All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'உயிரோடு கலந்தவள் 02' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ம்...சாப்புடு...." வேலையாள் கொண்டு வந்த தட்டை நீட்ட வாயை இரு கரங்களாலும் பொத்திய மனைவியை பார்த்து மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டவன் தானே அவளுக்காக ஊட்டி விட கையை நீட்டவும் அவனையே பார்த்திருந்தவள் தானாய் வாயை திறக்க ஊட்டினான் கணவன்....



"தேவ்...."



"ம்...."



"இ...இ...இந்த அ...அக்ற...."



"நோ கண்ணம்மா.... எனக்கு எல்லோரையும் விட நீதான் முக்கியம்.... இது குழந்தைக்காக இல்ல....என்னோட பொண்டாட்டிக்காக..... " அவளை பேசவிடாது பேசினான்.



"எப்பொவும் சொல்றது தான்டா.... குழந்தை மேல பாசம் இருக்கு அதுக்காக அது வந்த உடனே உன் மேல இல்லன்னு ஆயிடுமா.. அன்னக்கி.... ஆக்ஸிடன்ட் பட்டப்போ எனக்கு நீ வேணும்னு கேட்டது குழந்தைக்காக வா...?" இல்லையென தலையாட்டினாள் பெண்....



"இல்லல்ல.... அப்போ கூட குழந்தை இருந்துதானே.... இருந்தும் நீ தான் வேணும்னு தானே நான் கேட்டேன் பிகாஸ்.... எனக்கு எதுவுமே இல்லன்னாலும் நீ மட்டும் போதும்டா.... குழந்தையோட உன்ன கம்பேர் பண்ணாத.... அவங்க வேற நீ வேற.... புரிஞ்சுதா?" ஆமென தலையாட்டியவளை பார்த்து புன்னகைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து விட்டு காலியாகி இருந்த சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு எழுந்தான்.



முன் செய்த தவறை ஒரு போதும் செய்து விடக் கூடாது என்றதில் உறுதியாக இருந்தவன் குழந்தையை பற்றிய பேச்சையே எடுக்க மாட்டான்....



இந்த வழியில் தான் டாக்டர் அர்ஜுனிடம் அவளை பற்றி அவள் செய்கைகளை பற்றி கேட்டு அறிந்து கொண்டவனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை....



***



ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ்.....



நேரம் ஒரு மணியை கடந்தும் தன்னை விடாது இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கும் கதிரை ஏறிட்டாள் மது.



காலையில் அப்படி அவள் சொன்னதன் பின் வேலை பற்றி வேறு எதுவுமே அவன் பேசவுமில்லை.... அவளை பேச விடவுமில்லை....



ஒரு வித இறுக்கமாய் அமர்ந்திருப்பவனிடம் பேசவே பயமாக இருந்தது.



'மூணு மணிக்கு ரிசப்ஷன வெச்சிட்டு இவன பாக்கனும்குறதுக்காக ஆபிஸ் வந்தேனே....எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்....'



"கதிர் சார்... மணி ஒன்னாகுது... வீட்டுக்கு போனும் ப்ளீஸ்" சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தவன் பைலை மூடி வைத்து விட்டு



"யூ கேன் கோ மதுமிதா" என்றான் எங்கோ பார்த்து....



"சாரி....ப்ளீஸ் சாரி கதிர் சார்"



"எதுக்கு?"



"இல்ல...நா...."



"ஒர்க் விஷயம் இல்லன்னா நீங்க போலாம்" வெளியே செல்லுமாறு கையை காட்ட கலங்கிய கண்களை மறைத்து திரும்பி நடக்க அவளையே வெறித்தான்.



அவன் மனம் என்ன நினைத்துத் தொலைக்கிறதென்று அவனுக்கே புரியவில்லை....



மனைவியையும் குழந்தையையும் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என மறுத்து விட்டு ஏனிந்த கோபம்???



அவ யார் கூட இருந்தா எனக்கு என்ன???



விடை தெரியாமல் கோபம் தான் அதிகமாய் வந்தது.



***



மணி மாலை மூன்று....



ஹோட்டல் சம்யுக்தா......



மக்கள் நிரம்பி வழிய மின்னிக் கொண்டிருந்தது அந்த செவன் ஸ்டார் பிரம்மாண்ட ஹோட்டல்....



குழந்தைகள் அங்குமிங்கும் ஓடித் திரிய கலகலத்து பேசிக் கொண்டிருந்தனர் பெண்களும் ஆண்களும்....



தன்னுடையது போலவே வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தான் தி கிரேட் பிஸ்னஸ் மேக்னட் ரிஷிகுமார் தேவமாருதன்!!!



அனைவர் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடிக் கொண்டிருக்க அடிக்கடி தன் மனையாள்களில் மீதே சென்று வந்து கொண்டிருந்த கணவன்மாரது பார்வைகளில் மாற்றி மாற்றி தங்களுக்குள் கலாய்த்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.....



வெள்ளை நிற ஷர்ட்டுக்கு மேலால் தன் கருப்பு நிற கோர்ட்டை போட்டிருந்த அந்த சிறிய வாண்டு தந்தையிடம் ஓடி வர கிட்டத்தட்ட ஒரே ஜாடையில் இருந்த இருவரையும் மாறி மாறி பார்த்திருந்த அனைவருக்கும் புரிந்து போனது அது யார் மகவென்று....



யாதவ் தேவமாருதன்!!!



"டாட்...." வருணுடன் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென கீழே குனிந்து அவனே தூக்க



"விடுங்க டாட்.... என் ஷர்ட் கசங்குது பாருங்க" கோபப்பட்ட மகனை பார்த்து வாய் விட்டு சிரித்தனர் அனைவரும்....



"மச்சி....உன் கூட போட்டி போட வந்துட்டான் டா" புன்னகைத்தான் நண்பர்களில் ஒருவன்....



"கசங்குதுன்னு சொல்றேன்ல.... விடுங்க டாட்" திமிறிய மகனை சிரித்துக் கொண்டே கீழே இறக்கியவன் அவன் உயரத்திற்கு மண்டியிட்டான்.



"என்ன யாதவ்.... வட் டு யூ வான்ட்?"



"மாம்ம தேடினேன்.... காணோம்... அதான் தேடி வந்தேன்"



"அவ....எங்க" நாளா புறமும் கண்களை அலசியவன் பார்வை வாசலில் நிலைத்தது.



"வருண் இவன அஷு கிட்ட விட்டுடு டா" பதிலுக்கு கூட காத்திருக்காமல் வாசலை நோக்கி நகர குழப்பத்துடன் தானும் அதே திசையில் பார்த்த வருண் அதிர்ந்து போனான்.



வந்திருந்தது ஆத்மிகா மற்றும் ராஜன்.....



.....



"ஹலோ மிஸ்டர்.ராஜன்...." கைகுலுக்கி புன்னகைக்க தானும் புன்னகைத்தார் அவர்.



"வா ஆத்மிகா...." அவளிடமும் ஸ்னேகமாக சிரிக்க



"சாரி தேவா...." மன்னிப்பு யாசித்தாள் அவள்....



"அப்போ என்ன ப்ரண்டா நினக்கல அப்பிடி தானே?"



"இல்ல இல்ல அப்பிடி இல்ல...."



"அப்போ எதுக்கு சாரி கேக்குற?"



"சாரி சாரி.... இனிமே கேக்க மாட்டேன்...."



"எத்தன சாரி.... வா உள்ள....வாங்க ராஜன்...." முன்னால் நடந்தவனை நிறுத்தினார் அவள் தந்தை....



"ஆத்மிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கேன் மாறன்....."



"கங்க்ராட்ஸ்...." திரும்பி வாழ்த்த மனமார ஏற்றுக் கொண்டு புன்னகைத்தவளையும் அவரையும் அழைத்துக் கொண்டு போய் அமர வைத்து விட்டு வந்தவனை வாயை பிளந்து கொண்டு பார்த்திருந்தான் வருண்....



"வாய மூடுடா...."



"என்னடா நடக்குது இங்க?"



"பாத்தா தெரில?"



"அது தெரிது.... என்ன இதெல்லாம்?"



"எதெல்லாம்?"



"டேய் கடுப்பேத்தாம சொல்லு" அவன் கடுப்பை கிளப்பிய பின்னரே நடந்த அணைத்தையும் கூறி முடிக்க நண்பனை இறுக்க தழுவிக் கொண்டான் வருண் விஷ்வா.



"ஐ அம் ப்ரவுட் ஆப் யூ டா மச்சான்"



.....



"மாம்....." தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த மகனை கூட கவனிக்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாள் காரிகை....



"மாம்...ப்ளீஸ் ஹியர் மீ மாம்"



"...."



"மாம்....டாட் கிட்ட போறேன்....மாம் ஏன் இப்படி பண்றீங்க.... நா கோபமா இருக்கேன்"



"கொஞ்சம் இரு கண்ணா வந்தட்றேன்"



"ஒரே நிமிஷம் நா சொல்றத கேளுங்க மாம்"



"ம்...சரி சொல்லு" செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு கீழே அமர்ந்தாள்.



"உங்கள எந்த ஒர்க்கும் பண்ண விட கூடாதுன்னு டாட் எனக்கு சொல்லி இருக்காங்க.... வாங்க நாம போய் உட்காந்துக்கலாம்"



"கண்ணா....ப்ளீஸ் டா"



"ஊஹூம் வாங்க.... ராத்திரி ஸ்ட்ரிக்டா சொன்னாரு...."



"என் பேச்ச கேளுடா.... அந்த கமாண்டர் அப்பிடி தான் சொல்லுவான்"



"பரவாயில்ல வாங்க.... இல்லன்னா நா டாட் கிட்ட போயி சொல்லுவேன்"



"ஓகே ஓகே.... வர்றேன் வா" கை பிடித்து நடந்தவள் போய் ஓரமாக அமர்ந்து கொண்டாள்.



"மாம்...."



"என்ன கண்ணா?"



"டாடும் நீங்களும் ரகு அங்கிள் மாறி தான் நின்னுட்டு இருந்தீங்களா?"



"ம்...ஆமாடா.... கயலும் ஆருவும் கூட இருந்தாங்க"



"ஓஹ் வாவ்.... சித்தப்பாவுமா?"



"ம் ஆமா கண்ணா.... பட் உங்க டாட் என் மேல கோபமா இருந்தாரு அன்னக்கி"



"ஏன்?"



"அவருக்கு பீவரா இருந்தது எனக்கு தெரில.... நா உன் க்ரேனி வீட்ல இருந்தேன்.... ஆரு தான் சொன்னான்... ஆரு சொல்லலன்னா என்ன பாக்க வந்திருக்க மாட்டியான்னு கேட்டு சண்ட போட்டாருடா"



"அதுக்கு ஏன் மாம் சண்ட போடனும்.... யாரு சொல்லி இருந்தாலும் சொல்லலன்னாலும் நீங்க அவர பாத்துகிட்டீங்கல்ல...?"



"ம்...ஆமாடா"



"தென் வொய் ஆங்க்ரி?"



"அந்த கமாண்டருக்கு என் மேல கோபப்படலன்னா உறக்கம் வராதுடா" கிளுக்கிச் சிரித்த மகனுடன் இணைந்து தானும் நகைத்தாள் பாவை....



.....



"கதிர்.... மீட்டிங்க கேன்ஸல் பண்ணதுக்கு அவங்க கோபப்பட்டாங்களா?" தனியாக நின்றிருந்த கதிரை தன் பேச்சுக்குள் இழுத்தான் ரிஷி.



((அடேய் அடேய்....ரிசப்ஷன்ல நின்னு கிட்டு கேக்குற கேள்வியா இது....உன் தொழில் பக்திக்கு ஒரு அளவு வேணாமாடா???

இவன்லாம் எந்த டிஸைனோ???))



"எஸ் சார் கோபப்பட்டாங்க...."



"ப்ராஜக்ட் என்னாச்சு?"



"வேற கம்பெனிக்கு கொடுக்க போறதா பேசிகிட்டாங்க...."



"ஓஹ்....இட்ஸ் ஓகே கதிர்.... விடு பாத்துகலாம்"



"ம்....அப்பறம்...." என்றவனின் பேச்சு கடந்து செல்லப் போன மதுவை தடுத்து நிறுத்தியதில் தடைபட்டது.



"மது....கம் ஹியர்"



"என்ன அத்தான்?" வந்து நின்றவளின் அழகில் ஒரு நிமிடம் உறைந்து சட்டென தன்னை சுதாரித்த கதிரை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் வேண்டுமென்றே சன்ஜய்யையும் அழைக்க எரிச்சலை அப்பட்டமாய் வெளிப்படுத்தினான் கதிர்.



"எஸ் சார்?" சாருக்கு வேண்டுமென்றே அழுத்தம் கொடுத்த நண்பனை கண்களால் மிரட்டியவன்



"மது சன்ஜய்ய பத்தி என்ன நினைக்கிற?" என்றான் சம்பந்தமே இல்லாமல்....



"ஏன் அத்தான்?"



"உனக்கு அவன புடிச்சிருக்கா?"



"ம்....புடிக்குமே"



"குட்.... சன்ஜய் உன்ன லவ் பண்றதா ஆனந்த் கிட்ட சொல்லி இருக்கான்.... ஆனந்த் இப்போ தான் என் கிட்ட பேசினான்... நானும் ஒகேன்னு சொல்லிட்டேன்" கதிர் மது இருவரது முகத்தையும் கூர்ந்து பார்த்தபடி கேட்க கலங்கிய கண்ணீரை அவள் மறைத்ததும் கதிரின் இறுகிய முகமும் அவன் பார்வையில் சிக்கியது.



"ரகு-வசு கல்யாணம் இன்னும் ஒன் வீக்ல இருக்கு.... அப்போவே உன் கல்யாணத்தையும் வெச்சிகலாம்னு இருக்கேன்" அவனை எதிர்த்துப் பேச முடியாமல் கதிரை ஏறிட்டு பார்த்தவள் அவன் வேறெங்கோ பார்வையை பதித்திருப்பது கண்டு உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.



"நா வர்றேன் அ...அத்தான்" தொண்டை அடைக்க அதற்கு மேல் நிற்க முடியாதவளாய் சென்றவள் மீதே பார்வையை பதித்திருந்தவன் ரிஷி மற்றும் சன்ஜய்யின் குரலில் நடப்புக்கு வந்தான்.



"கதிர்..."



"...."



"கதிரவன்"



"ஹாங் சார்.... சாரி"



"அப்பிடி என்ன யோசன?"



"ஒன்னில்ல சார்.... நா கிளம்புறேன்"



"ஹே இரு சாப்புட்டு போ"



"நோ சார்....எனக்கு க...கொஞ்சம் வேல இருக்கு...." ஏதோ பேசப் போனவன் அவன் செல்வது கண்டு சிரித்துக் கொண்டே சன்ஜய்யிடம் திரும்பினான்.



"மச்சி.... இப்போ கூட வாய திறக்க மாட்டேங்குறான்டா"



"ஐயா இப்போ போயி நல்லா யோசிக்கட்டும்.... அப்போவாவது ஒத்துகுறானான்னு பாக்கலாம்...."



"எனக்கென்னமோ இது ஒர்க் அவுட் ஆகும்னு தோனல ஆர்.கே"



"நோ டா.... ஐம் ஷூர்..... இந்த ஒன் வீக்ல கதிர் நிச்சயமா மதுவ புரிஞ்சுக்குவான்"



"எப்பிடி டா இவ்வளவு உறுதியா சொல்ற?"



"அதெல்லாம் அப்பிடி தான் மச்சான்.... வா...." அவனுடன் இணைந்து நடந்தான் சன்ஜய்.....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"வசு" காதிற்கருகில் குனிந்து கிசுகிசுப்பாய் அழைத்தான் ரகு....



"ம்..."



"இப்போ ஒனக்கு சந்தோஷமா?"



"ம்..."



"என்ன ம்...ம்குற... ஏதாவது பேசு"



"எல்லோரும் நம்மலயே பாக்குறாங்க சார்...."



"நம்ம தான் இன்னிக்கு ஹீரோ ஹீரோயின்னா நம்மல தானே பாப்பாங்க?"



"அய்யோ கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க ப்ளீஸ்"



"ஏன்...உன் பக்கத்துல நிக்க கூடாதுங்குறியா?"



"ப்ச்...நா அப்பிடி சொன்னேனா?"



"பின்ன...நீ சொல்றதுக்கு அதானே அர்த்தம்?"



"ஏன் தான் இப்பிடி பண்றீங்களோ.... ப்ளீஸ்...." கண்களால் கெஞ்ச அவளிடையில் கையிட்டு தன்னுடன் இன்னும் இறுக்க கூச்சத்தில் நெளிந்தாள் பெண்....



"ரகு என்ன பண்றீங்க.... ப்ளீஸ் விடுங்க"



"முடியாது"



"ப்ளீஸ் ப்ளீஸ்...."



"முத்தம் கொடு விட்றேன்"



"என்ன...முத்தமா...?"



"ம்...எஸ்"



"ஏன் ரகு படுத்துறீங்க.... ப்ளீஸ்"



"...."



"அப்போ அ...அப்பறமா தர்றேனே...."



"வாக்கு மாற மாட்டியே?"



"இ...இல்ல...எடுங்க கைய" அவள் நெளிந்து கொண்டிருப்பதை சற்று நேரம் ரசித்தவன் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை கூட்டிய பிறகே விட்டான்.



......



"ஹே...மது...என்னமா என்னாச்சு.... ஏன் அழற?" ஓரமாய் அமர்ந்து கொண்டிருப்பளை கண்டு அருகில் வந்தவன் தங்கை அழுது கொண்டிருப்பது கண்டு பதறினான்.



"மது....என்னமா என்னாச்சு... யாராவது ஏதாவது சொன்னாங்களா?"



"...."



"மதூ....என்னமா ஆச்சு?"



"அ...அ....அண்ணா"



"என்னமா?"



"நா...நா...எனக்கு சன்ஜய் வேணாம்"



"சன்ஜய்யா?"



"ம்.... அ...அத்தான் க...கல்யாணம்னு சொன்னாங்க?"



"யாருக்கு மா?"



"சன்ஜய் கூட"



"ஓ காட்....மது..." குனிந்திருந்தவளை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்



"யாரு சன்ஜய்.... எனக்கு எதுவும் புரியல.... யாருக்கு யாரோட திருமணம்?" குழம்பிப் போய் கேட்டான்.



"சன்ஜய்ய உங்களுக்கு தெரியாதா?"



"இல்லயேமா"



"அப்போ அத்தான் உங்க கிட்ட சன்ஜய் வந்து கேட்டதா சொன்னாங்களே?" சட்டென நின்று போனது மீண்டும் மீண்டும் வழிந்து கொண்டிருந்த கண்ணீர்.....



"அண்ணாவா?"



"ம்..." என்றவள் தனக்கும் கதிருக்கும் இடையில் நடந்தது தொடங்கி அன்று ரிஷி அன்று கேட்டது, சன்ஜய்யின் வரவு முதல் இப்போது ரிஷி சொன்னது வரை ஒன்று விடாமல் கூற தெளிவாக புரிந்து அவனுக்கு, ரிஷியின் காய் நகர்த்தல் திட்டம்....



"ஸோ நீ கதிர லவ் பண்ற?"



"ஆ...ஆமா"



"அப்போ ஏன் அண்ணா கேக்கும் போது சன்ஜய்ய புடிச்சிருக்குன்னு சொன்னமா?"



"அப் கோர்ஸ் எனக்கு சன்ஜுவ புடிக்கும்ணா..."



"ஆஸ் அ ப்ரண்டா ரைட்?"



"ம்...."



"இத அங்கேயே சொல்லி இருந்தீன்னா கதிர் உனக்காக பேசி இருப்பாரே?"



"எனக்கு புரில"



"நீ புடிக்கலன்னு சொல்லி இருந்தா கதிர் அவரோட லவ்வ ஒத்துகிட்ருப்பாரு.... இப்போ நீ புடிச்சிருக்குன்னு சொன்னதால.... அதுவும் இன்னிக்கு நீ பர்ஸனல்னு வேற சொல்லி இருக்க.... எல்லாமா சேர்ந்து கோபத்த ஏற்படுத்தி இருக்கனும்.... அதான் அமைதியா நின்னிருப்பாரு...."



"கதிர் என்ன லவ் பண்ணவே இல்லணா" மீண்டும் வழிந்தது கண்ணீர்....



"ப்ச் அழாத....எல்லாம் சரி ஆகும்" புரிய வைக்க முயற்ச்சிக்காமல் ரிஷியின் திட்டம் படியே நடக்கட்டுமென விட்டு விட்டான்.



***



அந்த ஒரு வாரம் எப்படி கழிந்ததென யாருக்குமே புரிபடவில்லை....



ரிசப்ஷன் பிறகு வந்த மூன்று நாட்கள் மது ஆபிஸ் பக்கமே வராமல் இருக்க அன்றிரவு நன்றாக யோசித்து தன் காதலை உணர்ந்திருந்தவன் அதை சொல்லவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்துக் கொண்டிருக்கவும் முடியாமல் தவித்துப் போயிருந்தான்.



அவனுக்கு அவள் வேண்டும்.... ஆனால் அவள் மனதில் சன்ஜய் இருக்கிறானே???



இப்படித் தான் எண்ணிக் கொண்டிருந்தது கதிரின் மனசாட்சி....



முதல்லயே தூக்கி போட்டுட்டு இப்போ என்ன???



இடித்துரைத்த மனசாட்சிக்கு என்ன பதில் கூறுவதென்றே புரியவில்லை அவனுக்கு....



அதன் பிறகு வந்த நாட்களில் அவள் ஆபிஸ் வந்திருந்தாலும் ஓரிரு வார்த்தைகளை தவிர வேறு எதுவும் அவனைப் பார்த்து பேசவே இல்லை அவள்....



நாளை திருமணம்!!!



இப்போது அவன் ரிஷியிடம் சென்று பேசாவிட்டால் மாற்றான் மனைவியாகி விடுவாள் என அறிந்தவன் அவசரமாக தன் முதலாளியை தேடிச் சென்றான்.



.....



"கண்ணம்மா சாப்டியா?" தன் கேபினில் அமர்ந்து மனையாளிடம் பேசிக் கொண்டிருந்தான் ரிஷி.



"ம்....ஆமா தேவ்....ஆச்சு"



"குட்.... ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காத...."



"ஓகே சார்"



"நான் ஒனக்கு சாரா?"



"உங்க கம்பெனில வேல செய்ற எல்லோரும் அப்பிடிதானே அழக்கிறாங்க?"



"அவங்களும் நீயும் ஒன்னாடி லூசு?"



"ஏன் என்ன வித்தியாசமாம்?"



"அவங்க ஸ்டாப்ஸ்.... நீ...."



"நான்?"



"நீ எனக்கே எனக்கானவ" காதலாய் சொன்னாலும் அதில் தெரிந்த பிடிவாதத்தில் சிலிர்த்தது பெண் தேகம்.



"எதுவுமே பேசமாட்டேங்குற?"



"ஒன்னில்ல.... வீட்டுக்கு சீக்கிரமா வந்துடுங்க"



"வர்றேன் கண்ணம்மா....லவ் யூ டா.....டேக் கேர்.... பய்" துண்டித்து நிமிரவும் கதிர் உள்ளே வர அனுமதி வேண்டவும் சரியாக இருந்தது.



"கம் இன்...." உள்ளே நுழைந்த கதிரின் முகத்தை ஆராய்ந்து அவன் மனதை படித்தவனின் இதழ் கடையோரம் சிறு நகை படர்ந்தது.



"வா கதிர்....உட்காரு... வாட் ஹபெண்ட்?"



"சார்...நா மதுவ...." சட்டென இடைமறித்தான் ரிஷி....



"நீ மதுன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது.... நாளைக்கு ரகுவோட கல்யாணத்த சேத்து மத்த இரண்டு ஜோடிகளோடதயும் வெச்சிருக்கோம்ல.... அதுக்கான இன்விடேஷன்" மூவருடைய திருமண பத்திரிகைகளை அவன் புறம் நகர்த்த மேலே வைக்கப்பட்டிருந்த மதுவின் திருமண பத்திரிகையை கண்டதும் சட்டென எழுந்து விட்டான்.



"ஏன் கதிர் என்னாச்சு?"



"ந....ந...நத்திங் சார் நா...நான் நான் கெளம்புறேன்" நகரப் போனவனை தடுக்க அப்படியே நிற்கவும் எழுந்து அவனருகில் வந்தவன் தோள் மீது கை வைத்து மதுவின் திருமண பத்திரிகையை கைகளில் திணித்து திறந்து பார்க்குமாறு சைகை செய்ய நடுங்கியது உள்ளம்....



முடியுமா அவனால்???



"ஜஸ்ட் பாருடா" அவன் மீண்டும் வற்புறுத்தவே நடுங்கும் கை கொண்டு திறந்தவன் அதிர்ந்து திரும்பினான் ரிஷியிடம்....



"சா...சார்...இ...இது?"



"கதிர் வெட்ஸ் மது... நல்லாருக்கா?" கண் சிமிட்டி கேட்டவனை பாய்ந்து கட்டிக் கொண்டான் பீ.ஏ கதிரவன்....



"லவ்வ ஒத்துக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதா இருக்கு.... கடைசியில கூட ஒத்துக்க மாட்ட நீ?" சட்டென விலகியவன் உணர்ச்சி வசப்பட்டு கட்டியணைத்தது புரிந்து



"சாரி சார்...." என்றான் அவசரமாக....



"என் பொண்டாட்டி கிட்ட போட்டு குடுக்க மாட்டேன்டா.... பயப்படாத" கண் சிமிட்ட சிரித்தான் கதிர்.



"அண்ட் மதுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது"



"எஸ் சார்" அவன் புன்னகை மீண்டும் விரிய திரும்ப ஒரு தடவை அணைத்து விடுவித்தவன்



"கங்க்ராட்ஸ்" என்றான்.



"தேங்க்ஸ் சார்" தலையசைத்தவன் தன் இடத்திற்கு செல்ல வெளியேறினான் கதிரவன்....



***



திருமண மண்டபம்....



அந்த பிரம்மாண்ட கல்யாண மண்டபம் ஜகஜ்ஜோதியாய் மின்னிக் கொண்டிருக்க மகனை மடியில் அமர்த்தி மனைவியை தோள் வளைவுக்குள் வைத்தவாறு கம்பீரமாய் அமர்ந்திருந்தான் ரிஷிகுமார் தேவமாருதன்.....



மூன்று ஜோடிகளும் ஒரே வரிசையில் அமர்ந்திருக்க பெண்ணை அழைத்து வர அய்யர் கட்டளையிடவே அழகுப் பதுமைகளாய் வந்த மூவருள் கதிரின் வருங்கால மனைவியின் முகம் மட்டும் அழுதழுது வீங்கி இருக்க அவளை பார்த்து தனக்குள் சிரித்தான் கதிரவன்....



"கெட்டி மேளம் கெட்டி மேளம்" தங்கள் இணையின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு நிமிர கதிரின் கைகளில் பட்டுத் தெறித்தது அவனவளின் கண்ணீர்த் துளி!!!



அவளுக்குத்தான் கதிர் அருகில் இருக்கிறானென்று இன்னுமே தெரியாதே!!!



மெல்ல தலையை நிமிர்த்தியவள் தூரத்தே நின்று கட்டை விரலை உயர்த்திக் காட்டிய சன்ஜய்யை பார்த்து அதிர்ந்து சடாரென திரும்பினாள் அவன் புறம்!!!



அவன் தானா??? ஒருவேளை கனவோ???



"கனவு இல்லடி நிஜம்.... நான் தான் உனக்கானவன்.... அவன் இல்ல" அவள் கண்களுக்குள் ஊடுருவி சொல்ல கரகரவென வழியத் துவங்கியது கண்ணீர் உதட்டில் உறைந்திருந்த சிரிப்புடன்....



.....



பிடித்திருந்த பிடியில் அழுத்தத்தை திடீரென கூட்டிய கணவனை சட்டென நிமிர்ந்து நோக்கினான் பாவை....



கண்கள் கலங்கி சிவந்திருந்தது.



"தேவ்.... ரிலாக்ஸ்...." மன உணர்வை புரிந்து கொண்டவளாய்....



"அப்பா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரு அஷு"



"உங்க அப்பாம்மா ஆசிர்வாதம் அவளுக்கு எப்பொவும் இருக்கும்... கண்ட்ரோல் யூர் செல்ப் தேவ்....நீங்க இப்பிடி கலங்கறத கண்ணுடானா அவளும் அழ ஆரம்பிப்பா... தேவ்.... எங்க போயிட போறா.... நம்ம கூட தானே இருப்பா..." தங்கையும் ஆனந்தும் தங்களை நோக்கி எழுந்து வரவே சட்டென தன்னை இழுத்துப் பிடித்தவன் சடாரென எழுந்து நிற்க தூரத்திலிருந்த ஆரவ்விடம் ஓடினான் யாதவ்....



"எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கண்ணா" குனியப் போனவர்களை நிறுத்தி இரண்டடி பின்னால் நகர்ந்தவனுக்கு கோபம் துளிர்த்தது.



"என்ன பண்றீங்க இரண்டு பேரும்"



"எனக்கு கடவுள் மாதிரினா நீ.... அப்போ உன் கிட்ட தானே ஆசிர்வாதம் வாங்கனும்" கண்கலங்க கூறியவளை சட்டென இழுத்து அணைத்து விடுவித்தவன் ஜீவாவையும் அணைத்தான்.



"என் ஆசிர்வாதம் எப்போவும் உனக்கு இருக்கும்டா.... பட் இந்த கால்ல விழறது வேணாமே"



"சரிணா...." சந்தோஷமாய் தலையாட்டியவள் மீண்டும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.



***



இரவு எட்டு மணி....



வலப்பக்கத்தில் மனைவியையும் இடப்பக்கத்தில் மகனையும் வளைத்து அணைத்தவாறு கட்டிலில் சாய்ந்திருந்தான் ரிஷி.



"டாட்...."



"என்னடா?"



"பாப்பா எப்போ வரும்" அவன் கேள்வியில் மனைவியை குனிந்து பார்த்தவன் அவள் வேறு ஏதோ யோசனையில் இருப்பது கண்டு நெற்றி சுருக்கி விட்டு



"அது.... இன்னும் கொஞ்ச நாள்ல உங்க கூட விளயாட வரும் கண்ணா...."



"ஜாலி...."



"நா கூட இல்லன்னாலும் மாம நல்லா பாத்துகனும் கண்ணா"



"ஷூர் டாட்...."



"மாம்...மாம்...."



"...."



"அஷு...." கணவனும் அழைக்கவும் தான் கலைந்தாள் பாவை....



"என்ன தேவ்?"



"யாது கூப்டுகிட்டே இருக்கான்...."



"ஓஹ் சாரிடா கண்ணா.... என்ன?"



"நாளைக்கு பீச்சுக்கு போலாமா?"



"போலாம்டா" அப்போதும் இயந்திரமாகத் தான் சொன்னாள்.



"டாட் மாம் வர்றேன்னு சொல்லிட்டாங்க.... போலாமா?"



"ஓகேடா...." மனைவியையே யோசனையாய் பார்த்தவன் கடிகார முள் ஒன்பது என மணியடித்து நிரூபிக்க இறுகியது அவன் முகம்....



எல்லாம் முடிந்து விட்டது....



இப்போது அவன் சென்றே ஆக வேண்டிய கட்டாயம்!!!



இந்த நொடி மீண்டும் வருமா என்றெல்லாம் தெரியாது.....



ஆனால் இது நிரந்தரம் இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக மனம் கூக்குரலிட வளைத்திருந்த கரங்களில் அழுத்தத்தை கூட்டி விடுவித்தவன் எழ முயற்சிக்க திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள் பெண்....



இந்த நேரம் வரக் கூடாது என்று தானே வேண்டிக் கொண்டிருந்தாள்....



இதோ இப்போது அந்த ரிப்போர்டரிடம் செல்லப் போகிறான்....



மனம் தவிக்க கண்கள் சட்டென கலங்கவே



"யாது நாம வ...வெளில போலாமா" அவனை பாராது மகனுடன் எழுந்து சென்று விட நெஞ்சு அடைத்தது அந்த ஆறடி ஆண்மகனுக்கு....



இருவரும் சென்றால் சென்று விடலாம் என நினைத்தான் தான் ஆனால் இப்போது அவர்களே சென்றும் அவனால் எழக் கூட முடியவில்லையே!!!



ஆழப்பெருமூச்செடுத்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு எழுந்தவன் தடதடவென படிகளில் இறங்கி வெளியே வர தோட்டத்தில் மனையாளும் மகனும் நிற்பது கண்டு அங்கு செல்ல கால்கள் பரபரத்தாலும் வலுக்கட்டாயமாக காரினை நோக்கி நடந்தவன் ஏறி விறுட்டென கிளப்ப மழுக்கென கண்ணத்தை தொட்டது கண்ணீர் அவனவளுக்கு!!!



தொடரும்.....



03-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11 [ A ]



«பிரபல இளம் தொழிலதிபர் மீது கொலை குற்றம்!!!



பிரபல இளம் தொழிலதிபர் ரிஷிகுமார் தேவமாருதனின் மீது சுமத்தப்பட்ட கொலை குற்றத்தை தொடர்ந்து தான் தான் கொலை செய்ததாக வாக்குமூலமளித்திருக்கும் நபர் குறித்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது»



இளம் செய்தியாளர் ஒருவர் தன் குரலை மக்களுக்காக வழங்கிக் கொண்டிருக்க தன் ஐபேடில் அது குறித்து பார்த்துக் கொண்டிருந்தவன் இருக்கையை தள்ளி விட்டு சடாரென எழுந்து நின்றான்.



'ஓ காட்.... வாட் ஹபெண்ட்.... யாரு வாக்குமூலம் கொடுத்திருப்பா???யாரு கேஸ் போட்டது???'



தன் மீது கொலை குற்றம் சுமத்தியவரையும் தெரியாது தனக்காக தன் குற்றத்தை ஒப்புக் கொண்டவனையும் தெரியாது குழம்பிப் போனவனுக்கு நேற்றிரவு நடந்தது ஞாபக அடுக்குகளில் தோன்றி மறைந்தது.



.....



தோட்டத்தில் மகனும் மனைவியும் இருப்பது தெரிந்தாலும் வலுக்கட்டாயமாக தன் கால்களை எட்டிப் போட்டவன் காரை கிளப்ப மனைவியின் அலறல் சத்தத்தில் காரை நிறுத்தி விட்டு சடாரென கதவை திறந்து அவளை நோக்கி ஓடி வந்தான்.



.....



கணவன் காரை கிளப்பவும் தேங்கி இருந்த கண்ணீர் மழுக்கென கண்ணீரை தொட



"தானா குற்றத்த ஒப்பு கிட்டா காப்பாத்துறது ரொம்ப கஷ்டமாகிடும்" அண்ணன் வார்த்தைகள் காதில் மீண்டும் ரீங்காரமிடவே



"நோஓஓஓஓஓ" காதை இறுக்க மூடி தன்னையும் மீறி வீறிடவும் நடுங்கிப் போனான் மகன்.



"மாம்...." அவனும் அழத் துவங்க அருகில் வந்த தந்தையை பாய்ந்து கட்டிக் கொண்டு தேம்பி அழவும் முதுகை ஆதரவாக வருடிக் கொடுக்க அவள் கத்திய சத்தத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர் ஆரவ்வும் கயலும்....



((நண்பா மத்த மூணு ஜோடிங்கள தேட்றீங்கன்னு புரிது....

பட் அவங்கள உங்க ஹீரோ ஹனிமூனுக்காக சிம்லாக்கு டிக்கட் போட்டு அனுப்பி வெச்சிட்டாரு....



ஸோ....நாமலும் அவங்களுக்கு தனிம கொடுத்துட்டு இங்க நிலவரத்த பாக்கலாமா???))



"என்னாச்சு கா.... என்னாச்சு அஷ்வி?" கேட்டுக் கொண்டே அருகில் வந்து நின்ற தங்கையை கட்டிக் கொண்டு தாங்க மாட்டாமல் அழ மகனும் மனைவியும் எதற்காக அழுகிறார்கள் என தெரியாமல் தவித்துப் போனான் அந்த ஆறடி ஆண் மகன்!!!



"அக்கா....என்னாச்சு ஏன் அழற?"



"என்னாச்சுணா.... யாது அழறானா?"



கயல் கேட்ட கேள்விக்கு அவளோ ஆரவ் கேட்ட கேள்விக்கு அவனோ பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்க



"அக்கா.... என்ன ஆச்சு?" தலையை தடவி மீண்டும் கேட்டாள் கயல்விழி.



"அஷ்வி என்னாச்சு?" நண்பி அழுவது பொறுக்காமல் தானும் கேட்டான்.



"அ...அஷு....என்னடா ஆச்சு?" மகனின் முதுகை ஆதரவாக தடவியவாறே அப்போது தான் வாயை திறந்த கணவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள்



"எ...எ...என் கூடவே இ....இரு... இருக்கீங்களா.... தேவ்.... ப்ளீஸ்..... உ...உங்கள கு...கும்பிட்டு க....கே..." கரம் குவித்து கும்பிடப் போனவளை



"அஷ்வினி" உறுத்து விழித்தவனின் கத்தலில் திடுக்கிட்டு மீண்டும் அழுத யாதவ்வை தன் கைளில் சட்டென வாங்கிக் கொண்ட ஆரவ்விற்கு புரிந்து போனது நண்பியின் கண்ணீருக்கு காரணம்......



"யாது....ஒன்னில்ல ஒன்னில்ல..... கயல் வா" யாதவ்வை தோளில் போட்டவாறு மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு உள்ளே சென்ற தம்பியை பார்த்துக் கொண்டிருந்தவன் அனல் தெறிக்க திரும்பினான் மனைவியிடம்....



"இடியட் இடியட்.... ஏன் இப்பிடி நடந்துக்குற?" தலையை அழுத்தக் கோதி தன்னை சமன்படுத்த முயன்றும் முடியாமற் போக கத்தி விட்டான்.



அப்போதும் அவள் அமைதியாகவே முகத்தை மூடி அமர்ந்திருக்க அவள் முன் மண்டியிட்டவன்



"என்னடா....என்ன ஆச்சு....?" அவளுக்காக இறங்கி வந்தான்.



"அஷு.....நா எங்கேயும் போகல.... வா" எழுந்து அவளையும் அழைத்துக் கொண்டு தங்களறைக்கு வந்தவன் அவளை அமர வைத்து தானும் அருகில் அமர்ந்தாலும் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன் மனையாள்.



"அஷு என்னாச்சு.... ஏன் கத்துன?"



"...."



"ஹோய்...." அவள் தாடயை நிமிர்த்த அவள் கண்களில் தெரிந்த தவிப்பில் கலங்கிப் போனவன் சட்டென தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தான்.



"நா உன் கூடவே எப்போவும் இருப்பேன்.... ப்ளீஸ் இப்பிடி பாக்காத கண்ணம்மா.... என்னமோ மாறி பீல் ஆகுது"



"எங்க கிளம்பி போனீங்க?" தன்னை கட்டுப்படுத்தியவளுக்கு நேரம் ஆக ஆக கோபம் கனன்று கொண்டிருந்தது.



"அ...அ...அது....அது... சின்ன வேல"



"ஒஹ்....இன்னிக்கு என் கூட இருப்பீங்கல்ல... எங்கேயும் போக கூடாது"



"....."



"முடியாதா?" அப்போதும் கூட அவன் முகம் காண மறுத்தாள்....



அவ்வளவு கோபமாய் வந்தது கணவன் மீது.....



அது எதுவுமே கவனிக்கும் நிலையில் தான் அவன் இல்லையே....



'நாளைக்கு ரவிய மீட் பண்ணலாம்' முடிவெடுத்து விட்டு திரும்பியவனுக்கு அப்போதும் கூட மனைவி மீது சந்தேகம் வரவே இல்லை.....



இல்லை இல்லை அவன் அது பற்றி யோசிக்கவே இல்லை.....



"போகலடா" இயந்திரமாய் மொழிந்தவன் அவளை தன் வளைவுக்குள்ளேயே வைத்திருக்க விநாடிகள் கழித்து தான் தெரிந்தது அவள் அப்படியே உறங்கி விட்டிருப்பது.....



அவளை விட்டு விலகி எழுந்தவன் நேராக உறங்க வைக்க அவன் கையை பிடித்துக் கொண்டு அனத்தியவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய அவள் செய்கையில் குழம்பிப் போனவன் அவள் தலைமாட்டில் அமர்ந்து தன்னவள் தலையை மடிமீது ஏந்தி தலை கோதினான்.



"ப்ளீஸ் போகாதீங்க தேவ்....ப்ளீஸ்.... ஐ நீட் யூ தேவ்..... நீங்க பக்கத்துல இல்லன்னா என் மொத்த தைரியமும் போயிடும் தேவ்.... ப்ளீஸ் தேவ்...."



"ஷ்....எங்கேயும் போகலடா....உன் கூடவே தான் இருக்கேன்" அமைதிப்படுத்திய கணவன் குரலில் அப்படியே அடங்கிப் போயிற்று அவனவளின் குரல்....



.....



காலையிலும் அவனை தவிர்த்தவள் ஆபிஸ் போயே தீருவேன் என அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டவன் தானும் கிளம்பி வந்திருக்க அதற்குள் தான் இச்செய்தி கேட்டு சடாரென எழுந்திருந்தான்.



'ஒரு வேலை அஷுவோட வேலயா இருக்குமோ' அப்போது தான் சந்தேகமே தோன்றியது போலும் கணவனுக்கு.....



அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கதவு தட்டபட



"கம் இன்...."அனுமதி வழங்கவும் பதற்றமாய் உள்ளே நுழைந்தான் சன்ஜய்....



ரிஷியின் தற்காலிக பி.ஏ....



"மச்சான் வெளில மீடியா வந்திருக்குடா" பதற்றமாக கூறியவனின் வார்த்தைகளில் தன் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்த்தவனுக்கு வாழ்க்கையில் முதல் முறையாக அடுத்த என்ன செய்யவென்றே தோன்றவில்லை....



'தான் என்ன நினைத்தால் என்ன நடந்து கொண்டிருக்கிறது?'



"ச்செஹ்....." எரிச்சலானான்.



"வாட் ஹபெண்ட் மச்சி..... என்ன நடக்குது.....யாரு உன் மேல கேஸ் போட்டிருக்கறது....?"



"அத அப்பறமா சொல்றேன்....நீ மீடியா மீட்டிங்குக்கு அர்ரேன்ஜ் பண்ணு"



"வாட்.... இட்ஸ் டேன்ஜரஸ் மச்சான்.... இப்போ அவங்க கிட்ட நீ விளக்க போனேன்னா சிக்கலாயிடும் டா"



"யாரு கேஸ் போட்டது அண்ட் யாரு வாக்குமூலம் கொடுத்து ஒத்துகிட்ருக்கதுன்னும் பாரு" அவன் பேச்சை இவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை....



"மச்சான் நா சொல்றது புரி...." கையமர்த்தி தடுத்தவனுக்கு ஏன் இப்படி நடக்கிறதென்பதே ஓடிக் கொண்டிருந்தது.



"நா சொன்ன வேலைய செஞ்சிட்டு மீட்டிங்குக்கு அர்ரேன்ஜ் பண்ணு" மீண்டும் நெற்றிப் பொட்டை அழுத்தத் தேய்க்க அவனையே பார்த்திருந்தவன் வேறு வழியின்றி ஒரு பெரு மூச்சுடன் வெளியேற அனுமதி வேண்டாமலேயே கதவை திறந்து கொண்டு திடீரென உள்ளே நுழைந்தான் அவன் சகோதரன்.....



"ஆரு...." அவனை எதிர்பாராது அதிர்ந்து போனான் அண்ணன்.



"மிஸ்டர்.ரிஷி.... மீடியா மீட்டிங்க கேன்ஸல் பண்ணுங்க" பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி கட்டளையிட்டவனை ஆழ்ந்து பார்த்தவன்



"ஸோ.... நீ இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகி இருக்க....?" என்றான் ஊடுருவும் பார்வையில்....



"ஆஃப் கோர்ஸ் மிஸ்டர்.ரிஷி.... வாக்குமூலம் கொடுத்திருக்கறது நான் ஏற்பாடு பண்ண ஆளு தான்"



"குட்.... சப்போஸ் மீடியால நா ஒத்துகிட்டா?"



"நா அதுக்கு விட மாட்டேன்"



"ஏன்?"



"பிகாஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க கோர்ட்டுக்கு ஆஜராகனும் மிஸ்டர்.ரிஷி.... அதுக்கு இடைல உங்களுக்கு யாரையும் சந்திக்க அனுமதி கிடையாது" தன் காக்கித் தொப்பியை சரி செய்தவாறே கூறியவன் தன் ஆர்டரை அவனிடம் நீட்ட மேலுயர்ந்தன அவனவளின் புருவங்கள்!!!



"ஓகே தென்.... உங்க ஆர்டருக்கு கட்டு பட்றேன்...." மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டான்.



"தேங்க் யூ மிஸ்டர்.ரிஷி.... ஷல் வீ கோ?" ஆமோதிப்பாய் தலையசைக்க



"மச்சான்...." மீண்டும் உள்ளே நுழைந்தான் சன்ஜய்....



"ஓஹ்...சாரி.... நா அப்பறமா வர்றேன்...." வெளியேறப் போனவனை தடுத்தது ரிஷி அல்ல ஆரவ்....



"இட்ஸ் ஓகே.... யூ கேரி ஆன்...." சற்றே நகர்ந்து நின்று கொள்ள சொல் என்பது போல் நண்பனை பார்த்தான் ரிஷி.



"மச்சான் கேஸ் போட்டிருக்கது ராகேஷோட சித்தப்பா....ரிடயர்ட் ஆக போற போலிஸ் ஆபிஸர்..... வாக்கு மூலம் கொடுத்திருக்கறது யாருன்னு கண்டு பிடிக்க முடிலடா" அவன் சொல்ல சலேரென தம்பியின் புறம் திரும்பியவனின் உதடுகள் புன்னகைத்தன.



"மீடியா மீட்டிங்க கேன்ஸல் பண்ணிடு.... ஐ ஹேவ் டு அப்பியார் தேர் ஆஸ் பேர் தி கோர்ட் ஆர்டர்...."



[[ I have to appear there as per the court oder - கோர்ட் ஆர்டருக்கு ஏற்ப நான் அங்கு ஆஜராக வேண்டும் ]]



"வாட்....என்னடா சொல்ற....?" அதிர்ந்து போனான் நண்பன்....



"ஐல் மேனேஜ்டா"



"பட்.... முன்னால மீடியா இருக்கேடா... அவங்கள தாண்டி எப்பிடி போவ.... ஆரவ் வேற போலிஸ் யூனிபார்ம்ல வந்திருக்கானே?" சன்ஜய் பேசுவது கேட்கவும் சட்டென திரும்பியவன்



"நாம பார்கிங் ஏரியா பக்கத்தால போலாம்ணா" என்றான் தீவிரமாக...



வந்ததில் இருந்த ரிஷி எனும் அழைப்பு தனக்கு ஏதும் ஆகி விடக் கூடாது என்பதில் அண்ணனாக மாறிப் போனது புரிந்து வசீகரமாய் சிரித்தான் அவன்....



"ப்ச்.... நான் என்ன ஜோக்கா சொல்லிட்ருக்கேன்.... வாங்க என் கூட" கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே வந்தவன் அண்ணனை ஏற்றி காரை கிளப்பினான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெட்ராஸ் உயர்நீதி மன்றம்....



«பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பிரபல தொழிலதிபரின் கொலை குற்ற வழக்கிற்கு இன்றே தீர்ப்பு எதிர்பார்கப்படுகிறது....



குற்றவாளி சார்பில் அவருக்காக வாதாடப் போவது யார் என்ற கேள்வி மக்களுக்குள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது... ஸ்கை செய்திகளுக்காக உங்கள் ஜெனீபர்»



ஜேர்னலிஸ்ட் ஒருவர் மைக்கை பிடித்துக் கொண்டு கேமிரா முன் பேசிக் கொண்டிருக்க எதிர் எதிர் திசையில் இருந்து உள்ளே நுழைந்தது ஆரவ்வின் போலிஸ் வண்டியும் அவனவளின் நீல நிற ஹைபிருட்டும்....



அங்குமிங்கும் நின்று கொண்டிருந்த மக்களுக்குள் சட்டென ஒரு பரபரப்பு....



"டேய் அது லாயர் அஷ்வினி மேமோட கார் தானே.... அவங்களா வாதாட போராங்க?" நின்று கொண்டிருந்த ஒருவன் தன் அருகில் இருப்பவனிடம் கிசுகிசுக்க ஒரே நேர்கோட்டில் நின்ற இரு வாகனங்களில் இருந்தும் கதவை திறந்து கொண்டு இறங்கினர் கணவனும் மனைவியும்.....



வீறு கொண்ட பெண்ணாய் தன் முன் நின்றிருந்த மனையாளின் தோற்றம் இது வரையில் அவன் கண்டிராதது....



முகம் இறுகிப் போய் அவனை அனல் தெறிக்க பார்த்தவள் தன் பீ.ஏ மீராவுடன் உள்ளே செல்ல அவளையே பார்த்திருந்தவனின் உதட்டில் விஷமப் புன்னகை....



அதற்குள் மீடியா வளைத்திருக்க அவனை காப்பது போல் வந்து நின்ற கறுப்பு நிற உடையணிந்த பாடிகார்டின் மீதே நின்றிருந்த அனைவர் கவனமும் பாய அண்ணன் கையை சட்டென பற்றி இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டான் ஆரவ்.



.....



மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் பார்வை தன்னவளை விட்டு இம்மியும் நகர மறுத்தது.



நீதிபதி வந்தமரவே அவருக்கு சற்றே முன் அமர்ந்திருந்த கோர்ட் ரிப்போர்டர் எழுத ஆயத்தமாக அதற்காகவே காத்திருந்தவர் போல்



"கேஸ் நம்பர் 04...." உரக்கக் கத்தினார் கிளார்க்....



பெண்ணவள் எழுந்து நின்று துவங்க அனுமதி வேண்டி நிற்க



"ப்ரஸீட்...."



[[Proceed - துவங்கு / தொடரு.... ]]



அவர் சைகை செய்யவே தன் கணீர் குரலில் பேசினாள் பாவை.....



"மை லார்ட்....

இந்தியால ஒரு வருஷத்துல ஒரு நாளைக்கு மட்டுமே கிட்டத்தட்ட 80 மர்டர்ஸ், 289 கிட்னாபிங்ஸ் அண்ட் 91 ரேப் அடம்ப்ஸ் நடக்குதுன்னு NCRB

( National Crime Records Bureau ) ரெக்கார்ட்ஸ் பதிவுகள் இருக்கு....



ஆனா எத்தன மர்டர் கேஸஸ், கிட்னாபிங்ஸ் ஆர் ரேப் அடம்ப்ஸ் நடந்து இருக்குன்னு இங்க இருக்கவங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லயான்னு எனக்கு தெரியாது....



பட் கடந்த ஆறு மணி நேரமா எல்லா சேனல்ஸ் அண்ட் நியூஸ் பேப்பர்ஸ்ஸ எடுத்து பாத்தா மொத்த இந்தியாவுலேயே இந்த ஒரே ஒரு கொலை மட்டும் தான் நடந்தா மாதிரியும் அதற்கு என் கட்சிக்காரர் மீது மட்டும் தான் பழி சுமத்தப்பட்டா மாதிரியும் தான் நியூஸ் பரவிட்ருக்கு....



தி பேமஸ் பிஸ்னஸ் மேன் சார்ஜ்ட் வித் மர்டர்....

[[ The Famous businessman charged with murder - பிரபல தொழிலதிபர் மீது கொலை குற்றம்....]]



வெதர் ஹீ அக்ஸப்ட் இட் ஆர் ரிஜக்ட்....

[[ Whether he accept it or reject - அதை அவர் ஏற்றுக் கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா? ]]



குட் ஹீ பீ த ஒன் ஹூ கன்ஃபெஸ்ட் தட் ஹீ டிட்...



[[ Could he be the one who confessed that he did - தான் செய்ததாக வாக்குமூலம் அளித்தவர் இவர் ஆளாக இருக்குமோ? ]]



எக்ஸட்ரா....எக்ஸட்ரா.....தி கைன்ட் இன்பர்மேஷன் யூர் ஆனர்....



எதிர்கட்சி தரப்பினர் சொன்ன எந்த குற்றச் சாட்டுகளுக்குமே ஒரு சாட்சியோ ஒரு ஆதாரமோ கிடையாது....நான் தான் குற்றம் செஞ்சேன்னு வந்து நின்ன பாலாவ கண்டுக்காம... தானே எப்.ஐ.ஆர் பைல் பண்ணது ரிடயர் ஆக போற போலிஸ் ஆபிஸர் மிஸ்டர்.முருகன்....



ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டும் அவர தட்டிக் கழிச்சு என் கட்சிக்காரர் மீது பலி சுமத்தி இருக்கறத நான் வன்மையாக கண்டிக்கிறேன் யூர் ஆனர்.... ஆதாரமே இல்லாத...." அவனவள் பேசிக் கொண்டிருக்கும் போதே



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்...."

மேசையை தட்டி விட்டு எழுந்தாள் எதிர் தரப்புக்காக வாதாட இருந்த அந்த பெண் வக்கீல்....



"எஸ் ப்ரஸீட்...."



[[ Yes proceed - ஆம் தொடரு.... ]]



நீதிபதி அனுமதியளிக்க துவங்கினாள் அவள்...



"மை லார்ட்....

என் கட்சிக்காரர் மிஸ்டர்.ரிஷிகுமார் மீது வீணாக பலி சுமத்தவில்லை என்பதை முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன்.....



இறந்து போன மிஸ்டர்.ராகவன் அக்ஷயா மற்றும் ஜெய் மீது மிஸ்டர்.ரிஷிகுமாருக்கு ஏற்கனவே கோபம் இருந்திருக்கு....அத வெச்சி...."



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்...." திடீரென இடையிட்டாள் பெண்....



"எஸ் ப்ரஸீட்...."



"எதிர் தரப்பு வக்கீல் சொல்றது போல என் கட்சிக்காரருக்கு இறந்து போனவங்க மேல எந்த கோபமுமே இல்ல.... இன்பாக்ட்.... அவங்க காலேஜ்ல இருந்தே நல்ல ப்ரண்ட்ஸ்.....அப்பறம் ஏன் அவங்க மேல இவருக்கு கோபம் வரணும்?"



"பிகாஸ் மிஸ்டர்.ராகேஷ் மீது இவருக்கு கோபம் இருந்ததால அவர சேர்ந்தவங்கள கொன்னுட்டாரு"



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்....



இப்போ தான் அவங்க மூணு பேரு மேலயும் கோபம் இருக்குன்னு சொன்னா....இப்போ என்னடான்னா இறந்து போனவர் மேல இருக்க கோபத்த அவங்க மேல காட்டினன்னு சொல்றா....வாட் இஸ் திஸ்...." எள்ளல் வழிந்தது அவள் குரலில்....



"மை லார்ட்....

இறந்து போன மிஸ்டர்.ராகேஷ் கண்ணா மீது இவருக்கு கோபம் இருந்ததுங்கறதுக்கான ஆதாரம் இதோ இருக்கு...." அதே எள்ளல் பார்வையை பெண்ணவள் மீது வீசியவள் தன் அஸிஸ்டனின் கையிலிருந்த பெண்ட்ரைவ்வை க்ளார்கிடம் ஒப்படைக்க திரையில் விரிந்தது அன்று காலேஜில் உண்மை தெரிந்த பின் கோபமாக ரிஷி ராகேஷை அடித்த வீடியோ....



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்....

இந்த சம்பவத்திற்கு முன்னாடியும் பின்னாடியும் என்ன நடந்துதுன்னு நீங்க பாத்திங்கன்னா அவர் கோபத்துக்கான நியாயமான காரணத்த நீங்களே பாப்பீங்க....." பெண்ணவளின் கூற்றில் திக்கென அதிர்ந்து போனது அந்த பெண் வக்கீல் மட்டுமல்ல.... கொலை குற்றம் சுமத்தி கேஸ் போட்ட முருகனும் தான்....



"மீரா...." தன் பீ.ஏ விடம் திரும்பி அதற்கான ஆதார பென்ட்ரைவை எடுத்தவள் தானும் ஒப்படைக்க அதே நாளில் அனு வந்து சொத்துப் பத்திரத்தை நீட்டி நடித்தது முதல் கடைசியாக ராகேஷிடம் அதை தூக்கி எரிந்து விட்டு வந்தது வரை பதிவாகி இருக்க படபடத்துப் போனது எதிர் தரப்பினருக்கு....



"மை லார்ட்....

என் தே... க்கும்... என் கட்சிக்காரர் மிஸ்டர்.மாறன் மீது எந்த தப்புமே இல்லன்னு இந்த ஒரு வீடியோ ஆதாரமே நிரூபிக்குது.....

என் கட்சிக்காரரின் சொத்தை ஏமாற்றி வாங்குனதும் இல்லாம அவரோட தங்கை உயிரோடவே இல்லன்னும் நம்ப வெச்சிருக்காங்க...."



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்....



ஒரே ஒரு ஆதாரத்த வெச்சு என் கட்சிக்காரர் அவர் மீது சுமத்தி இருக்க குற்றம் செல்லுபடியாகாதுன்னு சொல்றத நான் கண்டிக்கிறேன் மை லார்ட்....



இதற்கான இன்னொரு விட்னஸ் எங்க கிட்ட இருக்கு....அதையும் பாத்துட்டு உங்க தீர்ப்ப சொல்லுங்கன்னு நா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் யூர் ஆனர்....." அவள் பேசப் பேச பெண்ணவள் புருவம் இடுங்கியது.



"எஸ்..." அவர் அனுமதி வழங்க



"மிஸ்டர்.ரிஷிகுமார் கொலை செய்தத தன் கண்ணால பாத்ததா இருக்க விட்னஸ் என் கட்சிக்காரர் தான் மை லார்ட்...." அவள் சொல்லி முடிக்க ஏதோ எழுத கையெடுத்தவரை தடுத்து நிறுத்தினாள் காரிகை....



"ஆப்ஜெக்ஷன் மை லார்ட்....

போலிஸ் அதிகாரிகள் விட்னஸா இருக்க முடியாதுங்குற அந்த சின்ன விஷயம் கூட என்னோட எதிர் தரப்பு வக்கீலுக்கு தெரியாம இருக்கறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு" இதழ் கடையோர பெண்ணவள் எல்லள் சிரிப்பில் கொதித்துப் போனவளுக்கு வேறு வழியே இல்லாமல் அகப்பட்ட உணர்வு!!!



'ச்சேஹ்....' மனதிற்குள் குமுறியவள்



"மை லார்ட்....

குற்றத்தை தான் தான் செய்ததாக வாக்குமூலம் அளித்தவர் என்ன காரணத்துக்காக கொலை செஞ்சார்னு தெரிஞ்சிக்கலாமா?" அவளை வெற்றி பெற விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் சட்டென பேச்சை மாற்றினாள் அந்தப் பெண் வக்கீல்....

அவள் எண்ணம் புரிந்தோ என்னவோ மனதிற்குள் சிரித்தவள் குற்றத்தை ஒப்புக் கொண்ட பாலாவின் புறம் திரும்பினாள்.



"அவரை கேள்வி கேக்றதுக்கு அனுமதி அளிக்கிறேன் மை லார்ட்...." அவனவள் ஒதுங்கிக் கொள்ள பாலாவின் பக்கம் தன் கேள்விக் கனைகளை ஏவினாள் பெண் வக்கீல்....



"என்ன காரணதுக்காக கொலை செஞ்சீங்க?"



"என் பொண்ண அந்த ஜெய்யுங்கறவன் கற்பழிக்க முயற்சி பண்ணான்....அதனால தான் கொன்னேன்" ஆரவ் சொல்லிக் கொடுத்ததை அச்சுப் பிசகாமல் அப்படியே ஒப்பித்தவனை பார்த்து சிரிப்பு வந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டவள் முகத்தை தீவிரமாக மாற்றினாள்.



"இப்போ உங்க பொண்ணு?"



"அவ மனநல காப்பகத்துல இருக்கா...."



"யூர் ஆனர்..... இவர் பொண்ணு கற்பழிக்கப்பட்டாவா இல்லயான்னே சந்தேகமா இருக்க நேரத்துல இவர் சொல்றதுல ஏன் பொய் இருக்க கூடாது?" ஏதோ சாதித்து விட்டவளை போல் அவனவளை இகழ்ச்சியாய் நோக்க கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் திடீரென இடையிட்டாள்....



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்....

எந்த ஒரு தந்தையுமே தன் மகளோட கற்பு விஷயத்துல பொய் சொல்ல மாட்டாங்க....

அண்ட் ஐ.பி.ஸி செக்ஷன் 100 படி



[[ 100 OF IPC - Right of private defence of the body and of property

ஐ.பி.ஸி செக்ஷன் 100 - உடலையும் உடைமையையும் தற்காத்துக் கொள்ளும் உரிமை ]]



அதாவது தற்காப்பு உரிமைகள்ல தன்னை தாக்க வந்தவர கொலை செய்யும் சந்தர்ப்பம் வந்தால் தாக்கியவர் குற்றவாளியாக மாட்டாரு...."



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்....

ஐ.பி.ஸி செக்ஷன் 100 கரெக்ட் தான் பட் இங்க தாக்குனது இவரோட பொண்ணு இல்லயே இவர் தானே....

ஸோ அதெப்பிடி ஐ.பி.ஸி செக்ஷன் 100 கீழ வர முடியும்?"



"யூர் ஆனர் மிஸ்டர்.பாலோவோட பொண்ணு ஏன்கனவே மனநலம் சரி இல்லாதவங்க....கொஞ்சம் சரியானப்போ இவரு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க அதற்குள்ள இப்படி நடந்துடுச்சு....ஸோ.... யூர் ஆனர்.... தன்னை காத்துக் கொள்ள தனக்கு சக்தி இல்லாதப்போ அடுத்தவங்கள துணைக்கு அழக்கிறது தான் யதார்த்தம்....



ஐ.பி.ஸி செக்ஷன் 100 ல தன்னோட பாதுகாப்பு மட்டுமில்லாம அடுத்தவங்களோட பாதுகாப்புக்கு நாம உதவி பண்ணலாம்னும் போட்டிருக்கு.....



அதனால என் கட்சிக்காரர் பாலா அவரோட மகளுக்காக போராடி இருக்கது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே தவிர தண்டனை கொடுக்கப்பட வேண்டியது இல்ல...."



"ஆப்ஜெக்ஷன் யூர் ஆனர்.....



ஜெய்ய விட்டாலும் இறந்து போன மத்த இரண்டு பேருக்கும் என்ன சொல்ல போறாங்க?"



"மை லார்ட்....

பணக்காரங்களா பிறந்தா தப்பு பண்ணி இருப்பாங்க அப்பிடீங்குற மென்டாலிட்டி இன்னும் இருந்துகிட்டு தான் இருக்கு....



ஏன் ஏழைகள் தப்பு பண்ண மாட்டாங்களா?



என் எதிர் தரப்பு வக்கீல் கேட்ட கேள்விகளை பத்தி ஏற்கனவே நாம விவாதிச்சிட்டோம்....அவங்க கிட்ட சரியான ஆதாரம் கூட இல்லங்குற பட்சத்துல இத பத்தி திருப்பி பேசுறதுல அர்த்தம் இல்ல....

இருந்தாலும்.... என் எதிர் தரப்பு வக்கீலுக்கு கடைசியா ஒன்ன தெளிவு படுத்திக்க விரும்புறேன் யூர் ஆனர்.....



இவரு கொலையே செஞ்சிருந்தாலும் ஐ.பி.ஸி செக்ஷன் 420



[[ 420 OF IPC - Cheating and dishonesty inducing delivery of property

ஐ.பி.ஸி செக்ஷன் 420 - ஏமாற்றி மற்றும் நேர்மையின்றி தூண்டி பொருளை பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல் ]]



அண்ட் ஐ.பி.ஸி செக்ஷன் 416



[[ 416 OF IPC - Cheating by prersonation

ஐ.பி.ஸி செக்ஷன் 416 - ஆள் மாறாட்டம் ]]





அண்ட் ஐ.பி.ஸி செக்ஷன் 300

[[ 300 OF IPC - Murder

ஐ.பி.ஸி செக்ஷன் 300 - மர்டர் ]]



மூணு பிரிவுகளின் படி பாத்தோம்னா ஐ.பி.ஸி செக்ஷன் 420 படி என் கட்சிக்காரர் சொத்த வஞ்சகமா வாங்க நெனச்சதுக்காகவும்



ஐ.பி.ஸி செக்ஷன் 416 ஆள் மாறாட்டம் உதாரணமா ஒரு பெரிய பணக்காரருடைய பேரும் அவங்க பேரும் ஒன்னா இருக்க சந்தர்ப்பத்துல நான் தான் அந்த பணக்காரன்னு சொல்லும் போது ஆள் மாறாட்டம் செய்து வஞ்சிக்கும் குற்றம் புரியப்படுகிறது.....



இங்க என் கட்சிக்காரர் மிஸ்டர்.மாறனோட பேரு ரிஷிகுமாருங்குறதால அவர ஆர்.கேன்னு அழக்கிறவங்க இறந்து போன மிஸ்டர்.ராகேஷ் கண்ணாவயும் ஆர்.கேன்னு அழைக்கிறாங்க....



காலேஜ்ல இருக்கும் போது அவரு லவ் பண்ற பொண்ண இவருக்கும் தூண்டி விட்டு அடுத்தவங்களுக்கு அந்த பேர்ல இருக்க வித்தியாசத்த இவர் தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்ருக்காரு....



ஐ.பி.ஸி செக்ஷன் 300 படி வென் கல்பபல் ஹோமிஸைட் இஸ் நாட் மர்டர்?



[[ When culpable homicide is not murder - மரணம் விளைவிக்கும் குற்றம் எப்போது கொலை குற்றம் ஆகாது? ]]



அப்பிடின்னு பாத்தோம்னா திடீரென்று தூண்டி விடப்பட்ட உணர்ச்சிகளை அடக்க முடியாமல் நிதானத்தை இழந்து விட்ட சூழ்நிலையில், தன்னை கோபப்படுத்தியவரை தாக்கி மரணமடைய செய்தாலும் அந்த மரணத்தை விளைவிக்கும் குற்றம் கொலை குற்றம் ஆகாது....



இதுல நா சொல்ல வர்றது என்னன்னா.... சொத்துக்களை எடுத்ததும் இல்லாம ஆள் மாறாட்டம் பண்ணி, இவர் தங்கை உயிரோடவே இல்ல அப்பிடீன்னு பொய்யும் சொல்லி நம்ப வெச்சி அண்ட் கடைசியா நடந்த மர்டர் அடம்ப்.... இதில் ஏதாவது ஒன்றில் கூட என் கட்சிக்காரருக்கு கோபம் வந்திருந்துதுன்னா அவரே கொலை செய்திருந்தாலும் அது கொலை குற்றமாகாது அப்பிடீங்குறது தான்.....



கொலை செய்யலன்னதுக்கு ஆதாரம் இருக்க அதே நேரம் கொலையே செஞ்சிருந்தாலும் அதுக்கான ஆதாரமும் இந்த வாதம் மூலமா தெளிவு படுத்திட்டேன்.....



ஸோ மை லார்ட்.....



எனது கட்சிக்காரரின் சொத்தை ஏமாற்றி வாங்குனதுக்காக மட்டுமே 07 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் கொடுக்கனும்..... பட் எதிர்பாராதவிதமா அவரு இப்போ உயிரோட இல்ல.... அவருக்கு உதவி செஞ்சவங்களும் உயிரோட இல்ல....



அதனால என் கட்சிக்காரர் மீது அபாண்டமா பழி சுமத்தினதும் இல்லாம ஒன்னுமே இல்லாத ஒரு விடயத்தை சொல்லி எங்களோட அண்ட் கோர்ட் டைமை வேஸ்ட் பண்ணி இருக்கறதுக்கு தக்க தண்டனை கொடுத்து என் கட்சிக்காரருக்கு சாதகமான தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

தட்ஸ் ஆல் மை லார்ட்...." இலேசாக தலை தாழ்த்தி வணங்கி தன் இடத்தில் வந்தமர்ந்தவளின் முகம் அதிக சோர்வை வெளிப்படுத்த அவளை விட்டு இம்மியும் நகராத அவன் பார்வை அதை துள்ளியமாக கண்டு கொண்டாலும் அந்த பார்வையை மட்டும் விளக்கினான் இல்லை அவளவன்....



கண்களில் அப்படி ஒரு ஆச்சரியம்.... அதை விடை பிரமிப்பு!!!



தன் மனையாளா இது???



கடைசியில் அவள் ஐ.பி.ஸி செக்ஷன் 416 க்கு உதாரணம் கூறிய போது காதல் அல்ல தூண்டி விடப்பட்டு இருக்கிறார் என சொன்னதில் அவன் உதட்டில் மீண்டும் புன்னகை....



தங்கையின் பெயரையே இழுத்து விடாமல் எவ்வளவு கவனமாக கையாண்டிருக்கிறாள்!!!



வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால்!!!



அவனுக்கு தெரியும் இது முடிந்து பெரிய பூகம்பமே வெடிக்க இருக்கிறதென்று....



அவளை சமாதானப்படுத்தும் வழி தெரிந்தாலும் இந்த தடவை அது பழிக்காது என்பதும் தெரிந்தது.



'நான் காதலிக்கிறேன் தான் ஆனா உன் காதல போல ஆழமான்னு கேட்டா சந்தேகமா இருக்குடி'



அவன் மனம் இடித்துரைத்துக் கொண்டிருந்தது இது தான்!!!



.....



"இங்கு குற்றவாளி ரிஷிகுமார் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம்

"கொலை குற்றம்"



போலிஸ் தேடிச் செல்லாமல் தானாகவே முன்வந்து ஒப்புக்கொண்ட பாலாவின் வாக்குமூலம் இந்த கேஸில் மிக முக்கியமான ஒன்று...



சுமத்தப்பட்டிருக்கும் கொலை குற்றங்களுக்கான ஆதாரம் எதுவும் நிரூபிக்கப்படாததாலும் அவருக்கு ஏற்கனவே பல மோசடிகள் செய்து விட்டு அவர் மீது வீண் பழியை சுமத்தி இருப்பதாலும் இந்தக் கோர்ட் அவரை நிரபராதி என கூறுகிறது.



த கோர்ட் பைஃன்ட்ஸ் ரிஷிகுமார் நாட் கில்டி....



[[ The court finds that Rishikumar is not guilty - ரிஷிகுமார் கொலை செய்யவில்லை என்பதை கோர்ட் கண்டறிகிறது.... ]]



அண்ட் சென்டென்ஸ் முருகன் அண்டர் செக்ஷன் 194 ஆப் இன்டியன் பினல் கோட் டென் ஏர்ஸ் இன் ப்ரிஸன் அண்ட் அ ஃபைன் ஆப் 7,000 ஆல்ஸோ இம்பாஸ்ட் பார் கிவிங் பாஃல்ஸ் எவிடன்ஸ் வித் இன்டென்ட் டு ப்ரகியூர் கான்விக்ஷன் ஆப் கெபிடல் ஆபென்ஸ்....



[[ And, Sentence Murugan ( The police officer ) under section 194 of Indian Penal Code «IPC» ten years in prison and

A fine of Rs.7,000 is also imposed for giving false evidence with intent to procure conviction of capital offence -

அத்தோடு முருகன் என்பவருக்கு தண்டிக்கப்பட செய்யும் உள்நோக்கத்தில் ரிஷிகுமார் என்பவர் மீது தெரிந்தே வீன் பழி சுமத்திய குற்றத்திற்காக பத்து வருட கால சிறை தண்டனையும் ரூபா ஏழாயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ]]



த கோர்ட் ஆல்ஸோ அக்கியூட்டட் பாலா ஆன் த கிரவுண்ட் தட் ஹீ வாஸ் இனஸன்ட் அண்டர் செக்ஷன் 81 ஆப் இன்டியன் பினல் கோட்....



[[ The court also acquitted Bala on the ground that he was innocent under section 81 of Indian Penal Code - மேலும் ஐ.பி.ஸி செக்ஷன் 81 ன் கீழ் பாலா என்பவர் நிரபராதி என ஒத்துக் கொண்டு இந்த கோர்ட் அவரை விடுதலை செய்கிறது. ]]



நீதிபதி தன் அறிக்கையை வாசித்து முடிக்க அங்கே பலத்த கரகோஷம் எழுந்ததில் தன்னை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் காட்டிய அண்ணன் வருண் மற்றும் அஜய் நண்பர்கள் ஆரவ் சித்தார்த் அர்விந்த் ஐவரையும் பார்த்து புன்னகைத்தாள் காரிகை....



[[ 194 OF IPC (Indian Penal Code ) - Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence



ஐ.பி.ஸி செக்ஷன் 194 - மரண தண்டனையுடன் கூடிய ஒரு குற்றத்தில் ஒரு நபரின் மீது அவரை தண்டிக்கப்பட செய்யும் உள்நோக்கத்தில் தெரிந்தே பொய் பழி சுமத்தல்.



81 OF IPC - Act without intention



ஐ.பி.ஸி செக்ஷன் 81 - தீங்கு ஏற்படுவதை தடுக்க ஒருவருக்கு உதவி செய்தல். ]]



......



"ஷிட்..." மேசையின் மீது ஓங்கி அடித்த முருகன் காவலர்களால் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட தன் இருக்கையிலிருந்து பெண்ணவள் எழுந்தாலும் அவன் அதே நிலையில் தான் அமர்ந்திருந்தான்.



'திமிர்...திமிர்....உடம்பு பூரா திமிர்.... வந்து பேசு வெச்சுகுறேன்' பல்லை கடித்துக் கொண்டே தன்னவனை முறைத்தாள் பெண்....



"ராட்சஸீ....கங்க்ராட்ஸ் டி" நண்பியை இறுக்க அணைத்தான் ஆரவ்....



"தூல் கிளப்பிட்ட போ...." அர்விந்தும் தன் பங்கிற்கு சந்தோஷத்தை வெளிப்படுத்த நண்பியை தானும் அணைத்து விடுவித்தான் சித்தார்த்.



"வருண்.... என் தங்கச்சி காலைல கோர்ட்டுக்கு வந்தாடா....பட் அவள காணலயே.... நீ பாத்தியா?" அஜய் கலாயக்க போலியாய் முறைத்தவள் அவன் கை விரிக்கவும் பாய்ந்து கட்டிக் கொண்டாள்.



"அப்போ என்ன?" வருண் இடையிட சிரித்தவள் அஜய்யிடமிருந்து விலகி அவனை அணைக்க கூந்தலை வருடி தன் மீது சாய்த்துக் கொண்டான் தங்கையை....



"க்கும்...." பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டபடி நின்று கொண்டிருந்தவன் தன் தொண்டையை செரும அண்ணனை விட்டு விலகி தன்னவனை பார்த்தாள் பாவை....



"எஸ்கியூஸ் மீ.... எனக்கு என் பொண்டாட்டி கிட்ட பேச டைம் வேணும்.... வில் யூ ஆல்....."



"எனக்கு டைம் இல்ல...." அவனை இடைவெட்டி பேசிவிட்டு சட்டென வாசலை நோக்கி நடக்க கண்ணை இறுக்க மூடித் திறந்து பெருமூச்சு விட்டவனை பார்த்து வாய்விட்டுச் சிரித்தனர் மற்ற ஐவரும்.....



"அண்ணா.... போயிட போறா.... அவசரமா போங்க" என்ற ஆரவ்விடம் கண்களாலேயே நன்றி கூறி விட்டு கிட்டத்தட்ட ஓடினான் அவளை நோக்கி....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார் கதவை திறந்து ஏறப்போனவளை தடுத்தவாறு வந்து நின்றவனை நின்று முறைத்தாள் பெண்....



"கண்ணம்மா சாரி.... சாரி சாரி.... நா சொல்ல வர்றத க..."



"உங்களுக்கு எல்லாதயும் விட உங்க கொள்கைகள் தான் முக்கியமா போச்சுல்ல தேவ்?" அவனை பேச விடாமல் தடுத்து அவள் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் சுறுக்கென தைத்தது நெருஞ்சி முள்ளொன்று.....



காரை விறுட்டென கிளப்பி சென்று விட்ட பின்னும் நின்ற இடத்திலேயே ஸ்தம்பித்து நின்று விட்டிருந்தான் அந்த ஆறடி ஆண் மகன்!!!



***



"ஆரா....." பின்னாலிருந்து கணவன் அணைக்க கண்களை சட்டென மூடி கிறங்கி நின்றாள் பெண்....



அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசத்தை தனக்குள் இழுத்தவன் வயிற்றோடு சேர்த்து கட்டியிருந்த அணைப்பை இன்னுமின்னும் இறுக்க அவன் மீதே சாய்ந்து கண்களை இறுக்க மூடி தன் உணர்ச்சிகளை அடக்கப் போராடினாள்.



"ஆரா...ஆரா...." அவன் வாயிலிருந்து வேறு வார்த்தைகளே வரவில்லை....



எத்தனை வருட காத்திருப்பு!!!



"ஜீவா...." ஏதோ ஞாபகம் வந்தவளாய் துள்ளி விலக மோகம் திடீரென அறுபட்ட நிலையில் தன்னவளை முறைத்தான் அவன்....



கண்களாலேயே கொஞ்சியவள்



"ஜீவா இன்னிக்கு அண்ணி என் கேஸ் பத்தி கோர்ட்ல ப்ரஸீஜ் பண்ணனும்னு சொன்னீங்கல்ல?" என்றாள் காரியமே கண்ணாக....



"ஆமா மா.... மறந்தே பொய்ட்டேனே...." சட்டென பரபரப்பானவனை விசித்திரமாய் பார்த்தாள் மனைவி...



மனைவியிடம் உன் உயிர் பற்றிய சில சிக்கல்களுக்காக ஏதோ சப்மிட் பண்ணனும் என்றவனுக்கு மட்டுமல்லவா தெரியும் இது தன் மாமன் மகனின் கொலை குற்ற கேஸென்பது....



அதனால் வந்த பதற்றமே அது....



"என்னாச்சு ஜீவா?"



"எ..எ..ன்ன என்னாச்சு....?"



"ஏதாவது மறைக்கிறீங்களா?"



"இல்லயே.... ஏன்?"



"சும்மா தான்.... சரி அண்ணிக்கு கால் பண்ணுங்க"



"ஆஹ் இதோ...." தன் மொபைலை தேடி எடுத்தவன் அஷ்வினிக்கு அழைத்தான்.



.....



'கமாண்டர்.... சாரியாம் சாரி.... இவனுக்கு யாரு உத்தமர் பட்டம் கொடுக்க போறாங்கன்னு சீன் க்ரியேட் பண்ண பாத்தான்.... இவன எல்லாம்.... நல்லா கட்டி வெச்சு உதைக்கனும்....ச்சேஹ்.... கேஸ் முடிஞ்சு தீர்ப்பு சொல்றதுக்குள்ள என் உயிரே போயிடுச்சு....இவன் என்னடான்னா காலுக்கு மேல கால போட்டு கிட்டு நல்லா சாவகாசமா உக்காந்து என்ன ரசிச்சிட்ருக்கான்.... ப்ராடு.... இவன.... ஆஆஆஆஆஆ' தனியாக புலம்பித் தீர்த்தவள் எரிச்சலாக கத்தவும் மொபைல் தன் இருப்பை உணர்த்தவும் சரியாக இருந்தது.



"அட ஜீவா சாரு...." சட்டென மலர்ந்தது முகம்....



"ஹாய் லவ் பேர்ட்ஸ்...." மறுமுனை ஸ்பீக்கரில் போட்டிருக்குமென ஊகித்தவள் அப்படி அழைக்க வெக்கப்பட்டாள் பெண்...



"சும்மா இருங்க அண்ணி.... எப்போ பாரு அடுத்தவன அலற வெச்சு கிட்டே இருக்கனுமா உங்களுக்கு....?"



"ஹாஹாஹா....."



"அண்ணி...." சிணுங்கினாள் மாது.



"எங்கமா உன் புருஷன் சத்தத்தையே காணும்?"



"இதோ பக்கத்துல தான் இருக்கான் அண்ணி...."



"அவன் பக்கத்துலயே தான் இருப்பான்... தூரமா இருந்தா தான் ஆச்சரியப்படனும்"



"அண்ணி....ப்ளீஸ்"



"ஹாஹா.... ஓகே ஓகே எதுக்கு மாப்பிள்ள சார் கால் பண்ணீங்க?"



"அஷ்வி மா.... என் தங்கமே என் பேர சொல்லியே கூப்புடுமா" அவன் சொன்ன திணுசில் கலகலத்து சிரித்தனர் பெண்கள் இருவரும்....



"விஷயத்துக்கு வாங்க சாரே..."



"இன்னிக்கு கேஸ் என்னாச்சு?" அவ்வளவு தான்.... சிரித்துக் கொண்டிருந்தவளுக்கு சுர்ரென கோபம் உச்சத்தை தொட



"அது ஆல் டன் ஜீவா.... ஆராவுக்கோ தேவுக்கோ எந்த பிரச்சனையும் இல்ல..." தன்னை அடக்குவது பெண்ணவளுக்கு பெரும் சவாலாய்....



"ஹப்பாடா... நா பயந்தே பொய்ட்டேன் அண்ணி.... அப்பறம்... வீட்ல எப்பிடி இருக்காங்க எல்லோரும்?"



"நல்லா இருக்காங்க மா"



"யாது குட்டி மித்து பாப்பால்லாம்?"



"அவங்களும் இருக்காங்க.... ஜீவா உன்ன முறைக்கிறான் பாரு.... நா அப்பறமா பெசறேன்.... எனக்கு கொஞ்சம் கேஸ் விஷயமா ஒருத்தர மீட் பண்ண இருக்கு.... அதுக்காக தான் போய்கிட்டு இருக்கேன்....பய்...." நாசூக்காக நழுவிக் கொண்டவள் காரை இன்னும் வேகமாக வீட்டிற்கு விரட்டினாள்.



***



"உங்களுக்கு எல்லாதயும் விட உங்க கொள்கைகள் தான் முக்கியமா போச்சுல்ல தேவ்?" மீண்டும் மீண்டும் காதிற்குள் இரைந்து கொண்டே இருந்த வார்த்தைகளில் ஸ்தம்பித்து நின்றிருந்தவன் தூரத்தே கேட்ட வாகனங்களின் ஹார்ன் சத்தத்தில் திடுக்கிட்டு கலைந்தான்.



#கொள்கை, தன்னகங்காரம், தான் என்கிற ஈகோ என எல்லாவற்றையும் கடந்து அவளுக்காகவென்றே வருவது தான் புரிந்துணர்வு கொண்ட ஆழமான காதலாக இருக்க முடியும்#



காலேஜ் காலத்தில் எப்போதோ வாசித்து ரசித்த வரிகள் திடீரென ஞாபக அடுக்குகளை தட்ட



'கண்ணம்மா ஐ அம் ரியலி சாரிடா....' மானசீகமாக மன்னிப்பு வேண்டினான் அவளவன்...



"எஸ் சார்..." தன் மொபைலை எடுத்து அவசரமாக அவளுக்காக நியமித்த பாடிகார்டுக்கு அழைக்க மறுமுனையில் இருந்து அவசரமாக பதில் வந்தது.



"அஷு எங்க இருக்கா?"



"இப்போ தான் வீட்டுக்குள்ள கார நுழைச்சாங்க சார்"



"ஓகே...." துண்டித்தவன் தன் காரில் ஏற அவன் கைகளில் பறந்தது கருப்பு நிற ரோல்ஸ் ராய்ஸ்....



***



"கதிர் சார்.... இங்க வாங்க" வெளியே நின்று கொண்டு கத்திய மனைவியிடம் பதற்றமாய் வந்தான் கணவன்....



"என்னடி?"



"இந்த பூன குட்டிய பாருங்க சார்.... எவ்வளவு க்யூட்டா இருக்கு" வெள்ளையும் கறுப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்த சிறிய பூனை குட்டியை பார்த்தவனுக்கு கடுப்பு வராமல் இரக்கம் வந்தால் தான் அதிசயம்னு உங்களுக்கே தெரியும்ல நண்பா?



"நாம ஹனிமூன் வந்திருக்கோம்டி..... ஞாபகம் இருக்கா இல்லயா?"



"நா என்ன சொல்லிட்டிருந்தா நீங்க என்ன பேசிட்ருக்கீங்க சார்?"



"நா உன் கிட்ட கேள்வி கேட்டா அதுக்கு பதில சொல்லாம திருப்பி என் கிட்டவே கேள்வி கேக்குறியா?"



"எப்பபாரு வள்ளு வள்ளுன்னுகிட்டே தான்" மெதுவாக முணுமுணுக்க அது அவன் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.



"பின்ன நீ இப்பிடி பண்ணா....?" சற்றே தனிந்திருந்ததோ குரல்.....



"இப்போ என்ன பண்ணனும்?" குத்துகாலிட்டு அமர்ந்து இருந்தவள் எழுந்து நிற்க அவளிடையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளுதட்டை சிறை செய்ய கண்களை மூடிக் கொண்டாள் பாவை....



"இத பண்ணும் போது இப்பிடி சப்போர்ட் பண்ணிட்டே இரு.... அதுவே போதும்" கண்ணடித்து சொன்னவனை பார்த்து வெட்கம் பிடுங்கித் திண்ண அவன் மார்பிலேயே தன் முகத்தை மறைத்தவளை பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் வெங்கட் கதிரவன்.....



***



"அம்மூ....." தன் மனைவியை தூக்கிச் சுற்றினான் ஆரவ்....



"டேய் எரும இறக்கி விடுடா...." திடீரென தூக்கப்பட்டதில் பயந்து போனாள் பெண்....



"இன்னிக்கு உன் அக்கா கோர்ட்டயே செமயா அலற வெச்சுட்டா தெரியுமா?" இறக்கி விட்டவாறே அவன் சொல்லவும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தாள் தங்கை....



"நிஜமாவாடா?" கண்கள் மின்ன கேட்டவளை பார்த்து ஆமென தலையாட்டியவனை சந்தோஷத்தில் இறுக்க கட்டியணைத்து கண்ணத்தில் முத்தம் கொடுக்க மர்மமாய் புன்னகைத்தவன்



"அம்மு.... எனக்கு காபி எடுத்துட்டு வர்றியா?" என்றான் எதோ யோசித்தவனாய்....



"தோ... இரண்டு நிமிஷம் இருடா வந்தட்றேன்...." அவள் சிட்டாய் பறக்கவே தூங்கிக் கொண்டிருந்த மகளின் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தவன் அதற்குள் காபியை எடுத்துக் கொண்டு வந்து விட்ட மனைவியை ஆச்சரியமாய் பார்த்தான்.



"என்னடி அதுக்குள்ள வந்துட்ட?" கேட்டவாறே வேண்டுமென்றே அவளை தன்னை நோக்கி இழுக்க காபி அப்படியே அவன் மேல் அபிஷேகம் ஆகவும் பதறினாள் பெண்....



"ப்ச்.... என்னடா பண்ற.... பாரு இப்பொ.... அச்சச்சோ சுட்டுடிச்சாடா?" தான் போட்டிருந்த துப்பட்டாவால் தன் டீ-ஷர்ட்டில் பட்டிருந்த காபியை துடைத்துக் கொண்டிருந்தவளை விழியெடுக்காமல் பார்த்தவன்



"ச்சேஹ்.... இப்பிடி ஆயிடுச்சே.... அம்மு பாத்ரூம் போயி கழுவிட்டு வர்றேன் இரு...." என்றான் போலியாய்....



"அப்போ இரு நானும் வர்றேன்.... வா என் கூட...." அவனை பிடித்து இழுத்துக் கொண்டு போனவள் குளியலறைக்குள் நுழைய சிரித்தான் கணவன்....



இதை தானே அவனும் எதிர்பார்த்ததும்....



அவள் காரியமே கண்ணாக அதை கழுவிக் கொண்டிருக்க சட்டென ஷவரை திறந்து விடவும் முழுதாக நணைந்து விட்டாள் பெண்....



"டேய்....என்னடா பண்ற.... மூடுடா... ஆரூ...." தண்ணீரை விலக்க முடியாமல் போராடியவாறே அவள் சண்டையிட அவளை அணைத்தவாறே தானும் நணைந்தவன் தன் ஒற்றை கண்ணை சிமிட்ட அப்போது தான் புரிந்தது அவன் திருவிளையாடல்....



"உன்ன...." அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் அவன் சுதாரிக்கும் முன்னரே வெளியே ஓடி வர தானும் சிரித்துக் கொண்டே வெளியே வர பறந்து வந்தது தலையணை....



"அய்யய்யோ புருஷனுக்கு கொடும பண்றாளே.... இத கேக்க யாருமே இல்லயா....?" பொய்யாக அலறவும் மீண்டும் பறந்து வந்தது இன்னொரு தலையணை....



"ப்ராடு ப்ராடு.... பாரு முழுசா நனஞ்சுடுச்...." அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிதானமாக அவளை நோக்கி அவன் வரவும் இடையிலேயே நின்று போனது அவள் வார்த்தைகள்....



"க...கி....கி....ட்ட வராத.... வராதடா..."



"வந்தா என்னடி பண்ணுவ?"



"வந்தா....வ....வந்தா"



"ம்...வந்தா.....?" கட்டிலில் அமர்ந்திருந்தவளை இரு பக்கமும் சிறை செய்ய கண்களை இறுக்க மூடி பயந்தவாறே பின்னால் சரிந்தாள் மனைவி....



"சொல்லு அம்மு குட்டி.... வந்தா என்ன பண்ணுவ?" கேட்டுக் கொண்டே அவள் மீது படர்ந்த கணவனை தடுக்கும் வழியறியாது அவனுக்கு இசைந்து கொடுத்தாள் பாவை....



(( இவன் ரொம்ப கேடியா இருக்கான் நண்பா....வாங்க நாம நம்ம அஷுவ பாக்கலாம்))



.....



"யாது டேய்.... சீக்கிரம் வா.... அந்த கமாண்டர் வர்றதுகுள்ள நாம பீச் போலாம்" அவசரப்படுத்தினாள் தாய்....



"இருங்க மாம்...." தன் பேண்டின் நுனியை குனிந்து மடித்துக் கொண்டே பதில் கொடுத்தவன் எழ கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள் காரை நோக்கி....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஏன் மாம் இவ்வளவு க்வீக்கா போறீங்க?"



"உன் அப்பன் எங்கேயுமே போக விட மாட்டேங்குறான் என்ன.... அதனால தான்"



"டாட்டுக்கு நாம பீச் போறது எப்படியுமே தெரிஞ்சிருக்குமே மாம்.... திட்டுவாரே... திடீர்னு வந்து நின்னா என்ன பண்ணுவீங்க?"



"அதெல்லாம் தெரிஞ்சிருக்காது கண்ணா... அதான் நாம கெளம்பிட்டோமே?" பக்கவாட்டாக திரும்பி மகனை பார்த்து கேட்டு விட்டு மீண்டும் சாலையில் கண்களை பதித்தவளின் கண்கள் தெறித்து விடுமளவு அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்த திடீரென அமைதியாகி விட்ட தாயை தொடர்ந்து தானும் பார்த்த மகனுக்குமே அதிர்ச்சி தான்....



நடு ரோட்டில் தன் காரை நிறுத்தி மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு காலை மாற்றி பானட்டில் சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தது சாட்சாத் நம்ம ரிஷியே தானுங்க நண்பா.....



"மாம்.... நா சொன்னேன்ல?"



"இவ்வளவு சீக்கிரமா நடக்கும்னு சொல்லவே இல்லையே டா?"



"டாட் வர்றாங்க மாம்...." அழுத்தமான காலடிகளுடன் தன் சன் கிளாஸை ஷர்ட் நடுவில் குத்தியவாறே நிதானமாக நடந்து வந்தவன் மகனின் புறம் வந்து நிற்க தாய் கண்களால் சைகை செய்ததையும் கவனியாது கார் கண்ணாடியை கீழே இறக்க அவன் பார்வை தன்னை துளைப்பது தெரிந்தாலும் அவன் புறம் திரும்பினாள் இல்லை....



"பீச்?"



"டாட் உங்களுக்கு எப்பிடி தெரியும்?"



"ஸோ அது தான்"



'கமாண்டர் போட்டு வாங்குறான்'



"சும்மா கெஸ் பண்ணேன்"



"சாரி டாட்...."



"இட்ஸ் ஓகே.... உன் மாமையும் கூட்டிட்டு வா.... வந்து கார்ல ஏற சொல்லு"



"என்னால முடியாது... நா என் கார்ல தான் வருவேன்"



"சரி....அப்போ இறங்கு நா ட்ரைவ் பண்றேன்"



"முடியாது"



"ப்ச்..... இறங்குடி" அவள் புறம் வர



"மாம்....நாம ஜாலியா பின் சீட்ல வர்லாம்...வாங்க" மகனின் வேண்டுகோளை தட்ட முடியாமல் இறங்க அவளை இடிப்பது போல் நெருங்கி வந்து நின்றிருந்தான் கணவன்.....



"அவாய்ட் பண்றன்னு புரியுது.... பட் நா உங்கிட்ட பேசனும்டி..... அஷு.... நா வே..." அவன் துவங்கவும் மகன் "மாம்" என குரல் எழுப்பவும் சரியாக இருக்க அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் சட்டென பின்னால் ஏறிக் கொள்ள தன் அடியாளுக்கு அழைத்து தன் காரை வீட்டிற்கு கொண்டு வருமாறு பனித்து விட்டு காரை கிளப்பினான்....



"மாம்..... பாப்பா உள்ள சமத்தா இருக்கா?" ஆசையாய் கேட்ட மகனின் தலை தடவி முத்தமிட்டவள்



"ஆமாடா கண்ணா" என்றாள் புன்னகையாய்....



"பாப்பா என் கூட பேசுமா மாம்?"



"ஆமா கண்ணா?"



"நாம இன்னொரு நாள் பீச்சுக்கு போலாம்னு பாப்பா கிட்ட சொல்லுங்க...." அவன் முடிக்கு முன் கார் திடீரென நிறுத்தப்பட ஒரே நேரத்தில் பக்கவாட்டாக திரும்பி பார்த்தனர் தாயும் மகனும்.....



"வாவ்.... தேங்க் யூ டாட்...." கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிய மகனை தொடர்ந்து தானும் இறங்கப் போன மனைவியை நிறுத்தினான் அவளவன்....



"கண்ணம்மா....." அவன் அழைக்கவே இறங்கப் போனவள் மீண்டும் அமர்ந்து கொண்டாலும் அவனை மட்டும் பார்க்கவே இல்லை....



"அஷு ஐ அம் ரியலி சாரிடா.....என் பக்கத்த மட்டுமே யோசிச்சவன் வேற எதயுமே யோசிக்க கூட இல்ல....ஐ அம் ரியலி சாரி.... சாரி ப்ளீஸ்... நீ சொன்னா மாறி இல்ல அஷு.... கொள்கைகள விட நீ தான்டி முக்கியம்"



"...."



"ப்ளீஸ் கண்ணம்மா.... புரிஞ்சிக்கோயேன்...."



"பேசி முடிச்சிட்டீங்கன்னா நா போலாமா மிஸ்டர்.மாறன்....?"



"ஏன்டி இப்பிடி பண்ற....சாரிடா" பதில் பேசாமல் இறங்கிச் செல்பவளை சமாதானப்படுத்தும் வழியறியாது ஒரு பெரு மூச்சுடன் தானும் இறங்கி நடந்தான் கணவன்....



.....



மணலில் அமர்ந்து மகனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளருகில் வந்தமர்ந்தமவன் மீண்டும் கெஞ்சத் துவங்கினான்.



"அஷு....ப்ளீஸ் பேசுடி... வேற எப்பிடி மன்னிப்பு கேக்கனும்னு எனக்கே தெரில கண்ணம்மா....நா என்ன பண்ணா நீ பேசுவ?"



