sivanayani
விஜயமலர்
Thank you so much Ramya. really We are all blessed ma. romba santhoshmaa iruku.அருமையான பதிவு. நம்ம ஹீரோ பத்தின தியாவோட மைன்ட் வாய்ஸ் எல்லாம் என்னனு சொல்ல........அப்டேட் ஆகாத அவதார் குட்டி, சுடுதண்ணி சூடு பண்ணும் போது பொறந்தவன், சுடுதண்ணி பாயிலர், எரிமலைல ஏறி உட்கார்ந்தவன் எல்லாம் எங்கிருந்து புடிச்சீங்க (16 பேரும் ரூம் போட்டு யோசிச்சீங்களோ ) சும்மா தூள் பறக்குது போங்க. நல்லா சிரிச்சுட்டே படிச்சேன். ஹீரோயின் கீழ விழும்போது ஹீரோ போய் பிடிக்காம அப்படியே சும்மா விறைப்பா நிக்குறாருன்னு பார்த்தா அடுத்த சீன்லியே அவருக்கு தெரியாமலே ஹீரோயின அணைச்சுட்டு இருக்காரு ( என்ன ஹீரோ சார் அதுக்குள்ள பிளாட் ஆக ஆரம்பிச்சுட்டீங்க ) திசைகாட்டியை ஆட்டோ ஷிப்பில் இருந்து மேனுவலுக்கு மாற்றி விட்டு பின் இவள் வரும் அரவம் கேட்டு திரும்பவும் ஆட்டோ ஷிப் மோடில் மாற்றி விட்டான் போலும். இப்போது இவர்களும் பிரச்சனை இல்லை என்று நம்பிவிட்டார்கள். தொலைபேசியின் தொடர்பும் அருந்துவிட்டதை யோசிக்கும் போது தான் தியாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது. அதை தெரிவிக்க வந்தால் நம்ம ஹீரோக்கு கேட்பதற்கு பொறுமை இல்லை. இவள் அவனை விடாமல் துரத்தி சென்றதை பார்த்து தகவல் சொல்லிவிடுவாள் என்று எண்ணும் போது சொன்னா பாருங்க ஒன்னு "கோ டூ தி ஹெல், அங்க தான் எண்ணெய் சட்டி பாய்லர்களுக்கெல்லாம் வேலை இருக்கும்னு" அவனை போல நானும் அப்படியே ஷாக் ஆயிட்டேன். ( ஏம்மா இங்க சீரியஸ்ஸா ஏதோ ஆக போகுது அது தெரியாம அவனை திட்டுற நேரமா இது ) இது எல்லாம் விதின்னா சொல்றீங்க (நீங்கள் 16பேரும் சேர்ந்து செய்த சதி ) இதுல திமிங்கலம் வேற ஓலம் போடுது, பெரிய அலை ஒன்னு சீறி பாய்ஞ்சுகிட்டு வருது செம தான்....... இனி தான் கொண்டாட்டம் எல்லாம் திண்டாட்டம் ஆக போகுது.