Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடல் தாகம் தீர்க்கவா, மழைத்துளியே! - தாமரையின் நவரச ஓவியம்!
ஹாய் தாமரை,
கிலுகிலுப்பையின் கிண்கிணி நாதத்தில்
ஆர்ப்பரிக்கும் கடலின் ஆரவாரம்!
கிளிமொழியின் கீற்றான சுவாசத்தில்
அலுங்காத ஆழ்கடலின் ஆசுவாசம்!
மூச்சுவிடாமல் முன்னூறு வார்த்தைகள்
பேச்சுவராமல் கண்ணூறும் பார்வைகள்
மழைச் சாரலின் வேகத்தில்
மனம் மீட்டும் போகம்!
இரட்டை பிள்ளைகள்
இருவேறு துருவங்கள்!
அரபிக் கடலும்
வங்கக் கடலும்
கரையாக நின்றாலும்
மழையின் வேகத்தில்
பொங்கும் விதியன்றோ!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி