All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் “உயிரோடு கலந்தவள்!” - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 47 [ B ]



காலை....



உதட்டில் உறைந்த சிரிப்புடன் உறங்கும் தன் மனையாளை ஆசையாய் வருடியது ரிஷியின் பார்வை....



தன்னையும் எழ விடாது செய்து கொண்டிருந்தவளின் குறும்பில் பளீரென சிரித்தவன் தன்னை சுற்றியிருக்கும் அவள் கைகளை மெதுவாக எடுக்க விழித்துக் கொண்டாள் பாவை.



அவன் நெஞ்சில் தலைசாய்த்து படுத்திருந்தவள் அவனை அண்ணார்ந்து பார்த்து



"ப்ச்....உங்களால கொஞ்ச நேரம் இருக்க முடியாதா என்கூட....வேல வேல வேல.... அதயே கல்யாணம் பண்ணிகிட்டு இருந்திருக்க வேண்டியது தானே?" எனவும் சிரித்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை தன்னோடு இன்னும் அணைத்துக் கொண்டு



"இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு கண்ணம்மா...ப்ளீஸ்டா... சீக்கிரம் வந்துடுவேன்...." என்றான் காதலாய்....



"முடியாது முடியாது...." சிறு பிள்ளை போல் சிணுங்கியவளை பார்க்கப் பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு....



"இட்ஸ் ஓகே....அத என் செல்ல பொண்டாட்டிக்காக கேன்ஸல் பண்ணிட்றேன்.... இப்போ ஓகேவா?" அவள் மூக்கை பிடித்து ஆட்ட



"லவ் யூ மாமா...." என்றவாறே அவன் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டாள்.



தூக்கத்திலிருந்து திடுமென விழித்தவளுக்கு அது கனவென்று உணர்ந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது.



இன்னும் அவன் தந்த முத்தத்தின் ஈரம் இருப்பது போலவே இருக்க தன் நெற்றியை தொட்டுப் பார்த்துக் கொண்டவளுக்கு அப்போதுதான் அது கனவென்பது உறுதியானது.



கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவள் கண்களை மூடிக் கொண்டு பின்னால் சாய கரகரவென்று வழியத் துவங்கியது கண்ணீர்....



எந்தப் பெண்ணுக்குமே தன்னுடைய நிலைபோல் ஒரு போதும் வந்து விடக்கூடாது என மானசீகமாய் வேண்டுதலை வைத்தவள் முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.



அவளும் எத்தனை நாள்தான் எனக்கு எந்த பாதிப்புமே இல்லை என்பது போல் நடிப்பது....



நேற்று அவனை பார்த்ததிலிருந்தே அழுகையாக வந்தாலும் முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவளால் இன்றைய கனவின் தாக்கத்தில் அழாமல் இருக்க முடியவில்லை....



'என்னால முடில தேவ்....சத்தியமா செத்துடனும் போல இருக்கு.... ஏன் தேவ் பொய்யாகிப் போனீங்க....

என்னால அந்த ஏமாற்றத்த தாங்கிக்கவே முடிலயே... நானும் எத்தன நாளைக்கு தான் வெளில நடிக்கிறது.... உங்க மேல கோபம் வெறுப்பு இருக்கு.... பட் அதயும் தாண்டி.... அதயும் தாண்டி.... நா.... நா..... உங்கள உயிருக்குயிரா லவ் பண்றேன் தேவ்.... எனக்கு நீங்க வேணும்....ஆ...ஆனா என்னால ஏத்துக்க முடிலயே..நா என்ன பண்ணட்டும்....' தன்னவனிடமே விடை தேடி ஊமையாய் அரற்றியது அவள் உள்ளம்!!!





வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....



"அம்மு....பேசமாட்டியா... ப்ளீஸ் அம்மு.... சாரிடி....வீட்டுக்கு வா ப்ளீஸ்?"



"...."



"ஏன்டி இப்பிடி இருக்க.... புரிஞ்சிக்கோடி....

இப்போதைக்கு சொல்லலன்னாலும் சத்தியமா ஒரு நாள் சொல்லிருவேன் அம்மு...."



"நீ சொல்லும் வர நான் அந்த வீட்டுக்கு வர மாட்டேன்"

பிடிவாதமாய் மறுத்தாள்.



"அம்மு...உனக்கு என் மேல நம்பிக்க இல்லயா?"



"இருக்கு"



"தேங்க்ஸ்டி"



"அதுக்காக நீ சொல்லாம இருக்க முடியாது"



"இப்போ என்ன உனக்கு தெரியனும் அவ்வளவுதானே?"



"ஆமா...."என்றாள் கண்கள் மின்ன...



"அப்போ எனக்கு சத்தியம் பண்ணி கொடு"



"எதுக்கு?"



"அத அப்பறமா சொல்றேன் நீ சத்தியம் பண்ணு"



"அதெல்லாம் முடியாது....நீ முதல்ல விஷயத்த சொல்லு அப்பறமா பண்றேன்" என்றாள் தெளிவாக....



