All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Subasini

Well-known member
அமரஞ்சலி...

நீ என்னை சாக்கடையில் தள்ளினாய் அது தான் எனக்கு கோபம்... அந்த கோபத்தை தீர்க்க தினமும் சாக்கடையில் வீழ்ந்து எழுந்து கொள்ளுவேன் என இருக்க இந்த ஹீரோ பேசறது...

சரி தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு தான் போல...
யோசிக்க மாட்டானா... அவன் காதலன் முன் அத்து மீறும் போது அவள் எந்த பயமும் பதட்டமும் இல்லாமல் தன் எதிர்காலத்தை குழியில் தள்ளும் சூழலிலும் அவள் அமைதி பத்தி சிந்திக்க வேண்டாமா இந்த மேகனட் 😂😂😂

மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் மனிதன்...😂😂

தவறிழைத்து அவள் உச்சானி கொம்பில் வீற்றிருந்தாள் அது நியாயம் எதுவும் இன்றி தெருவில் தான் வலம் வந்தாள் அது ஏன் என்று யாருமே யோசிக்க மாட்டாங்களா...

கதையில் ஒரு ஆண் ஆழுதா போதுமே வண்டி தூக்கிட்டு வந்திருவீங்க...அதுவே ஒரு பெண் எபி எபியாக அழுவா யாருக்குமே எதுவும் தோன்றாது ஆன்டி ஹீரோ சூழ் கதை உலகம் இது 😏😏😏
😂😂😂

மனதின் ஓரம் பாசமிருந்தால்
விட்டு பிடிக்கும்...

உள்ளதில் நேசமிருந்தால்
காத்து நிற்கும்....

இதயத்தில் காதலிருந்தால்
உரிமையோடு போராடும்...

காதலனோ மாற்றாள்
மணாளன் என்றால்
உயிர் இருக்கும்
உயிர் மட்டுமே இருக்கும்..


சாரலின்
தூறல் முகத்திலே
ஈரமோ மனதிலே
காதலோ பெண்ணிலே
காமமோ அவன் கண்ணிலே
துரோகமோ சதியிலே
கற்றதோ தோல்வியிலே
நின்றதோ தெருவிலே
செல்லும் பாதையோ
இணையா புள்ளியிலே
பயணமோ காரிருளிலே
அவன் கரங்களோ பழியிலே
அவள் கற்போ பலியிலே
ஆணவனின் இதழிலோ
வஞ்சத்திலே
பெண்ணின் கண்ணீர்
தடமோ கன்னத்திலே...

ஸ்ரீ மா....

இவன் என்ன பண்ண போறான் நல்லாவே தெரியுது 😂😂 இவளை Manipulate பண்ணறான் 😂😂😂தப்பு சொல்லிட்டேன்...

எப்படியோ அவளை இப்படியே குற்றவுணர்வில் வச்சே கொல்ல போறான் புரியுது இது தான் கொடுரமான எண்ணம்...

சூர்ய பிரகாஷ் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்....

அவன் இதே போல எங்கையோ நட்நதத சம்பவத்திற்கு தான் பழி வாங்கறான் நினைக்கிறேன் ஒரு கணிப்பு தான் ஸ்ரீ மா 😂😂😂
இப்படி ரொம்ப ஹோம் வொர்க் தரீங்க ஸ்ரீ மா.. குட்டி மூளை பாவம் விட்டுங்க....

அடுத்த எபிசோட் வெயிட்டிங் ஸ்ரீ மா ❤️ செம...

அடுத்த கட்ட திருப்பத்தை எதிர்பார்த்து அப்பாவி அபலை பெண் 😂😉😉
 

Chitra Balaji

Bronze Winner
Surya இன்னுமா avala love 😍 பண்றான்.... Avanodaya passport எல்லாம் mudakittu thaan France vanthu இருக்கான் போல.....அவன் ஒரு நாள் அமர் ku panninathu thaan இப்போ அமர் பண்றான்.... Vennum nu avana வெறுப்பு eththa enna எல்லாம் பண்றான்...... Tina இங்க உள்ள model ah Ennaku oru doubt ava emaathinathu naala thaan இப்படி avanuku வர model oda எல்லாம் agreement potaale pothume ethuku physical relationship nu puriyala..... Appadi ஒரு அழுகை avaluku.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super mam.... Semma semma episode
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

பெண்ணவள் பார்வையில்
உத்தம ஆண்மகன்
உன்னதமானவன்
உரிமையாய் போற்றிய
தாயுமானவன்!

ஆணவன் பார்வையில்
துரோகத்தின் திருமகள்
தராதரம் இல்லாதவள்
சுய நலமாய் ஏமாற்றிய
வைரியானவள்!

பழியின் பார்வையில்
மோகத்தின் தாகத்தில்
காதல் கண்மணியை
கைகொள்ள நினைத்தாலும்,
உரிமையின் வேகத்தில்
உணர்ச்சியின் உத்வேகம்
ஊசலாடும் அவன்....!

மனதை முறிக்கும்
மாசற்ற பாசத்தில்
காதல் கண்ணனை
மெய்கொள்ள நினைத்தாலும்,
உரிமையில்லா சோகத்தில்
உணர்ச்சியின் உத்வேகம்
ஊசலாடும் அவள்...!

கற்பில் கண்ணகியாய்!
காதலில் மாதவியாய்!
பத்தினி தெய்வமென சிலிர்ப்பவளே! - உன்
பாதை மாறிய துரோகத்தில்
பாவியாய் போன தென்னவளே!
செய்த செயலுக்கு
தந்தையை வெறுத்த நீ!
தாயைப் பழித்த நீ!
மோகத்தை அருவருத்த நீ!
செய்யும் செயலுக்கு
காரணம் கேட்டால்
உன் காதலே என்பாயோ?

