All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் “உயிரோடு கலந்தவள்!” - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 44 ❤



"நீ இரு யாழ் நான் இப்போ வந்தட்றேன்"

என்றுவிட்டு அபியை நோக்கி ஓடிய வருணை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.



அவள் பெயரை சொல்லிவிட்டான்...

இனிமேல் தனக்கு அவனிடம் எந்தப் பேச்சு வார்த்தையுமே இல்லையென்று நினைக்கும் போதே உள்ளுக்குள் அதிகமாய் வலித்தது.



இருந்தும் என்ன செய்ய???



தனக்கு அவன் இல்லை என்ற உண்மையை ஜீரணித்துக் கொள்ளவே அவளுக்கு சற்று நேரம் பிடிக்க இதற்கு மேல் இங்கே இருக்க கூடாது என்று நினைத்தவள் கண்களை துடைத்துக் கொண்டு தானும் வெளியே வந்தாள்.



வராண்டாவில் உள்ள இருக்கையில் அவளை அமர்த்தி வைத்து அவளின் கண்ணங்களை தட்டிக் கொண்டிருந்த வருண் யாழினி வெளியே வருவது கண்டு



"யாழ்....இங்கே வா...இவள பாரு....நா தண்ணி எடுத்துட்டு வந்துட்றேன்" என்றவன் அவளின் பதிலை எதிர்ப்பாராமலேயே சென்று விட கஷ்டப்பட்டு அடக்கியிருந்த கண்ணீர் அபியை பார்த்தவுடன் பீரிட்டுக் கிளம்பியது.



நிலைமை கருதி அவளிடம் விரைந்து கொஞ்ச நேரம் இருந்து கொண்டிருக்கும் போது வருண் வாட்டர் பாட்டிலுடன் வந்தான்.



அவள் முகத்துக்கு தண்ணீரை அடித்து



"அபி...வேக் அப்....என்னாச்சு?"என்று கேட்டுக் கொண்டே அவள் கண்ணத்தை தட்டிக் கொண்டிருக்க மெதுவாக கண்களை திறந்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை....



தான் கடைசியாக அன்னையிடம் பேசியது நினைவு வர



"வ...வருண்....அ...அம்மா அம்மா"



"அம்மாவா...அம்மாக்கு என்னாச்சு..... ஏதாவது?"

அவள் முகத்தை மூடி அழ



"அபி....சொன்னால் தானே ஏதாவது பண்ண முடியும்....ப்ளீஸ்"



"அம்மாக்கு.... ஹாஸ்பிடல்....ப்ளீஸ் என்ன விட்டு போய்டாதன்னு சொல்லு வருண்"அவள் சொல்வதிலிருந்து அவனுக்கு ஒன்றுமே புரியாமல் போக சற்று ஓரமாய் நின்றிருந்த யாழினியை பார்க்க அவளோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.



'இவளுக்கு என்னாச்சு....ஏன் இப்பிடி இருக்கா'என நினைத்தவன் மீண்டும் அபியிடம்



"அபி...ப்ளீஸ் டெல்...."எனவும் வருணிடம் அம்மாவிற்கு சீரியஸாக இருப்பதாக அவள் வீட்டில் வேலை செய்பவர் கால் பண்ணி சொன்னதாக சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.



'ஓ அது கேட்டு தான் மயங்கி விழுந்திருக்கா போல' என யூகித்தவன்



"இப்பிடியே அழுதுகிட்டே இருக்க போறீங்களா அபி.... வாங்க போலாம்" மண்டியிட்டு பேசிக் கொண்டிருந்தவன் எழுந்து அவள் கையை பிடித்து எழுப்ப யாழினி முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.



"யாழ்...நீயும் வா"என்றவன் அபியை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் தன் காரில் ஏற்ற விதியை நொந்த படி தானும் சென்று ஏறினாள் யாழினி....



அங்கே...



வீடு முழுக்க கூட்டம் கூடியிருக்க விஷயத்தை சட்டென யூகித்தவன் திரும்பி பின் சீட்டில் யாழினியுடன் அமர்ந்திருந்த அபியை பார்க்க அவளோ கண் மூடி சாய்ந்திருந்தாள்.



கார் நிற்கவும் சுற்று முற்றும் பார்த்தவள் கதறிக் கொண்டே வீட்டுக்குள் ஓட அவளைப் பார்க்கவே பரிதாபமாக போயிற்று வருணுக்கு....



அந்தத் தாய் அவளுக்காகத்தான் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்திருப்பார் போலும்...



கையை நீட்டி அவளை அழைக்க அவர் மீதே விழுந்து அழுதவளின் கூந்தலை ஆதரவாக தடவிக் கொடுத்தவரின் கண்கள் வருணை கண்டதும் ஒளி பெற்றன.



அபி ஏற்கனவே ஒரு தடவை இவன் போட்டோவை வைத்துக் கொண்டிருந்ததை அந்தத் தாயுள்ளம் அறிந்து கொண்டுதான் இருந்தது.



அவனையும் கை நீட்டி அழைக்க யாழினியை மீண்டும் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாமலே போக அவரருகில் சென்றான்.



அவன் கையையும் தன் மகள் கையையும் இணைத்தவரின் கண்களின் தன் மகளை ஒருவன் கையில் ஒப்படைத்து விட்ட நிம்மதி....



சந்தோஷமாக அவர் கண்களை மூட அபியின் கதறலில் அணைவருக்குமே நீர் துளிர்த்தது.



வருண் இதனை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை... அபி அதை உணரும் நிலையில் இல்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது அவனுக்கு....



அப்போதுதான் மூளையில் மின்னல் வெட்ட சட்டென திரும்பி யாழினியை பார்க்க அங்கே அவள் இல்லை!!!



***



ஆர்.கே இன்டஸ்ட்ரீஸ்....



"டாமிட்....ஷிட்....." தரையில் ஓங்கி உதைத்து விட்டு டேபில் மேல் இருந்த லேப்டாப்பையும் கீழே போட்டு உடைத்தான் ரிஷி.



"நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது கதிர்.... அவன் எனக்கு வேணும்..... உனக்கு சரியா இருபத்திநாலு மணி நேரம் டைம் தர்றேன்....அதுக்குள்ள அவன் என் கண்ணு முன்னாடி நிக்கணும்....காட் இட்...." என கர்ச்சிக்க



"யெ...யெ...யெஸ் சார்..." நடுங்கிக் கொண்டே சொன்னான் பீ.ஏ கதிரவன்....



"கெட் லாஸ்ட் இடியட்....என் கண்ணு முன்னாடி நிக்காத போ போயி தேடு "என்றவன் டேபிளுக்கே ஓங்கி குத்த அது அவன் கையை அழகாக பதம் பார்த்து விட்டது......



அப்போதும் கோபம் மட்டும் அடங்குவேனா என்றிருக்க அந்த டெபிளையும் கம்பியால் அடித்து நொறுக்கியவன் கண்ணில் கண்ட பொருட்கைளை

எல்லாம் காலால் உதைத்து வீசினான்.



***



ஆரவ்வுடன் மல்லுக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தது சாட்சாத் நம்ம அஷ்வினி அம்மையாரே தானுங்க....



நாங்க அழுதுட்ருப்பான்னுல்ல நெனச்சோம்னு நீங்க சொல்றது என் காதுல கேக்குது நண்பா....பட் உண்மைய சொல்லிடணும்ல....



அவ புருஷன் கால் பண்ணி அப்பிடி பேசினதும் நம்ம ஹீரோயின் செம்ம அழுகை....



அவரு வேற அழாத குழந்தைக்கு பாதிக்கும்னு சொன்னாருல்ல.....அத நெனச்சி....நெனச்சி.....



ஐயோ ரைட்டருக்கே அடிக்க வர்றாங்க நண்பா....நா ஓவரா இழுத்துகிட்டு இருக்கேனாம்....

அப்பிடியான்னு கேட்டதுக்கு கையில ஆயுதத்த தூக்கிட்டாங்க....



எங்க விட்டேன்....ஆ...நெனச்சி நெனச்சி அப்பிடி ஒரு அழுகை....



இருங்க டக்குன்னு சொல்லிட்றேன்....



அழுதுகிட்டு இருந்தவள ஆருவும் கயலும் தான் உசுரக் குடுத்து சமாதானம் பண்ணியிருக்காங்க....



நமக்குதான் நம்ம சி.பி.ஐ ஆபிஸர பத்தி தெரியும்ல....



கண்ணீர வெச்சே கலாய்ச்சுகிட்டு இருந்தவரு திடீர்னு அவ புருஷனுக்கு என்னமோ சொல்லிட்டாராம்....



அம்மணி மதுரய எரிச்ச கண்ணகி மாதிரியே போஸ் குடுத்துட்டு அவன காய்ச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க....



வாங்க நண்பா நாமளும் போய் பாக்கலாம்.....



எதுக்கும் கொஞ்சம் ஓரமா நின்னுகிட்டீங்கன்னா உங்களுக்கும் சேப் நண்பா....



"நா அப்பிடித்தான்டி சொல்லுவேன்.... ராட்சஸி... ராட்சஸி... நீதான் சின்ன பப்பியாச்சே....முடிஞ்சா உன் புருஷன் கிட்ட மாட்டி விடு...."



"வேணாம் ஆரு....மறுபடி நான் தாத்தான்னு கூப்புட வேண்டி வரும்"



"கூப்டுகோடி....அம்முகுட்டி.... நீ என்ன ஆருன்னு கூப்புடவேல்ல...?"



"இவளுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ணுவேன்னு நீ எப்பிடி ஆரு நெனச்ச?"



"கயல் பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ....மரியாதயா எனக்கு சப்போர்ட் பண்ணு"



"என் அம்முகுட்டி எனக்குதான் சப்போர்ட் பண்ணுவேன்னு சொல்றால்ல....அப்பறமும் எதுக்கு மூக்க நுழைக்கிற ராட்சஸி?"



"டேய் அப்பிடி கூப்புடாதடா.... அவ்வளவு தான் சொல்லிட்டேன்"



"அதான் உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொல்லிட்டேன்ல....?"



"ஆரு....அவ அத்தான் இருக்குற தைரியத்துல மோதியிருப்பா....

இப்போதான் அவரு ஆபிஸ் பொய்ட்டாருல்ல....அதான் புலி பதுங்குது"



"அப்போ உன் வாயாலேயே என்ன புலின்னு ஒத்துக்குற?"



"அப்பிடியா சொன்னேன்...."

என்றவள் முறைத்துக் கொண்டிருந்த ஆரவ்வை பார்த்து அசடு வழிந்தாள்.



"ஹி...ஹி....அது சும்மா ஆரு....ஒரு புலோவுல வந்துடுச்சு"



"அம்மு...மானத்த வாங்காதடி.... எனக்கு சப்போர்ட் பண்றன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?"



"நீ அவள கவனி ஆரு...இனிமே பாரு"



"ஹாங்...அப்பறம் மிஸ்.ராட்சஸி...."



"சொல்லுங்க ஆரு தாத்தா....?" கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நிதானமாக கேட்வளை பார்த்து சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டுப் போனாள் கயல்....



பின்னே தன் கணவனிடம் யாரு பாட்டு வாங்குவது???



பல்லை கடித்தவன்

"அப்பிடி கூப்புடாதடி கேக்க சகிக்கல...."



"நீங்க தானே ஆரு தாத்தா கூப்புட பர்மிஷன் கொடுத்தீங்க?"



"அ...அ...அது ஆ..ஆமா....இப்போவும் நான்தான் வேணாம்னு சொல்றேன்டி ராட்சஸி"



"எனக்கெல்லாம் பெரியவங்க பேச்சு தட்டி பழக்கமில்ல ஆரு தாத்தா.... இனிமே இப்படித்தான் கூப்புடுவேன்....முக்கியமா பப்ளிக்ல... என்ன ஓகேவா ஆரு தாத்தா?"



"ஹெஹ்ஹேய்....நீதான் வெளிய வரவே மாட்டியேடி ராட்சஸி....மீறி போனா அண்ணாவே உன்ன கட்டி போட்டுடுவாரு"

என்றுவிட்டு கயலுடன் ஹைபை கொடுத்துக் கொண்டவன் அவளுடன் இணைந்து சிரிக்க



"என் புருஷன் ஒன்னும் அப்பிடி பண்ண மாட்டாரு தாத்தா... வயசான உங்களுக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியுறது கஷ்டம்தான்... ச்சு....ச்சு...ச்சு...பாவம் நீங்க" என்றவள் போலியாய் வருத்தப்படுவது போல் நடிக்க கயலின் சிரிப்பு இன்னுமின்னும் கூடியது.



"அத நாங்க பாத்துக்குறோம் ராட்சஸி....நீங்க எப்பிடி வெளிய வருவீங்கன்னு கொஞ்சம் சொல்றீங்களா?"

என்றான் சவால் போலும்....



"காலேஜுக்கு வருவேன்"



"யாரு....நீ.....?"



"ஆமா...நானேதான் ஆரு தாத்தா"



"எப்பிடி எப்பிடி?"



"எப்படியோ"



"காலேஜுக்கு வர்றதுக்கு பர்மிஷன் வேணும்ல மிஸ்.ராட்சஸி....?"



"காலேஜே என் புருஷனோடது தான்.... அதுக்கு நான் பர்மிஷன் கேட்காமலே வருவேன்...."என்றாள் மிடுக்காக....



"அதுக்காகவேல்லாம் உன்ன உள்ள விட மாட்டாங்கடி ராட்சஸி...."



"பாக்கத்தானே போறீங்க ஆரு தாத்தா"



"பாக்கலாம் பாக்கலாம்டி ராட்சஸி...."என்றவனின் போன் அலற விளையாட்டாகவே அடண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு மறுமுனையில் சொல்லப்பட்டு செய்தியில் உலகம் அப்படியே தட்டமாலை சுற்றத் தொடங்கியது.



***



"வாட்...."அதிர்ந்து எழுந்தான் ராகேஷ் கண்ணா!!!



"எப்பிடி விஷயம் லீக் ஆச்சுன்னு தெரில மச்சான்.....பட் நம்மாள வலை விரிச்சு தேடிகிட்டு இருக்காங்க...." சற்று பதற்றம் போல் ஒலித்தது ரகுவின் குரல்....



இல்லையில்லல பதற்றம் போல் பக்காவாக நடித்துக் கொண்டிருந்தான்.



"ஓ ஷிட்...இது எப்பிடி ஆச்சு இடியட்....அவன் சிக்கும் வர நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த?"



"ராக்கேஷ்....நா சொல்றது உனக்கு புரியுதா இல்லயா....இப்போ வெளில போனா நானும் தான் மாட்டிப்பேன்"



"மாட்டிக்கிட்டு சாகுடா...."



'ஒரு நண்பனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளா இவை....சத்தியாமாக இவன் நண்பனில்லை....

நண்பன் போர்வையில் இருக்கும் துரோகி' நினைத்துக் கொண்டவனின் உதடு ஏளனமாக வளைந்தது.



"லுக் ரகு....நீ என்ன பண்ணுவியோ... அது உன் ப்ராப்ளம்....பட் அவன் அந்த நாயோட கைல மாட்டிக்க கூடாது...."



"...."



"நீ மாட்டிகிட்டெனா அவனுங்க ஃபோகஸ் உன்மேல திரும்பும்.... அந்த கேப்ல நா அவன காப்பாத்திடுவேன்...."



"...."



"அவன் மட்டும் மாட்டிகிட்டான்னா மொத்த சொத்தும் அந்த நாயி பேருக்கே மாத்திடுவேன்னு மிரட்டி இருக்கான்"



"...."



"போதைல கையில இருந்த பேப்பர அவன் கிட்ட குடுத்ததுக்கான தண்டனயதான் இவ்வளவு நாள் அனுபவிச்சிட்டு இருக்கேன்"



"...."



"இதுக்கு மேலயும் அவனுக்கு அடிமயா என்னால இருக்க முடியாது ரகு... அவன காப்பாத்தினாதான் நமக்கு சேப்"



"...."



"அவன் மட்டும் அந்த நாய் கைல மாட்டிகிட்டான்னா அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த முழு சொத்துமே காணல் நீரா போயிடும்"



"பட் மச்சி...அவனுக்கு அந்த ஆர்.கே மேல என்ன கோபம்னு இப்பிடி ஆட்டம் ஆடினான்?" அப்போதுதான் வாயை திறந்தான் ரகு....



இவ்வளவு நாள் ஏனேன்று அவனுக்கும் தெரியாது....இரண்டு உயிர்களுக்காகத் தான் அமைதியாக எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டிருந்தான்.



ஆனால் இப்போது அப்படி இல்லையே....

நிச்சயமாக அழிவு வரப் போகிறதென்று தெரிந்த பின்னால் எதற்கு பயம்???



தன் பாட்டில் சொல்லிக் கொண்டிருந்தவனும் முதன் முறை வாயை திறந்தான்.



"அந்த நாயி நம்ம அக்ஷுவ கொண்ணதுலதான் இவனுக்கு பிரச்சினை.... அது என்னன்னு இதுவர என்கிட்ட கூட அவன் சொல்லல"



"....."



"நா இப்போவே டிக்கட் புக் பண்ணி அடுத்த ப்ளைட்ல இன்டியா வர்றேன்.... அதுக்குள்ள நீ அவங்ககிட்ட மாட்டி அவன் தப்பிச்சு இருக்கணும்...." என்றான் கட்டளையாய்....



"ஓகே மச்சான்" என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு ஹாயாக கட்டிலில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தான்.



அவனாவது போய் மாட்டுவதாவது.... மாட்ட வைத்த அவனே தப்பிக்க விடுவானா???



***



"மச்சான்....லைன்லதான் இருக்கியா?" ஓங்கி ஒலித்த சித்தார்த்தின் குரலில் நினைவுக்கு மீண்டான் ஆரவ்.



"ஆ...ஆ..சொ...சொல்லு மச்சி...?"



"என்னடா சொல்ல....நீ சீக்கிரம் கிளம்பி மதன் ஆபிஸ் வா.... அவன் வேற டென்ஷனா இருக்கான்"



"நா...நா இதோ இதோ வந்தட்றேன்டா"

மொபைலை துண்டித்து பாக்கட்டில் போட்டவன் அப்போதுதான் அவர்கள் இருவரையும் பார்த்தான்.



கயல் குழப்பமாய் நின்றிருக்க அஷ்வினியின் முகம் பயத்தில் வெளிரி இருந்தது.



"எ...என்னாச்சு ஆரு...தே...தே... தேவ்கு ஒன்னில்லல்ல?" எனவும் வரவழைக்கப்பட்ட சிரிப்புடன்



"ச்சே ச்சே உன் சூப்பர் மேன் புருஷனுக்கு ஒன்னில்ல....நம்ம மதன் இருக்கான்ல...?"



"ம...ம..மதனுக்கு என்னாச்சு?"



"மதனுக்கும் ஒன்னில்ல அஷ்விமா...முதல்ல நீ ரிலாக்ஸாகு...."

என்றவன் அவளை சோபாவில் அமர வைத்து தண்ணீர் குடிக்க கொடுத்தான்.



"மதனுக்கு ஒன்னில்லடி ராட்சஸி... ஏதோ கேஸ் விஷயமா உடனே ட்ரான்ஸ்பர் கெடச்சிருக்காம்"

வாய்க்கு வந்ததை உலறிக் கொட்ட அப்போதுதான் அவள் நிம்மதியானாள்.



"ஓகே அஷ்வி....நா அவசரமா வெளில போறேன்....அம்மு அஷ்விய பாத்துக்கோ...பை"

என்றவன் அடுத்த நிமிடம் மாயமாய் மறைந்திருந்தான்.



.......



கமிஷ்னர் அலுவலக வாசலிலேயே ஆரவ்விற்காக ஜீப்பில் காத்துக் கொண்டிருந்தனர் சித்தார்த்தும் மதனும்...



அவசரத்திற்காக பைக்கை எடுத்துக் கொண்டு வந்தவன் அங்கேயே அதை நிறுத்தி வைத்து விட்டு ஜீப்பில் பாய்ந்து ஏற அது புயலென கிளம்பியது சித்தார்த்தின் கைகளில்....



அவர்கள் இருவர் முகமும் உணர்ச்சியற்று பாறை போல் இறுகி இருக்க



"மச்சான் என்ன விஷயம்னு சொல்லுங்கடா..... கால் பண்ணி எதிரி சிக்கிட்டான்னு மட்டும் சொன்னா நா என்னன்னுடா நெனக்கிறது?" என்றான் ஆரவ் பதற்றத்துடன்....



"...."



"ஏதாவது பேசுங்கடா...யாரு இன்பர்மேஷன் கொடுத்தது?"



"கதிர்" ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் மதன்.



"வாட் கதிரா....யா...யாருன்னு தெரிஞ்சுதா?" மீண்டும் அவன் கேள்வியெழுப்ப அவர்கள் இருவர் முகமும் மீண்டும் கடினத்திற்கு மாறியது.



அதை அப்போதுதான் கவனித்தவன்



"யாரு மச்சீஸ்?"என்றான் தீவிரமாக....



அடுத்து சித்தார்த்தின் வாயிலிருந்து வந்த பதிலில் அண்ணனை போலவே சர்வமும் நடுங்கிப் போனது ஆரவ்விற்கு.....



இல்லை இல்லை இருக்கவே இருக்காது என்று மனம் கூச்சலிட்டாலும் ஏன் இருக்கக் கூடாது என்று கேட்ட மற்ற மனதை எப்படி அடக்குவதென்றுதான் அவனுக்கு புரிபடவே இல்லை.....



***



தன்னை போகவிடாமல் கட்டிப் பிடித்து அழுது கொண்டிருக்கும் அபியை விலக்கவும் முடியாமல் யாழினியை தேடவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான் வருண்.....



வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகிறது....



அவர் அப்படி செய்து விட்டுச் சென்றதில் சிறு சலசலப்பு உருவாகியிருந்த நிலையில் அவள் அவனை கட்டிப் பிடித்தே கதற அதுவும் அடங்கிப் போனது போல்தான் இருந்தது அவனுக்கு....



துக்கத்தில் இருப்பவளை அப்படியே விட்டு விட்டு செல்லவும் முடியாதாகையால் அமைதியாகவே நின்றிருந்தான்.



"அபி ப்ளீஸ் கண்ட்ரால்....இறப்பு நியதி தானே... இதுக்கே இப்பிடி துவண்டு போயிட்டோம்னா வாழ்க்கைல முன்னேற வேண்டாமா?"



"எனக்குன்னு இனி யாருமே இல்லயே வருண்....இருந்த அம்மாவும் என்ன விட்டு பொய்ட்டாங்களேடா....என்னால அத ஏத்துக்கவே முடிலயே.... இவ்வளவு நாள் கூட இருக்குறாங்கங்குற நம்பிக்கைல தானே நானும் வாழ்ந்துகிட்டு இருந்தேன்...என்ன மட்டும் தனியா தவிக்க விட்டுட்டு போறதுக்கு அவங்களுக்கு எப்பிடிடா மனசு வந்துது...சொல்லு வருண்?"அவனை போட்டு உலுக்கி விட்டு மறுபடியும் அவன் மேலேயே சாய்ந்து அழுதவளை பார்த்து அவனுக்குமே என்னவோ போல் ஆகிவிட்டது.



உனக்கு நானிருக்கிறேன் என்று அவனால் அவளிடம் அந்த நிலையில் கூட சொல்ல முடியாமல் போன போது தான் தெரிந்தது யாழினி மேல் வ்நதிருப்பது ஈர்ப்பு இல்லை காதல் என்பது....



அப்போதுதான் அவனுக்கு தன் தங்கை ஞாபகம் வர அவள் உடல் நிலை கருதி சோல்ல வேண்டாம் வந்து விடுவாள் என நினைத்தவன் ஆறுதலுக்காகவாவது நான்கு வார்த்தை பேசட்டுமே என்று தான் எடுத்தான்.



"சொல்லுங்க வருண் சார்?" சாதாரணமாக ஒலித்த குரலில் தன் நண்பனை நினைத்து சிரிக்கத் தான் தோன்றியது அவனுக்கு....



எல்லாம் அவனால் அல்லவா சாத்தியம்!!!



ஆக மொத்தத்தில் அவள் அவனாகவும் அவன் அவளாகவும் மாறி விட்டிருந்தது தான் விந்தை....



"ரிக்ஷி...அபியோட அம்மா...."



"எ..என்னாச்சுண்ணா..?"



"ரிலாக்ஸ் ரிக்ஷிமா...."



"சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்"



"அபியோட அம்மா இறந்துட்டாங்க ரிக்ஷி...."



"என்னண்ணா சொல்றீங்க...நா... நான் இதோ இதோ வந்தட்றேன்"



"நோ ரிக்ஷி...நீ வெளில வராத ப்ளீஸ்...."



"முடியாது நா அபிய பாக்கணும்... பாவம்ணா அவ..." என்று விட்டு அழவும்



"ரிக்ஷி ப்ளீஸ் அழாதமா...அதான் அண்ணன் இருக்கேன்ல...நா பாத்துக்குறேன் ஓகே?"



"இல்ல இல்ல நான் வருவேன்...." என்றவள் அவன் பேசப்பேச கட் பண்ணி விட்டாள்.



கயலிடமும் விடயத்தை கூறி விட்டு அவள் மறுக்க தனியாகப் போவதாக கூறவும் வேறு வழியில்லாமல் தமக்கையுடன் கிளம்பினாள் தங்கை....



....,



காரை விட்டு இறங்கியவள் கயலையும் மறந்து அழுது கொண்டே உள்ளே நுழைய அவளைப் பார்த்த வருண் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.



"அபி..."என தோள் தொடவும் பற்றுகோல் கிடைத்த கொடியாய் அவளை தாவி அணைத்துக் கொண்டாள் அவள்....



அப்போதுதான் வருணுக்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது.



இப்போதாவது தன்னவளை தேடலாம் இல்லையா???



"ரிக்ஷி...இரு நா இதோ வந்துட்றேன்"என்றவன் கயல் உள்ளே நுழையவும் அவளையும் துணைக்கு விட்டுவிட்டு வெளியேறினான்.



***



இரவு......



தன் முன் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தவனை பார்க்கப்பார்க்க கோபம் தலைக்கேறியது ரிஷிக்கு.....



அவன் அடித்து அடித்தே இரத்தத்தில் குளித்திருந்தான் கட்டப்பட்டிருந்தவன்....



தலை ஒரு பக்கமாக தொங்கிங் கொண்டிருந்த நிலையிலும் உதட்டை கேளியாக வளைத்து சிரித்தவனுக்கு மீண்டும் மூஞ்சிலேயே ஒரு குத்து விட்டான் ரிஷிகுமார் தேவமாருதான்.



"துரோகி"என்றுவிட்டு மீண்டும் மீண்டும் போட்டு அடித்துக் கொண்டே இருக்க கதிர் தான் கஷ்டப்பட்டு அவனை அடக்க வேண்டியாதாய் போயிற்று....



அங்கே அமர்ந்திருந்தவன் இல்லையில்லை....

அமர்ந்திருந்தவர் அவள் மனையாளின் தந்தை....

அவன் ஆருயிர் நண்பனின் தந்தை....அவனின் மாமனார்....



மிஸ்டர்.ராமநாதன்!!!!!!



தொடரும்......



06-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 45 [ A ]



"சார் சார்....விடுங்க சார்....செத்துடப் போறாரு...விடுங்க சார்....அட விடுங்க சார்" கொன்று போடும் வெறியில் தன்னிடமிருந்து திமிரிக் கொண்டிருந்தவனை அடக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தான் கதிரவன்.



தன் மொபைல் ஒலித்துக் கொண்டே இருந்தது எதுவும் அவனுக்கு காதில் விழவே இல்லை...



ரிஷியை தடுப்பதே முதல் வேலை போல் அவனை இறுக்கப் பிடித்திருந்தான்.



கஷ்டப்பட்டு அமர வைத்தவன் தண்ணீர் பாட்டிலை நீட்ட மடமடவென்று குடித்துமுடித்து விட்டு பாட்டிலையும் இராமநாதனுக்கே வீசி எறிந்தான்.



மயங்கிக் கிடந்தவருக்கு அது பட்டெல்லாமா உணர்வு வரும்???



நீண்ட நேரமாக கேட்டுக் கொண்டிருந்த மொபைல் சத்தத்தில் இன்னும் எரிச்சலான ரிஷி



"முதல்ல அத அடண்ட் பண்ணி பேசு.... இல்ல அதயும் நீ யூஸ் பண்ண முடியாதபடி பண்ணிடுவேன்"என அதற்கும் கத்த



'ஆத்தாடி....ரொம்ப சூடா இருக்காரு போலயே' என நினைத்து விட்டு பெயரை பார்க்காமலேயே அதை அடண்ட் செய்து காதில் வைத்தான்.



"ஹலோ"



"அண்ணா..." அஷ்வினியின் குரலில் அவசரமாக பெயரை பார்த்தவன் ரிஷியையும் பார்த்தான்.



அவன் தான் அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலேயே இல்லையே....



"சொ...சொ...சொல்லுமா?"



"ஏன் தேவ் கால் அடண்ட் பண்ண மாட்டேங்குறாரு?"



"சார் மொபைல் ஒடஞ்சிடுச்சு"



"உங்க கூடதான் இருக்காரா?"



"ஆமா....வந்து இல்ல இல்ல" என உளறிக் கொட்ட அந்த சத்தத்தில் சட்டென திரும்பி கதிரைப் பார்த்து நெற்றி சுருக்கினான் ரிஷிகுமார்.



"என்னண்ணா சொல்றீங்க ஆமாவா...இல்லையா?"



"அது ஆமா வந்து இல்ல" என்றவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷியை அப்போதுதான் கண்டு கொண்டான்.



உள்ளுக்குள் பயப்பந்து உருள எச்சில் கூட்டி விழுங்கியவன்



"அது இ...இல்லமா...இப்போதான் வெளில போ...போனாரு" இப்போது பேசினால் தந்தை மேலுள்ள கோபத்தில் பிள்ளையை கடித்துக் குதறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை அறிந்தே வைத்திருந்தவனாதலால் அப்படி பதிலளிக்க கேட்டுக் கொண்டிருந்த ரிஷியின் பார்வை இன்னும் கூர்மையடைந்தது.