"என்னையும் யாதுவையும் கூட விடுங்க.... வயித்துல வளர்ற குழந்தைய பத்தியாவது யோசிச்சீங்களா.... அது பொறக்கும் போது தன் அப்பா ஜெயில்ல இருக்கனணுமா?" அடக்கி வைத்திருந்த கண்ணீர் மழுக்கென கண்ணத்தை தொட பதறிப் போனான் அந்த ஆறடி ஆண் மகன்....



"ஹே....ஏன் கண்ணம்மா இப்பிடில்லாம் பேசுற.... இத பத்தியெல்லாம் நா யோசிக்கவே இல்லடி" கண்ணீரை துடைக்க வந்த கையை படக்கென தட்டி விட்டவள்



"தொடாதிங்க" முறைத்தாள் காரிகை.....



"சரி தொடல.... பட் இப்பிடி பேசாதடி.... ரொம்ப கஷ்டமா இருக்கு"



"அஷு..கண்ணம்மா...பொண்டாட்டி.." எல்லா விதமான அழைப்பிலும் அழைத்தாயிற்று....



அப்போதும் அவள் திரும்பவே இல்லை....



"டாட்.... " தன் முன் வந்து நின்ற மகனிடம் பாய்ந்தது பார்வை....



"என்ன கண்ணா...."



"வாங்க விளையாடலாம்.... லண்டன்ல இருக்கும் போது என் கூட வருவீங்கல்ல.... வாங்க டாட்" மகன் கை பிடித்து இழுக்க வேறு வழியின்றி எழுந்தவன் தான் போட்டிருந்த இள நீல நிற கோர்ட், பிளேஸர், தன் சன் கிளாாஸ் மற்றும் தான் கட்டியிருந்த ரொலெக்ஸ் ரிஸ்ட் வாட்ச் கடிகாரம் எல்லாவற்றையும் தன்னவளிடம் நீட்ட முறைத்துக் கொண்டே வெடுக்கென பிடுங்கி எடுத்தவளை பார்த்து வாய் விட்டுச் சிரித்தவன் விசிலடித்துக் கொண்டே செல்ல



"போடா...." உறக்கக் கத்திய மனைவியிடம் திருப்பி ஒற்றை கண்ணை சிமிட்டி பறக்கும் முத்தத்தை அனுப்ப அவள் வாய்க்குள் ஏதோ முணுமுணுப்பது கண்டு மீண்டும் சிரித்து விட்டு மகனுடன் இணைந்து நடந்தான்.....



......



கணவனையும் மகனையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் காரிகை.....



மகனுடன் இணைந்து தானும் குழந்தையாகவே மாறி விட்டிருந்த கணவனை பார்க்கப் பார்க்க காதல் கூடிக் கொண்டே போனதுவோ???



எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் ஏன் அவனிடம் மட்டும் பேசவிழைகிறது உள்ளம்???



முதன் முதலாக அவனை பார்த்த போதிருந்த அவன் முகத்தில் தெரிந்த அந்த கம்பீரம் இன்னும் அப்படியே இருப்பதாகவே தோன்றிற்று.....



அவளுக்கு அவனிடம் பிடித்ததே அது தானே!!!



வாய் விட்டுச் சிரித்தெல்லாம் பார்த்ததில்லை என்றில்லை.....



ஆனால்.... அவன் வாய் விட்டுச் சிரிப்பது குறைவு....



சிரிப்பை அடக்கி சிரிக்கும் அவளவனின் உதட்டோர சிரிப்பிற்கு அவள் எப்போதுமே அடிமை தான்!!!



***



"அர்வி....இப்போ எதுக்கு முகத்த தூக்கி வெச்சு கிட்டே திரியுற?"



"...."



"டேய் நில்டா" அப்போதும் தன்னை கண்டு கொள்ளாமல் போன கணவனை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள் அபிநயா....



"ப்ச் எதுக்கு என்ன தொட்ற.... விடு"



"ஏன் நான் தொட்டா என்ன?"



"அதான் நா தொட்றது உனக்கு பிடிக்கலன்னு சொன்னில்ல.... என்ன நீயும் தொடாத" சிறு பிள்ளை போல் சண்டை பிடிப்பவனை பார்த்து சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.....



"ஹே...அன்னக்கி எல்லோரும் இருந்ததுனால சும்மா சொன்னேன் டா.... அதுக்காகவா கோச்சிகிட்டு இருக்க?"



"அதான் இப்போ யாரும் இல்லல்ல.... அப்போ முத்தம் கொடு"



"என்னதூ.... முத்தமா...?"



"ஏன் இப்பிடி அலறுர.... நான் உன் புருஷன் தானே?"



"இப்போ என்ன.... முத்தம் வேணும் அதானே.... இங்க வா" அவன் கண்ணத்தில் தன் இதழை ஒற்றி எடுக்க கடுப்பாகி விட்டான் கணவன்....



"இதுக்கு பேரு முத்தம் இல்ல.... உரசுறது...."



"எனக்கு அப்பிடி தான் வரும்"



"இது போங்காட்டம்.... நா ஒத்துக்க மாட்டேன்"



"சரி சரி கத்ததாத டா... கிட்ட வா" மீண்டும் அதே போலவே ஒற்றியெடுக்கப் போனவளை இடையூடு கையிட்டு இழுத்தவன் அவள் கீழுதட்டில் அழுத்தமாக முத்தம் வைத்து விட்டு



"இது தான்டி முத்தம்" என்றான் கண்களை சிமிட்டி....



***



கணவன் நெஞ்சில் தலைசாய்த்து சாய்ந்திருந்தாள் வசு.....



"வசு...."



"ம்...."



"மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடி"



"ம்...." என்றவள் கணவனுக்குள் இன்னும் ஒன்றினாள்.



"ராக்கி கூட இருந்தப்போ..... ஆர்.கே ய ஒரு தடவ பாக்க மாட்டேனான்னு தவிச்சிருக்கேன்டி.... ப்ரண்ட்ஷிப் அப்பிடீங்குற வார்த்தைக்கு முழு அர்தத நான் அவன் கிட்ட தான் கத்துகிட்டேன்"



"...."



"அப்போல்லாம் இப்பிடி ஒருத்திய பாத்து.... லவ் பண்ணி..... நெனச்சதே இல்ல வசு... சில நேரங்கள்ல தோனும்.... வாழ்க்க ரொம்ப வித்தியாசமா நம்மல வெச்சு விளயாடுதோன்னு.....உன் கிட்ட கடைசியா வந்து சேர்றதுக்கு தானா இவ்வளவும்னு இப்போ தோனுது.... ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி...." தானும் அணைத்தவன் அப்படியே படுத்திருந்தான்.



***



"ஹே....மெதுவா வாடி...." படியில் இறங்கிக் கொண்டிருந்த மனையாளை ஓடிச்சென்று தாங்கினான் சித்தார்த்.....



"பாத்து வர மாட்டியா.... விழுந்திருந்தா என்ன ஆகுறது?" கண்டிக்கவும் கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் பெண்....



"என்னடி அப்பிடி பாக்குற?"



"...."



"ஹோய்...."



"ஹாங்....என்ன சித்?"



"சரியா போச்சு.... ஏன் என்ன இப்பிடி பாக்குறன்னு கேட்டென்...."



"இல்ல.... நா உங்க கிட்ட லவ்வ சொன்னப்போ.... என் லைப் ஸ்டைல் வேற.... உன்னோட வேற.... ஸோ செட் ஆகாதுன்னு சொன்னிங்கல்ல...?"



"ஹாஹா...ஆமாடி"



"ஏன் அப்பிடி சொன்னிங்க?"



"அது எதுக்குடி இப்போ?"



"சும்மா தெரிஞ்சிக்க தான் சித்.... சொல்லுங்க...."



"எனக்கு அப்பாம்மா இல்ல.... தனியாவே எல்லாதயும் செஞ்சு பழகிட்டேனா.... திடீர்னு நீ வந்து சொல்லவும் என் மனசு அத ஏத்துகல.... பட்.... நீ வேற ஆள லவ் பண்ண போறேன்னு சொன்னதும் நீ தான் எனக்கு வேணும்னு தோனிச்சு.... அதான் அன்னக்கே லவ்வ சொல்லிட்டேன்...." பேசிக்கொண்டே இறங்கியதில் ஹாலுக்கு வந்து விட்டிருக்க அவளை சோபாவில் அமர வைத்தான் கணவன்....



"என்ன மாம்ஸ்.... வர போற பொண்ணுக்காக இப்போதிலிருந்தே கவனிப்பா?" உள்ளிருந்து கேட்டுக் கொண்டே வந்தாள் யாழினி விஷ்வா....



"ஹே வாயாடி.... நீயும் இருக்கியா.... வந்து என் பொண்டாட்டிய பாத்துக்கோ நா வெளில பொய்ட்டு வர்றேன்...."



"இன்னிக்கு ஒரு நாள் லீவ் போட்டு அக்கா கூட இருங்க மாமா.... பெரிய சின்ஸியர் சிகாமணி ரேன்ஜுக்கு சீன் போட்டு கிட்டு"



"உன்ன....." அடிக்க கையோங்கியவனுக்கு அகப்படாமல் சிரித்துக் கொண்டே ஓடியவள் அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த கணவனை கண்டு அவன் பின்னால் போய் நின்று கொண்டாள்.....



"விஷு.... மாம்ஸ் அடிக்க வர்றாரு.... என்னன்னு கேளுங்க"



"எதுக்குடா என் பொண்டாட்டி மேல கை வெக்க பாக்குற?" சிரித்துக் கொண்டே கேட்டான் வருண்.....



"உங்க பொண்டாட்டிக்கு அடிக்க கூடாது ணா... உதைக்கனும்... எல்லோரையும் கலாய்ச்சி கிட்டே இருக்கா" இடையிட்டாள் சித்தார்த்தின் மனைவி....



"புருஷனுக்கு சப்போர்ட்டோ?" இங்கிருந்து கத்தினாள் யாழினி....



"ஆமா.... உனக்கென்னடி?" இப்போது சித்து....



"விஷு..... பாருங்க"



"டேய் ஏன்டா என் பொண்டாட்டி கிட்ட வம்பு பண்றீங்க?"



"யாரு நாங்க பண்ணோமா.... அவ தான் எங்கள படுத்துறா" மீண்டும் ரித்திகா....



"நம்பாதீங்க விஷு...."



"சத்தியமாணா...." கையில் சத்தியம் பண்ணி விட்டு பழிப்புக் காட்டிய சித்தார்த்தை விரட்ட அவன் ஓடவும் அங்கே சத்தமாய் எழுந்தது சிரிப்பலை.....
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராமநாதபுரம்.....



"பாட்டி...."



"அடடே....வா கண்ணா" ஹாலில் அமர்ந்திருந்தவர் தன் பேரன் உள்ளே நுழையவும் அணைத்து உச்சி முகர்ந்தார்.



"எப்பிடி இருக்கீங்க பாட்டி?"



"நல்லா இருக்கேன் கண்ணா.... நீ?"



"நானும் நல்லா இருக்கேன்.... ஆமா அப்பாம்மா எங்கே?"



"ஈஷ்வரி கோயிலுக்கு போகணும்னு சொன்னா.... அதனால அஜய் கூட்டிட்டு போனான்பா..... நீ வா நா சாப்பாடு எடுத்து வெக்கிறேன்....."



"ஓகே பாட்டி..... நா பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வந்தட்றேன்.... இரு...." மேலே ஏறியவனை வாஞ்சையாய் பார்த்தவர் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.



......



கோயில்.....



கடவுள் சந்நிதானத்தில் கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்த மனைவியை புன்னகையுடன் பார்த்திருந்தான் அஜய்.....



காதல் இல்லாமல் வீட்டினரால் முடிக்கப்பட்ட திருமணமானாலும் தாலி கட்டிய அந்நொடியிலிருந்து இன்று வரை அவள் மீது அவன் காதலில் விழுந்து கொண்டு தான் இருந்தான்....



மற்ற வீடுகளில் எப்படியோ..... ஆனால் அவன் வீட்டில் தங்கைக்கும் சரி தனக்கும் சரி அவள் அன்னையாகத் தெரிந்திருக்கிறாள்....



விஜயலக்ஷ்மி கூட சில நேரங்களில் சொல்வதுண்டு....அவள் என்னோட மருமகள் அல்ல மகள் என....



அப்போதெல்லாம் உள்ளுக்குள் ஏதோ சாதித்தது போல் ஒரு திருப்தி....



தங்கை மீதிருந்த கோபத்தை எத்தனையோ தடவை அவள் மீது காட்டியதுண்டு....



ஆனால்....மறு வார்த்தை பேசாமல் அமைதியாகவே நிற்பாளே தவிர திருப்பி ஒரு வார்த்தை சொல்லி விட மாட்டாள்....



கடைசியில் அவன் தான் மன்னிப்பு கேட்டு கொஞ்சிக் கொள்வதும்....



"அஜய்...." மனைவியின் குரலில் திடுமென கலைந்தான் கணவன்....



"ஹாங்.... போலாமா?"



"கொஞ்ச நேரம் உட்காந்துட்டு போலாமா?"



"சரி வா...."



.....



"ஏன் திடீர்னு கோயிலுக்கு வந்திருக்க?" தன் தோளில் சாய்ந்திருந்த மனைவியிடம் கேட்டான் அஜய்....



"திடீர்னெல்லாம் இல்ல.... ஏதோ தோனிச்சு....இத பிரிச்சு பாருங்க" தன் பையிலிருந்த சின்ன கிப்ட் பெட்டி ஒன்றை எடுத்து கணவனிடம் நீட்ட புருவம் நெறித்தான் அவன்....



"என்னடி இது?"



"பிரிச்சு பாருங்க"



"என்னன்னு சொல்லு"



"ப்ச்...பாருங்க தெரியும்" அவள் வற்புறுத்தவே எடுத்துப் பார்த்தவனுக்கு அதில் "Baby" என எழுதி இருந்த சின்ன அட்டையை பார்த்து எதுவுமே புரியவில்லை முதலில்.....



"என்னமா இது?"



"புரியலயா?" அவள் கண்களில் எதிர்பார்ப்பு....



"இது...எ....." கண்கள் கலங்க திரும்பினான் மனைவியிடம்....



"நிஜமாவா?" ஆமென தலையாட்டியவள் மீண்டும் தோளில் சாய்ந்து கொள்ள அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் வருண் அஜய்.....



***



இரவு.....



நறநறவென பற்களை கடித்துக் கொண்டே தன் முன் நின்றிருந்த மகனின் தலையை திட்டிக் கொண்டே துவட்டிக் கொண்டிருந்தாள் பாவை.....



"விளயாட்றதுக்குன்னு ஒரு அளவு வேணாமா இரண்டு பேருக்கும்..... மாத்து உட எடுத்து கிட்டு வர்லன்னு தெரிஞ்சும் எதுக்காக நனயனும்...... இப்போ பாரு எப்பிடி குளிருதுன்னு" முகத்தை நன்றாக துடைத்து விட்டு நிமிர்ந்தாள்.



"சாரி மாம்....."



"என்னத்த சாரி.... வா சாப்புடு" எடுத்து வைத்திருந்த சாப்பாட்டு தட்டிலிருந்து எடுத்து ஊட்ட பேசாமல் வாங்கிக் கொண்டான்.



.....



"போதும் மாம்.... டாடுக்கு கொடுங்க...." அப்போது தான் கணவனை திரும்பிப் பார்த்தவள் அவன் ஈரம் சொட்டச் சொட்ட அமர்ந்திருப்பது கண்டு அதிர்ந்து போனாள்.



அவளுக்கு புரிந்து போயிற்று கணவனது பிடிவாதம்!!!



தான் வரும் வரை அவன் நகரப் போவதில்லை.....



"கண்ணா வாங்க தூங்கலாம்...." மகனை தட்டிக் கொடுத்தவள் அவன் களைப்பில் அவசரமாகவே உறங்கி விடவும் இறங்கி கணவனிடம் வர நிமிர்ந்து தன்னவளை பார்த்து சிரிக்கவும் அப்படியே பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.....



"உன் புள்ளக்கி மட்டும் தான் தலை துவட்டி விடுவியா பேபி...." கண்களை சிமிட்டியவன் அருகிலிருந்த வெள்ளை டவலை எடுத்து நீட்ட முறைத்துக் கொண்டே பிடுங்கி எடுத்தவள் அவன் முன் வந்து நின்று துவட்ட ஆரம்பிக்க முகத்தை வேண்டுமென்றே தன்னவள் வயிற்றில் இடமும் வலமும் உரசவும் துள்ளி விலகி மீண்டும் முறைத்தாள் பெண்....



"ஓகே ஓகே துவட்டு பேபி.... நா எதுவும் பண்ணல"



"...."



"சத்தியமா கண்ணம்மா....வா" மீண்டும் அருகில் வந்தவள் துவட்டத் துவங்க அமைதியாகவே அமர்ந்திருந்தான்.



"அஷு....பேசுடி... தப்பு தான்.... நா யோசிக்காம பண்ணிட்டேன்.... ப்ளீஸ் கண்ணம்மா"



"அஷு....." துவட்டி முடித்து விலகப் போனவளின் வயிற்றை வளைத்து அணைத்தவன் மனைவியை நிமிர்ந்து பார்த்தான்.



"சாரிடி... ஹூம்.... என்ன பாத்தா பாவமா இல்லையா?"



"...."



"சரி விடு..... பசிக்குது" அவனையே பார்த்தவள் நகர்ந்து சென்று அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வந்து நீட்ட



"ஊட்டுடி....அவனுக்கு மட்டும் ஊட்டி விட்ட.... எனக்கும் ஊட்டி விடு"



"...."



"அப்போ நீ ஊட்ட மாட்ட....எனக்கு பசி இல்ல... எடுத்துட்டு போ" முகத்தை திருப்பவும் அவன் முன் நீண்டது அவள் கை.....



கண்டும் காணாதவன் போல் இருந்தவன் அவள் புறம் திரும்பவே இல்லை....



"ப்ச்.....நா போயிடுவேன்....."



"ஹப்பாடா.... பேசிட்டியா...." அவள் நீட்டியதை வாங்கிக் கொள்ளவும் சட்டென அவளை இழுத்து அமர வைத்தவன் தானும் ஊட்டி விட மறுத்தாள் பெண்....



"சாப்புடுடா...."



"ஊஹூம்...."



"ப்ளீஸ் பேபி.... எனக்காக...." ஊட்டி விட்டவன் தானும் உண்டு கொண்டிருக்க திடீரென அவன் மீதே வாந்தி எடுத்தாள் பெண்....



அவனுக்கு அது ஒன்றுமே இல்லை போலும்....



அவள் தான் அதிர்ந்து பதறினாள்.



"சா....சாரி சாரி தேவ்.... சாரி...." துடைக்கப் போக அவளை தடுத்தவன்



"இட்ஸ் ஓகே விடுடா.... உனக்கு என்ன பண்ணுது வா...." கை பிடித்து அழைத்துச் சென்றவன் முகத்தை கழுவி துடைத்து அவளை அமர வைத்து விட்டு தான் சென்று கழுவி உடை மாற்றி வந்தான்.



"அஷு....என்னடா பண்ணுது.... நா வேணும்னா தலைய பிடிச்சு விடட்டுமா?" கேட்டுக் கொண்டே வந்தவன் அவள் தலையை பிடிக்கப் போக பதறி விலகினாள் பெண்....



