All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அவிராவின் 'நீலியின் வதம்' - கதை திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே !
இத்தளத்தில் கதை எழுத திரி அமைத்துக் கொடுத்த: அன்புக்கும், மரியாதைக்கும் உரிய ஸ்ரீ.கலா மேடம் அவர் களுக்கு, எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகிலுள்ள எனது சகோதரிகள் அனைவருக்கும் எனது காலை வணக்கம் மற்றும் இந்த கதையை படித்து அதில் நிறை, குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டி உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கதையின் தலைப்பு : "நீலியின் வதம்"
நாயகன் : ஆரூரன் வர்மன்
நாயகிகள் : ஆதிரா தேவி, தாரகா

கதைக்களம்; அமானுஷியமும், காதலும்; பழி வெறியும் கலந்த கதை..
அத்தியாத்தில் உங்களை சந்திக்கிறேன். நன்றி.
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல் அத்தியாயம் :
1 . கொங்கு நாடு

தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான இந்நகரம் ; தமிழகத்தின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது.
எஃகு நகரம், மாங்கனி நகரம், என்னும் அடை பெயர்களால் அழைக்கப்பட்ட, இந்த சேலம் மாநகரம் 1 792-ல் உருவாக்கப்பட்டது.
"சேரலம் " என்பது சேலம் ஆனது என்பதற்கு ஏத்தாப்பூர் செப்பேட்டில் உள்ள, " சாலிய சேர மண்டலம் " என்ற தொடரை ஆதாரமாகக் கூறுவர். "சைலம் " என்ற சொல்லிற்கு "மலைகளால் "சூ நாம மலை, ஊத்துமலை ; கஞ்சமலை., சாமியார்குள் று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள்.
இங்கு முக்கிய ஆன்மீக தளங்களான.... சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், சுகனேஸ்வரர் ஆலயம், .கந்தாஸ்ஸிரமம்; பேளூர், தான்தோன்றீஸ்வரர் சிவன் ஆலயம் - மேலும் பல ஆன்மீக தாங்களால் சிறப்புற்று விளங்கும் நகரமாகும்.

மேலும், பல சொல்லில் அடங்காசிறப்புகள் வாய்ந்த நட்சத்திர ஓட்டலின், 12-வது தளத்தில் அமைந் துள்ள ;வி.ஐ.பி சூட் அறை எண் : 678. ல்: நம் நாயகனுக்கும், அவனது நண்பர்கள் குழாமுக்கும் ஏதோ வாக்குவாதம் போல; என்ன என்று பார்ப்போம்., வாருங்கள்.

கோபமூர்த்தியாக " ருத்ர தாண்டவம்" ஆடுவதற்கு தயாராக இருப்பவன் போல், தன் முழு உயரத்திற்கும், நிமிர்ந்து நின்று, கண்களில் நெருப்புப் பொறி பறக்க எதிரே இருந்த வனைப் பார்த்தான்.......

நண்பர்களுக்கு "ஆரி", தொழிலில் எதிரிகளுக்கு "R.V. ரணன்"; தாய்க்கு "ஆரு " என
அழைக்கப்படும், நம் நாயகன். "ஆரூரன் வர்மன்"

தன் பார்வை வீச்சை தாங்க முடியாமல், மேனி நடுங்க நின்றிருந்தவனை, மேலும் ., பார்க்காமல், தன் கண்களை மூடி, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த: முயன்று தோற்ற வன்;
கையிலிருந்த "காக்டெயில் "கண்ணாடி குவளையை : எதிரேயிருந்த சுவரில் விட்டெறிய,
" சலீர் " என்ற சப்தத்துடன் சுவரில் மோதி, நான் குபுறமும் ;கண்ணாடித் துகள்கள் சிதறின.

இந்த அறையில் இருக்குற அனைத்து பொருட்களையுமே
உடைக்கு ரத்துக்குள்ள.,
"அடேய் !.... மதி ........ உள்ள போன சரக்கால அவன்கிட்ட உளறிட்டேன்; பயபுள்ள விட்டா, கண்ணாலையே நெருப்பை .... என் மேல கக்குவான் போல; ப்ளிஸ், என்னைய காப்பாத்துடா ..
என கண்களாலேயே தன்னருகே இருந்த இன்னொரு நண்பன் மதியிடம் இரஞ்சினான்.

மூடித் திறந்து நண்பனுக்கு ஆறுதல் அளித்து விட்டு, "ஆரி" யிடம் எழுந்து சென்றான் , "மதி "

இடது கரத்தைமடித்து இடுப்பில் வைத்து, வலக்கரத்தால் தலைகோதியபடி தன் பார்வையை; ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வானத்தை வெறித்து, தன் கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு இருந்தவனிடம் : சென்றவன் ...

"ஆரி" இப்படி உட்காரு என அவன் கை பிடித்து சோபாவில் அமர வைத்து விட்டு, அவன் எதிரே, "டீபாயில் " அமர்ந்து,
'வினய்: ஏதோ போதையில உளறிட்டான்; எங்க சின்ன வயசிலில இருந்து உன்கூட ., இருக்கிறோம்., "உனக்கு, எதைப்பற்றின பயமும், உன்னால முடியாத துனு எதுவுமே ; இந்த உலகத்தில் இல்ல....
" படிக்கிறது, குதிரையேற்றம்; மலையேற்றம்; நீச்சல், செஸ், பைக் ரேஸ் ... இப்படி எல்லாத்திலும் முதலாக வந்தவன்டா !. .. நீ ...
உன்னோட இருபதாவது வயதில் நேஷனல் லெவல் - பைக் ரேஸ் ஸல....." கிட்டத்தட்ட "ஆறு "சுற்றுல
, கடுமையான போராடி ., பல அடிபட்டு கடைசியில,,
"நேஷ்னல் பைக் ரேஸ் வின்னர் 2015 " அவார்டு வின்னர் - Lா நீ
மேலும், ஒரு ஆக்சிடென்ல செயல்பட முடியாம இருந்த உங்க அப்பாவையும் ., பார்த்துக்கிட்டு, சரிய இருந்த உங்க தொழில் சாம்ராஜியத்தை : பல பேரோடு போராடி .,.... உன் 21-வது வயசிலேயே, தூக்கி நிறுத்தின வன் டா .. நீ...

உன்ன போயி ; பயந்தவன்; எடுத்தக் காரியத்தை முடிக்க முடியாத வனு., சொல்ல முடியுமடா'., "லிவ் இட்மேன்' இங்க ஜாலியா இருக்க நாம நாலு பேரும் ., வந்தோம்;
பாதியில அவனால மனக் கசப்பு வந்துடுச்சி., இன்னொரு நாள் நாம மீட் ,,,,பண்ணலாம்; நீ ரிலாஸ்
ஆகு மேன்'. ... நாங்க கிளம்புறோம், என மற்ற இருவருக்கும்;"கிளம்புமாறு" கண்ணைக் காட்ட....

வினய்யோ! மானசீகமாக., தலையில் அடித்துக் கொண்டு,
"அவனை டைவர்ட் பண்ணு னடா னு ....கண்ணைக் காமிச்சா.. பஞ்ச பரதேசி ..... அவள் பராக்கிரமத்தைப் பாடி அவனை உசுப்பேத்தி விட்டியேடா !... அவனோட அடுத்த மூவ் எப்படினு தெரியலையே!.,,, என கொலை வெறியோடு ;மதியைப் பார்த்தான் வினய் ...

நொடியினில் தன் மனதினுள் திட்டத்தை வகுத்தவன்; இவ்வளவு நேரம் இருந்த கோபமூகம் பொய்யோ .. எனும் வகையில் இதழ்களில் சிரிப்பைப் படரவிட்ட..... "ஆரி"

" உட்காருங்கடா... இப்படி பாதியிலேயே போனா எப்படி... கம்லெட்ஸ் என் ஜாய் த டிரிங்" என காக்டெயில் குவளையை கையில் ஏந்தி மேல் நோக்கி காட்டினான்.


நீ ஒரு பரணியை யும் பாட வேண்Lாம்... நானே" அவனை
டைவர்ட் பண்ணிக்கிறேன் என மதியைப் பார்த்த 'வினய் ;
"ஆரி" நான் சியர்ஸ் பண்ண மாட்டேன்; உன் மீது கோபமா' ... இருக்கேன். என்னைய சிரிக்க வை., உன் கூட 'டிரிங் பண்ணுறேன்., என முகத்தை பாவமாக வைத்துக் கூறினான்.

"ஸாரி மச்சி!.. என்னோட சிமிக்கு பிறகு, நீங்க மூணு பேரும் தான் என்னோட உயிர், உலகம் எல்லாமே !... அதனால தான் நம்ம நட்புக்குள்ள எந்த ஒளிவு மறைவும், இருக்க கூடாதுனு தான்என்னோட.. என்னோட எல்லா விஷ்யங்களையும், உங்க கூட ஷேர் பண்ணிக்கிறேன்..
அப்படி இருந்தும், அந்த "மேகம் மூட்டி மலை " அமானுஷி யம், நிறைந்தது ; அங்க போறவங்க யாரும் உயிரோடு திரும்ப முடியாது... "எந்த கொம்பனாலும் அங்கு போயிட்டு உயிரோடு " வர முடியாதுனு ..
நீ விளையாட்டு போக்குவ, "என் தன்மானத்தை "தூண்டுற மாதிரி பேசவும் ... என் கோபத்தை என்னால கண்ட்ரோல் பண்ண முடியல., அகெய்ன்சாரிடா ,
எனக் கூறி "வினய்யின் தோளைத் தட்டினான்.

இப்போ என்ன உன்னைய சிரிக்க வைக்கணும் ., சிரிக்க வைச்சுட்டா போச்சு என இதழ் மடித்து.... நமட்டுச் சிரிப்பை உதிர்த்த வன்..

இவ்வளவு நேரமாக இருக்கும் இடம் தெரியாமல் ... தான் உண்டு தன்னுடைய "பீர்' பாட் டில் உண்டு என இருந்த நான் காமவனின்; முன் சென்று நின்ற ஆரி''...