ஊருக்கு உல்லாசியாய்
பேருக்கு சல்லாபியாய்
சீர் கெட்டு நிற்கும் மன்னவா...! - உன்
பாதை மாற்றிய தூரோகத்தில்
பாவியாய் போன தென்னவனே!

செய்த செயலுக்கு
தந்தையை வெறுத்த நீ...
செய்யும் செயலுக்கு
காரணம் கேட்டால்
அவன் இரத்தம் என்பாயா?

செய்த செயலுக்கு
தாயைப் போற்றிய நீ...
செய்யும் செயலுக்கு
காரணம் கேட்டால்
அவள் வருத்தம் என்பாயா?

செய்த செயலுக்கு
தங்கையை பொறுத்த நீ...
செய்யும் செயலுக்கு
காரணம் கேட்டால்
அவள் வாழ்க்கை என்பாயா?

மன்னவனே!
பிறப்பால் இழந்தது பாதி என்றால்
துரோகத்தில் இழந்தது மீதியா?
தந்தையின் துரோகத்தில்
தாயின் ரோகத்தில்
தங்கையின் ராகத்தில்
தாரத்தின் விகாரத்தில்
அரிதாரம் கலைந்த நீ...
மங்கையவள் மன்றத்தில்
மாசற்ற மன்னவனாய்
வீற்றிருக்கும் நிலை கண்டால்...
காலத்தின் ஏட்டில்
பாவத்தின் கணக்குகள்
மிக்கிருந்தாலும்,
புண்ணியக் கணக்கும்
நிகராகுமானால்....
காலம் சென்ற காலத்தில்
மடி சாய தோள் சேர
மங்கை நல்லாள் காத்திருப்பாளோ?

சொல், மன்னவனே!
பாவக் கணக்கை ஏற்றிவிட்டு
நிர்கதியாய் ஏங்கி நிற்பாயா?
இல்லை...
புண்ணியக் கடலில் முத்தெடுத்து
சதிபதியாக தாங்கி நிற்பாயா?

காலத்தின் விடைகளுக்கு
காத்திருக்கும் எண்ணங்களே!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 
Last edited:

saru

Bronze Winner
Anjali tan chinna ponnu apa triyama seidruka
Ana Ivan ellam trinjavan thane
En sariya nadathukala
Ivanoda kovatha business la katrukanum
Chrector la kaati enna use
Appanukum ivanukum enna vidyasam
Amma ku trinja uiroda irupangala
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அடுத்து என்ன நடக்க போகிறதோ என அனுதினமும் எதிர்பார்க்க வைக்கும் விறுவிறுப்பான பதிவுகள்...

ஸ்ரீ மேம் உங்களை எப்போதுமே எனக்கு பாராட்டத் தான் தோன்றுகிறது...

எதிர்பாராத அஞ்சலியின் துரோகத்தை கண்டு அமர் கண்ணீர் விட்டதோடு முன் கதையை அப்படியே முடிவுக்கு கொண்டு வந்து அடுத்த அவள் பழைய வாழ்க்கைக்கு வந்தது எப்படி? சூர்யாவின் சூழ்ச்சியை கண்டு கொண்டது எப்படி? அமருக்கு தான் துரோகம் செய்து விட்டோம் என்று உணர்ந்தது எப்போது? இதை அத்தனையும் சஸ்பென்ஸாக எங்கள் மூளையை குடைய விட்டு விட்டீர்களே... முன் பதிவிற்கே நினைத்தேன் என்ன இவ்வளவு சீக்கிரம் மேம் flash back போட்டு விட்டார்கள் என்று... ஹா! ஹா! அருமை ஸ்ரீ மேம்... நீங்க நீங்க தான்!!

அஞ்சலி தன்னை மூன்று வருடமாக பார்த்து பார்த்து ஆளாக்கிய அமரை அதாவது தாய் தன் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு ஆனந்தப்பட்டு ரசித்தது போல் அஞ்சலியை உருவாக்கிய அமரை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடியுமோ? இதனால் அவன் இழந்த இழப்பீடிற்கு தான் ஷர்மி இவன் வாழ்க்கையின் உள் நுழைகிறாளோ? அவளாவது சரியாக இருந்திருந்தால் பெண்களை நம்பி இருப்பான் அவளும் பெயருக்கு கணவனாய் இவனை நினைக்க ஒட்டு மொத்த பெண்களையே நம்பாதவன் ஆனான் அமர்...

ஆனாலும் கெட்டவனாக இருந்து இருந்தால் கேர் டேக்கர் வேலைக்கு வைத்த உடனேயே அவளே முரண்டு பிடித்தாலும் அவளை எடுத்து கொள்ள அவனை தடுத்தது எது? வெளியே டீனா என்றவளுடன் உல்லாசமாக இருந்து விட்டு போதையுடன் வந்தவன் இவள் பார்வையை மட்டும் புரிந்து கொள்கிறானே எப்படி? சூர்யாவை பழி வாங்க இப்படி செய்கிறானா? இல்லை அந்த நடுத்தர ஒட்டி குடித்தனத்தில் ஓடாய் தேயும் அஞ்சலியை தன் அருகிலேயே வைத்து கொள்ள நினைத்தானா?

இப்படி மனதை அரிக்கும் பல கேள்விகளுக்கு தாங்கள் மட்டுமே தீர்வு என்று இதுவே என் சாசனமாக தங்களிடம் ஒப்படைத்து பதிலை எதிர் நோக்கி வழி மேல் விழி வைத்து...

விறுவிறுப்பான பதிவு ஸ்ரீ மேம்...

வாழ்த்துக்கள்...
 
Top