'இவள பத்தி தெரிஞ்சும் கேக்குறியேடா' காறித் துப்பியது மனசாட்சி....



"என் மேல நம்பிக்க இருந்தா சத்தியம் பண்ணி கொடு" கிடுக்கிப்பிடி போட்டான் அவன்...



அவனையே பார்த்திருந்தவள் சட்டென அவன் கைமீது தன் கையை வைத்து விட அவனுக்குத்தான் அவன் மீதான அவள் நம்பிக்கையில் புல்லரித்துப் போனது.



"இன்னும் ஒன் கண்டிஷன்"



"கண்டிஷனா... சரி சொல்லு"



"இன்னக்கு நீ நம்ம வீட்டுக்கு வரனும்... அதுவும் உன் அக்கா கூட...

இன்னக்கி நீ வீட்டுக்கு வா....நானே உன்கிட்ட எல்லாதயும் சொல்லிட்றேன்"



"ஓகேடா....பட் அஷ்வி...."



"அது எனக்கு தெரியாது.. கண்டிஷன்ஸுக்கு ஓகேனா எனக்கும் ஓகே"



"சரி...." என்றவள் எழுந்து செல்ல அவனுக்குத் தான் இங்கே பயத்தில் காய்ச்சல் வரும்போல் இருந்தது.





இராமநாதபுரம்.....



"மா யோசிச்சுதான் பேசுறியா?"தன் தாயியிடம் கத்திக் கொண்டிருந்தான் வருண்.



"நல்ல வரன் வந்திருக்குடா.... இப்போவே தேவயில்லன்னு சொல்றாங்க"



"புரிஞ்சுதான் பேசுறியா நீ....ரிக்ஷி இப்பிடி இருக்கும் போது என்னால இந்தக் கல்யாணமெல்லாம் பண்ணிக்க முடியாதுமா...."

அவன் முடிவாய் மறுத்துவிட அப்போதுதான் கீழே இறங்கி வந்த அவனது தங்கை இதை கேட்டு கோபமாய் வந்தவள்



"விஜி...இங்க எனக்காக யாரும் அவங்களோட வாழ்க்கய தியாகம் பண்ண வேண்டிய அவஷியம் இல்ல... கல்யாணம் பண்ணிக்கிறதுல நான் தான் தடயா இருக்குறேன்னா நா எங்கயாவது போயிட்றேன்....அவங்கள சந்தோஷமா இருக்க சொல்லுங்க" என வெடித்தாள்.



அதில் வருண் அமைதியாய் அவளைப் பார்த்திருக்க விஜயலக்ஷ்மி



"என்ன பேச்சு பேசுற அஷ்வா... அவன் அந்த அர்தத்துல சொல்லல.... உன் வாழ்க்கைகாக தானே பாக்குறான்" என்றார் ஆதங்கமாக....



"அதயேதான் நானும் சொல்றேன்....

எனக்காக யாரும் தியாகம் பண்ண வேண்டிய அவஷியம் இல்ல"



"ரிக்ஷி...."அஜய் இடையிட்டான் கோபமாக...



"...."



"அவன் உன் அண்ணன்....இப்பிடி பேசுறத முதல்ல நிறுத்து"



"முடியாது....நா அப்பிடிதான் பேசுவேன்....கொலகாரனுக்கு சப்போர்ட் பண்ணி அவனுக்கு ப்ரண்டா இருக்குறவனுக்கு எல்லாம் என்னால மரியாத குடுக்க முடியாது" அவள் முடிக்கும் முன் இடியென வந்திறங்கியது அஜய்யின் அறை....



அனைவரும் அதிர்ச்சியாய் நோக்க



"எங்க இருந்து வந்துது இந்த பழக்கம்....ஒழுங்கா இரு... இல்லன்னா நடக்குறது வேற"அவன் கோபமாய் எச்சரிக்க



"இல்லன்னா என்னடா பண்ணுவ?" அவளும் வார்த்தையை விடவும் அவனுக்கு கோபம் இன்னும் அதிகமாயிற்று....



"டாவா....இனியொரு தடவ மரியாத இல்லாம வார்த்த வந்துச்சு தொலச்சிறுவேன் ஜாக்கிரதை" விரல் நீட்டியவனை பின்னால் இழுத்து விட்டு அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்தான் வருண்.



"நீ உள்ள போ அஷ்வினி..."



"நீங்க சொல்லி நா பண்ணனுமா?"

அதற்கும் எரிச்சல் பட்டவளை அமைதியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



ஆனால் விஜயலக்ஷ்மி தான் பொங்கி விட்டார்.



அவளை தன் புறம் திருப்பி அடிக்க கை ஓங்க அதனைத் தடுத்துப் பிடித்த வருண்



"உள்ள போ அஷ்வினி" என்றான் அழுத்தமாக....



