All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS வாரியர்ஸ் 016 கதைத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அங்கே தன் வாயைப் பொத்தியவாறு விழிகளில் கண்ணீர் மல்க நின்றிருந்த பெண்ணைக் கண்டதும்,


“அன்ன…” என்றவாறு பாய்ந்தவள், ஓடிச்சென்று அவரை அணைத்துக் கதறத் தொடங்க, ஒருவரின் அணைப்பில் ஒருவராக நின்றிருந்த பயணிகளுக்கு எதுவும் புரியாத நிலை. குழப்பத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டுத் தம்மைச் சுற்றியிருந்த இராணுவத்தைப் பார்த்துக் குழம்ப, அதிலிருந்து ஒருவர் முன்னால் வந்து,


“ஹாய்… ஐ ஆம்… ஜோஷ்… ஃப்ராம் UNCLOS ” என்றவர் பின் அங்கிருந்தவர்களைப் பார்த்து, “இதில் வாரியர்ஸ் 016 கப்பலின் கேப்டன் யார்?" என வினவ,


ஓரடி முன்னால் வைத்த ஆர்யன்,


“இட்ஸ் மி…” எனவும், அவனை நெருங்கிக் கை குலுக்கியவர், ஆங்கிலத்தில் தன் பேச்சைத் தொடர்ந்தவராக,


“உங்கள் அனைவரையும் காப்பாற்றி அழைத்துச் செல்ல நியமிக்கப்பட்டவர்கள் நாங்கள்… கடந்த மூன்று நாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நேற்று முன்தினம், உங்கள் நாட்டைச் சேர்ந்த மிஸ்டர் அதீந்திரன், நீங்கள் அனுப்பிய செய்தியை வைத்து, இடத்தைக் கண்டு பிடித்ததாகத் தெரிவித்தார்கள். பட், குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியாத நேரத்தில்தான், மோஸ் கோட் மூலம் நீங்க உதவி கேட்டிருந்தீங்க. சோ, சரியான இடத்தை எங்களால் கண்டு பிடிக்க முடிந்தது…” என்று கூற... நிம்மதியுடன் பெருமூச்சொன்றை விட்ட ஆர்யா,


“நல்ல நேரத்திற்கு வந்தீர்கள் ஜோஷ்… சற்றுத் தாமதித்திருந்தாலும், எங்களை கண்டந்துண்டமாக வெட்டிப் புதைத்திருப்பார்கள். .…” என்று கூறிவிட்டு, இன்னும் எழாது தரையிலேயே விழுந்திருந்த பழங்குடிகளைப் பார்த்துவிட்டு அவர்களுடன் வந்த பெண்ணைச் சுட்டி காட்டி ,


“யார் அவங்க? எதுக்காக அவங்களைக் கண்டதும் எல்லாரும் விழுந்து கும்பிடுறாங்க?” என்று ஆர்யன் கேட்க, ஜோஸும் அதைக் கண்டு சற்று நேரம் அமைதி காத்தார். பின் திரும்பி ஆர்யனையும் மற்றைய பயணிகளையும் பார்த்துவிட்டு,


“அவள்… இந்த தீவில் வசிக்கும் பழங்குடியின தலைவனின் மகள்…” என்றார்.


“வாட்?!! இந்த தலைவனின் மகளா!!" என்றவன் நம்ப முடியாதவனாக அவர்களை உற்றுப் பார்த்தான். அந்த நிர்வாணப் பழங்குடிகளுக்கும், நாகரீகமாக ஆடையணிந்திருக்கும் பெண்ணுக்கும் எப்படி சம்பந்தம் இருக்க முடியும்? ஆனாலும் உருவ ஒற்றுமை கச்சிதமாகப் பொருந்தியது. புரியாமல் குழம்ப, அவன் தோளில் தட்டிக் கொடுத்த ஜோஷ்,


“இந்தத் தீவை இதை சென்டினல் தீவுன்னு சொல்லுவாங்க... உலகிலேயே மிகப்பயங்கரமான தீவுன்னா அது இதுதான். இந்த தீவை யாரும் துணிந்து இது வரை நெருங்கியதில்லை தெரியுமா? ஏன் எனில், இங்கே இருக்கிறவர்களுக்கு வேற்று இன மக்களின் நாகரீகத்தின் ஆதிக்கம் தங்கள் பண்பாட்டிற்குள் நுழைவது பிடிக்காது.. அவற்றால், அவர்களின் வாழ்க்கைத் தரம், சீர் குலைவதாக எண்ணம்.. மதமாற்றம், மொழி மாற்றம், வாழ்க்கை மாற்றம், மருத்துவம், ஆடை என்று எத்தனையோ விஷயங்களை இவர்களுக்குள் திணிக்க முயன்றார்கள். அதற்கு இந்த மக்கள் சம்மதிக்கவில்லை. அதனால் பலவந்தப் படுத்த முயன்றார்கள். கோபம்கொண்ட இந்த மக்கள், தமது தீவுக்குள் வேற்று இனத்தவர்கள் நுழையக் கூடாது என்று கடும் சட்டம் போட்டனர். மீறி நுழைந்தால், அவர்களைத் தயங்காமல் கொன்று குவித்தனர். இதனால், இம்முழுத் தீவையும், அதனைச் சுற்றி மூன்று மைல் சுற்றளவு கடற்பகுதியையும் இந்திய அரசு தவிர்ப்பு வலயமாக அறிவிச்சிருக்கு...


இந்த மக்களின் டி என் ஏ என்ன என்பதைக் கண்டறிவதற்கும், இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிவதற்காகவும், இவர்களின் உடற்கூறு எத்தகையது, என்பதைக் கண்டறியவும், ஆறு வருடங்களுக்கு முன்பு பிரித்தானியாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவரால் இரு குழந்தைகள் கடத்தப்பட்டன. அதில் எட்டுவயது சிறுவனுக்கு பிரித்தானிய நாட்டின் தட்பவெட்பம் ஒத்துக் கொள்ளாததால், சில வாரங்களில் இறந்து விட்டான். மிஞ்சியது பன்னிரண்டு வயது சிறுமி… அவளை வைத்துப் பல பரிசோதனைகள் செய்து பார்த்தார்கள். மேலும் சில ஆய்வுக்கு அவள் தேவைப்பட்டதால், அந்தக் குழந்தையைத் தம்மோடு வைத்துக்கொண்டார் அந்த ஆய்வாளர்…” என்ற ஜோஷ். பின் அந்தப் பெண்ணைப் பார்த்து,


“இவள்தான் அந்தச் சிறுமி… இவள் கடத்தப்படும் போது, இவள்தான் இந்த நாட்டின் இளவரசி என்று அந்த ஆய்வாளருக்குத் தெரியாது…” என்று கூற, ஏனோ அந்தப் பெண்ணை நினைத்து அங்கிருந்தவர்களுக்குப் பெரும் வேதனை எழுந்தது.


“சே… ஆய்வு என்கிற பெயரில், அந்தக் குழந்தையைத் தந்தை தாயிடமிருந்து பிரித்து விட்டார்களே… எத்தனை பெரிய குரூரம்…” என்று அம்ருதசாகரி சீற,


“உண்மைதான்… ஆனால் உங்களைக் காக்க இந்தப் பெண்தான் இப்போது உதவினாள்… இந்தத் தீவிற்குள் நுழைந்து யாரும் வெளியேற முடியாது… அதுவும் இந்தப் பெண் கடத்தப்பட்ட பின்பு, இங்கிருந்த மக்களின் ஆவேசம் அதிகரித்து விட்டது. அதனால் அதீந்திரன் இந்த இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டதும், எங்களுக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. அப்போதுதான், இந்தப் பெண் பற்றிய செய்தியை அறிந்தோம். பிருத்தானிய அரசோடு பேசி, இவளை இங்கே அழைத்து வந்தோம்…” என்று முடிக்கவில்லை, அது வரை அமைதி காத்த அந்தத் தலைவர், திடீர் என்று ஆவேசம் கொண்டவராகத் தன் மொழியில் எதையோ கூற, அடுத்த கணம் தலைகுனிந்து அமர்ந்திருந்த பழங்குடியினர் வேகமாக எழுந்து நின்றனர்.


தமது ஆயுதங்களைக் கரத்தில் எடுத்து, இவர்களைத் தாக்கத் தயாராக, உடனே அந்தப் பெண், அவர்களின் மொழில் எதையோ சொன்னவாறு மறுத்து நடுவில் வந்து நிற்க, அந்தப் பழங்குடியினர் அந்தப் பெண்ணின் பேச்சைத் தட்ட முடியாது அப்படியே நின்றனர். பின் அந்தப் பெண், எதையோ விளங்கப் படுத்தினாள் போலும், தலைவரின் கோபம் அடங்காவிட்டாலும், தன்னைக் கட்டுப்படுத்தியவராக எதையோ கூறினார். தலையை ஆட்டிய அந்தப் பெண் இவர்கள் பக்கமாக வந்து தலை குனிந்து நிமிர்ந்து, ஆங்கிலத்தில்,


"மன்னிக்க வேண்டும். உங்களுக்கு இங்கே தங்க அனுமதியில்லை… கிளம்புங்கள்…” என்று உத்தரவிட, அவளுடைய ஆங்கிலத்தைக் கேட்டு அனைவரும் ஒரு கணம் திகைத்துப் போயினர்.


ஆனால் அவளருகே வந்த ஜோஷ்,


“நீ என்ன செய்யப் போகிறாய்? எங்களுடன் வரப்போகிறாயா?” என்று கேட்க மறுப்பாகத் தலையாட்டிய அந்தப் பெண்,


“இல்லை… இது என் நாடு… இவர்கள் என் மக்கள்… இந்த இடத்தை விட்டு நான் எதற்காக வர வேண்டும்?… என்னைக் காணவில்லை என்றதும், தெய்வம் தம்மீது கோபம் கொண்டு, என்னைப் பலிகொண்டு விட்டது என்று துடித்துப் போயிருக்கிறார்கள்.. என்னைக் கண்டதும் தெய்வம் கோபம் தணிந்து விட்டுவிட்டது என்று நம்புகிறார்கள்… அந்த நம்பிக்கையை அழிக்க நான் விரும்பவில்லை…” என்று மறுக்க,


“சரி… நாங்கள் கிளம்புகிறோம்… முடிந்தால்… இவர்களுக்குக் கொஞ்சம் நாகரீகம் சொல்லிக் கொடு…” என்று கூறிய ஜோஷை ஆத்திரத்துடன் பார்த்தாள் அந்தப் பெண்.


“நாகரீகத்தைச் சொல்லிக் கொடுப்பதா? என் மக்களின் நாகரீகத்தில் என்ன குறையைக் கண்டுவிட்டீர்கள்… எங்கள் மக்களுக்கு இப்படி தமது சுயநலத்திற்காக இளம் குழந்தைகளைக் கடத்தத் தெரியாது… இப்படித் தாய் தந்தைகளிடமிருந்து பிரிக்கத் தெரியாது… இங்கே பெண்களைத் தெய்வங்களாகப் போற்றுகிறார்கள். அவர்களைத் தமது கரங்களுக்குள் வைத்துப் பொத்திப் பாதுகாக்கிறார்கள்…” என்றவள் பின் ஏளனத்தில் உதடுகள் நெளிய, “இங்கே எந்த ஆணும் பெண்களை வன்புணர்வு செய்வதில்லை. எந்த மனிதனும், தன் சுயநலத்திற்காக இன்னொரு மனிதனைக் கொல்வதில்லை, எவனும் மதம் என்கிற பெயரில் மதம் கொண்டு திரிவதில்லை., எவனும் தன் கொள்கைகளைப் பிறரிடம் திணிப்பதில்லை… இதுதான் பாதை என்றால், அந்தப் பாதையை விட்டு வழுவாமல் வாழ்கிறோம்… எங்களுக்கு நீங்கள் நாகரீகம் பற்றி கற்பிக்கப் பார்க்கிறீர்களா?... வேடிக்கையாய் இல்லை.. ? முதலில் உங்கள் மக்களுக்கு நாகரீகம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுங்கள்…” என்று ஆத்திரத்துடன் கூற,

“சாரி யாசி… நான் நாகரீகம் என்கிறதை நீ தப்பாகப் புரிந்துவிட்டாய்… உங்கள் குழந்தை வயதில் விவாகம், அது தப்பில்லையா… ஆடி ஓடி விளையாடித் திரிய வேண்டிய குழந்தைகளை… இப்படித் திருமணம் என்கிற பெயரில் அடக்கி ஆள்வது சரியா? அதைத்தான் சொன்னேன்…” என்று ஜோஷ் அவசரமாகக் கூற, அதைக் கேட்டு நகைத்தவள்,


நாங்கள் பன்னிரண்டு வயதில் திருமணம் முடிப்போம்… முடிக்காமல் விடுவோம் அதைக் கேட்கவோ தலையிடவோ யாருக்கும் அதிகாரமில்லை ஜோஷ்… அது எங்கள் வழக்கம்… என்று முதல் உதிரத்தைக் காண்கிறோமோ, அப்போதே குழந்தைகளைச் சுமக்கத் தயார் என்று இயற்கை கட்டளையிடுவதாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையைச் சிதைக்க நீங்கள் யார்…” என்று அவள் நிதானமாகக் கேட்க,


"இந்த வயதில் குழந்தைகள் பெறுவது, பெண்களுக்குத்தான் ஆபத்து யாசி... உங்கள் நன்மைக்காகத்தான் சொல்கிறோம்..." என்று புரிய வைக்க முயல,


"அது எங்கள் பிரச்சனை... எப்போதாவது, எங்களுக்கு உதவுங்கள் என்று உங்களை கேட்டு வந்தோமா... இல்லை எங்கள் வாழ்வாதாரத்திற்கு நீங்கள்தான் உதவுகிறீர்களா... எங்கள் சமூகத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்... உங்கள் நாகரிக மனிதர்களிடம், எங்களை நெருங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்..." என்றாள் யாசி அலட்சியமாக.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
“ ஐ அம் சாரி டு ஸே யாசி… இப்படி ஆடைகள் இல்லாமல்… கல்வியறிவு இல்லாம, உலகத்தோடு ஒன்றாமல், மருத்துவமில்லாமல்... வாழ்வது உங்களுக்குத்தான் தீங்கு. உங்களுக்கு உதவ வருபவர்களைக் காட்டு மிராண்டிகள் போல கொள்கிறீர்கள்.. இது தவறில்லையா? .? உங்களுக்கு உதவத்தான்..." என்று அவர் கூறிக்கொண்டு வந்தவரைத் தன் கரம்நீட்டித் தடுத்தாள் யாசி.


“காட்டுமிராண்டிகள்…இந்தப் பெயரால் என்று என்னை எத்தனை முறை அவமானப் படுத்தி இருக்கிறார்கள் தெரியுமா?” என்று கேட்டவளின் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது.