ஏற்கனவே குற்ற உணர்வோடு அமர்ந்திருப்பவளிடம் என்ன செய்கிறான்???



"இ...இல்ல இல்ல தே... தேவயில்ல.... நா பாத்துகுறேன்"



"ஹே நா எதுவும் நினைக்கல கண்ணம்மா.... டாக்டர் அர்ஜுன் இத பத்தி சொல்லி இருக்காரு.... வா" அவள் மறுத்தும் கேளாமல் வலுக்கட்டாயமாக தலையை பிடித்து விட கண்கள் கலங்கியது பேதைக்கு.....



"போதும்...."



"சரி வா தூங்கலாம்..." தான் படுத்து அருகில் அழைக்க மகன் புறம் திரும்பி படுத்து விட்டாள் பெண்....



"ஹோய்.... இவ்வளவு நாளா என் கிட்ட தானேடி படுப்ப.... இப்போ மட்டும் என்ன?" உண்மையில் கடுப்பானான்.



"ப்ச்.... வாடி"



"...."



"வர மாட்டல்ல.... அப்பிடியே இரு" மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டான்.
 
Last edited:

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
......

வாழ்கை ஊடலுடன் ரொம்பவும் சுவாரஷ்யமாவே சென்று கொண்டிருக்க இன்றோடு பெண்ணவளுக்கு ஏழாவது மாதம் துவங்கி இருந்தது.



அன்று அப்படி படுத்தவள் தான்..... இன்று வரை அவன் எவ்வளவு கெஞ்சியும் அவன் புறம் திரும்பவே இல்லை என்றாலும் விடியும் போது அவன் நெஞ்சில் தலைசாய்த்திருக்கும் மாயம் தான் புரியவே இல்லை....



அவன் எழு முன் எழுவதால் அவனுக்கு தெரியாமல் போய் விட ஒவ்வொரு நாள் இரவிலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி படுத்து விடுபவன் காலையில் எழுந்ததும் மனைவியை தாங்கு தாங்கென தாங்குவான்.



இன்று வளகாப்புக்கு கணவன் ஏற்பாடு செய்திருப்பது தெரிந்து நேரத்துடன் எழுந்தவள் என்றுமில்லாத திருநாளாய் தன்னவன் முகத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்க கண்களை இலேசாக திறந்தவன் அவள் அப்படி இருப்பது கண்டு படக்கென கண்களை மீண்டும் மூடிக் கொண்டான்.



'ஆக.... இவ்வளவு நாளா என் நெஞ்சிலேயே படுத்து எழுந்து கிட்டு.... ராத்திரி என்னாமா சீன் போடுவா.....சரியான இம்சை.... என்னதான் பண்றன்னு பாக்குறேன்டி' அப்படியே படுத்திருந்தான் அந்தக் கள்வன்....



"தூக்கத்துல கூட மூஞ்ச எப்பிடி வெச்சிருக்கான் பாரு....அப்போவும் அழகா தான்டா இருக்க....ச்சோஓஓ ச்வீட்...." கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டவள் எழுந்து கொள்ள இதழ் கடையோரம் விரிந்தது அவளவனின் அக்மார்க் வசீகரப் புன்னகை....



......





ரிஷியின் மூன்றடுக்கு மாளிகையே விழாக் கோலம் பூண்டிருக்க அதற்கும் குறையாத சந்தோஷத்துடன் வலம் வந்து கொண்டிருந்தனர் குடும்பத்தினர் அனைவரும்....



நீண்ட நாளைக்குப் பிறகு இளம் பச்சை நிற பட்டு சேலையில் தேவதையாய் மின்னிக் கொண்டிருந்த மனையாளை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்.....



கண்ணாடியின் முன் அமர்ந்திருந்தவளின் தலை வாரிக் கொண்டிருந்த கை கண்ணாடியூடு வாசலில் தெரிந்த கணவனின் பிம்பத்தில் அப்படியே அந்தரத்தில் நிற்க வெகு நிதானமாய் அவளை நோக்கி வந்தவன் அவளிடமிருந்த சீப்பை எடுத்து தானே மென்மையாய் வாரி விடவும் அவனையே பார்த்திருந்தாள் காரிகை.....



அவள் முகத்தோடு தன் முகத்தை ஒட்டி வைத்தவாறே குங்குமத்தை எடுத்து அவள் நெற்றி வகிட்டில் இட கண்களை இறுக்க மூடியவளை பார்த்து சிரித்தான் அந்த ஆறடி ஆண் மகன்.....



"கண்ணம்மா"



"ம்..."



"அழகா இருக்கடி" கண்ணங்கள் செவ்வானமாய் சிவந்து போக அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் பட்டுக் கண்ணத்தில் அழுத்த முத்தமிட்டு எழவும் தான் சிந்தை கலைந்தவள் படக்கென எழுந்து நின்று முறைக்க அவளை சுவாரஷ்யமாய் பார்த்தான் அவளவன்....



"எதுக்குடா இப்போ கிஸ் பண்ண....?"



"நா அப்பிடி தான் பண்ணுவேன்.... என்னடி பண்ணுவ?"



"அ...அ...ஆ... நா... நா..." வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்த மனைவியை பார்த்து வாய் விட்டுச் சிரித்தான் கணவன்....



"எதுக்கு சிரிப்பு?"



"சும்மா...." முகத்தை திருப்பிக் கொள்ள அவள் புறம் வந்தவன் தன் தோளோடு சேர்த்தணைக்க அண்ணார்ந்து பார்த்தாள் பெண்....



"எல்லோரும் வந்திருப்பாங்கடா.... வா போலாம்...."



"...."



"இப்போ எதுக்கு என்ன இப்பிடி பாக்குற?" தான் சொல்லியும் காதில் விழாதது போல் தன்னையே பார்த்திருக்கும் மனைவியிடம் கேட்க ஒன்றுமில்லை என தலையாட்டியவள் கீழே குனிந்து கொள்ளவும் உச்சந்தலையில் இதழ் பதித்து அழைத்துச் சென்றான்.



.....



முதல் குழந்தைக்குப் போலவே கணவன் முறை வரவும் தன்னை சலேரென திரும்பிப் பார்த்த மனைவியின் உள்ளத்து உணர்வை புரிந்து கொண்டோ என்னவோ வாழ்க்கையில் இரண்டாம் தடவை வேஷ்டி சட்டை அணிந்து கம்பீரமாக வந்து கொண்டிருந்தவனின் பார்வை ஆறுதலாய் மூடித் திறக்க சட்டென மலர்ந்த முகத்தில் தோன்றிய புன்னகையை கண்டு தானும் புன்னகைத்தான்.



மஞ்சள் பூசி விட்டு நிமிர்ந்தவன் தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த இரு வெள்ளி வளையல்களை அணிவிக்கவும் அங்கே பலத்த கேலிச் சிரிப்பு எழ தலையை குனிந்து கொண்டாள் பேதை....



"அஷு....நிமிர்ந்து ஒரு தடவ என்ன பாருடி" அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்றில் சட்டென அவனை நோக்கியவளின் கண்களும் அவனவளின் கண்களும் காந்தமாரய் இழுக்க இமைக்க மறந்தது இரண்டு ஜோடிக் கண்களும்....



மீண்டும் எழுந்த சத்தத்தில் தன்னை இழுத்துப் பிடித்தவன்



"அஷு.... ஐ அம் ரியலி சாரிடி.... ஏன் இந்த நேரமுமான்னு நீ யோசிக்கலாம்.... பட் நா சொல்லியே ஆகணும்....நீ பேசாம இருந்த இந்த ஏழு மாசமும் எனக்கு தெளிவா புரிஞ்சுது.... அந்த ஆறு வருஷம் நீ எவ்வளவு வேதனப்பட்டிருப்பன்னு...எல்லாம் யோசிச்சு பாத்து செய்றவன் ஏன் உன் விஷயத்துல திரும்ப திரும்ப தப்பு பண்றேன்னு தெரிலடி....பட் இதெல்லாம் நா தெரிஞ்சு பண்ணதில்ல கண்ணம்மா.... ஐ அம் ரியலி சாரி அகைன்.... எப்பிடி மன்னிப்பு கேக்கனும்னு கூட தெரில....நா ஒனக்கு குடுத்த வலிக்கு என்ன தண்டன வேணும்னாலும் ஏத்துக்குறேன்.... பட் உன் மௌன விரதத்த தான் தாங்கிக்க முடிலடி.... சண்ட போடு... ஆனா பேசிடு கண்ணம்மா....உனக்காக காத்துகிட்ருப்பேன்.... மறந்துடாத...." நெற்றியில் தன் முத்தத்தை அழுத்த பதித்து விட்டு எழுந்து நடக்க மனைவியின் முகத்தில் பெருமிதச் சிரிப்பு....



அது நிச்சயமாய் தன்னவனை நினைத்துத் தான்!!!



இப்படி ஒரு கணவன்.... யாருக்கு கிடைக்கும்....



ஆனால் அவளுக்கு கிடைத்திருக்கிறானே.... இதன் பிறகும் அவனவளின் வருத்தத்தை எந்த காதல் கொண்ட மனைவியால் தான் தாங்கவியலும்???



இப்போதே அவன் நெஞ்சில் புதைந்து போகத் தோன்றிய உணர்வை அடக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவனின் அவள்!!!



.....



இரவு......



மகனுடனேயே சுற்றிக் கொண்டிருந்தாலும் ஆபிஸ் அறையை அவ்வப்போது தொட்டு மீண்டது அவள் பார்வை....



"மாம்...."



"என்ன கண்ணா...."



"பாப்பா சீக்கிரம் வந்துடும்ல?" ஆசையாய் கேட்ட மகனின் தலை தடவி முத்தமிட்டவள் அவனை தன் பக்கத்தில் இருத்திக் கொண்டாள்.



"மாம்..... பாப்பாக்கு ட்ரஸ் எல்லாம் பேசர்ஸ் பண்ணிட்டீங்கல்ல....?"



"ம்...ஆமா..."



"அது பாப்பாக்கு பெருசா இருந்தா என்ன பண்றது?"



"ம்....என்ன பண்றது... யாது குட்டி சொல்லுங்க"



"பெரிய ட்ரஸ் போட்டா தானே பாப்பா ப்ரீயா பீல் பண்ணும்.... ஸோ அதயே வெச்சிக்கலாமா மாம்?"



"ஓகே டா.... யாதவ் சொல்றது போலவே செஞ்சிடலாம்...."



"மாம் எனக்கு தூக்கம் வருது.... நா க்ரேனி கூட தூங்க போறேன்"



"சரிடா கண்ணா.... கேர்புல்லா இறங்கி கீழ போணும் சரியா?"



"ஓகே மாம்...." எழுந்தவன் தாயின் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு செல்ல புன்னகைத்தாள் பெண்.....



மணி பத்தை கடந்து கொண்டிருக்க கணவன் வரும் சுவடே தெரியாததில் சோர்ந்து போனாள் பெண்....



'ரொம்ப காக்க வெச்சதுனால இப்போ அவன் டர்னு வெச்சு செய்றானா?' மீண்டும் வாசலை நோக்க அங்கே கதவு நிலையில் சாய்ந்து ஒரு காலை குற்றி மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிய படி முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் அவன்....



"இன்னும் தூங்காம என்ன பண்ற அஷு?" கடிந்து கொண்டே அருகில் வர எதிர்பார்ப்பாய் இருந்த முகம் அப்படியே கழையிழந்து போக நெற்றி சுருக்கியவனுக்கு புரிந்து போயிற்று மனையாளின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருப்பது....



மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் மறுபக்கம் சென்று ஏறி படுத்து விட திரும்பிப் பார்த்தவளுக்கு ஏனென்றே தெரியாமல் கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள தானும் அவனுக்கு முதுகு காட்டி படுக்க திடீரென வயிற்றை அணைத்துப் பிடித்த கணவன் கரங்களில் கண்ணத்தை தொட்டது கண்ணீர்...



அவள் அமைதியாகவே இருக்கவும் தன்னவளை தன்னை நோக்கி திருப்பியவன் அவள் அழுவது கண்டு பதறிப் போனான்.



"ஹே....என்னடா ஏன் அழற... என்னாச்சு....?"



"...."



"கண்ணம்மா.... என்னடா?" அவள் முகத்தை ஏந்த



"நா உங்க கிட்ட பேச இருக்கேன்னு தெரிஞ்சும் பேசாம போய் படுக்குறீங்க... நா உங்களுக்கு தொல்லை மாதிரி இருக்கறதனால என்ன வெறுத்துட்டீங்களா?" மூக்கை உறிஞ்சிக் கொண்டு கேட்பவளை பார்த்து பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கியவன் அவள் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்தணைக்க அவனுள்ளே ஒன்றினாள் பாவை....



"நீயா ஏதாச்சும் கற்பன பண்ணிட்டு பேசாத கண்ணம்மா..... இப்போவும் எப்போவும் உன்ன என்னால வெறுக்க முடியாதுடி.... பிகாஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ....ஐ லவ் யூ சோ மச் டி....." அவன் பிடி இறுக



"லவ் யூ டூ" என்றாள் அழுகையினூடே....



"அத என் பொண்டாட்டி சிரிச்சுகிட்டே சொன்னா தான் என்னவாம்?" தன்னிலிருந்து பிரித்து கண்ணீரை தன் கட்டை விரலால் துடைத்து விட்டவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டிக் கொண்டே கேட்டான்.



"கண்ணுல இருந்து அது தானா வருது.... நா என்ன பண்றது?" சிணுங்கினாள் மாது....



"இப்பிடில்லாம் பண்ணின்னா அப்பறம் பின்னாடி நடக்குறதுக்கு நா பொறுப்பு இல்ல" அவன் பார்வை அவள் உதட்டில் படிய சிவந்து போனது அவளவனின் கண்ணங்கள்.....



"மன்னிச்சுட்டியா பேபி?"



"உங்க மேல கோபமெல்லாம் இல்ல தேவ்.... வருத்தம் தான்.... ஏன் என்ன பத்தி யோசிக்கலங்குற ஆத்திரம் தான்.... மத்தபடி மன்னிப்பு கேக்கற அளவுக்கு நீங்க தப்பு பண்ணல"



"நான் இந்த மாதிரி எல்லாம் கார்னர் பண்ணவே இல்லடி.... ஏதோ கோபத்துல கொன்னேன்.... ஆரா வந்ததுக்கப்பறம் ஏன் கொன்னன்னு கேள்வி கேட்ட மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாம நானே ஒத்துக்கலாம்னு இருந்தேன்.... யோசிக்கலன்னு இல்ல.... அத தவிர வேறு எதுவுமே அப்போ தோனலடி... அதான் கிறுக்குத்தனமா ஏதோ பண்ண போனேன்.... சாரி"



"விடுங்க வேற பேசலாம்...."



"ஓய்.... ஒவ்வொரு நாளும் என் கிட்ட படுத்துட்டு.... எதுக்குடி நைட்லாம் கெஞ்ச வெச்ச?"



'இவனுக்கு எப்பிடி தெரிஞ்சுது.... அய்யய்யோ அஷ்வி... மானமே போச்சுடி' மனதிற்குள் அலறியவள் திருதிருவென விழிக்க



"சொல்லு..... இல்லன்னா...." மீண்டும் அவளதரங்களில் படிந்தது பார்வை....



"அ...அ...அது அது.... ஆ.... வந்து நீங்க... நீங்க தான் என்ன பிடிச்சு இழுத்தீங்க" அள்ளி விட்டாள்.



'இழுத்திருப்போமோ' அவனுக்கே தன் மீது சந்தேகம் எழ அவள் கண்களில் பொய்யை கண்டு கொண்டவன்



"ஓஹ்.... என் மேல தான் தப்பா....?" என்றான் ஒன்றும் அறியாதவன் போல....



"ம்....ஆமா.... உங்க மேல தான் தப்பு"



"அப்போ.... என் பொண்டாட்டிங்குற உரிமைல பண்ணி இருக்கேன் அப்பிடியா?"



"எஸ் எஸ் ஒய் நாட்?"



"நா என்ன வேணா பண்ணலாமா..... ஐ மீன் புருஷங்குற உரிமைல?"



"ம்....ஆம...." அவள் முடிக்கு முன் அவள் இதழ்களை மூடி இருந்தான் தன் இதழ்களை கொண்டு.....



***



கண் மூடி கண் திறப்பதற்குள் அடுத்து வந்த இரண்டு மாதங்களும் எப்படி போனதென்றே தெரியவில்லை ஒருவருக்கும்.....



ஏதோ மின்னலாய் கடந்து விட்டது போல் ஓர் மாயை....



திருமணம் ஆன மூன்று ஜோடிகளில் வசுவும் மதுவும் கர்ப்பமாகி இருக்க தங்களுக்குள் கொஞ்ச நாளைக்கு குழந்தை வேண்டாமென தள்ளி வைத்திருந்தனர் ஜீவாவும் ஆராவும்....



கதிருக்கும் ரகுவிற்கும் தனித்தனி ப்ளாட் ஒன்றை திருமணப் பரிசாக வழங்கியிருக்க அங்கேயே இருந்து கொண்டனர் இருவரும்....



தங்கைக்காக கொடுத்ததை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் ஜீவா மறுத்து விட அவளுக்கான தன் அன்பளிப்பாக அவளுடைய அக்கவுண்ட்டிலேயே போட்டு விட்டான் ரிஷி.



குடும்பத்தினர் கவனிப்பை விட கணவனின் கவனிப்பில் மின்னிக் கொண்டிருந்தாள் பாவை....



"அண்ணி.... எதுக்கு இப்போ கீழ வர்றீங்க?" மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த அண்ணன் மனைவியை கண்டு ஆரா கேட்க அன்று வீட்டிலேயே இருந்த ஆரவ்வும் அவள் புறம் கோபமாக திரும்பவும் பெண்ணவள் தவறுதலாக கடைசிப் படியில் விழப் போகவும் சரியாக இருக்க பாய்ந்து ஓடியவன் சட்டென நண்பியை பிடித்துக் கொண்டான்.



"லூசு.... எதுக்கு இந்த தேவயில்லாத வேல ஒனக்கு... உன்ன யாரு கீழ வர சொன்னது.... இடியட்..... அடி பட்ருந்தா என்னடி பண்றது.... கொஞ்சம் கூட கவனமே இல்ல.... ஏன் தான் இப்பிடி...." திட்டிக் கொண்டே இருந்தவன் கண்களை இறுக்க மூடி பல்லை கடித்து தன் வலியை பொறுத்துக் கொண்டிருப்பவளை பார்த்து அப்படியே நிறுத்தி விட்டு பதற்றமானான்.....



"அஷ்விமா.... என்ன ஆச்சு.... வலிக்குதா... ஹாஸ்பிடல் போலாமா?" அதற்குள் அனைவரும் கூடி இருக்க



"அஷ்வா.... ஹாஸ்பிடல் போலாம்டா.... வா" விஜயலக்ஷ்மி தான் மூத்தவராய் கட்டளையிட்டார்.



"மாம்....எனக்கு மாம் வேணும்" இடையில் யாதவ் வேறு அழ ஆரம்பிக்க



"நா போயி வண்டிய எடுக்குறேன்.... ஆரா மா.... அண்ணாக்கு கால் பண்ணி சஞ்சனா ஹாஸ்பிடல் வந்துட சொல்லு....." கட்டளைகளை பிறப்பித்தவன் வெளியே ஓடிச் சென்று காரை ரெடி பண்ணி விட்டு மீண்டும் உள்ளே வந்து நண்பியை தூக்கிக் கொண்டு போய் காரில் ஏற்ற அவளுடன் ஏறிக் கொண்டனர் விஜயலக்ஷ்மி, கயல்விழி, ஆராதனா மற்றும் கூடவே வந்தே தீருவேன் என அடம்பிடித்த யாதவ்வும்....