அவன் குரலில் என்ன கண்டாளோ எதுவும் பேசாமல் அமைதியாய் மேலேறிச் செல்ல அவள் போகும் வரை பார்த்திருந்து விட்டு



"அஜய் நீயும் போ..."என்க



"இல்லடா நா" பேச வந்தவனை தடுத்து



"போன்னு சொல்றேன்ல" அவன் கோபப்பட்டதை நம்ப முடியாமல் பார்த்தவன் அடுத்த நொடி சென்றிருந்தான்.



வருணுக்கு கோபமே வராது.... ஆனால் அஜய் அவனுக்கு நேர் எதிர்....



அதனால் தான் இன்று அவன் கோபப்பட்டதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது அஜய்க்கு....



அடுத்ததாக பேசப் போன விஜயலக்ஷ்மியையும் தடுத்தவன்



"மா...நீ எதுவும் ஒர்ரி பண்ணிக்காத....இத பத்தி அப்பறமா பேசலாம்....நா வெளில பொய்ட்டு வந்துட்றேன்..."

என்றுவிட்டு வெளியேறவும் அந்த தாய்க்குத்தான் வருத்தமாகிப் போனது.





ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



"கதிர்..." அவன் போட்ட கத்தலில் ஆபிஸே அதிர்ந்தது.



அவன் நடுங்கிக் கொண்டே வந்து நிற்கவும்



"இன்னக்கு நடக்க போற மீட்டிங் பத்தின ப்ராஜக்ட் பைல நேத்தே ரெடி பண்ண சொன்னேனா இல்லயா.....

இன்னும் என் கேபினுக்கு அது வந்து சேரல.... என்ன பண்ணிகிட்டு இருக்க?"



"சா...சா...சாரி சார்....மிஸ்.சுமதி தான் அது ரெடி பண்ணிட்டு இருந்தாங்க... அவங்க இன்னிக்கு லீவு....அ... அதான்"



"இடியட்....சின்ன பசங்க மாதிரி காரணம் சொல்லிகிட்டு இருக்காம போய் அத டைப் பண்ணி கொண்டு வா.... போ..." அவன் சொல்லி முடிக்க விட்டால் போதுமென்று ஓடியே விட்டான் கதிரவன்.



"ச்சேஹ்....எனக்குன்னு வந்து சேருது பாரு..." தலையில் அடித்துக் கொண்டவனுக்கு ஏனென்றே தெரியாத எரிச்சல் மண்டிக் கிடந்தது.



மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய ரகுவை அழைத்தான்.



"எஸ்கியூஸ் மீ"



"கம் இன்...."



"என்ன மச்சான்.... என்ன ப்ராப்ளம் உனக்கு.... வா வெளில பொய்ட்டு வர்லாம்..."



"இல்ல நா வர்ல...நீ போ"



"வாடா" என்றவன் அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியேறினான்.



.....



"வருண் ஆபிஸுக்கு போலாம்"

இருக்கையில் கண்மூடி சாய்ந்தவாறே படுத்திருந்தவன் கண்களை திறவாமலே ரகுவிடம் பேசினான்.



"ஓகே மச்சான்...."



.....



"மச்சான் வருண் இன்னிக்கு ஆபீஸ் வர்லயாம்டா" சற்று குனிந்து காருக்குள் இருந்தவனிடம் பேசினான் ரகு....



தன் விழிகளை திறந்தவன் நெற்றி சுருக்கியவாறு தன் புருவத்தை நீவி விட்டுக் கொண்டே



"நீ வண்டிய எடு... கால் பண்ணி பேசலாம்...." எனவும் ரகு சுற்றி வந்து காரை எடுக்க தன் நண்பனுக்கு அழைத்தான் ரிஷிகுமார்.



"சொல்லு ஆர்.கே... இந்த நேரத்துல கால் பண்ணி இருக்க?" என யோசனையாய் கேட்டவனின் குரலிலிருந்த வேறுபாட்டை கண்டு கொண்டவன்



"எங்க இருக்க?" என்றான் அழுத்தமாக....



"கோபமா இருக்கியாடா....?"



"நத்திங்....நீ எங்க இருக்கன்னு சொல்லு"



"பீச்லடா...."



"வாட்....ஓகே இரு நாங்க வந்துட்றோம்"



"இல்லடா...நீ இரு...எந்த ப்ராப்ளமும் இல்ல"



"நா ப்ராப்ளம்னு சொல்லவே இல்லயே....அப்போ ஏதோ நடந்திருக்கு....ரைட்?"



"இ...இ..இல்லடா"



"அப்போ ஏன் உன் குரல் தடுமாறுது?"



'இவன் வேற'



"எதுவுமில்ல மச்சி....நீ டைம் வேஸ்ட் பண்ணி வர வேண்டாம்"



"ஓகே பய்"



'ஹப்பாடா....'



"பய்டா...." சோர்ந்து ஒலித்தது அவன் குரல்....



"ரகு பீச்ல இருக்கானாம்... அங்கே போலாம்...."



.....



