All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நாகாவின் ‘மயிலிறகு மங்கை’ - கதை திரி

Status
Not open for further replies.

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 10

பார்வை என்பது நமது
எண்ணங்கள் சார்ந்தது
நம் எண்ணம்
எந்தவழி செல்கிறதோ
நம் பார்வையும்
அவ்வழி செல்லும்.....

அஜய்ன் எண்ணம் , மங்கை, மயூரியாக இருக்குமோ என்பதால்,அவன் பார்வையும்

அவள் மேல் இன்றும் குழப்பமாகவே இருக்கிறான்......

மயூரியின் அழகிய நினைவும், அவளால் தான் எதிர்கொண்ட திடீர் எமாற்றத்தின் வெறுப்பும், அவன் மனம் எனும் ஆழ் கடலில் அமைதியாக இதுவரை உறங்கி கொண்டிருந்தது..

ஆனால் இன்று மங்கையை பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், ஆழ்கடலில் உறங்கிய அனைத்தும் இன்று ஆழி பேரலையாய் அடித்து அவன் மனதை சுக்கு நூறு உடைக்கிறது.....

அஜய் வேலைக்கு சேர்ந்து மாதம் மூன்றாகி விட்டது,

இன்று கம்பெனி ,பங்கு தாரர்களின், மீடிங் நடக்கும் சமயம்,இது 3 மாதத்திற்கு ஒரு முறை நடக்கும்.

அதில் முக்கியமாக , கம்பெனியின் ஆடைகளில் புது டிசைனிங் சம்பந்தப்பட்ட மீடிங். கம்பெனி பங்கு தாரர்கள்,மற்றும் டீலர்கள் என அனைத்து முக்கியமானவர்களும் கலந்துக்கொள்ளும்

மிக முக்கியமான ஒரு மீட்டிங்,இதில் முதலாளியும், கலந்து கொள்வார்.

இதன் அனைத்திற்கும் அஜய் ஒருவனே பொறுப்பு, ஏனென்றால் அவன் தான் கம்பெனியின் ஜி எம் ,மும் கூட மிகச் சிறிய வயதில் இந்த பொறுப்பு கிடைத்ததற்கு ஒரு வகையில், சாத்விகா தான் காரணம்...

சாத்விக்கா அண்ணாமலையின் ஒரே பொண்ணு.

சாத்வியும், அஜய்யும் ஒன்றாக தான் இலன்டனில் பயின்றார்கள், சாத்வி,அஜய் இருவரும் நல்ல நண்பர்கள், அவள் மூலமே அஜய்க்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.

காலையில் சீக்கிரமே , வேலைக்கு வந்தவன், மீடிங்க்கு தேவையான அனைத்தையும், ரெடி பண்ணி வைத்து இருந்தான்.

மங்கையும்,உஷாவும் வந்தாயிற்று...

வந்தவர்களுக்கு, விவரம் தெரிய...

அதே நேரம் ரங்கசாமியும் வர ,

என்னமா,புரட்சி பெண்களா,முதல் தடவை உங்க தலைவிக்கு தெரியாம மீடிங் நடக்குது போல,அது சரி எல்லாரும் அந்த கிழவன் கார்மேகம் மாதிரி இருப்பாங்களா, என நக்கலாக சிரித்து விட்டு,இங்க இப்போ புது ஆபிசர் ,புது நடைமுறை செம்ம தான் போ,உங்களுக்கு எல்லாம் நல்லா வேணும் டி, ஏய் மங்கை நான் மறக்கல டி என தன் கன்னத்தை தடவி கொண்டே சென்றான் ரங்கன்.

என்னடி மங்கா, இந்த ரங்கன் என்ன பேசுறான், என உஷா கேட்க

அவன் கிடக்கான் ,அவன் எல்லாம் ஒருஆள் அவன் பேசுறான்னு விடு விடு.

என்ன இருந்தாலும் உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் அந்த ஆபிசர்.

ஆமா, ஆமா நான் தான கோடி கோடியாக, கொடுக்கிற இந்த கம்பெனி பாட்டனர் பாரு அடி போடி போடி ,என மங்கை கூறவும்

நீ பார்ட்னர் இல்லை தான் ஆனா நீ இந்த கம்பெனில ஒரு பதவில இருக்குறீயே என உஷா ஆதங்கப்பட,இருந்தாலும் அந்த புது ஆபிசர் இப்படி நடக்க கூடாது.கார்மேகம் ஐயா உன்ன கலந்து க்காம எதுவும் பண்ண மாட்டார்,என உஷா கூறி ஆதங்க பட்டாள்.

அடியே உஷா , அந்த ரங்கன் சொன்னதிலயும் ஒரு உண்மை இருக்கு.

என்னடி அது .

புது, ஆபிசர் ,அது மட்டும் தான் உண்மை, ஆனா புது நடைமுறை, பொறுத்து இருந்து பார்.

அனைவரும் மீட்டிங்கிற்கு வந்ததாகி விட்டது.

அண்ணாமலை யும் வந்து விட்டார்.

அஜய்யும் மலர் கொத்து கொடுத்து அவரை வரவேற்று மீட்டிங் அறையில் அமர வைத்து விட்டு அனைத்து பையில்களையும் எடுக்க தன் அறைக்கு வந்திருந்தான்.

அப்போது இரு கைகள் அவன் கண்ணை மூட,

யாரு யாரு,என கேட்டுக் கொண்டே கையை விலக்கி திரும்பி பார்க்க,

ஹேய் , நான் தான் டா எப்படி இருக்க?

ஹாய் ,சாத்வி நீ எப்படி டி இருக்க, வாட் அ சர்பிரைஸ், எப்போ வந்த ஊர்ல இருந்து,

வந்தேன் டா,

சரி நீ என் பிரென்ட் ,ஆ இருந்தாலும் இப்போ நீ என்னோட பாஸ் ஓட பொண்ணு குட்டி பாஸ்,

மேடம் மீட்டிங்க்கு லேட் ஆகிட்டு போலாமா,என கிண்டலாக கேட்க,

ஹேய், மேன் இந்த டெடிகேசன் தான்டா எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறிக்கொண்டே அவனை அணைத்து கொண்டாள்.

தற்செயலாக இதை மங்கை பார்த்துவிட ,அவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

இருவரும், ஒன்றாக பேசி சிரித்து கொண்டே, மீட்டிங் ஹால் செல்ல, அங்கு இருந்த யூனிட் மொத்தமும் அவர்களை பார்த்தது.

இது என்னடி புது திரைப்படமா இருக்கு

என உஷா மங்கையிடம் கூறிக்கொண்டிருக்கும் போது.

சரியாக அங்கு ஆஜர் ஆனான் ரங்கசாமி,

அடியே ரவுடிகளா,அது யாருன்னு தான பார்கிறீங்க.அது நம்ம முதலாளி பொண்ணு, வெளிநாட்டுல இருந்து வந்துருக்காம்.

அது சரி அந்த புள்ள எப்படி, புது ஆபிசர் கூட என உஷா கேட்க.

அந்த பொண்ணும் , நம்ம புது ஆபிசரும் பிரென்ட ஆம் ,வெளிநாட்டு ல ஒண்ணா படிச்சவங்களாம்.

ஓகோ அப்படியா ஆமா இந்த மாதிரி டிடெய்ல்ஸ் எல்லாம் உனக்கு மட்டும் எப்படியா கிடைக்குது,இப்ப தெரியுது இந்த கம்பெனில நீ என்ன வேலை பார்க்கன்னு... என உஷா நக்கல் அடிக்க.

இருங்கடி உங்கள,எ கூறிவிட்டு மீடிங் ஹாலில் உள்ள அனைவரையும் கவனிக்க சென்று விட்டான்.

அங்கு அனைவரும் தயாராக இருக்க.

முதலில் அஜய் அனைவரையும் வரவேற்று விட்டு, பின்பு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

பின் சார் மீட்டிங் ஸ்டாட் பண்ணலாமா என ,அண்ணாமலையிடம் கேட்க, அவரின் கண்கள் அனைவரையும் நோட்ட மிட்டது..

மிஸ்டர், அஜய் எல்லாரும் வந்தாச்சா எனக் கேட்க.

ஆமா சார் அழைப்பு விடுத்த அனைவரும் வந்தாச்சு,

இல்லை மிஸ்டர், அஜய் ஒரு முக்கியமான வங்க வரலை அப்படின்னா நீங்க அவங்களுக்கு அழைப்பு விடுக்கலை என்று தானே அர்த்தம்.

அஜய்க்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது,சார் எல்லா பங்கு தாரர்களையும் ,டீலர்ஸ்கலையும் அழைச்சாசு.

மிஸ்டர் அஜய், ஸாரி டு சே திஸ் பிரென்டஸ்...

இந்த கம்பெனிக்கு பங்கு தாரர்கள் எவ்வளவு முக்கியமோ,அந்த அளவு இன்னாருத்தங்களும் முக்கியம்....

யாரு டேடீ அது?

யூனியன் லீடர் மை டியர்.

வாட்,யூனியன் லீடர் ஆ டேடீ, அவங்களாம் இந்த மீட்டிங் க்கு எதுக்கு டேடீ.ன,என சாத்வீ கூற.

அப்படி சொல்லாதம்மா, கம்பெனிக்கு பணம் முக்கியம் தான் ஆனா அவங்கள விட முக்கிய மானவங்க நம்ம தொழிலாளர்கள் தான் அவங்க கஷ்ட படாம நம்ம லாபம் ஈட்ட

முடியாது,அவங்க தான் எனக்கு முதல் முக்கியம் டா.

அவங்க எல்லாரையும் நாம இங்கு கூப்பிட முடியாது அதனால தான் அவங்க பிரதிநிதியான யூனியன் லீடர் அ கூப்பிடுறோம்,இது நம்ம பங்கு தாரர்கள் எல்லாருக்கும் தெரியும்,ஏன் நம்ம ரூல்ஸ் பைல் லேயே இருக்கே மா.

மிஸ்டர் அஜய் நீங்க கம்பெனி ரூல்ஸ் படிச்சீங்களா இல்லையா,அப்போது தான் அஜய்க்கு நினைவு வந்தது, அவன் ரூல்ஸ் பைல் ஐ கையில் வைத்திருந்த போது தான் முதல் தடவையாக மங்கையை பார்த்து குழம்பி போய் பைலை கீழே போட்டவன்

ஸாரி சார், இதோ கூட்டிட்டு வர சொல்லுறேன், ரங்கசாமி என அழைக்க.

மிஸ்டர் அஜய், முறையா அவங்களுக்கு இன்வைட் நோட்டீஸ் அனுப்பி இருக்கனும் அத நீங்க செய்யல,அதனால நேர்ல நீங்க போய் தான் கூப்பிடுறது முறையாகும் போங்க அஜய்.

டேடீ, அஜய் எதுக்கு.

சாத்வி மா ரூல்ஸ் எல்லாருக்கும் ஒண்ணு தான்.

ஆமாம் ரூல்ஸ் என்பது, முதலாளி,தொழிலாளி, எல்லார் க்கும் ஒன்றாக தான் இருக்க வேண்டும்....

பூமியில் அனைவரும் சமமே 😊😊😊😊😊
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 11

சட்டமும், விதிமுறைகளும், என்றைக்கு, முதலாளிக்கும், தொழிலாளிக்கும் ஒன்று என்று ஆகுமோ அது தான் ஒரு நல்ல சமுதாயம் என்றாகும்..........

அனைவர் ,முன்னிலையிலும் , அஜய்யை , அண்ணாமலை நேரடியாக, யூனியன் லீடர் ஐ கூட்டிட்டு வர சொன்னதால், சாத்விக்காவிற்கு தன் நண்பனை அவமானப் படுத்துவது போல் இருந்தது.

ஆனால் அஜய் இதை ஒன்றையும் முகத்தில் காட்டாது..... வெளியே சென்றான்.

ஏண்டி, மங்கை, இவரு என்ன திடீரென்று நம்மள பார்த்து வராரு.....என உஷா கூற

எவரு டி .......

நம்ம ஆபிசர் தான்.........

அதை கேட்டவுடன் மங்கை முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.....

மங்கை.... என அஜய் கூப்பிட....

என்ன சார்.....

மீடிங் வாங்க , நேரம் ஆகிட்டு.......உங்களுக்கு காக தான் எல்லாரும் வெய்டிங்......

போங்க... சார் வர்றேன்.....

அடியே... மங்கை என்னடி நடக்குது........என உஷா கேட்க

எல்லாம் நல்லது தானே நடக்குது....என மங்கை சிரிக்க...

பின்னர் அவளும் மீட்டிங் நடக்கும் ஹால்க்கு சென்றாள்.....

