All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கலாதரன் தன் மனைவியை யாரும் உபத்திரவம் செய்யாத வகையில் தனிமை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டே வெளியே சென்றிருந்தான். சம்யுக்தாவுக்கான உணவை மலர் அவளின் அறைக்கே எடுத்து கொடுத்து உபசரிக்க, அதை பற்றிக் கூட கண்டு கொள்ளாமல் இயந்திரம் போல் செய்துக் கொண்டிருந்தாள்.

தரனின் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து சம்யுக்தாவிடம் யாரும் எதுவும் வினவாத போதும், அவளை கவனித்து கொண்டிருந்த மலருக்கு தரனின் நேற்றைய பேச்சின் எதிரொலி இன்றளவும் மனதை உறுத்திக் கொண்டே இருந்ததில் எங்கே தன் தமையன் பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சத்தை விளைவிக்க அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டி சம்யுக்தாவிடம் கேட்க முனைந்தாள்.

“அண்ணி” என்றவளின் விளிப்பில் திரும்பாது அலைபேசியிலேயே ஆழ்ந்திருந்தவளின் கவனத்தை திசை திருப்ப சற்று அழுத்தம் கூட்டி... “அண்ணி!” என்றழைத்தவளின் குரலுக்கு பலனிருக்கவே அவள் புறம் திரும்பியவள் சைகையால் என்னவென்று விசாரித்தாள்.

“நீங்களும் அண்ணனும் தனிக் குடித்தனம் போகப் போறீங்களா?” என்றவளை புருவம் சுருங்க யோசனையாக பார்த்தவள்...

“என்ன தனிக் குடித்தனமா? அப்படின்னு யாரு சொன்னா?” என்று எதிர்வினா எழுப்பியதும்...

“அண்ணன் தான் சொன்னாரு” என்றவளை நம்பாது பார்வை பார்த்தவள்...

“ம்ஹும்... முதலில் நடந்ததை முழுசா சொல்லு” என்று விசாரித்ததும்... விசாலமாக கொட்டுகின்ற அருவியை போல் மடமடவென்று நடந்த அனைத்தையும் அட்சரம் பிசகாமல் கூறி முடித்தவள்...

“அண்ணன் ரொம்ப கோபமா பேசினாரு... அவர் கோபப்பட்டு பார்த்திருக்கிறோம் ஆனால், இந்தளவுக்கு கோபப்பட்டு பார்த்ததில்லை... ஏற்கனவே வாணியக்கா, அரசிக்கா ரெண்டு பெரும் இல்லாமல் எனக்கு கஷ்டமா இருக்கு, இதில் நீங்களும் இல்லைன்னா நான் என்ன செய்வேன்? எனக்கு பிளஸ் டூ பரீட்சை முடிஞ்சா, அடுத்து என்னை படிக்க வைக்க அண்ணன் இருக்கணுமே, எனக்கு நல்லது கேட்டது பார்க்க அவரை விட்டா யாரிருக்கா?” தன் மனதை மறையாது வெள்ளந்தியாக பேசியவளை கண்டு அவள் மேல் நேச இரக்கம் சுரந்தது.

“உங்க அண்ணன் ஏதாவது கோபத்தில் பேசியிருப்பாரு... அப்படியெல்லாம் உங்க அண்ணன் உங்களை விட்டுட்டு போக நினைக்கமாட்டாரு, நானும் அதுக்கு சம்மதிக்கமாட்டேன், நீ கவலைப்படாதே நாங்க தனிக் குடித்தனம் எல்லாம் போகமாட்டோம்” என்று பரிகாசத்துடன் சிகையை வருடிக் கொடுத்து விட்டு மெலிதாக முறுவலித்தாள்.

“நிஜமா தானே சொல்றீங்க? நேத்து அண்ணன் கோபமா இருந்தாரு, இன்னைக்கு நீங்க ஒரு மாதிரி இருக்கீங்க... எனக்காக என்னை சமாதானப்படுத்த நீங்க பொய் சொல்லலையே?”

“இதில் பொய் சொல்ல என்னம்மா இருக்கு...? நான் தனியா போக நினைச்சிருந்தா இந்த வீட்டுக்குள் கால் பதிச்சிருக்கவே மாட்டேன்... அரசிக்கும், வாணிக்கும் எப்படி நல்ல முறையில் எல்லாமே செய்தோமோ, அப்படி தான் உனக்கும் செய்வோம் அதுவரைக்கும் தனிக்குடித்தனம் எல்லாம் சாத்தியம் இல்லை சரியா, பயப்படாதே!”

“நிஜமாவா?”

“நிஜமா தான்!” என்று முகிழ்நகையுடன் அழுத்தமாக கூறியவளின் பேச்சில் மனச்சலனங்கள் அனைத்தும் நீங்கியவளாக முகம் மலர்ந்தாள்.

மலரின் பேச்சில் தான் நேற்று அவள் வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் சென்றதற்கு கணவனை விசாரிக்க நேர்ந்ததில், அதற்கு அவள் கணவன் அவளுக்காக பேசியிருக்கிறான் என்பதே தெரிய வந்தது.

மேலும் இரண்டொரு நாட்கள் சம்யுக்தாவுக்கு மனதின் பாரம் நீங்காமல் இருக்கவே அன்று கணவனை அணுகியவள்... “எனக்கு மனசு சரியில்லை நான் ஒரு வாரத்திற்கு எங்கயாவது போகணும்... இன்னைக்கே கிளம்பலாம்ன்னு இருக்கேன்” என்றதும் அவளிடம் எந்தவொரு விளக்கமும் இயம்பாது...

“சரி கிளம்பு, நானே உன்னை விட்டுட்டு வரேன்” என்றதும்...

“நான் போய் தொலைஞ்சா சரி தான்னு நிம்மதியா இருப்பீங்க போல?” குதர்க்கமாக வினவியவளை அமர்த்தலாக பார்த்தவன்...

“ஆமாம்! ஆமாம்! ரொம்ப நிம்மதியா இருப்பேன்... என்ன இப்போல்லாம் ராத்திரி தூங்க ஒரு மாத்திரையோ இல்லை, ரெண்டு மாத்திரையோ போடுறேனே, அதை கொஞ்சம் அதிகபடுத்தி கிராம் கணக்கில் போட்டுட்டு படுத்தா நானும் நிம்மதியா இருப்பேன், நீயும் நிம்மதியா இருப்ப, என்ன செய்யட்டுமா? சொல்லு...” என்றவனின் பேச்சு அவள் உயிரை ஆட்டுவித்தது... அவன் வார்த்தைக்கான முன்னோட்டமே பயங்கரமாய் இருக்க, கண்கள் வெகுவாய் பனித்திருந்தது.

“என்ன வாயடைச்சு போயிட்ட? கிளம்பு போ சீக்கிரமே நான் செத்.......” அவன் பேச ஆரம்பித்ததுமே கட்டிலில் இருந்து துள்ளி குதித்து இறங்கியவள், அவனை நெருங்கி தன் உள்ளங்கையால் அவன் அதரங்களை மூடியிருந்தாள்.

“வாயை மூடுங்க! சும்மா அபசகுணமா பேசாதீங்க... கோபத்தில் ஒரு வார்த்தை சொன்னா சீரியஸா பேசுறதா? உங்களை நம்பி உங்க மகள் இருக்கிறா மறந்திட வேண்டாம்”

“என் பொண்ணு மட்டும் தான் என்னை நம்பி இருக்கிறாளா? அப்போ நீ வேறொரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில் இருக்கறியா?” அவளை தொடர்ந்து வேகமாக வினவியவனின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஆத்திரத்தில் தடுமாறியவள் அருகில் ஏதேனும் அடிக்க தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்வையால் அலசியதை உணர்ந்து...

“சும்மா என்கிட்ட விதண்டாவாதம் பேசாம புறப்படு, உன்னை அர்ஜுன் வீட்டில் விட்டுட்டு வரேன், இங்கே உனக்கிருக்கிற ஒரே உறவு அவங்க தானே, அங்கே தான நீ பிரீயா இருப்ப, அது கூட தெரியாம உன் கூட குடும்பம் நடத்தலை”

‘எல்லாமே தெரிஞ்ச அமுக்க கள்ளன் தான்டா நீ, உன்னை மாதிரி என்னால் எதுவுமே தெரியாத மாதிரி நடிக்க முடியாம தானே, கொஞ்சம் நாள் தள்ளி இருக்கலாம்னு இருக்கேன்’ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி மானசீகமாக பேசிக் கொண்டிருந்தாள்.

“என்ன என்னை பார்த்து ரசிக்க முடியாதேன்னு யோசிக்கிறியா? கவலைப்படாதே, தினம் ஈவ்னிங் வந்து உன்னை பார்த்துட்டு போறேன்” என்று இமைசிமிட்டியவனின் செயலில் சித்தம் அமைதியடைவதை உணர்ந்தாள்.

“ரெடியாகு! நான் வீட்டில் சொல்லிட்டு வரேன்” என்று விட்டு நகர்ந்தவனிடம்...

“அன்னைக்கு என்னை பத்தி உங்க வீட்டில் என்ன பேசினாங்க?”

“தப்பா எதுவும் பேசலை... வீட்டுக்கு வாழ வந்த மருமகள் காணோமேன்னு வீட்டுக்கு பெரியவங்களா அக்கறையா கேட்டாங்க... ஏன் இப்போ அதுக்கென்ன?”

“என்கிட்டே சொல்லியிருந்தா நான் அவங்களுக்கு பதில் சொல்லியிருப்பேனே?”

“என்னன்னு என்னை பற்றி கேட்க நீங்க யாருன்னா?” என்று கேட்டவனை கண்டு அரண்டாள்... ஏனெனில் அவள் கேட்க எண்ணியதும் அது தானே, எப்படி இப்படி நுணுக்கமாக தன்னை ஆராய்ந்து வைத்திருக்கிறான் என்று கிலேசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

“தெரியும் டி உன்னை பற்றி, அதனால இது மாதிரி எல்லாம் பிளான் பண்ணாத சரியா... இவங்களை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு, உனக்கு என்ன தேவையோ அதை என்கிட்டே மட்டும் சொல்லு, என்கிட்டே மட்டும் தான் சொல்லணும்” என்றவன் மேலும் அங்கே நில்லாமல் அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.

தரன் என்ன பேசினானோ அவள் அறியாள்?! ஆனால் சென்றவன் அடுத்த பத்தாவது நிமிடம் அறைக்குள் புகுந்து தயாரான நிலையில் இருந்த மனைவியையும், குழந்தையையும் அழைத்துக் கொண்டு வெளியேற எத்தனிக்க... அறைக் கதவை திறக்க கை வைத்த மனைவியை தடுத்து திருப்பி, அவள் தாடையை பற்றி முகம் பார்க்க வைத்தவன்...

“உன்னை அங்கே அனுப்பி வைக்கிறது உனக்காக தான்... முழுக்க முழுக்க உன் நிம்மதிக்காக மட்டும் தான்... அதனால் சீக்கிரம் திரும்பி வரப்பாரு... என்னால் ரொம்ப நாளைக்கு உன்னையும், குழந்தையையும் பிரிஞ்சிருக்க முடியாது... அப்படி பிரியணும்னு நினைச்சாலும் நான் அதற்கு விடமாட்டேன்” என்றவன் அவள் அதரங்களை சிறைபிடித்துக் கொண்டு சில கணங்கள் கடந்தே விடுவித்து விட்டு அவளை அழைத்துச் சென்றான்.

கணவனின் வார்த்தையில் இத்தனை காதலை வைத்திருப்பவன் தன்னை ஏன் அப்படி ஒரு கேள்வி கேட்டு விவாகரத்து வரை இழுத்துச் சென்றான் என்ற சந்தேககீற்றை விரட்டியடிக்க அப்போதே அவனிடம் விளக்கம் கேட்டிருந்தால் கூட அனைத்து மனஸ்தாபங்களும் முகவரி இல்லாமல் ஓடி சென்றயிருக்கும், ஆனால் இருவருக்குமே வாழ்க்கை நடத்தும் காதல் என்னும் பரீட்சையில் காலம் கடந்த ஞானோதயம் தான் பிறக்கும் என்றால் விதியை நொந்துக் கொள்வதா இல்லை அவர்களை நொந்து கொள்வதா?!

**********************

“அரசி நீ மலர் கூட இருக்கணும் போல இருக்குன்னு சொன்ன தானே போய் ஒரு வாரம் தங்கிட்டு வாயேன்” என்று கூறிய அர்ஜுனை வியப்பாக பார்த்தவள்...

“என்ன நிஜமாவா சொல்றீங்க? கெஞ்சினா கூட அனுப்பமாட்டீங்க, இப்போ நீங்களாவே போன்னு சொல்ரறீங்க?” புருவம் உயர்த்தி ஒய்யாரமாக வினவினாள்.

“நம்ம கம்பெனிக்கு வந்திருக்கிற புது ஆர்டர் சம்மதமா அடிக்கடி வெளியே போற வேலை இருக்கு, நீ தனியா அங்கிருந்து பார்க்கணும்... அதான் நீ போயிட்டு உன் தங்கச்சி கூட பாசத்தை பரிமாறிக்கிட்டு வா நாம சேர்ந்து வேலை பார்த்துக்கலாம்” என்று இமைசிமிட்டி கூறியவன், அவள் நெற்றியில் முத்தமிட அதில் கரைந்து கட்டுண்டவள் தன் பிறந்து வீட்டுக்கு புறப்பட ஆயத்தமானாள்.

இவர்களின் இந்த பிரிவு பெருத்த விரிசலை ஏற்படுத்த போவது அறியாமல் போனதேனோ?!


சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-25 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-26

வாணி, ரஞ்சனிடம் பாராமுகத்துடன் நடந்துக் கொண்டாலும், மற்றவர்கள் முன்பு சராசரி கணவன் மனைவியை போன்று அன்யோனியத்துடன் இருப்பது போல் வெகு இயல்பாக நடந்துக் கொண்டாள். இதை உணர்ந்துக் கொண்ட ரஞ்சனுக்கு மனைவியுடன் நேரத்தை செலவளிக்கும் யுக்தி தென்பட்டு விடவே அதை செயல்படுத்தும் நோக்கத்துடன், அவளை அழைத்துக் கொண்டு வக்கீல் அன்பழகன் வீட்டிற்கு சென்றிருந்தான்.

ரஞ்சன் தன் மனைவியுடன் அங்கே பிரசன்னமானதும், அவன் வாழ்க்கை சீரடைய ரமாவிற்கு பெரும் பங்கிருப்பதாக கூறி, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவனை வியந்து நோக்கியவர் பூரிப்புடன் ஆசிர்வதித்தார்.

“நான் எப்படி சொல்லுவேன்னு தெரியலைங்க, நான் சொன்னப்போ இந்த பையன் நம்ம வார்த்தையை நல்ல விதமாக எடுத்துக்கிட்டு செய்வானோ மாட்டானோன்னு தான் நினைச்சேன்... ஆனால், நான் சொன்ன வார்த்தையை ஏத்துக்கிட்டு அதை செயல்படுத்தவும் செய்திருக்கிறான் என்கிற போது எனக்கு கால் தரையில் படவே இல்லைங்க” என்று கணவரிடம் தன் மனம் கொள்ளா மகிழ்ச்சியை கபடமின்றி பகிர்ந்து கொண்டிருந்தார்.

“எல்லா குழந்தையும் பிறக்கும் போது ஒண்ணு தான் ரமா அவங்க சூழ்நிலைக்கேற்ப வளரும் போது தான் எல்லா குணாதிசயமும் மாறுது... நல்லவன் கெட்டவனாகுறதும், கெட்டவன் நல்லவனாகுறதும், கூட சகஜமான ஒரு விஷயம் தான்”

“என்னவோங்க நம்மளால் ஒருத்தங்க வாழ்க்கை நல்லா இருக்கணுமே தவிர, கெட்டுப் போனதா இருக்கக்கூடாது அந்த வகையில் ரஞ்சன் பையன் திருந்தி வாழுறதில் எனக்கொரு ஆத்ம திருப்தி கிடைச்சிருக்கு” என்று கூறியவர் இருவரையும் தன்னால் முடிந்த வரை சிறப்பாக கவனித்து உபசரித்திருந்தார்.

“இங்கே பாருமா வாணி இது உனக்கு ஒரு அம்மா வீடு மாதிரி தான், நீ எப்போ வேணா என்ன உதவி வேணா என்கிட்டே கேட்கலாம் எதுக்கும் தயங்கக்கூடாது” என்று நயந்த குரலில் கூறியவரை அன்பு கலந்த நன்றியுடன் நோக்கியவள்...

“ரொம்ப தேங்க்ஸ் ம்மா நான் இங்கே வேண்டா வெறுப்பா தான் வந்தேன்... அதிலும் முக்கியமா என் பெண்ணுக்காக தான் வந்திருக்கேன்... அந்த இடத்தில் நீங்க எனக்கு இவ்ளோ ஆதரவளிக்கிறது நிஜமாவே நிம்மதியாவும், சந்தோசமாவும் இருக்கு”

“நிச்சயமா உங்க அம்மா அளவுக்கு இல்லாட்டியும் என்னால் முடிஞ்ச ஆதரவை உனக்கு தருவேன்... நான் உன்கிட்டே ஒண்ணு சொல்லலாமா? என்னடா உரிமையை கொடுத்ததும் அதிகமா பேசுறாங்கன்னு நினைக்கமாட்டியே”

“அச்சோ... உங்களை நான் அம்மான்னு வாய் வார்த்தைக்காக கூப்பிடலை, என் மனதார தான் கூப்பிடுறேன்... நீங்க என்கிட்ட இப்படி தயக்கமா கேட்கிறதே தப்பு... என்னை சின்ன பொண்ணா விவரம் இல்லாதவளா நினைக்காம, உங்க அபிப்ராயத்தை வற்புறுத்தி வழுக்கட்டாயமா திணிக்காம, எனக்காக பார்க்குறீங்க பாருங்க இது ஒண்ணே போதும்” என்றதும் சஞ்சலம் நீங்கியவராக மனம் திறந்து பேசலானார்.

“எனக்கு தெரிஞ்சு ரஞ்சனும் நீயும் பேசிக்கிறது எங்களுக்காக, மற்றபடி உங்களுக்குள்ள எந்த உறவும் இல்லை சரியா?” அவளை சரியாக கணித்து கூறியவரை திகைத்துப் பார்த்தாள்.

“அதிர்ச்சி அடைய வேண்டாம் வாணி! நான் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்ந்தவ புருஷன் பொண்டாட்டி அன்யோனியம்ங்கிறது சிரிச்சு பேசிகிட்டா மட்டும் அவங்க சந்தோசமா இருக்கிறதா நினைக்க கூடிய ரகமில்லை... எனக்கு ரஞ்சன் இங்க உன்னை கூட்டிட்டு வந்ததுக்கு காரணமே உன்னுடைய இந்த இயல்பான பேச்சுக்காக தான் இருக்கும்”

“எப்படி... எப்படி சொல்றீங்கம்மா?” என்று தடுமாறியவளின் குரலை கண்டு மென்மையாக முறுவலித்தவர்...

“ரஞ்சன் நாங்க இருக்கும் போது தான் உன்கிட்டே பேச்சை நீடிக்க பார்க்கிறான்... அவன் உன்கிட்டே பேசும் போது அவன் கண்ணில் தெரியுற அலைப்புறுதல் தெரிஞ்சே தொலைச்சிட்ட சொர்க்கத்தை நினைச்சு ஒரு ஏக்கம் புலப்படுது”

“இருக்கலாம் அம்மா! நான் அதை மறுக்கமாட்டேன்... நீங்களும் என் இனம் தானே என் இடத்தில் இருந்து நீங்க யோசிச்சு பாருங்க... எனக்கும் தன்மானம் இருக்காதா? அவரால் நான் எத்தனை பேர்கிட்ட அவப்பேரை வாங்கினேன், ஏதோ என் அண்ணன் இருக்கப் போய் நான் தப்பிச்சேன்... இல்லனா, நான் செத்த இடத்தில் இந்நேரம் புல் முளைச்சிருக்கும்” கண்களில் வேதனையும், வலியும் மின்ன கூறியவளின் மனம் புரிந்தாலும், அப்படியே விட்டு விட தாய்மை இடம் கொடுக்கவில்லை.

“எனக்கு புரிஞ்சாதால தான் பேசுறேன் வாணிம்மா... நான் ஒன்னும் உன்னை உடனே அவனோட உறவாட சொல்லலை, அதுக்கான முயற்சியை எடுன்னு தான் சொல்றேன்... அதுவும் அவன் நடந்துக்கிற விதத்தை கொண்டு நீ அவனை மாற்றி அமைக்கணும் தான் சொல்றேன்”

“மனுஷனுக்கு மனுஷன் ஏதாவது ஒரு தவறை செய்துகிட்டு தான் இருக்கிறோம்மா... இந்த உலகத்தில் மனித பிறவியா பிறப்பிடுத்த ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தப்பை பண்ணிடுறான்... அந்த தப்பையும் நான் தெரிஞ்சு தான் செஞ்சேன் அதுக்கென்ன நான் இப்படித்தான்னு சொல்கிறவன் ஒரு ரகம்... இல்லை; இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையோ, ஆபத்தோ, அவமானமோ எதையும் எதிர்பார்க்கலைன்னு சொல்றவன் இன்னொரு ரகம்”

“இன்னொருத்தன் நான் தப்புன்னு தெரிஞ்சே தப்பை செஞ்சுட்டேன் ஆனால், அது எவ்ளோ தவறான விஷயம்ன்னு காலம் கடந்து புரிஞ்சுக்கிட்டேன், இனி எப்படி அதை மீட்டெடுக்கிறதுன்னு தெரியலை எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க திருந்தி வாழுறேன்னு சொல்லுறவன் ஒரு ரகம்”

“இதில் முதலும் ரெண்டாவதும் கையாளுறது செவுத்துல முட்டிக்கிறதுக்கு சமம் தான்… ஏன்னா, முதல்ல சொன்ன ரகத்துக்கு காரணம் சிறுத்தை தன் புள்ளியை மாற்றிக்காத மாதிரி எப்போவுமே அவங்க குணம் மாறாது”

“ரெண்டாவது, அவன் தெரியாம செய்துட்டு எப்பவுமே அதையே பிழைப்பா வச்சுக்கிறதும்... இல்லைன்னா, செய்த தவறை அடுத்ததில் செய்யக்கூடாது தப்பிக்கணும்னு எந்த சிக்கலான விஷயத்தையும் கையிலெடுக்கமாட்டான்... இவனை கூட கொஞ்சம் சிரமமா இருந்தாலும் ஒரு விதத்தில் கையாளலாம்”

“மூன்றாவது ரகம் தான் உன் புருஷன் ரஞ்சன்... அவன் செய்ததை தப்புன்னு உணர்ந்துட்டான்... சிற்றின்ப உல்லாசத்தை தேடி அனுபவிச்சு ஓய்ஞ்சு பேரின்பத்தை அனுபவிக்க கொடுத்து வைக்கலையேன்னு ஏங்குறான்... அவன் திருந்தி வாழ சந்தர்ப்பத்தை கேட்கிறான் அதை ஏன் ஏற்படுத்தி தரக்கூடாது?”

“இல்லை ம்மா நீங்க சொல்றதெல்லாம் சரி தான், எனக்கும் நல்லா புரியுது... ஆனால், சிறுத்தை தன் புள்ளியை மாற்றிக்காதுன்னு சொல்றீங்க... இவரும் முன்னுக்கு முரணா செய்த தப்பை திரும்ப செய்ய மாட்டாருன்னு என்ன உத்திரவாதம்” என்றவளுக்கு அவனை முகம் தெரியாத நபர்கள் தாக்கியதும், அவர் கவனித்துக் கொண்டு அறிவுரை கூறியதும், அதற்கு காரணம் அவள் அண்ணன் என்று அவன் நினைத்துக் கொண்டிருப்பதையும் விளக்கமாக கூறியிருந்தார்.

“என்ன என் அண்ணன் ஆள் வச்சு அடிச்சாரா? வாய்ப்பேயில்லை! அப்படி அவர் ரஞ்சனை அடிச்சு தான் திருத்தணும்னா அதை அவர் முன்னாடியே செய்திருக்கலாமே, ஏன் இப்போ செய்யணும்? நான் நிச்சயமா, உறுதியா சொல்றேன் இது அண்ணன் பண்ணின காரியமா மட்டும் இருக்காது”

“இருக்கட்டும் யாரா இருந்தா இப்போ என்ன? ஆனால்... உன் புருஷனுக்கு அந்த நிமிஷம் நம்மளை கொன்னுருவாங்களோ! இல்லை; வேறேதும் விபரீதம் ஆயிருமோன்னு? ஒரு பயம் காட்டினதில் தானே அவன் தப்பை உணர ஆரம்பிச்சான்”

“இது அவர் கோழைன்னு காட்டுதே ஆண்டி...”

“பயப்படுறவன் எல்லாருமே கோழை இல்லைம்மா... எந்த சமயத்தில் எதுக்காக பயப்படுறான்னு ஒன்னு இருக்குதே... எல்லாருக்குமே ஒரு கட்டத்தில் பயம் வரணும், வந்தா தான் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி ஓடுவான்... ரஞ்சன் கோழையா இருந்திருந்தா உன்னை தொட்டிருப்பானா? பிள்ளை வந்ததும் அதை கலைச்சிருன்னு உன்னை அலட்சியப்படுத்தி இருப்பானா?”

“அவனுக்கு எப்படியும் நாம ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி வாழ்ந்திரலாம்ன்னு கணக்கு போட்டவனுக்கு இனி அது நடக்க வாய்ப்பில்லைன்னு உன் கழுத்தில் தாலி கட்டினதுமே எங்கே வாழ்க்கையை தொலைச்சிருவோமோன்னு பயம் ஆரம்பம் ஆகியிருக்கும்... அதுக்கப்புறம் அவனை முகம் தெரியாத ஆட்கள் நாலு போட்டதும், இளமையில் வாழாமலே வீண் போயிருவோமோன்னு பயத்தோட உச்சக்கட்டத்தை தொட்டிருப்பான்”

“இந்த பயம் வாழ்கையை வாழ்க்கையா வாழணும்னு இருக்கவங்களுக்கு வருகிறது இது ஒரு வகையில் நன்மை தான், இனி அடங்கி குடும்பம் நடத்துவான் பாரு... சப்போஸ், இதுலயும் அவன் தவறு செய்துட்டானா ஜெயிலுக்கு போகணும் இல்ல ஒரேடியா போகணுமே... அதுக்கு உன் கூட சந்தோசமா வாழ்ந்துட்டு போயிரலாமே”

“இதை எப்படி ஆண்டி ஒரு பொண்ணா நான் ஏற்றுக்க முடியும்? என் காதல் உண்மை ஆச்சே!”

“வாஸ்தவம் தான், ஆனால் இந்த உலகத்தில் யாருக்கும் நினைச்ச வாழ்க்கை அமையறதில்லை... இன்னார்க்கு இன்னார்ன்னு கடவுள் போட்ட முடிச்சும் படைக்கும் போதே அந்த பிரம்மன் எழுதின விதியும் தான் காரணம்... உனக்கு அந்த ரஞ்சனால அவமானம் ஏற்படணும்னும், உன்னை தட்டி கழிக்க பார்த்து தோற்று போய் கடைசி வரை உன்னோட தான் அவனுக்கு வாழ்க்கைன்னும் அந்த ரஞ்சனுக்கும் விதி அமைஞ்சிருக்கு... இதில் நீ யாரை நொந்து கொள்ள முடியும்?”

“ஒண்ணே ஒண்ணு தான் சொல்வேன், அவன் திருந்திட்டான் அவனுக்கு வாய்ப்பை கொடு அதுக்கான கால அவகாசத்தை நீயே நிர்ணயம் பண்ணிக்கோ... உன் பொண்ணு வளர வளர ரஞ்சனுக்கும் பொறுப்பு கூடும்... தான் ஆடாவிலும் தன் தசையாடும்ன்னு சொல்வாங்க, ரஞ்சனுக்கு பொண்ணு வளர்ந்தா இன்னும் தெளிவா நடந்துக்குவான்”

“இப்போல்லாம் பொண்ணு மேல பாசம் இருக்கிறது வேணா நல்லா தெரியுது” என்றவள் அவன் அன்று மகளுக்காக அவளிடம் சண்டையிட்டதையும் அவளுக்காக பார்த்துப் பார்த்து செய்கிறதையும் கூறியிருந்தாள்.

“பொண்ணு அவர் ரத்தம்ன்னு அவளை ஒரு வார்த்தை சொன்னதும் அப்படி கோபம் வருது ஆண்டி” என்று கூறி பிரலாபிக்க...

“இது ஒண்ணு போதாதா வாணிமா, உனக்கான வாழ்க்கைக்கு ஆதாரம் உன் பொண்ணு. அவளுக்காக நீ அவ அப்பா கூட இருக்கிற மாதிரியே இரு, காலப் போக்கில் எல்லாம் மாறும்னு நம்பு மாற்றம் ஒன்றே மாறாதது”

“இதுவரைக்கும் எப்படியோ, ஆனால் என்னை பெண்ணா நினைச்சு நான் நல்லா இருக்கணும்னு சொல்ற உங்க வார்த்தைக்காக முயற்சிக்கிறேன் அம்மா” என்றவளை பரிகாசமாக அணைத்து உச்சி முகர்ந்தார்.

ரஞ்சன் கிளம்பி செல்லுகையில்... “இங்கே பாரு மனோ... இந்த உலகத்தில் நிறைய பேருக்கும் ஒண்ணு இருந்தா ஒண்ணு இல்லாம இருக்கும், இல்லை; எல்லாம் இருந்து ஏதாவது ஒரு குறை இருக்கும், உனக்கு வாணி போல லட்சணமான பொண்டாட்டி, பிள்ளை அமைஞ்சிருக்கு, என்ன தான் நீ தப்பு செஞ்சாலும் சரி தான் போடான்னு தூக்கி போடாம பிள்ளைக்காக வாழ்வோம்னு அனுசரிச்சு போற பொண்ணு கிடைச்சிருக்கா, வாணி மாதிரி பொண்ணுங்க எல்லாம் இந்த காலத்தில் அபூர்வம் இனியாச்சு புத்திசாலித்தனமா பிழைச்சுக்கோ”

“கண்டிப்பா ஆண்டி! முடிஞ்சா அடிக்கடி அவளை இங்கே கூட்டிட்டு வர முயற்சி பண்றேன், இங்கே இருக்கிறப்போ அவ உயிர்ப்போட இருக்கிறா” என்றவனின் குரல் கம்மியிருக்க, தனிமையில் தன்னிடம் அப்படி இருப்பதில்லை என்ற வேதனையும், வலியும் அவன் உயிரை பிடுங்கி தின்றது.

“அவ எவ்ளோ கஷ்டப்படாளோ எல்லாத்தையும் காலம் மாத்தும் மனோ மனசை தளரவிடாதே” என்று கூறி இன்முகத்துடன் அனுப்பி வைத்திருந்தார்.
**********************

சம்யுக்தா, தன் புகுந்த வீட்டில் தங்கியதை அரசி இயல்பாக தான் எடுத்துக் கொண்டாள்... அவர் அன்னை வீட்டுடன் ஏற்பட்டுவிட்ட கசந்த சம்பவங்கள் காரணமாக அவளுக்கான ஆறுதலை அங்கே தேடுகிறதாக எண்ணிக் கொண்டிருந்தாள்... அவளின் அந்த எண்ணங்கள் அனைத்தும் அர்ஜுனையும், அவளையும் தனிமையில் அவர்களை தோப்பில் பார்க்கும் வரை மட்டுமே நிலைபெற்றிருந்தது.

அரசிக்கு தரனின் வீட்டிலிருந்தாலும் எந்நேரமும் கணவனின் ஞாபகமாக இருக்கவே, அவ்வபோது அவனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும் அவனிடம் எதோ ஓர் நெருக்கம் குறைவது போலவே அவளுக்கு புலப்பட்டது... அதை எதிர்கொள்ள முடியாமல் அல்லாடியவள் அவனை தேடி அன்று அழுவலகம் வந்துவிட்டாள்.

அழுவலகத்தில் அர்ஜுனை காணாமல் தேடியவள் அவனின் அலைபேசிக்கு முயற்சிக்க, அவளின் நீண்ட அழைப்பு மணி ஒலித்துவிட்டு நின்றிருந்ததே தவிர அவனிடமிருந்து பதில் அழைப்போ, தகவலோ வரவில்லை என்றானவுடன் அவன் காரியதரிசியிடம் விசாரித்துப் பார்த்தாள்.

“திலீப், அர்ஜுன் சார் எங்கே?” என்று விசாரித்தவளிடம்...

“தெரியலையே மேடம்! சார் அஞ்சு நாளா ஆபிஸ் வரவேயில்லை... அப்பப்போ வொர்க் மட்டும் அசைன் பண்ண கால் பண்ணுறதோட சரி” என்றவன் தன் வேலை முடிந்தது என்பது போல் பணியில் ஆழ்ந்துவிட்டான்.

“அஞ்சு நாளா ஆபிஸ் வரவே இல்லையா, என்ன விஷயமா இருக்கும்?” என்று தனக்குள் பேசிக் கொண்டவள் ஒரு வேளை தோப்பில் ஏதேனும் பிரச்சனையோ... அப்படி இருந்தாலும் நம்மிடம் சொல்லியிருப்பானே என்று சிந்தித்துக் கொண்டிருந்தவள்... எதற்கு நமக்குள் குழம்பிக் கொண்டு இருக்க வேண்டும் நேரே தோப்பிற்கு சென்றே பார்த்துவிடலாம் என்று தோப்பிற்கு புறப்பட்டிருந்தாள்.

அர்ஜுன் தன் குடும்பத்தினருடன் தோப்பில் இருக்க, அவர்களுடன் தரன், சுஜிதா, சம்யுக்தா அனைவரும் கூடி ஒன்றாக கலகலத்து கொண்டிருந்தனர்... மல்லிகா அவர்களுக்காக தோப்பு வீட்டிலேயே பலகாரம் செய்து உபசாரித்து கொண்டிருக்க, அதை கொறித்துக் கொண்டே ஒருவரை ஒருவர் வம்பிழுத்து படி பேசிக் கொண்டிருந்தனர்.

சம்யுக்தா தென்னை மரத்தின் மேல் ஏற ஆசைப்பட்டு அர்ஜுனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“அஜ்ஜு! ப்ளீஸ் அஜ்ஜு! நான் மரம் ஏறுறேன் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க”

“ஏன் இந்த விபரீத விளையாட்டு? அது என்ன சாதாரண விஷயமா நீ பேசாம அடங்கி உட்காரு... ஏதாவது ஆச்சுன்னா நானும், பிள்ளையும் எங்க போவோம்” என்று மனைவியை அதட்டி அடக்கினான் கலாதரன்.

“நான் உங்ககிட்டே கேட்டேனா, என் அஜ்ஜுகிட்டே தானே கேட்கிறேன், நீங்க பேசாம இருங்க” என்றவளை சிலுப்பிக் கொண்டவளை முறைத்தவன்...

“ரொம்பத் தான் டி போசற... எங்கே போனாலும் நீ என்கிட்டே தான் வந்தாகணும் அதை மறந்துராத” போலியாக மிரட்டிக் கொண்டிருந்தவனையே கண்ட சுஜிதாவிற்கு அவர்களை சீண்டி பார்க்கும் ஆவல் முற்படவே...

“தரன் நான் தான் அன்னைக்கே சொன்னேனே, சம்மு இல்லன்னா என்ன, சப்ஸ்டியூட் நான் இருக்கேனே” என்று குறும்பாக கூறி கண் சிமிட்ட, அவனோ அவளை மிரண்டு பார்த்தான்.