கடற்கரையில் அமர்ந்து கடலலையையே பார்த்துக் கொண்டிருந்தவனின் எதரில் நிழலாட நிமிர்ந்து பார்த்தவனுக்கு ரிஷியைக் கண்டது அதிர்ச்சியாய் இருக்க எழப்போனவனை தடுத்து அருகில் அமர்ந்தனர் இருவரும்....



***



அவளை அடித்து விட்டு வந்ததிலிருந்து மனசே கேட்கவில்லை அஜய்க்கு....



இதுவரை அவள் அழுதாலே தாங்க முடியாதவனால் இன்று தானே அழுவதற்கு காரணமாகிப் போனதில் அப்படி வரு கவலை அவனுள்....



இதில் அவன் தந்தையின் செயல்கள் வேறு அவனை பாடாய்ப் படுத்திக் கொண்டிந்தது.



அஷ்வினியின் வார்த்தைகள் மற்றும் வருணின் தவிர்த்தல்

(தந்தையை) எல்லாமுமாக சேர்ந்து அவனை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது.



இதற்கு மேல் முடியாதென்று தோன்றிவிடவே தன் தங்கையை காணச் சென்றான் அவன்....



....



மேசையில் தலை கவிழ்ந்து படுத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து அவள் தலையை ஆதரவாக தடவி விட்டவன் யாரென உணர்ந்தாலும் பேசாமல் அமைதியாகவே படுத்திருந்தாள் ரிக்ஷிதா.



அவளுக்கு அருகிலேயே ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்து அவள் முகம் காண அவனை காணப் பிடிக்காதவள் போல் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் அவன் தங்கை....



அவளை எழ வைத்து அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன் தன் கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட பட்டென தட்டி விட்டு மறுபடியும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.



"ஐ அம் சாரிமா... அப்பிடி நீ நடந்துக்கலாமா சொல்லு....அது தப்பில்லையா?" தலையை வருடி விட்டுக் கொண்டே கேட்டான்.



"அவன் கெட்டவனாவே இருந்தாலும் அவன்கிட்ட மரியாத இல்லாம பேசலாமாடா... நீ அவ்வளவு பேசியும் உனக்கு ஒரு வார்த்த சொன்னானா

அவனுக்கு சின்ன வயசுல இருந்தே உன் மேல பாசம் அதிகம்டி...."



"வலிக்குதா?" என்று விட்டு தான் அடித்த இடத்தை வருட மீண்டும் தட்டி விட்டாள்.



"கோபமா இருக்கன்னு புரியுதுடா.... ஐ அம் சாரி செல்லம்" அவள் எழுந்து நகரப் போக அவளை தடுத்தவன்



"அப்பொ உன் அண்ணன மன்னிக்க மாட்டியா... ஐ அம் சாரி அஷ்வி...."

என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து தன்னோடு சேர்த்து அணைக்க அவன் நெஞ்சில் குத்திக் கொண்டே அழுதாள்.



அதை தாங்கிக் கொண்டவனின் கை அவள் கூந்தலை வருடிவிட்டுக் கொண்டே இருந்தாலும் அவன் முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது.



.......



பிரசவ நாள் நெருங்க நெருங்க விதையாய் இருந்த பயம் விருட்சமாய் வளர்ந்து கொண்டே போனதில் தவித்துப் போனது பேதை மனம்.....



அவன் அருகிலேயே இருந்திருந்தால் இந்தப் பயம் வந்திருக்காதோ என்னவோ....



ஆனால் இப்போதோ நிலைமை ரொம்பவும் கவலைக்கிடமாகத் தான் இருந்தது.



எப்போதும் அவன் அருகிலேயே இருக்க வேண்டும் என தோன்றும் போதெல்லாம் இயலாமையில் அழுகை தான் வந்து தொலைக்கும் அவளுக்கு....



அதுவே தொடந்த ஏக்கம் அவன் மேல் கோபமாக மாறிவிட்டிருந்ததை பாவம் அவன் அறியவில்லை....



அன்று கயல் வந்து வீட்டுக்கு அழைக்க முடியவே முடியாதென்று மறுத்தவளால் அதன் பிறகு இயல்பாகவே இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.



ஒரு தடவையாயாவது பார்த்து விட மாட்டோமா என்றிருக்கையில் கடவுளாகப் பார்த்து அன்று மறுபடியும் கயலை அனுப்பி விட்டிருந்தார்.



"அஷ்வி...." கயல் தோளை தொடவும் தன் சிந்தை கலைந்தவள் அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.



"எப்பிடி இருக்க?"



"இருக்கேன் கயு...நீ சந்தோஷமா இருக்கியா?"



"ம்...ஆமா... காலேஜ் கட் பண்ணிட்டு உன்ன பாக்க வந்தா...நீ என்ன அமைதியா இருக்க?"



"அதான் பாத்துட்டேல்ல?"



"ஏன்டி இப்பிடி பேசுற... சரி....

இன்னிக்காவது வீட்டுக்கு வர்றியா ப்ளீஸ்...."



"முடியாது...."



"ப்ளீஸ் அஷ்வி....ப்ளீஸ் ப்ளீஸ்...."