இதை எல்லாம் அதிர்ச்சி யுடன் பார்த்து கொண்டு இருந்தான் ரங்கன்.........

என்னயா ரங்கசாமி உன் மூக்கு எங்கயா காணோம், உடஞ்சி விழுந்துட்டா.....புது ஆபிசர் தான் ஆனா பழைய நடைமுறை சரியா ,
உனக்கு வேண்டும்யா என கலாய்த்து விட்டு தன் வேலையை பார்க்க சென்றாள் உஷா....

பாவந்தான் ரங்கசாமி........

டியர், இன்வெஸ்டர்ஸ், டிலர்ஸ், .........
என ஆரம்பித்து தன் மொத்த டிசைனையும், நல்லா விளக்கத்துடன் கூறி முடித்தான்.... அஜய்....

அவனுடைய டிசைன் அன்ட் பிரசன்டேசன், அங்கிருந்த அனைவருக்கும் பிடித்தது
......

சார் நான் கொஞ்சம் பேசலாமா.... என குரல் கேட்க...... அது மங்கை தான்.....

அண்ணாமலை , பேசும்மா நீ சொல்லுறது தான் இறுதி முடிவு என அண்ணாமலை கூற...
அஜய்க்கு, மட்டும் அல்ல சாத்விக்காவிற்க்கும், அது ஆச்சரியமாக தான் இருந்தது....

அஜய் , மங்கையையே, உற்று நோக்கினான்....

சார் நீங்க 5டிசைன் காண்பித்தீங்க... அதுல முதல் மூன்று டிசைன் ஓகே சார்... கடைசி 2 வேண்டாம் சார்..... அத கொஞ்சம் மாத்துங்க....
என மங்கை கூற...

அஜய் அப்படியே குழப்பத்தோடு அவளையே பார்க்க.....

லுக் மிஸ், மங்கை, நீங்கள் யூனியன் லீடர், அதனால நீங்களும் இந்த மீட்டிங்ல இருக்கனும் என்பது கம்பெனி ரூல்ஸ் அதனால உங்கள கூப்பிட்டு இருக்கிறோம்.....

அத நீங்க ஓவர் அட்வான்டேஜ் ஆக எடுத்து கிட்டு எல்லாருக்கும் பிடித்த ஒரு டிசைன் அ நீங்கள் மாத்த சொல்ல எந்த அதிகாரமும் கிடையாது ஓகே கீப் கொயட் . என சாத்வீகா காரத்துடன் சொல்லி முடிக்க....

மங்கையிடம் இருந்து வெறும் சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது....

மிஸ் சாத்விகா...... என அண்ணாமலை கூற.

எஸ் டேடீ.

அவங்களுக்கு எல்லா அதிகாரமும் இருக்கு... என அண்ணாமலை கூற.

என்ன டேடீ சொல்லுறீங்க......

இதுக்கான விளக்கத்தை நான் கூறுவதை விட , மங்கை கூறினாள் தான் மிகச்சரியாக இருக்கும்.........நீங்களே அதற்கான விளக்கங்களை கொடுங்கள் மங்கை .

சரி சார்..... மேடம் சாத்வீக்கா..... என கூறவும்....

ஒரு சாதாரண தொழிலாளி என்ன பெயர் சொல்லி கூப்பிடுறாளே........என அவள் மீதும் அவளுக்கு இந்த அளவு உரிமை கொடுத்த தன் தந்தை மேலும் கோபமாக வந்தது சாத்வீக்காவிற்கு......

நடக்கும் அனைத்தையும், வெறும் பார்வையாளராக மட்டும் பார்த்து கொண்டிருந்தான் அஜய்......
ஏனெனில் அஜய்க்கு தான் அடிக்கடி மயூரி தெரிகிறாளே மங்கை முகத்தில்.....

அதாவது, நீங்கள் உருவாக்கி இருக்கும், டிசைனில் நீங்கள் பார்பது அழகு, மட்டும் அதோட விற்பனை.... அதை தாண்டி நான் பார்பது அதோட உற்பத்தி,

சில டிசைன், ஸ்டிச் பண்றதுக்கு மிகவும் சிரமமாக இருக்கும், அந்த நேரத்தில் அதோட பரொடக்ஷன் லேட் ஆகும், அப்படி லேட் ஆகும் போது அந்த பிரஷர் நம்ம தொழிலாளர் மேல திரும்பும், அவங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் போது, அவர்களது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படும்.... இது கம்பெனிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள நல்லுறவை பாதிக்கும், மிஸ் சாத்வீகா...

சாத்வீகா, மிரண்டு விட்டாள், ஒரு சாதாரண, அதிகம் படிக்காத, யூனியன் லீடர்ன் பேச்சு இவ்வளவு தெளிவாகவும், ஆழமாகவும் இருக்கிறதே என்று......

ஓகே மிஸ்டர் ஜென்டில்மேன்ஸ், மங்கை சொன்ன கரெக்சன் தவிர. மற்றபடி உங்களுக்கு எல்லாம் ஓகே தான ...

யேஸ்,யேஸ் என அனைவரிடத்தில் இருந்து ஒரே பதில் வர...

அண்ணாமலை தொடர்ந்தார்..... மிஸ்டர் அஜய்....அஜய்....

எங்க நம்ம அஜய் தான் மங்கையை வைச்சகண்ணு வாங்காமல் பார்த்து கொண்டு இருக்கானே...........

அஜய் என உரத்த குரலில் வரவும்... நிகழ்வுக்கு வந்தவன். .. ஆங் யேஸ் சார்....

நீங்கள், மங்கையுடன் கலந்து பேசி மத்த ரெண்டு டிசைனையும் பைனல் பண்ணி, அந்த சாம்பிள் ஐ எங்க எல்லார்க்கும் ஒருமெயில் போட்டுடு.....

ஓகே சார்.....என கூறவும்..

மீட்டிங், என்ட் , தாங்க் யூ..... என அவர் கிளம்ப பின்னாடியே அனைவரும் சென்றனர்....

காங்கராட்ஸ் டா, என கூறிவிட்டு தன் தந்தை யை பார்க்க சென்று விட்டாள்......சாத்வீகா

மங்கையும் கிளம்ப.....

மிஸ் மங்கை கொஞ்சம் நில்லுங்கள்.......
என அஜய் கூப்பிட...

சற்று பயத்துடன் தான் மங்கை திரும்பினாள்,

ஆஹா, இவன் என்ன சண்டை க்கு
போக போறானா மங்கை கூட..........

தெரியலையே..... பார்ப்போம் 😁😁😁
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 12

கண் பார்பது எல்லாம்
உண்மை எனில்
விசாரணை என்பது
எதற்க்கு....
பார்க்கும் பார்வை
நம்மை ஏமாற்றினால்
தூரத்தில் இருந்து பார்க்கும்
போது தெரியும் நீர்
எல்லாம் குளம் அல்ல
அருகில் நெருங்கி பார்த்தால்
தான் தெரியும் அது கானல் நீர்
என்று........

அந்த மாதிரி தான் முடிவெடுத்தான், அஜய், மங்கையுடன், நெருங்கி பழக வேண்டும், அவளுடன் நட்பு கொண்டால் தான் ,அவள் யாரென்று புரியும் என எண்ணி இருந்தான்..
அதற்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது.


மிஸ், மங்கை கொஞ்சம் நில்லுங்கள்......

ஆங் , சொல்லுங்க சார் என மங்கை பயத்துடன் திரும்பி பார்த்தாள்...

ஸாரி , மிஸ் மங்கை, நான் வேண்டும் என்று எதுவும் பண்ணல எனக்கு இந்த மாதிரி ரூல்ஸ் இருக்குன்னு எனக்கு தெரியாது.

ஏன்னா , நான் அந்த ரூல்ஸ் பைல் அ பார்த்துக்கிட்டு இருக்கும் போது தான் நீங்க வந்தீங்க.... உங்கள.... பாத்துட்டு..... அப்புறந்தான் உங்களுக்கே தெரியுமே......

பரவாயில்லை சார் , நீங்கள் வேண்டும் என்று பண்ணியிருக்க மாட்டீங்கன்னு நினைத்தேன் சார், அதான் நான் நடக்கிறது நடக்கட்டும் என இருந்தேன்.....

ஆமா ,என்ன பத்தி அப்படி எப்படி உங்களுக்கு தோனிச்சு......அஜய் கேட்க

சார் நீங்க வந்த அன்னைக்கே ,நம்ம வாட்ச்மேன் கந்தசாமி அண்ணன் வயசானதுனால அவரால அந்த பெரிய இரும்பு கேட்ட தொறக்க கஷ்டப்பட்டாரு....

அத பார்த்த நீங்க, மறுநாளே, அவர கேண்டீன் டீ சப்ளைக்கு மாத்திட்டீங்க , கந்தசாமி அண்ணன் ரொம்ப சந்தோஷ பட்டுட்டு
என்கிட்ட சொன்னாரு......

அப்பவே, நம்பிட்டேன் சார், நீங்க எங்க நலனுக்காகவே வந்தமாதிரி.........

உங்களுக்கு ஞாபகம் இருக்கா சார் , இரண்டு தடவை இத பத்தி பேசி நன்றி சொல்ல வந்தேன் சார், நீங்க தான் என்ன பார்த்தாலே ஏதோ குழப்பதிலேயே இருக்கீங்க.......
ரொம்ப நன்றி சார்😊😊😊.

பரவாயில்லை மங்கை, அது என் கடமை ,கடமையை செய்றதுக்கு, நன்றி எல்லாம் எதிர்பார்க்க கூடாது மங்கை.....

அது உங்க பெருந்தன்மை சார்.....

அப்புறம் மங்கை நாம இனி பிரென்டஸ் ஆ இருப்போமா .......என அஜய் கேட்க

என் சார் இதுக்கு முன்னாடி என்ன சண்டையா போட்டோம் என சொல்லி விட்டு சிரிக்க.......

அஜய்க்கு தான் அது மயூரியை நினைவூட்ட.....

மயூரி, என அழைத்தான்...

சிரத்தவள் ,சிரிப்பு அடங்கியது.......

சார் , பாத்தீங்களா,மறுபடியுமா,....என கேட்க

இல்லை மங்கை சும்மா கூப்பிட்டு பார்த்தேன்......

சரி விடுங்க சார், ஆமா யாரு அந்த மயூரி.....

(அப்படி வா இத நீயா கேட்கனும் என்று தான் ஆசைப்பட்டேன் என அஜய் மனதில் நினைத்துக் கொண்டான்)

அது வந்து ஒரு பெரிய கதை மங்கை........

அப்படி யா சார், அப்போ கேட்க நேரம் இருக்காது, நான் வர்றேன் சார்..என கூற

என்ன இது இவ இப்படி பேசறா,நம்ம பிளான் வம்பா போயிடும் போல.....

அப்படின்னா, தினமும் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு டிசைன் டிஸ்கஸிங்ன்னு நான் கூப்பிடுறேன்,நீ வா டெய்லி நான் மயூரி கதையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுறேன் சரியா......

அப்படியா, என முதலில் யோசித்தவள், பின்பு மயூரியை பத்தி அப்படி என்ன தான் சொல்லுறார்ன்னு பார்ப்போம் என யோசித்து விட்டு பின்பு ஓகே சொன்னாள்....

அஜய்,அஜய் என அழைத்துக்கொண்டு சாத்வீக்கா வர .......

ஹேய் , யூனியன் லீடர் நீ என்ன இன்னும் ஊன்னோட யூனிட்ல போய் வேலை பார்க்காமல் இங்க இருக்க...என சாத்வி கேட்க..

நான் தான் சாத்வீ, பேலன்ஸ் 2டிசைன் கான ஐடியா கேட்டேன் என மங்கையிடம் கண் காட்டி விட்டு, சாத்வியிடம் கூறினான் அஜய்....

என்ன கொடுமை பார் ,அஜய் பாரின்ல போயி படிச்சட்டு அங்கேயே வேலை பார்துட்டு வந்தவன,இங்கே சாதாரண படிக்காத யூனியன் லீடர் ட ஐடியா கேட்க விட்டுடாரு எங்க அப்பா......என சாத்வி எலக்காரமாக கூற...

சார், மேடம் நான் கிளம்புறேன்.....

பார்றா, கோபத்தை, ஏ கேள் சீக்கிரம் போ.....டிஸ்கஸ்டிங்.....என சாத்வி கூற

மங்கை விருட்டென அவ்விடம் விட்டு வெளியேறினாள்.....

(இவ வேற நம்ம கஷ்ட பட்டு போட்ட பிளான் அ , கஷ்டபடாம கிளோஸ் பண்ணிடுவா , போல....என மனதில் நினைத்து கொண்டான் அஜய்)

சாத்வி, நீ யேன் இப்படி பிகேவ் பண்ற, அவங்க பாவம் ,அவங்கள ஏன் இப்படி ஹர்ட் பண்ற.....

