All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Thamizhselvi

Well-known member
அழகான கதை களம். அருமையான பதிவுகள்.மனதிற்கு இதம் தந்த கதைமுடிவு.நித்யாவையும் ரித்விக்கையும் என்றுமே மறக்க முடியாது.இருவரும் தங்கள் அன்பை மிக ஆழமாக வெளிப்படுத்திருக்கிறார்கள்‌.உண்மையான நேசம் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதன் சிறப்பை இழந்துவிடாது.
 

Srisamyuktha

Bronze Winner
Azhagana love story evlo pain, happy,fight ellame iruku.intha mathiri iru story na padichathh illa avlo super enaku epdi enna solrathu nu theriyala avlo super na romba happy thank you raji ma💚💚💚💚💚💚💕💕💕💕💕💕💕
 

Ramyasridhar

Bronze Winner
நித்து பாய்ந்து வந்து அவனை அணைத்து காதல் சொல்லியதில் திக்குமுக்காடி போன ரித்வி, சற்று நேரம் கடந்த பின் தான், அவன் நித்துவுடன் கற்பனையில் வாழ்ந்ததை அவள் அறிந்து கொண்டாள் என உணர்கிறான். அந்நொடி அவனுடைய வெட்கம் மிக மிக அழகு. அவனை குறித்து நித்து கண்கலங்குகையில் வழக்கம்போல் அவளை அவன் அன்பால் தேற்றுகிறான். அதன் பின் தங்கள் உலகிற்குள் சென்றவர்கள் திருமணத்தையும் அங்கேயே முடித்து கொள்கிறார்கள். இதற்கு மேலும் அவர்களால் காத்திருக்க முடியாதல்லவா. காரை விட்டு நித்து இறங்க மறுப்பதும் அதற்கு ரித்வி பல வாக்குறுதி வழங்கி அவள் இறங்க கெஞ்சுவது இரசிப்புக்குரியதாக இருந்தது. தாலி கட்டும்போது இருவரும் கண்கலங்கி தங்கள் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் 16வருட தவம் முடிந்த தருணம் அல்லவா இது. சமையலறையில் செய்யும் கலாட்டாக்களும் அருமை. நித்து சொல்லாமலே ரித்வி அவள் கருவுற்றிருப்பதை அறிந்து கொண்டு அவள் பயத்தை போக்கும் விதம் அருமை. அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து அவள் கேட்ட பேச்சுக்களே அவள் பயத்திற்கு காரணம். அவள் துறையில் எத்தகைய வெற்றியை ஈட்டியிருந்தாலும், சிலரின் தேவையில்லா பேச்சுக்கள் அவள் மனதை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பது அவள் "நான் பெண் தான் " என கூறும் போது அந்த வலியை உணரமுடிகிறது. ரித்வி அவளை குறித்து பெருமையாக பேசி அவள் வலியை போக்கிவிட்டான். பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது அருமை. அவன் நினைவாக நித்து பத்திரப்படுத்தி வைத்த பொருட்கள் அவன் பார்வையிடுவது, பிரசவத்தை நினைத்து முதலில் அவள் பயப்பட இவன் தேற்ற, பின் பிரசவத்தின் போது அவன் துடிக்க இவள் தேற்ற என அனைத்தும் அருமை. குழந்தைகள் பிறந்தவுடன் நானும் குழந்தைகளும் உனக்கு வலியை தந்ததில் ஒன்று என கூற, அவள் அதற்கு 16வருட சுகமான வலிக்கு பிறகு நீ எனக்கு கிடைத்தாய் என ஒப்பிட்ட விதம் சிறப்பு. எட்டு வருடங்களுக்கு பின் அவர்கள் ஆசைப்படியே மூன்று குழந்தைகளுடன் பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி. சண்டை போட்ட இரட்டையர்களும், அவர்களை மூட்டிக்கொடுக்க வந்த தங்கையும் நித்துவின் சமயலுக்கு பயந்து ஓடியது சிரிப்பின் உட்சம். பின் ரித்வியுடனான கலாட்டாக்கள் அருமை. 40வயது நித்து கேட்டை தாண்டி குதித்து வருவது, உன் கூட தான் ஓடி வந்துட்டு இருக்கிறேன் ரித்வி என்பது, அவர்களின் காதல் வாழ்க்கையை உணர்த்துகிறது. இறுதியாக ரித்வி, நீ காதலில் ஒரே நிலையில் இருந்தாய் என்றால் நான் எல்லா நிலைகளையும் பார்த்துவிட்டேன் என அனைத்து நிலைகளையும் கூறி கண்மூடுவது அற்புதம். ரித்வியின் இந்த வார்த்தைகள் தான் உங்கள் கதையின் சிறந்த சுருக்கம். நித்து ஒரே நிலையில் இருந்து காதலை போற்றினாள் என்றால் இவன் ஒவ்வொரு நிலையாக கடந்து வந்து காதலின் உன்னத நிலையை அடைந்துவிட்டான். கதை ஆரம்பம் முதல் முடிவு வரை எங்களை உங்கள் எழுத்து கட்டிபோட்டது என்றே சொல்ல வேண்டும். ரித்வியை வடித்த விதம் அருமையோ அருமை. நித்துவின் காதலை எந்த அளவுக்கு புரிந்துகொள்ள முடிந்ததோ அதை விட மேலாக இன்னும் ரித்வியின் ஒவ்வொரு நிலையும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு நிலையிலும் அவன் மெருகேறி கொண்டே போனான் என்று சொல்ல வேண்டும். எந்த இடத்திலும் தோய்வு என்பதே இல்லை, படிக்க படிக்க சுவாரஸ்யமே. காதலின் ஒவ்வொரு நிலையும் பிரித்து உணர்த்தியது, அதை அழகாக காட்டியது, வயது உட்பட... இருவரின் உணர்வுகளையும் நம்முள் சரியாக கடத்தியது என அனைத்தும் அற்புதம். சிறந்த படைப்பு சொல்ல வார்த்தையில்லை....👌👌👌👏👏👏😍😍😍
 

Geethaanand

Well-known member
teen age love, 20 plus love, 30 plus love, 40 plus love.stages and feelings super. ரெம்ப minute ஆன feelings அ super ஆ கொண்டு போனீங்க அவங்க மனபோராட்டங்களை சொன்னவிதம் super. உணர்வுகளின் அடிப்படைய வச்சுதான் கதை . அதை இம்மி பிசகாம அழகா கொண்டு போனீங்க.தேடித்தொலைத்தேன் உன்னை story தான் first உங்களுடையத படிச்சேன் அதுலையே உங்கள் style ரொம்ப பிடிச்சது இந்தstoryயும் வேற level. Thanks for the good story.
 

hani hajira

New member
Unga "potri padadi nam kathalai" ku aparam intha story ah thedi virumbi padichen 😍😍😍 yemathama manasula nikkura mathiri oru story kuduthurukinga semma semma..

Niraya idathula ennayum ariyama aluthuten.. kannu veruthuduchu .... Avlo azhaga irunthuchu...

Rithu va niraya idathula thititen.. manusana da ni nu... But last la avan engayo poitan..

Nithu semma character.. egiri kuthuchu oodiye avana saachuta... Super super story.. congratulations 🥰🥰🥰
 
Top