kavitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரி - 22b
திடீரென்று கேட்ட சத்தத்தில் தினேஷ் பதறி விலக, பிரியாவோ அலட்சிய பார்வையை விஜியை நோக்கி வீசியவள்,
“மரியாதையா வெளில போ …” என்று தினேஷிடம் கூற,
“ஏய் என்ன உன் கள்ள காதல் தெரிய கூடாதுனு அவசரமா அவன இங்கிருந்து அனுப்புறியா … விட மாட்டேண்டி …” என்றவள்
“மாஆஆஆஆ … இங்க வந்து பாரு குடும்பம் மானம் கிட்சன்ல எறிகிட்டு இருக்கு …” என்று மீண்டும் குரல் கொடுக்க , அவளின் காட்டு கத்தலில் பதறியடித்து அங்கே வந்தனர் தண்டபாணி வளர் ரகு. சமையலறையில் நின்றிருந்த தினேஷை சந்தேகத்தோடு பார்த்த ரகுவிற்கு , பிரியாவின் கோலம் எரிச்சல் கொடுக்க
“இப்போ எதுக்கு இந்த கத்து கத்துற … ஆமா சார் யாரு இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு …” என்றது தான் தாமதம் , மடை திறந்த வெள்ளம் போல நடந்ததையும் நடக்காதையும் இட்டுக்கட்டி கொட்டினாள் விஜி.
அவள் கூறியதை கேட்டதும் ஆத்திரமடைந்த ரகு
“டேய் பொறுக்கி யார் வீட்டு பொண்ணு மேல கையை வைக்க பாக்கிற …உன்ன கொன்னுடுவேன் டா …” என்று தினேஷின் மேல் பாய , பதிலுக்கு அவன் பனியனை இறுக்கி பிடித்த தினேஷ் ,
“உன் வீட்டு பொண்ணு கூப்ட்டதால தான்டா இங்க வந்தேன் … முதல்ல அவகிட்ட கேளுடா …” என்று எகிற , தன் தம்பியை பிடித்து இழுத்தபடி ,
“ரகு … இவ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் இவ்வளவு தைரியமா இங்க வர போறான் … அதுவும் நான் பாக்கும் போது ரெண்டு பேரும் கட்டிபிடிச்சுக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க … அவளுக்கு விருப்பமில்லைனா கத்த வேண்டியது தான … எங்கையாவது சத்தம் கேட்டுச்சா …. முதல்ல இந்த பக்கம் வா …” என்று தினேஷிடம் இருந்து பிரித்து இழுத்து தள்ளி நிறுத்த , யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் தனக்கு டீ கலந்துக் கொண்டிருந்தாள் பிரியா.
அவளின் அலட்சியம் அங்கிருந்தவர்கள் முகங்களை கறுக்க செய்ய பொறுமையிழந்த தண்டபாணி
“என்னமா இதெல்லாம் … நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல … வீட்டுக்குள்ள இவர முதல்ல எதுக்கு விட்ட … நானும் கேட்க கூடாது கேட்க கூடாதுனு இருந்தா எல்ல மீறிக்கிட்டு போய்கிட்டு இருக்க …” என்று சத்தம் போட சிறிதும் கண்டுக் கொள்ளாதவள் அவள் பாட்டிற்கு டீ கப்பை தூக்கி கொண்டு வெளியேற, ஆவேசமடைந்த வளர் அவள் கையிலிருந்த கப்பை தட்டிவிட்டு ,
“என்னடி … என்ன உன் திமிர் தனத்த இங்க காட்டுறியா … யாரையும் மதிக்காம நீ பாட்டுக்கு போற … எங்கிருந்து வந்துச்சு இவ்வளவு நெஞ்சுரம் … எல்லாம் அந்த பொட்டைப்பய உன் காலுல விழுந்து கிடக்கிற திமிர்தானே …” என்று கோபத்தில் கத்தியவர் , விஜியிடம்
“ஏய் விஜி போய் அந்த மானங்கெட்டவன கூட்டிட்டு வா …” என்கவும் கௌரியை அழைக்க பாய்ந்து ஓடினாள் விஜி. அதற்குள் தினேஷின் அருகில் வந்த ரகு ,
“வீட்ட விட்டு வெளில போடா …” மீண்டும் எகிற ,
“இருங்க பாஸ் … நம்ம கௌரி சார் வரட்டும் அவர் கிட்ட சில டீலிங்க் பேச வேண்டியிருக்கு என்றவனை நக்கலாக பார்த்த பிரியா மீண்டும் தனக்கு டீ கலக்க தொடங்கினாள்.