என்ன அஜய், நான் உனக்காக தான் பேசுறேன் ,நீதான் அவ கிட்ட அசிங்கப்பட்ட, நான் இல்லை, ....

நான் என்ன அசிங்கப்பட்டேன்..... அவங்கள கூப்பிடனும் என்பது கம்பெனி ரூல்ஸ் அத நான் தான் மதிக்கல, இரண்டாவது, டிசைன் மேட்டர்ல அவங்க சொன்னது 100% கரெக்ட்,தொழிலாளர்கள் நல்லா ஆரோக்கியமாக இருந்தால் தான் நாம புரொடக்ஷன் அதிகமாக பண்ணமுடியும், நீ என்னடானா இத புரிஞ்சுக்காம.....

ஹேய்,அஜய்,நல்லவனே , முடியல, நீ ஏதோ பிளான் பண்ணிட்ட......என்னடா அது...

சாத்வி, அப்படிலாம் இல்ல டி....

அடேய், அடேய் நீ எப்ப எப்போ டிசைன் டிசன்னா மூஞ்சமாத்துவ எனக்கு தெரியும்.....

என்னடா, ஏதும் ரூட் விடுறீயா அந்த பொண்ணுக்கு....

சாத்வீ , என்ன இப்படி பேசுறே, நான் ஒரு ஆஞ்சினயர் பக்தன் உனக்கு தெரியாதா.....
என் வாழ்க்கையில் கல்யாணமே கிடையாது என்னமா இப்படி கேட்டு என்ன இன்செல்ட் பண்ணிட்ட..

எங்கடா அந்த மூஞ்ச காட்டு....த்தூ...... அவ டிசைன் ரிஜெக்ட் பண்ண ரீசன் சொல்லும் போது பாத்தேனே உன் மூஞ்சிய அப்படியோ லிட்டர் லிட்டர் ஆ வழிஞ்சுதே.... இந்த பாவம் போல பேசுறத மங்கைட்ட வைச்சுக்க என்ட வேண்டாம், .... இப்ப லஞ்ச் க்கு வரீயா இல்லை அவ பாக்ஸ் அ புடிங்கி சாப்ட போறீயா......

வர்றேன் டி, நீ போ நான் பின்னாடியே வர்றேன்......

சீக்கிரம் வந்து தொல, அங்கே எல்லாரும் வெயிட்டீங்... என தலையில் அடித்து கொண்டு வெளியில் சென்றாள்.....

அவள் படிக்காதவள் இல்லை சாத்வி......
அவள் புத்திசாலி ,அதை அவள் நிருபித்து விட்டாள்
அவள் மயூரி என்பதை நான் அவளுக்கே நிருபிக்கிறேன்......

என மனதில் நினைத்துக்கொண்டு அவனும், லஞ்ச்க்கு சென்றான்......

மயூரியா மங்கை, ...........

இல்லை அஜய் அவள் மயூரியாக தான் இருப்பாள் என ஏன் இவ்வளவு ஆணித்தரமாக நம்புகிறான், அப்போ மயூரி மேல் இருந்த கோபம்.....
இல்லை இவை அனைத்தும் அஜய்யின் கற்பனையா?

இந்த கேள்வி அனைத்திற்கும் காலமே பதில்....
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 13

ஒரு பெண்ணின்
மனது ஆழ்கடலை விட
ஆழமானது
அதில் புதைந்திருக்கும்
மர்மம் அந்த ஆழ் கடலுக்கு
கூட தெரிய வாய்ப்பில்லை.

அப்படி இருக்கும் போது ஒரு பெண் ஒரு விஷயத்தை மறைக்க வேண்டும் என நினைத்த பின் அதனை தெரிந்து கொள்ள ஆசைப்படுறியே அஜய் என் அஜய் ஓட மனசாட்சி அஜய்யை கிண்டல் பண்ண....

டேய் மனசாட்சி , அதுக்கு தாண்டா அவ கூட பிரென்ட்சிப் வச்சுக்கிட்டேன்...

அடேய், மாங்கா அஜய் ,பிரென்டசிப் வைச்சுகிட்டா மங்கை எப்படி மயூரியா மாருவா,

ஹேய் மனசாட்சி, அத அவ வாயாலேயே சொல்ல வைப்பன்டா,

அது இருக்கட்டும் , அதுக்கு அவ மயூரியா இருக்கனும் தம்பி, அண்ணன் ஒண்ணு சொல்லுறேன் கேளு.......
பால் தான் பொங்கும்
பச்சத்தண்ணி பொங்கவே பொங்காது😆😆😆
நீ என்ன தான் பிளான் போட்டாலும், அவ மயூரியா இல்லாம இருந்தா எல்லாம் புஷ்வானம் தான் மகனே....

அதெல்லாம் எனக்கு தெரியும் நீ உன்
வாய முடிட்டு போ , இப்படி அடிக்கடி வந்து என்ன டென்ஷன் பண்ணாத, போ.....

ஒரு வழியாக மனசாட்சியுடன் பேசி , ஜெயித்து விட்டான், ஆனால் நிஜத்தில் ..... என யோசித்து கொண்டே உறங்கி போனான்...

என்றும் போல் இன்றும் இனியதாய் கதிரவன் , தன் உதயத்தை ஆரம்பித்தார் ......

என்னமா மங்கா, இன்னிக்கு உன் முகத்தில்,ஒரு பிரகாசம் தெரியுது......

அப்படி யெல்லாம் இல்லை மா, எப்போதும் போல தான் இருக்கேன்.....

அக்கா வேலைய கட் அடிச்சுட்டு, ஏதும் காதல் படத்துக்கு போக போறீயா..... என தன் அக்கா காதில் கோமதி கிசு கிசுத்தாள் ....

ஆமா, ஆனால் படம் இல்லை, காதல் கதை என மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டே ...... அடியே கோமு சின்ன புள்ள மாதிரி பேசு , போ உனக்கு பள்ளிக்கு நேராகிட்டுல்ல.......

நீ சரியில்லை ,உன்ன அப்புறம் பார்த்துகிடுறேன், என சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள். கோமூ....

மங்கையும்,தன் கடமையை முடித்து விட்டு, புள்ளையாரை கும்பிட்டு விட்டு, நேராக , பேருந்து நிறுத்தம் செல்ல, பேருந்தும் வந்தது.....

பேருந்தில், ஏறினால், இதுவரை இல்லாத மாற்றம் அவளுக்குள் ஏற்படுவதை உணர்ந்தாள்,மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்......

அதை உஷா , பார்த்து விட்டாள்.......

என்னா, மங்கை மேடம், ஆளே மாறின மாதிரி இருக்க, என்னடி உன் அழகு இன்னிக்கு கொஞ்சம் தூக்கலா இருக்கு.... ஓ ... மேடம் சிரிச்ச முகத்தோட வேற உட்கார்ந்து இருக்குற மாதிரி இருக்கு ,காரணம் என்னவோ.....

(மங்கை, உஷாவை செல்ல மாக முறைத்து விட்டு )

ஹேய் இப்ப நீ வாய முடிட்டு வர்ரீயா இல்லை, வாய்லயே ஒரு குத்து விடவா,

சரி மேடம் என்ன இன்னிக்கு புது சேலையெல்லாம் கெட்டிட்டு வந்து இருக்கீங்க....

( ஆம் அஜய் பார்க்க இருந்த முதல் நாள் ,அலமாரியில் இருந்து ஒரு புடவை எடுத்தாளே, நீல நிற எம்பிராய்டரி புடவை அது தான் இன்று மங்கை உடுத்தி இருந்தாள்)

ஹேய் , இது ரொம்ப நாளா கெட்டாம இருந்தது, அதான் இன்னிக்கு கெட்டுனேன்....
நீ உன் இஷ்டப்படி பேசாத.....

நம்பிட்டேன், நம்பிட்டேன் , என மங்கையை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தாள், உஷா......

கம்பெனியும், வந்தது, இருவரும் சென்று, தங்கள் இடத்தில் தங்கள் வேலையை செய்து கொண்டு இருந்தனர்......

ஏதோ ஒரு உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்த்தவள், எதிரில் அஜய் வர, அப்படியே அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்......

அவ்வளவு அழகு ,கம்பீரம், ..............

(ஏய் உனக்கே இது அசிங்கமாக இல்லை, இன்னுமா நம்புற என அவள் மனம் அவளை திட்ட சட்டென்று தன் நிலைமையை மாற்றி கொண்டு அவள் வேலையை தொடர்ந்தாள்... )

சட்டென்று ஏதோ ஒன்று உணர, நிமிர்ந்தவள், டக் கென்று அதிர்ந்து விட்டாள்... அவள் அருகில் அஜய் நிற்க, குட்மார்னிங் மங்கை...... என கூறி சிரித்துக் கொண்டே, தன் அறையில் நுழைந்தான்.

பின் இருவரும் தத்தம் , வேலைகளில் மூழ்கி இருந்தனர்,

மதிய, உணவு இடைவேளைக்கு பிறகு, மீண்டும் தங்கள் பணியை தொடங்கப்போக...

ஏய் மங்கா, உன்ன ஆபிசர் ,ஏதோ டிஸ்கசன்க்கு கூப்பிட்டு வரச் சொன்னார்........என ரங்கசாமி வந்து கூற....

சார் உள்ளே வரலாமா, .....

வாங்க, மங்கை, வாங்க.........

வாவ் , யூ ஆர் பிரிட்டி டூடே எனக்கு நீல கலர்ன்னா ரொம்ப பிடிக்கும் மங்கை என கூறவும்,
மங்கை ஒரு சின்ன புன்னகை மட்டும் உதிர்த்தாள்......
(அவள் மனம் அவளை எச்சரித்து கொண்டே இருந்தது)

சரி சார், டிசைன் காட்டுங்க......

என்ன மங்கை இப்படி கேட்குற, டிசைன் இன்னும் ரெடி ஆகல...

பின்ன எதுக்கு சார் வரச்சொன்னீங்க....

என்ன மங்கா, மறந்துட்டியா, நீ தானே மயூரிய பத்தி கேட்ட என அஜய் கூற...

அவளை அறியாமல், அவள் முகத்தில் புன்னகை படற......

அஜய் தான் மயூரியை முதல் தடவை சந்தித்தது,அவளை தன் நண்பர்கள் அவமானப்படுத்தியது என அனைத்தையும் சொன்னான்......

பின் அடுத்தை கூற ஆரம்பிக்கும் முன், கதவை தட்டும் சத்தம் கேட்க அங்கு உஷா,

வாங்க உஷா , .....

சார் , பஸ்க்கு டைம் ஆகிட்டு.......

டைம் ஆகிட்டு ன்னா நீங்க கிளம்புங்க உஷா .

சார் நான் மங்கை கூட தான் போவேன் இந்த பஸ்ஸ விட்டா அடுத்த பஸ் இரவு 10மணிக்கு தான் சார்......

சரி சார் நான் கிளம்புறேன் என மங்கை வேகமாக எழுந்திருக்க......

நாளை க்கும் மீட்டிங் தொடரும் மங்கை என அவளை பார்த்து புன்னகை த்தான்.
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 14

என்னதான் மயூரி மீது
வெறுப்பு இருப்பினும்
இன்னும் மனம்
அவள் காதலையே
தேடுகிறது
காணும் இடமெல்லாம்.......


ஆம் மயூரி யின் இருந்த கோபம் , அஜய்க்கு, மங்கையை பார்க்கும் வரையில் தான்.

ஏனோ மங்கையை மயூரி என அவன் மனம் ஆழமாக நம்புவதின் காரணம் , இன்றும் அவள் மேல் உள்ள காதலே ..........

டேய் , அஜய், எந்திரிடா, காலையில் விடிஞ்சிரிச்சு பாரு.....
அம்மா, ........ என்னமா..... நைட் எல்லாம் தூங்கல மா ,நான் தூங்கிக்கிறேன்.....

அஜய் மா, மணியபாரு 8ஆகிட்டு மா, ......

என்னது 8ஆகிட்டா..... ஏம்மா இவ்வளவு லேட் ஆ எழுப்புறீங்க... கொஞ்சம் சீக்கிரம் எழுப்பி விட வேண்டியது தானே .........

அடடேய்,, ஐயோ பாவம்ன்னு உன்ன எழுப்பி விட்டா நீ என்னயே, பேசுறியா , இரு மவன.... என அவன் காதை பிடித்து திருக.....

ஐயோ , அம்மா விடுங்க..... என பாத்ரூம்க்கு ஓடிப்போனான்.....

அம்மா, சாப்பாடு.....

இதோ ,வந்துட்டேன்... பா .....

