All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நாகாவின் ‘மயிலிறகு மங்கை’ - கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 20

காதல் என்பது
காற்றடைத்த பந்து போல்
தண்ணீரில் எவ்வளவு
மறைத்தாலும்
மறுபடியும் பந்து
மேலே வருவதுபோல்
மறைத்து வைக்கும்
காதலும், உண்மையும்
ஒரு நாள் வெளிவரும்


மங்கை, அஜய், சப்ரைஸ் கொடுத்து விட்டு, தன் வேலையை பார்க்க மிஷின் செக்க்ஷன்க்கு போனால்.....

அஜய் , வாட்ச்மேன் அங்கில்க்கு கேக் கொடுக்கப்போக, அவரே அஜய்யை தேடி நேரில் வந்தார்.....

இந்தாங்க அங்கில் கேக் சாப்பிடுங்கள்,எனக்கு இன்னிக்கு பிறந்த நாள் என்னை ஆசிர்வாதம் வாங்கினான்...

தம்பி நல்லா இருங்க, சரி தம்பி யாரெல்லாம் வந்து இருக்கீங்க, நான், மங்கை, உஷா , இன்னும் கொஞ்சம் பேர் வெளியாலுங்க வரவேண்டி இருக்கு,அங்கில்.....

அதான் ரங்கசாமி இரண்டு வெளியால் கூட வந்தானா ,என வாட்ச்மேன் அங்கில் கூற..

அஜய்க்கு முகம் மாறியது, என்ன சொல்லுரீங்க, ரங்கசாமி வந்தானா?

அவனுக்கு இன்னிக்கு வேலையில்லையே, அப்புறம் ஏன் வந்தான் அது வெளியாட்கள கூட்டிட்டு.... என அஜய் யோசிக்க ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அவன் உள்ளுனர்வு கூற சற்று பயம் அவனை தொற்றிக் கொண்டது....

சரி அங்கில் அவன் என்ன சொன்னான் , எந்த பக்கம் போனான், என அஜய் கேட்க...

தம்பி, ஏதோ எலக்ட்ரிக்கல் வேலை இருக்கு, அப்படின்னு சொல்லிட்டு மிஷின் இருக்கிற பக்கம் தான் போனான் தம்பி.....

இப்போது அஜய்யால், ஓரளவு ரங்கனின் திட்டத்தை புரிந்து கொள்ள அவனது உடல் நடுங்கியது.......ஏனென்றால் மங்கை அங்கு தான் சென்றாள் என அறிந்து, பதட்டத்துடன்...
அங்கில் உடனடியாக, மெயின்க்கு போய் கரென்ட் கரெக்சனை ஆப் பண்ணுங்க என சொல்லி விட்டு வேகமாக உள்ளே ஓட....

அங்கு அப்போது தான், மங்கை அந்த செக்ஷனில் நுழைந்தாள்......
அவள் அங்கிருக்கும் மிஷினை தொட போக,
வேகமாக ஓடி வந்த அஜய் அவள் கையை பிடித்து இழுக்க அவன் தவறி மிஷின் மேலே விழுந்து விட்டான்....
அஜய் விழுந்த ஒரு நொடியில் கரென்ட்ம் ஆப் ஆக, அந்த வேகத்தில் தூக்கி ஏறியப்பட்டான்....அதில் அருகில் இருந்த சுவரில் மோதி கீழே விழ அவன் தலையில் இருந்து இரத்தம் வழிய தொடங்க ....
அங்கு நடப்பதை பார்த்த மங்கை அதிர்ச்சியாக, பின் அஜய் இரத்தம் வழிந்து மூச்சு பேச்சின்றி கிடைப்பதை பார்த்து....
அஜய்... என அந்த கம்பெனி யே அலரும் வண்ணம் கத்தினாள்........
அஜய் தூக்கி தன் மடியில் போட்டு கொண்டு ,மங்கை அவள் துடித்து விட்டாள்...

அஜய், அஜய் கண்ணமுழி அஜய், கண்ணமுழிச்சு பாரு அஜய்.... என அவனை பிடித்து எழுப்ப, அழகான வெள்ளைநிற சட்டை அவனின் இரத்தத்தால் நனைந்து சிவப்பாய் மாறி இருக்க...

அஜய் ப்ளீஸ் எழுந்துரு அஜய் ப்ளீஸ் , என அவள் அழுது கொண்டிருக்க, அவள் சத்தத்தை கேட்டு,அங்கு ஓடிவந்தாள் உஷாவும், அந்த டெக்னீஷியன் களும்.........
ஓடிவந்து, அஜய்யை தூக்கி கொண்டு, அவர்கள் வந்த காரிலே மருத்துவமனை சென்றனர்.........

போகும் வழியேல்லாம், அஜய் எழுந்திரு அச்சுமா அச்சு என்று என்னனமோ வேதனையில் உளறி கொண்டு வந்தாள்......

இதை பார்த்த உஷாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்க..... அனைவரும் மருத்துவ மனை வந்தனர்.......

டாக்டர் , டாக்டர், என் அஜய்யை, எப்படியாவது காப்பாத்திருங்க ப்ளீஸ், என அவரிடம் கெஞ்ச ,அஜய்யை வேகமாக ICU கொண்டு சென்றனர்....

அனைவரும் வெளியே நிற்க..... மங்கை மட்டும் அழுது கொண்டு இருந்தாள்,
பின்பு நர்ஸ் அஜய் போட்டு இருந்த சட்டையை மங்கை யிடம் கொடுக்க, அதை பார்த்தவள் ஓ ......... வென்று கதறி அழ தொடங்கினாள்....

உஷா அவள் அருகில் வந்து அவள் தோளை தொட...

உஷா , உஷா பாரு உஷா அஜய் சட்டையில் எவ்ளோ ரத்தம், அவனாள ஒரு சின்ன வழிய கூட தாங்க முடியாது, ஆனா ஆனா இங்க பாரு அவன் எப்படி படுத்து இருக்காரு பாரு ,என் அஜய் அ பாரு உஷா..... என கதறி அழுதாள்,

அவள் என் அஜய், என் அஜய் என அழ உஷா விற்கு ஒன்றும் புரியவில்லை......அவளுக்கும் தன் தோழியை பார்த்து கண்ணில் நீர் வழிந்தது.......

ICU வில் இருந்து, நர்ஸ் வெளியே வர, பேசன்ட் க்கு B+பாசிட்டிவ் இரத்தம் தேவைப்படுது என கூற,....

மங்கை எனக்கு அதே இரத்தம் தான் என கூறி உள்ளே சென்றாள்.....

விவரம், போலீஸ்க்கு தெரியப்படுத்த.... அதற்குள், சாத்வீயும் அங்கு வந்த சேர்ந்தாள்...

தன் உயிர் நண்பனின் நிலை எண்ணி , காரணத்தை உஷா விடம் கேட்க...அவள் அவளுக்கு தெரிந்தவற்றை கூற...

அதற்குள், போலீஸ் ,வாட்ச்மேன் னிடம் விசாரித்து விட்டு, ரங்கனை தேடி சென்றனர் ....

நேரம் , யுகமாய் நகர,அனைவரும், வார்ட்க்கு வெளியே கார்த்திருந்தனர்......

மாலை நேரம் ஆகிவிட்டது.....
நர்ஸ் வெளியே வர, அனைவரும் ஆவலுடன் பார்க்க.....அவர் கண்முழிச்சுட்டாரு என கூறவும், அனைவரும் உள்ளே சொல்லப்போக...

ஹலோ ஹலோ இது ICU வார்ட், ஒவ்வொருத்தராக உள்ளே போங்க.... என நர்ஸ் கூறிவிட....

முதலில் சாத்வீ உள்ளே போய் பார்த்து விட்டு வெளியே வர....

அடுத்து உஷா உள்ளே நுழையும் போது, சாத்வீ அவளை தடுத்தாள்.

மங்கை நீ உள்ளே போ , அஜய் உன்னதான் தேடுறான் என கூற.... வேகமாக உள்ளே நுழைந்தவள்...... கண்ட காட்சி
தலையில் கட்டு, மற்றும் காலில் கட்டுடன், கண்மூடி பேட்டில் படுத்து இருக்கும் அஜய்யை,..

அருகில் சென்று , அஜய் என மெலியதாய் மங்கை அழைக்க.....மெல்ல கண் திறந்தான் அஜய் ......

அழுது, அழுது கண்கள் சிவந்து இருந்த மங்கை யை பார்த்து மயூரி..என அழைக்க
....

அவன் கண்களையே பார்த்து கொண்டிருந்தாள், மங்கை....

மயூரி, என மறுபடியும் அஜய் அழைக்க..

சார் நான் மங்கை......

ஏன் மயூரி மா இன்னும் இந்த நாடகம்.....
நான் மயங்கி இருந்தப்ப, நீ எனக்காக கத்தி கதறுதுனது எனக்கு தெரியும் மயூரி மா என அஜய் கூற ...

அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்...அவள்..

அப்பொழுது தான் அவள்அனுக்காக செய்தது , அழுதது எல்லாம் நினைவுக்கு வர....

அப்படியே மவுனமாக, எழுந்து வெளியே செல்ல முயன்றவளை, அஜய் கையை பிடித்து இழுத்தான், ஓண்ணும் சொல்லாம போறியே
என அஜய் கூற.....

மெல்ல திரும்பியவள் இல்லை என தலை அசைத்தாள்..

பொய்,பொய்,... எனக்கு என்ன கலர் கேக் பிடிக்கும், என்ன கலர் ரோஜா பிடிக்கும் எல்லாம் தெரிந்து தானே
என் பிறந்த நாளுக்கு பார்த்து பார்த்து எல்லா ஏற்பாடும் பண்ண....

மறுபடியும் வெறும் தலையசைப்பு மட்டும், அவளிடம் இருந்து....

அப்போ சரி, நீ என் மயூரி இல்லை, மங்கைன்னா எனக்கு இந்த உயிர் பிச்சை வேண்டாம் என கையில் உள்ள டீரிப்ஸ் ஐ வேகமாக கலட்டப்போக.....

ஐயோ,ஐயோ,அஜய் ப்ளீஸ் வேண்டாம், வேண்டாம், நான் உங்கள் மயூரி தான் என கத்தி விட்டு சுவற்றில் சாய்ந்தபடி அப்படியே கீழே உட்கார்ந்தாள்....😭😭😭😭
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 21

காலங்கள் உருண்டாலும்
காயங்கள் மறைவதில்லை
மறைக்கப்படுகிறது
சில காத்திருப்புகளால்
அந்த காயத்திற்கு
மருந்திடலாம்


அது போல் உண்மை எது வென்று தெரியாமல், காத்திருக்கும் அஜய்யும்......

உண்மையை மனதிற்குள் புதைத்து வாழும் மயூரிக்கும் .....

வாழ்க்கை அவர்களை வாழ வைக்க காத்திருக்கிறது..........

அஜய்யிடம் தான் தான் மயூரி என்ற உண்மையை கூறிவிட்டு அழுதபடியே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாள் மங்கை.....

நீண்ட மவுனம் அங்கு நிலவ.......... அழுகை.... விசும்பல் ஆக மாறி பின் இறுக்கமாக மாறியது....

அஜய் மெல்ல பேச ஆரம்பித்தான்........
மயூரி, மயூரி.......

அவன் குரலில் மெல்ல அவன் புறம் திரும்பியவள்..... என்ன என்பது போல் பார்த்தாள்..........

மயூரி இங்க வா என அழைத்தான்......

மெல்ல எழுந்து அவன் அருகில் அமர்ந்தாள்.....

சிறிது நேரம் மயூரி முகத்தையே பார்த்தவன்.....

ஏன் என்ன ஏமாத்துன மயூரி.........ஓ.... நாம ஏற்கனவே ஹோம்ல கஷ்டப்பட்டுடோம்.. இவன கல்யாணம் பண்ணா மறுபடியும் அந்த வாழ்க்கையில் பெரிய மாற்றம் இருக்காது, அதான் ராஜா பணக்காரன், அவன கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சு என்ன ஏமாத்துனியா மயூரி.... என அவன் வாய்க்கு வந்தபடி பேசத்தொடங்கினான்.....

ஏனெனில் அது இன்று தோன்றியது அல்ல என்று மயூரி யை பிரிந்தானோ அன்று தோன்றியது.....

அது வரை அமைதியாக இருந்தவள்,
கலகலவென சிரிக்க ஆரம்பித்து விட்டாள்....

அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை..... தான் எவ்வளவு பெரிய விஷயத்தை கேட்டு இருக்கிறோம் இவள் ஏன் இப்படி சிரிக்கிறாள் என குழம்பி விட்டான்....

வில் யூ ஸ்டாப் மயூரி.....என அஜய் கத்த....

அவனை சுட்டெரிப்பது போல் தன் நெருப்பு பார்வையை அவன் மீது வீசினாள்.....

அந்தப் பார்வையில் , சற்று அதிர்ந்தான்.....

மிஸ்டர் அஜய் யாரு யாரை ஏமாத்துனா....... அத பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு..... என ஆவேசமாக கேட்டாள்......

அவள் பேச்சில் அதிர்ச்சியில் உறைந்தான் அஜய்......

நம்பி வந்த பொண்ணு, என்னா ஆனான்னு ,கவலைபடாம பாதியிலேயே விட்டுட்டு போனவன் தான நீ..... என்ன பாத்து இந்த கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு....ஹா... என கொதித்தாள்...

ஆ...... அது வந்து...... ஒரு முக்கியமான... ஒரு வேலை... அதான்...

ஓகோ..... காதலிக்கிற ஒரு பொண்ண ஒரு பார்டில, அவள பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம , அவள அப்படியே விட்டுட்டு போற அளவுக்கு என்ன முக்கியமான வேலை.... ஹா.... என மீண்டும் தன் கேள்வியை கனையாக தொடர்ந்தாள்.........

அ.. அது வந்து.....என அஜய் விளக்கம் கூற வருவதற்க்குள் .......

நிறுத்து அஜய் ,எந்த விளக்கமும் தேவையில்லை, இப்போ உங்களோட எந்த விளக்கமும் எனக்கு நடந்த எதையும் மாற்ற போவதும் இல்லை என மீண்டும் கதறி அழுத தொடங்கினாள்...