“ஆத்தா தாயே, கொஞ்சம் அடக்கி வாசி... அன்னைக்கு ராத்திரியே வேப்பிலை அடிக்காத குறையா ஆடி தீர்த்துட்டா, அது போல இன்னொரு ராத்திரி எல்லாம் சத்தியமா முடியாது”

“ஏன் சுஜி, இதெல்லாம் ஒரு மூஞ்சின்னு சைட் அடிக்கிறீங்களே உங்களுக்கு இவ்ளோ படு மட்டமான டேஸ்ட்டா?” சம்யுக்தாவுக்கு கணவன் மேல் எழும்பிய உரிமையுணர்வினால் ஆன பொறாமையை அவனை இறக்கி பேசி காட்டிக் கொண்டதில் அறிய...

“என்ன பொஸ்ஸசீவ்வா?”

“ஏன் இருக்கக்கூடாதா?”

“இப்படியே இருக்கட்டும், நான் ஜகா வாங்கிக்கிறேன்” அம்பேல் என கரங்களை தூக்கி காண்பித்தவளை கண்ட தரன் களுக்கென்று சிரித்து விட்டிருந்தான்.

“ஆக நீங்க போற இடமெல்லாம் நல்லா நாரதர் வேலை பார்ப்பீங்க போல இருக்கே” என்று தர்சனும் கூற, பேச்சுக்கு எசை பேச்சு கூறி கலகலப்பாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

“எங்க சம்மு மாதிரி பெண்ணெல்லாம் கிடைக்கிறதே அரிதான விஷயம் அந்த விஷயத்தில் எங்க தரன் ரொம்ப கொடுத்து வச்சவன்” என்று நடராஜன் கூறினார்.

“ஹா... ஹாங்... ஒண்ணு கூடிட்டாங்கையா, இதுக்கு மேல் இங்கிருந்தே உன்னை செஞ்சுருவாங்க டா தரா நீ உடனே ஆப்ஸ்கோண்ட் ஆகிக்கோ” என்று கூறி எழும்பியவன்...

“சரி அப்போ நான் கிளம்பறேன் சம்மு எனக்கு நைட் ஷிப்ட் லாகின் பண்ணனும் அதுக்கு போய் நான் பிரிப்பேர் ஆகணும்”

“நீங்க கிளம்புங்க, நான் அஜ்ஜு கூட பேசிட்டு வரேன்”

“சரி டா அர்ஜுன் நீ அவளை பார்த்துக்கோ” என்று விட்டு நகர்ந்தவனை...

“தரன் ஒன் செக் நானும் வரேன் என்னையும் ட்ராப் பண்ணிரு” என்றவள் சட்டென்று சம்யுக்தா புறம் திரும்பி...

“மிசஸ்.தரன் உங்க ஹாஸ்பண்ட் கூட நான் போகலாமா?” என்று வேடிக்கையாக வினவ...

“சூயர், ஃபார் யுவர் இன்ஃபர்மேசன் சுஜிதா... நான் பொஸ்ஸசீவ் தான் அதுக்காக குறுகிய மனப்பான்மை இல்லை, பிராட்மைண்டட் பர்சன் தான்” அவளின் பேச்சிற்கு தரன் இன்முகத்துடன் புன்னகைத்தவன் அவளுடன் பேசிய படி நடந்தான்.

“நான் பாப்பாவோட வீட்டுக்கு போறேன்” என்று தர்சனும் கிளம்ப ஆயத்தமானான்... மழை வருவது போல் இருப்பதை கண்ட நடராஜனும்...

“மல்லி நாமளும் கிளம்பலாம் மழையை விட ஊதக்காத்து குழந்தைக்கு ஒத்துக்காது” என்றவர் தர்சன் புறம் திரும்பி...

“தர்சன் இரு நானும் அம்மாவும் வரோம் சேர்ந்தே போகலாம்” என்றதும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பிய மல்லிகா.

“அர்ஜுன், சம்மு பத்திரம் ஜாக்கிரதையா பார்த்து கூட்டிட்டு வா”

“அவகிட்ட நான் தான் ஜாக்கிரதையா இருந்தாகணும், அது யாருக்காவது தெரியுதா?” என்று கேலி செய்ய, சம்மு அர்ஜுனை முறைத்துப் பார்த்து சுட்டு விரலால் ஜாக்கிரதை என்று காட்டினாள்.

“டேய் போக்கிரி விளையாட்டெல்லாம் மூட்டை கட்டிட்டு பொண்ண ஒழுங்கா பார்த்துக்கோ, தோப்பு வீட்டை பூட்டலை நீ வரும் போது எல்லாமே சரி பார்த்து பூட்டிட்டு வந்திரு” என்று விட்டு அனைவரும் நகர்ந்திருக்க அர்ஜுன், சம்யுக்தா மட்டும் எஞ்சி இருந்தனர்.

இருவரும் பேசிக் கொண்டே தோப்பை சுற்றிக் கொண்டிருக்க அச்சமயம் அங்கே பிரசன்னமான அரசி, அர்ஜுனின் காரை கண்டு ஆர்வத்துடன் அவனை காண சென்றாள்.

“நீ கூட என்கிட்டே உண்மையை மறைச்சுட்டியே அஜ்ஜு... எனக்கு சந்தோசமா இருந்தாலும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்றவள் அவன் கைகளை இறுக்கிக் கொண்டு தோள் சாய்ந்துக் கொண்டாள்.

“ம்ச்... என்ன சம்முமா திரும்பத் திரும்ப அதையே சொல்லி புலம்புற, சில சூழ்நிலையை நான் என்னன்னு சொல்றது?”

“இது சூழ்நிலை மட்டும் இல்லை அர்ஜுன், இதுக்கு பின்னாடி இன்னும் ஏதோ ஒண்ணு இருக்கிறதா என் உள்ளுணர்வு சொல்லுது... என் உள்ளுணர்வு என்னைக்கும் பொய்த்து போனதில்லை” என்றவளின் பேச்சில் அதிராமல் உணர்ச்சியற்று பார்த்தவன்...

“எனக்குத் தெரியும் நீ புத்திசாலின்னு... இதை கூட கெஸ் பண்ணாம இருக்கமாட்டேன்னு சொல்லித் தான், நீ அப்ரோச் பண்ணின டிடெக்டிவை நான் அப்ரோச் பண்ணி அவர்கிட்டே சூழ்நிலையை புரியவச்சு தான் உன்கிட்டே இந்த உண்மையையும் மட்டும் தெரிய வச்சேன்” என்றவனை...

“அ..ஜ்..ஜூ” என்று கூறி அதிர்வுடன் பார்த்திருந்தாள்.

“நீ டிடெக்டிவ் அப்ரோச் பண்ணினதில் இருந்து அவங்ககிட்டே நாளுக்கு நாள் சேகரிச்ச விவரம் வரைக்கும் எல்லாமே தெரியும்... நான் தான் இப்போதைக்கு சில விஷயம் தெரிய வேண்டாம்னு கட்டுப்படுத்தி வச்சுட்டேன்” அவன் கூறியதை கேட்டுக் கொண்டு சில கணங்கள் அமைதி காத்தவளை கண்டு யோசனையுற்றான்.

“என் மேல் கோபமா சம்மு?” என்று உண்மையான கவலையுடன் வினவியவனிடம்...

“ம்ஹும்...” என்று பரிபாசையில் இல்லை என்று என்பதாக இடமும், வலமும் தலையசைத்தவளின் முகம் காட்டிய வருத்தத்தை தாங்காமல்...

“உனக்கென்ன இப்போ அதை தெரிஞ்சுக்கணும் அவ்வளவு தானே?” என்றவனின் வாயை அடைத்தவள்...

“வேண்டாம் ஏதோ காரணதுக்காக தானே என்கிட்டே மறைச்சிருக்கீங்க அது அப்படியே இருக்கட்டும், நேரம் வரும் போது தன்னால் தெரிஞ்சுக்கிறேன்”

“இது.. இது தான் சம்மு உன்கிட்டே பிடிச்ச விஷயமே” என்றவன் அவள் நெற்றியில் வாஞ்சையுடன் முட்டிக் கொண்டான்.

இதையெல்லாம் தன் விழிகளால் வெறித்துக் கொண்டிருந்த அரசிக்கு முதலில் தெரியாத வேறுபாடு நேரம் செல்ல செல்ல உரிமையுணர்வின் பொறாமை காரணமாக கணவன் மேல் சீற்றம் எழுந்தது... இல்லை தன் கணவன் அப்படி இல்லை என்று ஒரு மனம் எடுத்துரைத்ததில், சரி நிதானமாக யோசிப்பேன் என்று மறைவாக நின்றபடியே கண்காணித்தாள்.

அவனின் செயலில் மற்றவையை மறந்து சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர்... காற்று பலமாக வீசியதில் அவள் கண்ணில் தூசி விழுந்திருக்க... “ஏய் சம்மு என்னாச்சு” என்று விசாரித்தான்.

“கண்ணில் தூசி விழுந்திருச்சு” என்று கூறி கண்ணை இறுக மூடிக் கொண்டு புறங்கையால் துடைத்தவளின் கையை விலக்கியவன்...

“இரு சம்முமா காத்து பலமா அடிக்குது, இங்கே கண்ணை திறக்காதே என்னாலேயே கண்ட்ரோல் பண்ண முடியலை திரும்ப மண் கண்ணில் அடிக்கும் வா தோப்பு வீட்டுக்குள்ள போகலாம்” என்று கூறி இருவரும் உள்ளே நுழைந்திருக்க, காற்றின் வேகத்தில் அவர்கள் இருந்த வீட்டின் நிலைவாசல் கதவு அடித்து சாத்தி மூடிவிட்டிருந்தது.

அந்நேரம் பார்த்து அவள் தோழி ஹேமாவின் வாழ்க்கையும், அவளின் போதனைகளும் மூளைப் பெட்டகம் நினைவுறுத்த, இந்த ஆண்கள் வர்க்கமே இப்படித் தானோ தேனை தேடி அலையும் வண்டுகள் என்றவளின் எதிர்மறை எண்ணவோட்டங்கள், காற்றின் உபயத்தில் மூடிய கதவுக்கு அவர்கள் தான் காரணமென தவறாக எண்ணிக் கொண்டிருக்க, சந்தேகம் என்னும் சைத்தான் அவளுள் ஊடுருவி விட்டிருந்தது.

தன்னிடம் வேலை நெருக்கடி அதிகமாக இருப்பதாக கதை திரித்துவிட்டு அதன் காரணமாக பேசக் கூட நேரமில்லை என்றவனுக்கு, அவனுக்கு அண்ணன் முறையாகும் மனைவியை வளைத்து போட்டு கொள்ளும் திட்டம் தான் அந்த முக்கிய வேலையா? என்று நினைத்து மனதுக்குள் தகித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குமேல் அங்கேயே நில்லாமல் வாசல் வரை சென்று அங்கிருந்த சாளரத்தின் வழியாக எட்டி பார்த்தவள் ஜடம் போல் நின்றுவிட்டாள்.

“ம்ச்... வேண்டாம் விடு அஜ்ஜூ” என்றும்...

“ப்ளீஸ் சம்மு, இரு நான் பார்த்துக்கிறேன்” என்று வலியுறுத்தி அர்ஜுன் சம்யுக்தாவிற்கு கண்களில் இருந்த தூசியை ஊதிக் கொண்டிருக்க, அதையும் தவறாக சித்தரித்துக் கொண்டவளுக்கு... கணவன் மேல் கண் மண் தெரியாத கோபம் எழுந்தது.

“பாவி... சண்டாளா! கடைசியில் நீயும் சபல புத்திகாரன் தானா?” என்று பேசிக் கொண்டவளின் விழிகள் சினத்தினால் சிவப்பேறியிருந்தது.

‘இந்த திருட்டுத்தனம் எத்தனை நாட்களாக நடக்கிறதோ, இந்த அண்ணிக்கு தான் என்னவானது ஒரு தொழிலை கட்டி ஆள்பவருக்கு இந்த ஆண்களின் புத்தியை பற்றி அறிந்திருக்க வேண்டாமா?’ என்றவள் சடுதியில் மாறி, ‘ம்ஹும் அண்ணி மேல் தவறிருக்காது, எல்லாம் என்னை காதலித்து திருமணம் செய்த நயவஞ்சகன் அந்த அர்ஜுன் தான் காரணமாக இருப்பான்’ என்று தனக்கு தானே அவளுக்கு வக்காளத்து வாங்கிக் கொண்டவளுக்கு... சம்யுக்தா பல சமயங்களில் அவனை சகோதரனாக எண்ணி பேசியதை எல்லாம் ஏனோ அச்சமயம் வசதியாக மறந்து போனாள்.

“கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்பதை அக்கணம் அவள் நினைவுறுத்தி இருந்தால் எவ்வளவோ தேவலாம்... ‘இந்த துரோகியை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாம பார்க்க ஓடோடி வந்தேனா ச்சேய்’ என்று அவதூறாக தூற்றிக் கொண்டவள் அங்கிருந்து வேகமாக நடந்து வெளியேறியிருக்க, தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தவளை அர்ஜுன் கண்டு கொண்டுவிட்டான்.

“அஜ்ஜூ கண்ணு ரொம்ப எரிச்சலா இருக்கு, நான் போய் காரில் உட்காருறேன்” என்று சம்யுக்தா கூறிவிட்டு சென்றிருக்க அவனுக்கு அதுவே நிம்மதியாக இருந்தது...

“நல்ல வேளை சம்மு பார்க்கலை, அவ மட்டும் ஓடுறதை பார்த்திருந்தா இந்நேரம் என்ன நினைப்பா? கிறுக்கி வந்தவ பேசியிருக்கலாமே எதுக்காக ஓடுறா?” அவன் அப்போதும் மனைவி அவர்களை தவறாக சித்தரித்துக் கொண்டிருப்பாள் என்று எண்ணவில்லை... அவனை தேடி வந்தவள் காற்றிலும், மழையிலும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க விரைவாக செல்கிறாள் போல என்று தான் கொண்ட காதலின் நம்பிக்கையை அவளிடமும் எதிர்பார்த்து நினைத்து இருந்தவனுக்கு, அவள் கொடுக்கப் போகும் ஏமாற்றத்தின் விளைவு அவர்கள் வாழ்வை எந்த அளவில் சேதாரம் ஏற்படுத்தப் போகிறதோ?

சுவடுகள் தொடரும்....
**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-26 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்
காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-27

அர்ஜுன் அலைபேசியின் வாயிலாக தன் மனைவிக்கு பல முறை முயற்சித்த அத்தனை அழைப்புகளும் முதல் ஒலியிலேயே நிராகரிக்கப்பட்டது...

“பைத்தியக்காரி என்ன நினைச்சுட்டு இருக்கிறா, திரும்ப என்ன ராமாயணத்தை ஆரம்பிக்கப் போகிறாளோ தெரியலையே?”

“பேசாம இப்போவே தரன்கிட்டே கூப்பிட்டு அவளை பேச சொல்லலாமா?”

“ம்ஹும் வேண்டாம்! என்ன பிரச்சனைன்னு முதல்ல நான் கேட்காம அவனை உள்ளிழுக்க வேண்டாம் முதலில் அவகிட்டே நேரடியாவே பேசுவோம்” என்று சிந்தாந்தம் மேற்கொண்டவன் அடுத்த தினம் முதல் வேலையாக தரனின் வீட்டில் இருந்த தன் மனைவியை நேரிலேயே சென்று பார்த்தான்.

தகவலில்லாமல் திடுதிப்பென்று வந்து நின்ற அர்ஜுனை கண்ட தரன்... “என்னடா சொல்லாம கொள்ளாம திடிர்னு வந்து நிற்கிற? என்ன பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியலையா?” என்று வினவி கண் சிமிட்டியவனின் குறும்பு பேச்சை உணர முடியாத அளவிற்கு குழப்பம் மனதை சூழ்ந்திருக்க, அரசியை தேடி வீட்டை சுற்றியே கண்களை சுழற்றிக் கொண்டிருந்தான்.

தன் பேச்சிற்கு பிரதிபலிப்பே இல்லாமல் அவன் பார்வை வீட்டை சுற்றியே சுழன்று கொண்டிருந்ததை உணர்ந்தவன்... “டேய் என்னடா ஆச்சு எதுவும் பிரச்சனையா?” என்று விளம்பியதும் தான் அவனுக்கு உரைத்திருக்க...

“இல்லை டா அவசரமா அரசிக்கிட்டே பேசணும்”

“பேசு டா பின்னாடி கிணத்தடியில் தான் இருந்தா போய் பாரு” என்றதும் விறுவிறுவென சென்றவனின் முகத்தில் இருந்த சலனம் அவர்களுக்குள் ஏதோ ஊடல் என்பதை வெளிச்சமிட்டு காட்டியிருந்தாலும், இது போன்ற ஊடல்கள் கணவன், மனைவிக்குள் சகஜம் தானே என்ற எண்ணப் போக்கில் விட்டுவிட்டான்.

அரசி கிணற்றடியில் அமர்ந்து இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருக்க, அவளின் அந்த செயலை ஆராய்ச்சியாக பார்த்தபடி நெருங்கியவன்...

“இங்கே என்ன பண்ணுற?” என்றவனின் குரலில் திடுதிப்பென எழுந்தவளின் முகம் பதற்றத்தை தத்தெடுத்திருந்தது.

“இங்கே குடும்பத்து ஆளுங்களை தவிர வேற யாரு வந்து விட முடியும்னு இப்படி பயப்படுற?” என்று தன்மையாக கூறியதும் தான் தன்னிலைக்கு வந்தவள் அவன் மேல் கொண்டிருந்த துவேசம் தலைதூக்க அவனை கனல் வீசும் விழிகளால் சுட்டெரித்தாள்.

“இங்கே எதுக்கு வந்தீங்க, நான் இருக்கேனா செத்துட்டனான்னு பார்க்கவா?” என்று எடுத்த எடுப்பில் சிடுசிடுத்தவளை செறிவுடன் நோக்கியவன்...

“உனக்கு மண்டையில எதுவும் அடிபட்டிருச்சா என்ன? திடிர்னு சம்மந்தமே இல்லாம பேசிட்டு இருக்கிற?”

“ஆஹாஹா என்ன நடிப்பு? என்ன நடிப்பு?” என்று எள்ளாடியவளை கண்டு அயர்ச்சியாக இருந்தது... விஷயம் இன்னது என்று காரணம் கூறிவிட்டு அவனிடம் சண்டையிட்டாலாவது ஏதேனும் கூறி சமாதானப்படுத்தலாம்... இல்லை, தெளிவுப்படுத்தலாம்... எதற்காக இத்தனை கோபம் என்றே தெரியாமல் அவனிடம் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்துடன் காய்பவளிடம் என்னவென்று கூறுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் போதே குழலி அங்கே பிரசன்னமாக...

“அடடே வாங்க அர்ஜுன் தம்பி... அரசி குடிக்க காப்பி போட்டு கொடுத்தியா? முதல்ல தண்ணி கொடுத்தியா?” என்று விசரித்தவரிடம் பதில் கூற முடியாமல், மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவளை கண்டு அர்ஜுன் உதவிக்கு வந்தான்.

“அதெல்லாம் எதுவும் வேண்டா ம்மா, எனக்கு நேரமாகுது கம்பெனிக்கு போகணும் ஒரு முக்கியமான விஷயம் அரசிகிட்டே சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்”

“சரிப்பா பேசுங்க நான் உள்ளே இருக்கேன்” என்று விட்டு நாகரிகமாக நகர்ந்திருக்க, அவனை கிளப்பிவிடும் எண்ணத்தில் வேகமாக பேச ஆரம்பித்தவளை தன் கரம் உயர்த்தி தடுத்தவன்...

“இங்கே எதுவும் பேச வேண்டாம், இன்னைக்கு நைட் நீ நம்ம வீட்டுக்கு வா, அங்கே வச்சு பேசிக்குவோம்”

“உங்க வீட்டுக்கு நான் ஏன் வரணும்?” கோபாவேசத்துடன் அவசரமாக வினவையவளை கண்கள் இடுங்க பார்த்தவன்...

“உங்க வீடா? என்ன பேச்சு ரொம்ப ஒரு மாதிரி இருக்கே? அது தான் உன் வீடு, உன் வீட்டுக்கு வராம இங்கேயே இருந்திற போறியா?”

“அது தான்... அதான் உங்களுக்கு என்கிட்டே ஒரு அலட்சியம்... இவளுக்கென்ன போக்கிடமா இருக்கு நம்ம பார்த்து செஞ்சா தான் உண்டுன்ற இளப்பம்” என்றவளின் பேச்சை கண்டு...

“ஆண்டவா!” சலிப்புடன் கூறி நெற்றியில் அறைந்துக் கொண்டவன்...

“போதும் என்னால் முடியலை, இதுக்கு மேல எதுவும் இங்கே பேசாதே, ஒழுங்கா நைட் வீட்டில் இருக்கிற அவ்ளோ தான்” கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவன் நில்லாமல் சென்றுவிட்டிருந்தான்.

அரசிக்கோ மனம் திக்திக்கென்று அடித்துக் கொண்டது... அங்கே வீட்டிற்கு சென்றுவிட்டால் அவன் முன்னால் மனதில் ஆயிரம் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும், அவன் பார்வையும், பேச்சும் மயக்கிவிடும் இதில் எங்கே அவனிடம் நாம் சண்டையிட என்று அடித்துக் கொண்டவள்... இல்லை அரசி நீ துணிச்சலான பெண் உன் தோழிக்கு நடந்தது போல் உன் வாழ்க்கையிலும் நடந்து விடக்கூடாது... அதனால் என்ன ஆனாலும் சரி அவனை ஒரு பிடி பிடித்து விடு இது போன்ற ஏமாற்று வேலை, சபலத்தை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என்று அவசரமாக உருப்பேற்றுக் கொண்டாள்.

கணவன், மனைவி அந்தரங்க வாழ்வில் சந்தேகம் என்னும் மாய பிசாசை விரட்டி அடித்துவிட்டு, ஆழ்ந்து சிந்தித்து எப்படி முள் மேல் பட்ட சேலையை சேலைக்கு சேதாரம் ஆகாமல் எடுப்பது போல், கவனமாக கையாள வேண்டும் என்பதை மட்டும் அப்போது சிந்தித்து இருந்தாளானாள் அவள் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கலாமோ?!

மாலை வரை தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமலே இருந்தவளுக்கு இரவு ஏழு மணிக்கு கணவனின் அழைப்பில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்... “என்ன ஆனாலும் சரி இன்று அவனுடன் சென்று நாக்கை பிடுங்கிவது போல் கேட்டு விட வேண்டும்” என்ற சித்தாந்ததுடன் சென்றாள்.

இரவு அவர்கள் அறையில் சந்தித்து கொள்ளும் வரை இருவரும் பெரிதும் பேசிக் கொள்ளாமல் மௌனம் காத்தவர்கள், அறைக்குள் நுழைந்ததும் அவன் முகத்தை பாராமல் அலட்சியப்படுத்திவிட்டு சென்ற அரசியின் கரத்தை பிடித்து தடுத்திருந்தான் அர்ஜுன். அவன் பிடியில் அதுவரை இருந்த ஆத்திரம் பன்மடங்காக பெருக சரேலென்று திரும்பி அவனை நோக்கியவளின் பார்வையில் தீஜுவாலை மின்னியது.

“என்னாச்சு டி... நானும் பார்க்கிறேன் முகத்தை திருப்பிகிட்டு போற, தொட்டா என்னவோ மூணாவது ஆள் கை பிடிச்சு இழுத்த மாதிரி முறைக்கிற, என்ன பிரச்சனை உனக்கு?”

“நீங்க தான் பிரச்சனை?”

“அதான் கேட்கிறேன் நான் என்ன செய்தேன்... அன்னைக்கே நீ தோட்டம் வீடு வரைக்கும் வந்துட்டு ஓடின, அதுக்கான காரணத்தை கேட்டு நான் தான் கோபப்படணும், ஆனால் நீ கோபப்படுற? சொல்லு... எதுக்காக அன்னைக்கு அப்படி ஓடின?” என்று வெகு சாதாரணமாக வினவியவனை கண்டு உள்ளம் எரிந்தது.

“என்ன நெஞ்சுரம் இருந்தா என்கிட்டேயே இந்த கேள்வியை கேட்பீங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமோ, வெட்கமோ இல்லையா” அதுவரை எதுவும் சிறிய விஷயமாக இருக்கும் பேசிக் கொள்ளலாம் என்றவனுக்கு சுர்ரென்று கோபம் விளைய...

“ஏய் கடுப்பேத்தாதே என்ன ஆச்சுன்னு சொல்லித் தொலை, உன்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டேன்னு ஒரு மனுஷனை இப்படியா படுத்துவா ராட்சசி” என்று தானும் கடுப்பில் வார்த்தைகளை விட சந்தேக சாத்தான் அவள் சித்தத்தில் கொட்டகை இட்டு குடி கொண்டிருக்க...

“ஆமாம் நான் ராட்சசியா தான் தெரியுவேன் ஏன்னா, உங்க மனசு தான் வேற இடத்தில் தாவுதே” என்றதில் அவன் கட்டிக் காத்த ஆண்மையின் ஒழுக்கம் சீண்டப்பட்டிருக்க, சிவந்த விழிகளால் பார்த்தபடி அவள் தாடையை இறுக பற்றிக் கொண்டவன்...

“என்ன டி சொல்லுற தெளிவா சொல்லு?” இறுகிய குரலில் உறுமினான்.

அதற்கெல்லாம் அவள் சிறிதும் அசராது ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டும் தான் என்பது போல்... “அன்னைக்கு தோட்ட வீட்டில் என் அண்ணி உள்ளே போனதும், நீங்களும் உள்ளே போய் கதவை அறைந்து சாத்துனீங்களே, என்ன சொல்லி என் அண்ணியை மயக்குனீங்க? அவங்க என் அண்ணன் பொண்டாட்டி அது நியாபகம் இருந்ததா, ச்சே... இதுக்கு மேல சொல்லவே எனக்கு உடம்பும், நாக்கும் கூசுது” என்றவளின் வார்த்தையில் அவளை தொட்டிருந்த அவன் கைகள் தீச்சுட்டார் போல் வெடுக்கென்று உருவிக் கொண்டிருக்க, அவன் பார்வையோ உணர்ச்சியற்று அவளை வெறிக்க ஆரம்பித்தது... மாறியிருந்த அவன் முக உணர்ச்சிகளை பற்றி சிறிதும் லட்சியம் செய்யாமல் வார்த்தை என்னும் வாளால் அவனை வதம் செய்யலானாள்...

“அன்னைக்கே என் பிரெண்ட் சொன்னா பார்த்து இருந்துக்கோ டி இந்த ஆம்பளைங்க எல்லாம் சபல புத்திக்காரங்க அவ்ளோ சுலபமா நம்பாத, கொஞ்சம் கவனமா இருன்னு சொல்லி வச்சா, நான் தான் என் புருஷன்னு உத்தமன்னு அப்படியே நம்பிட்டேன்”

“...........”

“தூணுக்கு சேலை கட்டிவிட்டாலும் அதை பெண்ணா கிரகிச்சு பார்க்கிறா ரகம் தானே உங்க ஆம்பளை புத்தி” அவனோ அவளின் நாராசமான பேச்சுக்களை மனதை கல்லாகிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தானே தவிர, எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லாமல் செதுக்கி வைத்த சிற்பம் போல் நின்றிருந்தான்.

“இவ யாரோ ஒருத்தி இவளுக்குன்னு பெத்தவங்க இருக்காங்களா, கூடப் பிறந்தவங்க இருக்காங்களா? யார் வந்து ஏன்டா இப்படி பண்ணினேன்னு கை நீட்டி கேள்வி கேட்டிற முடியும்? நம்ம வீட்டை விட்டா இவளுக்கு ஓடி ஒடுங்க கதி இல்லாத ஆளு, அதனால் நாம என்ன வேணா செய்யலாம்ங்கிற அலட்சியம்” அவள் நாவு வார்த்தைகள் என்னும் சாட்டையால் ஈவு இரக்கமில்லாமல் அவனை சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது. அவனோ உன்னை காதலித்து திருமணம் செய்துவிட்டேன், அதனால் நீ பேசுவதை கேட்டுத் தானே ஆக வேண்டும் பேசு என்பதாக உதடுகளை பெவிகால் கொண்டு ஒட்டியது போல் முகத்தை கடினமாக்கிக் கொண்டு நின்றிருந்தான்.

“நான் எப்பவும் கேட்டாளே என்னை என் வீட்டுக்கு அனுப்பாத மனுஷன் நீங்க, எங்கே நான் இங்கே இருந்தா உங்க ஆசைக்கு இடைஞ்சலா இருந்திருவேன்னு நினைச்சு தானே, என்னை எங்க வீட்டுக்கு அனுப்பியிருக்கீங்க”

“அது மட்டுமா குழந்தை மெதுவா வரட்டும் நாம அதுவரைக்கும் என்ஜாய் பண்ணலாம்னு சொன்னது என் மேல காதல்ன்னு நினைச்சேன்... ஆனால், இப்போ தானே தெரியுது உங்க சுகத்துக்காக வேண்டாம்ன்னு சொல்லியிருக்கீங்கன்னு” என்றவளின் வார்த்தையில் அதுவரை தரையில் பதிந்திருந்த பார்வை சரேலென்று உயர்ந்து அவளை கூர்மையாக வெட்டியது.

“உங்களை நம்பி இருக்கிற ஒரேயொரு காரணத்துக்காக என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே ச்சேய்”

“என் பிரெண்ட் மட்டும் எச்சரிக்கைலைன்னா உங்க நாடகத்தை எல்லாம் உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டே இருந்திருப்பேன்” என்று கடைசி அஸ்திரத்தை வீசி அவனை கரித்து கொட்டிவிட்டு, ஏதோ அவையெல்லாம் இவளுக்கு நேர்ந்த வசைவுகள் போன்று உடல் தோய்ந்துவிட்டிருக்க படுக்கையில் சரிந்து அமர்ந்து குமுறி குமுறி அழுகையில் கரையலானாள்.

அவளையே திக்கற்று வெறித்து பார்த்திருந்தவனின் கண்கள் வெறுமையில் மிதக்க, அவன் உடல் பாறையின் கடினத்துடன் இறுகிப் போயிருந்தது.

அவள் பேசியதில் ஒரேயொர் நல்ல விஷயம் என்றால் சம்யுக்தாவை தவறு சொல்லாமல் அவனை மட்டும் குறிவைத்து பேசியது தான்... இல்லையென்றால் அக்கணமே அவன் ஆவேசத்தில் ஏதேனும் செய்திருந்தாலும் செய்துவிட்டிருப்பான்.

அவள் அவனை குற்றம் சாட்டிய ஒரு விஷயமாவது உண்மையாக இருந்திருந்தால் அவன் அவளிடம் விளக்கம் கூற முயன்றிருப்பானோ? அல்லது; அவள் பார்த்தது தான் பார்த்தாள் அவனிடம் என்ன நடந்தது என்று விளக்கம் கேட்டிருந்தால் கூட அவளிடம் தெரிவியாமல் இருந்ததற்காக அனைத்தையும் அவளிடமும் பகிர்ந்து அவள் குழப்பத்தை துடைதெறிந்து விட்டிருப்பான்... ஆனால் இவை எதையும் செய்யாது அவளாக ஒரு காரணம் கற்பித்து சாக்கடை போல் ஊற்றியவளை எண்ணி ஆரோஷிகம் கொண்டான்... அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அவன் அத்தனை தினம் காதலை கொட்டி வாழ்ந்ததற்கு அர்த்தமற்று செய்திருக்க, அவள் இருக்கும் இடத்தில் மூச்சு முட்டுவது போல் திணறியவன் பால்கனியில் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டான்.

அரசிக்கு தனக்கென இருக்கும் ஓர் சொந்தம் இவனும் இல்லாமல் போய் விடுவானோ என்ற தாரதம்மிய உணர்வு வார்த்தைகளை சிறிதும் சிந்திக்காது பிரயோகிக்க வைத்ததை அறியாது போனாள் பேதை!

‘பாணங்களால் ஏற்பட்ட புண் ஆறிவிடும் ஆனால் கொடிய வார்த்தைகள் கொண்டு சொல்லப்பட்ட நிந்தையாகிய புண் ஆறுவதே இல்லை’ என்ற விதுர நீதியை அவள் அறிந்திருந்தால் இத்தகைய கொடிய விஷமுள்ள வார்த்தைகளை காதல் கொண்டு மணந்த தன் மணவாளன் மேல் வீசியிருக்கமாட்டாளோ?

அரசிக்கும் தன் கைப்பொருள் களவு போய்விடுமோ என்கிற அச்சம், அவளை சற்றும் சிந்திக்கவிடாமல் அவனை குற்றம் சாட்டியிருக்க, அவன் அங்கிருந்து நகர்ந்ததும் தான் கணவனின் மௌனம் அவள் தாக்கியதில் உள்ளம் வலித்தது.

அர்ஜுனுக்கு தன் மனைவியின் வார்த்தை வாள் வீச்சில் காயப்பட்டவனுக்கு உலகமே வெறுமையாக காட்சியளிப்பது போல் மனப்பிரமையில் தோன்றியது... பால்கனியில் வெற்று தரையில் பின்னந்தலைக்கு கைகளை முட்டுக் கொடுத்தபடி படுந்திருந்தவன் சித்தம் சிதறு தேங்காயாய் சிதறி இருந்தது... தன்னிடம் ஒரு சிறு விளக்கமும் கேட்காமல் அவள் கூறிய வார்த்தைகள் அவன் இதயத்தை கூறு போட்டுவிட்டிருந்தது.

அன்றைய தினத்திலிருந்து தன் மனைவியை முற்றிலும் தவிர்க்க ஆரம்பித்தான்... அவள் முகத்தில் விழிக்காமல் வெகு முன்னதாக கிளம்பிச் செல்பவன் இரவில் நடுநிசியை தாண்டியே இல்லம் அடைவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். அவனின் செயலில் முறுக்கிக் கொண்ட அரசி ஓர் நாள் அவன் அதிகாலையில் எழும்போதே தானும் எழுந்தவள் அவனை மடக்கி பிடித்து வாதாடினாள்...

“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? வீட்டுல பொண்டாட்டின்னு நான் எதுக்கு இருக்கிறேன்... அன்னைக்கு நான் சண்டை போட்டதுக்கே இன்னும் விளக்கம் கொடுக்கலை, இதில் என்னையும் அலட்சியப்படுத்தறீங்க?” என்றவளின் பேச்சை சட்டை செய்யாது தன் போக்கில் தயாராகிக் கொண்டிருந்தவனை கண்டு கடுப்புற்றவள்...

“நான் கேட்கிறேனில்லை பதில் சொல்லுங்க” என்று அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்டவளை அமர்த்தலாக பார்த்தவன்...

“உனக்கு பதில் சொல்லணும்ங்கிற அவசியம் எனக்கு இல்லை மரியாதையா கையை எடு” என்றவனின் விழிகளில் ஒதுக்கம் தெரிய திகிலுடன் நோக்கியவள் கரங்கள் மெல்ல அவிழ்ந்தது.

“எங்கிட்டே பேசணும்ங்கிற அவசியம் மட்டும் தான் இல்லையா? இல்லை, நான் பொண்டாட்டியா இங்க இருக்க வேண்டியதே இல்லையா?” அவளையுமறியாது அவள் உதடுகள் வார்த்தையை கோர்த்து உச்சரிக்க அதை துட்சமென தட்டியவன்...

