All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அவிராவின் 'நீலியின் வதம்' - கதை திரி

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலியின் வதம்-9 b
பாகம் பதிந்துள்ளேன். தாமதத்திற்கு மன்னிக்கவும் ... இந்த ud-யில் 2-ம் கதாநாயகி எண்டர் ஆகிறார் ... கதைக்காக சில காட்சிகள் சேர்த்துள்ளேன்..... போன
ud-க்குComment மற்றும் லைக்ஸ் போட்ட உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்... ப்ளிஸ் நிறைய Likes ேபாடுங்கள் சகோ...
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo.... Super Super maa... Semma episode.... ஆரி nili குகை ah தேடி vanthutaan.... But avanala அதை paakka முடியல... Second heroine ah.... அவன தேனி kita irunthu kaapatha தான் avanayum seththu kuthichi இருக்கா avan அந்த marathula உள்ள தேனி ah kavanikala..... Atherchi ah நடந்தது தான் but appram avana neruginathu thappu... Super Super
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo.... Super Super maa... Semma episode.... ஆரி nili குகை ah தேடி vanthutaan.... But avanala அதை paakka முடியல... Second heroine ah.... அவன தேனி kita irunthu kaapatha தான் avanayum seththu kuthichi இருக்கா avan அந்த marathula உள்ள தேனி ah kavanikala..... Atherchi ah நடந்தது தான் but appram avana neruginathu thappu... Super Super
Tq u sis correcta purinjukitinga avanoda mind change aguthu athaithan mean pannunae;n
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo.... Super Super maa... Semma episode.... ஆரி nili குகை ah தேடி vanthutaan.... But avanala அதை paakka முடியல... Second heroine ah.... அவன தேனி kita irunthu kaapatha தான் avanayum seththu kuthichi இருக்கா avan அந்த marathula உள்ள தேனி ah kavanikala..... Atherchi ah நடந்தது தான் but appram avana neruginathu thappu... Super Super
Tq u sis correcta purinjukitinga avanoda mind change aguthu athaithan mean pannunae;n
ஆரிக்கும் இந்த பெண்ணுக்கு முன் ஜென்ம தொடர்பு இருக்கா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
ஆரிக்கும் இந்த பெண்ணுக்கு முன் ஜென்ம தொடர்பு இருக்கா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
Soon u know the answer sis
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம் - 10

" பெண்களை நீ மதிக்க வேண்டாம் மரியாதை தர வேண்டாம், ஏன்?.. அவங்களை சக உயிராக நினைத்து கூட பார்க்க வேண்டாம்...... ஆனா , பெண்களோட வலிக்கும்; கண்ணீருக்கும், நீ காரணமாக இருக்க கூடாது மேலும், எப்போதவது நீ அவங்களை தெரிந்தோ , தெரியாமலோ மனசு அளவிலோ, இல்லை உடல் ரீதியிலோ , துன்பப்படுத்திவிட்டாய் என்றால், அவர்கள் தரும் தண்டனை , எத்தகையது ஆனாலும் நீ அனுபவித்து ஆக வேண்டும்.. இதற்கு சம்மதிக்கிறேன் என்று 'என் மீது 'ஆணையாக' சத்தியம் செய்துக் கொடு ஆரி' ... என்று தன் முன்னே கை நீட்டியப் படி நின்ற அன்னையின் கையைப் பற்றினான் 10 _ வயது நிரம்பிய ஆரி.. அன்று புரியவில்லை அதன் அர்த்தம், ஆனால் வளர, வளர.. அந்த வார்த்தைகளின் கணத்தை உணர்ந்தவன்; அதன் பின்னாளில் பெண்களிடம் ஒதுங்கியே இருக்க ஆரம்பித்தான் தன் மனதை கடிவாளம் இட்டு ..

