உன்னால் என்னை காதலிக்க மட்டுமே முடியும், வெறுக்க முடியாது. முகத்தில் அடித்தது போல் உன்னை காதலிக்கவில்லை என்று சொன்ன நான் தான் இப்போது உன் காதலுக்காக பைத்தியமாக சுத்திக்கிட்டு இருக்கேன் என ரித்வி சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் அவன் மனதார உணர்ந்து உரைத்தது. இந்த வெற்றியை நீ கொண்டாட வேண்டும் என அவளை உற்சாக படுத்த விழைகிறான். இது தான் ரித்வி, அவனுடைய ஸ்பெஷாலிட்டியே இத்தகைய குணம் தான். அவன் பேசும் வார்த்தைகளும் செய்கைகளும், பனிச்சாரலாய் அவளை குளிர்வித்தாலும் கடந்து வந்த காலங்கள் அந்த குளுமையை அனுமதிக்க மறுக்கிறது. அவன் ஆசையாக பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவள் கூர்வாளால் அவன் நெஞ்சை கொய்யவே செய்கிறாள். ரித்வி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான் செத்துவிட்டேன், உன்னை காதலிப்பதால் தான் உயிரோடு இருக்கிறேன் என்றும் பின் அவள் மனதில் நினைப்பதை அப்படியே சொல்லுகிறான். நீ இப்படி ஆனதுக்கு இந்த இடியட் தான் காரணம் ஆனால் அன்பார்ச்சுனேட்லி உன் மனபாரத்தை இந்த இடியட்டால் தான் இறக்கி வைக்க முடியும். ஜஸ்ட் பீல் மை லவ், என்னை ஒதுக்காதே என்று கண்கள் கரிக்க கூறும்போது அவள் கண்களும் கண்ணீர் மழையை தான் பொழிகின்றன. புண்பட்ட மனம் இதற்கு மேலும் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறதோ? இருவரின் நிலையும் வேதனைக்குரியதே. அந்த பெரிய திரையில் ரித்வியை காட்டியவுடன் இவள் அவனை இரசிப்பது அழகு. பின் அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து அவன் பிமபத்தை இரசிக்கும் தருணம் அவள் இழப்பின் பாரம் அதை இரசிக்க முடியாமல் அவளை நோ என்று அலற வைக்கிறது. அதே நிலையில் அவனை பார்க்கையில் வழக்கம்போல் அவன் செய்கை அவள் துயர் மறந்து புன்னகை புரிய வைக்கிறது. மிருதுளாவுடன் ரித்வியை காண்கையில் அவள் மனம் துடிக்கவே செய்கிறது. பார்க்கிங்கில் வெயிட் செய்ய வைத்ததற்காக அவன் ஸாரி கேட்கையில், நீ தான் வருவேன் என்று சொன்னாய் அல்லவா என்று சொல்லும்போதும், அவன் உண்மை காரணம் உரைத்தும் அவள் கோவப்படாமல் இருப்பதும் இருவருக்கும் தங்கள் கடந்த காலத்தையே நினைவு படுத்துகிறது. அதை தவிர்க்க நினைத்து மிருதுளா குறித்து நினைத்து குழப்பிக்கொள்கிறாள். இந்த குழப்பம் அவளை ரித்வியை நெருங்க செய்தால் சுபம் தான். இருட்டிற்குள் அவள் இருந்தாலும் அவனுக்கு என்றும் ஒளியையே தர விரும்புவாள். அது தீப்பந்தமாக மாற விடமாட்டாள் என்று நம்புவோம்.