All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் “உயிரோடு கலந்தவள்!” - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34 ❤



"எல்லாம் நடிப்பு"வெறுப்பாக சொல்லிக் கொண்டே கட்டிலில் சாய்ந்திருந்தான் வருண்....



தன்னை எவ்வளவு கேவலமாக நினைத்திருந்தால் அப்படி புகார் கொடுத்திருப்பாள் என்றதிலேயே அவன் மனம் உளைக்கலமாக கொதித்துக் கொண்டிருந்தது.



அதுவுமில்லாமல் எல்லாமே செய்துவிட்டு தன்னை அடையாளம் தெரியாமலிருக்க எப்படியெல்லாம் நடித்திருக்கிறாள்....

தான் தான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம்...



நினைக்க நினைக்க மனதிலிருந்த வெறுப்பு கூடிக் கொண்டே போனது...



அடுத்தவர்களுக்கு கஷ்டம் கூட கொடுக்காதவனுக்கும் ஒருத்தியின் மேல் வெறுப்பென்றால் விதியை என்ன சொல்லிப் பாராட்டுவது???



..........





தன் டீ-ஷர்ட்டை இறுக்கமாக பிடித்திருப்பவளை பார்த்தவனுக்கு மனம் படபடவென அடிக்கத் துவங்கியது.



நிழற்படங்கள் கண்முன் வராவிட்டாலும் இந்த செய்கையை அவன் ரசித்திருக்கிறான் என்பதை அவன் அப்போது உணர்வு பூர்வமாக உணர்ந்ததில் தவித்துப் போனான் அந்த ஆறடி ஆண்மகன்....



ஒருவேலை இவளை உண்மையில் காதலித்திருப்போமோ என யோசிக்கும் போதே மனம் ஏனோ சாந்தமானது அவனுக்கு...



நேரம் கெட்ட நேரத்தில் பழைய வாழ்க்கைச் சுவடுகள் அவனைத் தாக்கி கல்லாக்க அவள் கையை உதறி விட்டு சென்றான் ரிஷி....



கஷ்டப்பட்டு தன் மொபைலை கண்டெடுத்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி!!!!



அவளே வால்பேப்பராக இருந்ததில் இதயம் ஒரு கனம் நின்று துடித்தது.



அவன் அமர்ந்திருக்க அவன் இடது பக்க தோல் வளைவில் அவள் முகம் தெரியுமாறு சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள் அவனவள்....



இருவரது கண்களிலும் அத்தனை காதல்!!!



வாய் பொய் சொன்னாலும் அதை கண் காட்டிக் கொடுத்துவிடுமே....



இதயம் தடதடக்க அவசரமாக அந்த வால்பேப்பரை மாற்றிவிடவும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.



அங்கிருப்பது மூச்சடைப்பது போல் இருக்க வெளியே சென்று விட்டான்.



அன்று அப்படி உணர்ந்ததிலிருந்து பால்கனிப் பக்கம் செல்வதை அறவே தவிர்த்திருந்தான்...



அங்கு ஏதோ சொல்ல முடியாத ஒரு பிணைப்பு இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு...



ஹால் சோஃபாவில் தொப்பென அமர்ந்தவனுக்கு அவளை விட்டு ஏன்டா வந்தோம் என்றாகிவிட்ட நிலைதான்....



அவன் முன்னே மீண்டும் சில நிழற்படங்கள்!!!



(அந்தப் பெண் அவன் தோல் வளைவுக்குள்ளேயே அமர்ந்திருக்கிறாள்....

எதிரில் இன்னொரு பெண்....

அதற்கடுத்ததாக ஆரவ்....

ஆரவ்வுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தவள் சட்டென துள்ளிக் குதித்து ஓட அவனை விரட்டுகிறான் ஆரவ்....

அவன் வாய்விட்டு சத்தமாக சிரித்துக் கொண்டிருக்கிறான்....)



அவனா....அவனா அப்படி சிரித்தான்....

தன்னையே நம்பமுடியாமல் தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டவன் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் "நோ......"என கத்தினான் வீடே அதிரும்படி.....



தங்களறையிலிருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த அணைவரும் ஒரு நொடி அவன் நிலையை பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டனர்.



ஹாலே அலங்கோலமாக கிடக்க அழகுக்காக வைக்கப்பட்டிருந்த டீபாய் துண்டுத் தூளாகி இருந்தது....



நடுநாயகமாக தலையை பிடித்துக் கொண்டு அவளவன்!!!



அவன் திடீர் ஆக்ரோஷத்தில் உடல் தூக்கிவாரிப்போட அருகிலிருந்த வருணின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள் அவள்....



சட்டென சுதாரித்த ஆரவ் அவனருகில் சென்று தோலில் கைவைக்க அந்த ஒட்டாத தொடுதலில் நிழற்படங்கள் இன்னுமின்னும் கூடிக் கொண்டே போக அவனை ஆக்ரோஷமாய் தள்ளிவிட்டான்.



விழப்போனவனை பின்னாலிருந்து பிடித்த வருண் நிலைமை சட்டென பிடிபட



"ரிக்ஷி....அவன்கிட்ட போமா.... பயப்படாத ப்ளீஸ்....நீ போகலன்னா நிலம இன்னும் விபரீதமாயிடும்"என கத்த மலங்க மலங்க விழித்தவளுக்கும் ஏதோ புரிவது போல் இருக்கவும் சற்றும் தாமதிக்காமல் அவனை நோக்கி ஓடினாள்.



கீழே குனிந்து தலையை "நோ...நோ...."ஆட்டிக் கொண்டிருந்தவனின் முன் மண்டியிட்டவள் "தேவ்...." என்றவள் அவனை இறுக்க தழுவிக் கொண்டாள்.



நிழற்படங்கள் சட்டென மறைந்து போக தாய் மடி தேடும் கன்றாய் அவள் மீதே சரிந்தான்.



தன்னவனின் நிலையை நினைத்து இதயம் ரத்தக்கண்ணீர் வடிக்க அவன் முதுகை ஆறுதலாக தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள் அவனவள்!!!



***



அமெரிக்கா....



மெக்சிகோ நகரம்....



"ஹாஹாஹா...."

கொக்கரித்து ரசித்துச் சிரித்தான் அவன்....



ராகேஷ் கண்ணா!!!



அவனின் முன் அதே சிரிப்புடன் ரகு....



"ஏன் ரகு இவன் எவ்வளவு பட்டாலும் திருந்தவே போறதில்லல?"

எகத்தாளமாய் வந்து விழுந்த வார்த்தைகளில் குழம்பிப் போனான் அவன் நண்பன்.



"புரியல?"



"நம்மளால அவனுக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சும் டில்லிக்கு தனியா வந்திருக்கான் பாரு.... உண்மைலயே அவன் ஹீரோதான்டா"



"நீயா அவன புகழ்ற?"



"எஸ் நானேதான்....நீ இப்போ சொன்ன விஷயத்துல நா எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமாடா?"



"பின்ன....சந்தோஷமில்லாம இருக்குமா....அவன் ஒரேடியா செத்திருந்தா கூட இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்குமாங்குறது சந்தேகம் தான் மச்சான்"



"அதே அதே"



"இப்போ நினைவே இல்லாம பைத்தியம் மாதிரி இருப்பான்ல?"



"நிச்சயமா ரகு....இருப்பான்ல....

இல்ல இருப்பான்..." மீண்டும் வெடிச் சிரிப்பு சிரிக்கத் துவங்கிய ராகேஷை கசப்புடன் பார்த்தான் ரகு!!!



ராகேஷ் மூலமாகவே அறிந்திருந்தவனானாலும் உண்மையாக நட்பை தந்தவன்!!!



இவனுடன் சேர்ந்து நடிக்காவிட்டால் இரண்டு உயிர்கள் அநியாயமாக காவு வாங்கப்படும் என்பதை முன்னரே அறிந்தவனுக்கு நடிப்பது தவிர வேறு வழி தெரியவில்லை....



"ஓகே மச்சான்....இன்னைக்கு ட்ராவல் பண்ணினதுல எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு....நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்....அப்பறமா பாக்கலாம்" என்ற ரகு அவசரமாக தனதறைக்குள் புகுந்து கொண்டான்.



கதவை தாழிட்டு விட்டு கட்டிலில் தொப்பென விழுந்தவனுக்கு மனம் கணத்துப் போக தான் ஆண்மகன் என்பதையும் மறந்து மௌனமாக கண்ணீர் வடித்தான்.



ராகேஷின் சொல்லுக்கிணங்க அவன்தான் ஆக்ஸிடென்ட் பண்ண வைத்தான்....



ஆனால் அவன் மயக்கமாகவும் ஓரமாக நின்றிருந்தவன் தன் மடிமீது வைத்து மன்னிப்பு கேட்டது அவனுக்கு எங்கே தெரியப் போகிறது???



ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை கண்டதும் மனம் துடித்த துடிப்பை அவன் அறிவானா???



அவனை அப்படியே விட்டுச் செல்லவும் முடியாமல் அவன் தவித்த தவிப்பு???



கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருக்க அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அப்படியே கிடந்தான் ரிஷியின் மனதில் துரோகியாகிப் போன அந்த ஆருயிர் நண்பன்!!!



படபடவென கதவு தட்டப்பட வாஷ்ரூம் சென்று முகத்தை அடித்துக் கழுவி விட்டு வந்து கதவை திறந்தவனின் முன்னால் பதற்றமாய் நின்றிருந்தான் ராகேஷ்....



"என்ன மச்சான் என்னாச்சு?" அவனும் பதற்றமாகவே நடித்தான்.



"வெளிய வாடா...." என்றுவிட்டு தன் லேப்டாப் முன்னால் சென்று நின்றவன் அதில் வந்திருந்த ரிஷியின் கண் கானா எதிரியின் வாய்ஸ் நோட்டை தட்டினான்.



"மிஸ்டர்.ராக்கேஷ்....உங்க சித்தப்பா இறந்துட்டாரு" சத்தமே இல்லாமல் இடியை இறக்கிவிட்டு சொல்வது மட்டுமே என்கடமை என்பது போல் அது முடிந்து விட நிலை தடுமாறி அருகிலிருந்த சோஃபாவில் அமர்ந்தான் ராக்கேஷ்....



தந்தைக்கும் பின் தந்தையாக தாயாக எல்லாமுமாக இருந்தவர் அவர்!!!



அவர் பெயர் ராகவன்!!!





ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ் மேல்தளம்.....



ஷாக் கொடுக்கப்பட்டிருந்தவரை வெறித்து நோக்கின அனன்யாவின் கண்கள்....



அந்தப் புதியவனே ராகவன்!!!



தானாகத் தான் வேண்டுமென்றே சுவிட்சை ஆன் பண்ணியிருக்கிறார் என்பது புரியவே அவரை அப்படி பார்ப்பதை தவிர வேறு வழியில்லை அவளுக்கு!!!



பதட்டமாக கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கதிர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான்....



நின்றவன் நின்றபடியே இருக்க கண்கள் மூடி கழுத்து ஒரு பக்கம் சாய்ந்திருந்தது.



ரிஷிக்கு இதுவரை தகவல் கொடுக்கப்படவில்லை..வந்தாலும் எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்று அவனாலும் யூகிக்க முடியாமல் போக திடீரென மொபைல் சிணுங்கவும் எடுத்து திரையை பார்த்தான்.



அதில் ஆரவ் சார் என ஒலிரவும் அவனுக்கு பதற்றத்தில் வியர்த்து வழிந்தது.



பதற்றத்திலேயே அடண்ட் செய்து காதில் வைக்க



"கதிர்"



"சொ...சொல்லுங்க சார்"



"ஏன் பதட்டமா இருக்கீங்க?"



"இ...இ..இல்ல இல்ல ஒன்னில்ல சார்" எனவும் மறுபக்கத்திலிருந்த ஆரவ்வின் நெற்றி சுருங்கியது.



"எங்க இருக்கீங்க கதிர்?"



"அ...அது அது ஆபிஸ்லதான் சார்"



"நானும் அங்கதானே இருக்கேன்... நீங்க இங்க இல்லயே"சந்தேகம் அப்படட்மாய் தெரிந்தது அவன் குரலில்.



"ஆ..ஆபீஸ்லதான் சார்....மே... மே... மேல் மாடில" வருவது வரட்டுமென்று சொல்லிவிட்டான்.



"வாட்?" என ஒரு நிமிடம் அதிர்ந்தவன் தன்னை சட்டென மீட்டுக் கொண்டு



"ஓகே ....இருங்க வர்றேன்" எனவும் தடுக்கத் தோன்றாமல் அமைதியாக வைத்துவிட்டான் கதிரவன்.



அடுத்த இரண்டாவது நிமிடம் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனை பார்த்து பயத்தில் வெளவெளத்துப் போனவன் கண்களில் அச்சத்தை தேக்கி ஆரவ்வை பார்க்க அவனோ ஷாக்கடித்தவன் போல் வாசலிலேயே நின்றுவிட்டிருந்தான்.



இவ்வளவு நாள் தேடிக் கொண்டிருந்த அனன்யா ஒரு புறமென்றால் இந்த ராகவன் மறுபுறம்!!!



அண்ணா நம்மளவிட ரெண்டு மூனு ஸ்டெப்ஸ் முன்னாடியே போயிருப்பாங்க என்று அவன் சொன்னது அவனுக்கே ரீங்காரமாய் ஒலித்த அதே நேரம் இவ்வளவு தூரம் வந்துட்டாங்களா என்று அதை திருத்தியது மனசாட்சி....



இவங்கள பாத்தா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியாது...பட் இருக்குற கோவத்துல கொலகாரனா மாறிட்டாங்கன்னா....



நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்க கொஞ்சம் கொஞ்சமாக அதிர்ச்சியிலிருந்து மீண்டவன் திரும்பி கதிரவனை பார்த்தான்.



தன்னை கண்டதிலிருந்து அல்லாமல் அதைத்தாண்டிய ஏதோ ஒரு பதற்றம் அவன் முகத்தில் தெரியவும் புருவம் சுருக்கியவன் மூளையில் மின்னல் வெட்ட சட்டென திரும்பி ராகவைனைப் பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி!!!



***



அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டு மருந்தையும் அருந்தக் கொடுத்தவள் அவன் மனம் உணர்ந்து அருகிலேயே அமர்ந்து விட்டாள்.



அவனும் அவள் செய்கையை தடுக்கும் நிலையிலெல்லாம் இல்லவே இல்லை....



மனம் மீண்டும் மீண்டும் எதையோ யோசித்துக் கொண்டே இருக்க கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கால்களை நீட்டி சாய்ந்து அமர்ந்திருந்தான்.



அவனை யோசிக்க விட்ககூடாது என்பது மண்டையில் உறைக்க என்ன செய்வதென தெரியாமல் நின்றவள் வேண்டுமென்றே குஷனை எடுத்து அவனுக்கு வீசினாள்.



திடீரென தன் மேல் ஏதோ விழுந்ததில் திடுக்கிட்டு பார்த்தவன் தன் மடியில் குஷன் இருக்கவும் சோஃபாவில் இருந்து கொண்டு வீட்டு கூரையை பார்த்துக் கொண்டிருந்தவளை முறைத்தான்.



அவன் முறைப்பது தெறிந்தும் அவன் புறம் பார்வையை திருப்பாமலேயே போக்குக் காட்டிக் கொண்டிருக்க அவள் வீசியதையே அவளுக்கு திரும்பவும் வீசினான்.



அது அவள் தலையில் பட்டு கீழே விழ அதை எடுத்து வைத்தவள் அவனை பார்த்து இப்போது தான் முறைக்க



"எதுக்கு முறக்கிற....நீ தானே எனக்கு வீசி அடிச்ச...அதான் திருப்பி தந்துட்டேன்" அவனை அந்த நிலைமையில் பார்த்த பின் இனியும் அமைதியாக இருப்பதில் பயனில்லை என்பது மண்டையில் நன்கு உறைத்து விட்ட பிறகும் அமைதியாக இருக்க அவளென்ன ஊமையா....



அதனால்தான் முதல் முயற்சியாக அவனை சண்டைக்கு இழுத்தாள்.



"நா எப்போ அடிச்சேன் சார்....?" என அப்பாவியாய் கேட்டவளை பார்த்து வாயைப் பிளந்தான் அவளவன்!!!



"அப்பிடியே நம்பிட்டேன் பாரு உன்ன....பொண்ணுங்கன்னாவே பொய்...ஏமாத்துறது...துரோகம்... வேறென்ன தெறியும் உங்களுக்கு?"



"அத தவிற நிறையவே தெரியும் சார்....நீங்க எத எதிர்பாக்குறீங்க?" வார்த்தையாலேயே அவனை அவள் அடக்க இவ இவ்வளோ பேசுவாளா என்பது போல் வ விழி விரித்தவனை பார்த்து அவள் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுப் போனாள்.



"அட நீ ஊமன்னுல்ல நெனச்சேன்" நக்கலாக அவன் கூறவும்



"நீங்க நெனச்சுதுக்கெல்லாம் என்னால பொறுப்பாக முடியாதுங்க சாரே"



"ப்ச்...வெட்டி பேச்சு பேசாம எதுக்கு எனக்கு அடிச்சன்னு சொல்லு?" சட்டென கோபம் மூண்டுவிட்டது அவனுள்....



அவன் மனநிலையை உணர்ந்தவளுக்கு இருந்த உற்சாகம் சடுதியில் மறைய மறுபடியும் அமைதியாகி விட்டாள்.



"நான் கேட்டுகிட்டே இருக்கேன்....

அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" மறுபடியும் எரிந்து விழ அவளுக்கு அனன்யாவை கொன்று போடும் வெறி!!



அவளால் அல்லவா இப்படி ஆகித் தொலைத்தான்...



அவள் அமைதியாகவே இருக்கவும்

"இப்போ சொல்ல போறியா இல்லையா?" அவனின் கோபம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து



"அ...அது...அது...உங்கள யோசிக்க விடக் கூடாதுன்னு டா...டாக்டர்...." இயலாமையில் அவளுக்கு கரகரவென கண்ணீர் கொட்டத் தொடங்க அவசரமாக எழுந்து வெளியில் சென்று விடவும் அவனுக்கு உள்ளுக்குள் திடீரென்று வலித்தது.



***



"ப்ளீஸ் விஷ்வா....நா சொல்றத ஒரே ஒரு நிமிஷம் கேளுங்க ப்ளீஸ்...." அவன் ஆபிஸுக்கே வந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள் யாழினி....



அவனோ அவளை திரும்பியும் பார்க்காது லேப்பிலேயே கண்களை பதித்திருந்தான்.



"ஏன் விஷ்வா இப்பிடி இருக்கீங்க... என் பக்க நியாயத்த கூட கேக்க மாட்டீங்களா?"



"...."



"விஷ்வா ப்ளீஸ்....என் சிச்சுவேஷனயும் கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரையாவது பண்ணுங்க"



"...."



"ப்ளீஸ் விஷு...." எனவும் அவளது அழைப்பில் விலுக்கென அவளை நிமிர்ந்து ஒரு நொடி பார்த்தவன் அது பொய்யோ என்பது போல் அடுத்த நிமிடம் பார்வையை திருப்பியிருந்தான்.



"நா செஞ்ச பெரிய தப்பு உங்கள பார்த்தது தான் விஷ்வா...."



"...."



"யாரு கிண்டலடிக்கிறாங்கன்னு கூட எனக்கு தெரியாது...பட் யாருன்னு நிமிர்ந்து பாக்குறப்பல்லாம் என் கண்ணுக்கு நீங்கதான் தெரிஞ்சீங்க" அவளுடைய அபாண்டமான குற்றச்சாட்டில் அவனுடைய கை முஷ்டிகள் இறுகின.



"ப்ளீஸ் கோபப்படாதீங்க விஷ்வா....நா முழுசா சொல்லிட்றேன்"



"...."



"பஸ்ல கூட ஒரு தடவ....யா..யாரோ எ..என்ன உரசினாங்க" சொல்லும் போதே அவள் குரல் நைந்து ஒலித்தது.



"அவன் பக்கத்துல தப்பிக்க அப்போ திரும்பி பாத்தப்போவும் நீங்கதான் தெரிஞ்சீங்க"



"...."



"விஷ்வா"



"...."



"என் பக்கத்துல இருந்து ஒரு தடவயாவது யோசிங்க விஷ்வா ப்ளீஸ்..."



"...."



"விஷு....நா சொல்றதுக்காகவெல்லாம் யோசிக்கனுமான்னு பாக்காதிங்க... அட்லீஸ்ட் ஒரு சக மனுஷியா நெனச்சி யோசிங்க விஷு" கண்ணீர் மல்க அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதவு திடீரென தட்டப்பட்டது.



தொடரும்.......



26-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 35 ❤



கதவு தட்டப்படவும் அனுமதி வழங்கியவன் உள்ளே நுழைந்த அபியை பார்த்து வருண் புருவம் சுருக்க அபி அவன் முன் அமர்ந்திருப்பவளை பார்த்து புருவம் சுருக்கினாள்.



"சொல்லுங்க அபி?"எனவும் சட்டென அவனைப் பார்த்தவள்



"இல்ல உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"



"நீங்க வெயிட் பண்ணுங்க இதோ வந்தட்றேன்"



"ம் ஓகே"என்றுவிட்டு அவள் வெளியேற அவள் அவனையே பார்ப்பது தெரிந்தும் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டான்.



தானும் எழுந்தவள் கண்ணீரை துடைத்து விட்டு



"அப்போ நீங்க என்ன சக மனுஷியா கூட மதிக்கலல்ல விஷ்வா?"



"...."



"உங்க லைன இனிமே க்ராஸ் பண்ண மாட்டேன் விஷ்வா... பட் நீங்க மன்னிச்சா நா தினம் தினம் குற்ற உணர்ச்சியில சாகுறது இல்லாம போகும்....நீங்க என் மன்னிப்ப ஏத்துப்பீங்களான்னு தெரியாது....ஆனா ஐ அம் ரியலி சாரி விஷ்வா....பய்" என்றவள் அழுது கொண்டே சென்று விட அவளையே கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.....



வெளியே நின்ற அபியிடம் உள்ளே வருமாறு அழைத்தவன் அவளை அமரச் சொல்லி விட்டு தன் இருக்கைக்கு போக அடியெடுத்து வைத்தவனின் கையை சட்டென பிடித்து தடுத்தாள் அபி.



அவளை திரும்பிப் பார்த்து கையை விடுவித்துக் கொண்டவன் புருவ முடிச்சுடன்



"என்னாச்சு அபி....எதுக்கு இப்பிடி பன்றீங்க....எனிதிங் சீரியஸ்?" எனவும் பேசிக் கொண்டிருந்தவனை பட்டென கட்டிப் பிடிக்க அதிர்ந்து போனான் வருண் விஷ்வா....



போனை டேபிளிலையே மறந்து வைத்து விட்டுப் போன யாழினி ஏதோ நினைவில் அனுமதி வேண்டாமலேயே உள்ளே நுழைந்தவள் அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து நின்று விட்டாள்.



அபியின் செய்கையே அதிர்ச்சி என்றால் யாழினி அந்த நிலைமையில் அவனைப்பார்த்து அதிர்ந்தது இன்னொரு அதிர்ச்சி....



வாயை மூடிக்க கொண்டே கண்களில் வலியோடு அவள் திரும்பிப் பார்க்காமல் வெளியேறி விட அவனை அணைத்திருந்த அபியை தன்னிலிருந்து பிரித்து



"ஏன் இப்பிடி பண்றீங்க அபி?" என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்...



"எனக்கு வேற வழி தெரியல வருண்.... நா உன்ன லவ் பண்றேன்....எங்க நீ எனக்கு கிடக்காம போய்டுவியோன்னு பயமா இருக்குடா"



"வாட்...என்ன உலறல் இது?"



"எஸ் வருண் நா உன்ன லவ் பண்றேன்...." எனவும் சற்று நிதானித்தவன்



"ஐ அம் சாரி அபி....நா உங்கள இதுவர ரிக்ஷியோட ப்ரண்டுங்குற ஸ்டேஜ தாண்டி பாத்ததே இல்ல"என்றான் அவளுக்கு புரிய வைத்து விடும் நோக்கில்....



"ஏன் வருண்...நீ..நீ...வேற யாரயாவது லவ் பண்றியா?" கண்களில் வலியுடன் கேட்டவளைப் பார்த்து அந்த வலிக்கு தான் காரணமாகிப் போனோமே என நொந்து போனான்.



"நோ அபி....நா யாரயும் காதலிக்கல..."



"அப்போ என் காதல அக்ஸப்ட் பண்ணிக்குறதுல என்ன ப்ராப்ளம் உனக்கு?"



"...."



"ப்ளீஸ் வருண்....என் காதல புருஞ்சிக்கோடா..."



"...."



"ப்ளீஸ்டா...."காதல் யாசகம் கேட்டாள் அவள்...



"அபி ஐ அம் சாரி டு சே திஸ்.... உங்கள என் மனைவியா என்னால ஏத்துக்க முடில...ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் மீ?"



"ஏன் ஏன் வருண் என்கிட்ட ஏதாவது குறை இருக்கா?"



"நோ நோ அப்பிடியெல்லாம் எதுமில்ல அபி...."



"அப்பறமும் ஏன் முடியாது"



"...."



"சொல்லு வருண்?"



"எனக்கு தெரியல அபி...என்ன அறியாம உன்ன பாதிச்சு இருந்தா ப்ளீஸ் ரியலி சாரி" என்றான் பரிதாபமாக....



காதல் தோற்றுப் போகும் வலியை விட காதல் மறுக்கப்படும் போது ஏற்படும் வலி மிகக் கொடியது!!!



அதைத்தான் இப்போது அபி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.



கண்ணியமாக காதலை மறுப்பவனை இன்னுமின்னும் பிடித்துத் தொலைக்கிறதே....

இந்த மனதை எப்படி கடிவாளமிட???



ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டவள் எதுவும் பேசாமல் தள்ளாடிய நடையுடன் சென்று விட தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் அவன்....



ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....



"க..கதிர்...மிஸ்டர்.ராகவன்?" இலேசான பதற்றத்துடன் கேட்ட ஆரவ்வை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து இருந்தான் கதிரவன்.



"எப்பிடி நடந்துது கதிர்?"



"சார்....அது வந்து... கரண்ட் ஷாக் அதிகமாகி இருக்கு"



"எல்லாம் உங்க கண்ட்ரோல்ல இருந்தும் எப்பிடி??"



"அவரேதான் தான் சார் பண்ணியிருக்காரு...."



"ஓகே லீவ் இட்.... அவர சந்தேகம் வராதபடி புதச்சிருங்க"எனவும் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க உதட்டோர சிரிப்புடன்



"எனக்கு என் அண்ணா முக்கியம் கதிர்" என்க அவன் அன்பில் புல்லரித்துப் போனது கதிருக்கு....



"நா பாத்துக்குறேன் சார்"



"எனக்கு தெரியுங்குற விஷியம் அண்ணாக்கு தெரிய வேணாம்... நா ஹேண்டில் பண்ணிக்குறேன்" எனவும் ராகவனை அப்புறப்படுத்தும் வேலேயில் கதிர் இறங்க அனன்யாவை நெருங்கினான் ஆரவ் தேவமாருதன்...



"ஓஹ்ஹோ...வாங்க மிஸ்டர்.ஆரவ்....

ஹீரோவோட தம்பிக்கு மரியாத தர்லன்னா நல்லா இருக்காதுல்ல"



"...."



"என்ன ஆரவ் சார் எதுவுமே பேச மாட்டிங்குறீங்க?"



"...."



"ம்...பரவாயில்ல அண்ணனவிட கோபம் குறைவுதான்னு ஒத்துக்குறேன்"



"...."



"அட என்ன சார் நீங்க....நம்பி பேசுங்க....நீங்க வந்தத நா யா.....ருகிட்டயும் சொல்ல மாட்டேன்" எனவும் சற்று உஷாரானவன் சுற்று முற்றும் இருந்த அடியாட்களை கூர்ந்து கவனிக்க அவளுக்கு பின்னால் அதாவது அவளுக்கும் அவள் மறைத்திருக்கும் நடுவிலுள்ள போட்டோவுக்கும் பின்னால் நேராக இவன் கண்களை சந்திக்க முடியாதபடி நின்றிருந்தான் ஒருவன்....



உதடு ஏளனமாக வளைய அவளை தாண்டி அவனிடம் செல்லப் போனவன் அங்கு புன்னகைத்துக் கொண்டிருந்த தன் சகோதரியைப் பார்த்து கண்கள் கலங்க அப்படியே தடைப்பட்டு நின்று விட்டான்.



அவன் கண்டுபிடித்து விடுவானோ என்ற பதற்றத்தில் இருந்தவள் அவன் திடீரென தடைப்பட்டு நிற்கவும் சிரித்து விட்டு மறுபடியும் பேசினாள்.



"அவ்வளவு பாசமா அண்ணனுக்கும் தம்பிக்கும்....தெரிஞ்சிருந்தா ராகவன் அங்கிள் கிட்ட சொல்லி உன்னையும் உன் அண்ணன் கூடவே வெச்சிருக்கலாம்"என்ற செய்தி அவனுக்கு புதிதே ஆனாலும் அதிர்ச்சியை காட்டினால் உண்மை வெளியே வராது என அறிந்தவன் மறந்தும் அவள் புறம் திரும்பவே இல்லை.....