அவள் அழுகையை பார்த்தவுடன், அஜய்க்கு, அவளை அணைத்து ஆறுதல் கூற வேண்டும் என தோன்ற தன்நிலை உணர்ந்து அமைதி காத்தான்....

மயூரி, என அஜய் அழைக்க.....

மெல்ல திரும்பியவள்.......

என்ன நடந்தது...... நீ எப்படி ராஜா வ கல்யாணம் பண்ண.....

ம்கிம் .... என் சிரித்து விட்டு....அன்னிக்கு நீ என்ன பார்ட்டில விட்டுட்டு போன் வந்ததுன்னு போயிட்ட...... அப்போ....

அப்போ. .... நான் ராஜாட்ட சொல்லி உன்ன ஹோம்ல விடச்சொன்னனே ........

மீண்டும் அதே வலி மிகுந்த மெல்லிய சிரிப்பு ம்கிம்......

அங்க தான் என் வாழ்கையே மாறிச்சு....என தளர்வாக கூறினாள்.....

ஏன் மயூரி என்னாச்சு......

உன் நண்பன்ட்ட பொறுப்பு குடுக்க தெரிந்த உனக்கு, என் கிட்ட அதுல விருப்பம் இருக்கான்னு கேட்டியா........இல்லை என் கிட்ட சொல்லிட்டாவது போனியா ........என மீண்டும் அதே கேள்வி....

மயூரி.........

ஆமா மயூரி தான், ம் ம்.....என தன் முகத்தை சுவர் பக்கம் திருப்பி ஒரு வெற்று புன்னகை உதிர்த்தாள்.. ....

சொல்லு மயூரி ப்ளீஸ்... என கெஞ்சினான் அஜய்......

சுவற்றை பார்த்தப்படியே கூற ஆரம்பித்தாள்....

நான் வாஷ்ரூம் போயிட்டு வந்தப்போ நீ இல்லை, நான் பயந்துட்டேன், அப்போ ராஜா வந்து...... நீ போயிட்டதா சொன்னான், அவனே மறுபடியும் ஹோம்ல விடுறதா சொன்னான்.... நானும் சரின்னு பார்ட்டி முடியுற வரை வெயிட் பண்ணேன்..... அப்போ ஜீஸ் என் மேல சிந்தி விட, கீழ உள்ள வாஷ் ரும் போனப்ப அது உள்ள ஏற்கனவே ஆள் இருந்தது அதனால்
ராஜா மேலே ரூம் இருக்கு நீ போய் வாஷ் பண்ணிட்டு வா என்றான்......
நானும் போனேன்... சிறிது நேரம் கழிச்சு என் பின்னாடி யாரோ நிக்கிறிறய மாதிரி இருந்தது..... திரும்பி பார்த்தேன் ராஜா தள்ளாடிய படி நின்னான்.....

என்ன ராஜா போலாமா.....

ம் ம் ம்.... போ....லாம்.மயூ என ராஜா தடுமாறி தடுமாறி பேசினான்..

ஆர் யூ ஓகே ,ராஜா....

ஓகே இல்லை மயூ , நீ என் கூட இருந்தாதான் ஓகே.....

என்ன பேசுறீங்க ராஜா...... நான் உங்கள் நண்பனோட காதலி...

ச்சே..... பிளடி.... அவன பத்தி மட்டும் பேசாத..

மயூரி ராஜா கூறியதை திகைப்பாக பார்த்தாள்.....

அவன்ட என்ன இருக்கு, படிக்கிறதே என் காசுல படிக்கான்...... ஆனா என்னையே ஓவர் டேக்பண்றான் எல்லா விஷயத்திலும்....

அவன் என்ன அவ்ளோ பெரிய அழகனா எல்லா பொண்ணுங்களும் அஜய் அஜய் ன்னு அவன் மேலயே விழுறாளுக......

ஹீ...ஹீ... உனக்கு ஒண்ணு தெரியுமா, அவன் போடுற எல்லா டரெஸ்சும் நான் வேண்டாம்ன்னு ஒத்துக்குன டிரெஸ், ஆனா அத அவன் போட்டவுடன் அவனுக்கு நல்லா இருக்கு அது ஏன்னு தெரியல.....அவன் பக்கத்தில் இருந்தா மொக்க மூஞ்சு கூட நம்மள திரும்பி பார்க்க மாட்டிக்குது என போதையில் ஏதே தோ பேசிக்கொண்டிருந்தான்.....

மயூரி தன் அஜய் மனதில் ராஜா இருக்கும் இடத்தை தெரியும் , ஆதே போல் ராஜா மனதில் அஜய் இருக்கும் இடமும் இப்போது அவள் தெரிந்து கொண்டிருக்கிறாள் அவன் வாயால்.....

ஏன் மயூ டார்லிங் உன்னய நான் தான் முதல்ல பார்த்தேன், காலேஜ் கேட்டுகிட்ட வைச்சு, கார் அ பார்க் பண்ணிட்டு வந்து உன்ன தேடிட்டு இருந்தபோது தான் , அந்த அஜய் உன்கிட்ட பேசிட்டு இருந்தான்....

ஏண்டி, நானும் அவன் கூட தான இருந்தேன், இவ்வளவு வசதியான அழகான என்ன பார்க்கனும்னு உனக்கு தோணிச்சா, நீயும் , அவன தானடி லவ் பண்ண......
அவன் அப்படி உனக்கு என்னடி பண்ணான்..... அவன் ஒண்ணும் பண்ணல டீ..... நீ எங்கே இருக்க உன் நிலமை என்னனு கண்டு பிடிச்சது நானு....... உன்ன அவன் கரெக்ட் பண்ண என்கிட்டயே ஐடியா கேட்பான், அதெல்லாம் அவனுக்கு சொன்னது நானு.....

அவன் ஊருக்கு போயிருந்தப்ப, அவன் சொன்னான்னு உனக்கு செலவு பண்ணேன்னு பார்த்தியா ,நீ என் ஆள்ன்னு பண்ணேன் டி.....

இந்தா கட்டி இருக்கியே புடவை அவன் எடுத்து குடுத்தான்னு நினைச்சியா......
ஹா , ஹா, ஹா நான் எடுத்தது, என் ஆள் மயூரிக்காக நான் எடுத்தது என சிரிப்பு டன் கூற.....

மயூரிக்கு ,அந்த புடவையை கீழித்து எறிந்து,விட தோன்றியது ஆனால் அது முடியாதே......

உங்க இரண்டு பேருக்கும் பிரட்சனை ஏறபடுத்தி உங்கள பிரிக்கலாம்னு பார்த்தா...என் கண்ணு முன்னாடி யே எவ்வளவு அழகா ரொமன்ஸ் பண்றீங்க....

அடியே, சொல்லு என் சொத்து அவளோதையும் உன் பேர்ல மாத்துறேன், நீ அவன விட்டுட்டு என் கூட வா..... என போதையில் தன் மனதிற்குள் உள்ள அனைத்து கீழ் தனமான எண்ணத்தையும் உளறிவிட்டான்..

ச்சீ,நீ இப்படி பட்டவனா, உன்னோட சுயரூபம் தெரியாம,அஜய் உன்ன அவன் உயிரைக்கு மேல நினைச்சுட்டு இருக்கான் ஆனா நீ அவன உன் செருப்பு விட மோசமா நினைத்து இருக்க....என மயூரி கூற..

அம்மாடி மயூரி நான் அவ்ளோ கெட்டவன்லாம் கிடையாது , நானும் நல்லவன் தான் அஜய் உன்ன லவ் பண்ற வரைக்கும்....

நீ பேசுறத பார்த்தா , பழம் கனியாது போல, அதனால பழத்தை கனிய வைச்சுற வேண்டியது தான் ,......

வாட் யூ மீன் ராஜா.....

அடியே செல்லகுட்டி உன்ன இனி லவ் பண்ண வைக்க முடியாதுன்னு நீ பேசுறதுல இருந்தே தெரியுது....

அதனால.......... என ராஜா இழுக்க..

அதனால.... என மயூரியும் கூற....

உன்ன முதல்ல எனக்கு சொந்த மாக்கிட்டா, தன்னால என் கிட்ட நீயே அவன விட்டுட்டு வருவ...... என மயூரியை நோக்கி செல்ல...

வேண்டாம் ராஜா , ஒரு பொண்ணுட்ட அத்து மீறுவது ரொம்ப தப்பு கிட்ட வராத....

ம்ம்ம், பேசாம ,அடம் பண்ணாம நீயே வந்துடு செல்லக்குட்டி... என அவளை நெருங்கி அவள் தோளில் உள்ள புடவையை தொட...

இனி மயூரியின் நிலைமை தான் என்ன?
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 22

கற்பு என்பது
பெண்ணிற்கு மட்டும் அல்ல
ஆணிற்க்கும் உண்டு
ஒழுக்கம் கற்பித்து
வளர்க்க வேண்டும்
பெண் பிள்ளையை மட்டும் அல்ல
ஆண் பிள்ளைகளையும் தான்....
பெற்றவர் களால் வளர்க்கப்படும்
பிள்ளைகளே தடம்மாறும் போது
பணத்தால் வளர்க்கப்படும்
பிள்ளை களை சொல்லிதான்
தெரியனுமா.........


ராஜா வை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..... அவன் , நல்லவன் தான் இந்த சூழ்நிலையும், சமுதாயமுமே, அவன் மாற்றத்திற்கு காரணம்....

சிறுவயதிலே, அன்னையை இழந்தவன், அப்பா,தொழிலுக்காக வெளிநாடு சென்று, அங்கயே அவருக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்....

தாத்தா,பாட்டி, இருக்கும் வரை அவர்களது அரவணைப்பில் வாழ்ந்தவன், சொற்ப்ப வருடத்திலே அவர்கள் இவ்வூலகை விட்டு சென்றவுடன் ஹாஸ்டல் ,பணத்திற்கு மட்டும் குறைவில்லை அவனது வங்கி கணக்கை வாட விடாமல் அவனது அப்பா பார்த்து கொள்வார்....

கல்லூரி படிக்கும் போது தனியாக வீடு வாங்கி கொடுத்தார், அதன் பின் தான் அவனது நடவடிக்கை மிகவும் மோசமானது... சில போதை வஸ்த்துகளுக்கு ஆளானான்,
அதற்கு என்று அவனுக்கு தனி நண்பர்கள் உண்டு,

அஜய் ஒரு நாள் , ராஜா விற்கு விபத்தின் போது இரத்தம் கொடுத்து காப்பாற்றினான், அதனாலேயே அவனிடத்தில் தன் நன்முகத்தை மட்டும் காண்பித்து அவ்வப்போது அவனுடைய அன்னையின் மூலம் தனக்கு கிடைக்காத தாய் பாசத்தை பெற்று கொண்டான்.....

அதில் இருந்து ஆரம்பித்தது அஜய் மேல் பொறாமை, தன் மேல் தாழ்வுமனப்பான்மை,
அதையும் அஜய்க்கு தெரியாமல் பார்த்து கொண்டான்...ஏனெனில் அவனுடைய அம்மா தரும் சாப்பாடும், அன்பும் அவனுக்கு தேவையாக இருந்தது........

ராஜா... தயவு செய்து கிட்ட வராத, நீ என்ட பேசுன எதையும் நான் அஜய் ட்ட சொல்லமாட்டேன் ப்ளீஸ் என்ன விட்டுடு ராஜா... என மயூரி கூறிமுடிப்பதற்க்குள், அவள் புடவை யின் மீது ராஜா கை வைத்து இருந்தான்,....

மயூரி, புடவை பிடித்து கொண்டே பின் செல்ல, ஒரு செல்ப் மீது மோத,.ராஜா அவள் அருகில் சிரித்து கொண்டே போதையில் வர....
சட்டென்று கையில் கிடைத்த ஒரு சிலையை கொண்டு அஜய் கையில் ஓங்கி அடித்து அவனை கீழே தள்ளி விட்டு கதவை திறந்து ஓடி விட்டாள்....
ஏற்கனவே போதையின் பிடியில் இருந்தவனுக்கு எழுந்திருக்க முடிய வில்லை..

வெளியே ஓடிவந்தவள், அந்நேரம் ஒரு ஆட்டோ வர தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஹோம்கு சென்று விட்டாள்.....

மதரிடம், ஒன்றும் சொல்லமுடியாத மனநிலையில் இருந்ததால், அப்படியே அறைக்கு சென்று அந்த புடவை கழட்டி குப்பை தொட்டியில் வீசி விட்டாள்......
அஜய் க்கு எவ்வளவு முயற்ச்சி செய்தும் அவனிடம் பேச முடியவில்லை, அவன் தொலைபேசி அனைத்து வைக்கப்பட்டு இருந்தது,அந்த இரவு அவளுக்கு கனத்த இரவாக முடிந்தது,தூக்கம் கண்ணை தழுவ மிகவும் சிரமப்பட்டது , யோசனையிலும், வேதனையிலும் இருந்தவள் எப்போதும் துயில் கொண்டாள் என அவளே அறியவில்லை....

நாட்கள் , வாரம் ஆனது, மயூரியால் , அஜய்யை தொடர்பு கொள்ள முடியவில்லை, அஜய்க்கும் அவளுக்கு தெரிந்த பொதுவான நட்பு ராஜா மட்டும் தான், அவனிடமும் இப்போது உதவி கேட்க முடியாத நிலையில் மயூரி இருந்தாள்.....

அப்போது ஓர் நாள் ராஜா ஹோம்க்கு வர......
ச்சே இந்த அஜய் ஏன் இப்படி பண்றான் , ஏன் என்கூட பேசல.... ஒரு வேலை ராஜா அஜய் அ ஏதாவது பண்ணி இருப்பானோ...என அதிர்ந்தவள்,பின் தன்னை நிலைபடுத்திக்கொண்டு, ச்சே ராஜா அவ்ளோ மோசம் கிடையாது.. அந்த அளவு போயிருக்க மாட்டான்......என யோசித்துக் கொண்டே கார்டனில் நிற்க.......

அஜய் கூட பேசமுடியாம தவிக்கியா, மயூரி என குரல் கேட்டு திரும்பியவள்....அங்கு ராஜா நிற்க, கண்கள் நெருப்பு கக்க அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள்.......

என்னை மன்னிச்சுடு மயூரி, அன்னைக்கு போதையில ஏதோ தெரியாம அப்படி நடந்துகிட்டேன்...... உன்ன எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தான் இத்தனை நாள் உன்கிட்ட மன்னிப்பு கேட்காமல் இருந்தேன்..... என்னை மன்னிப்பாயா மயூரி... நான் அவளோ கஷ்டப்பட்டு இருக்கேன்.....யாரும் என் மேல அன்பு வச்சது இல்லை , நீயும் அப்படி தான் இருந்தாலும் நீ என்ன விட அதிர்ஷ்டசாலி உனக்கு மதர் இருக்காங்க..... என மிகவும் பாவமாகவும், சூழ்நிலையால் மட்டுமே தவறு இழைத்தவன் போல் தன்னை காட்டி கொண்டான் ராஜா......

மயூரியால், அவனை நம்பமுடியவில்லை இருந்தாலும், இப்போது அஜய் அ தொடர்பு கொள்ள அவன் உதவி தேவை என்பதை
அறிந்து , அவனை மன்னிக்க தயாரானாள்...

சரி விடுங்க, ராஜா ஏதோ, கெட்ட நேரம் விடுங்க, உங்கள் தப்பை நீங்களே உணர்ந்ததே பெரிய மன்னிப்பு தான் ....என மயூரி கூற

மனதில் சிரித்துக் கொண்டே, முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டான்.....

அப்புறம் ராஜா, அஜய் எங்க ஆளையே காணோம், போன் கூட ஸ்விட்ச் ஆப்ல இருக்கு..... என மெல்ல கேட்டவள்...

வாடி, வா இப்போதும் அவன பத்தி தெரிந்து கொள்ள தான் என்ன பகைச்சிக்காம இந்த மன்னிப்பா..... அடியே நீ எப்படி பட்ட சுயநிலவாதியா இருக்க..... ச்சீ இதுக்கு நீ என் மேல கோபப்பட்டு இருந்திருந்தா கூட உன்ன பாவம் பார்த்து அஜய் கூட சேரவிட்டுருப்பேனோ என்னவோ... நீ என்ன இப்படி உன் சுயநலத்திற்காக என்ன யூஸ் பண்ண பார்க்கிறீயா ..... விட மாட்டேன் டி உன்னையும் அஜய்யையும் சேரவிடமாட்டேன் டி என மனதில் நினைத்து கொண்டிருக்க.....

ராஜா...... ராஜா.......

ஆங்..மயூரி........

அஜய் பத்தி கேட்டேனே......

என்ன மயூரி இப்படி கேட்க ,அப்போ உனக்கு விஷயம் தெரியாதா............

மயூரி ஆதிர்ந்து... ஏ..... ஏ.... என்ன சொல்லுரீங்க ராஜா என்ன விஷயம்......

அட மயூரி அவன் ஆஸ்திரேலியா போய் ஒரு வாரம் ஆகுது...... என ராஜா கூற....

ஆஸ்திரேலியா வா என மயூரி அதிர்ச்சி ஆகி அப்படியே கார்டன் பெஞ்சில் உட்கார்ந்து விட்டாள்......

ராஜா குரூரமாக சிரித்தப்படி அவள் அருகில் வந்தான்.....

என்ன மயூரி அப்போ அவன் உன்கிட்ட சொல்லலியா.....என ராஜா கேட்க.....

இல்லை என்பது போல் அதிர்ச்சி யில் தலைஆட்ட......

ஹோமில் உள்ள ,ஒரு பெண் ஓடி வந்தாள்......மயூரி, மயூரி என அதிர்ச்சி யுடன் மூச்சு வாங்க ஓடிவந்தாள்....

ஏன்னக்கா என்னாச்சு என கேட்க..
மயூரி , மதர் திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க......ஏன்னு தெரியல நீங்க வாங்க என அழைக்க.... இருவரும் வேகமாக அங்கு சென்றனர்....

ராஜா, தனதுகார்லேயே, மதர்யை அழைத்து கொண்டு, மருத்துவமனைக்கு சென்றனர்.....
அங்கு அவரை அவசரப்பிரிவில் சேர்த்தனர்....

அவரை பார்த்து விட்டு.... வெளியே வந்தார் டாக்டர்....

டாக்டர் மதர் எப்படி இருக்காங்க....

அவங்க கொஞ்சம் சீரியஸ்தான், வயதானவங்க என்பதால் எந்த ஒரு டிரீட்மென்ட் ம் அவங்களுக்கு செட் ஆக மாட்டிக்குது.....

சிறிது நேரம் மதர் இருவரையும் அழைத்து, மயூரி, இது நாள் வரை நான் உனக்கு துணையா இருந்தேன், ஆனா இனி அப்படி என்னால இருக்கமுடியாது..... எனக்கு ஏதாவது ஆனா ஹோம் பார்க்க ஆள் வரும், ஆனா உன்ன யாரு பார்த்துப்பா.... நீ தனியா இந்த சமுதாயத்தில் எப்படி வாழுவ..... அதனால மதர் உன் விஷயத்தில் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் நீ அத ஏத்துக்குவ என எனக்கு சத்யம் பண்ணு... என கேட்க...

மதர் , பிஞ்சு கொழந்தையா, குப்பதொட்டியில குப்பையோட குப்பையா இருந்து நாய்க்கு சாப்பாடா போக வேண்டி இருந்த.... இந்த உயிர் உங்களாள தான் இத்தனை வருஷம் உயிருடன் இருக்கு மதர் , நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன் என சத்யம் செய்தாள்......

ரொம்ப சந்தோஷம் மயூரி, உனக்கு கல்யாணம் பண்ணலாம் ன்னு முடிவு பண்ணிருக்கேன், உனக்கு நல்ல துணையா, உன்ன கண்ணும் கருத்துமாக இதோ இந்த ராஜா பார்த்துக்கிடுவாரு... என கூற..

மயூரிக்கு என்ன சொல்ல என தெரியவில்லை....ராஜா வேண்டாம்ன்னு சொல்லுங்க ப்ளீஸ் வேண்டாம்ன்னு சொல்லுங்க என கண்களால் வேண்டிக்கொண்டாள்.......

ராஜா கண்ணை காட்டி ,அமைதியாக இருக்குமாறு கூறிவிட.....
தீடிரென ஏற்கனவே சொல்லி வைத்தார் போல் அனைத்து ஏற்பாடுகளுடன் மேனேஜர் வந்தார்.....

உடனே மதர் முன்பே, மோதிரம் மாற்றப்பட்டு, தாலி கட்டும் நிகழ்வு நடக்க, ஏதோ பிரம்மை பிடித்தது போல் மயூரி இருக்க, கல்யாணத்தை பதிவும் பண்ணியாச்சு.....

நடப்பது, கனவா , இல்லை நினைவா,என ஏதும் அறியாமல் அதிர்ச்சி விலகாமலே மயூரி இருக்க, அங்கே எல்லாம் சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் நடந்து முடிந்தது.....

மயூரி இதை எவ்வாறு எதிர்கொள்வாள்
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 23
மனிதன் மனம்
மாற்றம் அடையக்கூடியது
சில நேரம் மனிதன்
சில நேரம் மிருகம்


அப்பேற்பட்ட மிருகமாக தான் ராஜா இப்போது மாறி இருக்கிறான்.........
ஆம், பணத்தின் அரவணைப்பில் வளர்ந்தவன், அன்பிற்கான ஏக்கம், விரும்பிய பெண்ணின் புறக்கணிப்பு, தாழ்வுமனப்பான்மை, அஜய் மேல் உள்ள பொறாமை அது போக சில போதை வஸ்த்துக்களின் விளையாட்டு அனைத்தும் சேர்ந்து அவனை ஒரு மிருகமாக மாற்றி இருந்தது🧟‍♂️🧟‍♂️🧟‍♂️.

ஆம் அவன் பள்ளிப்படிப்பின் போது தாயை இழந்தான், அவனது தந்தை அவனை ஹாஸ்டலில் சேர்த்து விட்டு, வெளிநாடு சென்று விட்டார்....அன்றிலிருந்து இன்று வரை அவனுக்கு பணம் மட்டுமே அவரிடம் இருந்து வரும், அவர் வருடத்தில் ஒருமுறை மட்டுமே வந்து பார்பார் அவ்வளவுதான்..

இவ்வாறு அவன் யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்தவனுக்கு, கல்லூரி யில் தான் அஜய் பழக்கம் ஆனான்,
அஜய் உடனான நட்பு, அவன் அம்மா வின் பாசம் அனைத்தும் சற்று அவனுக்கு ஆறுதல் ஆக இருந்தது......
இதுவே நாளடைவில் ,அவன் மீது பொறாமை யும், ராஜா விற்கு தாழ்வுமனப்பான்மையும் வந்து அவனை இந்த அளவு ஆக்கி விட்டது....
ஏதேதோ செய்து, மயூரி யை கல்யாணம் செய்து விட்டான்...👫

அங்கு தனது அறையில் நடந்தது எதையும், ஏற்றுக்கொள்ள முடியாமல், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், தன்னிலை எண்ணி தன்னை நொந்து கொண்டிருந்தாள், மயூரி.......

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்க.....

கதவை திறந்தவள் முகத்தில் எந்த வித மாறுதலும் இல்லை......
என்ன மயூரி டார்லிங் என்ன பார்த்துட்டு அப்படி யே போற, உள்ளே கூப்பிட மாட்டியா...

ஆமா,ஆமா நீங்கள் எல்லாம் அனுமதி கேட்டு தானே செய்வீர்கள், அப்படி தான அனுமதி கேட்டு மரியாதை யோடு என் விருப்பப்படி என்னை கல்யாணம் பண்ணி இருக்கீங்க ராஜா.

வரேவா ,என்னப்பத்தி இவ்வளவு புரிந்து வைத்து இருக்கியே மயூரி........ ரொம்ப சந்தோஷமா இருக்கு,என கூறிக்கொண்டே கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
உட்கார்ந்தவனை மயூரி முறைக்க.....
என்ன மயிலு தங்கம் அப்படி பார்க்க ...
சரி கிளம்பி என் கூட வா..
என்ன, உன் கூட வரனுமா? மதர் க்கு உடம்பு சரியில்லை ,அவங்க நல்ல படியா ஹோம் க்கு வர்ற வரை ,என்னால எங்கேயும் வர முடியாது, என முகத்தில் அடித்தாற் போல் கூறி விட்டு திரும்பி கொண்டாள் ...

அட அடடா, இப்போது தான் சொன்னேன் ,என்ன பத்தி நல்லா புரிஞ்சு வச்சு இருக்கன்னு, அதுக்குள்ள அது இல்லை என்று நிரூபிச்சுட்ட பார்த்தியா..

அம்மாடி, மயூரி, நீ என் கூட கிளம்பி வந்தாதான், உங்க மதர் நல்லபடியாக படியா திரும்பி ஹோம்க்கு வருவாங்க..... என்ன கேட்ச் மை பாயிண்ட் என தன் ஆள் காட்டி விரலை தன் மூக்கின் மீது வைத்து உரசிக்கொண்டு சொன்னான்....

அதனால ,நீ என்ன பண்ற உனக்கு அரை மணிநேரம் தர்றேன் ,நல்ல புள்ளயா உன் டிரஸ் அ எடுத்து கிட்டு, நான் வெளியே கார்ல் வெயிட் பண்றேன்,வந்துருடி என் செல்லம்.
என கூறி விட்டு வெளியே சென்று விட்டான்...

அவன் சென்றதும், தன் தலையை இரு கைகளால் பிடித்தவாறு, அப்படியே கட்டிலில் உட்கார்ந்தாள் , அவள் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது....
தன் வாழ்க்கை, இவ்வாறு ஆனதற்கு காரணம்,அஜய் தான் என நினைத்து அவன் மேல் கோபம் வந்தது...பின் ஒருவேளை இந்த ராஜா அஜய்யை ஏதாவது செய்திருப்பானோ என நினைத்து அச்சம் கொண்டாள்...
எது எப்படியோ, நம் கழுத்தில் தாலி ஏறி விட்டது, இனி இந்த ஜென்மத்தில் நம் வாழ்க்கை ராஜா வோடுதான் என நினைத்து ,மனதில் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை உருவாக்கியும் ,தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு காருக்கு வேகமாக சென்றாள் மயூரி.
பரவாயில்லை யே மயூரி சொன்ன நேரத்திற்கு முன்னதாக வே வந்திட்டியே , ம்ம்ம்...... புத்திசாலி தான், சரி உட்காரு என ராஜா சொல்ல.....

மயூரி கோவமாக, காரின் பின் கதவை திறந்து ஏறப்போக, .....

ஹலோ , மேடம் , எங்கே பின்னாடி போறீங்க, இங்கே முன்னாடி வா , ம்ம் தனியா மேடதுக்கு வெத்தலை பாக்கு வைத்து அழைக்கனுமா ஹா......என சற்று கோபமாக ராஜா கூற... வேகமாக முன்னாடி உட்கார்ந்தாள்.....

மயூரி உட்கார்ந்தது தான் தாமதம் வண்டி நேராக ,ஏர்போர்ட்டில் சென்று நின்றது....

மயூரி க்கு ஒரே குழப்பமாக இருந்தாலும் ,அவனிடம் எங்க போகிறோம் என்று கேட்க முடியாதே என எண்ணி அமைதியாக அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ,அசைந்து கொடுத்து, ஒரு நாய்குட்டி போல் அவன் பின்னாடி யே சென்றாள்.....
இருவரும்,மும்பை ஏர்போர்ட்டில் இறங்கினர், ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரவும்,அவர்களுக்காகவே ஒரு கார் தயாராக இருந்தது ,அந்த டிரைவரிடம், சாவியை வாங்கிக் கொண்டு அவனை அனுப்பி விட்டான்.....தானே டிரைவ் பண்ணிக்கொண்டு ஓர் இடம் சென்றான், மயூரி யும் எந்தவித கேள்விகளும் இன்றி அமைதியாக நடப்பவை அனைத்தையும் ஏற்கொண்டு விதியின் போக்கிலே சென்றாள்...

ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அதன் பின் நடந்து சென்றார்கள்....
அந்த இடம் மர்ம மாகவும் வித்தியாசமாகவும், மக்கள் அதிகமாகவும் இருந்தார்கள்..
இவர்கள் செல்வதையே அனைத்து கண்களும் , நகைப்புடன் பார்த்தது.....
சற்று தூரம் சென்றதும் , ஒரு தனி விடு இருந்தது ,இருவரும் உள்ளே சென்றனர்....

அங்கு இரண்டு அறைகள் இருக்க ...மயூரி யை ஒர் அறையில் சென்று ஓய்வெடுக்க சொன்னான்...

மயூரி, நீ அங்கு போய் ரெஸ்ட் எடு, இப்போ சாப்பாடு வந்ததும் கூப்பிடுகிறேன் என்றான் ராஜா...
அவனை புரிந்துகொள்ள முடியாமல், குழம்பிய நிலையிலேயே அறைக்கு சென்றாள்...

சிறிது நேரத்தில் சாப்பாடு வர, சாப்பாடை பிரித்து, மயூரி க்கு ஊட்டி விட கைகளை கொண்டு போக... அதனை மயூரி மறுத்து விட..

ஹலோ , ராஜா எனக்கு கை இருக்கு,எனக்கு சாப்பிட தெரியும், நீங்க ஊட்டி விடனும்னு எந்த அவசியமும் இல்லை என கோபமாக கூறிவிட்டாள்....
அவள் கூறியவுடன், ராஜா விற்கு கோபம் தலைக்கு மேல் சென்றது, சாப்பாடு இருக்கும் கையை உதறி விட்டு, நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து ஏதோ யோசிப்பது போல் பாவனை செய்தான் ...

ஆமாம்... மயூரி உனக்கு கை இருக்கு, ம்ம்ம் இரு வரேன் என எழுந்து வேகமாக உள்ளே சென்றான்....
இவன் எங்கு,செல்கிறான் என்ன செய்ய போகிறான் என ஒன்றும் தெரியாமல் விழித்து கொண்டிருந்தாள் மயூரி......

உள்ளே சென்றவன் , கையில் கையிறு ஒன்றை எடுத்து வந்தான் ,வந்தவன் மயூரி யின் இரு கைகளையும் பின் இழுத்து நாற்காலி யுடன் இணைத்து கட்டினான்....

மயூரி திடீரென ராஜாவின் நடவடிக்கையினாள் பயந்து போய்
அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.....

அவள் கைகள் இரண்டையும் கட்டி விட்டு, அவள் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு மீண்டும் தனது கையில் உணவை எடுத்து அவளுக்கு ஊட்ட வந்தவனை, பயம் கலந்த முகத்துடன் பார்த்து கொண்டு இருந்தாள் மயூரி.....

என்ன டார்லிங் அப்படி பார்க்க, ஆ .. காட்டு, இப்ப உன் கை இருந்தும் இல்லாத மாதிரி தான் , நீ இப்போது என் கையாலதான் செல்லம் சாப்பிடனும் என சிரித்து முகத்துடன் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவள் பெரிதாய் கண்டுக்கவில்லை , ஆ காட்டு
மயூரி என அவன் முகம் கோபத்தில் மாறி சத்தம் போட்டு,பின் ஆ காட்டு டீ என கத்தியேவிட்டான்...
அவன் கோபகனல் கக்கும் முகத்தையும், வெப்பம் தாக்கும் குரல் யையும் கண்டு நடுங்கியவள் தானாகவே வாயை திறந்து, உணவை உண்ண ஆரம்பித்தாள்.....

அதைகண்டு உடனே சிரித்தவன், அது இது நல்ல பிள்ளைக்கு அடையாளம்,,, இங்க பாருடி என்ன கோப படுத்துறது உனக்கு தாண்டி நல்லது கிடையாது, அப்புறம் அதோ பாரு கதவு அதை தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தாலும் உனக்கு என்னவேணாலும் நடக்கும் என்ன வேணாலும் என்ற வார்த்தை யை மிக அழுத்தமாக கூறினான் என்ன மயூரி கேட்ச் மை பாயிண்ட் , என தன் ஆள் காட்டி விரலை தன் மூக்கில் கை வைத்து உரசி விட்டு, பின் அவள் கை கட்டுகளை அவிழ்த்து விட்டு, வெளியே சென்று விட்டான், செல்லும் போது வீட்டை வெளிபுறமாக பூட்டி சென்றான்.

மயூரி, சிலைபோல், அந்த நாற்காலியிலேயே உட்கார்ந்து இருந்தால்,ஏன் இவ்வாறு வித்தியாசமாக நடந்து கொள்கிறான் ராஜா, சிரிக்கிறான், அடுத்த நொடி கோபபடுறான், ஒரு சாதாரண சாப்பாடு விஷயத்திற்கு இவ்வளவு கடுமையா நடந்து கிடுறான்,இவன் எந்த மனநிலையில் இருக்கான் , என பலவற்றை யோசித்து யோசித்து மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்வுற்று அறையினுள் சென்று முடங்கி அப்படி யே உறங்கியும் விட்டாள்...

பாவம் பேதை அவளுக்கு புரியவில்லை, அவளை ஆட்கொண்டிருப்பது மனிதன், அல்ல மனித உருவத்தில் உள்ள சைக்கோவை , இது தான் ஆரம்பம்.....

தீடிரென தன் அறை கதவை திறப்பது போல் சத்தம் கேட்க,சட்டென்று எழுந்தவள், யாரென்று பார்க்க, அங்கு ராஜா கையில் எதோ பார்சலோடு நின்று கொண்டிருந்தான்.....
ஏற்கனவே அவன் மேல் பயத்தில் இருந்ததாள், அவனை கண்டவுடன் சட்டென்று எழுந்து விட்டாள்.....

என்ன மயூரி மரியாதை எல்லாம் பயங்கரமா இருக்கு, இருக்கட்டும், இருக்கட்டும் நல்லது தான்.... ஆ...... அப்புறம் ,நல்லா குளித்து முடித்து, இதோ இதுல ஒரு புடவை இருக்கு அத கட்டிக்கிட்டு, அடுத்த அறைக்கு நல்லபுள்ளயா இந்த ராஜா வ காத்திருக்க வைக்காம, வர்ற சரியா.... என செல்லமாக ராஜா கூற.... என்ன என்பது போல் விழித்தாள் மயூரி........

என்ன மயூரி டார்லிங் ,அப்படி யெல்லாம் பார்க்க கூடாது, ஏனென்னா இன்னிக்கு நமக்கு முதலிறவு ல என வெட்கப் பட்டு கொண்டே, தன் சுண்டு விரல் நகத்தை கடித்து கொண்டே கூற.... மயூரிக்கு மேலும் பயம் குடிகொண்டது.....

ஐயோ , பேபிமா எதுக்கெடுத்தாலும்,நீ ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிற .....முதல்ல கையில் இருக்கிற புடவை ய பிரித்து பாரு .. என கூறவும்.....
அவன் குரலின் பயத்தில், பதட்டத்துடன், புடவையை பார்தவள் அதிர்ச்சி ஆக , கைகள் நடுங்கியது......
என்ன புடவை நல்லா இருக்கில........

இ.....இ.... இந்த புடவை,..என மயூரி பதட்டத்துடன் கேட்க

ஆமா அதே புடவை தான்....என ராஜா வேகமாக கூற
(அன்று பார்ட்டி க்காக அஜய் வாங்கி அனுப்பியதாக கூறி ராஜா வாங்கி கொடுத்து, மயூரி கட்டி இருந்த அதே நீல கலர் புடவை)

இத . ...... நான் குப்பை தொட்டியில் போட்டுடேனே இதெப்படி......

மிகவும் கனத்த குரலில், ம் ம்.....ம் .. அன்று பார்ட்டியில் அந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் நான் ஹோம்க்கு வந்தேன் அப்போ குப்பை தொட்டியில் இருந்து தான் அத எடுத்தேன் என கூற...

மயூரிக்கு உடல் எல்லாம் வேர்த்து கொட்டியது.....

என்ன மயூரி எந்த புடவை யில உன்ன நான் மிஸ் பண்ணணோ, அதே புடவையில தான், நாசம் பண்ணணும் என கண்ணில் குரோதம்
பொங்க, அழுத்த மான குரலில் கூறிவிட்டு , உடனே தன் முகத்தை மாற்றி கல கலவென சிரித்தான்.....
மயூரி, உன் மனசுல தப்பிக்கனும்னு ஐடியா இருந்தா, அத மறந்துடு, ஏன்னா இந்த கதவை தாண்டி வெளியே போனா என்னவெனா நடக்கும் சொன்னனே நியாபகம் இருக்கா ....

அது என்னனு இப்போ சொல்லுறேன் கேளு டார்லிங்,.....

இது ஒரு சிவப்பு விளக்கு பகுதி,.... ஹா,ஹா,ஹா....என சிரித்து விட்டு அவள் முகத்திற்கு அருகில் வந்து இந்த வீட்ட தாண்டி வெளியே போனா, என்ன நடக்கும்னு இப்போ உனக்கே புரிஞ்சு இருக்கும், கேட்ச் மை பாயிண்ட் என தன் ஆள் காட்டி விரலை தன் மூக்கின் மேல் வைத்து உரசிக்கொண்டு... அந்த அறையே அதிரும் வண்ணம் கதவை சாத்தி விட்டு சென்றான் ராஜா........

மயூரி க்கு, உலகமே இருண்டு, அப்படியே தலை சுற்றுச் போல் இருந்தது, இவன் நாம் பார்த்த ராஜா இல்லை , இல்லவே இல்லை, இவன்.... இவன்...... என அதிர்ச்சி யில் மெத்தையில் உட்கார்ந்தாள்......

இது எந்த வகையான வாழ்க்கை, இது மயூரி க்கு எப்படி இருக்கப்போகிறது....... காலம் தான் பதில் சொல்லும்...........
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 24

பெண்களுக்கு
கல்யாண பந்தம்
சொர்க்கமாக
அமையாவிட்டாலும்
சிறையாக மாறக்கூடாது
பெண்ணே சிறையில்
சித்திரவாதையோடு வாழாதே
துணிந்து முடிவெடு
சிறையை உடைத்தெறி
உன் வாழ்க்கை
உனக்காக....
சமுதாயத்திற்காக அல்ல...


ஆம் கல்யாணம் நடந்து விட்டது, இனி என்ன நடந்தாலும் , நம் வாழ்க்கை இனி ராஜா வொடு தான் , என முடிவெடுத்து,அவன் சொன்ன சொல் மாறாமல் , நடந்து கொண்டிருந்தாள் மயூரி,...

எந்த புடவை யை அருவருப்பாய்
நினைத்து,அன்று குப்பை தொட்டியில் வீசி எறிந்தாலோ ,இன்று அதே புடவை கட்டிக்கொண்டு, ராஜாவின் மனைவி என்ற போர்வையில் அவன் முன்னாடி நிற்க்கப்போகிறாள்.இது தான் விதி என்றால் யாரால் மாற்றமுடியும்,
விதியை மதியால் வெல்லலாம் என்ற ஒரு கூற்றும் ஊண்டு, ஆனால் அது ராஜா விஷயத்தில் எடுபடுமா.........

மயூரி ராஜா சொன்னது போல் நன்றாக கிளம்பி விட்டாள், ஆனால் முகத்தில் புன்னகை எனும் நகையை அணிய வில்லை, ஏனெனில் அது அவளிடம் இல்லை,......

மெல்ல கதவு திறக்கப்பட்டு, உள்ளே சென்றவளுக்கு மூச்சு மூட்டிக்கொண்டு, இறுமல் வர ஆரம்பித்தது, நிமிர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு புகை அறைமுழுவதும் வியாபித்து இருந்தது ....

யாரது... மயூரி யா வாமா .. ம்ம்ம்... ரூம் குள்ள வரும் போது வலது கால் எடுத்து வைத்தியா , என போதை கலந்த குரலில் இழுத்து இழுத்து மயூரி யிடம் பேசினான் ராஜா....

என்ன ராஜா இது ,என்ன பண்றீங்க........என மயூரி பயம்கலந்த குரலில் கேட்க..

ஆங்..... என்ன கேட்ட என்ன இது வா சொர்க்கத்தை காட்டும் மாய பொக்கிஷம் ஹா ஹா என சிரித்துக் கொண்டே புகை இழுத்தான் அதனுடன் ஏதோ வெள்ளை நிறத்தில் பொடி ஒன்றையும் கலந்து கொண்டு ,புகை பிடித்தான்.......

(நீங்கள் நினைப்பது சரிதான் அது ஒரு வகை போதை வஸ்த்து தான்)

மயூரி க்கு மேலும் பயம் குடிகொண்டது, ஏனெனில் மதியம் நல்ல நிலைமையில் இருக்கும் போதே தன் கையை கட்டி தன்னை கஷ்டப்படுத்தினான், இப்போது போதையின் பிடியில் இருக்கிறான் என்ன செய்ய போகிறானோ என அவள் உடல் நடுங்கியது...

மயூரி பயத்தில் சுவருடன் ஒட்டி நின்றாள்.....

மெல்ல, புகை கலைந்து, அதில் மயூரி முழுவதுமாக தெரிந்தாள்....

வா.......வ்..... மயூ , என்னா அழகு , எனக்கே எனக்கான அழகு என ,, அவள் அருகில் மெல்ல வந்தான்....

மயூரிக்கு உடலெல்லாம் பயத்தில் வேர்த்து ஊற்றியது,உடல் நடுங்கியது.....

நெருங்கி வந்தவன் அவள் புடவையில் அன்று போல் இன்று கை வைக்க......

அங்கு மீண்டும் ஒரு துயிலுறிதல் நடந்தது , ஆனால் அவளுக்கு புடவை கொடுத்து காப்பாற்ற எந்த கண்ணணும் வரவில்லை......