"பொய் சொல்லாதீங்கண்ணா"



"உண்மதான்மா இப்போதான் சார் வெளியில போனாரு.... நான் வந்த உடனே எடுக்குறேன்"



"இ...இல்ல வேணாண்ணா.... அபியோட அம்மா இறந்துட்டாங்க....

அதனால நா அவளோட வீட்லயே இன்னக்கு தங்கிக்குறேன்னு சொல்லிடுங்க"



"ஓகே மா....வெச்சிட்றேன்"

என்றுவிட்டு நிமிர அவனை உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் ரிஷி.



"சா...சார் வந்து மேடம் கால் பண்ணியிருந்தாங்க... அவங்க ப்ரண்டோட அம்மா இறந்துட்டதனால அவங்க வீட்லயே தங்கிக்க போறாங்கன்னு உங்ககிட்ட சொல்லிட சொன்னாங்க"



"வாட்.....?"என அதிர்ந்தவன் கோபமாக



"யார கேட்டு வீட்ட விட்டு வெளிய இறங்கியிருக்கா....காட்..ஆரவ்க்கு கால் பண்ணு கதிர்"எனும் போதே உள்ளே நுழைந்தனர் மூவரும்.....



அவர்களை கண்டு அதிர்ந்தாலும் சட்டேன சுதாரித்தவன்



"கதிர்....வருணுக்கு கால் பண்ணு" என்று விட்டு அவர்கள் புறம் திரும்பியவன் அப்போதுதான் மதனை காண அவன் அதிர்வது இப்போது வெளிப்படையாகவே தெரிந்தது.



"சார் எடுக்க மாட்டேங்குறாரு சார்"



"டாமிட்....அவளுக்கு கால் பண்ணு...." என்றவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.



"சார்...."என கதிர் போனை நீட்ட



"யார கேட்டு வெளியில போன அஷ்வினி...இந்த டைம்ல ட்ரவலிங் பண்ண கூடாதுங்குற பேஸிக் மேனஸ் கூடவா இல்ல இடியட்..... கயல் எங்க...?" தொண்டை கிழிய கத்தத் தொடங்க அவனை அடக்கினாள் அவன் மனையாள்.



"இயலும் என்கூடதான் இருக்கா தேவ்.....அபியோட அம்மா இறந்துட்டாங்க....ப்ளீஸ் தேவ்"



"அதானே நீ மட்டும் என்ன தனித்தன்மையோடவா பொறந்திருப்ப....அப்பன் புத்தி இல்லாம இருக்குமா?" சம்பந்தமே இல்லாமல் அவன் ஏதேதோ பேச



"என்ன தேவ் சொல்றீங்க....எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது"



"உனக்கு பரியாதுடி....ஆனா நல்லா நடிக்க வரும்....உன் அப்பன் மு..." எனும் போதே தன் கைகளில் போனை பறித்தெடுத்தான் ஆரவ்.



"ஒன்னில்ல அஷ்விமா...நீ பத்துறமா இருந்துக்கோ...பய்"

என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு தன்னை முறைத்துக் கொண்டிருந்தவனிடம்



"அண்ணா....அவ உன்னோட வொய்ப்புங்குறத எப்பவும் நினைவுல வெச்சிக்கோ"என்றான் அழுத்தமாக.......



***



"ரித்து....யாழினி வீட்டுக்கு வந்துட்டாளா?"

பதற்றத்துடன் கேட்டான் வருண்.



"ஆமாண்ணா....இப்போதான் வந்தா.... வந்ததும் யாருகிட்டயும் பேசாம நேரா போயி படுத்துட்டா"



"தேங்க் காட்....அவள பாத்துக்கோ...பய்" கட் பண்ணியவனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.



எவ்வளவு நேரமாக தேடிக் கொண்டிருக்கிறான்....இவள் என்னடாவென்றால் வீட்டுக்கு போய் விட்டாளாம்.



அவளுக்காக தவித்த தவிப்பு மாறி இப்போது பெரும் கோபம் வந்து குடிகொண்டது அவனுள்....



அதென்ன கேட்காமலேயே எல்லாவற்றையும் முடிவு செய்வது.... அவங்க அப்பிடி பண்ணதுக்கு நான் எப்பிடி காரணமாவேன்???



அவளுக்கு திட்டிக்கொண்டே மனதில் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தான்.



ச்சே...காலைல இருந்து நேரமே சரியில்ல என சலித்துக் கொண்டவன் மணலை தட்டியவாறே எழுந்து நின்று தூரத்தில் தெரிந்த கடலை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.



***



"அபி...ப்ளீஸ் இத சாப்பிடுமா...." அவள் தாயை அடக்கம் செய்து விட்டு வீட்டு மூலையில் அமர்ந்தவள் தான்....



அதன் பிறகு என்ன நடந்தது என தெரியாத அளவுக்கு வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.



"அஷ்வி....நீ போயி ரெஸ்ட் எடு...நா அபி அக்காக்கு சாப்பாடு ஊட்டி விட்றேன்" என வந்து நின்ற தங்கையிடம் இல்லை வேண்டாம் என மறுத்தவள் தானே அவளருகில் நின்று கொண்டாள்.



"அபி ப்ளீஸ்....இது மட்டும்....ப்ளீஸ்....

சாப்புடுடி" என்றவாறே சாப்பாட்டை வாயருகில் கொண்டு போக முகத்தை திருப்பினாள் நண்பி....



மற்ற நண்பர்கள் அனைவரும் வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க அஷ்வினியை கண்டு அருகில் வந்தாள் கவிதா.



"அஷ்வி....என்ன நீ தரைல உக்காந்திருக்க....முதல்ல எந்திரி"



"இல்ல கவி.....நா"



"ப்ச்‌...நீ எதுவும் பேச தேவயில்ல.... முதல்ல எந்திரிடி"சற்று கண்டிப்புடன் கூறவும் மனமின்றியே எழுந்தாள் அஷ்வினி.



"அத இங்க குடு...நீ போயி ரெஸ்ட் எடு..."என்றவள் அவள் கையிலிருந்த தட்டை பிடுங்காத குறையாக எடுத்துவிட்டு அருகில் நின்ற கயலிடம்



"கயல்....அக்காவ ரூமுக்கு கூட்டிட்டு போமா...நா அபிய கவனிச்சுக்குறேன்"



"சரிக்கா....வா அஷ்வி...."



"இல்ல கவி ப்ளீஸ்டி....நா இங்கேயே இருக்கேன்" கெஞ்சிக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தான் வருண்.



"அதெல்லாம் முடியாது....முதல்ல நீ போ....அடம் பிடிச்சேன்னா உன் புருஷன் கிட்ட போட்டு குடுத்துடுவேன்" எனவும் அவன் கத்தலுக்கு பயந்து அத்துடன் கப்பென வாயை மூடிவிட்டாள் அஷ்வினி.



"வாண்ணா...." வருணை கண்டு விட்ட கயல் வரவேற்ற சிறு புன்னகையை பதிலாக கொடுத்தவனின் பார்வை அபியை தொட்டு மீண்டது.



"ரிக்ஷி....என்னமா டயர்டா இருக்கா....வீட்டுக்கு போலாமா?" அவளருகில் வந்து தலையை வருடியவாறே கேட்கவும்



"இல்லண்ணா எனக்கு டயர்டா இல்ல....பட் இவளுங்க சொன்னா கேக்க மாட்டேங்குறாங்க"



"நா அவங்க கிட்ட கேட்டுக்குறேன்....

முதல்ல நீ ரூமுக்கு போ" அவனும் அதையே சொல்லவும் அவனை முறைத்தவள் உள்ளே சென்று விட மூவரின் முகத்திலும் கீற்றாக புன்னகை அரும்பியது.



***



"நா லேண்ட் ஆயிட்டேன்....வந்துடு"

யாருக்கோ அழைப்பு விடுத்து பேசினான் ராகேஷ் கண்ணா.....



"இதோ வந்துட்றேங்கய்யா...."

மறுமுனை அழைப்பு துண்டிக்கப்பட தானும் துண்டித்து விட்டு அவனின் காருக்காக காத்திருக்க தொடங்கினான்.



இரண்டு நிமிடங்களில் தன் முன் வந்து நின்ற காரில் பின் சீட்டில் ஏறிக் கொண்டவனுக்கு என்ன நடந்திருக்க கூடும் என்பதே நினைவாக இருந்தது.



திடீரென மின்னல் வெட்ட திடுக்கிட்டு கண்களை திறந்தவனுக்கு அப்போதுதான் அந்த விடயமே உறைத்தது.



'ராமன் பிடிப்பட்டான்னு ரகு சொன்னானே....அப்போ அவனுக்கு ஞாபகம் வந்துடிச்சா....ஞாபகம் வந்தாதானே இப்பிடி நடக்கும்.... இல்ல இல்ல இடைல ஏதோ நடந்திருக்கு....ராமன் ரகுகிட்ட விஷயத்த சொல்லாம இருந்திருக்க மாட்டானே....அப்பிடீன்னா அப்பிடீன்னா ரகு...ரகு என்கிட்ட மறச்சிட்டானா.....' என நினைத்தவனுக்கு கொலை வெறியே வந்துவிட்டது.



'துரோகி....நம்ப வெச்சி கழுத்தறுத்துட்டான்...ராமன் இப்போ மாட்டி இருப்பான்' வாய்விட்டே புலம்புவது டரைவருக்கும் காதில் விழத்தான் செய்தது.



இப்போது கோபப்பட்டால் காரியம் நடத்த இயலாது என்பதனை அறிந்தே வைத்திருந்தான் அந்த வல்லுவன்.



கை முஷ்டியை இறுக்கி தன்னை சமன்படுத்திக் கொண்டவன்



"மைக்கேல்....நீ ரகுவோட ப்ளாட்டுக்கு வண்டிய விடு"என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்....



சற்று நேரத்திலெல்லாம் கார் அவன் ஃப்ளாட் முன் நிற்க விறுவிறுவென இறங்கி உள்ளே சென்றவன் கோபமாக திரும்பி வந்தான்.



"ஷிட்...டாமிட்....தப்பிச்சுட்டான்... நீ வண்டிய எடு" என்றுவிட்டு ஏறி அமர கார் அவன் வீடு நோக்கி பயணப்பட்டது.





அதே நேரம் உள்ளே....



பெரிய பீரோ ஒன்று திடீரேன நகர்த்தப்பட்டு அதற்குள்ளிருந்து வெளியே வந்தான் ரகு....



அந்த ரகசிய அறை அவனைத் தவிர வேறு யாருக்குமே தெரியாமல் போனது அவனுக்கு வசதியாய் போயிற்று....



வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை....



அவன் வந்த விதமே அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது என தெளிவாக புரிய இப்போது எங்கே போவது என்று தான் அவனுக்கு யோசனையாய் இருந்தது.



இனிமேல் நடக்கப்போவது பெரிய போரென்றே தோன்ற அதை நினைத்து பெரு மூச்சு விட்டவனுக்கு நண்பனுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்ற வேண்டுதலே நெஞ்சில் நிறைந்திருந்தது.



***



ஆரவ்... சித்தார்த்...மதன் என மூவரும் கைகட்டி வரிசையாக நின்றிருக்க அவர்கள் முன் சற்று கால்களை அகற்றி பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டபடி நின்றிருந்தான் ரிஷி.



அவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்பதெல்லாம் அவனுக்கு தெரியாவிடினும் விஷயம் அறியாமல் வந்திருக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தான்.



"மிஸ்டர்.சிவாவ உனக்கு எப்பிடி தெரியும் ஆரவ்?"



'ஆஹா கேள்வி கேக்க தொடங்கிட்டாரு....அதுவும் நிதானமா.... இன்னக்கி எல்லாம் வெட்ட வெளிச்சமாகப் போறது ஷூர்...' என நினைத்துக் கொண்டானே தவிர எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றான் ஆரவ் தேவமாருதன்.



"பதில் சொல்லு?"



"என் ப்ரண்டு"



"ப்ரண்ட்...ஓகே... சித்தார்த்?"



"அவனும்தான்"



"அவனும்தான்னா....மூனு பேரும் ப்ரண்ட்ஸ் ரைட்?"



'டேய் ஆரு....வாய வெச்சி கிட்டு சும்மாவே இருக்க மாட்டியாடா.... பாவி...அடி வாங்கி தராம விட மாட்டான் போல' ஆரவ்வை முறைத்துப் பார்த்தான் சித்தார்த்.



"ஆமா"



"எப்போதுல இருந்து?"



"...."



"போலிஸ் ட்ரைனிங்லயா?" எனவும் மூவரும் அதிர்ச்சியாய் ஒரு சேர நிமிர்ந்து பார்க்க



"சிவா போலிஸாச்சேன்னு டவுட்ல கேட்டேன்" எனவும் தான் மூச்சே வந்தது.



"கா...கா...காலேஜ் பர்ண்ட்"



'அடப்பாவி....சொல்ற பொய்ய நம்புறா மாறி சொல்லுடா' எனும் ரீதியில் இப்போது மதன் முறைத்தான்.



"ஈஸிட்....?"போலியாக ஆச்சரியப்படவும்தான் ஆரவ்விற்கு தான் சொன்ன மடத்தனமே புரிந்தது.



"அ...அது..."



"அஷ்வினியும் உன் ப்ரண்டு தானே?"



'இப்போ எதுக்கு இத கேக்குறாரு?'



"ஆமா"



"சோ நாலு பேரும் ஃப்ரண்ட்ஸ்....ஏம் ஐ கரெக்ட்?"



'பேசாம இவரே சி.பி.ஐ படிச்சிருக்கலாம்'



"ஆ...ஆமா"



"அஷ்வினிக்கும் சிவாக்கும் படிப்பு முடிஞ்சு வேலையும் கிடச்சிருச்சு..... பட் ஏன் உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் படிப்பே முடியல?" அவன் கேள்விகளாலே கிடுக்கிப்பிடி போட திருதிருவென முழித்தான் ஆரவ்.



"அ....அ...அது அது ஹாங்...நாங்க ரெண்டு பேரும் ஸ்பஷல் செஞ்சிகிட்டு இருக்கோம்"



"ஓஹ்....அப்போ ஏன் அஷ்வினியும் சிவாவும் என் காலேஜ்ல படிச்சதா ரெக்கார்ட்ஸ்ல இல்ல?" மீண்டும் மூவருக்கும் அதிர்ச்சி.....



"இல்ல இல்ல வந்து நா...நான்... நாங்க ரெண்டு பேரும் கா...காலேஜ் மாறிட்டோம்"



"எப்போ?"



"மூ...மூ...இல்ல இரண்டு... இரண்டாவது வருஷம்"



"அப்பிடீன்னா ஏன் நீங்க ரெண்டு பேரும் ஸ்பெஷல் மட்டும்தான் என் காலேஜ்ல செஞ்சிகிட்டு இருக்கீங்கன்னு ரெக்கார்ட்ஸ் பொய் சொல்லனும்?"



மூவருக்கும் மௌனமே மொழியாகிப் போக தலையை கீழே குனிந்து கொண்டனர்.



"சிவா கூடதானே படிச்சன்னு சொன்ன....சோ நீயும் சித்தார்த்தும் இப்போ போலிஸ் ஆபிஸர்ஸ்....?"



"இ...இல்லண்ணா"

எனும் போதே இடியாய் வந்திறங்கியது அவனின் அறை....



மற்ற இருவரும் அதிர்ச்சியாய் பார்க்கும் போதே அவர்களுக்கும் விழுந்தது.



"எனக்காக உங்க வாழ்க்கை...உங்க கனவு....உங்க இலட்சியம்....

எல்லாத்தையும் வீணாக்கிட்டு வந்து நிக்கிறீங்களேடா....ச்சே......"



தலையை அழுத்தக் கோதிக் கொண்டவன் இருக்கையில் தொப்பென அமர்ந்து விட்டான்.



***



இராமநாதபுரம்.....



"அம்மா இந்த வருண் எங்கே?"

சாப்பிட்டுக் கொண்டே தன் அன்னையிடம் கேட்டான் அஜய்.



"ஏதாவது வேலயா இருக்கும்டா"

என்றவருக்கும் யோசனையாகத்தான் இருந்தது.



"கால் பண்ணா கூட அடண்ட் பண்ண முடியாத அளவுக்கு அப்பிடி என்னம்மா சாரு பிஸி?"



"கேஸ் விஷயமா இருக்கும்டா"



"ம்...." என்றவன் தட்டிலேயே கை கழுவி விட்டு எழுந்து கொண்டான்.



"இன்னும் கொஞ்சம் சாப்பிடுடா...."



"இல்லமா போதும்" என்றவாறே வெளியேற அவன் மொபைல் ஒலிரவும் அடண்ட் செய்து காதிற்கு கொடுத்தான்.



"சொல்லு வருண்....எங்கடா இருக்க?"



"நா ரிக்ஷி ப்ரண்ட் அபியோட வீட்ல இருக்கேன்டா....அவங்களோட அம்மா இறந்துட்டாங்க.... ரிக்ஷி இங்கதான் இருப்பேன்னு அடம் புடிக்கிறா....அதனால நானும் இங்கேயே தங்கிறேன்டா....அம்மா கிட்ட சொல்லிடு"



"ஓ...ஓகேடா....அஷ்வி எப்பிடி இருக்கா....ஒன்னும் ப்ராப்ளம் இல்லல்ல?"



"நத்திங் அஜய்...."



"கயலும் கூடவா இருக்கா?"



"ம்...ஆமாடா அவளும் இருக்கா"



"சரி வருண் நா அம்மா கிட்ட சொல்லிட்றேன்...வருத்தப்பட்டுகிட்டு இருந்தாங்க....பய்" துண்டித்தவன் உடனே ஈஷ்வரிக்கு அழைத்தான்.



"சொல்லுங்க அஜய்"



"வருண் இன்னக்கி வீட்டுக்கு வரமாட்டான்னு அம்மா கிட்ட சொல்லிடு ஈஷ்வரி"



"சரி அஜய்"



"ஓகே நா வெச்சிட்றேன்...பய்" அழைப்பை துண்டித்தான்.



***



சேரில் அமர்ந்து தலையை கைகளுக்கு முட்டுக் குடுத்தவாறு அமர்ந்திருந்தான் ரிஷி.



எங்கே தவறு விட்டு தன் தம்பி இப்படி தனக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை யோசித்து யோசித்து குழம்பிக் கொண்டிருந்தான்.



அவனுக்கு தெரியாத அவனது கனவா???



ஆரவ்விற்கு டாக்டர் ஆவதுதான் இலட்சியம்...சின்ன வயதிலிருந்தே அவனின் ஆசையை தெரிந்தே தான் வைத்திருந்தான் ரிஷி.



வெளிநாடு சென்றதிலிருந்து அவன் என்ன செய்கிறான் என்ன படிக்கிறான் என்பதையெல்லாம் அவ்வளவாக அலசியதில்லை....



ஒரு வித விற்றேற்றித் தன்மை தான் இருந்தது.



ஏன் அப்படி இருந்தோம் என்பதை காலம் கடந்து யோசித்து என்ன பயன்???



இராமநாதன் விஷயம் கூட பின்னுக்கு செல்லப்படு ஆரவ்வே முன்னிலையில் அவன் மூளையை ஆக்கிரமித்திருந்தான்.



தன் அண்ணன் முன் மண்டியிட்டு அமர்ந்து அவன் கைகளை பற்றிக் கொண்ட ஆரவ் பேச வாய் திறக்க இராமநாதனிடமிருந்து முனகல் சத்தம் கேட்கவும் ரிஷியின் முகம் பாறை போல் இறுகியது.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலை....



இரவு முழுவதும் அழுதுகொண்டே உறங்கிப் போய் இருந்ததில் கண்கள் சிவந்து எரிச்சலை உண்டாக்க கஷ்டப்பட்டு எழுந்தமர்ந்தாள் யாழினி.



'ஏன் தனக்கு மட்டும் கடவுள் கஷ்டங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார் முதலில் ஒரு அப்பாவி ஆண்மகனின் மனதை புண்படுத்தினாள்...அதற்கான தண்டனை போல் பெற்றோரை எடுத்துக் கொண்டார்....

அவனாலேயே குற்ற உணர்ச்சியில் தவித்து நிற்கும்போது மீண்டும் கண்ணில் காட்டி அதை போக்கி விட்டு தன் காதலையே மறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கி விட்டார்....'



கண்களில் மீண்டும் கண்ணீர் ஊற்றெடுக்க எழுந்து குளியலறை சென்றவள் அதன் கதவின் மீதே சாய்ந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.





"அம்மா எனக்கு டிபன் வேணாம்...நா காலேஜ் கிளம்புறேன்...." காலில் செருப்பை மாட்டிக் கொண்டே சொன்னவள் ரித்திகா பேசுவது கூட காதில் விழாதவாறு விறுவிறுவென்று பஸ்டான்ட் சென்றுவிட்டாள்.



.....



கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு காரில் சாய்ந்தவாறு தூரத்தில் வந்து கொண்டிருந்தவளையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தான் வருண்.



வரும் போதே அவனை கண்டுவிட்டாலும் தலையை நிமிர்த்தாமல் அவனை கடந்து போக எத்தனித்தவளின் முன் வழியை மறைத்தபடி வந்து நின்றான் அவன்....



"உன்கிட்ட கொஞ்சம் பேசனும் யாழினி.... எதுக்காக இப்பிடி பண்ணிகிட்டு இருக்க?"



"...."



"நா பேசும் போது என் முகத்த பாரு" என்றவன் சட்டென அவள் தாடையை பிடித்து நிமிர்த்த சுற்றுமுற்றும் பார்த்தவள்



"விடுங்க விஷ்வா....யாராவது பாத்தா தப்பா நெனச்சிக்க போறாங்க" என்றாள் கெஞ்சும் குரலில்.....



அவள் கண்களில் என்ன கண்டானோ பிடித்திருந்ததை பட்டென விட்டவன் சற்று பின்னால் நகர்ந்து நிற்கவும் யாழினியின் க்ளாஸ்மேட் ஒருவன் வரவும் சரியாக இருந்தது.



"என்ன யாழி....எனி ப்ராப்ளம்?"



"நத்திங் ரவி"



"யாரு இவரு உனக்கு தெரிஞ்சவரா?"



"...."



"ஓஹ்...அப்போ தெரியாதா....சரி வா போலாம்"

என்றுவிட்டு கையை பிடித்து இழுக்க அவளை போகவிடாமல் தடுத்துப் பிடித்திருந்தான் விஷ்வா...



"சார் யார் சார் நீங்க....யாழி கைய வடுங்க" ரவி எகிற யாழினியையே துளைத்தது வருணின் பார்வை....



"ரவி நீ போ...நா வந்துட்றேன்"



"நீ எதுக்கும் பயப்படாத யாழி...நா இருக்கேன்"



"நீ முதல்ல போ...நா உன்கிட்ட வந்து பேசிக்கிறேன்"



"இவர உனக்கு தெரியுமா?"



"ஆமா தெரியும் நீ போ ப்ளீஸ்....." எனவும் வருணை முறைத்தவன் அவளை திரும்பித் திரும்பி பார்த்தபடியே சென்றான்.



வருண் புறம் திரும்பி அவனை நோக்கியவள்



"சொல்லுங்க விஷ்வா...என்ன பேசனும்" என்றாள் விலகல் தன்மையுடன்....



"எதுக்கு என்ன அவாய்ட் பண்ற?"



"நா அப்பிடி ஏதும் பண்ணல"



"ராத்திரி எதுக்காக தனிய வீட்டுக்கு போன?"



"எனக்கு வொர்க் இருந்துது"



"என்னவிடவுமா?"



"ஆமா..."



"....."



"பேசிட்டீங்களா...நா போனும்"



"சரி போ" அனுமதி கொடுத்தும் அவள் அசையாது நின்று கொண்டினுக்க மர்மமாய் சிரித்தவன் அப்படியே நின்றான்.



"எதுக்கா நிக்கிற...போ... உன்னால என்ன விட்டு போக முடியாது யாழ்....மறைக்க ட்ரை பண்ணாத" எனவும் உதட்டை கடித்து அழுகையை கட்டுப் படுத்தினாள் பேதை....





ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....



"ஆரு அவர பிடிடா....விட்டா அடிச்சே கொன்னுடுவாரு" தூங்கிக் கொண்டிருந்த ஆரவ்வை பதற்றமாய் எழுப்பினான் சித்தார்த்.



திடுக்கிட்டு விழித்தவன் மதனும் கதிரும் ரிஷியை இந்த இருபக்கமும் பிடித்திருப்பது கண்டு நிலைமையை யூகித்தவன் பாய்ந்து ஓடினான் தன் அண்ணனிடம்...



அவனுக்கு முன்னால் வந்து அவன் நெஞ்சில் கைவைத்தவன்



"அண்ணா விடுண்ணா....செத்துடப் போறாருணா....அண்ணா..." என கத்தியவாறே அவனை பிடித்து தள்ளி விட்டான்.



சற்று தடுமாறி பின்னால் நகர்ந்த ரிஷி ஆரவ்வை நிமிர்ந்து முறைக்க



"அண்ணா...நா சொல்றத முதல்ல கேளு....இவன் வேற யாரோவா இருந்தா நானே இந்நேரம் கொன்னிருப்பேன் பட் இப்போ அது முடியாது....ஏன்னு உனக்கு நா சொல்ல வேண்டியதில்ல... ப்ளீஸ்ணா கண்ட்ரோல்...மெதுவா ஹேண்டில் பண்ணிக்கலாம் ப்ளீஸ்.... இவன இப்போ கொன்னுட்டீன்னா பின்னாடி நிலம ரொம்ப மோசமாயிடும்...அத்த... அஷ்வி... வருண் அண்ணாக்கு

எல்லாம் என்னன்னு சொல்லுவ... சோ ப்ளீஸ் நிதானமா இரு..." காலில் விழாத குறையாக கெஞ்சியவனை பார்க்க அபபடியே தாயை பார்ப்பது போலவே இருந்தது அவனுக்கு.....



அவன் சொல்வதிலுள்ள உண்மையும் உறைக்க அமைதியாய் சென்று அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து தலையை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.



***



"அபி...இத முதல்ல குடிமா ப்ளீஸ்..." பால் க்ளாஸை நீட்டியபடி கெஞ்சிக் கொண்டிருந்தாள் அஷ்வினி.



ஒரே இடத்தை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தவளுக்கு அதெல்லாம் கேட்கவே இல்லை போலும்....



ஒரு பெருமூச்சுடன் அவளைப் பிடித்து உலுக்கியவள் வலுக்கட்டாயமாக பாலை வாய்க்குள் திணித்தாள்.



"அஷ்வி....நா வீட்டுக்கு கெளம்புறேன்....காலேஜ் இருக்கு.... பட் போகல...லேட் ஆகிடுச்சு..."



"சரி நீ போ...நா மேனேஜ் பண்ணிக்கிறேன்"



"நா அதுக்காக சொல்லல....நீயும் என்கூட வா....அத்தான் திட்டுவாரு"



"அதெல்லாம் திட்டமாட்டாரு....நீ கெளம்பு நா பாத்துக்குறேன்...."



"அப்போ வருண் அண்ணா வந்த உடனே போயிட்றேன்...ஓகேவா?"



"ம்...ஓகேடி..." என்றவளின் மொபைல் சிணுங்க எடுத்து காதிற்குள் கொடுத்தவளுக்கு மறுமுனையின் பதற்றம் அவளையும் தொற்றிக் கொண்டது.



"என்ன விஜி என்னாச்சு...ஏன் அழற?"



"நீ கால் பண்ணி பாத்தியா....?"



"அழாதம்மா....நா நா இதோ வந்துட்றேன்..."



"இல்ல நா வருவேன்"



"கயல் கூட வன்றேன்மா ப்ளீஸ்... எனக்கு எதுவும் ஆகாது"



"ப்ளீஸ் விஜி...." என்றவள் காலை கட் பண்ணி விட்டு



"கயல் நாம அவசரமா வீட்டுக்கு போயாகனும்"



"ஏன் அஷ்வி....என்னாச்சு...?"



"நா சொல்றேன் வா...."



"ஹாங்...கவி...நா அவசரமா வீட்டுக்கு போய் வந்துட்றேன்....அபிய பாத்துக்கோ..."



"பட்...."



"நா திரும்ப வந்து உன்கிட்டு பேசுறேன் பய்...." என்றவள் கயலை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.



.......



பதற்றமாக உள்ளே நுழைந்த பெண்களை அணைத்துக் கொண்டு கதறினார் அந்தத் தாய்....



"ம்மா...அழாதமா...அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்காது....அழாதமா"

அவருடன் சேர்ந்து அழுத தங்கையையும் தட்டிக் கொடுத்தாள் அஷ்வினி.



"அண்ணி...அஜய் எங்க?"



"அவங்களும் இப்போதான் வெளியில போனாங்க அஷ்வி...."



"அண்ணி..நீங்க போய் அம்மாக்கு தண்ணி எடுத்துட்டு வர்றீங்களா?"



"இரு வந்துடறேன்..."

என்று விட்டு உள்ளே செல்லவும் மொபைலை எடுத்து வருணுக்கு அழைத்தாள்.



"சொல்லு ரிக்ஷிமா"



"அண்ணா இப்போ எங்க இருக்க?"



"அபி வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்மா..ஏன்?"



"நீ நம்ம வீட்டுக்கு வா"



"ஏன் என்னாச்சு அஷ்வினி....?"



"நீ முதல்ல வா...சொல்றேன்"



"இதோ"என்றவன் அழைப்பை

துண்டிக்க தானும் துண்டித்தவள் ஈஷ்வரியிடமிருந்து தண்ணீரை வாங்கி விஜயாவுக்கும் கயலுக்கும் கொடுத்தாள்.



"அண்ணி...அம்மாவையும் கயலையும் பாத்துக்கோங்க...

நா தேவ் கிட்ட சொல்லிட்டு வந்துட்றேன்" என்றவள் கொஞ்சம் தள்ளிப் போய் கதிருக்கு அழைத்தாள்.



தன் மொபைலில் அஷ்வினி மேடம் என ஒலிரவும் சட்டென திரும்பி ரிஷியைப் பார்த்தான் கதிரவன்.



அதை புரிந்து கொண்டவன் ஸ்பீக்கரில் போடுமாறு சைகை செய்ய அதன்படி செய்தவன் அதை அடன்ட் செய்தான்.



"அண்ணா தேவ் கிட்ட குடுங்க நா பேசனும்"



"அது சார் மீட்டிங்ல இருக்காரு மேடம்..."



"அண்ணா ப்ளீஸ்....முக்கியமான விஷயம்"



"நீங்க என்கிட்ட சொல்லுங்க நா சொல்லிட்றேன் மேடம்"



"ஓகே...அவர வீட்டுக்கு வர சொல்லுங்க ப்ளீஸ்.... ராத்திரிலருந்து அ..அப்பா வீட்டுக்கு வர்ல" எனவும் கேட்டுக் கொண்டிருந்த ஐவருக்கும் தூக்கிவாரிப் போட்டது.



ஆரவ் அதிர்ந்து ரிஷியை ஏறிட அவனோ புருவத்தை நீவிவிட்டபடி யோசனையில் ஆழ்ந்திருந்தான்.



"அண்ணா..."



" சொ...சொல்லுமா...?"



"சொல்லிடுவீங்கல்ல?"



"ஆமா"



"தேவ் கிட்ட பேசனும் போல இருக்கு... ப்ளீஸ் வந்த உடனே என்கிட்ட பேச சொல்லுங்க"குரல் உடைய சொன்னவளைப் பார்த்து கதிருக்கே தொண்டை அடைத்தது.



"ஓகேமா நா சொல்லிட்றேன்"



"ம்..."என்றவள் அழைப்பை துண்டிக்கவும் வருண் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.



வந்தவன் தன் தாயும் தங்கையும் அழுது கொண்டிருப்பது கண்டு பதறிப் போனான்.



"ம்மா....என்னாச்சு..ஏன் அழறீங்க..கயல் என்னடா ஆச்சு....ரிக்ஷி எங்க?" தன்னை பாய்ந்து கட்டிக் கொண்டு அழுத தங்கையின் கூந்தலை வருடியவாறே கேட்டவன் அருகில் வந்தாள் அஷ்வினி.



"ரிக்ஷி...என்னாச்சு?"



"அண்ணா அப்பா..."



"அ....அ...அப்பாக்கு என்னாச்சு?"



"அப்பா ராத்திரில இருந்து வீட்டுக்கு வர்லணா...."



"வாட்....கால் பண்ணியா?"



"ஆமாண்ணா....வரும் போது ட்ரை பண்ணேன்...பட் நோ ஆன்ஸர்"



"அம்மா போனால ட்ரை பண்ணியா...?"



"ஆமாண்ணா....அண்ணி ட்ரை ப்ண்ணாங்க...பட்..."



"அஜய்க்கு ட்ரை பண்ணு..."



"ம்...ஓகே..."

என்றவள் சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.



"ரிங் போய்கிட்டே இருக்கு...."



"ஷிட்...ஆரவ்கு பாரு"



"ம்...."



.......



"இவனோடதும் ரிங் போய்கிட்டே இருக்குணா...."

எனவும் அவனுக்கு இலேசாக பொறி தட்ட அதிர்ந்து போனவன்



'கடவுளே...அப்பிடி எதுவும் இருக்க கூடாது' என மானசீகமாய் கடவுளிடம் வேண்டுதல் வைத்தான்.



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



தன் மனையாளின் உடைந்த குரல் மனதை பிசைய சாதாரணமாக இருப்பது கூட கஷ்டமாகிப் போனது ரிஷிக்கு....



தலையை அழுத்தக் கோதியவன் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்க திடீரென எழுந்தது இராமநாதனின் சிரிப்பலை...



தங்களுக்குள் உழன்று கொண்டு இருந்தவர்கள் சட்டேன திரும்பி அவரைப் பார்த்தனர்.



"ரொம்ப யோசிக்கிறியோ?" ஏளனமாக வளைந்தது அவர் உதடு....



கஷ்டப்பட்டு தன்னை அடக்கியவன் கை முஷ்டியை இறுக்கி அவரைப் பார்த்தான் அடைக்கப்பட்ட கோபத்தில்....



"ஒரு ராத்திரி வராம போனதுக்கே உன் பொண்டாட்டி அதான் என் மக....எப்பிடி உடஞ்சி போயிருக்கா பாத்தல்ல..இதுவே நீதான் என்ன இப்பிடி பண்ணிட்டன்னு தெரிஞ்சுது....அட கோபப்படுவன்னு நெனச்சேனே....பரவாயில்ல...சரி இன்னொரு விஷயம் சொல்லிக்கிறேன் அதயும் கேட்டுக்கோ....நீ கொன்னியே அக்ஷயா....அவ யாரு தெரியுமா....?"



"....."



"என் பொண்ணு... "



"...."



"அட ஒனக்கு விஷயம் ஏற்கனவே தெனியும் போல இருக்கே....ஷாக் ஆகல.... நீ என் பொண்ண கொல்லுவ...நா அத பாத்துகிட்டு சும்மா இருக்கணுமா... ஏன்டா ஊர்ல உள்ளவன் அத்தன பேர் கிட்டயும் வம்பு பண்ணி வெச்சிருக்க...எதிரி இருப்பான்னு கூடவா யோசிக்கல அதான் எனக்கு வசதியா போச்சு..யாருகிட்ட கேட்டாலும் நீ நான்னு போட்டி போட்டுகிட்டு

வர்றானுங்க உன்ன போட்டுத்தள்ள...."



"...."



"நா இப்பிடித்தான்னு உன் பொணடாட்டிகிட்ட போயி சொன்னாலும் நம்ப மாட்டா.... உன்ன டிவோர்ஸ் பண்ணிடுவா....

அவ்வளவு பாசம் என்மேல" என்றவர் கத்தி சிரிக்க ஐவர் உதடுகலிலும் உதயமானது ஓர் மர்மப் புன்னகை....



***



அன்றொரு நாள் அவனுக்கே தெரியாமல் ரெக்கார்டான ஆடியோ வாய்ஸ் நோட் விதியின் சதியில் இருவர் எண்களுக்கு ஃபார்வேர்ட் ஆகியிருப்பது அறியாமல் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த குழப்பத்தில் இருந்தான் ரகு....



ராக்கேஷ் திரும்பி வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பது தெரிந்தாலும் அடுத்து என்ன செய்வது என்று சத்தியமாக அவனுக்கு குழப்பமாகவே இருந்தது.



இந்நேரம் இராமநாதன் தன் நண்பனின் கைகளில் கண்டிப்பாக

சிக்கியிருந்தாலும் ராகேஷால் ஏதாவது ஆபத்து வருமா என்பது பற்றிய பயமே அதிகமாய் இருந்தது.



திடீரென கதவு படபடவென தட்டப்பட திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான் ரகு.



என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கதவு உடைக்கப்பட்டு சில ரௌடிகள் வர எழுந்து அவர்களை தாக்கும் முன் அவர்கள் தலைக்கு கட்டையால் அடிக்க மயங்கிச் சரிந்தான் ரிஷியின் மனதில் துரோகியாகிப் போன அந்த ஆருயிர் நண்பன்....



தொடரும்.....



07-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 45 [ B ]


திடீரென தலையை பிடித்துக் கொண்டு மயங்கிச் சரிந்த விஜயலக்ஷ்மியை "அம்மா..." என கத்திக் கொண்டே பதற்றத்துடன் தாங்கிப் பிடித்தான் வருண்.



"ஈஷ்வரி....அந்த தண்ணிய தெளிச்சு விடு.... ரிக்ஷி நீ டாக்டருக்கு கால் பண்ணு....கயல் அம்மாவ மடில வெச்சுக்கோ...."

கட்டளைகளை பிறப்பித்தவன் கயலின் மடிமீது மெதுவாக விஜலக்ஷ்மியை படுக்க வைத்தான்.



"வருண்...."என்றபடி ஈஷ்வரி தண்ணீரை நீட்ட தன் தாய் முகத்தில் தெளித்தவன் அவர் கண்ணத்தை தட்டினான்.



"மா....எந்திரிங்க....மா...ப்ளீஸ்மா...

அப்பாவுக்கு எதுவும் ஆகாதுமா....

பயப்படாதீங்க....அதான் நாங்க கூடவே இருக்கோம்ல... மா வேக் அப் ப்ளீஸ்...." எனும்போதே கால் பண்ணிவிட்டு வந்தாள் அஷ்வினி...



"ணா...டாக்டருக்கு கால் பண்ணேன்...இதோ வந்தட்றேன்னு சொன்னாரு...."



"ம்...ஓகே ரிக்ஷிமா...நீ அம்மாவ பாரு...நா ஆருக்கு கால் பண்ணிட்டு வந்துட்றேன்...."



"சரிணா...."

என்றவள் தாயை எழுப்ப முற்பட வருண் கொஞ்சம் தள்ளிப் போனான்.



ரிங் போய் கொண்டே இருக்க தூக்கும் வழியைக் காணாததால் சந்தேகம் வழுப்பெற்றுக் கொண்டே இருந்தது வேறு அவன் டென்ஷனை அதிகமாக்கிக் கொண்டிருந்தது.



கடைசி வரை அழைப்பு எடுக்கப்படாமலே போகவும் "ஷிட்..."என்றவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டு மீண்டும் வந்தான்.



"ரிக்ஷி....நீ டாக்டருக்கு இன்னொரு தடவ பாரு...இல்லன்னா ஹாஸ்பிடல் போலாம்..."



"சரிணா.."



......



"அண்ணா...."



"என்ன ரிக்ஷி?"



"ட்ராபிக் அதிகமா இருக்காம்...."



"ஊஹூம்...."என பெருமூச்சு விட்டவன்



"ஈஷ்வரி...நீங்களும் ரிக்ஷியும் அம்மாவபாத்துக்கோங்க.... நா கார ஸ்டார்ட் பண்ணிட்டு வந்து தூக்குறேன்...."

என்றவன் அவசரமாக வெளியே ஓடினான்.



......



கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு மயங்கிய நிலையிலேயே இருந்தார் விஜயலக்ஷ்மி....



கயல் ஈஷ்வரியை கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்க வருணும் அஷ்வினியும் தான் வெளியே டாக்டருக்காக காத்தவாறு நின்று கொண்டிருந்தனர்.



அஷ்வினியின் மொபைல் சிணுங்கலில் நடப்புக்கு வந்தான் வருண்.



"சொல்லு அஜய்..."



"எங்க இருக்கீங்க...எதுக்காக கால் பண்ணி இருந்த?"



"அப்பா கெடச்சிட்டாரா?"



"ப்ச்...எங்க தேடியும் இல்ல அஷ்வி... என்ன பண்றதுன்னே புரியமாட்டேங்குது"



"நம்பிக்கைய விட்றாதடா...."



"ம்...நா பாத்துக்குறேன்...நீங்க யாரும் டென்ஷன் ஆகாதீங்க"



"...."



"அம்மா எங்க...நல்லா இருக்காங்கல்ல?"



"ஆ...ஆ...ஆமா"



"பொய் சொல்லாத ரிக்ஷி...என்ன ப்ராப்ளம்?"



"ஒன்னில்லணா...பய்..."



"ஏய் இருடி...."



"என்ன அஜய்?"



"ரிக்ஷி...ஐ அம் சீரியஸ்....ப்ளீஸ்டி டென்ஷன ஏத்தாம சொல்லுமா"



"அ...அது அம்மா ஹாஸ்பிடல்ல"



"வாட் எந்த ஹாஸ்பிடல்?"



"நீ வர தேவயில்ல அஜய்....வருண் அண்ணா கூட இருக்காங்க"



"அவன் கிட்ட ஃபோன குடு ரிக்ஷி...."



"பட்...."



"குடுன்னு சொல்றேன்ல"



"ம்..."என்றவள் மறுபேச்சு பேசாது வருணிடம் மொபைலை நீட்டினாள்.





ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்......



இராமநாதனை அடைத்து

வைத்திருந்த அண்டர் க்ரவுன்ட் தளத்திலிருந்து எலவேட்டரி

(லிஃப்ட்) ல் மேலே வந்து கொண்டிருந்த ரிஷியின் கை தன் வலக்கை நடுவிரலால் புருவத்தை நீவியபடியே இருக்க அவனோ ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டிருந்தான்.



எல்லா பக்கமும் பிரச்சனை கழுத்தை நெறித்து கொண்டிருப்பது போல் தான் இருந்தது அவனுக்கு.....



இதில் அவன் மனையாளின் சற்று மேடிற்ற பிம்பம் வேறு மனதை சலனப்படுத்த தனிமையை நாடி மேலே வந்துவிட்டான்.



யோசனையுடனே வந்தவன் அவன் சொன்னபடி கதிர் மொபைலை வாங்கி அவன் டேபிள் மேல் வைத்திருப்பது கண்டு அதை எடுத்தவன் தன் பழைய சிம் கார்டையே அதற்கு போட்டு ஆன் செய்த மறு நொடி ஏதோ புதிய எண்ணிலிருந்து வாய்ஸ் நோட் வந்திருப்பது கண்டு நெற்றி சுருக்கியவன் அதை தட்ட முற்பட சரியாக அந்நேரம் கதவு தட்டப்பட்டது.



"எஸ் கம் இன்...."என்றவன் உள்ளே நுழைந்த சாருமதியை என்னவென்பது போல் பார்க்க



"சார்...மேடம் கால் பண்ணி இருந்தாங்க.....உங்க யாரோட மொபைலுமே வேலை செய்யலன்னு சொன்னாங்க...."



"...."



"ரொம்ப பதட்டமா இருக்குறா மாறி தான் சார் இருந்துது...."என்றுவிட்டு வெளியேறி விட அழைப்போமா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்தியவனின் மனம் ஏதும் நடந்துவிட்டிருந்தால்.....என படபடக்க சற்றும் தாமதிக்காமல் அழைத்துவிட்டான் தன்னவளுக்கு....



"தேவ்...."அவள் குரல் தழுதழுக்க இவனுக்கு இன்னும் பதற்றம் அதிகமானது.



"அஷு....உ..உனக்கு ஒன்னில்லல்லடா?"



"இல்ல தேவ்...பட்...அ...அம்மா அம்மாக்கு...."



"என்னாச்சு?"



"அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க தேவ்.... இன்னும் கண்ணு முழிக்கல....எனக்கு பயமா இருக்கு தேவ்...."



"ஹேய்...என்னடா...அவங்களுக்கு எதுவும் ஆகாது....பயப்படாத"



"தேவ் வந்து நீங்க வர்றீங்களா?"



"...."



"வேல இருக்குன்னா தேவயில்ல... சாரி"



"எந்த ஹாஸ்பிடல்?"



"****"



"நா வந்தட்றேன்....நீ பயப்படாத ஓகே?"



"ம்...."என்றவள் அழைப்பை துண்டிக்க தலையை அழுத்தக் கோதிக் கொண்டவனின் முகம் பாறையாய் இறுகிப் போய் இருந்தது.



கதிருக்க அழைத்து விஷயத்தை சொன்னவன் தான் அங்கு சென்று விட்டு வருவதாக கூறி அழைப்பை கட் பண்ணி விட்டு நேரே மருத்துவமனை சென்றான்.



அவன் வாய்ஸ் நோட் கேட்காததை பார்த்து விதி தான் சாதித்து விட்டதில் ஏளமாய் சிரித்தது.



.....



யார் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் முகம் இறுக கடமைக்காக வந்து நின்றவனின் தோற்றத்தில் வருணுக்கு எச்சரிக்கை மணி பலமாக அடித்தது.



அவன் மனையாளுக்கு அதெல்லாம் கருத்தில் பதியவே இல்லை போலும்!!!



அவனருகில் வந்தவள் அவனை இறுக்க அணைக்க அவன் உடல் விறைத்தது.



அதை அவன் அணைக்காமல் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டிருந்ததில் தால் புரிந்தது அவளுக்கு....



சட்டென தலையுயர்த்தி பார்த்தவள் அவன் முகம் கண்டு திடுக்கிட்டாள் என்று தான் கூற வேண்டுமோ???



அவளைப்பாராது தன்னை விட்டு விலக்கி நிறுத்தியவன்



"எனக்கு அர்ஜன்ட் மீட்டிங் இருக்கு அஷ்வினி....நா வர்றேன்...."

என்றான் எங்கோ பார்த்தபடி....



"தேவ் ஏன் இப்பிடி இருக்கீங்க.... ஏதாவது ப்ராப்ளமா?"



"நத்திங்"



"அ...அ...அம்மாவ பாத்துமா.... உங்களுக்கு உங்க வேலை முக்கியமா படுது?"



"....."



"அப்பாவ ராத்திரில இருந்து காணல தேவ்" எனவும் அவன் கை முஷ்டியை இறுக்கிக் கொண்டான்.



அவனிடமிருந்து எந்த பதிலுமே வராமல் போக அவன் மௌனம் அவள் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.



"சாரி....டிஸ்டர்ப் பண்ணதுக்கு....

நீங்க போங்க...." என்றவள் விலகி வழிவிட அவளை ஒரு நொடி காதலாய் தொட்டு மீண்ட அவன் பார்வை மறுநொடி சாதாரணமாக மாறியிருந்தது.



எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பியவனை வெறித்துப் பார்த்தவளின் உதடுகள் விரக்தியாய் சிரித்தது.



கொஞ்ச நாள் மறைந்திருந்த விரக்தி நெஞ்சில் பரவ அவன் மீது ஆழமாக துளிர்விட்டிருந்த நேசமதில் சிறு கீறல் விழுந்து ரணமாய் வலிக்கச் செய்ய கண்களை இறுக்க மூடித் திறந்தாள் பேதை!!!



அப்பாவை வைத்து பிள்ளைகளை எடை போட்டது அவன் செய்த பெரும் தவறாகிப் போனது.



தன்னவளை தன்னவளாக மட்டும் பார்த்திருக்கலாம்!!!



தன் நண்பனை மட்டும் வைத்து கூட யோசித்திருக்கலாம்!!!



அவரை தவிர்த்து வீட்டு ஆட்களை வைத்து யோசித்திருக்கலாம்!!!



விதியின் விளையாட்டில் சிக்கித் தவிக்கப் போகிறான் என்பதை யார் அவனுக்கு சொல்லி புரிய வைப்பது???



......



காரில் சென்று கொண்டிருந்தவனுக்கு மீண்டும் பீப் சௌண்ட் கேட்க அப்போதுதான் அந்த புதிய எண் வாய்ஸ் நோட்டே நினைவு வந்தது அவனுக்கு....



உள்ளுணர்வு உந்தித் தள்ள தன் மொபைலை எடுத்து அதை தட்ட முற்பட மீண்டும் இடையில் குறுக்கிட்டது விதி!!!



ஆரவ்வின் எண்ணிலிருந்து அழைப்பு வர அடண்ட் செய்து காதிற்கு கொடுத்தான்.



"எனி ப்ராளம்?"



"நோ அண்ணா....நீங்க சொன்னது போலவே அவன் பேசினது ரெக்கார்ட் பண்ணி பெண்ட்ரைவ்ல போட்டுட்டேன்....மதனுக்கு அர்ஜன்ட் கால் வந்திருக்கு....நீங்க வந்துடுவீங்கல்ல?"



"இதோ டென் மினிட்ஸ்...."

என்றவனின் கைகளில் வேகமெடுத்தது அவனின் ரால்ஸ் ராய்ஸ்...



......



"கதிர்...."

என்றபடியே புயலென உள்ளே நுழைந்தவன் அவனிடம் ஏதோ சொல்லி அனுப்பிவிட்டு மற்ற மூவரின் பக்கம் திரும்பினான்.



"மதன்....நீ போ நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன்"



"இல்லண்ணா....நா இருக்கேன்" என்க ரிஷி பார்த்த பார்வையில் வாய் கப்பென மூடிக் கொள்ள மறு பேச்சு பேசாமல் வெளியேறி விட்டான்.



"ஆரவ்....சித்தார்த்..... நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போங்க...."



"இல்லண்ணா....நாங்க உங்க கூட இருக்கோம்" ஒரு சேர குரல்கொடுக்கவும் ஏற்கனவே அவர்கள் மூவரும் செய்த வேலையில் கோபத்தில் இருந்தவன் கடுப்பாகி விட்டான்.



"போங்கன்னு சொல்றேன்ல.... அப்பறமும் எதுக்குடா அடம் புடிச்சிகிட்டு நிக்கிறீங்க....என் வாயில நல்லா வருது....போங்கடா முதல்ல...."

எரிச்சலில் கத்தவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டுவிட்டு வேறு வழியில்லாமல் வெளியேறினர் இருவரும்.....



இராமநாதனை பார்க்க பார்க்க அப்படியே பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு....



போயும் போயும் இவனாகவா அந்த எதிரியாய் இருக்க வேண்டும்???



அதுவும் தன்னவளின் அப்பா என்பதிலா அறிமுகமாக வேண்டும்???



இவனால் அவர்களை பார்ப்பதுவே கஷ்டமாகிப் போனதே!!!



அதிலும் தன்னவளின் வார்த்தை....



உறவுகளை விட வேலையே பெரிதாகப் போனது போலல்லவா ஆக்கிவிட்டது அவனை!!!



எந்தப் பக்கம் நியாயம் இருப்பதாக வாதிடுவான்???



ஒரு புறம் அவன் நியாயம் என்றால் மறுபுறம் தன் மகவை சுமந்திருக்கும் மனையாளின் நியாயம்!!!



வந்த கோபத்தை எல்லாம் திரட்டி விட்டான் ஒரு அறை.....



***



சேரில் கட்டி வைக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்தான் ரகு...



அவன் முன்னால் வேட்டையாடக் காத்துக் கொண்டிருக்கும் நரியாய் ராகேஷ்....



"ஏய் இந்த நாயோட மூஞ்சிக்கு தண்ணிய அடிச்சு ஊத்தி எழுப்பி விடுங்கடா....கூடவே இருந்து காட்டி குடுத்திருக்கான் துரோகி...."



"அப்போ நீ பண்ணது...."என கேட்டுக் கொண்டே அவனை முறைத்தது சாட்சாத் நம்ம ரகுவே தானுங்க....



"யூ இடியட் திமிராடா ஒனக்கு..." என்றவன் அவன் சேரை காலால் எட்டி உதைக்க பின் சுவற்றில் அடிபட்டு விழுந்தான் ரகு...



"டேய் கட்ட அவுத்து விடுங்கடா..." எனவும் கட்டு அவிழ்க்கப்பட அவனின் ஷர்ட்டை கெத்தாகப் பிடித்தவன் அவனை தூக்கி தரையில் அடித்தான்.



சுவற்றில் மோதி விழுந்தவனின் வயிற்றுக்கு ஷூவால் உதைந்து கொண்டிருக்கும் போது மொபைல் ஒலி எழுப்ப இன்னொரு உதை பலமாக உதைந்தவன் அதை எடுத்து காதிற்கு கொடுத்தவாறே சென்றுவிட தன் நண்பனுக்காக பொறுத்துக் கொண்டினுக்கும் சுகத்தில் அத்தனை வலியிலும் விரிந்தது ஓர் அழகான புன்னகை....



***



"யாழி....என்னடி இது.....எதுக்காக இப்போ மும்பை காலேஜ்கு ஜாயின் பண்ண போற....சொல்லுடி.....?" ரித்திகா கத்திக் கொண்டே இருக்க தன் பாட்டில் பையில் உடுப்பை அள்ளிப் போட்டு விட்டு நிமிர்ந்தாள் யாழினி....



"எனக்கு இங்க இருக்க பிடிக்கல...."



"இவ்வளவு நாள் பிடிச்சது ஏன் இப்போ மட்டும் பிடிக்காம போச்சு?"



"தெரில"



"யாழி...நம்ம அம்மா அப்பாவ யோசிச்சு பாத்தியா....உடஞ்சி போயிடுவாங்கடி"



"அதான் நீ இருக்கேல்ல....நல்லா பாத்துக்கோ...."



"ஏன் யாழி இப்பிடி பண்ற...அங்க உனக்கு யார தெரியும்....எங்க போய் தங்குவ?"



"ஹாஸ்டல்"



"வீடு இருக்கும் போது எதுக்குடி ஹாஸ்டல்?"



"எனக்கு இந்த ஊர்ல இருக்க பிடிக்கல ரித்து.... ப்ளீஸ் என்ன என் போக்குல விட்டுடு"



"அப்பிடியெல்லாம் விட முடியாது.... என்ன ப்ராப்ளம்னு சொல்லு?"



"ஒரு ப்ராப்ளமும் இல்ல"



"அப்போ ஏன் பிடிக்கல?"



"ஏனோ பிடிக்கல...இதுக்கு மேலயும் என்கிட்ட கேள்வி கேட்காத...நா அம்மாகிட்ட சொல்லிட்டு வந்தட்றேன்"

என்றவள் அவள் பதிலை எதிர்பாராது சென்று விட அவசரமாக வருணுக்கு அழைத்தாள் அவள்....



அந்தோ பரிதாபம்....அவன் அழைப்பை எடுக்கவே இல்லை....



***



ஹாஸ்பிடல்.....



கயல் ஆரவ்வை ஓடிச்சென்று அணைத்துக் கொள்ள அவனும் இறுக்கி அணைத்துக் கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு மீண்டும் விரக்தி....



தன் அணைப்புக்கு தன்னவன் உடல் விறைத்ததெங்கே...ஆரவ்வின் ஆறுதல் அணைப்பெங்கே??



கண்களை மூடி சுவற்றில் சாய அருகில் வந்தமர்ந்தான் சித்தார்த்.



அவள் மனமறிந்து தன் தோலில் சாய்த்துக் கொள்ளவும் அந்த நட்பில் பூரித்தது அவள் உள்ளம்....



((எதிர்ப்பார்பில்லா அன்பு நட்பில் மட்டுமே சாத்தியம்))



வெளிவரத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் டாக்டர் வெளியே வரவும் எழுந்து அவரிடம் விரைந்தாள்.



"மிஸ்டர்.விஷ்வா....உங்க அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க....நத்திங் டு ஒர்ரி... நீங்க போய் பாக்கலாம்...."

என்றவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு செல்ல ஆரவ் மீதிருந்த பார்வையை அப்போது தான் விலக்கினான் வருண்.



"அஷ்வி....கயலயும் கூட்டிகிட்டு போ...." என்றவனின் அழைப்பு மாற்றம் கூட அவளுக்கு பதியாமலே போக அவனை கவனிக்க தவறினாள் பெண்....



"ஈஷ்வரி....நீங்களும் போங்க...நா இவங்க கூட வர்துட்றேன்...." என்றவன் அவர்களை அனுப்பி விட்டு நேரே ஆரவ்விடம் வந்தான்.



***



"சார்...." என்றவாறு ஹரிஷுடன் உள்ளே நுழைந்தான் கதிரவன்.



ரிஷியின் கண்ணசைவில் இராமநாதனுக்கு பக்கத்திலேயே அவனும் கட்டப்பட



"அனன்யாவையும் இங்கேயே கூட்டிட்டு வந்துடு கதிர்"என்றான் காலுக்கு மேல் கால் போட்டவாறே நிதானமாக.....!!!



***



கீழே விழுந்து கிடந்தவனை தூக்கி மறுபடியும் போட்டு அடித்தவன் அவன் அடியாட்களில் ஒருவனிடம்



"டேய்....போயி என் துப்பாக்கிய எடுத்துடுட்டு வாடா" என கத்திவிட்டு திரும்பி ரகுவைப் பார்த்தான் அவன் கண்களில் உயிர் பயம் தென்படுகிறதா என்று....



ஊஹூம்....அதற்கு மாற்றமாக அவன் கண்களில் ஓர் ஒளி!!!



அது எதனால் வந்ததென்று யூகிக்கக் கூட மூளையற்று இருந்தான் அந்த முட்டாள்....



அவன் கைகளில் துப்பாக்கி ஒப்படைக்கப்பட ரகுவின் கண்கள் இரண்டுக்கும் சரி மத்தியில் வைத்தவன் சுடுவதற்கு அழுத்த எத்தனித்த நொடி எங்கிருந்தோ வந்த தோட்டா ராகேஷின் பின் மண்டையில் துளைக்க துப்பாக்கியை ஏந்தியவாறே கீழே சரிந்தான் ராகேஷ் கண்ணா!!!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன்னிடம் நடந்து வந்து கொண்டிருந்த வருணை கண்டு முகத்தை திருப்பிக் கொள்ளவும் முடியாமல் உண்மையை முழுதாக நம்பவும் முடியாமல் அல்லாடியவன் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்டு தலையை குனிந்து கொண்டான்.



ஆரவ் ரிஷியை போல் அல்ல என்று வருணுக்கு நன்றாகவே தெரியும்.



அண்ணன் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு உடைத்தானென்றால் தம்பி அதற்கான காரணத்தை தேடும் ரகம்...



ஆக ஆர்.கே இன் செயலுக்கு நியாயவாதி ஆகவேதான் இருப்பான் ஆரவ்....



என்ன ஒன்று ஆர்.கே தப்பு செய்தவர்களை மண்ணிக்கவும் மாட்டான்....அவர்களை ஏறேடுத்துப் பார்க்கவும் மாட்டான்.....



ஆனால் ஆரவ்விற்கு அப்படியெல்லாம் இருந்துவிட முடியாது.....

அவனே தப்பு செய்தது போல் தலையை குனிப்பவன் நிமிர்ந்து கூட பாக்க மாட்டான்.....



இது மட்டுமே இருவருக்குள்ள வித்தியாசம்!!!



ஆரவ்வின் முன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்றவன்



"அப்பா எங்க இருக்காங்க ஆரவ்?" என்றான் அதிரடியாய்....



அதில் தலையை விலுக்கென நிமிர்ந்து அதிர்ச்சியாய் வருணை நோக்கினான் ஆரவ்.



"சொல்லு ஆரவ்....அப்பா எங்க இருக்காங்க?"



"அண்ணா அது வந்து எங்...."



"நீ பொய் சொல்ல போறன்னு உன் கண்ணே காட்டி குடுக்குது" என்றான் காட்டமாக....



"அது வந்து இல்லண்ணா...."



"பதில் உனக்கு தெரியும்குற விஷயம் எனக்கு தெரியும்"



"....."



"ஆர்.கே கஸ்டடியிலயா?"



"...."



"சோ....தப்பு அப்பா மேல நிச்சயமா இரு...."



"இல்ல..." அவன் வார்த்தைகளை முடித்து வைத்தாள் அஷ்வினி...



மூவரும் அதிர்ச்சியாகத் திரும்பி அவளை நோக்க அங்கே மூக்கு நுனி சிவக்க கோபத்தில் கத்திக் கொண்டிருந்தாள் ரிஷியின் மனையாள்.



அவளை அங்கே அதுவும் அந்நேரத்தில் அவர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை என்பது அவர்களின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.



ஆரவ்வின் ஷர்ட் காலரை பிடித்து உலுக்கி



"என் அப்பாவ என்னடா பண்ணீங்க....சொல்லுடா....என் அப்பாவ என்ன பண்ணீங்க.....?"



"....."



"ஓ....மிஸ்டர்.ரிஷிகுமாரும் இதுல இன்வால்வ் ஆகியிருக்குறதுனால தான் நா அவ்வளவு சொல்லியும் கல்லு மாதிரி நின்னாரா.... ரொம்ப சந்தோஷம்.... அதானே பாத்தேன் என் தேவ் இப்படி எல்லாம் பண்ண மாட்டாரேன்னு....இப்போ தானே தெரியுது அவன் தேவ் இல்ல.... ரிஷிகுமார்னு...

என் அம்மாவ இந்த நிலமைக்கு ஆளாக்கியிருக்குறவன நா சும்மா விட போறதில்லன்னு சொல்லி வை உன் நொண்ணன் கிட்ட....தண்டன நிச்சயமா கிடைக்கும்....நிச்சயமா...." கால்கள் தள்ளாடி விழப்போனவளை விழாமல் பிடிக்க வந்தவன் அவள் பார்த்த பார்வையில் சத்தியமாக நொறுங்கிப் போனான் அவள் ஆருயிர் நண்பன்!!!



கண்களில் அத்தனை வெறுப்பு... கிட்ட வராதே எட்டியே நில் எனும் கட்டளை....



இதுவரை பார்த்திராத ஆவேசம் அவளிடத்தில்....



பூவாக இருந்தவள் புயலாகிப் போனதன் மாயம் என்னவோ!!!



***



"யாழி சொன்னா கேளுடி....ப்ளீஸ் யாழி...எனக்காக வேண்டாம் அம்மாப்பாக்காவாது...ப்ளீஸ்டி...."

வாசலைத்தாண்டி போகப் போனவளை வழிமறித்து கெஞ்சினாள் ரித்திகா..



ஊஹூம்...அவள் முடிவிலிருந்து அசைந்து கொடுக்கவே இல்லை....



முகம் என்றுமில்லாமல் கடுமையாய் மாறி இருந்தது.



"ரித்து....டோன்ட் இர்ரிடேட் மீ....மரியாதயா தள்ளி போ...."



"ப்ளீஸ்டி" இதற்கு மேல் முடியாதென்று தோன்றிவிடவே அவள் கண்கள் கலங்கி விட அதை பார்க்க சக்தியற்று மறுபுறம் திரும்பி நின்றாள் யாழினி.



"சரி போ யாழினி...பட் என் கூட இனி பேசாத" கண்களை இறுக்க மூடித் திறந்து தன் உணர்வுகளை கட்டுப் படுத்தியவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.



......



கால்டாக்சியில் ஏறி கண் மூடி அமர்நதவளுக்கு அன்று வருண் பேசிய வார்த்தைகளே காதினில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.



(அன்று.....



"உன்னால என்ன விட்டு போக முடியாது யாழ்....மறைக்க ட்ரை பண்ணாத" எனவும் உதட்டை கடித்து அழுகையை அடக்கியவள் ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.



"நீங்களா எதுவும் நினைச்சிக்காதிங்க விஷ்வா"



"ஈஸிட்... நா சொல்றது பொய்யுங்குறியா?"



"ஆமா..."



"அப்போ நான் அபிய கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு எந்த வருத்தமும் இல்ல?"



"லவ் பண்ண பொண்ண கட்டிக்கிறதுல என்ன தப்பிருக்கு?"



"வாட்...என்ன உளர்ற.... ஓகே நீ சொன்னபடியே வெச்சிக்குவோம்.... பட் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல"



"....."



"நீ இப்பிடி அமைதியா இருக்குறதுனாலதான் என்னால அபிய கல்யாணம் பண்ணிக்க சங்கடமா இருக்கு" அவன் என்னவோ அவள் வாயிலிருந்து உண்மையை வர வைக்க சொல்ல அது அவள் இதயத்தை சென்று கூறாக தாக்கியதை அவன் அறிய வாய்ப்பில்லை.....



"நா உங்கள தடுக்கல விஷ்...விஷ்வா.... நீங்க அபி அக்காவ கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கு எந்தபிரச்சினையும் இல்ல.... நீங்க என்ன மன்னிச்சிங்களோ மன்னிக்கலயோ அது பத்தி நான் பாத்துக்குறேன்...நீங்க உங்க இஷ்டப்படி இருந்துக்கோங்க... இனிமே உங்க லய்ப்ல எந்த சூழ்நிலையிலயும் நா உங்க முன்னாடி வர மாட்டேன்....உங்கள இனிமே பாக்க கூடாதுன்னு நெனச்சிக்குறேன் பய்...." என்றவள் அவனை திரும்பியும் பாராது சென்று விட அவன் தான் சிலையாய் நின்று கொண்டிருந்தான்.)



மீண்டும் வழிந்த கண்ணீரை துடைத்தவள் காரை விட்டு இறங்கி ஏர்போர்டுக்குள் நுழைந்தாள்.



***



தடால் என்ற சத்தத்தில் இறுக்க மூடியிருந்த கண்களை பட்டென திறந்தான் ரகு....



அவனுக்கு எதிரே அவனையே பார்த்தபடி நின்றிருந்தது சாட்சாத் நம்ம ரிஷிகுமாரே தான்!!!



தான் காண்பது கனவா எனும் ரீதியில் கண்களை மூடி மறுபடியும் திறந்தவன் ரிஷி அதே நிலையிலேயே நின்று கொண்டிருப்பது கண்டு கண்கள் கலங்க அவனைப் பார்த்தான்.



துப்பாக்கியுடன் கீழே விழுந்தவனுக்கு அப்போது தான் உணர்வு வர ஒரு கையால் தலையை பிடித்துக் கொண்டே மறு கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ரிஷிக்கு குறி வைக்க அதை சற்றும் தாமதிக்காமல் காலால் உதைந்து விட்டான் ரகு....



தலையிலிருந்து இரத்தம் போய் கொண்டே இருந்ததில் கண்கள் சொறுக ஆரம்பித்த அந்த நிலையிலும்



"திரும்ப வருவேன்டா.... வருவேன்... வந்தே தீருவேன்... உங்க ரெண்டு பேரையும் என் கையால கொல்லாம விட மாட்டேன்டா" வெறி பிடித்தவன் போல் கத்திவிட்டே மயங்கினான்.



அவனை ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தவன் ரகுவின் புறம் திரும்பி தான் கேட்ட வாய்ஸ் நோடை மறுபடியும் போட அதிர்ச்சியில் உறைந்தான் ரகு....



'இதெப்பிடி ஆச்சு....இதுதான் ராகேஷுக்கும் போயிருக்குமோ....பட் ஆர்.கேக்கு எப்பிடி?' யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனை அணைத்திருந்தான் அவன் உயிர் நண்பன்.



கண்களிலிருந்து அவன் அருமதியின்றியே வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவன் தன்னை அணைத்திருந்த நண்பணை ஆரத்தழுவிக் கொண்டான்.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....



ரிஷியின் கட்டளைப்படி இராமநாதன் இருந்த தளத்திற்கு கொண்டு வரப்பட்ட அனன்யாவிற்கு அவர் மாட்டிக் கொண்டது பேரதிர்ச்சியாக இருந்ததென்றால் தற்பொழுது தன் முன்னே போட்டோ ஒன்றில் மயங்கிய நிலையில் இருந்த ராகேஷை கண்டு கொண்டிருந்ததில் தூக்கிவாரிப் போட நிமிர்ந்து பார்த்தாள் ரிஷியை....



அவள் கண்களில் அப்பட்டமாக உயிர் பயம் தெரிந்து கொண்டிருந்தது.



இராமநாதனுக்கும் அதே நிலைதான் போலும்!!!



அவன் வந்து காப்பாற்றி விடுவான் என்றிருந்த நம்பிக்கை ஆட்டம் கண்டதில் அவருக்கு சர்வமும் நடுங்கிப் போனது.



ரிஷிக்கு இராமநாதனின் இரண்டாம் திருமண விடயம் சற்று என்ன உச்ச கட்ட அதிர்ச்சிதான்...



அக்ஷயா அவருடைய பெண்ணாக இருப்பாளென்று அவனென்ன கனவா கண்டான்???



அதிர்ச்சியானால் அவர் வாயிலிருந்து உண்மை வராது என்பதை அறிந்தே தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான்....



ஆனால் தற்போது அப்படி இல்லை.... அவர் நம்பிக்கையே ஆட்டம் காண வைத்துவிட்ட பிறகும் அவர் முழுதாக உண்மையை கூறி விடுவார் என யூகித்துத் தான் அந்த போட்டோவையே காட்டியிருந்தான்.



ஹரிஷ் மட்டும் இன்னும் மயக்க நிலையிலேயே தான் இருந்தான்.



"நீ எவனோ ஒருத்தனோட போட்டோவ காட்டி என் ராக்கின்னு காட்டினதும் உடனே நம்பிட்றதுக்கு நாங்க என்ன முட்டாளா?"சற்றும் அடங்காமல் கேட்டாள் அனன்யா....



'அடங்குறாளா பாரு....'மனதிற்குள் வருத்தெடுத்த கதிர் தன் பாஸ் என்ன சொல்லப் போகிறார் என ரிஷியையே பார்த்தான்.



அவள் கேள்வியில் இராமநாதனின் கண்களில் மீண்டும் நம்பிக்கை வந்ததை கண்ட ரிஷி இரு பக்கமும் தலையாட்டி சிரித்துவிட்டு உணர்ச்சி துடைத்து முகத்துடன் அவர்களை அவன் பார்த்த பார்வையில் கதிருக்கும் மனதிற்குள் திக்கென்றது.



காலுக்கு மேல் கால் போட்டு சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்தமர்ந்து இரு கையையும் தூக்கி சோம்பல் முறித்தவன் நிதானமாக அவர்களை பார்த்து



"சோ.... இந்த போட்டோவ நீங்க நம்புறதா இல்ல....ரைட்?"



"ஆமா ஆமா ஆமா" நிதானமிழந்து கத்தினாள் அனன்யா.



"அது உங்களோட ப்ராப்ளம்.... அதுக்கு நா எதுவும் பண்ண முடியாது" அலட்சியமாக தோளை குழுக்கிவிட்டு எழுப்போனவனை தடுத்து நிறுத்தியது இராமநாதனின் குரல்.....



"நீ என் பொண்ண கொன்ன.... நானும் உன்ன கொல்ல பாத்தேன்.... பட் அது நடக்கல.... நா உன்ன கொல்ல முயற்சி பண்ணதுக்கான தண்டனய நீ எனக்கு கொடுத்துட்ட....

இப்போ உனக்கும் எனக்கும் கணக்கு தீர்ந்துடுச்சு....என்ன விட்டுடு....எனக்கு என் பொண்ணு அஷ்வினிய பாக்கனும்....ப்ளீஸ்" நல்லவர் போல் நடிப்பவர்களை அவன் எத்தனை தடவை பார்த்திருக்கிறான் இவர் எதற்காக நடிக்கிறார் என்று அவனுக்கா தெரியாது???



மீணடும் அமர்ந்தவன்



"அட இது நல்லாருக்கே...என்ன கதிர் என்னோட மாமனார் சொன்ன மாதிரி செஞ்சிடலாமா?" என்றான் படு நக்கலாக.....



"மாறா....என்ன பத்தி ஒனக்கு சரியா தெரியாது"



"என்ன மாமா நீங்க....உங்கள பத்தி தெரிஞ்சு நா என்ன பண்ண போறேன்....வேனுன்னா உங்க பொண்ண பத்தி அதாவது என் பொண்டாட்டி பத்தி சொல்லுங்க கேட்டுக்குறேன்....இல்ல கதிரவன்?"



'இவரு வேற நேரம் காலம் தெரியாம பிபிய ஏத்துறாறு'



"வேண்டாம் மாறா என்ன சீண்டிப் பாக்க நெனக்காத"



"ச்சே ச்சே அப்பிடி பண்ண மாட்டேன் மாமனாரே....ஏன்னா சீண்டுறதுக்குதான் உன் பொண்ணு அதாவது என் பொண்டாட்டி இருக்காளே....நா சொல்றது கரக்ட்ல கதிர்?"



"ஏய்..."



"அடச்சீ கத்தாத...."

என்றவன் வேண்டுமென்றே காதை குடைந்தான்.



"மிஸ்டர்.மாமா....அட...எனக்கு கூட மாமான்னு சொல்ல வருது பாரேன் கதிர்"



"மாறா...."



"இப்போ தானே ஒனக்கு கத்தாதன்னு சொன்னேன்....மறுபடியும் எதுக்கு நொய் நொய்யிங்குற?"



"பின் விளைவு விபரீதமா இருக்கும்"



"ஈஸிட்?" போலியாக வருத்தப்பட்டவன்



"முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன் மாமனாரே...உன் பொண்டாட்டி அதாவது என் பொண்டாடடியோட அம்மா ஹாஸ்பிடல்ல...." புதிய தகவலில் அவருக்கு உண்மையில் அதிர்ச்சி உச்சத்தை தொட்டது.



"என்ன...ஒரு ரியாகஷனயும் காணோமே?"தாடையில் விரலால் தேய்த்தவன்



"ஓஹ்....அவதான் பேருக்கு இருந்த பொண்டாட்டியாச்சே...அப்பறம் எப்பிடி ரியாகஷன எதிர்பாக்க முடியும்?"



"ஏய்..."



"ஒனக்கு ஒரு தடவ கத்தாதன்னு சொன்னேன்ல....ஏன் செவிடா?"



"மாறா திஸ் இஸ் யூர் லிமிட்"



"அதெல்லாம் நீ சொல்லக் கூடாது சரியா.... எதுக்காக ஹாஸ்பிடல்ல இருக்காங்கன்னு தெரியுமா... உன்ன மாறி துரோகிய நெனச்சி ஸ்ட்ரைன் பண்ணிக்கனும்னு அவங்களுக்கு விதி" என்றான் ஆத்திரத்துடன்....



"....."



"உன்னையே நெனச்சிகிட்டு உனக்காகவும் பிள்ளைங்களுக்காகவும் வாழுறவங்களுக்கு எப்பிடிடா துரோகம் செய்ய முடிஞ்சுது உன்னால?" உண்மையாக இதயத்திலிருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.



அவருடன் அதிகம் பேசியதில்லையாயினும் அவரைப் பற்றி அவன் கணித்தே வைத்திருந்தான்.



தாயைப் போல் தான் அஷ்வினியும் என கனித்திருநதவனுக்கு அப்போது அது மட்டும் வசதியாய் மறந்து போயிற்று போலும்!!!



***



ஹாஸ்பிடல்......



முகத்தை மூடிக் கொண்டு குமுறிக் குமிறி அழுதவள் யாரையும் பக்கத்தில் கூட வர விடவில்லை.....



விரக்தி,கோபம்,வலி,ஏமாற்றம் என அனைத்தும் ஒரு சேர நெஞ்சம் முழுவதும் கலவையாய் சேர்த்து புண்ணாக்க அடக்கி வைத்திருந்த அழுகை பீரிட்டுக் கிளம்பியது.



தன் நெஞ்சில் நல்லவனாய் இருந்த தன்னவன் பிம்பம் பொய்யாகிப் போன வலியை தாங்க முடியவில்லை அந்தப் பேதையால்....!!!



"ஏன்டா பொய்யாகிப் போன?" உள்ளுக்குள் கதறித் துடித்த மனதை அரும்பாடுபட்டு அடக்கியவளால் அவனின் சொற்கள் ஒவ்வொன்றாய் மனதின் அடி ஆழத்திலிருந்து வந்து கொண்டிருந்ததை அடக்க முடியாமலே போயிற்று பேதைக்கு....



"அலச்சல் கேஸ்...."



"உன் நெனப்புக்கு வேற எவனாவது வருவான் அவன் கிட்டபோ.... போயி உன்...."



"ஐ ஹேட் யூ....ஐ ஹேட் யூ எவர்...."



"போ இங்க இருந்து....உன்ன பாக்கவே புடிக்கல....கெட் லாஸ்ட்"



"அவன்கிட்டயும் தானே பணம் இருக்கு.... அப்பறம் எதுக்குடி என்கிட்ட வந்த....பணத்துக்காக வந்தியா....இல்ல...."



அவன் சொன்ன வார்த்தைகள் தான்!!!



நெருப்புத் துண்டங்களாய் மீண்டும் இதயத்தை ரணப்படுத்து காதை இறுக்க மூடிக் கொண்டவளுக்கு விரக்தி வெறுப்பு மட்டுமே கடைசியில் எஞ்சிப் போனது....



முகத்தைை அழுத்தத் துடைத்துவிட்டு எழுந்தவளின் உள்ளும் புறமும் ஒரு சேர இறுகி இருந்தது.



"அண்ணா....என்ன மாறனோட ஆபிஸ்ல ட்ராப் பண்ண முடியுமா?" எனவும் மூவருக்கும் உள்ளுக்குள் திக்திக்கென்று இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.



"இப்போ எதுக்கு ரிக்ஷி....நீ அம்மாவ பாத்துக்கோ கொஞ்ச நேரம் கழிச்சு போலாம்"



"முடியுமா முடியாதா?"



"வா...." என்றவன் கடவுள் விட்ட வழியென்று அவளை கூட்டிச் செல்ல தலையை பிடித்துக் கொண்டு தொப்பென அமர்ந்து விட்டான் ஆரவ்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க கெளம்புங்கண்ணா....நா பாத்துக்குறேன்"

"இல்ல ரிக்ஷி....நானும் வர்றேன்"

"தேவயில்ல..." வெடுக்கென வந்து விழுந்த வார்த்தைகளில் அதிர்ந்து போனான் வருண்.

"ரிக்ஷி....எதுவா இருந்தாலும் பேசி..."என முடிக்கவில்லை விரக்தியாய் சிரித்தவள் அவனை கையமர்த்தி தடுத்துவிட்டு உள்ளே செல்ல ஸ்டீரிங் கியரில் தலையை வைத்து படுத்தான் வருண்.

ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ் கீழ் தளம்.....

ஹரிஷ் கண்விழித்து மலங்க மலங்க விழிப்பதை கண்ட அனன்யாவுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

சுழல விட்ட பார்வை இராமநாதனை கண்டு நிலைகுத்தி நிற்க அவனையே பார்த்திருந்த ரிஷியின் கண்களில் பழிவெறி மின்னியது.

"தோ பாரு மாறா....ப்ளீஸ் பண்ணி என்ன விட்டுடு....எனக்கு என் பொண்ண பாக்கனும்...என் பொண்டாட்டிய ஒரு தடவ பாத்துட்டு வந்துட்றேன்...." அவரின் திடீர் கெஞ்சலில் நெற்றி சுறுக்கினாலும் அந்த நேரம் அவன் நாக்கில் சனி வந்து ஒட்டிக் கொண்டது என்றுதான் கூற வேண்டும்.....

"உன் பொண்டாட்டியும் பொண்ணும் செத்தே போனாலும் இங்க இருந்து உன்னால நகரக் கூட முடியாது மிஸ்டர்.மாமா..."

அவ்வளவு கொடூர மனதா தன்னவனுக்கு???

பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த அஷ்வினிக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றியது.

கண்ணாடி வழியாக அவள் வருவதை கண்டு கொண்டவர் வேண்டுமென்றே அவ்வாறு பேச அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவன் அவளை கண்டிருக்க வாய்ப்பில்லை....

"மாறா ப்ளீஸ் என்ன விட்டுடு....நீ சொல்றத நா கேக்குறேன்....என் பொண்டாட்டி கிட்ட ஒரே ஒரு தடவ நா பேசனும்"

"நடிகன்டா நீ.....இப்போ யார பாத்து நடிச்சுகிட்டு இருக்க?" என்றவனுக்கு முன்னால் வந்து நின்ற தன் மனையாளைப் பார்த்தவன் இருக்கையிலிருந்தே எழுந்துவிட்டான்.

கதிருக்குமே அவளை அங்கே கண்டது சற்று அதிர்ச்சி தான் என்றாலும் அவள் எப்பிடி இங்கே வந்தாள் என்பதிலேயே நின்றுவிட்டது அவன் மூளை....

"அஷு...."அவன் உதடு அதிர்ச்சியில் முணுமுணுக்க அவனை வெறுப்புடன் பார்த்தவள் தன் தந்தையையும் திரும்பிப் பார்த்தாள்.

அடிபட்டு முகமெல்லாம் வீங்கிப் போய் வாயிலிருந்து இரத்தம் வந்து கொண்டே இருந்தது.

"அஷு...நீ முதல்ல இங்க இருந்து போ....நா ஒனக்கு அப்பறமா எல்லாதயும் சொல்றேன்" என்றவனையே பார்த்திருந்தவள் கதிரின் கையிலிருந்த துப்பாக்கியை சட்டென பறித்து தன் நெற்றிப் பொட்டில் வைக்க அவளின் திடீர் செய்கையில் அவன் உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.

"அஷூ...என்ன பண்ற...முதல்ல அத கீழ போடு"

"என் அப்பாவ இப்போ விடலனா என்ன உயிரோட பாக்க முடியாது சொல்லிட்டேன்"

"ஓ...ஓகே ஓகே நா நா விட்டுட்றேன்... நீ நீ முதல்ல அத வை...."
வார்த்தைகள் தந்தியடித்ததை பார்த்த இராமநாதனின் உதடு ஏளனமாய் சிரித்தது.

"என் அப்பா நடிகன் இல்ல....நீதான் நடிகன்....நா செத்துப் போனா கூட இவர விட மாட்டேன்னு சொல்லிட்டு....இப்போ எதுக்காக பதற்றப்படுறா மாறி நடிக்கிற மிஸ்டர்.மாறன்?" என்றவளை அதிர்ந்து பார்க்க மட்டுமே முடிந்தது அவனால்.....

"கதிர்....அவர விடு" என்றவன் மீண்டும் அவள் புறம் திரும்பினான்.

"நீ சொன்னா மாறி நா அவர விட்டுட்டேன்...இப்போ துப்பாக்கிய கீழ இறக்கு ப்ளீஸ்"

"இறக்கலன்னா....?"

"அஷு ப்ளீஸ்டா....உன் கோவம் எனக்கு புரியுது....பட் ப்ளீஸ் உயிரோட விளயாடாத....இப்போ நீ மட்டும் இல்ல....நம்ம குழந்தையும் இருக்கு"

"அதானே பாத்தேன்...என்னடா நடிப்பு ரொம்ப பலமா இருக்கேன்னு.... இப்போ தானே புரியுது.... உள்ள உன் புள்ள இருக்குறதால பதர்றன்னு....நீ கவலப்படாத மிஸ்டர்.மாறன் உன் புள்ளய நா எதுவும் பண்ண மாட்டேன்....அப்பிடியே ஏதாவது ஆச்சுன்னாலும் என் உயிரக் குடுத்து உன் புள்ளய உன்கிட்ட ஒப்படச்சிட்றேன்" என்றாள் விரக்தியாய்....

"ஏய் என்னடி பேசுற....நம்ம குழந்தடி அது..." அவனுக்கு தொண்டை அடைத்தது.

"நோ...நம்ம குழந்த இல்ல....உன் குழந்த...."

"அஷு....ப்ளீஸ்டா...நீ முதல்ல அத கீழ வை....நாம அப்பறம் பேசிக்கலாம்"

"...."

"ப்ளீஸ் கண்ணம்மா...."
என்றவனது அழைப்பில் உருகிய மனதை கடிவாளமிட்டு அடக்கியவள்

"நீ இனிமே என் பேர அப்பிடி அழக்க கூடாது"

"சரிடா...நா சொல்ல மாட்டேன்....பட் ப்ளீஸ் அத கீழ போடுடி"

"ப்ச்....சும்மா பாசம் இருக்குறா மாறி நடிக்காத....நா அத நம்பின காலம் முடிஞ்சு போச்சு....அதான் உன் புள்ளக்கி எதுவும் ஆகாம நா பாத்துக்குறேன்னு சொன்னேன்ல அப்பறமும் என்ன?"

"அஷு ப்ளீஸ்டி"

"என் பேர அப்பிடி கூப்புட்றதும் எனக்கு பிடிக்கல"

"...."

"இனிமே என்ன நீ ரிக்ஷிதான்னு தான் கூப்புடனும்....அதுக்கு ஓகே சொன்னாதான் நா துப்பாக்கிய தூக்கிப் போடுவேன்"

"ஓகே...நீ சொல்றா மாதிரியே பண்ணிட்றேன்...." என்றவனின் குரலில் என்ன இருந்ததென்று அவளால் வழமைப் போல் கண்டு பிடிக்க முடியாமலே போயிற்று....

துப்பாக்கியை தூக்கி தூரப் போட்டவள் ஓடிச் சென்று தன் தந்தையை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு வெளியேற அவளையே வெறித்தான் ரிஷிகுமார் தேவமாருதன்!!!

ஒற்றை நம்பிக்கையில்லா வார்த்தை போதுமே உரவை சிதைக்க!!!

***

ஏர்போர்ட்.....

கண்களிலிருந்து விடாமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்க கூட உணர்வற்று இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் முன் நிழலாட திடுக்கிட்டு விழித்தாள் யாழினி.

அங்கே ருத்ரமூர்த்தியாய் அவளவன்!!!

இருக்கையிலிருந்து சடாரென எழுந்தவள் அவன் விட்ட அறையில் மீண்டும் தொப்பென அமர்ந்தாள்.

அவளின் தோல் புஜத்தை பிடித்து எழுப்பியவன்

"என்னடி நெனச்சிகிட்ருக்க உன் மனசுல...நா சொன்னத தப்பா புரிஞ்சிகிட்டு என்ன விட்டு போக முடிவெடுத்துட்டல்ல... எப்பிடிடி மனசு வந்துது என்ன தவிக்க விட்டு போக....இடியட்"

"...."

"என்ன விட்டு போகனும்னு நெனச்ச...கொன்னுடுவேன்...வா என்கூட" என்றவன் அவளை தரதரவென இழுத்துக் கொண்டு போக தன் பலத்தையெல்லாம் திரட்டி அவனை உதறித் தள்ளி விட்டாள்.

"என்ன எந்த உரிமைல 'டி' போட்டு பேசினீங்க விஷ்வா?"

"பேசாம வா"

"நா எதுக்காக வரனும்?"

"அப்பிடியே அப்பிடுவேன் பாத்துக்க"

"உங்களுக்கு என் மேல கை வெக்கிற உரிமை யாரு குடுத்தது?"

"ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன்... பிபிய ஏத்தாம வா என்கூட"

"முடியாது....நீங்க சொல்லி நா ஏன் கேக்கனும்"

"யாழினி....இதுக்கு மேல பேசின அவ்வளவுதான் சொல்லிட்டேன்"

"இதோ பாருங்க மிஸ்டர்.விஷ்வா உங்க அதிகாரத்த உங்க பொண்டாட்டியோட நிறுத்திக் கோங்க"

"பொண்டாட்டியோட தானே நிறுத்திக்கலாம்...." என்றவன் சட்டென அவளை தூக்கிக் கொள்ள

"விடுங்க விஷ்வா...எதுக்காக பொறுக்கி மாறி பிஹேவ் பண்ணிகிட்டு இருக்கீங்க?" என்று திமிரியவளை கூர்ந்து பார்த்தவன் அவளை இறக்கிவிட்டு விட்டு

"உன் கண்ணுக்கு நா பொறுக்கி மாதிரி இல்லன்னாதான் சந்தேகப்படனும்"

"அது நா ஏதோ..."

"போடி...."என கை காட்டியவன் விறுவிறுவென்று சென்றுவிட மனதை அடக்கியவள் மும்பைக்குப் பயணமானாள்.


ஹாஸ்பிடல்....

"டேய் மச்சான்...." தோளில் கை வைத்தவனை இறுக்க கட்டியணைத்து கதறினான் ஆரவ்.

"மச்சான் என்டா இது....சின்ன பசங்க மாதிரி பிஹேவ் பண்ணிகிட்ருக்க... முதல்ல அழுகய நிறுத்துடா.... அப்போதானே என்ன பண்ணலாம்னு யோசிக்க முடியும்"

"எல்லாம் போச்சு...இதுக்கு மேல என்ன யோசிக்க இருக்கு"

"ஏன்டா இப்பிடில்லாம் பேசுற... பாத்துக்கலாம் விடுடா"

"முடியலயேடா....அவ பாத்த பார்வ எனக்கு எப்பிடி இருந்துது தெரியுமா?"

"மச்சி ப்ளீஸ்"
அவனுக்குமே கண்கள் கலங்கி விட்டது.

"அஷ்விய பத்தி நமக்கு நல்லாவே தெரியும் மச்சி....அவக்கு அப்பான்னா உசுரு....அவர பத்தி யாரு என்ன சொன்னாலும் நம்ப மாட்டா"

"...."

"போச்சு...எல்லாம் போச்சு....அந்த துரோகி பேசும் போது இவ கண்ணால பாத்திருக்கனும்டா"

"மச்சான் விட்றா பாத்துக்கலாம்...."

"மச்சி...அண்ணா" என அதிர்ந்தவன் தூரத்தில் இராமநாதனுடன் அஷ்வினியும் அஜய்யும் வருவதை கண்டவன் இன்னும் அதிர்ந்து போனான்.

'இவர் எப்பிடி...அப்போ அண்ணா எங்க...என்ன நடந்திருக்கும்'

ஆரவ்வின் கண்கள் போன திசையில் தானும் பார்த்த சித்தார்த்திற்கும் அதே கேள்விகளே வந்து போக இனுவரும் ஒரு சேர எழுந்து நின்றுவிட்டனர்.

"அப்பா மெதுவா வாங்கப்பா...."
அவரின் வேகத்திலேயே அவளும் நடந்து வந்தாள்.

அஜய்யின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்ததை கண்டவர்களுக்கு விஷயம் தவறாக புரியப்பட்டிருப்பது புரிந்து போனது.

ஏதோ பேசப்போன ஆரவ்வின் கையை அழுத்திக் கொடுத்தவன் வேண்டாம் என தலையாட்ட அப்படியே அமைதியாகி விட்டான்.

அவர்கள் மூவரும் இருவரை நெருங்கவும் கயலும் ஈஷ்வரியும் வெளியே வரவும் சரியாக இருந்தது.

இதற்குமேல் தாமதிப்பது கூடாதென்று தோன்றவே சித்தார்தை கூட்டிக் கொண்டு ஓடியவனை பார்த்தவளின் உதடு கேலியாய் வளைந்தது.


ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....

கண்களை இறுக்க மூடியபடி நின்றிருந்தவனை கலைத்தாள் அனன்யா....

"ஏன் ஹரிஷ்....நம்ம ஹீரோவுக்கும் பொண்ணுங்களுக்கும் செட்டே ஆகமாட்டேங்குதுல்லடா....எதுக்கும் தோஷம் இருக்கான்னு பாத்துட்டு வந்துட சொல்லனும்...."

"ஒரு பொண்ணு வேற ஒருத்தன் பொண்டாட்டின்னு தெரியாம அவகூட இருந்தான்....இன்னொரு பொண்ணு அப்பாவுக்காக அவனையே தூக்கி எறிஞ்சிட்டா.... அவ்வளவு நம்பிக்க....." என சொல்லி விட்டு அனன்யாவுடன் சேர்ந்து சிரிக்க அவனின் முகம் உணர்ச்சிகளை துடைத்து அவர்களை வெறித்தது.

ஹரிஷ் சொன்ன வார்த்தைகளிலுள்ள உண்மை அவன் இதயத்தை சரியாக சென்று தாக்கியது.

'உனக்கு நா நம்பிக்க இல்லாதவனா பொய்ட்டேன்ல அஷு....என் அன்பயே சந்தேகப் படுறியேடி.... என் அன்பு... காதல்லாம் உனக்கு நடிப்பா தெரியுற அளவுக்கு உன் மனசுல நான் அவ்வளவு தரம் தாழ்ந்து பொய்ட்டேனா?'

அவன் மனம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வாளா அவன் மனையாள்????!!!

"ஹரிஷ்....என்னடா நடக்குது.... இவ்வளவு நேரம் நம்ம முன்னாடி தெனாவட்டா திமிரா இருந்த ஆர்.கே யா இது?"

"ச்சே...ச்சே...இது அவரு இல்லடி.... இப்போ இருக்குறது வாழ்க்கைல தோத்துப் போன ஒரு சாதாரண மனுஷன்" என்று வலிக்க வலிக்க குத்தியவன் ரிஷியின் கண்களில் கண நேரத்தில் வந்து விட்டு போன வலியை துல்லியமாக கண்டு கொண்டான்.

கண்களில் பழி வெறி மின்ன

"அட பழைய ஆர்.கே மொத்தமா மாறிட்டான்ல நெனச்சேன் அனு.... அது தப்பு போல இருக்கே?"

"என்னடா சொல்ற...ஒழுங்கா சொல்லித் தொலடா?"

"அது..."என இழுத்தவன் ரிஷியின் முகத்தை பார்க்க அது கோபத்தில் சிவந்திருந்தது.

அதில் சொல்ல வந்ததையே மறந்து போனவன் அவனையே பார்க்க முதலில் இருந்தவாறே சாய்ந்து காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தவன் அமைதியாக இருந்த கதிரிடம் கண் காட்ட தலையசைத்தவன் எங்கோ சென்று திரும்பி வரும்போது அவன் கையில் ட்ரில்லர் மிஷின் இருந்ததை கண்டவர்களுக்கு உடல் தூக்கிவாரிப் போட்டு பயத்தில் வியர்த்து வழிந்தது.

அவர்களின் உடல் வெளிப்படையாக நடுங்குவதை கண்டவன்

"கதிர்....ஆரம்பிக்கலாமா..?"

"எஸ் சார்...." என்றவன் அவர்களை நெருங்க அடியெடுத்து வைக்க பயத்தில் அதற்குள் அலறத் துவங்கிவிட்டனர்.

"ப்ளீஸ் ஆர்.கே....விட்டுடு ப்ளீஸ்...." எனவும் தலைசாய்த்துப் பார்த்தவன்

"கதிர்....கெஞ்சுறது பத்தலல....?"

"...."

"இன்னும் கொஞ்சம் முன்னால போ"

"வேணாம் ஆர்.கே ப்ளீஸ்....எங்கள விட்டுடு....ப்ளீஸ்...நீ சொல்றத நாங்க பண்றோம்...."

"இது....இதுதான் வேணும்...."

"...." "..."

"கதிர் இவங்கள விட்டுடு...அவங்க நண்பன காப்பாத்தனும்ல?"என கேட்டவனை பார்த்து அதிர்ந்தனர் இருவரும்....

"அப்...அப்போ நீ காட்னது பொய் இல்லயா?"

"நீ இவ்வளவு அப்பாவியா?" என கேட்டவன் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பது போல் எழுந்து சென்றுவிட்டான்.



இரவு.....

ஹாஸ்பிடல்.....

தன் கணவனை கண்ணால் கண்டுவிட்ட பிறகே அவர் உடல் தேறியது என்றே கூற வேண்டும்....

கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி தன் தாயையும் தந்தையையும் பார்த்துக் கொண்டிருந்த அஷ்வினியை அருகில் அழைத்தார் விஜயலக்ஷ்மி....

"என்னம்மா ஏதாவது வேணுமா?" எனவும் மறுப்பாக தலையசைத்தவர்

"நீ வீட்டுக்கு கெளம்பு அஷ்வா...."

"இல்லம்மா நா இங்கேயே இருக்கேன்"

"அதான் இவ்வளவு பேரு இருக்காங்கல்லடா நீ போ"

"அம்மா ப்ளீஸ் உன் கூடவே இருக்கேனே"

"இல்லடா அது சரி வராது...நீ கெளம்பு" என்றார் பிடிவாதமாக....

"அம்மா இன்..."

"அதான் அம்மா சொல்றால்ல அஷ்வினி.... டயர்டா இருப்ப போய் ரெஸ்ட் எடு"என்றார் போலி அன்புடன்....

அப்பா பேச்சுக்கு மறு பேச்சு இதுவரை பேசியிராதவள் சம்தமாய் ஆட்டிவிட்டு

"நா நம்ம வீட்டுக்கு போறேன்மா" என்றாள் கடுமையாய்...

அவள் கூற்றில் அதிர்ந்தவர்
"அஷ்வா....தம்பி கூடதான் நீ இருக்கனும்" என கண்டிப்புடன் சொன்னவரை பார்த்து தன் தந்தையையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தவள் கசப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டாள்.

அவ்வளவு நேரம் வேறு ஏதோ யோசனையில் உழன்று கொண்டிருந்த வருண் கயலையும் அழைத்துக் கொண்டு தானும் வெளியேறினான்.

அவர்களை வீட்டில் இறக்கி விட்டவன் எவ்வளவு கெந்சியும் மறுத்துவிட்டு திரும்பவும் காரில் ஏறப் பொனவனின் கண்களில் பட்டான் தோட்டத்தில் இருந்த ரகு.....

'இவன்....ரகு மாதிரி இருக்கே?'
யோசித்துக் கொண்டே நெருங்கியவன் அது ரகுதான் என்பதை அறிந்து அசையாது அப்படியே நின்றுவிட அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்த ரகுதான் அவனிடம் விரைந்து வந்தான்.

"மச்சான்....எப்பிடிடா இருக்க?" என்றுவிட்டு தாவி அணைத்துக் கொள்ள அவனை உதறியவன்

"ஏய் எதுக்குடா இங்க வந்திருக்க.... யாரு உன்ன உள்ள விட்டது....சிகியூரிட்டி...." என கத்தப் பொனவன் ரகுவின் கண்கள் கலங்கியிருப்பது கண்டு அப்படியே வாயை மூடிக் கொண்டான்.

"நா ஆர்.கேய கொல்ல வந்திருக்கேன்னு நெனச்சியா வருண்?"

"...."

"நா ஆர்.கே கூட தான் இங்க வந்தேன்டா....."
என்றவன் நடந்ததனைத்தையும் மறைக்காமல் கூற கண்கள் கலங்க அணைத்துக் கொண்டான் தன் ஆருயிர் நண்பனை...



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....

மூச்சு வாங்க வந்து நின்றவர்களை குழப்பத்துடன் பார்த்தான் கதிரவன்.

"கதிர்....அண்...அண்ணா எங்க?"

"அவரு அப்போவே கிளம்பி பொய்ட்டாரே சார்"

"வாட்...என்னன்னா சொல்றீங்க.... வீட்ல இல்லயே?"

"இங்கேயும் இல்ல சார்....பாஸ் அப்போவே கெளம்பிட்டாரு"

"கதிர் நாங்க ஹாஸ்பிடல்ல இருக்கும் போது என்ன நடந்துது?"

நடந்ததை வேதனையுடன் கூறி முடிக்க

"வாட்....அனன்யாவையும் ஹரிஷையும் எதுவும் பண்ணாம விட்டுட்டாரா?"
அதிர்ந்து கேட்டான் சித்தார்த்....

"ஆமா சார்....பாஸ் ஏன் அப்பிடி பண்ணாருன்னு எனக்கும் தெரில"

"இட்ஸ் ஓகே கதிர்...அண்ணா அவங்க வார்த்தைகள்ல தான் டிஸ்டர்ப் ஆகியிருக்கனும்னு நினக்கிறேன்...எனிவேய்ஸ் நாங்க பாத்துக்குறோம்...தேங்க்ஸ்...."
என்றவர்கள் அவசரமாக வெளியேறி விட்டனர்.

.....

ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலலைகளை வெறித்தபடி அமர்ந்திருந்த ரிஷியின் இரு பக்கத்திலும் தொப்பென வந்தமர்ந்தனர் வருணும் ரகுவும்....

அரவம் உணர்ந்தும் அதே நிலையில் இருந்தவனிடம்

"என் அப்பா என்ன தப்பு பண்ணாரு ஆர்.கே?" என்ற வருணின் கேள்வியில் விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்க்க

"என்னடா பாக்குற....உன்ன பத்தி எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டியா.... அப்பாவ விட உன்னத் தான்டா நா அதிகமா நம்புறேன்" என்றவனை இறுக்க தழுவிக் கொண்டவனின் கண்கள் கலங்கிப் போய் இருந்தது.

"இப்போ சொல்லு அப்பா என்ன தப்பு பண்ணாரு..... எவ்வளவோ வாழ்க்கைல தாங்கியிருக்கேன்டா... நீ சொல்லப் போறது என்ன பாதிக்காது....சொல்லு மச்சி..."

"இல்ல வேணாண்டா...விடு"

"பரவால்ல சொல்லு மச்சான்"

"அது....உன்..."

"ரகு...இங்கப் பாரு நம்ம ஆர்கேக்கு வார்த்த தந்தியடிக்குது"

"வீடியோ பண்ணியே ஆகனும் மச்சான்"
என்றவனை முறைத்தவன்

"நீங்க கெளம்புங்கடா...."
என்றான் சங்கடமாய்....

தான் சொல்லும் விடயம் வருணின் சிரிப்பை அடியோடு அழித்து விடுமென்பதை அறியாதவனா அவன்????

"அப்போ நீ சொல்றதா இல்ல.... என் மேல நம்பிக்க இல்லல?"

"அப்பிடியில்லடா"

"...."

"அது உன் அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி இருந்திருக்காரு.... அவர் பொண்ணு தான் அக்ஷயா...அவள கொன்னுட்டேன்னு தான் என் மேல கொல முயற்சி நடந்திருக்கு" விடயத்தை போட்டு உடைத்தவன் வருணின் முகத்தை கண்டு அதிர்ந்துதான் போனான்.

தொடரும்.....

08-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 46 [ A ]



தான் சொன்ன விடயத்தில் அதிர்ந்து போவானென்று நினைத்ததற்கு மாற்றமாக சிரித்துக் கொண்டிருந்த நண்பனை பார்த்து நெற்றி சுருக்கினான் ரிஷி.



அது கசப்பான புன்னகையாக இருந்ததென்பதில் அவனுக்கு சந்தேகமே இல்லை...



கண்களில் அப்பட்டமாக வலி தெரிந்தாலும் அதை புன்னகையால் மறைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து சட்டென மூளையில் மின்னல் வெட்ட



"மச்சி...உனக்கு....?"



"ஏற்கனவே தெரியும்டா"



"வாட்?"



"நா அப்பா கூட கோவிச்சு கிட்டு வீட்ட விட்டு போனேன்னு நினக்கிறியா?"



"பின்ன?" இடையிட்டான் ரகு....



"நா வீட்ட விட்டு போக முதல் காரணமே அவர்தான்டா"



"என்னடா ஒளர்ற?" புரியாமல் கேட்டான் ரிஷி.



"நா அப்பாவ அந்த பொண்ணு கூட ஒரு தடவ பாத்திருக்கேன்டா.. அப்போல்லாம் இந்த அளவுக்கு இருக்கும்னு நெனக்கிற பக்குவம் கிடயாது.... நா திரும்ப வீட்டுக்கு வந்தப்போ கூட எனக்கு எதுவுமே ஞாபகத்துல கூட இல்ல.... அப்பாங்குற பாசம் கண்ண மறச்சிடுச்சு....உன் கேஸ் பத்தி ஆரு கூட பேசிட்டு வந்ததுக்கு அப்பறம் ஒரு நாள் கேஸ் பைல்ல அக்ஷயாவோட அம்மா போட்டோ பாத்தேன்...."



"...."



"அவங்கள இதுக்கு முன்னாடி எங்கேயோ பாத்தா மாறி இருந்தாலும் சட்டுனு நினைவு வராம போயிடுச்சு... அப்பறம் வீட்ல இருக்கும் போது ஒரு தடவ அப்பா யாருக்கும் தெரியாம வெளியில போறத பாத்தேன்...அப்போ கூட எனக்கு எதுவுமே தோனல...பட் அவர பத்தின சந்தேகம் மனசுல அரிச்சிகிட்டே இருந்துது.... உனக்கு கொல முயற்சி நடந்ததுக்கு அடுத்த நாள் நாங்க நாலு பேரும் கேஸ திரும்பவும் அலசினோம்"



"நாலுன்னா....?"

மீண்டும் இடையிட்டான் ரகு...



"நான் ஆரு...சித்து...அப்பறம் மதன்"



"சோ...நீயும் அவங்க கூட கூட்டு இல்லயா?" குற்ற உணர்ச்சி தலை தூக்க அவனை ஊடுறுவியது ரிஷியின் கழுகுப் பார்வை....



"அது...இல்லடா...வந்து ஆமா...மச்சி....இத பத்தி அப்பறம் பேசிக்கலாம்டா..."



"..."



"அக்ஷயாவோட அம்மாவ பத்தி மறுபடியும் யாருக்கும் தெரியாம தேட ஆரம்பிச்சப்போ தான் எனக்கு அவங்க யாருன்னு ஞாபகம் வந்துது.... அப்பாவ ஃபாலோ பண்ணி போனேன்...தப்புன்னு கூட தோனிச்சு மச்சான்...பட் மனசு கேக்கல....அப்பொதான் அ...அ..அவரு..."

கண்ணிலிருந்து கண்ணீர் கொட்ட தான் ஆண்மகன் என்பதையும் மறந்து அழுதவனை இறுக்க அணைத்தான் ரிஷிகுமார்....



"எனக்கு எப்பிடி இருந்துது தெரியுமா மச்சி...?"



"வேணாம் விடுடா"



"அப்பா மூஞ்ச கூட அதுல இருந்து பாக்குறத நிறுத்திட்டேன்... அம்மா...அ... அம்மாக்காக தான் எனக்குள்ளயே புழுங்கிகிட்டு அமைதியா இருந்துட்டேன்டா...என் சுயநலம் தான் எல்லாதுக்கும் காரணமா ஆயிடுச்சு....அம்மா மனசுக்காக அன்னக்கி சொல்லாம விட்டுருக்க கூடாதுடா...."



"போதும் மச்சான்"



"அம்மாகிட்ட நா சொல்லிட போறேன்டா....என்னாலதான் உனக்கு இந்த நிலம"



"அப்பிடியெல்லாம் எதுவும் இல்ல சும்மா இருடா"



"பொய் சொல்லாத மச்சான்.... காலைல அஷ்வினி எப்பிடி நடந்துகிட்டான்னு கதிர் என்கிட்ட சொல்லிட்டான்" எனவும் தன்னவள் நினைவில் சாதாரணமாக இருந்த அவன் முகம் இறுகிப் போனது.



"நா பண்ண தப்ப நானே சரி பண்ணிட்றேன்டா"என்று விட்டு எழப்போனவனை இழுத்து அமர வைத்தவன்



"இந்த விஷயத்த எந்தவொரு சூழ்நிலையிலயும் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்னு ரெண்டு பேரும் என் மேல சத்தியம் பண்ணுங்கடா " என கையை நீட்டியவனைப் பார்த்து உறைந்து போயினர் வருணும் ரகுவும்....



***



வானத்து நிலவை வேறித்த படி கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு நின்று கொண்டிருந்தாள் அக்காரிகை....



மனதிற்குள் பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தாலும் அதை முகத்திற்கு காட்டாமல் மறைக்கும் கலையை தன் கணவனிடமிருந்து சரியாகவே கற்றிருந்தாள் அவள்....



தன் வயிற்றை மெதுவாக வருடிக் கொடுத்தவளுக்கு ஏனென்றே தெரியாமல் தன்னவன் மீதே கோபம் திரும்பியது.



"கண்ணா...உன் அப்பா மாறி உனக்கும் என்ன புடிக்காம போயிடுமாடா....உன் அப்பாக்கு ஏன்டா என்ன புடிக்காம போச்சு.... முதல்ல இருந்தே புடிக்கலதான் போல...நான்தான் மடச்சி மாதிரி உன் அப்பாவ டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருந்திருக்கேன்... அதான் எல்லாம் போதும்னு கடவுளே நெனச்சிட்டார் போலடா....

அதனாலதான் இன்னக்கி எல்லாத்தயும் தெளிவாக்கிட்டார்" வெளிப்படையாக தன் மகவிடம் பேசிய அந்தத் தாயின் குரல் கேட்டோ என்னவோ அவளவனின் குழந்தை முதன் முறையாக அவளை ஓங்கி உதைத்து தன் இருப்பை வெளிப்படுத்த சிலிர்த்து அடங்கியது அவள் தேகம்!!!



"ஏய் கண்ணா...நா பேசுறது கேக்குதாடா ஒனக்கு....உன் அம்மாவ உணர்றியா நீ?" சந்தொஷத்தில் துள்ளிக் குதித்தவளின் அருகில் போய் நிற்க முடியாத தன் கையாலாகாத தனத்தை வெறுத்தவன் வந்த சுவடே தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.



தன் சந்தோஷத்தை தன்னவனிடம் பகிர்ந்து கொள்ள துடித்த மனதை அடக்கியவளுக்கு எவ்வளவு முயன்றும் அழுகையை மட்டும் கட்டுப் படுத்த முடியாமலே போயிற்று....



***



"ஆரு ஏன்டா ஒரு மாதிரியா இருக்க?"



"ப்ச்...ஒன்னில்லடி"



"அத்தான் கூட பேசினியா?"



"ம்...ஆமா இப்பொதான் நானும் சித்துவும் பேசிட்டு வர்றோம்"



"அப்போ அத்தான்?"



"அவரும் என்கூடதான் வந்தாரு"



"டேய் ரகு அண்ணாவ பாத்தியா....?"



"ஆமாடி....அண்ணா நடந்தது எல்லாம் சொன்னாரு.... அண்ணா... நான் வருண் அண்ணா ரகு அண்ணா அப்பறம் சித்து எல்லோரும் சந்திச்சிட்டுதான் வர்றோம்.... வருண் அண்ணாவும் சித்துவும் வீட்டுக்கு கெளம்பிட்டாங்க....ரகு அண்ணா கீழ இருக்குற ரூம்லதான் இருக்காரு....

அண்ணா இப்போ தான் ரூமுக்கு போனாங்க"



"ஓ...ஓ..."



"அப்பறமும் எதுக்குடா மூஞ்ச தொங்க போட்டுகிட்டு இருக்க.... நல்லதே நடக்கும்னு நம்பிக்க வைடா...."



"ஏன் அம்மு....உன்கிட்ட உன் அப்பாவ யாரு கடத்தினாங்கன்னு அஷ்வினி ஏதாவது சொன்னாளா?"



"இல்லயே ஏன்டா?"



"இல்ல சும்மாதான்"



"நீ எதுக்கு அக்காவ பேரு சொல்லி கூபபுட்ற?"சட்டென சந்தேகம் துளிர்விட்டது அவளுக்குள்....



"பேரு கூப்புட்றதுக்காக தானே வெச்சிருக்காங்க" என்றான் வெடுக்கென....

"நீ தூங்கு அம்மு...இத பத்தி நாம பேச வேணாம்"



"பட்...."



"தூங்குடி"



"மாட்டேன்"



"அடம் புடிக்காத அம்மு ப்ளீஸ்டி..."



"இல்ல என்னமோ நடந்திருக்கு....

என்னன்னு சொல்லு?"



"ஒன்னில்ல அம்மு"



"பொய் சொல்லாத ஆரவ்... அப்பாவ இதுநாள் வர மாமான்னுதானே கூப்ட... இப்போ என்னாச்சு?"



"ஏன் இப்போ என்ன?"



"உன் அப்பான்னு சொன்ன?"



"இல்லயே... நா அப்பிடியா சொன்னேன்"



"ஆரவ்....நடிக்காதடா"



"ஒரு பிரச்சினயும் இல்ல அம்மு குட்டி....நீ எதுவும் குழப்பிக்காம தூங்கு"



"அப்போ நீ சொல்ல மாட்ட அப்பிடித்தானே?"



"அதான் சொல்றேன்ல அம்மு..."



"என்கூட பேசாத"



"அம்மு ப்ளீஸ்டி...."

என்றவன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி தவிப்பாய் பார்த்தான்.



அவன் கண்களில் தெரிந்த தவிப்பில் உருகிப் போனவள் அவனை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் தாய்பாசம் ஊற்றெடுக்க....



"ஏய் என்னாச்சுடா எதுக்கு அழற?" சட்டென தன்னிலிருந்து பிரித்து அவன் முகம் ஏந்த மறுப்பாய் தலையசைத்தவன் அவளை மீண்டும் கட்டிக் கொண்டான்.



அவன் முதுகை ஆதரவாக வருடிவிட்டவளின் காதலில் இன்னுமின்னும் அழுகை கூடியது அந்த ஆறடி ஆண்மகனுக்கு....



"சாரிடி...."



"முதல்ல நீ அழறத நிறுத்து.... டேய் என்னடா?"



"ஐ அம் சாரி அம்மு....என்னால முடிலடி"



"என்னதான்டா ஆச்சு உனக்கு.... இப்போ நிறுத்துறியா இல்லயா?"

"ஆரு..." என அழுத்தமாக அழைத்தவள் அவனை மீண்டும் தன் முகம் காணச் செய்து அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தன் மடியில் படுக்க வைத்து அவனின் தலை கோத தன்னவளின் பரிவில் மெதுவாக கண்களை மூடினான் ஆரவ் தேவமாருதன்....



***



தன் முன் பெட்டியுடன் வந்து நின்ற யாழினியை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் வெளியில் முறைத்துவிட்டு அவளை மேலும் ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட அவள் பின்னாலேயே சென்றாள் அவள்...



'என்ன முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கு...ஒரு வேல அண்ணா லவ்வ அக்ஸப்ட் பண்ணியிருப்பாங்களோ'



"ரித்து..."



"...."



"சாரி..."



"...."



"அதான் சாரி சொல்றௌன்லடி" என்றுவிட்டு அருகிலிருந்த தலையணையைத் தூக்கி வீசி அடிக்க அதை லாவகமாக கேட்ச் பிடித்தவள் அவளுக்கே திருப்பி அடித்து விட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.



அவள் முன்னே வந்து நின்றவள் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்பு கரணம் போட ஆரம்பிக்க பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.



"எட்டு....ஒன்பது....பத்து...." என எண்ணவும் ரித்துவின் முகத்தில் புன்னகை அரும்ப மீண்டும் சில பல அடிகளை பரிசாக கொடுத்தவள் அவளை கட்டிக் கொண்டாள்.



"ம் என்னங்க மேடம்....உன் ஆளு லவ்வ அக்ஸப்ட் பண்ணிக்கிட்டாரா பல்பு பிரகாசமா எரியுது?"



"இல்ல...."



"அப்பறம்?"



"விஷுவும் என்ன லவ் பண்றாருங்குறத புரிஞ்சுகிட்டேன்"



"வாவ்..."என ஆர்ப்பறித்தவள் அவளை அணைத்து விடுவித்தாள்.



"சொல்லு சொல்லு...என்னாச்சு?"

மீண்டும் துள்ளிக் குதித்தாள் ரித்திகா....



"வெயிட் வெயிட்"என்றவள் ஏர்போர்ட்டில் நடந்தது அணைத்தையும் கூறி முடித்து விட்டு



"அவரு கோவிச்சு கிட்டு போனதும் என்னால அங்க இருக்கவே முடில ரித்து....பாஸ்போர்ட் செக்கிங் முடிச்சுகிட்டு இதுக்கு மேல முடியாதுன்னு டிக்கட்ட கிழிச்சு போட்டுட்டு வெளிய வந்துட்டேன்.....

ஓரமா உக்காந்துகிட்டு அழுதுட்டு இருந்தப்போ தான் அவரு சொன்னதுவே எனக்கு ஞாபகம் வந்துது....

'என்ன தவிக்க விட்டு போகனும்னு முடிவெடுத்துட்டலல'ன்னு கேட்டது திரும்ப காதுல கேக்கவும் தான் எனக்கே புரிஞ்சுது ரித்து....தவிப்பு காதலுக்கு மட்டுமே சொந்தமானது...

அது காதலிக்கிறவங்களுக்கு தான் வரும்...விஷு கண்கள்ல எனக்கான தவிப்ப அப்போ நா பாத்தேன்டி....

அதான் கிளம்பி வந்துட்டேன்"



"எதுக்குடி அமைதியா இருக்க?"



"நீ எதுக்காகடி அண்ணாக்கு அப்பிடி சொன்ன?"



"கோபத்துல வந்துருச்சுடி"



"போடிங்..."



"அவரு மட்டும்?"



"இப்போ என்னதான் பண்ண போற?"



"லவ்"



"லூசாப்பா நீ?"



"ஆமாடி லூசாகிட்டேன்"



"யாழி...ஏன்டி படுத்துற?"



"இப்போ என் மேல அய்யா செம்ம காண்டுல இருப்பாரு....அத தனிக்கிறதுக்கு லவ் பண்ண போறேன்"

என்றவள் கலகலத்து சிரிக்க அவளுடன் சேர்ந்து சிரித்தாள் சித்தார்த்தின் ரிதி!!!



***



கடலலையில் கால்கள் நணைய நடந்து கொண்டிருந்தான் ரிஷி....



சற்று முன் தன் மனையாள் பேசிய வார்த்தைகளே அவன் இதயத்தை வாள் கொண்டுஅறுத்துக் கொண்டிருந்தது.



'உன்ன எனக்கு எப்பிடிடி புடிக்காம போகும்...நீ என் உசுருடி....உன்ன ரொம்ப புடிச்சதாலதானே என் கூடவே நீ இருக்கனும்னு எதிர்பாக்குறேன்... அத ஏன்டி புரிஞ்சுக்க மாட்டேங்குற....எந்த இடத்துல என் காதல் சறுக்கிச்சுன்னு சத்தியமா எனக்கு புரியலடி....ஹரிஷ் சொல்றா மாறி நா வாழ்க்கைல தோத்து பொய்ட்டேன் கண்ணம்மா.... உன் நம்பிக்கைக்கு தகுதி இல்லாதவனா தோத்து பொய்ட்டேன்....எனக்கு நீ வேனும்டி...நீ இல்லாம என்னால வாழ முடியாது அஷு....ப்ளீஸ்டி என்ன விட்டு போய்டாத....ஐ லவ் யூ கண்ணம்மா...ஐ லவ் யூ.....' தொப்பென கீழே அமர்ந்தவனின் கண்களிலிருந்து கண்ணீர் போய்க் கொண்டே இருந்தது.



........



அவன் மனையாளை கண்ணால் கண்டே கிட்டத்தட்ட இன்றோடு ஒரு மாதம் ஆகியிருந்தது.



அன்று அப்படி நடந்ததிலிருந்து வீட்டுக்கு கூட போவதே இல்லை அவன்....



அவளைப் பார்த்தால்தானே வலி என்று ஒதுங்கிக் கொண்டவனுக்கு அவளைப் பார்க்காமல் இருப்பது அதை விட அதிக வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.



முகம் கலையிழந்து மழிக்கப்படாத தாடி கண்களில் வலியுடன் வலம் வந்தவனுக்கு அது கூட கம்பீரத்தை தான் கொடுத்து என்றுதான் கூற வேண்டுமோ???



வெளியில் பெயருக்காக சிரித்துக் கொண்டிருப்பவனின் புன்னகை சில நிமிடங்களே நிலைத்திருக்கும்....



வலி....வலி....வலி...



இந்த ஒரு மாத காலத்தில் அவனைத் தவிர அனைவர் வாழ்க்கையும் மாறிப் போய்தான் இருந்தது.



கொஞ்ச நாள் ரிஷியின் மீதிருந்து விழகியிருந்த கோபம் அந்த நாளுக்குப் பிறகு உச்சத்தை தொட்டது அஜய்க்கு....



மனதின் ஓர் ஓரத்தில் இதற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்குமென்று தோன்றியதாலேயே அவனைப் பார்ப்பதையே தவிர்த்து விட்டான்.



இராமநாதன் எப்போதும் போல் தான் இருந்தார்....ஒரே ஒரு மாற்றம்....ரிஷியைப் பார்க்கும் போது மட்டும் ஒரு ஏளனப் புன்னகை ஒன்று மட்டும் உதயமாகிவிடும் பார்த்தாயா என்று....



வருண் அதன் பிறகு யாழினியை தன்னைப் பார்க்க அனுமதி கொடுக்கவே இல்லை....மனதை திறந்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவள் புரிந்து கொண்டு விட்டாள் என்பது அவனுக்கும் நன்றாகவே தெரிந்து தான் இருந்தது.



