SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mafa என்ன சொல்ல. இன்று காலை உங்கள் அற்புதமான கருத்துக்களால் விடிந்திருக்கிறது. மனம் நெகிழ்ந்துபோனேன் அதை படித்ததும். ஆம் 21 வருட அவலம் எனக்கு. செல்லும் நான் திரும்பி உயிருடன் வருவேனா, என்று அம்மாவும், வெளியே சென்ற அம்மா உயிரோடு வருவார்களா, மாட்டார்களா என்று அஞ்சி நானும் வாழ்ந்த வருடங்கள் எத்தனையோ. பள்ளிக்கூடம் சென்ற மகன், புத்தகம் பிரிக்கும் முன்னே உயிர் பிரிந்து சென்ற கதைகள் ஆயிரம் ஆயிரம். இதை பேசினால் கண்ணீர் மட்டுமல்ல, உள்ளமும் ரத்தக்கண்ணீர் வட்டிக்கு. அது போகட்டும்,Hi dr.
நான் இன்னும் எல்லாக் கதைகளையும் வாசித்து முடிக்கவில்லை.. வாசித்து முடித்த கதைகளில் உங்களதும் அடக்கம்.
'பேச முடியாவிட்டால் என்ன? வாய் ஊமையாகாலாம்.. நம் காதல் ஊமையில்லயடி...' புரிய வைத்து விட்டான் ஆகமன்....
ஆகமனைப் போல் ஒருவனிருந்தால் எப்படியிருக்கும்???? ப்பா...... நான் வானிலல்லவா பறந்து கொண்டிருந்திருப்பேன்....
ஈழத்தமிழர்களுக்கு இப்படியொரு நிலை வந்ததா?? சொந்த மண்ணிலே பாதுகாப்பின்றி... நினைக்கையில் இதயம் ரணமான உணர்வு. நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள்.... ஆகமன் போன்ற ஒருவனிருந்ததால் இவர்கள் வாழ்க்கை சீரானது.... ஏனையோரின் வாழ்க்கை என்னனானது? கதையை படிக்கும் போது கண்கள் குளம் கட்டி விட்டன... நான் அந்த இடத்தில் இருந்ததை போன்ற பிரம்மையை உருவாக்கி விட்டீர்கள். மரண ஓலங்கள் பீராங்கி வெடியையும் தாண்டி ஒலித்ததை உணர்ந்தேன்... அவர்கள் உணர்வுகளை எனக்குள் கடத்தி விட்டீர்கள்... நிச்சயம் அவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்... கண்ணீருக்கு பதில் கிடைக்க வேண்டும். என இறைவனை பிரார்த்திக்கிறேன்..
நிரந்தரிக்கு வாய் பேச வராது என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வித்தியாசமான முயற்சி...
காதலுக்காய் ஆகமன் பட்ட பாடாகட்டும், அவனை ஏற்க முடியாமல் அவள் பட்ட தவிப்பாகட்டும்... எல்லாவற்றையும் வார்த்தைகளை கோர்த்து மாயாஜாலம் செய்து விட்டீர்கள்...
நிறைவான கதை.... எல்லா பாத்திரங்களும் அழகாக வந்திருக்கின்றன. உங்கள் கற்பனை திறனையையும் எழுத்து நடையையும் மிகவும் ரசித்தேன். தமிழ் பேரழகு உங்கள் ஒவ்வொரு வசனமும் உணர்த்தி சென்றது.....
ஆழமான காதல் ஆழமாகவே எனக்குள் பதிந்து விட்டது. நிறைவான கதையை தந்தமைக்கு நன்றி தோழியே!
.
கதையின் தலைப்பு கதைக்கு மிகப் பொறுத்தமே....
சக போட்டியாளராய் வாழ்த்துகிறேன்... வாழ்த்துக்கள். ❤
ஆம் நிரந்தரியின் வாழ்க்கையில் முளைத்த விடிவெள்ளி அவன். எத்தனை ஆகமங்கள் உதித்தார்களோ தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக ஒரு ஆகமனாவது உதிர்த்திருக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை.
என்னுடைய கதை உங்களை கலங்கவைத்ததை விட, உங்கள் கருத்து, என்னை மெய்சிலிர்க்க வைத்து மகிழ்ச்சியில் கலங்க வைத்தது. இப்படி ஒரு அழகான விமர்சனம் கண்டு சத்தியமாக வானில் பார்க்கிறேன். ஒவ்வொரு வரியும் வாசிக்கும்போது, புத்தியுடன், உள்ளத்தையும் புளகாங்கிதம் அடைய செய்கிறது. மிக மிக நன்றி தோழி. நீங்களும் எழுதி இருக்கிறீர்களா... வாழ்த்துக்கள் சக போட்டியாளரிடமிருந்து பெரும் வாழ்த்து அற்புதமானது அல்லவா.