அதே சமயம், தன் கண் முன்னே பெண்களுக்கு தீங்கிழைத்தால், அவர்களை எங்கே 'எப்படி தட்ட வேண்டுமோ ?... அப்பெண்ணின் பெயர் தெரியாத படி தட்டி விடுவான். நண்பர்களிடம் கூட இந்த விஷ்யத்தில் கண்டிப்புடன் தான் இருப்பான்....ஆகையால்தான் திருமணம் உறுதியாகாமல், தாராவுடன் நெருக்கமாக பழகி, நண்பர்களுக்கு தானே தவறான முன்மாதிரியாக கூடாது என்று தான்...தாராவிடம்
ஏதுஎதோ காரணங்களை கூறி , பேச்சினியில் கூட கண்ணியம் காக்கிறான்..

அப்படி பட்ட தான்.',,இன்று தன் உயிரை காத்த பெண்ணிடம் , எது இவ்வளவு கேவலமாக செயல்பட தூண்டியது?.. உயிர் காக்கும் நேரத்தில், பெண்ணின் அவயங்களால் ஈர்க்கப்பட்டு தன்னிலையிழந்த நானும் ஒரு கேவலமான பிறவியா?...
'இல்லை' ...இது என் மனம், உடல் இரண்டின் கட்டுப்பாடு இன்றி நடந்த செயல்,, ஆனால் என் மனச்சாட்சியே இதை ஒத்துக் கொள்ளாது, இச் செயலுக்கு முழுக்க நான் மட்டும் தான் காரணம்... இதற்கு பிராயசித்தமாக அம்மா, கூறியதுப் போல் 'அப்பெண்ணைப் பார்த்து ; அவள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ளுவது தான்.. என் தவறுக்கான தண்டனை" இதை எண்ணிய நொடி மனம் லேசாக ., அப்பொழுதுதான் இங்கு வந்த காரியம் , புத்தியில் உரைக்க.. மணலில் படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து...எரிந்த கண்களை திறந்து சுற்றுப்புறத்தைப் பார்த்தான் ஆரி..

மேற்கே சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்க.. அவ்விடம்
கரும்மைப்படர ஆரம்பித்திருந்தது.. பறவைகள் கூட்டம் கூட்டமாக இரைச்சலோடு, மாலை வேளையை வரவேற்றவாறே !... தங்கள் கூட்டிற்கு பயணம் செய்துக்கொண்டிருந்தன..

ஆற்று நீரில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன்; இவ்வளவு நேரம் தன்னை காணாமல் வினய் தவித்துக் கொண்டிருப்பான் என எண்ணியபடி, தாங்கள் தங்க கேட்டிருந்த வீட்டை நோக்கி நடந்தான் ஆரி..
"மதியம் போனவன், நைட் டைம் ஆயிடுச்சு., இன்னும் காணோம், புது இடம் எங்க போனானோ," என மனத்தினுள் தவித்துப் படி ,, அவ்வீட்டின் கேட் அருகே , இரு பக்கமும் பிரிந்த நடைப்பாதையில், எந்தப் பக்கம் போய் ஆரியைத் தேடலாம் என தவித்துக் கொண்டிருந்த வினய்யின் கண்களில், தூரத்தே வந்துக் கொண்டிருந்த ஆரியைப் பார்த்ததும், கண்கள் சிரிக்க தாயை கண்ட கன்றுப் போல ஆரியை நோக்கி ஓடிச் சென்று அவனைக் கட்டித் தழுவினான் வினய் ..

"எங்கடா போன இவ்வளவு நேரம், உன்னை காணாம எவ்வளவு தவிச்சுப் போயிட்டேன் .. நீ என்னாடானா ...ஆடி அசைஞ்சு வர, " வினய் ஆதங்கமாக கேட்க..

வினய்யின் செயலில் .. முதலில் மனம் நெகிழ நின்ற ஆரி, இந்த சிறிய விஷ்யத்துக்கு இந்த பதற்றம்
வினய்க்கு நல்லது அல்ல என நினைத்தவன், அவன் பதற்றத்தை திசை திருப்ப ..

