@Meenalochini
அபயன் நல்லவன்...மிக நல்லவன்...அவனின் அக்காவிற்கு...
கெட்டவன் ...நீதிபதி...விக்னேஷுவரனிற்கு...
ஆனால் நீதியின் முன்பு அவன்.....குற்றவாளி....
மூன்று வருடங்களாக
மிளிர்ம்ருதைக்கு அவன் இழைத்தது ...திட்டமிட்ட குற்றம்..அவன் மொழியில் தண்டனை...அதுவும் தகப்பனின குற்றத்திற்கு...மகளிற்கும் தண்டனை...தகப்பனின் உயிர்...சொத்து அனைத்தையும் தொலைத்து தலைமுழுக முடிந்த அவளிற்கு....இழந்த கன்னிமையும்..வலிக்க சொல்லிக் கொடுக்கப்பட்ட...தாம்ப்த்திய பாடங்களும்...நடுங்கும் மனமும்...பதறும் உடலும்..வாழ்முழுவதும்...அனுபவிக்க வேண்டிய தண்டனை..பாவம் செய்தவன் பரலோகத்தில்....அவன் இன்றும் இருந்து மகள் துடிப்பதை கண்டிருந்தால்..மகளின் உதாசீனம் தாங்கிவாழ்ந்திருந்தால்..விதுலனிடன் கூனிக்குறுகுவதாக...காந்திமதி காலில் விழுந்து கதறியிருந்தால்... கூட சற்று...மனம் ஆறியிருக்குமோ....
இவள்...அனுபவித்து அனுபவிப்பது..எல்லாம் கொடுமையாகி போனது..
காந்திமதிக்காவது அபயன் இருந்தான்..
அவளுக்கு யார் இருந்தார்கள்....அவளின் நிலை பற்றி...கொஞ்சமும் அக்கறை படவில்லை..
என்னைத் தண்டிக்கும் வலிமை... கேள்வி கேட்கும் உரிமை...யாருக்கும் இல்லை என்பவன்..இப்போது தான் மிருதாக்கு மட்டும் உண்டு என்கிறான்..
அவளின் உடலினுள் திராவகத்தை ஊற்றிவிட்டு..இவன் உடலை தீப்படுக்கையில் போடடு இருககிறான்..
அவளை ...அவள் தந்தை சொன்ன வார்த்தைகள் சொல்லி...அவமானம் செயதான்..விவாகரத்து கையெழுத்து வாங்கினான்...
ரிஜெஸ்டர் பண்ணலை எனறாலும் கேட்டது கேட்டது தானே..
மூன்று நெடிய வருடங்களுக்கு பிறகு பார்த்ததும் ..மனைவி மக்கள் எனறு துடிப்பு வருகிறது. ..
இந்த துடிப்பு...அ தந்தை இறந்தது அறிந்ததும் ஏன் வரவில்லை..
எனன ஆணவமான பேச்சு அந்நேரம்...அவையெல்லாம் அவனின் தவறுகள்..
அவன் இடம் வாங்கும் போது அவள் எங்கே என்று தெரியாது...குடில் கட்டும் போதும் அவளுக்கு அது உதவுமான்னு தெரியாது...பிள்ளை பிறந்தது தெரியாது...
இவர் மட்டும் அவ உயிரோட இருக்காளா ன்னு கூட பார்க்க மாட்டாராம்...அவ மட்டும் குழந்தை உண்டானதும் ஓடி வந்து காலில் விழுந்து...குழந்தைக்காகவாவது என்னை கவனி..ஏத்துக்கோ னு கேட்கனுமா ...ஓ...தன்மானம்...இவரின் தனிப்பெரும் சொத்து போலும்...
அபயன்...செய்த தவறுகள்
1 விக்னேஸ்வரனுக்கு தண்டனை வழங்க மிளிரை வதைத்தது...இப்போ இவன் மிளிர் கு செய்ததை...இவன் குழந்தைக்கு..யாராவது செய்யனுமா..
2விக்னேஸ்வரன் இறந்த பின்பு மிளிர் பற்றி எந்த தகவலும் அறிய எண்ணாமல் இருந்தது..
அதற்கான தண்டனைகள் தான்..இப்போ அனுபவிக்கிறான்..(அதே தண்டனை
மிளிர்க்கும் தொடர்கிறது..னு நாம மறக்க கூடாது..)
3அவனின் அகங்காரம்...தப்பு செய்தவன் தலைதூக்கி நிற்க கூடாது...நீதிபதியாக மாற முயன்று..குற்றம் செய்தவன்..இவ்வளவு ஆணவம் ஆகாது..
4 குடும்பம் மனைவியை அன்பால்..ஆளுவதை விடுத்து அதிகாரத்தை காட்டுவது நல்ல தாம்பத்தியத்திற்கு வழிகாட்டாது...அது பற்றி அடிப்படை கூட அவன் அறிந்தது போல தெரியலை..
இப்போதான் கிரீடத்தை கழட்டிருக்கான்..
தன் தவறை உணருறான்..வருந்துறான்..கண்ணீர் சிந்துறான்..மன்னிப்பு கேட்க ஆரம்பிச்சுருக்கான்(விவரம் தான்..அம்மணி மயக்கத்தில் இருக்கும் போது கேட்கிறான்)..காதல் பாசம் கிடைக்காதான்னு ஏங்குறான்...
வரட்டும்...மிளிரின் நிலை..மனம்..மாறட்டும்..அது அவனின் நடவடிக்கைகளில் தான் இருக்கு..
மீனம்மா....
அவன் நல்லவன் தான்...அந்த ஒரு நாள் தவிர..கடந்த மூன்று வருடங்களாக கண்டுகொள்ளாமல் இருந்தது தவிர..
( அவளின் நன்மைக்காம்..யாரையாவது கல்யாணம் பண்ணிருப்பான் னு நினைச்சானாம்..இப்போ என்னைத் தவிர யாரையும் அவ கணவனா ஏத்துக்க மாட்டானு தெளிவா...நம்மை..ராஜா வை மிரட்டுவானாம்)
காந்திமதி நிலை எண்ணி கண்ணால் கண்டவன் மிளிரினை பற்றி விக்னேஸ்வரன் இறப்புக்கு அப்புறம் அவளும் தன் தமக்கை போல தான் இருப்பான்னு நினைத்திருந்தால்..... நினைத்திருந்தால்...அவன் நல்லவன் தான்..
மன்னிப்பு..கேட்கனும்..அவன் சொன்னது போல..மிளிரை உயிரா தாங்கட்டும்..அவ உடல் மனம் பட்ட வேதனைகளை மறக்கும் அளவு அன்பால் காதலால் குளிப்பாட்டி..அவளின் மனதை அடையட்டும்..
நயனிம்மா செய்வாங்க
❤❤❤❤
அவனை
செய்ய வைப்பாங்க...
இந்த நிலை அடைய...காத்திருக்கிறேன்...