Naga Novels
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 20
காதல் என்பது
காற்றடைத்த பந்து போல்
தண்ணீரில் எவ்வளவு
மறைத்தாலும்
மறுபடியும் பந்து
மேலே வருவதுபோல்
மறைத்து வைக்கும்
காதலும், உண்மையும்
ஒரு நாள் வெளிவரும்
மங்கை, அஜய், சப்ரைஸ் கொடுத்து விட்டு, தன் வேலையை பார்க்க மிஷின் செக்க்ஷன்க்கு போனால்.....
அஜய் , வாட்ச்மேன் அங்கில்க்கு கேக் கொடுக்கப்போக, அவரே அஜய்யை தேடி நேரில் வந்தார்.....
இந்தாங்க அங்கில் கேக் சாப்பிடுங்கள்,எனக்கு இன்னிக்கு பிறந்த நாள் என்னை ஆசிர்வாதம் வாங்கினான்...
தம்பி நல்லா இருங்க, சரி தம்பி யாரெல்லாம் வந்து இருக்கீங்க, நான், மங்கை, உஷா , இன்னும் கொஞ்சம் பேர் வெளியாலுங்க வரவேண்டி இருக்கு,அங்கில்.....
அதான் ரங்கசாமி இரண்டு வெளியால் கூட வந்தானா ,என வாட்ச்மேன் அங்கில் கூற..
அஜய்க்கு முகம் மாறியது, என்ன சொல்லுரீங்க, ரங்கசாமி வந்தானா?
அவனுக்கு இன்னிக்கு வேலையில்லையே, அப்புறம் ஏன் வந்தான் அது வெளியாட்கள கூட்டிட்டு.... என அஜய் யோசிக்க ஏதோ விபரீதம் நடக்கப்போவதை அவன் உள்ளுனர்வு கூற சற்று பயம் அவனை தொற்றிக் கொண்டது....
சரி அங்கில் அவன் என்ன சொன்னான் , எந்த பக்கம் போனான், என அஜய் கேட்க...
தம்பி, ஏதோ எலக்ட்ரிக்கல் வேலை இருக்கு, அப்படின்னு சொல்லிட்டு மிஷின் இருக்கிற பக்கம் தான் போனான் தம்பி.....
இப்போது அஜய்யால், ஓரளவு ரங்கனின் திட்டத்தை புரிந்து கொள்ள அவனது உடல் நடுங்கியது.......ஏனென்றால் மங்கை அங்கு தான் சென்றாள் என அறிந்து, பதட்டத்துடன்...
அங்கில் உடனடியாக, மெயின்க்கு போய் கரென்ட் கரெக்சனை ஆப் பண்ணுங்க என சொல்லி விட்டு வேகமாக உள்ளே ஓட....
அங்கு அப்போது தான், மங்கை அந்த செக்ஷனில் நுழைந்தாள்......
அவள் அங்கிருக்கும் மிஷினை தொட போக,
வேகமாக ஓடி வந்த அஜய் அவள் கையை பிடித்து இழுக்க அவன் தவறி மிஷின் மேலே விழுந்து விட்டான்....
அஜய் விழுந்த ஒரு நொடியில் கரென்ட்ம் ஆப் ஆக, அந்த வேகத்தில் தூக்கி ஏறியப்பட்டான்....அதில் அருகில் இருந்த சுவரில் மோதி கீழே விழ அவன் தலையில் இருந்து இரத்தம் வழிய தொடங்க ....
அங்கு நடப்பதை பார்த்த மங்கை அதிர்ச்சியாக, பின் அஜய் இரத்தம் வழிந்து மூச்சு பேச்சின்றி கிடைப்பதை பார்த்து....
அஜய்... என அந்த கம்பெனி யே அலரும் வண்ணம் கத்தினாள்........
அஜய் தூக்கி தன் மடியில் போட்டு கொண்டு ,மங்கை அவள் துடித்து விட்டாள்...
அஜய், அஜய் கண்ணமுழி அஜய், கண்ணமுழிச்சு பாரு அஜய்.... என அவனை பிடித்து எழுப்ப, அழகான வெள்ளைநிற சட்டை அவனின் இரத்தத்தால் நனைந்து சிவப்பாய் மாறி இருக்க...
அஜய் ப்ளீஸ் எழுந்துரு அஜய் ப்ளீஸ் , என அவள் அழுது கொண்டிருக்க, அவள் சத்தத்தை கேட்டு,அங்கு ஓடிவந்தாள் உஷாவும், அந்த டெக்னீஷியன் களும்.........
ஓடிவந்து, அஜய்யை தூக்கி கொண்டு, அவர்கள் வந்த காரிலே மருத்துவமனை சென்றனர்.........
போகும் வழியேல்லாம், அஜய் எழுந்திரு அச்சுமா அச்சு என்று என்னனமோ வேதனையில் உளறி கொண்டு வந்தாள்......
இதை பார்த்த உஷாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்க..... அனைவரும் மருத்துவ மனை வந்தனர்.......
டாக்டர் , டாக்டர், என் அஜய்யை, எப்படியாவது காப்பாத்திருங்க ப்ளீஸ், என அவரிடம் கெஞ்ச ,அஜய்யை வேகமாக ICU கொண்டு சென்றனர்....