"நான் என்ன சின்னப் பிள்ளையா டா... இவ்வளவு பதட்டப்படுறே !... ஒரு வேலைக்கு வெளியில் போனா முன்ன, பின்ன நேரம் ஆகும் .,எருமை வயசு ஆகுதே' .. பொறுமை வேண்டாம்.. கொஞ்சம் லேட் ஆனதுக்கு . பொண்டாட்டி மாதிரி பொசுக்கு னு
நடு ரோட்ல கட்டிப் பிடிக்கிற, பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?..
பார்க்கிறவங்களை விடு; உன் தங்கச்சி தாரா பார்த்தா?... ., பொறாமையில் பொங்கி உனக்கு பாயசாத்தை போட்டுடப் போறா. .. எதுக்கும் என்கிட்ட கொஞ்சம் தள்ளியே நடந்துக்கோ.. என சிரிப்புடன் வினய்யின் தோளைத் தட்டி பேசியவாறே.. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹெளட் ஹவுஸ்ஸில் நுழைந்தவனை.. பிரம்மாண்டமான பழங்கால மாளிகையின் இரண்டாம் தளத்திலிருந்து ....குரோதமாக இரு விழிகள் பார்த்துக் கொண்டிருந்ததை பாவம் ., ஆரி அறியவில்லை ..அவ் விழிகள் இனி தனக்கு செய்யப் போகும் அபத்துக்களை ?.....

வீட்டை திறந்து , .முன் அறையை வெளிச்சமாக்கிவிட்டு, அதனை அடுத்த பெட்ரூம்மிற்குள் நுழைந்த வினய், தன் பின்னே வந்த ஆரியிடம், "சிக்கிரம் குளிச்சுட்டு வா இந்த வீட்டு ஓனர், நம்ம கிட்ட பேசணுமாம், மதியமே நிறைய கேள்வி கேட்டார் .. நான் தான் நீ வந்ததும் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன், அதுக்கு அவரு அப்படியே நைட் சாப்பிடற மாதிரி வாங்கன்னு சொன்னாரு, ஸோ சீக்கிரம் வா
ரொம்பப.... பசிக்குது என அடி வயிற்றை தொட்டுக் காண்பித்தான் வினய் ..
வினய்க்கு முதுகு காட்டியபடியே தன் பேக்கை திறந்து இரவு உடையை எடுத்தவன்; அடுத்ததாக தையல் இட்ட நெற்றி காயத்திற்கு ' தையல்' யிட தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, இதைப் பார்த்தால் நண்பன் ஒரு மணி நேரத்திற்கு ஒப்பாரி வைப்பான் அதை தவிர்க்கவே விருட்டென பாத்ரூம்மினுள்
புகுந்துக்கொண்டான்.

கிராமமாயினும் நவீன வசதியோடு கூடிய பெரியஹால், ஒரு கிட்சன், அதை ஒட்டி டைனிங் ஹால். ஹாலின் மற்றொரு புறம் பெரிய ஒற்றை பெட்ரூம் ;அதனுள்ளே டைல்ஸ் பதித்த பாத்ரூம், ஷவர் , வெஸ்டர்ன்
டாய்லெட்டுடன் நவீனமாக இருந்தது..

கண்ணாடியில் வலதுநெற்றியை மறைத்த முடிகளை ஒதுக்கிப் பார்க்க, நான்கு தையல் போடுமளவு ஆழமான இருந்தது காயம் .
அப்போது அவன் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான், 'செம்ம பொண்ணுடா' ,, அந்த சமயத்தில் பயந்து ஒடாம, எவ்வளவு தைரியமா மிரட்டிட்டு ; குறிப்பாத்து கூரான கல்லை விட்டெறிச்சா பாரு செம டி.. பொண்ணுனா இப்படித்தான் இருக்கணும் ...ஐ லைக் யுவர் போல்ட்னஸ் .. என மனம்
பெண்ணவளை நினைக்க,கைகள் அதன் வேலைகளை செவ்வனே செய்தது .. குளித்து முடித்து வெளியே வந்தவன், வினய்யிடம் சென்று போலாமா ?... எனக் கேட்டான்..
"உம்' என தலையசைத்த வினய், வீட்டைப் பூட்டி விட்டு, நண்பனுடன் நடந்தவாறே, மதியம் இங்கு வந்தது முதல், இந்தவீட்டினர் தந்த மரியாதை காரில் இருந்து பொருட்களை எடுத்து வர ஆட்களை அனுப்பியது, இரவு உணவுக்கு அழைத்தது வரை மூச்சு விடாமல் கூறி முடிக்கவும், பெரிய வீட்டின் முன்புறம் இருவரும் நிற்கவும் சரியாக இருந்தது..