தன்னிடம் உள்ள ஆடையை பறிகொடுத்தவள், உடல் கூனிகுறுக தன் கை ஒன்றே துணை என மறைத்துக் கொண்டு மண்டிஇட்டு உட்கார்ந்து விட்டாள், கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோட, துடைப்போர் யாரும் இல்லை.....

ராஜா வும் ,புகை இழுத்துக் கொண்டே.....அவள் அருகில் மண்டி இட்டான்.......

என்னடி மயூரி, உன்ன இப்படி பார்க்க ம்ம்ம்........ அழகு டி என கண்ணை சொருகி கொண்டு கூறினான்.....

சட்டென்று எதையோ யோசித்தவன்......நான் முதல்லாவதா , இரண்டாவதா என கேட்க......
கண்ணிர் ததும்பி, சிவந்த கண்களுடன் மயூரி அவனையே பார்க்க......

என்னடி பார்க்க,புரியவில்லையா, உன் முழு மேனிய நான் முதல்ல பார்க்கனா? இல்லை அஜய் முதல்ல பார்த்தானா என கேட்டவுடன்....

அந்த பெண்ணவள் அப்போதே மனதளவில் இறந்து விட்டாள் , அவன் முன் இனி இருக்கப்போவது உயிருள்ள பிண்டமே......

சரி நீ சொல்ல மாட்ட.... உன் மனசுல யார் இருக்கான்னு சொன்ன அஜய் தானே.....

உன்ன என்ட இருந்து பிரிக்க நினைச்ச அஜய்க்கு இப்போ ஒரு தண்டனை கொடுக்கப் போகிறேன்....என கூறிவிட்டு தன் சிகரெட்டை வைத்து அவள் நெஞ்சின் மேல் சூடு வைத்தான்...

அதில் மயூரி கதறி துடிக்க....

பார்த்தியா, பார்த்தியா ,அவனுக்கு தண்டனை கொடுத்தா உனக்கு வலிக்குது, அவனுக்காக எப்படி கத்தி துடிக்க பாரு... என்ன அன்னிக்கு அடிச்சுட்டு ஓடுன என ஏதேதோ பேசிக்கொண்டே மேலும் அவளுக்கு சூடு வைத்தான் ராஜா எனும் ராட்சசன்.....

அவள் கதறுவதை பார்த்தவன் , நீ என்ன வேண்டான்னு சொன்னில்ல , என்ன பார்க்கலல அதான், ஹா ,ஹா என சிரித்து விட்டு ,அவள் முகத்திற்கு அருகே வந்து என்ன மயூரி வலிய தாங்க முடியலயா....

ம்ம்ம்... அதுக்கு என்ன பண்ணலாம் என அவளிடம் கூறிக்கொண்டே யோசித்தவன் தன் கையில் உள்ள சிகெரெட்டை பார்த்து விட்டான், அவன் நரக மூளை மீண்டும் கொடூரமாக யோசித்தது.....

ஆங்...... இத இத இழு... ம்ம்... வலியே தெரியாது என கூறிக்கொண்டே

சிகரெட் ஐ அவள் வாயினுள் வைத்து புகைக்க வைத்தான் .....

தன் கைகளை எடுத்து தடுக்கமுடியாத சூழ்நிலையில் பெண்ணவள் இருந்தாள் ....

முதலில் இருமல் வந்தாலும், மெல்ல போதை தலைக்கேற அப்படியே போதையிலே சரிந்து விழுந்தாள்....

ராஜாவும் , போதையிலேயே விழுந்து விட்டான்........

அந்த நரக இரவும் முடிவுக்கு, வந்து பொழுதும் புலர்ந்தது....

மெல்ல போதை தெளிய எழுந்தவள்க்கு, தன் நிலை பார்த்து உடல் கூச தனது ஆடைகளை தேடி எடுத்து கொண்டு சுற்றும் முற்றும் அவள் கண்கள் ராஜா வை தேட...

அவன் அறையில் இல்லை என்பதை தெரிந்து கொண்டாள்....

பின் மெல்ல தள்ளாடியபடி எழுந்து ,குளியல் அறை நோக்கி சென்றாள்,அங்கு நேற்று அவன் வைத்த சூட்டின் புண் காந்த ஆரம்பித்தது,இருப்பினும் அவளுக்கு ஒரு சின்ன நிம்மதி கிடைத்தது... ஆம் அவள் இன்னும் கன்னி தன்மையுடன் தான் இருக்கிறாள் என்ற நிம்மதி.....அந்த நிம்மதி ஒன்றே போதும் என்பது போல், குளித்து விட்டு ஆடை மாற்றி வெளியே வர,
டைனிங் டேபிளில் அவளுக்கான சாப்பாடுடன், ராஜா வும் ரெடியாக இருந்தான்.....

குட் மார்னிங் மயூரி, வா வா டயர்டா இருப்ப வா முதல்ல சாப்பிடலாம்......
என அவளை உட்கார வைத்து மீண்டும் அவளுக்கு ஊட்டி விட, இந்த முறை மறுப்பேதும் சொல்லாமல் வாங்கி கொண்டாள்,ஏனெனில் மறுத்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்கு நன்றாக தெரியும்.......

என்ன மயூரி, நேத்து செம்ம போதை போல என நக்கலாக கேட்க,

பெண்ணவளுக்கு அக்னியில் எரிவது போல இருந்தது...

உன் முகத்தில சின்ன நிம்மதி இருக்கு போல,நீ நியாவே இருக்கன்னு

உனக்கு தெரிந்து இருக்குமே...........

ஹா ஹா அது எனக்கு தேவை இல்லை , அதனால அத எடுத்துகிடல,
எனக்கு தேவை எல்லாம் உன் கண்ணீரூம், வேதனையும்,தான் ஹா ஹா என மீண்டும் நரகன் போல் சிரித்தான் ராஜா......

காலம் , இவ்வாறு கொடுமையுடன் ஓடியது, நித்தமும் இரவு துயிலுறியப்பட்டு , போதையுடன் சேர்ந்து கொடுமையும் அரங்கேறியது....

நாளடைவில் அவள் மனதும் , உடம்பும் அதற்கு பழகிவிட்டது, இப்போது எல்லாம் துயிலுறிப்பு இல்லை, ஆடை துறப்பு மட்டுமே......

ஓர் ஆண்டு, கொடுமையிலும் , உடல் காயங்களிலுமே கழிந்தது.. ஓர் ஆண்டு வெளி உலகத்தையே,ஏன் அந்த கதிரவனின் வெளிச்சத்து கூட அவள் கண்டதில்லை....

ஓர் நாள் , வழக்கம் போல் மயூரி டைனிங் டேபிள்க்கு வர அங்கு, பல வகையான சாப்பாடு மற்றும் இனிப்புடன் ஒரு பார்சலும் , அதனுடன் ஒரு கடிதமும் இருந்தது.....

முதலில் கடிதத்தை பிரித்து, படிக்க ஆரம்பித்தாள்.....

ஹலோ மயூரி டார்லிங், இனிய முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துகள்....

அப்புறம் என் டார்லிங் அ இன்னிக்கு நான் வெளியே கூட்டிட்டு போகபோறேன்.அது கூட இன்னிக்கு உனக்கு ஒரு சர்பிரைஸ்ம் இருக்கு.....
அதனால உனக்கு ஒரு புடவை கிப்ட் பண்ணி இருக்கேன் அத கட்டிக்கிட்டு... நல்லா, கிளம்பி, சாப்பிட்டுவிட்டு இருப்பியாம் நான் வந்து உன்ன கூட்டிட்டு போவனாம் சரியா மயூ டார்லிங்.... என அந்த கடிதத்தில் எழுதி இருந்தது....
மயூரி அந்த பார்சலை பிரித்து படித்தாள் அதில் ஒரு அழகான சிவப்பு நிற புடவை இருந்தது......மிகவும் அழகாக இருந்தது...

மயூரி ராஜா சொன்னது போல் தயாராகி, அவனுக்காக காத்திருந்தாள்....

ராஜா வும் வந்தாச்சு, ஓராண்டு கழித்து வெளியே வந்தவள் உடம்பை வெயில் வாட்டியது,கதிரவன் பார்த்து அவள் கண்கள் கூசியது,உடனே காரில் ஏறிக்கொண்டாள்....

அன்று நாள் முழுவதும், அவன் மீது பயம் இருந்தாலும், இன்று கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாள்,
மீண்டும் இருவரும், வீட்டிற்க்கு திரும்பி கொண்டிருந்தனர்...... அப்பொழுது....

ராஜா .. நான் நான் ஒண்ணு கேட்டா செய்வீங்களா...

என்ன மயூரி...

எனக்கு மதர்ட்ட பேசனும்,கொஞ்சம் கால்பண்ணி தர்றீங்களா .......

ஹய்யோ, மயூரி டார்லிங் , நீ பேசுனா திரும்பி பேசுறதுக்கு மதர் உயிரோட இருக்கனுமே .. என கூற ..

மயூரி அப்படியே அதிர்ச்சியில் கண்களில் கண்ணீர் ததும்ப எ...... எப்போங்க....என கேட்க..

நம்ம இந்த ஊருக்கு வந்த அடுத்த நாள் என அவன் மேலும் அதிர்ச்சி யை கொடுத்தான்..

ஏன் என் கிட்ட சொல்லலைங்க ஏன்..

ஏன்னா, அப்படி தான் அதான் போய் சேர்ந்துட்டாங்கல்ல அப்புறம்.. என நக்கலா சிரிக்க , மயூரி தான் அழுதே விட்டாள்....

அப்புறம் உனக்கு ஒரு சப்ரைஸ் சொன்னல்ல...

அது என்ன தெரியுமா?

உனக்கு இன்று முதலிறவு..... என கூறும் போதே மயூரி, ராஜா வை பார்த்து எனக்கா,....

ஆமாம் உனக்கு தான், ..........

புரியல ராஜா என விசும்பலோடு கேட்டாள்...

புரியமாதிரி சொல்லுறேன்.... உனக்கு மட்டும் நான் இல்லாம முதலிரவு....

அப்படினா ராஜா என்ன சொல்லவறீங்க....

ஆமா இன்று உனக்கு முதலிரவு, அந்த சிவப்பு விளக்கு பகுதியில் தான் , ஆனால் மாப்பிள்ளை வேறு யாரே என கூறி முடிக்கவும்....

நோ...... என மயூரி கத்தினாள்.....ஏன் ராஜா எந்த கணவனும் மனைவிக்கு செய்யாத , செய்ய கூடாதத நீங்க செய்யாதீங்க ராஜா ப்ளீஸ் என கதறினாள்.

காருக்குள்ளேயே, அவன் காலில் விழுந்தாள்....

இவை அனைத்தையும் பார்த்து, ராஜா விற்கு கொடூர சிரிப்பு வந்தது.....

இனி இந்த அரக்கனிடம் பேசி பயனில்லை என அறிந்தவள் , தன் மானத்தை காப்பாற்ற , காரில் இருந்து குதிக்க எண்ணினாள்,

பின் இந்த அரக்கனையும் விடக்கூடாது என நினைத்தாள்.... அவர்கள் கார் ஒரு ஆற்று பாலத்தின் மேல் சென்றது....

ராஜா சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் , கார் ஸ்டியரிங் அ திருப்பி விட்டாள்...

அதில் அந்த கார் நிலைகுலைந்து, சுற்று சுவரில் மோதி ஆற்றுக்குள் காருடன் இருவரும் விழுந்து விட்டார்கள்......

இனி என்ன நடக்கும்
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 25



ஒரு மனிதனின்
இயல்பை
மாற்றுவது
இந்த சமூகத்தில்
அவன் பார்த்த
தோல்விகள்
அவன் சந்தித்த
மனிதர்கள்
அவர்களால்
ஏற்படும்
காயங்களே


இத்தகைய காரணிகளால் தான், இன்று மயூரி யும் மங்கை யாக மாறி நிற்கிறாள்..
ராஜா வின் கொடூர எண்ணங்கள் தெரிந்த பின், மயூரி அவனையும் அழித்து, தானும் அழிந்து விட முடிவெடுத்து, அவன் ஓட்டி கொண்டிருந்த கார் ஸ்டியரிங் ஐ எதிர்பாராத நேரத்தில் திருப்பி காரை நிலைகுலைய வைத்தாள்.
நிலைகுலைந்த கார், நேராக, பாலத்தில் இடித்து ஆற்றில் விழுந்தது......

இருவரும் , தண்ணீரில் மூழ்கினர்.........

நாட்கள், கடந்தது.........

மெல்ல ஒரு பெண் கண்திறந்தாள், மருத்துவ மனையில்,,,
( இனி நடக்கும் அனைத்து விவாதங்களும் ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில் நடைபெற்றவை, இங்கு தமிழில், நீங்கள் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க மக்களே 🙂🙂🙂 )

அதை பார்த்தவுடன் நர்ஸ், டாக்டரை அழைத்து வர....

என்னமா, எப்படி இருக்கீங்க ,

ஆங்......ம் ம்.. என முழித்தாள் அந்த பெண்...

அம்மா உங்க பெயர் என்ன.......

ஆங் என மறுபடியும்
அந்த பெண் யோசிக்க....

ஓகே , டேக் ரெஸ்ட்..... சிஸ்டர் , இவங்களுக்கு டிரிப்ஸ் போடுங்க,
நான் அப்புறம் வந்து செக் பண்றேன்....
மிகவும் யோசனையில் இருக்கும், அந்த பெண்ணிடம், நர்ஸ் பேச துவங்கினார்கள்....

என்னமா, உங்களுக்கு ஏதாவது நினைவு வந்துட்டா....

சிஸ்டர், நான் எப்படி இங்கே வந்தேன்....

நீங்கள் இங்கே வந்து 5நாள் ஆகிட்டு மா, இப்போதான், உங்களுக்கு கான்சியஸ் வந்துருக்கு.....
என்ன நான் வந்து 5 நாள் ஆகிட்டா...
என்னை யார் இங்கு அட்மிட் பண்ணா...

அதோ , அங்க நிற்கிற அம்மா தான்......