"உனக்கும் விஷயம் தெரிஞ்சிருக்கும் போலவே.... ஆனா பாரு உன் அண்ணனுக்கு தான் எதுவுமே தெரியல....ராகவன் அங்கிள் சொல்லும் போது அப்பிடியொரு ஷாக் குடுத்தானாம்னா பாத்துக்கோயேன்"



"...."



"ஆரு என் தம்பிதானேன்னு ஒரே அழுகதானாம் போ...."



"...."



"தன் தம்பின்னு தெரியாமலேயே வளர்த்திருக்கான்னா...அவன விட முட்டாள நீ பார்த்திருக்க?"



இப்போது ஆரவ்விற்கு அணைத்துமே புரிந்து போனது....



அன்று ரிஷி உணர்ச்சிவசப் பட்டதற்கான காரணம் இன்று அவன் அறிந்து கொள்ள நேர்ந்ததில் அவனுடன் பேசாமல் கஷ்டம் கொடுத்துக் கொண்டிருந்த தன்னை நினைத்தே கோபம் கோபமாக வந்தது அவனுக்கு....



"என்ன மிஸ்டர்.ஆரவ் அப்பியே வாயடிச்சிப் போய் நிக்குறீங்க... ஓ...ஓ...தங்கையை இழந்த துக்கமோ?"



"...."



"அதையும் நம்ம ஆளுங்கதான் செஞ்சிருப்பாங்கன்னு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லல?" தாங்கள் செய்த கேவலமான வேலையைப் பற்றி பெருமை பீற்றிக் கொண்டிருந்தவளைப் பார்த்து பல்லை கடித்தவன் அங்கு நின்றிருந்தவனிடம் செல்ல எண்ணி ஒரு எட்டு எடுத்து வைக்க அவள் அடுத்து சொன்ன விஷியத்தில் கால் அந்தரத்தில் அப்படியே நின்று போனது.



"மரியாதயா ஹரிஷ விட்டுட சொல்லு உன் நொண்ணன் கிட்ட.... அவன வெச்சி ஒன்னுமே கிழிக்க முடியாதுன்னு தெரிஞ்சும் அவன எதுக்கு வெச்சிருக்கான்?" ஆவேசமாக கேட்டவளைப் பார்த்து நின்று நிதானித்தவனின் உதட்டில் மர்மப் புன்னகை உதயமானது.



***



"சொன்னா கேளு ராக்கெஷ்....நீ இப்போ இன்டியா போறது நாட் சேஃப் மச்சான்.... நம்மாளுங்க எல்லாத்தயும் பாத்துக்குவாங்கடா...." போயே தீருவேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்த ராக்கேஷிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் ரகு...



ஆனால் அவன் தடுப்பதற்கான காரணமே வேறு என்பதை அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது....



'திரும்பவும் ஆர்.கேய பாத்துட்டான்னா...' மீண்டும் அதையே நினைத்தவனின் உடல் தூக்கிவாரிப்போட தடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் ரகு.



"நா போனும் ரகு... ராகவன் அங்கிள் எனக்கு இன்னொரு அப்பா மாதிரிடா...ப்ளீஸ்"

கண்கள் உண்மையிலையே கலங்க ஏளன முறுவலொன்று ரகுவின் உதட்டில்....



'உன் குடும்பத்துல ஒருத்தர் இறந்ததுக்கே இப்பிடி வலிக்குதே....அப்போ என் ஆர்.கேக்கு எப்பிடிடா வலிச்சிருக்கும்'



"நா போகனும் மச்சி"



'நீ போக கூடாது...உன்ன போக நா விடமாட்டேன்டா துரோகி....'



"ஏய் ஏன்டா அமைதியாகிட்ட?"



'உன் கிட்ட நடிக்குறது எப்போதான் முடிவுக்கு வருமோ?'



"சரிடா நா போகல"



'ஹப்பாடா'



"டேய் அதான் போகலன்னு சொல்றேலன்லடா?"



"மச்சான் நீ ரொம்ப டிஸ்டர்ப்ட்டா இருக்க...ரெஸ்ட் எடு...நா இங்க இருந்தே வேலய பாத்துக்குறேன்" என்றவன் யாருக்கோ அழைப்பு விடுத்து காதிற்கு கொடுத்த படி வெளியே செல்ல அமைதியாய் கண்களை மூடினான் ராக்கேஷ் கண்ணா....



***



"சித்து எங்கடா இருக்க?"



"ஏன் மதன் என்னாச்சு?"



"நீ எங்க இருக்கன்னு முதல்ல சொல்லுடா?"



"காலேஜ்லதான் மச்சி"



"சரி...அப்போ காலேஜ் முடிஞ்சு என்ன வந்து மீட் பண்ணு"



"எனி ப்ராப்ளம்?"



"நீ வா சொல்றேன்"



"ம்...ஓகே டா....."என கட் செய்தவன் தன்னருகில் சோகமாய் அமர்ந்திருக்கும் தன்னவளைப் பார்த்து

"ஏன் ரிதி....என்னாச்சுமா?"

என்றான் கனிவாக....



"கயல பாத்தே டூ மந்த்ஸ் ஆகுது சித்....காலேஜ் பக்கமே வர்ல"



"நீ போன்ல பேசினியா?"



"ஆமாதான்....ஆனாலும்...."



"நீ அவ வீட்டுக்கு போய் பாத்துட்டு வாயேமா"



"அம்மா அப்பா ஊர்ல இல்ல சித்....நானும் யாழியும் மட்டும்தான் இருக்கோம்..."



"அதுலென்ன இருக்குமா....

யாழினியோட பொய்ட்டு வந்துடு"



"ம்...பட்..."



"இன்னும் என்னடி?"



"யாழி எப்போ பாத்தாலும் அழுதுகிட்டே இருக்கா சித்"



"ஏன்?" எனவும் அவள் வாழ்வில் நடந்தது அனைத்தையும் கூற வாயடைத்துப் போய் நின்றான் சித்தார்த்.



"ஏன் சித் எதுவுமே பேச மாட்டேங்குறீங்க?"



"விஷ்வானா....நம்ம....ஐ...ஐ...மீன் லாயர் விஷ்வாவா?"



"ம் ஆமா சித்"



"பட் அவரு ரொம்ப சாஃப்ட் நேச்சராச்சேமா?"



"அது உங்களுக்கு எப்பிடி தெரியும்?"



"அஷ்வியோட அண்ணன்குற முறைலதான்"



"வாட்...அப்போ கயலோட அண்ணனா விஷ்வா சார்?"



"அஷ்விக்கு அண்ணன்னா கயலுக்கு மட்டும் தம்பியாடி?"



"விளையாடாதீங்க சித்"



"ஆமாடி ஆமா"



"அப்போ ஓகே"



"என்ன ஓகே?"



"கயல பாக்க போகும் போது நிச்சயமா யாழிய அழச்சிட்டு போகவே வேனும்" அவள் திட்டம் புரிந்தது போல் சிரித்தான் சித்தார்த்.



***



அவள் கண்ணீர் தனக்கு ஏன் இத்தனை வலியை ஏற்படுத்துகிறதென்று யோசித்து யோசித்து குழம்பிக் கொண்டிருந்தான் ரிஷி...



வெளியே போனவள் இன்னும் உள்ளே வரவே இல்லை....



யோசித்துக் கொண்டு இருந்ததாலோ என்னவோ நிழற்படங்கள் மீண்டும் அவனுக்கு வராதது பெரும் நிம்மதியாய் இருந்தது அவனுக்கு...



விதி வலியது என்பது போல் மீண்டும் நிழற்படங்கள்!!!



(இப்போது அந்தப் பெண் இல்லை...அவன் இந்த நாட்டில் கூட இல்லை என்பது போல் தான் இருந்தது....

ஏதோ பெரிய மருத்துவமனை போல் இருக்க அதில் மூர்ச்சையாகி கிடக்கிறான் இவன்....

பெரிதாக ஏதும் அடிபடவில்லை என்றாலும் கை கால்களில் எல்லாம் சிறாய்ப்பு.....

யாரோ ஒருவர் வந்து அவனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்....

திடீரென கதவு திறக்கப்பட யாரென்று பார்க்க நினைக்கும் போதே ஒரு சிறுமி அவனிடம் ஓடி வருகிறாள்....

"அங்கிள்....அங்கிள்....

இதோ பாருங்க உங்கள போலவே ஒருத்தர் இதுலயும் இருக்காரு...."

என்றவாறே அவள் வைத்திருந்த ஐ பாடை வைத்துக் கொண்டு துள்ளிக் குதிக்கிறாள்....

அவள் சந்தோஷத்தையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் பிம்பம் காற்றோடு கலைந்து போகிறது....)



"நோ...நோ....ப்ரீதி ப்ளீஸ்மா அங்கிள் கிட்ட வந்துடு....ப்ளீஸ்" தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தான் ரிஷி!!!



பல்வேறுபட்ட குரல்கள் காதுக்குள் மாறி மாறி ஒலிக்க "ஸ்டாப்....இட்" என அதிரும்படி கத்திய சத்தத்தில்தான் ரூமிற்குள் ஓடி வந்தாள் அஷ்வினி ரிக்ஷிதா....



அஜய் மட்டும் அறிந்த தகவல்கள் இவைதானோ!!!



"தே...தேவ் என்னாச்சு தேவ்...இங்க பாருங்க தேவ்...என்ன பாருங்க ப்ளீஸ்" என்றவாறே அவனை உலுக்க



"ப்ளீஸ் போய்டாத ப்ளீஸ்.."அவன் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.



"தேவ் நா எங்கயும் போகல...இங்க தான் உங்க கூடவே இருக்கேன் தேவ்..."



"இல்ல இல்ல...பொய் பொய் பொய்...."



"இங்க பாருங்க தேவ்...என்ன பாருங்க" என்றவள் வலுக்கட்டாயமாக தலையை உயர்த்தி அவன் முகத்தை தாங்கி தன்னை பார்க்கச் செய்தாள்.



"தேவ் நா எப்பவும் உங்க கூட தான் இருப்பேன் தேவ்...ப்ளீஸ் கண்ட்ரோல்"என்றவள் அவனை நினைத்து அழ அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டவன் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.



அவன் சிகையை கோதிவிட்டவள்

"என்ன பண்ணுது தேவ்... சொன்னாதானே ஏதாவது பண்ணலாம்...நீங்க இப்பிடி இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தேவ்"

அவளுடைய பிரத்தியேக அழைப்போ அல்லது அவளின் அருகாமையோ ஏதோ ஒன்று அவனை அமைதிப் படுத்த அவள் வயிற்றில் இன்னும் முகத்தை அழுத்தப் பதித்தான்.



"உங்களுக்கு ரொம்ப தல வலிக்குதா...பட் ஏன் திடீர் திடீர்னு வலிக்குது?" என்று கேட்டவளை உதறித் தள்ளியவன் கோபமாக



"போ இங்க இருந்து....உன்ன பாக்கவே எனக்கு பிடிக்கல....நீ பக்கத்துல வந்தாலே நா நானாவே இல்ல....மரியாதயா போயிடு....நீயும் அவள மாறி ஏமாத்திட்டுதான் போவன்னு எனக்கு தெரியாதுன்னு நினச்சிட்டு இருக்கியா....போ வெளிய....கெட் லாஸ்ட்" என அடித் தொண்டையால் கர்ச்சிக்க விக்கித்துப் போய் நின்றிருந்தாள் அந்தப் பேதை!!!



"கெட் அவுட்....சொன்னது காதுல விழல?" மீண்டும் மீண்டும் அவன் கோபப்பட உள்ளிருந்த

ட்ரஸ்ஸிங் ரூமிற்குள் சென்று கதவை அடைத்தவள் அதன் மீது சாய்ந்து கதறி அழுதாள்.



அழுதபடியே கஷ்டப்பட்டு எழுந்தவள் அவனுக்கே தெரியாமல் அங்கே மாட்டி வைக்கப்பட்டிருந்த அந்த ஆளுயரப் படத்தின் முன்னால் வந்து நின்று



"முடியலயே தேவ்.... எவ்வளவு தான் நானும் தாங்கிப்பேன்.... உ...உ... உங்களுக்காக உங்களுக்காகன்னு வலிய பொருத்துகிட்டா க...க..கடைசில என் மனசு வெடிச்சுடும் போல இருக்கு தேவ்...என் விதியே இப்பிடித்தானா....இல்லன்னா திடீர்னு மாத்தி எழுதிட்டாரா கடவுள்... சொல்லுங்க தேவ்....உங்கள பாத்துட்டு இருந்தாலே போதும்னு தானே நீங்க கூப்ட உடனே ஆரு கூட வந்தேன்.... நீங்க என்ன பாக்கவே புடிக்கலன்னு சொ...சொல்றீங்களே தேவ்... எனக்கு வலிக்கும்னு நீங்க கொஞ்சம் கூடவா யோசிக்கல... வலிக்குது தேவ்....இங்க...இங்க வலிக்குது...."என இதயத்தை குத்திக் காட்டியவள் மீண்டும் அவனிடமே தஞ்சமடைந்தாள்.



"ந...ந...நான் எப்பிடி தேவ் உங்களுக்கு புரிய வெப்பேன்....ஏன் இப்பிடி ஆச்சு.... உங்களுக்கு பதிலா எனக்கு அடிபட்ருக்கலாமே தேவ்....நா...நா...பேசாம செ...செ...செத்து போயிடவா தேவ்....செத்துப் போயிட்றேன் தே..தேவ்... உங்கள விட்டு தூரமா போயிட்றேன்....ப...பட் ந...ந...நம்ம குழந்த இருக்கே தேவ்...நா என்ன பண்ணட்டும்....இ...இது மட்டும் இல்லன்னா உ...உங்களுக்கு ஆக்ஸிடென்ட்னு கேள்விப்பட்டப்பவே நா...நானும் செத்து போயிருப்பேன் தேவ்....இ... இந்த குழந்தக்காக மட்டும் தான் தேவ் பொறுத்துக்குறேன்... இ..இல்லன்னா....

இல்லன்னா எப்போதோ உங்கள விட்டு போயிருப்பேன்....உங்க வெறுப்புக்கு ஆளாகாம போய் சேந்திருப்பேன் தே...தேவ்...."மடங்கி அமர்ந்து அழுது தீர்த்தவள் கால்களை குறுக்கி வயிற்றை பிடித்துக் கொண்டே தரையிலேயே உறங்கிப் போனாள் பேதை!!!!



.......



ஏசிவிட்டாலும் எங்கே வெளியே சென்று விடுவாளோ என பயந்திருந்தவனுக்கு அவள் அறைக்குள் இருக்கும் ட்ரஸ்ஸிங் ரூமிற்குள் சென்றதுவே நிம்மதியாகிப் போக நீண்ட ஆசுவாசப் பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான்.



கொஞ்ச நேரம் லேப்பில் தன் வேலைகளில் மூழ்கிப் போனவன் பசியெடுக்கவும்தான் நிமிர்ந்து மணியைப் பார்த்தான்.



அது மதியம் ஒரு மணி எனக் காட்டவும் தன் மொபைலை எடுத்து அதில் கொஞ்ச நேரம் ஆராய்ந்து கொண்டிருந்தவன் நெற்றி சுருக்கி வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியவனுக்கு அப்போது தான் அவள் ஞாபகம் வந்தது போலும்



மதியம் ஒன்றரை மணியைத் தாண்டியும் வெளியே வராமலிருக்கவும் அவனுக்குள் சிறுது சிறுதாக பதற்றம் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது.



உள்ளுக்குள் போவோமா வேண்டாமா என மனதிற்குள் பட்டிபன்றம் நடத்திக் கொண்டு அறையின் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்தவன் சட்டென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்துவிட்டான்.



நுழைந்தவனின் கண்களில் முதலில் பட்டது அவனின் ஆளுயரப் படம் தான்!!!



யாருமற்ற அனாதை போல் அவள் அதன் கீழேயே குறுக்கிக் கொண்டு படுத்திருந்த கோலம் அவன் இதயத்தை கிழிக்க அவனையறியாமல் அவன் கண்களே கலங்கிப் போயிற்று!!!



ஈரெட்டில் அவளை அடைந்தவன் தன் மடி மீது ஏந்திக் கொண்டு அவளை தட்டி எழுப்ப முயல அவளோ அவன் கொடுத்த தாக்கத்திலிருந்து மீளாதவளாய் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.



"போயிட்றேன் தேவ்...நா செத்து போயிட்றேன்...அப்போ என்ன பாக்க வேண்டிய அவஷியம் உங்களுக்கு வராது தேவ்...." ஜபம் போல் உச்சரித்துக் கொண்டிருந்த வார்த்தைளில் கலங்கியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் கொட்டத் தொடங்க



"நோ....நோ....அஷு....நா இருக்கேன்டா ஒனக்கு...ஒன்ன புடிக்கும்டி எனக்கு...இப்பிடில்லாம் பேசாதடி" பைத்தியம் போல் அவள் கண்ணத்தை தட்டிக் கொண்டே இருந்தவன் அவள் பெயரை தான் அழைத்ததை உணர்ந்தானா???



மனதின் அடியாழத்தில் கல்வெட்டாய் பதிந்து போயிருந்த அவனவளின் பெயரல்லவா அது!!!



எப்படி மறப்பான்...???



கண்களை துடைத்துக் கொண்டவன் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு வெளியே வந்து கட்டிலில் கிடத்த அந்த நேரத்திலும் அவள் கை அவன் டீ-ஷர்ட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க அவளருகே அமர்ந்தவன் தன் மடியிலேயே அவள் தலையை வைத்து



"இங்கப் பாரு....எந்திரி... எந்திரிடி...ப்ளீஸ்" மறுபடியும் கண்ணத்தை தட்ட திடுக்கிட்டு விழித்தாள் அவனவள்!!!



"எ... என்ன பண்ணுது?" என தன்னிடம் பதட்டமாய் கேட்டுக் கொண்டிருந்தவனை புரியாது பார்க்க



"நான் தான் தூக்கிட்டு வந்தேன்" என்றான் அவளுக்கு விளக்கும் முகமாய்....



அவள் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க



"ஐ...ஐ..அம் சாரி" என்றுவிட்டு அவள் முகம் நோக்க



"இ...இல்ல இல்ல தே...வந்து நீங்க எதுக்கு என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க?" என்றாள் அவசரமாக மறுத்து...



"இல்ல நா இனிமே அப்பிடி பேச மாட்டேன்...சாரி"



"நோ...தே...ஐ..ஐ..மீன் நீங்க மன்னிப்பு கேக்காதீங்க...எ...என் மேலதான் தப்பு..."என்றவள் சங்கடத்தை தவிர்க்க எண்ணி சட்டென எழுந்து குளியலறை சென்று விட அவளையே வலியுடன் தொடர்ந்தன அவன் கண்கள்....



தொடரும்.......



27-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 36 ❤



"ப்ளீஸ் யாழி..."



"நோ ரித்து என்னால எங்கேயும் வர முடியாதுடி"



"அப்பா இருந்தா... அவர் கூட போயிருப்பேன்டி...துணைக்காக தானேடி கூப்புட்றேன்...ப்ளீஸ் வா யாழி" அவள் மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கொண்டே இருக்கவும் வெறு வழியின்றி அவளுடன் கிளம்பினாள் யாழினி....



.......



"ஹாய் கயல்...."என்றவாறே உள்ளே நுழைந்த ரித்திகாவை பார்த்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தவள் சந்தோஷத்துடன் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.



"வா யாழி..."அவளையும் வரவேற்க கீழே குனிந்திருந்து நிமிர்ந்தவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் வருண்....



வீடு மாறி வந்துவிட்டோமோ என நினைத்தவள் அவசரமாக பார்வையை சுழற்ற அவளை கோபமாய் நோக்கிக் கொண்டிருந்தது அவனின் பார்வை...



"ஏன் யாழி...அங்கேயே நின்னுட்ட...உள்ள வா..." என்றவள் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் அமர வைத்து விட்டு



"அண்ணா...இது ரித்து...இது யாழி...என்னோட ப்ரண்ட்ஸ்..."என அறிமுகப்படுத்தி வைக்க ரித்திகாவை மட்டும் பார்த்து சிரித்தவன் மறந்தும் அவள் புறம் திரும்பவே இல்லை....



"நீங்க பேசிட்டு இருங்கண்ணா...நா இதோ வந்துட்றேன்...."

என்றுவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள் கயல்...



"அம்மா அப்பா...வர்லியாமா?"



"இல்லண்ணா....அவங்க ஒரு திருமண வீட்டுக்கு போயிருக்காங்க....அதனால வர முடில..."



"ஓஹ்...நீ தனியாவா வந்த...போகும் போது ராத்திரி ஆயிடுமேமா?"



"இவ லர்லண்ணா கண்டிப்பா பயந்து தான் போயிருப்பேண்ணா...

பட் இவ கூட வந்ததால கொஞ்சம் பயமில்ல" என்று சிரிக்க அவளை தொட்டு மீண்டது அவனின் பார்வை....



அதை கண்டு கொண்டவள்

"அண்ணா நா...உள்ள பொய்ட்டு இப்போ வந்தட்றேன்...நீங்க யாழி கூட பேசிட்டு இருங்க"என்க அவள் அதிர்ந்து நோக்கவும்



"இதோ வந்துட்றேண்ணா...."

என்றவள் அவன் பதில் பேசும் முன் ஓடி விட்டாள்.



வந்ததிலிருந்து தலை குனிந்தே இருந்து கொண்டிருப்பவளை ஊடுருவியது வருணின் பார்வை....



கலங்கிய கண்களோடு சட்டென நிமிர்ந்தவள்



"உங்க வீடுன்னு தெரியாது விஷ்வா...இல்லன்னா வந்திருக்க மாட்டேன்"



"ஓஹ்..."



"ஐ அம் சாரி" என்றுவிட்டு மறுபடியும் குனிந்து கொள்ளவும் ரித்துவும் கயலும் வரவும் சரியாக இருந்தது.



"நீங்க பேசிட்டு இருங்க நா வந்துட்றேன்"என்றவன் தன்னறைக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்ள அங்கே அரட்டை தொடங்கியது.



"அஷ்வி அக்கா எங்க கயு?"ரித்திகா கேட்கவும்



"மேலதான் அத்தான் கூட இருக்காங்க ரித்து...இரு வர சொல்றேன்"



"இல்ல இல்ல வேண்டாம்...அவங்கள டிஸ்டர்ப் பண்ணாத"என சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் அஷ்வினி.



"அட அஷ்வியே வர்றா பாரு ரித்து..."எனவும் மூவரின் பார்வையும் அவள் புறம் திரும்பியது.



உதட்டில் ஒட்ட வைத்த புன்னகையுடன்

"வா ரித்து...வா யாழி... எப்பிடி இருக்கீங்க?"



"நல்லா இருக்கோம்கா...நீங்க?"



"நல்லா இருக்கேன் ரித்து....ஆமா... யாழி அழுதியா என்ன?"திடீரென அவள் கேட்கவும் அதிர்ச்சியானவள்



"இ...இ...இல்லயேக்கா...ஏ...ஏன் கேக்குறீங்க?"



"இல்ல உன் முகம் அழுத மாறி இருக்கு...அதான்..." என்றவளை பார்த்து



"அப்போ உன் முகம்??"ரிஷி கீழே இறங்கி வரவும் வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டாள் கயல்விழி....



வந்திருந்தவர்கள் மீது யோசனையாய் அவன் பார்வை படிய கயல்



"அத்தான் இது என் ப்ரண்ட்ஸ்....இவ ரித்திகா...இவ யாழினி"எனவும் கண்ணுக்கு எட்டாத முறுவலோன்றை வீசியவனின் பார்வை தன் மனையாளை தொட்டு மீண்டது.





இரவு.....



இராமநாதபுரம்.....



"விஜயா....ஏன் எப்போ பாத்தாலும் புலம்பிக்கிட்டே இருக்க?" சற்று அதட்டலாகவே கேட்டார் இராமநாதன்.



"ஏன்...ஏன்னு உங்களுக்கு தெரியாதா....?"அவரும் பதிலுக்கு கோபப்பட



"சரிமா.....விடு இப்போ நாம இப்பிடி புலம்புறதால என்ன ஆகிடபோகுது?"



"எப்பிடிங்க விட சொல்றீங்க...என் மக வாழ்க்கை ஊசலாடிட்டு இருக்கும் போது என்னால எப்பிடி நிம்மதியா இருக்க முடியும்?"



"என்னதாம்மா பண்றது...வரவான்னு கேட்டா அதுக்கும் பதிலே பேச மாட்டேங்குறா....இங்க வான்னு சொன்னா முடியவே முடியாதுன்னு ஒரேடியா மறுத்துட்டா....என்ன என்னதான் பண்ண சொல்ற?"



"அவ புள்ளதாச்சி பொண்ணுங்க.... இந்த நேரத்துலயா அவ வாழ்க்க இப்பிடியாகனும்?"



"கடவுள் பாத்துப்பாரு விஜயா....மனச தேத்திக்கோ"அவரை தன் நெஞ்சில் சாய்த்து ஆறுதல் படுத்தினார் அந்தக் கணவர்.



......



ஈஷ்வரி துங்குவதை உறுதிப்படுத்திக் கொண்டு தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த அஜய் தன்னை கட்டிப் பிடித்திருக்கும் அர்ஜுனின் தூக்கம் கலையாதவாறு எழுந்து வெளியே வந்தான்.





பலவித கேள்விகள் மனதை சுழற்றியடிக்க புரியாத புதிராய் இருக்கும் ரிஷியின் வாழ்க்கையைப் பற்றி மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டே இருந்தான்.



முன்பாவது கேட்டிருக்கலாம்...

இப்போது அதுவும் அவன் இருக்கும் இந்த நிலையில் என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்வது???



அஷ்வியுடன் வேறு பேசியே இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது....



ஏதாவது கேட்டாலும் ஆம் இல்லை என்று பதிலளித்துக் கொண்டிருப்பவளிடம் எத்தனை தடவைதான் கெஞ்சுவது???



அதுதான் அவள் போக்கிலேயே விட்டு விட்டான்.



விட்டு விட்டான் தான்...ஆனால் இருவரையும் நினைத்து மனம் படும் வேதனை அவன் மட்டுமே அறிந்த ஒன்று....



ஒரு பெரு மூச்சுடன் பால்கனியிலிருந்து கீழே பார்த்தவன் தந்தை யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பது கண்டு உள்ளே சென்று விட்டான்.



***



"ஹாய் மச்சி...." கதவை திறந்து கொண்டு மதனின் ஆபிஸ் அறையினுள் நுழைந்தான் சித்தார்த்.



"எல்லோரும் எஸ்கியூஸ் மீன்னு சொல்லிட்டு உள்ள வருவாங்க....நீ என்னடா இப்பிடி சொல்லிட்டு வர? என மதன் கேட்கவும் சிரித்து விட்டு கண்ணடித்துக் கொண்டே அமர்ந்தான் அவன்...



"அப்பறம் மச்சான் எப்பிடி இருக்க?" என சிரித்துக் கொண்டே கேட்ட மதனைப் பார்த்து அவனுக்கு உள்ளுக்குள் கலக்கியது.



'ஆஹா....எதுக்குப்போ நல்லவன் மாறி என்ன பத்தி விசாரிக்கிறான்.... ஆப்பு ஏதாவது வெச்சிருக்கானோ?'



"ஹி...ஹி...நல்லா இருக்கேனுங்க மதன் சார்...நீங்க எப்பிடி இருக்கீங்க?"



"அட...என்கிட்ட நீங்க கேப்பிங்கன்னு எதிர்பாக்கவே இல்லங்க ஆபிஸர்...அப்பிடியே புல்லரிக்குது போங்க"



'அடி கண்பார்ம்'



"அதான் கேட்டுட்டேன்ல மதன் சார்....பதில் சொல்லுங்க"



"நா நல்ல்ல்....லா இருக்கேனுங்க ஆபிஸர்"



'ஆரு பக்கி ஏதாவது சொல்லி இருக்குமோ...ச்சே ச்சே...அவன் என் உயிர் நண்பன்...அவன் சொல்லி இருக்க மாட்டான்'



"எதுக்குடா வர சொன்ன?"சீரியஸாக இருப்பது போல் முகத்தை மாற்ற அவனை முறைத்தான் மதன்.



'எதுக்கு மொறக்கிறான்?'



"வர சொன்ன காரணம்தானே...

சொல்லிட்டா போச்சு" என்றுவிட்டு லத்தியை உருவிக்கொண்டே எழ எச்சில் விழுங்கியவன்



"வாயாலேயே சொல்லலாமே மச்சி...எ..எதுக்கு உன் போலீஸ் ஆயுதமெல்லாம்...?" என கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்து திரும்பி ஓடப்பார்த்தவனின் டீ-ஷர்ட்டை இறுக்கப் பிடித்திருந்தான் மதன்.



"மச்சி...வேணாம்டா....நீ என் மேல கை வெச்சா என் ஆருயிர் நண்பன் உன்ன சும்மா விட மாட்டான்....

சொல்லிட்டேன் ஆமா.."



"அட பக்கி உன்ன வச்சி செய்ய சொன்னதே அவன்தான்டா...."



"என்னது....உயிரக் கொடுப்பான் நண்பன்னு தானேடா கேள்வி பட்ருக்கேன்... உயிர எடுப்பான்னு இப்போ தானே தெரியுது" நெஞ்சில் கை வைத்து மூக்கை உறிஞ்ச மதனின் அடியுடன் பேக்ரௌண்ட் மியூசிக் ஆரம்பமாகியது.



