All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

புதிய உலகில்
கால் பதித்த இளசுகள்
புரியாத உலகில்
கால் பதித்த கொடுமைகள்!

மெல்ல மெல்ல
ஆசை ஆசையாய்
வளர்த்த கெடா
மாரில் பாய்ந்து விட்ட கோபம்!
இதில்....
புல்லுருவியானது யார்?
அவன் பகையோ...?
அவன் உறவோ...?
காலத்தின் கையில்
நியாத்தின் தராசு!

பகை முடிக்க
படை எடுக்க...
பலம் சேர்த்த மன்னன்!
ஒற்றறியத் தவறியது
யார் குற்றம்?

பெற்றவனே பகையாய் இருக்க
மற்றவரை என்ன சொல்ல?

நம்பிக்கை பொய்த்தாலும்
துரோகத்தில் துடித்தாலும்
பட வேண்டிய காலம்
பட்டுத்தான் ஆகவேண்டுமோ...?

மன்னவனே! உன் வாழ்வின் வெற்றிக்கு
தோல்விகளே படிக்கட்டோ...?

பதின்பருவக் காதலில்
பலியான பேதையே...!
உன் பார்வையின் தேடலில்
கன்னிப்பருவத்தின் கனவுகள்!
உன் நேர்மையின் தேடலில்
கன்னிப்பருவத்தின் நனவுகள்!
கனவும் நனவும் கானலாய் போகும்
கலிகாலக் கோலங்கள்!

துரோகம் என்று புரியாமல்
நம்பிக்கை துரோகம் செய்து விட்டாய்!
துரத்தும் துரோகத்தில்
தூர்த்துப் போகுமோ தாகங்களே!

ரோகம் என்று அறியாமல்
நம்பிக்கை ராகம் இசைத்து விட்டாய்!
மிரட்டும் ரோகத்தில்
நீர்த்துப் போகுமோ மோகங்களே!

கண்ணாடி மாளிகையில்
கண்மூடி நுழைந்து விட்டாய்!
மின்னும் அழகிலே...
மெய் அன்பைத் துறந்துவிட்டாய்!

'மின்னுவதெல்லாம் பொன்னல்ல'
பழமொழி என்றாலும் முதுமொழி அன்றோ...!

பொன்னைப் பெருக்க
பெண்ணைத் தேடினான்...
அன்பை மறைத்து
ஆசானாய் ஓடினான்...!
பண்பை விதைத்து
பசுமரம் ஆக்கினான்...!
பூத்தமரம் காய்க்காமல்
தடம் மாறத் தவிக்கிறான்!
அன்பின் உயிர் வலியில்
அனலாய் காய்கிறான்!

ஏற்றிய ஏணியை
எடுத்தெறிந்த ஏந்திழையே!
உன் கனவுகள் கண் மறைக்க...
மோகத்தின் பிடியில்
மோகனமாய் நின்றாலும்
தாகத்தின் பிடியில்
தாரகையாய் ஒளிந்தாலும்
ஆழ்மனத் தேடலுக்கு
அர்த்தம் புரியா வயதில்
பொன்மானைப் பிடிக்க
கொண்டவனைத் தொலைத்தாயோ!





வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

JoRam

Active member
அமரின் நிலையை எண்ணி கரைவதா இல்லை இந்த நயவஞ்சக உலகில் இருக்கும் வஞ்சத்தையும் விஷத்தையும் அறியாமல் புரியாமல் வீழ்ந்த இந்த மாதுவை நினைத்து கவலை கொள்ளுவதா என்று புரியவில்லை ?
 

JoRam

Active member
அமரஞ்சலி...

வார்த்தை தரும் நம்பிக்கை சில நேரம் செயல் தருவதில்லை...

தாயின் மடியில் இருந்து கொண்டே அழும் பிள்ளை"அம்மா தானே தங்கம் சொன்னேன்"என்ற இந்த வார்த்தை தரும் ஆறுதல் சில நேரம் அவள் கையின் வெப்பத்தின் அருகாமை உணராது ....
அது தான் இந்த வயது தான் 15 to20 ...