“என்ன ஓவரா சட்டம் பேசுறா? நீ தான் எல்லாம் தெரிஞ்சவளாச்சே நான் பதில் சொல்லி தெரிஞ்சுக்குற அளவுக்கு மடச்சி இல்லைன்னு நீ என்னை பத்தி புட்டு புட்டு வச்சியே அப்போவே தெரிஞ்சுகிட்டேன்” விட்டேறியாக கூறிவிட்டு நகர எத்தனித்தவனின் கரம் பிடித்து தடுத்தவள்...

“முடியாது! நான் போக விடமாட்டேன்” என்று அழுத்தமாக பிடிதிருந்தவளின் பிடியை தளர்த்திக் கொள்ளும் உத்தேசம் இல்லாதவளை ஓர் முறை அழுத்தமாக தன் பார்வையால் அளந்தவன், தன் பலத்தை திரட்டி வெடுக்கென்று கரத்தை உருவிக் கொண்டு நகர்ந்திருக்க, அவனின் இந்த எதிர்பாராத செயலில் தடுமாறி கட்டிலில் வீழ்ந்தவளுக்கு துக்கம், கோபம், கலக்கம் என வானிலை போன்று உணர்வலைகளும் மாறி மாறி தோன்றியது, அவன் மேல் கொண்டுள்ள ஆத்திரத்தில் அவனிடம் கூட கூறாது அன்றே தரனின் இல்லத்திற்கு கிளம்பிச் சென்றுவிட்டிருந்தாள்.
**********************

வாணிக்கு அன்று பள்ளியில் பணிச்சுமை அதிகமாகி விட, கணவனை அழைத்து அவனிடம் மகளை மட்டும் ஒப்படைத்து விட்டிருந்தவள் தன் வேலையில் சிரத்தையாக மூழ்கியிருந்தாள்.

ரஞ்சன் அன்று தான் அவள் வேலை செய்யும் பணியிடதிற்க்கே மகளை கூடி செல்ல வந்திருக்க, அவளுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் அதுவரை வாணியின் கணவனை பற்றி அறியாது இருந்ததில், அன்று தான் மிகப் பிரபலமான ஆடை வணிகத்தின் உரிமையாளர் மனோரஞ்சனின் மனைவி என்றறிந்ததும் அனைவரும் வாய் பிளக்காத குறையாக வியந்தனர்!

“என்ன வாணி நீங்க மனோரஞ்சன் சார் வைஃபா சொல்லவே இல்லையே?”

“சொல்லுறதென்னா காட்டிக்க கூட இல்லை” என்று ஆளாளுக்கு அவர்கள் போக்கில் வியந்து பேசியதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணாமல் அவர்களின் பேசுக்கு மெலிதாக புன்னகை சிந்தியவள்...

“நான் யாருடைய மனைவின்னா என்ன? எனக்கு வெளியே வேலை பார்த்து விஷயங்களை கற்றுக்கணும்னு ஆசை, என் சுயத்தை நான் இழக்க விரும்பலை... அதனால், நான் இன்னாருடைய மனைவி இந்த குடும்பத்து மருமகள் என்ற அரிதாரமெல்லாம் வேண்டாம், நான் கலைவாணி எனக்கே எனக்காக பழகினா போதும்” அவர்கள் அடுத்த கேள்வி தொடுக்க வழியில்லாமல் அவர்களின் வாயை அடைத்திருந்தாள். மற்றவர்கள் என்றால் எப்படியோ ஆனால் வாணியின் பின்புலம் அறிந்த பிறகு அவளிடம் ஓரளவிற்கு மேல் கேள்வி ஏதும் கேட்காமல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டிருந்தனர்.

அன்று ஏழு மணிக்கு மேல் தான் தன் பணியை முடித்துக் கொண்டு வெளியேறி இருக்க, அவளுடன் பணி செய்யும் சில பெண்கள் தங்களுக்குள் பேசி கிசிகிசுத்தபடி சென்றதை கண்டு சிந்தனை வயப்பட்டாள்... அவர்களுடன் சென்றால் தான் பேருந்தில் செல்வதை கவனித்து வீணாக விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுவோம் என்ற காரணத்தினால் அவர்கள் சென்ற பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பின் தங்கிக் கொண்டாள்... அவர்களோ மிக மெதுவாக பேசிக் கொண்டே சென்றவர்கள் அவர்களுக்கான பேருந்து வராததால் நீண்ட நேரம் காத்திருந்தே ஏறினர்.

ரஞ்சன் மகளை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு சென்றவனுக்கு அங்கே தம்பதியர் சகிதமாக குழந்தையுடன் வந்திருந்த ஆதர்ஷ தம்பதிகளை கண்டு தனக்கும் இப்படி ஒரு கொடுப்பினை வாய்க்காதா என்று ஏக்கம் கொண்டான். அவன் மகளோ தந்தையின் ஏக்கத்தை எல்லாம் உணராமல் புதிய சூழலை கண்டதும் துள்ளி குதித்து ஆர்பரித்தாள்... மகளின் செயலில் தன் ஏக்கத்திலிருந்து வெளி வந்தவன் அவளுடன் சேர்ந்து இன்பமாக பொழுதை கழிக்கலானான்.

மதியமே அரை வயிராக உண்ட வாணிக்கு அப்போது பசி அடிவயிற்றை கிள்ளயதில் அவளின் ஜான் வயறு ஏதேனும் எனக்கு கொடேன் என்று கெஞ்ச, பசி மயக்கத்தினூடே பேருந்து நிறுத்தத்திற்கு சென்றாள்... அவளுக்கான பேருந்து வர தாமதமாகவே நேரம் கடக்க கண்களை இருட்டிக் கொண்டு நெற்றியை தாங்கியபடி மயங்கி சரிந்துவிட்டிருந்தாள்.
**********************

“கலைவாணி பேசண்ட்டுடைய கேர்டேக்கர் யாரு?” என்று செவிலியை பெண் உரக்க அழைத்ததும் ரஞ்சன் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தோடியவன்...

“நான் தான் கலைவாணி ஹஸ்பண்ட் இப்போ அவங்க எப்படி இருக்காங்க?” என்று பதட்டத்துடன் விசாரித்த ரஞ்சனின் முகம் அச்சத்தில் வெளுத்திருந்தது.

“அவங்க கண் முழிச்சுட்டாங்க டையர்டா இருக்காங்க அவங்களால் முடியும்னா உடனே கூட்டிட்டு போங்க, இல்லன்னா ஒருமணி நேரம் ரெஸ்ட் எடுக்க வச்சு கூட்டிட்டு போகலாம்... கரெக்ட் டைமுக்கு ஃபுட் எடுத்துக்கணும்” என்று அறிவுறுத்தியதும்...

“தேங்க் யூ சிஸ்டர்” என்று விட்டு கண்மூடி சயனித்திருந்த மனைவியின் அருகில் நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தவன்... அவளின் வாடி வதங்கியிருந்த வதனத்தை கண்டு வேதனையுடன் பார்த்தப்படி அவள் சிகையை நடுங்கும் தன் விரல்களால் வருடினான்.

“என்னை கடைசி வரை மன்னிக்கவே மாட்டியா வாணி?” என்றவனின் அதரங்கள் துயரத்தில் நடுங்கிக் கொண்டிருக்க, கண்களில் குளம் கட்டிக் கொண்டது... அவனின் தொடுகையை உணர்ந்தாளோ? என்னவோ! அவள் இமைகளில் அசைவு தெரிய சரேலென்று தன் கரத்தை அகற்றிக் கொண்டிருந்தான்.

மெல்ல இமை திறந்த வாணிக்கு ஒன்றும் புரியாமல் திக்கெட்டும் வரையில் பார்வையை திருப்பி மலங்க மலங்க பார்த்துக் கொண்டிருந்தவளை புரிந்தவன்... “கலை இப்போ உடம்பு எப்படி இருக்கு?” என்ற குரலில் அருகில் கவலையுடன் அமர்ந்திருந்த கணவனை கண்டு யோசனையாக பார்த்திருந்தாள்.

“நீ மதியம் சாப்பிடலையா திடிர்னு மயங்கி விழுந்துட்ட? நல்ல வேளை நான் அந்த நேரத்தில் அங்க வந்ததால் நல்லதா போச்சு இல்லைன்னா, என்ன ஆகியிருக்கும்?” மெய்யான வருத்ததுடன் விளம்பியவனின் வார்த்தையை கேட்க மனம் இனித்தாலும்... அவன் செய்த செயல்கள் அத்தனை சுலபத்தில் அவன் அக்கறையை ஏற்றுக் கொண்டு விட விட்டு விடாத காரணத்தினால்...

“என்ன ஆகியிருக்கும் அப்படியே அநாதை பிணமா ஆகியிருப்பேன்” என்றவளின் வார்த்தை அவன் உயிரை வேரருத்திருந்தது.

“வேண்டாம் வாணி! ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதே என்னால் தாங்க முடியலை?” என்றவன் குரல் வேதனையில் உடைந்திருந்தது.

“அதிருக்கட்டும் முதலில் என்னை இவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டலில் யார் கொண்டு வந்து சேர்க்க சொன்னா, இதுக்கு நான் பணத்துக்கு எங்கே போவேன்?” என்று ஏதோ அது தான் முக்கியம் போல் வினவியவளை கண்டு அத்தனை நேரம் இருந்த கவலை மறைந்து ஆத்திரம் மூண்டது.

“ஆமாம் அதை இப்போ நான் கேட்டேனா, ஏன் இப்படி பண்ணுற கலை... உன்னை நம்பி நான் மட்டும் இல்லை நம்ம குழந்தையும் இருக்கிறா வியனியை மறந்துட்டியா?” என்று நினைவுறுத்தியதும் தான் அவளுக்கு நினைவே வந்திருக்க...

“அச்சோ! வியனி பாப்பா எங்கே? என்னாச்சு அவளுக்கு?” என்று தாயாக பதறியவளின் உணர்ச்சியை புரிந்தவன்...

“அவளுக்கு எதுவும் ஆகலை தோட்டத்தை பார்த்துக்கிற பத்மாக்காகிட்டே விட்டு வச்சிருக்கேன், போற வழியில் அவளை கூட்டிட்டு போகலாம்... என்ன கிளம்பலாமா இல்லை ரெஸ்ட் எடுக்குறியா?”

“இல்லை வேண்டாம் கிளம்பலாம்” என்றவள் உடல் பலமின்றி கை கால்கள் நடுக்கத்தில் தள்ளாட, அப்போதும் அருகில் இருந்த அவனை பற்றிக் கொள்ளாமல் கட்டிலை பற்றியவளை கண்டு ஆயாசமும், ஆத்திரமும் எழுந்தது.

“இப்படி முடியாத நிலையிலும் அப்படி என்ன வைராக்கியம் வேண்டிக் கிடக்கு? என்னை பிடிச்சுக்கிட்டா தான் என்ன? இந்த பப்ளிக் பிளேஸ்ல வச்சு அப்படி என்ன உன்னை பண்ணிருவேன்?” தன்னை புரிந்துக் கொள்ள மறுக்கிறாளே என்ற ஆற்றாமையில் சரவெடியை போல் படபடத்தவனை கண்டு என்ன நினைத்தாளோ, மெதுவே நெருங்கியவள் தயக்கத்துடன் அவன் கரத்தை பற்றிக் கொண்டாள்.

அவளின் செயலில் அகச் சுணக்கம் சூரியனை கண்ட பனி போல் சடுதியில் மறைந்திருக்க, அவளை தாங்கியபடி அழைத்துச் சென்றிருந்தான்.

“எதுவும் சாப்பிடுறியா கலை, ஹோட்டலில் நிறுத்தவா பாப்பாவுக்கு பால் வேண்டுமா?” என்று பரிவுடன் வினவ...

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... இனி நான் பார்த்துக்கிறேன், இதையே அட்வாண்டேஜா எடுத்துக்காதீங்க அப்புறம் ஒரேடியா போயிருவேன்” சீறியவளை கண்டு பெருத்த மனக்கிலேசம் உண்டாகியிருக்க, இதை இப்படியே விட்டுவிடுவது உசிதம் அல்ல என்றெண்ணியவன் கிரீச் என்ற சப்தத்துடன் உடனடியாக காரை நிறுத்தி அதிலிருந்து வேகமாக இறங்கியவன், தன் அலைபேசியை எடுத்து யாரிடமோ வேககுரலில் பேசிவிட்டு, நேரே அவர்களின் வடவள்ளி வீட்டிற்கு காரை விட்டிருந்தான். புதிதாக வந்திருந்த இடத்தை கண்டு திருத்திருத்த வாணி...

“ஆமாம் இங்கே ஏன் வந்திருக்கீங்க, இது யார் வீடு?” என்ற தொடர் கேள்விக்கணைகளை தொடுத்தவளை கண்டு கொள்ளாமல் அவளிடம் கையில் ஒரு துண்டு சீட்டை நீட்டினான்.

“என்ன இது?”

“வாங்கிப் படிச்சு பாரு புரியும்” என்றவனிடம் அதை வாங்கிப் பார்த்தவளின் கண்களில் ஒரு அலைபேசி எண் இருக்கவே புரியாது பார்த்தவளை தொடர்ந்து...

“இது இந்த ஏரியா சப் இன்ஸ்ஃபெக்டர் போன் நம்பர்... இங்கே உனக்கு என்னால் ஏதாவது ஆபத்துன்னா... அதாவது, உன் கையை பிடிச்சு இழுத்துட்டாளோ... இல்லை, அத்துமீறி நடந்துகிட்டாளோ... இந்த நம்பருக்கு போன் பண்ணி, என் புருஷன் என்னை தொட்டுட்டான் என் கற்பு பறி போயிருச்சு, இவனை புடிச்சு குண்டர் சட்டத்தில் போடுங்கன்னு சொல்லு என்னை கவனிக்கிற விதமா கவனிச்சு கூட்டிட்டு போய் கம்பி எண்ண வைப்பாங்க” என்றவன் அவள் கையிலிருந்த மகளை வெடுக்கென்று பெற்றுக் கொண்டு உள்ளே சென்றவனை திகைத்து பார்த்திருந்தாள்.

“இவன் என்ன இப்படி பேசிட்டு போறான்” என்று பேசிக் கொண்டே உள்ளே சென்றிருந்தாள்.

அவர்கள் இருந்த வீட்டை போலவே சகல வசதிகளுடன் இருந்த வீட்டை அளவெடுத்தப்படியே உள்ளே நுழைந்தவளிடன் ஒரு முழு குவளை நிரம்ப மிதமான சூட்டில் இருந்த பாதாம் பாலை அவளிடம் நீட்டினான்.

அவளோ அவனையும், பாலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க பொறுமையிழந்தவன்... அருகிலிருந்த மேஜை மேல் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டிருந்தான், அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் அலைமோதி கொண்டிருந்தது.

அடுத்ததினம் உடல் பலம் குறைவாக இருந்தாலும் சிரமப்பட்டே பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளை கண்டு ஆத்திரம் மேலோங்கியதில் அவளிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்றதை அறிந்து அங்கிருந்து வேகமாக வெளியேறியவன், அவளை வீட்டின் உள்ளேயே விட்டு வைத்து பூட்டி விட்டு நெற்றியில் கரம் வைத்து தாங்கியபடி வாசற்படியில் அமர்ந்துவிட்டான்.

“ரஞ்சன் என்ன பண்றீங்க? எதுக்காக கதவை பூட்டுறீங்க, திறங்க ஸ்கூலுக்கு டைம் ஆச்சு”

வாணி உள்ளிருந்து கதவை தட்டி கத்திக் கொண்டிருந்தவளின் குரலுக்கு அசையாமல் கிணற்றில் எறிந்த கல்லை போல் அசையாமல் அமர்ந்திருந்தவன், கடையில் இருந்து தொழில் சம்மந்தமாக அழைப்பை ஏற்று வெளியே சென்றுவிட்டான். உள்ளே எரிமலையாய் கொந்தளித்து கொண்டிருந்த வாணி அவனுடம் தர்க்கம் செய்ய வேண்டி நேற்றைய உடல் பலவீனத்தையும் பொருட்படுத்தாமல் குழந்தைக்கு மட்டும் ஆகாரம் கொடுத்துவிட்டு அவள் உணவே உட்கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
**********************
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதிய வேளையில் கதவு திறக்கும் ஒலி கேட்கவும் ஆத்திரத்தில் வேகமாக எழுந்து கதவு அருகே சென்று நின்றவள், கணவனை தன் வசைமாரியால் வெளுத்து கட்டிவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் சீற்றத்தில் சிவந்த முகத்துடன் கதவு நீக்கிய கணம்...

“என்ன நினைச்சு.......” என்றவளின் வார்த்தை பொத்தானை அழுத்தியது போல் நின்றது... அங்கே தன் கணவனுக்கு பதிலாக நின்றிருந்த சம்யுக்தாவையும், தரனையும் கண்டு இதழ்கள் ஓட்டிக் கொண்டு பிரிய மறுக்க அசைவற்று நின்றுவிட்டாள்.

அவள் நின்றிருந்த நிலையே அங்கே அவர்களை எதிர்பார்க்கவில்லை என்பதை காட்டியிருக்க, இருவருமே அவளை புருவம் சுருங்க யோசனையாக பார்த்தபடி உள்ளே நுழைய, அவர்களை தொடர்ந்து வந்த ரஞ்சனை தீப்பார்வையில் சுட்டப்படி... ‘இது உன் வேலைதானா என்று குமைந்து கொண்டிருந்தது’ சம்யுக்தா இருந்த பக்க பலத்தில் ரஞ்சன் ஆமாம் என்று இமை சிமிட்டியவனை பார்வையால் கண்டித்தப்படி அவர்களை வரவேற்றிருந்தாள்...

“வாங்க அண்ணா, அண்ணி! சாரி உங்களை உள்ளே கூப்பிட மறந்துட்டேன்”

“நல்ல வேளை எங்க எங்களையே மறந்துட்டியோன்னு நினைச்சுட்டேன்” என்று கூறிய மனைவியை தரன் சபாஷ் என்று கடைக்கண்ணால் நோக்கி நயன பாஷையில் பாராட்டியிருந்தான். அவள் அண்ணியின் கேள்வியில் தர்ம சங்கடமாகிப் போக அதற்கு கணவனையே கூறு போட்டிருந்தாள்.

“அப்புறம் எப்படி இருக்கிற, உன் உடம்பு எப்படி இருக்கு?” என்று விசாரித்த தமையனிடத்தில்...

“அதெல்லாம் நான் ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணா” சகஜம் போல் பதில் கூறியவளின் வார்த்தையை சந்தேகித்து கணவனும், மனைவியும் பார்வை பரிமாறிக் கொண்டனர்.

“அப்போ நேத்து என்ன நடந்துச்சு? திடிர்னு ஹாஸ்பிடல் பக்கம் போனியாம் என்ன டாக்டர் உன்னுடைய தோழியா... இல்லை, நண்பரா?” என்றவளை கண்டு என்ன பதில் கூறுவது என்று விளங்காமல் எச்சிலை கூடி விழுங்கி திருதிருத்தாள்.

“உடம்புக்கு என்னன்னு சொல்லு வாணி” என்று தரன் அதட்டியதும் அவன் பேச்சிற்கு அரண்டு நடந்ததை கூறினாள்.

“நேத்து மதியம் வொர்க் அதிகமா இருந்ததால சாப்பிட முடியலை ஈவ்னிங் மயக்கம் வந்திருச்சு அண்ணா”

“ஏன் உன் புருஷன் சோறு போடமாட்டேன்னு சொல்லிட்டானா?” நக்கலாக வினவியவனின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் தடுமாறியவளுக்கு அன்றும் உண்ணாது இருந்ததில் இல்லமே சுழல்வது போல் இருக்க ரஞ்சன் அவள் அருகில் அமர்ந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான்.

“நான் சொன்ன போது ரெண்டு பேருமே நம்ப முடியலைன்னு சொன்னீங்களே, இப்போ நீங்களே பாருங்க ஃபுல் பாட்டில் சரக்கு அடிச்சவ மாதிரி உட்கார்ந்த இடத்துலயே உலகத்தை சுத்தி பார்க்கிறா” என்று கூறி பற்களை கடித்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவள் தேனியில் இருந்ததை விட இருமடங்கு உடல் நலிந்து முகம் வாடி கண்களில் கருவளையம் விழுந்து ஏதோ நோயாளி போல் காட்சியளித்தவளை கண்டு வியாக்கூலம் அடைந்தனர்.

சம்யுக்தா, வாணியை வற்புறுத்தி உணவு உண்ண வைத்து மருத்துவர் பரிந்துரைத்திருந்த சத்து மாத்திரைகளையும் கொடுத்து உண்ண வைத்து அவளுக்கு சற்று பலமேற்றியிருந்தார்கள்.

ரஞ்சனுக்கு ஒரு புறம் நிம்மதியளித்த போதும், தன்னுடன் இருப்பதை அத்தனை வெறுப்பாக எண்ணுகிறாளா என்று விசாரம் கொண்டவனுக்கு அடிமனதை சுருக்கென்று வலி தைத்தது.

தான் சொல்லி தானே கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்... தன் தங்கையையும், அவள் கணவரையும் வரவழைத்து அவளுக்கு எடுத்து கூற செய்யலாம் என்ற நோக்கத்தில் தான் இருவரையும் வர வைத்திருந்தான்... அவன் நினைத்தது போலவே சம்யுக்தாவின் அதட்டலிலும், தரனின் மிரட்டலிலும் கட்டுப்பட்டு அவர்கள் சொன்னதை ஏற்று நடந்திருந்தாள்.

இரண்டு மணி நேரம் அவளை ஓய்வெடுக்க வைத்துவிட்டு, சம்யுக்தா, தரன் இருவரும் ரஞ்சனுடன் உண்டு விட்டு அவனை பற்றியும், தொழிலை பற்றியும் விசாரித்து, இருவரும் பயணம் செய்த களைப்பை சற்று நேரம் ஆற்றிக் கொண்டனர். வாணி எழும்பியதை ரஞ்சன் கூறியதும் அனைவரும் ஒன்று கூடினர்.

“ஏன் வாணி நீ சாப்பிடாம உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்கிற? உனக்கு உன் புருஷன் மேல தானே கோபம், அதை அவன் மேல காட்டு ஏன் சாப்பாட்டு மேல காட்டுற?” என்று வினவினாள் சம்யுக்தா.

“நல்லா கேளு சம்முமா, நேத்து மட்டும் நான் இவளையும் கூட்டிட்டே வீட்டுக்கு போயிரலாம்னு அந்த பக்கம் போகாம இருந்திருந்தேன்னா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்?” என்றவனுக்கு நினைக்கும் போதே பயங்கரமாக இருந்ததை எண்ணி குலை நடுங்கியவனை சிறிதும் லட்சியம் செய்யாமல், அவள் நேற்று கூறிய பதிலையே இருவரிடமும் ஒப்புவிக்க இருவருக்குமே வேதனையும், கோபமும் ஒருசேர எழுந்தது...

“ஏன் வாணி இப்படி எல்லாம் பண்ணுற? உனக்கு ஏதோ ஆகிருச்சேன்னு நாங்க எவ்ளோ பதறிப் போனோம் தெரியுமா... நீ முரண்டு பிடிக்கிறதை நம்பாம ரஞ்சனை தான் திட்டினேன், அவன் அப்போக் கூட நீ பண்ணுற அழிச்சாட்டியத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாம பல்லை கடிச்சு பொறுத்துக்கிட்டு இருந்தான்”

“அங்கிருந்து கிளம்புறதுக்கு முன்னாடி நான் உங்கிட்ட என்ன சொல்லி அனுப்பினேன், நீ என்ன செய்து வச்சிருக்க? கொஞ்சமாச்சு நீ பெற்ற பிள்ளையை நினைச்சு பார்த்தியா?” என்ற சம்யுக்தாவின் பேச்சுக்கு எதிர்த்து பதில் பேச முடியாமல் உதட்டை கடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

“சரி இப்போ நீ மற்றத்தை எல்லாம் மறந்திரு, நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு உனக்கு ரஞ்சன் கூட வாழ விருப்பம் இருக்கா இல்லையா?” என்றவனின் கேள்விக்கு இருதலை கொல்லி எறும்பாக பரிதவித்தாள்.

“என் பிள்ளைக்கு அப்பா அவர் தானே. அப்போ அவர் கூட தானே நான் வாழணும்” என்றவளின் மழுப்பாலான பதிலையே ஏற்காதவன்...

“சரி நீ சொல்ற மாதிரியே வச்சுக்குவோம் அப்போ நீ சொன்னதுக்கு அர்த்தம் ரஞ்சன் கூட வாழ விருப்பம் இல்லை அப்படித் தானே” என்றவனுக்கு மௌனத்தையே பதிலாக கொடுக்க மௌனம் சம்மதம் என்ற ரீதியில் தன் பேச்சை தொடர்ந்தவன்...

“அப்போ நான் சொல்றது போல செய்... உன் கழுத்தில் இருக்கிற தாலியையும், நீ பெற்றெடுத்த உன் பெண்ணையும் அவன்கிட்ட ஒப்படைச்சுட்டு வா, உனக்கு நான் புது வாழ்க்கை அமைச்சு கொடுக்குறேன்... அப்படியாச்சு நிம்மதியா வாழு” என்றதும் தான் தாமதம்...

“அண்ணாஆஆ...” என்று உச்சாஸ்தாயில் கத்தியவள் விழிகளில் அவன் வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான சீற்றம் வெளிப்பட...

“என்னால் கண்டவனையும் புருஷன்னு சொல்ல முடியாது” என்று அவசரமாக உரைத்திருந்தாள்.

“சரி அப்போ உன் புருஷன் கூடவே வாழ முயற்சி பண்ணலாமே?”

“அது எப்படி என்னால் முடியும் அண்ணா... நீங்களே இப்படி சொல்லலாமா? எத்தனை அவமானம், எத்தனை கஷ்டம், எத்தனை பேரோட பழி சொல்லுக்கு ஆளானேன்” என்றவளின் விழிகளில் வலியில் மின்ன வேதனையில் முகம் கசங்கியது. ரஞ்சனுக்கும் அந்த பேச்சில் மனதை குத்த இயலாமையில் உடல் விரைத்துக் கொண்டது.

“இங்கே பாரு வாணி எல்லாமே உண்மை தான்... வேதனையும், வலிகளும் அவ்ளோ சுலபமா மறையாது தான்... ஒரு புத்தம் புது நோட் புத்தகத்தில் அழகா எழுதிட்டு இருக்கும் போது ஒரு பக்கத்துல ஏதாவது தப்பா எழுதிட்டோம்ன்னா முக்கால் வாசி எழுதினதை அப்படியே தூக்கி போடுவோமா என்ன? தப்பா எழுதின அந்த பக்கத்தை கிழிச்சு போட்டுட்டு திரும்ப அடுத்த புது பக்கத்தில் தொடர்ச்சியை எழுதறது இல்லையா?”

“அதே போல தான் வாழ்க்கையும்... ஏதோ ஒரு தருணத்தில் உனக்கு வாழ்க்கை தடம் மாறி போச்சு தான், அதுக்காக மொத்த வாழ்க்கையையும் வாழாம சீரழிச்சுகிறதா? ரஞ்சன் என் சகோதரன் அப்படிங்கிறதுக்காக இதை சொல்லலை, இந்த இடத்தில் யாரா இருந்தாலும் நான் இதை தான் சொல்லியிருப்பேன்”

“ஒண்ணா அவன் கூட வாழ முயற்சி எடுக்க முடியுமான்னு பாரு... இல்லை முடியாது, அவனுக்கு தண்டனை கொடுக்கிறதா நினைச்சு உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்குவேனா, அதுக்கு நாங்க அனுமதிக்கமாட்டோம், அதுக்கு பதிலா உன் அண்ணன் சொன்ன மாதிரி செய்துட்டு புது வாழ்க்கையை தொடங்கு” என்று கட்டளையாக சம்யுக்தா உரைத்திருக்க...

“வேண்டாம் சம்முமா விடு, அவகிட்டே இதெல்லாம் கேட்கிறது பேசுறது எல்லாம் வீண்... ஏன்னா அவ என்னை சுத்தமா வெறுத்துட்டா, அதனால் அவளை இப்போவே கூட்டிட்டு போங்க” என்ற கணவனின் சொல்லில் அப்பாடா என்று உணர அடுத்த கணமே மண்ணை அள்ளி தூவினான்.

“அவளுக்கு வேற நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து பேசி முடிச்சதும் சொல்லுங்க, அவ கழுத்தில் நான் கட்டின தாலியையும், குழந்தையையும் வாங்கிட்டு வந்துடறேன்” என்று கூறி எரிகின்ற கொல்லியில் எண்ணெய் வார்பது போல் பேசியதும் எங்கிருந்து அத்தனை கோபமும், வேகமும் வந்ததோ...

“செருப்பு பிஞ்சிரும்” என்று சிறிதும் யோசியாமல் சுள்ளென்று கூறியவளின் வார்த்தை பாதிக்காது அசட்டையாக பார்த்தவன்...

“வெளில தான் செருப்பு கிடக்கு போய் எடுத்துட்டு வந்து ரெண்டு போடு, அப்போவாச்சும் நான் போடுற சாப்பாடு உன் தொண்டையில் இறங்குதான்னு பார்க்கலாம்” விச்ராந்தியாக கூறியிருந்தான்.

“இங்கே பாரு வாணி அங்கிருந்தப்போ உன் புருஷன் மேல தப்பிருந்தது, அதனால நான் உனக்கு ஆதரவா நின்னேன்... இங்கே விட்டப்போவும் அதே தான், ஆனால் இப்போ நீ பண்றதை பார்த்து தான் கோபம் வருது... அவன் கோபப்படுறான்னு பாயுறியே உன் உடம்பை பார்த்துக்க உனக்கு என்ன? நீ என்ன குழந்தையா கெஞ்சி கொஞ்சி தினமும் பார்த்துப் பார்த்து ஊட்டிவிட... அது கூட பரவாயில்லை புருஷனாச்சு, பொண்டாட்டியாச்சு நீங்க சந்தோசமா இருந்தா சரின்னு ஒதுங்கிரலாம் ஆனால்... இப்படி நோய் வந்தவ மாதிரி ஒரேடியா உடம்பை கெடுத்து வச்சுருக்கியே இதை நாங்க எப்படி சுலபமா எடுத்துக்கிறது?”

“ரஞ்சன் தான் மன்னிச்சிரு திருந்தி வாழ முயற்சி பன்றேன்னு சொல்றான்ல, அவனுக்கு ரெண்டாவது வாய்ப்பை கொடு”

“அப்போவும் தப்பு பண்ணினா?” வேகமாக வினாவியிருந்தாள்.

“மூணாவது முறை ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் அதுக்கப்புறமும் தப்பு செய்தா போடா ஹேருன்னு தூக்கிப் போட்டுட்டு வந்திரலாம்” ஸ்பஷ்டமாக உரைத்தவனின் பேச்சில் உதடுகளை இறுக மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அவளுக்கு யோசிக்க சில நிமிடங்கள் ஒதுக்கிவிட்டு காத்திருக்க அவளாக வெளிவராமல் தனக்குள் உழன்றுக் கொண்டிருந்ததை அறிந்து தானே எடுத்து கொடுக்கலானான்.

“என்ன சொல்ல நினைக்கிறயோ அதை சொல்லு வாணி” என்று தரன் கூறியிருக்க... தான் பேச வேண்டிய நிர்பந்தத்தை உணர்ந்து தன்னை திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவள்...

“நான் ஒழுங்கா சாப்பிட்டு என் உடம்பை பார்த்துக்கிறேன்” என்க...

“எப்படி வேலைக்கு போய் அவ சம்பாரிக்கிற காசில் மட்டுமா?” வெடுக்கென்று வினவினான் ரஞ்சன்.

“ஏன் அதில் என்ன தப்பு?”

“மன்னாங்கட்டி...! அப்புறம் ஏன் மயக்கம் போட்டு விழுந்து தொலைச்சான்னு கேளுங்க ரெண்டு பேரும்”

“என் தங்கச்சிக்கு ஒண்ணுன்னா அடுத்த நிமிஷம் உன் சாவு என் கையில் தான்னு சொன்னீங்களே... இப்போ உன் தங்கச்சி தான் என்னை சாவடிக்கிறா, அதுக்கு என்ன பண்ணப் போறீங்க கவின்?” என்று வினவியவனுக்கு பதில் கூற இயலாது விக்கித்து பார்த்திருந்தான்.

“அவ என்னை மன்னிக்கமாட்டா, ஏத்துக்கமாட்டா நான் சம்பாரிச்சு வாங்கிப் போடுற உணவை சாப்பிடமாட்டா, அவ தேவைகளுக்கு என்னை எதிர்பார்க்கமாட்டான்னா உன் தங்கச்சி யாரு என் மகளை பெற்று கொடுத்த வாடகை தாயா?”

“அதே தான் நானும் கேட்கிறேன்... காதலிச்ச என் கூட உறவாடிய போது இனிச்ச உறவு, என் வயிற்றில் குழந்தை வந்ததும் கலைச்சுட்டு போன்னு சொன்னீங்களே, அப்போ உதயமாக வேண்டிய நம்ம வாழ்க்கை அஸ்தமிச்சிருச்சேன்னு நான் பரிதாவிச்சு நின்னப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்?” அவள் விழிகள் கண்ணீரில் பளபளக்க, இதயம் வேகமாக துடித்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கோபாவேசத்துடன் பேசியவளின் பேச்சில் ரஞ்சன் விக்கித்துப் போனான்.

“ஆமாம் நான் தப்பு செய்தேன் தான்... அப்போதைய என் எண்ணம் வாழ்க்கை முறை எல்லாமே வேற... ஆனால் இப்போதைய என் எண்ணமே வேற” கம்மிய குரலில் தன் தவறை தவறென்று ஒத்துக் கொண்டவனை தொடர்ந்து...

“அந்த எண்ணம் எப்படி மாறுச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா? ஏன்னா, சில விஷயங்கள் மனுஷன் கிட்டே எப்போவும் மாறாது, அதில் ஒண்ணு தான் அடுத்தவ மனசை பற்றி கவலைபாடாம தன் தேவைக்கு பயன்படுத்திகிட்டு வேண்டாம்னு தூக்கியெறிஞ்சு உயிரோடு கொல்லுற வக்கிர குணம், அது மாறுச்சுன்னு சொன்னா நம்புற மாதிரி இல்லையே?”

இவர்களின் வார்த்தையாடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இருவருக்கும் தர்ம சங்கடமாக இருந்தாலும், எப்படியோ போகட்டும் என்று நகர மனம் வாராமல் இருவருக்கும் அவர்களுக்கு உண்டான இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்து மௌனம் காத்துக் கொண்டிருந்தனர்.

மனைவியின் பேச்சில் நெக்குருகி அமர்ந்திருந்த ரஞ்சனும், ஆவேசத்தில் மூச்சிரைக்க அமர்ந்திருந்த வாணி இருவருக்குமே சம்யுக்தா, தரனின் உணர்ச்சிகளை உணர்ந்ததாவே தெரியவில்லை.

“இதுக்கு நான் முன்னாடியே பதில் சொன்னதா தான் நியாபகம்”

“உனக்கு ஒரே ஒரு வாக்கு தரேன் வாணி, உன் அண்ணன் சொன்ன மாதிரி ரெண்டு தடவை வாய்ப்பு கொடுக்க வேண்டாம் ஒரே ஒரு தடவை மட்டும் கொடு, அதில் நான் திரும்பவும் பழைய ரஞ்சனா மாறினேனா அந்த நிமிஷமே என்கிட்டே இருந்து நானே உனக்கு முழு விடுதலை கொடுத்து அனுப்பறேன் என்னை நம்பு” என்றவனின் கண்கள் அவளிடம் யாசித்துக் கொண்டிருந்தது.