"அட சொல்லிட்டாவது அடியேன்டா....?"



"சொல்லாம அடிக்குறதுதான் போலீஸ் அடி மச்சான்..."



"அதுக்கு நானாடா கெடச்சேன் உங்க ரெண்டு பேருக்கும்....?"



"ஹஹ்ஹஹ்ஹா"



"துரோகிங்க"என முணுமுணுத்துக் கொண்டவன் எதற்கென்று தெரியாமலேயே அடி வாங்கிக் கொண்டிருந்தான்.



***



"சார்...மாறன் சார் வந்துகிட்டு இருக்கார்னு சொல்றாரு"பேசி முடித்து பயத்துடன் ஆரவ்விடம் கூறிக் கொண்டிருந்தான் கதிர்.



"என்னது அண்ணா வர்றாங்களா....எ...எப்போ வர்றாங்களாம்....?"



"இப்போதான் சார்"



"நீங்க வேலயெல்லாம் கரெக்ட்டா முடிச்சிட்டீங்கல்ல?"



"ஆமா சார்..."



"நா அப்பறமா உங்க கிட்ட பேசுறேன் கதிர்....அண்ணா வர்றதுக்கு முன்னாடி நா கெளம்பனும்...நீங்க எதுவும் தெரியாதமாறி கேஷுவலாவே இருங்க..ஓகே?"



"எஸ் சார்"கதிரிடமிருந்து பதில் வந்த அடுத்த நிமிடம் ஆபிஸிலிருந்து வெளியேறியிருந்தான் ஆரவ்....



அவன் சென்று சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்தது ரிஷியின் ரால்ஸ் ராய்ஸ்....



யாரையுமே கண்டு கொள்ளாது புயல் போல் உள்ளே நுழைந்தவன் தன் இருக்கையில் அமர்ந்து தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.



ஏதேதோ குரல்கள் மாறி மாறி அவனை துரத்திக் கொண்டே இருக்க நிலைமையை எப்படி சமாளிக்கவென்றே அவனுக்கு தெரியவில்லை...



அஷ்வினியிடம் முகம் கொடுத்து பேசவே அவனுக்கு சங்கடமாக இருக்க நேரே ஆபிஸுக்கு கிளம்பிவிட்டான்.



வரும் வழியெல்லாம் அவனையே பின் தொடந்து கொண்டிருந்த அந்தக் குரல்களிலிருந்து தப்பிக்க வழியின்றி கண்மண் தெரியாமல் ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.



இதோ இப்போதும் கூட விடாமல் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றன....

ஆனால் எப்போதுமே அவள் பக்கத்திலேயே இருக்க முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவன் தலையை இறுக்கப் பிடித்து எப்படியாவது அதிலிருந்து விலக நினைத்தான்.



ஆனாலும் முடியவில்லை!!!



சட்டென மொபைலை எடுத்தவன் போகவே பயந்து கொண்டிருந்த கேளரிக்குள் நுழைய அதிலே முழுவதுமாக நிறம்பியிருந்தாள் அவனவள்....



இதற்காகத் தானே பயந்ததும்....



ஏற்கனவே வால் பேப்பராக இருந்த அந்த படத்தை தட்டி வருடிக் கொடுத்தவன் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள மாயமாய் மறைந்து போயின அந்தக் குரல்கள்!!!



அவளுக்கு இத்தனை சக்தியா என அதிர்ந்து போன அவன் மனதுக்கு அவளுக்கு அல்ல அவள் காதலுக்குத்தான் அத்தனை சக்தி என்று யார் சொல்லி புரிய வைப்பது???



வெளிநாடு போகும் வரைதான் ஞாபகம் இருக்கிறதென்றால் அதன் பின் அவன் வாழ்க்கை அவளை சுற்றியே இருந்திருக்கிறதென்று அப்போதாவாது அவன் புரிந்து கொண்டிருக்கலாம்....



ஆனால் அதுவெல்லாம் அவன் மண்டையில் உறைத்தால் தானே உணர்வதற்கு????



......



அவனிடம் மருந்தை நீட்டிக் கொண்டிருப்பவளையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி...



தான் அவ்வளவு பேசியும் எந்த எதிர்வினையுமே அவளிடமிருந்து வெளிப்படாதது அவனை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருந்தது.



மறுக்காமல் அதை வாங்கி அவளை பார்த்துக் கொண்டே குடித்தவன் மீண்டும் அவளிடம் நீட்ட அதை வைக்க திரும்பிப் போக எத்தனித்தவளின் கையை சட்டென எட்டிப் பிடிக்கவும் விதிர்விதிர்த்துப் போனது அவன் மனையாளுக்கு!!!



தன் கையிலிருந்த க்ளாஸை கெட்டியாக பிடித்து கண்களை இறுக்க மூடிக் கொண்டவளுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது என்ன வார்த்தை சொல்லி விஷமாய் கக்கப் போகிறானோ என்று....



"உன் பேரு என்ன?" என்ற அவனின் கேள்வியில் ஒரு முறை செத்து மடிந்தாள் அவனவள்....



"...."



"ஏன் பேரு கூட சொல்ல மாட்டியா?"



முன்பெல்லாம் அவள் கேட்டாள்...இப்போது அவன் கேட்கிறான்...இந்த விதியை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே அவளுக்கு புரியாமல் போயிற்று....



"ஏன் எப்போ பாரு அமைதியாவே இருக்க?"



"...."



"சரி விடு...முதல்ல பேரு சொல்லு?"



"அ...அ..அஷ்....வி...னி ரிக்ஷிதா" அவனுக்குள் சுர்ரென்று உள்ளுக்குள் குளிர்ந்து போக கண்களை இறுக்க மூடிக் கொண்டான்.



பதில் வராது போகவும் சட்டென அவன் புறம் திரும்பியவள் அவன் கண் மூடி இருப்பதை பார்த்து பதறிப் போனாள்.



"எ...என்னாச்சு தேவ்..ம...மறுபடி தல வலிக்குதா உங்களுக்கு?" அவளையறியாமலேயே அவனை நெருங்கி விட்டிருக்க அவள் குரலில் சிந்தை கலைந்தவனுக்கு அவனுக்கான அவள் பதற்றம் கூட ஒரு இதத்தை பரப்ப அவள் சொல்வது காதிலேயே விழாதது போல் கண்மூடியே அமர்ந்திருந்தான் அந்தக் கள்வன்....



அவன் பேசாமலேயே இருக்கவும் அழுதே விட்டாள்.



"தே...தே...தேவ் ப்ளீஸ்...எனக்கு பயமா இருக்கு...கண்ண திறங்க தேவ்..." எனவும் தான் அவள் குரல் மாறுபாட்டில் அவள் அழுவதை புரிந்து கொண்டவன் பட்டென கண்களை திறந்தான்.



அவளை தள்ளி நிறுத்தி எழுந்து கொண்டவன் அவள் சுவற்றோடு சாய்ந்து நிற்க அவள் முகத்தை கைகளில் ஏந்தி தன் கட்டை விரலால் கண்ணீரை துடைத்து விட நம்ப முடியா ஆச்சரியத்தில் அவனை விழி விரித்து நோக்கினாள்.



"நீ அழறது எனக்கு இங்க வலிக்குது பேபி...ஏன்னெல்லாம் எனக்கு தெரியாது பட்...இனிமே நீ அழக்கூடாது" எனவும் இருந்த உற்சாகம் வடிந்து போனாலும் சந்தோஷத்தில் அவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கின.



"ப்ச்....இப்போதானே சொன்னேன் அழறது பிடிக்கலன்னு....மறுபடியும் கண்ணு கலங்கற?" அவன் எரிந்து விழ முன்னுக்குப் பின் முரனான அவன் செயற்பாட்டில் அவள்தான் குழம்ப வேண்டியதாகிப் போனது.



அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு அவனை ஏறிட மெலிதாக சிரித்தவன் அவள் கண்ணத்தை தட்டி



"குட்..."என்றுவிட்டு சென்று விட அவனையே செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி....





காலை....



அன்று சற்று உற்சாகத்துடன் தான் எழுந்தாள் பேதை....

எழுந்து கீழே காலை வைக்கப் போனவளுக்கு அப்போதுதான் அந்த அறை இருந்த கோலமே கண்ணில் விழுந்தது போலும்...



உடனே தூக்கியடிக்க முடியாததை தவிர அதாவது அவன் படுத்திருந்த அவள் படுத்திருந்த கட்டில் சோபாவைத் தவிற மற்ற அணைத்து பொருட்களுமே கீழேதான் சிதறிக் கிடந்தது.



"ஏன் என்னவாயிற்று... மறுபடியும் ஏதாவது....கடவுளே..."

அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் கஷ்டப்பட்டு அறையைக் கடந்து வெளியே ஓடினாள்...



வெளியே அதை விடப் பேரதிர்ச்சி என்றே தான் கூற வேண்டுமோ



அறை மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட வீடே அலங்கோலமாகத் கிடந்தது.



கயல்....அண்ணா....ஆரு.... ஊஹூம் யாருமே வீட்டில் இருப்தாக தெரியவே இல்லை...



தரையில் மடிந்து அமர்ந்து பெருங்குரலெடுத்து அழத் துவங்கினாள் பேதை!!!



தொடரும்.......



28-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 37 ❤



"அண்ணா....ஆர்.கே....அத்தான்...."



ஊஹூம் யாருடைய குரல்களுமே அவன் காதில் விழவே இல்லை....



அந்த அதிவேக நெடுஞ்சாலையில் காற்றை கிழித்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தது ரிஷியின் ரால்ஸ் ராய்ஸ்....



எங்கே என்னவாவது நடந்துவிடுமோ என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு அவனுக்குப் பின்னால் காரில் வந்து கொண்டிருந்தனர் மூவரும்.....



கத்துவது கேட்டாவது வேகத்தை குறைக்க மாட்டானா என்றுதான் மூவரும் கத்தியதும்...



எங்கே அதுவெல்லாம் அவன் உணர்ந்தாலல்லவா கேட்க....



அவனுடைய நினைவெல்லாம் தான் இன்று காலையில் நடந்தவற்றையே மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டிருந்ததே!!!



(அவளை விட உற்சாகத்துடன் தான் அவனும் அன்று எழுந்திருந்தான்.



ஆபிஸ் போக தன் கப்பேர்ட்டை திறந்து ஷர்ட்டை இலுத்தெடுத்தவனின் கால்களின் கீழே வந்து விழுந்தது ஒரு வெள்ளை நிற கவர்....



அதை தூக்கி முன்னும் பின்னும் பார்த்தவன் அலட்சியமாக தூக்கிப் போட்டு விட்டு நகர மனம் அலைபாயத் தொடங்கவும் வேறு வழியின்றி அதைப் பிரித்து உள்ளிருந்ததை வெளியே எடுத்தான்.



அவை ராமினதும் அஷ்வினியினதும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!!



அன்று நீ மட்டுமே போதும் என்று விட்டுவிட்டான்...

ஆனால் இன்று???



கவரைப் பிரித்து வெளியே எடுத்து பார்த்தது வரை மட்டுமே அவன் நிதானத்தில் இருந்தானென்றே கூற முடியும்.....



ஏற்கனவே ஒரு துரோகத்தில் அடிபட்டு எழுந்தவனுக்கு இதை சத்தியமாய் தாங்கவே முடியாமற் போக வெறிபிடித்தவன் போல் எல்லாவற்றையும் கீழே போட்டு உடைத்தான்....



வீட்டையே ரெண்டாக்கியவன் கண்ணில் காண்பவர்களை கூட விட்டு வைக்கவில்லை...



அப்படி ஒரு வெறி....



எல்லாவற்றையும் அடித்து நொறுக்கியவன் தடுக்க வந்த வருணையும் ஆரவ்வையும் தள்ளி விட்டு வெளியேறினான்.



என்ன செய்வது எங்கே செல்வது என்று யோசிக்கும் நிலையில் கூட அவன் இல்லை....



கண்முன்னே அதே புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் வர அவனுடைய வேகமும் இன்னுமின்னும் கூடிப் போனது!!!)



"ஆர்.கே ப்ளீஸ் ஸ்டாப் மச்சி....எதுவானாலும் பேசி தீத்துக்கலாம்டா....ப்ளீஸ்" காரிலிருந்தே அவனை நோக்கி கத்தினான் வருண்.



காரணம் தெரிந்தாலாவது பரவாயில்லை என்றிருந்தது மூவருக்கும்....



இடையில் ஒரு லாரியில் மோதப்பார்த்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்க பயம் நெஞ்சை அடைந்திருந்தது மூவருக்கும்....



....



அழுது அழுது அந்தப் பேதைக்கு அதற்கு மேல் கண்ணீர் கூட வற்றி விட்டது போலும்....



மூலை அப்போதுதான் அதன் செயற்பாட்டை ஆரம்பிக்க அவசரமாக எழுந்தவள் ஒரு இடம் விடாது சல்லடைப் போட்டுத் தேடி சலித்துப் போனது மட்டுமே மிச்சம்...



யாருடைய மொபைலுமே எடுக்கப்படாமல் போக அப்பேதைக்கு கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்து விடும் நிலைதான்....



அஜய்யுடைய போனும் சுவிட்ச் ஆஃப் என்றுவிட மதனுக்கு அழைத்தாள்...



ரிங் சென்றுகொண்டே இருக்க எடுக்கும் வழியை காணாததால் வேறு வழியின்றி சித்தார்துக்கு அழைத்தே விட்டாள்.



"அஷ்வி..." நம்ப முடியா ஆச்சரியத்தில் அவன் குரல் ஒலிக்க இவள் குரல் பதற்றமாய் இடையிட்டது.



"சி...சித்து...பயமா இ...இருக்குடா... வீ...வீ...வீட்ல யாரயும் காணோம்டா...."



"வாட்....என்னடி சொல்ற...எல்லா இடத்துலயும் தேடி பாத்தியா....?"



"ஆ...ஆமா...நல்லா பாத்துட்டேன்... சித்து....என்னால முடிலடா....யாரும் போன் கூட தூக்க மாட்றாங்க...."



"ஓகே ஓகே...நீ...நீ அழாத....நா இதோ வந்துட்றேன்..."



"வாடா சீக்கிரம்...பயமா இருக்குடா...."



"ஏ....பயப்படாத அஷ்விமா...நா வந்துட்டே இருக்கேன்" அவளுக்கு தைரியம் சொல்லி விட்டு இவனும் மீண்டும் மீண்டும் அனைவருக்குமே அழைத்தான்.



யாரும் எடுக்கும் நிலையில் இல்லை போலும்....



"அஷ்வி...."கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தவன் அவனும் செர்ந்து மீண்டுமொருமுறை தேடி விட்டு அவளை கூட்டிக் கொண்டு கிளம்பினான் அவர்களை தேடி....



...



"அண்ணா எனக்கு பயமா இருக்குணா... அத்தான் எதுக்காக இப்பிடி பண்றாங்க?"அழுது கொண்டே புலம்பிக் கொண்டிருந்தாள் ஆரவ்வின் மனையாள்.



"அம்மு...என் போன் சுவிட்ச் ஆஃப் ஆயிருச்சு....வருண் அண்ணா போனும் சுவிட்ச் ஆஃப்...அஷ்விக்கு முதல்ல போன போடு..."

காரோட்டியபடியே கட்டளை இட்டுக் கொண்டிருந்தான் ஆரவ்.



அப்போதுதான் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் அவள் நினைவே வந்தது போலும்...



வருண் தலையில் கை வைத்துக் கொள்ள கயல் பதற்றத்துடனே தன் தமக்கைக்கு அழைப்பெடுத்தாள்.



"க...கயு...."அழுகையில் வெளிவந்த அவள் குரலில் மனம் கனத்துப் போனது தங்கைக்கு...



"அ...அக்கா..."



"என் தேவ் எங்கடி....பயமா இருக்குடி....அ...அ...அவருக்கு அவருக்கு ஒன்னில்லல்லடி?"



"இ...இல்லக்கா...இல்லக்கா...நீ பயப்படாத..."



"நா...நா சித்து கூட தான் வந்துட்ருக்கேன்....எ...எங்க இருக்காரு?"



"அ...அது...அது வந்துக்கா..."



"என்ன கயு...சொல்லுடி?" எனவும் இனியும் மறைப்பது ஆபத்து என்பதை உணர்ந்தவள் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடிக்க கையிலிருந்த மொபைல் நழுவி காருக்குள் விழ அவளையே பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த் பயந்து போனான்.



"என்னாச்சு அஷ்வி?"



"...."



"அஷ்வி..."என உலுக்கவும் சுயநினைவுக்கு வந்தவள் முகத்தை மூடிக் கொண்டு அழுத் தொடங்க



"அஷ்வி....என்னாச்சுமா... சொன்னாதானே ஏதாவது பண்ண முடியும்... சொல்லுடி?" கயல் சொன்னவற்றை அப்படியே ஒப்பிக்க அவனுக்கும் எதற்காக இப்படி நடந்து கொள்கிறான் என யூகிக்க முடியாமல் தான் போயிற்று....



"சரி நீ அழாத....நாம போய்டலாம்...ஓகே...?"



"...."



"அழாதமா...நீ முதல்ல அண்ணாக்கு.... கால் பண்ணிட்டே இரு... அப்பறம் என்ன பண்ணலாம்னு பாக்கலாம்..."எனவும் அவளும் விடாது தன்னவனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்.



.....



"நோ....இடியட்....என்னயே ஏமாத்திட்டல்லடி....துரோகி....பட்... இவ்வளவு நடந்தும் உனக்கு என்ன ஆகி இருக்குமோன்னு பதறுதேடி.... அத நெனச்சாதான் என் மேல எனக்கே காறி துப்பனும் போல இருக்கு...." விடாமல் புலம்பிக் கொண்டே அதி வேகத்தில் சென்று கொண்டிருந்தான் ரிஷிகுமார்.



அவளிடமிருந்து வந்த அழைப்பை கட் செய்து கொண்டே இருந்தாலும் சுவிட்ச் ஆப் பண்ணத்தான் அவனால் முடியாமல் போனது அவனுக்கு....



சுவிட்ச் ஆப் பண்ணி வைத்து அவள் பயந்து அழுது விட்டாள்....

அவனுக்கல்லவா வலித்துத் தொலைக்கும்...



((ஆமா...இப்போ மட்டும் அழாமதான் தேடுறாளாக்கும்....போடா டேய்...))



விடாமல் அழைத்துக் கொண்டிருந்த அழைப்பு திடீரென தடைபடவும் நெஞ்சு படபடவென அடிக்க மீண்டும் எடுப்போமா என யோசித்துக் கொண்டிருக்கும் போதே திரும்பவும் அலறத் தொடங்கியது அவனது செல்போன்...



எரிச்சலாய் அதை தூக்கி காருக்கு வெளியே வீசியவன் சடன் ப்ரேஇஅ போடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டான் அவன் காருக்கு முன்னால் சற்று தொலைவில் கையை விரித்தபடி நின்று கொண்டிருந்த பெண்ணினால்.....



"ஸ்டுப்பிட்....இவளுங்களுக்கு சாவ என் வண்டிதான் கெடச்சிதா...." அதற்கும் திட்டித் தீர்த்தவன் காரை அவளுக்கு வெகு அருகில் நிறுத்திவிட்டு இறங்கிப் போய் முகத்தை பார்க்காமலேயே விட்டான் பளாறென்றொன்று....



கண்ணத்தில் கைவைத்துக் கொண்டே அவனை ஏறிட்டு



"தே...வ்..."எனவும் தான் அவள் அவன் மனையாள் என்பது உறைக்க மீண்டும் மீண்டும் அறைந்தான் வருண் வந்து தடுத்து நிறுத்தும் வரை....



"டேய் மச்சான் விடுடா...என்ன பிரச்சினன்னாலும் பேசி தீத்துக்கோ.... ஏன் இப்பிடி பிஹேவ் பண்ற?"சற்று காட்டமாகத்தான் கேட்டான் அவனும்...



"பேசி தீத்துக்கனுமா...எத...எத பேசி தீத்துக்கனும்....சொல்லுடா....?" அவளை விட்டு விட்டு அவன் சட்டை காலைரை பிடித்திருந்தான் அவன் நண்பன்.



"பிரச்சினை என்னன்னு சொன்னாதானேடா தீர்வு சொல்லலாம்... உனக்கு மட்டும் தெரிஞ்சிருந்து என்ன பண்ண முடியும்?" எனவும் அவனை பிடித்து தள்ளிவிட்டவன் மீண்டும் அவளுக்கு அறையப் போக இப்போது அதனைத் தடுத்துப் பிடித்திருந்தான் ஆரவ்.



"டேய் மரியாதயா போயிடு...இல்ல... என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"



"என்ன கொன்னே போட்டாலும் பிரச்சின இல்லண்ணா...பட் அவளுக்கு அடிக்க நா விடமாட்டேன்"



"விடு ஆரவ்....நீ குறுக்க வராத"



"முடியாதுணா....நீ என்னதான் நெனச்சிட்டு இருக்க...எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்" என்ற அடுத்த நொடி அவனுக்கு விழுந்திருந்தது அவளுக்கு சேர வேண்டிய அறை....



"அண்ணா...ஆர்.கே...அத்தான்...தேவ்..." ஒரு சேரக் கேட்டது மற்ற நால்வரின் குரலும்...



அதிர்ந்திருந்த ஆரவ்வை தள்ளிவிட்டவன் நேரே அஷ்வினியிடம் செல்ல அவளை மறைத்தபடி வந்து நின்றான் சித்தார்த்.



"இப்போ நீயா....மரியாதயா வழி விடு"



"...."



"விடுன்னு சொல்லிட்டே இருக்கேன்..." கை ஓங்கி அறைய அவனை தள்ளிவிட்டு அவன் முன் வந்து நின்றிருந்த அஷ்வினிக்கே மறுபடியும் விழுந்தது.



ஒரு கணம் தடுமாறினாலும் கண்மண் தெரியாத கோபத்தில் அவள் குரல்வளையை பிடித்திருந்தான் ரிஷி...



"துரோகி...நம்ப வெச்சி ஏமாத்திட்டல்லடி.... நீயும் அவளப் போல பணத்துக்குத் தான் வந்தியா இல்ல...."என கேட்டு முடிக்கும் முன் இடியென இறங்கி இருந்தது வருணின் அறை...



வருணா????



ஆம் வருணே தான்....



அஷ்வினி இருமிக் கொண்டே இருக்க அது கூட உணராமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் ரிஷி...



"ச்சே....மனுஷனா நீ...ப்ரக்னன்டா இருக்குறவ கிட்ட இப்பிடித்தான் நடந்துப்பியா.... உன்ன என் ப்ரண்டுன்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு....ஏன் இப்பிடி மிருகம் மாதிரி நடந்துக்குற....அவ உன் பொண்டாட்டி தானே...ஒரு தடவக்கு ரெண்டு தடவ அவ எனக்கு இப்பிடி பண்ணுவாளான்னு யோசிச்சு பாத்தியா....அட்லீஸ்ட் இவ்வளவு பேரு சொல்றோமேன்னு சரி கேக்குறியா நீ....இப்போ பாருடா அவள....மயங்கி இருக்கா...விட்டா கொன்னிருப்ப..." அவனை உதறித் தள்ளியவன் தன் தங்கையிடம் ஓடினான்.



அவன் சொன்ன வார்த்தைகளின் அதிர்ச்சியினால் ஏற்பட்ட மயக்கம் என்பதை அங்கிருந்த யாருமே அறிந்திருக்க வாய்ப்பே இல்லை...



அன்று அவன் கனவு கண்டதும்... அவனை விட்டு போய் விடுவாளோ என பயந்து போனை எடுக்காமல் விட்டதும் இதே வார்த்தைக்காகத்தான் என்பதை எப்போது அவன் புரிந்து கொள்வான்???



"அஷ்விம்மா....எந்திரிடி" சித்தார்த்தின் மடியில் இருந்தவளை விடாமல் தட்டிக் கொண்டிருந்தான் ஆரவ்....



"ரிக்ஷி...இங்க பாருமா....ப்ளீஸ்..."

அவளின் வருண் சாரின் குரலும் கூடவே....



"அக்கா அக்கா...எந்திரிக்கா... இனிமே உன் கூட சண்ட போடவே மாட்டேன்கா....ப்ளீஸ் எந்திரி... எனக்கு பயமா இருக்குக்கா...."அழுது கொண்டே அரற்றிக் கொண்டிருந்தாள் அவளும்....



அப்போ அவள் கணவன் எங்கே???



அதற்காகத்தான் அந்தப் பாவையின் ஆழ்மனதும் ஏங்கித் தவித்துப் போனதோ...



தன்னை சுற்றி இத்தனை குரல்கள் கேட்டுக் கொண்ருக்க தன்னவனின் குரல் எங்கே போயிற்று???



நின்ற இடத்திலேயே சிலையென நின்றிருந்தான் ரிஷிகுமார் தேவமாருதன்!!!

அவளவன்!!!

அவளின் தேவ் ஆகப்பட்டவன்!!!

அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தகப்பன்!!!



" ப்ரக்னன்ட்டா இருக்குறவ கிட்ட இப்பிடித்தான் நடந்துப்பியா???" சாட்டையடிகளாய் வந்து விழுந்திருந்த வருணின் கேள்விகளே அவன் காதுக்குள் சுவற்றில் மோதி விட்டு வரும் பந்து போல் கேட்டுக் கொண்டே இருந்தது.



தான் எதற்காக கோபப்பட்டோம் என்பதுவே மறந்து போனவன்



"எ...எ....என் குழந்த...என்னோட குழந்த..." தந்தை பாசம் மேலோங்கிப் போனது அந்த ஆண்மகனுக்குள்.....



அன்று வந்த அதே உறுதிதான் இப்போதும்....அவள் யாராக இருந்தால் என்ன இப்போது என் மனைவி..அவ்வளவே...



ஆனால் அவள்....???



கல்லாகிப் போகியிருந்த அந்த கிரேக்க சிலைக்கு அப்போது தான் உயிர் வந்தது போலும்....



அனைவரையும் தள்ளி விட்டு மயங்கி இருக்கிறாள் என்பதையும் மறந்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொள்ள மற்றவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.



வருண் கண்ணைக்காட்ட ஆரவ் கயலை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தங்கள் காரை நோக்கிச் செல்ல சித்தார்த்துடன் வருண் கிளம்பி விட்டான்.



இருவர் மட்டும் அந்த அதிவேக நெடுஞ்சாலையில் தனித்து விடப்பட்டனர்.



தன்னவள் முகத்துக்கு நீரைத் தெளித்தவன் மீண்டும் அணைத்துக் கொள்ள அவனின் லப்டப் சத்தத்தில்தான் மெதுவாக கண்களை திறந்தாள் மங்கை!!!!



தன்னவனின் மடியில் தலைவைத்துப் படுத்திருப்பதே சுகமென்று கருதியதோ அந்தப் பேதை....



தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அவனை கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள் எங்கே மூடினால் இனிய கனவு களைந்து விடுமோ என்ற பயத்தில்....



சற்று முன் அவன் பேசிய வார்த்தைகள் அமிலமாய் காதில் ஒலிக்க கரகரவென கொட்டத் தொடங்கியது கண்ணீர்....



அதை பதறித் துடைத்து

"ஷ்...அழக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல...ஐ அம் சாரிடா..." என்று விட்டு தண்ணீர் புகட்டவும் பாட்டிலை தட்டி விட்டவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.



அவனுக்கு எதுவுமே புரியவில்லை...



தன்னை நோக்கி மறுபடியும் திருப்ப அவன் கைகளை தட்டி விட்டு எழுந்தவளின் முகம் வலியையும் மீறி ஒரு கடினத்தன்மையை பிரதிபளித்துக் கொண்டிருப்பதை அப்போது தான் கண்டு கொண்டான் அவளவன்...



"ஐ...ஐ...ஐ அம் சாரிடா...நா ஏதோ..." எனப் போனவனை கைநீட்டி தடுத்து விட்டாள்....



"என்ன நடந்துது?"



"அத விடுடா...அது வேணாம்"



"இல்ல எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்..."



"ப்ச்‌...அதான் சொல்றேன்ல... வேணாம் விடு"



"முடியாது...உங்க வாயால இப்பிடியொரு வார்த்தை வர்றதுக்கு காரணமான அந்த விஷயம் எனக்கு தெரிஞ்சே ஆகனும்" எனவும் அவளையே பார்த்தவன் ஒரு பெரு மூச்சுடன் அனைத்தையும் கூற இடையிட்டாள் அவள்.



"நீங்க அத நம்புனீங்களா?"



"...."



"சொல்லுங்க...?"



"..."



"நம்புனதாலதானே இப்பிடி ஒரு வார்த்த உங்க வாயால வந்துது?"



"...."



"உங்களுக்கு வேணா மறந்து போயிருக்கலாம்...தே..."வார்த்தையை முழுங்குவது நன்றாகவே தெரிந்தது அவனுக்கு...



"உங்களுக்கு வேணும்னா மறந்து போயிருக்கலாம்....பட் நா உயிரோடதானே இருக்கேன்....என்ன நடந்துதுன்னு என்கிட்ட கேட்ருக்கலாமே.. ? நீங்க எந்த போட்டோவ வெச்சு என்கிட்ட இப்பிடி நடந்துகிட்டீங்கன்னு எனக்கு தெரியாது....அத நா பாக்கவும் போறதில்ல"



"பட்..."