இட்லி தட்டில் இருக்க,அஜய் மனமோ மங்கை யை சுற்றி வந்தது.....தன்னை அறியாமலேயே சிரித்துக் கொண்டும், சாப்பிட்டு கொண்டும் இருந்தான்........

பின் கம்பெனி கிளம்பி விட்டான்...
அம்மா, வரேன் மா, என தன் அன்னையை அனைத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு சென்றான்......

ஆத்தா, மாரியாத்தா என் புள்ள ரொம்ப நாளுக்கு பிறகு சந்தோஷமா இருக்கான் , இந்த சந்தோஷம் அவனுக்கு நிலையா இருக்கனும் எனஇறைவனிடம் வேண்டிக்கொண்டார்.

அக்கா, அக்கா ......

என்னடி, அக்கா வ ஏலம் போடுற, சீக்கிரம் சொல்லு , அக்காக்கு கம்பெனி க்கு லேட் ஆகிட்டு.....என மங்கை கூற

அக்கா உனக்கு நாளைக்கு லீவு தானே படத்துக்கு போவோமா.....

என்னடி படிக்குற புள்ள, படம் கிடம்னு பேசுற....

ஏன்கா இதென்ன அநியாயம், படிச்சா படம் பார்க்க கூடாதா? அக்கா சரி சொல்லுக்கா வெளியே போய் ரொம்ப நாள் ஆகிட்டு ......என கோமூ கெஞ்ச , மங்கை சரி என ஒத்துக் கொண்டாள்....

அம்மா ,மங்கை 2 நாளுக்கு முன்னாடி ,கணக்கெடுக்க வந்தாங்க மா சொல்ல மறந்துட்டேன்,

அப்படி யா மா எங்க இருந்து வந்தாங்க......

பாத்தியா, அத கேட்க மறந்துட்டேன் மா ....என மரகதம் கூற...

சரி விடுமா, எனக்கு லேட் ஆகட்டு என கிளம்பி போக இன்றும் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் , உடை அணிந்து, அதன் கூடவே இலவச இணைப்பாக முகத்தில் புன்னகை யையும் அணிந்திருந்தாள்......

ஏனோ, மங்கைக்கும் ,அவளது இறுக்கம் குறைந்து, இப்போது தான் புன்னகை எனும் நகையை அணிந்திருந்தாள்.....

வழக்கம் போல் தன் தோழியுடன், கம்பெனிக்குள் நுழைந்தாள்.......
வந்து விட்டது மதிய நேரம் வந்து விட்டது ,
மங்கை மணியை பார்த்தவண்ணம் இருந்தாள்......

ஏய் என்னடி இன்னிக்கு பாத்து ஏன் இத்தனை தடவை மணிய பாத்துட்டு இருக்க, ஏன்னடி அஜய் சார் இன்னும் கூப்பிட்டு விடலயேன்னு பார்க்கிறீயா..... என உஷா கேட்க

ஹேய் , சீ அப்படி யெல்லாம் ஒண்ணும் இல்லடி... என மங்கை மலுப்பலான பதில் கூற....

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் , மங்கை, அப்ப வைச்சுகிடுறேன் உன்ன.....என உஷா கூற...

மங்கைக்கு பக்கென்று ஆனது , உடல் எல்லாம் வேர்த்து ஊத்த.... அவள் நினைவு எங்கெங்கோ சுத்துது.....

சரியாக , ரங்கசாமி வர தன்னை தான் கூப்பிட வருகிறான் என எண்ணி மங்கை எழும்ப....

ரங்கசாமி நேரே சென்று விட்டான்....

ஹா, ஹா,ஹா அசிங்கப்பட்டாள் ஆட்டோகாரி என உஷா சிரிக்க......

மங்கைக்கு தான் என்னவோ போல் ஆனது.......

டக்கென்று, அஜய் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்க , திரும்பி பார்க்க அங்கே அஜயே நேரடியாக மங்கையை டிஷ்கனுக்கு
அழைக்க......
ரங்கசாமி எல்லாத்தையும் , கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.

சரி, கேபினுக்கு வந்தாகிவிட்டது , அஜய்யும் தன் காதல் கதையை கூற ஆரம்பித்து விட்டான்..

மங்கை அதற்கு பிறகு மயூரியை ஒரு நாள் கேன்டீனில் பார்த்தேன் தனியா உட்கார்ந்து இருந்தா, நானும் இதான் சான்ஸ் என்று...
சாரி சொல்லாம்ன்னு போனேன்....
மயூரி , சாரி , அன்னைக்கு, அவன் அப்படி சொல்லுவான்னு நான் நினைக்கல என்ன மன்னிச்சுடு ....

பரவாயில்லை சீனியர், உண்மை தானே., நான் ஒண்ணும் தப்பா எடுத்து கிடலை.......

சரி , நீ ஏன் யார் கூடயும் பேச மாட்டிக்க, எப்போதும் தனியாவே இருக்க...

ஒரு மெல்லிய புன்னகை மட்டும் பூத்து விட்டு, அவ்விடம் விட்டு எழுந்து சென்றாள்......

ஏன் இவள், இவ்வளவு வித்யாசமா இருக்கா
என நினைத்து கொண்டிருக்கும் போது.

டேய் மச்சான் இங்க எனடா பண்ணிட்டு இருக்க.....என கேட்டுக் கொண்டே ராஜா வந்தான்...

அது இல்லடா , அவ தான் அந்த பொண்ணு...

எந்த பொண்ணு டா.....என ராஜா கேட்க..

அதான் அந்த மயூரி, ரொம்ப அழகாவும், அமைதியாவும், அதே சமயம் ஒரு புதிராவும் இருக்காடா..

என்ன மச்சான் ரூட் வேற மாதிரி போகுது போல....

ஏன்டா போனா என்ன தப்பு......

டேய் மச்சான் ராஜா , அவ வீடு எங்கே இருக்குன்னு கண்டு பிடிக்கனும் டா.....

அவ்ளோதான அஜய் கண்டுபிடிச்சிருவோம்...

மறுநாள் , கல்லூரிக்கு அனைவரும் வந்து விட்டனர்....

டேய் மச்சான்,அஜய் , என கத்திக்கொண்டே ராஜா வர ,

என்னடா, ஏன் இப்படி கத்துற.....

டேய் உன் ஆளு எங்க இருந்து வாரா என கண்டுபிடித்து விட்டேன் டா......

ஏன் நண்பேண்டா நீ..........
எங்க இருந்து மச்சான் வாறா...

அது வந்து மச்சி அவ.... என ராஜா இழுக்க

எனடா சொல்லு... என அஜய் கேட்க......

அது அமுதம், முதியோர் இல்லத்தில் இருந்து வாரா டா.....

என்னது முதியோர் இல்லமா........

என அதிர்ச்சியில் அஜய் கேட்டான்......
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 15

காலம் பல புதிர்களை
உருவாக்கும்
சில நேரம்
சில மனிதர்களையே
புதிராக வைத்து இருக்கும் அதில் ஒருத்தி தான் மயூரி...


தினமும், தன் வேலைகளைளுடன், அஜய்யின் காதல் கதையை கேட்பதையும் ஒரு வேலையாக வைத்து இருந்தாள்,ஏனோ அவள் மனம் நாளடைவில் அந்த கதைக்காக ஏங்கியது...

அஜய்க்கோ, அதன் மூன்று நாள் வேலை அதிகம் இருந்ததால், மங்கையை அழைத்து அவனால் கதை சொல்ல முடியவில்லை,

மங்கையும் ,அஜய் கூப்பிடுவான் என்ற எதிர்பார்ப்பிலே மூன்று நாட்கள் ஓடியது......

வீட்டிலும், சரி, கம்பெனி யிலும் சரி அவள் அவளாக இல்லை,

அவளை போட்டு அந்த கதை உருட்டி எடுத்தது.....

டக், என்று அஜய்யின் அறை கதவை யாரோ திறக்க , நிமிர்ந்தவன் கண்ணில் , மங்கை தெரிந்தால்......

சே, சே, கனவு , மங்கை யாட்டு கூப்பிடாம நம்ம கேபினுக்கு வர்றதாட்டு, என நினைத்து விட்டு, மீண்டும் குனிந்து தனது வேலைகளை தொடர்ந்தான்.....

சார் , உள்ளே வரலாமா...
அட, அப்ப ,நிஜந்தானா.....என மங்கை குரல் தன்னை கிள்ளி பார்த்தான் அஜய்.....

சார், எவ்வளவு நேரம் வெளியவே நிற்கிறது, உள்ளே வரலாமா, என கோபம் கலந்த தோனியில் கேட்க......
அவளை பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டே, வாங்க, வாங்க மங்கை, என்ன விஷயம்.....

என்னது, என்ன விஷயமா, என மங்கை கோபத்துடன் கேட்க...

சாரி , மங்கை எனக்கு தெரியல, நீங்களே சொல்லுங்க..... என அவள் பொறுமை யை ரொம்ப சோதித்தான்...

சார், எதுக்கு சார், என்ன மூனு நாளா நீங்க கூப்பிடலை.... என கேட்க..

தன் சீட்டில் இருந்து, எழுந்து, வெளியே பார்த்து விட்டு,ஓடிவந்து மீண்டும் தன் சீட்டில் உட்கார்ந்துவிட்டு ,
மங்கை முகம் அருகே, தன்,முகம் கொண்டு வாயில் விரல் வைத்து, மெல்ல பேசுங்க மங்கை, வெளியே யாராவது கேட்டா நம்மள தான் தப்பா நினைக்க போறாங்க.....என கிசு, கிசுக்க....

சார் பேச்ச மாத்தாதீங்க , நான் உங்கள கேட்டேனா, எனக்கு கதை சொல்லுங்கன்னு உங்கள கேட்டேனா, நீங்களா வந்து சொன்னீங்க... ஆனா இப்போ......

ஆனா இப்போ என்னாச்சு மங்கை..... என புண் சிரிப்புடன் கேட்க.....

நல்லா ஒரு நாவல் படிக்கும் போது, யாராவது வந்து அந்த புக்கை புடிங்கிட்டு போனா
எப்படி இருக்கும்.....அந்த மாதிரி இருக்கு......

ஹலோ ,மேடம், அது ஒண்ணும் சாதாரண கற்பனை கதை இல்லமா, என் வாழ்க்கையில் நடந்த லவ் ஸ்டோரி அன்ட் ரியல் ஸ்டோரி......

சரி இருக்கட்டும் சார் அதான் ஏன் மூனு நாளா சொல்லல....

அம்மாடி, யூனியன் லீடர், உங்களுக்கு வேண்டும்ன்னா வேலை இல்லாம ,இருக்கலாம், சார்க்கு பயங்கர வேலை, என தன் சட்டை காலரை தூக்கி விட்டு சொன்னான்.....

அப்படியா , சரி எனக்கும் வேலை இருக்கு, இனி , கதை கிதை,டிஸ்கஸ்சன் ன்னு என்ன கூப்பிட்டீங்க அவ்ளோதான் என, கோபமாக கூறிவிட்டு எந்திரிக்க போனாள் .....

சட்டென்று அவள் கையை பிடித்து இழுத்தான் அஜய்.......

தீடீரென கையை பிடிக்கவும்,அவனை முறைத்து விட்டு ,சட்டென கையை உதறவும் தான் , அஜய்க்கு தான் மங்கை கையை பிடித்து இருக்கோம் என்று....

சாரி, சாரி மிஸ் மங்கை, நீங்க டக் ன்னு எந்திக்கவும் தான் நான் உங்களை, சாரி மங்கை,.... என சொல்லி விட்டு தன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டான்....

அவன் செய்கையில், எந்த ஒரு உள்நோக்கம், இல்லை அது எதர்ச்சையாக , நடந்தது தான் என உணர்ந்த மங்கை, பரவாயில்லை சார், விடுங்க என அமர்ந்தாள்..

சரி, மங்கை இப்போ உங்களுக்கு என்ன தெரியனும்.....

மயூரி, ஏன் முதியோர், இல்லத்தில் இருந்து வந்தா, அத சொல்லுங்க முதல்ல என குழந்தை போல் ஆர்வமாக கேட்க......

அஜய் க்கு, சிரிப்பு தான் வந்தது....

சார், சொல்லுங்க.......

அது, அது வந்து மங்கை............
ம் ம் அது வந்து, இப்போ மணி 5 ஆகுது, உன் பிரென்ட், உஷா வீட்டுக்கு போகனும்னு வந்துடுவா,கதை பாதிலேயே நிக்கும் அது நல்லா இருக்காது, நாளைக்கு சொல்லுறேன் ஓகே......

ஆங் ..... சார் நாளைக்கு கம்பெனி லீவு சார்... எப்படி...