" கார்த்திக் " ..... உன்ன ஒரு அழகு பொண்ணு ஊரு புராவும் தேடிகிட்டு இருந்ததே'.....
."டேய்!..... கார்த்திக் நாயே! எங்கடா இருக்க நீ ! எங்கிருந்தாலும் வந்து ருடா".... இனிமே!.. கிளாமரா "டிக் - டாக்"
விடியோ போட மாட்மேனு சொல்லி அழுவுச் சே..... அந்த பொண்ணுக்கிட்ட உன்னோட கார்த்திக் இங்க தான் .... இருக்கான் வந்து கூட்டிட்டுப் போனு... சொல்லட்டா ... எனக் கண்ணடித்துக் கேட்டான்.


"ஏன் ?...எதுக்கு?.. எதனால்? .... அப்படி .... சொல்லு ?... சொல்லு... என" ரஜினி "ஸ்டைலில் பதறியவன்; ஒரு பாட்டில் சாராயத்துக்கு ஆசைப்பட்டு, ஆப்பு' ல உட்கார்ந்திட்டேயே '..... இவனுங்க சகவாசம் உனக்குத் தேவையா?" என ஆள்க்காட்டி விரலை அவனை நோக்கி நீட்டியபடி .. கேட்டு கார்த்திக் புலம்ப....
அங்கே!கொல்லென சிரிப்பலை பரவியது.

"சூழ்நிலையை மாற்றியதாக ஒருவன் நினைக்க ., தனக்கேத்தவாறு சூழ்நிலையை உருவாக்க ., திட்டம் தீட்டினான்.. சிவனின் " ஆருரன் ".... இதற்கெல்லாம் மூலக் காரணமாக " விதி " போன்று இருந்த ஒருவனோ " அழிப்பவனையே அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறான்... இவர்கள் எல்லோரையுமே "ஒரு புள்ளியில் சிக்க வைத்து" வதம்" செய்ய ஒருத்தி மலையில் "காலனாக " காத்திருக்கிறாள் ...

....... வதம் தொடரும்.....
















"
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம் பகுதி : 2

சூரிய கிரகணங்கள். தன் காதல் பெண்ணான நில மகளிடமிருந்து தன்னை பிரித்துச் செல்லும் அந்திமாலைப் பொழுதில் ....
அந்த பிரம்மாண்ட மாளிகை ., செயற்கை ஒளி - வெளிச்சத்தால்; ஜொலித்துக் கொண்டிருந்தது. .அந்த மாளிகையின் பின்புறம் அமைந்திருந்த "டால் பீள்" வடிவம் கொண்ட நீச்சல் குளத்திற்கு அருகே இருந்த புல்வெளிப் பரப்பில் .. நண்பர்கள் நால்வரும் ஆளுக்கொரு திசையில் அமர்ந்து : நேற்றைய நிகழ்வுகளை .. பற்றி.. தீவிரமாக "யோசித்துக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் யோசித்து முடிப்பதற்குள் அவர்களை பற்றி அறிமுகப்படுத்திவிடுகிறேன்.

" ஆரூரன் வர்மன்" -
இமயவர்மன் - சிவகாமி - தம்பதியரின் : அருந்தவப்புதல்வன் .. " R.V. குருப் ஸின் - நிர்வாக இயக்குநர் மற்றும் R.V. ெதாழில் சாம்ராஜ்ஜியத்தின் மூடி சூடா மன்னன் .. பயம் என்பதையே அறியாத .. இருபத்தேழு வயது இளங்காளை ..எதற்கும் அஞ்சாமல் : எடுத்தச் செயலை முடிக்கும் பிடிவாதக் குணம் கொண்டவன்..தந்தை ஆரம்பித்த தொழில்களை., தனது இருபதாவது வயதில் வழி நடத்த ஆரம்பித்து, தனது நிர்வாகஆளுமையால்; இரட்டிப்பாகிய திறமையாளன். பல கன்னியர்கள் இவன் கடைக்கண் பார்வைக்காக தவமிருக்க.. அவர்களையெல்லாம் குணவியல்புகள் இல்லையென நிராகரித்தவன்... சமீபமாக பெண் ஒருத்தியின் கடைக்கண் பார்வையில் விழுந்துள்ளான்...
மொத்ததில் ... "நேர்மைக்கு தோள் கொடுப்பவனாகவும், அநீதிக்கு தலை எடுப்பவனாகவும்". .. அந்த ஈசனின் "ஆரூத்ர அவதாரம் "இவன் ....



மதியரசன் - சங்கர் - பவானியின் - ஒற்றை வாரிசு.."R.V.... புட் ப்ரோடெக்ட் கம்பெனியின் பங்குதாரன் மற்றும் ஆரியின் வலக்கை" இடக்கை: பி.ஏ...எல்லாம் இவன்தான்.
தனது 15_ வயதில் தந்தையை கார் விபத்தில் இழந்து :கடனில் பரிதவித்த ப்போது ... உனக்கு நானிருக்கிறேன் என தோள் கொடுத்து தன்னுLனே வைத்துக் கொண்டான் - 15 - வயதே ஆன ஆரி..
தான் படித்த பள்ளி -கல்லூரியிலேயே அவனையும் சேர்த்து படிக்க வைத்தவன்... படிப்பை முடித்த பிறகு.. தன் கம்பெனியின் சில பங்குகளை அவனுக்கு கொடுத்து ... தனக்கு பி.ஏ.வாக வைத்துக் கொண்டான்.


வினய் - கோபால் - மலர் - தம்பதியரின் மூத்த வாரிசு.. இரண்டாவது வாரிசைப் பிறகு பார்க்கலாம்.. R.V. டெய்ரியில் - இவனும், இவன் தந்தையும் பங்குதாரர்கள்.
எதற்காகவும் கவலைபடாதவன்...வந்தா .... வரவு... போனா... செலவு. எனும் I "டேக் இட் இஸி ". வகையைச் சார்ந்த வன்.. அவன் கவலைப்படும் ஒரே விஷ்சயம்.. ஒல்லியான உடல்வா கினால்: இன்று வரை எந்த பெண்ணையுமே" கரெக்ட்" பண்ண முடியாதது தான்.. சுருங்க மாக கூறினால் " R.M. V -
கேங்கின் காமெடி பீஸ். (R.M. V - னா இவர்கள் நால்வரின் பெயர்களிலுள்ள ஆங்கில எழுத்துக்கள் )

கார்த்திக் வேலன் - வெற்றிமாறன் -கவிதா - தம்பதியரின் மூத்த - மகன் ..
வெற்றி மாறனும், கார்த்திக்கும், R.V.குரு ப்ஸின் ஆடிட்டர்ஸ் மற்றும் பினான்சியல் அட்வை சர்ஸ்.
இவனின் 12-வது வயதில், கவிதா - தன் கணவன் மீது கொண்ட பெண் சந்தேகத்தினால், .அவரின் 2-வது 6-வயது மகனுடன் தீக்குளித்து இறந்து விட்டார்கள். இதை நேரில் பார்த்து மனநிலை பாதித்த கார்த்திக்கை தன் தாய். சிவகாமி உதவியுடன் ., மிகப் பெரிய மனநல மருத்துவரிடம் காண்பித்து : குணப்படுத்தினான்... ஆரி.... அதன் பின் அவன் அதிகம் தனிமையை .. விரும்புவதால் அவன் போக்கிலே விட்டு .. சி.ஏ.. முடிக்க வைத்து .. தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண் டான்,ஆரூரன்.


இமயவர்மன், சங்கர், கோபால், வெற்றி மாறன் - ஆகியோரின் நடு தர வயது நட்பு.. சுயநலத்தோடும், ஆரி, மதி, வினய், கார்த்திக் - நால்வரின் பால்ய வயது நட்பு, பாசத்தோடும்; உயிர்ப்போடும் சென்றுக் கொண்டிருக்கிறது..

"காக்டெயிலா!. இல்ல ஒட்க வா.. இப்போ எதைக் குடிக்கலாம், எனத் தீவிர ஆராய்ச்சியிலிருந்த, வினய்யின் ே தாளைத் தட்டிய ஆரி...


"அந்த மலையைப் பத்தி நேத்து, என்கிட்ட சொன்ன டீ டெல்ஸை இன்னொரு முறை தெளிவா சொல்லு" .. எனக் கூறியவன்; வினய் யின் கையிலிருந்த; பாட்டிலை பிடுக்கினான்.

" ஐயோ! வட போச்சே!.. ரியாக்சன் கொடுத்தவன்..
என்னது !திரும்பவும் முதலில் இருந்தா | .. என அலறியவன்..
" இதை விட மாட்டியா Lா .. எனப் பாவமாகப் பார்த்தான் "ஆரியை ".


"இதுக்கு நீ சரிபட்டு வர மாட்ட.டேய்! மதி .. நீ கலெக்ட் பண்ணினா டீ டெல்ஸை சொல்லுடா..

" திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலை தான் .....
இந்த "மேகம் மூட்டிய மலை "...
மேகங்கள் இந்த மலையை கடந்து செல்லும் போது .... இந்த மலையை இடிப்பது போல் உரசிச் செல்வதால்: இதற்கு இந்த பெயராம்.இந்த மலை அடிவாரத்தில் சுமார் 500- குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள் -
இனிதான் கட்டுக்கதை ஆரம்பம் ஆகுது...


இந்த மலையின் உச்சியில் வீழ்கின்ற அருவியை ஒட்டி கற்பாறையால் ஆன.'நீலிக் குகை" _ ஒரு இடம் இருக்கு ... இந்த குகையில .. இரவு நேரத்தில் ஒரு பெண் அழும் சத்தம் கேட்பதாகவும்,அமாவாசை, பெளணர் மி நாட்களில், மிக பயங்கரமாக உறுமும் சத்தமும் : கேட்பதாகவும் ... ஊர் மக்களால் சொல்லப்படுகின்ற தகவல்கள்

மேலும் , அந்த குகையின் அருகே இருக்கிற;ராட்ஷ ச புளியமரத்தை தவிர ... 30-ஆண்டுகளாக அந்த மலையில் .. புல் .. பூண்டு கூட முளைக்கிறது இல்லையாம்... இதை பற்றி ஆராய்ச்சி செய்ய போனவங்களும்; மர்மமான முறையில் இறந்து போயிடறாங்க.. இல்லைனா மன நிலை பாதிக்கப் படுறாங்க ...