சுகமாய் தூங்கி கொண்டிருந்த கௌரியை பிடித்து உலுக்கிய விஜி ,
“டேய் எரும எழுந்திரு … அங்க உன் பொண்டாட்டி குடும்ப மானத்த காத்துல பறக்க விட்டுட்டு இருக்கா …உனக்கு தூக்கம் கேட்குதா …” என்று வேகமாக உலுக்கி எழுப்ப , கண்ணை திறவாமல்
“போக்கா … டிஸ்டர்ப் பண்ணாத …”சலிப்புடன் கூறி திரும்பி படுத்தவனின் காலை ஓங்கி மிதித்தவள் ,
“டேய் நாயே … எழுந்திரு … அங்க வந்து உன் பொண்டாட்டி பண்ணியிருக்க கேவலத்த பாரு என்கவும் , பிரியாவின் பெயர் வரவும் அவசரமாக கண்ணை திறந்த கௌரி
“என்ன நீயும் உன் அம்மாவும் சேர்ந்து பிரிக்குட்டியா கொடுமை படுத்திறீங்களா … இந்த கௌரி இருக்கிற வரைக்கும் அது நடக்காது …” என்று எழுந்தவன் அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கியபடி ,
“முதல்ல உன்ன பேக் பண்ணா அந்த தாய் கிழவி ஒழுங்கா இருக்கும் … எப்ப பாரு எதையாவது சொல்லி ஏத்திவிட்டுக்கிட்டு இருக்கிறது …” என்று புலம்பியபடி கீழே இறங்கியவனை வன்மத்தோடு பார்த்தபடி கீழே இறங்கினாள் விஜி.
சமையலறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கே நிலவிய அசாதாரண சூழல் மனதை ஏதோ செய்தாலும் , அடுப்பு மேடையருகே புடவையில் புத்தம் புது பூவாய் நின்றிருந்த மனைவியை கண்டதும் நேற்றிரவு சொர்க்கத்தில் திளைத்தது ஞாபகத்திற்கு வரவும் புன்சிரிப்புடன் ,
“ப்ரிக்குட்டி … டீ போடுறியா … மாமாக்கும் ஒரு டீ பார்சல் ப்ளீஸ் …” என்று கொஞ்சியவனை குடும்பமே கொலைவெறியோடு பார்க்க , அப்பொழுதுதான் அங்கே நின்றிருந்த தினேஷை கண்ட கௌரி ஆச்சிரியதுடன் ,
“ஹேய் தினேஷ் … இங்க என்ன பண்ற …சார் கூட்டிட்டு வர சொன்னாரா… ” என்று சாதாரணமாய் கேட்டவன் அருகில் சென்ற விஜி ,
“ம்ம்ம் … சார் ஒன்னும் கூட்டிட்டு வர சொல்லல , உன் பொண்டாட்டிதான் திருட்டு தனமா வர சொல்லிருக்கா …” என்று கத்த,
“ச்ச … காதுல ஏன் கத்துற …” என்றவன் சுற்றி நின்றிருந்தவர்களை யோசனையோடு பார்த்தவன் பின் ,
“ஆமா நீங்கலாம் ஏன் இங்க நிக்கிறீங்க … இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கிற ஆளு கிடையாதே …” என்றவன் ,
“வா தினேஷ் ஹால்ல போய் உட்கார்ந்து பேசலாம் …” என்று தினேஷை அழைக்க , பிரியாவின் முகத்தில் கர்வமும் உதட்டில் குறுஞ்சிரிப்பு மலர , கொதித்து போனார் வளர்.
“த்தூ … உன்ன போல ஒரு மானங்கெட்ட பயல பார்த்தது இல்லடா … காசு வருதுன்னு பொண்டாட்டிய கூட்டி கொடுப்பியா டா ஈனப்பயலே …” என்று விஷ அம்புகளாய் வார்த்தைகளை வீச , முகம் கோவத்தில் சிவந்து போக ,
“அம்மாஆஆ …” என்று கத்தினான் கௌரி.
