All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அவிராவின் 'நீலியின் வதம்' - கதை திரி

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All my souls plzzzz put ur valuable comments in comment thread dearsss dnt mistaken me sagoosss
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலியின் வதம்.-- 7

திருவண்ணாமலை



நினைத்தாலே முக்தி தரும்” ஏழு சிவதலங்களுள் திருவண்ணாமலையும் ஒன்று. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார்.

மலையின் அமைப்பு

அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள்

இந்திர லிங்கம்,
அக்னி லிங்கம்,
எம லிங்கம்,
நிருதி லிங்கம்,
வருண லிங்கம்,
வாயு லிங்கம்,
குபேர லிங்கம், மற்றும்
ஈசான்ய லிங்கம் என்பனவாகும்.
இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் – தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது.

தெற்கு கோபுரம் – திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் – பேய்க்கோபுரம்,

வடக்குக் கோபுரம் – அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது.

இத்தகைய பெருமைகளை கொண்ட , ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகை சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ளவும் உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம் தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, ஜுவ சமாதியாகி இன்னும் தவத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!

நம் மன அதிர்வுகளை புத்தி தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வராமல் எத்தகைய சித்துக்களையும் செய்ய இயலாது.இயல்பாகவே புவியியல் அமைப்பிலேயே எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய அதிர்வுகளை கொண்டு திருவண்ணாமலையானது அமைந்துள்ளது.
நம் மனதில் கோபம், ஆக்ரோஷம், குழப்பம்,கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். இந்நிலையில் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.
நம் ஓய்வெடுக்கும் போது(ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே
இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். முயற்சி செய்தால் நம் எண்ணங்களை நம் கட்டுக்குள் கொண்டு வரலாம்
அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும்.அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள். நம் எண்ணங்களை நம் இயக்கங்களை எளிதாக நம் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்காகவே உலகெங்கிலும் உள்ள சித்தர்கள் இங்கே தேடி வருகின்றனர்
திருவண்ணாமலையானது இயல்பாகவே தீட்டா அதிர்வுகளை கொண்டு உள்ளது.இதனால் தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில்
இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். இதற்காகவே இங்கே சித்தர்கள் சமாதி அடைந்திருக்கிறார்கள். சித்தர்களின் பூமியாக திருவண்ணாமலை விளங்கும்
மர்மம் இதுதான்..
இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள்.

அத்திரி மகரிஷி,மச்ச முனிவர், கோரக்கர்,கிராம தேவர்,துர்வாசர்,சட்டை முனிவர்,அகத்தியர்,போகர்,புசுண்டர்,உரோமா மச்சித்தர்,யூகி முனிவர், சுந்தரானந்தர், அழகனந்தா,பிரம்ம முனி, காலங்கி நாதர்,நந்தி தேவர், தன்வந்திரி, குரு ராஜரிஷி,கொங்கனர்,உதயகிரிச் சித்தர், பிகுஞ்சக ரிஷி ,மேக சஞசார ரிஷி,தத்துவ ஞான சித்தர்,காளமீகா ரிஷி,விடன முனிவர்,யாகோபு முனிவர், அமுத மகாரிஷி,சூதமா முனிவர், சிவத்தியான முனிவர்,பூபால முனிவர், முத்து வீரமா ரிஷி,ஜெயமுனி,சிறு வீரமா முனி,வேதமுனி,சங்கமுனி, காசிபமுனி, பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி, ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி,பராச முனி,வல்ல சித்தர்,அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர்,புண்ணாக்கு சித்தர், யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர், திருமூலநாதர்,மவுனச்சித்தர்,தேகசித்திக் சித்தர்,வரரிஷி, கவு பாலச்சித்தர்,மதிராஜ ரிஷி,கவுதமர்,தேரையர்,விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர், கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தர்,சச்சிதானந்தர்,கணநாதர், சிவானந்தர்,சூரியானந்தர், சோகுபானந்தர், தட்சிணா மூர்த்தி, ரமநாதர் மதி சீல மகாமுனி, பெரு அகத்தியன், கம்பளி நாதர், புலஸ்தியர்,திரி காலாக்கயான முனி, அருட் சித்தர்,கவுன குளிகைச்சித்தர், ராஜரிஷி வசந்தமாமுனி, போதமுனி, காங்கேய ரிஷி,கான்சன முனி, நீயான சமாதிச்சித்தர், சாந்த மஹா ரிஷி, வாசியோகச்சித்தர்,வாத சாந்த மகாரிஷி, காலாட்டிச்சித்தர்,சத்தரிஷி,தேவ மகரிஷி, பற்ப மகாரிஷி, நவநாதச்சித்தர், அடவிச்சித்தர்,நாதந்தச்சித்தர், ஜோதிரிஷி, பிரம்மானந்த ரிஷி,அநுமாதிச்சித்தர்,ஜெகராஜ ரிஷி, நாமுனிச்சித்தர்,வாசுதேவ மகாரிஷி, பாலையானந்தர்,தொழுகன்னிச்சித்தர்.... போன்ற சித்தர்களும் .. இன்ன பிற சித்தர்களும் அரூபமாக இங்கு வாழ்வதாக அகஸ்தியர் எழுதிய
அகத்தியர் பெருமான் ஜீவ நாடியில்
குறிப்பிட்டு உள்ளார். இதனால் தான் இப்பூமி சிவபூமி ., சித்தர்கள் பூமி என காலங்காலமாக அழைக்கப்படுகிறேதோ!.....

.............................................................

சேலம் ட்டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், லேம்போகினி ஹுராகேன் LP 610, மாடல், கிரப்பியோ கலர் ஸ்போர்ட்ஸ் கார் ஆரியின் கைகளில் சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்தது...

காரினுள் அமர்ந்திருந்த வினய்யோ, இறுக்கமாக கைகளை கட்டியவாறு, அமைதியின் உருவாக அமர்ந்திருந்தான்...


கடந்த சில மணி நேரத்தில் , தன்னிடமும் பேசாமல், போனையும் நோண்டாமல், "வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசியல்வாதிகளைப் பார்ப்பது போல் ,அதிசயமாக அமைதியாக அமர்ந்திருந்த வினய்யைக் கண்டு துணுக்குற்ற ஆரி,

இதற்கு முன் எப்பொழுதும் அனைவரின் முன்பு வினய்யை எதற்காகவும் கடிந்துக் கொண்ட தில்லை; என்ன தான் உயிர் நண்பன் ஆனாலும், .அடுத்தவர் முன்னிலையில் அவனை திட்டுவது; அவனின் தன்மானம்; மரியாதை பாதிக்கப்படும் என்பதால், எத்தகைய சூழ்நிலையிலும் அடுத்தவர் முன் நண்பனின் தவறுகளை கூறுவதோ, திட்டுவதோ ' தான் ஒருபோதும செய்ததில்லையே) ...