"இருங்க....நா இன்னும் பேசி முடியல"



"...."



"உங்க வாழ்க்கைல ஒரு பொண்ணு வந்து இப்பிடி பண்ணிட்டாங்குறகுக்காக பாக்குற எல்லோரும் அப்பிடியே இருப்பாங்கன்னு என்ன நிச்சயம்...

ஏன் அவள பாக்க முன்னாடி தானே உங்க அம்மாவையும் உங்க தங்கச்சியையும் பார்த்திருப்பீங்க...

அப்போ எல்லாம் பொண்ணுங்க மேல இருந்த மரியாத இப்பிடி நடந்துதுன்ன ஒரே காரணுத்துக்காக மாறிடுமா?

அவ உங்க வாழ்க்கைல வந்திருக்லன்னா எப்பிடி இருந்திருப்பீங்கன்னு யோசிங்க... அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்குறதால என்ன சந்தோஷத்த கண்டுட்டீங்க நீங்க?" சுழற்றியடித்த அவள் கேள்விகளிலிருந்து தப்பும் வழியறியாது நிதர்சனத்தை ஆணியடித்தாற் போல் உணர்ந்து கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்!!!





தொடரும்.......



29-04-2021
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 38 ❤



அமெரிக்கா...

மெக்சிகோ நகரம்...



(இதே நேரம்...இரவு....)



"மச்சி.... அங்கிளோட கடைசி சடங்க கூட ஒழுங்கா பண்ண விடாம பண்ணிட்டான்டா அந்தப் பாவி" வயிறு முட்ட குடித்து விட்டு தன் நண்பனுக்கு விடாமல் திட்டிக்கொண்டே இருந்த ராக்கேஷை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு...



"ஏன்டா அமைதியா இருக்க?"



"பின்ன என்ன என்னதான் பண்ண சொல்ற....இப்பிடி குடிக்காதன்னு சொன்னா கேக்குறியாடா?"



"உனக்கு மட்டும் ஏன்டா என் மேல இவ்வளவு பாசம்?"



'விதிடா...விதி....இப்பிடியெல்லாம் நடிச்சு தொலைக்கனும்னு விதி' மனதில் நினைப்பதையெல்லாம் வாய்விட்டு சொல்லிவிட முடியாதல்லவா???



"ஏன்னா நீ என் ப்ரண்டு மச்சி"



"நண்பேன்டா" மது

போதையில் குழரலாக ஒலித்த அவன் குரலைக் கூட ரகுவாவால் அதற்கு மேல் தாங்கவே முடியாமற் போக பட்டென எழுந்துவிட்டான்.



"எங்கடா போ..ற?"



"டைமாச்சு மச்சி...எனக்கு தூக்கம் வருது"



"ஹரிஷ் பத்தி ஏதாவது டீடைல்ஸ் கெடச்சிதாடா?"



"எல்லாத்தையும் காலைல பேசிக்கலாம் மச்சி....நீ ரொம்ப குடிச்சிருக்க...நா சொன்னாலும் எதுவும் ஏறாது...பேசாம தூங்கு" அவன் சொல்லி முடிக்கும் முன்னரே குப்புற விழுந்திருந்தான் ராக்கேஷ்....



அவனை வெறுப்புடன் பார்த்தவன் வெளியே பால்கனிக்கு வந்து மேலே தெரிந்த நிலவை வெறித்தான்.



"என்ன மன்னிச்சுரு ஆர்.கே.... உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட எனக்கு தகுதி இல்லன்னு தெரிஞ்சாலும் மனசு கேக்க மாட்டீங்குதேடா...ஐ அம் ரியலி சாரி மச்சி....நீ எனக்கு கொடுத்த உண்மையான நட்புக்கு உண்மையாத்தான்டா நானும் இருந்தேன்... பட் விதி இப்பிடி ஆகிடுச்சு...இப்போ நிச்சயமா நா உனக்கு துரோகிதான்டா....

எனக்கு வேற வழி தெரில மச்சான்.... முடிஞ்சா மன்னிச்சிரு...." பெரும் நீண்ட ஏக்கப் பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவனிடமிருந்து....



'ஹரிஷ் உங்கிட்ட இருக்குற மாறி நானும் உங்கிட்ட மாட்டனும்டா... அப்போ சரி உன்ன பாக்கலாம்ல....' நட்பின் நினைவில் கண்கள் கலங்கி விட்டது அந்த ஆண்மகனுக்கு!!!



***



உன்னுடன் வரவே மாட்டேன் என்று மறுத்தவளை வலுக்கட்டாயமாக தூக்கிக் கொண்டு வந்து காரில் வைத்துவிட்டு அவளை அமர வைப்பதற்கு அவன் பட்ட பாடு....



வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளை அடிக்கடி திரும்பிப் பார்த்தான் ரிஷி....



தன்னை ஒருமுறை கூட திரும்பிப் பார்க்காதது மனதின் ஓரத்தில் வலித்தாலும் தான் பேசிய பேச்சிற்கு இதுவே அதிகம் என்று நினைத்து பேசாமல் இருந்து விட்டான்.



கொஞ்ச தூரம் செல்ல அவன் புறமாக திரும்பியவள்

"வண்டிய ஸ்டாப் பண்ணுங்க" என்றாள் கோபமாக....



அவளை புருவம்சுருக்கி பார்த்தவன்

"ஏன்?" எனவும்



"ஏன்...எதுக்குன்னு எல்லா காரணத்தையும் உங்க கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது.... முதல்ல கார நிறுத்துங்க" என கத்தவும் அவனும் எதுவும் பேசாமல் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.



வெளியே பாய்ந்து இறங்கியவள் அடுத்த நிமிடமே அனைத்தையும் கக்க பதறிப் போனவனாய் தண்ணீர் பாட்டிலுடன் அவள் அருகில் போய் நின்றான்.



எல்லாம் அதன்படியேதான் நடந்தாலும் அவனுக்குள் ஏதோ மங்கலாக தெரிய ஆரம்பிக்க திடுக்கிட்டுப் போனவன் அவள் கையை சட்டென அழுத்திப் பிடிக்கவும் விலுக்கென அவள் புறம் பார்வையை திருப்பினாள் பேதை...



கண்களை இறுக்க மூடி அவள் கையை பிடித்திருந்தவனை பார்க்க பார்க்க உள்ளுக்குள் அவனை விட வலித்தது அவளுக்கு.....



அவனையே கண் கலங்க பார்த்துக் கொண்டிருக்கும் போதே சட்டென கண்களை திறந்தவன் காரியமே கண்ணாக அவளிடம் பாட்டிலை நீட்ட வெளிவரத் துடித்த கண்ணீரை கஷ்டப்பட்டு உள்ளிழுத்துக் கொண்டவள் மறுக்காமல் அதை வாங்கி குடித்துவிட்டு எதுவும் பேசாமல் காரில் போய் அமர ஏதோ யோசனையில் இருந்தவனும் பேசாமல் வண்டியை எடுத்தான்.



***



"அண்ணா...இன்னும் அத்தானும் அஷ்வியும் வர்ல....ஒன்னும் நடந்திருக்காதில்ல?"



"ஒன்னும் நடந்திருக்காதுமா....நீ கவலப்படாத...."

என்றவன் நீண்ட நேரமாய் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த ஆரவ்வை நடப்புக்கு கொண்டு வந்தான்.



"ஆரு...."



"...."



"ஆரு டேய்...."



"...."



"ஆரவ்" சற்று அழுத்தமாக அழைக்கவும் தான் திடுக்கிட்டு



"ம்...என்னண்ணா?"



"என்னடா...ஏன் இப்பிடி இருக்க?"



"ஒன்னில்லண்ணா..."



"ஏன் ஆரு...?"பரிவாய் கேட்ட மனைவியிடம்



"ஒன்னில்ல அம்மு....நீ டயர்டா இருக்க....நீ போய் தூங்கு நா வந்துட்றேன்" என்றவன் அவளை பாடுபட்டு அனுப்பிவைத்து விட்டு வருணிடம் திரும்பினான்.



"அண்ணா..."



"சொல்லு ஆரவ்...என்ன பிரச்சினை?"



"இல்ல...வந்து நா அண்ணா ரூமுக்கு போயி..."



"அவன் எதுக்காக கோபப்பட்டான்னு தெரிஞ்சிக்கிறதுக்காக போயிருக்க...ரைட்...இப்போ என்ன?"



"அது வந்து...அண்ணாவோட ரூம்ல...அ...அ... அஷ்வியோடதும்...

ராமோடதும் நிச்சயதார்த்த போட்டோ இ...இருந்துது" தயங்கித் தயங்கி சொல்லிக் கொண்டிருந்தான் ஆரவ்...



என்னதான் நண்பியாக இருந்தாலும் இது அவனுக்கும் புதிய விடயம் என்பதோடு அவளுடைய அண்ணன் என்ற வகையில் ஏதாவது நினைத்து விடுவானோ என பயந்து அவனுக்குள் வருணிடம் பேசுவது தயக்கத்தை கொடுத்திருந்தது.



"வாட்...?" வருண் அதிர்ச்சியாக கேட்கவும்தான் இவருக்கும் ஏதும் தெரியாது என புரிந்து கொண்டவன் தெளிவாகப் பேசினான்.



"அண்ணாவோட ரூம்ல அஷ்வி-ராம் நிச்சயதார்த்த போட்டோ இருந்துது... அத பாத்துதான் அண்ணா கோபப்பட்ருக்காங்க"



"என்ன ஆரு சொல்ற?"



"நீங்களே பாருங்கண்ணா..."

என்றவன் அந்த வெள்ளை கவரை வருணிடம் நீட்ட அதை வாங்கிப் பார்த்தவனுக்கு அப்படியொரு அதிர்ச்சி...



கூடவே குற்ற உணர்ச்சியும்....



"ஆரு நாம தப்பு பண்ணிட்டோம்டா..."



"ஏன்ணா...ஏன் அப்பிடி சொல்றீங்க?"



"உனக்கு புரியல ஆரு...ஆர்.கே இப்போ இருக்குற நிலமைல அவன் இந்த போட்டோவ பாத்திருக்கான்.... ஏற்கனவே ஒரு துரோகத்த தாங்க முடிஞ்ச அவனால மறுபடியும் அதே துரோகம் நடந்திருக்குங்குறத ஜீரனிச்சிக்க முடில... அதனால தான் என்ன பண்றதுன்னு தெரியாம... அதுலயும் அவள காயப்படுத்திட கூடாதுன்னுதான் வெளிய போயிருக்கான்"



"பட்...இதுக்கும் அதுக்கும் என்னண்ணா சம்பந்தம்?"



"இருக்கு ஆரவ்...நா அந்த நேரத்துல ரிக்ஷியோட ப்ரக்னன்ட் விஷியம் பேசினதுனாலதான் தற்காலிகமா அந்த விஷயத்த மறந்து இருக்கான்..... இதுவே அந்த மாயத்துல இருந்து கவனம் வேற விஷயத்துல திரும்பிச்சுன்னா....

ரிக்ஷிய வார்த்தையாலேயே கொன்னுருவான் ஆரு"



"என்னண்ணா சொல்றீங்க?"



"நாம அதுக்கு முன்னாடி ரிக்ஷி கிட்ட இது பத்தி பேசிடனும் இல்லன்னா விளைவு விபரீதமாயிடும்"



"அஷ்வி...இப்போ அண்ணா மேல ரொம்ப கோபத்துல இருக்காளேண்ணா?"



"அதயேதான்டா நானும் சொல்றேன்"



"புரியலணா"



"டேய்...கேள்விக்கு போறந்தவனே... கேள்வி கேட்டுட்டே இருக்காம கொஞ்சம் மூலையையும் யூஸ் பண்ணு"



"அண்ணா"



"இவ கோபத்துல இருக்கா...அவன் அந்த விஷய அதிர்ச்சியில இருக்கான்... கோபத்துல இப்போ இவ ஓவரா பேசிட்டான்னு வை... ஆர்.கே கோபத்த காட்றப்போ நம்மாலயும் ஒன்னும் பண்ண முடியாம போயிடும்"



"இதுக்கு என்னதான் வழி?"



"ஒன்னு ரிக்ஷி கோபத்த விடனும்...இல்ல...ஆர்.கேக்கு திரும்ப பழையது ஞாபகம் வரனும்"



"இதுல அஷ்விய சமாதானப்படுத்துறத தவிற வேறு வழி இல்லண்ணா..." தொண்டை அடைக்க சொன்னவனைப் பார்த்து அவனுக்கும் கண்கள் கலங்கும் போல் இருந்தது.



***



அவள் ஆடை மாற்றவென்று வெளியே சென்று விட்டு வந்து காரில் ஏறி தன்னவனைப் பார்த்தவள் திடுக்கிட்டுத்தான் போனாள்.



கைகள் இரண்டையும் தலைக்கு முட்டுக் கொடுத்து ஸ்டீரிங் கியரில் தலை சாய்த்து படுத்திருந்த கோலம் அவள் மனதை பிசைந்தது.



வெளியில் அப்படிப் படுத்திருப்பவனுள்ளே பெரும் பூகம்பமே வெடித்துக் கொண்டிருப்பது அவளுக்கு எங்கே தெரியப் போகிறது...



அவனையே இவ்வளவு காலம் சுழற்றியடித்த நிழற்படங்கள் இன்று அளவுக்கதிகமாகவே வர உண்மையில் துவண்டு தான் போயிருந்தான்.



இதற்கு முன்னும் இப்படி நடந்திருப்பது போன்ற பிம்பங்கள்!!!



அவனுக்கு அதில் அதிர்ச்சியே அந்தப் பெண்ணின் நெற்றியில் அவன் இதழ்களை காதலாய் பதித்திருந்தது தான்...



நிஜத்தில் தெரிந்த இவள் முகம் ஏன் அதில் பொருந்திப் போகவில்லை என்பதை நினைக்கையிலே தான் யாருக்காவது துரோகம் செய்கிறோமோ என்று தான் தோன்றியது அவளவனுக்கு...



ஆக மொத்தத்தில் அவன் நிழலையும் நிஜத்தையும் வைத்து குழம்பிப் போயிருந்தான் என்றே சொல்ல வேண்டும்...



இந்த நிலைமையில் அவளால் அவனைவிட்டு விலகி நிற்கவும் முடியவில்லை...அவன் சொன்ன வார்த்தைகளின் வலியில் அவனை ஏற்கவும் முடியவில்லை...



தவித்தாள் பேதை!!!



அவனை எப்போதுமே ஒரு நிமிர்வுடன் ஒரு ஆளுமையுடன் பார்த்துக் கண்டிருந்தவளுக்கு அவனின் இந்த நிலை அதிக வலியை ஏற்படுத்தியது.



வெளிப்படுத்தாவிடினும் அவன் கண்களிலும் காதலைக் கண்டிருக்கிறாள் தான்... ஆனால் காதலாய் அவன் செய்யும் செயல்களில் கூட அப்போதும் ஒரு பிடிவாதம்,ஒரு முரட்டுத்தன்மை,ஒரு நிமிர்வு இருப்பதுவே அதில் அதிகமாய் இருக்கும்...



அவன் முகத்திலிருந்து எந்த உணர்ச்சியையும் கண்டு பிடிக்க இயலாது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க அவளின் அந்த எண்ணமே இல்லையாகிப் போனது அவன் அன்று தான் தந்தையாகப் போவதை நினைத்து கலங்கிய போதுதான்....



இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறான் என்பது சற்று தாமதமாகவே அந்தப் பேதைக்கு புரிய அப்போது என் மீது அன்பில்லையா...என ஏங்கித் தவித்தது மனது...



சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் அவன் மீதிருந்த கோபம் வேறு நினைவு வந்து கொண்டே இருந்ததில் அவனை மன்னிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருந்தவள் வேறு வழியின்றி அவன் தோல்களை தொட்டு



"தேவ்..."என்றாள் மென்மையாக....



மீண்டும் அதிசயித்தது அவன் மனது!!!



இவள் பக்கத்தில் இருந்தால் மட்டும் எங்கே போய் தொலைந்துவிடுகிறது அந்த மாயப் பிம்பங்கள்???



அப்போதாவது அவனுக்கு தெரிந்திருக்க வேண்டாமா அவள் தான் தன் நெஞ்சில் நிறைந்து உயிரில் கலந்திருப்பவளென்று!!!



அவளின் மென்மையே ஒரு ஆறுதலைத் தர பேசாமல் அப்படியே இருந்துவிட்டான் காளையவன்....



"தே..வ் என்ன பண்ணுது...ரொம்ப வலிக்குதா?" விட்டால் அழுது விடுவாள் போல என நினைத்தவனுக்கு உதட்டோரம் சிறு புன்னகை கூட தோன்றிற்று....



மெதுவாக எழுந்தவன் அவளையே பார்க்க சட்டென கையை எடுத்துக் கொண்டவள் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.



கோபமாம்!!!!



((அட போம்மா....))



அவள் தன் புறம் திரும்பாமலே போகவும் வண்டியை வீடு நோக்கி செலுத்தினான்.



***



இராமநாதபுரம்....



எப்போதேம் ஏதோ யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தவனை அன்று சற்று கூடுதலாகவே துளைத்தது ஈஷ்வரியின் பார்வை....



அதை உணரும் நிலையில் கூட அவன் இல்லாதது தான் இங்கு நோக்க வேண்டியதே...



அவளும் தன்னால் ஆன முயற்சியை எடுத்துப் பார்த்துவிட்டாள்...பலன் மட்டும் பூச்சியமாகவேதான் இருந்தது....



அர்ஜுன் அப்பா என்று கட்டிக் கொள்ளும் போது மட்டும் விடுபடும் யோசனை கொஞ்ச நேரம் சென்றதும் வந்து விடும்.



மதிய சாப்பாட்டிற்கு ஆபிஸிலிருந்து வீடு வந்திருந்தவனைத் தான் பார்த்துக் கொண்டே இருக்கிறாள் அவன் மனையாள்....



ரிஷியின் பிரச்சினையில் அர்ஜுன் மீண்டும் செல்லவில்லை...

இன்னும் மூன்றே நாளில் செல்வதாக ஏற்பாடு....



முன்னெல்லாம் அவன் செல்லும் நாள் நெருங்கிவிட்டால் அவனோடேதான் இருப்பான் அந்தத் தந்தை....



ஆனால் இப்போது அவனே வந்து அழைத்துக் கொண்டு போனாலும் சற்று நேரத்தில் வந்து விடுகிறான்....



என்னதான் நடந்து விட்டது இவருக்கு???



பால்கனியில் நின்று கொண்டிருந்தவனை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள் அவள்....



சட்டென சிந்தை கலைந்தவனின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.



அவளை இழுத்து தன் முன் கொண்டு வந்தவன் அவள் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்து



"ம்....என்னங்க மேடம்...என்னாச்சு...

இன்னக்கி நீங்களா வந்து கட்டி புடிச்சிருக்கீங்க?" என்றான் குறும்புடன்.



"...."



"எதுக்கு தல குனிஞ்சு இருக்க ஈஷ்....ஏய்...ஏன்மா....ஏன் அழற?"அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் அவள் கண்ணம் தாங்கினான்.



"என்னமா ஆச்சு...ஏன் அழற?"



"...."



"அர்ஜுவ நெனச்சி கவலப்பட்றியா?"



"...."



"பின்ன?"



"நா அழுதாதான் உங்களுக்கு என்கிட்ட பேசவே தோனுதில்ல அஜய்?"என்றவளின் கேள்வியில் ஆடிப் போனான் கணவன்.



அந்த அளவுக்கா இந்த தேவாவை பற்றி யோசிக்கிறோம்...???



'டேய்...மவனே... இருடா வர்றேன்'



"அப்பிடியெல்லாம் எதுவுமில்லமா...சாரி"



"மறுபடி மறுபடி எதுக்காக பொய் சொல்றீங்க அஜய்?"



"பொய் சொல்லலடி...அது வேற ஏதோ..."



"என்கிட்ட கூட ஷேர் பண்ணிக்க முடியாத அளவுக்கா?"



"சாரிடி"



"ஏன் இப்பிடி இருக்கீங்க அஜய்... என்ன விடுங்க...அர்ஜு கூட முக்கியமில்லாம பொய்ட்டானா?"



"ஏய் ஏன்டி இப்பிடில்லாம் பேசுற?"



"வேற எப்பிடி பேசனும்?"



"ஓகே...சாரி..சாரி..."



"...."



"அதான் சாரி கேக்குறேன்லடி?"



"அர்ஜு...இன்னும் மூனு நாள்ல அம்மா வீட்டுக்கு போறான்"



"வாட்...?"



"அது பத்தி கூட உங்களுக்கு தெரியாது"

அவன் அமைதியாகவே இருக்கவும் அவன் கைகளை தட்டிவிட்டு விலகப் போக அவளை எட்டிப் பிடித்து தடுத்தான் அவன்....



தன்னை நோக்கி இழுக்க தன் மேல் வந்து மோதியவளின் இடையை சுற்றிப் பிடித்து தனக்குள் இறுக்கியவன்



"ஏன் என் பொண்டாட்டிக்கு இன்னக்கு இவ்வளவு கோபம் வருது?" என்றான் காதில் கிசுகிசுப்பாக....



அவன் மீசை ரோமம் உரச சிலிர்த்துப் போனவள் அவனிடமிருந்து விடுபட திமிறினாள்.



அவளை இலகுவாக அடக்கிய கள்வனவன்

"சாரிடி...இனிமே இப்பிடி நடக்காது... ரியலி சாரிமா..."என்றுவிட்டு சற்றும் தாமதியாது அவள் இதழ்களை சிறை செய்து விட்டே விட்டான்.



***



"இறங்கு..."என்றவனின் முகத்தில் வழமை போல் என்ன இருந்ததென்று ஊகிக்கவே முடியவில்லை அவனவளுக்கு...



இருந்தும் அவனை தனியே அனுப்ப மனம் வராததால் கைகளை கட்டிக் கொண்டு சட்டமாய் அங்கேயே அசையாது அமர்ந்திருந்தாள்.



இறங்கச் சொல்லி நிமிடங்கள் கடந்தும் அவள் அப்படியே இருப்பதை கண்டவன் நெற்றி சுருக்கி அவளை திரும்பி நோக்கினான்.



அதற்காகவே காத்திருந்தவள் போல்



"நீங்களும் என் கூட வீட்டுக்குள்ள வரனும்"என்றாள் பிடிவாதமாய்...



"எனக்கு ஆஃபீஸ்ல வேல இருக்கு...நீ போ"



"முடியாது...அப்பிடீன்னா நானும் உங்க கூட வருவேன்"



"நீ எதுக்கு?" சத்தியமாய் அவள் எதற்காக இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறாள் என்று அவனுக்கு புரியவே இல்லை..



"நா எதுக்கோ வர்றேன்...பட் உங்க கூட நா வருவேன்...இல்லன்னா.... நீங்க என்கூட வீட்டுக்குள்ள வாங்க"



"இல்ல நீ போ...."



"முடியாது"



"ப்ச்..."என சலித்துக் கொண்டவன் தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி நிமிர்ந்து



"உனக்கு டயர்டா இருக்கும்...ப்ளீஸ் உள்ள போ"என்றான் அக்கறையாய்...



பிள்ளை மேல் மட்டும் அக்கறையா....பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு....



((எல்லாம் இந்த காதல் படுத்துற பாடு))



"எனக்கு டயர்ட் இல்ல...நீங்க இப்போ வர்றீங்களா....இல்லையா?" கறாறாய் அவள் கேட்க அவனுக்குள் சுர்ரென்று ஏறியது.



"நான்தான் சொல்றேன்ல...

சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க... முட்டாள்" என சீறவும் ஏற்கனவே கோபத்தில் இருந்தவளுக்கும் கோபம் வந்து விட்டது அவன் பேச்சில்....



"ஆமா நான் முட்டாள்தான்... நீங்க இவ்வளவு பேசியும் உங்க கூட வந்திட்ருக்கேன்ல...நான் முட்டாள்தான்...உங்..."

இன்னும் என்னவெல்லாம் பேசி இருப்பாளோ???



அதற்குள் இடையிட்டிருந்தது அவன் இதழ் முத்தம்!!!



கண்கள் ஸாஸர் போல் விரிய அதிர்ச்சியில் உறைந்தாள் பேதை....



அவள் வாயை அடக்குவற்காகவே அப்படி முரட்டுத்தனமாக சிறைசெய்தவனாலும் அவளை விட்டு விலக முடியாமல் போனது தான் விந்தை....



இன்னுமின்னும் அவளுள் புதைந்து போக நாடியவன் அவளுக்கு மூச்சுக்கு திணறுவது கண்டே சட்டென விலகினான்.



வேக மூச்சுக்களை எடுத்துவிட்டவள் அவனை முறைத்து விட்டு இறங்கி உள்ளே செல்ல கண்களை இறுக்க மூடித் திறந்தவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டு ஆபிஸ் செல்ல மனமற்று அவள் பின்னாலேயே உள்ளே நுழைந்தான்.



"அக்கா..."என ஓடி வந்து அனைத்துக் கொண்ட கயலின் முதுகை தடவிக் கொடுத்தாள் அஷ்வினி.



அதற்குள் வருண்,ஆரவ், சித்தார்த் என அனைவருமே வாசலுக்கு வந்துவிட்டிருக்க அப்போதுதான் உள்ளே நுழைந்தான் ரிஷி.



அனைவரும் அவனையே கூர்மையாய் துளைத்தது கண்டு நீண்ட பெருமூச்சை விட்டவன் அவர்களை விலக்கிவிட்டு மேலே சென்று விட்டான்.



வெளியே போயிருந்த சித்தார்த்தும் சற்று முன்தான் வந்திருக்க கயலை விட்டு விலகியவள் அனைவரையும் ஒரு முறை பார்த்து விட்டு தலை கவிழ்ந்து நிற்கவும் ஆரவ்வும் வருணும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



"அஷ்வி..."சித்தார்த் அழைக்கவும் அமைதியாகவே இருக்க



"ஐ..ஐ அம் சாரிடி"என்றவன் அவள் பதிலுக்காய் முகத்தை பார்த்தான்.



அவனை நிமிர்ந்து பார்த்தவள் பாய்ந்து அவன் கழுத்தை கட்டிக் கொள்ள அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.



"இடியட் ஏன்டா என்கூட இவ்வளவு நாள் பேசல...நான் ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா?"அவனுக்கு சிலபல அடிகளை கொடுத்துக் கொண்டே கேட்டாள் அவன் உயிர்த் தோழி...



"அடிப்பாவி...எத்தன தடவ கால் பண்ணேன்....பேசுறதுக்கு முன்னாடியே கட் பண்ணா நானும் என்னதான்டி பண்றது?" உரிமையாய் அவன் கேட்கவும் நீண்ட நாட்களுக்குப் பின் கலகலத்துச் சிரித்தாள் அஷ்வினி ரிக்ஷிதா....



அதை மேலிருந்து ஆசையாய் வருடிய ரிஷியின் கண்கள் அதற்கு சற்று முன் அவள் சித்தார்த்தை கட்டிப் பிடிக்கவும் கோபத்தில் சிவந்திருந்ததை நல்ல வேளை யாரும் கவனிக்கவில்லை...



கீழிருந்தவர்களும் அவள் சிரிப்பை நிம்மதியான புன்னகையுடன் பார்த்திருக்க அவள்



"மதன் மட்டும்தான் எங்கூட பேசல.... அவனுக்கு இருக்கு.... அன்னக்கி கூட என்ன கண்டும் காணாத மாதிரி பொய்ட்டான்" குறைப்பட்டாள் அவள்.



அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த வருண்



"ரிக்ஷி....உன்கூட கொஞ்சம் பேசணும்...இப்பிடி வாமா" என்றவன் அவளை அழைத்துக் கொண்டு போய் அங்கிருந்த சோஃபாவில் அமர வைத்துவிட்டு ஆரவ்வை பார்க்க அவன் அவளுக்கு புரியும் படியாக எடுத்துக் கூற இயலாமையில் கரகரவென நீர் வழிந்து கொண்டே இருந்தது அக்காரிகையின் கண்களிலிருந்து.....

அவள் விதி மட்டும் ஏன் இப்படி???



தொடரும்........



30-04-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 39 ❤



அதன் பிறகு வந்த நாட்களில் அவள் அவனிடமிருந்து விலகியே இருந்தாள்.



ஆரவ் சொன்னவற்றை யோசித்துப் பார்த்ததன் பிறகு அவளால் அவனிடம் அதற்கு மேலும் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமற் தான் போயிற்று....



ஆனால் அது அவளின் நெஞ்சில் அடியாழத்தில் ஆனித்தரமாக பதிந்து போனதை பாவம் அவள் அறியவில்லை.....



அவன் முகத்தை கூட பார்க்காமல் தவிர்த்தவள் தனக்குள் இன்னும் இன்னும் முடங்கி ஊமையாகிப் போனாள் என்றே சொல்ல வேண்டும்.



முகத்தில் மருந்துக்கும் சிரிப்பென்பதே இல்லை.... எப்போதும் அடுத்தவர்களை விட்டு தனிமையையே நாடினாள்.



இவளே இந்த நிலைமையென்றால் அவனை கேட்கவும் வேண்டுமா???



நிழலுக்கும் நிஜத்துக்கும் இடையில் இருந்து கொண்டு புயலில் சிக்கிய படகு போல் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தே போனான் அந்த ஆண்மகன்.



அவள் இவனை தவிர்க்க அவளை இவன் தவிர்த்துக் கொண்டிருந்தான்.



கிட்டத்தட்ட ஒரே வீட்டிலிருந்தும் வேறு வேறு தேசங்களில் இருந்த நிலைதான்....



அதிகமாக ஆபிஸிலேயே தங்கியவன் வீட்டுக்கு வருவதே அரிதாகிப் போனது....



அந்த துரத்தும் நிழற்படங்களிடமிருந்து தன்னை பாதுகாக்க அவள் போட்டோவிலேயே தஞ்சமடைந்தும் விடுவான்....



இதற்கிடையில் அர்ஜுனும் ஊட்டிக்கு சென்றிருக்க அவனிடம் கூட பேச கிடைக்காத தன் துரதிஷ்டத்தை எண்ணி கண்கலங்கினாள் அவனவள்.



அன்றும் அப்படியே அவனை தவிர்க்க எண்ணி அவசரமாக தூங்குவதற்காக மாடிப்படி ஏறியவள் கால் தடுக்கி விழப்போக அவளை அணைத்துப் பிடித்திருந்தது ஒரு வலிய ஆண் கரம்!!!



விதிர்விதிர்த்துப் போய் திரும்பியவளுக்கு தன்னவனைக் கண்டதும் தான் சற்று ஆசுவாசப் பெருமூச்சே வெளிப்பட்டது.



அவளை நேராக நிறுத்தி வைத்தவன் அவள் முகத்தை கூட ஏறிடாமலே மேலே ஏறிச் சென்றுவிட அவன் முதுகையே வெறித்துப் பார்த்தவளுக்கு அவன் டில்லி போக முதல் தன்னிடம் அன்பாய்... காதலாய் நடந்து கொண்டது வந்து வலியை ஏற்படுத்த கண்கள் கலங்க தானும் ஏறினாள் மங்கை....



குளியளறையிலிருந்து சத்தம் வர வெளியே பால்கனிக்கு வந்தவள் அதில் தோங்கிக் கொண்டிருந்த கூடை நாட்காலியில் கால்களை குறுக்கி ஏறி அமர்ந்து தலைசாய்த்தாள்.



ஏனோ பலர் அவளை சுற்றி இருந்தாலும் எப்போதும் போல் வெறுமை மனதில் சூழ்ந்து கொள்ள வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லாமல் போயிற்று.



ப்ரஷப் ஆகிவிட்டு வந்தவன் அவளை கண்களால் தேட அவளில்லாது போகவும் தானும் பால்கனிக்கு வந்து அங்கு போடப்பட்டிருந்த கல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டான்.



வராமல் விட்டிருந்த அந்த பால்கனிக்கு அன்றுதான் வந்தான்... ஆனாலும் அந்த உணர்வை என்னவென்றுதான் பிரித்தறிய முடியாமல் போயிற்று....



ஏன் இப்படி தோன்றுகிறதென்று ஒரு மண்ணும் புரியவில்லை அவனுக்கு....



அவன் வரும்போதே கவனித்துவிட்டாலும் மௌனமாய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவனவள்.....



தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க சட்டென திரும்பியவன் அப்போதுதான் அங்கே தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனையாளை கண்டு கொண்டான் போலும்....



கொஞ்ச நேரம் அவளையே தானும் பார்த்தவன் எழுந்து உள்ளே செல்லப் போக ஏதோ உறுத்தவும் அவளை திரும்பிப் பார்த்தான்.



அப்போதும் அவள் அவனையேதான் பார்த்துக் கொண்டிருக்க தோலை குழுக்கி விட்டு திரும்பி நடந்தான்.



***



"ஆரு....மதன் கால் பண்ணான்டா"



"காலேஜ் முடிஞ்சதும் போலாம் மச்சி"



"ஏன்டா ஒரு மாதிரியா இருக்க?" கனிவுடன் கேட்ட சித்தார்த்தை சட்டென கட்டி அணைத்தவனுக்கு தாரை தாரையாக கண்ணீர் வடிய பதறிப் போனான் நண்பன்.



"ஏய்...என்னடா...என்னாச்சு?"



"...."



"வாயத்தொறந்து சொன்னாதானேடா தெரியும்.... மொதல்ல கண்ண தொட... தொடன்னேன்"



"...."



"ம்...இப்போ சொல்லு...என்ன பிரச்சினை?" வீட்டில் இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருப்பவற்றை இதயம் கனக்க சொல்லிமுடித்தான் ஆரவ்.



"என்ன மச்சான் சொல்ற?"



"எனக்கும் என்ன நடக்குதுன்னே புரியுதில்லடா..."



"அஷ்வி ப்ரக்னன்டா இருக்குறத பாக்கும் போதே என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடில மச்சி.... ஏன் இப்பிடி நடக்குதுன்னு ஒன்னுமே புரிய மாட்டெங்குதுடா"



"பட் அண்ணாக்கு ஞாபகம் வர சான்ஸ் இருக்குன்னுதானேடா டாக்டர் சொன்னாரு?"



"சொல்லி என்னடா பண்ண.... ஆக்ஸிடென்ட் ஆகி கிட்டத்தட்ட நாலு மாசம் ஆகுது....ஏதாவது இப்ரூவ்மண்ட் ஆச்சா.... இல்லயே....

ரெண்டு பேரும் நாளுக்குநாள் விலகிகிட்டே இருக்காங்க"



"நாம திரும்ப ஒரு தடவ டாக்டர பாத்து பேசலாம் மச்சி"



"நேத்து தான் நானும் வருண் அண்ணாவும் போனோம்....அவரும் கடவுள தான் கை காட்றாரு.... வருண் அண்ணாக்கும் நிறைய கேஸ் பெண்டிங்னால...அவரால அஷ்வி கூட பேசவும் முடில..."



"டோன்ட் ஒர்ரிடா....எல்லாம் சரி ஆகிடும்"



"...."



"அஷ்வி எப்பிடி இருக்கா?"



"ஊமையாகிட்டாடா..."மொட்டையாய் சொன்வனை பார்த்து இலேசாக சிரிப்பு கூட வந்து விட்டது சித்தார்த்துக்கு....



"சிரிக்காத மச்சான்...ரொம்ப ஹேர்டிங்கா இருக்குடா"



"ஓகே ஓகே...சாரி...கயல்?"



"அவ எப்போ பாரு அழுதுகிட்டே இருக்கா....என்னால எப்பிடி சமாதானம் பண்றதுன்னும் தெரிலடா....அதான் அம்மாவ பாக்கனும்னு சொன்னா...ஒரு ரிலீஃப் கிடக்கட்டும்னு அனுப்பி வெச்சிட்டேன்"



"...."



"அர்வி அம்மாக்கு வருத்தம்னு அவளும் அவங்க கூடவே இருந்துட்டா...."



"நாம அஷ்விய வெளில கூட்டி போலாமேடா?"



"இதுக்கு மேல அவகிட்ட பேசுறதுக்கு எனக்கு சக்தி இல்ல மச்சி.....முகம் கொடுக்கவே மாட்டேங்குறா....இதுல எப்பிடி அவளோட பேசுறது?"



"...."



"எப்போ பாரு ரூமுக்குள்ளேயே அடஞ்சிட்டு இருக்கா"கவலையாய் சொன்ன தன் நண்பனை பார்த்து தானும் கவலைப்பட்டான் சித்தார்த்.







இராமநாதபுரம்.....



"கயல்....இந்த டேப்லெட அத்த கிட்ட கொடுத்துடு"தன் தாய்க்கான மருந்துகளை எடுத்து கயலிடம் கொடுத்து விட்டு அவசரமாக எங்கோ வெளியே கிளம்பிச் சென்றான் அர்விந்த்.



சரி என தலையாட்டியவள் அவருக்கு அர்விந்த் சொன்னபடி மருந்தை கொடுத்து விட்டு அவரை படுக்க வைத்தவள் எழுந்து வெளியே வந்தாள்.



வந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிறது....



கலகலவென இருந்த அஷ்வினியை பார்த்த அவளால் இப்போது அமைதியே உருவாக அழுது வடிந்து கொண்டிருப்பவளை கண் கொண்டு பார்க்கவே முடியாமல் போக அவளை விட இவள்தான் அழுதாள்.



எப்போதுமே தன்னிடம் சண்டை பிடித்துக்கொண்டு வம்பிலுத்துக் கொண்டே இருந்தாலும் இதுவரை வேறு யாரிடமும் தன்னை அவள் விட்டுக் கொடுத்து பேசியதே இல்லை என்பது கயலுக்கு நன்றாகவே தெரியும்...



அதே போல் அஜய்யுடன் சேர்ந்து அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாலும் அவள் முகத்தை தூக்கி வைக்கும் போது தூங்கும் முன் சமாதானமும் பண்ணி விடுவாள் தன் தமக்கையை....



இப்போது எல்லாம் தலைகீழாக மாறியதை நினைத்து நினைத்து அவளுக்கு அழுவதை தவிர வேறு வழியே இருக்க வில்லை....



அந்த வீட்டில் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க உடனே ஆரவ்விடம் அனுமதி பெற்றுக் கொண்டு அம்மாவிடம் வந்து விட்டாள்.



அர்விந்தின் அம்மாவுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருப்பதால் இப்போது கொஞ்சமே கொஞ்சம் அந்த துயரத்திலிருந்து விடுபட்டிருக்கிறாள் என்றே கூற வேண்டும்....



ஒரு பெருமூச்சுடன் அத்தை வீட்டுக்கு எதிர் வீடாய் இருக்கும் தங்கள் வீட்டுக்கு வந்தவள் மனதை வேறு வழியில் செலுத்த ஒரு நாவலை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.



வேளை விட்டு அப்போதுதான் வீட்டுக்குள் வந்த அஜய்யின் கண்களில் முதலில் விழுந்தது சொபாவில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் தங்கைதான்....



அஷ்வினியை போலல்லாது சிறு வயது முதலே அவனுடனேதான் ஒட்டிக் கொண்டிருப்பாள்...



அவனுக்கும் அஷ்வினிக்கும் எப்போதுமே சண்டை தான்....



அர்விந்துடன் அஷ்வினி இருக்க கயல்தான் எப்போதும் இவனுடன் இருப்பாள்.



தனக்கு கயல் மீது இருக்கும் பாசத்தை விட அஷ்வினிக்கு அதிகம் என்பதை நன்கு அறிந்தவன் வேண்டுமென்றே கயலுடன் சேர்ந்து கொண்டு வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான்.



கயல் அண்ணா அண்ணா என்று சுற்றி வர அஷ்வினியோ அம்மா சொல்வது போல் அஜய் அஜய் என்றுதான் சொல்லுவாள்.



அதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் விஜயா அதட்டும் போது மட்டும் நன்றாக போட்டுக் கொடுத்து அடிவாங்க வைப்பான்.



அதற்காகவே அஷ்வினியிடமிருந்து சில சிறப்புப் பரிசுகள் தாராளமாக கிடைத்திருப்பதெல்லாம் வேறு கதை....



அதையெல்லாம் கண்டு பிடித்து சொல்லுவதே கயல்தான்...



அதனாலோ என்னவோ அஷ்வினியை விட கயலுடன் அவனுக்கு ஒட்டுதல் அதிகம்....



இருந்தாலும் அவனுக்கு கயலை விட அஷ்வினியின் மேல்தான் தனிப்பாசம் என்பதுதான் விந்தையிலும் விந்தை!!!



மெதுவாக அவளருகில் சென்றவன் அவளின் முகத்தை மூடி இருந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்தவன் அவள் அருகே அமர்ந்து அவள் தலையை வருடிக் கொடுத்தான்.



புத்தகம் எடுத்ததிலே இலேசாக விழிப்புத் தட்டி இருக்க அவன் பாசமாக வருடவும் எழுந்து அவன் மடியில் படுத்துக் கொண்டாள்.



அதில் முறுவலித்து

"என்ன கயு...?" என்றான் கனிவாக...



"ஒன்னில்லண்ணா...."



"அஷ்விய பத்தி கவலப்பட்றியா?" என கேட்டது தான் தாமதம் அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது.



"என்னண்ணா பண்றது....சத்தியமா அவள பாக்க முடிலண்ணா"



"எல்லாம் சரி ஆயிடும்மா.... கவலப்படாத"

என்றவனுக்கும் தொண்டை அடைக்கத்தான் செய்தது.



அவளைப்பார்தே மாதக்கணக்காகிறது....



உடல் நிலையை காரணம் காட்டி வர வற்புறுத்தினாலும் வரவே முடியாது என அடம்பிடிப்பவளை என்னதான் செய்வது???



அஜய் வீட்டுக்குள் வருவது கண்டு காபி போட்டு எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்த ஈஷ்வரிக்கு அவர்களை பார்த்து சந்தோஷத்தில் கண்கள் கலங்க அமைதியாக நின்று கொண்டாள்.



எதேச்சையாக திரும்பி அவளை பார்த்தவன் அவள் புன்சிரிப்புடன் நிற்பது கண்டு தன்னருகில் வருமாறு அழைத்து அவன் பக்கத்தில் உட்கார வைத்தான்.



டீயை பருகிக் கொண்டே மூவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தான் அர்விந்த்.



***



"விஷ்வா சார்....உங்கள பாக்க ஒரு பொண்ணு வந்திருக்கு"அங்கே எடுபிடி வேலை பார்க்கும் சின்னப் பையன் வந்து சொல்லிவிட்டு போக யோசனையாய் உள்ளே அழைத்தான் வருண்....



உள்ளே பதற்றத்துடன் நுழைந்த ரித்திகாவை பார்த்து குழப்பம் அதிகரிக்க என்ன என்பது போல் பார்க்கவும் அவள் அடுத்து சொன்ன செய்தியில் இருக்கையிலிருந்தே எழுந்து விட்டான் அவன்....



"வாட்...?"



"சீக்கிரம் வாங்கண்ணா... ப்ளீஸ்...அவ பொழக்கிறது உங்க கைலதான் இருக்கு"என அழுது கொண்டே கெஞ்சவும் அவளை கூட்டிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான் வருண்.....



ரித்துவின் அம்மா அழுது கொண்டு இருக்க அப்பா பதற்றமாய் நின்றிருந்தார்.



அவன் அவர்களருகே செல்லவும் காலில் விழப்போனவரை பதறித் தடுக்க



"உன்ன கையெடுத்து கும்புட்றேன் தம்பி....என் பொண்ண காப்பாத்திருப்பா...உன் பேர மட்டும் தான் ஜபமா உச்சரிச்சிட்டு இருக்கா....உன் கிட்ட மன்னிப்பு கேக்குறாப்பா...தயவு பண்ணி எனக்காக என் பொண்ண மன்னிச்சிரு தம்பி...."அவர் கையெடுத்து கும்பிட அதை மறுத்து தடுத்துப் பிடித்தவன்



"என்னம்மா....நீங்க போய் என்கிட்ட..." என்றுவிட்டு திரும்ப டாக்டர் வெளியே வரவும் அவரிடம் விரைந்தான்.



"டாக்டர் யாழ்க்கு என்னாச்சு?"



"நீங்க தான் மிஸ்டர்.விஷ்வாவா?" எனவும் ஆமோதிப்பாய் தலையசைக்க



"தேங்க் காட்...ப்ளீஸ் கம் இன் சைட்..."என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.



"மிஸ்டர்.விஷ்வா....இவங்க உங்களால ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க... என்ன ப்ராப்ளம்னு தெரியாது...பட்...உங்க கிட்ட மன்னிப்பு கேட்டு கிட்டே இருக்காங்க...அவங்க கிட்ட நா உன்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க....அப்போ சரி அவங்க ட்ரீட்மெண்டுக்கு ஒத்துக்குறாங்களான்னு பாக்கலாம்"



"என்னாச்சு டாக்டர்?"



"இவங்க ட்ரீட்மெண்டுக்கு ஒத்துழைப்பு தர்றாங்க இல்ல...ப்ளீஸ்" என அவர் கைகாட்டவும் அவளருகில் சென்று அமர்ந்தான் விஷ்வா....



அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தவனின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கிப் போய் இருந்தது.



அவளோ "ப்ளீஸ் விஷு....என்ன மன்னிச்சிடுங்க..."

என்றதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.



"ஷ்...."என அவள் உதட்டில் கை வைக்க அவள் புலம்பல் அப்படியே அடங்கிப் போயிற்று....



"மன்னிச்சிட்டேன் யாழ்...ப்ளீஸ் நீ ட்ரீட்மெண்டுக்கு காப்ரேட் பண்ணுமா..." என தலையை வருடி விடவும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய அதை துடைத்தவன்



"ஒன்ன நா அடுத்த தடவ பாக்கும் போது சிரிச்சிக்கிட்டே தான் பாக்கனும் யாழ்....சீக்கிரமா திரும்பி வந்துடு...உனக்காக நா வெயிட் பண்ணுவேன்"

என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு வெளியே செல்ல உள்ளே நுழைந்தார் டாக்டர்.



"ஒன்னும் ஆகாது அங்கிள்...அவ கண்டிப்பா திரும்பி வருவா" உறுதியுடன் கூறியவனை பார்த்ததும்தான் அவர் அழுகை சற்றே மட்டுப்பட்டது.



அழுது கொண்டே இருந்த ரித்திகாவிடம் சென்று என்னவென்று விசாரிக்க



"உங்க நெனப்புலயே வண்டிய ஓட்டிட்டு போனவ முன்னால வந்த வண்டிய கவனிக்காம மோதிட்டாணா..."என்று விட்டு மறுபடியும் அழ அவளை தட்டிக் கொடுத்தவனுக்கு பெரும் குற்ற உணர்ச்சியாய் போயிற்று...



அவள்தான் சின்னப்பெண்...

தெரியாமல் செய்துவிட்டாள்....

தனக்கு எங்கே போனது புத்தி??? தன்னைத்தானே திட்டிக் கொண்டவன் அவர்களுடனேயே இருந்து கொள்ள அவனின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டே இருந்த ரித்துவின் தந்தைக்கு அவனின் நிதானமான செயலில் அவன் மீது பெரும் மதிப்பு உண்டாயிற்று....



***



அவள் அப்படியே கூடை நாட்காலிக்குள்ளே உறங்கிப் போயிருக்க திரும்பவும் ஆபிஸ் போய்விட்டு வீடு வந்தவன் அவளை தூக்குவதா வேண்டாமா என்று ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.



தன்னை தொடரும் நிழற்படத்தின் பிம்பங்களுக்கு துரோகம் இழைப்பது போல மனம் நினைக்க நிஜத்தில் கண் முன் இருப்பவளை தொடவே தயங்கியது அவன் கரங்கள்....



((ஷ்ஷப்பா...சத்தியமா முடிலடா....நண்பா இவனுக்காக நீங்களும் கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க))



அவளின் தலை இலேசாக சரிய பதறிப்போனவன் இதற்குமேலும் முடியாதென்று தன் கைகளில் ஏந்திக் கொண்டு போய் கட்டிலில் கிடத்தி விட்டு எழ அவன் மனையாளோ வழமை போல் அவன் டீ-ஷர்ட்டை இறுக்கப் பற்றி அவனுக்கு அதிர்வை உண்டாக்கினாள்.



அவளது கையையும் டீ-ஷர்ட்டையும் மாறி மாறி பார்த்தவன் மெதுவாக எடுத்து விட்டு நகரப் போக அவள் தூக்கத்தில் முனகுவது கேட்டு சட்டென அவள் புறம் திரும்பினான்.



"தேவ்...என்ன ஏன் தேவ் மறந்தீங்க... உங்க மனசுல நா இல்லயா தேவ்...ஏன் உங்களுக்கு எப்பவுமே எனக்கு புடிக்காம போகுது...இந்த வாழ்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு தேவ்...சீக்கிரமா என் தேவ்வா என்கிட்ட வந்துடுங்க ப்ளீஸ்...." என பேசிக் கொண்டே போனவளை பார்க்க பார்க்க அவனுக்குள் இன்னும் குழப்பம்தான் அதிகரித்து.



அப்போ அந்த பொண்ணு யாரு....ஒரு வேள இவளா இருந்தா ஏன் அப்போ என் பேர இப்போ அழச்சா மாறி அழக்க மாட்டெங்குறா'

வெகுவாய் குழம்பிப் போன மனதுடன் சொபாவில் சென்று தொப்பென அமர்ந்து விட்டான் ரிஷிகுமார் தேவமாறுதன்!!!



தொலைந்து போன நிழற்படங்கள் மீண்டும் அவன் முன்னே விரிந்தது.



(அவன் ஏதோ ஒரிடத்தில் நின்று கொண்டிருக்கிறான்....

மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும் ஒரு இடமாகத்தான் தெரிகிறது....

அவன் கைவளைவுக்குள் அவள்....

அழுது அழுது ஓய்ந்து போன தோற்றம்....

அவன் நெஞ்சிலே ஆழப் புதைந்து அழுது கொண்டிருப்பவளை தேற்றும் வழியறியாது முன்னால் நின்றிருந்தவனை பார்க்க அவனும் அதை புரிந்து கொண்டவன் போல் ஏதோ சொல்ல அவள் அதற்கெல்லாம் அசருவேனா என்பது போல் அவனை இன்னுமின்னும் ஒன்ற வேறு வழியில்லாமல் அவளை தன்னிலிருந்து பிரித்தவன் அவளைப் பார்க்காமலே சென்று விடுகிறான்.....)



கண்களை இறுக்க மூடியிருந்தவனுக்குள் மின்னல் வெட்ட பட்டென திறந்தவனின் உதட்டில் பூத்தது வெற்றிப் புன்னகை....



தொடரும்......



01-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 40 ❤



"நவ் ஷீ இஸ் பைன்....அவங்கள வார்டுக்கு மாத்தினதுக்கு அப்பறம் நீங்க போய் பாருங்க"சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந்து செல்ல அப்போதுதான் இவ்வளவு நேரம் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டனர் நால்வரும்.....



அடுத்து சில மணி நேரங்களில் அவளை நார்மல் வார்டுக்கு மாற்றி விடவும் மற்ற மூவரும் உள்ளே சென்றாலும் வாசலிலேயே தயங்கி நின்று விட்டான் வருண்....



அவன் சங்கடத்தை புரிந்து கொண்டவர் தாங்கள் பார்த்துவிட்டு வெளியே வந்து அவன் தோல் தொட்டு



"நீ போப்பா..."எனவும் சங்கடம் விலகியவன் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.



தன்னையே ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்த யாழினியின் அருகில் சென்று அமர்ந்து அமைதியாய் இருக்கவும்



"ஐ அம் சாரி விஷ்வா...." என்றவளின் கண்கள் மறுபடியும் கலங்க அவளை நிமிர்ந்து பார்த்தவன்



"உன்ன நா மறுபடி பாக்கும் போது சிரிச்சிக்கிட்டே தான் பாக்கனும்னு சொன்னேனா இல்லயா?"எனவும் ஆனந்த அதிர்ச்சியில்



"அ...அப்போ என்ன மன்னிச்சிட்டீங்களா விஷு?"என்க அவள் தலையை தடவி நெற்றியில் தன் முத்திரையை பதித்தவன்



"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?"

என்றான் சற்றும் யோசிக்காது....



அவனை அதிர்ச்சியாக விழிவிரித்து நோக்க



"உன்ன நா கட்டாயப்படுத்தல யாழ்...நீ நிதானமா யோசிச்சு சொல்லு..."என்றவன் எழுந்து கொள்ள அப்போதுதான் அதிர்ச்சியிலிருந்து மீண்டவள் அவன் கை பற்றி தடுத்தாள்.



அவன் திரும்பாமலே நிற்கவும்

"எனக்கு சம்மதம்" என்று விட்டு அவனை பார்க்க அவள் புறம் திரும்பி மெலிதாக சிரித்தவன்



"நா உன்கிட்ட இப்போவே கேக்கல யாழ்....நீ நல்லா டைம் எடுத்துக்கோ..... குற்ற உணர்ச்சி இல்லாம என்ன எனக்காகவே ஏத்துகுறதுன்னா சொல்லு?"



"நீங்க எப்போ எப்பிடி கேட்டாலும் என் பதில் சம்மதம் தான்‌....பிகாஸ்..."



"பிகாஸ்?"



"....."



"சொல்லு?"



"....."



"ஓகே லீவ் இட்....பட் நல்லா யோசிச்சு உன் முடிவ என்கிட்ட வந்து சொல்லு....நீ நோ சொல்றதால எனக்கு ஒரு ப்ராப்ளமும் இல்ல"



"ப்ராப்ளம் இல்லதான் விஷு... ஏன்னா உங்களுக்காகதான் அந்த பொண்ணு இருக்கால்ல....பட் நீங்க என் மேல பரிதாபப்பட்டு என்ன ஏத்துக்க வேணாம் விஷ்வா....."

என்றவளின் பேச்சில் அவனுக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை....



குழப்பமாய் அவளை பார்த்து

"என்ன ஒலறிகிட்டு இருக்க.... எந்த பொண்ணு?" என்றான் சற்று காட்டமாகவே....



"அன்னக்கி உங்கள கட்டிபுடிச்சிகிட்டு நின்னாளே...."



"ஷட் அப் யாழ்.....நா சம்மதம் கேட்டது உன்கிட்ட...டைம் எடுத்துக்கோன்னு சொன்னா இப்பிடிதான் பேசுவியா?"



"....."



"நா வர்றேன்"என்றவன் அவளை திரும்பியும் பார்க்காது சென்று விட சோர்வாக கண்களை மூடினாள் யாழினி.





அமெரிக்கா.....



மெக்சிகோ நகரம்....



இந்தியா செல்வதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ரகுவின் அருகில் வந்து அமர்ந்தான் ராகேஷ்....



"இப்போவே போயே ஆகனுமாடா.... இன்னும் கொஞ்ச நாள் என்கூடவே இருக்கலாம்ல?"

நூறாவது முறையாக தன் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.



'இதுக்கு மேல இங்க இருந்தேன்னா உன்னயே என் கையால கொன்னுறுவேன்னு பயமா இருக்கு' வெறுப்புடன் நினைத்துக் கொண்டான் ரகு.



"அவ்வளவு முக்கியமான வேலயாடா?"



"ஆமா மச்சி....நான் இப்போ போயி அங்க உள்ளத கவனிக்கலன்னா நீ மாட்டிப்ப"



"அதான் அந்த சொட்ட இருக்கான்லடா.... அவன் பாத்துக்க மாட்டானா?"



"நாம நேர்ல இருந்து கவனிக்கிற மாறி வராதில்லடா?"



"பட்....அந்த சொட்டக்கி பதிலா நாம அந்த ராஜன மடக்கி இருக்கலாம்டா"



"அவன் மடங்கி இருக்க மாட்டான் மச்சி....ஏன்னா அவனுக்கு வேண்டியது ஆர்.கேயோட பணமும் அவனும் தான்....நாம சொல்ற விஷயத்துக்கு ஒத்துகிட்டு இருக்க மாட்டான்"



"அவன் பொண்ண வெச்சி மிரட்டி இருக்கலாமேடா...?"



"அவளே ஒரு வில்லி....அவ எப்போடா ஆர்.கே கிட்ட வழியிறன்னு இருக்கா.... இதுலயிருந்து அவ ஈஸியா தப்பிச்சு இருப்பா"



"ஓகே விடு....நம்ம ஹரிஷ் பத்தி ஏதாவது...?"



"ஊஹூம்....ஒரு துரும்பும் வெளிய கசியாம பக்காவா ப்ளான் பண்ணி கடத்தி வெச்சிருக்கான்டா"



"ஹௌ டேர்...."என்றவன் தன் கை முஷ்டியை கோபத்தில் இறுக்கு அவனை பார்த்து இகழ்ச்சியாய் வளைந்தது ரகுவின் உதடு.



"நீ கோபப்படாத மச்சி....நா பாத்துக்குறேன்"



"அனு?"



"அவன் கஸ்டடியிலதான் இருக்கா"



"அவள் காப்பாத்த முடியலயா?"



"எல்லா முயற்சியும் பாத்துட்டேன் டா.....பட் எப்பிடித்தான் நம்மாலுங்கள அவ்வளவு ஈஸியா கண்டு புடிக்கிறான்னுதான் தெரில"



"நீ என்ன அவனுக்கு சப்போர்ட்டா?"



"நா என்னடா பண்ணேன்?"



"பின்ன....அவன பத்தியே புகழ்ந்துகிட்டு இருக்க?"



"ஜஸ்ட் நடக்குறத சொன்னேன் மச்சி"



"சரி நீ கெளம்பு..."

என்றவனுக்கு அவன் மீது இலேசாக சந்தேகம் துளிர்க்க ஆரம்பித்தது.



***



புன்னகையுடனே சோபாவிலிருந்து எழுந்தான் ரிஷி....



பின்னே எவ்வளவு நாள் கஷ்டப்பட்டது இன்றுதான் அது வெற்றி பெற்றிருக்கிறதே!!!



ஆம் அவனுக்கு இப்பொழுதெல்லாம் தலைவலிப்பது சற்று குறைவாகவே இறுக்க இன்று வலிக்கவே இல்லை என்றால் அவனுக்கு வெற்றிதானே???



திரும்பவும் ஒருதடவை உறங்கிக் கொண்டிருந்தவளை பார்த்தவன் எழுந்து தனது ஆபிஸ் அறைக்குள் சென்றுவிட்டான்.



காலை.....



உடல் ரொம்பவும் அசதியாக உணர எழும்ப முடியாமல் கண்களை மட்டும் திறந்து தன்னவனை தேடினாள் அஷ்வினி.



