Happy news 22

ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்த மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன். நான் தனியே பதிப்பக துறையில் காலடி வைத்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகிறது. நிச்சயம் இந்த மூன்று ஆண்டுகளில் வெற்றிகரமாக ஏறுமுகத்தில் இருந்த நமது பதிப்பகம் இப்போது இன்னும் உத்வேகத்துடன், புதிய ஜொலிப்புடன் “ஸ்டார் ‘எஸ்எம்எஸ் பப்ளிகேசன்ஸ்’ ” என்கிற புதிய பெயரில் வெளிவரவிருக்கிறது. இதுவரை தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை இப்போது வீறுகொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்து இருக்கிறது. பதிப்பகத்தை இன்னொரு பரிமாணத்திற்குக் கொண்டு செல்ல எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது பதிப்பக அத்துணை எழுத்தாள தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 (இத்தகைய ஆதரவினை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை…)

எப்போதும் போல் இப்போதும் வாசக தோழமைகள் உங்களது ஆதரவினை எனக்குத் தருவீர்கள் என்று நம்புகின்றேன். எத்தனையோ தடைகள், எத்தனையோ இடர்கள் என்று பலவித துன்பங்கள், துயரங்கள் வந்தாலும் அதில் நான் துவண்டு விடாது என்னைக் காத்து, எனக்குப் பக்கபலமாக, உறுதுணையாக இப்போது வரை இருக்கும் எனது கணவருக்குத் தான் நான் எனது முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். இதோ இப்போதும் ‘உன்னால் முடியும்’ என்று என்னை ஊக்குவித்து, என்னுள் தன்னம்பிக்கையை விதைத்து எனது செயல்கள் அனைத்திற்கும் துணையாக இருக்கின்றார். அவர் அளிக்கும் ஊக்கத்தில், கொடுக்கும் தன்னம்பிக்கையில் இப்போது பதிப்பகத்தில் புதிய முயற்சி எடுத்தது போல் அடுத்துத் தளம் மற்றும் யூ ட்யூப் சேனலில் புது முயற்சி மேற்கொள்ளப் போகின்றேன்.

ஆம், பெண்களுக்குத் தேவையான அத்தனை பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியாய் ஆன்லைன் ஷாப்பிங்க்கிற்கு என்று தனித்தளம் உருவாக இருக்கிறது (மூன்று தோழிகள் சேர்ந்து இதைச் செய்கின்றோம். அவர்கள் யாரென்பது சஸ்பென்ஸ் 😉😉😉). அதே போல் எனது புத்தகங்களை எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிப்பது போல், அதாவது ‘சப்ஸ்க்ரைப்’ செய்து படிக்கும் வசதியுடன் (உதா : விகடன், குமுதம், கல்கி போன்று…) ஒரு புதிய தளம் உருவாக இருக்கிறது. இதற்கான செயலிகளும் (Apps) சேர்ந்து உருவாக்கப்படுகிறது. தோழமைகள் நீங்களும் தொழில் செய்பவர்கள் என்றால், உங்களது பொருட்களை ஆன்லைன் மூலம் விற்க வேண்டும் என்றால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். எனது வாட்ஸ்அப் நம்பர் +94 77738976. உங்களது திறமையை எங்களது ஆன்லைன் மூலம் வெளிக்கொண்டு வர அனைவரும் வாருங்கள், வந்து எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்…

அடுத்து யூ ட்யூப் சேனல்… விரைவில் எனது யூ ட்யூப் சேனலான ‘எஸ்எம்எஸ் மீடியா’ குறும்படம் ஒன்றை தயாரித்து வெளிவிடவிருக்கிறது. கதை, வழக்கம் போல் நான் தான் 😁😁😁 முன்னோட்டமாக என்னுடைய குறுநாவல்கள் குறும்படங்களாக வெளிவரும். அதற்குப் பின்னர் எனது நெடுநாவல்கள் குறும்படத் தொடர்களாக வரும். பதிப்பகம் போல் ஆன்லைனிலும் நான் இன்னொரு பரிமாணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறேன். நீங்கள் அனைவரும் உடன் வருவீர்கள் என்கிற நம்பிக்கையில்… சொல்லல்லாது செயலில் எதையும் செய்து காண்பிக்க வேண்டும்… இது தான் எனது தாராக மந்திரம். எந்தச் செயலையும் சொல்லாது செய்வது தான் எனது வழக்கம். ஆனால் இந்த முறை சொல்லிவிட்டே எல்லாச் செயல்களையும் செய்யவிருக்கிறேன். நிச்சயம் இதிலும் வெல்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது, எனது கணவர் மற்றும் எனது தோழமைகளாகிய உங்களின் துணையோடு… மாற்றத்தை காண ஆவலுடன், ஆர்வத்துடன் காத்திருங்கள் தோழமைகளே… விரைவில் நீங்கள் விரும்பிய மாற்றத்துடன் வருகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

Logo created by Kavi Chandra Thanks Kavi 😍😍😍😘😘😘

அன்புடன்,
ஶ்ரீகலா 😊

(எங்கே காணாமல் போயிட்டீங்கன்னு கேட்டீங்கல்ல பிரெண்ட்ஸ்… இந்த வேலையைத் தான் செய்து கொண்டிருந்தேன். 😁😁😁)

22 Comments

  1. Wow wow super sis
    Congratulations

    78
  2. Wow!! Very happy for you. Congratulations and wish you all success in all the initiatives. Vazhthukkal thozi!!

    74
  3. Hey super all the best dear .. eagarly waiting for that….

    74
  4. Nice sister all the very best ,கலக்குங்க

    1
  5. All the best Akka ..keep growing more…..👏👏👏👏👌👌😎😎😎

    1
  6. vazhthugal akka

    1
  7. All the very best sis..

    1
  8. Best of luck. …..😍😍😍😍

    1
  9. all the very best mam my best wishes to you ungaluiku enn manamaartha paaraattukkal and vaazhtthukkal vertri ungalukke superb mam(viji)

    1
  10. Congratulations sri

    1
  11. Super sister valthukal

    1
  12. Congrats sister

    1
  13. Wish u all the best sis

    1
  14. All the best my dear. வாழ்க வளமுடன்

    1
    Kaleeswari arun
  15. super super congrats man

    1
  16. வாழ்த்துக்கள் சகோ

    1
  17. இனிய தோழி

    சிந்தையில் மாற்றம்
    சிரிக்கின்ற வேளையில்…
    விந்தையில் தோற்றம்
    விரிக்கின்ற காலையில்…
    சந்தையில் ஏற்றம்
    பூக்கின்ற சோலையில்…
    வீசும் வாசத்தில்
    விவேகமாய் நிமிர்வாரே…!

    வாழ்த்துக்கள் தோழி நன்றி.

    1
    செல்வி சிவானந்தம்
  18. Wish you all success mam

    1
  19. Fantastic Idea…… Wishing you all the best Mam

    1
  20. Wow.all the best sis..

    1
  21. congratulations on growing more and more.

    1
    gokulrichard22
  22. Wow wow super ,congrats mam v r eagerly waiting mam,👍👍

    1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *