செம செம அருமையான விவாதம். தலை வணங்குகிறேன் தோழி... எப்புடியா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.
சரி விஷயத்துக்கு வாறன். ஒரு மூன்றாம் மனுஷியா.. ஆண் பெண் என்கிற ஒரு பகுப்பை மீறி தள்ளி நின்று பார்க்கிறேன். மிருதா என்கிற ஒரு உயிரினத்துக்கு பாதிப்பு மிக கனமானதே. அவள் பாதிப்பு உடல் அளவு மட்டுமல்ல, மனரீதியாகவும் பாதிப்படைந்தவளே... அவளுக்கு நிகழ்ந்தது மன்னிக்க முடியாத குற்றமே.
அதையே அபயனின் இடத்திற்கு வருகிறேன். மனம் விரும்பிய ஒருத்தியை பலவந்தப்படுத்த முடியுமா? எப்படி அவனால் மட்டும் முடிந்தது... அப்படியானால் அவனுடைய காதல் பொய்யானதா? இத்தனை காதல் கொண்டவனால் காதலியை வதைக்க முடிகிறது என்றால், எந்தளவு ரீதியான மன அழுத்தத்தை அவன் சந்தித்திருக்க வேண்டும். அதற்க்கு தன்னை தயார் படுத்த எத்தனை வலிகளை சந்தித்திருக்க வேண்டும். அவன் ஒன்றும் காமம் உச்சத்துக்கேறி, அவள் வளைவு சுளிவுகளை அறிய சீரழித்தானா? இல்லையே.. (வருகிற அதிகாரங்கள் அவனுடைய நிலையை ஓரளவு விளக்கும் என்று நம்புகிறேன்) அதையும் மீறி தன்னவளை வேதனை படுத்த அவன் எத்தனை வழிகளை சந்தித்திருக்க வேண்டும்.
விஸ்வநாதனை தண்டிக்கும் அதிகாரம் காந்திமதிக்கு இருக்கிறது, அவரை விட அவனுக்கு அதிகம் இருக்கிறது. நேரடியாக பாதிக்கப்பட்டவன் அவன். உடலால் அல்ல உணர்வால் படு பயங்கரமாக பாதிக்க பட்டவன். அவனுக்கு அந்த அதிகாரம் இல்லாமல் வேறு யாருக்கு இருக்கிறது. காந்திமதி யாரோ அல்ல. அவன் சகோதரி. தாய் இல்லாத இடத்தில அன்னையாக மாறிப்போனவள். அவளை ஒருவன் சீரழித்துவிட்டு அம்போ என்று விட்டுவிட்டு போனால், அவனை சும்மா விட அவன் என்ன லுச்சாவா... பாட்சாடா சே... அபயண்டா
அவன் தண்டனை அடைந்தது குற்ற உணர்ச்சியால்... ஆம் குற்ற உணர்ச்சிதான். எப்போது ஒரு மனிதன் தன தவறை உணர்கிறானோ, அப்போது அவனை குற்ற உணர்ச்சி ஆட்கொள்ளும். தன காதலிக்கு செய்தது குற்றம் என்பது அவனுக்கு தெரியும். தான் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு இல்லை என்றும் தெரியும். எந்தளவுக்கு வலியை அவள் பட்டாளோ அதே வலியை அவன் அடைய நினைத்தது குற்ற உணர்ச்சி மட்டுமல்ல, அவள் மீது கொண்ட காதல், தன்மீது கொண்ட கோபம். தனக்கு தானே தண்டனை கொடுப்பது ஒன்றும் அத்தனை சுலபமில்லை கண்ணு.
யாரை பார்க்கக்கூடாது என்று எண்ணினானோ, யாரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கினானோ இப்படித்தான் போட்டிருந்தேன். அவனுடைய ஆள் மனசு அவளை பார்க்கத்தான் துடித்துக்கொண்டிருந்தது. அவன் எதற்க்காக அவளை பார்க்கவில்லை? கொஞ்சம் கற்பனை குதிரையை தட்டி விடுங்க... இவன் போய் "மிளிர் பேபி என்ன மன்னிச்சுரு.. ஏத்துக்கோ" என்றதும், வந்துவிட்டீர்களா பிராணநாதா... வாருங்கள் வந்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று அணைக்கவா போகிறாள். காறி துப்பி அனுப்பிவிட மாட்டாள். எப்படியும் தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். எது எப்படியாக இருந்தாலும், அவளுக்கு நல்ல வாழ்வு கிடைத்தால், அவள் வாழட்டும் என்று நினைத்தானோ. அதில் தவறில்லையே.
சரி இம்புட்டு யோசிச்சவன் எதுக்காக அவளை ராஜாவோட கண்டதும் பொறாமைல வெந்து போகணும். எஸ் கண்முன்னே மனம் விரும்பியவன் இருக்கிறாள். அவளை நினைத்தே வேறு பெண்ணை தொடாது காலத்தை ஓட்டுகிறான். கண்முன்னே இன்னொருத்தனுடன் நின்றால், பொறாமை வரவில்லை என்றால், அவனிடம் எதோ குறை இருக்கிறது என்று பொருள். நாம் மனிதர்கள். தெய்வங்கள் இல்லையே.
மிளிர்க்குருத்தை தப்பான முடிவு எடுத்திருந்தால் அந்த விவாதமே இங்கே தேவை இல்லை. தன தந்தையின் சொத்தை விற்றுவிட்டு, வெறும் கல்விச்சான்றுதல்களுடன் வெளியே வந்தவள், தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல... சரி உண்மையான வாழ்வில் அப்படி அவள் தற்கொலை பண்ணினாள், அவள் இருப்பதை விட இறப்பதே மேல். ஏன் என்றால், இந்த உலகில் எதிர்நீச்சல் போடத்தெரியாதவள் தற்கொலைக்கு முயன்றால், அவள் இந்த உலகுக்கு பார்மதானே. தவிர அவள் இறந்தால் என்று கேட்டால் அபயனும் தன உயிரை மாய்த்துக்கொள்வான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
அது அவனுடைய ஆணவம் என்று நீங்கள் பார்க்கிறீர்கள். அது தன்மானம் என்று நான் பார்க்கிறேன். சுயம்பாய் தன்னை செதுக்கி கொண்டவன். யாருடைய உதவியும் இன்றி விருட்சமாய் வளர்ந்தவன். ஒரு மரத்துக்காவது வேர் தாயாக இருக்கும். இவனுக்கு வேரும் அவன்தான் கிளையும் அவதான் என்கிற போது, அவன் தன சாம்ராஜ்யத்துக்கு அரசனானத்தில் தவறில்லையே.
இப்போது எனக்கு தான் குலா ஏதாச்சும் வேணும் போலயே.. தம்பி குலா ஏதாச்சும் கொண்டுவாப்பா.. ரொம்ப தாகமா இருக்கு.
டே அபயா நீ கெத்துதாண்டா.. நா இருக்கேண்டா உன் பக்கம்.