ஆரவ் கயல் எப்போதும் போலவே தான் இருந்தனர்.



தன் நண்பனின் கம்பெனியிலேயே வேளைக்கு சேர்ந்து அவர்களுக்கு சிரமம் தராது வேறு ப்ளாட்டில் இப்போது இருக்கிறான் ரகு....



எவ்வளவு கெஞ்சியும் அவன் அசைந்து கொடுக்காததால் அவன் போக்கிலேயே விட்டு விட்டான் ரிஷி.



முக்கியமாக ராகேஷின் விடயம் பற்றி அவன் அதற்குப் பிறகு எதுவுமே கேள்விப்படவே இல்லை....



அர்விந்த் ஏற்கனவே அம்மாவின் ட்ரீட்மெண்டுக்காக அமெரிக்கா போயிருந்தவன் அஷ்வினியின் வலகாப்புக்காக வருவதாக இருந்தது.



அட...நம்ம ஹீரோயின பத்தி மறந்தே பொய்ட்டேன் நண்பா....



ரிஷிதின் மனையாளுக்கு இது ஆறாவது மாதம்!!!



மசக்கை படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது ஒருபுறமென்றால் தன்னவனின் விலகல் மறுபுறமென்று ரொம்பவே உடைந்து போயிருந்தாள் பேதை....



அவன் மீது வெறுப்பு இருக்கிறதுதான்... ஆனாலும் சோர்ந்து போகும் நேரத்தில் அவன் மடி தேடும் மனதை என்னவென்று சொல்லித் தேற்றுவது???



மனது பலவீனமாக இருக்க அவள் அதைவிட பலவீனமின்றி மெலிந்து போயிருந்தாள்.



விஜயலக்ஷ்மியும் ஈஷ்வரியும் வாரத்திற்கு மூன்று தடவை வந்து விட்டு போவர்... தவிர.... வருண்,அஜய்,கயலுடன் செக்கப் இற்கு சென்று வந்தாள்.



டாக்டர் ஏசுவது கேட்டு கேட்டு புலித்துப் போய்விட்டது அவளுக்கு.....



"மிஸஸ்.மாறன் உங்க பேபியோட ஹெல்த் ரொம்ப கிரிடிகலா இருக்கு....இப்பிடியே இருந்தீங்கன்னா டெலிவரி ரொம்ப ஆபத்தாகிடும்....அம்மா இல்லன்னா குழந்த... இரண்டு பேருல ஒருத்தருக்கு நிச்சயமா ஆபத்திருக்கு...பீ கேர்புல் ப்ளீஸ்...." காலில் விழாத குறையாக அவரும் எத்தனை தடவை தான் இந்தப் பெண்ணுக்கு எடுத்துச் சொல்வது???



ஆர்.கேயிடம் சொல்லியே தீருவேன் என சொன்னவனின் வாயை சத்தியம் வாங்கியே கட்டிப் போட்டு விட்டாள்.



அஜய்க்கும் கயலுக்கும் கூட இதே நிலமைதான்....



ஆரவ் சித்தார்த் மதன் பேசுவது என்ன அவளைப் பார்ப்பது கூட இல்லை....



அதற்காகவெல்லாம் அவள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை...



கணவனின் விலகளுக்கே அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்றாள் இவர்கள் எம்மாத்திரம்???



கதவு தட்டப்பட்டு அனுமதி வேண்டப்பட தன் சிந்தை கலைந்தான் ரிஷிகுமார் தேவமாறுதன்.



"எஸ் கம் இன்...."



"குட் மார்னிங் சார்"



"ம்...மார்னிங் கதிர்"



"சார்...மல்ஹோத்ரா கூட முக்கியமான மீட்டிங் இருக்கு இன்னக்கி..."



"மீட்டிங் எப்போ ஆரம்பிக்குது கதிர்?"



"எயிட் ஓ க்லாக் சார்"



"ஓகே....நம்ம ஹோட்டல்லயே அரேஞ்ச் பண்ணிரு"



"ஓகே சார்...."



"அப்பறம்....யாரயும் உள்ள விடாத கதிர்...ரொம்ப ஹெடேக்கா இருக்கு"



"வொய் சார்....எனி ப்ராப்ளம்?"என பதறியவனை புன் சிரிப்புடன் பார்த்தவன்



"நத்திங் கதிர்....எனக்கு கொஞ்ச நேரம் தனிம வேணும்....ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிடும்....நீ போ...எண்ட்.....தேங்க்ஸ்..."



"சார் என்ன சார்...நீங்க போய் என்கிட்ட..."



"ஓகே...எயிட் ஓ க்லாக்குக்கு வந்துட்றேன்...."

என்றவன் தன் சுழல் நாட்காலியில் கண்மூடி சாய கவலையாய் வெளியேறினான் கதிரவன்.....



***



"கண்ணா....எப்பிடி இருக்கடா?" தன் மகவிடம் வழமைப் போல் பேசிக் கொண்டிருந்தாள் அஷ்வினி ரிக்ஷிதா...



"நல்லா இருக்கியா.... டாக்டர் உன்னோட ஹெல்த் ரோம்ப கிரிடிகலா இருக்குன்னு சொன்னாங்கடா....அம்மாக்கு ரொம்ப கஷ்டமா இருந்துது தெரியுமா... நானும் ஒழுங்கா இருக்கனும்னுதான் கண்ணா நினைககிறேன்...பட் முடிலடா....

உன்ன பத்திரமா ஒப்படச்சிடுவேன்னு உன் அப்பாக்கு சத்தியம் பண்ணி குடுத்துருக்கேன் கண்ணா...அத சொன்ன மாறி பண்ணனும்ல...அதனால சமத்து பையனா இருக்கனும் சரியா.... நா இப்பிடியே இருந்தேன்னா.... அம்மா இல்லன்னா குழந்த...ஏதாவது ஒருத்தர தான் காப்பாத்த முடியும்னு சொன்னாங்கடா....உன் அப்பாக்கு நீ மட்டும் போதும் இந்த அம்மா வேண்டாம் கண்ணா...."

என்றவளின் பேச்சு கேட்டதோ இல்லையோ இன்று வலிக்கவே உதைத்தது அவளவனின் மகவு...



ஒரு வேலை அவள் பேசியதற்காக கொபித்துக் கொண்டு இருக்குமோ???



"அம்மா..."என கத்தியவள் ஒரு கையால் தன் வயிற்றையும் மற்றைய கையால் கட்டில் விரிப்பையும் இறுக்கப் பிடித்துக் கொண்டாள்....



சற்று நேரம் பிடித்தது அவளுக்கு வலி குறைய....



பெரு மூச்சு விட்டவளுக்கு அழுகையுடன் சேர்ந்து சிரிப்புதான் வந்தது....



"என் அப்பாவ விட நான் கோபப்படுவேன்னு இப்போவே எனக்கு காட்டுறியாக்கும்.... நா சொல்றதுல என்னடா தப்பு இருக்கு.... நா செத்துப் போனா தானே அப்பாக்கு புடிச்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணுவாங்க...."

என்றவளுக்கு மீண்டும் உதை விழ இப்போது சற்று அதிகமாக வலித்ததில் கொஞ்சம் சத்தமாகவே கத்திவிட்டாள் அஷ்வினி....



வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வர அவள் இருக்கும் நிலைமையை பார்த்து மிரண்டவர் ரிஷிக்கே அழைத்து விட்டார்.



"வாட்....நா இதோ வர்றேண்ணா...." என துண்டித்தவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீட்டில் இருந்தான்.



இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறியவன் தன்னவள் இடுப்பை பிடித்துக் கொண்டு கண்கள் மூடி வலியில் கத்துவது கண்டு பதறிப் போனவனாய் அவளருகில் ஓடினான்.



"எ...என்னடா பண்ணுது....ரொம்ப வலிக்குதா...ஹாஸ்பிடல் போலாமா..." பதறிக் கொண்டே கேட்டவனின் குரலில் படக்கென விழிகளைத் திறந்தாள் அவன் மனையாள்....



"எ...எ...என்ன பண்ணுது கண்ணம்மா....டாக்டர் கிட்ட போலாமா?" கண்கள் ஏகத்துக்கும் கலங்கி தவிப்புடன் கேட்டவனை இமைக்காமல் பார்த்தாள் அவனவள்....

"ஏய்...என்னடா..."

மீண்டும் அவள் தோலை பிடித்து உலுக்க திடுக்கிட்டவள் அவனைப் பிடித்து தள்ளி விட்டாள்.



"நீ எதுக்கு என் பக்கத்துல வந்த...போ இங்க இருந்து...வலிச்சா எனக்கு பாக்க தெரியாதா....அக்கறை காட்றா மாறி நடிக்காத...."

கோபத்தில் தொண்டை கிழிய கத்தியவளை மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு அமைதியாக பார்த்தான் ரிஷி.



"போன்னு சொல்றேன்ல....உன்ன பாத்தாலே இர்ரிடேட்டிங்கா இருக்கு.... ப்ளீஸ் லீவ் மீ அலோன்....

இப்போ போகலன்னா நா என்னயே ஏதாவது பண்ணிக்குவேன்" எனவும் திக்கென்றது அவனுக்குள்...



"நீ எதுவும் பண்ணாத நா போயிட்றேன்... டேக் கேர்" என்றவன் விறுட்டென வெளியேறி விட முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினாள் பேதை.....



***



"ஒரே ஒரு தடவ பாத்துட்டு போயிட்றேனே ப்ளீஸ்....சார்...."



"இல்லமா சார் கேஸ் விஷயமா ரொம்ப பிஸியா இருக்காங்க...

இப்போ பாக்க முடியாது" வெளியில் இருந்த எடுபிடி வேலை செய்பவர் தன்மையாகவே மறுத்துக் கொண்டிருந்தார்.



"ப்ளீஸ் சார்....எனக்காக அஞ்சு நிமிஷம்" எனவும் அவளுடைய முகத்தை பார்த்தவருக்கு அதற்கு மேல் மறுக்க முடியாமற் போக



"கொஞ்சம் இருமா வந்துட்றேன்" என்றுவிட்டு உள்ளே சென்றவன் கொஞ்ச நேரத்தில் திரும்ப வந்தார்.



"என்னாச்சு சார்?"



"முடியாதுன்னு சொல்லிட்டாருமா" என்றவருக்கும் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.



ஒரு மாதமாக வருகிறாள்....தினம் கெஞ்சுகிறாள்....போய்விட்டு மறுபடி வருவாள்....



"இப்போ உள்ள என்ன பண்றாங்க?"



"ஏதோ பைல் பாத்துட்டு இருக்காருமா"



"அப்போ உள்ள யாரும் இல்ல?"



"இல்ல...ஆனா எதுக்காக....?"அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவசரமாக உள்ளே சென்று விட்டவளின் பின்னால் கத்திக் கொண்டே ஓடினார் அவர்....



"நில்லுமா....சார் திட்ட போறாரு நில்லுமா...."



கதவு அனுமதியில்லாம் திறக்கப்பட சலேரென திரும்பிப் பார்த்தவன் அங்கே மூச்சு வாங்க யாழினி நிற்பதையும் அவளுக்குப் பின்னாலேயே அவர் கத்திக் கொண்டே வருவதையும் பார்த்து நடந்ததை ஊகித்துக் கொண்டான்.



"அட என்னமா நா பாட்டுக்கு கூப்டுடே இருக்கேன்...நீ சட்டுனு உள்ள வந்துட்ட?"



"மாணிக்கம்...."



"சார்..."



"உங்ககிட்ட நா என்ன சொன்னேன்?"



"சார் அது வந்து..."



"அவருக்கு எதுக்காக திட்றீங்க விஷ்வா....நானாதான் வந்தேன்" என்றாள் இடையிட்டு....



அவளை முறைத்தவன்



"நீங்க போங்க மாணிக்கம்...."

என்க அவர் வெளியேறியதும் நடந்து அவள் முன் வந்து நின்றான் வருண்.



"எதுக்காக வந்த?"



"என் புருஷன பாக்க நா வரக் கூடாதா?"



"அதுக்கு நீ அவர தேடில்ல போயிருக்கனும்?"

எனவும்



"விஷு...."என்றாள் சிணுங்கலாக....



"வேற ஏதாவது பேசனுமா?"



"ஏன் இப்பிடி பண்றீங்க?"



"எனக்கு தெரியாத பொண்ணுங்க கூட பேசி பழக்கம் இல்ல"



"என்னது....தெரியாத பொண்ணா....?"



"ஆமா..."



"ப்ளீஸ்.... சாரி விஷு...."



"பேசி முடிச்சிட்டீங்கன்னா வெளில போறீங்களா?"



"...."



"ஓ....வேற ஏதாவது சொல்லனுமா?"



"ஐ லவ் யூ " என்றாள்

பட்டென்று.....



அதில் ஒரு கணம் ஸ்தம்பித்தாலும்



"நா வேற ஒரு பொண்ண லவ் பண்றேன்....அவளத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கேன்...."

என்றான் அவளை சீண்டும் பொருட்டு....



"பரவாயில்ல....ஐ லவ் யூ...."



"அவங்க பேரு...."



"யாழினி"என அவசரமாக கூறி விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.



"இல்ல..."எனவும் அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் பேதை...



"அவங்க பேரு அபிநயா...." எனவும்



"பரவால்ல....ஐ லவ் யூ....ஐ லவ் யூ...." என கூலாக சொன்னவளை பார்த்து இவன் தான் கடுப்பானான்.



"ஒரு பொறுக்கிய உங்க அப்பாம்மா ஏத்துப்பாங்களா?"

என்றான் வேண்டுமென்றே...



அதில் இவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த கண்கள் கலங்கி கண்ணீர் கொட்டத் தயாராகிக் கொண்டிருந்தது.



"சாரி விஷு....நா வேணும்னே அப்பிடி பண்ணல....ரியலி சாரி..."



"நீங்க எப்பவுமே வேணும்னு பண்றது கெடயாதுங்க"



"ப்ளீஸ் விஷு...."



"என்ன உரிமைல அப்பிடி கூப்புட்றீங்க யாழினி?" என்றான் அவளைப் போலவே.....



"நீங்க என்ன எந்த உரிமைல 'டி' போட்டிங்களோ....அதே உரிமைல தான்...." என்றாள் சட்டென....



அவள் பதிலில் உள்ளுக்குள் அவளை மெச்சிக் கொண்டாளும்



"நல்ல பதில்"என்றான் நக்கல் தொணியில்...



"விஷு....ஐ லவ் யூ..." என்றாள் மறுபடியும்....



"நா இதுக்கான பதில ஒரு தடவ சொல்லிட்டேன்"



"நானும் தான் சொல்லிட்டேன்"



"பேசி முடிச்சிட்டீங்களா... நீங்க வெட்டியா நின்னு என் டைமயும் வேஸ்ட் பண்ணாம இருந்தீங்கன்னா என் பெண்டிங் கேஸஸ பாத்துருவேன்"



"நாளக்கும் வருவேன் விஷு.... அதனால இப்போ பய்" என்றவள் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு மின்னலென மறைந்து விட உறைந்து போனான் வருண் விஷ்வா.....



***



"கதிர்...."

இன்டர்காமில் அழைத்து விட்டு அவனுக்காக காத்திருந்தான் ரிஷி.



"எஸ் சார்?"



"ரகு எங்க?"



"இப்போதான் ஏதோ வேலயா வெளியில பொய்ட்டு வந்தாரு சார்"



"அவன உடனே வர சொல்லுங்க கதிர்"



"ஓகே சார்"



.....



"மச்சான்...கூப்டியா?"



"சரக்கடிக்கலாமா?"



"வாட்....நீ சரக்கு அடிப்பியாடா?"



"அடிக்கலாமா?"



"வா..."



"ஒரு நிமிஷம்..." என்றவன் மீண்டும் கதிரை அழைத்தான்.



"சார்..."



"நா வெளியில போறேன் கதிர்.... ஆபிஸ பாத்துக்கோ"



"ஓகே சார்"



"மச்சான் காலைலயே தேவயாடா...?"



"வரப்போறியா இல்லயா?"



"வர்றேன் வர்றேன்" என்றவன் அவன் முன்னே செல்ல வருணுக்கு அழைத்து சொல்லி விட்டான்.



***



"ஆரு....உன்ன ஹெச்.ஓ.டி கூப்புட்றாரு" ஒருவன் சொல்லிவிட்டுப் மரத்தடியில் ஏதோ யோசனையாய் இருந்தவன் எழுந்து சென்றான்.



அவன் எழுந்து செல்வதை பார்த்துக் கொண்டே வந்த சித்தார்த் அதே மர்த்தடியில் அமர்ந்து அவனுக்காக காத்திருக்க தொடங்க அவனருகில் இடித்துக் கொண்டு வந்தமர்ந்தாள் ரித்திகா....



"என்னடி....க்ளாஸ் போகாம இங்க வந்து உக்காந்திருக்க?" என்றான் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே....



"உங்கள பாக்காம போக மாட்டேன்னு வேண்டுதல் பண்ணியிருக்கேன் அதான்...."



"ஓ...ஓ..."



"என்ன ஓ...ஓ...?"



"மேடமுக்கு என் மேல ஏன் கோபம்னு தெரிஞ்சிக்கலாமா?"



"ஒரு கால் இல்ல...ஒரு மேஸேஜ் இல்ல....அட்லீஸ்ட் காலுக்கோ மேஸேஜுக்கோ ரிப்ளை கூட இல்ல... இப்பிடி பண்றவங்க கிட்ட கோபப்படாம பின்ன கொஞ்சு வாங்களா?" என்றாள் கடுப்பாக....



"கொஞ்சுனாலும் ஏத்துக்க தயாராதான் இருக்கேங்க மேடம்...."

என்றவனுக்கு அடிக்கத் தொடங்கியவளை வளைத்துப் பிடித்தவன்



"சாரிமா....கொஞ்சம் டென்ஷன் அதான் எடுக்க முடில சாரிடி...." என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக....



"அப்படி என்ன டென்ஷன் உங்களுக்கு?"



"இப்போ சரியாயிடுச்சு...."



"ஏதோ சொல்றீங்க...பட் உங்க மேல நம்பிக்க இருக்கு" என்றவளை காதலாய் பார்த்தவன் அவள் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டான்.



"என்ன பண்றீங்க சித்...."திமிரி விலகி எழுந்தவள் அவசரமாக சுற்றும் முற்றும் கண்களால் அலசினாள்.



நல்ல வேலை யாரும் பார்க்கவில்லை....



"எதுக்குடி இவ்வளவு பதட்டம்?"



"ம்...."



"லாஸ்ட் செமஸ்டர் வருது ரிதி...." எனவும் மீண்டும் அவனருகிலேயே அமர்ந்து அவன் தோலில் தலை சாய்த்துக் கொண்டாள்.



"அப்போ இனிமே உங்கள பாக்க முடியாதா சித்.... நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?"



"ஏய் என்னடி?"



"அப்போ தானே உங்கள பாக்க முடியும்.... ஐ லவ் யூ சித்...."



"லவ் யூ டூ டி"



கொஞ்ச நேரம் அவன் தோலில் தலை சாய்த்துப் படுத்திருந்தவள் நேரம் கடப்பதை உணர்ந்து அங்கிருந்து மனமே இல்லாமல் சென்று விட அப்போது தான் அங்கே வந்தான் ஆரவ்.....



"எங்கடா போயிருந்த?"



"ஹெச்.ஓ.டி கூப்டாருடா...."



"மச்சான்....நாம எதுக்கு இன்னும் இந்த காலேஜ்ல படிச்சிகிட்டு இருக்கோம்?"



"ஏன்டா?"



"இல்ல....அதான் அண்ணாக்கு தெரிஞ்சு நம்மல லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாருல்ல....அதான் கேட்டேன்"



"நானும் அதயேதான்டா யோசிச்சு கிட்டு இருக்கேன்"



"பேசாம வேலக்கு சேந்திடலாமாடா.... மதன் தனிய ரொம்ப கஷ்டப்படுறான்"



"அதுவும் சரிதான்டா..பட்..."



"என்ன பட்?"



"நாம காலேஜ் விட்டு போயி....ஜாப்ல ஜாயின் பண்ணிகிட்டா நாம இவ்வளவு நாள் மறச்சிருக்கோம்னு நம்ம கிட்ட சண்ட போடுவாளுங்களேடா?"



"ஆமாடா"



"என்னதான் பண்றது?"



"லாஸ்ட் செமஸ்டர் தானேடா....

முடிச்சிட்டே போயிடலாம்"



"ஓகே மச்சான்...."



"மச்சான் அப்பறம்...."



"என்ன ஆரு?"



"அண்ணா கொல பண்ணவங்களோட கேஸ் பைல் மதன் கிட்ட இருக்கு.... அது அங்க இருந்து மாட்டிக்கிறது டேன்ஜர் மச்சி....ஏன்னா நிறைய கேஸ் போட்டு மூடியிருக்கோம்....சந்தேகம் வர வாய்பபிருக்கு.... சோ...அத நான் வீட்டுக்கு எடுத்துட்டு போலாம்னு இருக்கேன்"



"டன் மச்சி....அப்பிடியே பண்ணிடலாம்"



"இராமநாதனோட ரெக்கார்டிங் வீடியோ பெண்ட்ரைவ் அண்ணா கிட்ட குடுத்துட்டல்ல?"



"ஆமாடா....நா அப்போவே குடுத்துட்டேன்"



"...."



"ஓகே மச்சான்....நா மதன் கிட்ட போயி அந்த பைல வாங்கிட்டு வந்துட்றேன்....நீ ஹெச்.ஓ.டி சொன்ன வேலய முடிச்சிட்டு இரு" என்றவன் ஆரவ்விடம் சொல்லி விட்டு வெளியேற மறுபடியும் யோசனையில் ஆழ்ந்தான் ஆரவ்.



நடக்கவிருக்கும் பூகம்கம் முன்னரே அறிந்திருந்தாள் மதனிடமே இருக்கட்டும் என்று வைத்திருப்பானோ என்னவோ!!!!!



தொடரும்......



09-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 46 [ B ]



"டேய் மச்சான்....சொன்னா கேளுடா.... எத்தன போத்தல தான் காலி பண்ணுவ...போதும்டா.... டேய் நா சொல்லிட்டே இருக்கேன்..." ரிஷியின் கைகளிலிருந்த பீர் பாட்டிலை பிடுங்கி ரகுவிடம் கொடுத்தான் வருண்.



"தாடா....என்கிட்ட இருந்து எதுக்குடா பறிச்ச்ச்ச....."முழு போதையில் குழரலாக வெளி வந்தது அவன் குரல்....



"மச்சான் ஏன்டா இப்பிடி பண்ற.... சரக்கடிச்சா சரியாயிடுமா?"

கோபத்தில் பொரிந்தான் ரகு...



"என்னால இப்பிதி இழுக்க முதிழ மச்சான்.... அவள நா தொம்ப ழவ் பண்ணுறேன்டா.... அவ என்ன வித்து தூரமா போய்கிட்டு இதுக்காடா....

தொம்ப ஹேட்டிங்கா இருக்கு மச்சான்" அவன் பேசியதில் பாதி அவர்களுக்கே புரியவில்லை ஆயினும் அவனின் கலங்கிய குரல் அவர்களையும் வருந்தச் செய்தது.



"அதுக்காக இப்பிடி பண்ணா எல்லாம் சரியாயிடுமா....?" மீண்டும் ரகு...

"உன்ன இப்பிடி பாக்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு மச்சி...." கலங்கியது வருணின் குரல்....



"நீ என்ன வித்து போனப்பவும் இப்பிதிதான் குதிச்சேன்...அப்போ எங்கடா போன?" என்றவனின் கேள்வியில் தான் வருணுக்கு தான் செய்த தப்பின் வீர்யம் புரிந்தது.



அவன் அமைதியாகி விட அவனையும் சேர்ந்து தேற்ற வேண்டியதாகிப் பொனது ரகுவுக்கு...



"முதல்ல நீ எழுந்து வா வீட்டுக்கு போலாம்..."

அவனை எழுப்ப சேர்ந்து உதவினான் வருண்.



"விதுடா...நா வழ்ல நீங்க போங்க..." கையை உதறி விட்டவன் சொபாவிலேயே தொப்பென விழுந்தான்.



"இப்பொ என்னடா பண்றது?"

பாவமாய் கேட்ட வருணிடம்



"நாமலும் இவன் கூடவே தங்கிக்கலாம்டா... மணி பாரு ராத்திரி ஒன்னாகுது..." என்றான் ஆதங்கமாக...



"சரிடா....நா அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துட்றேன் இவன் கூட இரு" வருண் தன் தாயிற்கு அழைப்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியே வந்தான்.



"சொல்லு கண்ணா...எங்க இருக்க?"



"அம்மா நா ஆர்.கே வீட்லயே இன்னிக்கு தங்கிக்குறேன்... எனக்காக காத்துட்ருக்காம போய் படுங்க"



"ஏன்டா ஏதாவது பிரச்சனையா?"



"இல்லமா எதுவும் பிரச்சன இல்ல...பய்" அழைப்பை துண்டித்தவனுக்கு தன் தன் நண்பனை நினைக்க மனது பாரமாகிப் போனது.



தன் தங்கைக்கு தெரியப்படுத்தலாம் என்றால் பாழாய்ப் போன சத்தியத்தை வாங்கி விட்டான்.



ஏதேதோ எண்ணங்களில் உழன்றவன்



"டேய் வருண் சீக்கிரம் வாடா"என்ற ரகுவின் குரல் கேட்டு பதற்றமாய் உள்ளே ஓடினான்.



"என்னடா...ஏன் கத்துற?"



"வாந்தி எடுக்குறான்டா" என்றான் கவலையாய்....



அப்போது தான் வருணும் ரகுவை முழுதாகப் பார்த்தான்.



அவன் மேலேயே வாந்தி எடுத்திருந்தாலும் முகத்தை சுழிக்காது ரிஷியைப் பற்றி கவலைப் பட்டுக் கொண்டிருப்பவனின் மீது பெரும் மரியாதை தோன்றியது அவனுள்....



"நீ உள்ள போய் வாஷ் பண்ணிட்டு வா...நா பாத்துக்குறேன்"

என்றவன் அவனை அனுப்பி வைத்துவிட்டு அந்த இடத்தை சுத்தம் பண்ணத் துவங்கினான்.



***



"அம்மு...நா இன்னிக்கு வெளில தங்கிக்குறேன்... கொஞ்சம் வேல இருக்கு" என்றவன் அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் கட் பண்ணிவிட்டு முன்னால் இருந்த மதனிடம் திரும்பினான்.



"ஏன்டா கயல் கிட்ட அப்பிடி சொன்ன...பாவம்டா"



"என்னால அவ முகத்த பாக்கவே சங்கடா இருக்கு மச்சான்....கில்டியா பீல் பண்றேன்டா"



"அதுக்காக அவள ஹேர்ட் பண்றா மாறி பண்றது உனக்கே நல்லாருக்கா?"



"இல்லதான்...என்ன தான் இருந்தாலும் திடீர்னு அவள பாக்கும் போது ஏதாவது உளறிடுவேனொன்னு பயமா இருக்கு மச்சி"



"அப்பிடியெல்லாம் எதுவும் நடக்காது...நீ தைரியமா இரு"



"நோ மச்சான்.... என் தைரியமெல்லாம் அவ முகத்த பாக்கும் வரதான் இருக்கும்டா....

அப்பறம் எங்க உளறிடுவேனோன்னு அவள பாக்காம இருக்க வேண்டியதா இருக்கு"



"நீ ஏன் அவங்க கிட்ட உண்மய சொல்லக் கூடாது?"



"சொல்லலாம் மச்சான்...பட் அதுக்கப்பறம் நடக்குறத நெனச்சா இப்போவே நடுங்குது"



"அவங்க கிட்ட யாருகிட்டயும் சொல்ல கூடாதுன்ன சத்தியம் பண்ணி கேட்டா....?"



"ஊஹூம்...உனக்கு அவள பத்தி தெரியாது மச்சி....பயந்தவ தான் ஆனா...எல்லா விஷயத்துலயும் ரொம்ப தெளிவு...நா சத்தியம் கேட்டேன்னா நீ முதல்ல விஷயத்த சொல்லுன்னுவா....விஷயத்த பேசிட்டு சத்தியம் வாங்குறதெல்லாம் அவகிட்ட நடக்கவே நடக்காது மச்சான்....நேரா அவ அப்பன் கிட்ட போயி இப்பிடி ஏன் செஞ்சிகன்னு கேட்டாலும் கேட்ருவா.....வேற வினயே வௌணாம்டா சாமி"என்றவனை ஆச்சரியமாய் பார்த்தான் மதன்.



"ஆனா பாத்தா அப்பிடி தெரிலயேடா....பாக்க அமைதியான பொண்ணு மாறி இருக்காங்க?"



"அமைதிதான்டா....சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு கேள்வி பட்ருக்கியா....அந்த கேட்டகரி அவ..." என்றதில் வாய் விட்டுச் சிரித்தான் மதன்.



மீண்டும் தன் நண்பன் சோகமாகவும்



"ஏன் எப்போ பாத்தாலும் முகத்த தொங்க போட்டு கிட்டே இருக்க...பாக்க சகிக்கல.... டோன்ட் ஒர்ரி மச்சி...எல்லாம் சரி ஆயிடும்"



"ப்ச்....போடா..."



"ஏன்டா...?"



"அண்ணா இப்போல்லாம் வீட்டுக்கு வர்றதே இல்ல....ஆபிஸ்லயே தங்கிக்குறாரு....இவளுக்கும் அத பத்தி அக்கற இருக்குறா மாறியே தெரியலடா....உண்மையிலேயே ராட்சஸியா மாறிட்டா போல" என்றான் கசப்புடன்...



மதனுக்கும் அவள் மீது கோபம் இருந்ததால் அமைதியாகவே இருந்தான்.



"ஏன் இப்பிடி பண்ணிகிட்டு இருக்கான்னு ஒரு மண்ணும் புரிஞ்சுத் தொலக்க மாட்டேங்குதுடா... அப்பா மேல பாசம் அதிகம் தான்...நா இல்லேங்கல...பட் புருஷன் மேல கொஞ்சம் கூடவா நம்பிக்க இல்ல?" ஆத்திரமாக கேட்டவனை அமைதிப்படுத்தினான் மதன்.