அனைவரும் வெளியே நிற்க..... மங்கை மட்டும் அழுது கொண்டு இருந்தாள்,
பின்பு நர்ஸ் அஜய் போட்டு இருந்த சட்டையை மங்கை யிடம் கொடுக்க, அதை பார்த்தவள் ஓ ......... வென்று கதறி அழ தொடங்கினாள்....
உஷா அவள் அருகில் வந்து அவள் தோளை தொட...
உஷா , உஷா பாரு உஷா அஜய் சட்டையில் எவ்ளோ ரத்தம், அவனாள ஒரு சின்ன வழிய கூட தாங்க முடியாது, ஆனா ஆனா இங்க பாரு அவன் எப்படி படுத்து இருக்காரு பாரு ,என் அஜய் அ பாரு உஷா..... என கதறி அழுதாள்,
அவள் என் அஜய், என் அஜய் என அழ உஷா விற்கு ஒன்றும் புரியவில்லை......அவளுக்கும் தன் தோழியை பார்த்து கண்ணில் நீர் வழிந்தது.......
ICU வில் இருந்து, நர்ஸ் வெளியே வர, பேசன்ட் க்கு B+பாசிட்டிவ் இரத்தம் தேவைப்படுது என கூற,....
மங்கை எனக்கு அதே இரத்தம் தான் என கூறி உள்ளே சென்றாள்.....
விவரம், போலீஸ்க்கு தெரியப்படுத்த.... அதற்குள், சாத்வீயும் அங்கு வந்த சேர்ந்தாள்...
தன் உயிர் நண்பனின் நிலை எண்ணி , காரணத்தை உஷா விடம் கேட்க...அவள் அவளுக்கு தெரிந்தவற்றை கூற...
அதற்குள், போலீஸ் ,வாட்ச்மேன் னிடம் விசாரித்து விட்டு, ரங்கனை தேடி சென்றனர் ....
நேரம் , யுகமாய் நகர,அனைவரும், வார்ட்க்கு வெளியே கார்த்திருந்தனர்......
மாலை நேரம் ஆகிவிட்டது.....
நர்ஸ் வெளியே வர, அனைவரும் ஆவலுடன் பார்க்க.....அவர் கண்முழிச்சுட்டாரு என கூறவும், அனைவரும் உள்ளே சொல்லப்போக...
ஹலோ ஹலோ இது ICU வார்ட், ஒவ்வொருத்தராக உள்ளே போங்க.... என நர்ஸ் கூறிவிட....
முதலில் சாத்வீ உள்ளே போய் பார்த்து விட்டு வெளியே வர....
அடுத்து உஷா உள்ளே நுழையும் போது, சாத்வீ அவளை தடுத்தாள்.
மங்கை நீ உள்ளே போ , அஜய் உன்னதான் தேடுறான் என கூற.... வேகமாக உள்ளே நுழைந்தவள்...... கண்ட காட்சி
தலையில் கட்டு, மற்றும் காலில் கட்டுடன், கண்மூடி பேட்டில் படுத்து இருக்கும் அஜய்யை,..
அருகில் சென்று , அஜய் என மெலியதாய் மங்கை அழைக்க.....மெல்ல கண் திறந்தான் அஜய் ......
அழுது, அழுது கண்கள் சிவந்து இருந்த மங்கை யை பார்த்து மயூரி..என அழைக்க
....
அவன் கண்களையே பார்த்து கொண்டிருந்தாள், மங்கை....
மயூரி, என மறுபடியும் அஜய் அழைக்க..
சார் நான் மங்கை......
ஏன் மயூரி மா இன்னும் இந்த நாடகம்.....
நான் மயங்கி இருந்தப்ப, நீ எனக்காக கத்தி கதறுதுனது எனக்கு தெரியும் மயூரி மா என அஜய் கூற ...
அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்...அவள்..
அப்பொழுது தான் அவள்அனுக்காக செய்தது , அழுதது எல்லாம் நினைவுக்கு வர....
அப்படியே மவுனமாக, எழுந்து வெளியே செல்ல முயன்றவளை, அஜய் கையை பிடித்து இழுத்தான், ஓண்ணும் சொல்லாம போறியே
என அஜய் கூற.....
மெல்ல திரும்பியவள் இல்லை என தலை அசைத்தாள்..
பொய்,பொய்,... எனக்கு என்ன கலர் கேக் பிடிக்கும், என்ன கலர் ரோஜா பிடிக்கும் எல்லாம் தெரிந்து தானே
என் பிறந்த நாளுக்கு பார்த்து பார்த்து எல்லா ஏற்பாடும் பண்ண....
மறுபடியும் வெறும் தலையசைப்பு மட்டும், அவளிடம் இருந்து....
அப்போ சரி, நீ என் மயூரி இல்லை, மங்கைன்னா எனக்கு இந்த உயிர் பிச்சை வேண்டாம் என கையில் உள்ள டீரிப்ஸ் ஐ வேகமாக கலட்டப்போக.....
ஐயோ,ஐயோ,அஜய் ப்ளீஸ் வேண்டாம், வேண்டாம், நான் உங்கள் மயூரி தான் என கத்தி விட்டு சுவற்றில் சாய்ந்தபடி அப்படியே கீழே உட்கார்ந்தாள்....