்ள முடியாததே...

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம் தங்கள் பாணியில்.. எண்ணற்ற கேள்விகள் மனதில் எழும்பி புரண்டினாலும் ஒவ்வொரு புதிர்களின் விடையையும் ஸ்ரீ மேம் விடுவிக்கும் அழகை காண ஆவலுடன்....
 

Sriraj

New member
குழப்பங்கள் சூழ இருக்கும் பதிவு ஸ்ரீமா...

பெண்ணின் நுன்னிய உணர்வுகளை என்று தான் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் ஆண்கள்...

அவர்களால் அதில் என்றும் வெல்ல இயலாது என்பது ராம் மற்றும் அமர் மூலம் தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள்.

ரன்வீர் வேண்டும் என்றால் என்னை மறந்து விடு என்று கூறும் அமர் எனக்கு இங்கு அவன் அநியாயம் செய்வதாகவே தோன்றியது.

அடுத்து ராம், ராமின் பழைய வாழ்வில் ஏதோ ஒரு வலி ஊடே ஒரு மர்மம் இருக்கிறது. நிர்மலாவிடம் எகிறியது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவனும் ஆத்மியை வைற்று ஏதோ விளையாட திட்டம் போடுகிறானோ...

இவனின் திட்டமிடுதலில் அவளின் உணர்வுகள் பாதிப்புக்குள்ளாகுமோ...

இவர்களின் மெல்லிய காதல் இவ்வலிகளுக்கு பதில் கூறுமோ...

அறிய ஆவலாய் அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து...🙂
 

Deebha

Well-known member
Hi sis, சிறு வயதில் தாயாய் மாறி அன்னையை மடி தாங்கிய ஆத்மியை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன். இப்போது உள்ள ஆத்மியிடம் சந்தோஷம் இல்லை, தெளிவில்லை, தைரியம் இல்லை, தனக்கு துரோகம் செய்த ஒருவனை தோழனாகவே இரு என கேட்கும் இந்த ஆத்மி மனத்திற்கு கஷ்டங்கள் கொடுகிறாள். ராம் ரன்வீர் குடும்பத்தையும் அமர் குடும்பத்தையும் பழி வாங்க நினைக்கிறானா ? அமருக்கு ராம், ரன்வீர் குடும்பத்தால் பாதிப்படைந்தது தெரியுமா? தொழில் சுத்தம் வேண்டும் என நினைக்கும் அமர்க்கு ராம் தன் தேவைக்கு எந்த எல்லைக்கும் போவான் என தெரிந்தால் என்னவாகுமோ?
 

vijirsn1965

Bronze Winner
intha ram iku yaar mel enna vanmam sonulal ram aala amar ramiku thavaru seithu vittathaha ninaithu than magallai avanuiku thirumanam seiya ninaikiraar ram panamthan mukkiyam athai adaiya enna veandumaanaalum seiya thayaar enkiraan yean aathmikavai dhathi enkiraan theriyavillai avanuiku ranveer family meethu etho orukobham ullathu nirmalavidame athai solkiraan 2ud serththu padiththean semma suspense ah irukku semma semma arumai superb mam(viji)
 
Top