"விடு மச்சான்....அவளே புரிஞ்சுக்குவா....நாம கம்பல் பண்ணொம்னா அண்ணா மேல தான் கோபமும் வெறுப்பும் திரும்பும்... சோ அவளாதான் புரிஞ்சிக்கனும்... அப்பறம்....எப்போ டியூட்டில ஜாயின் பண்றதா இருக்க?"



"ஸாஸ்ட் செம்ம முடிச்சுட்டே வர்லாம்னு இருக்கோம்டா...."



"சித்து கேஸ் பைல தந்தானா?"



"ம்...ஆமா மச்சான்...."

என்றவனுக்கு அப்பொதுதான் தான் அவசரத்தில் ஹால் டீபாய் மீதே வைத்து விட்டு வந்தது நினைவு வர தலையில் பெரிய இடி விழுந்தது போல் இருந்தது அவனுக்கு....



***



கட்டிலில் அமர்ந்து முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள் அஷ்வினி....



இன்று நடந்தது அவள் இதயத்தை அவ்வளவு பாதித்து இருந்தது என்றுதான் சொல்ல வேண்டுமோ???



அதுவும் அவன் கண்களில் அப்பட்டமாக தெரிந்த தவிப்பு.... கலக்கம் எல்லாம் குழந்தைக்காக வந்தது என்றதில் அவளுக்குள் இன்னுமின்னும் அதிகமாய் வலித்தது.



இதுவே அவன் பிள்ளையை சுமந்திருக்கா விட்டால் தன்னை திரும்பியும் பார்த்திருக்க மாட்டான் என தனக்குள்ளே மடத்தனமாக முடிவு செய்து கொண்டவளுக்கு அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை....



எல்லாவற்றிற்கும் அவளே ஒரு காரணத்தை கூறி முடிவு செய்தது தான் இங்கு பிழையாய் போயிற்று....



ஆக அவனின் மொத்த அன்பும் அவளுக்கே வேண்டும் என எதிர்ப்பார்த்த அக்காரிகைக்கே தெரிந்திருக்க வில்லை தான் என்னதான் அவனிடம் எதிர்ப்பார்க்கிறோம் என்று....



அப்போது தான் அவள் மூளைக்கு அந்த விபரீத எண்ணமும் தோன்றிற்று!!!



அது அவன் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவள் வாழ்வையும் சேர்த்தே கருகி அழிக்கப் போகிறது என்பதை யாரந்த பேதைக்கு புரிய வைப்பது???



அந்நேரம் பார்த்து "அஷ்வி...." என்றபடி உள்ளே நுழைந்த கயலுக்கு அறை இருந்த கோலத்தில் உடல் தூக்கிவாரிப் போட்டது.



அவ்வளவு இருட்டு...



"இந்த லூசு லைட் கூட ஆன் பண்ணாம உள்ள அப்பிடி என்ன தான் பண்ணுதோ" தனக்குத்தானே பேசிக் கொண்டே நுழைந்து லைட்டை ஆன் ப்ண்ணி கண்களால் துழாவியவளுக்கு அடுத்த அதிர்ச்சி....



"அஷ்வி...என்னாச்சுடி எதுக்காக இப்பிடி வெறிச்சிகிட்டு உக்காந்திருக்க.... அஷ்வி... அஷ்வினி" சாய்ந்து அமர்ந்து இருட்டை வெறித்த படி கண்ணங்களில் காய்ந்து போன கண்ணீர் சுவடுடன் இருந்த தன் தமக்கையை பயத்துடன் உலுக்கினாள் கயல்விழி....



ஊஹூம்...எந்த மாற்றமுமே இல்லை....



"அக்கா....அக்கா..."நன்றாவே உலுக்கியதும் தான் சுயநினைவுக்கு வந்தாள் பேதை...



"என்ன கயல்?" சோர்ந்து ஒலித்தது அவள் குரல்...



"ஏன்டி இப்பிடி உக்கார்ந்து கிட்டு இருக்க.... நா பயந்து பொய்ட்டேன் தெரியுமா?" எனவும் அவள் உதடுகளில் வந்து போனது ஒரு விரக்திச் சிரிப்பு!!!



"ஏன் இப்பிடி சிரிக்கிற அஷ்வி... ஏதோ வாழ்க்க வெறுத்துப் போனவ மாதிரி...ப்ளீஸ் இப்பிடி சிரிக்காத அத்தான் கண்டா ரொம்ப வருத்தப் படுவாங்க" விஷயம் ஒன்றும் தெரியாததால் இவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் ஊடலும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது...



"சரி சாப்டியா?"என்ற கேள்வியில் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு...



இல்லை என சிறு பிள்ளை போல் தலையாட்டியவளைப் பார்த்து அப்படியே உருகிப் போனது சின்னவளுக்கு...



"இரு நா எடுத்துட்டு வந்து ஊட்டி விட்றேன்..."

என்றவள் அவள் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு கீழிறங்கிச் செல்ல தன்னவன் நினைவில் மீண்டும் சிக்கித் தவித்தாள் பெண்...



அவனும் இப்படித்தான்...என்ன தான் வேலையாக இருந்தாலும் சாப்பிட்டாயா என கேட்டு விட்டுத் தான் துண்டிப்பான்.



.....



கையில் தட்டுடன் வந்தவள் அவளுக்கு ஊட்ட மறுக்காமல் வாங்கிக் கொண்டவளுக்கு தொண்டைக் குழியை தாண்டி செல்ல மறுத்தது அக்கவலம்....



கஷ்டப்பட்டு விழுங்கியவளால் அதற்கு மேலும் உண்ண முடியாமல் போய்விட வேண்டாம் என மறுத்து விட்டாள்.



"என்னது...வேண்டாமா...என்கிட்ட அடிவாங்காம சாப்புடு"



"ப்ளீஸ் கயு...போதுமே...வாந்தி வர்றா மாறி இருக்குடி"



"அதெல்லாம் வந்தா பாத்துக்கலாம்...

இப்போ சாப்புடு" என நீட்டவும் வாயை கைகளால் பொத்திக் கொண்டவள் மறுப்பாக தலையசைத்தாள்.



குழந்தைத்தனமான அவள் செயலில் பக்கென சிரித்தவள்



"நானே பெரிய பொண்ணா வளந்துட்டேன்...நீ இன்னும் மாறவே இல்ல அஷ்வி..." எனவும் இலேசாக சிரிப்பு எட்டிப் பார்த்தது அவள் உதடுகளில்...



.....



குளித்து முடித்து தாய்மை கலை முகத்தில் மின்ன மெதுவாக இறங்கி வந்து கொண்டிருந்தவளின் கண்களில் தப்பாமல் பட்டது மேசை மீதிருந்த அந்த பாழாய்ப் போன ஃபைல்....



'யாரோட பைல்...இவங்க ஆபிஸ்ல தானே வெப்பாங்க....ஒரு வேல அண்ணாவோட கேஸ் பைலா இருக்குமோ...இல்லன்னா ஆருவோடதா இருக்குமா.... அவன் கேர்லெஸ்ஸா எல்லோருக்கும் தெரியுறா மாறி வெக்கமாட்டானே... பின்ன யாரோடதா இருக்கும்..." யோசித்துக் கொண்டே வந்தவள் அதனருகில் நெருங்க நெருங்க இதயம் வேகமாக அடிக்கத் துவங்கி விட்டது....



திறந்து பார்க்க கையை அதனருகில் கொண்டு போனவளுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொள்ள அதற்கேற்றவாறு கைகளும் நடுங்கியது.



'ஏன் இப்பிடி பதறுது....ஏதோ கெட்டது கேக்க போறா மாறி படபடன்னு வருதே....இந்த பைல்ல அப்பிடி என்ன இருக்கு....' யோசித்தவாறே அதனை நடுங்கும் கை கொண்டு எடுத்தவள் அதை திறக்கப் போன சமயம்



"அஷ்வி...."என அழைத்தவாறே கயல் இறங்கி வரவும் அதை அப்படியே வைத்து விட்டு அவளிடம் திரும்பினாள்.



"என்ன கயு?"



"அஷ்வி நா காலேஜ் கெளம்பிட்டு இருக்கேன்..... நீ பத்திரமா இருந்துக்குவல்ல?"



"என்னடி புதுசா?"



"இல்ல கேக்கனும்னு தோனிச்சு?"



"நா இருந்துக்குவேன்...நீ போடி"



"அப்போ ஓகே அஷ்வி...பய்டி..."

என்றவள் சற்று குனிந்து



"டேய் கண்ணா...சித்தி காலேஜ் போறேன்...சமத்து பையனா இருக்கனும் சரியா...?" என்றுவிட்டு எழ அவளைப் பார்த்து மெலிதாக சிரித்தாள் அஷ்வினி.



"டேக் கேர் கா....பய்...."

என்றவள் மொபைலை காதுக்கு கொடுத்துக் கொண்டே வெளியேற அவளையே பார்த்திருந்தவளுக்கு மீண்டும் பைல் ஞாபகம் வர அதை கையிலெடுத்து மெதுவாக திறந்தாள்.



***



"டேய் மச்சான்....உன்ன தேடி கயல் வந்திருக்கா....க்ளாஸுக்கு வெளிய வெயிட் பண்றா.... போய் பாரு" என்றவாறு அருகில் வந்தமர்ந்தான் சித்தார்த்.



"நா இல்லன்னு சொல்லுடா..."

என்றவனை யோசனையுடன் பார்த்தவன்



"முடியாது...அவ பாவம்டா...இப்போ எதுக்கு தேவயில்லாம அவள ஹேர்ட் பண்ணிகிட்டு இருக்க.... இப்போ நீ போய் பாக்குறியா இல்ல...அவள உள்ள வர சொல்லட்டுமா?"



"ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்குற...

எனக்கு அவ முகத்த பாக்க கஷ்டமா இருக்குடா...."



"அதுக்கும் இவளுக்கும் என்னடா சம்மந்தம்?"



"சம்மந்தம் இருக்குடா....அந்த நாய் செஞ்ச வேலை இவளுக்கு தெரிய வந்தா தாங்க மாட்டாடா....சின்ன பொண்ணுடா அவ...."



"மச்சான்...." அதிர்ந்து வந்த சித்தார்த்தின் குரலில் நிமிர்ந்து பார்த்த ஆரவ் அவர்களுக்கு முன்னால் கயல் கண்ணீருடன் நிற்பது கண்டு அதிர்ந்து பார்த்தான் சித்தார்த்தை....



அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்ட சித்தார்த்



"வா கயல்...எப்போமா வந்த?" என்க



"நா ஆரவ் கூட பேசனும்ணா...

வெளிய வர சொல்லுங்க" என்றவள் விறுவிறுவென்று வெளியே சென்று விட தலையில் கை வைத்துக் கொண்டான் ஆரவ்....



.....



கிரவுண்டுக்கு அருகிலிருந்த பெரிய மரத்தடியில் அழுது கொண்டு அமர்ந்திருந்த கயலிடம் வந்தான் ஆரவ்.



அவளருகில் அமர்ந்து அவள் கையை எடுத்து தனக்குள் பொத்தி வைக்கவும் அதை உதறிவிட்டு தள்ளி அமர்ந்தாள் அவள்....



"அம்..."என்றவனை கை நீட்டி தடுத்தவள்



"யாரோ பண்ண தப்புக்கு நா எப்பிடி பொறுப்பாக முடியும் ஆரு?"



"அம்மு நீ தப்பா புரிஞ்சுகிட்டன்னு நெனக்கிறேன்...நா சொல்ல வர்றத முதல்ல கேளுடி"



"நா உன்கிட்ட அன்னக்கே கேட்டேன்லடா என்ன பிரச்சனன்னு.... என்கிட்ட சொல்ல முடியாத அளவு பிரச்சனயா... இல்ல.... என் மேல நம்பிக்க இல்லயா?"



"ஹேய் அப்பிடி இல்ல அம்மு.... ப்ளீஸ்டி"



"என்ன ஆச்சுன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும்.... சொல்லு ஆரு.... இப்போ நீ சொல்லலன்னா நா அத்தான்கிட்ட கேக்க வேண்டியதா இருக்கும்"



"அம்மு...புரிஞ்சிக்கோடி"



"அப்போ நீ சொல்ல மாட்ட அப்படித்தானே.... இட்ஸ் ஓகே...." என்றவள் சட்டென எழவும் பதறிப்போய் அவளை இழுத்து அமர வைத்தான் அவள் கணவன்.



"என்ன பண்ற அம்மு....?"



"நீ எதுக்கு கோபப்பட்ற...நான்தான் கோபப்படனும்.... சொல்லப் போறியா இல்லையா?"



"அம்மு...அ...அது வந்து...வந்து அ..."

அவனை திடீரென இடையிட்டான் சித்தார்த்.



மூச்சிரைக்க நின்றவனை பார்த்து அதிர்ந்தவன்



"என்னாச்சு சித்து...ஏன்டா இப்பிடி ஓடி வந்த?" என்க அவன் கயல் இருப்பதையும் மறந்து



"ம...மச்சான்...கேஸ் பைல நீ...நீ ஹால்ல எதுக்குடா வெச்சித் தொலச்ச?"



"வாட்...என்னடா ஆச்சு....ஷிட்....

மறந்தே பொய்ட்டேன்டா..."

என்றவன் தொப்பென அமர்ந்து விட்டான்.



"ம...மச்சி...அஷ்வி"



"அஷ்விக்கு என்னடா ஆச்சு...?" இதயம் வேகமாக அடித்துக் கொண்டது ஆரவ்விற்கு....



"அக்காக்கு எண்ணாச்சுணா?"என்ற கயலின் குரலில் தான் அவள் இருப்பதை உணர்ந்தவர்கள் ஒரு சேர அவளை அதிர்ந்து பார்த்தனர்.

"சொல்லுங்கண்ணா....?"என்று கத்தவும் சித்தார்த் ஆரவ்வின் முகத்தை பார்க்க வேறு வழியில்லை என உணர்ந்தவன் கண்களை மூடித் திறந்தான்.



"அ...அஷ்வி...ஹாஸ்பிடல்லயாம்டா"



"வாட்....?" இருவரும் ஒரு சேர அதிர



"வருண் அண்ணா சொன்னாருடா....."



"ஷிட்..." கால்களை உதைந்த ஆரவ் தலையை அழுத்தக் கோதிக் கொண்டான்.



"மச்சான் நீயும் கயலும் வந்துடுங்க.... நா முன்னாடி கெளம்புறேன்"

என்றவன் வேகமாக அழுது கொண்டிருந்தவளை சமாதானப் படுத்தியவன் தானும் ஹாஸ்பிடல் நோக்கி பைக்கை செலுத்தினான்.







ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....



"கதிர் இன்னக்கு முக்கியமான மீட்டிங்ஸ் ஏதாவது இருக்கா?"



"நோ சார்...."



"காண்ஸ்ரக்ஷன் சைட்ல ஏதோ ப்ராம்ளம்னு சொன்னீங்கள்ள.... சரியாயிடுச்சா?"



"எஸ் சார்..."



"மேனேஜர வர சொல்லுங்க..."



"ஷூர் சார்"



"அன்னக்கு என்ன நடந்துது?"



"கவனக்குறைவால ஒருத்தர் விழுந்து தலைல அடிபட்டு இறந்துட்டாரு சார்..."



"வாட்...இத ஏன் நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல கதிர்.. அவங்க குடும்பத்துக்கு நஷ்ட ஈடு குடுத்தீங்களா இல்லயா?"



"குடுத்துட்டோம் சார்...பட் வாங்க மறுத்துட்டாங்க"



"வாட்...?"



"கம்பல் பண்ணதால எடுத்துகிட்டாங்க"



"ம் ஓகே...அப்பறம் நேத்து மல்ஹோத்ராவோட மீட்டிங் அடண்ட் பண்ண முடில...சாரி பார் இட் என்னாச்சு?"



"நீங்க வர்லன்னதும் எல்லா டீலிங்ஸயும் கட் பண்ணிட்டு பொய்ட்டாங்க சார்"



"இட்ஸ் ஓகே கதிர்...விடுங்க பாத்துக்கலாம்" என்றவனின் அலைபேசி ஒலிரவும்



"நீங்க போங்க கதிர்...நா அப்பறமா கூப்புட்றேன்"

என்றவன் கதிரை அனுப்பி வைத்துவிட்டு காலை அடண்ட் செய்து காதில் வைத்த மறுநொடி போன் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்தது.





ஹாஸ்பிடல்....



மொத்தக் குடும்பமும் வெளியே பரபரப்புடன் நின்றிறுக்க சற்று ஓரமாக கண்கள் கலங்க குற்ற உணர்ச்சியில் சுவற்றில் தலை சாய்த்து நின்றிருந்தான் ஆரவ்.



அவள் கண் விழிக்கும் வரை அறை வாசலில் இதயம் படபடக்க நின்றிருந்தனர் அவளுடைய இரு அண்ணன்களும்....



கதவை திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டரின் கை பற்றிக் கொண்டான் அஜய்.



அவன் கையை தட்டிக் கொடுத்தவர்



"நவ் ஷீ இஸ் பைன் மிஸ்டர்.அஜய்....

நீங்க போய் பாருங்க....அவங்கள கூடுதலா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்"

என்றவன் அணைவரும் உள்ளே செல்ல உள்ளே செல்லப் பார்த்த வருணின் கையை பிடித்து தடுக்கவும் அப்படியே நின்றுவிட்டவன் அவரை புரியாது பார்த்தான்.



"மிஸ்டர்.மாறன் எங்க விஷ்வா...?"



"டாக்டர் அவனுக்கு இப்போதான் இன்பார்ம் பண்ணி இருக்கேன்.... இப்போ வந்துடுவான்"



"இவ்வளவு கேர்லஸா இருக்குற அளவுக்கு என்ன நடந்துது... நல்ல வேளை வயித்துல அடிபடல...

பட்டிருந்தா ஒரு உயிர் போயிருக்கும்"

என்றார் கோபமாக....

"அதோட..."என ஏதோ சொல்லப் போனவரை கலைத்தது ரிஷியின் பதற்றக் குரல்....



"அ...அ...அங்கிள்...."என மூச்சிரைக்க வந்து நின்றிருந்தவனின் கண்களில் தெரிந்த தவிப்பு அவரையும் கூட உள்ளுக்குள் அசைத்துப் பார்க்க சற்று மலையிறங்கினார் டாக்டர் அர்ஜுன்.



"என்கூட வாங்க மிஸ்டர்.மாறன்"



"இல்ல...இல்ல அங்கிள்....ப்ளீஸ்...நா என் அஷுவ பாக்கனும்...பாத்துட்டு உங்க கிட்ட வர்றேனே ப்ளீஸ்"



"டேய் என்னடா இதெல்லாம்...."

என்ற வருண் கூப்பியிருந்த அவன் கரங்களை தட்டி விட்டான்.



"டாக்டர்....நீங்க போங்க...அவன் பாத்துடட்டும்....நானே இவன கூட்டிட்டு வந்துட்றேன்...."



"விஷ்வா...நா மாறன் கிட்ட பேச வேண்டியிருக்கு....அதுவும் அவரு அவனோட வொஃய்ப பாக்குறதுக்கு முன்னாடி" என்றார் இலகாமல்....



"...."



"முக்கியமான விஷயம் மிஸ்டர்.மாறன்....புரிஞ்சிக்கோங்க..."

எனவும் மூச்சை இழுத்து விட்டவன்



"ஓகே அங்கிள்...."என்று விட்டு வருணுடன் இணைந்து நடந்தான் பெரும் நிதானத்துடன்....



.....



"அஷ்வா....எப்பிடிமா இருக்க?"

தழுதழுத்தது தாயின் குரல்...



"பாத்து இருக்க மாட்டியாடா?"

தலையை வருடி பாசமாக கேட்ட தந்தையின் குரல்...



"என்ன நடத்துது ரிக்ஷி...."அழைப்பு மாறி கூர்மையாய் வந்து விழுந்த அஜய்யின் குரல்...



"பாத்து இருக்க மாட்டியா அஷ்வி..." சற்று ஆதங்கமாக அண்ணி....



"ஏன்கா...இப்பிடி இருக்க...உன்ன இந்த மாதிரி பாக்க கஷ்டமா இருக்குகா...."

அழுகையினூடே தங்கையின் குரல்...



அவ்வளவு நேரம் தலையை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து ஓரமாய் தலை குனிந்து நின்றின்றிருந்த ஆரவ்வையும் அவளையே பார்த்திருந்த சித்தார்த்தையும் தீப்பார்வை பார்த்தவள் முண்டும் தலையை குனிந்து கொண்டாள்.



ஒரு சொட்டுக் கண்ணீர் விடாது இறுகி அமர்ந்திருப்பவளை பார்த்த சித்தார்திற்கு என்ன நடக்கப் போகிறதோ என படபடப்பாக இருந்தது.



.....



"உங்க வொய்ப் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி எத்தன நாளாச்சு மிஸ்டர்.மாறன்?" என்றவரை விழுக்கென நிமிர்ந்து பார்த்தான் ரிஷிகுமார்.



"இந்த நேரத்துல அவங்க சந்தோஷத்த விடவா உங்க வேல உங்களுக்கு முக்கியம்.... உங்க வொய்ப்போட ஹார்ட் ரொம்பவே வீக்கா இருக்கு மாறன்" அதிர்ந்து விழித்தான் ரிஷி.



"ஏன் இப்பிடி பண்ணிகிட்டு இருக்கீங்க.... அவங்களுக்கு ட்ரெஸ் அதிகமா இருக்கு....அதுவும் உங்களால...உங்களால மட்டும் தான்" ஆத்திரமாய் வந்தது வருணுக்கு...



'எதுக்குதான் வாய மூடிகிட்டு இருக்கானோ....'



"சரி அத விடுங்க... அவங்க கூட எத்தன தடவ செக்கப்புக்கு வந்திருக்கீங்க?"



"மாறா..."எந்த அசைவுமே இல்லை அவனிடம்...



"மாறா...இங்க பாருடா"கனிவு வந்திருந்தது அவர் குரலில்....



ரகுநாத்தின் நண்பர்தான்...



"சாரி அங்கிள்....இனிமே இப்பிடி நடக்காது"

உறுதியுடன் சொல்லிவிட்டு எழுந்தவனைப் பாருக்க கண்கள் கரித்தது அவருக்கு...



"ஓகே நானும் உங்கிட்ட சாரி கேட்டுக்குறேன்..."



"இல்ல அங்கிள்...தப்பு என்மேலதான்....என்னதான் நடந்தாலும் நா அவள விட்டு விலகி இருந்திருக்க கூடாது அங்கிள்.... ஐ அம் சாரி...." என்றவன் விறுட்டென வெளியேறி விட்டான்.



.....



அறைக்கதவை திறந்து கொண்டு புயலென நுழைந்தவனின் பார்வை அவசரமாக அவள் உடல் முழுதும் ஆராய்ந்து அவளுக்கு எதுவும் இல்லை என்றான பிறகே சாந்தமானது.



அவனை உறுத்து விழித்தவள் தன்னிடம் வைத்திருந்த பேப்பரை அவனை நோக்கி நீட்ட புருவ முடிச்சுடன் கையில் எடுத்தவனுக்கு உடல் தூக்கிவாரிப் போட்டது....



ஆம் அது...விவாகரத்து பத்திரம்!!!!



தொடரும்......



10-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 47 [ A ]



"அஷ்வினி...." கத்தியே விட்டான் வருண்....



அவளிடம் சிறு சலனம் கூட இல்லை....ரிஷி அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.



இப்போது தானே அவளை விட்டு விலகி இருக்க கூடாது என்று முடிவெடுத்தான்.



அதுவும் பொறுக்கவில்லையா இந்த கடவுளுக்கு???



'இல்லை இது நடக்கக் கூடாது' உறுதியை மண்ணாக்குவது போல் அவன் மனையாளின் கணீர் குரல்...



இதுவரை கேட்டிராத தெளிவான குரல்...



விலுக்கென நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் பார்வையை அவள் ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை....



"நா மாறன் கூட தனிய பேசனும்.... சோ ப்ளீஸ்...." என்றவளின் வார்த்தைகளில் பொங்கிவிட்டார் தாயார் விஜயலக்ஷ்மி....



"அஷ்வினி....தம்பிக்கு மரியாத கொடுத்து பேசு"



"இனி எதுக்கு மரியாத.... கொலகாரனுக்கெல்லாம் மரியாத கொடுக்குற நல்ல மனசு எனக்கு இல்லமா" மீண்டும் அதிர்ந்தான் ரிஷி...



"ஏய்...." அடக்க முடியா கோபத்தில் அவளிடம் பாய்ந்த ஆரவ்வை தடுத்துப் பிடித்தனர் சித்தார்த்தும் ரகுவும்....



அனைவரும் சிலையாய் சமைந்திருக்க



"நீங்க வெளியில போறிங்களா...

இல்ல நானே போட்டுமா?" என்ன நடக்கிறதென்று தெரியாமலேயே வெளியேறினர் அனைவரும்.....



அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தவனைசொடக்கிட்டு அழைக்க தன்னுணர்வு பெற்றவன்



"அஷ்...." வாயைத் திறக்கும் முன்



"எனக்கு விளக்கம் வேண்டியதில்ல.... மிஸ்டர்.தேவமாருதன்.... இதுல கையெழுத்து போடுங்க"

கண்களால் பேப்பரை காட்டினாள் அவனை பார்ப்பதை தவிர்த்து....

"இவ்வளவு நாள் நீங்க மறச்சது எலலாம் இன்னக்கி வெளிச்சமாகியாச்சு.... இதுக்கு மேல உங்க கூட என்னால ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது மாறன்....சோ ப்ளீஸ்...." என்றான் வெகு அலட்சியமாய்....



"என் மேல உனக்கு நம்பிக்க இல்லயா அஷு?"



"இல்ல..." பட்டென வந்து விழுந்த பதிலில் உள்ளுக்குள் நொறுங்கிய இதம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டிருந்தது.



"அஷு....நா..." கை நீட்டி தடுத்தவள்



"உங்களுக்கு என் பேர சொல்றதுக்கு இனிமே எந்த உரிமயும் இல்ல... ரிக்ஷிதான்னே கூப்புடலாம்" இன்னுமின்னும் இறுகினான்.



"அப்பிடி ஒரு வேல நீங்க கையெழுத்து போட மாட்டீங்கன்னா உங்க குழந்தய அழிச்சிறுவே..." வார்த்தைகளை முடிக்கும் முன் அவள் குரல் வளையை பிடித்திருந்தான் ரிஷிகுமார்.



"என்னடி....சொன்ன?"

ரத்தமென சிவந்த கண்களுடன் அவன் பிடி இன்னும் இறுக வலியில் அவள் கண்கள் கலங்கிவிட்டதை கண்டு அவளை உதறித்தள்ளினான்.



"மனுசனாடி நீயெல்லாம்....

உனக்குள்ளதானே வளர்ந்துட்டு இருக்கு... மிருகம் மாறி பிஹேவ் பண்ணிட்டு இருக்க?"

ஆத்திரத்தில் வெடித்தவன் அவள் கண்ணத்திலேயே ஓங்கி ஒரு அறை விட்டான்.



அவளிடம் எந்த சலனமுமில்லை....



"நா லவ் பண்ண என் பொண்டாட்டி நீ கிடையாதுடி....நீ கிடையாது....

அவளுக்கு சின்ன துரும்புக் கூட தீங்கு செய்ய மனசு வராது... அது நீ இல்ல....உன் வயித்துக்குள்ள உன்கூடவே வளர்ர ஒரு உயிர எப்போ அழிக்கனும்னு நெனச்சியோ அப்போவே அவ...செத்துப் பொய்ட்டா....இப்போ இருக்குறது அவ கிடையாது" மீண்டும் அறைந்தான்.



அசையாமல் அப்படியே இருந்தாள்.



"இன்னொரு கண்டிஷன்?"

சொல்லித் தொலை என்பது போல்தான் இருந்தது அவன் முகம்....



"குழந்தை பிறந்த உடனே உங்க புள்ளய கூட்டிகிட்டு வேற எங்கயாவது போயிடனும்"



"போகலனா?"



"தற்கொல பண்ணிக்குவேன்"



"நீ தற்கொல பண்ணிக்கிறதுக்கு நா என்ன பண்ண முடியும்?" விலுக்கென நிமிர்ந்து நேருக்கு நேர் அவனை பார்த்தவளின் விழிகளில் என்ன இருந்தது???



"அதானே பாத்தேன்...எங்கடா என் மேல பாசம் காட்றா மாறி நடிச்சிகிட்டு இருந்தாரே... அந்த வேஷம் மட்டும் இன்னும் கலையலயேன்னு..." ஏளனமாய் உதட்டை பிதுக்கியவளை கொன்று போடும் வெறி அவனுள்....



"போகலன்னா....ஐ மீன் இந்த கண்டிஷனுக்கு நீங்க ஒத்துகலனா....."



"...."



"உங்க புள்ளய உயிரோட பாக்க முடியாது" இதயம் அதிர்ந்தது அவனுக்கு....



ஏன் இப்படி மாறிப் போனாள்???



"இப்போ நீங்க கையெழுத்துப் போடுவீங்கன்னு நெனக்கிறேன்..."

என்றவள் தானே பேனாவையும் எடுத்துக் கொடுத்தாள்.



அவளை ஒரு தடவை கூர்ந்து பார்த்தவன் அடுத்த நொடி அதில் கையொப்பமிட்டு விட்டு நிமிர்ந்தான்.



அவன் கையொப்பத்தையே வெறித்துப் பார்த்தவள் அவன் நிமிரவும் சட்டென தன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.



விவாகரத்து பத்திரத்தை அவனிடம் ஒப்படைத்தவள்



"அப்பறம் மிஸ்டர்.மாறன்....உங்க வீட்ல இவ்வளவு நாள் தங்க அனுமதி கொடுத்ததுக்கு நன்றி....பணம் வேணும்னாலும் கொடுத்துட்றேன்"



'உன்னுடன் இருந்ததற்கு எவ்வளவு பணம்' என்று கேட்கிறாள்....



அடிக்க துடித்த கைகளை பேண்ட் பாக்கெட்டில் போட்டு தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்தவன்



"ஆதரவு இல்லாதவங்களுங்கு தங்கிக்க இடம் கொடுக்குறது எங்க பரம்பர வழக்கம் மிஸ்.ரிக்ஷிதா இராமநாதன்" அவன் வார்த்தைகள் சரியாகவே அவளை சென்று தாக்கியது.