"இல்ல கயு அது சரியா வராது"



"ப்ளீஸ்கா...ஒரே ஒரு நாள் தானே... ரொம்ப போரடிக்குதுடி... அத்தான் வீட்ல இல்ல....ப்ளீஸ் வா அஷ்வி"



"பாக்கலாம்"



"வர்றேன்னு சொல்லு அஷ்வி... ப்ளீஸ்...எனக்காக ப்ளீஸ்டி....

இன்னிக்கி மட்டும்"



"அது...."



"ஏன்டி கெஞ்ச விட்ற?"



"சரி வர்றேன்"



"ஹே..."

சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவள் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு அவளின் கண்ணத்தில் இதழ் பதித்தாள்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



ப்ராஜக்டரில் தெளிவான ஆங்கிலத்தில் சரளமாக உரையாடியவனை அங்கிருந்த எல்லோரும் பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.



தன் உரையாடலை முடித்துக் கொண்டு நன்றி கூறியவன் இருக்கையில் வந்து அமர அங்கே பெருத்த கரகோஷம் உருவானது.



அதையும் புன்சிரிப்புடனே அங்கீகரித்துக் கொண்டவனுக்கு ஏனோ அதற்கு மேல் அங்கிருக்கவே முடியவில்லை போலும்....



கதிரை கண்களால் அழைத்து அவனை இருத்தியவன் அவர்களின் அனுமதி வேண்டி விட்டு அங்கிருந்து வெளியேறி விட்டான்.



தன் கேபினுக்கு வந்து அங்கிருந்த உயர் ரக சோபாவில் தலையை பிடித்தவாறே அமர்ந்தவனுக்கு நெஞ்சம் முழுதும் அவள் மனையாளே நிறைந்திருந்தாள்.



இன்னும் சொற்ப காலமே பிரசவத்திற்கு...



ஆனால் அதன் பிறகு???



அவனவளின் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறான்???



அவள்தான் குழந்தை பிறந்தவுடனே போ என்றுவிட்டாளே!!!



போகாவிட்டால் உயிராய் நினைத்திருக்கும் குழந்தையை இழந்து விடுவானல்லவா??



அவளை நினைக்க நினைக்க கோபம் கோபமாக வந்தது அவனுக்கு....



தன் மீது எவ்வளவு வெறுப்பு ஏற்பட்டிருந்தால் வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தையை மனசாட்சியே இல்லாமல் அழிக்கத் துணிவாள்???



அவள் மீதிருந்த மலையளவு காதல் காணல் நீராய்ப் போனதன் மாயம் என்னவோ???



இதில் அன்று வருண் வீட்டில் நடந்ததை சொல்லி விட்டுச் சென்றதிலிருந்து அவளைப் பற்றி நினைக்கக் கூட பிடிக்கவில்லை அவனுக்கு....



கொலைகாரன் கொலைகாரன் என்று மட்டும் சொல்லத் தெரிந்தவளுக்கு அதற்குப் பின்னாலுள்ள அவனது வலி ஏன் தெரியாமல் போனது???



அன்புத் தங்கை சீரழிக்கப்பட்டு கண்முன் பிணமாக காணும் போது அவன் துடித்த துடிப்பு அவள் எங்கே அறியப் போகிறாள்....



அழுகவும் முடியாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தன்னை உயிராய் நினைக்கும் தம்பியை தேற்ற அவன் பட்ட பாடு...



சொல்லில் அடக்கிவிடத்தான் முடியுமா???



உயிர்நண்பன் செய்த துரோகம் கூட இந்த அளவிற்கு அவனை போட்டு வருத்தவில்லை என்பது தெளிவான உண்மை....



எவ்வளவு நேரம் அப்படியே இருந்தானோ கதவு தட்டப்பட்ட ஓசையில் தன்னை சமன் செய்து கொண்டவன்



"கம் இன்" எனவும் அவன் முன் வந்து நின்றான் கதிரவன்.



"சொல்லுங்க கதிர்"



"சார்... அவங்க நம்ம கூட எல்லா டீலிங்ஸுக்கும் அக்ரீமென்ட் போட்டுக்குறேன்னு சொல்லிட்டாங்க.... நீங்க வந்து ஃபைனலைஸ் பண்றது தான் பாக்கி"



"நீங்க போ நா இதோ வந்துட்றேன்" அவன் சென்றுவிட வாஷ்ரூம் சென்று குளிர்ந்த நீரால் தன் முகத்தை அடித்துக் கழுவியவன் அருகிலிருந்த சிறிய வெள்ளை டவலால் தன் முகத்தை

துடைத்துட்டு கான்ப்ரன்ஸ் அறை நோக்கிச் சென்றான்.



***



"ஹாய் வருண்..."

என்றவாறே உள்ளே நுழைந்தாள் அபிநயா....



தன் தாய் இறந்த சோகத்திலிருந்து ஒருவாறு மீண்டிருந்தவள் அன்றுதான் ஆபிஸ் வந்திருந்தாள்.