பின் ஆத்திரத்துடன் அவரைப் பார்த்து,


“நாங்கள் காட்டுமிராண்டிகள் என்று முடிவு செய்ய நீங்கள் யார்? ஐந்து வயது குழந்தைகளை கற்பழிக்கும் நாகரிக மனிதன் காட்டு மிராண்டியா? இல்லை முதல் உதிரம் வந்ததும் திருமணம் முடித்து முறையாய் வாழும் என் இனம் காட்டு மிராண்டிகளா? நாகரீகம் என்கிற பெயரில் உடல் முழுவதும் தெரிய ஆடை அணியும் நவநாகரீக மனிதர்கள் காட்டு மிராண்டிகளா..?! இல்லை, வாழ்க்கை முறைக்காக இயற்கையோடு ஒன்றி ஆடை இல்லாமல் வாழும் நாங்கள் காட்டு மிராண்டிகளா? தன் லாபத்திற்காக மிருகங்களின் தோல்களை உரித்து அதை ஆடையாக்கி லட்சம் லட்சமாய் சம்பாதிக்கும் உங்களைப் போன்ற மனிதர்கள் காட்டு மிராண்டிகளா, இல்லை அவற்றை எங்கள் உறவாக எண்ணிப் போற்றிப் பாதுகாக்கும் நாங்கள் காட்டு மிராண்டிகளா? ஆய்வு என்கிற பெயரில் குழந்தைகள் என்றும் பார்க்காமல் கடத்தி சென்று சித்திரவதை படுத்துபடுத்துபவர்கள் காட்டு மிராண்டிகளா?? இல்லை நாம் உண்டு, நம்முடைய வேலை உண்டு என்று வாழும் நாங்கள் காட்டு மிராண்டிகளா? ஜாதி மதம் இனம் என்கிற பெயர்களில் கண்டமேனிக்குக் கொலைசெய்யும் நீங்கள் காட்டுமிராண்டிகளா, ஒன்றே குலமென்று வாழும் நாங்கள் காட்டுமிராண்டிகளா? எத்தனை சுயநலம் …! உங்கள் மதத்திற்காகவும், உங்கள் இனத்திற்காகவும், போர் என்கிற பெயரில் எத்தனை நாடுகளை அழித்துவிட்டீர்கள்… நீங்கள் காட்டு மிராண்டிகளா, இல்லை பிறருக்குத் தொல்லையில்லாமல் நிம்மதியாக வாழ நினைக்கும் நாங்கள் காட்டுமிராண்டிகளா?”” ஆழ மூச்செடுத்து விட்டவள்,

“ நாகரீக மனிதன் என்று சொல்லும் உங்களுக்கு தெரியாத புரியாத, பிடிக்காத ஒன்றை ஒரு மனிதன் பின்பற்றினால், அவன் பின்தங்கியவன், நாகரீகம் அற்றவன், காட்டுமிராண்டிகள், திருத்தப்பட வேண்டியவர்கள்... முட்டாள்கள்… ஹா ஹா வேடிக்கையாக இல்லை… போங்க சார்... போய் முதலில் உங்க மக்களுக்கு நாகரீகம் பற்றிக் கற்றுக்கொடுங்கள்... ஒரு நாடு மகிழ்ச்சியாக இருந்தால் அது உங்களுக்குப் பொறுக்காது, ஒரு மதத்தைப் பின் பற்றினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, சற்று முன்னேறினால், அதை பொறுத்துக்கொள்ள முடியாது... உடனே அதன் மீது போர் தொடுத்து அதை அழிக்க வேண்டியது... இல்லை ஆயுதம் கொடுத்து இரண்டு நாட்டுக்குள் சண்டை மூட்டி விடுவது... பணம் சம்பாதிப்பதற்காக வியாபார இலக்கணத்தை மாற்றுவது.... மருத்துவம் என்கிற பெயரில் கண்ட கண்ட மருந்துகளை கொடுத்துக் கொழுப்பெடுத்துத் திரிவது… நீங்கள் நாகரீகம் பற்றி எனக்கு சொல்கிறீர்களா... ஒரு உண்மை சொல்லட்டுமா, உங்களைப்போன்ற மனிதர்களுடன் வாழ்ந்த இந்த ஆறு வருடங்களில், என் கண்களுக்கு நீங்கள்தான் காட்டுமிராண்டிகள் போலத் தெரிந்தீர்கள்... இன்னிக்கு நீங்க சொல்ற நவநாகரீக மனிதன், வியாபார முதலைகளின் அடிமைகளாக இருக்கிறார்கள் தெரியுமா... நாங்கள் அப்படி இல்லை. இது என் நாடு... என் மனிதர்கள். இங்கே நாம் இடுவதுதான் சட்டம். இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை.. எங்களை போய் காட்டு மிராண்டிகள் என்கிறீர்கள். ஆச்சர்யமாக இல்லை!!” என்றவள் தன் விழிகளை மூடிச் சற்று நேரம் அமைதி காத்தாள் பின் நிமிர்ந்து,


“எங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய விழைகிறீர்கள் என்றால், எங்களைப் போன்ற பழங்குடிகளைத் தொந்தரவு செய்யாமல் நிம்மதியாக இருக்க விடுங்கள். தனி நபருக்கு தனியுரிமை என்று வாய்கிழிய பேசும் நீங்க, தன்பாட்டில் ஓரமா இருக்கிற எங்களுக்கு எதுக்கு குடைச்சல் கொடுத்திட்டிருக்கீங்க? சத்தியமாக எனக்கு புரியவில்லை. நாங்கள் இத்தனை காலமாக இப்படித்தான் வாழ்கிறோம். இனியும் வாழ்வோம்…” "அதில்லை யாசி... கல்வியறிவு எத்தனை முக்கியம் தெரியுமா... அது உங்களை வளப்படுத்தும், உங்களுக்கு உயர்ச்சியைக் கொடுக்கும்..." என்று அவளைத் தன் பக்கம் வளைக்க முயல, ஏளனத்துடன் சிரித்தவள்...


“கல்வியறிவு.. ஹா ஹா ஹா ... அப்படி என்றால் என்ன சார்.. சரி... நீங்கள் சொல்லும் நவநாகரீக மனிதன் கல்வியறிவில் சிறந்து எதைச் சாதித்துவிட்டான்? உலகையும் இயற்க்கையையும் அழிக்க ஏதாவது கண்டுபிடித்துவிட்டு, மார்தட்டிக்கொள்வான்... முட்டாள் தனமான வாழ்விற்கு சற்றும் உதவாத.. கல்வியறிவை எங்களுக்குள் திணித்து, எண்களையும் உங்களைப்போல இயந்திரமாக வாழச் சொல்கிறீர்களா?… உங்களுக்குக் கல்வி என்கிறது வெறும் காகிதத்தில் எழுதும் எழுத்துக்களும், உங்கள் பெயர்களுக்குப் பின்னால் போடும் பட்டங்களும்தான். எங்களுக்குக் கல்வி என்கிறது… அனுபவம்… ” என்று தெளிவாகக் கூறியவள், பின் அங்கிருந்த பயணிகளைப் பார்த்து,




“நீங்கள் ஆபத்தான நிலையில் இங்கே வந்திருக்கிறீர்கள்… எங்கள் குடிகளுக்குத் தொல்லை செய்யாது ஓரமாக அமர்ந்திருந்தால் இந்த சிக்கல் உங்களுக்கு வந்திருக்காது… நீங்கள் எங்கள் குடிக்குள் அனுமதியின்றி நுழைந்ததோடு, எங்கள் தெய்யோவை உங்கள் ஆள் எடுத்துச் செல்ல முயன்றிருக்கிறான்… அதனால் கோபம் கொண்டுதான் எங்கள் மக்கள் உங்கள் கூட சண்டை பிடித்திருக்கிறார்கள்… இங்கே பெண்களின் தொகை மிகக் குறைவு. அதனால் பெண்களைக் கடவுளின் அவதாரமாகப் போற்றுகிறார்கள்… அவர்களே உங்கள் பெண்களையும் தாக்கி இருக்கிறார்கள் என்றால், தவறு என் மக்களின் மீதல்ல… உங்களின் மீதுதான்…” என்றவள் மெல்லியதாகச் சிரித்து,

“ட்ரக்கியூலா… கேள்விப்பட்டிருக்கிறீங்களா…” என்றாள் ஜோஷைப் பார்த்து. அவர் ஆம் என்று தலையை ஆட்ட, ஆர்யாவை ஏறிட்ட யாசி,

“ரோமேனியாவின் சிற்றரசன். மிகப் பெரும் வீரன்… அவனை யாராலும் அசைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ரோமப் பேரரசு இவனுக்கு எதிராக போர் தொடுத்தபோது அந்த சிற்றரசனை வெல்ல முடியாது தோற்றுப் போன நிலையில், இறுதியாகத் தங்கள் மரியாதையைக் காப்பாற்றுவதற்காக, ட்ரக்கியூலா இரத்தம் குடிக்கும் வம்பயர் என்றும், அவனுக்கு சாவில்லை… அதனால் அவன் நாட்டைப் பிடிக்கவேண்டாம்… என்றும் ரோமப்பேரரசு கதை கட்டியது… இறுதி வரைக்கும் அவன் மனிதனல்ல இரத்தம் குடிக்கும் வம்பயர் என்றே உலகம் நம்புகிறது… அதிலிருந்துதான் இன்றைய வம்பயரே வந்தது… எங்களைப் போன்ற குடிகளும் அப்படித்தான்... எம்மை நேராக நின்று ஜெயிக்க முடியாதபோது, நாம் தாழ்த்தப்பட்டவர்களாகிறோம்… நாகரீகம் தெரியாதவர் ஆகிறோம்." என்றவள் ஆத்திரம் மிக்க குரலில் ஜோஷைப் பார்த்து,


"உங்கள் சுயநலமான ஆய்வுக்காக இந்த மக்கள் இழந்தது எத்தனையோ… என் தம்பி… என் தம்பி இன்று உயிரோடு இல்லை… அதற்குக் காரணம் யார்… நீங்கள்… உங்களது காட்டுமிராண்டி மனிதர்கள்.. ஆறு வருடங்கள்… நான் என் தாய் தந்தையுடனான அன்பை இழந்திருக்கிறேன். ஆறு வருடங்கள் ஒரு கைதி போல, ஒரு கண்காட்சி பொருள் போல.. சோதனை மிருகமாக நடமாடியிருக்கிறேன்… அதுமட்டுமா, சீ.. சொல்லவே கூசும் செயல்களை என்னிடத்தில் செய்திருக்கிறார்கள்... இதெற்க்கெல்லாம் யார் பதில்சொல்வார்கள்... அந்த ஆறு வருடங்களை எனக்குத் திருப்பிக் கொடுப்பீர்களா? என் உணர்ச்சிக்கு யார் மதிப்புக் கொடுத்தீர்கள். நான் இங்கே இருந்திருந்தால் எனக்குத் திருமணம் முடிந்திருக்கும்… எனக்கும் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்திருப்பார்கள்.. அவர்களைச் சந்தோஷமாக வளர்த்திருப்பேன்… அதை நாசமாக்க யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது? உங்களுக்கு வேண்டுமானால் குடும்பம் குழந்தைகள் இரண்டாம் பட்சமாகிக் கல்வி முக்கியமானதாக இருக்கலாம்… எங்களுக்கு அப்படி அல்ல… நாம் இயற்கையின் கொடையில் பிறந்தவர்கள். அதன் வளர்ப்பில் வளர்ந்தவர்கள்… அதன் படி வாழ்ந்து மடிய விரும்புகிறோம்…” என்று ஆவேசமாகப் பேசியவள், தன் இரு கரங்களையும் அடித்துக் கும்பிட்டு,


“தயவு செய்து உங்கள் சுய நலத்திற்காக எங்களைப் போன்ற சிறு இன மக்களின் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள்… நீங்கள் அழிப்பது மக்களை மட்டுமல்ல, பலவித பண்பாடு பழக்க வழக்க நாகரீகங்களையும் தான்…” என்றவள், “உங்கள் நாட்டிற்குச் சென்ற பின், நான் சொல்வதை மறக்காமல் தெரிவித்து விடுங்கள்… எங்கள் நாட்டிற்குள் மறந்தும் யாரும் வந்துவிடாதீர்கள்… என் தெய்வம் தவறானது, உங்கள் தெய்வம்தான் உண்மையானது என்னும் முட்டாள் தனமான வழக்கத்தை எங்கள் மீது திணிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்… மருத்துவம் பார்க்கிறேன் என்கிற பெயரில், கண்ட கண்ட மருந்துகளை எங்களுக்குக் கொடுப்பதற்காக வர வேண்டாம் என்று சொல்லுங்கள்… எங்கள் குலம், எங்கள் நாகரீகம், எங்கள் பண்பாடு இதுதான்… இப்படியே இருக்கிறோம்” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அணிந்திருந்த தன் மேலாடையைக் கழற்றித் தூக்கி எறிந்தாள்… அந்தப் பழங்குடிகளின் பழக்க வழக்கத்திற்கேற்ப மேலே நிர்வாணமானவள், அதே திமிருடன், அதே தைரியத்துடன் அன்னையை நோக்கிச் செல்ல, சென்ற அந்தப் பெண்ணையே அனைவரும் வாய் பிளக்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


சென்று கொண்டிருந்தவள் தன் தாயை அணைத்தவாறு நின்று திரும்பி,


“உங்களுக்கான நேரம் இன்னும் அரை மணி நேரம் மட்டும்தான். அதற்குள் இந்த இடத்தை விட்டுச் சென்று விடுங்கள்… அதற்குப் பிறகு நடக்கும் சேதாரத்திற்கு நான் பொறுப்பல்ல… உங்கள் துப்பாக்கி எங்களை ஒன்றும் செய்யாது… ஏன் என்றால்… நாங்கள் இயற்கையின் பிள்ளைகள்…” என்று கூறிவிட்டு, அவர்களின் மொழியில் எதையோ கூறியவாறு காட்டை நோக்கி தலை நிமிர்ந்து செல்ல ஒரு கணம் அமைதியாக நின்றிருந்தவர்கள், மறு கணம் சண்டையில் இறந்த தம் ஆட்களின் உடலை சுமந்தவாறு அப்பெண் சென்ற வழியில் சிலர் செல்ல, மற்றவர்கள் 'எப்போது இந்த இடத்தைக் காலிசெய்வீர்கள்' என்ற பாவனை முகத்தில் தெரிய ஆயுதங்களை உயர்த்தியபடி.. முறைத்தவாறு நின்றனர்.


இரு கைகளை உயர்த்திய ஜோஸ், "அவள் சொன்னது சரிதான்.. அவர்கள் வாழ்வை அவர்கள் வாழட்டும்.. நாம் கிளம்பலாம்.. " என்றவர் சத்தமாக,


“இங்கே… அழகர் யார்?” என்றார்.


http://srikalatamilnovel.com/community/threads/sms-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-016-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.1160/page-86#post-252497

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர்ஸ் 016 கதையோட 22ஆம் அதிகாரம் பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. இன்னும் இரு அதிகாரங்களில் கதை நிறைவடைந்துவிடும் என்பதையும் கூறிக்கொள்கிறோம். அதனால் படிப்பவர்கள் இப்போதே படிக்க ஆரம்பித்து விடுங்கள். அத்தோடு சென்ற பதிவுக்காக கருத்துக்கள் கூறி அத்தனை எழுத்தாளர்களையும் மகிழ்வித்த உங்க எல்லாருக்கும் நன்றி நன்றி நன்
 

sivanayani

விஜயமலர்
12074


(23)


“இங்கே அழகர்னு…” என்று அவர் சுற்றி பார்வையை செலுத்தி முகங்களை ஆராய்ந்தவாறு கேட்க, சிதைந்து போன குடிசையில் குற்றுயிரும் குலை உயிருமாக நின்றிருந்தவனை ஆர்யன் கை காட்ட, திரும்பிய ஜோஷ், தன்வீரர்களிடம்

“இவரைத் தனிப்பட்ட முறையில் ஏத்துங்க… இவருக்கு பாதுகாப்பாக இரண்டு பேர் அமர்ந்துக்கோங்க…” என்று உத்தரவிட, ஆர்யன் திகைத்துப் போனான்.

“ஏன்… என்னாச்சு… எதுக்கு அழகரைத் தனியாக அழைச்சுட்டுப் போறீங்க…?” என்று கேட்க, உடனே தன் ஜாக்கட்டிலிருந்து உள்ளே வைக்கப்பட்ட ஒரு கவரை எடுத்து ஆர்யனிடம் நீட்டியவாறு,

“ஏன்னா… அவருக்குத் தீவிரவாதிகளோடு தொடர்பிருக்குன்னு எங்களுக்கு செய்தி அனுப்பிச்சிருக்காங்க… அங்கே போனதும், இந்திய காவல்துறையிடம் இவரை ஒப்படைக்கனும்னு கேட்டிருக்கிறாங்க…” என்றதும் ஆர்யன் யோசனையுடன் அந்தக் கவரைத் திறந்து பார்த்துப் படித்தான். படித்தவனுக்கு மாபெரும் அதிர்ச்சி.

சுற்றுலாப் பயணம் செய்யச் சென்ற பயணிகளின் கப்பலை சேதம் விளைவித்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவித்த குற்றத்திற்காகவும், காவல்துறையின் பாதுகாப்பிலிருந்து தப்பித்துச் சென்ற குற்றத்திற்காகவும், அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தீவிர தொடர்பில் இருந்ததற்காகவும், அழகரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது அந்தக் கடிதத்தில்.

“அழகர் தீ..விரவாதியா… அவன் எதற்கு நம் கப்பலை சிதைக்க வேண்டும்? தவிர அவன் எப்படி நம்ம கப்பலில்…” என்று நம்ப முடியாத தன்மையுடன் கேட்க,

“தெரியவில்லை… எங்களுக்கு இடப்பட்ட உத்தரவு, உங்களைக் காப்பதும், இவனைக் கைது செய்வதும் மட்டும்தான்…” என்றவர், தொடர்ந்து உத்தரவிட, அழகர் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்பட்டான்.

மரணத்தைத் தழுவியவர்கள் தக்க மரியாதையுடன் இன்னொரு ஹெலிக்காப்டரில் ஏற்றப்பட்டனர். அடிபட்ட மற்றவர்கள், ஸ்ட்ரெச்சரில் வைத்தவாறு தூக்கி செல்லப்பட்டனர். ஆர்யனுக்குப் பாதத்தில் காயம் இருந்தாலும், தன்னால் சமாளிக்க முடியும் என்பது போல ஹெலிக்காப்டரில் ஏற முயன்ற விநாடி அவனுக்குத் தியாவின் நினைப்பு வந்தது. அவள் எங்கே என்று தேட, அவள் இன்னொரு ஹெலிக்காப்டரின் அருகே ஏறுவதற்குத் தயாராக நின்றிருந்தாள்.

இவன் நிதானமாக ஏறியவாறு அவளைப் பார்க்க, ஏறுவதற்குத் தன் காலை வைத்தவள், எதுவோ உந்தத் திரும்பிப் பார்த்தாள். அங்கே ஆர்யன், உள்ளே அமர்ந்தவாறு இவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன எண்ணினாளோ, நிமிர்ந்து அங்கே நின்றிருந்த இராணுவ வீரனிம் எதையோ கூறிவிட்டு, மெதுவாக இவன் இருந்த ஹெலிக்காப்டரின் அருகே வந்தாள்.

அவனை நெருங்கியவள், இரண்டு கரங்களையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டி அண்ணாந்து பார்த்து,

“உங்கள் கூடவே பயணிக்க இடம் கிடைக்குமா?” என்று கேட்டாள். சில விநாடிகள் அவளை உற்றுப் பார்த்தவன், தன் நான்கு நாட்களாக முளைத்த தாடியை வருடிக் கொடுத்தவாறு,

“காலம் முழுவதும் என்னோடு பயணிப்பதாக இருந்தால், இடம் இருக்கிறது…” என்று தலையின் அசைவால் தனக்கருகே இருந்த இடத்தைக் காட்டியவாறு கூற, முகம் மலர்ந்தவள் மெல்லிய குறும்புப் புன்னகை மலர,

“வரலாம் தான்… ஆனால் இந்த முட்டாளை உங்களால் சமாளிக்க முடியுமா?” என்றாள் . அவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தவனின் உதடுகளும் மலர்ச்சியில் விரிய.

“இந்த சுடுதண்ணி பாய்லரை சமாளிப்பாய் என்றால், முட்டாளை சமாளிப்பது ஒன்றும் சிரமமில்லை…” என்று மெல்லியதாகப் பல் தெரியச் சிரிக்க, இப்போது மலர்ந்து சிரித்தவள், தன் கரத்தை நீட்ட அடுத்த கணம் அந்த மெல்லிய கரத்தைப் பற்றித் தூக்கித் தன்னருகே அமர்த்தியிருந்தான் ஆர்யன்.

ஹெலிக்காப்டரின் கதவுகள் மூடப்பட, உடனேயே அது மேலேறியது.

அது மேலே செல்லச் செல்ல, அந்தத் தீவும் சிறு புள்ளியாய் மறையத் தொடங்கியது.
 
Last edited:

sivanayani

விஜயமலர்
ஒரு வருடம் கழித்து...


தமிழ் நாட்டின் மையப்பகுதியில்

கிட்டத்தட்ட 14 ஏக்கரை விழுங்கியிருந்தது அந்த பிரமாண்டமான சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்லூரி. அந்தக் கல்லூரியின் திறப்புவிழா அன்று என்பதால், அக்கல்லூரியின் பிரமாண்டமான மண்டபத்தில் உலக பிரசித்தி பெற்ற அத்துனை வல்லுனர்களும் கூடியிருக்க முன் வரிசையில் அமர்ந்திருந்தனர் வாரியர்ஸ் .

இரண்டாகப் பிரிந்திருந்த அந்த மண்டபத்தின் வலது புறத்திலிருந்து ஜெயவர்மன், மதிவதனாவுடன் கம்பீரமாக அமர்ந்திருக்க, அவனுக்கு அருகாமையில், காசிவிஷ்வநாதன் தன் மனைவி திகம்பரியின் இடது கரத்தைத் தன் வலது கரத்தால் இறுகப் பற்றிக்கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில், கிருஷ்ணா கலையோடு அமர்ந்திருக்க, அவர்களுக்கு அருகாமையில் அகிலன், அமர்தவர்ஷினியும், ப்ருத்வி அவன் மனைவி கீர்த்தனாவுடன் அமர்ந்திருந்தான். அதற்குப் பின்னிருக்கையில் ஆதீரநந்தன், அம்ருதசாகரியுடன் எதையோ பேசிக்கொண்டிருந்தான். அதற்கருகே பிரவீன் அமைதியாக அமர்ந்திருக்க, அவன் மனைவி நாச்சி முத்து எப்போதும் போல அவனிடம் பல கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தாள்.

மறு பக்கத்தில் இடது பக்கமாக ஆரோனும் நன்விழியும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு வலது புறத்தில் விதார்த் மீராவும், அக்கண்யன் ஜனனியும், தர்ஷன் ஷாலினியுடனும் ஹரிஷ், ஸ்ரீமதியும் அமர்ந்திருந்தனர். நடுவில் ஆர்யன் தன் புத்தம் புது மனைவி தியாவுடன் அமர்ந்திருக்க,


ஹரிஷ்தான் மிகவும் உடைந்து போயிருந்தான். இருக்காதா, அந்த சம்பவத்தில் அவன் உற்ற நண்பர்கள் மூவரையல்லவா தொலைத்துவிட்டிருக்கிறான். இப்போது நினைத்தாலும் உயிரை யாரோ உருவிப் செல்வது போல உணர்ந்தான் ஹரிஷ். அதைப் புரிந்து கொண்டவளாக ஸ்ரீமதி அவனுடைய கரத்தைப் பற்றி ஆறுதல் படுத்திக் கொண்டிருக்க, அந்த ஆறுதல் கூட அவனை அமைதிப் படுத்தவில்லை. அதனால் தலையைச் சற்றுக் குனிந்து விழிகளால் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரிஷ்.


அவர்களுக்குப் பக்கத்தில் அநேகாத்மன் தன் மனைவி சர்வமகியுடன் அமைதியாக ஒரு வித வலியுடன் மேடையில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதைக் கண்ட சர்வமகி, அவனுடைய கரத்தை சற்று அழுத்திக் கொடுத்து விரல்களுக்கூடாகவே அவனை அமைதிப்படுத்த முயன்று கொண்டிருக்க, திரும்பி தன் மனைவியைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தவன், மீண்டும் மேடையில் நடப்பதில் தன் கவனத்தைச் செலுத்தினாலும். மனைவியின் கரத்தை மட்டும் விட்டானில்லை.



நடு நாயமாக அமைச்சர் அமர்ந்திருக்க அவருக்குப் பின்னால் ரத்னவேல் பாண்டியன் விறைப்புடன் காவல்துறை அதிகாரியாக நின்றிருக்க, முன்புறத்தில் விக்ரம் கவனமாகப் பாதுகாப்பைப் பரிசோதித்தவாறு நின்றிருந்தான். மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்,


“இன்று இந்த விழா நடப்பதற்குக் காரணம் உங்கள் முன்னால் அமர்ந்திருக்கின்ற நாயக நாயகிகளே… இத்தனை பிரமாண்டமாக தொழில் நுட்பக் கல்லூரியைத் திறந்துவைக்கக் காரணம் என்ன? என்பதை கனடாவிலிருந்து வருகை தந்திருக்கும், திரு அநேகாத்மன் உங்களுக்குத் தெரிவிப்பார்” என்றதும் அங்கிருந்தவர்களின் கரகோஷங்களின் மத்தியில் மேடைக்கு வந்தான் அநேகாத்மன்.


ஒரு முறை அனைவரையும் பார்த்தவன், சற்று நேரம் அமைதியாக இருந்தான், பின் நிமிர்ந்து பார்த்து,


“நாம் வாழ்க்கை கூட கடலில் மிதக்கும் கப்பல்போலத்தான்… எந்த நேரம் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது… கடல் அமைதியாக இருக்கும் வரைக்கும்தான் கப்பலின் பயணம் இனிக்கும். அது சற்றுக் கொந்தளித்தால்… அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது… இன்று இருக்கிறோம்… இந்தக் கணம் மட்டுமே நிஜமானது… அடுத்த விநாடி, அது நம் கையிலில்லை…” என்றவன் ஒரு பெருமூச்சொன்றை எடுத்து விட்டு அங்கிருந்தவர்களை உற்றுப் பார்த்தான். பின்,

“இன்று நாம அனைவரும் கூடியிருப்பதற்குக் காரணம் …” முன்னால் அமர்ந்திருந்தவர்கள் அனைவரையும் பார்த்து, “கான் யு ப்ளீஸ்… கம் டு த ஸ்டேஜ்…” என்று அழைக்க அடுத்த கணம் அத்தனை நாயக நாயகிகளும் மேடைக்கு ஏறினர். அப்படியே தலையை நிமிர்த்த சற்றுக் கால்களை அகட்டி நின்றிருந்த ரத்னவேல் பாண்டியன் தென்பட, அவனையும், அவனுக்கு அருகில் நின்றிருந்த விக்ரமையும் வருமாறு அழைக்க, அவர்களும் மேடையேறினர். பின் ஒலிவாங்கிக்கு அருகாமையில் சென்றவன், அமைச்சரை பார்த்து,

"சார் வித் யுவர் பெர்மிஷன்... கான் ஐ கால் பாண்டியன் அண்ட் விக்ரம்..." என்று கேட்க, உடனே அமைச்சர் திரும்பி மேடைக்கு செல்லுமாறு ரத்னவேல்பாண்டியனுக்கு குறிப்பு காட்ட உடனே இருவரும் மேடை ஏறினார்கள்.

பாண்டியையும், விக்ரமையும் சுட்டிக் காட்டிய அநேகாத்மன்,

“இவர்களின் அயராத முயற்சியால்தான் என் நண்பர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்... “ என்றவன் அவர்களை பார்த்து இருவரின் கரங்களையும் குலுக்கி, "யு டிட் எ கிரேட் ஜாப்... நாம் அனைவரும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்..." என்று உணர்ந்து சொல்ல, மறுப்பாக தலையை ஆட்டிய ரத்னவேல் பாண்டியன்,

"தட்ஸ் மை ஜாப் மிஸ்டர் அநேகாத்மன்" என்று கம்பீரமாக மறுத்துவிட்டு மீண்டும் கீழே இறங்கி அமைச்சரின் பின்னால் சென்று நிற்க, விக்ரமும் அவன் பின்னால் சென்று விறைப்புடன் நின்று கொண்டான்.

பின் தன் பின்னால் நின்றிருந்த நாயகர்களை காட்டி,

“வெல்... இன்று நாம் அனைவரும் கூடியிருக்கக் காரணம்… இவர்கள் தான்…" என்று அவர்களை பார்த்தவாறு கூறிவிட்டு, "இவர்கள் 'இணைகரங்கள்' என்னும் ட்ரஸ்டை உருவாக்கி, அதன் மூலம் இந்த தொழிநுட்ப கல்லூரியை நிறுவி நிறைய மாணவர்களுக்கு கல்வி ஒளியேற்றப்போகிறார்கள். சொல்லப்போனால் தி ரியல் வாரியர்ஸ்… இவர்கள்தான்" என்றதும் பலத்த கரவொலி எழுந்தது. கைதட்டும் ஓசை நிற்கும் வரை அமைதி காத்தவன், அது அடங்கியதும், " இவங்க கூட இன்னொருத்தரும் இருக்கார்… அவரைப் பின்னாடி கூப்பிடுவேன்” என்று திரும்பி அனைவரையும் பார்த்து சிரித்தவன், மீண்டும் அங்கே கூடியிருந்த மக்களைத் தன் கூரிய விழிகளால் ஏறிட்டான்.