உதட்டை கடித்து அழுகையை அடக்கியவள்



"ஓ...தேங்ஸ்...." குரலில் சுருதி இறங்கிப் போய் ஒலித்ததுவே அவன் நெஞ்சின் மூலையில் சுறுக்கென தைத்தது.



இருவரும் எதுவும் பேசவில்லை....

பேசத் தோன்றவில்லை என்பதுவே பொருத்தம்!!!



கதவு அடைபடும் சத்தத்தில் அவன் வெளியேறி விட்டதை உணர்ந்து கொண்டவளின் இதயம் கதறித் துடித்தது.



'அவ்வளவு தானா...எல்லாம் முடிஞ்சு போச்சில்ல தேவ்....நீயே கழுத்த புடிச்சு வெளிய தள்ளினாலும் உன்ன விட்டு போக மாட்டேன்னு சொன்னீங்களே தேவ்....எல்லாம் பொய்யா....???'



கத்தி அழ வேண்டும் போல் இருந்த உணர்வை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டவள் ஜடம் போல் அமர்ந்திருந்தாள்.





இரவு.....



ஒரு கையில் விலை உயர்ந்த மது பாட்டில் மறு கையில் தன் செல்ல தங்கையின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்துப் பிடித்து வெறும் கட்டாந்தரையில் வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் ரிஷிகுமார் தேவமாருதன்.



அந்த பெரிய கெஸ்ட் ஹவுஸின் வெளியே கேட்கும் எந்த கூச்சலுமே அவனுக்கு கேட்டதாகவே தெரியவில்லை....



ஆங்காங்கே சில மதுபாட்டில்கள் காலியாகியும் கீழே விழுந்தும் சிலது உடைந்தும் இருக்க அதன் நடுவே அமர்ந்திருந்தான் அவ்வாண்மகன்.



உருண்டு வந்த நீர்மணி ஒன்று அந்த போட்டோவில் விழுந்து அந்த சின்னஞ்சிறு சிட்டின் முகத்தை மங்கலாக்க அதனை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அப்படி நடந்தது கூட பொறுக்கவில்லை போலும்....



புறங்கையால் அதை அழுத்தத் துடைத்தவன் மறுபடியும் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.



அவன் உதடுகள் அவள் பெயரையே ஜபம் போல் உச்சரித்துக் கொண்டிருந்தன.



'ஆரா....ஆரா....'



தன் தங்கையின் சினுங்கல்....

கோபம்....செல்ல மிரட்டல்...

பிடிவாதம்...சிரிப்பு..எல்லாமுமாக சேர்ந்து அவன் காதை ஒன்றன் பின் ஒன்றாக வந்து தாக்க அதை கேட்க முடியாமல் காதை இறுக்கப் பொத்திக் கொண்டு "நோ...."என கத்தினான் அவன்....



"ணா...இந்த ஆருவ பாருணா..."



"அண்ணா எனக்கு இது வேணும்"



"உன்கூட கா...நா கோபமா இருக்கேன்"



"டேய் அண்ணா இப்போ என்கூட வரப் போறியா இல்லயா...?"



"ணா ப்ளீஸ்ணா...."



"அண்ணா இந்த ஆரு தடியனுக்கு அடி ணா....."



"அ...அ....அ....அண்ணா என்ன கா...

காப்பாத்துணா...பயமா இருக்குணா

பக்கத்துல யாருமே இல்லணா....

இருட்டா இருக்குணா....அண்ணா...." காற்றோடு கலைந்து போனாள் அவள்....



திடுக்கிட்டு விழித்தவனுக்கு வியர்த்து வழிந்தது.



அதே கனவு....

வருடங்கள் பல கடந்தும் துரத்திக் கொண்டே இருக்கிறது....



கையிலிருந்த பாட்டிலை தூக்கி தரையில் அடிக்க அது உடைந்து சிதறியது.



அந்த போட்டோவிற்கு முத்தம் கொடுத்தவன் அதை கட்டியணைத்தவாறே உறங்கியும் போனான்.



....



"டேய் மச்சான்....கதவ திறடா ப்ளீஸ்டா...." அவன் உறங்கியது தெரியாமல் தட்டிக் கொண்டிருந்தான் வருண்....



அவனுக்குப் பின்னால் ஆரவ்,சித்தார்த்,ரகு என அணைவரும் நின்றிருந்தனர்.



ஆரவ்வின் கண்களிலிருந்து விடாமல் வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்....



"வருண் அண்ணா....நீங்க இங்க பாருங்க நா இவன தோட்டத்துக்கு கூட்டிட்டு போறேன்" ரகுவும் வருணும் நின்றுவிட வரமாட்டேன் என அடம்பிடித்த ஆரவ்வை இழுத்துக் கொண்டு சென்றான் சித்தார்த்.



"ரகு...நாம வேணும்னா கதவ உடச்சிடலாமாடா?"



"ஓகே மச்சான்...இரு வந்துட்றேன்...."

என்றவன் ஏதாவது கிடைக்கிறதா என தேடிப் போனான்.



.....



"மச்சான் இங்கப் பாரு.... அண்ணாக்கு எதுவும் ஆகாதுடா.... சொல்றேன்ல....நம்புடா"



"ஆரு...."



"அ...ஆ...ஆராவோட பர்த்டே மச்சான் இன்னிக்கு"

என்றவன் குழுங்கிக் குழுங்கி அழுதான்.



அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்தவனுக்கும் கண்களில் ஈரம்...



"முடிலடா....என்னால எதையும் மறக்க முடில....நா உயிரோட இருக்கேன்...பட்...என்னோடவே பொறந்தவ என்கூட இல்லயேடா.....

கொன்னுட்டானுங்கடா...கசக்கிட்டானுங்க.... எப்பவும் என்கூடவே ஒட்டிகிட்டு இருப்பா... இப்போ..இப்போ.... முடில மச்சான் சத்தியமா முடிலடா.... ஒரு போலிஸ்காரனா அவளோட இறப்புக்கு தண்டன வாங்கி குடுத்துட்டாலும் ஒரு அண்ணனா அவ கூடவே பொறந்தவனா தோத்து பொய்ட்டேன் மச்சான்.... வலிக்குதுடா...."

அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அழுதவனுடன் சேர்ந்து தானும் அழுதுவிட்டான்.



.....



"வருண்....எதுவும் கிடைக்கலடா.... நாம ரெண்டு பேரும் சேர்ந்து உடைக்கலாம்"

என்றவனின் கூற்றை ஆமோதித்தவன்



"ரெடி....ஒன்...டூ...த்ரீ...." இருவரும் சேர்ந்து ஓடிப் போய் கதவுடன் மோத தடால் என்ற சத்தத்துடன் திறந்து கொண்டது அது....





இராமநாதபுரம்....



ஹாஸ்பிடலிலிருந்து வந்து கதவை சாற்றி தாழிட்டவள் தான்....அதன் பிறகு கதவு எவ்வளவு தட்டப்பட்டும் திறந்தாளில்லை....



அழுதழுது ஓய்ந்த தோற்றத்துடன் அவனைப் போலவே கட்டாந்தரையில் அமர்ந்து அதே நிலைவை வெறித்துக் கொண்டிருந்தாள் பேதை....



மனதின் ஓரத்தில் முணுக்முணுக்கென்று வந்து விட்டு போன வலியை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை....



இன்று காலையில் அந்த பைலை புரட்டிப் பார்த்தவளின் இதயம் அதிர்ந்த அதிர்வு அவளுக்கு மட்டுமே தெரியும்....



தன்னவன் ஒரு கொலைகாரன் என்பதை அந்தக் காதல் மனதால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை....



கொல்லப்பட்டவர்களின் குடும்ப ஓலம் அவள் காதுக்குள் இரைந்து கொண்டே இருந்ததில் அவன் மீதான வெறுப்பு இன்னுமின்னும் கூடிப் போயிற்று....



அவனுடைய குழந்தை எனும் நினைவே எட்டிக்காயாய் கசக்க வெறுப்புடன் முகத்தை சுழித்தாள் அவள்....



......



ஹாலில் அமர்ந்திருந்த அனைவர் முகத்திலும் கவலை அப்பிக் கிடந்தது....ஒருவரைத் தவிர....



((அது யாருன்னு உங்களுக்கு நா சொலித்தான் தெரியனும்னு இல்லயே நண்பா...

நீங்க நெனக்கிற ஆள்தான்...

மிஸ்டர்.இராமநாதன்....))



உதட்டில் வந்து மறைந்த ஏளனச் சிரிப்பை கண்ணாடி வழியாக கண்ட அஜய்க்கு மனது திக்கென்றது.



'இல்ல...இல்ல...இருக்காது....

எனக்கு தப்பா விளங்கி இருக்கலாம்...'

மனதில் உறுப்போடடுக் கொண்டவன் அவருக்கு தெரியாமல் அவரைப் பார்க்க மீண்டும் அதிர்ந்தது மனது....



"அஜய்..."

அம்மாவின் குரலில் திடுக்கிட்டு அவரை பார்த்து



"என்னமா?"என்றான் வருத்தமாக....



தன் மடி மீது படுத்திருந்த கயலின் கூந்தலை வருடிக் கொண்டே



"எனக்கு பயமா இருக்குடா...நீ ஒரு தடவ அவள பேசிப் பாரு...ஏன் தான் அவ வாழ்க்கைல மட்டும் இப்பிடில்லாம் நடக்குதோ...?"



"அவள கொஞ்ச நேரம் தனியா விடுங்கம்மா....அவள டிஸ்டர்ப் பண்ணாதீங்க..."



"அதுக்காக அவ டிவோர்ஸ் பண்ணினது சரிங்குறியா?"

ஆதங்கமாய் கேட்டார்.



"அதெல்லாம் எனக்கு தெரியாதுமா...பட் அவ விஷயத்துல தலை இடாதீங்க"



"என்னடா இப்பிடி பேசுற?"



"பின்ன..அவ ஒன்னும் ஒன்னும் தெரியாத பப்பி கிடையாது...அவ முடிவுல அவ தெளிவா இருக்கான்னா நீங்க தலயிடாம இருக்குறது தான் நல்லது"என்றான் திட்டவட்டமாக..



***



இது அவளுக்கு ஒன்பதாவது மாதம்....



அன்றைய நாளுக்கு பிறகு இருவருமே ஒருவரை ஒருவர் பார்ப்பதை தவிர்த்துக் கொண்டிருந்தனர்.



அவன் வேலை விஷயமாக இரண்டு மாதம் வெளியூர் சென்றிருந்துவிட்டு போன மாதம் தான் வந்திருந்தான்.



முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்....



பெண்கள் என்ன ஆண்களே பார்த்து பேச பயப்பட்டனர் என்று தான் கூற வேண்டும்....



எவ்வளவு தான் சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும் ஒரு வெறித்த பார்வை அவ்வளவே!!!



ஆபீஸில் ஒரு சின்ன தப்பு நடந்தாலும் அவர்களை கடித்துக் குதறிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான்.



கதிருக்கு சொல்லவே வேண்டாம்.... முதன் முறை அவனை எப்படிப் பார்த்து பயந்தானோ அதை விட நடுங்கிக் கொண்டிருந்தான்.



இவன் இப்படி இருக்க அவன் மனையாளோ அதை விட மோசமாக இருந்தாள்.



எப்போதும் எதையோ இழந்தவள் போல் நலிந்த தோன்றத்துடன் இருப்பவளை பார்த்து இரத்தக் கண்ணீரே வந்தது வீட்டினருக்கு....



முன்னைய கலகலப்பு,குறும்பு எல்லாமே அற்றுப் போய் கட்டாயத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்தாள் என்றே கூற வேண்டும்.



ரிஷியின் கொலை விஷயத்திற்கு சம்பந்தப்பட்ட யாருடைய முகத்தையும் ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை அவள்....



ஊரிலிருந்து வந்த அர்விந்துக்குத் தான் அவ்வளவு அதிர்ச்சி.....



வளகாப்பில் பெண்கள் பூரிப்புடன் இருப்பதையே கண்டிருந்தவனுக்கு தனது மாமன் மகளின் இந்த தோற்றம் பெரும் கவலையை உண்டாக்கியது.



.......



உறவினர் கூட்டம் சூழ இருக்கையில் அமர்ந்திருந்தாள் ரிக்ஷிதா....



தன்னையும் மீறி தன்னவைனை தேடி அலசிய கண்களை கஷ்டப்பட்டு தாழ்த்திக் கொண்டவளுக்கு அழுகையாய் வந்தது.



எல்லோரும் எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருக்கும் நாள்....



தனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிப் போனது???



சடங்கை ஆரம்பிக்க நினைத்த விஜயலக்ஷ்மியின் கண்கள் அடிக்கடி வாசல் புறம் சென்று மீள்வதை கண்ட வருண் அவரருகில் வந்தான்.



"மா...."



"என்னடா?"



"யாருக்காக வெயிட் பண்றீங்க.... இல்ல...அடிக்கடி வாசலையே பாத்துகிட்டு இருந்தீங்களா....அதான் கேட்டேன்"



"இல்லடா....தம்பி வர்றன்னு சொன்னாரு...அதான்...."



"வாட்...ஆர்.கே வர ஒத்துகிட்டானா?"



"நானே ரொம்ப கெஞ்சி கேட்டுகிட்டதால வர்றேன்னு ஒத்துகிட்டாரு... அவ வெளியில இப்பிடி இருந்தாலும்....அவளோட ஆழ்மனசுல இது ஏக்கமா பதிஞ்சு போயிட கூடாதுல... என்னதான் அவ மேல கோபம் இருந்தாலும் அவ உன் தங்கச்சிங்குறத மறந்துடாத கண்ணா...." குரல் தழுதழுக்க சொல்லிவிட்டு சென்றவரை பார்த்துக் கொண்டே இருந்தான் வருண்....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஜயா...."



"என்னங்க?"



"சொந்தக் காரங்க எல்லாம் வந்துட்டாங்க....சடங்க ஆரம்பிக்காம என்ன பண்ற?"



"இதோ வந்துட்டேங்க..."

என்றவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பட்டுவேஷ்டியின் கையை மடித்து விட்டவாறே கம்பீரமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் அவளவன்....



இதுவும் அவர் கெஞ்சியதால் மட்டுமே அணிந்திருந்தான்.



"வாவ்...." என்ற பெண்களின் சத்தத்தில் விழுக்கென நிமிர்ந்து பார்த்தவளின் பார்வை அவனிடமே நிலைகுத்தி நின்றது.



அவன் வேஷ்டி அணிந்து பார்ப்பது இதுவே முதல் தடவை....



ஏன் அவன் திருமணத்திற்கு கூட வேஷ்டி வேண்டாமென்று மறுத்தவன் தானே...



மூன்று மாதம் கழித்து இன்றைக்குத்தான் பார்க்கிறாள் தன்னவனை....



ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் தனது கூலிங் க்ளாஸை கழற்றி நடுவில் குத்தியவாறே நடந்து வந்து கொண்டிருந்தான்.



அவன் வருவது உணர்ந்தோ என்னவோ அவள் சிசுவும் குதூகலத்துடன் உள்ளுக்குள் வலம் வர சிலிர்த்தது அவள் தேகம்....



தன் நண்பனை அணைத்து விடுவித்த வருண்



"தேங்க்ஸ் மச்சி....ரொம்ப தேங்க்ஸ்...."

"சரி வா...." என உள்ளே அழைத்துச் சென்றவன் அவனருகிலேயே நின்று கொண்டான்.



கண்கள் கலங்க சடங்கை ஆரம்பித்திருந்தார் விஜயலக்ஷ்மி.



உறவுக்காரர்கள்,பெரியவர்கள் என அனைவரும் அவளுக்கு மஞ்சள் பூசி முடிக்க கடைசியாய் அவள் கணவன் முறை வந்தது.



அது நேரம் வரை மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவன் அனைவரது பார்வையையும் அலட்சியம் செய்தவாறு எழுந்து அவன் மனையாளை நோக்கி நடந்தான் உணர்ச்சி துடைத்த முகத்துடன்....



அவனையே பார்த்திருந்தவளின் முகத்திலும் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டு வெறித்துக் கொண்டிருந்தது பார்வை....



கீழே குனிந்து மஞ்சளை எடுத்து அவள் கண்ணங்களில் பூசியவனுக்குள் தீடீர் சிலிர்ப்பு....



அவளுக்குள்குள் அதே உணர்வுதான் போலும்....



கண்களை இறுக்க மூடிக் கொண்டவளின் மிக அருகாமையில் அவள் கணவன் முகம்....



மறு கண்ணத்திற்கும் பூசிவிட்டு நிமிரவும் படக்கென விழிகளை திறந்து தன்னவளை பார்த்தாள் பேதை...



இருவரது விழிகளும் நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டு விழிப்போர் நடத்திக் கொண்டிருக்க அதிலிருந்து சடடென தன்னை சுதாரித்தவன் விலகி நடந்தான்.



அருகிலிருந்த ஆரவ்வின் கைகளை இறுக்கப் பற்றியிருந்தவள் தன் அக்காவை நினைத்து அழுது கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.



"ஷ்...அம்மு அழக்கூடாதுமா...அதான் அண்ணா வந்தாருல்ல?"



"அஷ்விய பாருடா...ரொம்ப கஷ்டமா இருக்கு ஆரு"கதறினாள் பெண்.



"எல்லாம் சரியாகிடும் அம்முகுட்டி....நீ அழாத.... சரி வா வீட்டுக்குள்ள போலாம்"அவளை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் அவள் கணவன்.



அவளுக்கு தண்ணீர் அருந்தக் கொடுத்துவிட்டு அவளை தன் நெஞ்சில் சாய்த்தவன் அவள் முதுகை தட்டிக் கொடுத்தான்.



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்....



தன் சுழல் நாட்காலியில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான் ரிஷிகுமார்.



உள்ளுக்குள் நுழையும் போது ரசித்த தன் மனையாளின் தாய்மை பிம்பமே நெஞ்சில் நிறைந்திருந்தது.



எவ்வளவு தான் காயம்பட்டாலும் அவளை காணும் போது ரசிக்கத் தோன்றும் மனதுக்கு அவன் எப்போதுமே அடிமைதான்!!!



தான் நடந்து வருவதையே ரசித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் வந்து போன ஒரு நொடிக் காதலில் தொலைந்து போனவனின் மனது அவள் வயிற்றை பார்த்ததும் அப்படியே வடிந்து போயிற்று....



'ஏன்டி இப்படி நடந்துது...இது நடக்காம இருந்திருக்கலாமில்ல அஷு.... ரொம்ப வலிக்குதுடி.... உன்ன மறக்கனும்னு நெனச்சாலும் முடிலடி.... இன்னுமின்னும் ஞாபகம் வந்துகிட்டே இருக்கு.... நா இல்லாம இருந்துருவியாடி....நீ இருப்ப....பட் என்னால முடில கண்ணம்மா.... உன்ன விட்டு இருக்க முடிலடா....' கசப்பாய் அரற்றியது அவன் மனம்....



தலையை உழுக்கிவிட்டுக் கொண்டவன் கதிரை அழைத்தான்.



"எஸ்கியூஸ் மீ சார்"



"எஸ் கம் இன்..."



"எதுக்கு சார் கூப்டீங்க?"

எச்சிலை விழுங்கியவாறே கேட்டான் அவன்.



"மீட்டிங் அரேஞ்மண்ட்ஸ் எலலாம் ரெடி பண்ணிட்டீங்களா?"



"எஸ் சார்...."



"மூனு மணிக்கு தானே மீட்டிங்?"



"ஆமா சார்...."



"ம்...ஓகே....நீங்க போங்க நா இதோ வந்துட்றேன்"



"எஸ் சார்"என்றுவிட்டு கதிர் வெளியே செல்லவும் தன் கையை உயர்த்தி மணியைப் பார்க்க அது இரண்டு நாற்பத்தி ஐந்து என காட்டவும் மீண்டும் கண் முடி சாய்ந்து கொண்டான்.



***



தீடீரென கதவை திறந்து கொண்டு அனுமதி கேட்காமல் உள்ளே நுழைந்த யாழினியை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை....



அவன் முன் இருக்கையில் சட்டமாக அமர்ந்து கொண்டவள் அவனை கோபத்துடன் முறைத்தாள்.



பின்னே....எத்தனை தடவை தான் வந்து திரும்பிச் செல்வது???



மூன்று மாதமாக காலேஜுக்கு தாமதமாகத் தான் செல்கிறாள் அதுவும் இவனால்...



காலையுடனே வந்தாலும் இவனுக்காக காத்திருந்து காத்திருந்து அங்கு போக தாமதமாகிவிடுகிறது.



இன்று அவளும் வளகாப்புக்கு வந்திருந்தாள்....



திரும்பிக் கூட பார்க்கவில்லை அவளை.....



அந்த அபியுடன் மட்டும் இளித்துக் கொண்டு நின்றிருந்தான்.



அதனால் வந்த கோபம் அவளுக்கு...



"விஷ்வா...."என கத்தியவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன்....



"நா அன்னிக்கு அப்பிடி பேசினது தப்பு தான்.... அதற்கான தண்டய இத்தன மாசமா அனுபவிக்கிறேன்.. என்ன பாத்தா பாவமா இல்லயா?"

அப்பாவியாய் கேட்டவளின் முகத்தை பார்த்து விட்டு மறுபடியும் பைலை புரட்டினான்.



"ஏன்டா இப்பிடி பண்ற?" இயலாமையில் கண்ணீர் தேங்கியது அவளுக்கு...



அதைவிட அவனை முதல்முறையாக 'டா' போட்டு அழைக்கவும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடம்புரண்டது அவனுள்....



மனதிற்குள் மெல்ல சிரித்துக் கொண்டவன் அவளைப் பார்க்க அவளோ தலைகவிழ்ந்து படுத்திருந்தாள்.



அவளையே பார்த்திருந்தவன் அவள் நிமிரவும் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டான்.



"ப்ளீஸ் விஷு....என்னால சத்தியமா இதுக்கு மேல முடில.... இன்னிக்கும் காலேஜ் கட்"



"அதுக்கு நா என்ன பண்ண முடியும் மிஸ்.யாழினி?"



"நீங்க ஒன்னுமே பண்ணத் தேவயில்ல...."

கடுப்புடன் கும்பிட்டு விட்டு எழுந்து கொண்டாள்.



"ஐ லவ் யூ விஷு...பய்...."

என்றவள் வந்த வேகத்திலேயே

திரும்பி நடக்க அவன் உதடுகள் சிரிப்பில் துடித்தது.



போன் அழைக்க எடுத்து காதில் வைத்தான்.



"சொல்லுமா?"



"எதுக்குடா பாதியிலேயே போய்ட்ட?"



"கேஸ் விஷயமா அவசரமா வர வேண்டியதா போயிடுச்சுமா.... அதான்"



"ம்...சரிடா....வீட்டுக்கு எப்போ வர்ற?"



"என்னமா புதுசா கேக்குற?"



"கொஞ்சம் சீக்கிரம் வாடா"



"ஏம்மா...ஏதாவது ப்ராப்ளமா?"

பதற்றமானான் அவன்.



"பதட்டப்படாதடா...எல்லாம் நல்ல விஷயம்தான்... நீ வா பேசிக்கலாம்"



"இதானே வேணாங்குறது... சொல்லுமா"



"முடியாது...நீ வா"



"ம்....ஏதோ மறைக்குறீங்க...சரி வர்றேன்" என்று துண்டித்தவனுக்கு எவ்வளவு யோசித்தும் என்னவென்று கண்டு பிடிக்கவே முடியவில்லை....





வெற்றிவேல் யுனிவர்சிட்டி.....



"மச்சான்....ரித்து எங்க ஆளயே காணோம்?"



"அவளுக்கு பீவராம்டா...அதான் லீவு"



"ம்...."



"ஏன் மச்சான்... நாம இப்பிடியே வெட்டியா உக்காந்துகிட்டு இருந்து என்னத்த கிழிச்சோம்?"அவன் கேட்ட பாவனையில் பக்கென சிரித்துவிட்டான் ஆரவ்....



அவன் சிரிப்பையே ஆதூரத்துடன் பார்த்தவன்



"காலேஜ் விட்டு மூனு மணி நேரம் ஆகுது....நாம மட்டும் இன்னும் இங்கேயே இருக்கோம்...எதுக்கு இருக்கோம்னு தெரியாம இருக்கோம்"

அலுத்துக் கொணடான் அவன்....



"வீட்டுக்கு போ முடில மச்சான்" மீண்டும் கவலையாகி விட்டவனைப் பார்த்து பெருமூச்சு விட்டவன்



"சரி அத விடு....இப்போ சப்போஸ் அண்ணா திடீர்னு வந்து ஏன் இன்னும் கெளம்பலன்னு கேட்டா என்னடா சொல்றது?"



"உனக்கு இப்போ ஏன் அந்த டவுட்...அவரு வர மாட்டாரு...." ஆரவ் சொல்லி வாய் மூடவில்லை சர்ரென்ற சத்தத்துடன் அவர்கள் முன் வந்து ரிஷியின் ரால்ஸ் ராய்ஸ்.



இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு விட்டு எழுந்து நிற்க கூலிங் க்ளாஸை கலற்றிக் கொண்டே இறங்கியவன் அவர்கள் முன் வந்து மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு அவர்களை கூர்ந்து பார்த்தான்.



"இன்னும் கிளம்பாம இங்க என்ன பண்றீங்க?" நிதானமாக வந்து விழுந்தது வார்த்தைகள்.



"சும்மாதாண்ணா" சொல்லி வைத்தது போல் இருவரும் ஒரே பதிலை சொல்லி விட்டு மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



"எப்போ வீட்டுக்கு போறதா ஐடியா?"



"இதொ இப்போ கிளம்புறோம்ணா" என ஆரவ்வும்



"இன்னும் ஐடியாவே இல்லணா"என சித்தார்த்தும் உளற இருவரையும் பார்த்தவன்



"சீக்கிரம் கிளம்பி வீட்டுக்கு போங்க" என்று விட்டு செல்லவும் தான் இருவருக்கும் மூச்சே வந்தது.



பெரு மூச்சு விட்டு விட்டு மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் அவர்களின் செயலில் அவர்களுக்கே சிரிப்பு வர இணைந்து சிரித்தனர் இருவரும்.....



"நீ வீட்டுக்கு கிளம்பு சித்து...நா அண்ணா கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துட்றேன்"



"ஓகேடா பய்...."சித்தார்த் விடை பெற ரிஷியின் அலுவல் அறை நோக்கி சென்றான் ஆரவ்.



.....



"எஸ்கியூஸ் மீ சார்"



"கம் இன்..." என்றவன் உள்ளே நுழைந்த ஆரவ்வை பார்த்து வழமை போல் தன் புருவத்தை நீவி விட்டுக் கொண்டு



"வாடா...." என்றவன் கதிரையை சைகை காட்டினான்.



"ம்...சொல்லு என்ன விஷயம்?"



"ஒன்னில்லண்ணா சும்மா தோனிச்சு வந்தேன்"

என்றவனை பார்த்துவிட்டு அமைதியாகி விட்டான்.



"சாரிணா...."

திடுமென அவன் சொல்லவும் கண்கள் இடுங்க



"எதுக்கு?" என்றான் புரியாமல்....



"என்னால தாண்ணா எல்லாம்....நா அன்னிக்கு அந்த பைல ஹால்ல வெச்சிருக்கலன்னா....இவ்வளவு தூரம் வந்திருக்காதுல?"

சட்டென கலங்கி விட்டன அவன் கண்கள்....



"அப்பிடியெல்லாம் எதுவும் இல்லடா... நீ ஃபீல் பண்ணாத" சற்று இறுக்கம் தளர்ந்திருந்தது அவன் குரலில்....



"இல்லணா...."

என்றவனின் புறம் வந்து அவனை எழுப்பி வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தவன் தன்னோட சேர்த்து அணைத்துக் கொள்ள அவன் செயல் அவனின் சிறு வயதை ஞாபகப்டுத்தவும் அவனை கட்டிப் பிடித்தே கதறிவிட்டான் ஆரவ் தேவமாருதன்.



"ஐ மிஸ் யூ ணா...." என்றவனது வார்த்தையில் அதிர்ந்தது என்னமோ ரிஷிதான்...



தான் அவ்வளவு விலகியா இருந்திருக்கிறோம்???



நினைக்க நினைக்க மனம் பாரமாகவும் அவன் கைகள் தானாக அவன் முடியை வருடியது தாய்மையுடன்....



"ஆரு...சின்ன பசங்கள விட மோசமா இருக்கியேடா....முதல்ல அழறத நிறுத்து"



"ஐ அம் சாரி ஆரு..."



"இல்லணா தப்பு என்மேல தான்"



"அத விடுடா..."



"ரியலி சாரிணா.... இப்பிடி நடக்கும்னு நா எதிர்பாக்கல"



"அதான் விடுன்னு சொல்றேன்ல?"

என்றவன் அவனை விலக்கி அமர்த்தி தண்ணீரை குடிக்க கொடுக்கவும் தான் சற்று ஆசுவாசமானான்.



"நீ வீட்டுக்கு போ ஆரு..."



"...."



"நீ எதுக்காக கயல ஹேர்ட் பண்ணிகிட்டு இருக்க?"

என்றவனை அதிர்ந்து பார்த்தான் தம்பி.



"எனக்கு எல்லாம் தெரியும்....முதல்ல அவள போயி வீட்டுக்கு கூட்டிட்டு வா"



"...."



"என்னடா?"



"கூட்டிட்டு வந்துட்றேண்ணா"



"ம்...குட்"



"பட் நீங்க எதுக்காக வீட்டுக்கு வர்றதில்லணா... ப்ளீஸ் வாங்கணா...எல்லாதுக்கும் நான்தானே காரணம்னு எனக்கு கில்டியா இருக்கு"



"நீ போ....நா வர்றேன்"எனவும் அவனை அணைத்து விடுவித்தவன்



"ரொம்ப தேங்க்ஸ்ணா..." என்றான் மகிழ்ச்சியாக....



அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தில் பெரும் நிம்மதி அவனுக்குள்....



இலேசாக முறுவலித்தவன் அவன் தோளில் தட்டிக் கொடுத்தான்.





தொடரும்......

11-05-2021.
 
Status
Not open for further replies.
Top