அப்பொழுதுதான் ஜிம் செய்து விட்டு வந்திருப்பான் போலும்...



உடல் வியர்வையில் குளித்திருக்க டவளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைவது தெரிந்தது.



கண்மூடி கொஞ்ச நேரம் அப்படியே சாய்ந்திருந்தவள் அவனுக்கு காபி போட்டு எடுத்து வர வேண்டுமே என்பது நினைவு வர கஷ்டப்பட்டு கட்டிலிலிருந்து இறங்கியவளுக்கு அப்படியே தலை சுற்றிக் கொண்டு வந்தது.



அவசரமாக அருகிலுள்ள கட்டில் கம்பை பிடித்து தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளுக்கு அது முடியாமல் போய் கண்கள் இருட்டிக் கொண்டு வர அப்படியே பின்னால் கட்டிலிலே மயங்கிச் சரிந்தாள்.



உடைமாற்றிவிட்டு குளியலறையிலிருந்து வந்தவனுக்கு அவள் இருந்த கோலத்தில் மனது திக்கென்றது.



இதயம் தடதடக்க ஈரெட்டில் அவளை அடைந்தவன் கீழிருந்த காலை நேராக போட்டு விட்டு அவள் கண்ணத்தை தட்டினான்.



"ஹேய்....இங்கபாரு...அ..அஷ்...அஷ்..அஷ்வினி.....டிட் யூ ஹியர் மீ....வேக் அப்...." கண்ணத்தை தட்டிக் கொண்டிருந்தவன் எழுந்து சென்று தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்து விட்டு மீண்டும் மீண்டும் தட்டினான்.



"வேக் அப் அஷ்வினி....நா பேசுறது கேக்குதா....ப்ளீஸ் வேக் அப்...." அவன் தட்டிக் கொண்டிருக்கும் போதே முகம் சுருங்க மெதுவாக கண்களை திறந்தாள் அவனவள்....



"தேங்க் காட்..."என்று பெருமூச்சு விட்டபடி எழுந்து அவளை சாய்வாக படுக்க வைத்து விட்டு நகரப் போக அவன் கையை போகவிடாமல் பிடித்திருந்தாள் அவள்....



என்னவென்பது போல் அவன் அவளை திரும்பிப் பார்க்க



"ப்ளீஸ்...தே...வந்து என்கூடவே இருங்க"என கெஞ்சலாக கேட்கவும் அவன் இதயத்தின் ஓரத்தில் திடீரென சுளீரென்று வலித்தது.



"நா டாக்டருக்கு கால் பண்ணிட்டு வர்றேன்" என கனிவாக கூறவும் அதை உடனடியாக மறுத்தவள்



"இல்ல நீங்க என் கூடவே இருங்க....என்ன விட்டு போய்டாதிங்க ப்ளீஸ்...." தொண்டை அடைக்க கண்கள் கலங்க அவன் பதிலுக்காய் அவனைப் பார்த்திருந்தவளின் கண்களில் என்ன கண்டானோ அப்படியே மந்திரத்திற்கு கட்டுண்டவன் போல் அவளருகே நாட்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து விட்டான்.



அவன் அமர்ந்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டவள் கண்கள் மூடி பின்னால் சாய புருவம் சுருக்கி அவளை யோசனையாய் பார்த்தவன் மனம் கேட்காது டாக்டருக்கு அழைத்தான்.



.....



"அண்ணா டாக்டர் எதுக்கு நம்ம வீட்டுக்கு வர்றாரு?"வேலைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த வருணிடம் மாடியிலிருந்து இறங்கி வந்தவாறே கேட்டாள் கயல்.



அவள் கேள்வியில் சட்டென திரும்பி வாயிலைப் பார்த்தவன் வரவேற்பாய் புன்னகைத்துவிட்டு



"வாங்க டாக்டர்....பட்?"என புரியாமல் பார்க்க



"மாறன் சார் தான் கால் பண்ணாங்க விஷ்வா...."



"எ... என்னாச்சு?"



"அவரோட வொய்ப் மயங்கி விழுந்துட்டாங்கன்னு சொன்னாரு"எனவும் இழுத்துப் பிடித்த மூச்சை விட்டனர் இருவரும்.



"மாடில இருக்கான்...வாங்க"

என்றுவிட்டு அவன் அவருடனே ஏற ஆரவ்வை அழைப்பதற்காக தங்களறைக்குச் சென்றாள் கயல்....



.....



"மிஸ்டர்.மாறன் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.... வர்றீங்களா?"அவளை பரிசோதித்து விட்டு அவனிடம் திரும்பி கேட்கவும் யோசனையுடனே ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அவருடன் வெளியேற பதற்றமாய் உள்ளே நுழைந்தான் ஆரவ்.



"என்னடி ஆச்சு?"



"...."



"ஏன் வாய் தொறந்து பேச மாட்டீங்களோ?" பதற்றத்தில் வந்து கேட்க அமைதியாக இருப்பவளை பார்த்து கோபம் வந்து விட்டது அவனுக்கு....



"டேய் ஆரவ்....ரிலாக்ஸ்...எதுக்கு இப்போ ரிக்ஷி மேல கோபப்பட்ற... அவளே சொர்ந்து போயிருக்கா" வருண் வரிந்து கட்டிக் கொண்டு வர அவனையும் முறைத்தவன்



"ஆ...ஊன்னா சப்போர்ட் பண்றதுக்கு வர்றிங்கல்ல....முதல்ல இவள வாய திறந்து பேச சொல்லுங்கண்ணா.... பாருங்க எப்பிடி இருக்கான்னு" என வருணிடமும் எகிற



"ஆரு....ஸ்டாப் இட்....எதுக்கு இப்பிடி கோபப்பட்ற?"



"நீ இரு அம்மு....இவள இப்பிடி பாக்கும் போது அப்பிடியே ஒன்னு அறையனும்னு தோனுது"



"ஆரவ் என்னடா....என்னாச்சு?"



"என்னண்ணா புரியாம பேசுறீங்க.... ப்ரக்னன்டா இருக்குற டைம்ல இவ இப்பிடி அழுதுகிட்டே ரூமுக்குள்ள உக்காந்துட்டு இருந்தா பேபிக்கு தான் பிரச்சினையாகும்....

ஏதோ தெரியாத மாறி கேக்குறீங்க?" வருணை பார்த்து ஆரவ் வெடிக்க அதே நேரம் அதையேதான் டாக்டரும் ரிஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.



"மிஸ்டர். மாறன்...உங்களுக்கும் உங்க வொய்புக்கும் இடைல ஏதாவது பிரச்சனையா?"



"இல்ல...."பட்டென்று பதில் வந்தது அவனிடமிருந்து....



"உங்க வயசு என் அனுபவம் மாறன்...டோன்ட் ட்ரை டு ஹைட்...."



"...."



"அவங்க உடலளவுல விட மனசளவுல ரொம்ப வீக்கா இருக்காங்க மாறன்....இந்த மாறி டைம்ல தன்னோட ஹஸ்பண்ட் தன் கூடவே இருக்னும்னு நெனப்பாங்க....அது அவங்களுக்கு கிடைக்காத பட்சத்துல விரக்தி நிலமைக்கு தள்ளப்படுவாங்க....தட் இஸ் வெர்ரி டேன்ஜரஸ்....அப்பிடி நடந்துதுன்னா பேபியோட ஹெல்த் ரொம்ப பாதிக்கும்"



"...."



"என்ன பிரச்சினன்னு தெரியல...பட் அவங்க உங்கள ரொம்ப தேடுறாங்க.... அதிக டிப்ரஷன்ல இருக்காங்க மாறன்...ப்ளீஸ் அவங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண ட்ரையாவது பண்ணுங்க...."



"...."



"எண்ட்....ஒரு டாக்டரா இல்லாம ஒரு தந்தையா சொல்றேன் மாறன்.... அஷ்வினிய எனக்கு ஏற்கனவே தெரியும்....என் ப்ரண்டு மக தான்....எனக்கும் மக போலதான்.... அவ வாய் ஓயாம பேசிகிட்டே இருக்குற பொண்ணு....இந்த நிலமைல பாக்கும் போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு"என்றவன் அவன் தோலை தட்டி விட்டு செல்ல அவரை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.



'வாய் ஓயாம பேசுவாளா....அப்போ என்னாலதான் இப்பிடி மாறி இருக்காளா?'



((அது இப்போதான் ஒனக்கு தெரியுதாடா....))



தொடரும்.....



04-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 41 ❤



"இத குடிம்மா..."



"வேண்டாம்மா....." ரித்துவின் அம்மா கெஞ்சிக் கொண்டிருக்க கையிலிருந்த பால் வேண்டவே வேண்டாம் என்று மறுத்துக் கொண்டிருந்தாள் யாழினி.



"இது மட்டும் கண்ணு...."



"இல்லமா எனக்கு வேண்டாமே ப்ளீஸ்...."



"காலைல இருந்து எதுவுமே சாப்புடல....இந்த ரித்து வேற எங்க பொய்ட்டான்னு தெரில"



"எனக்கு பசியில்லமா...."அவள் மறுபடியும் மறுக்க உள்ளே நுழைந்தாள் ரித்திகா.



"அம்மா....இங்க கொடுங்க....நா யாழிக்கு கொடுக்குறேன்.... நீங்க போய் அப்பாவ கவனிங்க போங்க"என்றவள் அவருடைய கையிலிருந்த பால் க்ளாஸை எடுத்து அவரை அனுப்பி வைத்து விட்டு தன் தங்கையிடம் திரும்பினாள்.



"என்ன பிரச்சின?" அவள் நேரடியாகவே விஷயத்திற்கு வர சற்று அதிர்ந்து தான் போனாள் வருணின் துப்பட்டா விழியழகி.....



"....."



"யாழி....இத முதல்ல குடி"என்று அவளை வலுக்கட்டாயமாக அருந்த வைத்தவள் அவளருகில் அமர்ந்து அவள் தலையை தன் தோல் மீது சாய்த்துக் கொள்ள யாழினிக்கு தொண்டை அடைத்தது.



"அண்ணா மன்னிக்க முடியாதுன்னு சொல்லிட்டாரா?"



"இல்ல"



"பின்ன?"



"அவர கல்யாணம் பண்ணிக்க கேக்குறாரு"



"வாட்...."ஆனந்த அதிர்ச்சியில் துள்ளிக் குதித்தவள் யாழினியின் முகம் யோசனையாய் இருப்பதை கண்டு



"அண்ணா செம ஸ்பீட் தான் போ.... பட் அதுக்கு ஏன் உன் முகம் இப்பிடி இஞ்சி தின்ன குரங்கு மாறி இருக்கு?"



"...."



"யாழி...."மீண்டும் அவளை தன்னை நோக்கி திருப்ப அவளை கட்டிப் பிடித்தே கதறிவிட்டாள் பெண்ணவள்.



"ஏன் யாழி.... என்னாச்சு....?"என்க தான் கண்ட அனைத்தையும் சொன்னவள் ஏங்கி ஏங்கி அழுதாள்.



"அவரு மட்டும் என்ன எனக்காகவே ஏத்துக்கோன்னு சொல்றாரு....பட் அவரு மனசுல வேற பொண்ணு இருக்கா....குற்ற உணர்ச்சிக்காக பரிதாபப்பட்டு வாழ்க்கை தர்றா மாறி ஃபீல் ஆகுது ரித்து.. அத சொன்னதுக்கு கோவிச்சிகிட்டு பொய்ட்டாரு"



"அவங்க ப்ரண்ட்ஸா கூட இருக்கலாம்ல?"



"ப்ரண்டு தான் என்ன அந்த பார்வ பாப்பாளா?"



"அண்ணா கிட்ட என்ன நடந்துதுன்னு முதல்ல கேளு யாழி... நீயா ஒன்ன நெனச்சிகிட்டு இப்பிடியெல்லாம் பேசுறியோன்னு எனக்கு தோனுது"



"அப்போ நா கண்டது பொய்யிங்குறியா?"



"அப்பிடி இல்ல யாழி....நீ தப்பா புரிஞ்சிகிட்டு இருந்திருக்கலாம்"



"...."



"நீ எதுக்கும் ஒரு தடவ அவரு கிட்ட போய் பேசு... ப்ராப்ளம் சால்வ் ஆகலாம்ல?"



"சரி" என்றவள் அவள் தோலிலேயே உறங்கிப் போனாள்.



***



"ரிக்ஷி...." அன்பாக தன் தங்கையின் தலையை வருடியவாறே அஷ்வினியின் அருகில் அமர்ந்தான் வருண்.....



அவளோ அவன் அழைப்பது கூட காதில் விழாமல் ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.



"ரிக்ஷி...என்னம்மா....ஏதாவது பண்ணுதா?"



"...."



"ரிக்ஷி...."



"சொ...சொ...சொல்லுங்கண்ணா?"



"என்ன யோசிக்கிற?"



"ஒன்னில்லண்ணா"



"எல்லாம் சரி ஆயிடும்மா....கடவுள் மேல நம்பிக்க வை"



"...."



"பாத்தீங்களாண்ணா பேசுறத....நம்ம கிட்ட எதுவும் ஷேர் பண்ணிக்க கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலயுறா" கடுப்பாக சொன்ன ஆரவ்வை விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள் அஷ்வினி.



"ஆரு கொஞ்சம் சும்மா இருடா...." கயல் கணவனை அடக்க



"அண்ணா....இவன் என்ன ரொம்ப திட்றான்" ஆரவ்வை விட்டு விட்டு வருணிடம் புகார் வாசிக்க ஆரவ்வை முறைத்தான் வருண்.



"நீங்க முறச்சா நாங்க பயந்துறுவோமா....இவள என்கிட்ட முதல்ல பேச சொல்லுங்கண்ணா.... நா என்ன தப்பு பண்ணேன்னு என்கிட்ட கோபம் காட்றா?"



"ரிக்ஷி என்னமா....என்ன பிரச்சின....ஏன் அவன்கிட்ட பேச மாட்ற?"



"அப்பிடியெல்லாம் எதுவுமில்ல ணா...."



"பொய் சொல்றாண்ணா"



"ஆரு இப்போ சும்மா இருக்க முடியுமா முடியாதா?"



"முடியாது அம்மு....இவள பழயபடி இருக்க சொல்லு"



"உன் அண்ணன முதல்ல பழயபடி இருக்க சொல்லு"

அப்போதுதான் அவனைப் பார்த்து பேசினாள் பேதை....



"சிச்சுவேஷன் தெரியும்ல அஷ்வி.... எதுக்குடி இப்பிடி நடந்துக்குற?"

என்றவனுக்கும் அவள் கர்ப்பமாக இருப்பதால்தான் இப்படி அடம் பிடிக்கிறாள் என்பது தெரியாமல் இல்லை....



இருந்தும் என்ன தான் செய்வான் அவனும்???



"அஷ்வி....உன்னோட நிலமயும் புரியுதுடி...பட் எங்களால என்ன பண்ண முடியும் சொல்லு?"



"அதுக்காக என் முகத்த கூட பாக்க மாட்டேங்குறாருடா....ரொம்ப கஷ்டமா இருக்கு ஆரு"என்றவள் முகத்தை மூடி அழத் தொடங்க மூவருக்கும் மனம் கணத்துப் போனது.



அப்போதுதான் டாக்டரிடம் பேசிவிட்டு உள்ளே நுழையப் போன ரிஷி சடன் ப்ரேக் போட்டாற் போல் அப்படியே அசையாது நின்று விட்டான்.



"அக்கா...அழாத....எல்லாம் சரி ஆயிடும்"



"சரி ஆயிடும் சரி ஆயிடும்னு தான் எல்லாம் சொல்றீங்க...பட் எல்லாம் தல கீழா மாறிட்டு இருக்கு...."சற்று சத்தமாக பேசியவள் மீண்டும் அழ கேட்டுக் கொண்டிருந்தவனின் நெஞ்சு வலித்தது.



அப்போதுதான் அவனை கண்ட வருண்



"வா ஆர்.கே...டாக்டர் என்ன சொன்னாரு" என்று கேட்டு விட்டு எழுந்து வர அஷ்வினி அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.



அவளை விட்டு இம்மியளவும் நகராத அவன் பார்வை அதை துள்ளியமாய் படம் பிடித்துக் கொண்டது.



"ஆர்.கே"



"சொல்லு மச்சான்"



"டாக்டர் என்ன சொன்னாரு?"



"அது.. சா.. சா.. சாதாரண மயக்கம்னு சொன்னாரு" அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வருணின் மொபைல் அலறியது.



எடுத்து பேசியவன்

"சாரி மச்சான்....முக்கியமான கேஸ் பொய்ட்டு இருக்கு....நா கெளம்புறேன்"



"ஓகே டா...."எனவும் அவசரமாக வெளியேறினான் வருண் விஷ்வா.



ஆரவ்வுடன் கயலும் அவர்களுக்கு தனிமை கொடுத்து வெளியேற தனித்து விடப்பட்ட இருவருள் ரிஷியின் பார்வை தன் மனையாளை கூர்மையாய் துளைக்க அது ஏற்கனவே அறிந்தோ என்னவோ அவள் குனித்த தலையை நிமிர்த்தவே இல்லை.....



அவளருகே அழுத்தமான காலடிகளுடன் நடந்து வந்தவன்



"எப்போ சாப்பிட்ட?"என்க அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.



"...."



"கேக்குறேன்ல?"



"...."



"சொல்லுடி"



"அ...அ...அது அது தெ...தெரில" எனவும் அவளை உறுத்து விழித்தவன் வேலு என கத்தினான்.



அடித்துப் பிடித்துக் கொண்டு அவன் முன் பவ்யமாய் வந்து நின்ற வேலையாள்



"சொ...சொ...சொல்லுங்க ஐயா?"என்றான் நடுக்கத்துடன்....



"இவளுக்கு சாப்பாடு கொண்டு வா"என சீற அடுத்த நிமிடம் மாயமாக மறைந்திருந்தான் அவன்....



"ரொம்ப நல்லது இப்பிடியே மெயின்டெய்ன் பண்ணிக்கோ" என கோபமாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே நுழைத்தான் வேலு....



"சாப்பாட்ட வெச்சிட்டு நீ போ"



"சரிங்கய்யா" என்று விட்டு வெளியேறவும் அதை எடுத்து வந்து அவள் முன் நீட்டி



"ம்...சாப்புடு"எனவும் அவள் வேண்டாம் என்று தலையாட்ட தன் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கியவன்



"சாப்புட போறியா இல்லையா?" என கேட்கவும் அவன் கோபம் உணர்ந்து அவசரமாக எடுத்து சாப்பிடத் துவங்கினாள்.



அவள் சாப்பிட்டு முடியவே தண்ணீரையும் பருக வைத்தவன்



"நீ சாப்புடாம இருக்குறதால உனக்கு மட்டும் இல்ல....பேபிக்கும் ஹெல்துக்கு நல்லதில்ல... சோ...டைமுக்கு சாப்புடு"எனவும்



'அப்போ என் மேல அக்கறயே இல்லல்ல தேவ்' என நினைத்தவளுக்கு கண்கள் மறுபடியும் கலங்கி கண்ணீர் விழவா வேண்டாமா என்ற நிலையில் இருக்க அவசரமாக எழுந்து பாத்ரூம் செல்ல எத்தனித்தவளின் கையை பிடித்து தடுத்தான் அவன்....



அவள் திரும்பாமலேயே தனக்குள் அழுகையை அடக்கியபடி பல்லை கடித்துக் கொண்டு நிற்க அவள் எதிர்பாரா விதமாய் சட்டென தன்னை நோக்கி இழுத்தான் ரிஷி.



நிலைதடுமாறி அவன் நெஞ்சின் மீது வந்து மோதியளை அப்படியே இறுக்க அனைத்துக் கொள்ள அவளுக்குத் தான் மீண்டும் மீண்டும் கண்ணீர் உடைப்பெடுக்க மொனமாய் கண்ணீர் வடித்தவளின் கண்ணீர் அவன் தேகம் தீண்ட சட்டென தன்னீலிருந்து அவளை பிரித்தெடுத்தான்.



அவளின் குனிந்த தலையை தன்னிரு கைகளாலும் ஏந்தி தன் கட்டை விரலால் அவளுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டவன்



"ப்ச்...ஏன் அழற....அதான் ஒன்னில்லல்ல....நீ அழுதா எனக்கு வலிக்குதுடி....ப்ளீஸ் அழாத" என்று சொல்லியும் அவள் கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது.



"இதுக்கப்பறம் இப்பிடி பண்ண மாட்டேன்....உன்கூடவே இருக்கேன்.... ப்ளீஸ்டா அழறத முதல்ல நிப்பாட்டு....சத்தியமா வலிக்குதுடி" எனவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாவள் அவனை இறுக்க அணைத்துக் கொள்ள தானும் அனைத்தவன் அவள் முடியை தடவிக் கொடுத்தான்.



***



தன் மடியிலிந்த ஆரவ்வின் மூடியை கையால் வருடியவாறே ஏதோ யோசித்துக் கொண்டிருந்தவனை காதலாய் பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்...



"அம்மு...."



"சொல்லு ஆரு...?"



"பேசாம அஷ்வியோட ஞாபம் வர்றா மாறி இருக்குற பொருட்கள அண்ணா கண் முன்னாடி வெச்சிடலாமா?"



"லூசாடா நீ.... டாக்டர் அப்பிடி மட்டும் நடந்ததுன்னா உயிருக்கே ஆபத்துன்னு சொன்னாரா இல்லயா?"



"அதில்ல அம்மு..."



"ஒன்னும் தேவயில்ல...நீ வாய மூடிக்கிட்டு பேசாம இருந்தாலே எல்லாம் சரியாகிடும்"



"அஷ்வி பாவம்டி..."



"அதுக்காக அத்தானோட உயிரோட விளயாடாத ஆரு"



"அப்பிடி இல்லடி"



"எப்பிடி இல்ல...நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்....பேசாம மூடிட்டு இரு"



"குழந்தை ஹெல்த் பாதிக்கும்லடி?"



"அதெல்லாம் அத்தான் பாத்துப்பாரு.... நீ சும்மா இரேன்டா"



"ஹி...ஹி...கடுப்பாகாத செல்லம்...."



"கடுப்பாக்காத முதல்ல"



"உனக்கு அஷ்விய விட உன் அத்தான் மேலதான் பாசம் அம்மு..." அவன் வேண்டுமென்று சீண்டவும் அதையறியாத அந்தப் பேதையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.



"எனக்காடா அவ மேல பாசம் இல்ல...அவளும் எப்போ பாரு இதயேதான் சொல்லுவா....நீங்க ரெண்டு பேரும் ரொம்ப மோசம்"



"ஏய்...எதுக்குடி அழற...நா சும்மா விளயாட்டுக்கு சொன்னேன் அம்மு செல்லம்....எனக்கு தெரியாதா உன்ன பத்தி"



"முதல்ல கண்ண துட அம்மு"என்றவன் தானே துடைத்தும் விட்டான்.



"..."



"இதுக்கெல்லாமாடி அழுவாங்க?"



"ஆமா...பின்ன நீ அப்பிடி சொன்னா எனக்கு கஷ்டமா இருக்காதா?"



"ஓகே ஓகே சரண்டர்..."கைகளை மேலே தூக்கிக் கும்பிடு போடவும் அப்போதுதான் இலேசாக சிரித்தாள் அவள் மனையாள்.



"அம்மு படிப்ப தள்ளி வெச்சிட்டு நாமளும் குழந்த பெத்துக்கலாமா?"



"ஏன் அப்போதான் உன் புள்ளய என் அக்கா புள்ள கூட உன்ன மாறியே சண்ட போட வெக்கவா?"



"அடிப்பாவி....என்ன பத்தி என்னே ஒரு நல்ல எண்ணம்" எனவும் பக்கென சிரித்தாள் கயல்விழி.



***



"ரிதி....ஏன்டி காலேஜ் வர்ல?"



"யாழிக்கு சின்ன ஆக்ஸிடென்ட் சித்..." தூங்கிக் கொண்டிருந்தவளின் தலையை வருடிக் கொண்டே பேசினாள் ரித்திகா.



"ஏன்டி என்னாச்சு?" பதட்டப்பட்டவனிடம் நடந்ததை சொல்ல



"இப்போ என்ன முடிவு பண்ணியிருக்கா உன் தங்கச்சி?"



"தெரில சித்...ரொம்ப கொழப்பிக்கிறாவோன்னு தோனுது"



"பொண்ணு பேரு என்ன சொன்ன?"



"அது இவளுக்கும் தெரியாது.... நடந்தது மட்டும் பாத்துட்டு குழப்பிக்கிறா"



"நா வேனும்னா பேசட்டுமா?"



"இல்ல சித்...அவளே போய் கேக்கட்டும்னு சொல்லியிருக்கேன்....சரின்னு சொன்னா பாக்கலாம்"



"ஓகேடி....நா வெச்சிட்றேன்"



"சித்...."



"என்னடி?"



"ஐ லவ் யூ"



"லவ் யூ டூ மா...பய்"



"பய்"என கட் செய்தவள் எழுந்து யாழிக்கு போர்த்திவிட்டு கீழே சென்றாள்.





இரவு......



அவள் ஏற்கனவே அசதியில் தூங்கிவிட்டிருக்க வெகு நேரம் முக்கியமான ப்ராஜக்ட் விஷயமாக லேப்டாப்பில் மூழ்கியிருந்தவன் அப்போதுதான் மணியைப் பார்த்தான்.



அது பண்ணிரெண்டை தாண்டிக் கொண்டிருப்பதை கண்டு லேப்பை மூடி வைத்து விட்டு ஆபிஸ் ரூமிலிருந்து வெளியே வந்தவனுக்கு தன் வாழ்க்கைப் போக்கை நினைத்து மிகுந்த குழப்பமே எஞ்சியிருந்தது.



வெளியே சில்லென்று காத்து வீசிக் கொண்டிருக்க அவன் கால்கள் தானாக பால்கனியை நோக்கிச் சென்றது.



இங்கு வந்து நிற்கும் போதெல்லாம் வரும் பிணைப்புக்கு என்ன காரணம் என்பது அப்போதும் புரியாத புதிராகவே இருந்தது அவனுக்கு....



கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக வரும் இந்த உணர்வை அவன் இப்போதெல்லாம் விரும்பினான் என்றே சொல்ல வேண்டும்....



கொஞ்ச நேரம் சுய அலசலில் ஈடுபட்டுக் கொண்டிருந்து விட்டு திரும்பியவனின் கண்களின் விழுந்தது அந்த போர்ட்....



சுவரின் ஓரமாக பின் பக்கம் திருப்பி சாற்றி வைக்கப்பட்டிருந்ததை இவ்வளவு நாள் எப்படி காணாமல் இருந்தோம் என யோசித்துக் கொண்டே அதனருகில் சென்றவனுக்கு அருகில் செல்லச் செல்ல இதயம் வேகமாக துடிப்பது அவனுக்கே கேட்கும் போலத்தான் இருந்தது.



நடுங்கும் கைகளால் அதனை தன் புறம் திருப்பியவனின் அதிர்ச்சியில் இரண்டடி பின்னால் நகர்ந்து அதனையே பார்த்துக் கொண்டுருந்தான்.



ஆம்...அதில் இருந்தது அன்று அவன் மனையாள் அவனுக்காக கொடுத்த காதல் ஓவியப் பரிசு!!!



தலை சுற்றிக் கொண்டு வர கண்களை இறுக்க மூடியவனுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தெளிவான படங்களாக அனைத்துமே மணக்கண் முன் வந்து சென்று கொண்டிருந்தது.



எல்லாவற்றிற்கும் விடையாய் அவள் தான் அந்தப் பெண்ணாய்....



அவன் மனைவியாய் அவன் காதலியாய்....

அவன் அன்னையாய்...

அவனின் உயிருக்கும் அன்னையாய்....



பல பரினாமங்களில் வந்து விட்டுப் போனவளின் மதி முகம் தெளிவாய் அவன் கண் முன் வலம் வர அவன் உதடுகள்‌ "அஷூ..."என தானாக முணுமுணுத்துக் கொண்டது.



தொடரும்.......



04-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 42 ❤



தன் ட்ராலியை தள்ளிக் கொண்டு வெளியே வந்த ரகு தனக்காக காத்துக் கொண்டிருந்த வண்டியில் ஏறி அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.



தனக்குப் பின்னால் ராக்கேஷின் கட்டளைப்படி பின் தொடந்து கொண்டிருந்தவர்களை கண்டவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது.



தன் மேல் சந்தேகம் துளிர்விட்டிருப்பதை அறிந்தவன் அதற்கு மேல் ஆர்.கேயைப் பற்றி வாயைத் திறக்கா விடினும் இன்னும் ராகேஷுக்கு தன் மேல் சந்தேகம் போகவில்லை என்பது அவனது செயல்களிலேயே தெள்ளத் தெளிவாக புரிந்து போனது....



பேசாமல் மாட்டிக் கொள்வோமா என்று கூட ஒரு கணம் தோன்றிற்று அவனுக்கு...



அடுத்த நிமிடமே அதை அழித்தவன் அவனுக்கு சந்தேகம் வராதபடி நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தான்.



எவ்வளவு நேரம் அப்படியே கண்களை மூடி இருந்தானோ கார் திடீரென நிற்கவும் தான் தன் ஃப்ளாட் வந்துவிட்டதை உணர்ந்து கண்களை திறந்தவன் இறங்கி லக்கேஜை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.