“இவங்களோட செய்தியை நீங்கள் செய்தித்தாளிலும், பத்திரிக்கைகளிலும் படிச்சிருப்பீங்க…இவர்கள் எல்லோரும், என்னுடைய நண்பர்கள், வியாபார பங்குதாரர்கள். இவர்களால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் அதிக வளத்தை ஈட்டியிருக்கிறது. நாடு பெற்ற இந்த சிறப்பு மிக்க மனிதர்களை நான் அறிமுகப்படுத்திதான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை… இன்று இந்த விழா நடப்பதற்குக் காரணமும் இவர்கள்தான்…” என்றவன் திரும்பி அவர்களைப் பார்த்துவிட்டு, பின் முன்னாலிருந்த பார்வையாளர்களைப் பார்த்து,

“சென்ற வருடம், இதே நாள்… மிகப் பெரும் ஜாம்பவான்களை இந்த உலகம் இழந்திருக்கிறது… இந்த உலகம் மட்டுமல்ல… நாம எல்லோரும்தான்…” என்றவன் சற்று நேரம் அமைதி காத்தவன், அங்கே இருக்கையில் தன் மனைவி ஸ்ரீமதியுடன் அமர்ந்திருந்த ஹரிஷைப் பார்த்தான்.

ஒரே நேரத்தில் மூன்று உற்ற நண்பர்களைத் தொலைத்துவிட்டு, இன்றும் ஜீரணிக்க முடியாமல் அவன் படும் அவஸ்தையை அநேகாத்மன் அறியானா என்ன? அவன் முகத்தில் வந்து மறைந்த வலியை சர்வமகி தவிர வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை.

அவன் வருந்தினால் இவளால் எப்படித் தாங்க முடியும் மெல்லியதாய் கண்கள் கலங்க, இருக்கையில் அமர்ந்தவாறே தன் கணவனை விழிகளால் பருகத் தொடங்க, ஓரளவு தெளிந்தவன் பின் மெல்லிய புன்னகையுடன், "தயவுசெய்து அனைவரையும் ஒருநிமிடம் எழுந்து நிற்குமாறு கேட்கிறேன்..." என்றவன், ஆர்யனை முன்வருமாறு பணித்தான். அவன் வர, அவனிடம் தானியக்கியைக் கொடுத்து,

“ஓப்பன் ஆர்யா…” என்று கூற, அவன் வேண்டிக் கொண்டதற்கு அமைய அதிலிருந்த பொத்தானை அழுத்தினான் ஆர்யா. அடுத்து அந்த சிவந்த திரை விலக, அங்கே ஆனந்தன், அபிராம்-சுவர்ப்பனா, சூரஜ் ஆகியோரின் உருவப் படங்கள் செப்பில் பதியப்பட்டு, அதன் கீழ் அவர்களின் பெயர், பிறப்பு இறப்பு என்பனவற்றுடன், அவர்களின் சாதனைகள் செதுக்கப்பட்டிருக்க, அதைக் கண்டதும் அங்கிருந்த அத்தனை நாயக நாயகிகளினதும் கண்களும் கலங்கின.

இறுதி நிமிடத்தில் அவர்களைக் காப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள் அல்லவா அந்த நால்வரும். ஆனந்தன் இல்லையென்றால், அவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்திருக்கவே முடியாது. அபிராம் தன் உயிரையும் பொருட்படுத்தாது தன் உயிரைக் கொடுத்து பயணிகளைக் காப்பாற்றினான். சூரஜூம் அவ்வாறே…

ஒரு வித வேதனையுடன் அங்கிருந்த பார்வையாளர்களைப் பார்த்த அநேகாத்மன், "தாங்க்ஸ்... ப்ளீஸ் டேக் யுவர் சீட்" என்றவன் அனைவரும் அமர்ந்த பின்,

“இந்த நால்வரும் நாட்டைக் காப்பதற்காக எல்லையில் நின்று காவல் காக்கும் இராணுவத்தினரின் தைரியத்திற்கும், அவர்களின் திறமைக்கும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல… மக்களே… இவர்கள் இன்று உயிரோடு இல்லை… இவர்களால்தான், இத்தனை பேரும் உயிரோடு இருக்கிறார்கள்… ஆனால்… நாம் இருக்கும் வரைக்கும், நமது இறுதி மூச்சு இந்தக் காற்றில் கரையும் வரைக்கும் இவர்களின் நினைவு நிச்சயமாக நம் உள்ளத்தின் ஒரு மூலையில் பதிந்திருக்கும் என்கிற உறுதியுடன், உங்கள் மரியாதையையும், அவர்களின் உயரிய செயலைப் பாராட்டியும், அரங்கு நிறைந்த கரகோஷத்தை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…” என்று முடிக்க அடுத்து பெரும் சத்தத்துடன் அந்த அரங்கே அதிரும் வகையில் கரகோஷம் எழ, அது அடங்க சற்று நேரம் எடுத்தது.

இவர்கள் நால்வரின் நினைவாக, இன்று இந்த கல்லூரி திறக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் உலகநாடுகளில் இருந்து மாணவர்கள் வந்து கற்பதற்கான அத்தனை வசதிகளும் இருந்தாலும், ஆனந்தனை போல, அபிராம், சுவர்ப்பனாவை போல சூரஜை போல இந்த உலகுக்கு நிறைய வல்லவர்களை, சிறந்த மனிதர்களை, கொடுப்பதே இந்த கல்லூரியின் முக்கிய நோக்கமாகும். அதனால், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள திறமையான மாணவர்களுக்கு இந்த கல்லூரி முற்று முழுதாக இலவசமாக கற்பிக்கும் என்பதை இந்த இடத்தில் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறோம்..." என்று கூற பலத்த கரகோஷங்களுடன் அந்த அரங்கே அதிர்ந்தது. "இதை 'இணைகரங்கள்' முன்னின்று நடத்தும்…” என்று முடிக்க மீண்டும் பெரிய அளவில் கரகோஷம் எழுந்தது.

கரகோஷம் அடங்கியதும்,

“இன்னொரு முக்கியமான நபரை உங்கள் முன்னால் அறிமுகப் படுத்த நான் ஆசைப்படுகிறேன்… வாரியர்ஸ் 016 கப்பலின் பயணிகள் தப்பி இங்கே வர இன்னொரு முக்கியமான காரணியாக இருந்தவர்….. ஆனந்தனின் ரோபோ எங்கேயிருந்து செய்தி அனுப்பியிருக்கிறது என்று தெரியாது திணறியபோது, தன் திறமையால், குறுகிய நேரத்தில் அந்த இடத்தைக் கண்டு பிடித்துக் கொடுத்தவர்… ஐ ஆம் ஆனர்ட் டு கால்… மிஸ்டர் அதீந்திரன்… அதீந்திரன் சீஈஓ ஆஃப் எக்ஸ் ஒய் கம்பெனிஸ்.. கான் யு ப்ளீஸ் கம் அப் டு தி ஸ்டேஜ்…” என்று வேண்ட, அதீந்திரனின் கரத்தை இறுகப் பற்றியவாறு மேடைக்கு அழைத்து வந்தாள் ஆராத்தியா.

எங்கும் தன் பார்வையைத் திருப்பாமல், மனைவியின் கைப்பிடியில்,கடிவாளமிட்ட குதிரையாக நிமிர்வுடன் வந்துகொண்டிருந்தவனின் இறுகிய பிடியில், ஆராத்தியாவின் கரங்கள் வலிக்கத்தான் செய்தன. ஆனாலும் அவனைப் பற்றியவாறு மேடையேற, அதீந்திரன் எங்கும் பார்க்காமல் விழிகளைத் சுவற்றில் பதித்தவாறு நின்றிருந்தான்.

திரும்பிய அநேகாத்மன், அருகே நின்றிருந்த ஜெயவர்மனிடம் ஒலிவாங்கியை நீட்டியவாறு, ஏதோ சொல்ல, ஜெயவர்மன் முன்னால் வந்தான்.

“நாங்க இன்னிக்கு இங்கே நிற்பதற்குக் காரணங்களில் ஒருவர் மிஸ்டர் அதீந்திரன். இன்னிக்கு, நாம எல்லோரும் சேர்ந்து அவரை கௌரவிக்கனும்னு ஆசைப் படுகிறோம்…” என்ற சொல்லி முடிக்க அநேகாத்மன், வாரியர்ஸ் 016 என்கிற பெயருடன் கப்பல் படம் பொறிக்கப்பட்ட பதாகையை நாயகர்களிடம் கொடுத்து அதீந்திரனிடம் கொடுக்குமாறு பணிக்க, உடனே அனைவரும் சேர்ந்து அதை அவனிடம் நீட்ட, என்ன செய்வது என்று தெரியாது தவித்தவனின் கரத்தைப் பற்றி அதை வாங்க வைத்தாள் ஆராத்தியா. அந்த அழகிய காட்சியை ஒலி ஒளிப்பதிவு கருவிகள் கச்சிதமாக உள்வாங்க, அரங்கில் வீற்றிருந்த அனைவரும் எழுந்து நின்றவாறு கரவொலி எழுப்ப, அந்த ஒலி நிற்க சற்று நேரம் எடுத்தது.

அவன் பதாகை பெற்றதும், அதீந்திரனை ஏறிட்ட ஜெயவர்மன்,

“அதீந்திரன்… இன்று நாங்கள் எல்லோரும் மேடையில் நின்று பேசிக்கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான் … நீங்கள் மட்டும் தக்க தருணத்தில் இடத்தைக் கண்டுபிடித்து சொல்லியிருக்கிவில்லை என்றால்… நாங்கள் அனைவரும் அங்கேயே எங்கள் உயிரை விட்டிருப்போம்… இன்று இந்த நன்னாளில், உங்களிடம் நாங்கள் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். இணைகரங்களுக்கும், இந்த கல்லூரிக்கும் உங்கள் திறமை, உழைப்பு, வழிகாட்டல் அனைத்தும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் உங்கள் உதவி கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்… நாங்கள் நான்கு நண்பர்களை இழந்துவிட்டோம் என்று நினைத்தோம்… இல்லை… அந்த நால்வரையும் மொத்தமாக உங்கள் உருவில் பார்க்கிறோம்… தாங்க் யு சோ மச்… அதீந்திரன்…” என்று கூற, அது வரை எந்த உணர்ச்சியும் இல்லாது நின்றிருந்த அதீந்திரன் தன் கரத்திலிருந்த பதாகையைப் பார்த்தான். திரும்பி தன் மனையாளைப் பார்த்தான். நிமிர்ந்து ஜெயவர்மனைப் பார்த்தான்.

“மை ப்ளஷர்..” என்றான்… பின் தன் மனைவியை இழுத்துக்கொண்டு கீழிறங்கியவன், வெளியேறினான். அவன் வெளியேறியது கூட அவர்களுக்கு உறைக்கவில்லை. மாறாக, ஜெயவர்மன் பேசியதும் அவன் சொன்ன பதில்தான் அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குத் தள்ளியது. அவன் உணர்ந்து சொன்னானா உணராமல் சொன்னானா என்பது வேறு கதை. ஆனால் அவன் புரிந்து சொன்னான் என்பதே அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கத் தன்னையும் மீறி ஜெயவர்மன் தன் கரத்தைத் தட்டத் தொடங்க, அதீந்திரன் நடக்க நடக்க அனைவரின் கரவொலியும் அவனை வாழ்த்திக்கொண்டிருக்க, இயல்புக்கு மாறாக, அமைதியாகவே அவன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

தியாகம் மரணத்தையும் வெல்லும், அதற்கு மரணமில்லை… ஆனால் சரித்திரம் உண்டு.




http://srikalatamilnovel.com/community/threads/sms-வாரியர்ஸ்-016-கருத்துத்-திரி.1160/


வணக்கம் மக்களே... இதோ இறுதி அதிகாரம் பதிந்துவிட்டேன். இன்றோடு இக்கதை முற்றுப் பெறுகிறது... படித்தவர்கள், இதுவரை இக்கதை பற்றி கருத்துக்கள் கூறத்தவர்கள், உங்கள் பொன்னான கருத்தை பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுவரை எம்மோடு பயணித்த அத்தனை வாசகர்களுக்கும் நன்றி. இந்த இடத்தில என்னோடு பயணித்த 15 எழுத்தாளர்களுக்கும் தலைவணங்கி நன்றி கூறுகின்றேன். எந்த விதமான சிக்கலும் இன்றி சொல்வதற்க்கெல்லாம் மறுக்காது சேர்ந்து ஒத்துழைத்த அத்தனை எழுத்தாளர்களையும் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் இந்த இடத்தில பதிவுசெய்கிறேன். உண்மையா 16 பேர் சேர்ந்து எழுதுவது என்பது அதனை சுலபமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து ... அனைவரும் ஒத்துழைக்கா விட்டால் இது சாத்தியமில்லை. முக்கியமாக தாமரை... அவங்க இல்லேன்னா மிக மிக சிரமமா இருந்திருக்கும். அதனை எழுத்தாளர்களுடனும் தொடர்புகொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு பதிவுகளைபெற்றுக்கொடுத்து... எழுத்துப்பிழைகள் திருத்தி... கதைகளை திருத்தி என்று அவங்க செய்தது வார்த்தைகளால் சொல்ல முடியாது... இந்த கூட்டிணைப்பில் நாம் கற்றுக்கொண்டது அதிகம். எல்லா எழுத்தாளர்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் சொல்லிக்கொள்கிறேன்.


இக்கதை சென்டினல் தீவு மக்களை பற்றிய கதை. இங்கே நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, 16 எழுத்தாளர்களின் நாயக நாயகிகளை வலம்பெறச் செய்து நிறைவு செய்திருக்கிறோம். கீழே அம்மக்களை பற்றி அறிந்த செய்திகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. படித்து அறிந்து கொள்ளுங்கள் .
 
Last edited by a moderator:

sivanayani

விஜயமலர்
சென்டினல் மக்கள் (Sentinelese, Sentineli, Senteneli, Sentenelese) தெற்கு அந்தமானில் உள்ள வடக்கு சென்டினல் தீவில் ஒரு சிறு கிராமத்தில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள். வெளி உலகத் தொடர்பின்றி, வெளி உலக மக்களையும் பார்க்க விரும்பாமல் அந்தமான் தீவின் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர்.

இப் பழங்குடிமக்கள் வில் அம்புகளுடன் காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். செண்டினல் பழங்குடியின மக்கள் வெளி உலக மக்களிடம் தொடர்பு கொள்வதை மிகவும் வெறுக்கிறார்கள். 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையால் இம்மக்கள் பாதிக்கப்படவில்லை. 2004-இல் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகாப்டர் மூலம் நடத்திய ஆய்வில் தற்போது செண்டினல் பழங்குடி மக்கள் 250 முதல் 500 வரை உள்ளதாக இந்திய அரசு கணக்கிட்டுள்ளது.

சென்டினல் பழங்குடி மக்கள் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தமானில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செண்டினல் பழங்குடி மக்கள் பேசு மொழி, மற்ற அந்தமான் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. செண்டினல் இன மக்கள் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களைப் போல உருவமும் நிறமும் கொண்டுள்ளனர். செண்டினல் மக்களை இந்திய அரசு பழங்குடி மக்கள் பட்டியலில் வைத்துள்ளது.