அவங்க ள, கொஞ்சம் கூப்பிடுங்கள்.......
சிஸ்டர் அவங்களை அழைக்க....
மயூரி அவங்களிடம், ஆங்கிலத்தில் பேச....
அம்மாடி நீ தமிழ்லயே பேசும்மா, எனக்கு பூர்வீகம் தமிழ் தான்...
மயூரி ஆச்சரியத்தில் முழிக்க....
என்னமா அப்படி பார்க்க....
இல்லம்மா நான் தமிழ் ன்னு உங்களுக்கு எப்படி தெரியும், நான் உன்ன பார்தாதப்ப நீ அத்தங்கரையில கிடந்த, உன்ன தூக்கி பார்த்தப்ப ,என்ன விட்டுருங்க ன்னு சொல்லிட்டு தான் மயங்கின.... அப்ப தான் நீ தமிழ் பொண்ணு ன்னு தெரிந்தது....
அம்மாடி நீ யாரு, எங்க இருக்க , எப்படி ஆத்துல விழுந்த..என கேட்க.....
மயூரிக்கு , அன்று நடந்தது, நினைவுக்கு வர..
இருவரும் ,காருடன் ஆற்றுக்குல் விழ... மயூரி ஆற்றில் அடித்து இழுத்து செல்ல பட்டு ஒரு கிராமத்தில் கரை ஒதுங்கினாள்.. அது ஒரு சிறிய கிராமம், தமிழ் நாட்டில் இருந்து, பிழைப்புக்கு அங்கு சென்றவர்கள் அங்கு பல வருடமாக தங்கி இருந்தார்கள்.
அம்மாடி நீ யாரு, எப்படி வந்தன்னு, கேட்டேன்....
அ...... அம்மா, எனக்கு எதுவும் நினைவு இல்லை மா...

சரிம்மா, சரி அத விடு, உன் விட்டுல உள்ளவங்கள பத்தி சொல்லுமா, அவங்களுக்கு சொல்லி விடுறேன்...
அதை கேட்டவுடன் மயூரி பதற்றத்துடன்...
அம்மா எனக்கு ஒரு மாதிரி தலை சுத்துமா.....

சரிம்மா, சரிம்மா படுத்துக்கோ, என் பெயர் மரகதம் எதுனா வேணும்னா என்ன கூப்பிட்டு விடும்மா.... சரியா......

சரி என்பது போல் தலை ஆட்டி விட்டு ...படுத்து கொண்டாள்..அவளது நினைப்பு முழுவதும் ராஜா வை பத்தி தான்,

ராஜா என்ன ஆனான்?...

மேலும் இரண்டு நாட்கள் ஆனது....மயூரி யை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என ,டாக்டர் சொல்ல....மரகதம் ,மயூரி யை பார்த்தாள்...
அம்மா, என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா என பாவமாக கேட்க....
மரகதம் ஒத்துக் கொண்டாள், .....
இருவரும், அந்த கிராமத்திற்கு, மரகதத்தின், வீட்டிற்க்கு சென்றனர்......
அது ஒரு குடிசை வீடு.... அந்த வீட்டிற்குள், ஒரு சிறிய பெண் இருந்தாள்...
அம்மாடி ,வாம்மா,இது தான் என் குடிசை...
அது என் பொண்ணு கோமதி ஸ்கூல் படிக்காமா.....
மயூரி அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்...
கோமதி மயூரி யை பார்த்தவுடன் அவள் அருகில் ஆசையாக உட்கார்ந்து கொண்டாள்...
அம்மா நீங்க இரண்டு பேரு மட்டும் தானா என மயூரி கேட்க...
ஆமாடி அம்மா, நானும் என் பூருசனும் ,புழப்புக்காக இந்த மொழி தெரியாத ஊர்ல வந்து கூலி வேலை பார்த்தோம்..
என் புருஷன் ஒரு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் ஒரு விபத்துல இறந்தார்....
இந்த பொட்டபுள்ளய வச்சு கிட்டு அப்படி யே காலம் ஓடுது......சரி அம்மாடி நீ யாரு, ...
அம்மா கண்டிப்பா சொல்லுறேன் மா , இப்ப என் கிட்ட எதுவும் கேட்காதீங்க மா , என்ன கொஞ்ச நாள் உங்க கூட தங்க மட்டும் அனுமதி குடுப்பீங்களா மா.....
என்ன கண்ணு , நானும் ஒரு பொட்ட புள்ளய வச்சுருக்கேன் , உன் கஷ்டம் புரியுது மா
,நீ எவ்வளவு நாள் வேணா தங்கிக்கோ கண்ணு... என மரகதம் கூற..
ஐ , ஜாலி ,நான் உங்கள அக்கா ன்னு
கூப்பிடவா....
தாராளமா கூப்பிடு...
அம்மா , நான் இத்தனை நாள் ஒத்தில இருந்தேன் இப்போ எனக்கு ஒரு அக்கா கிடைச்சுட்டாங்க.... ஐ ஜாலி.....என கோமதி மகிழ்ச்சி யில் துள்ளி குதித்தாள்......
ஆனால் மயூரி தான் ராஜா பற்றி யே நினைத்து கொண்டு இருந்தாள்.
மரகதம் ஏதோ பேப்பர் பொட்டனத்தை அவிழ்த்து அதில்,உள்ள சீனி யை டப்பாவில் தட்டி வைத்து பேப்பரை தூக்கி போட்டாள்...அந்த பேப்பர் காற்றில் பரந்து, மயூரி காலடியில் வந்தது....
எதார்த்தமாக அந்த பேப்பரை எடுத்தவள்,அதில் உள்ள செய்தியில் ஒரு நபரின் போட்டோ இருந்தது.... அதை பார்த்த மயூரி க்கு வேர்த்து ஊற்றியது, ஆம் அது ராஜா வின் புகைப்படம் தான் ,ஆனால் என்ன செய்தி போட்டிருக்கிறது என தெரியவில்லை..
ஏனெனில் அது ஹிந்தி நாளிதழ்....
ஆனால் அதில் என்ன இருக்கிறது, ராஜா விற்கு என்ன ஆனது என தெரிந்து கொள்ள துடித்தாள், சட்டென கோமு கண்ணில் பட .....
கோமதி.....
என்ன அக்கா ....
உனக்கு ஹிந்தி பேப்பர் வாசிக்க தெரியுமா....
என்னமா, இப்படி கேட்க நான் தான் இப்படி , அவ ரொம்ப அறிவாளி, நல்லா படிக்கிற புள்ளமா என தன் மகளை பெருமையாக பேசினாள்.....மரகதம்
அக்கா .. எனக்கு வாசிக்க தெரியும் அக்கா, எதுக்கா வாசிக்கனும்...
இந்தா, இந்தா நியூஸ் என்னனு வாசிம்மா......
கோமதி, பேப்பர் ரை வாங்கி வாசித்தாள்....
அக்கா, இந்த போட்டோல இருக்கிறவர், பேரு ராஜா வாம்....இவர் போன கார் விபத்து ஆகி பாலத்தில இருந்து ஆத்துல விழுந்துட்டாம்.....
கோமதி ,வாசிக்க வாசிக்க மயூரி முகம் பதட்டத்தில் மாறியது...அடுத்து என்ன என்பது போல் கோமதி முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்....
அப்படி ஆத்துல விழுந்தவர், இறந்துட்டாராம் அக்கா... அவர் கார்ரை வச்சு அவர் தங்கி இருந்த இடத்தை போலீஸ் விசாரிச்சதுல, அவர் கூட ஒரு பொண்ணு இருந்ததாகவும் ,அந்த பொண்ணு பத்தி ன எந்த ஒரு தகவலும் இல்லையாம்... கா 5 நாள் தேடி பார்த்ததுல அந்த பொண்ணு உடம்பு கூட கிடைக்கலயாம்..... கா அதனால அந்த பொண்ணும் இறந்து ஆத்துல உடம்பு அடிச்சுட்டு போயிருக்கும்னு கேஸ் அ குளோஸ் பண்ணிடாங்களாம் கா இதான் போட்டு இருக்கு... ஏன் கா இவரு உங்களுக்கு தெரிந்தவர் ஆ கா....
மயூரி பதட்டத்தில் இல்லை, இல்லை என நடுங்க , இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த மரகதத்திற்கு ஓரளவு புரிந்தது.....
கோமு, நீ மாலாக்கா வீடு வரைக்கும் போயிட்டு வாயேன், அவங்க அம்மா வர்ற வரைக்கும் அந்த அக்கா க்கு கொஞ்சம் நேரம் துணைக்கு இருந்துட்டு வாயேன் என கோமதியை வெளியே அனுப்பி வைத்தாள் மரகதம்..
பின் மயூரி கட்டி இருந்த சிவப்பு புடவையை எடுத்து அவளிடம் ஒன்றும் சொல்லாமல் அவள் முன் காட்டினாள்....
ஏற்கெனவே அதிர்ச்சி யில் இருந்த மயூரி, அந்த சிவப்பு புடவையை பார்த்த வுடன் ,அவள் பண்ண அனைத்தும் நினைவுக்கு வர மேலும் பயத்திலும், அதிர்ச்சி யிலும் பைத்தியம் பிடித்தாற்போல் கத்தி , கதறிவிட்டாள்...
உடனே மரகதம், அவளை அணைத்து ,தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த , மும்பை வந்ததில் இருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்,அவள் ஒரு அனாதை என்றும் மரகதம் தெரிந்து கொண்டாள்......
அன்றிலிருந்து சிவப்பு புடவையை பார்த்தாலே, ராஜா வை கொன்றது தான் அவள் நினைவிற்க்கு வரும்....
உலகத்திற்கு அது விபத்து என்றாலும், அவள் மனதிற்கு தான் தெரியும், அது ஒரு கொலை ,அதுவும் அவளால் அந்த கொலை நடத்தப்பட்டது நினைவிற்க்கு வரும்..
சிறிது காலம் ஓடியது , எங்க மும்பையில் இருந்தாள், ஏன்றாவது ஒரு நாள் , ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் செய்தது வெளி வந்துடுமோ என்ற பயத்தில் தான்,அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்தேன் அவங்களுக்கு ம் யாரும் இல்லை , எனக்கும் யாரும் இல்லை, அதான் நாங்க ஒரு குடும்பமா இந்த ஊருக்கு வந்துட்டோம், மயூரி அந்த ஆற்றில் இறந்து விட்டாள் , மங்கை தான் இங்கே அவள் குடும்பத்துடன் இருக்காள்...அஜய்......என மங்கை அஜய் அறியா தன் மீதி வாழ்க்கை அனைத்தையும் கூறி முடித்தாள்.....
அவள் கூறி முடித்ததும், அவள் முகத்தில் ஒரு தெளிவு, தைரியம், நிம்மதி தெரிந்தது ஏனென்றால் இத்தனை.. வருட வேதனை தான் நேசித்தவனிடம் கொட்டி விட்டோம் என்ற நிம்மதி தான் அதற்கு காரணம் .. ....
ஆனால் அதற்கு நேர் மாறாக அஜய் முகம், வாடியது , தன்னால் தான் , தான் மயூரி யை பற்றி தெரிந்து கொள்ளாததால் தான் இவ்வளவு கஷ்டத்தையும் மயூரி சந்தித்து இருக்கிறாள். என தனக்குள்ளே தன்னை நினைத்து அவமானப்பட்டு கூனி குறுகி உட்கார்ந்து இருந்தான் அஜய்....
அவன் அவ்வாறு செய்ய நேர்ந்ததற்க்கும் ஒரு காரணம் உண்டு .......
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 26



ஒருவன்
நல்லவனாகவும்
கெட்டவனாகவும்
மாற்றுவது
அவனது
சூழ்நிலையே
சில மனிதர்களை
சூழ்நிலை கைதியாக
மாற்றிவிடுகிறது

அஜய்யும், சூழ்நிலை கைதியே அன்று, ஆனால் அவன் இவ்வாறு நடக்கும், தான் நேசித்த பெண்ணின் வாழ்க்கை கெடுவதற்க்கு, தான் சூழ்நிலை கைதியானதே, ஒரு காரணமாக அமைந்ததை நினைத்து, தன் குற்ற உணர்ச்சியில் தலைகவிழ்ந்து இருந்தான்....
இப்ப சொல்லு, அஜய் நானா உன்னை ஏமாத்தினேன் , நானா பணத்திற்கு ஆசை பட்டு, உன்னை விட்டுட்டு உன் நண்பனை கல்யாணம் செய்து கொண்டேன்,என அடுக்கடுக்காக கேள்வி கனைகளை ஏய்தினாள், மங்கை என்ற மயூரி....
என்ன அஜய் இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம், இப்போ நான் கேட்கிறேன் எதுக்கு என்னை பார்கல, பேசல, ஏன் என்னை விட்டு வெளிநாடுக்கு போன எல்லாம் பணத்துக்காக தான அஜய் , பேசு, பேசுடா, என அவன் அருகில் வந்து, அவன் தலையை நிமிர்த்த....
அஜய் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.......
அஜய் அழுகிறியா, ம் ம், என லேசாக சிரித்து விட்டு, இப்பொழுது அழவேண்டிய நேரம் இல்லை எனக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம்...... உன்னுடைய இந்த பதில் ல தான், நான் இழந்த,கொடுமை பட்ட என் வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருங்கான்னு தெரியனும் சொல்லு அஜய்.....
எனக்கு இப்போதும் நம்பிக்கை இருக்கு , காரணம் இல்லாமல் என் அஜய்யால அப்படி முடிவெடுத்துருக்க முடியாது, சொல்லு அஜய் சொல்லு.....
என மயூரி கூறவும், இவ்வளவு அவள் வாழ்வில் நடந்தும், இன்றும் தன்னை நம்புகிறாள் என நினைக்கும் போது , அஜய் அவன் காதலை நினைத்து பெருமை கொண்டான்....
மயூரி..... அன்னிக்கு பார்டியில எனக்கு ஒரு போன் வந்ததுல......... என கூற ஆரம்பித்தான்....
ஹலோ , ஹலோ யார் பேசுறீங்க , சரியா கேட்கல, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...
மச்சான், ராஜா நான் வெளியே போன் பேசிட்டு வறேன் , மயூரி இரு வர்றேன்....
சரி டா மச்சான்........என ராஜா கூற
அஜய் சீக்கிரம் வந்தடு......மயூரி கூற
ம் ம்....
அஜய் போன் பேச வெளியே சென்று விட்டான்.....
ஹலோ , சொல்லுங்க,.....
தம்பி ,நான் லட்சுமி அக்கா பேசுறேன், உங்க பக்கத்து வீடு......
ஆங் சொல்லுங்க அக்கா.....
எங்க இருக்கீங்க, தம்பி, உடனே கிளம்பி சி.ஆர்.எம் ஹாஸ்பிட்டல் வாங்க.....
ஏன் என்னாச்சு க்கா......
ஐயோ தம்பி, உங்க அம்மா தீடிரென மயங்கி விழுந்துட்டாங்க... சீக்கிரம் வாங்க.......
செய்தியை கேட்டவுடன், அஜய் யால் நிலைகொள்ள முடியவில்லை ஏனென்றால் அவனுக்கு என்று இருப்பது அவன் அம்மா மட்டும் தான்.....
பதட்டத்தோடு, உள்ளே வந்தவன் மயூரி யை தேட, அவள் இல்லை என்றவுடன் , டேய் ராஜா மயூரி எங்கே....
மச்சி, அவ மேல வாஷ் ரூம் போயிருக்கா , ஏன்டா என்னாச்சு ஏன் பதட்டமா இருக்க....
( இல்ல அஜய் வேண்டாம், ராஜா ட்ட சொல்லி அவனையும், மத்த பிரென்ட்ஸ் அ யும் கஷ்டப்படுத்த வேண்டாம், அவங்க சந்தோஷமா இருக்கட்டும் )
ஒண்ணும் இல்லை மச்சி , எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, உடனே கிளம்பனும் ,அதான் மயூரி வந்தா அவள ஹோம்ல விட்டுட்டு போலாம்னு நினைத்தேன்.....
சரி மச்சி, அவசரம் னா நீ போடா, நான் மயூரி ய ஹோம்ல விட்டுறேன்.....என ராஜா கூற
அப்படி யா , அப்போ சரி டா நான் கிளம்புறேன் , மயூரி வந்தா சொல்லிடு என கூறி விட்டு அஜய், மருத்துமனை சென்றடைந்தான்.......
அங்கு ICU வில் அவன் அம்மா ,வை பார்த்தான்.....
டாக்டர் ICU வில் இருந்து வெளியே வர ....டாக்டர் அவங்க எப்படி இருக்காங்க....
நீங்க யாரு மிஸ்டர்....
டாக்டர் நான் அவங்க பையன் .....
என்னது பையனா.... என்ன மிஸ்டர் இவ்வளவு கேர்லெஸ் ஆ இருந்திருக்கீங்க.... அவங்களுக்கு அடிக்கடி மயக்கம், நெஞ்சுவலி வருமா....
மயக்கம் வந்துருக்கு, ஆனா நெஞ்சுவலி வந்தது இல்லை.. டாக்டர்
நோ சான்ஸ், மயக்கம் வந்ததுனா, கண்டிப்பாக லேசா அடிக்கடி நெஞ்சுவலி வந்துருக்கும், ஒரு வேலை அவங்க உங்க கிட்ட சொல்லாமல் இருந்து இருக்கலாம்..
என்ன டாக்டர் சொல்லுறீங்க.....
என அதிர்ச்சியில் அஜய் கேட்க..
எஸ் மிஸ்டர் ,
அவங்க இருதயத்தில் இரண்டு பிளாக் இருக்கு, அதனால தான் மயங்கி இருக்காங்க...
இப்ப எப்படி இருக்காங்க , பரவாயில்லை யா...
என்ன மிஸ்டர், நீங்க படிச்சவர்தானே, எப்படி அவங்க நல்லா இருக்க முடியும்.... அவங்க ரொம்ப டேன்ஜர் ல இருக்காங்க ,இன்றும் இரண்டு நாள்ல அவங்களுக்கு ஆப்ரேசன் பண்ணனும், எப்படியும் ஐந்து லட்சம் ஆகும் உடனே ரெடி பண்ணுங்க... நீங்க நாளைக்கே ரெடி பண்ணாலும் நல்லது தான் ஏன்னா அவங்க நிலமை அவ்ளோ சீரியஸ்......
சரி டாக்டர்.. என கூறிவிட்டு தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.... இரண்டு நாள்ல 5 லட்சம் எப்படி ரெடி பண்ணுவேன் என அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உட்கார்ந்து இருந்தான்,
இரவு முழுவதும் உறக்கம் இல்லை தன், அம்மா வை அறை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்தான்...
மறு நாள் விடிந்தது, பணத்திற்காக, அவனுக்கு தெரிந்த அனைவரிடமும், கால் பண்ணி கேட்டுக் கொண்டிருந்தான், அந்த பதட்டதிலும், கவலையிலும், மயூரி என்ற ஒருவள் அவன் நினைப்பிற்க்கு வரவே இல்லை......
இதற்கு இடையில் தான் , மயூரி க்கும் , ராஜா விற்கும் இடையில் , பிரச்சனை ஏற்பட்டு அவளை அவன் அஜய்யிடம் இருந்து பிரித்து பழி வாங்க எண்ணி இருக்கும் வேலை யில்.. தான் இந்த செய்தி அவன் காதிற்க்கு
வந்தது, இதை பயன் படுத்திக்க எண்ணி ஒரு திட்டம் தீட்டி அதை நிறைவேற்றவும் செய்தான்...
டேய் , அஜய் அம்மா க்கு என்னாச்சு என , மருத்துவமனை யில் வந்து விசாரிக்க....
ராஜா வை கண்டவுடன் ஏதோ ஒரு பெரிய வெளிச்சத்தை , நம்பிக்கை யை பார்த்து போல் ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு , மச்சான் அம்மாடா என அழுது கொண்டே அனைத்தையும் கூறி முடித்தான்.....
என்னடா மச்சான் சொல்லுற , நாளைக்குள்ள 5 லட்சம் வேணுமா, டேய் அவ்ளோ பணம் என் அக்கவுண்ட் ல இல்லை டா, இரு அழாதே... நான் அப்பாட்ட பேசுறேன் என தன் தந்தைக்கு
கால் செய்தான்.....
அவரிடம் பேசிவிட்டு , அமைதியாக திரும்பி வந்தவனை, அஜய் கேட்க....
என்னடா , அப்பா என்ன சொன்னாரு.....
பணம் கிடைத்தது மச்சான் ஆனா....
ஆனா என்னடா...
அவரு கம்பெனிக்கு இப்போ முக்கியமான போஸ்ட்ல உள்ள வரு இறந்துட்டாராம் .....அந்த பிலேஸ் அ உடனே ரீப்லேஸ் பண்ணுமா
,நீ அந்த வேலைக்கு போனா இனிஷியல் பேமன்ட் ஆ 8 லட்சம் கிடைக்குமா,என்ன மச்சான் சொல்லுற.....
அஜய் சிறிதும் யோசிக்காமல், எப்போ கிளம்பனும் ராஜா ,என கேட்க.....
மீன் சிக்கிடுச்சு, என மனதிற்குள் சிரித்தவன், இன்னும் ஒரு வாரத்தில் டா மச்சான்...
சரி நீ அப்பா சொல்லி ஏற்பாடு பண்ணி, பணத்தை போடச்சொல்லு,நான் டாக்டர் அ பார்த்துட்டு வரேன் .... என அஜய் செல்லவும்...
தன் திட்டம், இவ்வளவு சீக்கிரம் நிறைவேறியதை எண்ணி தனக்குள்ளே சந்தோஷத்துல துள்ளி குதித்தான்..
ஆப்ரேஷன், நல்ல படியாக நடந்து முடிந்து ,அஜய் 5நாள் கழித்து அவன் அம்மா வை டிஸ்சார்ஜ் பண்ணி, வீட்டிற்க்கு அழைத்து வந்து, அவர்களை கவனிக்க ஒரு ஆள்ளையும், ஏற்பாடு பண்ணி இருந்தான்...
மீதி நாட்களில் வெளிநாடு செல்லும் வேலை யிலேயே அவனை பிஸியாக வைத்து இருந்தான் ராஜா.... மயூரி நினைப்பு வரவிடாமல் பார்த்து கொண்டான்......
அவன் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது....
ஏர் போட்டில், அஜய்யும், ராஜா வும் நிற்க, இப்போதாவது மயூரி கால் பண்ணுவோம்
என எண்ணி போன் எடுத்தான் அஜய்...
அதை பார்த்தவுடன், ராஜா விற்கு தூக்கி வாறி போட்டது... பதட்டமாக வந்து, தெரியாமல் போனை தட்டி விடுவது போல், அவன் மேல் தவறி விழுந்தான் , இதில் போன் கீழே உடைந்து ஆப் ஆகி விட்டது.....
அச்சசோ, ஸாரி மச்சான், என்னால தான் போன் உடைஞ்சுட்டா மச்சான்....... என ஒன்றும் தெரியாதது போல் ராஜா கேட்க..
இல்லடா பரவாயில்லை.... விடு என போனையே பாவமாக பார்த்தான்.....
அதற்குள் பிளைட்க்கு கால் பண்ணவும், அஜய்க்கு என்ன பண்ண என்று புரியாமல் இருந்தான்...
சரி விடு மச்சி, எப்படியும், பிலைட்ல போன் ன் பண்ண முடியாது.... நீ அங்க போய் இறங்குன உடனே , எங்க அப்பா வோட ஆள் உனக்கு புது போன் , அந்த நாட்டு நம்பர் ஓட வெயிட் பண்ணு வாறு ஓகே... நீ கவலை ப்படாதே , போயிட்டு வா மச்சி....
டேய் ராஜா, அம்மா, மயூரி எல்லாம் நல்லா பார்த்து கோடா என சொல்லி விட்டு ராஜா கண்ணில் இருந்து மறைந்தான் அஜய்......
மயூரி ய மட்டும் ஸ்பெஷலா பார்த்து கிடுறேன் டா , முட்டாள்... என தனக்குள்ளே கொடூர சிரிப்பு சிரித்துக் கொண்டான்....
இதனால் தான் நான்,உனக்கு வெளி நாட்டு க்கு போகும் போது சொல்ல முடியல மயூரி,, அதுக்குப்புறம் உன்ன தொடர்பு கொள்ள முடியவில்லை, இப்படி யே ஆறு மாதம் போயிட்டு, அப்போ தான் லீவுல இங்கு வந்த வுடனே ஹோம்க்கு போனேன், அப்போ மதர் இறந்த விஷயமும், உனக்கு கல்யாணம் நடந்ததும் தெரியவந்துச்சு மயூரி,
அதுக்குப்புறம் நடந்த விஷயம் தான், உனக்கே தெரியும்ல என அஜய் கூறி முடிக்க ......
அங்கு வெறும் அமைதியே நிலவியது, இருவருக்கும் ஒரு வித நிம்மதி கிடைத்தது......
இருவரின் கண்கள் மட்டுமே, பேசிக் கொண்டிருந்தது......
பின் அஜய் அம்மா , உள்ளே வர , அவர்
பின்னாடியே அனைவரும் வந்தனர்....
ஒருவழியாக இருவருக்கும் இடையில் நடந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் முடிவிற்கு வந்தது......
மீண்டும் இவர்கள் வாழ்வில் என்ன நடக்கும் ?
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 27



புயல் அடித்து ஓய்ந்தார் போல்
பேச்சுக்கள் முடிந்தபின்
அங்கு நீண்ட மெளனம்
மையம் கொள்கிறது.
உணர்வு வெளிப்படுத்தலுக்கு
பின் உருவாகும் மெளனம்
வசந்த கால வாழ்க்கைக்கு
அஸ்திவாரம்