அவளை பார்த்து ஆச்சரியப்பட்டவன்



"வாங்க அபி..." என்றான் புன்னகையுடன்....



"இருக்க சொல்லவே இல்லயே?"என கண் சிமிட்ட அவள் குறும்பில் அவள் முழுதாக மீண்டு விட்டாள் என உணர்ந்தவனுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.



"உங்களுக்கு இல்லாத உரிமயா...

உக்காருங்க அபி" எனவும் சிரித்துக் கொண்டே அமர்ந்தாள்.



"ம்..அப்பறம் எப்பிடி இருக்கீங்க?"



"நல்லா இருக்கேன் வருண்....நீ எப்பிடி இருக்க?"



"நானும் நல்லா இருக்கேங்க"



"இந்த வாங்க போங்கன்னு பேசுறத நிறுத்த மாட்டியா நீ?"



"அது அப்பிடியே பழகிருச்சுங்க"



"மறுபடியுமா?"

என்று விட்டு சிரிக்கவும் அவளுடன் இணைந்து புன்னகைத்தான்.



"அஷ்வி...எப்பிடி இருக்கா....ஆளை பாக்கவே முடில?"



"நல்லா இருக்கா அபி....ஆனா என்ன பிரசவ தேதி நெருங்குறதால கொஞ்சம் பயந்து போயிருக்கா"



"வாவ்....அவ்வளவு நாளாச்சா....

இப்போதான் ப்ரக்ணன்ட்னு சொன்னா மாறி இருந்துது"



"..."



"புருஷன் வீட்ல தானே இருக்கா... நா அங்கேயே போய் பாத்துக்குறேன்" என்றுவிட்டு எழுந்தவளை தடுக்கும் வழியறியாது

அமர்ந்தான் அவன்....



அவள் பிரிந்து அம்மா வீட்டில் இருக்கிறாளென்றா சொல்ல முடியும்???



அவன் யோசித்து விட்டு நிமிர்வதற்குள் அவள் சென்றிருந்தாள்.



தலையில் கை வைத்துக் கொண்டு அமர உள்ளே நுழைந்தாள் அவனின் துப்பட்டா விழியழகி!!!



'ஷ்ஷப்பா....இங்க ஒருத்திக்கு பதில் சொல்லியே டயர்டாகிட்டேன்.... அதுக்குள்ள இன்னொருத்தியா

இந்த ஆர்.கே எப்பிடித்தான் பின்னாடி வர்ற பொண்ணுங்கள சமாளிக்கிறானோ அவன் கஷ்டம் இப்போல்ல பரியுது' நினைத்துக் கொண்டவனுக்கு அவன் நினைப்பை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது.



அவன் அனுமதி கொடுக்கும் முன்னே சட்டமாய் வந்து அமர்ந்து கொண்டவள் எடுத்துக் கொண்ட உரிமையில் அவன் உள்ளம் சிலிர்த்தது.



"அவ எதுக்கு வந்துட்டு போறா?" அவள் கடுகடுவென்று மொட்டையாய் கேட்கவும் அவனுக்கு முதலில் எதுவுமே பரியவில்லை....



"எவ..."என கேட்கப் போனவன் அபியைக் குறிப்பிடுகிறாள் என புரிந்ததும் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.



அவளுக்கு ஏனோ அபியை கண்ட நாளிலிருந்தே பிடிக்கவில்லை....



"அது பர்ஸனல்" என்றான் வேண்டுமென்றே...



"அது என்ன பர்ஸனல்....அதுவும் அவ கூட" கோபம் குறையாமலேயே கேட்டாள்.



"அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற?"



"அது....அது எதுக்கு உங்களுக்கு?"

அவனைப் போலவே மடக்கினாள்.



"நா சொல்லுவன்னு எதிர்பாக்குறியா?"



'யாருகிட்ட....ஐ அம் அ லாயர் செல்லம்' குதூகலித்தது மனசாட்சி....



அவன் அப்படி கேட்கவும் அவளுடைய முகம் அப்படியே கூம்பி விட்டது.



அதை காண சகிக்காதவன்



"எங்க கல்யாணத்த பத்தி பேச வந்தா" என்று கூறி முடிக்கவில்லை அவள் சேரை தள்ளிய தள்ளில் அவனே ஒரு நொடி பயந்து விட்டான்.



டேபிளை சுற்றி அவனருகே வந்தவள் அவன் பயந்து பின்னால் நகரவும் அவனின் ஷர்ட் காலரை பிடித்து தன்ன நோக்கி இழுக்க



"என்னடி பண்ணப் போற....கன்னிப் பையனுக்கு இந்த நாட்டுல சுதந்திரமே இல்லயா?" என போலியாய் அலர



"அடச்சீ..அடங்கு.. கன்னிப் பையனாம்"

என்றவள் சட்டென அவனிதழ்களோடு பொறுத்திவிட அவன் கண்கள் ஸாஸர் போல் விரிந்தது அதிர்ச்சியில்....



***



"வர்னுமாடி?" சங்கடமாய் கேட்டாள் தமக்கை....