இன்றுவழக்கத்திற்கு மாறாக அதீத கோபத்தில், சற்று முன் கோவிலில் அனைவரின் முன்பும் அவனை தீட்டியதாலோ... தன் மீது கோவமாக ?.. இருக்கிறானோ? ... நொடிக்கு 1000 - வார்த்தைகள் பேசுபவன்.. அதனால் தான இன்று இவ்வளவு அமைதியாக இருக்கிறானோ ?.. நண்பன் பேசதாதற்கு தன்னுள் காரணத்தை கண்டுபிடித்த ஆரி, அவனை பேசவைக்க என்ன செய்யலாம் என்று அவனின் மூளை வேகமாக கணக்குப் போட்டது.

வினய் நேற்று சிமிகிட்ட, என் மேரேஜ்ஜுக்கு ஃபர்மிஷின் கேட்டபோது, சிமி உனக்கும் அலையன்ஸ் பார்க்க சொன்னாங்கடா.. எனக் கூறி முன்னவனின் கல்யாண ஆசையைத் தூண்டி நூல் விட்டுப் பார்த்தான் ஆரி..

"இதுக்கு வாய்ப்பே இல்லைராஜா' ... எனஆரியின் முகம் பார்த்து தலையசைத்த வினய், ஸ்பிடாமீட்டரை எட்டிப் பார்க்க ,, நீரின் கொதிநிலையை தாண்டி துடித்துக் கொண்டிருந்தது வேக மானியின் முள்...
ஒரு கையால் தலைகோதியவாறு, மறு கையால் ஸ்டியரிங் கை பிடித்து ; அனாசியமாக" 140 - கீ.மி.. வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆரியின் "முன் கையசைத்து, காரை ஓரமாக நிறுத்த, நெஞ்சை பிடித்தவாறு செய்கை செய்தான் வினய் ..

வினய், நெஞ்சில் கை வைக்கவும் அவனுக்கு ஏதோ என்று; ஆரியின் உள்ளம் தடதடக்க..... "கீரிச்" என்ற பெரும் சப்தத்துடன் சடன்
பிரேக்யிட்டு , காரை ஒரமாக நிறுத்திய ஆரி.. நண்பனின் மார்பை நீவி விட்டு, ... "ஆர் யூ ஆல்ரைட் " .. சொற்கள் தந்தியடிக்க..கைகள் வேகமாக நண்பனின் உடலை ஆராய்ந்தன...

சட்டென்று, ஆரியின் கைகளைத் தட்டி விட்ட வினய்,
" மனுசனாடா நீ?.. பச்சை மண் பக்கத்தில் இருக்குதேனு கூட பார்க்காம ., என்னா?... ஆ.. -
வேகம் ... இது என்ன, ரேஸ் ரோடுனா.. நினைச்ச.. உன் இஷ்டத்துக்கு பறக்குற ..
உயிர் பயத்துல அசையாமல் ,திருவண்ணாமலை தானே.. ஒரு மணி நேரத்தில் போயிடலாம் என்று உட்கார்ந்திருந்தா;
பெங்களூர் - ருக்கு வந்திருக்க .. அதுவும்.. மூணு மணி நேரம் .. திரி ஹவர்ஸ்...
3 - விரல்களை மாற்றி, மாற்றி காட்டி சொல்லியவன்.. இது கூட பரவாயில்லLா.. "அம்மா எனக்கும் அலையன்ஸ் பார்க்க சொன்னாங்க".,.. என்று சொன்ன பாருடா, அங்க
நீ ற்கிறடா?.. நீ ?... என்னா?.. வில்லத்தனம்... போதும் இனி பாடி தாக்காது. எங்கையா இருந்தாலும்; அட்ரசஸை சொல்லு, பஸ்ஸுல வரேன்.. அதுதான் எனக்கும் .. என் ... கு... என ஆரம்பித்தவன் .. ஆரியின் முறைப்பில் "என் குடலுக்கும்" நல்லதுனு சொல்ல வந்தேன்.. எல்லாத்தை யும்,,தப்பாவே ஏஏ...
எடுத்துக்கிறது... நீண்ட விளக்கத்தை கொடுத்தவன்.. பேசியதில் களைத்து ... ஒரு பாட்டில் தண்ணீரை ஒரே மடங்கில் குடித்தான்..

வினய் நெஞ்சை பற்றவும், ஆரிக்கு
நண்பனுக்கு "நெஞ்சு வலி "வந்து விட்டது என்று உடல் பதற, ஒரு நொடி தன்னிலை மறந்து துடித்தவன் ... வினய்யின் கூற்றில், உ.. ப் எனக் காற்றை வெளியிட்டு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ..நண்பனுக்கு ஒன்றுமில்லை என்ற மகிழ்ச்சியில், வினய்யை கட்டித் தழுவினான் ஆரி..

ஆரியின் உடல் நடுக்கத்தை உணர்ந்தவன்.. அவனுக்கு என்றால் எதற்கும் அஞ்ச மாட்டான் ஆனால் அவனுக்கு பிடித்தவர்களுக்கு என்றால்.. அவரின் சிறு வலியை கூட தாக்க மாட்டான். பாசக்கார பய; இவன் குணம் தெரிந்தும்; நெஞ்சு மேல கையை வைச்சிருக்க கூடாது... முதலில் இவன டைவர்ட் பண்ணனும் ... வினய்யின் மனம் வேகமாக யோசித்தது..

டேய் ....இப்போ. எதுக்கு பெங்களுர் வந்து இருக்கோம்.. ' ..

" ஏழுமலையான் கிட்ட ,இந்த சிங்கிள் சிங்கத்துக்கு .. ஜோடி சிங்கம் சிக்கிரம்.கிடைக்கணும் என்று வேண்டுதல் வைக்க ... என்று ஆரி கீழ் உதட்டைக் கடித்து நக்கலாக கூறினான்.

யாரு நீ ... எனக்கு ... வேண்டுதல் ?..
அதுவும் எனக்கு பொண்ணு அமையனும்னு ... வினய் கடுப்பாக கேட்க..

"ய்யா ... .எக்ஸாட் லி... ..


அடேய்யேப்பா .. நல்லவனே! , உனக்கு கூட இன்னொனு ; செட்டாயி ; குஜலா இருப்படா... எனக்கு எல்லாம் செட்டே ஆவாதுடா ...

உம் .. அப்படியா! எனக்கா... .ஐ மீன் .. உன் தங்கச்சிக்கு ... ச... ...சிரிப்போட ஆரி முடிப்பதற்குள் " வினய் அவனின் வாயைப் பொத்தி போதும் அடங்கு என நண்பனை அடக்கினான்..

இவர்களோடு இருந்த விதியோ ... ஏ
இது கூட நல்லாதான் இருக்கு"டைம்பாஸ் ஸ்க்கு .. ஐடியா கொடுத்திருக்கான்.. உடனடியாக ஐடியாவை இறக்கிட வேண்டியதுதான்..
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம் - 8

'டேய் மாமா!,, காரை விட்டு கீழே இறங்கி, போன் பேசுவது போல; சுற்றியும் வேடிக்கைப் பார்த்துட்டு வா, 'என வினய்யை காரிலிருந்து வெளியே தள்ளி விட்டான் ஆரி..

காரிலிருந்து வெளியேறிய வினய், அடுத்த ஐந்தாவது நொடி ..பரப்பரப்பாக , காரினுள் அமர்ந்து, கதவைச்சாத்தினான்.

'டேய் மச்சி, யாருடா அந்த தடியனுங்க;, நம்மளுக்கு சற்றுத் தூரத்தில் , டயரை மாத்துவதுப் போல, எதுக்காக?...., நம்மளை
வேவு ., பார்க்கிறாங்க..? குழப்பமாக
ஆரியிடம் வினவினான் , வினய் ..

'நாம ; இப்ப போறது கிராமம்டா., நமக்கே சரியா!, சாப்பாடு கிடைக்குமோ?...இல்லையோ!'...
ஆரி தான் கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் , பேசவும் ., அதில் கடுப்பாகி வினய்,
"அதுக்கு?".,, என ஆரியிடம் கேட்டிருந்தான்.


'உம்.. அதுக்கு '.,,, என ராகம் இழுத்துக் கொண்டே, காரை , ஸ்டார்ட் செய்த ஆரி, எடுத்ததும் அதி வேகத்தில் காரை இயக்க, பின்னாடி வேவு பார்த்தவர்களும், அவசரமாக காரில் அமர்ந்து ..,,எங்கே? ...
அவர்களை தவற விட்டு விடுவோமோ .. எனக் கருதி.. அந்த கேங் கின் தலைவன் ,, தங்களின் காரையும், முன்னவனுக்கு எடுடாக ., செலுத்த
சொல்ல.. அவ்வண்டியின், வாகன ஓட்டியும் தனது காரின் வேகத்தினை அதிகப்படுத்தினான்..

இதை தான் எதிர்பார்த்தேன் என ஆரி, மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு,
' வலது கையால், ஸ்டீரியங்கை இயங்கியப்படி, இடது கையால்: வினய்யின் சீட்டை பின் நோக்கி, தள்ளி விட்டு, வினய்யின் .மார்பின் மீது கரத்தை வைத்து அழுத்தி... தனது காரின் வேகத்தை சடாரென்று குறைத்த நொடி ...

"கீரிச்". .. என்ற பெரும் ஓசையுடன் , இரு கார்களும் உரச ; பின்னவர்களின் கார் ... பாதையை விட்டு, மண் ரோட்டில் நிலைதடுமாறி நின்றது.

பின்னவர்களின் காருக்கு சற்று முன் சென்று, ஆரியின் கார், பாதையோரம் இருந்த மரத்தில் .. நூல் இடைவெளியில் மரத்தில் மோதாமல் நின்றது ஆரியின் கைவண்ணத்தில்.

டாடா சுமோவில் இருந்தவர்கள், கார்கள் உரசிய வேகத்தில், முன்பக்கம் இடித்தும், மேற் கொண்டு கார் ; வேறெதிலும் ே மாததால்,
சிறு, சிறு காயங்களோடு., ஒருவர் பின் ஒருவராக காரிலிருந்து வெளியேறினர்.
என்ன?; டிரைவருக்கு தான் மூக்கில், லைட்டாக தக்காளி சாஸ்; எட்டிப் பார்த்தது ..

தீடிரென்று ஏற்பட்ட கார் உரசலில் ஆரியின் கார் ,, 'ஏர் பலூனை" ..வெளியிட, அது முகத்தில் மோதிய வேகத்தில் நிலை குலையாமல்;தன் காரை சரியாக; மரத்தின் மீது மோதாமல் நிறுத்தியவன், காரின் திறப்புகளை அன்லாக் செய்து வெளியே வந்தவன், மறுபுறம் காரை சுற்றி வந்து, வினய்யின் புற கதவைத் திறந்து,

"கமான் வினய், சீக்கிரம் வெளியே வா " எனக் கூறிக் கொண்டே ; . வினய்யின் கைப்பற்றி வெளியே இழுந்தான் ஆரி..

நடந்த விபத்தால், மந்திரித்து விட்டவன் போல், காரிலிருந்து வெளியே வந்த வினய், சற்று தள்ளியிருந்த ... சுமோவைப் பார்க்க ., அதை சுற்றி மக்கள் ;கட்டெறும்பாக சூழ்ந்திருந்தனர் ..

தங்களை நோக்கியும் பல எறும்புகள் படையெடுக்க, ஆரி; அவனின் கைப்பற்றி சாலைக்கு இழுத்து வந்தவன்; பின்னாடி திரும்பி ... தன் கார் அருகே முளைத்த புதியவனிடம் ,, அடிப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளுமாறு , கண் ஜாடைக் காட்டி
விட்டு, சாலையைக் கடந்து, சேலம் செல்லும் பாதையில், சற்று தூரம் நடந்துக் கொண்டே .. . விபத்தால் ஏற்பட்ட ;
ட்ராபிக்கில், வாகனங்கள் ஊரந்து செல்ல,, அதில் ஆடிஜ8; வெள்ளை நிற காரைக் கண்டு .,அதன் அருகே செல்ல,, அவனுக்காகவே காத்திருந்தது போல் அதன் டிரைவர், காரிலிருந்து இறங்கி ஆரிக்கு தலையசைத்து விட்டு, சென்றுவிட,


வினய்யை முன்புறம் கதவைத் திறந்து அமர வைத்து விட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை, சேலத்தை நோக்கி இயக்க ஆரம்பித்தான் ஆரி....


இவ்வளவு நேரம் சாவி கொடுத்த பொம்மைப் போல் ஆரிக்கு கட்டுபட்ட
வினய், 'நடந்து முடிந்த நிகழ்வுகளை மனதில், ஓட்டிப் பார்த்தவன், தங்களை பாலோ பண்ணுபவர்களை தவிர்ப்பதற்காகவே.,
இந்த விபத்தை வேண்டுமென்றே ஆரி ஏற்படுத்தி இருப்பது புரிய ..
அவனை நோக்கி..

" எனக்கு சாவு பயத்தை காட்டிட்ட இல்ல. பரமா?.." வினய் குரல் தான் ஜெய்
போல் உயிருக்கு பயந்ததுப் போல் ஒலிக்க ., அவன் கண்களோ, தன்னை ஆரி பாதுகாப்பாக அணைந்து பிடித்ததில் உருகி கசிந்திருந்தது..

அதைக் கண்டுக்கொண்ட ; ஆரி;
" இந்த ரணகளத்துலையும், உனக்கு சிட்சுவேஷ்னல் டையலாக்
கேக்குதோ .. காலையில் இருந்து பாஸ்ட்டா டிரைவ், பண்ணுறேனு ;பயப்படுறீயேனு, பாவம் பார்த்து லைட்டா .. காரை இடிச்சா .... நக்கலு.... உம்". .. என ஆரி சிரித்துக் கொண்டே கேட்டான்..

"என்னாது லைட்டா ;இடிச்சதுக்கே., எமன் கண் முன்னாடி ,, குத்து டேன்ஸ் ஆடிட்டு போயிட்டான். இதுல நீ வேகமாக இடிச்சு இருந்தா.. ஆத்தாடி நானும் எமன் கூட சேர்ந்து ஆடிட்டு இருந்திட்டுப் பேன்.. நல்ல வேளை லைட்டா இடிச்சு.. என் உயிரை காப்பாத்திட்டா டா .. என நினைத்தவன் மேலும் .,

ஆரி அழுத்தமாக "உம்".....மை உச்சரித்ததிலேயே .. உனக்கு எந்த தீங்கும் வரவிட மாட்டேன் என்ற அர்த்ததை புரிந்துக் கொண்டு , ஆரி தனக்கு நட்பாக கிடைத்ததில் மனம் விம்ப,,
ஆரியின் தோளை அணைந்தான் வினய் ..

மேலும், தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள.. ஆரியிடம் கேள்வி ேகட்க முனைந்தான் வினய் ..

இவனுங்க பாலோ பண்றதை தெரிந்து தான் அவனுங்களை டைவர்ட் பண்ண, பெங்களுர்க்கு போற மாதிரி போயி ; ஆக்ஸிடெண்ட் பண்ணி, யாரும் பார்க்காத போது, திரும்பவும் வேரொருத்தர் காரு ல சேலம் வர்றோம்.. கரெக்ட்டா?.. ..

" இவ்வளவு லேட்டா பல்பு எரியுதுடா.. உனக்கு ".. மிதவேகத்தில் காரை இயங்கியபடியே ஆரி, இது புரிய இவ்வளவு ேநரமா என்பது போல் கேட்டு , வினய்யை வாரி விட்டான்.


அதற்கு வினய் ....'அம் ஏ அட்டு பாய்., அப்படி தான் இருப்பேன்.. பி .சிரியஸ்,, யார் சொல்லி?, அவங்க நம்மளை பாலோ பண்றாங்க',, அண்ட் ரீஸன் என்ன?..


இவ்வளவு நேரம் இருந்த இளக்கம் மாறி உடல் இறுக., பல்லைக் கடித்தவாறு ஆரி, "சம் கன்பூயூசன் அபௌட் த கல்பிரட் .. சூன் வில் பைண்ட் ஹிம், யூ நோ ெ வாரி ". என மறுமொழி கூறியிருந்தான்



கோவத்தால் தாடை இறுக, கண்கள் பளபளக்க, நண்பன் கூறியதிலிருந்தே, அந்த
கல்பிரிட்டை, கண்டுபிடிச்சா செத்தான் அவன் என்பது போல். இருக்க.. அவனை திசை திருப்ப ...

"வேவு பார்த்தவனுகளுக்கு, பால், பிரட், நேரா நேரத்துக்கு சாப்பாடு .. கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் ஏற்பாடு பண்ணிட்ட... உன் உயிர் நண்பன் எனக்கு .. சாப்பாடு ?".. என வினய் வயிற்றை தடவி கேட்டான்..

அவன் செய்கையில் சிரித்த ஆரி...
"உனக்கு பிரைவேட் , ஆஸ்பிட்டலில்.. ஏசி ரும் ., ப்ளஸ்.. ஸ்டார் ஓட்டல் சூப்.. ரெடி பண்ணாட்டா.. மாம்ஸ் ...

வேண்டாம்டா பாவி,... நோ சோறு, நோ கேட்டிங், (கேட்பது) எனக்கு உயிர் முக்கியம். சைட்டிங் முக்கியம், லோ .மீ பாவம்.." தலையாட்டி பாவமாக உரைத்தான் வினய் ..

"அடச்சீ ; ரொம்ப கேவலமாக இருக்கு, அடங்குடா.., பின்னாடி சாப்பாடு, இருக்கு எடுத்து சாப்பிடு என்று விட்டு,குகிள் டூட் மேப்பை ஆராய ஆரம்பித்தான் ஆரி..

உணவினை பிரித்து உண்ண ஆரம்பித்த வினய், ஆரியும் பசியோடு இருப்பான்; என எண்ணி அவனுக்கும் ஊட்ட.. முதலில் மறுத்தவன்; பிறகு இரண்டு வாய் உணவு வாங்கிக் கொள்ள ,, ஆரியின் கண் முன்னே; இதே போன்ற நிகழ்வும் , அதைத் தொடர்ந்து சில காட்சிகளும் ஓட, ஒரு நொடி அனைத்தும் மறந்து, கண்கள் இருட்டாக, . தலையை ஒரு கையால் பிடித்தவன்,அச் சூழலிலும் , காரை ஓரமாக நிறுத்தியிருந்தான்.

நண்பனின் மாற்றத்தை பதற்றத்தோடு பார்த்த வினய்யின், காதில், காலை அந்த பெரியவர் கூறிய,

"எப்பொழுது புனிதமலைக்கு ; நீங்கள் பிரவேசிக்கிறீர்களோ. அப்பொழுது முதல் உன் நண்பனுக்கு, போன ஜென்ம நிகழ்வுகள், வரத் தொடங்கும், சில மறக்கும் சில குழப்பும் ..., அப்போது நீ , அவனை எந்தவொரு கேள்வியும் கேட்காமல், இந்த ஜென்மத்திற்கு கொண்டு வர வேண்டும் .. இல்லையெனில் மூளை குழம்பி .. பித்து பிடித்து திரிவான் டா .உன் நண்பன்.. மீண்டும் ஒரு ஜென்மம் வேண்டுமடா.. பாவம் போக்க,..
கால தேவனை ஏமாற்ற ..
முடியும் மென வந்துள்ளான் நரன் ஒருவன்... முடியுமாடா?... மானிடனான ?....உங்களால?..." என்ற குரல் இப்போது கூறுவது போல் ஒலிக்க ., .


வினய் .தலையசைத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், தான் இனி அவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்; என முடிவு எடுத்து விட்டு ..

நண்பனைப் பார்க்க, அவன்..
"தலையைத் தாக்கி அமர்ந்திருந்தவனிடம் .., பருக தண்ணீர் பாட்டிலை நீட்டி.. டேய் மச்சி, இந்தாடா தண்ணீ குடிச்சுட்டு ; இந்தப் பக்கம் வா, இனி நான் டிரைவ் பண்றேன்.. என ஆரியை உலுக்கினான் வினய்..


"ஆஹாங்' என நடப்பிற்கு வந்த ஆரி, 'என்னவென்பது போல் திருதிருத் தான் .. .. "

" தன் நண்பன், தான் சொல்வதை கவனிக்காமல், இங்கு வந்ததால் மனக்குழப்பத்தில் உள்ளான்; அதை தான் அந்தப் பெரியவர் தன்னிடம் குறிப்பாக கூறினார் என்பதை .. புரிந்துக் கொண்டவன். ...
"ஆரி, நான் டிரைவ் பண்றேன், இந்தப் பக்கம் வா" என அழைத்தான் நண்பனை ..

வினய்யின் கையிலிருந்த தண்ணீரை வாங்கிக் கொண்டு, காரிலிருந்து வெளியேறி, ஒரமாகச் சென்று, முகத்தை கழுவி விட்டு, காரிலில் சாய்ந்து அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான்.. ஆரி..

ஓட்டுனர் இருக்கைக்கு இடம் மாற , காரை சுற்றி வந்த வினய், எதேச்சையாக நிமிர்த்துப் பார்க்க..
சற்று தொலைவில், "அண்ணாமலையார் கோபுரம் "தெரிந்தது.. அக் கோபுரத்தைப் பார்த்ததும் ,, அவனை மீறி கைகளை
கூப்பி., "அப்பா!
அண்ணாமலையாரே!.. எதற்காக இங்க வந்தோம்; என்ன? காரணம் என்று அறியோம் .. ஏதோ?.. ஒன்று எங்களை இங்கு இழுத்து வந்துள்ளது என்பதை மட்டும் அறியேன். இதிலிருந்து என் நண்பனுக்கு எந்த பாதிப்பும் வராமல் நீதான் காக்க வேண்டும் .. அப்பா !
அப்படி இதிலிருந்து எந்த கஷ்டமும் வராமல் இருந்தால் ,, ஒரு வருடம் 'கிரிவலம்' ஆரியை கூட்டி வருகிறேன்"... என மனதார வேண்டிக் கொண்டான் வினய் ..


அவர்களுடன் இருந்த விதியோ, "நான் இருக்கும் போது அதை அவ்வளவு சீக்கிரம் செயல்படுத்த விடுவேனா " ... என சிரிக்க ஆரம்பித்தது.

. ... வதம் தொடரும்....
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் சோலஸ்,
வதம் பகுதி 8-பதித்துள்ளேன்.. போனud-க்கு Like, L0 ve, WoW, Commentகொடுத்த தோழிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் உங்கள்Comment oxygenai கொடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலியின் வதம் - 9 (a)

i> முற்பிறவி பற்றிய தகவல்கள்..

ஒரு மனிதன் இறந்து விட்டாலும், அவனது ஆத்மா மறுபிறவி எடுக்கிறது. அந்த ஆத்மாவில் அல்லது மனதில் பதிந்துள்ள நினைவுகளும், உணர்வுகளும் அழிந்து விடுவதில்லை. தொடர்ந்து அடுத்த பிறவியிலும் ஆழ்மனதில் வியாபித்து இருப்பது ,பல ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.இதுபோன்ற விஷயங்கள் நாம் அறிந்ததைப் பற்றி மட்டுமே பேசக் கூடியதான “அறிவியலின்” எல்லைக்கு அப்பாற்பட்டு இருப்பதால் இவற்றை “Para Psychology” மற்றும் “Occult Science” என்னும் துறைகளில் உள்ளடக்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ii >உண்மை நிகழ்வு :
நாளாந்தா என்பதற்கு அறிவை அளிப்பவர் என்று பொருள். இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டதுஇது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். . அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக இருந்த புத்த துறவி" விரோச்சனா" என்பவர் சுமார் 800 - வருடங்கள் கழித்து ; பூடான் இளவரசர் - " ஜிங் ேம கே சர்வான்சுக், சோனம் வான் சுக்" அரச தம்பதிகளுக்கு மகனாக 2014-ல் பிறந்திருக்கிறார். இப்பிறவியில் அவரின் பெயர் "ப்ரேயர்வான் சுக்". .
இக்குழந்தை 3 வயதிலேயே தனது முற்பிறவியைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.. இக்குழந்தையின் ஆசைக்கிணங்க அப் பெற்றோர், 2017-ல் நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு அழைத்து வந்துள்ளார்கள், அப்பொழுது அக்குழந்தை; அங்கே மகிழ்ச்சியோடு ஓடி ஆடி , தான் கற்பித்த இடங்களை கூறியுள்ளார். திரும்பவும் அவரின் 6-வது வயதில் இந்தியாவிற்கு வந்த அக்குழந்தையை நம் பாரத பிரதமர் மோதி ; வரவேற்று நமஸ்காரம் செய்துள்ளார்.. புத்த பிட்சுகளை (சொற்பொழிவை கேட்பவருக்களுக்கு வயது என்பதுக்கு மேல் இருக்குமாம)அமர வைத்து 'புத்தமத பிரசங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் அக்குழந்தை ..
இது தான் முற்பிறவியின் தாக்கம் .. நம் அனைவருக்கும் முற்பிறவியின் தாக்கம் மூளையில் பதிந்துள்ளது.. சிலருக்கு நினைவுகள் வரும், பலருக்கு மறக்கடிக்கப்பட்டு விடும். எல்லாவற்றிற்கும் காரணம்?.. கர்மா! தான் ....
.............. . xxxxxxxxxxx... ........

திருவண்ணாமலையிலிருந்து, மேலும் இரண்டு மணி நேரம் காரை ஓட்டிய , வினய், நான்கு ரோடு பிரியும் பாதையின் ஓரத்தில் காரின் இன்ஜினை அணைத்து விட்டு, எந்த பாதையில் மேற்கொண்டு செல்வது என புரியாமல், ""டவர் " இல்லாததால் முடங்கிப் போன "குகிள் மேப்பையும் " , வலது கரத்தால் கண்களை மறைத்தவாறு அமர்ந்திருக்கும், நண்பனையும் மாறி, மாறிப் பார்த்தவன்." இப்போதைக்கு இது வேலைக்காது , காரை விட்டு இறங்கி, வழிப்போக்கர் யாரிடமாவது வழி கேட்கலாம்" ...என எண்ணிய வினய், காரின் டோரை 'அன்லாக்' செய்ய, 'க்ளிக்,' என்ற சத்தத்துடன் காரின் கதவு திறந்தது.

அந்த சத்ததில், உறக்கத்திலிருந்து விழித்த ஆரி..." சுற்றும் முற்றும் பார்த்து.. என்ன வினய் ? எதுக்கு இப்போ காரை நிறுத்தி, வெளியே போற?.. திறந்த கார் டோரை ,, கண்களால் சுட்டிக்காட்டி நண்பனிடம் கேட்டான்..
"போர் ரோட்ல; நாம எந்த ரோடுல போறதுனு கன்பூயூசன்?.. " தீவிர யோசனையின் போது தான்.. நண்பனின் முகம் இவ்வாறு இருக்கும், என தன்கேள்வியோடு நண்பனின் குழப்பமுகத்தை ஆராய்ந்தான் வினய் ..

