All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்.. நீ நான் என்ற இருவர் நாமாகிய பதிவு... இப்பதிவில் எங்கும் சந்தோஷம் எதிலும் சந்தோஷம்.. மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும் பதிவு...

அமர் ரசித்து ரசித்து தங்கள் ஒவ்வொரு திருமண நிகழ்வையும் நடத்தியது அழகென்றால் அஞ்சலி அதை கண்டு அகமும் முகமும் மலர அவன் ஒவ்வொரு செயலிலும் வெட்கத்தில் முகம் சிவந்து ரசித்தது அழகோ அழகு... ஒவ்வொரு நிகழ்வையும் அனைவரும் ரசித்து மகிழ்ந்தது அழகென்றால் அவர்களின் சின்ன சிட்டு கை தட்டி குதூகலித்து குதித்தது அழகான கவிதை...

வரவேற்பில் தன் மனைவியை அனைவருக்கும் பெருமையாக அறிமுகப்படுத்தி.. தன் சரிபாதி அவள்... அவளே முதன்மை என்று சொல்லாமல் சொல்லும் அமர் அற்புத காதலன் மட்டுமல்ல... பெண்மையும் தாய்மையும் மதிக்கும் சிறந்த கணவன்...

அஞ்சலிக்காகவே ஒரு ஆப்... இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா ஸ்ரீ மேம்... வீடு முழுவதும் சென்சார் பொருந்தி குழந்தையின் வாய்ஸ் கேட்டவுடன் இதிலிருந்து அலாரம்... அருமை.. அவளுக்காகவே யோசித்து வாழ ஆரம்பித்து விட்டான் அமர்...

முதலில் அவன் வன்மையில் பயந்தாலும் அவன் மென்மையில்... அழகான தாம்பத்தியம்...இருவர் மனதும் உடலும் ஒருவராகியது...

அபாரமான கவிதை ஸ்ரீ மேம்... அதிலும் காதல், காமம், பேரின்பம் கடந்து பேரமைதியை பேரன்பில் காண்பது தான் இல்லறமோ? வாவ்! என்ன சொல்ல! ஏது சொல்ல! அப்படியே ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் உயிர் பெற்று நாங்கள் பக்கதிலிருந்து ரசிப்பது... நாங்கள் அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

அற்புதம் ஸ்ரீ மேம்... வாழ்த்துக்கள்...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,


படர்ந்திட்ட கொடியாய்
தோள் சாய்ந்தவள்...
பட்டுப் போன கொடியாய்
ஆள் ஓய்ந்தவள்...!

மன்னவன் காதலில்
உயிர்த்தாளவள்...!
தென்னவன் மொழியில்
நிமிர்ந்தாளவள்...!

காதலின் வழியாய்
மீண்டாளவள்...!
தாய்மையின் மொழியாய்
ஆண்டாளவள்...!

தளிர்விட்ட கொடியாய்
தோள் சேர்ந்தவள்...!
தழைத்திட்ட கொடியாய்
மடி சாய்ந்தவள்...!

காதலில் வேராய்
நின்றாளவள்...!
தாய்மையில் ஆறாய்
வளைத்தாளவள்...!

பெண்மையின் மேன்மை
கொண்டாளவள்...!
மென்மையில் ஆணை
வென்றாளவள்...!

ஒரு கூட்டுக் கிளிகள்
ஓயாத மொழிகள்
சந்தோச சந்தத்தில்
நிஜமான நிழல்கள்!
மகிழ்வான பந்தத்தில்
மறைவான நிஜங்கள்!
காலத்தில் அலைகள்
கடக்கின்ற நேரம்
தடை போட்டு நின்றால்
விடை என்ன தோழி...?


உனக்கென வாழும் இதயமடி - இது
உயிர்வலி தாங்கா இதயமடி!
உனக்கென நாளும் உருகுதடி - அது
உன் வலி கண்டால் மறுகுதடி!
கலங்காதே கண்ணே!
மன்னவன் முன்னே!
கரை சேர்த்து விடுவான்
நிறைவான கண்ணன்!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Banumathi Balachandran

Well-known member
மஹிமாவுடைய அம்மா இங்கே ஏன் வந்தார்? அவரைக் கண்டு இவள் ஏன் பயப்படவேண்டும். அஞ்சலியின் நிலைக்கு இவரும் ஒரு காரணமா?
 