"எத்தன தடவ இதயே கேட்ப... வந்துட்ட அப்பறமென்ன வா அஷ்வி" அவளின் கூற்றுக்கு ஆமோதித்தவாறு கீழே இறங்கி உள்ளே நுழைந்தாள் பேதை....



"ரொம்ப டயர்டா தெரீரயேக்கா...?"

அக்கறையாய் விசாரித்தவள் அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்தவாறு அவளை மெதுவாக அழைத்துக் கொண்டு மாடியேறினாள் அவள் மறுத்தும் கேளாமல்....



"ஏன் கயு இப்பிடி பண்ற....பாரு இப்போ மூச்சு வாங்குது" இடிப்பில் கை வைத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டே தங்கையிடம் காய்ந்தாள் ரிக்ஷிதா....



"உன் ரூம்ல உன்ன விட்டது ஒரு குத்தமா?" அப்பாவியாய் கேட்டவளைப் பார்த்து சிரித்து விட்டாள்.



அவள் கண்ணத்தை பிடித்து ஆட்டியவள்



"சோ ஸ்வீட்... சிரிச்சா எவ்வளவு அழகா இருக்க... அத விட்டுட்டு எப்போ பாரு உம்முன்னுகிட்டு..." என்றவள் அவளை கட்டிலில் சாய்வாக அமர வைத்து விட்டு சென்று விட்டாள்.



அறையை சுற்றிப் பார்த்தவளுக்கு அதுவரை இருந்த மனநிலை மாறி அழுகை வரும் போல் இருந்தது.



அறையின் ஒவ்வொரு முலையிலும் அவனுடன் இருந்த தருணங்களே படமாய் விரிந்து கொண்டிருந்தது.



அவளை திடுக்கிட செய்த போனின் சிணுங்கலில் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தவள் அது போனின் அலறல் என தெரிந்ததும் தான் சற்றே ஆசுவாசமானாள்.



அதை அடண்ட் செய்து காதில் வைத்தவள்



"ஹோலோ...அஷ்வினி ஹியர்"



"வணக்கம் மேடம்... நா லாயர் ஸ்ரீநிவாஸோட பீ.ஏ விக்ரம் பேசுறேன்"



"ஓ...சொல்லுங்க விக்ரம்"



"மேடம் சாரோட கேஸ் பெண்ட்ரைவ் ஒன்ன உங்க கிட்ட குடுத்து வெச்சிருக்காராம்... அது வேணுமே"



"என்கிட்ட தான் இருக்கு விக்ரம்... நீங்க வீட்டுக்கு வந்து எடுத்துக்குறீங்களா?"



"ம்...ஓகே மேடம் தேங்க்ஸ்..." காலை கட் பண்ணிவிட்டு எழுந்தவள் மெதுவாக எழுந்து டிராயரை நோக்கிச் சென்றாள்.



அதை திறந்து தான் வைத்த பெண்ட்ரைவை தேடியவளுக்கு அது அங்கே கிடைக்காமல் போகவும் கப்பேர்டை திறந்து அதனுள் இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருந்தவளின் கைகளில் சிக்கியது அவளுடையதை ஒத்த மாதிரி இருந்த ரிஷியின் பெண்ட்ரைவ்!!!



இராமநாதன் பேசியதை வீடியோ எடுத்திருந்த அதே பெண்ட்ரைவ்!!!



"என்ன இது புதுசா இருக்கு...நா வைக்கும் போது பழசால்ல இருந்துது... ஒரு வேல காணாம மறுபடி பாக்குறதால இருக்குமோ.... செக் பண்ணிட்டே குடுக்கலாம்" வாய் விட்டே புலம்பியவள் மேசை மீதிருந்த தன் லேப்டாப்பை நின்றவாறே ஆன் செய்து அவனுடைய பெண்ட்ரைவை அதற்குள் குத்தினாள்.....



"இது யாரோடது...என்னோடதுல வீடியோவே இல்லயே... ஒரு வேல இருந்து நா மறந்திருப்பேனோ" பலவாறாக குழம்பிப் போனவள் அந்த வீடியோவை தட்டினாள்!!!



அன்று நடந்தது அணைத்தும் பதிவாகியிருந்ததை பார்க்கப் பார்க்க அவளுடைய இதயமும் அதி வேகமாக துடிக்க ஆரம்பித்தது.



'தன் அப்பாவா இது...' பிடிமானத்திற்காய் அருகிலிருந்த சின்ன மேசையை பற்றியவளின் கை தவறி கீழே விழுந்து நொறுங்கியது தண்ணீர் கூஜா....



கொட்டிய தண்ணீரெல்லாம் விதி வசத்தால் அவள் காலுக்கு அடியிலேயே வந்து தேங்கி நிற்க வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அதிர்ச்சி பேரிடியாய் இருந்ததில் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு பின்னால் நகர்ந்தவள் அதன் மீதே கால் வைத்து "அம்மா...." என கத்திக் கொண்டே வழுக்கி விழ....