இந்த மாதிரி.. அசம்பாவிதங்களைத் தவிர்க்க .,
ஊர்க்காரங்க இரவு நேரத்தில் அந்த மலைக்கு யாரும் போகா வண்ணம் "காவல்" போட்டு இருக்காங்க... தட்ஸ் ஆல் .. என தான் சேகரித்த தகவல்களை மதி உரைத்தான்.

சூரியனுக்கே ... ராக்கெட் விடுற இந்த சயின்ஸ் டெக்னாலஜி காலத்துல.... இப்படியொரு மூட நம்பிக்கையான கிராமம் ...
... இது யெல்லாம் உண்மையா! இருந்தா... இதுக்கெல்லாம் மூலக் காரணம் என்று ஏதாவது மேலும் கட்டுக்கதை , அதாவது ... நீலிக் குகை மீன்ஸ் ... அந்த பேய் '... 'நீலி பற்றி என.. நக்கலாக கேட்டான் "ஆரி' ...


இவ்வளவு நேரம் .... வாயைப் பிளந்து கதைக் கேட்டு கொண்டிருந்த .. கார்த்திக்கின் உள்மனம் .... இந்தப் பேச்சை தடுக்க ச் சொல்லி படபடக்க...

வெடுக்கென எழுந்தவன்..
"ப்ரண்டு களா டா நீங்க ., "பார்ட்டி-னு சொல்லி கூப்பிட்டு ; பேய் கதை பேசி.. என்னைய பாடி ஆக்க பிளான் பண்றிங்களா டா ..
இந்த செத்து, செத்து விளையாடுறவன் கூட சேருவேன். உங்க அக்கா மக்கா.. உங்க கூட .... என மூவரையும் விரலை நோக்கி காட்டியவன்,
ஆரியை - நோக்கி உன க்கு பேய்கதையில .... கிளைக் கதை கேட்குதா' ..... ஏன் இவ்வளவு ஆர்வம் உனக்கு அந்த மலையைப் பற்றி...
எரியுற சோறு ல; தண்ணிய ஊத்தினா அடங்கும்... என கோவத்தில் உளற...

வினய்', டேய்! அது எரி யுற நெருப்பை எடுத்தா.. கொதிக்கிறது அடங்கும் ....என்பது தான் சரி.

நீ மூடிட்டு இரு., சும்மா இருந்தவன: உசுப்பேத்தி விட்டுட்டு ; ெ நான்ன..
நாட்டியமா .. பேசுற..
சீரியல்ல " பொண்டாட்டி ., பொண்டாட்டி - வார்த்தைக்கு 100 .-தடவ சொல்ற அந்த ஆதி - யை கூட மன்னிப்பேன் உன்ன மன்னிக்க மாட்டேன் டா ..

ஆரி - புறம் திரும்பியவன்..
"ஏய் ஒரியோ பிஸ்கெட், இரு டி ... ராஜ மாதா சிவகாமி - கிட்ட இந்த விஷ்யத்தை போட்டுக் கொடுக்கிறேன்.. என்றவன் தன் கையிலிருந்த போனை உயிர்பிக்க ..

காரியத்தையே கெடுத்தான்
இன்னிக்கு என்று இவனுக்கு இவ்வளவு ஆவேசமோ | ... எனப் பதறிய ஆரி ...அவனருகே ஓடிச் சென்று ... அவனின் போனை நீரில் தட்டி விட்டான்.

"சளக் "கென போன் நீரில் மூழ்க
அதைப் பார்த்து, முன்னவனிடம் ..
மொபைல் இல்லனா .. நேரில் போயி அம்மாகிட்ட உங்க பிளானை சொல்லுறேன் .. எனக் கூறிக் கொண்டே கார் தரிப்பிடத்தை நோக்கிச் சென்றான்.
மதி, அம்மாவுக்கு இந்த விஷ்சயம் தெரிந்தால் ரொம்ப பயப்படுவாங்க., என்னை எங்கேயும் போகவும் விட மாட்டாங்க... ப்ளிஸ் அவனை மடக்கி, அம்மா விடம் -பேசவிட்டாமல் பண்ணிடு ..சரியா! மீதியை கால் பண்ணி சொல்லுறேன்..


"உஃப்" என காற்றை வெளியிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் ... அடுத்ததாக தலை மீது கை வைத்து அமர்ந்திருந்த ., " வினய்யைப் பார்த்தான்.

தலையை நிமிர்த்தி இரஞ்சலாக .... பார்த்தவன்.. ஆரிவேண்டாம் விஷ்ச பரிட்ச்சை, நானும், மதியும்; நெட்ல , எதேச்சையாகப் பார்த்ததை ., உன்கிட்ட சொல்ல போயி.. அதை நீ இவ்வளவு சிரி ஸாக எடுத்துக் கிட்டு உயிரை பணயம் வைக்கிற.. உனக்கு வேணா இதை பற்றி நம்பிக்கையில்லாமல் இருக்கலாம் .... நம்ம மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷ்சயங்கள் எவ்வளவோ | ... இருக்கு ... அதையெல்லாம் ... ஆராய நாம .... அதித சக்தி படைத்தவங்க கிடையாது .... ப்ளிஸ்., ஆரி... இதை இத்தோடு விடு...

"நான் அந்த மலைக்கு போயே'. ஆகணும்... அந்த மலையில விலை மதிப்பில்லாத ஏதோ | ... ஒரு பொருள் இருக்கலாம் ... இல்லனா விலை மதிப்பற்ற ., கிரானைட் கற்கள் ெகாண்ட மனல யாவும் இருக்கலாம் ... யாரோ! ஒரு பெரிய புள்ளியின் " கட்டுக்கதை" நாடகமாகவும் இருக்கலாம் ... நான் என்ன இரகசியம் அப்படி கிறதை.,, கண்டுபிடிச்சே தீருவேன்" ..
அப்படியே அங்க ., அந்த பேயால ஏதாவது ஆயிடுமோனு பயப்படுறீயா... இல்ல... வேற உள்நோக்கமா.... என சந்தேகமாக கேட்டான்.


அதில் அடிபட்ட பார்வை பார்த்த வினய்
" என் நண்பன் உயிர் தான் ....என் உயிரை விட எனக்கு முக்கியம் ஃ மத்ததெல்லாம் .. எனக்கு இதுக்கு சமானம் ... என தலை முடியைத் தொட்டுக் காட்டியவன். இதனால என் உயிரே போனாலும் சரி என மனதினுள் நினைத்தவன்; வெளியே.,,,,...
நான் என்ன பண்ணணும் சொல்லு.... என உறுதியாகக் கேட்டான்.

மிகப் பெரிய பிஸ்னஸ்மேன். எங்க அடிச்சா .. எப்படி வழி கிடைக்கும் ... என அறிந்தத வனாயிற்றே, எப்படி பேசினால் தன் வழிக்கு வருவான்னெ தெரியாதவனா!.......
ஒரு வேளை மனதில் நினைத்தை வெளியே கூறியிருந்தால் ...யோசித்திருப்பானோ'. விதி
வ லியது அன்றோ | ...

இன்னும் இரண்டு .. நாட்கள் கழித்து .. நாம ரெண்டு பேரும் .. அந்த மலைக்கு போக; எல்லா ஏற்பாடும் பண்ணிடு ... இந்த விஷ்சயம் ... நீ., நான்,மதி - மூன்று ேபருக்கு மட்டுந்தான் தெரியனும் .... வேற யாருக்கும் தெரிய கூடாது.. காட் இட் மச்சி..

"சரி... என தலை ஆட்டினான்.. வினய் ...மனமோ ! ஏதோ ஆபத்தில் சிக்குவது போல் ... பட படத்தது .

நான் அந்த நீலிக் குகை - யின் கட்டுக்கதை புதிரை விடுவிக்கிறேன்.. என மனதில் சூளுரைத்தான் "ஆரூரன் "

.புதிரை விடுவிக்க செல்பவன்.
பு திரை விடுவிப்பானா?...
இல்லை இவனும் ஒரு புதிராவானா?...

_ வதம் தொடரும்.
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம் -3 பகுதி - அ

R.V.கார்டென் ஹைடெக் கார்டென்சிட்டி "... சேலம் நகரை தாண்டிய வளர்ந்துவரும் ஏரியாவில் தனித்தனி பங்களா - டைப் வீடுகள், ஒரு புறமும், அதன் மற்றொரு புறம் மிகப் பெரிய வணிக வளாகமும், கட்டி முடிக்கப்பட்டு .... வண்ணங்கள் பூசும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததை மேற்பார்வையிட்டு விட்டு, சரி படுத்த வேண்டியவற்றை
மதியிடம் கூறி அவனை அலுவலகத்திற்கு
அனுப்பி வைத்துவிட்டு .. வி.ஐ.பி ஒருவருக்காக
காத்திருப்பதற்காக ...வணிக வளாகத்திற்கு அருகே இருந்த, திறந்த வெளி பூங்காவினுள் .. நுழைந்தான்.


திறந்த வெளியில்; புற்தரை பசுமை ேபார்வையாக போர்த்தப்பட்டு, அதில், சிறுவர்கள் விளையாடும்; ஊஞ்சல் , சரக்கு மரம் ; சிறிய ராட்டினம், போன்ற விளையாட்டுச் சாதனங்கள் அங்காங்கே ; அமைக்கப்பட்டு ... அதன் ஊடே ...... அணில், புறா, சிங்கம் போன்ற விலங்குகளை., மார்பில் கற்களில் உயிரோட்டமாக செதுக்கி வைத்திருந்தார்கள்..