உலகில் உள்ள 6 அதி பயங்கர பழங்குடிகளில் இவர்கள் முக்கிய இடம் பிடிக்கிறார்கள்

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின்போது, இந்தத் தீவில் இருந்த 1 லட்சம் மக்களுக்கும் அதிகமானோர் கொன்று வீழ்த்தப்பட்டனர். அப்போது தப்பிப் பிழைத்தவர்கள் மட்டுமே இன்னும் இங்கு இருக்கிறார்கள். சென்டினல் மக்கள், இத்தகைய நவநாகரிக மக்களைக் கண்டால் பயப்படுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

1880 சனவரியில் ஆறு சென்டினலீசு மக்களை (ஒரு முதியவர், அவரது மனைவி, நான்கு பிள்ளைகள்) ஆய்வு செய்யும் பொருட்டு, பலவந்தமாக போர்ட் பிளேர் நகருக்கு அழைத்து வந்தனர். அங்கு அந்த ஆறு பேரும் கடும் சுகவீனம் அடைந்தனர். முதியோர்கள் இருவரும் இறந்து விட்டனர். பிள்ளைகள் நால்வரையும் பெருமளவு பரிசுப் பொருட்களைக் கொடுத்து மீண்டும் தீவில் விட்டுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

2018 நவம்பரில் ஜான் அலென் சா என்ற 26-வயது அமெரிக்க கிறிஸ்தவ மதப்பரப்புனர் சென்டினல் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் அவர்களைக் கிறித்தவத்திற்கு மதம் மாற்றவும் உள்ளூர் மீனவர்களின் துணையுடன் வடக்கு சென்டினல் தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்தார். நவம்பர் 14 இல், இத்தீவிற்கு தன்னைக் கொண்டு செல்வதற்காக செல்வதற்கு போர்ட் பிளேர் நகர மீனவர்களுக்கு ₹25,000 பணத்தைக் கொடுத்துள்ளார். அதிகாரிகளின் கவனத்தைத் திசை திருப்பும் பொருட்டு, இவர் தனது பயணத்தை இரவிலேயே வைத்துக் கொண்டார்.

நவம்பர் 15 இல், கரையில் இருந்து 500-700 மீட்டர்கள் தொலைவில் அவரை மீனவர்கள் கடலில் இறக்கி விட்டனர். மீனவர்கள் அவரை அங்கு செல்லவேண்டாம் என வற்புறுத்தியும், அவர் ஒரு சிறிய படகில் தான் கொண்டு வந்திருந்த விவிலிய நூலுடனும், சிறிய அன்பளிப்புப் பொருட்களுடனும் கரைக்குச் சென்றார். அங்கு அவரை தீவு மக்கள் அம்புகள் கொண்டு தாக்கியதை அடுத்து மீனவர்களின் படகிற்கு அவர் திரும்பினார். சில கிறித்தவப் பாடல்களை அவர் பாடியதாகவும், தீவு மக்கள் கோபமடைந்தார்கள் எனவும் அவர் எழுதியுள்ளார். அடுத்த நாள் அவர் அங்கு சென்ற போது, அவரது சிறிய படகையும் உடைத்து விட்டார்கள், அவர் நீந்தி வந்து மீனவ படகை அடைந்தார்.

நவம்பர் 17 இல், தான் தீவில் இருந்து திரும்ப வரமாட்டேன் எனவும், மீனவர்களை சென்று விடுமாறும் கூறி, மூன்றாம் தடவையாகத் தீவுக்குச் சென்றார். தீவு மக்கள் அவரது கழுத்தைச் சுற்றி கயிறைக் கட்டி, அவரது உடலை இழுத்துச் சென்றதைத் தாம் கண்டதாகத் தெரிவித்த மீனவர்கள், பின்னர் அங்கிருந்து திரும்பி விட்டதாகவும் தெரிவித்தனர். அடுத்தநாள் அவர்கள் அங்கு திரும்பிச் சென்ற போது, ஜானின் உடல் கரையில் இருந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தனர். இதனை அடுத்து, தடை செய்யப்பட்ட தீவுக்கு ஜானைக் கூட்டிச் சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் ஏழு மீனவர்களைக் கைது செய்தனர்.

யாருடைய தொடர்புமின்றி தம் வாழ்வை பார்த்துக்கொள்ளும் அவர்களை நிம்மதியாக இருக்காவிட்டால்... அவர்களின் பூர்வீகமே நாகரிக மனிதனை வாழ்த்தும்.
 
Last edited by a moderator:

தாமரை

தாமரை
@sivanayani
சிவநயனி முகுந்தன்@ விஜயமலர்
கேப்டன் ஆஃப் தி மூழ்காத ஷிப்.. வாரியர்ஸ் 016..

இவங்களைப் பற்றி சொல்லனும் னா, ஒரு புக்கே போடலாம், அர்பணிப்பு, எடுத்த செயலை முடிக்கும் திறம்... தீரம்... ஒரு நல்ல ஆளுமையும் நட்புணர்வும் கொண்ட தலைவி இவங்க.. இந்த் கதையின் ஆதியும் அந்தமும் இவங்கதான்..

14 வாரியர்ஸ்.

1 ப்ரஷா
2. அருணா
3 ஷா ஷங்கரி
4 பொம்மு
5 துமி
6 ஆனந்த லக்ஷ்மி
7 சிவரஞ்சனி
8 ப்ரியதர்ஷினி
9 தர்ஷி ஸ்ரீ
10 ரம்யா @சரணிகாதேவி
11 பானுரேகா @ சியாமளா
12 தீபா கோவிந்த்
13 ரேவதி முருகன்
14 இனிதா@ தமிழினி

அனைவருக்கும் நனறி 🙏🙏🙏🙏 சுகவீனம், வேலைப் பளு , தனிப்பட்ட கதை யூடி டென்ஷன் எது இருந்தாலும், சற்று விலக்கி வைத்து இந்தக் கதை தொடர நன்முறையில் உதவினார்கள்,

ப்ரஷா கதையை அழகா துவக்கி கொடுத்தார், தீவு பற்றி பற்றி பல செய்திகளை தொகுத்து மிக அழகா எளிமையா சொன்னார்,

பொம்மு அருணா கதை அடுத்த கட்டம் நகரச் செய்தாங்க, அந்த மேட்ச் எழுதி கதையின் சூட்டை அதிகரித்த பெருமை பொம்மு, அருணா இருமுறை யூடிகேட்ட போதும் சலிக்காமல் எழுதிக் கொடுத்தாங்க,ஷாஷங்கரி தர்ஷி அலுவலகத்தில் வேலை முடித்து வந்து நடு இரவில் பேசி, கலந்து கொண்டு யூடிஸ் கொடுத்தாங்க,

அருணாமா ரம்யா இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது கூட பொருட்படுத்தாமல் தமது பதிவை குறித்த நேரத்தில் கொடுத்தாங்க,

சிவரஞ்சனி தகவல் களஞ்சியம், ஒரு யூடிக்கு இரு யூடி அளவு அவங்க கொடுத்த பதிவு படிச்சு மிரட்சி ஆகிடுச்சு, அந்த தீவில் நடப்பதா பல விஷயங்கள் அவங்க கொடுத்தது வச்சு அழகாகொண்டு போக முடிந்ததது.

பானுமா கதை போக்கை கண்காணித்து, எடிட்டிங் ல பெரும் உதவிபண்ணினாங்க,
ஆனந்த லக்ஷ்மி துமி ரேவதி எப்பவும் ஆன் ட்யூட்டி , எனன உதவி கேட்டாலும் ஓடி வந்து செய்வாங்க,

ப்ரியதர்ஷினி, இயற்பியல் வேதியல் சந்தேகங்களை தெளிவு படுத்தி கதையோட்டத்தில் சுவாரஸ்யம் கூட்ட செய்தாங்க. அந்த மூங்கில் வெடி அவங்க ஐடியா தான்.

தீபா கோவிந்த் கருத்துத்திரியை கலகலக்கச் செய்தார். அவருக்கு சிறப்பு நன்றிகள்.


இக்குழுவில் இணைந்து பணியாற்றியது எனது கற்றல்நிலைக்கு பெரும் வரமாக அமைந்தது,

வாய்ப்புக்கு நயனிமாக்கும்,
சக எழுத்தாள தோழமைகளுக்கும் உளமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏
 

sivanayani

விஜயமலர்
தாமரை

"அச்சா.. அவிட நோக்கு. அந்த பறவை இறக்கைல ப்ளூ, மஞ்சள், ஆரஞ்ச்ன்னு எவ்ளோ கலர்ஸ்.." கூவிய மகளைத் தன் மடியில் இருத்தியபடி, அவள் காட்டிய பக்கமாக மதிவதனா திரும்பிப் பார்க்க, அதை ஆமோதிப்பது போல, எதிரே அமர்ந்து தோணியைச் செலுத்திக் கொண்டிருந்த ஜெயவர்மன்,

" ம்... வளர சுந்தரமாயிட்டு இருக்கு.." என்றான் ரசனையுடன்.

அவனுடைய குரலிலிருந்தே நிச்சயமாய் அவன் பறவையைச் சொல்லவில்லை.. என்பதைப் புரிந்து கொண்ட வதனா நிமிர்ந்து தன் கணவனைப் பார்க்க, அவனோ அவளைத்தான் உல்லாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதைக் கண்டு அவளுடைய உதடுகள் இடமும் வலமும் சென்று பழிப்புக் காட்ட, அதைக் கண்டவனின் கன்னங்களில் குழி விழுந்தன.

எப்போதும் போல அந்தக் கன்னக் குழியில் தன்னை மறந்தவள், காதல் வழியும் விழிகளுடன் தன் கணவனை ஏறிட, அவனோ, அவள் பார்வை கூறும் செய்தியறிந்து, ஒற்றைக்கண் அடித்து நகைத்தான்.

"எந்தா... சாரே... இன்னிக்கு ஒரு மார்க்கமாயிட்டு இருக்கு..." என்று அவள் வெட்கம் முகிழ வைத்த முறுவலுடன் கேக்க,

"பின்னே... அதிக நாள் கழிச்சு குடும்பமாய்... உல்லாசமாய் தனிச்சு இருக்கோம்ல..." என்றவன், படகு கரையை அண்மித்ததும், தரையில் இறங்கித் தன் மகன் வித்யுத் வர்மனையும், மகள் சந்திர தத்தாவையும் பற்றித் தூக்கி தரையில் இறக்கிவிட்டு மனைவியிடம் வர, அவளோ ஒற்றைக் கரத்தைத் தூக்கி அவனைத் தடுத்தவளாக,

" வேணாம்... இடம் கொடுத்தால் மடம் பிடிப்பீங்க.... நானே இறங்கிக்கிறேன்..." என்றவாறு இறங்க முயல, ஜெயவர்மனோ, அவள் அறியாதவாறு, தன் காலால் படகை அசைத்துத் தள்ளிவிட, கீழே இறங்க முயன்று கொண்டிருந்தவள், படகு ஆடிய ஆட்டத்தில் தள்ளாடி முன்புறமாய் சரிய, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டவனாய் ஜெயவர்மன், அவளைத் தன் கரங்களில் ஏந்தினான்.

எங்கே விழுந்துவிடுவோமோ என்று பயந்திருந்தவள், ஒரு கரத்தால் அவனின் கழுத்தை சுற்றி, மறு கரத்தால் அவன் சட்டை காலரை இறுகப்பற்றி, உரமேறிய அவனின் மார்பில் முகத்தைப் புதைத்து நிற்க, குறும்புப் புன்னகையுடன் பார்த்து ரசித்தான் அந்தக் கள்வன்.

செய்வன திருந்தச் செய்பவனாய் கெத்தான குரலில்,

"இதுதான்... ரொம்ப ஆடக்கூடாது என்கிறது கேட்டியோ… நான் பிடிக்கலைன்னா, தண்ணில விழுந்திருப்பே… இந்நேரம்.." என்று கூறியவாறு அவளை ஏந்தியவாறே நடக்கத் தொடங்க, அவளோ சங்கடத்துடன், சுற்றிலும் பார்வை செலுத்தியவாறு,

"கீழே விடுங்க வரு... பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க..." என்று சங்கடத்துடன் சொல்ல, அவனோ மேலும் புன்னகை விரிந்தவனாய்,

" யாரு பாக்கபோறாங்க... இது நம்ம தீவு.. இங்கே சுத்தி டென் கிலோமீட்டர்ஸ்.. என் பாதுகாவல் மீறி யாருமே வர முடியாது.." என்றவாறு மேலும் நடக்க, தன் கணவனின் கைப்பிடியில், உள்ளம் பூரித்தாலும்.. அவன் கழுத்தைச் சுற்றித் கரத்தைப் போட்டவாறு,

" வரு... உங்க கால் வலிக்க போகுது... வெயிட் தூக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்கல்ல.. இறக்கி விடுங்க.." என்றவளின் பேச்சைக் காதில் வாங்காதவனாய் தொடர்ந்து நடந்தவன், அவளை நோக்கி குனிந்து,

"வெயிட்தான் தூக்கக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.. வது ... புஷ்பக் குவியல இல்லை..." என்றவாறு அவளை மேலும் உயர்த்தி தன்னோடு இறுக்கியவனின், கழுத்தில் முகம் புதைத்தவளின் மூச்சின் வெம்மையில் தன் யுகக் காதல் புதுப்பிக்கப் பெற,

முன்னால் குதித்தோடிய தம் குழந்தைகளை ரசித்தவாறே உள்ள நிறைவுடன், அவர்களைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினான் இராஜா ஜெயவர்மன்.

தர்ஷி ஸ்ரீ

அழகிய காதல் நகரம் என்று பெயர்பெற்ற பாரிசில்... ஈபிள் டவரின் கீழ் நின்றவாறு அதை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த மதியின் மெல்லிய இடையை ஒரு அழுத்தமான கரம் அழுந்தப்பற்ற, அந்தக் கரத்திற்கு உரியவன் யார் என்பது புரிந்ததால், அந்தக் கரத்தின் மீது தன் கரத்தை பதித்து முகம் மலர நிமிர்ந்து பார்த்தாள் மதி. அவள் கணவன் ஹரிஷ்தான்.

அவனும் ஆவலுடன் அந்த பிரம்மாண்ட டவரைத்தான் பார்த்து வியந்துகொண்டிருந்தான். ஆனால் கரங்களோ தன்னவளின் இடையில் அங்கும் இங்கும் கோலம் போட, அந்த வருடலின் மொழியை உணர்ந்தவளாகப், பெரும் அவஸ்த்தையுடன் சுத்திவர பார்த்தாள்.