அவனின் பேச்சில் தரனுக்கு நன்மதிப்புடன் கூடிய அபிப்ராயம் வந்திருந்தது... சம்யுக்தா தன் தமையனின் தகைமையை பெருமிதத்துடன் பார்த்தபடி கணவனுக்கு ஜாடை காட்டினாள்.

“வாணி அது தான் ரஞ்சன் சொல்றாரே நீ ஏன் அதை பத்தி யோசிக்கக்கூடாது”

“ரஞ்சன் அண்ணா சொல்லுற வார்த்தைக்கு பிணையா நான் உனக்கு உறுதி தரேன் அவர் சொல்லுறது போல் நடந்துக் காட்டலைன்னா, நீ என்ன சொல்லுறியோ அதே முடிவை செயலாற்ற நான் உதவி செய்றேன்”

வாணி யோசித்து பார்த்தவள் “ம்ம்ம்” என்று தான் கூறினாள்... அதற்கே ரஞ்சனின் முகம் மலர்ந்து விகசித்து விட்டிருந்தது.

“சரி அப்போ நீ இனிமே வெளியில் வேலைக்கு போக வேண்டாம், ரஞ்சன் கூடவே போய் கடையில் மேனேஜ்மெண்ட் பார்த்துக்கோ... குழந்தையையும் ரெண்டு பேர் பார்த்துகிட்டு வேலையும் பார்த்துட்டு உனக்கு சிரமம் இருக்காது”

“இல்லை அண்ணி! அது சரி வராதே...” என்று ராகத்துடன் இழுத்தவளை...

“ஏன் சரி வராது?” என்று கண்களில் தேங்கிய கலவரத்துடன் வினவியனிடம்...

“எனக்கு... எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் வேணும், ப்ளீஸ் அதுலயும் கை வைக்காதீங்க”

“உனக்கான தனிப்பட்ட ஸ்பேஸ் எப்போவுமே கொடுப்பேன் வாணி... அங்கே நீ என் பொசிஷன்க்கு அடுத்து நீ தான், அதனால் உனக்கான சாலரியை நான் உனக்காக தனியா அலாட் பண்ணுறேன்... அதில் நான் எந்த வித கேள்வியும் கேட்கமாட்டேன்... அதே சமயம் எனக்கு மனைவியா, என் குழந்தைக்கு அம்மாவா என்னுடைய பாதுக்காப்பிலும், அரவணைப்பிலும் இருக்கணும்... ப்ளீஸ்! முடியாதுன்னு சொல்லாதே இதுக்கும் அந்த கண்டிஷன் பொருந்தும்” என்றதும் மெல்ல பார்வையை நகர்த்தி அவன் மேல் படிய விட்டவளின் விழிகளில் ஏக்கம் நிறைந்தோடியது. அதை கண்ட ரஞ்சனுக்கு அவள் மனம் புரிப்பட தன் தவறை எண்ணி காலம் கடந்து வருந்தியவனும் பார்வையால் மன்னிப்பு யாசித்துக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக வாணியை சரிபடுத்திய திருப்தியுடன் அன்று இரவே சம்யுக்தா, தரன் இருவரும் தேனி புறப்பட்டு சென்றிருந்தனர்.



சுவடுகள் தொடரும்....



**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-27 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-28

இரவு நடுஜாமத்தில் தர்சனின் அலைபேசி இசைமீட்டி அவன் துயிலை கலைத்திருக்க, நித்திரையில் ஆழந்தப்படியே... “இந்த நேரத்தில் யாருடா டிஸ்டர்ப் பண்றது” என்று புலம்பிக் கொண்டே பேசியின் திரையில் கண்ணுறாமல் செவியில் கொடுத்தவன்... “ஹலோ...” என்றதும் எதிர்முனையில் கூறிய செய்தியை கேட்டு அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவனுக்கு தூக்கம் பறந்தோடியிருந்தது.

“எங்கிருந்து பேசுறீங்க?”

“...........”

“ஆமாம், அங்கேயா உடனே வரேன்”

“...........”

“இல்லை... இல்லை... உடனே வரேன்” என்று அவசரமாக கூறியவன், தடபுடலாக தயாராகி வீட்டிலிருந்து கிளம்பியவன் செல்லும் வழியிலேயே கலாதரனுக்கும் தகவல் கொடுத்து இடத்தை கூறி அங்கே வந்து விட கோரினான்.

தர்சன் சிறிய அளவிலான அந்த மதுகூடத்தின் முன்பில் காரை நிறுத்தி இறங்கவும், கலாதரன் தன் இரு சக்கர வாகனத்தில் அங்கே பிரசன்னமாகவும் மிகச் சரியாக இருந்தது.

“என்னாச்சு தர்சன், ஏன் திடிர்னு வர சொன்னே, யாருக்கு என்ன?”

“உங்க நண்பர் தான் குடிச்சுட்டு மட்டையாகி இருக்கிறதா சொல்றாங்க”

“யார் அர்ஜுனா? நிச்சயம் இருக்காது நல்லா விசாரிச்சியா?” என்று கேள்வியை முன் வைக்க...

“ம்ச்... அதெப்படி விசாரிக்காமல் இருப்பேன், வாங்க போய் பார்த்தா தெரியப் போகுது, அதுக்காக தானே உங்களை வர சொன்னேன்” என்றதும் அவன் கூறியதை நம்பாமல் வேறு யாராவது இருக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றவனுக்கு மூர்ச்சையாகி கிடந்த அர்ஜுனை கண்டு இருவருக்குமே மூச்சு நின்று போனது.

“என்ன டா இதெல்லாம்” என்று பிரஸ்தாபித்தபடி வேகமாக அருகில் சென்று பார்த்தவர்களிடம் மதுகூடத்தின் உரிமையாளரும், அங்கே பணியில் ஈடுபட்டிருந்த இரு ஆட்களும் நெருங்கியவர்கள்...

“நீங்கதான் இவருக்கு தெரிஞ்சவங்களா?”

“ஆமாம் என்னாச்சு?” என்று தர்சன், தரன் ஒரு சேர குரலில் வினவியதும்...

“என்னாச்சா கொஞ்சம் பக்கத்தில் போய் பாருங்க ரெண்டு ஃபுல் பாட்டில் காலி, மூணாவது பாட்டிலை கையிலெடுக்கக் கூட முடியலை ஆனா, அதுலயும் பாதி குடிச்சுட்டு அப்படியே விழுந்தவர் தான் எழுந்திருக்கவேயில்லை” என்று கூறிய உரிமையாளரை பேச்சில் உச்சகட்ட அதிர்ச்சியில் தாக்குண்டவர்கள் அவன் அருகில் சென்று மேஜையில் தலைசாய்த்திருந்தவனை தொட்டு திருப்ப முயற்சிக்க, அவனை அசைக்க முடியாமல் அவன் மேலிருந்து குப்பென்று வந்த மதுவாடை அவர்கள் நாசியை தாக்கி அவர்கள் வயிற்றையே புரட்ட வைத்தது.

“இவனுக்கு குடிக்கிற பழக்கமே இல்லை சார், இவன் ஏன் இப்படி பண்ணினான்னு தெரியலை?” என்று தர்சனும்...

“இவன் கூட யாரும் வந்தாங்களா?” என்று தரனும் வினவினர்.

“அதெல்லாம் யாரும் வரலை சார்” என்றதும் அவர்களால் அர்ஜுனா இங்கே வந்து இருக்கிறான் என்று நம்ப முடியாத பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

“எனக்கு அப்போவே சந்தேகமா இருந்துச்சுங்க, முதல் பாட்டிலை ஆர்டர் பண்ணிட்டு ரொம்ப நேரமா யோசிச்சுட்டு இருந்தவரு திடிர்னு மூக்கை பொத்திகிட்டு ஒரே மூச்சா மடமடன்னு அடிச்சுட்டாரு” என்று அந்த கடைச் சிப்பந்தி ஒருவர் கூறியதை தொடர்ந்து மற்றொருவன் இணைந்தான்.

“அப்போவே கொமட்டிக்கிட்டு பின்னாடி போனாரு சார், ஆனா வொமிட் பண்ணலை... திரும்பவும் வந்து இன்னொன்னு ஆர்டர் பண்ணதும் நான் சொன்னேன், சார் உங்களுக்கு இது தான் முதல் தடவைன்னா இது போதும் நாளைக்கு திரும்ப வாங்கன்னு சொன்னேன், ஆனா அதுக்கு இவரு...”

“ஏன் அனுபவம் இருந்தாதான் கொடுப்பியா? ஒழுங்கா நான் சொன்னதை செய், இந்தா இந்த கிரெடிட் கார்டை பிடி எவ்ளோ பில் வருதோ போட்டுக்கோ” என்று கூறி நீட்டியதை வாங்கிக் கொண்டு உரிமையாளரிடம் அவன் தெரிவித்திருந்தான்.

“நல்ல வேளை சார் இங்க வேலை செய்யுற பசங்க எல்லாம் நேர்மையானவங்க... அதனால் பையன் கார்டை என்கிட்டே கொண்டு வந்து கொடுத்தான்... நானும் ஆளை பார்த்தா பெரிய இடமா இருக்கே, ஏதோ பிரச்சனை விரக்தியில் இப்படி பண்ணுறார் போலன்னு சுதாரிச்சு நான் சரக்குக்கான காசை மட்டும் எடுத்துட்டு மீதியை அப்படியே வச்சுட்டேன்... இதே வேறொரு இடமா இருந்திருந்தா இந்நேரம் அத்தனை பணத்தையும் கொள்ளை அடிச்சிருப்பாங்க”

அர்ஜுன் மது அருந்தி இருப்பதையே நம்ப முடியாதவர்களுக்கு அவர்கள் கதை கதையாய் கூறியதை கேட்டு கலவரமடைந்தனர். முதலில் அந்த இடத்தை விட்டு கிளம்ப எண்ணியவர்கள்...

“ரொம்ப தேங்க்ஸ் சார் போலீசில் சொல்லி நீங்களா ஆக்சன் எடுக்காமல் எங்ககிட்டே நேரடியா சொன்னதுக்கு”

“நாங்க முறையா அப்படி தான் பண்ணியிருக்கணும்... ஆனால் இவரை பார்த்தா குடிக்கிறவர் போல தெரியலையேன்னு அப்போவே சந்தேகப்பட்டு தான் கவனிச்சோம், குடிச்சதுக்கு பணம் கொடுக்காம போறவனுங்களை நாங்க போய் வழி மறைச்சு அவன் சட்டை பாக்கட்டில் இருந்து பில்லுக்கான அமௌண்டை பறிக்கிற மாதிரி இருக்கும்... ஆனால் நாம மட்டையாகிருவோம்னு முன்னாடியே யோசிச்சு பில்லுக்காக கிரெடிட் கார்டை கொடுத்ததும் தான் கவனிக்க ஆரம்பிச்சோம்... கண்டிப்பா எதோ உள் வீட்டு விவகாரம் தான் அதனால் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிரலாம்ன்னு தான் உங்ககிட்டே சொல்லிட்டேன்”

“உண்மை தான் சார்! அவனுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை, எங்களுக்கே இப்போ அதிர்ச்சியா தான் இருக்கு”

“எல்லாம் காதல் படுத்துற பாடா இருக்கும் பொண்ணு யாருன்னு கேட்டு கட்டி வச்சிருங்க” சிரித்துக் கொண்டே இயம்பியவரை கண்டு...

“சார் இவனுக்கு கல்யாணம் ஆகிருச்சு, அதுவும் லவ் மேரேஜ் தான்”

“அப்போ பொண்டாட்டி கூட சண்டையா இருக்கும்... சரி எதுவா இருந்தாலும் இந்த கருமாந்திரம் எல்லாம் இனி வேண்டாம்ன்னு சொல்லி சரி பண்ணப் பாருங்க” ஒரு மதுக்கடை உரிமையாளர் தங்களுக்கு வாடிக்கையாளரின் எண்ணிக்கை கூடினால் சரி, யாரோ எப்படியோ போகட்டும் என்றெண்ணாமல் நல்ல விதமாக பேசி அறிவுரையும் கூறியதை கண்டு அவர் மேல் மதிப்பு உயர்ந்து தெரிந்தது.

“ஹெல்புக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றவர்கள் தர்சன், அர்ஜுன் இருவருமாக சேர்ந்து அவனை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.

இருவரும் சிரமப்பட்டு அவனை காரில் ஏற்றி விட்டு எங்கே கூட்டி செல்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

தரனுக்கு ஒரு யோசனை உதித்திருக்க அதுவே உசிதம் என்றும் மனதிற்கு பட்டதும் அதை செயல்படுத்த எண்ணி தர்சனிடம் கூறினான்.

“தர்சன் நீ இவனை கூட்டிட்டு கம்பனியில் கெஸ்ட் ரூமில் தங்க வை, நான் அங்கே வண்டி எடுத்துட்டு வந்துடறேன்” வீட்டிற்கு அழைத்துச் சென்றால் பெரியவர்கள் கண்களில் பட்டு கேள்வி எழும்பும் என்றே கருதி பிரச்சனையை என்னவென்று விசாரித்து அவர்களுக்குள் முடித்து விட எண்ணியே தரன் அழுவலகம் அழைத்துச் செல்ல ஏவியிருந்தான்... தர்சனுக்கும் அதே எண்ணம் தான் இருந்ததில் வேறேதும் கேட்காமல் அழைத்துச் சென்றான்.

அங்கேயும் அர்ஜுனை இருவரும் சேர்ந்தே தூக்கி சென்றிருக்க அவன் மேல் வீசிய மதுவாடை பொறுக்காமல் இருவருக்குமே வயிற்றை புரட்டியது.

“இந்த கன்றாவியை இவன் எப்படி குடிச்சு தொலைச்சானோ?” என்று பிரலாபித்து இருந்தான்... அர்ஜுன் குடித்ததற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற சஞ்சலத்தில் இருந்த தரனுக்கு, தர்சனின் வார்த்தை அரைகுறையாக தான் அவன் செவியில் பாய்ந்திருந்தது.

“ஈவ்னிங் வீட்டுக்கு வந்தப்போ நீ பேசினியா தர்சன்... அவன் அப்போ எப்படி இருந்தான்னு கவனிச்சியா?” அவன் அப்படி என்ன மனநிலையில் தான் இருந்தான் என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டி விசாரித்தான்.

“இன்னைக்கு ஈவ்னிங் மட்டுமில்லை நான் இவன்கிட்ட சகஜமா பேசியே கொஞ்சம் நாள் ஆகுது... ஏதோ பித்து பிடிச்சவன் மாதிரி தான் இப்போல்லாம் சுத்துறான்... ஆனால் என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நைட் டிப்டாப்பா கிளம்பிப் போனான்” என்றவன் அன்று மாலை அவன் கவனித்தவற்றை விளக்கினான்.

அர்ஜுனுக்கு தன் மனைவி அவனிடம் சொல்லாமல் அங்கிருந்து சென்றதை எண்ணி தனக்குள் இறுகிப் போனான்... “என்னைக் கேவலமா பேசினதும் இல்லாம என்னை அலட்சியப்படுத்திவிட்டு போயிருக்க? இனி உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லைடி’ என்று தனக்குள் சூளுரைத்துக் கொண்டவனுக்கு அகமெல்லாம் சீறிக் கொண்டு எழும் அலையை போல் ஆக்ரோஷம் கொந்தளித்தது. அவள் மேல் கொண்டிருந்த காதல் தருணங்களை அசைபோட்டவனுக்கு மனம் கசந்துப் போனது.

அறைக்குள் நுழைந்தவனின் விழிகள் பஞ்சணையில் பதிய, தன்னவளுடன் காதல் கொண்டு கூடிகளித்த இன்ப இரவுகளின் இனிமையான நினைவுகள் ஆக்கிரமித்து சிந்தையை சடைந்தது. அங்கே நிற்கவே மூச்சுமுட்டுவது போல் உணர்ந்தவன் இரவு தூக்கத்திற்கு விடுமுறை அளித்துவிட்டு அழுவலகம் செல்வது போல் தயாராகி வெளியே சென்றுவிட்டான்.

உப்பரிகையில் காற்றாட நின்று அங்குமிங்கும் நடை போட்டப்படி இருந்த தர்சனின் பார்வையில் அர்ஜுன் சிக்கி விட யோசனையாக பார்த்திருந்தவன்... “இந்த நேரத்தில் இவ்ளோ ஃபார்மலா ரெடி ஆகி எங்கே போறான்?” என்று முணுமுணுத்து கொண்டவனுக்கு ஒன்றும் விளங்காது போக அப்போதைக்கு பெரிதும் யோசியாமல் விட்டு விட்டிருந்தான்.

அங்கிருந்து காரில் வெளியேறிய அர்ஜுனுக்கு முதலில் மது அருந்தும் எண்ணமே எழவில்லை... ஆனால் ஏகாந்தம் சுழ்ந்த தனிமை அவன் மனைவியின் வார்த்தைகளை நினைவிறுத்தி கொண்டே இருக்க, அதில் முக்கியமாக அவள் தோழி கூறியதாக கூறிய வார்த்தைகள் அவனை நிலையாக நிற்கவிடாமல் அலைக்கழிக்க வைத்துக் கொண்டிருந்தது.

“உயிரா காதலிச்சு, உன்னையே கல்யாணமும் செய்து குடும்பம் நடத்துற என் பேச்சை நம்பாம எவளோ ஒருத்தி பேச்சை நம்பியா என்னை சந்தேகப்படுற?” என்று மனசாட்சியில் அவளை கொண்டு நிறுத்தி வழக்கு வைத்து கொண்டே இருந்தான்... இந்த நினைவுகளை தகர்த்து ஒழித்துவிட்டு தாமும் சகஜமாக இருக்க முடியாதா என்ற கதனத்தில் பல முயற்சி மேற்கொண்டு அத்தனையும் தோல்வியில் முடிந்திருக்கவே, இறுதியாக மது கூடத்தின் வாயிலில் நின்றான்.

அப்போதும் உடனே சென்றுவிட முடியாமல் தயங்கியவனை, அவன் மனதையும், மூளையையும் கசக்கி பிழியும் கசப்பான நினைவுகளை கடக்க தன்னை திடப்படுத்திக் கொண்டே மதுவை உட்கொண்டிருந்தான்.

“இவன் நல்லா டிப்டாப்பா டிரஸ் பண்ணிட்டு போகவும் பொண்டாட்டி கூட மூவிக்கு போவான்னு நினைச்சேன்... ஆனால், கருமம் புடிஞ்ச மருந்தை குடிக்க போவான்னு நினைச்சும் பார்க்கலை”

அவன் கூற்றை மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் கேட்டவனுக்கு ஒன்றே ஒன்று ஸ்பஷ்டமாக விளங்கியது... அரசிக்கும், அர்ஜூனுக்கும் இடையில் ஏதோ பெரிய சச்சரவு நேர்ந்திருக்கிறது என்று தன் யூகத்தில் ஊர்ஜிதம் செய்தவன் முதலில் அவன் போதை தெளிய வைக்க முயற்சி செய்தான்.

“தர்சன் முதல்ல இவன் போதை தெளிய வைக்கணும், இப்போ அதுக்கான முயற்சியை எடுப்போம்”

“வொர்செஸ்டர்ஷைர் சாஸ் குடிச்சா உடனே போதை இறங்கிரும் ஆனால், இப்போ உடனே எங்கப் போறது?”

“அதெல்லாம் ஆகாத காரியம் கைவசமா எழுமிச்சை பழம் எடுத்து ஜூஸ் போடு அதை குடிச்சாலே முக்கால்வாசி குறைஞ்சிரும்”

“இப்போ அதுவும் இல்லையே?”

“நீ போய் வாட்ச்மேன்கிட்டே சொல்லி வாங்கிட்டு வா... நான் அதுக்குள்ள இவனை தண்ணியில முக்கி எடுக்க பார்க்கிறேன்”

“ம்ம்ம்... ஆமாம் நீங்க அதை செய்யுங்க நான் சீக்கிரம் வந்துடறேன்” என்று கூறிவிட்டு நகர்ந்ததும் தரன் கூறியது போல் அர்ஜுனை குளியலறைக்குள் தள்ளி அவன் மேல் வாலி வாலியாக தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டிருந்தான்.

தர்சன் எழுமிச்சை சாறு கலந்து எடுத்து வந்ததும் அவனை வெளியே தரையில் அமர்த்தியபடியே பழச்சாரை குடிக்க வைத்திருந்தனர்... அவன் இருந்த போதையில் அது சிரமமாக இருந்த போதும் அப்படியே விட்டுவிடாமல் மிகக் கடினத்துடன் முயற்சித்து அவன் வயிற்றுக்குள் எழுமிச்சை சாரை அனுப்பிய பலனாக அடுத்த சிறிது நேரத்தில் குடம் குடமாக வாந்தி எடுத்தவன் மெல்ல மெல்ல போதையிலிருந்து தெளிய ஆரம்பித்திருந்தான்.

அப்போதும் அவனால் முழுமையாக போதை தெளிய முடியாமல் அரைக் கண்களால் சொக்கி கொண்டிருந்தவனை தட்டி....

“டேய் என்னடா ஆச்சு உனக்கு, ஏன்டா இப்படி பண்ணின?” என்று தரனின் அதட்டலில் பேந்த பேந்த விழித்தவன்...

“எல்லாம் அவளால் தான்டா... என்னை போய்... என்னை போய்...” என்றவன் உடல் தள்ளாடி கொண்டிருக்க...

“அடேய் முதல்ல ஸ்டேடியா இருடா உனக்கு எதுவும் இல்லை, எங்களை ரொம்ப படுத்தாத ஏற்கனவே உன்னால் இன்னைக்கு எங்க தூக்கத்துக்கு கோவிந்தா போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்கிறோம்” என்று தர்சனும் எரிச்சலில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“சாய்... ரி... சாய்... ரி...” என்று வார்த்தைகள் குழற கையெடுத்து கும்பிட்டவனை கண்டு இருவருக்கும் ஆயாசமாக போக...

“ஆண்டவா! டேய் உனக்கு புண்ணியமா போகும் ஒழுங்கா கையை கீழ போடு, எங்களுக்கு தேவை மன்னிப்பில்லை” என்று அதிகாரத்துடன் அதட்டியவனின் வார்த்தையில் என்ன புரிந்து கொண்டானோ அருகிலிருந்த தர்சனை பார்த்ததும் அவனுக்கு புரிந்துவிட... தரன் தன் சட்டைப் பையில் ஏதோ தேடுவது போல் பாவனை செய்துவிட்டு...

“தர்சன் வண்டி சாவியை காணோம் கீழே எங்காச்சும் இருக்கான்னு பாரு” என்று கூறி அவனை வெளியே அப்புறப்படுத்த இருந்தவனின் சூசகத்தை புரிந்து கொண்ட தர்சன்...

“அதெல்லாம் உங்க பாக்கட்டில் தான் இருக்கு... நான் வெளியே இருக்கேன் இவன்கிட்ட அப்படி என்ன தான் பிரச்சனைன்னு கேட்டுட்டு கூப்பிடுங்க... கல்யாணமான ஆணோட மனசு இன்னொரு கல்யாணமான ஆம்பளைக்கு தான் புரியும்” என்று இறுதியில் வேடிக்கையாக கூறிவிட்டு நகர்ந்திருக்க, அதை கவனத்தில் கொண்டாலும் அந்நேரம் சிரிக்க கூட முடியாமல் அர்ஜுனின் நிலை மிகுந்த கவலையளிக்கவே அவனை நெருங்கியவன்...

“டேய் என்ன டா பிரச்சனை உனக்கு? அப்படி என்ன பிரச்சனைன்னு இந்த கருமந்திர சரக்கை அடிச்சிருக்க?” என்றவனை அரை கண்ணால் நோக்கியவனுக்கு மனதில் ஒளிந்திருந்த பாரமும், வலியும் தலைதூக்க வார்த்தை தெரியாமல் தவித்தவன்... “ஹோஒ” என்று பேரிரைச்சலில் கரைந்தான்... சில கணங்கள் அவன் போக்கில் விட்டதும் அவனாகவே தன்னை திடப்படுத்திக் கொண்டுவிட்டு...

“நான்... நான்... நான்... தாத்ரியாம்...”

“பொறு..க்கி..யாம்”

“அப்பறம் இன்னும் இன்னும்...” என்றவனுக்கு நாவும் வார்த்தையும் பிறழ, அவன் உடல் பலமற்று தோய்ந்து விழுந்ததில் அதற்கு மேல் அவனிடம் ஏதும் கேட்க விளையாமல்...

“டேய்... டேய்... நேரா இருடா” என்று கீழே சரிந்து விழ இருந்தவனை பதறிய படி பிடித்துக் கொண்டிருக்கும் போதே தரனின் அலறலில் உள்ளே வந்து விட்ட தர்சனும் அவனை தாங்கிக் கொண்டான்.

“அடேய்! உங்க புருசன், பொண்டாட்டி சண்டை எல்லாம் நாலு செவுத்துக்குள்ள வச்சு முடிக்க மாட்டீங்களா டா” என்று தர்சனும் தன் பங்கிற்கு அவனை வசவி கொண்டிருக்கும் போதே, தரனின் அலைபேசி அடிக்க, மனைவியின் எண்ணை கண்டு அழைப்பை தூண்டித்திருந்தான்.

“யாரு சம்மு க்கா வா?”

“ஆமாம் தர்சா”

“நீங்க கிளம்புங்க மணி நாளாகப் போகுது, நான் அதுக்குள்ள இவனை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் ரூம்ல விட்டு அடைச்சுட்டு இவனை பக்கத்தில் இருந்து பார்த்துக்கிறேன், காலையில் போதை நல்லா தெளிஞ்சதும் பஜனை போட்டுக்கிறேன்... நீங்க அரசிக்கா கிட்ட பேசி வீட்டுக்கு அனுப்பி வைக்க பாருங்க, அதுக்கப்புறம் இவன் பாடு, அவங்க பாடு ரெண்டு பேரும் என்னமோ செய்துகட்டும்... இல்லைன்னா, வீட்டையே பார் ஆக்கிருவான் போல”

அவன் வேடிக்கையாக கூறினாலும் அதில் இருந்த கூற்று உண்மை என்பதை உணர்ந்தவனுக்கு, உடனடியாக இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதி மேற்கொண்டான்.

அர்ஜுனை கைத்தாங்கலாக இருவரும் அழைத்துச் செல்ல... எங்கோ மிதப்பது போல் பிரம்மையில் இருந்த அர்ஜுனுக்கும் லேசாக தன்னிலையும் உரைத்திருக்க...

“டேய்... வீட்டுக்கு வேணா... அம்மா திட்டுவாங்க” என்று குழறியவனை கடுமையாக முறைத்த தர்சன்...

“பின்னே திட்டாம கொஞ்சவாங்களா? பேசாம வாயை மூடிட்டு வாடா இல்லைன்னா, இங்கேயே ரெண்டு போட்டிருவேன்” என்று அதட்டி உருட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.

தரன் வீட்டிற்குள் நுழைந்ததும் சம்யுக்தா கணவனை கேள்விக்கணைகளால் தாக்கினாள்.

“என்னாச்சு, திடிர்னு இந்நேரத்துல எழுந்து எங்கே போயிட்டு வரீங்க?”

அர்ஜுனை பற்றி கூறினால் நிச்சயம் அதை பற்றி ஆராய்ந்து பார்க்க நினைப்பாள், அவர்களுக்கு நடந்தது என்னவோ முதலில் நாம் விசாரித்து விட்டு அவளிடம் தெரிவித்து கொள்ளலாம் என்று சங்கல்பம் மேற்கொண்டவன்...

“பிரெண்ட் ஒருத்தனுக்கு திடிர்னு உடம்பு சரியில்லை, அவங்க வீட்டில் யாரும் இல்லையாம் அதான் நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்தேன்” சரளமாக கூறியவனின் பொய்யை உண்மை என்று நம்பிக் கொண்டவள், மேலும் கேள்வியெழுப்பாமல் துயிலில் ஆழ்ந்துவிட்டாள்.

அர்ஜுனின் செயலை கண்ட தரனுக்கு ஏதோ தவறாகப்பட்டு அவன் சிந்தையை குடைந்தது... அவர்களுக்குள் உண்டான சிக்கல் என்னவென்று அறியாமல் துயில் கொள்ள முடியாது என்று உணர்ந்தவன் நெற்றியில் முழங்கையை வைத்துக் கொண்டு செறிவுடன் சிந்திக்கலானான்.

சூரியனின் கதிர் வீச்சுக்கள் அர்ஜுனின் தேகத்தை சுள்ளென்று தாக்கியதில் மெல்ல கண்விழித்தவன்...

“நான் எங்க இருக்கேன்?” அரை குறை விழிப்புடன் விச்ராந்தியாக வினவியவனின் கேள்விக்கு...

“ம்ம்... போலீஸ் ஸ்டேஷன்ல” உதடுகள் ஏளனத்தில் வளைய நக்கலாக பதில் கூறிய தர்சனின் வார்த்தையில் திடுக்கிட்டு, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவனுக்கு போதை தெளிந்து தெளிவடைந்திருந்தான்.

அவனின் செயலை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த தர்சனின் முகத்தில் கடுமை விரவியிருந்தது...

“டேய் நீ தானா செமையா தலைவலிக்குதே” என்று கூறி நெற்றியை அழுத்தி பிடித்துக் கொண்டவனை கண்டு ஆத்திரம் எழுந்தது...

“நேத்து நீ பண்ணின காரியத்துக்கு தலை மட்டும் என்ன, எல்லாமே வலிக்கும்?” என்று சினத்தில் சிடுசிடுத்தான்.

அர்ஜுனுக்கு வின்வின்னென்று தெறித்த வலியில் கண்ணை மூடி இருந்தவனை கண்டு தர்சனுக்கு வேதனையாக இருந்தது... சட்டென்று அங்கிருந்து நகர்ந்தவன் கையில் காபியும், வலி நிவாரண மாத்திரையும் கொண்டு வந்து அவன் முன்பு நீட்டியவன்.

“போய் பிரெஷ் ஆகிட்டு வந்து காஃபி சாப்பிட்டு மாத்திரையை போட்டு ரெஸ்ட் எடு” என்றவனின் பேச்சை தட்டாது தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் காபியை மட்டும் அருந்தியவனை கண்டு முறைத்தான்.

“ஏன்டா சொல்ற எதையும் கேட்கக் கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கியா?”

“அதெல்லாம் இல்லை நான் கம்பெனிக்கு போகணும் டேப்லெட் போட்டா ரெஸ்ட் எடுக்காம போக முடியாது அதனால தான்”

“அதெல்லாம் நீ போக வேண்டாம்... இன்னைக்கு ஒரு நாள் போகலைன்னா ஒன்னும் குடி முழுகி போயிறாது, ஒழுங்கா டிபன் சாப்பிட்டுட்டு மாத்திரையை போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கிற?” என்றவன் அவன் எங்கே சென்றுவிடுவானோ என்ற எண்ணத்தில் கதவை தாழிட்டுவிட்டு சென்றிருந்தான்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
**********************

சம்யுக்தாவிடம் பொய் காரணம் கூறி சமாளித்த தரனுக்கு, அவள் இல்லாத சமயம் பார்த்து அரசியிடம் பேச வேண்டும் என்று சிந்தாந்தம் மேற்கொண்டிருந்தான்.

சம்யுக்தா தன் நிர்வாகத்தை கண்காணிக்க கணினி முன் அமர்ந்து விட, வாய்த்தது சமயம் என்று அரசியை தேடி சென்றான்... கொல்லை புறத்தில் அமைந்திருந்த கிணற்றடியில் முழங்காலிட்டு எதையோ தொலைத்தவளை போன்று அமர்ந்தவளின் கண்களில் வெறுமை குடி கொண்டிருந்தது.

“அரசி” என்றழைத்தவனின் குரலில் திடுக்கிட்டு எழுந்தவளை புருவம் சுருங்க யோசனையாக பார்த்திருந்தவன்...

“என்னாச்சு மா ஏன் ஒரு மாதிரியா இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ண்ணா நான் நல்லா தான் இருக்கேன், கொஞ்சம் மனசு சரியில்லை அவ்ளோ தான்... நீங்க கவலைப்படாதீங்க பெரிசா ஒண்ணுமில்லை” என்றவளின் போலி புன்னகை அவள் கூறுவது போய் என்பதை அப்பட்டமாக காட்டிக் கொடுத்திருந்தது. இனி பொறுமையாக இருந்தால் வேலைக்காகாது பேச வேண்டிய விதத்தில் பேசி அவளை வெளிக் கொணர்ந்தால் தான் அவர்களின் பிணக்கம் சரியாகும் என்று புரிந்துக் கொண்டவன்...

“சரி தோட்டத்தில் தேங்காய் லோட் ஏற்றின கணக்கை சரி பார்க்கணும் என்னுடன் உதவிக்கு வா” என்றழைக்க இங்கிருந்து குழம்பிக் கொண்டிருப்பதை காட்டிலும் வேலையில் நாட்டம் செலுத்துவது உசிதம் என்று எண்ணிய அரசி...

“சரி போகலாம் ண்ணா” என்றதும் அவளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தான்.

அரசியை அழைத்து வரக் கூறிய காரணத்தை பொய்யாக்காமல் அவள் உதவியுடன் கணக்கை சரிப் பார்க்கலானான்... தன் வேலையில் சிரத்தையாக இருந்தாலும், அவ்வபோது அரசியின் மேலும் பார்வை ஆராய்ச்சியாக படிந்து மீண்டு கொண்டிருந்தது. அதை அறியாமல் தரன் கொடுத்த வேலையில் சிரத்தையாக மூழ்கியிருந்தவளிடம்...

“எப்போ அரசி நீ அர்ஜுன் வீட்டுக்கு போகப் போகிற?” என்று விளம்பியவனின் கேள்வியில் திகைத்துப் போனவள் உடல் ஒரு நிமிடம் அதிர்வில் உடல் குலுங்கி சம நிலைக்கு வந்தவள்...

“ஏன் அண்ணா இப்படி கேட்கறீங்க... எனக்கு இந்த வீட்டில் இருக்க உரிமையில்லையா?” தன் மனதின் உணர்ச்சிகளை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு கூறுவதாக தன்னை தானே மெச்சிக் கொண்டாள்... சடுதியில் மாறியிருந்த அவளின் உணர்ச்சிகளையும் பேச்சில் இருந்த வித்தியாசத்தையும் நுணுக்கமாக அறிந்தவனுக்கு இனி நாசுக்கு பார்த்தால் வேலைக்கு ஒவ்வாது என்றுணர்ந்தவன்...

“இந்த கேள்வியே தப்பு?” என்றவனை சரேலென்று விழியுயர்த்தி பார்த்திருந்தாள்.

“ஏன் அண்ணா இப்படி சொல்றீங்க?”