நான்கு தூண்கள் வைத்து பிரம்மாண்டமாக இருந்த முன் புறத்தை பார்க்கவும், ஆரியின் விழிகளில்
ஏதுஎதோ தெளிவில்லாத காட்சிகள் ஓட,, தலையைப் பிடித்தவாறு அப்படியே நின்று விட்டான் ஆரி..

பேசிக் கொண்டே நடந்த வினய் .. தன்னுடன் வந்த நண்பனை காணாமல் திரும்பிப் பார்க்க, தலையைப் பிடித்தவாறு நின்றிருந்தவனின் அருகில் வேகமாகச் சென்றான் வினய் ..
இன்றைய நாளில் நண்பன் மனக்குழப்பத்தில் தத்தளிப்பது இது இரண்டாவது முறை, இந்நிலையை அறிந்த வினய், இம்முறை பதறாமல் அதைப் போக்க அவனின் தோளைத் தட்டி " டேய் ஆரி, அவங்ககிட்ட ரொம்ப நேரம்
பேசாதடா, மதியமும் சரியா சாப்பிடலை, அப்புறம் சாப்பாடு சாப்பிட நேரமாயிடும் .. "என பசிப்பது போல் பாவமாக முகத்தை வைத்து கூற,

வினய்தோளில் தட்டியதில் தன்னிலை அடைந்த ஆரி; "சோத்து மூட்டை" எந்த வேலைக்கு கூட்டிட்டு வந்தா ...என்ன வேலைக்கு அலையிற பாரு.. என சாப்பிடுவது போல் ஆரி சைகை காட்டினான்.

ஆரியின் நக்கலில் நண்பன் பழைய நிலைக்கு வந்ததில் மனம் இலேசாக ..
" எனக்கு சோறு தான் முக்கியம், மத்தது எல்லாம் அப்புறம் தான், "வினய் கூறி முடிக்க, வீட்டின் தலைவாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு இருவரும் அங்கே பார்த்தார்கள்.
கதவைத் திறந்து 60-வயது மதிக்கதக்க ஒருவர் வெளியே வந்து,
"உள்ளே வாங்கப்பா., உங்களுக்குத்தான் காத்துட்டு இருக்கேன்" எனக் கூறிக் கொண்டே, உள்ளே அழைத்துச் சென்று, ஹாலில் அமர வைத்து விட்டு, இருவருக்கும் பருக நீரைக் கொடுத்தார்..

அவர்களுக்கு அருகே ஒற்றைச் சோபாவில் அமர்ந்தவர், ... ஆரியின் முகம் பார்த்து "உங்க பேரு தம்பி" என வினவினார். அவர் சொன்ன தோணியிலே மற்ற விவரத்தையும்,, சேர்த்திக்கூறு என்பது போல் இருந்தது ஆரிக்கு ..

மற்ற நேரம் எனில் அவரை சுத்தலில் விட்டிருப்பான் ஏனோ ! அவர் முகம் தங்களைப் பற்றி அறியும் ஆவலில் பளிச்சிட.. தங்களைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

"என் பேரு ஆருரன் வர்மன் .. இவன் என் நண்பன் வினய், சேலம் R.V. புட் ப்ரோடெக்ட் கம்பெனி பற்றி கேள்வி பட்டு இருக்கீங்களா?... என ஆரி கேட்கவும், பெரியவர்; ஆம்' என தலை அசைத்தார்.

அவரின் பதிலில் திருப்தியுற்றவன் ...
"அந்த கம்பெனியோட முக்கியமான பார்ட்னர் இவரு; நீங்க விற்க போறாத சொன்ன 300 - ஏக்கர் விவசாய நிலத்தை ... இவரு தான் வாங்க போறாரு; போன வாரம் கூட இவர் கம்பெனி மேனேஜர் மதி வந்து இடத்தைப் பார்த்துட்டு ; எங்க பாஸ் நெக்ஸ்ட் வீக் வந்து நிலத்தை பார்த்துட்டு , ஓ.கே' ... சொல்லிட்டாருனா.. மத்த
ப்ரோசிஜர்ஸ் பத்தி பேசிக்கலாம் என்று சொல்லிட்டு போனாரே!
அதுக்குத் தான் இப்போ வந்து இருக்கிறார் .. கூடவே அவர் ப்ரண்டு நானும் சும்மா, வந்தேன்' ... என ஆரி நீண்ட விளக்கமளித்தான்..

"அய்யோ'இது உலகமகா நடிப்புடா சாமியய்ய் .... நான் பாஸ், மதி என் மேனேஜர் இவன் என் நண்பன் மட்டும் தான் ... இப்போ புரியாதுடா.. என்னைய , இந்த கிழம் கூட நிலம் பார்க்க கோர்த்து உட்டுட்டு, நீ ஜாலியா ஊரு சுத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு... என்னவொரு மாஸ்டர் ப்ளான்.. லூசு மாதிரி உன் பின்னாடி வந்திருக்கிறேனே!" என மனத்தினுள் நினைத்தவன்;
ஓரக்கண்ணால் ஆரியை முறைத்தான் வினய் ..

" அட என் சிக்ஸ்ட்டி வாட்ஸ் பல்ே ப... இது எரிய ச்சி புரிய இவ்வளவு நேரமா?.. என வினய்யைப் பார்த்து கேலிச் சிரிப்பை சிந்தினான் ஆரி...

மதியமே வினய் தம்பிக்கிட்ட கேட்டேன் ஆரா... என் பிரண்டு வரட்டும் பேசிக்கலாம்னு சொல்லுச்சு., போன வாரம் வந்தவரு, விவசாயம் பண்ணத் தான் நிலம் வேணும்னு சொன்னாரு, அது தான் நிலம் தருவதாக வரச் சொன்னேன். நிசமா?.. விவசாயம்தானே பண்ணுவீங்க; ஏன்னா இந்த நிலம் என் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே ' விவசாயம்'பண்ணின பூமி; என் உடம்புக்கு முடியாததால . எடுத்துக் கட்டி செய்ய ஆளு இல்லதம்பி, "கட்டிக் கொடுத்த பொண்ணும்..வித்த விவசாய நிலமும்". . நல்லபடியா ?.. வெள்ளாமை வெளஞ்ஜ தான் தம்பி என்னைய போல விவசாயிக்கு மதிப்பு; பெருமை.. எல்லாம்.. பெத்த தாயிப்போல உசுர காப்பாத்துற மண்ணு இது; பணத்துக்காக
விற்கலப்பா... எதையோ சொல்லத் தயங்கி அவரின் முகுகு குலுங்க ., சடாரென எழுந்த ஆரி, அவரின் கரம் பற்றி,
"இந்த நிலம் விவசாயத்துக்கு மட்டும் தான்; இவன் தலைமுறைக்கு அடுத்த தலைமுறையும் தொடருங்க, .நீங்க கவலைப் படாதிங்க." என்று அவரின் கைகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆறுதல் கொடுத்தான்.

ஆரியின் கை அழுத்ததில், ஏதோ ஒரு உணர்வு தாக்க; சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டவர், எழுந்து நின்று,
" நேரம் ஆச்சு வாங்க சாப்பிடலாம் எனக் கூறி டைனிங் ஹாலிற்கு அழைத்துச் சென்றார்.

அப்பாடி இப்பையாவது சோறு போடனும்னு தோணுச்சே இவருக்கு .. என சலித்துக் கொண்டே அவரின் பின்னே நடந்தான் வினய் ... பசியில் இருவரின் ஆழ்ந்த பேச்சை கவனிக்கத் தவறிவிட்டான் ...

வட்ட வடிவ அந்தக் காலத்து தேக்கில், மூவர் மட்டுமே அமரும் டைனிங்' மேசையில், ஆரியும், வினய்யும் எதிரெதிரே அமர்ந்தனர்.