அவர்களாவது பரவாயில்லை... அங்கே இருந்தவர்களின் கோலத்தைப் பார்க்க முடியாது, வெட்கம் மேலிட, அண்ணாந்து தன் கணவனை பார்க்க, அவனோ அந்த ஈபிள் டவரைப் பார்த்த பிரமிப்புடன் தன்னவளையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டவளுக்கு, முகம் நாணத்தில் சிவக்கத் தலையைக் குனிந்துகொள்ள, அதை ஒரு சுவாரஸ்யத்துடன் பார்த்தவன்,

"போலாமா?" என்றான் கிசுகிசுப்பாய்.

இவளோ "எங்கே..." என்றாள் புரியாதவள் போன்று.

"ரூமுக்கு..." என்றவன், துடித்த அவள் உதடுகளைக் கண்டு தன் சுட்டுவிரலால் வருடிக் கொடுத்தவன், அதற்குமேல் முடியாதவனாக, அவளை நோக்கிக் குனிய, தன் கணவன் செய்ய விழையும் வேலையின் பொருளுணர்ந்து
"சீ..." என்றவாறு அவனை உதறிவிட்டு ஓட,

இவனோ கம்பீரமாய் சிரித்தவாறு தன் மனையாளை துரத்தத்தொடங்கினான்

ஹரிஷ்... ஒருவருடங்களாக அவர்களின் மனதை பிராண்டிய அந்தப் பயங்கர நிகழ்வின் நிழல் மெல்ல மெல்ல அவர்களை விட்டுக் கரையத் தொடங்கியது.

ப்ரஷா

இலங்கையின் பாராளுமன்றத்தின் பின்புற பகுதியில் சலசலத்து ஓடும் குளிர்ந்த தீயவன்னா நதியை லேண்ட்மார்க்காக கொண்டு அமைந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல். உள்ளிருக்கும் ஆடம்பரத்திற்கு சற்றும் குறையாது நதியோடு அமைந்த கார்டன் பகுதி... உள்ளோ பணத்தின் செழுமையென்றால் இங்கோ இயற்கை அன்னையின் இன்பசுகம்…
இரவு நேர காற்று சதையைத் தாண்டி நரம்பை ஊடுருவி உயிர் அணுக்களை சிலிர்க்கச் செய்ய, ஆற்றின் சலசலப்பை ரசித்தவாறு பாறையொன்றில் கம்பீரமாய் அமர்ந்திருந்தவனின் ஆண்மை நிறைந்த மார்பில் சாய்ந்திருந்தாள் அவள். அவனுடைய ஒரு கையோ தன் 5 மாத கருவை சுமந்து இருக்கும் தன் இல்லாளின் சிறிய மலை முகட்டை போன்ற வயிற்றை சுகமாய்த் தடவ, இல்லாளோ, மணாளனின் இன்ப சூட்டை உணர்ந்தவாறே, தன் தளிர் கரங்களில் அழகிய கேடயம் ஒன்றை ஏந்தியிருந்தாள்.

மன்னவன் இரு நேத்திரங்களும் காதலில் கனிய அவன் மந்தாகினியின் அஞ்சனம் பூசிய இரு விழிகளோ, அந்த கேடயத்தை உணர்வு பொங்க பார்த்துக்கொண்டிருந்தன...

"என்னடி அநியாயம் இது! கட்டின புருஷன் கல்லு மாதிரி இத்தனை நெருக்கத்தில் அணைத்த படி இருக்க, நீ இப்படி இந்த சீல்டை வெறிச்சு வெறிச்சு பாக்குற...அதில் அப்படி என்னதான்டி தெரியுது…" என்றவாறு தன் மனைவியின் கூந்தலை, இதழ்களால் வாரிவிட்டவாறு அவன்... அக்கண்யன் கேட்க,

காதல் கணவனின் ஆதங்க குரலை தொடர்ந்து, அந்த கேடயத்தை மூன்று விரல்களால் வருடியவள்…

" உங்கள் வியாபாரத்தில் சாதித்ததுக்காக இலங்கை அரசாங்கம் கொடுத்த கேடயம்... " என்றவள், நிமிர்ந்து தன் கணவனை ஏறிட்டவள், "ஆனா நா எதை பெரிய விருதாய் பாக்கிறேன் தெரியுமா?" என்றவள் விழிகள் கலங்க, அவனுடய வலது மார்பில் கரம்பதித்து, மெதுவாய் வருடியவாறு,

"இங்கே மத்தவங்களை காப்பாத்துறதுக்காக, அம்பை மார்பில் வாங்கிக்கொண்டீர்களே.... அது தந்த தழும்பு.. இதுதான் அத்தான் உங்கள் வீரத்துக்குக்கும் விவேகத்துக்கும் கிடைத்த சான்று. இதைத்தான் நா பெரிய விருதா பாக்கிறேன்.." என்று கூற,மார்பில் பதிந்திருந்த அவளுடைய கரத்தை பற்றித் தன் உதட்டில் பொருத்திக்கொண்டவன்,

" உண்மைதான் கண்ணம்மா. நாம் நினைத்துப் பார்க்காத ஒரு பயணம், பிரமிப்பான தருணங்கள், நம்மை திடுக்கிட வைத்த சம்பவங்கள், கனவிலும் நினைக்காத உயிர் பலிகள்.. இந்த அனுபவத்தை வார்த்தையால் வடிக்க முடியலடி…' என்றான் மெல்லிய வலியுடன்.
" ஆமாத்தான் அந்த கப்பலில் பயணித்த உயிர்களை காப்பாற்ற நாமும் காரணமா இருந்திருக்கிறோம்னு நெனைக்கிறப்போ, எதோ சாதிச்சது போல மனசு சந்தோஷமா இருக்கு... ஆனா பலியான உயிர்களை மீட்க முடியாமல் போனதை எண்ணி வேதனையாகவும் இருக்கு." என்று கூறியவள் தலையை அவன் வருடி கொடுக்க, வாகாக அவன் மார்பில் தன் தலையை பதித்து சரிந்து அமர்ந்தவள்,

"சிலரின் பேராசையும் முரண்பாடான கொள்கைகளும் எத்தனை உயிர்களை பறிச்சுடுச்சு.... மனிதர்கள் எத்தனைதான் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் மிருகம் அப்போ அப்போ தன் வில்லத்தனத்தை காட்டத்தான் செய்தில்ல…" என்றாள் வயிற்றில் துடித்த குழந்தையை அமைதிப்படுத்துவது போல வருடிக்கொடுத்தவாறு.

" உண்மைதான் பேபி ஒரு காலத்தில் நானும் வில்லன் தானே…"
என்றவனை திரும்பி ஆழ்ந்து நோக்கியவள்.. அவன் சட்டை காலரை பிடித்து அருகிலிழுத்து காதல் கசிந்துருக, விழி நிறைந்த மயக்கத்தோடு…

" யார் சொன்னது நீங்கள் வில்லன் என்று.. இந்த ஜனனியின் ஜகம் நீங்கள். என் காதல், என் ஆன்மா, என் வலி, என் சிரிப்பு எல்லாம் நீங்கள் தான் அத்தான். " என்றவள் மீண்டும் அவன் வலது மார்பில் கரத்தை பதித்து, "உங்கள் மீது நான் கொண்ட காதலின் ஆழத்தை மீண்டுமொரு முறை எனக்கு உணர்த்தியது. ரத்த காயத்தோடு இன்னொரு முறை உயிர் துடிக்க உங்களை பார்த்த அந்த நொடி நான்…... " என்றவள் இப்போது நிமிர்ந்தமர்ந்து, அவங்க கழுத்தில் தன் கரங்களை மாலையாகப்போட்டு,

"அக்கண்யன் என்பவன் அந்தப் போராட்டத்தில் உயிரோடு மீளாது போயிருந்தால் இந்த ஜனனி இந்த பூமியில் வாழ மாட்டாள் என்று.. என் காதலின் வலிமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்த தருணமிது." என்ற மனைவியைத் தன் இதயத்தின் துடிப்பு கேட்கும் வண்ணம் நெஞ்சோடு இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் ஆழ முத்தமிட்டு…

"ஓ… மை பேபி அப்படி சொல்லாதே. நீ இல்லைனா இந்த அக்கண்யன் வேறும் பிணம் தான்டி." என்றவன் தன்னவளை கரங்களில் ஏந்திக்கொண்டு தீயவன்னா நதியோரம் இருந்த அந்த படகை நோக்கி சென்றான். ஆழியில் அசைந்தாடும் படகை போன்று அவர்கள் காதல் வாழ்க்கையும் அவர்களை மகிழ்வோடு அசைந்தாடி வரவேற்றது…!!!!
 
Last edited:

sivanayani

விஜயமலர்
பொம்மு

பச்சைப் பசேலென்ற வயலின் மத்தியில், பம்புசெட் மோட்டார் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்க, தொட்டியில் வீழ்ந்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் கால் நினைத்தவாறு எதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தவளின் முதுகில் சுளீர் என்று எதுவோ பட்டு எரிச்சல் கொடுக்க, கோபத்துடன் திரும்பிப்பார்த்தாள் நாச்சி.

அங்கே இடுப்பில் கை வைத்தவாறு, கையில் நாணல் புல்லுடன் இவளைப்பார்த்துக் குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்தான் பிரவீன்.

அவனைக் கண்டு அலட்சியமாக உதட்டை சுளித்தவள், மேலும் தன் காலை தண்ணீருக்குள் வைத்து ஆட்டியவாறு எங்கோ பார்க்க, அவளுக்கு அருகாமையில் தொப்பென்று அமர்ந்தவன், அவள் தோள்களை சுற்றிக்கரத்தைப் போட்டு,

"என்னடி அப்படி பாத்திட்டிருக்கே..." என்றான்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பச்சைக் கம்பளம் விரித்தால் போல இருந்த வயல் நிலத்தை பார்க்கும்போதே மனசு கிளுகிளுத்து குளிர்ந்தது .

அவளோ,"ஏங்க எனக்கொரு சந்தேகம்...." என,

"சந்தேகமா...? உனக்கா? அதுக்கு மண்டைல சரக்கிருக்கனுமே..." என்று அவன் புருவம் சுருக்க, அவனைப்பார்த்து முறைத்தவள்,
"எப்படி இருக்கும்... இந்த வெள்ளை இறாலைக் கட்டின அப்புறமும் அது இருக்குமா என்ன..." என்று முறுக்கிக்கொள்ள,

"சரி சரி.. என்ன சந்தேகமடி.. முதல்ல அத சொல்லு..." என்றவாறு குனிந்து அவள் கழுத்துவளைவில் வாசம் பிடிக்கத்தொடங்கினான் ப்ரவீன்.

"ஏங்க... நாம சிக்கிக்கிட்டோமே தீவு... அதில இருந்த மனுசங்க நாகரீகமானவங்களா... இல்ல நாம நாகரீகமானவங்களா...?" என்று அரும்பெரும் சந்தேகத்தை கேட்க, தன் மனைவியை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான் பிரவீன்.

அந்த சம்பவம் நடந்து ஒருவருடத்திற்கும் மேலாகிவிட்டது. இருந்தும் அதிலிருந்து இலகுவில் யாராலும் வெளிவரமுடியவில்லை. சொல்லப்போனால், அந்த தீவுக்கு சென்று வந்தபின், நாச்சியிடம் கூட நிறைய மாற்றங்கள். அவளிடமிருந்து சிறுபிள்ளைத்தனம் நிறையவே குறைந்துவிட்டிருந்தது. அவன் அமைதியாக இருக்க,
"என்ன.. கேக்கிறேன் அமைதியா இருக்கீங்க?" எனவும்,

"ஏண்டி உனக்கு இப்படி ஒரு சந்தேகம்?" என்று யோசனையுடன் கேட்ட கணவனை ஏறிட்டவள்,

"இல்ல பேப்பர் பார்த்தீங்களா, பள்ளிக்கு போன சின்ன பொண்ண ஒருத்தன்..." முடிக்காமல் உதட்டைக் கடித்தவள், பின் மீண்டும் கணவனை பார்த்து, "அந்த காட்டுவாசிங்க ஆரம்பத்தில பொண்ணுங்கள தொடவே இல்ல... ஆனா, இங்க... குழந்தைங்கன்னும் பாக்காம...." என்றவள், பெரிய மூச்சொன்றை எடுத்துவிட்டு, "இதெல்லாம் பாக்குறப்போ, பேசாம அவங்க கூடவே இருந்துக்கலாம்னு தோணுது..." என்றதும் தன் மனைவியை ஆதுரத்துடன் பார்த்தான் பிரவீன். அந்த செய்தி அவளை மிகவும் வருத்திவிட்டது என்பது புரிய, அவளைத் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டவன்,

"ஆமாம்டி, பேசாம அங்க இருக்கிற குரங்குக்கு உன்ன கட்டிவச்சிட்டு வந்திருக்கலாம்..." என்று கிண்டலுடன் கூற, அதுவரை எதோ யோசனையில் இருந்தவள் தன்னவனைப்பார்த்து முறைத்து...

"அதுக்கெதுக்கு அந்த தீவுக்கு போகணும்.. நா ஏற்கனவே அதைத்தானே கட்டியிருக்கேன்.. என்ன அது கருப்பா இருந்துச்சு... இது வெள்ளையா இருக்கு..." என்று பதிலுக்கு கூறியவளைக் கோபத்துடன் பார்த்தவன்,

"என்னயாடி குரங்குன்னே... உன்னை..." என்றவாறு அவளை கீழே குளமாகிவிட்டிருந்த தண்ணீரில் தள்ளிவிட்டான்.

பொதார் என்று தண்ணீருக்குள் விழுந்தவள், எழுந்து ஆத்திரம் கொண்டு ப்ரவீனின் காலைப் பற்றி இழுத்துவிட, அவனும் சேர்ந்து தண்ணீரில் விழ இருவரும் விழுந்ததால் ஏற்பட்ட சத்தத்தில் ஒரு மரத்திலிருந்த அணில் பதறித்துடித்து ஓட, பிரவீனோ தண்ணீரில் நனைந்திருந்த தன் மனைவியை நோக்கி ஆத்திரமும் அதை மிஞ்சிய காதலுமாய்ப் பாய்ந்தான்.

ரேவதி முருகன்

சென்னையின் மிக பெரிய நகை கடையின் முன் வாகனத்தை நிறுத்திய தர்ஷனை கண்டு கேள்வியாக பார்த்தாள் ஷாலினி. அவளின் பார்வையை கண்டு எப்பொழுதும் போல் இப்போதும் சிரித்த தர்ஷன் "ஏன்டி, வாயை திறந்து கேக்க மாட்டியா, எப்போ பாரு கண்ணுலயே கேக்கறது... சும்மா உனக்கு ஏதாவது வாங்கி தரனும்னு தோணுச்சு.. அதுக்கு தான்." என்றவாறு காரில் இருந்து இறங்கினான்.
ஷாலினியும் சிரிப்புடன் இறங்கி தர்ஷனின் புறம் சென்று அவனின் கையை இறுக பற்ற, இருவரும் கடைக்குள் நுழைந்தனர். பொதுவாக பெண்களுக்கு நகை என்றால் அலாதி பிரியம். ஆனால் ஷாலினியோ அதற்கு விதிவிலக்கு, என்றாலும் தன் தர்ஷனின் காதல் பரிசு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கடைக்குள் நுழைந்தாள்.

பெண்களுக்கான பிரிவிற்கு சென்றவுடன், அங்கு இருக்கும் கடை ஊழியர் தர்ஷனை கண்டதும் ,"ஒன் மினிட் சர், நீங்க ஆர்டர் பண்ணிருந்தது எடுத்திட்டு இதோ வரேன்" என்று கடையின் உள்ளே சென்று ஒரு சிறிய நகை பெட்டியை கொண்டு வந்து கொடுத்தார். அதை தர்ஷன், ஷாலினியின் கையில் கொடுத்து திறந்து பார்க்கும் படி கூற, திறந்த ஷாலினி அதன் அழகில் ஒருகணம் மெய் மறந்து நின்றாலும், சடார் என்று, அவர்கள் சிக்கிய தீவின் நியாபகமும் வந்து கண் கலங்க செய்தது.

அந்த பெட்டியில்... ஒரு பிளாட்டினம் செயின் அதில் , இதய வடிவ டாலரின் உள்ளே ஒரு பச்சை மரகதம்... அந்த மரகதத்தை கண்டதும் அந்த வேலையாள் நினைவுக்கு வந்தான், தாங்கள் கட்டப்பட்டது நினைவுக்கு வந்தது... ஆர்யன் மட்டும் தக்க சமயத்தில் வந்திருக்காவிட்டால், இதோ இப்போது இந்தக் கடையில் அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்..

விழிகள் முட்டக் கண்ணீருடன் தன் கணவனைப் பார்க்க, அவளின் கலக்கம் கண்டு விழித்தவன், உடனே அவள் நிலையைப் புரிந்துகொண்டவனாக, கடை என்றும் பாராமல் அவளைத் தோளுடன் சேர்த்து இழுத்து அணைத்தவாறு,

"ஷ்... அம்மு, என்னடா இது, அன்னைக்கு நடந்தது, நமக்கொரு விதமான அனுபவம்னு நெனச்சு மறந்திடனும்... இன்னுமா அத எண்ணிக்கிட்டிருக்கே?" என்று கடிய,

"இ.. இல்லேங்க... அந்த மரகதக் கல்... அதை கண்டதும் எனக்கு... நம்மை கட்டி வச்சதுதான் நினைவுக்கு வருது..." என்றாள் மெல்லிய விசும்பலுடன். உடனே அவள் முதுகை வருடிக்கொடுத்த தர்ஷன் சற்றுநேரம் அப்படியே நின்றிருந்தான்.

கடந்த ஒரு வருடங்களாகக் கனவிலும் அந்நிகழ்வினால் பதறித்துடிக்கும் மனைவியை பற்றி அவன் அறியாததா? என்ன செய்வது அந்த பயங்கர நாட்களுக்குப் பிறகு ஷாலினி சுயத்துக்கு வரவே அதிக நாட்கள் எடுத்தன. இதோ இப்போது அவளை அழைத்து வந்தது கூட, அவளை மகிழ்ச்சியாக வைக்கவே.. ஆனால் அந்த பச்சைக் கல்.. மரகதம், அவனுடைய திட்டத்தை தவிடுபொடியாகிவிட்டது.

"சரி சரி.. நமக்கு இது வேண்டாம்... இன்னொரு நாள் வந்து வேறு பாத்துக்கலாம்..." என்றவாறு அவளை கை பற்றி இழுத்தவாறு நடக்கத்தொடங்க.. உடனே அவனிடமிருந்து விலகித் தன் விழிநீரைத் துடைத்துவிட்டு புன்னகைத்தவள், அவனுடைய கரத்தைப் பற்றி தடுத்து, மறுப்பாக தலையை ஆட்டி,

"இல்ல... நீங்க ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தீங்க... அதையே வாங்கி கொடுங்க..." என்றவள் தலையை நிமிர்த்தி கணவனை பார்த்து,

" உங்க அன்புக்கு முன்னால், எந்த பயமும் என்னை ஆட்சிசெய்யாது.." என்றதும் முகம் மலர, அந்த செயினை பெட்டியிலிருந்து எடுத்து, அவளுடைய கழுத்தில் எல்லையில்லா காதலுடன் அணிவித்தான். இவளும் கணவன் அருகில் இருக்கும் தைரியத்தில் அந்த டாலரை இறுகப்பற்றியவாறு தர்ஷனின் தோள் மீது சாய்ந்து கொண்டாள்.

ரம்யா@சரணிகா தேவி

மழை வருவது போல இருக்க வேகமாய் தன் நிறுவனத்திலிருந்து வீட்டுக்கு வந்த திகம்பரி, வீட்டில் அனைவரும் இருக்க தன் கணவனை மட்டும் காணாது, எங்கே என்று யோசிக்க, அவனே எதிரில் வந்து நின்றான். அவன் கரத்தில் காபிக் கோப்பை இருக்க, அதைக் கண்டதும் இவள் முகம் கனிந்தது. அவள் களைத்து வருவாள் என்பதைத் தெரிந்து, அவள் வரும் நேரமறிந்து, காபியுடன் வந்துவிட்டானே. உள்ளம் கனிய, அதை நன்றியுடன் வாங்கியவாறே,

“இன்னைக்கு வழக்கு வெற்றியா?” என்று கேட்டாள். அவனை பற்றி தெரிந்தும்..

“ம்ம் ராயர பத்தி என்ன நினைச்ச..” கெத்து காட்டியவனை கேலியாக பார்த்து பரிகாசமாய் சிரித்தாள். கேலியாய் வளைந்த உதட்டின் மீது பார்வை பதித்தவாறே,

“என்னடி லொள்ளா” என,

“ம்கும் உண்மைய சொல்லுங்க.. போனது அடிதடி பஞ்சாயத்து தானே.. இதுல பெரும வேறயாக்கும்” என்றவள், தன் கரத்திலிருந்த காபியை ஒரு இழுவை இழுத்துவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அவளின் ருசிக்கு தகுந்தாற் போல இருந்த சுவை நாவை நனைக்க, அதில் வழிந்த அவனுடைய அன்பு நெகிழ்ச்சியைக் கொடுத்தது.
இப்போது மட்டுமா! அவ்வளவு பெரிய ஆபத்தில் கூட அவன் தீரமாய் செயல் பட்டதும், கூடவே தன்னை உயிராய் பார்த்துக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. கூடவே இப்போது அவனுக்கு உயிரின் அருமை அதிகமாய் தெரிந்திருக்கிறது. எப்போதும் நியாயத்தை தண்டமெடுத்தேனும் நிறைவேற்றுபவன். இப்போதெல்லாம்.. சற்று நிதானித்தே எதுவும் செய்கிறான். அனுபவம் மிகப் பெரும் ஆசான் எனில்.. இவன் தான் புத்திசாலி செயல் வீரன் ஆயிற்றே.. கணவனையே பெருமையுடன் பார்த்தவளிற்கு, அவன் மீது காதல் பொங்கிப் பிரவாகம் எடுக்க,

“நன்றி மாமா.” என்றாள்.

“அப்போ.. இப்போவாவது என்னை நல்ல லாயர்னு ஒத்துக்கோடி.” என்று காரியமாய் அவன் வேண்ட,

“நீங்க என்ன சொன்னாலும் நான் அதை மட்டும் ஒத்துக்க மாட்டேன் மாமா... நீ எப்போதும் ரவுடி தான்...” என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கண்களைச் சிமிட்டி, “எனக்கு மட்டும்.. ரவுடி பேபி..” என்று சேர்த்து சொல்ல அவனது கண்கள் காதலில் மின்னியது..

“நான் முன்பை விட இன்னும் உன்னை அதிகமா நேசிக்கிறேன் கண்ணம்மா...” என்றான்.

“ம்ம்ம் நானும் தான் மாமா... உயிர் வரை நேசிக்கிறேன்” என்றதும், அவள் கரத்திலிருந்த, காபிக்கோப்பையை அவளுடைய கரங்களோடு சேர்த்து பற்றிக்கொள்ள, எப்போதும் போல் கணவனின் வருடலில் உடல்சிவந்தாள் திகம்பரி.
 

sivanayani

விஜயமலர்
*சிவரஞ்சனி*

வெண் மேகமும், கரு மேகமும் ஒன்றையொன்று தழுவி முத்தமிட்டு மின்னலை பிரசவிக்க, அப்பிரசவ வலியை வெளிப்படுத்துவது போல பெரும் இடியோசை கேட்டது. மேகங்களின் குழந்தையான மழையை இருகரம் நீட்டி வரவேற்க வறண்ட பூமி காத்து நின்று ஆவலுடன் ஏந்திக் கொள்ள , அந்தப் பகுதியே பெரும் மகிழ்ச்சியில் திளைத்தது.
இடியின் ஓசையில், மனம் அதிர மெல்லியதாய் உடல் நடுங்க, இரவு உணவை எடுத்து டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.

சாப்பாட்டு மணம், வீட்டையே நிரப்ப,"உன் கைப்பக்குவ வாசம் வீட்டையே தூக்குது மா.." என்றவாறு சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தான் அகிலன்.
ஆனால் அவனின் அவளோ, அப் பாராட்டினை காதில் வாங்கிய உணர்வு சற்றும் இல்லாதவளாக, கரங்கள் நடுங்க, தட்டை எடுத்து வைக்க, அவள் முகத்தைக் கண்டே ஏதோ சரியில்லை என்பதை புரிந்துகொண்டவனாய்,
"என்னாச்சு வர்ஷி." என்றான். அப்போது மீண்டும் இடி இடிக்க, உடல் தூக்கிப்போட்டது அம் மெல்லியலாளிற்கு..
குரலும் நடுங்க, "அகி.. இந்த இடி, மின்னல், மழை... அப்புறம் இந்த வாழைக்காய், சுட்ட மீன்... எல்லாமே, அந்தத் தீவை நினைவுபடுத்தித் தொலைக்குது... என்ன பண்ண.." என்றாள் உடல் சிலிர்க்க. ஆச்சரியமாக அவளைப் பார்த்தவன்,

"அதை எப்போ மறக்கப்போறே?... ஒரு வருஷம் கூட ஆச்சுமா.. வேணும்னா அதை மறக்க வேற ஒரு க்ரூஸ் ட்ரிப் போலாமா?" என்று குறும்புச் சிரிப்புடன் சொன்ன அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள்,

" இது போல எங்கயாவது இனி கூட்டிட்டு போனீங்க அப்புறம் போன முறை மாதிரி இல்லாம, இந்த டைம் கண்டிப்பா டிவோர்ஸ் கொடுத்திடுவேன்... சே... டூர் போறதுன்னாலே பக்குன்னு இருக்கு..." என்றாள் பெரும் எரிச்சலுடன்..

உடனே பாய்ந்து அவளை நெருங்கியவன், "இல்ல வர்ஷி, அப்படியெல்லாம் சொல்லப் படாது. சின்ன புள்ளதனமால்ல இருக்கு... இதெயெல்லாம் ஒரு அனுபவமா பார்க்கணும் கண்ணு... அத விட்டுபுட்டு டிவோர்ஸ் அப்படின்னெல்லாம் மிரட்டப்படாது.. மனசு வலிக்கும்ல..." என்று இதயத்தை இரண்டு கரங்களாலும், பற்றியவாறு அவன் கூற, அவன் கூறிய விதத்தில் சிரிப்பு தோன்றினாலும், அதை வெளிக்காட்டாது,
"இனிமே கப்பல்ல வா, பிளேன்ல வா அப்படின்னு கேப்பீங்க..." என்று அவள் மிரட்ட,
"ஏய்.. நமக்கு ஆபத்து கப்பல்ல போயித்தானே வந்துச்சு... பாவம் பிளேனோடு எதுக்கு கோபிக்கிறே... எங்காச்சும் சீக்கிரமா போகணும்னா நமக்கு கெடச்ச ஒரு போக்குவரத்துக்கு அதுதான இருக்கு... அதையும் வேணாம்னா, உன்ன சைக்கிள்ல வச்சுதான் மிதிக்கணும்.." என்று அவன் பெருமூச்சுடன் கூற,

"ஏன்... சாருக்கு சைக்கிள்ல என்ன வச்சு சுமந்துக்கிட்டு போக முடியாதோ?" என்று அவள் எரிச்சலுடன் கேட்க,

"யாரு சொன்னா அப்படி... இப்ப வேணும்னாலும் சொல்லு உன்ன கைலயே தூக்கிட்டு சந்திர மண்டலத்துக்குக்கூட போயிட்டு வர்றேன்... வேணும்னா வா" என்று தூக்குவது போல கரத்தை நீட்ட, அவனை குறும்பாக பார்த்தவள்,

"எப்படி..." என்று புருவத்தை மேலே தூக்கியவாறு கேட்டாள். அவனோ இதென்ன பிரமாதம் என்பதுபோல, அவளைப் பார்த்துவிட்டு, குழந்தைகளின் அறைக்குள் சென்றுவிட்டு வெளியே வந்தான். வரும்போதே குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த, சந்திரமண்டல போஸ்டரை எடுத்துவந்தவன், அதைத் தரையில் விரித்துத் தன் மனைவியை நெருங்கினான்.

அவள் என்ன என்பதை உணர்வதற்குள்ளாக, அவளைக் கரங்களில் ஏந்தி, அந்த போஸ்டரின் மீதேறி நின்று,

"இப்படித்தான்... என் பொண்டாட்டி..." என்றதும் அவன் செய்கையில் வாய் பிளந்தவள்,

"இது ஏமாற்று... நீங்க ரொம்ப மோசம்" என்றவாறு கலகலத்துச் சிரிக்க, அந்த சிரிப்பை ரசித்து அவனும் நகைக்கத்தொடங்க, வெளியே மழை தாராளமாக பொழியத்தொடங்கியது.

இனிதா மோகன்குமார் தமிழினி

ஆக்ரோஷமாக வீசிய கடலலையினால் நனைந்த கரையோரத்தில் கால் புதைய
தன் ஆருயிர் மனைவியின் கைபற்றி நடந்து வந்துகொண்டிருந்தான் ஆரோன். அந்தக் கடலலையும், அதன் ஓசையும், மணலில் கால் புதைவதும் அவன் அழைக்காமலே ஒருவருட முந்தைய பயங்கர நினைவுக்கு அழைத்துச்செல்ல, தன் மனையாளின் கரத்தை இறுகப்பற்றியவாறு, ஆள் அரவம் அதிகம் இல்லாத இடம் பார்த்து வந்தவன், மனைவியைக் கைவளைவிற்குள் வைத்துக் கொண்டு அமர்ந்தான்.
மாலை மயங்கும் அழகை கூட உணராமல் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு எத்தனை காலம் சென்றாலும் அந்தப்பயங்கர நினைவுமட்டும் அழியாத கோலமாய் மனதில் பதிந்துவிட்ட, இந்த கடலில் எப்படி உயிர் தப்பி வந்தோம் என்கிற நினைவு எப்போதும்போல வலிக்க வலிக்க நினைவில் வந்து சென்றது...