“உண்மையை சொன்ன எரியுதா … நடு வீட்டுல எவன் கூடவோ கூத்து அடிச்சுகிட்டு இருக்கா … அவளை தூக்கி போட்டு மெரிக்காம … என்கிட்ட கத்திக்கிட்டு இருக்கியா …”கோபத்தில் சீரிய வளரை சலிப்புடன் பார்த்தவன் ,
“இப்போ என்ன இவங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணாங்கன்னு உன் பொண்ணு சொன்னுச்சா … அடப்போமா சும்மா எரிச்சலை கிளப்பிட்டு …” தூசியை தட்டுவது போல தட்டிவிட்டவனை நோக்கி கோபத்துடன் சென்ற விஜி ,
“இவங்க ரெண்டு பேரும் கட்டிபிடிச்சுக்கிட்டு முத்தம் கொடுத்ததை என் கண்ணால பார்த்தேன் … தோ நிக்கிறானே அவன் கிட்டயே கேளு …” என்றவளை நோக்கி கையை உயர்த்தி சென்றவன் ,
“அறைஞ்சேன் வச்சுக்கோ நேரா உன் மாமியார் வீட்டுல போய் உட்கார்ந்துப … முதல்ல இங்கிருந்து கிளம்பு எப்போ பாரு எதாவது பிரச்சனையை இழுத்து விட்டுகிட்டு இருக்கிறது …” என்றவனை ஆற்றாமையுடன் பார்த்திருந்தாள் விஜி. பிரியா வானில் சறகில்லாமல் பறந்துக் கொண்டிருந்தாள் . அவளிற்கு கௌரி மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது, ஏன் கடவுளே சொல்லியிருந்தாலும் அவன் நம்பமாட்டான் என்று அவளுக்கு நன்கு புரியும்.
அந்த நம்பிக்கை தந்த தைரியம் அவள் முகத்தில் பிரதிபலிக்க அங்கிருந்தவர்ளை மீண்டும் ஒருமுறை பார்த்தவள், ‘பார் … என் கௌரியை பார் … நீங்கள் என் மீது சேற்றை வாரி இறைத்தாலும் … பன்னீரை தெளித்து என்மீதிருந்த களங்கத்தை துடைப்பான் …” என்ற பார்வை பார்த்தாள். அவள் பார்வையை சரியாக படித்த வளர் ,
“அப்போ நாங்க சொல்றத கேட்க மாட்ட …”என்று அழுத்தமாக கேட்க ,
“ம்ப்ச் … எத்தன தடவமா சொல்றது … என் பிரிக்குட்டியா பத்தி எனக்கு தெரியும் … போய் வேற வேலையிருந்த பாருங்க …” என்கவும் ,அவன் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு பிரியாவின் கண்கள் கலங்கிவிட்டது .
அவன் பேச்சில் சமாதானம் ஆகாத ரகுவும் தண்டபாணியும் இதற்குமேல் அவனிடம் எதுவும் கேட்க விரும்பாதவர்களாக வாயை மூடிக் கொண்டிருக்க, சிலிர்த்துக் கொண்டு வந்தாள் விஜி ,
“சரி … நீ உன் பொண்டாட்டிய எதுவும் கேட்க வேணா … இவன் எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்தானு கேளு …” மூக்கு புடைக்க கேட்கவும், சலிப்புடன் பார்த்தவன்
“தேவையில்லை …” என்று அந்த பேச்சை ஒதுக்கிவிட்டு வெளியேற முயல ,
“எனக்கு தேவையிருக்கு … இங்க உன் பொண்டாட்டி மட்டுமில்ல … நானும் இங்கதான் இருக்கேன் , அம்மாவும் இங்கதான் இருக்கு … இவ்வளவு விடியல்ல இவன் நம்ம வீட்டுக்குள்ள நுழைந்ததை யாரவது பார்த்திருந்த எங்களத்தான் தப்பா நினைப்பாங்க … இதுல என்னோட மானமும் அடங்கியிருக்கு … இவன் உனக்கு தெரிஞ்சவன் தானே எனக்கு இப்போ கேட்டு சொல்லுற …” என்று கட்டளையிட்டவளை கடுப்புடன் பார்த்தான் கௌரி.
காலையில் மலர்ந்த பண்ணீர் ரோஜாவை போல பளீரென்று இருந்த மனைவியை தனிமையில் கொஞ்ச விடாமல் வம்பு வளர்க்கும் தமக்கையின் மீது கோபம் வந்தாலும் , அவள் கேட்ட கேள்வி நியாயமாக பட்டதால் , தலையை ஆட்டி தன் அதிருப்தியை வெளியிட்டவன் ,
“சொல்லு தினேஷ் என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க … ஏதாவது முக்கியமான விசையமா …” என்று கேட்க , சற்றும் தயங்காமல்
“பிரியாதான் வர சொன்னா …” என்கவும் , தன் மனைவியை மரியாதையை இல்லாமல் அழைத்தது பிடிக்காதவனாக முகம் சுருக்கியவனின் பார்வை ஒரு நொடி என்றாலும் பிரியாவை தொட்டு மீண்டது .