மேசையின் மீது உணவு பதார்த்தங்கள் மூடி வைக்கப்பட்டிருக்க, இருவருக்கும் நடுவே நின்றவர்,
"அம்மாடி, பாப்பா சீக்கிரம் வந்து பரிமாறு, ஒரமரைகாரவங்க
காத்துகிடங்காங்க...'' உள் அறையைப் பார்த்து குரல் எழுப்பினார் ...

உள்ளே இருந்து வந்தவள் வினய்யின் அருகே சென்று, முதலில் அவனுக்கு தட்டை வைத்து ..சப்பாத்தியை இட்டு, குருமாவை ஊற்றினாள்.

சற்று முன் பெரியவர் பேசிய பேச்சிலே ஆரி உழன்றுக் கொண்டிருக்க, உள் உணர்வு யாரோ! முறைப்பதை உணர்த்த, சடாரென்று நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள், நிலைக்குத்தி நின்றன.

அப்போது பெரியவர் ... இவிக என் பொண்ணு, என் குல ஒற்றை விளக்கு... பேரு "ஆதிரா தேவி" ...
இது நம்ம வூடு தான் .. கூச்சம் 'நாச்சம் பார்க்காமல்'சாப்பிடுங்க, நான் ஹாலில் உட்கார்ந்து, கணக்குப் பார்க்கிற ே சாலியப் பார்க்கிறேன்.. என்றவர் ஹாலுக்கு சென்று விட்டார் ..

"உனக்கு எவ்வளவு தைரியம்டா, மதியம் எனக் கிட்ட அப்படி நடத்துக்கிட்டு, கொஞ்சம் கூட மனம் கூசாம.ரொம்ப ஜாலியா கூட்டாளி கூட கூத்தடிக்கிறிங்களோ! அதுவும் என் வீட்டுக்கே வந்து இருடா' .. உன் மண்டையை உடைச்சது பத்தாது .. வேற என்ன செய்யலாம் என யோசித்தவள்.
ஆரியன் அருகே சென்று பரிமாறுவது போல் நின்றவள், அவனுக்குத் தட்டை வைத்து, சப்பாத்தியை பிய்த்து போட ஆரம்பித்தாள். ஹாலில் தங்களுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த தந்தையை பார்த்தவள், பின் "உணவே உயிர் " என உண்டுக் கொண்டிருந்த வினய்யையும் பார்த்தவள், ஆரியின் வலது பாதத்தில், தனது இடது கால் கட்டை விரல் நகத்தால் இரத்தம் வருமாறு கீறினாள்..

அவ்வலியை ெ பாறுத்துக் கொண்ட ஆரி, இந்த வலி தனக்கு தேவைதான் என்பது போல் உண்ண ஆரம்பித்தான் ...
ஒருவாறு உண்டு முடித்தவர்கள், பெரிய வரிடம் சொல்லிவிட்டு கிளம்ப... ஆரியின் முதுகு ஆதிராவின் வெப்ப விழி வீச்சில் எரிந்தது ...
இதைப் பார்த்த விதியோ!.. நாளைக்கு இந்த கதையை அப்படியே மாற்றினால் எப்படியிருக்கும்? என எண்ணி நகைக்க ஆரம்பித்தது.
_ வதம் தொடரும் ...
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலியின் வதம்-10
பாகம் பதிந்துள்ளேன்.... போன
ud-க்குComment மற்றும் லைக்ஸ் போட்ட உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்... சித்ரா பாலாஜி, கவிதா சுப்ரமணி, Ums, சுகன்யா - கருத்து தெரிவித்த உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள் பல... படித்து விட்டு Comment போடுங்கள் சகோ. இல்லையெனில் திட்டவாவது செய்யுங்கள் சகோ...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma episode.... ஆரி அம்மா semma la அந்த வயசுல avanuku solli வளர்த்து இருக்காங்க.... அவனும் ava kita மன்னிப்பு kekanum nu நினைச்சி kitu இருக்கான்.... Ava வீடு la தான் தங்கி இருகாங்க la.... Ethuku அந்த இடத்தை vikkaraaru...
 
Top