All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
17 வது யூடியில் இருந்து.. இப்போ தான்க்கா படிச்சேன்.

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.. வித விதமா காதல்களோட கதையே குஜலாவா இருக்கு.. நேர்மறை எண்ணங்களோடு கதை போகுது..

எக்ஸ்க்குச் மீ.. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. ராதையை கிருஷ்ணன் ராவணன் மாதிரி வேஷம் போட்டு கடத்தி வந்து வைத்தது பிருந்தாவனத்தில் தானேக்கா..
:smiley46:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? பெண்களில் நிலையை கண்டு அதற்கு தீர்வையும் சொல்லிய பதிவு..

கிருஷ் தன் குடும்பத்தினர் ஒவ்வொருத்தரும் அருந்ததியை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டும் அடித்து கொண்டும் இருந்த போது இவன் மட்டும் பேசாமல் இருந்தது எதற்கு என்று இப்போது தான் புரிகிறது... அழகாக புரிந்து வைத்துள்ளான் தங்கையை.. இதே அவனும் அந்த நேரத்தில் ஏதாவது பேசி இருந்தால் கண்டிப்பாக அருந்ததி அவனிடம் தன் பிரச்சனையை சொல்லி இருக்க மாட்டாள்... யோசித்து செயல்பட்ட நம் கிருஷிற்கு ஒரு ஜே!

தன் குடும்பத்தில் உள்ள நபர்களை வீட்டு தலைவன் புரிந்து அவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு செயல்பட்டால் எந்த மாதிரி பிரச்சனை என்றாலும் உடனே வீட்டிற்கு தெரியப்படுத்துவார்கள்...

மனோ மாதிரி ஆட்களுக்கு கிருஷ் கொடுத்த தண்டனை சிறிது என்றாலும் இனி மேல் அனைத்திற்கும் இன்னொருவர் உதவியை நாட செய்த செயல் கிருஷ் சொன்னது போல் ஏன் இனிமேல் உயிரோடு இருக்கிறோம் என்று நினைக்க வைத்தது மரண தண்டனை விட அதிகம்... மனோ நிலை கண்டு பரசுவிற்கு தண்டனை கிடைத்து விட்டது... கிழவியும் அடங்கி விட்டாள்...

இந்த மாதிரி சம்பவம் நடந்தவுடன் குடும்பத்தினர் அருந்ததிக்கு கல்யாணம் செய்து அடுத்த வீட்டிற்கு பாதுகாப்பா அனுப்பி தன் பாரத்தை கழிந்து விட்டது என்று நிம்மதி அடைவார்கள்... ஆனால் கிருஷ் போல ஒரு அண்ணன் கிடைக்க அருந்ததி கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

அருமையான உணர்ச்சி பிழம்பான அத்தியாயம் ஸ்ரீ மேம்...

ராதை இது போல் அண்ணன் தனக்கில்லையே என்றதற்கு கிருஷ். அதுதான் புருஷனா நான் இருக்கிறேனே என்பது... இருவரும் கடந்த காலத்தை நினைப்பது... ராதை கிருஷிடம் ஒரு பாதுகாப்பை உணர்கிறாளா???

ஆக்ரோஷமான அபாரமான கவிதை வரிகள்... என்றென்றும் பெண்கள் நிலை இது தான்...

"நாம் மாறினால் மட்டுமே சமுதாயம் மாறும்.. மாற்றம் கொண்ட சமுதாயமே சரித்திரம் படைக்கும்..". அற்புதம் ஸ்ரீ மேம்..
 

TM Priya

Well-known member
Awesome epi mam...kannan radhu sunset partha scene sema...saritha pandiya love panra...arjun anu also cute ma..super ma..arjun ku parivattam katiyachu....eagerly waiting for next epi srimam..
 

Advikasri

New member
இங்க பாருங்க ஹீரோயின் ஆர்மி...
எங்க அர்ஜுன் எப்படி நு ஒரு ஒரு எபிசோட் லிலும் prove பண்ணிகிட்டே இருக்கான்😍😍😍😍
இந்த மா சோதா எங்க ஆள் பாரு எப்படி உன்ன கட்டம் கட்டி தூக்கி இருக்கான், அதுவும் அவன் பொண்டாட்டியை.
இதுக்கு எல்லாம் நீ பேசுனது தான் காரணம், அத இன்னும் சொல்லாம இருக்க🙄🙄🙄
யாரு உன்ன அப்படி எல்லாம் பேச சொன்னது நு.
பாண்டி இன்னும் கொஞ்சம் அவளா சுத்தல்ல விடு அப்ப தான் மறுபடி இந்த மாதிரி உளரமா இருப்பா
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!


இனிய தோழி,

தனிமையில் தேடிய தஞ்சத்தில்
கண்ணனவன் நெஞ்சம்!
இனிமையில் நாடிய தஞ்சத்தில்
மீராவின் நெஞ்சம்!
பேசிப் பேசி வளர்த்த நேசம் ஒன்று
பூசாமல் பூத்தது பாசம் இன்று!

எட்டி நின்ற காதல்
முட்டி வந்ததென்ன?
தட்டி வைத்த காதல்
கட்டிப் போட்டதென்ன?
காதலில் சிலிர்த்த மகன்
மோதலில் உயிர்த்த மகன்
கூதல் காற்று வீசும் நேரம்
கூட்டுக் கிளியை விட்டதென்ன?
விளையாட்டுப் பிள்ளையும்
விற்பன்னனாய் மாறும்
மானுட தர்மத்தில்
மனிதனாய் மீறும்...
காவிய வழக்கு...
காதலில் பிணக்கு!

ஊர் கூடி தேர் இழுக்க
பேர் பாடி சீர் முடிக்க
ராமனாய் பட்டம் தரித்தவன்!
பரிவட்டம் கட்டி
பரிவாரம் காக்க...
பரிணாமம் கண்டால்
பகலவனும் தோற்க...
உறங்கும் உண்மைகள்
ஓங்காரம் செய்ய...
வித்திட்ட கிருஷ்ணனவன்
விருத்தங்கள் கேட்டால்...
பேதை ராதை
பேதலிப்பாளே!

வேற்றுமையில் ஒற்றுமை
காவியக் காதலின் மாற்றிமையன்றோ!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top