Deebha

Well-known member
ஒருங்கிணைந்த குடும்பமாக வாழ்வது ஆனந்தம். மஹிமா அம்மா orphanage இல் என்றால் மஹிமா எங்கே? அஞ்சலிக்கு அடிபட்ட போது மஹிமாகு ஏதாவது ஆகிவிட்டதா? Nice epi.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? ஆனந்தமயமான குடும்ப வாழ்வுக்கான பதிவு..ஈருயிர் ஓருயிராகி அமரஞ்சலியாய் ஆனந்தமயமாக்கிய பதிவு...

அஞ்சலியின் பயிற்சி, ஞாபகசக்தியை தூண்டுவதாய்.. அதற்கு உறுதுணையாய் இருந்து ஒவ்வொரு இடத்திலும் பயிற்சி கொடுக்கும் அமர்... அருமை ஸ்ரீ மேம்... ஆத்மார்த்த தம்பதிகள்...

அதிலும் ஒவ்வொரு இடத்தில் ஆத்மிகாவை யாரிடமும் விடாது அவர்கள் பாசத்தை முழுதாய் அவளிடம் கொட்டுவது... பால் அருந்த வைப்பது, கடவுளை வணங்கும் போது, நெற்றியில் ஒன்றாக குங்குமம் இட்டு கொள்வது, உணவையும் தானே ஊட்டுவது மற்றும் அமரை வழி அனுப்பும் போதும் அஞ்சலி ஆத்மிகா இருவரும் சேர்ந்தே அவனை அனுப்புவது... இருவருக்கும் முத்தம்... எதிலுமே அவர்கள் குழந்தையை விட்டு விடவில்லை... அன்பான அழகான பாச கூடு...

எவ்வளவு மனம் வெறுத்து போய் வாழ்ந்து வந்த அமர் வாழ்வில் இப்போது எதிலும் மகிழ்ச்சி மட்டுமே... அஞ்சலியும் ஆத்மிகாவும் இணைந்து அவர்கள் கம்பெனி நாட்காட்டியின் தாய்மையின் பிரதிபலிப்பாக இருந்தது அழகு என்றால் தன் கம்பெனிக்கே அஞ்சலியை என்றும் மாடலிங்காக தேர்வு செய்து... பெண், என்றும் அவளுக்கு என்று தனி அடையாளத்தை அதற்கு அவள் கணவனே வழி வகுத்து ஏற்றி விட்டது அழகோ அழகு... அற்புதம் ஸ்ரீ மேம்..

கவிதை அழகு...ஆனால் நான் கவிதையை பார்த்தவுடன் இதோடு முடித்து விட்டார்கள் இப்பதிவும் மகிழ்ச்சியான பதிவு என்று நினைக்கும் போதே அப்படியெல்லாம் நான் விட்டு விடுவேனா என்று ஆத்மிகாவின் பிறந்த நாளில் மஹிமாவின் அன்னையை அவ்விடத்தில் காட்டியது... அமரின் முகத்தில் அஞ்சலிக்கான வலி அப்பட்டமாய்...

இனி அவர்களுக்கு துன்பத்தின் வாயிலா? ஓகே ஸ்ரீ மேம்! கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பது போல் இதிலிருந்தும் அஞ்சலியை பாதுகாத்து அமர் மீட்டு விடுவான் என்ற நம்பிக்கையோடு...

அற்புதமான பதிவு...
 

Chitra Balaji

Bronze Winner
First time avaluku fix வந்துதா.....இப்போ vum அதே maari fix வந்துடுச்சி.... Marupadiyum enna aaga pooguthoo avaluku...... அந்த பேய் நல்லா irunthavala இந்த maari ஆக்கி vittudiche..... அவன் mela avvallavu காதல் vechi இருக்கா avana உயிர் ku mela ninaikira.... அவன் mela avvallavu நம்பிக்கை yum vechi இருக்கா appram ஏன் அந்த pombaalai sonnathai manasula pottu குழப்பி kitu இப்படி fix vara vechi இருக்கா..... Avalw பிரான்ஸ் ku vara vechi avala paathathu ku appram thaan கொஞ்சம் konjamaa ava mela ulla love 😍 realize பண்ண ஆரம்பிச்சி இருக்கா..... அவல ooty la vittutu வந்துட்டு மறுபடியும் rendu மாசம் appram thaan avala paakka poraan pola...... Super Super Super mam... Semma semma episode
 

Bigboss_1995

Well-known member
எனக்கு கூட என்னமோ சரியில்லாத மாதிரிதான் தோனுது…. சுண்டெலி மறுபடியும் ஓடி போக போறாளோ 😡
 
Top