All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கதை திரி

Status
Not open for further replies.

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

நான் உங்கள் நர்மதா சுப்ரமணியம்.

எப்போதும் கவிதை , சிறுகதைனு மட்டும் வந்துட்டு இருந்த நான் , ஒரு முழு நீள கதையுடன் வரவிருக்கிறேன். அதற்குரிய முன்னோட்டம் தான் இந்த பதிவு .

சுதந்திர தினமான இன்று டீஸர் உடன் ஆரம்பிக்கிறேன்.

கதையின் முதல் எபிசொட் விநாயகர் சதுர்த்தியில் ஆரம்பித்து தொடர்ந்து வாரத்திற்கு இரு எபிசொட்கள் என பதிவிடப்படும்.

கதையின் தலைப்பு : உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்

கதையின் கரு : நட்பும் காதலும்

கதையின் களம் : பெங்களூர் ஐ டி கம்பெனி


என்னுடைய இந்த கன்னி முயற்சிக்கு மக்கள் தங்களின் ஆதரவினை தந்து கருத்துக்களை பகிர்ந்துக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser 1:

அழகுக் கண்ணாடிக் கட்டிடமாய் பல வணிகக் கடைகள் நிரம்பிய குளுகுளு மாலான ஃபோரம் மாலுக்குள் நுழைந்தனர் அந்த மூன்றுப் பெண்கள்.

அங்கே இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தவனிடம் இப்பெண்கள் கை அசைத்து

"ஹாய் ஆஷிக்" என உரைத்து அவனருகில் சென்றனர்.

"ஹாய் கே.பி"

"ஹலோ மஹா"

"ஹாய் அம்மு"

என மூவரையும் வரவேற்றானவன்.

"வாங்க கேர்ள்ஸ். நானும் இந்த கேபி தனியா தான் வருது போலனு நம்பிட்டேன்" என ஆஷிக் உரைக்க

"அவ என்னிக்கி தனியா வெளிய போயிருக்கா?? சும்மா வாய் பேச்சு தான் அவளுக்கு...மேடம் சரியான பயந்தாங்கொள்ளி..." என அம்சவேணி கேபியை வார

"அவன் இப்ப உன்ன கேட்டானா??" என அடிக்குரலில் சீறினாள் கேபி.

"சரிடி வாணி, யூ கேரி ஆன்.. நாங்க எங்க ப்ரண்ட பார்க்க போறோம்"

என மஹா கேபி யிடம் உரைக்க ஆஷிகிடம் தலையசைத்து நகர்ந்தனர் மஹாலட்சுமியும் அம்சவேணியும்.

"எந்த ப்ரண்ட பார்க்க போறாங்க அவங்க" -ஆஷிக்

"மஹா மதியை பார்க்க போறா... அம்மு இளாவ பார்க்க போறா"

"ஹோ அவங்க ஆளுங்களை பார்க்க போறாங்கனு சொல்லு"

"டேய் ப்ரண்ட்ஷிப்பை கொச்சைபடுத்தாத...அவங்க ப்ரண்ட்ஸ் தான்" - வாணி

"இப்படி தான் அவங்க உன்னை ஏமாத்திட்டு இருக்காங்க..நீயும் நம்பிட்டு இருக்க" - ஆஷிக்

"ம்ப்ச்... அதை விடு...நீ என்னமோ முக்கியமான விஷயம்...நேர்ல தான் சொல்வேனு சொன்ன..என்னதது" _ வாணி

"ஹம்ம்ம் கல்யாணத்தை பத்தி பேச தான் வர சொன்னேன்"

"வாவ் உன் கல்யாணமா ஆஷிக்... சொல்லவே இல்லை... கங்கிராட்ஸ் டா"

"ம்ப்ச் கடுப்பேத்தாத வாணி"

கடுப்பாய் அவளை பார்த்து உரைத்தான் ஆஷிக்.

அவனின் கோபத்திலும் கடுப்பிலும் தான் வாணி என்றழைப்பானென தெரியுமாதலால்,அவன் மேற்கொண்டு பேச அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் வாணி

ஃபோரம் மாலின் பின் வாசலிலுள்ள காபி ஷாப்பில் அமர்ந்திருந்தனர் மதியும் மஹாவும்...

"ஐ லவ் யு மஹா" கடும் மன போராட்டத்திற்கு பிறகு இன்று கூறிவிட்டான் மதி தன் காதலை.

"பர்த்டே அன்னிக்கே சொல்லனும் நினைச்சேன்... ஆனா அவ்ளோ ஹேப்பியா இருந்த உன் மூடை ஸ்பாயில் செய்ய மனசில்லாம தான் சொல்லலை மஹா"

"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மஹா. ஆயுசுக்கும் உன்னை நல்லா வச்சு பாத்துப்பேன் குட்டிம்மா. டேக் யுவர் ஓன் டைம்... நான் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன்"

அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.

அதே மாலில் மேல் தளத்திலுள்ள புட் கோட்டில் அமர்ந்திருந்தனர் இளாவும் வேணியும்.

"நேத்து ஏன்டா அப்படி மெசேஜ் பண்ண??.. மூளை கீள கொழம்பி போச்சா உனக்கு.... என்னடா வாழ்க்கை இதுனு இருக்குனு சொல்ற... என் நிலைமை யாருக்குமே வரக்கூடாதுனு வேற சொல்ற... நம்மல நினைச்சு நாமலே பரிதாபப்படுறது நம்ம படைத்த கடவுளுக்கு செய்ற துரோகம்..." வேணி அவனை வறுத்தெடுக்க,இளா அவளை வெறித்து நோக்க,

"என்ன பாக்குற?? இது நீ அடிக்கடி சொல்லுற டயலாக் தான்...எவ்ளோ ப்ரச்சனை வந்தாலும் உன்னை நினைச்சி நீயே கறஞ்சி போக மாட்ட.. இப்ப என்ன வந்துச்சு உனக்கு".

இவ்வாறாக இளாவிடம் வேணி கோபத்தில் சீறிக்கொண்டிருந்தாள்.

"என்னை நினைச்சு இல்ல... உன்னை நினைச்சு தான் கறஞ்சு போறேன் அம்ஸ்" இளா உரைக்க

அவன் கூற வருவதன் அர்த்தம் விளங்காது அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி.



யார் இந்த பாசப் பறவைகள்...

இவர்களின் பிரச்சனை என்ன???

அவர்களின் தோழமைகள் எவ்வாறு அதை தீர்த்து வைத்தார்கள்???..

மதியின் காதலுக்கு மஹாவின் பதிலென்ன??

வாங்க பயணிக்கலாம் கதைக்குள் இக்கேள்விகளின் விடையறிய...
 
Last edited:
Status
Not open for further replies.
Top