(அத தெரிஞ்சு தானே சொல்லுறேன் என மனதில் நினைத்து கொண்டு )

சரி விடு , திங்கள் மறுபடியும் கம்பெனிக்கு வருவியே அப்போ சொல்லுறேன்...

ஆங் சார் ,அது வரை என்னால வெயிட் பண்ண முடியாது சார்.....

அப்படினா, நாளைக்கு வெளியே எங்கயாவது சந்திப்போமா

( வெளியே மீட் பண்ண பயபுள்ள என்ன பிட் போடுது பாரு என அஜய் மனசாட்சி கூற)

வெளியே லாம் நான் வரமாட்டேன் சார்..

சரி அப்போ, மங்கை எங்க வீட்டுக்கு வா , அம்மா இருக்காங்க அவங்களையும் பார்த்த மாதிரி இருக்கும், ஐடியா எப்படி என சிரித்துக்கொண்டே கேட்க...

சார் வீட்டிற்க்கு எல்லாம் வேண்டாம் சார், நான் ஒரு நாள் கழித்து வந்தே கேட்டுகிடுறேன் என சோகமா கூறிவிட்டு எழுந்தாள்.

மிஸ், மங்கை, இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு, நீங்க தனியா வரனும்னு இல்லை கூட யாரவேணாலும் கூட்டிட்டு வரலாம்......

இல்லை வேண்டாம் சார்......

அட மங்கை, சும்மா வைச்சுகோங்க, தீடிர்னு உங்க மனசு மாறினிசுனா.......

( என அஜய் கூற, தயக்கத்துடனே விசிட்டிங் கார்டை எடுத்து கொண்டு சென்றாள்)

மங்கை, வெளியே, செல்ல சாத்வி உள்ளே வந்தாள்.....

டேய் ,அஜய் என்னடா நடக்குது,ஏன் மங்கை புயல் உன்னோட அறையில் மயம் கொண்டு விட்டு போகுது.... எங்க உன் கன்னத்தை காட்டு ஏதும் சேதாரம் ஆகி இருக்கான்னு பார்ப்போம்...

ஹேய், காலாய்க்கிறியா......

பின்ன என்னடா, அந்த மிஸ்.புயலபத்தி ஆபிஸ்கே தெரியும், அவ்ளோ சொன்னாங்க ரொம்ப ஸ்டிரிக்ட், அப்படி, இப்படி ன்னு, ஆனா அந்த புயல் உன் முன்னாடி எப்படி வலுவிழந்து போச்சு.....

அது அப்படி தான்.....

டேய் நல்லவனே நீ ஏதாவது , தகிடு தத்தோம் வேலை பார்த்து இருப்ப ஐயம் சுயர், சொல்லுடா......

அது வந்து சாத்வி , அவள பார்த்த அடுத்த நாளே, அவள பத்தி விசாரிச்சேன் .......அவ வீடு வரைக்கும் கணக்கெடுக்கிறவங்க மாதிரி போயி , அவள பத்தி ஓரளவு தெரிஞ்சு கிட்டேன்.. அவளுக்கு நாவல்ன்னா ரொம்ப பிடிக்கும் மா, அதுவும் காதல் கதைனா ரொம்ப பிடிக்கும்மாம்,

அது சரி தான், உனக்கு தான் எந்த காதலும் இல்லை யே, நீ எந்த காதல் கதை சொல்லுற
...என சாத்வீ கேட்க.....

அதான் நீயே, சொல்லிட்டியே, காதலே இல்லைனு பின்ன எப்படி சொல்ல முடியும், எல்லாம் கற்பனை தான்...என கண்ணடிக்க......

அடப்பாவி ..., எவ்வளவு பெரிய வேலை பார்த்து வைச்சு இருக்க, இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சா நீ தொலைஞ்ச மவன என சொல்லி விட்டு சிரித்தாள்......

சாத்வீ நாளைக்கு அவள ,எங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கேன் , .....

அவ வர்றேன் ன்னு சொல்லிட்டாளா....

இல்லை ஆனா வருவா.... எனக்கு நம்பிக்கை இருக்கு...

அவ்ளோ. தெரிந்து வைச்சுருக்க அவள பத்தி...
(என் மயூரி பத்தி எனக்கு தெரியாதா என மனதில் நினைத்து கொண்டான்).
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 16

நினைப்பது எல்லாம் நடந்து விட்டால்
விதிக்கு வேலை இருக்காது
ஆனால் சிலசமயம்
நினைத்து சிறப்பாக
நடந்து விட்டால் அதைவிட
சந்தோஷம் வேறு என்ன.


அஜய் யை சந்தித்த அன்றைய மாலை , அங்கு நடந்த அனைத்தையும், உஷாவிடம் சொல்லி முடித்தாள் மங்கை.

சரிடி, நீ என்ன நினைச்சிருக்க, .....

நான் போலான்னு இருக்கேன், உஷா...

ஏன்டி, அடுத்தவன் லவ் ஸ்டோரி கேட்க உனக்கு அவ்ளோ ஆசை ..... என உஷா கேட்க

அப்படி இல்லடி, ரொம்ப நல்லா இருக்கு டி அதான்...

அது சரி.......என உஷா சலித்து கொண்டு..சரி தனியாவா போகப்போற.....

சே, சே நான் எப்படி தனியா போவேன்....

பின்ன யாருகூட போக போற.......

வேற யாரு என் உயிர் தோழி...உன் கூட தான்....

என்னது ,... என் கூடயா , அடி போடி இவளே...

நான் வரல வாரத்தில் ஒரு நாளு தான் லீவு, மிசின் அ மிதிச்சு மிதிச்சு, காலு ஓஞ்சி போய் கிடக்கு,நா வரல பா ஆள வுடு சாமி.... என உஷா கூற..

அதெல்லாம் முடியாது, நாளைக்கு பஸ் ஸ்டாப்பிற்கு 9மணிக்கெல்லாம் வந்துடு, போ இப்ப போ , நீ இறங்க வேண்டிய இடம் வந்துட்டு....

ம்ம்ம்...... நாளைக்கு என்ன நடக்கப்போதோ, ஆண்டவா, என கூறிக்கொண்டே கீழே இறங்கினாள் உஷா......

நேரங்கள் , நிமிடங்கள் ஆக ஓட ... விடியல் பொழுதும் வந்தது....
இன்றும் , மங்கை மிக நேர்த்தியாக உடை அணிந்து, இருந்தாள்...
உஷாவும் சொன்னபடி வந்து விட, இருவரும், அஜய் வீட்டிற்க்கு சென்றனர்....

காலிங் போல் அடிக்க, இவர்களுக்காக காத்திருந்தது போல் ,அஜய் வந்து கதவை திறந்தான் ....

வாங்க, வாங்க, இருவரையும் அழைத்து உள்ளே கூட்டிச்சென்றான்......

அம்மா, அம்மா யார் வந்திருக்கான்னு பாருங்க......

அட, வாங்க மா , நீங்கள் இவன் கூடயாமா வேலை பார்க்குரீங்க ...

ஆ... ஆமா மா...
சார் எங்க கூட தான் வேலை பார்க்கிறார்....

நல்லது, நல்லது , சரிங்க புள்ளைகளா உங்க இரண்டு பேர்ல யாருமா மங்கை .
அம்மா , நான் தான் மா மங்கை என மங்கை கூற..

சொல்லிருக்கான் மா அஜய், உன்ன பத்தி.. இவ்வளவு சின்ன வயசுல, புத்திசாலித்தனம், பதவி எல்லாம் ரொம்ப பெரிய விஷயம் தான் மா...

அம்மா என்ன பத்தி ஏதும் சொல்லவில்லை யா ,என உஷா கேட்க..

ரேவதி, சிரித்துக் கொண்டே சொன்னா மா, என சிரித்துக் கொண்டே கூறினார்...

சமையல் அறையில் இருந்து இருவருக்கும் காபி எடுத்து வந்தான் அஜய்....

அதன் பின் ,உஷா ரேவதிக்கு துனணயாக, சமையல் அறையில் இருந்தாள்....

மங்கையும், அஜய்யும் மாடியில் பேசுவதற்கு சென்று விட்டனர்....

சார் ,அதான் வீட்டிற்க்கு வந்து ட்டேன்ல ,இப்போ சொல்லுங்க, மயூரி ஏன் முதியோர் இல்லத்தில் இருந்து வந்தாள்....

உன் விஷயத்தில் நீ கரெக்டா இருக்க.....

சரி சொல்லுறேன்,
ஏன்னா மயூரி, முதியோர் இல்லத்தில் தான் தங்கி இருந்தா...

அது எப்படி சார்....

அது தெரிஞ்சுக்க தான், நானும் என் பிரென்ட , ராஜாவும், காலேஜ்க்கு லீவு போட்டுட்டு போனோம்......

அங்க போய் விசாரித்தோம் அந்த முதியோர் இல்லம் நடத்துன மதர்ட்ட போய் கேட்டோம்.....

அப்ப தான் எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது...

என்ன சார் என கண்களை விரித்து கேட்க...

வணக்கம் மதர்.......

வாங்க, நீங்க யாருன்னு தெரிஞ்சுகலாமா......
மதர் , இங்கே மயூரி ன்னு ஒரு பொண்ணு இருக்காங்கல்ல....
ஆமாம், ... மயூரிக்கு என்ன....

மதர் , நாங்க , மயூரி காலேஜ் ல தான் படிக்கிறோம், ஆனா மயூரியோட சீனியர்ஸ்,...

என் பெயர் அஜய், இவன் பெயர் ராஜா இவன் எங்க காலேஜ் சேர்மன்...

ஒரு காலர்ஷிப் ஆப்பர் இருக்கு, நாங்க அது மயூரி க்கு அது கிடைச்சா நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம்

அதான் மயூரிய பத்தி விசாரிக்கலாம் என்று வந்து இருக்கோம்.....

என்று இருவரும் தங்கள் id யை காண்பித்தனர்.....

ம் ம் சரி....... என்ன தெரியனும்.....

மதர் , மயூரி எப்படி முதியோர் இல்லத்தில் இருக்காங்க....

அது ஒரு நாள் எங்க முதியோர் இல்லத்திற்கு வெளியே உள்ள, குப்பை தொட்டியில் ஒரு குழந்தை கிடந்தது. நாங்கள் போலீஸ்க்கு இன் பார்ம் பண்ணோம்....

அவங்க வர்ற வரைக்கும் குழந்தைய நான் தான் வைத்து இருந்தேன்.. என்ன பார்த்து அழகா சிரித்துக் கொண்டே இருந்தா....
பின்பு போலீஸ் கிட்ட ஒப்படைக்கும் போது என்னோட ,சிலுவை செயின் அ பிடிச்சு கிட்டு ஒரே அழுகை.... எனக்கும் அவள விட மனசே இல்லை.....
அதுக்கு பின் அவளை நானே தத்தெடுத்துக்கிட்டேன்.......

இதுல சுவாரசியமான ஒரு விஷயம் என்னனா அவளோட பெயர அவளே செலக்ட் பண்ணுணது தான் ... அவளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என எல்லாரும் யோசித்து கொண்டிருந்த போது, நான் தீர்மானமா இருந்தேன் அவள் எந்த ஓரு மதமும் சாராத பொதுவான குழந்தை, அவள் பெயரும் அப்படி தான் இருக்க வேண்டும் என்று...

அப்போ கார்டன்ல மயில் ஒன்று வந்தது, அதோட சத்தத்தில அவ்ளோ சிரிப்பு இவளுக்கு, அத பாத்தவுடன் கைய, கால ஆட்டி ஒரே மகிழ்ச்சி அப்பதான் எனக்கு இந்த பெயர் தோணிச்சு ,மயூரி.....

அப்போதில இருந்து இப்போ வரைக்கும், இந்த ஹோம், என்ன எல்லாத்தையும் அவ தான் பொறுப்பா பாத்துக்கிடுறா...

அவளுக்கு இது தான் உலகம், இதுதான் சந்தோஷம்....
இந்த சமுதாயத்தில் தன் சுகத்திற்காக, குழந்தைகளை உருவாக்கி, அதை பாரமாக எண்ணி இப்படி குப்பை தொட்டியில் போடுறவங்கள் ,அந்த குழந்தை நிலமை என்னாகும்ன்னு யோசிக்கிறதே இல்லை....
சில குழந்தைகள் யாரும் பார்க்கவில்லை என்றால் நாய்களுக்கு உணவாகி விடும் அவலமும் நடக்க தான் செய்கிறது ......

சரி ,மதர் நாங்கள் கிளம்புறோம், அப்புறம் நாங்க வந்து விசாரித்ததை மயூரிட்ட சொல்ல வேண்டாம் மதர்...

சரி , மை டியர் சன்ஸ், அவ பாவம் காலேஜ்ல அவள நல்லா பார்த்து கொள்ளுங்கள் பா....