நம் வாழ்வில் பயணமாகும் இந்த காலக்கட்டத்தில் பல மனிதர்களை புரட்டி போடும் இதோ இவளையும் புரட்டி போட்டு விட்டது...

எது செய்வதாக இருந்தாலும் அதன் நன்மைகள் பற்றி சொல்லி இருக்க வேண்டாமா... தன் சுயநலம் காரணமாக செய்யும் எந்த செயலும் மற்றவரும் சுயநலமாக திசை திருப்பி பயன் பெறுவர்.,

அவள் ஒரு கம்பெனி மாடல் என அங்கரிக்கும் போது அதற்கான தொழில் முறையை செய்து இருக்க வேண்டும் இல்லையேல் தன் போட்டி கம்பெனி பற்றிய விழிப்புணர்வு தந்து எச்சரிக்கை செய்ய வேண்டும் இதையெல்லாம் விட்டு மின் விளக்குகள் பார்த்து செல்லும் விட்டில் பூச்சி பருவத்தில் இருக்கும் அவளை கடிந்தோ பழி வாங்கியோ என்ன செய்ய...

என்னமோ ஆகட்டும் அவன் பொருட்களின் சில வேதியியல் மாற்றமே அவள் உடலை பதம் பார்க்க, அவன் தொழில் எதிரியின் சூழ்ச்சியோ அவள் வாழ்க்கையை பதம் பார்த்து விட்டது...

அவளின் இந்த நிலையில் வந்து நிறுத்த காரணமாக இருப்பது இந்த அமரேந்தர் தான் நன்றாக தெரியுது...

கனவுகள் நடக்கவில்லை என்றால் அடுத்த கனவு என மனம் பயணித்து போய் வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்...

21வயதில் அவள் இந்த பக்குவம் வருவாள் என்றால் கண்டிப்பாக மாற்றி அமைந்திருக்கும்.. இந்த பணம் படைத்தவரின் விளையாட்டில் ஒரு பொருளாக அவளை ஆட்டி படைத்திருக்க மாட்டாங்க...

இனி இவன் தங்கை என்ன பண்ணினாளோ... அவள் பங்கிற்கு தெரியவில்லை...

மனமோ துள்ளி
வரும் வெள்ளமாய்
திசை திருப்பும்
அவளவன் மனமோ
வஞ்சமென துடிக்க
பாவையோ பலியாகி
தன் நிலை தாழ
தனித்து நிற்க
காதலென அவள்
பாய்ந்து வர
பழியென மதகாய்
ஆண் நிற்க
விழியிலோ கார்
சூழ இடியென
முகம் சிவக்க
மனமோ புயலென
புரட்ட இதோ மீண்டும்
ஒரு சுனாமி
அவள் வாழ்க்கையை
தூக்கி அடிக்க
செயலற்று தான்
போனாள் பணம்
படைத்தவனின் சதுரங்க
ஆட்டத்தில் பலியான
ராணியாய்...

ஸ்ரீ மா...

இந்த அண்ணண் தங்கை வாழ்க்கையில் வந்த இந்த அஞ்சலி பாவம் தான்...

சூ.பி மற்றும் அமர் தங்கைக்கும் உள்ள கனெக்சன் என்ன எப்படி என பல விதமாக மனதை குடைய...
அப்போது ஒரு கேள்வி....

நல்லா தெரியும் சூ.பி அவளை ஏமாத்தறான் என்று... அப்பறம் அவன் பின்னாடி சுத்தம் தங்கையை தலைவர் எப்போ பழி வாங்குவார் என்ற கேள்வியோடு...

உங்க பழி வாங்கும் இலக்கணம் கொஞ்சம் செப்பிட்டு போங்க ஹீரோ சார் 😂😂😂


அடுத்த கட்ட திருப்பத்தை எதிர்பார்த்து இருக்கும் வாசகி 😂😂
எப்படியும் ஹீரோ ஆர்மீ சார்பா அருமையாக வேலை போய்ட்டு இருக்கு...
வாழ்த்துக்கள் ஸ்ரீ மா 😂😂😂😂
ஆனால் இனி வரும் காலங்களில் அவன் பண்ண போகும் வேலைக்கு அவனுக்கு என்ன செய்ய போறீங்க என ஒரு ஹிண்டு எங்கையாவது தந்து ஹைலைட் பண்ணி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 😂😂😂...
ஆனாலும் இப்பவும் அவன் தான் ஸ்ரீ மா தவறு...