“இந்த வீட்டில் உனக்கு உரிமையில்லைன்னு நான் சொல்லலை... இதே கேள்வியை உனக்கு கல்யாணம் ஆகாம கேட்டிருந்தா வேறா, ஆனால் இப்போ உனக்கு கல்யாணம் ஆகி ஒருத்தனுக்கு பொண்டாட்டியா பதவி ஏற்று இருக்கிற, நம்ம கலாச்சாரத்தில் ஒரு பொண்ணுக்கு கல்யாணத்திற்கு பிறகு புருஷன் வீடு தான் நிரந்தரம்... அம்மா வீடும் உரிமையுள்ளது தான் என்றாலும் அங்கே நீ சீராடலாம் சந்தோஷமா இருந்து விருந்து சாப்பிடலாம், ஆனால் உன் வாழ்க்கை ஓட அஸ்திரம் இனி அர்ஜுன் வீடு தான்”

“அர்ஜுனை விட்டு பிரிஞ்சிருந்தா உங்க கல்யாண வாழ்க்கையை பூர்த்தி செஞ்சு அர்த்தம் தந்திராது அரசி, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும்... நீ இங்கே இருக்கிறதை தப்பு சொல்லலை ஆனா, அது உன் புருஷன் அனுமதியில் சந்தோசமா வந்திருந்து அதே சந்தோசதோட அவனைத் தேடி நீ போகணும்”

“நீ இங்கே வந்து அஞ்சு நாள் இருந்த, உன்னை நான் கேள்வியே கேட்கலையே? ஆனால் போனவள் அடுத்த நாலு நாளில் திரும்பி வந்ததும் சரி உடம்பு முடியாம வந்திருக்கியோன்னு நினைச்சு தான் விட்டேன்... ஆனால் நேத்து தான் தெரிஞ்சது விஷயம் அதில்லை, ஏதோ பெரிசா உனக்கும், அர்ஜுனுக்கும் இடையில் சச்சரவு வந்திருக்கு அதில் அவன்கிட்டே முறுக்கிக்கிட்டு வந்திருக்கேன்னு” என்று ஸ்பஷ்டமாக உரைத்ததும் உள்ளுக்குள் கலவரம் உண்டாக என்ன கூறுவது என்றறியாமல் தவித்து நின்றாள்.

“எல்லாத்துக்கும் நடக்கிறதை போல சாதாரண பிரச்சனை தான் அண்ணா” என்று உள்ளதை மறைத்து மலுப்பியவளின் வார்த்தைகள் தட்டுத் தடுமாறியதை கவனித்துக் கொண்டிருப்பதற்கு அடையாளமாக தன் கூர்வாள் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தவன். அவள் பேச்சை முழுமையாக நம்பாமல்...

“சாதாரண பிரச்சனைன்னா நானே கேட்டிருக்கமாட்டேன்... முதலில் உங்களுக்குள் அப்படி என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சாகணும், ஏன்னா நேத்து நடந்த விஷயம் அத்தனை சாதாரணமானது இல்லை” என்றதில் அடிவயிற்றில் புளியை கரைத்து அகத்தில் கலவரம் சூழ்ந்தது... அப்போதும் அவள் அர்ஜுனை பற்றி ஒரு வார்த்தை கூற கேட்காததை குறிப்பெடுத்துக் கொண்டான். எத்தனை நேரம் அமைதியாக இருப்பது அவன் அவளின் பதிலுக்காக காத்திருக்கிறானே என்றதில் தன்னை திடபடுத்திக் கொண்டு...

“ஆமாம் எனக்கும், அவருக்கும் மனஸ்தாபம் உண்டாகிருச்சு... எனக்கு அங்கே போகவோ அவர் முகத்தை பார்க்கவோ பிடிக்கலை... அதனால் தான் இங்கேயே இருக்கிறேன்” என்றதும் அவனுக்கு பிடி கிடைத்துக் கொண்டது... பிரச்சனையின் கணம் மிகவும் அழுத்தமானது என்பதை உணர்ந்தவனுக்கு அது எதுவாக இருந்தாலும் கேட்டு தெரிந்துக் கொள்ளாமல் விட்டு விட முடியாது என புரிந்துப் போக...

“அப்படி என்ன நடந்துச்சுன்னு சொல்லு அரசி” என்று ஆக்கினையிடவும்...

“இல்லை ண்ணா அது கொஞ்சம் அந்தரங்கம் அதுதான் எப்படி சொல்றதுன்னு தெரியலை?”

“ஓஹ்! சரி அப்போ உன் அண்ணியை வர சொல்றேன் அவகிட்டே சொல்றியா?” என்றதும் விழிகள் தெறிக்க பார்த்தவள்...

“அச்சோ! வேண்டாம் அண்ணா... நான்.. நான்.. நாமளே பேசிக்குவோம்” என்றவளின் வார்த்தையில் ஏதோ பெரியதாக உறுத்த புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.

அவள் எப்படி கூறுவது என்று அறியாமல் திணறிக் கொண்டிருக்கையில்... “எதுனாலும் சொல்லு அரசி, அப்போ தான் நான் ஏதாவது பண்ண முடியுமான்னு பார்க்க முடியும், எப்படியோ போங்கன்னு என்னால் விட முடியாது” என்றதும் ஒருவாறு தைரியத்தை திராட்டிக் கொண்டவள்...

“முதலில் நீங்க எனக்கொரு வாக்குறுதி தரணும்... வாணிக்கு கை கொடுத்த மாதிரி அவர் மேல தப்பிருக்கிற பட்சத்தில் எனக்கும் நீங்க கைக் கொடுக்கணும்”

“எனக்கு நீ வேற, வாணி, மலர் வேற இல்லை, நீ நடந்ததை சொல்லு” என்றதும் அவன் அவளிடம் பொய் கூறியதையும், அதன் பிறகு தோப்பில் கண்டு வீட்டில் சண்டையிட்டது வரை அனைத்தையும் கூறி முடித்துவிட்டு அவன் முகம் பார்த்தவள் அரண்டு போனாள்!

அவன் முகம் ரத்தமென சிவந்திருக்க, கண்களில் எரிமலையின் சீற்றம் பொங்கிக் கொண்டிருந்தது... அவன் கைமுஷ்டி இறுகியதில் பச்சை நரம்புகள் புடைத்து தெறிக்க வேட்டைக்காக காத்திருக்கும் வேங்கையின் ஆவேசத்துடன் சீற்றத்தில் கொந்தளித்தவன்...

“என்ன சொன்ன திரும்ப சொல்லு... என் பொண்டாட்டியோட சேர்த்து உன் புருஷனை சேர்த்து வச்சு தப்பா பேசுனியா?” என்றவனின் குரலில் அடக்கப்பட்ட ஆவேசம் மின்ன விளம்பியவனின் வார்த்தையிடத்தில் வெய்துறலில் நடுநடுங்கியவள்...

“ஆமாம்!” என்றதும் தான் தாமதம் அவன் இரும்பு கரங்கள் அவள் கன்னத்தில் இடி போல் இறங்கியது.

“என்ன தைரியம் இருந்தா என்கிட்டேயே இதை சொல்லுவ? ச்சேய்... உன்னை போயா நான் ஆதரிச்சேன்?” என்றவனின் சொற்கள் தீக்கங்குகளாய் பொழிந்திருக்க விக்கித்துப் போனாள்!

அவனிடத்தில் இதுவரை இப்படி ஒரு கோபத்தை கண்டிராதவளுக்கு இந்த பரிணாமம் வரையறுக்க தக்க முடியாத கிலியை பரப்பியது... “அ...ண்... ணா...” வார்த்தைகள் தந்தியடிக்க அழைத்தவளை தன் பார்வையில் வெறுப்பை உமிழ்ந்து அவள் பேச்சை வெட்டினான்.

“ச்சீ... பேசாதே!! அவனை பேசினதே என்னால் ஏற்றுக்க முடியலை, இதில் என் பொண்டாட்டியையும் சேர்த்து தவறா நினைச்சிருக்க?” என்றதும் சர்வாங்கமும் ஒடுங்க பதறியவள்...

“அய்யயோ இல்லைண்ணா, சத்தியமா அப்படி எல்லாம் இல்லை, நான் அவங்களை அப்படி எல்லாம் என் மனதார நினைக்கலை” என்று உண்மையையே கூறியப் போதும் அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“வாயமூடு நினைக்கிறதெல்லாம் நினைச்சு கீழ்த்தரமா பேசி சக்கடையை அள்ளி வீசிட்டு இப்போ இல்லைன்னு நாடகமா போடுற?”

“அண்ணா சத்தியமா சொல்றேன் நான் அண்ணியை தப்பாவே நினைக்கலை” என்றவள் அவள் தோழி கூறியதையும், அதனால் அவள் கணவன் மேல் சந்தேகம் கொண்டதையும் கூறியதை கேட்டு அவள் மேல் ஆத்திரம் குறையாது வலுக்கத் தான் செய்தது.

“ச்சீய்... இதுக்கு மேல எதுவும் பேசின அப்புறம் உன்னை இங்கேயே வெட்டி போட்டாலும் போட்டிருவேன்... இப்போ தெரியுது நேத்து உன் புருஷன் ஏன் அந்த கருமம் பிடிச்ச குடியை நாடிப் போனான்னு... நான் கூட அவன் மேல தான் தப்புன்னு நினைச்சுட்டு இருந்தேன்... ஆனால் இப்போ தானே தெரியுது தப்பு முழுக்க உன் பெயரில் தான் இருக்குன்னு” என்றதில் மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தாள்.

“என்ன அதிர்ச்சியா இருக்கா? இல்லாம இருக்குமா சுண்டு விரல் நுனி அளவு கூட எந்த தவறான பழக்கமும் இல்லாம ஒழுக்கமா வாழ நினைச்சு வாழ்ந்துட்டும் இருக்கிற ஆம்பளையை பார்த்து சபல புத்திகாரன்னு சொல்லியதும் இல்லாமல், அவ யார் என்னன்னு பார்க்காம உறவை கொச்சைப்படுத்தின உன் பேச்சை கேட்டு அவன் மூச்சு முடிய குடிச்சுட்டு சுய நினைவை இழந்ததில் ஆச்சர்யப்படுத்துறதுக்கு எதுவும் இல்லை தான்”

“நான்....” என்று ஏதோ கூற வந்தவளை...

“நிறுத்து எதுவும் பேசத் தேவையில்லை... பேசின வரைக்கும் போதும்... முதல்ல உனக்கு ஒரு உண்மை தெரியுமா?” என்றவன் அவளை பார்வையால் சுட்டெரித்தப்படியே பிரஸ்தாபித்தவனின் பேச்சை கேட்டு தன் காலடியின் கீழ் பூமி நழுவுவதை போன்று உணர்ந்தவள் முகம் வெளுத்துப் போனாள்...! அவள் செய்த தவறின் வீரியத்தை உணர்ந்து வெட்கி அவமானத்தில் உடல் கூசிப் போனவள் அவன் காலடியில் பட்டென்று வீழ்ந்துவிட்டாள்.

“என்னை மன்னிச்சிருங்க ண்ணா நான் தப்பு பண்ணிட்டேன், பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்று கண்ணீருடன் கதறியவளை கண்டு அசராமல் கல்லை போன்ற கடினத்துடன் மனதை இறுக்கிக் கொண்டு பார்த்தவன்...

“மன்னிப்பு! யாருக்கு வேணும் உன் மன்னிப்பு... நம்ம குடும்பத்துக்கே கலங்கத்தை விளைவிச்சிருக்க... நம்ம நடத்துற கூத்து தொழிலில் கூட சில நியாய நிதிகளை எடுத்து சொல்லி தான் நடத்துறோம்... திரௌபதிக்கு அஞ்சு கணவர்கள் அவங்கள்ல யாருக்கும் சந்தேகமே வந்ததிலை... அதனால் தான் ராமாயணத்தில் வரும் ராமனை காட்டிலும் ஒரு படி மேல வச்சு மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்குறோம்... கணவன் மேல மனைவியோ, மனைவி மேல கணவனோ நூலிழை அளவு கூட சந்தேகப்படக் கூடாதுங்கிறது தான் நம்ம பண்பாடு, கலாச்சாரம்”

“நீ என்னடான்னா அந்த உறவையே கலங்கப்படுத்தியிருக்க... நல்ல வேளை உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு தெரியாம உன் அண்ணிகிட்டே சொல்லக் கூடாதுன்னு நினைச்சது எத்தனை நல்லதா போச்சு, அப்படி மட்டும் அவ கேட்டிருந்தா உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் உள்ள உறவே வேரறுந்து போயிருக்கும்” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பியவனை கண்டு நிலைகுலைந்து போனாள்.

“நான்... நான்... இப்படி எல்லாம் இருக்கும்னு யோசிக்கலை... நாம அம்மப்பா இல்லாமல் ஆதரவா நிற்கிறோம் நமக்கே நமக்குன்னு புருஷன் தான் துணைன்னு நினைச்சத்தில், என் பிரெண்ட் சொன்னதை எண்ணி கொஞ்சம் கூட ஆராயாம நானே சிக்கலை ஏற்படுத்திக்கிட்டேன்... என்னை மன்னிச்சிருங்க ண்ணா” என்றவளை அற்பமாக பார்த்திருந்தான்... அவனின் அந்த பார்வை அவளை கூனிக்குறுக செய்திருக்க அவள் செய்த தவறுக்கு தண்டனையாக ஏற்றுக் கொண்டாள்.

“உன் மன்னிப்பை தூக்கி குப்பையில் போடு... பிரெண்ட் சொன்னது எல்லாம் சரி... ஆனால், உனக்கு புத்தி வேண்டாம்? இங்கே எல்லாருக்கும் வாழ்க்கைங்கிறது தனிப்பட்டது... அதில் வர பிரச்சனைகளும், சிக்கல்களும் அவங்க அவங்களுடைய தனிப்பட்ட விதி சம்மந்தப்பட்டது... அப்படி தான் உன் புத்தியில் சந்தேக சாத்தான் புகுந்ததுன்னா உன் புருஷன் கிட்டே சட்டையை பிடிச்சு என்னடா நடக்குதுன்னு ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் அது அப்போதைக்கு மனசை காயப்படுத்தினாலும் உன் சூழ்நிலை வச்சு அவனே உன்னை புரிஞ்சுகிட்டும் இருந்திருப்பான், அப்படியும் இல்லையா அதில் சம்மந்தப்பட்டிருப்பது என் மனைவியும் தானே அந்த ஒரு காரணத்துக்காகவாச்சும் என்கிட்டே நேரடியா கேட்டிருக்கலாம்”

“இல்லை ண்ணா என் பயம் அந்த சூழ்நிலையை தவறாவே எடைப் போட்டிருச்சு... மனரீதியா யோசிச்சு பாருங்க அதே இடத்தில் நீங்க இருந்திருந்தால் அண்ணிகிட்டே கேள்வி கேட்டிருக்கமாட்டிங்களா?”

“மாட்டேன்!” என்று துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு போல் வேகமாக வந்த பதிலில் மருள பார்த்திருந்தாள்.

“நீ சொன்ன மாதிரி சூழ்நிலை என்ன... தெரியாதா ஒரு வழிப்போக்கன் கூட ஒரு ராத்திரி ஒரே அறையில் என் பொண்டாட்டி இருக்க நேர்ந்தாலும் அவளை நான் சந்தேக கண்ணோட பார்த்திருக்கமாட்டேன்... அவளுக்கு என்ன மாதிரி சிக்கல் உண்டாச்சோன்னு நினைச்சு தான் கலங்கிப் போவேன்... அதுக்கப்புறம் விசாரிப்பேன் ஆனால், நீ சொல்ற மாதிரி சந்தேக கண்ணோட்டத்தில் இல்லை, தப்பு நடக்காத பட்சத்தில் அவளுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கான தீர்வை தேடுவேன்... அப்படி நடந்த பட்சத்தில் கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டு கடந்து போகச் சொல்லுவேன்”

“என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணி என் கூட குடும்பம் நடத்தி என் உயிரை சுமந்து எனக்கொரு வாரிசை கொடுத்தவளை சந்தேகப்பட்டா நான் ஆம்பளையும் இல்லை, குடும்ப வாழ்க்கை வாழ தகுதி இல்லாதவனாகவும் ஆகிருவேன்” என்றவன் பேச்சு செருப்பில் அடித்தது போல் அவமானத்தில் நெக்குருக சல்லடையாக நொறுங்கிப் போனாள்.

“வாணி விஷயத்தில் அந்த ரஞ்சன் மேல இருக்கிற தவறை சுட்டி காண்பிக்கிறதுக்காக ஒரு வார்த்தையை விட்டே நிம்மதியான தூக்கம் இல்லாம தினம் தினம் தவிச்சுட்டு இருக்கிறேன்... நீ உன் புருஷனாவே இருந்தாலும் இனி காலத்துக்கும் வாழணும்ங்கிறதை மறந்து வார்த்தையை வீசியிருக்க? எள்ளைக் கொட்டினா பொருக்கிறலாம், சொல்லை கொட்டினா பொறுக்க முடியுமா? சும்மாவா சொல்லி வெச்சாங்க கல்யாணங்கிறது ஆயிரம் காலத்து பயிர்ன்னு”

“...........”

“அர்ஜுனுக்கு குடிக்கிற பழக்கமே இல்லை... ஆனால், நீ சொன்ன வார்த்தையை மறக்க முடியாமல் அந்த கருமத்தை தேடி போயிருக்கான்” என்றவன் நடந்ததை விளக்காகவே கூறியிருந்தான்.

அவன் கூறியதை கேட்டவளுக்கு கணவன் தன் மேல் மனம் வெறுத்து போய்விட்டானோ என்ற கிலி வியாபித்திருக்க உலகமே இருண்டது போல் ஸ்தம்பித்து போனாள்.

“இனி நீ ஒரு நிமிஷம் கூட இங்கே இருக்கக்கூடாது... உடனே கிளம்பற, உன்னை நான் அர்ஜுன் வீட்டில் விட்டுட்டு திரும்பிடுறேன்... இனி மேல் நீ இங்கே வரக்கூடாது... அப்படியே வந்தாலும் உன் புருஷனோட தான் வரணும்? அவன் இல்லாமல் நீ இங்கே தங்கவும் கூடாது” என்று கறாராக கூறியவனின் பேச்சில் தன் கணவனை எதிர்கொள்ளும் நிலையை எண்ணிப் பார்க்கவே அவள் உயிரை உலுக்கி போட்டது.



சுவடுகள் தொடரும்....



**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-28 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-29

மதிய வேளையில் கண் விழித்த அர்ஜுனின் முன்பு உணவு தட்டை கொடுத்து அவன் உண்டு முடித்ததும்...

“இப்போ எப்படி இருக்கு அர்ஜுன்?” என்று வினவிய தர்சனின் கேள்விக்கு...

“ஒகேவா இருக்கேன்... ரொம்ப தேங்க்ஸ் டா உனக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன்” என்று வேதனையுடன் இயம்பியதும் நேற்றைய தவறை கண்டிக்க வேண்டி முகத்தை கடினமாக வைத்துக் கொண்டவன்...

“உன் தேங்க்ஸை தூக்கி குப்பையில் போடு டா” என்று வெடித்தவனை உணர்ச்சியற்று நோக்கினான்.

“என்ன கருமத்துக்கு டா நேத்து அப்படி ஒரு காரியம் பண்ணின?”

“...........” அவன் கேட்டதற்கு பதில் கூறாமல் வாயை இறுக மூடி அமர்ந்திருந்தவனை கண்டு காண்டாக...

“வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க சொல்லுடா” என்று அதட்டியதும்...

“மனசு சரியில்லை அதான் தண்ணி அடிச்சேன்” சாவதானமாக பதில் அளித்தவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்திருந்தவன்...

“உனக்கு கொஞ்சமாச்சும் புத்தி இருக்கா டா?” என்றவன் வாய்க்கு வந்த வண்ணம் வசைமாரி பொழியலையானான். அவனின் வசைவை கேட்டு அலட்டிக் கொள்ளாமல் கழிவிறக்கத்துடன் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஏன் டா இத்தனை திட்டு திட்டுறேன் உரைக்கலை? கோபம் வரலை?”

“யாரு திட்டுறா நீ தானே... உனக்கில்லாத உரிமையா? நான் செஞ்ச தப்புக்கு தானே திட்டுற திட்டிக்கோ” என்றவன் குரலில் இருந்த வலி அவனையும் தாக்கியது.

“ஏன் அர்ஜுன் அண்ணா இப்படி எல்லாம் பண்ணின? நேத்து மட்டும் அந்த கடைக்காரர் உன் விஷயத்தை சீரியஸா எடுத்துட்டு போய் போலீஸ் கேசுன்னு ஆகியிருந்தா, நாங்கெல்லாம் என்னடா செய்வோம்? இந்த குடும்பத்தினுடைய ஆணிவேர் நீ, நீ போய் இப்படி ஒரு காரியத்தை செய்யலாமா?”

“ஏதோ அம்மாப்பாவுக்கு தெரியாம மறைச்சதே பெரிய விஷயம்... இல்லன்னா, உங்க புருஷன் பொண்டாட்டி சண்டை சபைக்கு வந்திருக்கும்” என்றவனை படக்கென்று விழியுயர்த்தி பார்த்திருந்தான்.

“என்னடா இப்படி சொல்றானேன்னு பார்க்குறியா? உன் பொண்டாட்டி வீட்டிலேயே இல்லை... நீயோ பித்து பிடிச்சவன் மாதிரி திரிஞ்சிட்டு இருக்கிற, கடைசியில மூச்சு முட்ட சரக்கடிச்சுட்டு சுய நினைவில்லாம விழுந்துக் கிடைக்கறேன்னா... ஒண்ணு காதல் தோல்வியா இருக்கணும், இல்லையா பொண்டாட்டியை சமாளிக்க முடியாம போயிருக்கணும், வேறென்ன பெருசா இருக்கும் அதுவும் உன்னை மாதிரி குடிப்பழக்கமே இல்லாத ஆளுக்கு?

“...........”

“நான் என்ன சண்டைன்னு எல்லாம் கேட்கமாட்டேன்... எனக்கு அது அனாவிஷயம், அநாகரீகம்... அதனால் என்னவோ இருந்துட்டு போகட்டும் உங்களுக்குள்ள பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டாமா? சரி அப்படியே முடியாம போகட்டுமே, கொஞ்ச நாளைக்கு பொறுத்து பார்க்க வேண்டாமா, இப்படி தேவையில்லாத கெட்ட பழக்கம் எல்லாம் நமக்கெதுக்கு அர்ஜுன் அண்ணா?”

“இந்த பழக்கம் உன்னை மட்டும் பாதிக்காது நம்ம ஒட்டு மொத்த குடும்பத்தையே பாதிக்கும்... அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எப்படி ஒரு கெட்ட பெயரை உண்டு பண்ணும் அதை எல்லாம் யோசிச்சியா?”

“சாரிடா ஏதோ வேதனை தாங்காம பண்ணிட்டேன், இனி மேல் பண்ணமாட்டேன்”

“இந்த சாரி, பூரி, சக்கரை பூந்தி எல்லாம் வேண்டாம்... எனக்கு நீ இனிமே இந்த கருமாந்திர குடியை தேடி போகக்கூடாது, அது என்ன பிரச்சனையா இருந்தாலும் சரி... சத்தியம் பண்ணு!” என்று உள்ளங்கையை நீட்டியவனின் கரத்தை யோசனையாக பார்த்துக் கொண்டே இருந்தவனை கண்டு ஆட்சேபத்தில் புருவம் நெறித்தவன்...

“என்னடா யோசனை? அப்போ திரும்ப எப்பவாச்சும் தோணுச்சுன்னா போவ அப்படித்தானே?” என்று வினவியதும் வேகமாக அவன் கையை உருவி அவன் உள்ளங்கையில் வைத்து... “சத்தியமா குடிக்க மாட்டேன்” என்றிருந்தான். அதில் தர்சனுக்கு மனம் திருப்தி அடைந்து விட்டிருந்தது.

அர்ஜுன் மாலை நேரம் காற்றாட நடந்து வர கிளம்பியவனை நடராஜன் பிடித்துக் கொண்டார்.

“அர்ஜுன் நம்ம தோட்டத்தில் புதுசா வேலி போடுறதை பற்றி பேசிட்டு இருந்தோமே அதை பத்தி கொஞ்சம் பேசணும் வா”

“இல்லை ப்பா இப்போ மைண்ட் சரியில்லை அப்புறமா பேசலாமா?”

“இல்லப்பா இதை தள்ளிப் போடுறதா இல்லை, நீ வா பேசிட்டு போயிரு” என்றவரை இடையிட்ட மல்லிகா...

“ஏங்க அது தான் அவன் சொல்றானே அப்புறம் பேசுறேன்னு, கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் ஆகிட்டு வந்திரட்டுமே... பாருங்க, அவன் முகமே ரொம்ப வாடிக் கிடக்கு... இந்த அரசி பொண்ணு வேற அடிக்கடி அம்மா வீட்டுக்கு போயிடுறா, திரும்பி வந்தானா நான் இனிமே அங்க போறதை குறைன்னு ஸ்ட்ரிக்டா சொல்லத் தான் போகிறேன்” என்றார்.

“அதெல்லாம் அர்ஜுன் பார்த்துக்கட்டும் கொஞ்ச நாள் போச்சுன்னா சரி ஆகிரும் ரொம்ப அலட்டாதே மல்லிகா இப்போ நைட்டுக்கு இடியாப்பம் ரெடி பண்ணு”

“என்னவோ போங்க ஆனால் நான் எப்படி சொல்லணுமோ சொல்லத் தான் போகிறேன், அவ என்ன வேணா நினைச்சுக்கட்டும்... அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சது எதுக்கு ஆளுகொரு திசையில் வாழவா ஆயிரம் சண்டை இருந்தாலும் புருஷனை விட்டு போகலாமா?” என்று பேசிக் கொண்டே நகர்ந்தவரின் குரல் தேய்ந்து விட்டதும்...

“அர்ஜுன் நீ வாக்கிங் போகத் தானே கிளம்பின வா நடந்து பேசிக்கிட்டே பார்க் போவோம்” என்றவர் மகனை அழைத்து கொண்டு பூங்காவிற்குள் நுழைந்து அவர்களுக்கு தனிமை அளிக்கும் வகையில் தக்க இடம் பார்த்து அமர்ந்ததும் நடராஜனின் பார்வை மகனை கூறு போட்டுக் கொண்டிருந்ததை கவனித்த அர்ஜுன்...

“என்ன ப்பா ஏதோ புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கறீங்க?”

“நீ பண்றதெல்லாம் புதுசா இருக்கே?”

“என்ன ப்பா சொல்றீங்க?”

“நேத்து என்ன நடந்துச்சு?” நேரடியாக விளம்பியதும் அவரின் கேள்விக்கு அதிராமல் உணர்ச்சியற்று வெறித்தவன் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தான்.

“அது தான் உங்க காதுக்கு எட்டியிருக்கே, என்ன கேட்டீங்களோ அதெல்லாம் உண்மை தான்” என்றவனை கண்டிப்புடன் முறைத்தார்.

“நாம ஆம்பளை ஆகிட்டோம், வளர்ந்துட்டோம், இனி யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாதுங்கிற திமிரா?” என்றவருக்கு பதில் கூறாமல் கைவிரல்களை பிணைத்து கொண்டு கோர்ப்பதும், பிரிப்பதுமாக அதிலேயே பார்வையை நிலைகுத்தியபடி அமர்ந்திருந்தான்.

“நான் தொழிலை எல்லாம் உன் பொறுப்பில் விட்டுட்டு அமைதியா இருக்கேன்னா அதுக்கு காரணம் என்னால் முடியாம இல்லை... நம்ம பையனும் சில விஷயங்களை கத்துக்கிட்டு, அவனும் சாதிக்கட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் உனக்கு வழி ஏற்படுத்தி கொடுத்துட்டு இருக்கிறேன்”

“அதுக்கு காரணம் எங்களுக்கு அப்புறம் இந்த குடும்பத்தோட தூணா நீ இருக்கணும்னு தான்... ஆனால் நேத்து நீ செய்ததா என் காதில் எட்டிய விஷயம் உன்னை கண்காணிக்காம உன் போக்கில் விட்டது தப்போன்னு தோணிருச்சு?” என்றதும், கைகளை பிசைவதை நிறுத்துவிட்டு விழிகளை பக்கவாட்டில் கோணலாக திருப்பி பார்த்தவனின் கவனம் நிலைபெற்றதை உணர்ந்தவர்...

“எப்படின்னு பார்க்குறியா? நீ போன பாரோட ஓனர் என் பால்ய சினேகிதனோட நண்பன்... உன் கரெடிட் கார்டில் உன் பேருக்கு பின்னாடி இருக்கிற என் பெயரை எங்கோ கேள்விப்பட்டதா இருக்கவும், அதை அவன்கிட்ட அவர் கேட்கப் போய் என் நண்பன் விவரம் சொல்லி என் காதுக்கு வந்துச்சு... அதுக்கப்புறம் நம்ம கம்பனியோட செக்யூரிட்டி பாதி உபயம்”

“தர்சனும், தரனும் இருக்கப் போய் உன்னை பார்த்துக்கிட்டங்க... இல்லன்னா, என்ன நிலைமை ஆகியிருக்கும்னு யோசிச்சு பார்த்தியா? உனக்கெதுக்கு அர்ஜுன் இந்த வேண்டாத வேலையெல்லாம்... உன் அம்மா மட்டும் இதை கேள்விப்பட்டானா தோளுக்கு மேல வளர்ந்தவன், கல்யாணம் ஆகிருச்சுன்னு எல்லாம் பார்க்காம வெளாசி தள்ளியிருப்பா, இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் அவ எவ்வளவு ஸ்ட்ரிக்ட்டுன்னு உனக்கு தெரியாதா?”

“சாரி ப்பா” என்றவனுக்கு தன் தவறை உணர்ந்த விதமாக விரல்களால் நெற்றியை தாங்கிக் கொண்டான்.

“என்னத்த சாரி அர்ஜுன்? தெரியாம செய்த தப்புன்னா சரிப்பா அடுத்த தடவை நடக்காம பார்த்துக்கோன்னு சொல்லலாம்... ஆனால், இது அப்படியா தப்புனு தெரிஞ்சே தப்பு செஞ்சிருக்க”

“...........”

“உன்னை நம்பி ஒரு பொண்ணு வாழ வந்திருக்கா, அவ நிலைமையை யோசிச்சு பார்த்தியா?”

‘அந்த கிரகத்தை தேடிப் போக காரணமே அவ தானே’ என்று மானசீகமாக தூற்றிக் கொண்டவனுக்கு உள்ளம் பாறையின் கடினத்துடன் இறுகியது.

“நீ சரக்கு அடிக்க என்ன காரணம் எல்லாம் கேட்கமாட்டேன்... ஏன்னா என்ன சூழ்நிலையா இருந்தாலும் நீ அதை தேடிப் போனது தப்பு தான்... இது தான் முதலும் கடைசியுமா நான் பண்ணுற எச்சரிக்கை, இனி நீ இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் தேடிப் போகக்கூடாது... அப்புறம் என் ட்ரீட்மெண்ட் வேற மாதிரி இருக்கும்” என்று தந்தையாக அவனை கடுமையாக எச்சரித்திருந்தார்.

“உங்க அம்மா இருக்கிறதால இதை உன்கிட்டே கேட்கலை... உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஏதும் பிரச்சனையா?” என்று விளம்பியதும்...

“ஆமாம்!” என்று அவசரமாக உரைத்ததும், புருவம் நெறித்து பார்த்தவரை தொடர்ந்து கேள்வியெழுப்ப விடாமல்...

“நீங்க, அம்மா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறதில்லையா என்கிட்டே புதுசா கேட்குறீங்க... பொதுவா நீங்க இதெல்லாம் கண்டுக்கிறவர் இல்லையே?” என்ற கேள்வியை முன் வைத்து அவனின் அந்தரங்கத்தை மறைக்க பார்த்திருந்தான். அவனின் சூசகமான சாமர்த்தியத்தை புரிந்துக் கொண்டவர்...

“உண்மை தான் நானும் உங்க அம்மாவும் சண்டை போடாத நாள் இல்லை தான்... ஆனால், எந்த சண்டைக்கும் உங்க அம்மா பெட்டியை தூக்கிட்டு அவங்க வீட்டுக்கு போனதில்லை, நானும் அதுக்கு அனுமதிச்சதில்லை” பளிச்சென்று விளம்பியவரின் பேச்சிற்கு பதில் பேச முடியாமல் திணறிப் போனான்.

“நீ டேலன்ட் ஆனவன்னு எனக்கு தெரிஞ்சதால் தான் அர்ஜுன் நீ பிசினஸ் பண்ணுறேன்னு சொன்னதும் நான் மறுப்பே சொல்லாம உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செஞ்சேன், என்கிட்டேயே நீ உண்மையை மறைக்க சாமர்த்தியமா பேசுறதா நினைக்க வேண்டாம்”

தந்தையின் பேச்சிற்கு பதில் கூற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவனின் கோபம் அனைத்தும் மனைவியின் மேல் பாய்ந்து கொண்டிருந்தது... ‘எல்லாம் அவளால் வந்தது’ மனதுக்குள் அவளை வறுத்தெடுத்து கொண்டிருந்தான்.

“கல்யாணம் ஆகி ஆறு மாசம் கூட ஆகலை, அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்குள்ள விரிசல் விழுகுதுன்னா சாதாரண விஷயம் இல்லை... தப்பு உன் மேலையா, உன் பொண்டாட்டி மேலயா, பிரச்சனை என்ன... அதுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரே ஒரு விஷயம் தான் சொல்வேன்”

“என்னவா இருந்தாலும் உன் பொண்டாட்டியை நீயும் விட்டுக் கொடுக்கக்கூடாது, அவளையும் விட்டுக் கொடுக்க வைக்க நீ இடம் கொடுக்க கொடுக்கக்கூடாது, சில விஷயங்களை நாங்க அவகிட்டே சொன்னா அவளால் அதை ஏற்றுக்க கூடிய மனப்பான்மை இல்லாமல் போகலாம், அதனால் இதையெல்லாம் சென்சிடிவா நீ தான் ஹேண்டில் பண்ணிக்கணும்”

“என்ன நான் சொன்னதை செய்வ தானே?”

“ம்ம்ம்... முயற்சி எடுக்குறேன்”

“முயற்சி எல்லாம் இல்லை இன்னைக்கு ராத்திரியே நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு தான் வீட்டுக்கு வரணும்” என்றவர் எழுந்து சென்றுவிட்டிருக்க பலத்த சிந்தனையில் ஆழ்ந்துவிட்டிருந்தான்.
**********************

ரஞ்சன், வாணி இருவரும் இணைந்து கணக்கு வழக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்... குழந்தையை அவர்கள் அறையிலேயே சிறு கூடம் போல் அமைத்து பாதுகாத்து கொண்டனர்... எந்த விதத்திலும் வாணி, ரஞ்சனின் பெற்றோர் ஆதரவை நாடவும் இல்லை, அவள் அதை விரும்பவும் இல்லை. வாணிக்கு அவன் மேல் முழுவதுமாக மனச்சுணக்கம் மறையாதிருக்க அவளாக அவனிடம் எதுவும் கேட்காவிடினும் அவன் கேட்டால் பதிலளிக்க தவறுவதில்லை, அதுவே ரஞ்சனுக்கு பெருத்த ஆறுதலாகவும் முதற்கட்ட வெற்றியாகவும் இருந்தது.

“வாணி நீ ரொம்ப நேரமா சிஸ்டம்லேயே இருக்கிற, ரொம்ப டல்லாவும் தெரியுற, போய் ஜூஸ் குடிச்சுட்டு செக்ஷன் வைஸ் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு எதுவும் மாற்றம் செய்யணும்னாலும் சொல்லிட்டு வரியா?” என்றதும் அவளுக்கும் சற்று ஓய்வு தேவைப்படுவதாக இருக்க...

“சரி நான் போறேன் பாப்பா தூங்குறா அவளை....” என்றவளின் பேச்சை தொடர விடாமல் இடைவெட்டியவன்...

“வியனியை நான் பார்த்துக்கிறேன்” இன்முகத்துடன் கூறி முடித்தவனை தானும் லேசாக புன்னகைத்துவிட்டு, அவன் சொன்னது போல் பகுதி வாரியாக சென்று மேற்பார்வையை தொடங்கினாள்.

