All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
16 வருடங்கள் முன் அவன் கேட்ட அதே கேள்விக்கு, அன்று அவன் சொன்ன அதே பதிலை கொண்டு அவனை மடக்கிவிட்டாளே! பதில் சொல்ல முடியாவிட்டாலும் அவன் முணுமுணுப்பு அருமை தான். அவன் தன் ரிசார்ட்டுக்கு அழைப்பு விடுக்கும் போது இவள் மறுத்தால் அவன் என்ன சொல்வான் என்பதையும் கூறி, அதை அவன் சொல்ல முடியாத வகையில் வெகு சாமர்த்தியமாக மறுக்கிறாள். இதெற்கெல்லாம் பயந்தால் அது நம் ரித்வி இல்லையே. நடு வீதி என்றும் பாராமல் தன் காதலை அவளுக்கு உறைத்துவிட்டான். அவனது கலங்கிய கண்கள் அவள் மனதை எட்டவில்லை. தெளிவாக அவனுக்கு பதில் கூறி விடைபெறும் அவளை அவன் குழப்பமடைய வைத்து சம்மதிக்க வைத்துவிட்டான். ( இந்த இடத்தில் அவன் கூறியதில் எனக்கும் ஒன்றும் விளங்கவில்லை தான்) அவள் வாழ்க்கையை ஹர்டில் ரேஸ் உடன் ஒப்பிட்டது அருமை. காரில் அவளுடன் வார்த்தையாடுவது அருமை. அவளே இவனுடன் பேச முடியாது ஒரு கட்டத்தில் அமைதி ஆகி விடுகிறாள். வீட்டிற்குள் நுழைந்த பிறகு இது கிட்சன் என்று ஆரம்பித்து சுற்றி வளைத்து பசிக்கிறது என்று சொல்வதற்குள் அவள் படும் பாடு இரசிக்க வைக்கிறது . இறுதியில் இருவருக்கும் சமைக்க தெரியாமல், அவன் ஆம்லெட் செய்ய விழைகையில் இவளும் செய்கிறேன் என்று செய்யும் அலப்பறைகள் இவர்களை சிறு பிள்ளைகள் போலவே காட்டுகிறது. அவளை இவன் சீண்டுவதும், இவள் கோவப்படுவதும் பின் சமாதான படுத்தி இருவரும் சாப்பிட்டவுடன் அவள் குட்நைட் சொல்லி உள்ளே சென்றவுடன் இவன் யாகூ என்று கத்துவதும் தலையணையுடன் விளையாடுவது என இவர்களை பதின்வயதினர் போலவே உணரவைக்கிறார்கள். அடுத்த நாள் தக்காளி சட்னிக்கு பதிலாக மிளகாய் சட்னி செய்து அவன் படும் அவஸ்தை ............. அதன் பின்னும் அவள் கூறும் வார்த்தைகள் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது போல். அவள் அளித்த தேன் வார்த்தைகளில் இல்லாமல் போனது தான் வேதனை . ரித்வி நிலை கொஞ்சம் கஷ்டம் தான். இருப்பினும் தொடர்ந்து போராடி அவள் மனதில் இடம் பிடிப்பான்.
நித்து நாம் ஒன்றாக இருந்தால் காதலிக்க ஆரம்பிப்பே என்பதை தான் குளோஸா ஆகிடுவேன்னு சொல்லி தட்டி கழிக்க பார்த்தாள்.. ஆன அவன் நான் 4 வருஷத்திற்கு முன் இருந்தே காதலிக்கிறேன்னு சொல்லி ஆல்ரெடி குளோஸ் ஆகியாச்சுன்னு சொல்கிறான்..
இப்போ புரிகிறதுங்குளா..
உடனே அவள் எதிர்பார்த்தேன்னு சொல்கிற.. நீ மறுப்பாய் என்பதையும் எதிர்பார்த்தேன் என்று சொல்லி அவள் வாயை அடைக்கிறான்.
Wow awesome,omlett preparation super, rithivik yethu pannalum thirupi panni athukaka pudina vai kadhil vaithal appadiyava copy seiva.too bad cooking both of them.oruther kadhalil uruguvathum matravar yethir pathum ippadiye poguthu.rithvik do you have any plan to change her mind or will you leave as nithya did earlier.
அப்ப ...கொல்கின்ற விளையாட்டை விட்டு கொள்கின்ற விளையாட்டை படு அமர்க்களமாக ஆடபோறீங்க என்று சொல்லுங்க ராஜிக்கா.அப்பவும் நித்து பாவம்.இப்பவும் நித்துவை நீங்களும் ரித்துவும் ஒரு வழி பண்ண போறீங்க என்று தெரிகிறது.
யுடி அருமை ராஜிக்கா."நீ துரத்தி விட்டு நான் ஓடித்தானே பழக்கம்"செம நச்சுன்னு இருந்தது ராஜிக்கா.கிச்சன் உரையாடல் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது.அதிலும் புதினாவை காதில் சொருகி கை கூப்புவது அத்தனை இனிமை.அந்த இனிமையை இரவு முடிந்து காலையிலேயே கசக்க வைத்துட்டீங்களே ராஜிக்கா.ஏன் ஏன் ஏன்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.