" வெஸ்ட் சைட் நேரா போன,, ஆஃப் ஆன் ஹவாரில், ஒரு பழங்கால ஆல மரம் வரும்; அதுக்கு மேல கார் போகாது., ஸோ அங்கேயே காரை நிறுத்து". வழி சொல்லிவிட்டு, பழைய மாதிரியே சாய்ந்து அமர்ந்து, மீண்டும்
கண்களை மூடிக்கொண்டான் ஆரி..

" இங்க டவர் கிடைக்காம போகும்னு தெரிஞ்சி, முன்னமே ரூட்டை தெளிவாக தெரிஞ்சுக்கிட்டு ; வந்து இருக்கானோ!" என மனத்தினுள் நினைத்து, பொருள் விளங்கா பார்வையை ஆரியின் மீது விசினான் வினய்...

"ஒரு இடத்துக்கு போறோம்னா நாலையும் தெரிஞ்சு வைச்சுகனும், அதெல்லாம் இந்த மரமண்டைக்கு தோணாது; என்று கூறிக்கொண்டே வினய்யின் மண்டையைத் தட்டினான் ஆரி..

தன்னை மரமண்டையினு திட்டினதிற்கு கோவப்படாமல், "அப்ப எந்த வீட்ல; எந்த பிகர் இருக்கும்னு . அந்த நாலுல ஒன்னா,தெரிந்து வைச்சுறிங்கியா ஆரி?..... தனக்கு பிகரைத் தேடி அலையும் வேலை மிச்சம் மென ஆர்வமாக கேட்க..

அதற்கு ஆரி, கேவலமான ஒரு பதிலைக் கூறும் வண்ணம் நிமிர்ந்து உட்காரவும்;
"ஆஹா பார்முக்கு வந்துட்டான்டா., இனி இவனை பேச விட்டா', என் மானத்தை , கள்ளத்தோணியில நாடு கடத்திடுவான்.. இவன் வாயை இப்போ மூடணுமே; என வினய் நினைக்கவும், மிகப் பெரிய ஆலமரத்தை கார் நெருக்கவும் சரியாக இருந்தது..

தப்பிச்சேன்டா சாமி, இவன் கிட்ட இருந்து என பெருமூச்செறிந்து, முதல் ஆளாக காரினின்று வெளியேறி , வெளிக் காற்றை சுவாசித்தான் வினய் .

அடுத்தாக ஆரி காரின் கதவை திறந்துஇடது காலை மண்ணில் வைக்கவும் ., அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த இடம், தீடிரென "சுழல்" காற்று , மண் துகள்கள், குப்பையோடு சூழன்று அடிக்க ஆரம்பித்தது. அதே நேரத்தில் மலையின் மீது, பெண் ஒருத்தி
பயங்கரமாக உறுமும் ஒலி.நீலி குகையின் மலைப் பகுதியில் எதிரொளித்தது.

"வினய் ; கண்ணை மூடு ; காரை பிடிச்சுகோ ... ட்டுமினிட்ல சரியாயிடும் ., " காரிலிருந்து வெளியேறிய ஆரி நண்பனைப் பார்த்துக் கத்தினான்.
வினய்க்கு புழுதிக் காற்றில் , ஆரி கூறியது கேட்காமல்,. காரின் மறுபுறம் பார்க்க , அங்கே, ஆரி காரைப் பற்றிக் கொண்டு தன்னைப் பார்த்தவாறு, நின்றிருந்தவனைப் பார்த்து விட்டு, கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது...
அங்கே., ஆரியின் கழுத்தில்
அணிதிருந்த , " திரிசூலம் '', ஒளியில் மின்னியது.. அவ்வொளி எதனுடனோ ! போராடுவதுப் போல், சற்று அசைய; அடுத்த நொடி; சூழல் காற்று' நின்று . அவ்விடம் பழையப்படி அமைதியானது..
சுழல் காற்று நின்றதும், .காரைச் சுற்றி வந்து : "ஆவென "வாயைப் பிளந்து நின்றிருந்த வினய்யின் தோளைத் தட்டி,
"ஏய் யூ நெவர் சீன் த ஸ்டோர்ம் ஹியர் பி போர் .. திஸ் ஒன் இஸ் காமன் பார் திஸ் ப்ளேஸ் ய்யா, பி கூல் மேன்..

"உங்க ஊர்ல டாலர்ல, லைட் அடிக்குறது ரொம்ப கூல்லா .. நெஜமா.. உனக்குத் தெரியலையா?".. மனதினுள் நினைத்தவன், அவனுக்கும் இது பற்றி தெரிந்ததா?... என ஆரியின் முகம் பார்க்க அங்கே ?...எந்தவித சலனமும் இல்லாமல் இருந்தது ஆரியின் முகம் ..

அண்ட்., நீ மட்டும் நேரா போனனா 'பழையக் காலத்து அரண்மனை போல. ஒரு அவுஸ் வரும், அதுக்குள்ள போயி ,
கோபால்சாமி னு ; ஒருத்தர் இருப்பாரு, அவரைப் பார்த்து, நம்ம பேரு, எங்கிருந்து வர்றோம்னு சொன்னா.. அவர் புரிஞ்சுக்கிட்டு, தங்க ஏற்பாடு பண்ணித் தருவாரு.. பிறகு வந்து நம்ம திங்ஸை எடுத்துக்கலாம், அதுவரை காரிலையே இருக்கட்டும்.. என்ன? சரியா ?..

"ஏன்... நீ சொல்ல மாட்டியா?- நான் உனக்கு மவுத் பீஸ்ஸா.. இதுக்குத் தான் என்னைய கூட்டிட்டு வந்தியா?.. " இவ்வளவு நேரம் இருந்த குழப்பம் மறைந்து சண்டைக்கு நின்றான் வினய் ..
"ஆமாம் டா என் வென்று, எடுபிடி வேலைக்குனு சொன்னா நீ வர மாட்டா... அதுக்கு நீ வளரணும் தம்பி.,கிளம்பு, கிளம்பு, அருவிக் கரைக்கு காத்து வாங்க, அப்படியே ! அய்யா ஒரு ரவுண்ட் போயிட்டு வரேன்.. " சொன்னவன் நக்கல் சிரிப்பை வினய்யின் மீது வீசி விட்டு சென்றான் ஆரி..
"போடா , போ.. சைட் அடிக்க என்னைய விட்டுட்டு போற இல்ல,அங்கே மோகினி பிசாசுதான் இருக்கும் பிகர் இருக்காது .. இதுக்கு நல்லா அனுபவிப்படா , "சிங்கில் பசங்க சாபம் உன்னைய சும்மா விடாதுடா ".. வினய் கத்த.. இதை காதில் வாங்கியவாறே,சிரித்துக் கொண்டே முன்னே நடந்தான் ஆரி..
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம் _ 9 b
ஆரி..தன்முன்னே பிரம்மாண்டான வடிவில், பெரிய யானை ஒன்று அமர்ந்திருப்பது போல்,. தோற்றமளித்துக் கொண்டிருந்த மலையின் அமைப்பை கண்டு ரசித்துக் கொண்டே, அதை நோக்கி முன்னேறியவன் கால்கள், அம்மலையின் அருகே சென்ற நொடி., அந்த யானையின் தலையிலிருந்து (பக்கவாட்டுத் தோற்றம் ) வீழ்ந்த "நீர்வீழ்ச்சியின் 'அழகில் அப்படியே ஒரு சில நொடிகள் நின்று விட்டான், தன்முன்னே தெரிந்த இயற்கைக் காட்சி ஜாலத்தில் ..'...

