All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
அருமையான பதிவு ,கனியின் நட்பு,நல்ல நட்பிற்கு எடுத்துக்காட்டு,அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் :love:😍
 

Christyvanitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி எவ்ளோ கெஞ்சியும் அமர் ஓவரா பன்றான் ,கனி தான் அஞ்சலியை காப்பத்தனும்.
 

Chitra Balaji

Bronze Winner
இவன் ava manasula enna இருக்கு nu therinjikka தான் அந்த suzhnilai ah avanuku சாதகமாக பயன் paduthitaan iva kadasi varaikum ava manasula ullathai அவன் kita sollala அவன் avala enna solli nogadikiraano athaiye தான் solraa காசு kaaga nu..... Appadi ஒரு கோவம் avanuku avala kaaya படுத்திட poorom nu தான் avala வீடு ku போக sollitaan ah eppadi தான் avanodaya வலி ah seri panna poraalo avan நம்பிக்கை ah eppadi திரும்ப பெற pora..... கனி வந்து irukaala velai விஷயமா kadasi varaikum Avala mannikala.... அமர் mannicha தான் ava mannippenu sollitaa...... Avanodaya தப்பையும் சுட்டி kaattita.... சூர்யா தான் avala கஷ்டம் படுத்தி annupitaane இப்போ ethuku avalukaaga அமர் kita பேசுறான்.... Super Super mam... Semma semma episode
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...
நல்லா ஒரு பெண்ணை manipulate பண்ணறாங்க இந்த கதையில்...

அவளை துரோகி என்றாள்... தோழனிடம் அவள் சின்ன பெண் என்றால்... ம்ம் அவளுக்கேனும் இருக்கே இன்னும் அவள் சின்ன பெண் தான் என்று...

அத்து மீறும் ஹீரோ..எந்த உரிமையியல் அத்து மீறுகிறான்.. அவளுக்கு கேட்க யாருமே இல்லை என்ற ஆணவம் தானே அவனை இந்த நிலையில் நிறுத்தி இருக்கு...

என்ன ஒரு அநியாயம் அவன் மஹிமா என்று நினைத்து விட்டான் அவளை...

அவன் சுற்றி நல்ல பெண் யாரையும் அவனுக்கு தெரியவில்லை போல... அவன் தாய்,கனி தங்கை மட்டுமே பெண் நினைச்சுட்டான்...
உடனே அவள் துரோகி வராதீங்க அதை கடந்து அவன் வந்து வருஷ மாச்சு...

ஆண் என்ற அகங்காரம் இவள் என்ன செய்வாள் என்ற ஏளனம் இதோ அவள் கண்ணீர் உன்னை திருப்தி படுத்தவில்லை எனில் உன் முன் உதிரம் உதிர்க் உயிர் விடும் நாள் புரியும் அன்று இதோ போல் நிற்க உன் காலுக்கு பலம் சேர்த்திகொள்...(அப்படி இருக்கா சீன் தெரியலை ஒரு ப்ளோல எழுதி இருக்கேன் படிச்ச போது நல்லா இருக்கு விட்டுட்டேன் 😁😁😁)



துரோகி நீ என்றாய்
அதற்கு அர்த்தம்
காலத்திடம் கற்றேன்....
பத்ததினியா நீயென கேட்டாய்
பெண்மையை காக்க இந்த சமூகத்திடம் போராடினேன்...
அழகியா என்றாய்
அதை ஆராதிக்காமல்
கண்ணாடியில் முகம் பார்க்க தவிர்த்தேன்
காதலை கொன்றேன் உன் பொளுக்காய் பரத்தையாய்
நின்றேன்
உன் மனம் திருப்திக்கு
உணர்விழந்து உயிரை
கையில் பிடித்து தலை
தாழ்ந்து கிடக்கிறேன்
அறியா வயதில்
புரியா மொழி கேட்டு
கிட்டா பாசத்திற்காய்
பாசறையில் வீழ்ந்த தவறுக்காய்
தினம் தினம் நெருப்பில்
குளிக்க இதோ நான்
உன் வார்த்தை எனும்
தீயின் முன் பத்தினாய்...