சின்ன குழந்தை நம்பி அதன் மேல் மிகப்பெரிய பொறுப்பு வைத்தது தப்பு.. இல்லை என்றால் அவளுக்கான பொறுப்பு என்ன புரிய வைத்திருக்க வேண்டும்... கண்டிப்பாக அதற்கான முயற்சி பண்ணி இருப்பா...

ஆண் என்ற ஆணவம்... நாம தானே எல்லாம் செய்யறோம் நம்மை மீறி எங்கே போவா என்ற திமிர் 😂😂😂 அப்படி தானே 😂 இந்த போஸ்ட் போட்டு நான் ஓடிட்டேன்
🏃🏃🏃🏃🏃🏃

அப்படியில்லாம் சொல்ல படாது, இந்த பொண்ணு நல்ல லட்டு, குலஃபீ எல்லாம் சாப்பிட தெரியுது, அமர்க்கு சொல்லணுமுன்னு தெரிய வேண்டாம் ??

இப்படிக்கு,
அமருக்கு, அமருக்காக பொங்கும் ஆர்மி.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அஞ்சலி அமருக்கு துரோகம் செய்து விட்டோம் என்று அறியாமலேயே செய்த துரோகத்திற்கான பதிவு... விறுவிறுப்பான பதிவு...

அஞ்சலி பதினெண் வயதில் இருக்கும் துடிதுடிப்பான குறும்புத்தனம் உள்ள பெண்... அமர் மூன்று வருடமாக பார்த்து பார்த்து உருவாக்கியவளை ஆறே மாதத்தில் சூர்யபிரகாஷ் அவளை காதலிப்பது போல் நடித்து மாடலிங் ஒப்பந்த பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி அருமையான திட்டம் போட்டு காய் நகர்த்தி விட்டான்...

என்னத்தான் அவள் சிறு பெண் என்றாலும் அவளுக்கு முதலிலேயே புரிய வைத்து இருக்க வேண்டும்.. அதுவும் இல்லை யெனில் அவளுக்கு உடம்பில் கொப்பளம் வந்து சிகிச்சைக்கு போனதை புகைப்படம் எடுத்து பிரசுரம் செய்தார்களே அப்போதாவது அஞ்சலியை தன் கண் காணிப்பில் வைத்து இருக்க வேண்டும்.. இதை கண்டு தானே சூர்யா அவளை கண்காணித்து வீழ்த்தினான்... பாதுகாப்பு பலப்படுத்திய ஆட்களுக்கு அவள் யாரை சந்திக்கிறாள் எங்கே போகிறாள் என்று தெரியாமல் போய் விட்டதா? போங்க ஸ்ரீ மேம்.. அமரை அழ வைத்து விட்டீர்களே...

அதுவும் அஞ்சலி மிஸ்.மும்பை ஆகி விடுவாள் என்று அதற்கு முன்பே அவள் பெயரிலேயே product எல்லாம் readyஆக வைத்துள்ளான்... பாவம்..

அஞ்சலியின் குறுப்புத்தனத்தையும் அவளின் அழகையும் தாயாக படிப்படியாக கண்டு ரசித்த அமர் இனி அவள் துரோகத்தை கண்டு வீறு கொண்டு எழுவான்?

அஞ்சலிக்கு சூர்யாவின் துரோகம் எப்போது தெரியும் அமரின் தங்கையுடன் சுற்றும் போதா? இல்லை பல பெண்களுடன்?

அருமையான விறுவிறுப்பான பதிவு...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்..
 

Banumathi Balachandran

Well-known member
அஞ்சலியின் குழந்தை தனத்தை தனக்கு சாதகமாக சூர்யா பயன் படுத்தி கொண்டான். இதில் அமரேந்தர் தான் பாவம் சூர்யா செய்த சூழ்ச்சிக்கு பலியாகப்போவது அஞ்சலி
 
Top