***



ஹாஸ்பிடல்.....



பெண்ணவள் பிரசவ அறைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்க பதற்றமாய் நின்றிருந்தனர் விடயம் கேள்விப்பட்டு வந்திருந்த குடும்பத்தினர் அனைவரும்.....



வராண்டாவில் போடப்பட்டிருந்த நீண்ட நாற்காலியில் தலை தாங்கி அமர்ந்திருந்தவனுக்கு உடல் நடுங்கிக் கொண்டிருந்தது பயத்தினால்....



"ஆரு.... எனக்கு பயமா இருக்குடா.... யாது பொறக்கறதுக்கு முன்னாடி நடந்ததே திரும்ப திரும்ப ஞாபகம் வருது.... அஷ்விக்கு ஒன்னும் ஆகாதில்லடா?" தனக்கு அருகில் நின்றவாறு கணவனிடம் கேட்டுக் கொண்டிருந்த கயலின் குரலில் சடாரென இருக்கையிலிருந்து எழுந்தவன்



"யா...யாது பொ... பொறக்கறதுக்கு முன்னாடியா..... எ... என்னாச்சு?" என்றான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு...



திடீரென தனக்கருகில் கேட்ட அண்ணன் குரலில் சட்டென அவன் புறம் திரும்பியவனுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை....



"என்னாச்சு சொல்லுடா...."



"அ....அ...அது வந்துணா...."



"ப்ச்.... சொல்லு கயல்.... என்ன ஆச்சு?"



"அத்தான் வந்து அன்னக்கி நீங்க...." துவங்கியவள் பீ.ஏ விக்ரம் காலில் பேசி பெண்ட்ரைவ் கேட்டது முதல் தமக்கை அதை மாற்றி போட்டுப் பார்த்து தண்ணீரில் வழுக்கி விழுந்து இரத்தம் வழிந்தது, தான் அழைத்து அவன் (தேவ்) மொபைலை எடுக்காதது அதன் பின் தமக்கை கணவனை பார்க்க அடம்பிடித்து ஆரவ்வுடன் ஹாஸ்பிடல் சென்றது வரை சொல்லி முடிக்க தள்ளாடிய அண்ணனை சட்டென பிடித்தான் ஆரவ்....



எவ்வளவு பெரிய பிழை செய்து தொலைத்திருக்கிறான்.....



இது பற்றி அன்றே கேட்டிருந்தால் அந்த ஆறு வருட பிரிவு தேவையே இல்லாமல் போயிருக்குமே....



தன் மீது அவ்வளவு பிழையையும் வைத்துக் கொண்டு அவளை வருத்தி இருக்கிறானே!!!



கடவுளே!!!



இதற்கு மேல் அவளை பார்க்காமல் இருக்கவே முடியாது என மனம் கூக்குரலிட விறுட்டென கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவன்



"மிஸ்டர்.மாறன்.... நீங்க வெளில இருங்க ப்ளீஸ்...." டாக்டர் அர்ஜுனின் பேச்சை மதிக்கும் நிலையிலெல்லாம் இல்லவே இல்லை....



"அங்கிள் ப்ளீஸ்....." அவர் பதில் பேசு முன் தன்னவளின் அருகில் சென்று நின்றவன் அவள் கையை இறுக்கப் பற்ற விழி திறந்து பார்த்தாள் பெண்....



"க....க....கண்ணம்மா ஐ அம் சாரி டி..... இன்னும் என்னென்ன தப்பு பண்ணி இருக்கேன்னு தெரில..... பட் இனிமே அப்பிடி நடக்காதுன்னு சத்தியம் பண்றேன்...." கண்கள் கலங்க கணவன் பேசுவதில் அவளுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.....



அதை விட வலி.....



டாக்டர் அர்ஜுன் எதுவும் பேச தோன்றாமல் வைத்தியத்தை ஆரம்பிக்க அவள் கத்திய ஒவ்வொரு தடவையும் இவனுள்ளே யாரோ கத்தியால் இதயத்தை குத்தி கிழிப்பது போல் வலித்துக் கொண்டிருக்க கரகரவென வழிந்தது கண்ணீர் அந்த ஆறடி ஆண் மகனின் கண்களிலிருந்து.....



மனைவியின் கத்தலுக்கு இடையே திடீரென கேட்டது குழந்தையின் அழு குரல்!!!



"கங்க்ராட்ஸ் மிஸ்டர்.மாறன் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு" தகவல் சொன்னவர் நர்ஸ் ஒருவரிடம் குழந்தையை சுத்தப்படுத்த கொடுக்க கண்களை அழுத்த துடைத்தவன் மனைவியை பார்க்க சோர்ந்து போய் உறங்கி இருந்தாள் அவனவள்.....



அவளையே இமைக்காமல் பார்த்தவன் முன்நெற்றி முடியை காதோரம் ஒதுக்கி விட்டு அவள் பிறை நுதலில் அழுத்த முத்தமிட்டு எழவும் ரோஜாக் குவியலாய் இருந்த அந்த குட்டி தேவதையை நர்ஸ் நீட்டவும் சரியாக இருக்க நடுங்கும் கைகளால் வாங்கிக் கொண்டவனின் கண்கள் பனித்தன.



மகளுக்கும் தன் முத்தத்தை மென்மையாய் பதித்தவன் அவளை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விஜயலக்ஷ்மியின் கைகளில் கொடுக்க நண்பனை கட்டியணைத்தனர் வருண் மற்றும் ரகு....



"அஷ்வாவ போலவே இருக்கா தம்பி" பூரிப்பாய் கூறிய அத்தையின் வார்த்தைகளில் புன்னகைத்தவன் கொஞ்ச நேரம் கழிந்து கேட்ட ஆரவ்வின் கத்தலில் வாய் விட்டுச் சிரித்தான்.



"குட்டி ராட்சஸி..... என் மேல உச்சா போயிட்டாணா.... ஒருவேளை உன் பொண்டாட்டி வயித்துல இருக்கும் போதே ப்ளான் பண்ணி வெச்சிருப்பாளோ?" அணைவரும் சிரிப்பொலியும் அந்த ஹாஸ்பிடல் முழுதும் எஎதிரொலித்தது



எபிலாக்....



இரண்டு வருடங்களுக்கு பிறகு.....



"அப்பாவோட முக்கியமான ப்ராஜக்ட் பைல் திவு குட்டி..... அப்பா ஆபிஸ் போகணும்ல.... கொடுத்துடுங்க...." கீழே மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருந்த தந்தையை கண்டு கொள்ளவே இல்லை அந்த தேவதை.....



திவ்யதர்ஷினி தேவமாறுதன்!!!



"போ.... நா தத ( தர) மாதேன் (மாட்டேன்)"



"ப்ளீஸ் குட்டிமா... என் செல்லம்ல.... ஆபிஸுக்கு லேட்டாகுது கொடுடா...."



"ம்.... நா தத மாதேன்" இடம் வலமாய் தலையை ஆட்டியவள் உள்ளே இருந்த ஒரு பேப்பரை தன் பிஞ்சு கரங்களால் கிழிக்க தலையில் கைவைத்துக் கொண்டு நிலத்திலேயே அமர்ந்து விட்டான் அந்த அன்புத் தந்தை.....



இது இரண்டாவது தடவை தயார் செய்த பைல்....



முதல் தடவையும் அவள் தண்ணீரை ஊற்றி இருக்க முகம் சுழிக்கக் கூட முடியாமல் அரும்பாடுபட்டு அதே போல் தயார் செய்து வைத்திருக்க அதையும் இப்படி செய்து விட்டது அந்த குட்டி வாண்டு....



"ஹய்யோ....போச்சு.... அஷூ....." மனையாளின் பெயரை கத்தியழைக்க



"எதுக்கு இப்போ இந்த கத்து கத்துறீங்க?" கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அவனவள்....



"ஏன் கீழ உட்காந்துட்டு இருக்கீங்க..... எந்திரிங்க முதல்ல" அதட்டிய மனைவியை பாவமாய் நிமிர்ந்து பார்த்தான் கணவன்.



"ப்ச்.... எந்திரிங்க...." தானே கை கொடுத்து எழுப்பி விட்டாள்.



"என்னாச்சு?"



"ம்.... பாரு என் பைல என்ன பண்ணி வெச்சிருக்கான்னு... ஏன்டி உன்ன போலவே வளத்து வெச்சிருக்க?"



"அவள நானா வளக்குறேன்.... நீங்க தான் மக மகன்னு கொஞ்சுகுறீங்க?"



"பின்ன.... திட்டவா முடியும்?"



"எனக்கு மட்டும் மூஞ்ச உர்றுனு வெச்சுகிட்டு திட்டுவீங்க.... அது என்ன?"



"அவ குழந்தடி"



"எங்கம்மாக்கு நானும் குழந்தை தான்"



"கண்ணம்மா ப்ளீஸ் படுத்தாத.... அவகிட்ட இருந்து வாங்கி கொடுடி..... ஏற்கனவே ரொம்ப லேட்...."



"உங்க மக நீங்க கேட்டே கொடுக்கல.... எனக்கு மட்டும் கொடுத்துடுவாளா?"



"ஏய் என்னடி உனக்கு போட்டிக்கு வந்தா மாரி பேசுற?"



"பின்ன..... நான் இவ்வளவு நாள் படுத்துகிட்ருந்த என் புருஷனோட இடத்துல இப்போ அவள்ல படுக்குறா.... அது மட்டுமா..... நா கொஞ்சம் கிட்ட வந்தா போதுமே.... சிலித்து கிட்டு "டாடீஈஈஈ" அப்பிடின்னு வந்து நிக்கிறா...." அவள் வாயை வளைத்து பழிப்புக் காட்டி கூறிய விதத்தில் வாய்விட்டுச் சிரித்தவனுக்கு எப்போதும் அவன் முதல் குழந்தை மனைவி தானே!!!



"இன்னிக்கு நீ படு.... ப்ளீஸ் வாங்கி கொடுடி...." கெஞ்ச மனைவி மகள் புறம் திரும்பவும் மகன் வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருக்க



"கண்ணா.... இந்த பைல வாங்கி கொடுடா...." மகனை நன்கு அறிந்தவளாய் உதவிக்கு அழைத்தாள் தாய்....



"ஓகே மாம்.... திவு..." தங்கையை அழைக்க அண்ணனை பார்த்தது அந்த தேவதை....



"ண்ணா...." மலர்ந்து போனது முகம்....



"நா இன்னிக்கு வெளில போக போறேன்"



"நானு...."



"அட திவு குட்டியும் வர்றேன்னு சொல்லிட்டாங்க.... அப்போ போலாமா?" கிளுக்கிச் சிரித்த குழந்தையிடம் மண்டியிட்டவன்



"இது யாரோட பைல்.... ஓ... டாட்டோதா... இத அவங்க கிட்ட கொடுத்துட்டு வாங்க.... நாம போலாம்" ஆசை காட்டவும் கையிலிருந்ததை ஒரு நிமிடம் பார்த்தவள் தந்தையிடம் நீட்டி விட்டு தாயிடம் தூக்குமாறு கையை விரிக்க தூக்கிக் கொண்டாள் பெண்.



"மாம் கூத( கூட) போதாம் (போலாம்)" கழுத்தை கட்டிக் கொண்டு அவள் கழுத்தில் முகம் புதைக்க மகளின் கண்ணத்தில் முத்தமிட்டு வெளியேறப் போனவன்



"கண்ணா அவள பாட்டி கிட்ட கொண்டு போய் கொடுத்துட்டு வாடா" என்றான் விஷமப் புன்னகையுடன்....



"ஓகே டாட்...." அவன் தூக்கிக் கொண்டு வெளியேறிய அடுத்த நிமிடம் கதவை தாழிட்டவன் பைலை மேசை மேல் வைத்துவிட்டு தன்னவளின் இடை பிடித்து தன்னை நோக்கி இழுக்க அவனவள் நெஞ்சில் மோதி நின்றாள் காரிகை....



"பேபி...."



"நா ஒன்னும் பேபி இல்ல...."



"யாரு ஏத்துக்கலன்னாலும் என்னோட முதல் குழந்த நீதான்டி" அவள் இதழ் நோக்கி குனியும் முன் அவனிதழ்களை தன் இதழ்களால் மூடி இருந்தாள் அவனவள்.....



......



"சித்தா...." அண்ணனின் கைகளில் இருந்தவள் ஆரவ்வை கண்டு கத்த காக்கி சட்டையை சரி செய்து கொண்டிருந்தவன்



"அட திவு குட்டி...." தன் கைகளில் வாங்கிக் கொண்டான்.



"சித்தா.... நா பூம் போதேன் ( நான் வெளில போக போறேன் ) "



"சித்தப்பாவும் வரட்டுமா?" சந்தோஷமாய் தலையாட்டிய குழந்தையின் கண்ணத்தில் முத்தமிட்டான்.



"சித்து நிஜமாலுமே நீயும் வர்றியா?"



"ஹே... சும்மா சொன்னேன் டா.... எனக்கு வேல இருக்கு.... எப்பிடி வர்றது...." அவன் பேசியது கேட்டதோ என்னவோ உதட்டை பிதுக்கி அழ தயாரான மகளை மேலிருந்தே பார்த்துக் கொண்டு வந்த தந்தை தன் கைகளில் வாங்கிக் கொள்ள தாய் நண்பனை முறைத்தாள்.



"எதுக்குடி முறைக்கிற ராட்சஸி?"



"என் குழந்த உன் கிட்ட வந்தாலே அழறா... என்னடா பண்ண?"



"என்னதூ.... அழறாளா....?" அப்போது தான் அவனுமே கண்டான்.



"அய்யய்யோ நா எதுவும் பண்ணலடி.... சத்தியமா நம்புடி"



"அப்போ ஏன் அழறா?" அண்ணனை பாவமாய் பார்த்தான் ஆரவ்....



"யாது.... நீயாவது சப்போர்ட் பண்ணேன்டா"



"டாட்.....மாம்.... சித்து ஒன்னும் பண்ணல... நானும் தானே இருந்தேன்...."



"சித்தாவும் வா...."



"ஆரு.... இன்னிக்கு ஸ்டேஷனுக்கு லீவ் போட்டுட்டு திவு கூட இரு" மனைவியிடம் குழந்தையை கொடுத்தவன்



"ண்ணா....... என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லயா.... இந்த ராட்சஸியயே சமாளிக்க முடில என்னால.... இப்போ இவ வேறயா....?" தம்பியின் அலறலை கண்டு கொள்ளாமல் திரும்பி நடந்தவனின் உதட்டில் அவனது அக்மார்க் புன்னகை!!!



இது எப்போதும் வீட்டில் நடப்பது தான்....



அது ஏனென்றே தெரியாமல் ஆரவ்விடம் சென்றால் மட்டும் அவள் அழுவது புதிர் தான்....



அதில் அனைவரையும் விட நண்பிக்கு ஏக சந்தோஷம்....



அப்போது தானே நன்றாக வாட்டி எடுக்க முடியும்....



இதில் தந்தையின் உயிரை வாங்குவது போதாதென்று ஆரவ்வின் உயிரையும் எடுத்து அவனை அழும் நிலைக்கே கொண்டு வந்து விடும் அந்த தேவதை....



தாயை போலவே அவ்வளவு சுட்டி....





***





அவள் ஆபிஸுக்கு அருகில் உள்ள அதே காபி ஷாப்.....



கொஞ்சம் இடைவெளி கிடைக்கவே காபி குடிக்கலாமென வந்திருந்தவளின் கால்கள் அதே டேபிளை நோக்கி நடக்க அன்று போலவே இன்றும் அமர்ந்து பழைய நினைவுகளை மீட்டிக் கொண்டிருந்தாள் பாவை.....



அந்த நாள் அவள் தோழிக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது தோழர்களால்... இரு வீட்டாருக்கும் தெரியாமல் செய்ய திட்டமிடப்பட்டதில் இவள் தான் தாலி வாங்கி வர சம்மதித்திருக்க அன்று அப்படி நடந்து விட்டதில் போக முடியா நிலை...



அந்த தோழிக்கு திருமணம் முடிந்து சந்தோஷமாக இருக்கிறாளென தெரிந்து கொண்டு விட்டாலும் சரியான நேரத்தில் தாலி வாங்கி வராதவளுக்கு அவ்வளவு வசவு கிடைத்தது நண்பர்களிடம்...

ஆனால் இன்று.... எத்தனை மாற்றங்கள்!



இன்று அவனை முதல் முதலில் சந்தித்த நாள்!!!



எந்த நம்பிக்கையில் தாலியை எடுத்து அவளிடம் நீட்டினாள்???



புன்னகைத்தன உதடுகள்....



விட்டினரால் வற்புறுத்தப்பட்ட கல்யாணத்தில் மனாளன் அவனாக இல்லாதிருந்தால்....நிச்சயமாய் தற்கொலை தான்....



அடித்துக் கூறியது மனசாட்சி....



'ஆக... அவன கண்டதுல இருந்து லவ் பண்ணி இருக்கேன்.... இது தெரியாம எவ்வளவு வம்பு....' தலையை தட்டிக் கொண்டவள் நிமிரவும் கண்ணுக்கு குறுக்காக சிறிய கத்தி வேகமாக சென்று அதே போல் நர்த்தனமாடி நிற்கவும் சரியாக இருக்கு சடாரென இருக்கையை தள்ளி விட்டு எழுந்தவள் பின்னாலிருந்தவனின் நெஞ்சில் தன்னை புதைத்துக் கொண்டாள்.....



"சர்ப்ரைஸ் எப்பிடி இருக்கு பேபி....?" கண் சிமிட்டி கேட்ட தன்னவன் குரலில் விலுக்கென நிமிர்ந்தவள்



"இடியட்.... என்ன பயமுறுத்துறதே வேலயா போச்சு உனக்கு?" சிரிப்புடன் நெஞ்சில் செல்லமாக குத்தினாள்.



"ஹேப்பி அனிவர்ஸரி மை டியர் பொண்டாட்டி" நெற்றியில் இதழ் பதித்து நெற்றி முட்ட அவனையே பார்த்திருந்தவளிடம்



"திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா பேபி?" கண்ணடித்து கேட்ட கணவனின் நெஞ்சில் தன் முகத்தை அழுத்தமாக பதித்து



"ஐ லவ் யூ மாமா" என்க கிறங்கிப் போனான் அவளவன்....



"ஹே....என்னடி ஓவர் லவ்ஸ் வந்துடுச்சா..... மாமான்னு சொல்ற?"



"எனக்கு எப்போவுமே உன் மேல ஓவர் லவ்ஸ் தான்டா கமாண்டர்"



"அடிப்பாவி.... மாமாங்குற வார்த்தய முழுசா அனுபவிக்க கூட விட மாட்டியா நீ?" தன்னவன் கேள்வியில் கலகலத்து சிரித்தாள் அவள்!!!



அவள்..... அவனின் உயிரோடு கலந்தவள்!!!



முற்றும்.



நன்றி.

ரிஷி.



04-06-2021.

உங்களுடைய கருத்துக்களை கீழே பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பா

 
Last edited:
Status
Not open for further replies.
Top