"ஒ ஹோ " - வென சப்தமிட்டபடியே, மலையின் உச்சியிலிருந்து தண்ணீர் வீழ்ந்து, ஆறாக பெருக்கெடுத்து ஓடியது .. சுற்றிலும் மரங்கள் அவ்வருவிக்கு போர்வையாக திகழ்ந்து, அந்த மதிய வேளையிலும், போர்வையின் இலக்கணத்திற்கு மாறாக, அவ்விடத்தை குளிர்ச்சியாக்கிக் கொண்டிருந்தது.. நீர்வீழ்ச்சிக்கு அடுத்தப் படியாக; யானையின் கீழ்நோக்கிய தும்பிக்கையைப் போன்று மலையின் உயரம் அடுக்கடுக்காக குறைத்துக் கொண்டே வந்து ,, கடைசியில் மண் தரையில் முடிந்தது ... அம்மலையின் உயரம்...

யானையின் தும்பிக்கை பக்கமாக நின்றிருந்த ஆரி, அவ்வளவு நேரம் இருந்த ரசிப்புத்தன்மை மாறி,குறிப்பிட்ட உயரத்தில் தெரிந்த.,நீலிக் குகை சமதள பரப்பை பார்ப்பதற்கு ஏதுவாக;குனிந்தும். எம்பியும் பார்க்க, மரங்களின் கிளைகள் அவ்விடத்தை பார்க்கவியலாமல், மறைத்துக்கொண்டிருந்தன.. சுற்றும் 'முற்றும் அலசி கழியைத் தேடியவன்; கீழே எந்த தடியும் கிடைக்காததால், தாழ்வாக இருந்த மரத்தின் நீண்ட கிளையை ஒடித்தான் ஆரி..

அப்பொழுது, "ஏய் " என்ற கூவலுடன் பெண்னொருத்தி, ஆரியை அணைத்தவாறே, அருவியின் நீர் விழும் ஆழமான பகுதியில் ,
பெண்ணவளின் அணைப்பு, ப்ளஸ் தள்ளுவிசையால், குதித்திருந்தார்கள் இருவரும் .....

காலையில் எழுந்ததிலிருந்தே தன் அப்பத்தாவிடம் ; பல ராகங்களை (அத்தாங்க பெண் பிள்ளைகள் வீட்டில் லேட் எழுவது;பல் விளக்காமல் காப்பி குடிப்பது போன்ற நல்ல செயல்களுக்கு வாங்கும் திட்டுக்கள் ) ஒரே நேரத்தில் செவி டிஸ்கில் ஏற்றிக் கொண்டு, காலை உணவை கூட உண்ணாமல் அருவிக்கரை பாறையில் அமர்ந்து, அவ்விடத்தின் குளுமையால்,, காதில் ஏற்றியவற்றை இங்கு இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள் நம் 2-வது நாயகி..

ஒரு வேளை சாப்பிடாம, அருவிக் கரையில இப்படி வெயிலில் அமர்ந்திருப்பதை அறிந்தால்
கோவாலுகிட்ட, செமத்தையா அப்பத்தாக் கிழவி திட்டு வாங்கும் .. அதன் பிறகு மேலும் சில நாட்களுக்கு எனக்குப் பிடிச்ச சாப்பாட்டு ஐயிட்டமா... செஞ்சுக் கொடுக்கும் கிழவி .. வயசான காலத்துல பாவம் கிழவியை வேலை வாங்காம விடலாம்னா ... கிழவி வாய் சும்மா இருந்ததானே!... போறவன் வூட்ல இப்படி இருப்பியா .. இல்ல அடுப்பு மேல் இருப்பி யானு கடுப்பேத்திகிட்டு.. என்னையை திட்டி பகைச்சுகிட்ட இல்ல; எனக்கு விதவிதமா சமைச்சி போட்டு ...நல்லா அனுபவி.. ஒரு ரெண்டு நாளைக்கு ' என மனத்தினுள் வஞ்சம் வைத்தவளின் வயிறு கத்தி தன் இருப்பை உணர்த்த, வீட்டிற்கு செல்ல எழுந்த நொடி , யாரோ வரும் அரவம் கேட்கவும் ., அப்படி அமர்ந்து , சருகுகள் மிதிப்படும் சத்தத்தை வைத்து, மனிதர்களா... விலங்குகளா?.. என உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்..

ஏழு அடி உயரத்திற்கு சற்று குறைவான உயரத்தில்., அரைக்கால் பேண்ட்யும் , ( பெர்முடாஸ்),
கையில்லாத பனியுமாக தனக்கு முதுகை காட்டி நின்றிருந்தவனின்.,முகம் பார்க்க சற்றே பெண்ணவள் நகர்ந்து அமர, அதற்கு தேவையில்லை என்பது போல் முழுவதுமாக திரும்பிய ஆரி, அங்கும்., இங்கும் , நடந்து கழியைத் தேடிக் கொண்டிருந்தான்.