விழுந்த வேகத்தில் அவள் வயிறு தரையில் அடிபட்டது!!!



யாருமற்ற தனிமையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அவனவளின் மனைவி!!!



அஷ்வினி ரிக்ஷிதா.....



அரவம் கேட்டு அவள் ரூமிற்கு ஓடி வந்த கயல் உறைந்து போய் அப்படியே நின்று விட்டாள்.



என்ன செய்வதென தெரியாமல் மூளை மறத்துப் போன உணர்வு....



"அம்மா...." அஷ்வியின் முனகல் சத்தத்தில் நினைவுக்கு வந்தவள்



"அக்கா...." என கத்திக் கொண்டே அவளருகில் ஓடினாள்.



"அக்கா...அக்கா....எந்திரிகா...அக்கா"



"தே...தே..தேவ்...தேவ்" அது மட்டுமே அவள் வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது.



அதனை புரிந்து கொண்டவள் போல்



"இதோ...." என்றுவிட்டு தன் மொபைலை எடுத்து ரிஷிக்கு அழைக்க அவன் எடுத்தால் தானே....



"ப்ளீஸ் அத்தான் பிக் அப் த கால்...பிக் அப் பிக் அப்...." வாய் தன் பாட்டுக்கு கடவுளிடம் வேண்டுதல் வைக்க அது ஏற்றுக் கொள்ளப் படவில்லையோ என்னவோ அவன் காலை அடண்ட் பண்ணவே இல்லை...



இதுதான் விதி என்பதோ???



அழுது கொண்டே ஆருவுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல பதறியடித்துக் கொண்டு வந்தவனுக்கு தன் தோழியின் நிலையை பாரத்து இதயம் நின்று துடித்தது.



நொடியில் தன்னை சமாளித்தவன் அவளை தூக்கிக் கொண்டு மறுத்துவமனைக்கு விரைந்தான்.



அவள் உடனே அனுமதிக்கப்பட அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு நின்றவன் கயல் ஆதரவாக தோள் தொடவும் அவளை கட்டிப் பிடித்தே கதறி விட்டான்.



"ஆரு....ஷ்...நீயே இப்பிடி உடைஞ்சி பொய்ட்டேன்னா அத்தானுக்கு யாரு ஆறுதல் சொல்லுவாங்க?"



"எனக்கு பயமா இருக்கு அம்மு"



.....



வீட்டினர் அனைவரும் பதறியடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் வந்து சேர வர வேண்டியவன் மட்டும் இன்னும் வந்திருக்கவே இல்லை....



அவனுக்கு அனைவரும் மாறி மாறி முயன்றும் அவனை பிடிக்கவே முடியவில்லை....



கடைசியாக எல்லோரையும் காக்க வைத்து விட்டு வந்து சேர்ந்தான் அவள் கணவன்.



பதற்றத்துடன் வருவானென்று பார்த்தால் அதற்கு நேர் மாற்றமாக முகம் இறுக யாருக்கோ பிரசவம் போல் பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டபடி வந்து நின்றவனை பார்த்து அனைவருக்கும் பயமாக இருந்தது.



கண்கள் இரத்தமென சிவந்திருக்க அவன் அருகில் செல்லக் கூட பயந்து ஒதுங்கி நின்றனர் அனைவரும்.....



அவன் மனதிற்குள் வெடித்துக் கொண்டிருக்கும் பூகம்பம் அவன் மட்டுமே அறிவான்.



குழந்தையை தூக்கிக் கொண்டு என் கண் முன்னால் நிற்காமல் போய் விடு என சொல்லிக் கொண்டிருப்பவளை என்னதான் செய்வது என சத்தியமாக அவனுக்கு புரியவே இல்லை....



அவளுக்கு விடயம் தெரிந்த விடயம் இவனுக்கு தெரியாதல்லவா???



அதனாலேயே அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு போக முடிவெடுத்திருந்தான்.



அவளுக்கு தெரிந்து விட்டதென்று இவனுக்கு தெரிய வந்திருந்தால் அத்தனை வருட பிரிவு தேவையே இல்லாமல் போயிருக்குமோ???



குழந்தையின் திடீர் அழுகை சத்தத்தில் அவன் உடலில் ஓர் வித சிலிர்ப்பு!!!



அனுபவிக்கத் தான் முடியாயாமற் போனது அந்த தந்தைக்கு....



நர்ஸ் ஒருவர் வெளியே வந்து குழந்தையை நீட்ட தன் கைகளில் வாங்கிக் கொண்டவன் கண்களை ஒருமுறை இறுக்க மூடித் திறந்தான்.



தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் நடந்ததனைத்தையும் சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி பேரசிர்ச்சி!!!



அவர்கள் அதிர்ச்சியிலிருந்து விலகுவதற்குள் அவன் தன்னவளின் குழந்தையுடன் ஹாஸ்பிடலிலிருந்து வெளியேறி இருந்தான்.



தொடரும்.....



13-05-2021.
 
Status
Not open for further replies.
Top