மினி டிஸ்னி வோல்டு .. போல் உருவாக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தின் வடிவம்... தன் எதிரே உயிரோட்டமான காட்சியாக; தன் கண்களுக்கு விருந்தளிக்க... அதை ஆழ்ந்து ரசித்தவாறு அதை சுற்றிப் பார்த்தவன்.. ஓரிடத்தில் இருகால்களையும் தூக்கியவாறு இருந்த மலைச் சிங்கத்தின், மீது சாய்ந்து, ஒரு காலை மடக்கி, அதன் வயிற்றின் மீது, வைத்து.. மற்றொரு காலை தரையில் ஊன்றி, இரு கைகளையும் கட்டிக் கொண்டு .. கண்களை மூடி ... தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தவாறு .....அந்த வி.ஐ.பி யை எதிர்பார்த்துக் காத்திருந்தான்..


சற்று நேரத்தில் தன் முன், நிழலாட..விழிகளைத் திறந்தவன்
தான் முனுமுனுத்துக் கொண்டிருந்த பாடலின் தொடர்ச்சியாக ...


" ஏனடி நீ என்ன இப்படி மாத்துனா
காதல் சட்டுனு கண்ணுல காட்டுன ..
வேற எதும் தோணல; அடியே
ஆனந்தம் தாங்கல...

என எதிரிலிருந்த பேரழகி யின் கண்களைப் பார்த்து பாட ....


"நித்தமும் கோயில் சென்று வரும் பக்தர்கள் செய்வது யாகம் !..

அத்தனை பேரும் ஏங்க வரம்
என்னிடம் வந்தது யோகம் ...
மொத்தமும் கையில் வந்தது போல
மேகத்து மேல் நான் வைக்கிறேன் கால "...
குயிலோசைக் குரலில் எதிர்பாட்டு பாடி;தன் மனதினை
தன் மன்னவனுக்கு எடுத்துரைத்தாள் ... பேரழகி பெண்ணவள் ... அச்சமயத்தில்

கண்கள் நான்கும் கலந்து ... ஒன்றை ஒன்று கவ்வி., சிலந்தி வலையெனப்பின்னப்பட்டுக் கொண்டிருக்க..
இருவரும் : தழுவும் தூரத்தில் உடல்கள் நெருங்கி நின்று .. காதலில் மூழ்க ஆரம்பித்த வேளையில்.,,

"டேய் வென்று... நல்லா பாருடா அவ கண்ணை : தூங்கி எந்திரிச்சி வந்தவ கண்ணுல ...
கண்ணுபுளைதான் வழியுது டா.
"காதல்"., எங்கடா... வழியுது?...
... இப்படி புழுகுகிறத்துக்கு ... உங்களுக்கு எல்லாம் மனச்சாட்சியே இல்லையாடா?...
எனப் பதறியவன் சாட்சஷாத் நம் ஒல்லிப் பிச்சான்.. வினய்தான்.


"தரு டார்லிங்".... உன்னை
பார்க்கனும்னு தானே! கூப்பிட்டேன்' ...எதுக்கு அதையும் சேர்த்திகூட்டிட்டு வந்த .... இங்க வந்து பொறாைமையில் .புஸ்புஸ்
வென மூச்சு விடுது.. என ஆரி சுட்டிக்காட்டியதிசையைப் பார்த்தவள்.

கல கல வென சிரிக்க ஆரம்பித்தாள்.. தாரகா ... அவளுடன் இணைந்து ஆரியும் சிரிக்க ஆரம்பித்தான்...

இருவரும் ..தன்னைப் பார்த்து எதற்காக சிரிக்கிறார்கள் என குழம்பியவன்; அவர்களின் பார்வை தன் பின் செல்வதை தொடர்ந்து திரும்பி பார்க்க...
"எருமை மாடு" .. புல் மேய்வது போன்று கல் உருவம் ஒன்றுநின்றிருந்தது...

தான் எருமை அருகே நிற்பதால், தன்னையும் எருமை என்று கூறி சிரிக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டவன்...வெகுண்டு எழுந்து ...

ரோசம் கெட்ட எருமையே'... உன்ன பார்த்து சிரிக்குறாங்க ..அங்கிட்டு போயி மேய்ந்து தொலையே ன்... ஏன்? என் பக்கத்துல நின்னு"
என்மானத்தை வாங்குற?... எனக் கூறியவன்: ஒங்கி ஒரு எத்து விட... கல் உருவத்தின் மீது கால்பட்டு .. சுரிர்ரென ... வலிக்க ... காலை உதறியவன் ..
சரி விடு: நீ... போலானா என்ன? ;நான் போறேன் ...என விலகிச் சென்று வேறொரு இடத்தில் அமர்ந்தான்.


"வினய்யின் சேட்டையைப் பார்த்து சிரித்தவள்.. தங்கள் காதலினால் கடுப்பில்
உள்ளவனை ... மேலும்; கடுப்பேத்த..... ஆரியின் புறம் திரும்பி கண்ணடித்தவள்... ஆரியிடம்,

"சொல்லுங்க வர்மா - ஜி என்னோட சின்ன வயசில , இருந்து உங்களைப் பார்க்கிறேன்.. கடந்த 3-வருஷமா '
தான் எனக்கு உங்க மேல , காதல் ..அப் போயெல்லாம் :
ஒத்துக்காம, சமீபமாக என் காதலுக்கு.. ஒ.கே.. சொல்லியிருக்கீங்க ... எப்படி இந்த திடிர் மாற்றத்திற்கு.... என்ன காரணம் என்றுதெரிஞ்சுக்கலாமா!... உண்மை பாதியும், கேலி மீதியுமாக ... புருவம் உயர்த்தி கேள்வியாக .. ஆரியின் கண்களைப் பார்த்துக் கேட்டாள்..


"உன் காதலை நான் ஏற்றுக் கொண்டதற்கு காரணம் எல்லாம்.. அந்த பக்தி தான் " .. என.... உண்மை கலந்து ; கேலியாக : வினய்யை கைகாட்டினான்...

போனில் விளையாடிக் கொண்டிருந்தவன்.. அதிர்ச்சியாக. ..." இது என்னடா புதுக்கதையாவில்ல. இருக்கு..
நான் பாட்டுக்கு செவினேனு தான் டா இருக்கேன்"
என்று ஆரியைப் பாவமாகப் பார்த்தான்..







.


.
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி - 3 b

ஆமாம் ., தரு அந்த பக்கியை எனக்கு ரொம்ப பிடிக்கும் ;அதுக்காக ... அந்த பக்கியை கல்யாணம் பண்ணிக்க
முடியாதில்லையா?... அதனால தான் அவன் தங்கச்சி உனக்கு ஒ.கே!

சொல்லிட்டேன். என ந முட்டுச் சிரிப்புடன் ஆரி கூற..

இந்த பதிலைக் கேட்டு தாரகாவிற்கு தாறுமாறாக கோபம் வர..
தமயனை கொல்லும் வெறியோடு முறைத்தாள் ..

"அடேய்! உன் பாசத்தை இப்படியாடா! காட்டுவடா .... நீ பாசத்துல ெபாங்குன பொங்குக்கு.. வீட்டுல என்னை இல்ல அடுப்பில வைச்சு தீய்ப்பா... இவ .. ஏன்?.. இந்த கொலைவெறி எனப் பாவமாக ஆரியைப் பார்த்தான்.

எங்க இரண்டு பேருக்கும் நடுவுல நந்தி மாதிரி உட்கார்ந் திருக்க இல்ல; அதுக்குத் தான் உன்னை இங்கிருந்து கிளப்ப., இந்த ஆப்பு அடிக்கிற பாலிஸி...

புரிஞ்சுதுடா!.... " கொலம்பியா விவசாயி ஒருத்தன் பூனை.. என்று ஏமாந்து மலைச் சிங்கத்தை வளர்ந்த கதையா!...
நானும் பூனை என்று நினைத்து, இந்த மலைச் சிங்கத்தை .. என சுட்டு விரலை ஆரியை நோக்கி நீட்டி ... வளர்ந்து ஏமாந்துட்டேன்...
போலி கண்ணீரை சுட்டி விட்டு .. இனிமேலும், இங்க இருந்தா! நான் மனுசனே! கிடையாதுடா... என எழுந்தவன்.. அவனை அடிக்க முடியாமல், அவன் சாய்ந்திருந்த சிங்கத்தின் தலையில் நங்கு ;நங்கென்று கொட்டி விட்டு .. தமக்கையின் புறம் திரும்பி.....


வாசலில் இருக்குற யானை சிலை. "லத்தி"போடு தானு பார்த்துட்டு இருக்கேன்... கடலை போட்டுட்டு சீக்கிரமா வந்துடுமா தெய்வமே! நான் போறேன் என வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.


புல் தரையில் அமர்ந்தவன், பெண்ணவளை தன்னருகே அமருமாறு
கண் ஜாடை காட்ட .. அவனருகே அமர்ந்தவளிடம் .... "என்னடா... உன் மனசை கஷ்டப்படுத்த விஷ்யம் என்ன?.. வார்த்தைகள் கனிவில்
குழைந்து ஒலித்தது.


"பயமாயிருக்கு ஆரு... நமக்குள்ள இந்த இடைவெளி என இருவருக்குமான தூரத்தை சுட்டிக்காட்டியவள்.. மேலும், தொடர்ந்து,
" என் கண்ணில் காதலை நான் சொல்ல மலேயே, புரிஞ்சுகிட்டு .. நீங்க ஒதுங்கி போன போது, என் உயிரே என்னை விட்டு போற மாதிரி, வலித்தது ஆரி.. அதன் பிறகு நீங்களாவே.... வந்து எனக்கு உயிர் கொடுத்தீங்க!..
என்ன புரியா வில்லையா?... ஆரி..

"புரியவில்லை" எனத் தலை ஆட்டினான்.

எனக்கு காதல் வரம் அளித்து.. உயிரற்ற எனக்கு உயிர் கொடுத்து,
உங்கள் காதலால், என்னை மீட்டெடுத்தீர்கள்! ஆரி


நீங்க போனில் .,உன் காதலை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று குறுஞ்செய்தி அனுப்பிய அந்த கொடி....
நான் தேவலோகத்திற்கே சென்று, வந்து விட்டேன் ... என அந்நாளைய நினைவில்...... கண்களில் அளவில்லா மகிழ்ச்சியைக் காட்டினாள்..