இதைப்
பார்த்தவளோ ... " ஆளையும், ரெஸ்ஸையும் பார்த்த வெளி ஊருனு தெரியுது, மரத்தப் பிடிச்சிட்டு எதுக்கு
தொங்கறான், ஒருவேளை சுஸைட் பண்ணிக்கு வானேு மரத்தில ெதாங்கி,.. .. அதுக்குத் தான் கயிறு தேடுறானோ? ... இங்க எப்படி டா; கயிறு இருக்கும், சாக வரவன் நீயே எடுத்துக் கிட்டு வரதுதானே!.... அதை விட பெஸ்ட் ஜடியா; பேசாம அருவி மேல இருந்து குதிச்சுடு... ஓ... அப்பவும் சாக மாட்ட.. ஏன்னா ?.. நீ இருக்குற உயரத்துக்கு அருவி மேல ஒருகாலு கீழ ஒரு காலுனு, ஐயன் மேன் மாதிரி தாவி போயிடுவ' .... இப்படி பெண்ணவள் மனதினுள் நினைத்து முடிப்பதற்கும் 'ஆரி கிளையை முறிப்பதற்கும் சரியாக இருந்தது. ஆரியின் செயலில் பெண்ணவள் பதறி கட்டி பிடி, நீரில் குதி... சாகஸத்தை நிகழ்த்தி இருந்தாள்.
நீரில் மூழ்கி பெண்ணவள்; ஆரி வெளியே வராதவாறு அவனைக் கட்டிப்பிடித்து, நீரினுள் அமுக்க, அவளை உதறி தள்ள ஆரிமுனைய, பெண்ணவள் மேலும் ஆரியை இருக்கி நீரினுள் அமிழ்த்தினாள்.... உடல் பரிசத்தினால், தன்னை அணைத்திருப்பது பெண் என உணர்ந்தவன் , அவளிடமிருந்து
விடுபட ....பெண் ஆதலால் கடுமையை காட்ட முடியாததாலும்,, தீடிரென்று, ஏன்?. இப்படி நடந்துக் கொள்கிறாள் என புரியாததாலும், உள்முக்கு நீச்சலிலேயே அவளுக்கினையாக கரையை நோக்கி அவளுடனே நீந்தி .
கணுக்கால் அளவு நீர் வந்ததும், அவளிடமிருந்து பிரியநினைக்க, அது முடியாமல் ஏதோவொன்று தடுக்க, பெண்ணவளோடு மண்தரையில் வீழ, அந் நிலையிலும்;பெண்ணவளின் மீது தனது முழு பாரத்தை இறக்காமல் , பெண்ணவளின் தேகத்தை
உரசியவாறு சரிந்துப்படுத்தான்,;கீழே இருவரும் விழுந்த நொடி , உடனேயே ஆரி எழுந்திரிக்க முயற்சி செய்ய, அந்தோ பரிதாபம் ... நீருக்குள்ளே இருவரின் போராட்டத்தால் பெண்ணவளின் தாவணி கழன்று, இருவரையும் கயிறுப் போல் பிணைத்திருந்ததில், ஆரி எழுந்த வேகத்தில், கீழ்நோக்கி விழ,,
" நச்சென்று " பெண்ணவளின் இதழோடு , ஆரியின் இதழ்கள் மோதின.இதழ் பரிசத்தில் அதிர்ந்த ஆரி, சற்று தலையை தூக்கிப் பார்க்க, தன்னையே கோபமாக பார்த்த இரண்டு சூரிய நீல நிற விழிகள் , பரந்த நெற்றி,
சோழனின் வாள்ப் போன்ற புருவம், கூர்நாசி, அதன் இடது ஒரத்தில் நட்சத்திரம் போன்று சிறிய வெள்ளை மூக்குத்தி, கடிக்க தோன்றும் ஆப்பிள் கன்னங்கள், இதையெல்லாம் ஆரியின் கண்கள் தன்னை மீறி அளவெடுத்துக் கொண்டிருக்கும் போதே, வலது காலை தூக்கி பெண்ணவளின் கால்களின் மீது போட்டவன்,
தாவணியின்றி தீமிறிக் கொண்டிருந்த பெண்ணவளின் இயற்கை எழிலுக்கும், இடைக்கும் இடைப்பட்ட எலுமிச்சை நிற ஆலம் வயிற்றில் தனது வலது கரத்தை வைத்து அழுத்தியவன்;பெண்ணவளின் முகத்தருகே நெருக்கி , தனது ரசிக்கும் பணியைத் தொடர்ந்தான்....

"மாதுளைப் போல் சிவந்த உதடுகள் ,, அதை மீண்டும் தீண்டிப் பார்க்க குனிந்த நொடி, ஆரியின் பார்வையில் எரிமலையை கண்ணில் கக்கிக் கொண்டிருந்தவள்; ஆரியின் கடைசி செயலில் வெகுண்டெழுந்து, தன்னருகே துழாவி, கை நிறைய மணலை அள்ளியவள் நொடியும் தாமதிக்காமல் ஆரியின் முகத்தில் வீசியிருந்தாள்..

தீடிரென்று தன் முகத்தில் பட்ட, மண் துகள்கள், கண்ணிலும் பட்டு பார்வையை மறைக்க அப்பொழுதுதான் தான் செய்துக்கொண்டிருக்கும் செயலின் வீரியம் புரிய, தன் நெற்றியில் அறைந்துக் கொண்டான் ஆரி.. அதே சமயம் தங்களைச் சுற்றியிருந்த தாவணியை உருவியவள், அவனை தள்ளி விட்டு எழுந்து நின்று, தாவணியை தன் மீது போட்டுக் கொண்ட வளின் தேகம் , மழையில் நனைந்த கோழிக்குஞ்சாக நடுங்கிக் கொண்டிருந்தது.
கண்களில் பட்ட மண்துகல்கள் எரிச்சலைக் கொடுக்க, எழுந்து கால்களை நீட்டி அமர்ந்தவன், குறிப்பாக பெண்ணவளைப் பார்த்து ,,
மன்னிப்பு கேட்பதற்குள் .. பெண்ணவள் முந்திக் கொண்டு கடியலானாள் ..
"யோவ், பரதேசி, பன்னாடை.. குரங்கு மாதிரி மரத்தில தொங்கிக்கிட்டு, மரத்துல கட்டியிருந்த "மலை தேனீக் கூட்டை, கலைச்சு விட்டுட்டு . தேனீ கடிச்சு , நீயும் செத்து, உன் பக்கத்துல இருந்த பாவத்துக்கு நானும் செத்திருப்போம், நான் மட்டும் தண்ணிக்குள்ள குதிச்சு என் உயிரை மட்டும் காப்பாத்திகாம,.
அய்யோ! பாவமே! ஊருக்கு புதுசா இருக்கியே.. உன்னையும்
காப்பாத்துலாமேனு நினைச்சு; தண்ணீக் குள்ள தள்ளி, காப்பாத்துனத்துக்கு நல்ல மரியாதை செய்துட்ட டா.. 'பொறுக்கி' எனக் கூறியவள் குனிந்து சிறிய கல்லை எடுத்து ஆரியின் முகத்தில் விட்டெறிந்து விட்டு ..அவ்விடம் விட்டு ஓடி மறைந்தாள் பெண்ணவள்..

அனைத்து உரிமையும் உள்ள தாராவிடம் கூட இடைவெளி விட்டு பழகுபவன், வலிய வந்து தன்னிடம் ஈ.ச முனையும் பெண்களை பார்வையாலே தள்ளி நிறுத்தியவன் .. முன்னது மனத் தேவை, பின்னது உடல் தேவை இரண்டையுமே விலக்கி நிறுத்தியவன்; எந்தப் புள்ளியில் யாரென தெரியாத இப்பெண்ணிடம் ... என் நிலையிழந்தேன். கண் எரிச்சலை விட, இதயம அதிகமாக எரிய ஆரம்பித்தது ஆரிக்கு ..

இவற்றை பார்வையிட்ட விதியோ'இன்னும் இருக்குடா உனக்கு எனக் கைகளை நம்பியார் போல் பிசைந்துக் கொண்டே சிரித்தது...

வதம் தொடரும் ...
 
Top