சரி மதர் நான் பார்த்துகிறேன் என முதல் ஆளாக அஜய் கூற ... ராஜா விற்கு சிரிப்பு தான் வந்தது......

அதன்பின் நாட்கள் ஓடியது, அஜய், மயூரி நட்பு எனும் வட்டத்தை தாண்டி காதல் எனும் பூங்காவில் வண்ணத்து பூச்சிகளாக பறந்தனர்....மயூரி தன் வாழ்நாள் மகிழ்ச்சியாக அஜய்யை நினைத்தாள்....

கல்லூரி இறுதி ஆண்டு வந்தது அஜய்க்கும், ராஜா விற்கும் , ராஜா வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அஜய் கண்டிப்பாக வேலைக்கு செல்லவேண்டும், அவனுக்காகவும் அவன் அன்னைக்காகவும்.....

மயூரிக்கு இன்னும் ஆறு மாத கால படிப்பு இருக்கின்றது.
அஜய்க்கு கேம்பஸ் , இன்டர்வியூ வில் பெங்களூரில் வேலை கிடைத்து,

மயூரி ,நான் பெங்களூர்க்கு வேலைக்கு போகிறேன், உனக்கும் 6மாத கால படிப்பு இருக்கு நீ உன் படிப்பை முடி நானும் என் வேலையில் நிலை ஆகிக்கிறேன் , அதுக்கப்புறம் மதர்ட்ட பேசி நம்ம கல்யாணத்தை நடத்தி கிடலாம்.....என கூறிவிட்டு பெங்களூர் சென்று விட்டான்....

நாட்கள் ஓடியது, அடிக்கடி ராஜாவை விட்டு தன் அன்னையையும், மயூரியையூம், பார்த்து வர சொல்வான்.

அப்படி, அடிக்கடி, ஹோம்க்கு சென்று வந்ததால் மதர் ரிடம் ராஜா நன்கு பழகி விட்டான்.

ராஜா மீது மிகுந்த நல்எண்ணம் கொண்டிருந்தார் மதர்....

மயூரி தன் அஜயை எண்ணி எண்ணி நாட்களை கடத்தி கொண்டிருந்தாள், அப்படியொரு நாள் , அப்படி ஒரு துன்பம் தனக்கு நேரப்போவதை அறியாமல் பேதை அவள் கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள்...

ஆம் அன்றோரு நாள் நீண்ட இடைவெளிக்குப்பின், அஜய் ஊருக்கு வந்திருந்தான், அஜய் வருகைக்காக ராஜா ஓர் பார்டி ஏற்பாடு செய்திருந்தான்......

ராஜா , அஜய்க்கு போன் செய்து பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வருமாறு, கூறிவிட்டு தன்னை மதர்க்கு நன்றாக தெரியும் என்பதால், தான் போய் மயூரி யை கூட்டிட்டு வருவதாக சொல்லி விட்டான்.....

அனைத்தும் நன்றாக தான் போய் கொண்டிருந்தது, ராஜாவும் நல்லவன் தான், ஆனால் அது அவன் மனநிலையை பொறுத்து அவ்வப் போது மாறி கொண்டே,அவன் இருக்கும்.....நல்லவனா, கெட்டவனா என்பது.

மயூரி தன் காதலன் , அவன் நண்பன் மூலம் கொடுத்து அனுப்பிய நீல நிற புடவை அணிந்து வந்தால்.....

என்ன அழகு,செதுக்கி வைத்த சிலை மாதிரி இருக்காலே, என காரில் ஏறப்போகும் அவளை மெய்மறந்து பார்த்தான் ராஜா... அந்த புடவை அஜய் சொல்லி ராஜா எடுத்தது.....

டேய் ,மடையா அவள் உன் நண்பனின் காதலி நீ இப்படி நினைக்கிறது தப்பு என ராஜா விற்கு ஒரு புறம் தோன்றினாலும், அவள் அழகும்,வனப்பும் ராஜா மனதை கலங்கடித்தது...

ஒரு பெண் மீது ஆசை கொள்ளும் வரை தான் ,அதற்கு அவர்கள் சம்மதிக்கும் வரை தான் ராஜா நல்லவன், அவர்கள் முரண்டு பிடித்தால் ராஜாவின் மறுஉருவம் வேறு....

இது ஏதும் தன் உயிர் நண்பன் அஜய்க்கு தெரியாமல் வைத்து இருந்தது தான்,ராஜா வின் திறமை....

ஒரு வழியாக, பாராட்டிக்கு வந்து விட்டாள் மயூரி..

அஜய்யின் கண்களும், அவளுக்காகவே காத்திருந்தது,

(மயூரி வருவதை பார்த்த அஜய், தன் நண்பன் நிற்பதையும் மறந்து ஓடிபோய் கட்டி அணைத்துக் கொண்டான், நீண்ட நாட்களுக்கு பின் தன் காதலியை சந்தித்த மகிழ்ச்சி யில்....)

அதுக்கு பின் என்னாச்சு சார்.....சார் என மங்கை கேட்க.......

மிகவும் சோகமானான் அஜய்.....
சார் ஏன் சோகமாக இருக்கிறீங்க, ....
இல்லை மங்கை, நான் வைத்த லவ் அவ என் மேல வைக்கல...
அதான் என்னாச்சு என மங்கை கேட்க, .....
எனக்கும் அடுத்து அடுத்து சில தவிர்க்க முடியாத சூழ்நிலை வந்தது, நான் ஒரு கமிட்மெண்ட்காக வெளிநாடுக்கு ஒருமாதம் போய்விட்டேன் , அந்த ஒருமாதம் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.

ராஜாவிடம் இருந்தும் எந்த தகவலும் பெறமுடியவில்லை, அவனிடம் பேசவும் முடியவில்லை, எனக்கு ஏதோ விபரீதம் நடந்த மாதிரி தோணுச்சி ,உடனே லீவு போட்டுடு ஊருக்கு வந்தேன்.... வந்தவுடன் ஹோம்க்கு போனேன்.

அப்போ தான், ராஜாவிற்கும், மயூரிக்கும் கல்யாணம் நடந்தது எனக்கு தெரிந்தது..

ஒரே நேரத்தில், உயிர் நண்பன், உயிருக்கும் மேலாக நினைத்த காதலி இவங்க இரண்டு பேரோட துரோகம் என்ன பாதி கொண்ணுடுச்சி...... என சொல்லும் போதே அஜய் கதறி அழுது விட்டான்...

இங்கும் சில கண்ணீர் துளிகள் சிந்தியது, மங்கையின் கண்களில் இருந்து....

அதை அஜய்க்கு தெரியாமல் மறைப்பதில் தோற்று போனால் மங்கை......

இனி என்ன நடக்கும் இருவர் வாழ்விலும்.......
பார்ப்போம் 🙂🙂🙂🙂
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 17

காதல் செய்யும் காயம்
சாவின் விளிம்பு வரையிலும்
நம்மை பின் தொடரும்...
அந்த காயமும் காதல்
விரும்பி செய்தவையாக
இருக்கலாம் இல்லை
விதியே என்று செய்தவையாக
இருக்கலாம்..........


அஜய்யின் கதை , மங்கையையும் ,கலங்கச செய்தது.....

அவள் கலங்கியதை அஜய்யும் கவனித்து விட்டான்.......

அவன் மங்கை யை பார்த்து, ஏன் மயூரி இப்படியொரு துரோகம் எனக்கு பண்ண, கண்டிப்பாக இந்த கண்கள் எனக்கு வேண்டும் என்று துரோகம் பண்ணிருக்காது, என் நண்பன் அவனும் அப்படி செய்ய மாட்டான், பின் என்ன தான் நடந்தது மயூரி.... என மனதிற்குள் பல கேள்விகளை கேட்டு முடித்தான்...

ஸாரி மங்கை என்னோட சோக கதைய உங்கள் கிட்ட சொல்லி உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன் . என அஜய் கூற..

மங்கையிடம் மவுனத்தை தவிர எந்த பதிலும் இல்லை,

சரி மங்கை, வாங்க கீழே போகலாம், அம்மா சாப்பாடு ரெடி பண்ணிருப்பாங்க .....
என மங்கை யையும் அழைத்துக்கொண்டு இருவரும் கீழே வந்தனர்.

கீழே அனைத்தும் ரெடி ஆகி இருந்தது....

எல்லாரும், சாப்பிட அமர .... அம்மா நீங்களும் உட்காருங்க நான் பரிமாறேன் என்று அஜய் கூற...மங்கை தான் பரிமாறுகிறேன் என்று கூறவும்,
ஒரு வழியாக அனைவரும் உட்கார்ந்து, சாப்பிட ஆரம்பித்தனர்.....

சரி, சார் நாங்க கிளம்புறோம்,என்றாள்
உஷா .

டேய் அஜய், இரண்டு பேரையும், நீயே கொண்டு போயி விடு டா...

வயசுபிள்ளைகள தனியா எப்படி அனுப்ப , என ரேவதி கூறினாள்
இருவரும் மறுக்க, பின் ரேவதி யின் பிடிவாதத்தில் ஒப்புக் கொண்டனர்....

இருவரும் அஜய்யுடன் காரில் பின்பக்கத்தில் ஏறினர்.......

முதலில் உஷாவை இறக்கி விட்டு, பின் மங்கை வீடு நோக்கி வண்டி விரைந்தது..

போகும் வழியில் இருவருக்கிடையிலும், ஒரு பேச்சு இல்லை, மவுனம் மட்டுமே மொழியாக இருந்தது..

அஜய் கண்ணாடி வழியாக, அடிக்கடி மங்கை யை பார்த்துக்கொண்டே வந்தான்.

அதே கண்கள், அன்றும் பொய்யுரைத்தது, இன்றும் பொய்யுரைக்கிறது....

தன் தெரு முனை வரவும் வண்டியை நிறுத்த சொன்னாள், மங்கை,
சார் இங்கேயே நிறுத்துங்க, நான் இறங்கி கிடுறேன்...

ஏன் மங்கை வீட்டு வாசலில் யே இறக்கி விடுறேன் ,

வேண்டாம் சார், அது நல்லா இருக்காது...என கூறி மங்கை இறங்கி விட்டாள்...

அதற்கு மேலும் , அஜய் வற்புறுத்த வில்லை, ஏன்னெனில் வீட்டிற்கு சென்றால் அவன் மாட்டிக்கொள்வானே...

ஆம் அவன் தானே கணக்கெடுப்பவர் போல் மங்கை வீட்டிற்க்கு சென்றான்...
அதனால் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சென்று விட்டான்.....

அன்று இரவு , மங்கைக்கு தூக்கம் வரவில்லை, அஜய் காதலையே எண்ணி அவளின் தூக்கத்தை தொலைத்தால்.....

எப்படி பட்ட காதல், அவள் கல்யாணம் செய்து விட்டாள், என தெரிந்தும், அவள் மேல் இவருக்கு ஏப்பேர் பட்ட நம்பிக்கை எதேனும் காரணம் இருக்கும் என்று...

சரி இவர் ஒரு மாதம் தன் காதலியுடன் பேசாமல் இருந்தததும் தவறு தானே , அப்படி என்ன வேலை இருந்து விட போகிறது என தன் மனதிற்குள் ளே கேள்வியும் பதிலுமாய் , கேட்டுக்கொண்டே உறங்கிப்போனாள்.

காலை கதிரவன் புலர்ந்தான், மலர்கள் மலர்ந்தது வண்டுகள் பறந்தது, மங்கை தன் வழக்கத்தை விட அன்று விரைவாக எழுந்து, தோட்ட வேலையை கொஞ்சம் கவனித்தாள்.
அது அவள் மனதை கொஞ்சம் அமைதி ஆக்கியது...

வேலைக்கு செல்லும் நேரமும் , வந்து விட தன் அன்னையிடம் கூறிவிட்டு பணிக்கு கிளம்பினாள்.

அன்று சீக்கிரம் மே வந்து விட்டாள் , கம்பெனி க்கு, உஷாவிற்கு இது தெரியாது...

தன் இருப்பில் அமர்ந்து உட்கார்ந்து இருந்தவளுக்கு , பெரிய நூல் மிஷின்கள் இருக்கும் பகுதிக்கு சென்று பார்த்து விட்டு வரலாம் என்று அங்கு சென்றாள்....

அவள் மிஷினை பார்த்து கொண்டிருக்கும் போது .... பின்னால் ஏதோ ஒரு உருவம் இருப்பதாய் தோன்ற திரும்பியவள் அதிர்ச்சி யில் உறைந்தாள்.....