“சிரிக்க ஆரம்பிச்சுட்டாடா மனோ, முதல் படி சக்சஸ்! அடுத்ததடுத்து சமாளிச்சு அவ மனசில் பழைய இடத்தை ஆக்கிரமிச்சிரு” எப்படியேனும் தன் மனைவியை சரி செய்துவிடலாம் என்ற நோக்கத்தில் மகிழ்ச்சியாக வளைய வந்தவனுக்கு அன்றே அதற்கு வாய்ப்பில்லை ராஜா என்பது போல் அவன் தோழி அனிதா ரூபத்தில் கிரகம் வந்து நின்றது.

ரஞ்சன் தன் மகளை கண்காணித்தபடியே தன் அலைபேசியில் மூழ்கியிருந்தவனை... “ஹலோ மிஸ்டர்.மனோரஞ்சன் எப்படி இருக்க?” என்று எதிர்பாராது வந்த பரீட்சியமான குரல் வந்த திசை நோக்கி பார்வையை பதிந்தவன் விழிகள் அதிர்ச்சியை பிரதிபலித்தது.

‘இப்போ போய் இவ எங்க இங்க வந்தா?’ என்று திகைப்பில் புலம்பிக் கொண்டவனின் அதிர்ச்சியில் நிலைகுத்திய விழிகளில் இருந்த வேறுபாடு அவளை சிந்திக்க வைத்தது.

“என்னாச்சு மனோ? எப்பவும் நான் வந்தா ஓடி வந்து உபசரிப்ப, இப்போ இப்படி பேயறைஞ்ச மாதிரி நிற்கிற?”

‘இன்னும் நான் அந்த நிலைமைக்கு தள்ளப்படலை இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தாலும் நான் உசுரோட சமாதியாக வேண்டியது தான்’ அவள் கேட்ட கேள்விக்கு மூளைப் பெட்டகத்திற்குள் தனக்குத் தானே கூறி கொண்டிருந்தான். அவள் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்க அவளின் நெருக்கத்தை தவிர்த்து அப்புறப்படுத்த வேண்டி சட்டென்று சுதாரிக்க முயன்ற போது அவனை அணைத்துக் கொண்டிருந்தாள்.

அச்சமயம் சரியாக வாணியும் உள்ளே நுழைந்திருக்க, மனோவின் முகம் அவள் கூறியது போன்று பேயறைந்தது போலவே தான் ஆகிப் போனது. வாணி சில கணங்கள் அவனை உணர்ச்சியற்று வெறித்து விட்டு அருகில் தொட்டிலில் அப்போதே கண் விழித்திருந்த குழந்தையை தூக்கிக் கொண்டவள் அவனிடம் எந்தவொரு கேள்வியையும் கேட்காது, கோபப் பார்வையையும் வீசாது நீ என்ன செய்தால் எனக்கென்ன என்பது போல் அங்கிருந்து நகர எத்தனித்தவளை கண்ட அனிதா...

“இவ உன் கடையில் வேலை செய்யுறவளா ரஞ்சன், அவளை எல்லாம் எதுக்கு இங்கே வரைக்கும் விடுற?” என்று வாணியை பார்த்து முகம் சுளித்துக் கொண்டு கேட்க, வாணியோ அவளின் பேச்சில் சிறிதும் பாதிப்படையாமல் நகர்ந்து கொண்டிருந்தவளை கண்ட ரஞ்சன் சுதாரித்துக் கொண்டவனாக அனிதாவை விலக்கி நிறுத்தி அவளை உஷ்ணமாக முறைத்துவிட்டு...

“வாணி நில்!” என்று மனைவியை பார்த்து உரக்க அழைத்தவன் ஆணையில் பார்வையை திருப்பாமல் நடையை மட்டும் நிறுத்தியிருந்தாள்.

அனிதா அவன் பேச்சையும், செயலையும் சட்டை செய்யாமல் ஓட்டுப்புல் போல் ஓட்டிக் கொண்டிருந்தவளை வழுக்கட்டாயமாக பிரித்து நிறுத்தியவன்...

“தள்ளி நில்லுன்னு சொன்னா புரியாதா உனக்கு?” சற்று குரலை உயர்த்தி கண்டித்தவன்...

வாணியின் கரம் பிடித்து தன்னருகில் நிற்க வைத்து கொண்டவன்... “இவ என் பொண்டாட்டி! உனக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, இவ காலேஜ்ல படிக்கும் போது லவ் பண்ண ஆரம்பிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என்றதும்...

“வாட் ரப்பிஸ்! அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னதெல்லாம்?”

“அதெல்லாம் அப்போ... ஆனால் இப்போ இவ தான் என் மனைவி, என் பொண்ணு வியனி இவ தான்” என்று கையெடுத்து காட்டியனை நம்பாது பார்வை பார்த்தவள்...

“நிஜமா தான் சொல்லுறியா மனோ...? ஆனால் இவளை பார்த்தா உன் ஸ்டேட்டஸ்க்கு கொஞ்சம் கூட பொருத்தமாவே இல்லையே எதுவும் தில்லு முல்லு பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாளா?” வாணியை ஒரு மாதிரியாக பார்த்தபடி கொளுத்திப் போட ரஞ்சனுக்கு அடிமனம் ஆட்டம் காண ஆரம்பித்தது. அதுவரை அமைதியாக இருந்த வாணி தானும் பேச எண்ணி...

“பொருத்தமா இல்லைன்னா என்ன? இப்போ தான் நீங்க வந்துடீங்களே சோ, அதை சரி பண்ண முயற்சி பண்ணுங்க, நான் அதுக்கு தடையா இருக்கமாட்டேன், ஆல் தி பெஸ்ட்” அவள் குரலிலும், முகத்திலும் எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தவளை தடுக்க இயலாமல் அனிதா தடையாக இருக்க...

‘உன் புருஷனை இன்னொருத்திக்கு விட்டு கொடுக்கறியா? இரு டி இவளை முதல்ல கிளப்பி விட்டுட்டு வந்து உன்கிட்டே பேசுகிறேன்’ என்று கூறிக் கொண்டவன் அனிதா புறம் திரும்பி...

“இங்கே பாரு அனிதா, உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டது உண்மை தான்... ஆனால், அப்போ இருந்த மனோரஞ்சன் வேற, இப்போ இருக்கிறவன் வேற... அதனால் இனிமே என்னை தொந்தரவு பண்ணாத தயவு செய்து கிளம்பு” என்றவனை ஏற இறங்க பார்த்தவளின் பார்வையில் இகழ்ச்சி இருக்கவே அதை சிறிதும் லட்சியம் செய்யாமல் சட்டமாக நின்றிருந்தான்.

“உன்னை பத்தி அப்போவே நான் அப்படி இப்படின்னு கேள்விப்பட்டேன்... ஆனால், ஸ்டேட்டஸ் ஒகேவா இருந்ததால் தான் சரின்னு கன்சிடரேஷன் லிஸ்ட்ல வச்சேன்... நீ என்ன என்னை போக சொல்றது நானே போறேன்” என்றவள் திரும்பியும் பாராமல் சென்றுவிட்டிருந்தாள்.

அவள் அங்கிருந்து நகர்ந்ததும் தான் ஆசுவாசமாக மூச்சே வெளியேறியிருக்க, உடனடியாக மனைவியாக நெருங்கினான்... அவளோ அவனிடம் தகவல் கூட கூறாமல் வீட்டிற்கே சென்றிருக்க வருத்தமும், ஆவேசமும் போட்டிப் போட இல்லத்திற்கு விரைந்தான்.

குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தவளை நெருங்கி... “ஏன் சொல்லாம கொள்ளாம திடிர்னு புறப்புட்டு வந்த?” என்று கூர்மையாக வினவியனின் கேள்விக்கு பெரிதும் அலட்டிக் கொள்ளாமல்...

“உங்களை பார்க்க வந்தவங்களுடன் பேச உங்களுக்கு தேவையான தனிமையை ஏற்படுத்தி கொடுத்துட்டு வந்தேன்” என்றவளின் பதில் அத்தனை உவப்பளிக்கவில்லை.

“ஒஹ்! அவ்ளோ தாராள மனப்பான்மையா உனக்கு? சரி கடையில் பார்த்த விட்டுட்டு வந்த, பெட்ரூமுக்கு கூட்டிட்டு வந்திருந்தா என்ன செஞ்சிருப்ப?” என்றவனின் கேள்விக்கு உணர்ச்சியற்று பார்த்தவள் முன்பை போலவே அலட்டிக் கொள்ளாமல்...

“அதே தான் செய்திருப்பேன்” என்றிருக்க, அவளிடம் தன் கோபமும் எடுபடாமல் போவதை எண்ணி மனதை கசக்கி பிழிந்த வேதனையுடன் இமை மூடி திறந்தவன்...

“ஏன் வாணி, அங்கே என்னை ஒரு பொண்ணு கூட பார்த்ததும் ஏன் நீ என்கிட்டே கோபப்பட்டு சண்டை போடலை? அட்லீஸ்ட் அவ யாரு என்னன்னு கேள்வி கேட்டு அதட்டி விசாரிக்கணும்னு கூட தோணலையா?” அடிக்குரலில் தொய்ந்திருந்த அழுத்தமான வேதனையுடன் வினவியவனின் வலி அவளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்பது போல்...

“உங்களை அதட்டவும், சண்டை போடவும் கோபப்படவும் நான் யாரு?” என்றவளை திகைத்து பார்த்தவன்..

“நீ என் பொண்டாட்டி வாணி, அதை கூட மறந்துட்டியா என்ன? ஏன் உனக்கு என் மேல கோபம் வரலை வாணி... அந்தளவுக்கு என்னை வெறுக்குறியா? அந்தளவுக்கு நான் தகுதி இல்லாதவனா?”

“அப்படி எந்த உணர்ச்சியும் எனக்கு வரலை ரஞ்சன்”

“அது தான் ஏன்? எப்படி வராம போகும்?”

“ஏன்னா என் மனசு செத்து போச்சு ரஞ்சன்... எப்போ உன்னை டைம்பாசுக்கு தான் காதலிச்சேன் குழந்தையை கலைச்சுட்டு உன் ஸ்டேட்டஸ்க்கு ஏற்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னீங்களோ, அப்போவே உயிரோட என்னை கொன்னுட்டீங்க... இப்போ இருக்கிற வாணி வெறும் கூடுதான் என்னுடைய உயிர் பிரியாம நடமாடிட்டு இருக்கிறேன்னா அது என் குழந்தைக்காக மட்டும் தான்” என்று ஆவேசமாக பேசியவளின் விழியோரம் லேசாக நீர் கசிய அவன் உள்ளம் சல்லடையாக சடைந்தது.

“வாழ்க்கையை வாழ்க்கையா வாழ முடியாதோன்னு நினைச்சு தான் உன் கூட வாழ நினைச்சேன்... ஆனால், எப்போ என்னை நம்பி இங்கே என் பின்னாடி வந்தியோ அப்போவே என் மனசு முழுக்க நீ ஆதிக்கம் பண்ண ஆரம்பிச்சுட்ட, அதை எத்தனையோ முறை உன்கிட்டே உணர்த்தியும் நீ உணர மறுத்திட்ட, இப்போ என் கூட வாழுறது உன் உடம்பு மட்டும் தான்னு சொல்லுற”

“.........”

“இதை எல்லாம் என்ன சொல்றதுன்னு தெரியலை...” என்றவன் கசப்பாக புன்னகைத்துவிட்டு...

“உன் விஷயத்தில் உன் பேச்சை நான் கேட்டிருக்கலாமோன்னு காலம் கடந்து வருந்துறேன்... ஆனால், இனிமே நான் உன்னை எந்த கேள்வியும் கேட்கமாட்டேன்... உன் மனசு நோகுற மாதிரி நடந்துக்கவும் மாட்டேன்”

“அப்படியாச்சும் உன் செத்து போன மனசுக்கு உயிர் வரட்டும்... ஆனால், எனக்கு ஒரேயொரு கோரிக்கை அதாவது ஒரேயொரு ஆசை அதை மட்டும் நிறைவேத்த முயற்சி பண்ணுவியா?” என்று கெஞ்சலாக வினவியவனை கண்டு என்ன பதிலாளிப்பது என்று அறியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தவளின் பதிலை எதிர்பாராமல்...

“கடைசி வரைக்கும் உன் மனசு மாறாதும்னு மறைமுகமா சொல்லிட்ட இருந்தாலும், ஒரு நப்பாசைக்காக தான் கேட்கிறேன்... ஒரு வேளை என் முடிவு நெருங்கிருச்சுன்னா அப்போ ஒரே ஒரு தடவை என் மன நிம்மதிக்காக, எனக்காக மட்டும் உன்னை மன்னிச்சுட்டேன் ரஞ்சன் சொல்லு” என்று விட்டு பேச்சு முடிந்ததாக நகர்ந்தவனை கண்டு அவள் உள்ளம் ஊசலாடியது... வாழ்க்கையை அனுபவித்து வாழ நினைக்கும் இவனா வாழ்வின் முடிவை பற்றி எல்லாம் பேசுகிறான், நிஜமாவே இது மனோரஞ்சன் தானா என்று தன் கையாயே கிள்ளி பார்த்துக் கொண்டவள் ஆழ்மனம் ஏதோ பயங்கரமாக இருப்பது போல் அவளை உலுக்கிப் போட்டது.

உண்மையில் ரஞ்சனை அவன் தோழியுடன் பார்த்த போது அவன் மேல் அலையலையாய் கோபம் கொந்தளிக்க தான் செய்தது... ஆனாலும், அவனிடம் அதை காட்டிக் கொள்ள அவள் சுயமரியாதை இடம் கொடுக்காது போகவே தான், அவள் மனதை மறைத்துக் கொண்டு பேசியிருந்தாள்... அவளின் பேச்சில் இப்போது ரஞ்சன் உச்சக்கட்ட விரக்தியில் இருப்பதை ஏனோ அறிந்துக் கொள்ளவும் இல்லை, அறிந்துக் கொள்ள முற்படவும் இல்லை.
**********************
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தரன் அரசியை கூட்டிக் கொண்டு அர்ஜுனின் இல்லத்தை அடைந்திருக்க, அரசியின் உள்ளம் ரயில் தண்டவாளம் போல் தடக்தடக்கென்று அடித்துக் கொண்டிருந்தது.

“நீ போ நான் கிளம்பறேன்... இனி எக்காரணத்துகாகவும் நீ அங்கே வரக்கூடாது அப்படி உனக்கு வரணும்னா உன் புருஷன் கூடத்தான் வரணும்” என்றவனை கண்கள் கலங்க பார்த்தப்படி பாதத்தில் பசைக் கொண்டு ஒட்டியது போல் அங்கேயே நகராமல் நின்றிருந்தவளை கண்டு...

“மணி ஒன்பதாகிருச்சு உள்ளே போ அரசி” என்று அதட்டியவனின் முகத்தை பேதலித்து நோக்கியவள்...

“அண்ணா... நீங்க... நீங்க... உள்ளே வந்துட்டு போங்களேன் ப்ளீஸ்” என்று மன்றாடியவளின் சங்கடம் புரிந்துக் கொள்ள முடிய, அவளின் விருப்பப்படியே செயல்படுத்த எண்ணியவன்...

“இன்னொன்னும் சொல்லிக்கிறேன் உங்களுடைய அந்தரங்கத்தை வெளியில் காட்டிக்க வேண்டாம், பெரியவங்களுக்கு சின்ன விஷயம் கூட வேதனை தான் தரும்... உங்களுக்குள்ள எத்தனை மனக்கசப்பு இருந்தாலும் வெளியில் சிரிச்சு சந்தோசமா இருக்கணும்”

அவன் கூறியதை ஏற்றுக் கொண்டிருந்தாலும், அவள் முகம் பீதியில் இருந்ததை அறிந்து...

“இன்னும் என்ன அரசி?”

“நீங்க சொன்னதை நான் ஏற்று சமாளிச்சிருவேன்... ஆனால் அவரை நினைச்சு தான் பயமா இருக்கு”

“அவனுக்கு பிசினஸ் டென்ஷன், வீட்டுக்கு வந்தா வீட்டு பிரச்சனை, ரெண்டையும் சமாளிக்கணும்... தொழிலை அவன் பார்த்துக்குவான், வீட்டில் இருக்கும் போது பொறுப்பை நீ எடுத்துக்கோ... நீ தான் எடுத்துக்கிட்டும் ஆகணும்” என்றவன் சகஜமாக அர்ஜுன் வீட்டினரிடம் உரையாடிவிட்டு கிளம்பி விட்டிருந்தான்.

அரசி தரன் கூறியது போல் அனைவரிடமும் இயல்பாக பேசி சிரித்து அவள் அத்தைக்கும் உதவி செய்து முடித்து விட்டு அவர்கள் அறைக்கு கிளம்பும் சமயம்...

“அரசி ஒரு நிமிஷம் இருமா உன்கிட்டே பேசணும்” என்று கூறி நிறுத்தியிருந்தார்.

“சொல்லுங்கத்தை” என்றதும்...

“நான் சுத்தி வளைச்செல்லாம் பேச விரும்பலை, நேரடியாவே விஷயத்துக்கு வரேன்... உனக்கும் அர்ஜுனுக்கும் என்ன பிரச்சனை?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை” என்று மலுப்பியவளின் முகம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த அணிச்சையாக தசைகள் அசைந்ததில் உள்ள பேதத்தை உணர்ந்தவர்...

“குடும்ப வாழ்க்கையில் உன்னை விட முப்பது வருஷம் அனுபவத்தை வச்சுக்கிட்டு நீ சொல்லுறதை நம்பினேனா என் பையன் வாழ்க்கையும், உன் வாழ்க்கையும் கேள்விக் குறி ஆகிரும்... நீ என்னை என்ன நினைச்சுக்கிட்டாலும் சரி அரசி... இனி நீ அர்ஜுனை விட்டுட்டு தனியா எங்கேயும் போகக்கூடாது... எங்காச்சும் போக வேண்டிய நிர்பந்தம் வந்துட்டால் கூட, அவனோட தான் நீ போகணும்... அப்படி இல்லாத பட்சத்தில் நீ போறதையே தவிர்த்து விடணும்”

“இதை நான் மாமியார்ன்னு அதிகாரத்தை காட்டுறதா நினைச்சா அதை நான் மறுக்கமாட்டேன், ஏன்னா அது தான் உண்மை! எனக்கு என் பையனோட சந்தோஷம் தான் முதல் முக்கியம் அப்புறம் தான் மத்தவங்க எல்லாம்... அதனால் நான் சொன்ன வார்த்தையை மதிச்சு நடக்கப்பாரு” சற்று கடுமையாகவே உரைத்திருக்க, அரசியின் கண்களோ குளம் கட்டிக் கொண்டது... இதோ வெளியேறிவிடுவேன் என்று அச்சுறுத்திய கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு அழுத்தமாக நின்று தன் சுய மரியாதையை காப்பாற்றிக் கொண்டாள்.

“ஈவினிங் வாக்கிங் போறேன்னு போனவன் தான் இன்னும் வீடு வந்து சேரலை, எதை நினைச்சு மனசை போட்டு குழப்பிகிட்டு இருக்கிறானோ... இதுவே கல்யாணத்துக்கு முன்னாடின்னா அவனை தனியா உட்கார வச்சு பேசி அவன் மனசுல உள்ள ஏக்கத்தை தீர்க்க நான் முயற்சி எடுத்திருப்பேன்... ஆனால் இப்போ பொண்டாட்டின்னு நீ இருக்கிறதால் என்னால் அதுவும் முடியாது, ஒரு அளவுக்கு மேல உங்க அந்தரங்கத்துகுள்ள அம்மாவான நான் தலையிட்டு கருத்து சொல்லவும் முடியாது, என் மகனோட பொண்டாட்டி நீ தான் உன் புருஷன் மனசை புரிஞ்சு நடந்துக்கணும்... ரூமுக்கு போனதும் தூங்காம, அவன் எங்க இருக்கான்? எப்போ வருவான், என்னன்னு விசாரிச்சு சீக்கிரம் வரச் சொல்லு, இனி அவனை நீ இது மாதிரி எங்கேயும் வெளியே அனுப்பக்கூடாது வேலை முடிச்சா உன்னை தேடித் தான் வரணும்” கறாராக கூறியதும், அழுகையை அடக்கும் முயற்சியாக உதட்டை கடித்துக் கொண்டு...

“சரிங்க த்தை” என்றவள் நிமிடமும் தாமதிக்காமல் அங்கிருந்து விரசாக நகர்ந்தாள். தர்சன் அன்னையை தேடி வந்தவன் அவரின் பேச்சு அனைத்தையும் கேட்டு...

“ஏன்மா அவங்ககிட்டே இப்படி பேசுனீங்க? பாவம்! அவங்க மனசு எவ்ளோ கஷ்டப்படும்... நீங்க தானே சொல்லுவீங்க அரசி பெத்தவங்க இல்லைன்னு வருத்தப்படக் கூடாதுன்னு, இப்போ நீங்களே இப்படி பேசலாமா?”

“பின்னே மயிலே மயிலேன்னா இறகு போட்டிருமா? சொல்ற விதத்தில் சொன்னா கேட்டுக்குவாங்கன்னு கொஞ்சிகிட்டே இருக்க முடியுமா? உன் அண்ணன் முகத்தில் ஒரு பூரிப்பையே காணோம், சதா எதையோ தொலைச்சுட்டு பித்து பிடிச்ச மாதிரி சுத்திட்டு திரியுறான், அவன் ஏன் அப்படி இருக்கிறான்னு பார்த்துக்க வேண்டியது அவளுடைய பொறுப்பு, அதான் கொஞ்சம் தாளிச்சுவிட்டேன்”

“ஏன்மா உங்களுக்கு உங்க மகன் மட்டும் தான் முக்கியமா? அப்போ அவங்களுக்கு யார் இருக்காங்கன்னு நினைச்சு வேதனையில் துடிச்சு போக மாட்டாங்களா?”

“அழட்டும், ஏன் அதுக்கு தான் அவ புருஷன் இருக்கான்ல... பொண்டாட்டி ஏன் அழுகிறா, எதுக்காக அழுகுறான்னு கேட்கட்டும், அதுக்கப்புறம் அவ என்னை தானே கை காட்டுவா, காட்டட்டும்... உங்க அண்ணன் என்னை கேள்வி கேட்கட்டும்... அப்போ தெரியும்ல அவளுக்கு நமக்குன்னு நம்ம புருஷன் இருக்கிறான், யாருக்காக இல்லைனாலும் அவருக்காக பார்க்கணும்னு அப்போ தானே அவளுக்கும் அந்த எண்ணம் வரும், இதுல கூட நான் கரடுமுரடா இல்லைன்னா நான் மாமியார் பதவி ஏற்று என்னடா இருக்கு”

“ம்ச்... நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்கமாட்டேன்... நீங்க நல்லது தான் செய்றீங்க... ஆனால், அதுக்காக அவங்களை ஏன் ஹர்ட் பண்ணனும்?”

“உனக்கு இதெல்லாம் புரிய லேட் ஆகும் தர்சன்... உனக்கும் சரி, உன் அண்ணனுக்கும் சரி, எங்க காலத்துக்கு அப்புறம் உங்களுக்கு வர துணை தான் ஆதரவு அவங்களுக்கும் நீங்க அப்படி தான்... கணவன், மனைவி பந்தம் இன்னைக்கு நாளைக்கு முடியுற பந்தம் இல்லை, ஆயுசுக்கும் கூட இருக்கணும், சின்ன குழந்தைங்க அடம் புடிச்சா அந்த சமயத்துக்கு அடிச்சோ மிரட்டியோ விட்டுட்டு திரும்பவும் கொஞ்சுறதில்லையா? அது மாதிரி தான் இதுவும், அவங்க ரெண்டு பேரும் என்னமோ சண்டை போட்டுக்கட்டும் அதுக்காக கோவிச்சுகிட்டு அவனை விட்டு இவ போகலாமா?”

“ஏன்மா அவங்களுக்கு என்ன மன வருத்தமோ, அதனால் கொஞ்சம் நாளைக்கு அண்ணனை விட்டு தள்ளியிருக்கலாம்ன்னு நினைச்சிருப்பாங்க”

“அப்படி பார்த்தா நானெல்லாம் வருஷத்துல முன்னூறு நாலு எங்க வீட்டுல தான் இருந்திருக்கணும்” அதற்கும் தர்சன் ஏதோ கூற சென்றவனை தடுத்தார் நடராஜன்.

“தர்சன் போதும் விடு, நீ உன் அண்ணனுக்காக பார்க்கிற தப்பில்லை... அதே சமயம் இப்போ அவனுக்கு கல்யாணமும் ஆகிருச்சு, அவனுக்குன்னு குடும்பம் வந்திருச்சு, அதை அவன் தான் பார்த்துக்கணும்... உங்க அம்மா சொல்றது சரி தான் நீயும் இனி மேல் தலையிடாத” என்றதும் தர்சன் புரிந்து கொண்டவனாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

“என்ன மல்லி மருமகளை காய்ச்சி விட்டுட்ட போல”

“பின்னே என்னங்க, எத்தனை நாளைக்கு தான் அவங்க விஷயத்தில் தலையிடக்கூடாதுன்னு இருக்கிறது... அப்புறம் பிரச்சனை முத்தி போச்சுன்னா நம்ம தலையில் தான் விழும்... அப்புறம் தலையை விட்டுட்டு வாலை பிடிக்கிற கதையா ஆகிரக் கூடாதில்லையா”

“சரி தான்....” என்று ஆரம்பிக்கும் போதே அர்ஜுன் அங்கே பிரசன்னமாகியிருக்க, இருவரும் பரிபாஷையில் பேசிக் கொண்டவர்கள்...

“அரசி எங்கே அர்ஜுன்? ஈவினிங் கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருந்த?” என்று அவர் கூறியதை அவன் கூறியதாக வளைத்தடு போல் திருப்பியிருந்ததை எண்ணி கண்கள் சுருங்க பார்த்தவன்...

“அவகிட்டே பேசிட்டேன் நாளைக்கு போய் கூட்டிட்டு வரேன்” என்றவனை கண்டு இருவரும் குறிப்பாக பார்த்துக் கொண்டனர்.

அவர்களின் முக உணர்ச்சிகளை அவதானிக்காது... “ரொம்ப டையர்டா இருக்கு போய் தூங்குறேன்” என்று விட்டு வேகமாக சென்றவனை துளைக்கும் பார்வையால் தொடர்ந்தவர்கள்...

“என்னமா சரடு விட்டுட்டு போறான் பாருங்க?”

“விடு மல்லி இனி அவனாச்சு அவன் பொண்டாட்டி ஆச்சு” என்று கூறி பேச்சை முடித்திருந்தார் நடராஜன்.

அர்ஜுன் விச்ராந்தியாக அறைக்குள் நுழைந்தவன், கட்டிலின் ஓரத்தில் கால்களை குறுக்கிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்த மனைவியை கண்டு திகைத்தான்.

“இவ எப்போ வந்தா?” என்று நினைத்தவனுக்கு மனம் நிறைவதை உணர்ந்தான்... ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் மறைக்க, தன் மனதை கல்லாக்கிக் கொண்டான்... கதவு திறக்கும் ஒலியில் விருட்டென்று கட்டிலை சுற்றி கொண்டு எழுந்த அரசி கணவனை கலவையான உணர்ச்சிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் கண்கள் கலங்கி சிவந்திருந்ததில் அழுதிருப்பதை உணர்ந்து கொண்டவனுக்கு அதுவரை மறைந்திருந்த மனதாங்கல் தலைதூக்க, அங்கே கிடந்த உயிரற்ற பொருளை போல் அவளையும் பற்றின்றி பார்த்துவிட்டு குளியறைக்குள் புகுந்துவிட்டான்.

அவள் கூறிய வார்த்தைகளால் அர்ஜுனின் சித்தம் சிதிலமடைந்திருந்தது... தான் சபல புத்திக்காரன் என்று கருதி தூக்கி எறிந்து விட்டு சென்றிருக்கையில், அவள் திரும்பி வருவதும் சந்தேகம் தான் என்று நினைவு கூர்ந்து மறுகிக் கொண்டிருந்தவனின் முன் திடிரென்று அவள் பிரசன்னமாகி நின்றது அவனுக்கு நிம்மதியாக இருந்தாலும், ஒரு புறம் அவள் பேச்சை எண்ணி கசப்பாகவும் உணர்ந்தான். ஏதேதோ நினைத்தபடி குளித்து முடித்து பின்னந்தலையை துவாலையால் துவட்டியப்படி வெளியேறியவனையே நிலைகுத்திய பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அர்ஜுன் மனைவியை வா என்றும் கேட்கவில்லை, சாப்பிட்டாயா என்றும் கேட்கவில்லை என்பதை அவள் குறிப்புணர்ந்தாலும், அதை பற்றி கேட்க அவளுக்கும் தகுதி இல்லையே என்றவளுக்கு துரிதம் நெஞ்சை அடைத்தது.

தன் இருப்பையே உணராதவனாக இருந்தவனிடம்... “ம்க்கும்” என்று தொண்டையை செருமி தன் இருப்பை உணர்த்தியவளின் ஒலியும், செவியில் எட்டாதது போல் தன் போக்கில் கட்டிலின் மறுமுனைக்கு சென்றவனை கண்டு இதற்கு மேல் தயங்கினாள் வேலைக்கு ஆகாது என்றுணர்ந்து...

“அர்ஜு...” என்று அழைத்து அவன் வலது கரத்தின் மணிக்கட்டை பிடித்துக் கொண்டாள். அவளின் செயலில் கல்லோ, மண்ணோ என்பது போல் பார்த்து விட்டு அவள் கரத்தை உருவிக் கொள்ள முயன்றவனை விடாது தன் பிடியில் அழுத்தத்தை கூட்டி இருந்தாள்.

“நான் செஞ்ச தப்புக்கு எனக்கு மன்னிப்பு கிடையாதுன்னு தெரியும்... இருந்தாலும், நான் அதை கேட்கலைன்னா என் மனசாட்சியே என்னை கொன்னுரும்... என்னை மன்னிச்சிருங்க அர்ஜுன்” என்றவளுக்கு மனதின் அழுத்தம் கரையுடைக்க, மேலும் பேச முடியாமல் வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் கவ்வி பிடித்துக் கொண்டதில் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கண்ணீர் வடித்தாள்.

அவள் கண்களின் ஈரம் மார்பு சட்டையை ஊடுருவி அவன் இதயத்தை நனைத்ததில் நெஞ்சை கசக்கி பிழிவது போல் வலித்தது. அவளை தொட்டு தாலி காட்டிய தருணத்தில் ஏற்ற சத்திய பிரமானம் அனைத்தும் அவள் கண்ணீரில் கரைந்து கொண்டிருப்பதை எண்ணி ஆணாக அவமானம் கொண்டான்.

இந்த இழுக்கை விளைவித்தது மெய்யாகவே அவன் செயல் என்றால் அவளின் இந்த கண்ணீரை துடைக்க அவன் எப்படிபட்ட காரியத்தையும் செய்ய துணிந்து இறங்கியிருப்பான்... ஆனால் அதை இழுத்துவிட்டது அவள் சாரம் என்பதால் அவனால் அதை எண்ணி வருந்த முடிந்ததே தவிர, அவன் விரல்கள் அவள் கண்ணீரை துடைக்க முற்படவில்லை.

“எனக்கு என்ன பேசுறசுது, என்ன கேட்கிறதுன்னு நிஜமாவே புரியலை அர்ஜு... நான் அவசரப்பட்டு பேசின வார்த்தை எவ்ளோ தப்புன்னு இப்போ தான் உணருறேன்” என்றவளின் பேச்சை கேட்டு அவன் உடல் இறுகியது.

அவன் தசைகளின் இறுக்கம் தன் பேச்சினால் விளைந்த தார்மீகக் கோபத்தை உணர்த்தியதில் அவளின் இதயம் தவித்து துடித்துக் கொண்டிருந்தது.

“நான் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்... எங்கே எனக்கே எனக்குன்னு இருக்கிற நீங்க இல்லாம போயிருவீங்களோன்னு பயத்தில் தான் நான் அவசரப்பட்டு தப்பா நினைச்சு வார்த்தையை விட்டுட்டேன்... தரன் அண்ணா சொன்னதும் தான் நான் எவ்ளோ மடத்தனமா பேசியிருக்கேன்னு நினைச்சு ஃபீல் பண்றேன்” குரல் கரகரக்க கூறியவளின் பேச்சை கேட்டு அவளை சட்டென்று விலக்கி நிறுத்தியவன் இதழ்கள் ஏளனத்தில் வளைந்திருக்க...

“இப்போவும் நீயா என்னை நம்பலை... தரன் சொன்னதால் தான் என்கிட்டே திரும்ப வந்திருக்க இல்லைன்னா...?” என்று கேள்வியுடன் நிறுத்தியவனின் பேச்சில் விளக்கொளி பட்ட முயலை போல் அரண்டு பார்த்தாள்.

“செய்யாத தப்பை நான் செய்தேன்னு முடிவெடுத்து வார்த்தையில் எவ்வளவு விஷத்தை தடவி பேச முடியுமோ அவ்வளவும் பேசிட்டு... இப்போ தப்பே செய்யலைன்னு மூணாவது ஆள் சிபாரிசு பண்ணி போனா போகுதுன்னு என் காதலை ஏற்றுக்க வந்திருக்க?” என்றவனின் பேச்சு அன்று அவன் பட்ட வலியை ஸ்பஷ்டமாக வெளிச்சமிட்டு காட்டியதில், இனி நம் வாழ்க்கையின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சம் வியாபித்து தொண்டை வறண்டு நா உலர்ந்து போனது.

“உனக்கொரு வாய்ப்பு தரேன் தயவு செய்து என்னை கத்தியால் கூட குத்தி காயத்தை ஏற்படுத்தியிரு அதுக்கு வைத்தியம் பண்ணினா வலி போகும்... ஆனால் திரும்பத் திரும்ப என்னை அவமானப்படுத்துற உன் வார்த்தையால நான் கண்ட கருமத்தை எல்லாம் தேடி போக வேண்டியதா இருக்கு” என்றவன் விரக்தியுடன் பால்கனியில் நுழைந்துவிட்டிருந்தான்.

அவனிடம் மன்னிப்பு கேட்டு புரிய வைத்துவிடலாம் என்றிருந்த நம்பிக்கையை, அவனின் ஒற்றை கேள்வியால் வேரறுத்து விட்டிருந்ததை தாங்க முடியாமல் நிலைகுலைந்து போனாள் பேதை!

தன் கணவனின் காதல் மீளாதோ? தனக்காக செய்யும் அரவணைப்புகள் அவனுக்கு கிடைக்காதோ என்ற ஏக்கம் அகத்தை ஆக்கிரமிக்க, சிந்தையோ சல்லடையாகிப் போனது.

வெற்று தரையில் பின்னந்தலைக்கு கரங்களை முட்டுக் கொடுத்து வானத்தை வெறித்து கொண்டிருந்தவனின் சிந்தையில் தன்னவளின் கண்ணீர் வடியும் முகமே அகப்பட... “உன்னை உயிரா காதலிச்சு உன் அம்மா அப்பா இருந்திருந்தா உன்னை எவ்ளோ சந்தோசமா வாழ வச்சிருப்பாங்களோ, அதை விட ரெண்டு மடங்கு சந்தோசமா வச்சுக்க பார்த்து காதலை அள்ளி கொட்டினேனே டி... ஆனால் இப்படி உன் கண்ணீரை கூட துடைச்சு விட கையாலாகாதவனா இருக்க வச்சுட்டியே?” என்றவனின் உள்ளம் ஊமையாக அழுது கொண்டிருந்தது. மூடப்பட்ட அறையின் உள்ளே இரு உள்ளங்கள் திசை மாறிய பறவைகளை போல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-29 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-30

“அண்ணி கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வாங்களேன்... ப்ளீஸ்! ப்ளீஸ்!” அலைபேசி உரையாடலில் அலறிய மலரின் பதட்டமான குரலில், தன் மகளுக்கே ஏதேனும் ஆகிவிட்டதா என்று பதறிப் போனவள்...