ஸ்ரீ மா...
இவன் இன்னும் இன்னும் பழி வாங்குவான் போல...

பழி என்றவன் அவளிடம் பலியா கிடக்கும் காலம் வரும் போது இந்த கடற்கரை மண் அவனை பார்த்து ஏளனமாய் ஏசாதோ...

இதே இந்த சூழலில் அவளை வதைக்கும் அவன் குற்றவாளியா அவள் முன் தலை தாழ்த்தி நிற்க அவன் ஏன் இந்த போராட்டம் செய்கிறான்...

இந்த இரண்டு எபியும் சூப்பர் அவளை படிக்க பாவமாக இருக்கிறது....

இந்த துரோகம் என்ற சம்பவம் ஆரம்பத்தில் இருந்தே படித்ததால் எனக்கு அது தான் முடிஞ்சு போச்சே ஏன்டா திரும்ப அதையே யோசிக்கற அவன் மண்டையில் கொட்டி கேள்வி கேட்ட தோனுது...
அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...
இப்படி அநியாயமாக தொடரும் போட்டுட்டிங்களே அவள் என்ன பண்ண போறான்...
அவ கூட அமர்ந்து அவனும் நிலாவா வெறிக்க பார்ப்பான் என்றால் பரவாயில்லை.

ஆனால் ... என்ற???
காத்திருக்கேன் 😂
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

துரோகத்தின் கணக்கில்
துரோகியாய் நிற்பவள்
துரோகத்தின் பிணக்கில்
ரோகியாய் போவாளோ...!

கோபத்தின் ரோகத்தில்
வெடிக்கின்ற மன்னவனே! - உன்
தாபத்தின் வேகத்தில்
அடிக்கின்றாய் பெண்மையினை!
துரோகத்தின் சம்பளம் ரோகம் என்றால்...
பாவத்தின் சம்பளம் மரணம் அன்றோ...!

தன்மானத்தில் கவரிமானவள்
தவிக்கின்ற வேளையிலும்
தன்மானம் நினைப்பவள்
நிலை குனிந்து நின்றாலும்
தலை நிமிர்வாள் தரணியிலே!

பழிக் கணக்கை
தீர்க்க வந்தவன்
பாவக் கணக்கை
ஏற்றி நிற்க.....
தோள் கொடுக்கும் தோழமை
போர் தொடுக்கும் ஆளுமை
நட்பிலக்கணத்தின் நர்த்தனமே!

செய்துவிட்ட செயல்கள்
செய்வினையாய் மிரட்ட
செயலற்றுப் போனாளோ...
சேயவளும் இன்று!

கொய்துவிட்ட செயல்கள்
கொல்லாமல் விரட்ட
கொடுரமாய் போனானோ...
கொற்றவனும் இன்று!


சிட்டுக் குருவியை
சிறகடிக்கப் பழக்கிவிட்டு
சிறகடிக்கும் வேளை
சிறகொடிக்கும் வேலை
மண்ணில் மாந்தர்க்கு
கைவந்த கலையன்றோ...?

மானுடரே!
போகம் சேர்ந்தால் ரோகம்
ரோகம் தீர்ந்தால் யோகம்!
புண்ணியம் சேர்ந்தால்
பூரணம் என்றால்,
கண்ணியம் தீர்ந்தால்
கரணம் என்றால்,
கரணம் தப்பினால் மரணம்!
ஆன்றோர் வாக்கு
சான்றோர் நோக்கு!
கேட்டவர் வாழ்ந்தார்!
விட்டவர் வீழ்ந்தார்!
அறிவாயோ ஆழ் மனமே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி


 

Meevasir

New member
Nice sis amar can forgive her because of age she can't realize what she did to him but now he has that maturity to handle it and I think now she's realized so forgive will solve everything waiting for next ud sis
 
Top