தான் சொல்லித்தான் வந்ததாக கூறிய அடுத்த நொடி தன்னை பார்த்தவனின் பார்வை பிரியாவை கொள்ளாமல் கொன்று புதைத்தது. வளரும் விஜியும் கௌரியின் பார்வையும் , பதிலுக்கு இறுகி போன பிரியாவின் முகத்தையும் கண்டவர்கள் , கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழிக்கு ஏற்ப கௌரியை குழப்ப நினைத்தனர்.
“தினேஷ் முதலல்ல மரியாதை கொடுத்து பேசு … வர சொன்னா கிட்சேன் வரைக்கும் வருவியா …” என்று கேட்ட கௌரியின் குரலில் சிறிது கோபம் எட்டி பார்க்க ,
“பெட்ரூம் வரைக்கும் வந்துருக்கேன் … கிட்சேன்க்கு வர்றத பெரிசா பேசிகிட்டு இருக்க …”என்று அசால்டாய் பேசியவனை நோக்கி ஒற்றி விரல் நீட்டி எச்சரித்த கௌரி ,
“ஜாக்கிரதை தினேஷ் … நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் சரியில்ல … நீ அத சாதாரணம நினைச்சு சொல்லலாம் பட் கேட்கிறவங்களுக்கு தப்பா படும் … பார்த்து பேசு...” என்று அப்பொழுதும் தன்மையாக பேசியவனை கண்டு எரிச்சலடைந்த வளர் ,
“நீ சோத்துல உப்பு போட்டுத்தானே தின்னுற … இப்பவும் உனக்கு கோபம் வரலையா …” என்றவருக்கு பலமாக தலையாட்டியவன்
“வரலை …எனக்கு என் பொண்டாட்டிய பத்தி தெரியும் …எனக்கு சந்தேகம் வரலை … இதோ நிக்கிறானே காலைவரைக்கும் நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தேன் … இப்போ தானே தெரியுது சரியான பொறுக்கின்னு … அப்படிதான் பிரிக்குட்டியும் நினைச்சுகிட்டு இருந்திருக்கும் … உங்க பேச்சு கேட்டோ இல்ல இவன் பேச்சு கேட்டோ என் பொண்டாட்டிய கேள்வி கேட்க மாட்டேன் …” என்று திடமாய் கூற, உதட்டை கடித்து பீறிட்டு எழுந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் பிரியா.
வளர் மற்றும் விஜிக்கு கௌரியின் நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்ற வெறி, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ,
“பொறுக்கியா … அப்போ பொறுக்கி கூட சேர்ந்து சுத்துன உன் பொண்டாட்டி பத்தினியா …” என்று நக்கலடித்து சிரித்த தினேஷின் சட்டையை கொத்தாக பிடித்த கௌரி ,
“வேணாம் தினேஷ் … என்ன கோபப்படுத்தி பார்க்காத … பாரு நீ எதுக்காக இங்க வந்திருந்தாலும் உன்ன மன்னிச்சு விட்டுடுறேன் மரியாதையா போய்டு …” என்றவனின் கையை தட்டிவிட்ட தினேஷ் ,
“என்ன , விட்டா ஏன் மேலதான் மொத்த தப்பு கணக்கா பேசிகிட்டு இருக்க … உன் பொண்டாட்டி கூப்பிடாமலா இங்க வந்திருக்க போறேன் … அவதான் காலைல போன் பண்ணா … உனக்கும் அவளுக்கும் நேத்து தான் எல்லாம் நடந்துச்சுனு சொன்னா …இனி நாங்க சந்தோசமா இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லைனு சொன்னா … இது ஏற்கனவே நாங்க பேசிக்கிட்டதுதான் … பலமுறை உங்க ரூம்ல நாங்க ஜாலியா இருந்திருக்கோம் என்ன எல்லை மீறி போனதில்ல … ஏன்னா உங்களுக்குள்ள தான் எதுவும் நடக்கலையே அதான் …” கொஞ்சம் கூட மனம் உறுத்தாமல் கூறியவனின் மேல் பாய்ந்திருந்தான் கௌரி.