இவ்வளவு நேரம் அவன் கண்களைப் பார்த்துக் கூறிக் கொண்டே வந்தவள்.. இமைகளைத் தாழ்த்தி .. '

"உங்கள் ஹக் பண்ணனும் .,உங்க கையைப் பிடிச்சுட்டே வாக் போகணும். போன் ல் .. ரொம்ப நேரம் பேசணும்.. நாலு .. ஐந்து - வார்த்தைகளையெல்லாம் டிரை பண்ணனும்.. உங்கள் இறுதிக்கட்டி பிடிச்சுக் கிட்டு பைக் - ரைட் வேகமாக போகணும்.. இப்படி பல கனவுகள் இருக்கு ஆரி!...

ஆனா... இப்போ வரை என்னோட ஒரு கனவுகூட பலிக்கலை. ஆரி..
இதுக்கே இப்படினா !.. உங்களோட வசதியில் , நாங்ககால்வாசி கூட இல்ல!.. அப்படியிருக்கும் போது ... என்னை எப்படி.. உங்க வீட்ல மருமகளாக ஏத்துப்பாங்க?.. "நம்ம கல்யாணம் நடக்குமா?.. எதுவுமே புரியலை?.... ஆரி ....வலிகள் நிறைந்து விழுந்தன தருவின் வார்த்தைகள்.


தன் மீது கொண்ட நேசத்தினால், இயல்பாய் தோன்றும் பருவ வயதுக்குரிய தன்னிடமுள்ள அதீத வசதியும் ., தன்னுடைய ஒதுக்கமும் ., பெண்ணவளுக்கு அச்சத்தை தருவதை புரிந்துக் கொண்டவன். அவளுக்கு நம்பிக்கையூட்டும் பொருட்டு தங்கள் சூழ்நிலையை விவரிக்க ஆரம்பித்தான்.

" என்னோட சின்ன வயசி ல இருந்தே உன் அப்பாவை பார்க்கிறேன். 'தரு .. என்ன காரணமோ ?... உன் அப்பாவிற்கு என்னை அறவே பிடிக்காது தரு' எதிரிபோல தான் எப்போதுமே பார்ப்பார் என்னை.
வளர்ந்த பிறகு ; அவரின் வெறுப்பு அதிகமானதே தவிர குறையவில்லை.தரு ..

"என்னையே ஏற்றுக் கொள்ளாதவர் எங்கே நம் காதலை ஏற்றுக் கொள்ளப் போகிறார் உன் தந்தை ... மேலும், அவரை மீறி என்னால் உன்னை மணம் முடிக்க முடியும் தரு... எப்படி என்றால் நம் பெற்றோரின் வெறுப்பில், என் உயிர் தோழனம யை இழந்த தவிப்பில், இவை எல்லாம் நடக்க வேண்டாம் என்று தான்..
உன் காதலை அறிந்து உன்னை விட்டு விலகினேன்.



இந்த இடத்தில் ஒரு உண்மையை ஆரூரன் தருவிடம் மறைந்தான்.. அந்த உண்மையை காலம் தருவிற்கு காட்டிக் கொடுக்குமா?

சற்று நேரம் அமைதியாக இருந்தவன்;
உன் காதல் என்னை உன்னிடம் வர வைத்து விட்டது தரு...
நம் இருவருக்குமான இந்த இடைவெளி, எப்போதும் உன்னை வினய்யுடன் வரச் சொல்வது, போனில் ரொம்ப நேரம் அளாவ ளாமல் இருப்பது எல்லாம், என் அன்னை நம் காதலை. உன் பெற்றோரிடமும், என் தந்தையிடமும் சொல்லி, திருமணம் நடக்கும் வரை, 2 ன் தந்தையாலும், என் தந்தையாலும் எத்தகைய இடையூறும் வரக்கூடாது என்பதற்காகத் தான்..

இப்பொழுது உன் மனக் கவலைகள் தீர்ந்ததா?...
எப்பாடுபட்டாவது தன்னவன், தன்னை மணப்பான் என்று மன்னவனின் கூற்றில் யானைப் பலம் பெற்றவளின் ..
மனதை ஆழ்ந்த கவலை கருமேகங்கள் விலக., முகமது பெளணர் மி நிலவாக மகிழ்ச்சியில் ஜொலித்தது.

அப்போது, ஏதோ "பேச வேண்டும் என தன்னவன் அழைத்தது நினைவிற்கு வர, "எதற்காக என்னை வரச் சொன்னீர்கள்" என்று அழைத்த காரணத்தைக் கேட்டாள்.

"முதலில், அது என்ன ;நாலு, ஐந்து - வார்த்தைகள் என்று அர்த்தம் சொல், பிறகு வரச் சொன்ன காரணத்தை கூறுகிறேன்.

நாணத்துடன் நீங்களே அர்த்ததைக் கண்டுபிடியுங்கள்,.என எழுந்த வள்.. இருட்டி விட்டது.. வீட்டிற்கு செல்லலாம் ஆரி.. பாவம் வினய் ரொம்ப நேரமாகவே யானையை மேய்ந்துக் கொண்டிருக்கிறான்.


வாயி லில் யானை அருகே நின்றிருந்தவனை பார்த்து.தருவின் கூற்றில் இதழ் மடித்துச் சிரித்தான் ஆரி ... ஒரு மாதம் நானும், வினய்யும் முக்கியமான வேலையாக., வெளியூர் செல்கிறோம்; உன் கூட அடிக்கடி பேச முடியாது; நீ என்னைய காணோம் என்று தவிக் கூடாது என்று தகவல் சொல்ல கூப்பிட்டேன்.

வேலை முடிந்து வந்ததும், RV .கார்டென் ஹைடெக் சிட்டியின் _
இனாகிரேஷன் பங்ஷனோட , .நம்முடைய எங்கேஜ்மெண்டையும் சேர்த்து கோலகலமாகக் கொண்டாடி லாம்?ஒ.கே.வா ?...

வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க .. சரியென தலை ஆட்டினாள்..


" காதல் கடலில் விழுந்த காரிகை ., விதியென்னும் சுனாமியால் மூழ்குவாளோ!.. இல்லை.,, நீந்தி காதலில் கரை சேருவாளோ ?.....
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம்- 4

"சிமிம்மா ... இந்த நெய் தோசைக்கு - சிக்கன் மிளகு கறி,,செம காம்பினேஷன் "அண்ட் மெத்-ெ மத்னு சாப்ட்டா இருக்குற இட்லி க்கு .செட்டிநாட்டுமட்டன் கிரேவி..... தன் ப்ளேட்டில் இருந்த இட்லியை, விண்டு மட்டன் குழம்பில் தோய்த்து சாப்பிட்டவன்..

"நாக்கை தட்டி சப்புக் கொட்டியவன்.... இந்த டேஸ்ட்., எந்த ஸ்டார் ஹோட்டலிலுமே!.... கிடைக்காது .. அவ்வளவு டேஸ்ட் ".,,, என கண்களை சுருங்கி கூறிய விதமே ., சொன்னது தன் மகனுக்கு தன்னிடம் ஏதோ காரியம் (செயல் ) ஆக வேண்டுமென்று ., புரிந்துக் கொண்டவர்..

"ஒ ஹோ..... ஸ்டார் ஹோட்டல் புட்... லில் இல்லாத டேஸ்ட் அப்படி என்ன?... நான் சமைத்த சாப்பாட்டில் அவ்வளோாா... இருக்கு என்ன? ... என மேலும் தன் மகனை ஆழம் பார்த்தார் ... சிவகாமி ...


மை பிக் ஏஞ்சல்; ஸ்டார் ஹோட்டலில், இதை விட டேஸ்ட்டியான புட் கிடைக்கும்;... .வு ம்....சற்று இழுத்துராகம் மிட்டவன்....

தன் முன்னே கடைப் பரப்பி இருந்தவற்றை சுட்டிக் காட்டி, இந்த மட்டன், சிக்கன் எல்லாம் எங்க தரமானதாக ., ப்ரஷ்ஷாக இருக்குனு பார்த்தும் பார்த்து வாங்கி, .. எனக்கு காரம் சேராதுனு, காரம் கம்மியா போட்டு, நான் விரும்பி சாப்பிடும் பக்குவத்தில் .... அது கூட உன்னோட, அக்கறை,பாசம்; என்னோட நலன் - இப்படி எல்லாவற்றையும் கலந்து, ; "என் விருப்பத்தை கூறுவதற்கு முன்னே, அதைப் புரிந்துக் கொண்டு .. நீங்கள் செய்து தரும் இந்த உணவு ,, இறப்பே தராத "தேவலோக அமிர்தம்"... போல் என் உடலுக்கு உயிர் அளிக்கிறது .. இப்போது புரிகிறதா! இந்த உணவின் அருமை ? ... என நீண்ட விளக்கமளித்தவன், தாயின் கண்களைப் பார்த்து ... மனதினுள் ...


வினாயகருக்கு ; பெற்றோர் தான் உலகம் ஆனால் இந்த " R.V.க்கு
தாயாகிய தாங்கள் மட்டுமே உலகம்..
. பாசமாக அழைக்கும் போது சிமிம்மா... மற்ற நேரங்களில் "மாம்".,,,
அலுவலகத் தொடர்பாக விவாதிக்கும் போது ..." சிவகாமி அம்மை " ...
ஏதாவது அன்னையிடம் காரியம் ஆக வேண்டும் என்றால், "பிக் ஏஞ்சல்"..


உணவிடுதலில் அன்னபூரணியாகவும், வழிகாட்டுதலில் ஆசனாகவும், பகைவர்களிடமிருந்து என்னை காக்கும் கேடயமாகவும் ., தவறிழைத்தால் என்னை தண்டிக்கும் அரசனாகவும் , என்னை வீரனாகவும் .,விவேகியாகவும் ., கருணையுள்ளவனாகவும், ஒழுக்க சீலனாக ...தன்னை ஒரு நன்மனிதனாக; இசதுக்கிய தெய்வ சிற்பி, "சிவகாமி" தான் எனக்கு உலகம் ..