நீ...... நீயா நீ ஏன் இங்க நிற்க, போ என் முன்னாடி இருந்து போ வழி விடு என பதட்டமாக கூற

அதெப்படி விட முடியும், இன்னிக்கு தானே நீ தனியா மாட்டி இருக்க,, வாங்குனதுக்கெல்லாம் திருப்பி தர வேண்டாம் என மங்கை யை நெருங்கினான் ரங்கசாமி.....

டேய் ரங்கசாமி, என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும் போயிடு,... என பின்னோக்கி நடந்தாள்.....

அடியே மங்கை உனக்கு பயப்பட கூட தெரியுமா.... அடடா இது நல்லா இருக்கே.....

என மேலும் நெருங்கினான்...
டேய் வேண்டாம், என பின்னோக்கி நடக்க, சுவற்றில் முட்டி நின்றாள் மங்கை...

நான் உன்ன பெருசா எதுவும் செய்ய போறது இல்லை, அப்படி செஞ்சா வெளியே தெரிஞ்சுடும்..... நான் இப்போ செய்றத நீ வெளியே சொல்ல மாட்ட, சொல்லவும் முடியாது.....அப்படி என்ன செய்ய போறேன்னு நினைக்கியா ...அது வந்து, ம்ம்ம்....

என தன் இரு கைகளையும் உரசிக் கொண்டு கண்பார்வயை அப்படி யே மங்கையின் முகத்தில் இருந்து கீழ் இறக்கி கைகளை கொண்டு போக.........

சுர்ர் ... என்று சுருண்டு தரையில் உட்கார்ந்து விட்டான் ரங்கசாமி..

நெருங்கி வந்தவனின் இரு கைகளையும் பிடித்து, தனது கால் முட்டி கொண்டு, டக் என்று அவனுடைய உயிர் நாடியிலேயே உதைத்து விட்டு, உடனே அங்கிருந்து ஓடி வரும் போது, அஜய் மீது மோதியவளை, பிடித்து நிமிர்த்தினான் அஜய்,...

மங்கை என்ன நடந்தது, வாட்ச்மேன் சொல்லி தான் நான் இங்கு வந்தேன். என்னாச்சு ஏன் இவ்வளவு பதட்டமா ஓடி வாறே.........

அது சார் , அது...... என நடந்தது அனைத்தையும் கூறிவிட்டு அழ ஆரம்பித்து விட்டாள்............

அழாத மங்கை, அழாத என்று அஜய் கை தட்ட ஆரம்பித்து விட்டான், நீ ஏன் அழற, அவனிடம் இருந்து எவ்வளவு தைரியமாக தப்பித்து வந்து இருக்கிறாய்,

ஒரு ஆபத்து வந்தது என்றாள், அதை பார்த்து பயப்படாமல், சமயோசிதமாக உன்னை நீயே தற்காத்துக் கொண்டு இருக்கிறாய் இது தான் பெண்கள் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஓன்று .

அவனை... என்று, அஜய் கோபமாக, கிளம்ப, வேண்டாம் சார் எல்லாரும் வர ஆரம்பித்து விட்டார்கள் நீங்க இப்போ அவனை ஏதாட்டு பண்ணுணீங்கன்ன ,அது பெரிய அளவில இந்த உலகம் கண் காது மூக்கு வைச்சு பேச ஆரம்பிச்சுரும் , அவனுக்கு நான் குடுத்துட்டு தான வந்துருக்கேன்...
மேற்கொண்டு நீங்கள் ஏதாட்டு பண்ணனும்னு நினைச்சா அவனை டிபார்ட்மெண்ட் மாத்திருங்க சார் எனக் கூறிவிட்டு தனது
இருக்கைக்கு சென்று விட்டாள்....

போகும் அவளையே பார்த்தான், அஜய் இவ எப்படி இப்படி மாறினாள்... என நினைத்து ஆச்சரியப்பட்டான், அஜய்...

அதோடு ரங்கசாமி யை தன்னை வந்து மீட் பண்ண சொல்லி ஆளை அனுப்பி வைத்தான்....

அவன் வருவதற்க்குள், சாத்வீயிடம் கலந்து பேசி, அனைத்து முடிவையும் எடுத்து வைத்து இருந்தான், அஜய்....
கொலை வெறியில், அஜய் உட்கார்ந்திருக்க, தட்டு, தடுமாறி எந்திரிச்சு வந்தான், ரங்கசாமி..

சார் என்னை கூப்பிட்டீங்களா என உள்ளே வந்தான்,ரங்கசாமி.....

ஆமாங்க வாங்க , சார் க்கு ஏதோ புதையல் கிடைத்தது போல,மங்கை சொன்னா, எனச் சொல்லவுமே ரங்கன் முகம் பயத்தில் வெளுத்தது. ...

இந்தாங்க இந்த லட்டர் அ பிடிங்க...
ரங்கன் முழிக்க....

பயப்படாதீங்க, உங்களை வேலை விட்டு தூக்கல,ஆனா உங்களை வேற டிபார்ட்மெண்ட் மாத்திருக்கேன், அங்க டெய்லி நீங்க தொடலாம், தடவலாம், மிஷின..... உங்களை மிஷின் கிளீனிங் டிபார்ட்மெண்ட் ல தான் போட்டுருக்கேன்,நல்லா தொட்டு, தடவி வேலை பாருங்க.... என நக்கலாக கூற....

ரங்கனுக்கு உள்ளுக்குள் கோபத்தனல் ஊருவானது ......

ஆங் ரங்கன் ,கொஞ்சம் வாங்க என கூப்பிட்ட அஜய், பளார் என கன்னத்தில் ஒரு அறை குடுத்தான்...

இது போதும் நினைக்கிறேன் இனி எந்த பொண்ணுட்டயாவது தப்பா நடந்து கிட்ட, இங்க இருக்க மாட்ட, கம்பிக்கு பின்னாடி ஜெயில் ல இருப்ப..பீ கேர்பூல் பிளடி பிச்....என திட்டி வெளியே விரட்டி விட்டான்....

ரங்கன் மனதில், தனலாய் இருந்த குரோத நெருப்பு ,இப்போது கொளுந்து விட்டு எறிய ஆரம்பித்து விட்டது, இதற்கு காரணமான மங்கை ய முதல்ல பாத்துகிறேன்டா, அதுவே உனக்கு தண்டனை தான் என நினைத்து கொண்டு வெளியே சென்று விட்டான் ரங்கன் எனும் அரக்கன்........

எத்தகைய துன்பத்தை மேலும் சந்திக்கப்போகிறாளோ மங்கை 🙄🙄🙄🙄🙄
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 18

பழியும்,பாவமும்
மிச்சம் வைச்சா
அது விடாது
நம்மள துரத்தி தான் வரும் .


அது போல தான், ரங்கசாமியும் பழிவாங்க காத்துக்கொண்டிருந்தான்..

ரங்கனை டிபார்ட்மெண்ட் மாத்திட்டு , உடனே மங்கை கையை கூப்டு அவளிடம் மன்னிப்பு கேட்டான்,அஜய்,

சார் உள்ளே வரலாமா,...

வாங்க மங்கை..... உட்காருங்கள்...

பரவாயில்லை சார் சொல்லுங்க....

அட உட்காருங்க மங்கை ப்ளீஸ்....

சொல்லுங்க சார் , எதுக்கு கூப்பிட்டீங்க....

அதுவந்து, மங்கை என்னை மன்னிச்சுடுங்க ,

நீங்கள் ஏன் சார் மன்னிப்பு கேட்கிறீங்க ....எல்லாம் பெண்கள் எங்கள் விதி.... இப்படியெல்லாம் சந்திக்கனும்னு....

இல்லை ,மங்கை, ஒரு கம்பெனி யா, பெண் ஊழியர்களுக்கும்,
தொழிலாளர்களுக்கும் தேவையான பாதுகாப்ப நாங்க செஞ்சி இருக்கனும், அப்படி பண்ணாததுக்கு தான் நான் மன்னிப்பு கேட்டேன்...எனக்கு வந்த கோபத்துக்கு, அவனை வேலை விட்டே தூக்கி இருப்பேன் , இது கம்பளைன்ட் ஆ பதிவாகததுனால அவனை டிபார்ட்மெண்ட் மாத்திட்டேன், பெண்கள் இல்லாத டிபார்ட்மெண்ட் ..என அஜய் கூற....

ரொம்ப நன்றி சார் , என மங்கை கூற

நன்றியெல்லாம் வேண்டாம் மங்கை நாம பிரென்ட்ஸ் ஆகி கிடலாமா , ....

மங்கை சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்,அவள் மனதில் பல எண்ணங்கள்.....

என்ன மங்கை, ஓகேவா பிரென்ட்ஸ் என கை நீட்ட.......

ம்ம்ம்.... சார் என கை கொடுத்தாள்......

அந்த ஸ்பரிசம், அதே ஸ்பரிசம் பல நாட்கள் கழித்து அஜய் உணர்ந்தான்........

நாட்கள் நன்றாகவும், ரங்கன் தொல்லையின்றி, பெண்கள் அனைவரும் நிம்மதி யாகவும் கழிந்ததது...

அவ்வப்போது சின்ன பேச்சுகள், குறுஞ்சிரிப்புகள் மூலம் அஜய், மங்கை இருவரின் நட்புகள் தொடர்ந்தது ......

ரங்கன் புயலுக்கு முன் அமைதி என்பது போல் அமைதியாக இருந்தான் தனது வாய்ப்பிற்காக.....
அன்று ஒரு நாள்.. அந்த வாய்ப்பு ரங்கனுக்கு கிடைத்தது............

சார் , நாளையிலிருந்து மூன்று நாள் விடுமுறை, அளிக்கனும் சார் கம்பெனிக்கு என மங்கை அஜய்யிடம் கூறினாள்...

ஏன் மங்கை என அஜய் கேட்க.....

சரியா போச்சு..... நீங்கள் இன்னுமா கம்பெனி ரூல்ஸ் அ படிக்கல.... என மங்கை கிண்டலாக கேட்க...

அஜய்,ஈஈஈஈஈஈ... அது வந்து மங்கை இங்க தான் எங்கேயோ வைத்தேன் என சிறு பிள்ளை போல் டேபிள் அடியில் எல்லாம் தேடினான்....

அடக்கடவுளே, என மங்கை தன் தலையில் அடித்து க்கொண்டு... சார் விடுங்க விடுங்க போதும் உங்க நடிப்பு பார்கவே முடியல....

ஈஈஈஈஈஈஈஈ..... என மங்கை யை பார்த்து வழிந்தான் அஜய்....

சார் , அது 6மாதத்திற்கு ஒரு முறை, கம்பெனி மிஷின்,சின்னதோ, பெருசோ எல்லாம் கிளினிங் அன்ட் சர்வீஸ் நடக்கும், அதான் சார் .....

அப்படியா, அப்போ மூன்று நாள் உன்ன பார்க்காம நான் எப்படி இருப்பேன் என அஜய் தன் வாய்குள்ளே புலம்ப...

என்ன சார் , சொன்னீங்க என மங்கை கேட்க...

ஒண்ணும் இல்லை மங்கை, .... சும்மா.. சரி அப்போ இந்த மூன்று நாள் யார் வருவா,என்ன பண்ணுவாங்க......என குழந்தை போல் பாவமாக முகத்தை வைத்து கேட்க.....

அதை பார்த்த மங்கைக்கு சிரிப்பு தான் வந்தது......

அட ராமா, ராமா, .... இங்கே யார் ஆபிசர், யார் யூனியன் லீடர் ன்னு தெரியல....என தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டாள்...

என்ன மங்கை, இப்படி சலிச்சு கிடுற, தெரியாம தானே கேட்டேன், ஒரு பிரென்ட்காக இத கூட சொல்லமாட்டியா என அப்பாவியாக
கேட்டு விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்..

சரி, சரி சார் அப்படி மூஞ்ச வைச்சுகாதீங்க....
நீங்கள், நான் அப்புறம் வெளியே இருந்து சர்வீஸ் பண்றவங்க வருவாங்க......

ஓகோ........ அப்போ நாளைக்கு நம்ம இரண்டு பேரும் தனியாக சந்திக்கலாமா.... என மனதிற்குள் நினைத்துக் கொண்டு இருக்கும் போது அப்படியோரு குண்டை மங்கை வீசினால்...

ஆங்..... சார் சொல்ல மறந்துட்டேன் எனக்கு துணையாக உஷாவ மட்டும் கூப்பிட்டுகிடுவேன்.... என மங்கை கூற....

அவ எதுக்கு, உனக்கு துணைக்கு தான் நான் இருக்கென்ல என அஜய் தன்னை அறியாமல் கூறிவிட்டான்......

என்ன ....என்ன சார் சொன்னீங்க.... என சிறு முறைப்புடன் மங்கை கேட்க.....