“என்ன மலர், என்னாச்சு? பாப்பாவுக்கு ஏதும் ஆச்சா...? இல்லை.....” என்று தொடங்கியவளை தொடரவிடாமல் அவசரமாக இடையிட்ட மலர்...

“அண்ணி பாப்பா எல்லாம் நல்லா இருக்கா, அவளுக்கெல்லாம் ஒண்ணுமில்லை... இங்கே எனக்கு தான் பிரச்சனை கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்” என்று பதறியவளைக் கண்டு...

“சரி... சரி... வை நான் இதோ வந்துடறேன்” என்றவள் அவளின் பணியை இடையிலேயே தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, மலரின் பேச்சிற்கிணங்க அடித்து பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்தாள். அவசரம் என்றதும் அர்ஜுனின் காரில் வந்திறங்கியவளை கண்ட மலர் வாசலில் வைத்தே அவளை சுற்றி வளைத்துக் கொண்டவள்...

“அண்ணிஈ” என்று கலங்கிய முகத்துடன் ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டிருந்தவளை...

“மலர்?” என்று தானும் வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள்... அவளின் பார்வை வாசலில் பல ஜோடிகளுடன் இருந்த காலணிகளும், வீட்டின் உள்ளே ஒலித்த பேச்சுக் குரல்களும், சிரிப்பொலியும் என அவளை பலத்த யோசனையில் ஆழ்த்தியிருக்க...

“மலர் என்னாச்சுன்னு சொல்லு” என்றதும் நடந்துக் கொண்டிருப்பதை கூறலானாள்.

**********************

தரன் தோட்டத்தில் களையெடுக்கும் பணியை மேற்பார்வை செய்ய வெளியே சென்றிருக்க, சம்யுக்தா பணி சம்மந்தமாக காணொளி கூட்டம் நடத்த தகுந்த சூழல் தேவைப்படவே அர்ஜுனின் அழுவலகத்திலேயே அவளுக்காக அழுவலகத்திற்கு என ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட அறையில் காணொளி கூட்டத்தை செயலாக்கம் செய்ய அவன் நிறுவனத்திற்கு சென்றிருந்தாள். கலைமலருக்கு தன் உயிர்நிலை கல்வியின் இறுதி பரீட்சையை முடித்து விட்டு தேர்வு முடிவுக்காக காத்திருக்க, தன் தமையன் மகள் நிலாவுடன் நேரம் செலவிடுவதிலேயே நேரத்தை போக்கிக் கொண்டிருந்தாள். சம்யுக்தாவின் பணியை தொடர அவளின் உதவி பேருதவியாகத் தான் இருந்தது.

அன்றும் அது போலவே நிலாவை பார்த்துக் கொண்டு இருக்க வாசலில் கார் ஒன்று வந்து நின்றதை கவனித்து குழந்தையுடனே சென்றவள்...

“யார் நீங்க என்ன வேணும்?” என்று விசாரித்தாள்.

“இது கேசவதரன் வீடு தானே?” என்று ஐந்து பேர் இருந்த கூட்டத்தில் பெரியவர் ஒருவர் விசாரிக்க...

“ஆமாம் நீங்கெல்லாம் யாரு?” என்று வினவியவளை குறுகுறுவென்று நோக்கியபடி ஒருவருக்கொருவர் பார்வையால் பேசி தலையை ஆட்டிக் கொள்ள, மலருக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

“வீட்டில் பெரியவங்க இருந்தா கூப்பிடுமா அவங்ககிட்டே தான் பேசணும்” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே குழலி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவர் வந்திருந்தவர்களை அடையாளம் கண்டுக் கொண்டு...

“அடடே நம்ம ராஜா அண்ணன் குடும்பம்... வாங்க! வாங்க! சௌக்கியமா எப்படி இருக்கீங்க?” வாயெல்லாம் புன்னகையுடன் அழைத்திருந்தவரின் பேச்சில்...

“நாங்க நல்லாருக்கோம் குழலி... இன்னைக்கு நாள் நல்லா இருக்கு நல்ல விஷயம் பேசலாம்னு வந்தோம்” என்று கூறியவரின் வார்த்தையில் மனம் துணுக்குற காதை தீட்டி வைத்து அவர்களின் பேச்சை கூர்மையாக கவனிக்கலானாள் மலர்.

“எல்லாமே வாசலில் வச்சு தான் பேசணுமா?” என்றதும் குழலி அவர்களை வீட்டிற்கு அழைத்து உபசரித்து பேசிக் கொண்டிருந்தனர்... அவர்களும் தோற்பாவை கூத்து நடத்தும் சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கேசவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள் என்பதும் அவர்களின் உரையாடலில் தெரிந்துக் கொண்டவள்... ‘இவ்ளோதானா சரி இனி நமக்கென்ன’ என்று அசட்டையாக அறைக்குள் புகுந்து எப்போதும் போல் நிலாவுடன் நேரத்தை செலவளிக்கலானாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கேசவதரன், குருதரன் இருவரும் இணைந்திருக்க அப்போது தான் அவர்கள் வந்த விஷயத்தை பற்றி பேசலானார்கள்.

“நீங்க மதுரை போய் ரொம்ப வருஷம் ஆகுதுல்ல, நான் எதிர்பார்க்கவே இல்ல நீங்க வருவீங்கன்னு”

“ஆனால் நாங்க எதிர்பார்த்துட்டு தான் இருந்தோமே கேசவா”

“என்ன ண்ணா சொல்றீங்க?”

“இங்க பாரு கேசவா நான் சுத்தி வளைச்செல்லாம் பேச விரும்பலை நேரடியாவே விஷயத்துக்கு வரேன், உன் பொண்ணு மலரை எங்களுக்கு சின்ன வயசில் இருந்தே தெரியும்... என் பையன் லோகேஷுக்கு அவளை பெண் கேட்டு வந்திருக்கோம்” என்றதும் அவர்களுக்கே சற்று திகைப்பாக இருந்த போது, மலரோ திகிலடைந்து போனாள்.

“என் பையன் லோகேஷ் நம்ம கூத்து தொழிலை கையில் எடுக்கலை, அவன் பாரின்ல தான் வேலை பார்க்கிறான்... மலரை ஒரு வாட்டி கூத்து நடத்துற இடத்தில பார்த்துட்டு, அவன் விருப்பப்படுறேன்னு சொன்னான்... அதான் உங்க பொண்ணு மலரை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்”

“இல்லை ண்ணா அவ இப்போ தான் பள்ளி படிப்பையே முடிச்சா, அதுக்குள்ள கல்யாணமா?” என்று குரு தயக்கமாக கூற, கேசவனுக்கும் தன் தமையனின் ஒத்த கருத்தையே கொண்டிருக்க, குழலி மட்டும் வேறு விதத்தில் யோசித்தார்.

“அதெல்லாம் தெரியும் கேசவா உங்க பொண்ணு ஸ்கூல் படிப்பை முடிக்கத் தான் காத்துகிட்டு இருந்தோம், எப்படியும் மேல படிக்க வைக்க போறீங்க, அதை என் பையனே படிக்க வைக்கட்டும்... அவன் கை நிறைய சம்பாரிக்கிறான், நீங்க விசாரிச்சு கூட பார்த்துக்கோங்க” என்றதும் குழலிக்கு முகம் விகசிக்க...

“என்ன ண்ணா இப்படி சொல்றீங்க? என்ன தான் உசரத்துக்கு போனாலும் நீங்க எந்தவொரு கௌரவமும் பார்க்காமல் எங்களை மதிச்சு வீடு தேடி வந்து பொண்ணு கேட்கிறதே பெரிய விஷயம்... உங்க பையன் லோகேஷ் என் பையன் மாதிரி தான், அவனை பற்றி நாங்க விசாரிச்சு தான் தெரிஞ்சுக்கணுமா?” என்று கூறிய குழலியின் வார்த்தையிலேயே கேசவன், குரு இருவருக்கும் அவரின் மனம் புரிந்துப் போக இருவரும் ஆட்சேபமாக பார்த்தனர்.

“அண்ணா பேசிட்டு இருங்க இதோ வரேன்” என்று உள்ளே சென்றவர் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று பேசலானார்.

“என்ன குழலி இதெல்லாம் நம்ம பிள்ளை இப்பத் தான் ஸ்கூலே படிச்சு முடிச்சிருக்கா, விவரமில்லாம நீ கல்யாணத்துக்கு சரிங்கிற மாதிரி பேசுற?”

“இப்போ நீங்க தான் விவரம் இல்லாம பேசுறீங்க... நம்ம ஒரு பிள்ளயோட வாழ்க்கை தான் நம்ம விருப்பம் இல்லாம நடந்திருச்சு... நம்ம மலருக்காச்சும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டாமா?”

“அதுக்கில்லை குழலி நம்ம தரன் கூட வீட்டில் இல்லை, அவன்கிட்ட சொல்லாம இப்போ உடனே நாம முடிவை சொல்ல வேண்டாமே” என்று கேசவன் தன் கருத்தை பதிக்க...

“அண்ணா நீங்க சொல்றதை நான் யோசிக்கமாட்டேனா? எனக்கென்னன்னா இப்போ வந்திருக்கிற இடம் நல்ல இடம், பையன் கைநிறைய சம்பாதிக்கிறான், பார்க்கவும் லட்சணமா இருக்கிறான், நம்ம தரனை விட ரெண்டு மடங்கு அதிக சம்பளம் வாங்குறான் போல மலருடைய படிப்பை கூட அவங்களே பார்த்துக்கிறேன் சொல்றாங்க, வீடு தேடி வந்த சம்மதத்தை நாம வேண்டாம்ன்னு சொல்லுறதா? தரன் வந்தா அவன்கிட்ட நாம எடுத்து சொன்னா புரிஞ்சுக்க போறான்” என்றவரின் பேச்சை கேட்ட இருவரும் குழலியின் மூளைச் சலவையால் மனம் மாறியிருக்கவே மலருக்கு மூலையில் அபாய மணி அடித்தது... இப்போது மட்டும் இவர்களின் பேச்சை தெரிந்துக் கொள்வது போல் காட்டிக் கொண்டால் நிச்சயம் அவளை தான் அடக்க பார்ப்பார்கள் என்றுணர்ந்து புத்தியை தீட்டி யோசித்தவள் தரன், சம்யுக்தா இருவருக்கும் அழைத்தாள்... அதில் தரனின் அலைபேசி எடுக்கப்படாமல் போகவே நேரம் ஆகிக் கொண்டிருப்பதை உணர்ந்து சம்யுக்தாவிற்கு அழைத்து பேசி அவளை வரவழைத்தும் விட்டிருந்தாள்.

**********************

“அண்ணி உள்ளே எல்லாரும் என்னை இப்போதைக்கு பெண் பார்த்து போயிட்டு, அப்புறமா அண்ணன்கிட்ட சொல்லி நிச்சயம் பண்ணுறதா பேசிக்கிறாங்க” என்று அழுகாத குறையாக மங்கிய குரலில் கூறியவளின் பேச்சை கேட்டு கொதித்து கொண்டு வந்தது.

“உங்க அம்மா தான் அவசரப்பட்டு முடிவெடுக்கிறாங்கன்னா உங்க அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் தெரிய வேண்டாமா? நீ இதை போன்லையே சொல்றதுக்கு என்ன? வர வழியிலேயே உங்க அண்ணனை கூட்டிட்டு வந்திருப்பேனே” என்று சூழ்நிலை சிக்கலாக இருப்பதை உணர்ந்து மலரிடம் கடிந்துக் கொள்ள, அதற்கெல்லாம் அவள் வருந்தவில்லை ஏனெனில் அதை விட பெரும் பிரச்சனை அவளுக்காக காத்துக் கொண்டு இருக்கிறதே.

“அண்ணி, அண்ணன் வர வரைக்கும் ஏன் வெயிட் பண்ணனும், நீங்களே பேசுங்க அண்ணி” என்று கூறியவளிடம் சலிப்பாக முகம் காட்டினாள்.

“உளராதே! நான் சொன்னா உடனே கேட்டிருவாங்களா... சும்மாவே உங்க அம்மாவுக்கும், எனக்கும் முட்டிக்கிறது உனக்கு தெரியாததா?”

“அண்ணி அதெல்லாம் இப்போ பிரச்சனை இல்லை, எதுனாலும் அண்ணன் பார்த்துப்பாங்க... ப்ளீஸ்! நீங்களே முதல்ல பேசுங்கண்ணி” கொக்குக்கு ஒன்றே மதி போல் மலர் அவளின் பிடிவாதத்திலேயே குறியாக இருக்க, சம்யுக்தாவிற்கு ஆயாசமாக போனது... அவளுடன் பேசிக் கொண்டே தன் கணவனை வரவழைக்க வேண்டிய ஏற்பாட்டை செய்து விட்டு மலரிடம் பேசப் போக...

“மலர் உள்ளே வா சீக்கிரம் டிரஸ் மாத்து” என்று குழலியின் அழைப்பில் சம்யுக்தாவின் பின்னே ஒண்டிக் கொண்டவளை கண்டு அவள் மேல் பச்சாதாபம் தோன்றியது.

“ஏன் அவளை டிரஸ் மாத்த சொல்றீங்க?” என்று ஒன்றுமே அறியாதவள் போல் வினவியவளிடம் நடந்ததை கூறிவிட்டிருக்க, கனன்று எழுந்த கோபத்தை அடக்க முடியாமல் அவர் மேல் பாய்ந்துவிட்டிருந்தாள்.

“அவளுக்கு இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இப்போ தான் ஸ்கூலே முடிச்சிருக்கா இருபத்தியொரு வயசாகாம கல்யாணம் பண்ணினா சட்டப்படி செல்லாது, குற்றமும் கூட... உடனடியா இந்த பேச்சு வார்த்தையை நிறுத்துங்க” என்று எடுத்த எடுப்பில் கராறாக கூறியதில், குழலி மனம் வெந்தவர்...

“இந்த பாரு மருமகளே கல்யாணம்ங்கிறது என் பொண்ணுக்கு நீ துணி வாங்கி தர மாதிரி இல்லை, ஆயிரம் காலத்து பயிறு... இன்னைக்கு நல்ல சம்மந்தம் கிடைக்குறதே பெருசு, இதில் நீ ஏதும் குழறுபடி செய்யாத உன்னை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன்” என்று கூறிக் கொண்டிருக்கும் சமயமே குருதரன் அவர்களை சமீபித்திருந்தார்.

“என்ன குழலி வாசலில் நின்னு வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கிற? எதுவா இருந்தாலும் உள்ளே போய் பேசலாம் வா”

“என்னத்தைங்க பேசுறது, இங்க உங்க பிள்ளையை பாருங்க அவ பின்னாடி போய் நின்னுட்டு மல்லுகட்டுறா அவளை ரெடி பண்ணனும் வர சொல்லுங்க” என்று கண்டிப்புடன் கூற... மலர் நடுக்கத்துடன் சம்யுக்தாவின் இடுப்பை சுற்றி கட்டியிருந்த கரத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டவளுக்கு அவள் மேல் கழிவிறக்கம் ஏற்பட்டது...

“அவ வரமாட்டா நானும் அனுப்பமாட்டேன், அவ என்ன ஷோகேஸ் பொம்மையா அலங்காரம் பண்ணிட்டு போய் நிற்க வைக்க... இங்க நடக்கிறது மட்டும் உங்க மகனுக்கு தெரிஞ்சா உங்களை எல்லாம் உண்டு இல்லைன்னு பண்ணிருவாரு” காரசாரமாக பேசிக் கொண்டிருந்தவளை கண்ட குழலி ஆவேசத்துடன் ஏறிட்டவர் கண்களில் வெடித்துச் சிதறும் எரிமலையின் சீற்றம் தெரிந்தது.

“ஏய் என்ன நானும் பார்க்கிறேன் ரொம்ப மிரட்டுற? அவளை பெத்தவ நான் தான், அவளுடைய வாழ்க்கையை பற்றி ஒரு முடிவெடுக்க பெற்றவளா எனக்கு எல்லா உரிமையும் இருக்கு”

“யார் இல்லைன்னு சொன்னா? அதுக்காக ஸ்கூலுக்கு போய்கிட்டு இருக்கிற பொண்ணை போய் கல்யாணம் பண்ணி வைக்க பார்ப்பீங்க நான் வேடிக்கை பார்க்கணுமா?” என்று அவருக்கு குறையாத சீற்றத்துடன் பேசியவளிடம் இனி தன் பேச்சு எடுபடாது என்று புரிந்தவர் தன் மகளை நோக்கி...

“இங்க பாருடி மலர் உனக்கு அம்மா நான் தான் ஒழுங்கா நான் சொல்லுறப்படி கேளு... இல்லைன்னா, உன் அக்கா மாதிரி உன் வாழ்க்கையும் நாசமா போயிரும்... பணம் இருக்கிற இடத்தில் குணம் இருக்காது, அந்த ரஞ்சன் எந்த மாதிரி தப்பை எல்லாம் பண்ணினானோ, உன் அக்கா வாழவே மாட்டேன்னு தர்க்கம் பண்ணினா... உனக்கும் அப்படி ஒரு நிலைமை வரணுமா?” மனைவியின் பேச்சில் மருமகளை குத்திக்காட்டும் படி வார்த்தை தடித்திருப்பதும், அடுத்து மருமகளிடமும் எதிரொலிக்க போவதை உணர்ந்த குரு...

“குழலி நீ வாய மூடிட்டு இருக்கமாட்டியா யார்கிட்டே என்ன பேசுறசுதுன்னு தெரியாம...” என்றவரை முடிக்கவிடாமல் இடையிட்ட குழலி...

“நீங்க சும்மா இருங்க” என்று கண்டித்தவரின் குரலில் காரம் இருக்க, பெண்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட ஆண்கள் இருவரும் தடுமாறினர்.

“இங்கே பாருங்க இவ்ளோ தான் உங்களுக்கு மரியாதை, இதுக்கு மேல எதுவும் பேசுனீங்க அப்புறம் நான் மனுஷியா இருக்கமாட்டேன்... என்னமோ உங்க வீட்டு பையன் மட்டும் ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுறீங்க...?” கூறிக் கொண்டிருக்கும் போதே...

“இங்கே என்ன நடக்குது?” என்று நாசியின் நுனி புடைத்திருக்க, சினத்தில் உறுமியவனை கண்டு பயந்து பார்த்தார் குழலி.

“அண்ணா, அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறாங்கன்னா... நான் மேல படிக்கணும்ன்னு ஆசையா இருக்கேன்” என்று மலர் அவனிடமும் கதையை கூற, அதை முழுவதுமாக கேட்டு முடித்த தரன்...

“என்னம்மா இதெல்லாம்? யாரை கேட்டு இவளுக்கு மாப்பிள்ளை பார்க்க வர சொன்னீங்க, இந்த குடும்பத்துக்கு மூத்த மகன்னு நான் எதுக்கு இருக்கிறேன்?”

“யாரும் வர சொல்லலை தரா, எதார்த்தமா தான் வந்தாங்க அவங்க பேசினதில் எங்களுக்கு உடன்பாடு இருக்கு... சரி நீ வந்ததும் பேசி முடிவு பண்ணலாம்ன்னு தான் இருந்தோம்... அதுக்குள்ள உன் பொண்டாட்டி வந்துட்டா ரெண்டு பேருக்கும் வார்த்தை உரசலாகிப் போயிருச்சு”

“தரா....” என்று ஆரம்பித்த குழலியை கரம் நீட்டி தடுத்தவன்...

“முதல்ல வந்தவங்களை அனுப்பி வச்சுட்டு, அப்புறமா நம்ம பிரச்சனையை பேசிக்கலாம்” கறாராக கூறிவிட்டவனின் பேச்சிற்கு எதிர் பேச்சு பேசாமல் மெளனமாக உள்ளே சென்றனர்... வந்தவர்களை மனம் கோணாமல் மரியாதை நிமித்தம் பேசி அனுப்பி வைத்திருக்க, புயலடித்து ஓய்ந்ததை போல் சில கணங்கள் அங்கே அமைதி நிலவியது.

“ஏன் ப்பா அம்மா தான் அவசரப்பட்டு முடிவெடுக்கிறாங்கன்னா நீங்களாச்சும் எடுத்து சொல்ல மாட்டிங்களா?” என்று தரன் தன் தந்தையிடமே பேச்சை ஆரம்பித்தான்.

“அதுக்கில்லை தரா, வயசு பிள்ளைங்களை வீட்டில் வச்சுகிட்டு வயித்தில் நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு வந்த நல்ல சம்மதத்தை தட்டி கழிக்காம கால காலத்துல கட்டிக் கொடுத்திட்டா நிம்மதியா இருக்கலாமே”

“உன் தங்கச்சியா அவங்களே படிக்க வைக்கிறேன்னு சொல்றாங்க, பையனும் ஃபாரின்ல வேலை பார்க்கிறான், இதுக்கு மேல என்ன வேணும்... மூத்தவளை பாழுங்கிணத்தில் தள்ளுற மாதிரி தள்ளிவிட்டாச்சு, இவளாச்சு நல்லா இருக்கட்டும்னு எண்ணம் தான்... பெத்தவளுக்கு தான் தெரியும் அந்த வலியும், வேதனையும்” என்று மூக்கை சிந்த, தரன் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு கனன்று எழுந்த கோபத்தை அடக்க இயலாத சம்யுக்தா...

“இப்போ என் அண்ணனை கல்யாணம் பண்ணினதால் தான் உங்க பொண்ணு வாழ்க்கை நாசமா போச்சு? இல்லைன்னா, நீங்க அமோகமா வாழ வச்சிருப்பீங்களா?” கோபவேசமாக கேட்டவளிடம்...

“ஆமாம் அப்படிதான் இப்போ என்னாங்குற?” வெடுக்கென்று உரைத்தார்.

“ஒஹ்! அப்படி பார்த்தா நான் கூட இந்த எலி பொந்து மாதிரி வீட்டில் குடும்பம் நடத்த வேண்டிய அவசியம் வந்திருக்காது” கடைகண் பார்வையால் கணவனை வருடிய படியே கூறியவள், தன் பேச்சில் கணவனின் முகம் மாறியதை பற்றி சிறிதும் லட்சியம் கொள்ளவில்லை...

“ஏன் அதுக்கு தானே உங்க வீட்டிலும் ஆசைப்பட்டாங்க செய்திருக்க வேண்டியது தானே?” கூர்மையாக கேட்ட தன் கணவனின் கேள்விக்கு...

“ஒருத்தரை நம்ப வச்சு ஏமாத்தி கழுத்தறுக்கிற புத்தி எனக்கில்லை?” சுள்ளென்று கூறினாள். அவர்களின் பேச்சு ராசபாசங்களை சாசுவதம் செய்வதை உணர்ந்த ஆண்கள் அவர்களின் பேச்சில் இடையிட்டனர்...

“இங்கே பாரு மா சம்யுக்தா, அவ உங்க அண்ணனை பேசினது தப்பு தான். அதுக்காக நீ எங்க பையன் மேல தப்பு சொல்லாத அவனை நாங்க அப்படி எல்லாம் வளர்க்கலை” என்று கேசவனும், குருவும் மகனுக்கு பரிந்து பேச சம்யுக்தாவுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“ஆமாம் நீங்க கண்டீங்க, உங்க பையன் எந்த மாதிரி ஒரு கேள்வியை கேட்டாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்?” என்றவளின் பார்வை கணவனை துஷ்பிரயோகம் செய்ய அவள் பேச்சில் பொருளுணர்ந்தவனுக்கு முகம் கருத்து உடல் இறுகியது. அதிலும் அவளின் தமையனுக்கான அவனை கீழிறக்கியது தரனின் உள்ளத்தில் அழலை உருவாக்கியது.

“என் அண்ணன் தப்பு செஞ்சான்னா, உங்க மகன் அவனுக்கு கடினமான போட்டி கொடுத்தாரு... நான் நினைச்சா உங்க குடும்பமே கூண்டோட கம்பி என்ன வேண்டியதா இருக்கும்... இன்னொரு தடவை என் அண்ணனை தப்பு சொன்னா அவ்ளோ தான் நான் சும்மா இருக்கமாட்டேன்... அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் போகவும் தயங்கமாட்டேன்” என்று கூறியவளை கண்டு அனைவரும் திகைப்பூண்டை மிதித்தது போல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தரன் அத்தனை நேரம் இருந்த இறுக்கத்தில் இருந்து வெளி வந்தவன், அவளை ஒற்றை புருவம் மேலேற்றி கண்களை சுழற்றி பார்த்தவனின் பார்வையில் சூறாவளியின் சீற்றம் இருந்ததை கண்டு கிலியில் அவள் முதுகுத்தண்டு சில்லிட்டது... அவன் அச்சம் மெய் என்பதை போலவே...

“எப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு நீயே போயிருவியா... இல்லை, நான் டிராப் பண்ணனுமா?” நெஞ்சுரத்துடன் திண்ணக்கமாக வினவியவன் குரல் மிளகாயின் காரத்துடன் இருக்க, அவனையே பார்த்தவாறு அசையாது நின்றவளை குத்தீட்டி பார்வையால் துளைத்தபடியே...

“உனக்கெதுக்கு சிரமம் வா நானே டிராப் பண்றேன்” என்று கூறி, அவள் கரத்தை அழுந்த பற்றி தரதரவென்று இழுத்துச் செல்வதை கண்டு மற்றவர்கள் கலவரம் அடைந்தனர்.

சில கணங்களில் சுதாரித்த கேசவன்... “டேய் தரா அந்த பிள்ளை கையை விடுடா” என்று உச்சஸ்தாயில் குரலை உயர்த்தி கத்த அப்போதும் விடாது இறுகப் பற்றியவனின் கரத்தை தட்டி விட்டவர்...

“அந்த பொண்ணு தான் ஏதோ தெரியாம பேசுறான்னா, நீயும் அவ கூட சேர்ந்து குடும்ப மானத்தை விலை பேச பார்க்கிறயா?” என்று மகனிடம் குரலை உயர்த்தியவரின் பேச்சில் சம்யுக்தாவுக்கு ஆத்திரம் வர...

“ஓஹ்! நான் தான் குடும்ப மானத்தை காற்றில் பறக்க விடுறேன், உங்க மகன் கட்டி காப்பாத்துறார்... யாரோ ஒருத்தங்க குடும்ப மானம் போனா என்ன, உங்க குடும்ப மானம் கப்பல் ஏறக்கூடாது?” என்று மாமனார் என்றும் பாராமல் அவரிடம் எதிர்த்து பேசியதை கண்டிப்புடன் நோக்கியவன்...

“இங்க பாரு டி, நீ என்கிட்டே என்ன வேணா பேசு உன் கழுத்தில் தாலி கட்டின புருஷன்னு பொறுத்து போய்கிறேன்... தேவையில்லாம எங்க அப்பா, சித்தப்பா, சித்தியை மரியாதை இல்லாம பேசின நான் சும்மா இருக்கமாட்டேன் ஜாக்கிரதை!” என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தான்.

“பண்றதெல்லாம் பிராடுத்தனம் இதில் குடும்பத்தை சொன்னதும் ரோஷம் மட்டும் பொத்துக்கிட்டு வருது” அவன் கோபத்திற்கு கட்டுப்பட்டு முனகியவளின் உதட்டசைவை புரிந்துக் கொண்டவன்...

“ஆமாம் நான் தப்பு பண்ணினேன் தான், இப்போ அதுக்கு என்ன? ஏன் அதை மட்டும் இன்னும் மூடி மறைக்கிற? அதையும் சொல்லி என்னை கேவலப்படுத்த தானே காத்துகிட்டு இருக்கிற சொல்லுடி.. சொல்லு..” என்று அவளை உலுக்க, அதை கூறி விட நாவு துறுதுறுத்த போதும் ஏனோ அதை செயல்படுத்த முடியாமல் அவளின் சிந்தை தடுத்துவிட்டிருந்தது.

சொல்லிவிடலாம் நிமிடத்திற்கும் குறைவான நிமிடங்களே ஆகும்... ஆனால், தவறு செய்தவன் என்று மட்டும் எண்ண முடியாமல் தன் கணவன், என் உயிர் என்ற எண்ணம் அவள் மனதை சுண்டி நினைவு கூர்ந்து கொண்டே இருக்க அவளுடைய கவினாக மட்டும் கருத்தில் கொண்டதில், அவன் செய்த காரியத்தை கூறி அவனுக்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்த விளைய இயலவில்லை.

“உங்களை மாதிரியே நானும் இருக்க விரும்பலை” என்றவள் மற்றவர்கள் மேல் பார்வையை திருப்பி...

“மலருக்கு கல்யாணம் ஏற்பாடு மட்டும் நடந்துச்சு, இப்போ சொன்னதை நிஜமாவே செய்து காட்டுவேன்” என்று எச்சரிக்கை விடுத்துவிட்டு விருட்டென்று உள்ளே நகர்ந்துவிட்டாள்.

தரன் மனைவியுடன் எழும்பிய உரசாலை ஓரம் கட்டிவிட்டு வீட்டினரிடம் திரும்பியவன்...

“உங்களுக்கெல்லாம் இப்போ என்ன பிரச்சனைன்னு மலருக்கு கல்யாணம் செய்து வைக்க திட்டம் போடுறீங்க?” மலரின் விஷயத்தை கண்டித்து கடுமையாக பேசலானான்.

“இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க அவளுக்கு இருபத்தஞ்சு வயசாகாம யாரும் கல்யாண பேச்சு எடுக்கக்கூடாது” என்று கண்டிப்புடன் கூறியிருந்தான்.

“தெரியாம தான் கேட்கிறேன்... இந்த வீட்டில் பெரியவங்கன்னு நாங்க ஏன் இருக்கணும்? பேசமா நீயும், உன் பொண்டாட்டியுமே குடும்பத்தை பார்த்துக்கோங்க” என்று கேசவனும் மொழிந்திருக்க, தரன் ஆட்சேபத்தில் புருவம் நெறித்தவன்...

“இது என்ன பேச்சுன்னு பேசுறீங்கப்பா? நீங்க தான் பெரியவங்க எங்களுக்கு எல்லாமே செய்யணும்... ஆனால் அந்த சந்தர்ப்பத்தை நானும், வாணியும் தான் அழிச்சோம் எங்க மேல் உள்ள தப்பை ஒத்துகிறேன்... ஆனால் மலர் விஷயத்தில் இந்த மாதிரி ஆதரிக்கமாட்டேன்... அவ விஷயத்தில் நீங்க நினைச்ச மாதிரியே நடத்திக் காட்டுங்க, ஆனா அவ விருப்பப்பட்ட மாதிரி படிச்சு முடிக்கட்டும்” என்று தரன் வாக்குறுதியை அளிக்க, மலருக்கும் அதில் உடன்பாடு இருக்கவே சிறிதும் தாமதியாமல் தன் பெற்றோரை அனுகியவள்...

“பெரியப்பா, அப்பா, அம்மா அண்ணன் சொன்ன வார்த்தையை நான் காப்பாத்துவேன்... என்னை நம்புங்க எனக்கு முதல்ல படிப்பு தான் முக்கியம்” என்றவளின் வார்த்தையும் அவர்கள் மனதை இளக வைத்திருக்க...

“நீங்க சொன்னதில் சின்ன தப்பு நேர்ந்தாலும் அப்புறம் நாங்க என்ன சொல்றோமோ அதுக்கு கட்டுப்பட்டு தான் ஆகணும்” என்று அவரும் கண்டிப்புடன் மொழிந்து விட்டு சென்றிருக்க, மலருக்கோ ஒரு பெரிய பிரச்சனையில் இருந்து விட்டு விடுதலையான நிம்மதியுடன் நிலாவை தேடி ஓடிவிட்டிருந்தாள். தரனுக்கு நீண்ட கூச்சலுக்கு பின் ஒரு அமைதியான சூழல் தேவைப்படவே தோட்டத்திற்கு சென்றுவிட்டான்.

**********************

அர்ஜுனுக்கு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்து போராடியும் தூக்கம் வராது போயிருக்க அதிகாலையிலேயே விழித்தும் விட்டிருந்தான். அவன் மனதின் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்திருக்க, என்ன செய்வது? ஏது செய்வது! என்ற தீராத குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். குரங்கை நினையாதே என்று மனம் சொன்னால் அதையே அசைபோடும் மனம் போல், இரவு நடந்ததையே அவன் அகம் அசைப்போட்டுக் கொண்டிருந்தது.

அர்ஜுனின் பாராமுகத்தை எண்ணி அரசிக்கு வேதனையாக இருந்தாலும், அவனை நச்சரித்து காயப்படுத்தி மேலும் அவனை படுத்தி வைக்க மனம் வாராது சிறிது நாட்கள் அவகாசம் கொடுத்து அவனை விட்டு பிடித்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவனுக்கு ஒவ்வாத எந்த செயலையும் செய்யாது இருந்தாள். ஆனால் மனைவியாக கணவனுக்கு உண்டான கடமையை ஆற்றுவதில் மட்டும் எந்தவொரு காரணத்திற்காகவும் விட்டு தாராமல் செய்துக் கொண்டிருந்தாள்... அர்ஜுனுக்கு அதை முகத்திலறைந்தது போல் தடுக்க தோன்றினாலும் அவள் மேல் கொண்ட நேசம் அதை செய்ய விடாமால் கடிவாளம் இட்டு தடையிட்டிருந்தது.

அவள் அப்படி செய்யும் கடமைகளில் அவன் மனம் அவளிடம் சலனமுற்று தறிகெட்டு பறக்கும், அவள் செய்த தவறை மன்னித்து சரணடைந்து விடவா என்று கூட கேட்கும்... அத்தனை எண்ணங்களையும் கடிவாளம் இட்டு அடக்கி விட்டு மனதை இறுக்கிக் கொண்டு சலனமே அடையாதவன் போல் முறுக்கிக் கொண்டு சென்றுவிடுவான்.

அர்ஜுன் சில சமயங்களில் பணிச்சுமை மிகுந்த காலத்தில் அவள் பரிமாறும் உணவுகளை தவிர்த்து விட்டு போகும்படி இருக்க, அதை அறியாத அரசியோ அவள் பரிமாறியதற்கான காரணத்திற்காகவே புறக்கணித்து விட்டு போவதாக எண்ணிக் கொண்டு தானும் உணவை தவிர்த்துக் வந்தவள் இதன் விளைவாக அன்றிரவு உடல் பலவீனத்தில் இரவு மயங்கி சரிந்துவிட்டிருந்தாள்.

“அச்சோ என்னாச்சுமா அரசி” என்று பதறியபடி அவளை சோபாவில் படுக்க வைக்க நடராஜன் மகனுக்கு அழைத்து கூறியிருந்தார். மல்லிகாவிற்கு அவளின் மயக்கத்தின் பின்னணி நல்ல விஷயமாக இருக்க வாய்ப்பிருப்பதாக எண்ணி மகிழ்ந்தவர் அர்ஜுனிடம் கூறி அந்த பெண் மருத்துவரை அழைத்து வர கூறியிருந்தார்.

அவளை சோதித்து பார்த்த மருத்துவர் அவளுக்கு சாதாரண மயக்கம் என்றும் கர்ப்ப அறிகுறிகள் இல்லை என்றும் கூறியவர்...

“உங்க வைஃப் பிரஞ்னன்ட் ஆகணும்னா முதல்ல நல்லா சாப்பிட வைங்க, அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க” என்றும் கூறிவிட்டு சென்றிருக்க மல்லிகாவிற்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

மகனை தன் கனல் வீசும் பார்வையால் முறைத்தவர், மருமகளையும் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டிருந்தார். அவரின் பார்வை உணர்த்திய செய்தியை அறிந்துக் கொண்ட அரசிக்கு நெஞ்சை கோடாரியால் பிளப்பது போல் வலி உண்டாகிப் போக கணவனை பச்சாதாபத்துடன் பார்த்திருந்தாள்... அவளின் அந்த நிலையை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

சுவடுகள் தொடரும்....

**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 30 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அன்பு-31

அன்று முழுக்க வீட்டில் மயான அமைதி தான் நிலவிக் கொண்டிருந்தது... இரவு அறைக்குள் வந்தவனின் காதில் அரசியின் கேவல் ஒலியே உரக்க கேட்க, அவன் மனதை கசக்கி பிழிவது போல் வலித்தது. எக்கேடோ கேட்டு போ, நீ பேசியதற்கு தானே தண்டனை அனுபவிக்கிறாய் என்று தவிர்க்க முடியாமல் போக அவளை நெருங்கியவன்...

“அரசி...” எங்கே பெயருக்கு வலிக்குமோ என்பது போல் மென்மையாக அழைத்தவனின் குரலில் விருட்டென்று நிமிர்ந்தவளின் விழிகளில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

“என்னை கடைசி வரைக்கும் மன்னிக்கவே மாட்டீங்களா அர்ஜுன்? நான் அந்தளவுக்கு உங்களுக்கு வேண்டாதவளா போயிட்டேனா?” என்றவளை செய்வதறியாது வெறித்துக் கொண்டிருந்தான்.

“சீதை தன் கற்பை நிரூபிக்க அக்கினியில் இறங்கின மாதிரி, நானும் என் தவறை உணர்ந்து திருந்திட்டேன்னு தீக்குளிக்கவா! அப்படியாச்சும் என்னை மன்னிச்சு ஏத்துப்பீங்களா?” என்றவளை கனல் வீச முறைத்தவன் முகம் கடினத்துடன் இருந்தது.

“இங்கே பாரு இது மாதிரி எல்லாம் பேசினா அப்புறம் நான் நானா இருக்கமாட்டேன்” என்று கடினக் குரலில் கூறியவன், அவள் அரண்ட முகத்தை கண்டு என்ன கண்டானோ...

“கண்டதை யோசிக்காம வந்து படு” என்று அவள் விலாவில் கைகொடுத்து தூக்கி விட்டவனின் கரத்தை உதறியவள்...

“முடியாது! நான் பேசினதை மறந்து மன்னிச்சு ஏத்துகிட்டா தான் நான் சாப்பிடவோ, தூங்கவோ செய்வேன்... இல்லைன்னா, என் போக்கில் விட்டிருங்க”

“என்னடி பிளாக்மெயில் பண்ணுறியா? பேசுறதெல்லாம் யோசிக்காம பேசி தொலைச்சுட்டு இப்போ குத்துதே குடையுதேன்னா நானா பொறுப்பாக முடியும்? ச்சேய்... கல்யாணமே வேண்டாம்னு சொன்னவன் உன் குணத்தை பிடிச்சு போய் கல்யாணம் பண்ணினேன்”

“கல்யாண சமயத்தில் உன் கூட எப்படி எல்லாம் அனுபவிக்கணும்னு நினைச்சேன்... ஆனால் அதையும் நீ கெடுத்துட்ட... அதையும் மன்னிச்சு மறந்து உன் கூட ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிச்சு வாழ்ந்தேன், என் உயிர் நீ தான்னு உணர்த்தினேன்... கேவலம் உன் அண்ணன் பொண்டாட்டியோட நான் இருக்கிறதை பார்த்து சந்தேகப்பட்ட பேசின வார்த்தையை மறக்க முடியாமல் நான் தான் அல்லாடிக்கிட்டு இருக்கிறேன்”

“ஒவ்வொரு நிமிஷமும் உன்னை தொடும் போதெல்லாம் நான் தப்பு செய்திருக்கேன்னு நீ சொன்னது நியாபகம் வந்து என் உடம்பை கூசி அருவெறுக்க வைக்கும்... அந்த கொடுமையை என்னால் சகிக்க முடியலை டி”

“அப்போ ஒண்ணு செய்யுங்க வேணா என்னையும் அப்படி வேற யாரோடும் இணைச்சு.....” என்றவளின் சொல் முடிக்கப்படாமல் போக... அவன் முன்பு நின்றிருந்தவள் காற்றில் சுழன்று கட்டிலில் வீழ்ந்தவளின் கன்னம் தீயாய் எரிய, அவள் கண்களில் முன் பூச்சி பறந்ததை போல் இனம் கண்டு தான் அவன் அவளை அடித்திருப்பதையே உணர்ந்தாள்.

“உன்னை சாவடிச்சிருவேண் டி!” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவன் முகத்தில் வெடித்துச் சிதறும் எரிமலையின் சீற்றம் பொங்கிக் கொண்டிருந்தது.

“இது குடும்பமா... இல்லை, வேற ஏதுமா?” என்று கொதித்தவன் கைமுஷ்டியை மடக்கி இமைமூடிக் கொண்டு பெருமூச்சு விட்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே அவளிடம் திரும்பியவன்...

“பேசின வரைக்கும் போது ஒழுங்கா தூங்கு... இல்லைன்னா, நான் வீட்டுக்கே வரமாட்டேன்” என்று பலமாக எச்சரிக்கை விடுத்து விட்டு படுக்கையில் வீழ்ந்திருக்க, தன் எதிர்காலத்தை நினைத்து பார்த்த அரசிக்கு பிரளயமே உண்டாக உடல் நடுங்கியது!

நடுநிசியை கடந்த நட்ட நடு ஜாமத்தில் கேட்ட அனத்தல் ஒலியில் பட்டென்று கண் விழித்திருந்தான் அர்ஜுன். ‘எங்கே சத்தம் கேட்குது’ என்று எழுந்தவனுக்கு வெளியில் எங்கேனுமோ என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அருகில் மனைவியிடம் இருந்து வருவதை அறிந்ததும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தவன், அவளை தொட்டு திருப்பி பார்க்க, உடல் அனலாக கொதித்து கொண்டிருந்ததை கண்டு திகிலடைந்தான்.

கண்களை மூடியபடி உறங்கிக் கொண்டு இருந்தவள் கணவனின் தொடுகையை உணர்ந்தவள் போல்... “என்னை மன்னிச்சிருங்க அர்ஜுன்?” என்று ஈனஸ்வரத்தில் பினாத்தி கொண்டிருந்தவளை கண்டு உடல் விதிர்க்க...

“அரசி...! அரசி...! அரசிமா” என்று தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான்... அவன் குரலுக்கு எதிரொலியே இல்லாது தன் போக்கில் உளறிக் கொண்டிருந்தவளை கண்டு நெஞ்சம் பதை பதைத்தது. நொடியும் தாமதியாமல் குடும்பத்திற்கு நெருங்கிய மருத்துவருக்கு அழைத்து வர கோர, அவரும் அவசர கால உதவிக்காக உடனடியாக அர்ஜுனின் இல்லம் வந்தடைந்திருந்தார்.

அவர் வந்த காரின் சப்தத்தில் இல்லத்தில் இருந்த மற்ற அனைவரும் விஷயம் பரவியது... தன் மருமகளின் நிலையை எண்ணி மல்லிகா பதறிய போதும் மகனுக்கு உதவ முன் வரவில்லை.

“மல்லி அவன் பாவம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல?” என்ற கணவரிடம்...

“நீங்க சும்மா இருங்க... நாம ஏன் செய்யணும்? அவன் பொண்டாட்டிக்கு அவனே பார்க்கட்டும், அப்படியாச்சும் ரெண்டு பேருக்கும் உள்ள மனஸ்தாபம் சரியாகட்டும்” என்றவரை உதட்டை பிதுக்கி மெச்சுதலாக பார்த்திருந்தார்.

அரசிக்கு மருந்தும், மாத்திரையையும் பரிந்துரைத்து விட்டு மருத்துவர் சென்றுவிட்டிருக்க, தர்சனும் அங்கிருந்து நகர்வதை கண்டு அவனை தடுத்து நிறுத்தியவன்...

“நாளைக்கு நீ போய் கம்பெனியில் இருக்கிற வேலையை பார்த்துக்கோ தர்சன்” என்று இறைஞ்சுதலாக கேட்டவனிடம்...

“நான் பார்த்துக்கிறேன் அர்ஜுன்... நீ உன் பொண்டாட்டியை மட்டும் பாரு” என்று ஆறுதலாக அவன் முதுகை வருடிக் கொடுத்து விட்டு நகர்ந்திருந்தான்... அர்ஜுனின் மனக்கலக்கம் அவன் கண்களின் சிவப்பில் உணர அவனை எண்ணி வருந்தினான் தர்சன்.

தன் மனைவி உறங்குவதை மனமும், கண்களும் கலங்க பார்த்தவனுக்கு உயிரை வதைத்து கொண்டிருந்தது... களைப்பில் அவனும் உறங்கி விட அதிகாலை ஐந்து மணி அளவில் திரும்பவும் முனகல் ஒலி கேட்டு படக்கென்று விழிகளை திறந்தவன் அருகிலிருந்த மனைவியை பார்க்க, அதுவரை விட்டுப் போயிருந்த முனகலை தொடர்ந்தவளை கண்டு கலவரம் அடைந்தான்.

“என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க அர்ஜுன்” என்று ஆரம்பித்து புலம்பலை தொடர்ந்துக் கொண்டிருந்தவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது... அவள் எந்தளவுக்கு ஆழமாக மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கிறாள் என்று புத்தி இடித்துரைக்க ஆயாசமாவும், ஆத்திரமாகவும் வந்தது...

“பேசுனதெல்லாம் நீ கடைசியில் நான் தான் உனக்கு ஏதோ பண்ணிட்ட மாதிரி நடந்துக்கிற டி... உன்னை என்ன செய்தால் தேவலாம்?” என்று பிரலாபித்தவன் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்... அவன் உடல் சூட்டின் கதகதப்பை அவள் உடல் உணர்ந்ததில் நடுக்கத்தை மட்டும் நிறுத்தியிருக்க, என் வேலையை நான் செவ்வனே செய்வேன் என்பது போல் உதடுகள் முனகிக் கொண்டே இருந்தது.

“ஏய் அரசிமா நான் உன் அர்ஜுன் டி... நமக்குள்ள என்ன நடந்திருந்தாலும் நீ எனக்கு பொண்டாட்டி, நான் உனக்கு புருஷன் இதில் என்ன மாறிரும்னு நீ இப்படி கலங்குற?”

“நீங்க என்னை விட்டு போக மாட்டீங்களா?” என்று வினவியவளின் கேள்வியில் அவள் நிஜமாகவே சுய நினைவில்லாமல் பினாத்துகிறாளா? இல்லை; சுயநினைவுடன் இருக்கிறாளா என்று சோதித்து பார்க்க, அவள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது ஊர்ஜிதம் ஆகிப் போக, அவளை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டவன்...

“ஏய் உன்னை விட்டு நான் எங்கே டி போக முடியும்? பைத்தியம் ஒழுங்கா தூங்கு” என்று அதட்டி உருட்டி தூங்க வைக்கவே ஆகாயத்தில் விடியலுக்கான வெளிச்சம் பரவியிருந்தது. மணி ஆறு என்பதை கண்டறிந்து எழுந்ததும்...

“என்னை விட்டு போயிருவீங்களா?” என்று ஈனஸ்வரத்தில் குரல் வர, அவனுக்கு அயர்ச்சியாகிப் போனது... அவளை சமாதானப்படுத்த அவன் கைவளைவிற்குள் கொண்டு வந்து அவன் மார்பில் முகம் புதைத்தால் தான் அவள் முனகலும், உடலின் நடுக்கமும் மறைந்தது. இப்படியே அவனை ஆட்டி வைத்து தன் கைச்சிறையிலேயே வைத்துக் கொண்டாள்.

அவனை தனிப்பட்ட முறையில் செயல்படவிடாமல் முற்றிலும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தன் துணையை நாடும் மனைவியின் செயலில் அலுப்போ, கோபமோ தோன்றாமல் இனிமையாக இருந்ததை உணர்ந்தான். அவனுக்கு ஒன்றே ஒன்று தெளிவாக விளங்கியது... அது அவளின் மேல் கொண்ட தாழ்வு மனப்பான்மையில் எங்கே கணவன் தன் கையை விட்டு சென்றுவிடுவானோ என்ற அதீத உரிமையுணர்வும் தான் அவளை சுயநினைவில்லாத வேளையிலும் அவனுக்காக ஏங்கித் தவிக்கிறாள் என்று புரிந்து கொண்டு மனதை இளக்கிய அதே சமயம், அவள் பேசிய நாராசமான பேச்சும் அவன் மனதை கடினமாக்கியது.
**********************

யமுனா, யசோதா இருவருக்கும் வாணியின் மேல் நாளுக்கு நாள் வன்மம் ஏறிக் கொண்டே சென்றது... எப்படி பேசி அவளை குத்தி கிழித்தாலும் வெகு எளிதாக அதை அவர்களுக்கே திருப்பி விடும் சாமர்த்தியம் அவர்களுக்குள் வஞ்சத்தை அதிகரிக்க வைத்துக் கொண்டே இருந்தது. போயும் போயும் கூத்து கட்டுகிற குடும்பத்து பெண்ணிடம் நாம் தோற்று நிற்பதா என்ற அகங்காரம் தலை தூக்க...

“இங்கே பாருங்க மாமா இதுக்கு மேல அவளை இந்த வீட்டில் இருக்க வச்சா நம்மளை வேலைக்காரி ஆக்கிருவா, முதலில் இதுக்கொரு முடிவு கட்டுங்க” என்று கூறிய யசோதாவின் வார்த்தையை ஆதரித்த யமுனா...

“ஆமாங்க வர வர அவளும், அவ மகளும் பண்ணுற அழிச்சாட்டியம் தாங்கலை... என்னமோ முறையா பிறந்த பிள்ளை மாதிரி எல்லாத்தையும் உரிமை கொண்டாடுறா?”

“பிள்ளை என்னுது இல்லைன்னு சொன்னவன் கிட்டேயே ரோஷம் கேட்டு குடித்தனம் நடத்துறான்னா அவ எப்படிப்பட்ட கீழ்த்தரமான பெண்ணா இருப்பா” என்று நாராசமாய் கூறிய யசோதாவின் வார்த்தையை தொடர்ந்து...

“உங்களை விட கீழ்த்தரமா இருக்கமாட்டா சித்தி” என்று உச்சஸ்தாயில் ஒலித்த குரல் வந்த திசையை நோக்கி பார்வையை திருப்பியிருக்க, அங்கே ரத்தமென சிவந்த முகத்துடன் நின்றிருந்த ரஞ்சனை கண்டு மூவரும் ஆங்காரத்துடன் எதிர்கொண்டனர்.

“என்னடா வாய் ரொம்ப நீளுது?” என்று பாஸ்கரன் வினவினார். வாணியோ அவர்களின் பேச்சை கேட்டு அங்கு இருப்பதே முள்ளின் மேல் நிற்பது போல் அவமானமாக உணர்ந்தவள், அங்கிருந்து செல்லலாம் என்று நகர்ந்தவளின் கரத்தை அழுந்த பிடித்துக் கொண்டவன் பார்வையால் அவளை கட்டுபடுத்தி விட்டு தன் பேச்சை தொடர்ந்தான்.

“ஏன் ப்பா நான் பேசினது தான் அதிகமா தெரியுதா? என்னை அடக்க தெரியுற உங்களுக்கு அம்மாவும், சித்தியும் பேசும் போது ஏன் அடக்கத் தெரியலை?”

“டேய் ரொம்ப பேசாதடா வாயை மூடு” என்று ஆவேசமாக கொந்தளித்தார் யமுனா.

“அம்மா நீங்க முதல்ல வார்த்தையை அளந்து பேசுங்க... முன்னாடி எப்படியோ இப்போ கலைவாணி என் பொண்டாட்டி, அவ பெற்றிருக்கிற மகளுக்கு நான் தான் அப்பா, அவளை அசிங்கமா பேசினா அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன் பார்த்துக்கோங்க” என்று காட்டமாக இயம்பியவனை இதழ்க்கடையோரம் வளைய இகழ்ச்சியாக பார்த்தவர்கள்...

“ஏன் இப்போ தான் பொண்டாட்டின்னு நியாபகம் வருதா? இதுக்கு முன்னாடி கோமாவிலேயா இருந்த... இன்னைக்கு என் பொண்டாட்டின்னு சொல்ற, இதே வாய் தான் அன்னைக்கு இவ யாரோ ஒருத்தின்னும், அவ பெத்த பிள்ளைக்கு நான் அப்பன் இல்லைன்னும் சொல்லுச்சு” நக்கலாக உரைத்திருந்தார் பாஸ்கரன்.

அவரின் வார்த்தையில் வாணியின் முகம் உக்கிரமாக மாறியதை கவனித்த ரஞ்சனுக்கு அபாய மணி அடித்தது... ‘சும்மாவே என் கூட ஓட்ட மாட்டேங்குறா, இவங்க வேற எரியுற நெருப்பில் எண்ணெய் ஊத்துற கணக்கா கொழுத்திப் போடுறாங்க’ என்று நினைத்துக் கொண்டவன்...

“ஆமாம் நான் பேசினேன் தான்... ஆனால், அந்த மனோரஞ்சன் வேற... இப்போ இருக்கிற மனோரஞ்சன் வேற”

“ஏன் திடிர்னு இப்போ தான் ஞானோதயம் வந்துச்சா?” என்று ஏளனமாக வினவிய அன்னையை அதே ஏளனத்துடன் பார்த்தவன்...

“ஆமாம் நான் இருந்த சூழ்நிலையும், என்னை சுத்தி இருந்தவங்களும் தப்பை தப்புன்னு சொல்லி திருத்தலை... அதனால் தப்பை கூட சரின்னு நினைச்சுட்டு இருந்தேன், இந்த பையன் இனியாவது நல்லா வாழணும்னு நினைச்சு நல்லவங்க சொன்ன சில நல்ல போதனைகளால் மாறியிருக்கிறேன்” என்றவன் பெற்றவர்களாக கடமையை ஆற்ற தவறி தவறான வழியில் நடத்தியதாக குறிப்பிட்டவனை மூவரும் பார்வையாலேயே சுட்டெரித்தனர்.

“அப்போ நாங்க தான் உன்னை தப்பான வழியில் போகச் சொன்னதா நினைக்கறியா?”

“நான் நினைக்கவெல்லாம் இல்லை ப்பா நேரடியா அதை தான் சொல்றேன், நான் தவறான வழியில் செல்ல நீங்க மட்டும் தான் காரணம்”

“பெத்து வளர்த்த எங்களையே நீ எடுத்தெறிஞ்சு பேசுறியா? இனிமே நீ ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் இருக்கக்கூடாது” என்று கடுமையாக கட்டளையிட்ட யமுனாவை கண்டு இறுகிய புன்னகையை சிந்தியவன்...

“என் பொண்டாட்டியை அவமானப்படுத்தின இடத்தில் இனி நானும் ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டேன், நீங்க என்ன சொல்றது, நானே என் பொண்டாட்டி, பிள்ளையோட வெளியே போறேன்” என்றவனை வாணி முகம் சுருங்க பார்த்திருந்தாள்.

அவனுடைய பொருட்களுடன் அவன் மனைவிக்கும், குழந்தைக்கும் சேர்த்தே எடுத்துக் வைத்துக் கொண்டவன், அவளின் சம்மதத்தை எதிர்பாராமல் இழுத்துக் கொண்டு சென்றவனை மூவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.

எங்கே மகன் தங்களை விட்டு சென்றுவிடுவானோ என்று மனம் துணுக்குற்றதில்... “ரஞ்சன் இதெல்லாம் சரியில்லை உன் பொண்டாட்டிக்காக எங்களை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு போறியா? அவ உன்னையும் ஒரு நாள் கைகழுவிட்டு எவனோடவோ ஓடிப் போகப் போறா அப்போ தெரியும் எங்க அருமை” என்று வார்த்தையை நாராசமாய் வீசியதும், ரஞ்சனுக்கு மனம் கொதிக்க அங்கிருந்த பூஜாடியை கொண்டு கண்ணாடி டீபாயில் வீச அது சுக்கு நூறாக உடைந்து சிதறியதை கண்டு அனைவரும் அதிர்ந்து இரு அடி பின்னால் நகர்ந்திருந்தனர்... அவர்களின் பார்வையில் அவனின் இந்த எதிர்பார்க்காத செயலுக்கான மிரட்சி தெரிந்தது.

“ஏதோ பெத்தவங்களா போயிட்டீங்களேன்னு பார்க்கிறேன்... இல்லைன்னா, இங்கேயே வெட்டி பொலி போட்டிருப்பேன்” என்று கண்கள் சிவக்க ரௌத்திரத்தத்துடன் பேசியவன்...

“இதோட சரி என் அம்மா, அப்பா, சித்தி எல்லா உறவும் முடிஞ்சிருச்சு... என் பொண்டாட்டியை தவிர, எனக்கு இனி யாரும் இல்லை” உச்சஸ்தாயில் உரக்க கூக்குரலிட்டதில் பணியாட்கள் முதற்கொண்டு வாயடைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாஸ்கரன் தான் சுதாரித்து கொண்டவர்... “போடா போ நாங்க இல்லாமல் நீ நல்லா இருந்திருவியா? ஒரு நாள் நீயே எங்ககிட்டே கெஞ்சிகிட்டு வந்து நிற்கத்தான் போகிற அன்னைக்கு உன்னை பேசிக்கிறேன்” என்று ஆங்காரத்துடன் பேசியவரை துட்சமென புறக்கணித்துவிட்டு மனைவி மகளுடன் விரசாக சென்றுவிட்டான்.

கலைவாணியோ கணவனின் அப்போதைய கோபத்தின் பரிணாமத்தை கண்டு அரண்டு தான் போயிருந்தாள்... மனோரஞ்சன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு வடவள்ளி வீட்டிற்கு தான் வந்திருந்தான்... முன்பே அங்கே பிரசன்னமாகி பழகியிருந்த காரணத்தினால் வாணிக்கு வீட்டை பற்றிய பெருங்கவலை அகன்று தான் இருந்தது.

கணவனின் கோபத்தில் சற்று பயந்து போயிருந்தவள் அங்கே வந்ததும் எப்போதும் போல் சகஜ சூழ்நிலை அவளுக்குள் புகுந்திருக்க, அவளை பேசியதை எல்லாம் மூளை பெட்டகத்தில் இருந்து திரட்டி அகத்தின் பொருமல்களை கவிழ்த்து கொட்ட ஆரம்பித்தாள்.

“ம்ஹ்ம்... இப்படியெல்லாம் இவங்க பேச நான் கேட்கணும்னு தலையில் எழுதி வச்சிருக்கு”

“...........” மனைவியின் புலம்பலுக்கு செவிசாய்கிறானா இல்லையா என்பதே தெரியாமல் அடிக்கண்களால் அவனை கண்காணித்தப்படி பிரலாபித்து கொண்டிருந்தாள். அடுத்தடுத்து அவள் பேசியதற்கு அசையாமல் குத்துக்கல் போல் அமர்ந்திருந்தவளை கண்டு அவள் உள்ளம் தகித்தது.

அன்று இரவு உணவு தயாரித்துவிட்டு மேஜை மேல் அமர்ந்து உண்ணும் போதும் அவள் பிரலாபம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது... மனோரஞ்சன் எதையும் சட்டை செய்யாமல் மௌனமே உருவாக அமர்ந்திருந்தவனை அடைந்து...

“சாப்பிட வாங்க” என்றழைக்க... அவன் மறுப்பேதும் கூறாமல் சென்றவன் அவள் சுட்டு வைத்த தோசை கவளத்தை விண்டு உண்டுக் கொண்டிருந்தவனின் பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதை அறிந்தவளுக்கு அவன் இல்லத்தை பிரிந்து வந்த துயரத்தை ஆற்றுகிறான் என்று தவறாக புரிந்துக் கொண்டவள்.

“என் கூட வந்ததை நினைச்சு ரொம்ப வருத்தப்படறீங்க போல, இப்படி செய்யலாம் நானும், என் பொண்ணும் எங்காச்சும் போயிடுறோம்... நீங்க உங்க வீட்டில் போட்ட சண்டையை வாபஸ் வாங்கிட்டு போய் சேர்ந்துக்கங்க” என்றதும் தான் தாமதம் உக்கிரமூர்த்தியானான் ரஞ்சன்.

“ஏய் என்னடி நினைச்சுகிட்டு இருக்கீங்க... ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேசிட்டு திரியுறீங்க? என்னை என்ன கையாலாகாத ஆம்பளைன்னு நினைக்கறீங்களா?” உயர்ந்த குரலில் கோபாவேசத்துடன் ஆழியை போல் கொந்தளித்தப்படி கரத்தையும் அடிப்பது போல் ஓங்கியவனை கண்டு மிரண்டு போனாள்... தன் போக்கில் விளையாடிக் கொண்டு மேஜை மேல் இருந்த தண்ணீர் குஜாவை தூக்க முயற்சித்து முசுவாக இருந்த குழந்தை வியனியும் தான் தந்தையின் உரத்த குரலில் உடல் அதிர “ங்ஞனே...” என்று கத்தி அழ ஆரம்பித்தாள்.

மனைவியின் மிரண்ட விழிப் பார்வையிலேயே தன் தவறை உணர்ந்து நிதானித்தவன், குழந்தையின் அழுகையில் முற்றும் தன் தவறை உணர்ந்து ஓங்கிய கரத்தை கீழிறக்கி கொண்டவன்...

“ச்சே...” என்று நெற்றியில் பளீரென்று அறைந்துக் கொண்டவன், இயலாமையில் முழங்கையை காற்றில் குத்திவிட்டு, உணவுடன் இருந்த தட்டிலேயே கையலம்பிவிட்டு இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.

கணவனின் செயலில் திக்பிரமை பிடித்து நின்ற அரசிக்கு கைகள் கணினி நிரல் ஆக்கப்பட்டது போல் வேலை செய்ய, தானும் பாதி உணவில் கைகழுவி விட்டு மகளை தூக்கிக் கொண்டு அறைக்குள் புகுந்தவள் பார்வை இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து வெளியேறிய ரஞ்சனுக்கு மண்டை சூடாகியிருக்கவே அதை ஆற்றிக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருந்தவன் மதுகூடத்திற்கு சென்று ஒரு பாட்டில் மதுவை அருந்திவிட்டு தள்ளாட்டத்துடன் வீட்டிற்கு வந்தடைந்திருந்தான்.

அவனின் கண்கள் சொருகிக் கொண்டு முன்னுக்கு பின்னே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தவனின் உடல் மொழி அவன் போதையில் இருப்பதை உணர்த்தியது... அவர்கள் காதலிக்கும் காலத்தில் ஓர் இருமுறை மது அருந்தி உள்ளான் தான், அதை அவளும் அறிவாள் தான் என்றாலும், இப்போதைய அவனின் செயல் பெரும் குற்றமாகப்பட்டிருக்க உணர்ச்சியற்று வெறித்தாள்.

அவனை கண்டுக் கொள்ளாமல் அறைக்குள் சென்று முடங்க முற்பட, அவளின் பின்னேயே சென்ற ரஞ்சன் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு... “எ..ல்..லா..ருக்கும்.. என்..னப்.. பா..த்..தா.. எப்..பதி.. தெ..ர்..து..” என்று நா குழற பேசியவனை கடுமையாக முறைத்து விட்டு வெடுக்கென்று பார்வையை திருப்பிக் கொண்டிருந்தாள்.

“பாத்து.. கழுத்து.. சுளுக்கிக்கப் போகுது” குழறியப்படியே வேடிக்கை பேசியவனை கண்டு ஆத்திரம் வந்தாலும், அவனிடம் பேசி புரியோஜனம் இல்லை என்பதை உணர்ந்து விதியே என்று அமர்ந்திருந்தவள் முன்பு விசுக்கென்று முதுகை சாய்த்து அவள் முகத்துக்கு நேராக முகம் சந்தித்தவனின் செயலில் திகைத்துப் போய் எழுந்தவள், அவனை பார்வையால் சுட்டெரித்தாள்.

“ஏன்.. எழுந்த.. என் முகத்தை பார்க்க முடியலையா? அவ்ளோ அசிங்கமாவா இருக்கு?” கண்கள் போதையில் சொருக தள்ளாடிக் கொண்டே அவளிடம் வழக்கு வைத்து கொண்டிருந்தவன், அவளை அணைக்க முற்பட பொறுமையை கட்டவிழ்த்த வாணி...

“ரஞ்சன் திஸ் இஸ் யுவர் லிமிட் கிட்டே வராதீங்க” என்று விரல் நீட்டி எச்சரித்தவளை சிறிதும் பொருட்படுத்தாமல்...

“சோ, உனக்கும் நான் வேண்டாமா? அப்போ கொன்னுரு” என்றவன் அவள் கரத்தை பிடித்து கழுத்தில் வைத்து அழுத்தியவனின் செயலில் பதறியவள்...

“ரஞ்சன் விடுங்க” என்று உச்சஸ்தாயில் விளம்பியபடி தன் ஒட்டு மொத்த பலத்தையும் திரட்டி அவன் கரத்தை தட்டி விட முயன்று கொண்டிருக்கும் போது அவனே பலமின்றி திக்குமுக்காடி கட்டிலில் வீழ்ந்திருந்தான். வாணி அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதவளாக குழந்தையை தூக்கி கொண்டு விருட்டென்று வெளியே சென்றிருந்தாள்.
**********************

அர்ஜுன் நிறுவனத்தில் முக்கிய தொழிலாளர்கள் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தவன் கால தாமதம் ஆகாமல் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தயாராகிக் கொண்டிருந்தவனை நெருங்கிய அரசி...

“ஆபிஸ் கிளம்பறீங்களா?” என்று ஏக்கமாக வினவியதும் அவளை கூர்மையாக பார்த்தவன்...

“இப்படியே உன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தா உன்னை காப்பாற்ற நான் பேங்கில் கொள்ளை அடிக்கத் தான் போகணும்” சுள்ளென்று கூறியவனின் பேச்சில் அவளின் முகம் கூம்பிப் போனது. அப்போதும் அவளை சமாதானப்படுத்த முனையாமல்...

“கண்டதை கழியதை யோசிக்காம ஒழுங்கா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு” என்று விட்டு நகர்ந்தவனின் சொல்லில் சித்தம் அடிபட்டு போனது.

இரவு வெகுநேரம் கழித்து வந்த அர்ஜுனை சந்தித்த அரசியின் முகம் சற்று தேவலாம் போல் இருந்தது... அவள் முகத்தையே ஊன்றி கவனித்தவன் பார்வையில் இருந்த மாறுதலை கண்டு கொண்டவளுக்கு ஏதோ செய்தது... அவளின் எண்ணத்தை பொய்யாக்காமல் அவள் அருகில் சயனித்து கரங்களால் சுற்றி வளைத்தவனின் செயலில் உள்ளம் ஊசலாடியாது... ‘தன் பேச்சை மறந்து மன்னித்தானா?’ என்பதை அறியாமல் அவன் அவளை நாடுவதை எண்ணி சஞ்சலம் அடைந்தாள்.

அர்ஜுன் அவளின் கிலேசத்தை அறியாமல் தன் போக்கில் கணவனுக்கான உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தான்... அவள் நெற்றியில் ஆரம்பித்த முத்த ஊர்வலம் முன்னேறிச் சென்று கொண்டிருக்க, கரங்கள் அவள் மேனியில் அத்துமீறி உலா வந்து கொண்டிருந்தது. அவள் உதட்டில் தன்னுதட்டை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டவன் சிறுநூலிழை இடைவெளியில் செயலை நிறுத்தி அவள் விழிகளில் உள்ள குழப்பத்தை கண்டவனாக...

“ஏன்! நான் உன் புருஷன் தானே, உன் கழுத்தில் தாலி கட்டியிருக்கேன் உரிமை இல்லையா என்ன?” என்றவன் விரல்கள் அவள் தாலியை அவள் விழிகளுக்கு நேராக வைத்து வருடிக் கொடுத்தவனின் சொல்லில் இருந்த மறைபொருளை உணர்ந்து கட்டுப்பட்டவள்...

“ம்ம்ம்...” என்று சம்மதித்து தலையசைக்க மேற்கொண்டு எந்த வாக்குவதாத்திற்கும் வழியின்றி உறவையும், உரிமையும் நிலைநாட்டினான். அவள் விருப்பு வெறுப்பை பற்றி கவலையின்றி அவளை ஆண்டு முடித்த திருப்தியில் நெற்றியில் முத்தம் பதித்துவிட்டு அவளை விட்டு விலகி விட்டிருந்தான். அவனுடனான கூடலில் அவன் தன்னை மன்னித்தானா இல்லையா என்ற உறுத்தல் மாயமாய் தொலைந்திருக்க, அவனின் நேசப் பிரவாகத்தில் முற்றிலும் அவன் வசமாகி அவனுள் தொலைந்து போயிருந்தாள்.

அவனுடனான இனிமை பொழுதுகளில் மறைந்து போகும் கேள்விகள் அவனில்லாத தனிமையில் உயிர்த்தெழுந்து கந்தழியை குடைந்தன.

அர்ஜுன் அவளிடம் இயல்பாக பேசினாலும், சிரித்தாலும் அதில் விலகல் தன்மை இருப்பது போலவே அரசிக்கு உறுத்த சமயம் வாய்க்கும் போது அதை பற்றி அவனிடம் விசாரித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டவளுக்கு அன்றே அந்த சமயமும் வாய்த்தது. அன்றைய இரவில் கூடிக்களித்த திருப்தியுடன் விலகியவனின் விலாவை வளைத்து மார்பில் தலைசாய்த்து கொண்டவளை கண்டு விழிகளில் தாபம் வழிந்தோட மந்தகாசம் சிந்தியவன்...

“என்ன டி...?” என்று மார்க்கமாக குரலில் வினவியவனை ஊடுருவி பார்த்தவள், அவள் மனதை குடைந்த கேள்வியை அவனிடம் வினவலானாள்.

“நான் பேசினதை எல்லாம் நீங்க மறந்து மன்னிச்சிட்டீங்களா அர்ஜுன்?” விழிகளில் தேங்கிய தவிப்புடன் வினவியவளின் கேள்விக்கு அவன் எதுவும் கூறாது, தன் உணர்வையும் காட்டாது...

“தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாததெல்லாம் பேசக்கூடாது” என்று மட்டும் கூறியவன், அடுத்த கேள்வி அவள் எழுப்ப வழியில்லாமல் தன் இதழை கொண்டு அவளின் செந்தூர இதழ்களை முற்றுகையிட்டு வாயடைக்க செய்திருந்தான்... அதன் பிறகு அவளின் தேடல் வேறாகிப் போக அவள் கேட்க வந்த கேள்வி மட்டுமின்றி உலகமே மறந்துவிட்டிருந்தாள். அப்படியே மற்ற சில நேரங்களில் இதை பற்றி விசாரிக்க நேர்ந்தாலும் அவனிடமிருந்து இறுகிய ஓர் புன்னகை மட்டுமே வெளிப்படும், அதற்கு மேல் கேட்கவும் வழியின்றி அவன் வேலையில் நாட்டம் செலுத்த ஆரம்பித்துவிடுபவனை அவளால் மேற்கொண்டு கேள்விகளால் துளைக்க முடியாமல் போனது.


சுவடுகள் தொடரும்....
**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்- 31 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍️📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 
Status
Not open for further replies.
Top