அவன் கூறியதை கேட்டு விஜியை தவிர மொத்த குடும்பம் ஆடிப்போக, பிரியாவிற்கு எழுந்த ஆத்திரத்தில் தன் கையால் அவன் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொள்ள வேண்டும் என்ற வெறி எழ , கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். அதற்குள் கௌரியின் அருகில் சென்ற விஜி ,
“அவன விடு … முதல்ல உன் பொண்டாட்டி கிட்ட கேளு … அவன் சொல்றது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுடும் …” என்று கூறவும் ,
“தப்பு பண்ணி மாட்டிகிட்டவங்க உண்மையா பேசுவாங்க … வேணுமா நான் கொடுத்த நகைங்க எல்லாம் இவங்க ரூம்ல தான் இருக்கு போய் பாருங்க … அத பார்த்தாவது நான் சொல்றது உண்மைன்னு நம்புறீங்களா பாக்குறேன் …” என்று தினேஷ் விஜியிடம் கூற , மீண்டும் நாலுகால் பாய்ச்சலில் பிரியாவின் அறைக்கு ஓடினாள்.
திரும்பி வந்தவளின் கையில் நேற்று பிரியாவிடம் காட்டிய ஆரம் இருக்க ,
“அவன் சொல்றதைத்தான் நம்புல … இது எப்படி வந்துச்சுனு அவகிட்ட கேளுடா … உங்க ரூம்ல உங்களுக்கு தெரியாம எப்படி இத வைக்க முடியும் … கேளுடா தம்பி …” என்கவும் , முகம் இறுக அவள் கையிலிருந்ததை வெறித்து பார்த்தான் கௌரி.
இங்கு பிரியாவோ கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க கொண்டிருந்தாள் , எத்தனை பெரிய சதி , நேற்று தன் நிலையில் இல்லாத பொழுது தனக்கு தெரியாமல் அங்கே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அதை இவர்களின் முன் நிரூபிக்க விருப்பமில்லாததால் அமைதி காத்தாள். ஆனால் இந்த குற்றசாட்டுகளை விட கௌரியின் முகம் தான் உயிரோடு அவளை கொன்றது . இதுவரை என்ன நடந்தது என்று வாய் திறந்து கேட்கவில்லை என்றாலும் அவன் மனதில் ஓடுவதை கண்டுக் கொண்டாள்.
இந்த கூத்தையெல்லாம் காண சகிக்காதவராக தண்டபாணி ,
“இங்கபாரு இந்த பையன் காலங்கார்த்தால இங்க ஏன் வந்தானு நான் கேட்க போறதில்ல … ஆனா இந்த நகை எப்படி உன் ரூம்க்கு வந்துச்சு … நீ சொன்னாதான் எங்களுக்கு தெரியும் … இப்பவாவது வாயை திறந்து பதில் சொல்லு …”
என்றவரை மதிக்காமல் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தியது கௌரியின் குரல்.
“பிரியா …” என்ற அழைப்பில் மொத்தமாக உடைந்து போனாள் பிரியா. ஆடாமல் அசையாமல் இறுகி போய் அதே இடத்தில் நின்றவளை நோக்கி சென்றவன் ,
“இந்த நக …” என்று தடுமாறியவன் , பின் தொண்டையை செருமிக் கொண்டு ,
“இந்த நக நம்ம ரூம்க்கு எப்படி வந்துச்சு …” என்று சோர்ந்து போன தன் விழிகளை கலங்கிய அவள் விழிகளுடன் கலக்க விட்டு கேட்க , அழுகையை கட்டுப்படுத்தியதால் தொண்டை குழி ஏறி இறங்க , நாசி கோபத்தில் புடைத்திருக்க முகம் சிவக்க வெறித்தவளின் விழிகள் , ‘நீ எனை நம்பவில்லையா ’ என்று குற்றம் சாட்டவும் , துடித்து போனான் கௌரி.
நேற்றிரவு இருந்த நிலை என்ன , இப்பொழுது இருக்கும் நிலையென்ன என்று நொந்து போனவனுக்கு வேறு வழி தெரியாததால் ,
“ப்ளீஸ் சொல்லு … உன் மேல தப்பில்லைனு எனக்கு தெரியும் … ஆனா இங்க இருக்கவங்களுக்கு உண்மை தெரியணும்ல … சொல்லு எப்படி நம்ம ரூம்க்கு வந்திச்சு …” என்றவனை வெறித்து பார்த்தவளுக்கு அப்படி ஒரு கோபம் விஜியின் மேல் வந்தது.