ஆங்....... அது வந்து மங்கை ,பாவம் அவ வீட்ல ரெஸ்ட் எடுப்பால்ல அவள் போயி எதுக்கு டிஸ்டரப் பண்ணணும்ன்னு கேட்டேன்.....

ஓ..... அப்படி யா, சார் அப்போ நானும் பாவம் தான், நானும் வீட்ல ரெஸ்ட் எடுக்கேன், நீங்களே கொஞ்சம் எல்லா வேலைகளும் பார்த்துக்கோங்க என சொல்லி விட்டு மனதிற்குள் சிரித்தாள் மங்கை.....

ஆஹா, முதலுக்கே மோசம் வந்துரும் போல டா அஜய்.... உஷார்......
சரி மங்கை என்ன இருந்தாலும் ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணு இருந்தா துணையா தான் இருக்கும், கூப்ட்டு கோங்க........

சரி சார் அப்புறம், நாளைக்கு பார்க்கலாம்....

சரி மங்கை.........என அஜய் கூற....
அவன் மனதிற்குள் நாளை எப்படி யாவது மங்கை யிடம் மனம் விட்டு பேசவேண்டும்.....

அய்யோ ..... நாளை சீக்கிரம் வரகூடாதா என ஆவலாக இருந்தான்......

இன்னொரு வனும் தான்.......
 

Naga Novels

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயிலிறகு மங்கை 19

விதி வலியது
அந்த விதியை
மதியால் வெல்லலாம்
சில சமயம்
உண்மையான
அன்பும் வெல்லும்
விதியை மட்டும் அல்ல
சில சதியையும் தான்


இருவரும் நாளைய நாளை எண்ணி உறங்கினர் , அஜய்யும், மங்கை யும்...

கதிரவன் ,இன்று சற்று கோபமாக இருப்பான் போல,ஏனெனில் சீக்கிரமே தனது உஷ்ன கதிர்களை ,பூமியில் விரித்தான்....

இருவரும் , தங்களது வீட்டில் தயாராகி கொண்டு இருந்தனர்.....

மங்கை, கிளம்பி மிகவும் அழகாக இருந்தாள்.....

அக்கா , நில்லு..... என கோமு கேட்க
என்னடி, தங்கச்சி மா, சொல்லு.....வரம்போது ஏதாட்டு வாங்கி விட்டு வரனுமா....

இல்லக்கா.... உங்க கிட்ட இன்னிக்கு ஏதோ வித்தியாசம் தெரியுதே அக்கா.....

என்னடி, கோமு குட்டி, அக்கா எப்போதும் போல தான் கிளம்பி இருக்கேன்...

இல்லக்கா.....ம்ம்ம்.... ஏதோ ஒண்ணு இருக்கு கா...... என அக்காவயே மேல் இருந்து கீழ் வரை உத்து பார்த்தவள்......

ஆங்....... கண்டுபுடிச்சுட்டேன்.... அக்கா இன்னிக்கு நீ மல்லிகை பூ வைச்சு இருக்க....
ஐ அக்கா இன்னிக்கு என்ன ஸ்பெஷல்......

ஒண்ணும் இல்லடி, என்னமோ வைக்கனும்னு தோணுச்சி அதான்...

ம் ம்.... அக்கா மங்களகரமா இருக்க............
(மங்களகரமாவா என மங்கை யோசிக்க )

ஏய் , என் பொண்ண கண்ணு வைக்காத டி ,
அம்மாடி , மகாலட்சுமி மாதிரி இருக்கமா என , அவள் முகத்தை தன் கைகளால் தடவி நெட்டி முறித்தாள் மரகதம்.......

பின் மங்கை தீடிரென ஏதோ நினைவு வந்தவளாய்,....தோட்டத்து பக்கம் ஓடினாள்....

அங்கு இன்று அவளுக்காகவே...மூன்று வண்ணங்களில் சில ரோஜாக்கள் பூத்து புன்னகைத்து நின்றது...

மஞ்சள், சிவப்பு, வெள்ளை என ......
நீண்ட யோசனைக்கு பிறகு.... வெள்ளை ரோஜாக்கள் அனைத்தையும் பறித்தாள்..... ஒரு கவரில் போட்டு எடுத்து வந்தாள்....

அதை பார்த்த கோமூ.......
அக்கா நில்லு...... அம்மா உண்மையிலே இவளுக்கு
என்னமோ ஆகிட்டு மா என கத்தினாள்...

ஏய் வாய மூடுடி, ஏன் இப்படி கத்துர என மரகதம் வர....

மங்கை திறு, திறு வென கையில் உள்ள கவரை பார்த்து விட்டு தங்கையிடம் வேண்டாம் என்பது போல் தலை அசைத்தாள்...

அம்மா ,இங்க பாரு நான் ஆசையா தலைக்கு வைக்க ஒரு பூ கேட்டா இவ என்னமா சொல்லுவா... பூ வெல்லாம் பறிக்க கூடாது டி அது பாவம்..... அது செடில இருக்கும் போது எவ்வளவு அழகா இருக்கு பாரு, அதை கையில பறிச்சு ஓரே நாள்ல காய வைக்க போறியா என ,பூ வ பறிக்ககறத ஒரு கொலை குத்தம் மாதிரி பேசுவால.... இப்ப பாருமா கவர்நிறைய பூ பறிச்சுட்டு போறா...... என கோமூ,மரகதத்திடம் போட்டு குடுக்க...

மரகதம், மங்கையை ஏன் என்பது போல் புரியாமல் பார்க்க....

அது இல்லமா, எங்க கம்பெனில புதுசா ஒரு பிள்ளையார் வைச்சு இருக்காங்க ,அதுக்கு தான்மா, என சொல்லி விட்டு , உன்ன வந்து வைச்சுகிறேன் என தங்கையை பார்த்து செல்லமாக முறைத்து விட்டு, விருட்டென்று கிளம்பி, அம்மா வர்றேன் மா என சொல்லி விட்டு வாசலுக்கு வரவும் கால் தடுக்கியது...

ஆ அம்மா என ..... மங்கை கத்தவும்....

மரகதம்,என்னமா ஆச்சு என ஓடி வந்தாள்........

ஒண்ணும் இல்லமா கால் தடுக்கிட்டு, என கூற...

அம்மா ,கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு, தண்ணிய குடிச்சுட்டு, போம்மா, இல்லமா நேராகிட்டு என ஓடி விட்டாள்

கடவுளே, என் பொண்ண எந்த குறையும் இல்லாமல் பாத்துக்கோமா.....

மங்கை எப்போதும் கும்பிடும் பிள்ளை யாரிடம் சென்று, கும்பிட்டாள் சாரி பிள்ளை யாரப்பா, இந்த பூக்கள் உனக்குன்னு பொய் சொல்லிட்டேன், ஸாரி இது உனக்கு இல்லை, என்ன மன்னிச்சுடு என கேட்டுவிட்டு நேராக , டி கடையில் பன் வாங்கி விட்டு அந்த வயதான நாயை தேட.....அதை காணவில்லை...

நேராக டீக்கடைக்கு வந்து ,அண்ணா என்னனா நாய காணோம், என கேட்க
அது ,உனக்கு தெரியாதாமா, நேத்து மதியம் அது செத்து போச்சு, கார்ப்பரேசன் காரங்க வந்து தூக்கிட்டு போயிட்டாங்க என டீக்கடைக்காரர் கூறிவிட...

மங்கை கண்ணில் இருந்து நீர் துளிகள் வழிந்தோடியது.... அவள் அந்த நாய் எப்போதும் படுத்து இருக்கும் இடத்தில் அந்த பன்னை வைத்து விட்டு பஸ் ஸாடாப்பிற்க்கு சென்று விட்டாள் .......

அங்கு வீட்டில் அஜய் இன்று பார்த்து லேட்டாக எந்திரிக்க........

அவன் வேக வேகமாக மாக கிளம்பினான், கிளம்பியவன் , தன் அன்னை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்....

வேகமாக தன் பைக்கை எடுத்து கிளம்ப போனவனை, டேய் சாப்பிட்டு போடா....என ரேவதி கூற ....

அம்மா, பசிக்கல, மா நான் வர்றேன் என அவசரமாக கிளம்பினான்.....

வேகமாக தன் பைக்கில் வந்து இறங்கியவன்.. ச்சே டேய் அஜய் இன்னிக்கு பாத்து லேட்டாக்கிட்டியே.... இப்போ எல்லாரும் வந்து இருப்பாங்க, நீ எப்படி மங்கைட்ட பேசப் போற.... என தன்னை திட்டிக்கொண்டே வாட்ச்மேன் தன்னை நோக்கி வருவதை கூட கவனிக்காமல், நேராக மங்கை யை தேடி சென்று விட்டான் .....

வேகமாக, மங்கை இருப்பிடத்திற்க்கு சென்று பார்க்க அங்கே மங்கை யை காணோம்...

என்ன இவ ,இன்னும் வரலயா.... அடச்சை இதுக்கு எதுக்குடா இவ்வளவு அரக்க, பறக்க வந்த என தலையில் அடித்து கொண்டு, அவள் இருப்பிடத்தை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே தன் அறைக்கு சென்றான்......

தன் அறை கதவை திறக்க..... பின்னால் இருந்து யாரோ அவன் கண்ணை பொத்த...

ஹேய் யாரது என கேட்க, அவன் கண்ணில் இருந்த கை விலகியது......
அஜய், மெல்ல கண்ணை திறக்க அவன் அறை முழுவதும் வண்ண பலூங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது, அவன் கண்முண்ணே ஒரு அழகிய நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் கேக் இருந்தது, உஷா ஹேப்பி பர்த்டே டூ யூ, ஹேப்பி பர்த்டே டூ யூ அஜய் சார் என பாடிக்கொண்டே வந்தாள்.....

அஜய் கண்கள் சுற்றும், முற்றும் மங்கையை தேடியது.....

பிறந்த நாள் வாழ்த்துகள் அஜய்......... சார் என கூறிக்கொண்டே அஜய் பின்னாடி இருந்து ....
கையில் வெள்ளை ரோஜாவுடன் வந்தாள்..

ஏதோ அவளிடம் ஒரு மாற்றம், தேவதை போல் நடந்து வர

அஜய் மங்கையை வைத்த கண் எடுக்காமல் பார்க்க..... சார் என்ற குரலில் நிகழ்வு க்கு வந்தவன்..
ஆங்.... மங்கை.....

சார், பிறந்த நாள் வாழ்த்துகள் என அவனிடம் ரோஜா கொத்தை நீட்டினாள்...

தேங்கஸ், மயூ..........ஆங் மங்கை என தடுமாற.

என் பிறந்த நாளை இன்றும் நினைவு வைச்சு இருக்கியா...மயூரி என மனதில் நினைத்து கொண்டான்..

சார் நீங்க என்ன யோசிக்கீங்கன்னு எனக்கு தெரியும்.... எப்படி இவங்களுக்கு இந்த விஷயம் தெரியும் என்று தானே...

அஜய் , மங்கை யை பார்த்து கொண்டே ஆம் என்பது போல் தலையாட்ட.....அது சார் உங்கள்
வீட்டுக்கு வந்தப்ப, உங்க அம்மா, சொன்னாங்க, என் பையன், என்னன்னு தெரியல, மூன்று வருஷமா
பிறந்த நாளே அவன் கொண்டாட
மாட்டிக்கான், நானும் சொல்லி சொல்லி பார்த்துட்டேன்....என்று சொன்னாங்க,
அத நான் மங்கை ட்ட சொன்னேன், இது மங்கையோட ஏற்பாடு தான் சார்....உங்கள் கையில இருக்கிற பூவும் அவ தோட்டத்தில் பூத்தது சார், அது அவ யாருக்காகவும் பறிக்க மாட்டா, உங்களுக்காக பறிச்சிட்டு வந்து இருக்கா என ,அஜய் காதில் ரகசியமாக கூறினாள் உஷா.....

அஜய் சந்தோஷமாக, கேக் வெட்டி முதல்ல, மங்கைக்கு அப்புறம் உஷா விற்கு கொடுத்தான்......மங்கை கேக்கை அஜய்க்கு ஊட்டி விட ,அஜய் எதிர்பார்க்காத பேரின்பம் அவன் எதிர் பாராத ஆளிடம் இருந்து கிடைத்தது.....

சரி , உஷா நீ இதெல்லாம் கிளியர் பண்ணிடு....

சார், நான் டெக்னீஷியன்கள் வர்றதுக்குள்ள , எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துட்டு வந்திடுறேன் என மங்கை வெளியே சென்றாள்.

அஜய் தன் கையாலே வாட்ச்மேன் அங்கில்க்கு கேக் கொண்டு போனான்.....

அஜய் பிறந்த நாள் , மிகச் சிறப்பாக, கொண்டாட ப்பட்டது..
 
Status
Not open for further replies.
Top