அவ்வாறு ., என்னை உருவாக்க அவர் பட்டப்பாடு; கஷ்டங்கள் கொஞ்சம் ;நஞ்சமில்லை .. சுன்தந்தை பின் பண வெறிரிழல் ; என் மீது படிய தவாறு, நல்லது செய்வதற்குத்தான் பணமும்; வீரமும் அன்றி; பணத்தாலும், வீரத்தாலும் எளியோரை அழிப்பதன்று.. என்று சிறு வயதிலேயே புகட்டியதால் தான் .. அச்சிறுவயதில் நண்பர்களை ஆதாரிக்கும் நற்பண்புகளை பெற்று, அவர்களின் துன்பங்களில் துணையாக இருக்க முடிந்தது -


மேலும், அதிலிருந்து தோன்றிய எண்ணமே .,"சிவகாமி அம்மையார் டிரெஸ்ட்"... ஐ ஆரம்பித்து .. வறியோருக்கு கல்வி, உணவு, மருத்துவம் - இலவசமாக அளித்துக் கொண்டு வருகிறேன்... இது உன் வளர்ப்புக்கு நான் செய்யும் நன்றி கடன் .. அம்மா!

இது எல்லாவற்றையும் விட, என் வாழ்வின் முக்கிய முடிவுகளை ; நீங்கள் தான் அம்மா.. எடுக்க வேண்டும் என்பது என் மனதின் பிராமனம் ... அப்படியிருக்க நான் எவ்வாறு ; என் காதலை உங்களிடம் கூறி, மணம் முடித்து வையுங்கள்... என்று கேட்க முடியும்.?....

என் காதலை தங்களிடம் தெரிவிக்க காலம் தாமதம் ஏற்பட் டா ல் ?..
அதற்குள் நீங்கள் வேறு பெண்ணை மணக்க சொல்லி வீடுவீர்களோ என்ற பயம் வேறு.. அதனால் தான்.,,, ஆட்சம் கமாகக் உணவை., வைத்து கூறுகிறேன் .. மதியூகி தாங்கள் புரிந்துக் கொண்டீர்களா?
எனத் தாயின் கண்களைப் பார்த்து மெளன பாஷசையில் கேட்டான்.

தாய் அறியாத சூல் உண்டா?..
மகனின்; நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும் போதே ! அவரின் தனிப்பட்ட ஒற்றன் மூலம் .. அடிக்கடி வினய்.,அவன் தங்கையோடு... ஆரியை சந்திப்பதிலேயே, சந்தேகம் கொண்டவர், இன்று மகனின் பேச்சில், தெளிவாக உணர்ந்துக் கொண்டார் ... மகனின் காதலை..

மேலும், அனுபவசாலியாக , மக்கனின் குணத்தை அறிந்தவர்.,,,"ஒன்றை " தெளிவுப்படுத்திக் கொள்ள,
"ஆரு " என அழைக்க....

அவரின் பின் னிருந்து,

"தாரளமாக செய்து தருவா' பிச்சைப் போட்டவன், தட்டில் இருந்த பழைய .. சோற்றை எடுத்து, என் வீட்டு இளவரசனக்கு ..அமிர்தம் என்று தருவாள்..
கைக் காரி!..... என் மகன் திருமணத்தில் உன் விருப்பம் செல்லாது, என தாரத்தை முறைத்து விட்டு ; தனையன் அருகே அமர்ந்தார்.இமயவர்மன்


பார்ப்பதற்கு அச்சு அசலாக., தோற்றத்திலும் குணத்திலும், நடிகர் - நாஸரை ஒத்து இருந்தார்.
பணம், பணம் மட்டுமே இவருக்கு குறிக்கோள்; லட்சியம்; காதல் - எல்லாம் ...... மனைவி, மகன்.,,மற்றது எல்லாருமே பணத்திற்கு பின் தான் ..

சிறு வயதிலேயே தன்னிடமி ருந்து விலக ஆரம்பித்த மகனை' கண்டுக் கொள்ள தவர்.. அவனின் வாலிப வயதில், தனக்கும், அவனுக்கு மான ... குறைக்க முடியாத இடைவெளியை " தன் மனைவி உருவாக்கியுள்ளார் என்பதை காலந்தாழ்த்து, உணர்ந்தவர்
மேலும் ., தன் மகன் தனக்கு எதிராக செயல்படாதவாறு,
தன் மனைவியிடம் ... "ஒன்றை " கூறி பயம் கொள்ள வைத்து, மனைவி , மூலம் மகனை .... கண்ணிற்கு தெரியாத நூல் இழைப்போல் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார் .....

மனைவி எங்கே! அந்த பிச்சைகார குடும்ப சம்பந்ததிற்கு .... ஒற்றுக் கொள்வாறோ" என்று அதை தடுக்க ., "அவர் நடுக்கிடும் பயப் பார்வையை " சிவகாமியின் மீது வீச.,


கணவரின் பார்வை.... "நீ இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு ., ெதரிவிக்க வில்லையென்றால், நான் சொன்னதை நிறைவேற்றுவேன்!.. என்ற கட்டளையைப் புரிந்து ; உடல் நடுகத்துடன்...அவரை எதிர்க்க துணிவில்லாமல் .. தலை குனிந்தார். சிவகாமி அம்மையார் ..

அச்சமயத்தில் "தன் தாயையும், .பிச்சை சோறு ; என்று
தாரிகாவையும் .... ஏளனமாக பழித்துப் பேசியதில், எழுந்த
சினத்தை கட்டுப்படுத்த கண்களை மூடித் திறக்க ., தந்தையின் , "மெளன மிரட்டலை "
கவனிக்கத் தவறிவிட்டான்..

மேலும், தான் இங்கிருந்தால், கோபத்தில் தந்தையிடம் பாய்ந்து விட வாய்ப்பு இருப்பதால், அதை தவிர்க்க ..


அம்மா, நாளைக்கு இயர்லிமார்னிங்.,நானும், வினய்யும்; பால் பண்ணைக்கு புது லேண்ட் வாங்குற விஷ்யமாக,, ஆந்திராவிற்குபோறோம்.....
திரும்பி வருவதற்கு ..
ஒன்மன்த்க்கு, மேல் ஆகும் ., அது வரை இங்க எல்லாத்தையும் .,மதியும் ., கார்த்திக்கும்; உங்களையும்; கம் பெனிசையும்
பார்த்து வாங்க, ..... நாங்க போறது ....ரூரல் (Rural) ஏரியா என்பதால் உங்க கூட பேச முடியுமா னு தெரியல, நான் பேசவில்லையென்று கவலை படாதீங்கம்மா... என்று " தாயிடம்
கூறிவிட்டு ; படியேறி தன்றைக்குச் சென்று கட்டில் விழ, மேற்கொண்டு எந்த யோசனையையும் நித்தி ராதேவி, அனுமதிக்கவில்லை..

பாவம் இவனுக்கு இனி இப்படி பட்ட ஆழ்ந்த தூக்கமில்லை என்று எண்ணி ; அரவணைத்துக் கொண்டாளோ!.....


வதம் தொடரும் ...
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம்- 5 a

கனவு

நாம் பார்க்கும் பொருட்கள், நபர்கள், காட்சிகளே!
ஆழ் மனதில் பதிந்து கனவுகளாக வருகின்றன என்பதே!
" கனவுப் பற்றிய "அறிவியலார்களின் வாதங்கள் ...
ஆனால் இந்து மத ஆன்மீகத்தில், கனவுகள் என்பன
நமக்கு எதிர்க்காலத்தில் நமக்கு நிகழக்கூடிய நன்மை; தீமைகளை, நம்மை வழிநடத்தும் தெய்வீக சக்திகள், (அவை கடவுளாகவோ இறந்த தூயமனம் கொண்ட நம் முன்னோர் ஆத்மாக்களாகவோ' இருக்கலாம்) ...'., நம்மை தீயவைகளிலிருந்து "நம்மை காப்பதற்காகவே, கனவுகளாக" தெரிவிக்கிறார்கள் என்பவையே நம்முடைய இந்து மத ஆன்மீகம் ஆகும்.
இவற்றை நம்புவோருக்கு ஆன்மீகம், எதிர்த்து வாதிடுவோருக்கு அறிவியல்" ..

கனவுப் பற்றிய உண்மைச் சம்பவம் :

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த, "ஆபிரகாம் லிங்கன் "; தான் இறப்பதற்கு 3 - நாட்களுக்கு முன்னர் அதிகாலை வேளையில், வெள்ளை மாளிகையில் ஒரு குறிப்பிட்ட அறையில், குறிப்பிட்ட நபர்களால், தான் சூடப்பட்டு, .இறந்து கிடப்பதாக கனவு கண்டு ;அதை விடிந்ததும் ., தன் மனைவியிடம் கூறிவிட்டு வழக்கம் போல் அலுவலக வேலைக்குச் சென்று விட்டார் .. அதன் பின் சரியாக 3-ம் நாள், அவர் கனவு கண்டாவாறே .அதே அறையில், .அவர் சொன்னவாறே, அவர் குறிப்பிட்ட நபர்கள் சூழ இறந்து கிடந்தார் என்பதை அவரின் மனைவி பின்னாளில் கூறியுள்ளார்.
மீண்டும் இந்து மத ஆன்மீகத்திற்கு வருவோம்.'; இந்து மதத்தில் 7 -வகையான கனவுகள் சொல்லப்படுகின்றன.
எதிர்காலத்தில் நடக்கப் போகும் விஷ்யங்கள் கனவில்
தெரிதல் - "பாவிக சொர்ப்பனம்" - என்று கூறப்படுகிறது ...மேற்கண்ட உண்மை சம்பவந்தான் இதற்கு சான்று..
நம் கதையில் வரும் இருவருக்கு,ஒரே நேரத்தில், ஒரே மாதிரி "கொடிய கனவு" - ஒன்று" பாவிக சொர்ப்பனமாக வருகிறது ... அதற்கு பலியாகப் போகிறவர்கள் யாரென! தெய்வமன்றி..யாரறிவாரோ' ?.,,

கருப்புப் போர்வையை போர்த்திக் கொண்டு, பூமித்தாய் உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு தாண்டிய வேளை... கானகமும் நடுங்கும்படி நரிகள் ஊளையிட, பெருத்த மரங்களும் வேரோடு சாயும் வண்ணம் வீசிய பலத்த காற்றில், ஆணோ | பெண்ணோ | ெ வனத் தெரியாத கரிய உருவத்தின், தலையிலிருந்து ; உடல் முழுவதும் இரத்தம்வழிந்தோட, கையில் எதையோ ஏந்திக் கொண்டு, தன்முன்னே ஒடுப்பவரை, தூரத்திக் கொண்டு ஓடிய கரிய உருவம், நொடியில் தன்முன்னே ஓடிய உருவத்தைப் பிடித்து, கையிலிருந்த வற்றால், அதன் தலையில் அடிக்க ., மண்டை பிளந்து இரத்தம் வழிய கீழே விழ்ந்த உருவத்தின் மீது காலை வைத்து ..|அஹா ... அ ஹா ... வென அலறியப்படியே திரும்பிய அகோர உருவம் சற்றே முகத்தை திருப்ப ....


வீல் ... என அலறியவாறே இக் காட்சியை கனவாகக் கண்டு பதறி எழுந்தார் ஆரியின் தாய் சிவகாமி ...

"ஈஸ்வரா !....ஈஸ்வரா !.... என வாய் தன்னிச்சையாக முணுமுணுக்க, உடல் நடுங்க., மூளை மரத்து; கனவின் தாக்கத்தில் கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தார் ... சிறிது நேரத்தில் கனவின் தாக்கம் குறைய, ப தறி கட்டிலிருந்து இறங்கியவர் ரூம்மை வெளிச்சமாக்கினார்.. உடல் நடுக்கத்தை குறைக்க தண்ணீரைப் பருகி விட்டு நேரத்தை பார்க்க,.. இரவு 2-மணி எனக் காண்பித்தது கடிகாரம் ..2 - மணிக்கு காணும் கனவு நான்கு மாதங்களுக்குள் பலிக்கும் என்பது .. ஐதிகம்.. அதை எண்ணி பதற்றம் கொண்டவர் விரைந்து பூஜை அறைக்குச் சென்றார்.

அங்கே லிங்கரூபமாக இருந்த சிவனின்; முன் மண்டியிட்டு .. அமர்ந்து.
"அப்பா.. ஈஸ்வரா ... இந்த கொடிய கனவினால் யார்க்கும்; எந்தவித தீங்கும் ஏற்படாமல் நீயே! காப்பா யப்பா' ... இந்த தீய சொர்ப்பனத்தால் ஏதேனும் தீங்கு நேருமாயின், அதை எனக்கு கொடு ஈசனே!.... மேலும் நான் கண்ட கொடிய கனவு கனவாகவே போகட்டும் அப்பா.. ஈசனே ! என கும்பிட்டுவிழ்ந்து வணங்கியவர் .. திருநீற்றை எடுத்துக் கொண்டு மகன் அறைக்குச் சென்றார்...





விடி விளக்கின் வெளிச்சத்தில், கட்டிலைப் பார்க்க.. அங்கே ,பஞ்சணையில், இடது கையை தலைக்குக் கொடுத்து, வலது கையை மார்பின் வைத்து, நெடுஞ்சாண் கிடையாக படுத்திருந்தவனின் உருவம் அரசனின் கம்பீரத்தை ஒத்திருந்தது.. அந் நிலையிலும் மகனின் கம்பீரத்தை ரசித்தவர்; தான் இருக்கும் சூழ்நிலையை மனம் இடித்துரைக்க... மகனின் அருகே ., மெதுவாக சென்றுஅவனின்உறக்கம் கலையாதவாறு,
தூங்குபவருக்கு திருநீறு பூச கூடாது என்பதால், மகனின் உச்சத் தலையில் சிறிது வீபூதியைப் போட் டுவிட்டு, வலதுகையின் மேற்புறமும், இடது பாதத்தின் மேற்புறமும் சிறிது பூசினார்.
மனமோ ! விடிந்ததும் முதல் வேளையாக பார்க்க வேண்டிய நபரை, யோசிக்க ஆரம்பித்தது.


அதே கொடிய கனவை, அதே நேரத்தில் கண்ட பாவையவள்..
"வீல் ... என அலறினாள்..


இந்த அலறல் சத்ததைக் கேட்டு: தூக்கத்திலிருந்து எழுந்தவர், பதறியடித்து க் கொண்டு ஓட்டமாக மக்களின் அறைக்கு விரைந்துச் சென்றார்.

பழக்கப்பட்ட அறையா தலால், இருட்டில் தடுமாறமல்,சுவிட்ச்சை தட்டி அறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர், கட்டிலைப் பார்க்க .,

கட்டிலின் நடுவே தலை விரி ே காலமாக, வியர்வை ஆறாக உடல் முழுவதும் வழிந்தோட, பெருமூச்சு வாங்கியபடி, உக்கிரமாக நிலைகுத்திய விழிகளோடு, தனக்கு எதிரேயிருந்த சுவற்றை ,முறைத்தவாறு, அசைவற்று அமர்ந்திருந்த மகளைப் பார்த்தவர்....

இது வழமையான செயல் என்பது போல், நிதானமாக பூஜை அறைக்கு சென்று, "அபிஷேக நீரை " எடுத்து வந்து மகளின் மீது தெளித்தார் .. தந்தையாகப் பட்டவர்..

இவ்வளவு நேரம் மயானகாளியாக அமர்ந்திருந்தவள்; அபிஷேகநீர் பட்டதும்.. கண்கள் சொருக அப்படியே மயங்கி கட்டிலில் சரிந்தாள். பெண்ணவள்..
இதைக் கண்டு இதயம் கனக்க அவ்விடம் விட்டு நீங்கினர்... அப்பாவப்பட்ட தந்தை .
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம்- 5 b
ஸ்ரீ.கந்தாஸ்ரமம்


சேலத்திலிருந்து 5 கி.மி தொலைவில், உடையாப்பட்டி" அருகே சிறிய குன்றின் மீது " சந்தானந்த பிரமேந்திர சரஸ்வதி "அவர்களால் நிர்மானிக்கப்பட்ட முருகன் கோவில் ஆகும். ஜருகுமலை பின் வடக்குப் பகுதி முடிவில் கன்னிமார் ஓடையின் கரையில் அமைந்துள்ளது இக்கோவில் .

முருகனும் .,அம்மாள் - பார்வதிதேவியும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும், (இதயம்) முருகன் (அறிவாகவும் ) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சன்னதிகளை வணங்குவதால், உயிருக்கும்; அறிவுக்கும் பலம் உண்டாகிறது.ஜோதிட சாஸ்திரப்படி இங்கிருக்கும் முருகனைச் சுற்றி வந்தால் நவகிரக தோஷம் விலகும் , என்பதாலே முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலின் காற்று பட்டாவது, தன் நண்பர்களுக்கு ஆன்மபலம்: கிடைக்கட்டும் என்று எண்ணியே , இந்த அதிகாலை வேளையில், வற்புறுத்தி , நண்பர்களை வர வைத்திருந்தான் கார்த்திக் .

"சாமி கும்பிடவில்லை என்றாலும் பரவாயில்லை., ப்ளிஸ் கோவிலுக்குள்ளாவது வாங்கடா, உங்களுக்காக தான் "ஞான கந்தனுக்கு "அதிகாலை முதல் வேளைபூஜை நடத்த ஏற்பாடு பண்ணியிருக்கேன்' .. ஆரி, வினய்யிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் கார்த்திக் ..

"உனக்காகத் தான் கார்த்திக், கோவிலுக்கே வராதவன், கோவிலுக்கு வந்து வெளியே நிற்கிறேன்.. ப்ளிஸ்மேன், மேலும் கோவிலின் உள்ளே வரச் சொல்லி கம்பெல் பண்ணாதே "., பிடித்த மின்மையாக ஒலித்தது ஆரியின் குரல்.

இந்த பதிலை எதிர்பார்த்தே இருந்த கார்த்திக், வினய்யிLம்.,
"நீயாவது, உள்ளே வந்து, பூஜையில் கலந்துக் கோடா." ... என்று எதிர்பார்போடு வினய்யிடம்கேட்டான் .

"அவன் சொந்தகாரங்களைப் பார்த்து, நலன் விசாரிச் சுட்டு ., சொந்த களுக்கு துணையாக கொஞ்ச நேரம் இருக்கட்டும் கார்த்திக் ".. எ ன கண்களால் தங்கள்அருகே சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த வானரங்களை கார்த்தியிடம் காட்டி ;, சிரித்தான் ஆரி..

காரின் பக்கவாட்டில் சாய்ந்து நின்று, அதன் மேல்புறம், மொபலை வைத்து ; விளையாடிக் கொண்டிருந்த வினய், இந்த கண் ஜாடையை கவனிக்காமல், .ஆரிதான், தன் சொந்தம் : அதனால் அவன் கூட இருக்க சொல்கிறான் என்று நினைத்து, நான் உள்ளே வரலை கார்த்திக், இங்கேயே'என் சொந்தக்கு துணையாக இருக்கிறேன்.. எனக் கூறினான்.

இதைக் கேட்டதும் , நண்பர்கள் இருவரும், சத்தமாக சிரித்தார்கள்.

சிரிப்புச் சத்ததில் , விளையாட்டிக் கொண்டிருந்த வனின் ..கவனம் சிதற, நன்றாக திரும்பிப் பார்க்க ., இருவரின் கண்களும், இவனையும், அங்கங்கே சுற்றித் திரிந்த வானரங்களையும் மாறி, மாறிப் பார்க்க... தனக்கு குரங்குகள் சொந்தம் என்று கூறி சிரித்த இருவரையும் பாவமாக பார்த்தான் வினய் .