ஒருநொடி போது நடந்தை அனைத்தும் சொல்லிவிட , ஆனால் வளர் முன்னும் விஜியின் முன்னும் தன்னை நிரூபிக்க விரும்பாதவள் , கௌரியை முறைத்துவிட்டு மேல செல்வதற்காக திரும்ப , ஓடி வந்து கையை பற்றினாள் விஜி.
“ஏய் … இவ்வளவு பேர் கேட்கிறாங்கள … யாராவது ஒருத்தரையாவது மதிச்சு பதில் சொல்றியா … நீ என்ன பெரிய மஹாராணியா …” என்றவளை பார்த்த பிரியாவிற்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது . எல்லாம் இவளால் தானே என்ற எண்ணம் தோன்ற , அவள் தோளை பிடித்து வேகமாக தள்ள , அருகிலிருந்த சுவற்றில் மோதி கீழே விழுந்தவள் வயிற்றை பிடித்திக் கொண்டு கதற தொடங்கினாள். அங்கிருந்தவர்களிடமிருந்து ,
“ஐயோ …” “ப்ரியாஆ …” “சண்டாளி …” “என்னமா இது …” போன்ற குரல்கள் வர , கோபமாக பிரியாவின் அருகில் சென்ற கௌரி ,
“உனக்கு என்னதான் பிரச்சனை … இப்போ எதுக்கு அக்காவ தள்ளிவிட்ட …” என்றவனை கண்களால் பொசுக்கினாள் பிரியா.
அதற்குள் “ஐயோ ரத்தங்க …” என்ற வளர் அலற வேகமாக விஜியின் அருகில் ஓடினான் கௌரி. வலியில் துடித்து கொண்டிருந்த விஜியின் காலருகில் தேங்கி நின்ற ரத்தத்தை கண்டு அதிர்ந்து போயினர் குடும்பத்தார்.
“விஜி விஜி …என்னடி ஆச்சு … ஐயோ கடவுளே ஒரே ரத்தமா இருக்கே … முழுகாம இருந்தியாடி …” என்று தரையில் புழுவை போல துடித்துக் கொண்டிருந்தவளின் தலையை மடி மீது வைத்து கண்ணீருடன் புலம்பினார் வளர். முழுகாம இருந்தியாடி என்ற வார்த்தையில் முகம் வெளிற நடுங்கி போய் நின்றிருந்தாள் பிரியா.
“ம்மாஆ … என் … வா … வாழ்க்கையே … நாசம் பண்ணிட்டாமா … இந்த ஒழுக்கம் கெட்டவ … நாலு மாசம்மா …” “இந்த தடவ செக் அப் போனப்ப ஆம்பள புள்ளன்னு தெரிஞ்ச … கிட்டேன் … எங்க சொன்னா புள்ள தங்காமா போய்டும்னு பயத்துல யார்கிட்டையும் சொல்லல … அய்யோ என் குலவாரிச அழிச்சுட்டாளே இந்த கொலைகாரி பாவி …இனி எப்படி என் மாமியார் முகத்துல முழிப்பேன் ” என்று வலியினூடே திக்கி திக்கி கதறியவளை கண்டு தலையடித்துக் கொண்டு அழ தொடங்கினார் வளர் .
பிரச்சனை பெரிதாவதை கண்ட தினேஷ் அங்கிருந்து நழுவி வெளியேற, மகள் கதறுவதை காண சகிக்காமல் கௌரியை நெருங்கிய வளர் ,
“இப்போ உனக்கு சந்தோசமா … சொல்லு … இந்த நாதாரி சிறுக்கிக்காக உன் அக்காவோட வாழ்க்கையை நாசமாகிடியே … உனக்கே தெரியுமல்ல அவ மாமியாக்காரி ஆம்பள புள்ள இல்லைனு என்னனா கொடுமைகள் பண்ணா … கடவுளா பார்த்து கொடுத்தத … கொன்னுட்டாளே … போ போய் உன் பொண்டாட்டி கால்ல விழுந்து கிட …” என்று வெறுப்பை உமிழ , குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றவனின் பார்வை அங்கே மிரண்டு போய் ஒடுங்கி நின்றிருந்த பிரியாவின் மேல் பாய்ந்தது. வேகமாக அவளருகில் சென்றவனை பார்த்து ,
“நா … நா … வே … னும்னு … பண் …” என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் கௌரி.