இங்கும் அதே போல் மவுனம் தான் , இரு மனங்களுக்கிடேயேயும், நடந்து ஓய்ந்தது .
அஜய் அம்மா,மற்றும் அனைவரும் உள்ளே வர ,மீண்டும் சகஜநிலை திரும்பியது....
அதன் பின் , அஜய்யும் குணமடைந்து வீடு வந்தடைந்தான்...
நிலமை சீர்அடைந்ததும், மங்கை ,அஜய்
பத்தின உண்மை, மங்கை யின் தோழியின் உஷா விற்கும், அதேபோல் அஜய்யின் தோழியான சாத்விக்கு மட்டும் தெரியப்படுத்தி,யாருக்கும் தெரியவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்கள்........
நாட்கள் கடந்தன, மீண்டும் அஜய்யும், மங்கை யும் நல்ல நண்பர்கள் களாக பழகி வந்தனர்......
அஜய் அம்மா வின் ஆசை, அஜய்க்கு ஒரு திருமணம் பண்ணி வைக்க வேண்டும் என்பதே, ஆனால் அஜய் தான் ரொம்ப பிடிவாதமாக இருந்தான்....தன் காதலை நினைத்து......
அன்று ஒரு நாள், மங்கை கம்பெனி க்குல் நுழைய ,மொத்த இடமும் ஆள் இன்றி வெறிச்சோடி இருந்தது .. மங்கை க்கு ஒன்றும் புரியவில்லை,அப்படி யே நடந்து சென்று கொண்டிருந்தவளை ஒரு கை பிடித்து இழுத்தது....
அதில் பதற்றமடைந்து, நிமிர்ந்து பார்தால், அந்த இடம் முழுவதும் வண்ண தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு..., அனைவரும் கைகளை தட்டிக்கொண்டே பிறந்த நாள் வாழ்த்து பாடிக்கொண்டே வந்தனர்.......
சாத்வி கையில் பூங்கொத்துடன் வந்தாள், உஷா கலர் கலர் பலுங்களை பிடித்து கொண்டு வந்தாள்...
மங்கை யின் கண்கள் அஜய்யை தேட.....
மெல்ல கூட்டம் விலகியது, அன்று பார்த்த அதே அஜய்.......
கல்லூரி படிக்கும் போது எந்த அஜய்யை உருகி உருகி நேசித்தாலோ அதே அஜய்,
வெள்ளை நிற சட்டை, நீளமான கையை பாதி மடித்து விட்டு, முகத்தில் அதே கன்னக்குழி
தெரிய சிரிப்பு, கண்களில் அதே கல்லூரி கால பழைய உற்சாகம்.......கையில் கேக் உடன் மங்கை முன் வந்து நின்றான் அஜய்....
அவனை கண்டவுடன் , கதிரவனை கண்டு மலரும் தாமரை போல் மங்கையவள் முகமும் மலர்ந்தது.....
அன்று பார்த்த அதே அஜய் இன்றும், ஆனால் நான் அதே மயூரி அல்லவே என தன் அலைபாயும் மனதை , பிடித்து இழுத்து தன்னிலைப்படுத்தினாள், அவளால் இன்னும் அந்த கருப்பு நிழல் வாழ்க்கை யை மறக்க முடியவில்லை.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மங்கை, என்ற அஜய் குரல் கேட்ட பின்னே நிகழ்வுக்கு வந்தவள், கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடினாள்...
நீண்ட நெடு பயணத்துக்கு பின் ஒரு இருப்பிடம் கண்ட பறவை போல் , அவள் மனது சிறிது நிம்மதியும் , இளைப்பாருதலும் கொண்டது......
அனைவரும் தத்தம் வேலைகளை செய்யத் துவங்கினர்.......
மங்கை உன்ன அஜய் சார்.... கூப்பிட்டாங்க.. என உஷா கூற.....உடனே அஜய் அறை நோக்கி ஆவலாக விரைந்தாள்.....
மீண்டும் அதே புன்னகையுடன் மங்கை யை அஜய் வரவேற்க....
சொல்லுங்க சார்.......
மங்கை நீ கண்ண மூடு சொல்லுறேன்... என அஜய் கூற .... மங்கை கண்ணை மூடியவுடன் அவள் கையில் ஒரு பார்சலை வைத்தான்..... அஜய்....
மங்கை இப்போ கண்ணை திறந்து பாரு...என அஜய் கூறியவுடன் கண்ணை திறந்தவள் கையில் ஒரு கிப்ட் இருந்தது...
என்ன அஜய் சார் இதெல்லாம்,
உனக்கு தான் மங்கை திறந்து பார்.... என்றான் அஜய்,
பரிசை திறந்து பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை , ஏனெனில் பார்சல் குள் இருந்தது புடவை யோ, வேறேதும் பொருளோ அல்ல........அது ஒரு பைல்...
என்ன சார் பைல் இருக்கு...
ஆமா, அத திறந்து பார்....
அதை பார்த்தவுடன் மங்கை க்கு அதிர்ச்சியுடன் ஆச்சர்யமும் சேர்ந்து வர... சார் இதுல எல்லாம்....
ஆம் அது எல்லாம் மங்கை காண அடையாளம் .... உனக்காக இந்த மங்கை க்காக என் தோழிக்காக.... என கூறி முடித்தான்.......
(ஆம் அதில் மயூரி படித்து முடித்த அனைத்து பட்டங்களும், சான்றிதழ்களும் , மங்கை என்ற பெயரில் இருந்தது........ அஜய் மிகவும் சிரமப்பட்டு சாத்வியின் உதவியுடன் சில பல அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை சந்தித்து அதில் இருந்த மயூரி பெயரை மாற்றி மங்கை என வாங்கி இருந்தான்......)
சார் , ரொம்ப நன்றி சார் , என்ற வார்த்தையுடன் சேர்ந்து கண்ணீரும் வந்தது .....
இல்லை மங்கை இனி நீ ஆழக்கூடாது , இனி நீ உன் வாழ்க்கை யில் சந்தோஷத்தை மட்டுமே அனுப்பவிக்கனும், அதுக்கு உன் அஜய் என கூறியவன் சட்டென்று தன்னை திருத்திக் கொண்டு, உன்னோட இந்த நண்பன் அஜய் இருக்குற வரைக்கும் உனக்கு என்ன செய்ய முடியுமோ எல்லாம் செய்வேன்.... என கூறி முடிக்கவும்...
உள்ளே வரலாமா என கேட்டு கொண்டே......
அறையினுள், சாத்வியும், உஷா வும் வந்தனர்.......
சாத்வி கையில் ஒரு லட்டர் கவருடன் வந்தாள்....
மங்கை இதோ இது என்னோட கிப்ட் என அந்த கவரை மங்கை கையில் கொடுக்கவும்....
அஜய் திரும்பி கொண்டான்.....
மேடம் , என்னது மேடம் ..... என கேட்டுக்கொண்டே அதை பிரித்து படித்தாள் என்ன டிசைன் என்ஜினீயர் ஆ ,அதுமட்டுமல்ல ஜி.ம் ஆவும் போஸ்ட்டிங் போட்டு இருக்கீங்க..... என மீண்டும் அதிர்ச்சி கலந்த ஆச்சன்யத்துடன் கேட்க...
மங்கை நீ இதுக்கு தகுதி ஆனவள்தான்... நீ இந்த கம்பெனி ய நல்லா பார்த்து ப்ப , உன்னோட யூனியன் லீடர் போஸ்ட் மற்றும் சூப்பர் வைசர் பதவில இனி உஷா இருப்பா, உங்க இரண்டு பேத்துக்கும் ஆள் த பெஸ்ட் ...
என சாத்வீ கூறி முடித்தாள்...
அதை கேட்டு மங்கை சந்தோஷத்தை விட கலக்கமடைந்தாள்....
மங்கை என்ன ஒண்ணும் சொல்ல மாட்டிக்க....
இல்ல மேடம், அப்போ சாரு............
ஓ ...... அஜய்யா, நாங்க இரண்டு பேரும் மறுபடியும் அமெரிக்கா போறோம்... எங்க புது பிரான்ச் அ ஆரம்பிக்க.....
என கூறி முடிக்கவும், மங்கை க்கு அவள் எதையோ இழக்க போவது போல் இருந்தது....
மங்கை யை எதிர்கொள்ள முடியாமல் தான் , அஜய் திரும்பி கொண்டான்....
மங்கை ,ஒரு சிறிய சிரிப்புடன், ரொம்ப நன்றி மேடம், ரொம்ப நன்றி சார் என கூறிவிட்டு சட்டென்று தன் இருப்பிடத்திற்க்கு சென்று விட்டாள்......
அவள் பின்னே உஷாவும் செல்ல,...
இங்கு அஜய்யிடம்.......சாத்வீ பேசத் துவங்கினாள் .......
டேய், நல்லவனே திரும்புடா....... அவ போயிட்டா.. ..
என்ன சாத்வீ.....
டேய், என்னடா அமைதியா இருக்க, மங்கை ட்ட இன்னும் உன் காதலை சொல்லலையா.....
எப்படி , சாத்வீ சொல்ல சொல்லுற... அவ கண்ண பார்த்தா இன்னும் அந்த கடந்தகால
இருட்டு தான் தெரியுது..... பின்ன எப்படி என்னால சொல்ல முடியும்....
அவ கண்ணுல என்னைக்கு.... எதிர்காலத்திற்கான வெளிச்சம் தெரியுதோ அப்போ என் காதல அவகிட்ட நான் கண்டிப்பா சொல்லுவேன் சாத்வீ அதுக்கு கொஞ்ச நாள் நான் அவள் விட்டு பிரிந்து இருந்ததாதான் அது நடக்கும்.....என அஜய் கூற
என்னவோ போ..... எப்படி யோ கல்யாணம் நடந்தா அதுவே போதும் என அஜய்யை கட்டி கொண்டு விலகினாள் சாத்வீ .....இதை ஒரு ஜோடி கண்கள் பார்த்து பின் கலக்கத்துடன் சென்றது..
ஏண்டி மங்கை, சார்ட போயி பேசலாம் ல,.....
என்ன பேச சொல்லுற.......
அவர்மேல உனக்கு இருக்கிற விருப்பத்தை.....
அவர் மேல எனக்கு விருப்பமா யார் சொன்னா.....
ஏய் நடிக்காதடீ, நீ அவருக்காக ஏங்குறதையும், துடிங்கிறதும் எனக்கு என்ன தெரியாதுன்னு நினைக்கியா , ...............நீ போய் சொல்லு மங்கை அவருக்கு ம் உன் மேல இஷ்டம் இருக்கு..
இல்லடி, அவருக்கு என் மேல இருக்கிறதுக்கு பேரு அன்பு இல்லை, குற்றவுணர்வும் நட்பும் தான்.....
என்ன மங்கை சொல்லுற....
ஆமா ,உஷா இப்போ, நான் பைல் எடுக்க போனேன் ல அப்போ கல்யாணம் நடந்தா சரின்னு சொல்லி, சாத்வீ மேடமும், அஜய் சாரும், கட்டிக்கொண்டாங்க டீ.... அவங்க இரண்டு பேரும் விரும்புறாங்க உஷா....
இதோ பாரு மங்கை நீ ஏதோ தப்பா........
இல்ல, உஷா இந்த பேச்சை இதோடு விட்டுடு ,என மங்கை சென்று விட்டாள்......
2 வருடங்கள் ஓடியது , அப்போ அப்போ அஜய் வெளிநாட்டில் இருந்து மங்கை யுடன் பேசுவான்......சாத்வீ க்கு அமெரிக்காவில் கல்யாணம் நடந்தது , என கம்பெனி க்கு தெரியப்படுத்தப்பட்டது.......
மங்கை அது அஜய்யுடன் தான் என நினைத்து கொண்டாள்....
மங்கை , கம்பெனி நல்ல விதமாக பார்த்து கொண்டாள் ....... அனைத்தும் நன்றாக போய் கொண்டு இருந்தது.......
மங்கை யும், தன் அன்னை மரகதம், எவ்வளவு சொல்லி யும் கேட்காமல், தான் கல்யாணம் பண்ணி கொள்வதை விடுத்து, தன் தங்கை கோமதி க்கு கல்யாணம் ஏற்பாடு செய்தாள் இதை அஜய்க்கும், சாத்வீக்கும் தெரியப்படுத்தி, தன் தங்கை கல்யாணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தாள்....
மண்டபத்தில் அனைவரும் கூடி இருக்க, அஜய், மற்றும் சாத்வீ கையில் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வந்தனர்.....
அவர்களை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் வறவேற்று, உட்காரவைத்து, தானும் அவர்களுடன் உட்கார்ந்து, குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.......
அவர்களை கண்டவுடன் உஷா வும் வந்து அவர்களை உபசரித்தாள், உஷா விற்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தது....
மங்கை குழந்தையுடன் விளையாடுவதையே, அஜய் மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தான்......
மேடம் , பையன் அப்படி யே அஜய் சார் மாதிரி யே இருக்கான்......
அது எப்படிமா, அஜய் மாதிரி இருக்க முடியும்...என சாத்வீ கேட்க..
ஏன் மேடம், குழந்தை அப்பா மாதிரி இருக்க கூடாதா என கேட்க.....
மங்கை அப்போ அங்க வாசல் கிட்ட வர்றாரு பாரு அவர மாதிரி தானே இருக்கனும் என மண்டப வாசலை நோக்கி கை நீட்ட......
என்ன மேடம் யாரையோ காமிக்கிறீங்க.........
யாரோ வா, அம்மாடி மங்கை , அவர் தான் இந்த குழந்தைக்கு அப்பா..... கார் பார்க் பண்ண போயிருந்தாரு.....
என்ன மேடம், அப்போ நீங்க இரண்டு பேரும்....
நாங்க இரண்டு பேருமா சரியா போச்சு குடும்பத்தில குழப்பம் உண்டு பண்ணிருவ போல.....நாங்க இரண்டு பேரும் , பிரெண்ட்ஸ் அவளோதான் ..
நம்ம ஆஜய் பையன் ஸ்டில் சிங்கிள் மா,அன்ட் வெயிட்டிங் பார் சம் என மங்கை யை பார்த்து சிரித்துக் கொண்டே சாத்வீ கூறவும்....
அஜய்ய பார்தாள் மங்கை,, அவன் தன் சுண்டு விரல் நகத்தை கடித்துக்கொண்டே ஆமாம் என்று சிரித்துக் கொண்டே சொல்ல....
மங்கை கண்ணில் அப்படி யோரு சந்தோஷம்....
டேய் நல்ல வனே நான் போறேன் ,
இப்பவாவது, சொல்ல வேண்டிய த சொல்லு
என கூறிவிட்டு சென்றாள்.....
அஜய் மெல்ல ,மங்கை யின் அருகே கீழே மண்டியிட்டு அவள் கையை பிடித்து, மங்கை ஐ லவ்யூ, வில் யூ மேரி மீ என கேட்க, மங்கை யின் கண்ணில் ஆனந்த கண்ணீர் தான் முதலில் வந்தது அதன் மூலம் தன் முடிவை தெரிவித்தாள்....
கேட்டிமேளம் , கேட்டிமேளம், மங்கை யின் தங்கை கல்யாணம் இனிதாக நடந்தது......
இனி மங்கை , அஜய், க்கு தான் கேட்டிமேளம், கெட்டிமேளம்.....டும்.... டும்....பீ...... பீ..... கல்யாணம்..........
வாழ்க்கை யில் இனிவரும் காலத்தில் இவர்கள் இன்புற்று நல் இல்லறம் நடத்திட நாமும் வாழ்த்துவோம்😊

🌹 சுபம் 🌹

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பு உறவுகளே,
உங்களாளே இது சாத்தியம்,
மயிலிறகு மங்கை சிறப்பாக முடிந்தது,.
இதற்கு உங்களுடை ஒத்துழைப்பும், ஊக்குவிப்பு மட்டுமே காரணம்....
நீங்கள் எனக்கு, தோழியாக, தமையராக, அக்கா வாக, தம்பியாக, தங்கையாக கொடுத்த கருத்துகளாளே நான் சிறப்பாக எழுத முடிந்தது........
உங்கள்ளுடைய இதே ஒத்துழைப்பு, ஊக்கு விப்பு என்னுடைய அடுத்த தொடர்க்கும்
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்....
 
Status
Not open for further replies.
Top