அதைக் கண்டுகொள்ளாத கார்த்திக், பூஜைக்கு நேரமாச்சுடா., ஆரி , பூஜை முடியும் வரையிலாவது இங்கேயே இருங்க, அந்த கந்தன் மீது பட்ட காற்றாவது உங்கள் மீது பட்டு, உங்களுக்குசக்தி கொடுக்கட்டும்;
நான் திரும்ப வரும் வரை வெயிட் பண்ணுங்க. .... என்றவன் சற்று தூரம் சென்று, கோபமா?.. அதங்கமா?..பயமா ?.. பழி
உணர்ச்சியா?.. என்னவென்று தெரியாத பார்வையை ஆரியின் மீது விசி விட்டு, கோயிலின் உள்ளே சென்றான் .

கார்த்திக் சென்றதும், ஆரியிடம்,
ஏன்? .. எதுக்கு?.. எதனால ?.. அப்படி சொன்ன ... சொல்லு... சொல்லு.. என பாட்ஷா பட பாணியில் "ஆரியைஉலுக்கினான் வினய் ..

ரொம்ப கூலாக ., ஆரி, "ஏன்னர்... கார்த்திக்; நான் உள்ளே
வரலைனு; சொன்னதுனால டென்ஷன் ஆயிட்டான்; அவனை சிரிக்க வைக்க உன்னையே யூஸ் பண்ணிக்கிட்டேன்தட்ஸ் ஆல் ..

"யூ கருவாடு ... (Means சுக்கு, (மீன்)அப்போ சிட்டாம் ).. நீங்க சோகத்துல இருக்கும் போதும், உங்களை சிரிக்க வைத்து சரியாக்குற .." xxxx'. என்று என்னைய மறைமுக சொல்லுற....

நேரடியாகவே சொல்லுறேன். டா ...நீ எங்களோட ; முழு குத்தகை காமெடி பீஸ்;. அண்ட் நீ சொன்ன xx ேஜாக்கர் " - என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் ஆரி..

... ஆஹான் .. நாலு பேருக்கு நல்லதுனா.. நாம ஜோக்கரா மாறுறது தப்பில்லை.. என நாயகன் பட டையலாக்கை விட்டவன்..
ஏ ... ஞான கந்தா ! என்னையை கலாய்க்கும் இவங்க முன்னாடி, .
நான் கலாய்க்கிற மாதிரி
யாரைவது அனுப்பு பா... என கந்தனுக்கு வேண்டுதலை வைத்து விட்டு, காரில் சாய்த்து மீண்டும் விளையாட ஆரம்பித்து விட்டான்.. வினய் ..

"ஹாய் வர்மாஜி.. என்ற
அழைப்பொலி கேட்க .. நிமிர்ந்த பார்த்த வினய் .... முகத்தில் 1000 - வாட் பல் பு எரிந்தது..

சற்று தூரத்தில் தீரஜ் பட்டேல் , அவரின் மனைவி, மகளுடன் அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள்..


"ஹம் அப் கே ரெயின் கோட் பேமிலி வருதுடா"ஆரி... இப்ப பாரு நான் யாருனு ... என்றவன், திரும்பி கார் புறம் சாய்ந்து, அவர்களுக்கு முதுகை காட்டியவாறு விளையாட ஆரம்பித்தான்.


புதிதாக வந்த நபர், .
"வாட் ஏ ப்ளசண்ட் சர்பிரைஸ்;யங் பிஸினஸ் கிங்;ஐ நேவர் எக்ஸ் பெட் யூ, ஹியர் ..்எனக் கூறிக் கொண்டே ஆரியின் கையைப் பிடித்து குலுக்கினார்
தீரஜ் பட்டேல், பார்பதற்கு நடிகர் ரகுவரன் சாயலில் இருந்தார்..


"என்னை எல்லாம் சூப்பரான பொண்ணுங்க ., எங்கங்க பார்க்கிறாங்க... சுமாரான பொண்ணுங்க தான் அப்போ, அப்போ பார்க்குதுங்க; அதுவும் ., கரெக்ட் ஆக மாட்டிங்குங்க... வடிவேல் காமெடியை உல்லாட்டா ஆக்கி; நக்கலடித்தபடியே வினய் திரும்ப ....

அவன் முன்னே! கோவத்தில் கோவைப் பழமாக சிவந்த படிநின்றிருந்த அழகியை கண்டு, திறந்த வாய் மூடாத படியே சிலையாக நின்றான் வினய் .
அவளோ அவனை முறைத்து விட்டு, ஆரியின் முகத்தை ஆவலாகப் பார்க்க ஆரம்பித்தாள்..

தீர ஜ்க்கு தமிழ் தெரியாததால், ஆரியிடம் ஏதோ அருகே இருந்தவன் கேட்கிறான் என நினைத்தவர்.. அவனைக் கண்டுகொள்ளாமல், ...

அனு., நான் அடிக்கடி சொல்வேன். இல்லை என் நண்பன், இமயனோடசன், செம பிரிய லிண்ட், பிஸினஸ்மேக்னட், மல்ட்டிடேலன்ட் கை ..
ஆரூரன்வர் மானு... அது இவர்தான்; என இந்தியில் தன் மனைவியிடம் ஆரியை அறிமுகப்படுத்தினார்.

(இவர்கள் பேசுவது அனைத்தும் இந்தியில் தான், )

"ஹாய். தம்பி, இவரு சொல்லும் போது கூட ஒ வரா சொல்லறாரேனு தோணும்.. பட்.. உங்களைப் பார்த்த பிறகு அவர் சொன்னது எல்லாம்
குறைவாவே தோணுப்பா...
கணவனுக்கு சளைக்காமல் ஆரியை புகழ்ந்து தள்ளினார் தீரஜ்ஜின் மனைவி .

" டேய் கொய்யாலே, நீ மட்டுமில்ல உன் மனைவியும் , சோந்து, வாங்குன காசுக்கு மேல கூவுறா ங்கடா.. ... என மேலும் நக்கலடித் தான் வினய் ..

இங்கு, சிறிது இதழ் பிரித்து சிரித்த, ஆரி, வினய் வாயை மூடும் பொருட்டு ; வாயை மூடு.. என அவனுக்கு செய்கை காட்ட, அவனோ'. அதை காற்றில் விட்டு ; அடுத்த பஞ்ச்க்கு தயாரனான்..

அங்கேயே ஆரியை தன் குடும்ப பிணைப்பில் கொண்டுவர, முதல்படியாக, தன் குடும்பத்தை அறிமுகப்படுத்தவரா பித்தார்.

"ஷி இஸ் மை வைப்அனுசூயா i அண்ட்ஷி இஸ் மை ஒன்லி ஒன் பிரிசன்ஸஸ் (princess) தாகினி. அண்ட்ஷி இஸ் எ டாக்டர் .. ஆர்தோ ஸ்பெஸ்சலிஸ்ட் .. என பெருமையாக வாய் எல்லாம் எலும்பாக கூறினார். தீரஜ்..

தந்தையின் கூற்றில் பெண்ணவளின் முகம் பூரிப்பில் ஜொலிக்க .. ஹாய் வர்மா.. என
ஆரியைப் பார்த்து கூற, ஆரியும் "சுரத்தே இல்லாமல்ஹாய் ; கூறினான்.

என்னாது எலும்பு டாக்டரா.. அப்போ! பிடி சாபம் ... உனக்கு உங் காப்பா ஆசைப்படுற மாதிரி பணக்காரன் கிடைக்காம'.,,,பிச்சைக்காரன் கூட கல்யாணம் நடக்கணும், கல்யாணம் நடந்தா கூட... ப ஸ்ட்
நைட்டில் அது நடக்க முடியாம... இடுப்பு போனவனா....உன்னாலேயே சரி பண்ண முடியதவனா இருக்கணும் அந்த
பிச் சைக்காரன்.... என ஆரியை ெபண்ணவள் ரசித்த கோவத்தில் வினய் விளையாட்டாக கலாய்த்தான்..

விளையாட்டாக இருந்தாலும் | வரம்பு மீறி வினய் பேசியதால், சூரியனின் வெப்பத்தை இரு கண்களிலும் கொண்டு வந்து வினய்யை முறைக்க ஆரம்பித்தான் ஆரூரன் ..

ஆரியின் கோவத்தை தங்களால் தான் எனத் தவறாக புரிந்துக் கொண்டவர் ,,,

ஒ .கே ..யங்ே மன்.. நேரம் கிடைக்கும் போது, எங்க வீட்டுக்கு, டின்னர் - வாங்க ஆரி.. என்று கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்கள், தீர ஜ் குடும்பத்தினர் ....

பெற்றோர் சிறிது தூரம் சென்றதும், ஆரியின் முன் சென்று நின்ற தாகினி.. இந்தியில் கூறிவிட்டு, வினய்யை முறைத்தவாறே, கோயினுள் சென்று மறைந்தாள்.

விட்ட எரிக்கும் பணியை பென்ணவளின் பேச்சில் .. மீண்டும் ஆரி ஆரம்பிக்க ..

பயபுள்ளை ஓவரா.. முறைக்குது, விளையாட்டுனு நாமளும் ஓவரா தான் போயிட்டமோ.. சரி சமாளிக்கலாம் ... என மனத்தினுள் நினைத்த வினய்,

கால் வராத ே பசியை காதில் வைத்து
ஹலோ! இங்கிட்டு கேக் ரான், ேமக்ரான் கம்பெனி ஓனர் பேசுறேன்.. அங்கிட்டு யாரு.,
கனடாவில மோர் விற்கிற ஜான் பையனா ... என கத்திக் கொண்டே ஆரியைப் பார்க்க...

...அவன் அடித்த காமெடியில். கண்கள் குளிர் நிலவென மாற; இதழ் பிரித்து சிரித்தவனின்; அழகில் வாய் பிளந்து நின்றான் வினய் .

_ வதம் தொடரும்.




.
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் ே சால்ஸ் :

வதம்- 5 b-பதிந்துள்ளேன்.. தாமத்திற்கு மன்னிக்கவும் ... போனud_க்கு Comment போட்ட
Chitra Balaji, UMS ., Kavitha subramani, Sarala K, Elakkiyavarunan,
Janat Ci Selvamani ,sili via ,
ஆகிய அனைத்து சகோ களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நிறை குறைகளை ஆவலாக எதிர்ப்பார்க்கும் உங்களில் ஒருவள்
 
Top