லக்கேஜை ஓரமாக வைத்துவிட்டு கட்டிலில் ஹப்பாடா என மூச்சு விட்டு அமரவும் அவனின் மொபைல் அலறவும் சரியாக இருந்தது.



எடுத்துப் பார்த்தால் தொடுதிரையில் ராக்கேஷ் என விழுந்திருக்க ஒரு வித சலிப்புடனே அதை தட்டி காதில் வைத்தான்.



"என்னடா போய் சேந்துட்டியா?"



"ஆமா மச்சான்.... இப்போதான் வந்தேன்"



"ஈவ்னிங் முக்கியமான வேல இருக்கு.... ஞாபகம் இருக்குல?"



"இருக்கு மச்சான்....நீ கவலப்படாத நா பக்காவா எல்லாம் முடிச்சுட்றேன்"



"ஆ...அப்பறம்....அனுவ பத்தின டீடெயில்ஸயும் எனக்கு மெயில் பண்ணி விடு"



"ஓகேடா"



"நம்மாளு கிட்ட அந்த நாய்க்கு திரும்ப ஞாபகம் வந்துரிச்சான்னும் விசாரிக்க சொல்லிரு....

தாமதப்படுத்தினா நமக்குதான் ஆபத்து" தொண்டை அடைத்து ரகுவுக்கு.....கஷ்டப்பட்டு மூச்சை இழுத்துப் பிடித்தவன்



"ஓகே மச்சி நீ சொன்ன மாறியே அந்த நாய பத்தின டீடெயில்ஸயும் உனக்கு மெயில் பண்ணி விட்றேன்"



'தன் வாயாலேயே தன் நண்பனை நாய் என்று கூற வைத்துவிட்டானே பாவி....' நினைத்தவனின் கண்களிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர்த் துளி உருண்டு தரையைத் தொட்டது.



அந்தப் பக்கம் இருந்தவனுக்கு அப்போதுதான் அதுவும் அவன் அழைப்பில் தான் அவன் மீதிருந்த துளியளவு சந்தேகமும் அகன்றது போலும்....



குரலில் அப்படி ஒரு உற்சாகம்....



"தேங்க்ஸ் மச்சி....தேங்க் யூ சோ மச்....நீ டீடெயில்ஸ அனுப்பி விடு....அடுத்த என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்"



"ஓகேடா"



"அப்பறம்....அந்த நாய்க்கு இன்னும் ஞாபகம் வர்லன்னா நம்ம ப்ளான கொஞ்சம் தள்ளி போட்டுடலாமா....

இல்ல.... ஒரேடியா போட்டுத் தள்ளிரலாமா?"என கேட்டவனை அப்படியே உயிரோடு புதைத்து விட்டு அவன் கதறலை நிம்மதியாக கேட்க வேண்டும் போல் இருந்தது ரகுவுக்கு....



"அவன் இப்போல்லாம் வீட்ட விட்டு வெளிய வர்றது குறைவுன்னு இன்பர்மேஷன் வந்திருக்கு மச்சான்"



"ஓஹ்... இருக்கட்டும் இருக்கட்டும்...."



"...."



"அப்போ நம்ம ப்ளான தள்ளி வெச்சிடலாம்"



"சரிடா...நீ சொன்னபடி முடிச்சிரலாம்"



'கடவுளே அதுக்குள்ள ஆர்.கேக்கு எல்லாம் பழயபடி ஞாபகம் வந்துடனும்'



"நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் மச்சி...அப்போ வெச்சிட்றேன்....

மறக்காம ஈவ்னிங் போய் பாத்துட்டு வந்துடு... ஓகே?"



"ஓகே மச்சான் பாய்...." என்று விட்டு அழைப்பை துண்டித்தவன் இயலாமையில் வந்த கோபத்தில் தன் மொபைலை தூக்கி தரையில் அடிக்க உடைந்து சிதறியது.





கமிஷ்னர் ஆபீஸ்......



"ஹாய் மச்சி..."என்றவாறே உள்ளே நுழைந்தான் ஆரவ்.



"வாடா நல்லவனே...உக்காரு..."என்ற மதனின் கிண்டலில் அவனை முறைத்தபடி அவன் முன் அமர்ந்தான் ஆரவ்....



"சித்து எங்கடா?"



"வர்றேன்னு சொன்னான் மச்சி.... திடீர்னு ஏதோ வேலயாப் பொய்ட்டான்"



"அப்பறம்...சாரு ஏன் திடீர் விஜயம்?"



"என்னடா இப்பிடி கேட்டுட்ட.... வரக்கூடாதா.... சொல்லு வரக்கூடாதா?"



"டேய் டேய் இருடா...."



"கேள்விக்கு பதில்?"



"நீ எப்போ வேணும்னாலும் வரலாம்டா சாமி....இந்த அக்கப்போருக்கு நா வர்ல" நண்பன் ஜகா வாங்கி விட வாய் விட்டு சிரித்தான் ஆரவ்...



"எவ்வளவு நாளாச்சு உன்ன சிரிச்சு பாத்து"



"இனிமே பாக்கத்தானே போற"



"என்னடா சொல்ற...அப்போ?"



"எஸ் மச்சி...." என்றவன் காலையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினான்.



(அஷ்வினி எழுவதற்கு முன்னாலேயே எழுந்து ஜாகிங் போக கீழே வந்த ரிஷி ஆரவ்வும் ஜாகிங் போவதற்காய் வருவதை பார்த்து



"ஜாயின் பண்ணிக்கிறியா?" எனவும் அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் ஆரவ்....



பின்னே இவ்வளவு நாள் ஒரே வீட்டில் இருந்தும் தான் ஒருத்தன் இருப்பதையே கண்டு கொள்ளாமல் இருந்தவனுக்கு இன்று மட்டும் என்னானது என்று தான் பார்த்தான்.



அவனின் ஆராய்ச்சிப் பார்வை புரிந்தோ என்னவோ



"என்னடா அப்பிடி பாக்குற....ஜாயின் பண்ணிக்கிறியா...இல்லயா?" என்க ஒரு மார்க்கமாகவே தலையாட்டியவன் அவனுடன் இணைந்து வெளியேறினான்.



வெளியே சற்று இரண்டு தெருக்கள் தள்ளி இருந்த கிரவுண்டுக்கு வந்தவர்கள் அதைனை சுற்றி ஓடிக் கொண்டே பேசிக் கொண்டனர்.



"ஏன் ஆரு....காலேஜ் எப்பிடி பொய்ட்டிருக்கு?" எனவும் அவனது அழைப்பில் ஓடிக் கொண்டிருந்தவன் அப்படியே ஷாக்கடித்தவன் போல் நின்று விட ரிஷிக்கு அப்போதும் தான் அழைத்தது நினைவில் இல்லை போலும்...



அவனை திரும்பிப் "பார்த்து வாடா‌....ஏன் அங்கேயே நிக்குற?" எனவும் சந்தேகத்துடனே



"வர்றேண்ணா..."

என்றவன் மறுபடியும் அவனுடன் இணைந்து ஓடத் துவங்கினான்.



"சொல்லுடா காலேஜ் எப்பிடி பொய்ட்டிருக்கு....?"



"அ..அ..அது நல்லா போகுதுன்னா"



"ம் ஓகே...அப்பறம்..."என ஏதோ பேச வாயெடுகத்தவன் ஆரவ்வின் கூர்மையாய் துளைக்கும் பார்வையை கண்டு முகத்தை மற்றைய பக்கம் திருப்பிக் கொண்டு சிரிப்பை அடக்க திடீரென அவனை தன் புறம் திருப்பிய ஆரவ்



"அண்ணா..."என கண்கள் கலங்க கட்டிக் கொண்டான்.



உதட்டில் உறைந்த சிரிப்புடன் அவனைத் தழுவிக் கொண்டான் ரிஷி....



"எப்பிடிணா ஆச்சு?"தொண்டை அடைக்க கேட்டவனிடம் நேற்றிரவு நடந்ததை விவரிக்க



"கடைசியில உங்க புள்ளதான் ஒங்க பொண்டாட்டி கிட்ட சேத்து வெச்சிருக்கு இல்லண்ணா?" இலேசாக கலங்கி விட்ட கண்களுடன் ஆமென்று தலையசைத்தான் அஷுவின் தேவ்...



"அ...அஷ்விக்கு?"



"தெரியாது...அவள நா ரொம்ப கஷ்டப்படுத்திட்டேல்லடா?"



"அப்பிடியெல்லாம் இல்லண்ணா... பட் எதுக்காக அவக்கிட்ட சொல்லல...பாவம்ணா" என்றவனிடம் ஏதோ திட்டத்தை சொல்ல சந்தோஷமாய் சம்மதித்த ஆரவ்



"ஓகே டன்...நா பாத்துக்குறேண்ணா" என்றுவிட்டு சந்தோஷத்தில் மறுபடியும் அணைத்து விடுவித்தான்.

.....



"ரிக்ஷி..... இன்னக்கி மட்டும் வந்துட்டு போமா ப்ளீஸ்.... நீ அவங்க கேஸ வின் பண்ண வெச்சதுக்காக உன்ன பாத்தே ஆகனும்னு மூணு நாளா வர்றாங்க...ப்ளீஸ்...." தன் தங்கையை ரிஷியின் திட்டப்படி ஆபிஸ் வருமாறு வருந்தி அழைத்துக் கொண்டிருந்தான் வருண்....



ஆம் அஷ்வினியைத் தவிர அனைவருக்குமே விடயம் தெரிந்து சந்தோஷக் கடலில் மூழ்கியிருக்க அவள் மட்டும் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்.



"அஷ்வி...ப்ளீஸ் அதான் வருண் அண்ணா இவ்வளவு சொல்றாங்கல்ல...

உனக்கும் கொஞ்சம் ரிலீபா இருக்கும்டி" ஆரவ்வும் தன் பங்கிற்கு கெஞ்ச அவனுடைய ரிலீஃப் என்ற சொல் கொஞ்சம் வேலை செய்ய பாடுபட்டு சரியென தலையசைத்தாள் ரிஷியின் அருமை பத்தினி.....)



"வாவ் சூப்பர் மச்சி....இப்போ அஷ்வி எங்க?" திடீரென கேட்ட மதனின் குரலிலிருந்து நினைவுக்கு வந்தான் ஆரவ்....



"வருண் அண்ணா கூட அனுப்பி வெச்சிருக்கேன்...

பாக்கலாம்" என்றவர்கள் அதன் பிறகு கேஸை அலசத் துவங்கி விட்டனர்.



***



"மே ஐ கம் இன் சார்?" கதிர் அனுமதி வேண்டி நிற்க



"கம் இன்"என்றான் தன் வழமையான கம்பீரக் குரலில்....



நாலைந்து மாதமாக தொலைந்து போயிருந்த ஆளுமைக் குரல் மீண்டும் கேட்டதில் ஒரு வித எதிர்ப்பார்ப்புடன் உள்ளே நுழைந்தான் கதிரவன்.



"சார்...."



"சொல்லு கதிர்?"



"ஒன்னில்ல சார்"



"இன்னைக்கு மீட்டிங் அரேன்ஜ்மன்ஸ் முடிச்சிட்டியா?"



"ஆச்சு சார்....பத்து மணிக்கு வர்றேன்னு கால் பண்ணி இருக்காங்க"



"அத கேண்ஸல் பண்ணிடு"



"பட் சார்..."



"கேண்ஸல் பண்ணிடு கதிர்" சற்று அழுத்தமாக வெளிவந்த குரலிலிருந்து அவனால் வாயைத் திறக்க முடியாமல் போக



"ஓகே சார்" என்றவனுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என்பது தெரியாமல் இல்லை...



"வேற மீட்டிங் இல்லல்ல?"



"நோ சார்....மத்த எல்லாம் நாளைக்கு தான்"



"ம்...ஓகே அப்பறம்....மிஸ்டர்.ராகவன் அண்ட் அனு?" எனவும் ஆனந்த அதிர்ச்சியாய் விழி விரித்தான் பீ.ஏ கதிரவன்.



"சா....சா...சார்"



"நல்லா இருக்கேன் கதிர்...நா கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லல நீ?" எனவும் திக்கித் திணறி ராகவன் இறந்த விடயத்தை கூறி முடித்தவன் மறந்தும் ஆரவ்விற்கு தெரியும் என்பதை சொல்லவே இல்லை....



அவன் கோபப்படுவான் என யூகித்தவனுக்கு அவன் கூலாக



"எதிர்பாத்தேன்" எனவும் ஆச்சரியாமாய் போய்விட்டது.



'இவரால மட்டும் எப்பிடி தான் மனுஷங்கள துள்ளியமா எடை போட முடியுதோ' தன் எம்.டி ஐ நினைத்து சற்று பெருமையாகவும் இருந்தது கதிருக்கு.....



"ஓகே நீ போ கதிர்...."என போவதற்கு அனுமதி வழங்கியவனுக்கு ஆபிஸில் இருக்க இருப்புக் கொள்ளவில்லை....



***



"அண்ணா....எங்க அவங்க...?"சற்று எரிச்சலாகத் தான் கேட்டாள் அஷ்வினி.



"அவங்க வந்துடுவாங்க ரிக்ஷி.... அதுவர நீ பக்கத்துல இருக்குற காபி ஷாப்ல வெயிட் பண்றியா....நா இதோ வந்துட்றேன்" எனவும் காபி குடித்தாலாவது தேவலாம் போலிருக்க சரி என்று விட்டு வெளியேற உடனே தகவல் போனது அவள் கணவனுக்கு.....



அன்று முதன் முதலாய் அவனை சந்தித்த அதே டேபிளுக்கே கால்கள் தானாக நகர்ந்து செல்ல அன்று போலவே 'சிங்க்' பக்கமாக அமர்ந்து கொண்டவளுக்கு பழைய ஞாபகங்கள் மனதில் அலை மோத விழவா வேண்டாமா என கேட்டுக் கொண்டு நின்றது கண்ணீர்.....



அன்று கோபம் இன்று வலி!!!



வாழ்க்கை என்ன வைத்துக் காத்திருக்கிறதென்பதை மனிதன் அறிந்து வைத்திருந்தால் எதற்காக நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாட்டில் இருக்கப் போகிறான்???





குனிந்திருந்தவள் காபி ஆர்டர் பண்ணுவதற்காக நிமிர அன்றைய நிகழ்வு மீண்டும் ஒருமுறை நடந்தது அவள் வாழ்வில்.....



அவள் கண்ணுக்கு ஒரு இன்ச் இடைவெளி விட்டு க்ராஸாக சென்ற கூர் கத்தி அவளுக்கு பக்கத்திலிருந்த போர்டில் குத்துப் பட்டு நர்த்தனமாடிக் கொண்டே நிற்கவும் சேரை தள்ளி விட்டு எழுந்தவள் தனக்குப் பின்னால் இருந்தவனுடன் பயத்தில் பின் முதுகு பட ஒன்றி பயத்தில் சுற்று முற்றும் பார்க்க அவளுக்கு பின்னால் இருந்தவனோ அவள் காதுக்கருகில் குனிந்து



"நாம திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா அஷூ பேபி?"என ஹஸ்கி குரலில் வினவ தன் காதுக்கருகில் கேட்ட கணவனின் குரலில் சடாரென அவன் புறம் திரும்பினாள் அவனவள்.....



***



"மே ஐ கம் இன்..." எனவும் குரலிலேயே யாரென்று அடையாளம் தெரிந்து கொண்ட வருணின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.



"வா யாழ்"என்றவன் வருபவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் அமரும் வரை....



"ம்...சொல்லுங்க மிஸ்.யாழினி.... என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?"



"...."



"பேச வந்துட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம் மிஸ்.யாழினி?"



"...."



"மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு எடுத்துக்கட்டுமா...?"

என்றவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தாள் வருணின் துப்பட்டா விழியழகி....



"நீ திடீர்னு பாக்குறத பாத்தா என்ன வேணாம்னு சொல்லுவ போலிருக்கே?"



"இல்ல வந்து...அது...நா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"



"கொஞ்சம் தான் பேசுவியா?"



((அடப்பாவி....உன்ன எல்லாம் அப்பாவின்னுல்ல நினச்சிகிட்டு இருக்காங்க....))



"இல்ல...வந்து..."



"எத்தன தடவ இதயே சொல்லுவ... வேற ஏதாவது ட்ரை பண்ணு"



"...."



"என்கிட்ட ஏதாவது கேக்கனுமா?" விளையாட்டை விட்டு விட்டு அவன் சீரியஸாக கேட்கவும் அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.



"ஓகே கேளு"



"வந்து....நீ...நீ..நீங்க யாரயாவது லவ் பண்றீங்களா?"



"ஆமா" பட்டென்ற அவன் பதிலில் கண்கள் கலங்க ஏறிட்டு



"அப்போ என்கிட்ட எதுக்காக அப்பிடி கேட்டீங்க?" எனவும் எழுந்து அவள் புறம் வர தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள் யாழினி....



"கட்டாயம் சொல்லனுமா...?"

கேள்வி எழுப்பிக் கொண்டே அவளை நோக்கி வர அவளும் பின்னால் நகர்ந்து கொண்டே போனாள்.

"கட்டாயம் சொல்லனுமான்னு கேட்டேன்?"



"ஆ...ஆ...ஆமா" என்றவள் அதற்கு மேல் முடியாமல் சுவற்றோடு சாய அவளின் இறு புறமும் சிறை செய்தவன் அவள் முகத்துக்கு வெகு அருகில் குனியவும் பயத்தில் இறுக்க கண்களை மூடிக் கொண்டாள் பெண்ணவள்....



அதை பார்த்து சிரித்தவன் அவளை விட்டு விலகி



"நீ கண்ண திறக்கலாம்...நா உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன்" எனவும் படக்கென விழிகளை திறந்து அவனை பார்த்தாள் அவள்.



"எனக்கு புடிச்சிருந்துது நா கேட்டேன்"



"எனக்காக பாவப்பட்டு உங்க லவ்வ தியாகம் பண்ண வேண்டிய அவஷியம் இல்ல விஷ்வா....நீங்க தாராளமா உங்க மனசுக்கு புடிச்ச பொ...பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க..."



"ம்...அப்பறம்?"



"என்ன மன்னிச்சதுக்கு ரொம்ப நன்றி...நா வர்றேன்"என்றுவிட்டு அவனை தாண்டி நகரப் போனவளின் கையை பிடித்து தடுத்தான் வருண்....



"என்ன பண்றீங்க விஷ்வா.... யாராவது பாத்தா தப்பா நினைக்க போறாங்க...விடுங்க"



"நா லவ் பண்ற பொண்ணோட பேரு கூட கேக்காம போனா எப்பிடி?"



"எனக்கு அதெல்லாம் தேவயில்லாத விஷயம்...விடுங்க விஷ்வா"



"நானாகவே கல்யாணம் பண்ணிக்க கேட்டும் மறுத்திருக்க....உனக்கு தெரியாம இருக்க கூடாது மிஸ்...யாழினி"



"...."



"பேரு சொல்லட்டுமா இல்ல...நேர்லயே காட்டட்டுமா?"



"எனக்கு எதுவும் தேவயில்ல விஷ்வா...முதல்ல கைய விடுங்க"என்றவள் தன் பலத்தை எல்லாம் திரட்டி தன் கையை உறுவ முயல அவன் பிடி இன்னுமின்னும் இறுகியது.



"வலிக்குது விஷ்வா...விடுங்க ப்ளீஸ்"எனவும் இலேசாக பிடியை தளர்த்தி



"என்ன விஷுன்னு கூப்புடு... விட்றேன்"



"முடியாது"



"அப்போ ஐ லவ் யூ விஷுன்னு சொல்லு" எனவும் வந்த அதிர்ச்சியை கஷ்டப்பட்டு மறைத்தவள்



"வாட் ரப்பிஷ்....என்ன உலறிகிட்டு இருக்கீங்க....நா எதுக்காக அப்பிடி சொல்லனும்?"



"ஏன்னா நீ என்ன லவ் பண்ற"



"நோ"



"யெஸ்"



"நோ நோ நோ" என அவள் கத்த திடீரென தன் பக்கம் இழுத்தவன் கத்தும் அவள் இதழ்களை தன்னிதழ்களால் கவ்விக் கொண்டான்.



***



அவள் தன்னை நோக்கி திரும்பியிருக்க அந்த மாயக்கண்ணனோ அப்போதும் அவளை வய்பிலுப்பதிலேயே குறியாய் இருந்தான்.



"அப்பிடியே திரும்பி மாமன கட்டி பிடிப்பன்னு பாத்தா....நீ என்னம்மா இன்னும் ஷாக்காவே பாத்துட்டு இருக்க?" எனும் கேள்வியில் கண்கள் கண்ணீரை கொட்ட



"தே..தே...தேவ்..." அதற்கு மேல் பேச முடியாது கண்களால் கேள்வியை முன்வைக்க அதை படித்தவன் ஆமென்பது போல் தலையசைத்த மறுநொடி அவனை இறுக்கக் கட்டிப் பிடித்திருந்தாள் அவள் மனையாள்.....



எதிர்பார்ப்பு....

சந்தோஷம்....

ஆனந்த அதிர்ச்சி....



கலவையான உணர்வுகளின் பிடியில் இருந்தவளுக்கு அழுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை போலும்....



அவள் அழுவதை அவன் தடுக்கவில்லை....

அப்படியே விட்டுவிட்டான்...



அவனுக்கு தெரியுமல்லவா தன்னவளின் வலி...வேதனை... ஏக்கம்....



நிமிடங்கள் பல கடந்தும் அவள் அழுகை நிற்காமல் போக



"அஷு...எல்லோரும் நம்மளயே பாக்குறாங்க...நீ இப்பிடி அழுதா உன் மாமன் இமேஜ் என்னாகுறது பேபி?" குறும்பாய் கேட்கவும் அவள் அழுகை இன்னுமின்னும் கூடியதே ஒழிய குறையவே இல்லை....



"அஷு...."



"...."



"உன் அம்மா அப்பா கூட நம்மல பாத்து சிரிக்கிறாங்க பாரு....மொத்த ஹோட்டலுமே திரும்பி திரும்பி பாத்துட்ருக்கு"

எனவும் சட்டென விலகி அதுவும் அவனை விட்டெல்லாம் விலகவில்லை....



அவன் ஷர்டை பற்றிய கை பற்றியபடியே இருக்க தலையை மட்டும்தான் திருப்பி பாக்குறாங்க அம்மணி...



அங்கே மொத்தக் குடும்பமுமே அவளை கண் கலங்க பார்த்துக் கொண்டிருப்பது கண்டு உள்ளுக்குள் வெட்கினாலும் அவனை ஒரு இன்ச் கூட நகர விட்டாளில்லை....



"ஓய் ராட்சஸி.... எவ்வளவு நேரம் தான்டி அழுது வடிஞ்சிகிட்டு இருப்ப....கொஞ்சம் நீ உன் டேம நிறுத்தினா நாங்களும் சந்தோஷப்பட்டுக்குவோம்ல?" நீண்ட நாட்களுக்கு பிறகு தன் உயிர் நண்பியை சீண்டக் கிடைத்ததில் ஆரவ்விற்கு அப்படி ஒரு சந்தோஷம்.....



அவனை திரும்பி முறைத்தவள் மறுபடியும் தன்னவன் நெஞ்சிலேயே சாய்ந்து கொண்டாள்.



"அஷ்வா....தம்பி பாவம்டா விடு" விஜயலக்ஷ்மி மருமகனுக்கு பரிந்து கொண்டு வர அதையெல்லாம் காதிலேயே வாங்காது இருந்த விதத்திலேயே இருந்தாள் பாவை....



"அஷு...."என கனிவாக அழைத்து அவள் கூந்தலை வருடிக் கொடுத்தவன் அவளை தன்னிலிருந்து பிரிக்கப் பார்க்க அதை அறிந்தோ என்னவோ அவன் ஷர்ட்டை இறுக்கப் பற்றியிருந்தாள் அவன் மனையாள்.....



அவள் செயலில் சிரிப்புத் தான் வந்தது அவனுக்கு....



"நா உன்ன விட்டு எங்கேயும் போறதா இல்ல...உன் கூடவே தான் இருப்பேன் கண்ணம்மா....அவங்க எல்லாரும் பாலம்ல...ரொம்ப நேரமா நின்னுகிட்டே இருக்காங்கடா" எனவும் தான் சற்று விலகினாள் என்று சொல்ல வேண்டுமோ....



அப்படியும் அவனை ஒட்டியவாறே நிற்க அவளைப் பார்த்து அனைவரும் வாய்விட்டு சிரிக்க எல்லோரையும் முறைத்தவள் ஆரவ்வை நன்றாகவே முறைத்தாள்.



பின்னே அவன் வேண்டுமென்றே கத்திக் கத்தி சிரித்துக் கொண்டிருந்தால் அவளுக்கும் கடுப்பாகாமல்தான் இருக்குமா???



"ஆரவ்....கொஞ்சம் சும்மா இருடா" தேவ் அரட்டவும் கொஞ்சமே கொஞ்சம் அடக்கி வாசித்தான் அவன் தம்பி.....



"ஏன் அத்தான் இந்த ப்ளான நீங்க தானே போட்டீங்க?" சந்தேகம் கேட்பது போல் அக்கா கணவனை மாட்டிவிட்டாள் கயல்.



அஷ்வினி புரியாது அவன் முகம் நோக்க

"நாம வீட்ல போயி இது பத்தி பேசிக்கலாம்....இல்ல அஷு?"எனவும் அர்விந்த்



"நோ அஷ்வி....முதல்ல என்ன நடந்துதுன்னு கேளு" எனவும் அவனை ஏகத்துக்கும் முறைத்தான் ரிஷி.



வந்ததிலிருந்து தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்த அஜய்யை தொட்டு மீண்ட ரிஷியின் பார்வை தன் மனையாளை நோக்க அவளோ எதுவுமே காதில் விழாதது போல் குனிந்திருக்க அப்போதுதான் மூச்சே வந்தது அவனுக்கு.....



"அத்த....அர்விந்த் என்னமோ சொல்றான்...கொஞ்சம் என்னன்னு கேளுங்க....?"



"என்னடா என் மாப்பிள்ளை கிட்ட வம்புக்கு போறியா?"



"ஹி..ஹி...ஒன்னில்ல அத்த...அது சும்மா..."என சமாளிக்கவும்



"அத்த...இருந்தாலும் நீங்க உங்க மருமகனுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ண கூடாது" என்றான் ஆரவ் சிரித்துக் கொண்டே....



"ஆமா வருண் அண்ணா எங்க ஆரு?" என கேட்டுக் கொண்டிருக்கும் போது தான் தாமதமாக உள்ளே நுழைந்தான் வருண்....



"ஹாய் கய்ஸ்...ஹாய்மா...

ஹாய்பா..." என்றவாறே அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான்.



"ஏன்டா லேட்டு...?"

அப்போதுதான் மௌனம் கலைந்தான் அஜய்....



"சின்ன கேஸ் பெண்டிங்டா"என்று விட்டு அஷ்வியை பார்க்க அவள் அப்போதும் குனிந்து கொண்டுதான் இருந்தாள்.



"ஹேய் ரிக்ஷி...என்னம்மா....

அதான் எல்லாம் சரி ஆயிடுச்சுல்ல....

அப்பறமும் எதுக்கு இந்த உனக்கு வேண்டாத அமைதி?"

"ராட்சஸி எதுக்குடி சீன் போட்டுட்டு இருக்க....வருண் அண்ணா கேக்குறாங்கல்ல பதில் சொல்லு?"



"விடு ஆரு....அவ காலைல சரியாயிடுவா"



"எதுக்குடா என் பொண்டாட்டி கிட்ட வம்பிலுத்துட்டு இருக்கீங்க?" என்றவன் தன்னவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள பார்த்தவர்களின் உள்ளம் நிம்மதியால் அமைதிப்பட்டது....



ஆனால் அவனவளின் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்ததுவோ!!!



தொடரும்......



04-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 43 ❤



இரவு....



எல்லாம் சரி ஆகிவிட்டிருக்க ரிஷி எவ்வளவு கூறியும் மறுத்து விட்டு இராமநாதபுரத்திற்கே வந்து விட்டிருந்தான் வருண் விஷ்வா....



தன்னறையில் இருந்தவனின் நினைவெல்லாம் யாழினியையே சுற்றி வந்து கொண்டிருந்தது.



இப்போதும் அவனுக்கு லவ்வெல்லாம் இல்லை.... வெறும் ஈர்ப்பு தான் அவள் மீது....



இன்றைக்கும் கூட அவளை சீண்டி அழ வைப்பதற்காகவே அப்படி நடந்து கொண்டான்.



அப்படியே அவள் உன் காதலியை காட்டு என்று நின்றிருந்தாலும் இவளைத்தான் காட்டியிருப்பான் என்பது வேறு கதை.....



ஈர்ப்பைத் தாண்டிய ஒரு உணர்வு இருக்கிறது போல் சில நேரங்களில் உணர்ந்து கொண்டிருந்தாலும் அதற்கு காதல் என்று அவன் பெயர் வைக்க வில்லை....



அன்று அவளிடம் திருமணம் செய்து கொள்ள கேட்டதும் அவள் குற்ற உணர்ச்சியைப் போக்கி அவளை தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துதான்.



ஆனால் இன்று அவளை முத்தமிட்டதன் பின் எல்லாம் தலைகீழாக மாறிப்போனதோ என்று தான் தோன்றியது அவனுக்கு....



அதன் பிறகு நடந்ததை எண்ணி அவன் உதட்டில் குறுநகை ஒன்று உதயமானது.



(தன்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தவனை வலுக்கட்டாயமாக பிரித்து தள்ளி விட்ட யாழினி அவனை முறைத்தாள்.



"ஏன் இப்பிடி பண்றீங்க விஷ்வா.... நீங்க இப்பிடி நடந்துப்பீங்கன்னு நா கொஞ்சம் கூட எதிர்பாக்கல"

என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய அதை துடைக்க கையை நீட்டவும் சற்று அவனை விட்டு பின்னால் நகர்ந்தவளை பார்த்து சிரிக்கத்தான் தோன்றியது அவனுக்கு...



"நான் கேட்ட கேள்விக்கு உன் பதில் யெஸ்ஸுன்னு தான் வரனும்"



"நோ விஷ்வா....அந்த பொண்ணு பாவம் ப்ளீஸ்.... நம்பிக்க குடுத்து துரோகம் செய்யாதீங்க"



"எந்தப் பொண்ணு...ஓ...அவள சொல்றியா?"



"...."



"அவளுக்கு இதெல்லாம் நோ ப்ராப்ளம்....நீ உன் சம்மதத்த மட்டும் சொல்லு?"



"முடியாது"



"ஏன் முடியாது?"



"நீங்க வேற ஒரு பொண்ண லவ் பண்றீங்க விஷ்வா...."



"அவ பேரு என்னன்னு தெரியுமா?"



"அது எனக்கு தேவையில்லாத விஷயம்"



"சரி விடு....உன் சம்மதம் என்ன?"



"ஏன் மறுபடி மறுபடி புரிஞ்சிக்காம பேசுறீங்க விஷ்வா....நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிறதால அந்த பொண்ணுக்கு துரோகம் செய்ய நெனக்கிறீங்கன்னு கூடவா உங்களுக்கு புரியல?"



"இல்ல"



"ப்ச்...பொண்ணுங்க விஷயத்துக்காக உங்க கூட பேசாம இருந்தது போதும் விஷ்வா.... இதுக்கு மேல என்னாலயும் முடியாது....இத பத்தி என்கிட்ட பேசாதீங்க"



"நா எங்க பேசினேன்...உன் சம்மதத்த மட்டும்தானே கேட்டுட்டு இருக்கேன்"



"அதான் முடியாதுன்னு சொல்றேன்ல?"



"யெஸ்ஸுன்னு தான் உன் பதில் வரனும்"



"...."



"ஓகே....நா லவ் பண்ற பொண்ணோட பேரு மட்டும் கேளு...அப்பறம் நா விட்டுட்றேன்"



"முடியாது"



"ஏன் முடியாது?"



"முடியாதுன்னா முடியாது"



"அப்போ நீ என்ன லவ் பண்ற"



"இ..இ..இல்ல"



"அத என் கண்ண பாத்து சொல்லு?"



"...."



"முடியாதுல்ல....அப்போ நீ என்ன லவ் பண்ற"



"நோ"



"அப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கோ?"



"அதுவும் முடியாது"



"இல்லன்னா லவ் பண்ற பொண்ணோட பேர கேளு?"



"முடியாது முடியாது"



"இரண்டும் முடியாதுன்னா என்னாலயும் உன்ன மன்னிக்க முடியாது"



"இப்போ என்ன பண்ணனும்?"



"கல்யாணம்"



"முடியாது"



"அப்போ லவ்வர் நேம்?"



"சொல்லுங்க?"என்றாள் வேண்டா வெறுப்பாக....



"இப்போ எனக்கு டைமில்ல... நாளைக்கும் இங்க நீ வரனும்... அப்போதான் சொல்லுவேன்"



"எனக்கு காலேஜ் இருக்கு"



"அதெல்லாம் எனக்கு தெரியாது"



"சரி..."என்றவள் அவனை பாராமலேயே வெளியேறி விட்டாள்.



அதன் பிறகு தான் அவன் ஹோட்டலுக்கு சென்றதும்.....



அவன் அவளை நினைத்து சிரித்துக் கொண்டிருக்க இங்கே யாழினியோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.



ரித்திகா ஏற்கனவே தலைவலி என்று நேரத்துடனேயே படுத்துவிட்டிருக்க அதனால் கிடைத்த தனிமையும் அவளுக்கு வசதியாக போயிற்று....



'அவரு கண்ணுலயும் பொய் இல்ல....

உண்மையிலேயே யாரையாவது லவ் பன்றாரா....அப்போ ஏன் என்கிட்ட இப்பிடி நடந்துக்குறார்.... இப்பிடி ஒரு பொண்ணுக்கு துரோகம் செய்றத அசால்டா எடுக்க மாட்டேரே.... பின்ன எதுக்காக இப்பிடியெல்லாம் நடந்துக்குறாரு....'



ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவனை நினைத்தே குழப்பிக் கொண்டிருந்தாள் பேதை.....



'நாளைக்கு போலாமா வேணாமா....

போகலன்னா அந்த பொண்ணோட லய்புக்கு நாமலே கெடுதல் பண்ணினா மாறி ஆயிடுமே....பேரு மட்டும் தானே போய் பாத்துட்டு வந்துடலாம்.... பட் என்னால விஷுவ இன்னொரு பொண்ணு கிட்ட விட்டு கொடுக்க முடியுமா....' கண்கள் சட்டென கலங்கிவிட்டது அவளுக்கு....



'என் ல்வ்வ கூட புரிஞ்சிகிட்டீங்க விஷு....பட் உங்க லவ் எனக்கானது இல்லயே' அழுது ஓய்ந்து அப்படியே உறங்கிப் போனாள் பேதை.....



***



இன்னும் அவனின் கைவளைவுக்கு உள்ளேயேதான் இருந்தாள் அஷ்வினி.



நிஜத்தை ஏற்றுக் கொள்ள சற்று நேரம் பிடித்திருந்தது அவளுக்கு....



என்றாலும் அவனை விட்டு விலகினால் எங்கே தன்னை நீங்கிச் சென்று விடுவானோ என பயந்த பேதை மனது அவன் அருகிலேயே இருக்கச் சொல்லி கட்டளை இட்டது.



அவனும் சலிக்காமல் அவள் கூந்தலை வருடிக் கொண்டே இருந்தான்.



"அஷு...."



"...."



"ஏதாவது பேசுடா"கனிவாக வினவவும் அவனுள் இன்னுமின்னும் புதைந்து போனாள் பெண்ணவள்.



"ரொம்ப பயந்துட்டியா?" எனவும் ஆமென்று மட்டும் தலையாட்டினாள்.



"இப்போ ஏன் இப்பிடி இருக்க.... எனக்கு என் பொண்டாட்டி அஷுவ தான் பாக்கனும்....இப்பிடி அழுது வடிஞ்சிகிட்டு பேசா மடந்தையா இருக்குறவள இல்ல"



"...."



"நா இவ்வளவு சொல்லியும் உன்கிட்ட ரியாக்ஷன கானோமே.... என்ன பன்னலாம்?"தீவிரமாக யோசிப்பது போல் பாவனை செய்ய அவளுக்கு லேசாக சிரிப்பு வந்தது.



"அட என் பொண்டாட்டிக்கு சிரிக்க கூட வருமா...?"எனவும்



"தேவ்...."என்று சிணிங்கிவிட்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



தன் இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தியவன்



"ஐ அம் சாரி அஷு.... இவ்வளவு நாள் என்னால ரொம்ப கஷ்டப்பட்டுடேல்ல?" என்க



"ஊஹும்"என்றவள் இடம் வலமாக இல்லையென்பது போல் தலையாட்டினாள்.



"அன்னக்கி ரொம்ப ஹார்ஷா பேசிட்டேனா?"



"...."



"சாரிடா"



"பரவாயில்ல விடுங்க" சன்னக் குரலில் முனகவும் அவளைப் பார்த்து சிரித்தான் ரிஷி.



"எதுக்கு சிரிக்கிறீங்க?"இப்போது கொஞ்சமே கொஞ்சம் சத்தம் வர இன்னும் சிரிப்பு கூடியது அவனுக்கு....



"ப்ச்...சிரிக்காதீங்க தேவ்...." எனவும் சத்தமாகவே சிரிக்கத் துவங்கி விட்ட கணவனை முறைத்துப் பார்த்தாள் அவனவள்.



அவன் சிரிப்பில் முறைப்பை விட்டவளுக்கும் சிரிப்பு வர புன்னகைத்தவளை ஆசையாய் வருடியது அவன் பார்வை....



"ஏன் அஷு...பேசினா உன் வாயில இருந்து முத்து கொட்டிடும்னு பயந்து தான் பேசாம இருக்கியா...?"

சிரிப்புடனே அவளிடம் வினவ



"தேவ்...."என சிணுங்கியவள் அவனை விட்டு விலகி நின்றாள்.



"இப்போ எதுக்குடி விலகிப் போற?"



"எதுக்கு நீங்க சிரிக்கிறீங்க?"



"உன்ன பாத்தா சிரிக்காம என்ன பண்ணுவாங்க?"

மீண்டும் சிரித்தான்.



"ஏன் ஏன் என்னப் பாத்தா என்ன?" பழைய சண்டைக்கோழியாய் சிலிர்த்துக் கொண்டு நின்றவளை இன்னுமின்னும் வெறுப்பேற்றினான்.



"பின்ன...உன்ன பாத்து சிரிக்காம முறைக்க சொல்றியா?"



"அதான் ஏன்னு கேக்குறேன்?"



"எப்பிடி இருந்தவ இப்பிடி புள்ள பூச்சி மாறி ஆகிட்டியேன்னு நெனச்சென் சிரிப்பு வந்துடுச்சு" வேண்டுமென்றே சிரிக்க உண்மையில் கடுப்பாகிவிட்டாள் பெண்.



"நா புள்ள பூச்சியா....நீங்க எப்பிடி என்ன பாத்து அப்பிடி ஒரு வார்த்த சொல்லுவீங்க?"



"உன்ன பாத்து சொல்லாம வேற யார பாத்து சொல்லனும்குற?"



"கமாண்டர்"



"நா அப்பிடியே இருந்துட்டு போறேன்....நீ எப்பிடி இருக்க போற?" கேலியாய் கேட்கவும் ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு....



"நா ஒன்னும் புள்ள பூச்சி கெடயாது.... நான் தி கிரேட் பிஸ்னஸ் மேன் மிஸ்டர்.ரிஷிகுமார் தேவமாருதனோட ஒன் அண்ட் ஒன்லி வொய்ப்....அவரே அப்பிடி கம்பீரமா இருக்கும்போது அவரு பொண்டாட்டி

மிஸஸ்.அஷ்வினி தேவமாருதன் மட்டும் தைரியமில்லாத பொண்ணா இருப்பாங்கன்னு நெனச்சீங்களா?" சற்று மிடுக்காக கேட்டவளின் இடையோடு கையிட்டு தன்னை நோக்கி இழுத்தவன்



"ஓஹ்...அப்பிடீங்களா மிஸஸ்.மாறன்.....அப்போ ஏன் நீங்க அமைதியா இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?"



"அது கொஞ்சம் டச் விட்டு போயிடுச்சு....இனிமே ஆக்ஷன மட்டும் பாருங்க" என்று விட்டு கண் சிமிட்டிய அழகில் மொத்தமாக தொலைந்து போனான் அந்த ஆறடி ஆண்மகன்....



"பட்...."



"என்ன பட்?"



"ராத்திரி மாமனுக்கு என்னாச்சுன்னு கேக்கவே இல்ல பாத்தியா?" அவனும் ஒற்றை கண்ணை சிமிட்ட



"நா எதுக்கு கேக்கனும்....அதான் நீங்க திரும்பி வந்துட்டீங்கல்ல....

அதுவே போதும்"



"நம்மல ஒன்னு சேத்தது யாரு தெரியுமா?"



"கடவுள்"



"அது வேற செக்ஷன்மா"



"அப்போ...?"



"நம்ம...."



"நம்ம...."எதிர்பார்ப்பாய் வந்தது வார்த்தைகள்



"நம்ம குழந்த"என்றவன் சற்றே மேடிட்டிருந்த அவள் வயிற்றின் மீது கை வைத்தான்.



கண்கள் கலங்க

"எ...எ...எப்பிடி தேவ்"என்றாள் திக்கித் தினறி....





இரவு நடந்ததை கூறி முடித்தவன் அவள் முன் அப்படியே மண்டியிட்டு தன் குழந்தைக்கு முதல் முத்தத்தை பதிக்க சிலிர்த்துப் போனது பெண்ணவளின் தேகம்...



எப்போதும் அப்பாக்களின் அன்பு சற்று வித்தியாசமானதுதான் இல்லையா....????



அவன் முடியை வருடிக் கொடுத்தவளின் கண்களிலிருந்து மீண்டும் பெருகியது கண்ணீர்....



ஆனந்தக் கண்ணீர்!!!



எழுந்து அவள் முகம் தாங்கி கண்ணீரை துடைத்து விட்டவன் மென்மையிலும் மென்மையாய் அவள் நெற்றியில் இதழ் பதித்து விலக அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள் காரிகை.....



"தேவ்"



"சொல்லுடி"



"உங்களுக்கு என் மேல அக்கறை இல்லல்ல?"கேட்கும் போதே தொண்டை அடைத்தது அவளுக்கு....



சட்டென தன்னிலிருந்து அவளை பிரித்தவன் அவளை கூர்மையாய் பார்த்தான்.



அதில் அவள் தலை தானாக கவிழ

"என்னப் பாரு அஷு" என்றான் அழுத்தமாக...



"...."



"என்னப்பாருன்னு சொல்றேன்லடி" கோபமாய் வந்து விழுந்த வார்த்தைகளில் விலுக்கென நிமிர்ந்து அவனை பார்த்தாள் அவன் மனையாள்...



"ஏன் அப்பிடி உனக்கு தோனிச்சு?"



"...."



"உடனே பதில் சொல்லனும்"



"...."



"ம்...சொல்லு ஏன் அப்பிடி தோனிச்சு?"



"அ...அ..அது நீங்க எப்போவும் உங்க குழந்த மேல மட்டும் அக்கற எடுத்துகிட்டா நான் என்னன்னு நெனச்சிப்பேன் தேவ்?" உதடு துடிக்க கேட்டவளை பார்த்து சற்று இளகினான் அவன்....



"உங்க குழந்தயா?"மீண்டும் கடுமை....



"ந...ந...நம்ம குழந்த"



"இனிமே இப்பிடி சொல்லாத"



"சாரி...."



"எப்போ நா குழந்த மேல மட்டும் அக்கற காட்டியிருக்கேன்....

அப்போ உன் மேல அக்கற இல்லங்குறியா?"



"நீங்க எப்பவுமே கொழந்த மேல தான் பாசம் காட்டுனீங்க....பாத்து போக மாட்டியா குழந்தக்கி என்னாகும்....சாப்புடமாட்டியா குழந்தக்கி என்னாகும்.... இப்பிடி இருக்காத குந்தயோட ஹெல்த் பாதிக்கும்.... குழந்த குழந்த... குழந்த....அப்போ நான்???" அழுகையும் கொபமுமாய் கேட்டவளை பார்த்து தலையில் கை வைத்தான் ரிஷி.



அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்து சொபாவில் அமர்ந்தவன் அவளை தன் மடி மீது அமர்த்திக் கொள்ள முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அவள்....



"என்ன பாரு பேபி..."என்றவன் அவளின் முகவாயை பற்றி தன் புறம் திருப்பி



"குழந்தக்கி என்னாகுமோன்ன பதட்டத்துல என் வாயால வார்த்த வர்ற முன்னால உனக்கு எதுவும் ஆயிடுமோன்னுதான்டி பதறும்"



"...."



"அந்த பதட்டத்த தான் பாத்து நடந்துக்க குழந்தக்கும் பாதிக்கும்னு சொல்றேன்"



"...."



"உன் மேல அக்கற இருக்குங்குறதாலதான் குழந்தை மேலயும் வந்திருக்கு அஷு"



"...."



"உன் மேல அக்கற இல்லன்னா எங்கயிருந்து குழந்த மேல வரும்னு சொல்லு?"



"...."



"நீ தான்டா எனக்கு முதல்ல... மத்தெல்லாம் அப்பறம்தான் கண்ணம்மா"எனவும் அழுகையும் பூரிப்புமாய் அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.



"இப்போ சந்தேகம் போயிடுச்சா" எனவும் ஆமோதிப்பாய் தலையசைத்தவள் அப்படியே உறங்க ஆரம்பிக்க அவளை பார்த்துக் கொண்டிருந்தவனின் உதட்டில் புன்னகை உறைந்தது.



***



"சொல்லுங்க சார்"என்ற ரகுவின் குரலுக்கு மறுமுனையிலிருந்து கரகரப்பான குரலில் பதில் வந்தது.



"ஆர்.கேக்கு சிரியாகிடுச்சு" சந்தோஷத்தில் நீர்கோர்க்க நலம் விசாரிக்க தூண்டிய மனதை கஷ்டப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவன்



"அப்போ நம்ம ப்ளான சேஞ்ச் பண்ணிர வேண்டியது தான்"



"ராக்கேஷ் தம்பி கிட்ட விஷயத்த சொல்லிரு...என்னாலயும் ரொம்ப நேரமா இதுல இருந்து பேச முடியாது...நா அப்பறம் பேசுறேன்" என்றவன் அவனுக்கு பேச வாய்ப்பளிக்காமலேயே வைத்து விட தான் வாங்கியிருந்த புதிய போனில் வால்பேப்பராக அவனும் ரிஷியும் வருணும் இருந்த போட்டோவை வருடிக் கொடுத்தான்.



'அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும் மச்சி....சீக்கிரமாவே நீ குணமாகிட்ட...பட் இப்போ இத அந்த துரோகி கிட்ட சொன்னா உன்ன உயிரோட விடமாட்டான்....சோ நம்ம ப்ரண்ட்ஷிப்போட பரிசா நா இத அவன்கிட்ட சொல்லாம மறைக்க போறேன் டா....ப்ளீஸ் அதுக்குள்ள உன் எதிரிய கண்டுபிடிச்சிடு மச்சான்' தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் கைதவறி ரெக்கார்ட் ஆகிவிட்டிருந்ததை பாவம் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை....



விதி வலியது.....!!!!



***



"சா...சார்"

மறுமுனையில் பதற்றமாக ஒலித்த கதிரின் குரலில் நெற்றி சுருக்கினான் ரிஷிகுமார்.



"என்ன கதிர்....எனிதிங் சீரியஸ்?"



"ஆ..ஆமா சார்...ஆபீஸ் வர முடியுமா?" எனவும் நேரம் பார்க்க அது இரவு பத்து என காட்டவும்



"வர்றேன் கதிர்...பட் வொய்?"



"வாங்க சார் நா நேர்லயே சொல்றேன்" என்றவன் சொல்லிவிட்டு வைத்துவிட தன் வலக்கை நடு விரலால் புருவத்தை நீவியபடி தன்னுடைய கழுத்தை கட்டிக் கொண்டு உறங்கியிருக்கும் மனைவியைப் பார்த்து புன்னகைத்தவன் அவளை பூப்போல் ஏந்திக் கொண்டு போய் கட்டிலில் கிடத்தி விட்டு நிமிர்ந்தான்.



வழமை போல் அவளின் கை அவனின் ஷர்டை இறுக்கப் பற்றியிருக்க தலையை ஆட்டி சிரித்தவன் அதை எடுத்து வைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான்.



.....



புயலென உள்ளே நுழைந்தவனை பார்த்து உள்ளுக்குள் நடுங்க ஆரம்பித்த கதிருக்கு அப்போதும் ஏற்கனவே தொற்றிய பதற்றம் மட்டும் குறைந்த பாடாகவே இல்லை....



தன் இருக்கையில் அமர்ந்து அவனை கூர்மையாக பார்த்தவன்



"ம்...சொல்லு கதிர்....என்ன விஷயம்?"எனவும்



"வந்து சார்...அந்த பூ...பூத் (booth) ஆளு...."

என தயங்கவும்



"வாட்....யாரவன்...?"

என்றான் எதிர்ப்பார்ப்புடன்....



"அ..அது...அது...சார்..."

அவன் தயங்கலில் ரிஷியின் நெற்றி யோசனையுடன் சுருங்க கண்கள் இன்னும் கூர்மையடைந்தது.



"யாரு கதிர்?" குரலில் அப்படி ஒரு கடுமை....



"சார் இது வர நானும் நல்லா விசாரிச்சுட்டேன்....பட்"



"யாருன்னு முதல்ல சொல்லு?" அடுத்த அவன் சொன்ன பதில் சர்வமும் நடுங்கியது ரிஷிகுமாருக்கு....



***



காலை.....



தன் கை வளைவுக்குள் இருந்த தன் மனையாளை இறுக்கிக் கொண்டு படுத்திருந்தான் ஆரவ்....



அவள் உறக்கம் கலைந்து வெகு நேரமாகியும் அவனிடமிருந்து விடுபடப் போராடி தோற்றுப் போனது தான் மிச்சம்....



இதற்கு மேல் முடியாதென்று தோன்றி விடவே தன்னவனை ரசிக்கத் துவங்கிவிட்டாள் அவள்...



அலையலையான கேசம்...கூர் நாசி...அதற்கு கீழே கம்மீரத்திற்கு எடுத்துக்காட்டாய் அவனின் மீசை மட்டும்....



தாடியும் வைத்திருக்கவில்லை.... மீசையையும் எடுத்துவிட்டால் ஸ்கூல் பையன் மாதிரி இருப்பான் என நினைத்தவள் அவனை நினைத்து சிரிக்க கண்ணை திறந்து பார்த்தவன் அவள் பார்ப்பது கண்டு சட்டென மூடிவிட்டான்.



அவனுடைய மீசைய நுனியை முறுக்கி விட்டவள் அவன் கண்ணத்தில் இதழ் பதித்து விலகப் போக அந்தக் கள்வனோ



"கண்ணத்துல மட்டும் தந்தா போதாது அம்முகுட்டி....டீப் கிஸ்ஸும் வேனும்" என்றான் கண்களை திறவாமலேயே....



அப்போதுதான் அவன் நடித்துக் கொண்டிருப்பது புரிய அவள் வாய்க்கே ஒரு அடி போட்டாள்.



அப்போதும் அவன் கண்களை திறந்தானில்லை....



"டேய் கண்ண திறடா... நீ நடிக்கிறது எல்லாம் வேஸ்டு...." எனவும் கண்களை திறந்து சிரித்தவன் ஒற்றை கண்ணை சிமிட்டி முத்தமிடுவது வாயால் சைகை செய்ய வேண்டுமென்றே அவன் மீசையை இன்னும் இழுத்து விட்டாள்.



"ஆ...வலிக்குதுடி....விடுடி"



"முடியாது...இனிமே இப்பிடி பண்ணுவியா?"



"ச்சே ச்சே...பண்ணாம இருப்பேனா... ச்சி பண்ணுவேனா...."



"என்னது..."



"பண்ணமாட்டேன் அம்முகுட்டி விடு..." எனவும் விட்டவளை பார்த்து பெரு மூச்சு விட்டவனுக்கு அப்போதுதான் அஷ்வினியின் ஞாபகம் வர



"அம்மு....அஷ்வி....."என ஆருவும் "ஆரு....அஷ்வி..." என கயலும் ஒரு நேரத்தில் கத்த இருவருக்குமே சிரிப்பு பீரிட்டுக் கிளம்பியது.



"இன்னக்கு இருக்கு அவளுக்கு... இவ்வளவு நாள் என்னா பாடு படுத்தினா ராட்சஸி...."



"ஆமா ஆரு....என்னையே அழ வெச்சிட்டா அவள நா சும்மா விடப்போறதில்ல...."

என்றுவிட்டு சிரிக்க அவளுடன் தானும் சேர்ந்து சிரித்தான் ஆரவ்....



......



கண்களை திறவாமலேயே தன்னருகில் கைகளால் துளாவிப் பார்த்து அவனில்லாது போகவும் திடுக்கிட்டு விழித்தாள் அஷ்வினி.....



'எங்க போய்ட்டீங்க தேவ்...?' தனக்குள் பேசிக் கொண்டே அருகிலிருந்த குட்டி மேசை மேல் இருந்த தன் போனை எடுத்து தன்னவனுக்கு அழைத்தாள்.



நேற்றிரவு கதிர் சொன்ன செய்தியிலிருந்து இன்னுமே அவன் வெளியே வராமல் தான் இருந்தான்...



எப்படி எங்கே தப்பு நடந்து தான் சறுக்கி விட்டோம் என யோசித்து யோசித்தே களைத்துப் போனது அவன் மூளை....



அதிலிருந்து வெளிவராமல் இருந்தவனுக்கு அவள் அழைப்பு கூட எரிச்சலாகத் தெரிய அப்படியே விட்டு விட்டான்.



அவள் மீண்டும் மீண்டும் அழைக்கவும் தான் வேறு வழியில்லாது அடண்ட் செய்து காதில் வைத்தவன்



"என்ன விஷயம் சொல்லு அஷ்வினி?" என்றான் ஒட்டாத குரலில்....



அதில் சட்டென துளிர்த்த நீருடன்

"ஒன்னுமில்ல தேவ்...நா வெச்சிட்றேன்" என்றவள் பட்டென வைத்துவிட தலையை அழுத்தக் கோதிவிட்டு திரும்ப அழைத்தான்.



எடுக்க எடுக்க அவள் அழைப்பை எடுக்கவே இல்லை....



அவள் அழுது கொண்டிருப்பாள் என யூகித்தவனுக்கு அவன் மேலேயே கோபம் வர தொப்பென சோஃபாவில் அமர்ந்தவன் தன்னை கஷ்டப்பட்டு நிதானத்திற்கு கொண்டு வந்தவன் மீண்டும் அழைத்தான்.



இப்போது அழைப்பு எடுக்கட்டும் அவள் அமைதியாகவே இருந்தாள்.



"அஷ்வினி....எதுக்காக கால் பண்ண...?"



"...."



"எனக்கு வேல இருக்கு....சொல்லு"

மீண்டும் எரிச்சல் மண்டியது அவன் குரலில்....



அது எதனால் வந்த எரிச்சலென்று நினைத்தவனுக்கு மீண்டும் மீண்டும் கோபம் வந்து தொலைத்தது.



அவன் பொறுமையை சொதிப்பது போன்று அவள் மனையாள் வேறு....



"எதுக்குன்னு கேட்டேன்"



"சு...சும்மா தான் தேவ்...கா..காலைல உங்கள பாக்கல...அ..அதனால தான் என்னாச்சுன்னு கேட்டேன்" ஒருவாறு சொல்லி முடித்தாலும் அவள் அழுவது அவனுக்கும் கேட்கத்தான் செய்தது.



"ப்ச்....எதுக்கிப்போ அழற?"



"....."



"முதல்ல அழுகய நிப்பாட்டு அஷ்வினி.... நீ இப்பிடி அழறதால குழந்தயோட ஹெல்த் தான் பாதிக்கும்" கோபமாக அவன் சொல்ல நேற்று அவன் அவ்வளவு விளக்கியும் நெஞ்சினில் ஏற்பட்ட கழிவிரக்கத்தால் அவள் அழுகை இன்னும் கூடிக் கொண்டே போனது.



"ஓஹ் காட்....ஷட் அப் அஷ்வினி.... இப்போ நிறுத்த போறியா இல்லையா?" என கத்த போனை கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ணி விட்டாள்.



"ஹேலோ...அஷ்வினி....டிட் யூ ஹியர் மீ...."என கத்தியவனுக்கு அவளுடைய சுவிட்ச் ஆப் செயல் இருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலிருக்க



"யூ இடியட்...."எனறவன் தன் பலத்தையெல்லாம் திரட்டி மோபைலை ஓங்கி தரையில் அடித்தான்.



***



கீழே பார்த்துக் கொண்டு விரல்களை எண்ணிக் கொண்டிருந்தவளையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வருண்....



அவளும் வந்ததிலிருந்து பேசுவான் பேசுவான் என்று பார்த்துக் கொண்டிருக்க அவனைப் பார்ப்பது சங்கடத்தை கொடுக்கவும் கீழே பார்த்துக் கொண்டிருந்தாள்.



"அப்பறம்....சொல்லட்டுமா மிஸ்.யாழினி?"



"சொல்லுங்க விஷ்வா....அதுக்காக தானே வந்திருக்கேன்"

என்றாள் வலியை மறைத்து....



தன் மொபைலை எடுத்து கேமிராவை ஆன் பண்ணி அவள் முகம் விளங்குமாறு வைத்தவன்



"நீ முதல்ல என்ன நிமிர்ந்து பாரு....அப்பறம் பேரு சொல்றேன்" என்க



"இல்ல விஷ்வா நீங்க சொல்லுங்க நா போயிட்றேன்..."



"முடியாது நீ பாரு"



"இல்ல விஷ்வா ப்ளீஸ்...." என கெஞ்சிக் கொண்டிருக்கும் போது வெளியில் அபி திடீரென கீழே மயங்கி விழுவது எதேச்சையாக ஜன்னலினூடே தெரிய



"அபி..."என வாய் தானாக முணுமுணுக்கவும் விதி செய்த சதியால் அவன் காதலியாகவே அவள் பதிந்து போனாள் அவனின் துப்பட்டா விழியழகியின் மனதில்!!!!



விதி வலியது.....



தொடடரும்.....



05-05-2021.
 
Status
Not open for further replies.
Top