நன்விழியோ அருகில் அமர்ந்திருந்த கணவன் எதுவும் பேசாமல் கடலையே வெறித்து பார்ப்பதை கண்டு மெல்ல அவன் கைகளில் தன் கைகளை வைத்து அழுத்தியபடியே

"மாமா.." என்று அழைக்க அதில் நடப்புக்கு வந்தவன்.. கேள்வியாகத் தன் மனைவியை பார்க்க,

"என்னாச்சு மாமா?" என்றாள் அவன் கன்னத்தை வருடியபடி.

"விழி இந்த கடலை பார்த்தால் மனதிற்குள் பழைய நினைவு வருகிறது..
எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து தப்பி வந்தேன் என்று நினைக்க தோணுதுடி... அந்த நேரம் எனக்கேதாச்சும் நடந்திருந்தால்... நீயும் குழந்தைகளும்..." என்று முடிக்கமுடியாது திணற, அவளுடைய விழிகளில் முணுக்கென்ற கண்ணீர். எழுந்து முழங்காலிட்டு அமர்ந்தவள், சற்றும் யோசிக்காது அவனுடைய தலையைப் பற்றி தன் மார்போடு அணைத்து,

"ஷ்... என்ன மாமா இது.. நீங்கள் எந்த ஆபத்தை சந்தித்தாலும், உயிரோடு என்கிட்டே வந்திடுவீங்க தெரியுமா... ஏன்னா நம்ம காதல் உண்மையானது... அது ஒருபோதும் நம்மை பிரிக்காது..." என்று அவள் கூற, அவள் அணைப்பில் கட்டுண்டவன், சடார் என்று அவள் இடையை பற்றித் தன்னை நோக்கி இழுத்துத் தன் மடியில் விழவைத்தவன்,

"உன்னுடைய இந்த அணைப்புக்காகவே இப்படிப் பேசலாம்னு தோணுதுடி..." என்று விழிகளைச் சிமிட்டிக் கூறியவன், அவள் உதடுகள் நோக்கிக் குனிய,

"மாமா.. நீங்க ரொம்ப மோசம்" என்றவாறு அவன் செயலுக்கு சம்மதமாய் விழிகளை மூட, அந்தப் பன்னிரண்டு வருட தாம்பத்தியத்தின் ஆழம் மாற்றுக்குறையாது அழகாக முத்தத்தில் தொடர்கதையானது.

பானுரேகா

ஆழ்ந்த உறக்கத்தில் தன் மனைவி தமிழரசியின் இடையில் கரத்தை போட்டவாறு அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைந்திருந்த பாண்டியனின் பிரத்தியேக கைபேசி சினுங்க எடுத்துக் பார்த்தான். விக்ரம்தான் அழைத்திருந்தான். அவசரமாக எழுந்தவன் தன் மனைவியின் தூக்கம் கலையாமல் கைபேசியுடன் வெளியே போய், அதை உயிர்ப்பித்துத் தன் காதில் பொருத்த,

"சார்.. நா விக்ரம் பேசுறேன்.. இன்னிக்கு இரவு மூணுமணிக்கு ராயபுரத்தில இருந்து போதைப்பொருள் கடத்தறதா செய்தி வந்திருக்கு..." என்றதும் நிமிர்ந்தவன்,

"உடனே அந்த இடத்துக்கு போலீஸ் ஃபோர்ஸ் அனுப்புங்க... நா வந்திட்டிருக்கேன்..." என்று விட்டுத் திரும்ப, மார்பின் குறுக்காகக் கரங்களைக் காட்டியவாறு தன் கணவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழரசி.

சற்று தயங்கியவன்,

" போகனும்டி.." என்றதும் நிமிர்ந்து நேரத்தை பார்த்தாள். ஒன்று முப்பது என்றது கடிகாரம். ஏனோ முகம் வாடிப்போனது. காவலதிகாரிக்கு காலம் நேரம் கிடையாது என்பது அவளுக்கு தெரியும்தான். ஆனாலும் தொடர்ந்து இரவு பகல் என்றில்லாமல், அவன் ஓடித்திரிவது அவனுடைய ஆருயிர் மனைவியாக வருத்தமாகத்தான் இருந்தது.

"கட்டாயம் போகணுமா?" என்று கேட்க,

"வேற வழியில்லை தமிழ்... இது போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமானது.. இளைய தலைமுறையின் எதிர்காலம் சம்பந்தமானது.. போய்தான் ஆகணும்..." என்றவன் குளியலறைக்கு சென்று விட்டு வெளியே வந்தபோது கம்பீரமாய் காவலுடையுடன் வந்தான்.

அங்கிருந்த தொப்பியை எடுத்து அணிந்தவன், இன்னும் உறங்கப்போகாமல், அங்கேயே காத்திருந்த தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, இரண்டெட்டில் வாசலைக் கடக்க, வெளியே போகும் கணவன் எந்த ஆபத்துமில்லாமல் திரும்பிவரவேண்டும் என்கிற வேண்டுதலுடன், தூக்கத்தைத் தொலைத்தவளாய், படுக்கை நோக்கி சென்றாள் தமிழரசி.

காவல் தூங்குவதில்லை... அதனால் தான் மக்கள் நிம்மதியாகத் தூங்குகின்றனர்.

தீபா கோவிந்த்

அதீந்திரனைத் தேடி, அவனுடைய அலுவலக அறையைத்திறந்து உள்ளே நுழைந்த ஆரா திடீர் என்று புதிய உலகுக்குள் தள்ளப்பட்டாள்.

இது என்ன விந்தை...? அந்த அலுவலகம் மாயமாய் மறைந்துபோக, அங்கே செர்ரி பிளாச தோட்டமென மாறி, மரத்திலிருந்த பூக்கள் உதிர்ந்து இவள்மீது விழத்தொடங்கின. கூடவே செவிகளில் குருவிகளின் இனிய கீச் கீச் இசையும் விழ, சிலிர்த்துப்போனாள் அம்மாது.

ஏதோ மாயலோகத்தில் புகுந்துவிட்ட உணர்வுடன் இரு கரங்களையும் விரித்து, மலர்ந்து சிரித்துச் சுழன்றவள், கிளுகிளுத்துச் சிரிக்க, அவளுடைய விழிகளில் தட்டுப்பட்டான் அவன்.

சாமுராய் வீரன் போல் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தவனைக் கண்டதும், குதூகலத்தை அடக்கும் வழி தெரியவில்லை. ஏற்கனவே உதிரும் மலர்களிலும், கீச்சிடும் குருவிகளின் இன்னிசையிலும் உள்ளம் குழைந்து உருகி நின்றவள், அவள் உயிரானவனும் சேர்ந்து உதிரும் மலர் இதழ்களுக்குள் நனைந்தவாறு வர, தன்னை மறந்து அவனை நெருங்கியவள், தாவி அணைத்து அவனிடமிருந்து முத்தமாய் ஆரம் மொத்தமாய் வாங்க, அவர்கள் முத்தாடிய வேகத்தில் மரங்களிலிருந்து செர்ரிப்பூக்கள் வெட்கி உதிர்ந்து அவர்களின் மீது சொரிய, அந்தக் கணம், ஆராத்தியா தாமரைக் காடானாள் அதீந்திரன் நறுமணம் வீசும் தடாகமானான்.

சற்று நேரத்தின் பின் உதிர்ந்த இதழ்களைத் தன் கரத்தில் பற்ற முயன்று தோற்றவளாக,

"இது என்ன மாயம் அதீப்? " என்றாள் குதூகலம் மாறாமல்.

"ஹாலோகிராஃபிக் ப்ரொஜெக்ஷன்... கணனி மூலம், மின்விளக்குகள் கொண்டு உண்மையாக நிகழ்வதுபோல உருவகிப்பது... " என்று கூறியவாறு அவளை அணைத்துப் பிடித்து இறுக்க, அவன் மார்பில் விழுந்தவளின் விழிகளில் தட்டுப்பட்டது அந்த விருது.

பல உயிர்களை கப்பாற்றியதற்கு கிடைத்த பரிசல்லவா, தன்னவனின் திறமையை எண்ணி உவகையுடன் நிமிர்ந்தவள், அவன் கழுத்தைச் சுற்றிக் கரத்தைப் போட்டு அணைத்தவள், தீரமுடியா காதலுடன் அவன் கழுத்தில் தன் முகத்தைப் பொருத்த, முதலில் என்ன செய்வது என்று தெரியாது திணறினான்.
சொல்லித் தந்தால் கூட வாராத காதல் கலை.. சொல்லாமலேயே வஞ்சியவளின் நெருக்கத்திலே வசப்பட, அவளை நோக்கிக் குனிந்தான் அதீந்திரன்.
 

sivanayani

விஜயமலர்
அருணா

அழகிய இளமாலை நேரம்.. சூரியன் மெதுமெதுவாக தன்னை மலைக்கு பின் மறைக்க தொடங்கி இருக்க, அந்த நேரத்து இதமான வெய்யிலையும் அழகான காற்றையும் அனுபவித்தவாறே அந்த பார்க்கில் இருந்த சேரில் அமைதியாக அமர்ந்திருந்தனர் விதார்த்தும் மீராவும்..

விதார்த் மனைவி தோளில் கை போட்டு அவளை மெலிதாய் அணைத்திருக்க, இருவரும் முகத்தில் உறைந்துவிட்ட புன்னகையுடன் அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தனர்..

அப்போது விதார்த்தின் ஃபோன் அடிக்க, எடுத்து யாரென்று பார்த்தவன் முகம் மலர்ந்தது.

உடனடியாக அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன், "சொல்லுங்க அக்கண்யன்.. எப்படி இருக்கீங்க..? ஹவ் இஸ் சிஸ்டர்..? ஃபேமிலி வே ல இருக்காங்கன்னு சென்னை மீட்ல சொன்னீங்க. " என்று கேட்க
" யா… இப்போ ஐந்து மாதம்.. நல்லாருக்கா.. நீங்க ரெண்டு பேரும்.. பசங்க எப்படி இருக்காங்க..?" என்றான் அக்கண்யன்
"ஆல் ஃபைன்.."

"அடுத்த மாதம் நடக்கும் பிசினஸ் மீட் வர்றீங்களா விதார்த்..?"

"கண்டிப்பா.. அது நம் துறையில் நடக்கும் மிக பெரிய மீட் இல்லையா.. எப்படி மிஸ் பண்ணுவேன்..!" சிறு புன்னகையுடன் விதார்த் கூற

"சூப்பர்.. அப்போ ஒரு ஃபேமிலி ட்ரிப் மாதிரி எல்லாரும் சேர்ந்தே போவோமா என்று ஜனனி கேட்க சொன்னா.. மீட் முடிச்சுட்டு அப்படியே மும்பையும் சுத்திட்டு வரலாம்.."

அக்கண்யன் கூறிய திட்டம் விதார்த்திற்கும் பிடித்திருக்க, "வை நாட்... போகலாம்.." என்றதும் சிறிது நேரம் இருவரும் தொழில் பற்றி பேசிவிட்டு போனை வைத்தனர்.

அக்கண்யன் கூறியதை விதார்த் மீராவிடம் கூற, "கண்டிப்பா போகலாம் விது.. நமக்கும் ஒரு மாறுதல் வேண்டி இருக்கும்.. இன்னும் கூட நடந்து முடிந்த சம்பவத்தில் இருந்து முழுதா வெளியே வர முடியலை.. எத்தனை இழப்புகள்.." இன்னும் கூட சிறு உடல் நடுக்கத்துடன் மீரா கூற, அவளை சுற்றி இருந்த கைகளால் மேலும் மனைவியை அழுத்தமாக அணைத்து கொண்டவன்,

"நம் வாழ்வின் மறக்கமுடியாத பயணம் பேபி அது.. நிறைய இழப்புகள் இருந்தாலும் பல விஷயங்களை நமக்கு கற்றும் கொடுத்தது.. நிரந்தரம் இல்லாத வாழ்க்கையில் தேவை இல்லாமல் பகை வளர்க்காமல் எல்லாருடனும் அன்புடன் இருக்க வேண்டும் என்ற மிக பெரிய பாடம்.. உன் மூலம் நான் ஏற்கனவே கற்று கொண்ட பாடம் தான் பேபி.. இருந்தாலும் இந்த முறை மிகவும் அழுத்தமா பதிஞ்சு போச்சு.."

"நான் என்ன விது பண்ணினேன்..?" உண்மையாகவே புரியாமல் மீரா,

"என்னது என்ன பண்ணினாயா.. உலகத்தில் மனிதனுக்கு உதவி பண்ணவே யோசிப்பாங்க.. நீ தான் தர்ம பிரபு ஆச்சே.. பேய் பிசாசிற்கு எல்லாம் பாத்து பாத்து பண்ணுவாயே பேபி.." உதட்டோரம் துடிக்க விதார்த் பேசி கொண்டே லேசாக பின்னால் நகர்ந்து விட, அவன் எதிர்பார்த்தது போலவே முந்தைய கவலை மறந்து அவனை முறைத்தவள்

"உங்களை.." என்று கொண்டே அவனை அடிக்க வர

"நான் பாவம் டி பொண்டாட்டி.. காப்பாத்த அவசரத்துக்கு ஒரு ஆவி கூட இல்லை.." என்று மேலும் அவளை வம்பிழுத்து கொண்டே ஓடினான் விதார்த்

சிறிது தூரம் ஓடியவனை பிடித்து அவள் மொத்த, அவளுக்கு வாகாய் குனிந்து அடிகளை வாங்கி கொண்டவன் முகத்தில் உறைந்திருந்த புன்னகை இப்போது அவள் முகத்திலும் ஒட்டி கொண்டது…

ஷா ஷங்கரி..


பழங்களை மிக்ஸியில் போட்டு அடித்துக்கொண்டிருந்த அம்ருதாக்கு அன்று முன்னிரவு கண்ட கனவுதான் மனதுக்குள் குடைந்துகொண்டிருந்தது.

அந்தப் பயங்கர ஆபத்தை சந்தித்து தப்பி வந்த பின்னாடியும், அடிக்கடி அந்த பழங்குடிகள், பெயர் தெரியா ஆயுதங்களை ஏந்தி வந்து பயமுறுத்தத்தான் செய்கின்றனர். அதன் பிறகு அந்த நாள் முழுவதும் எதோ தப்பானதாகவே தோன்றும்... யோசனையுடன் பழைய நினைவில் மூழ்கிக்கொண்டிருக்க, முன்னறையிலிருந்த ஆதீரநந்தனுக்கு, இத்தனை நேரமாகத் தன் மனைவியைக் காணாமல் குழப்பமானது.

"என்ன.. போய் அரைமணி நேரமாச்சு... இன்னும் ஆளக் காணோம்... பழத்தை பயிர் பண்ணி, அது வந்தப்புறம் தான் ஜூஸ் அடிக்கனும்னு போய்டாளோ என்ன?"என்று எண்ணியபடி சமையலறை நோக்கி விரைந்தவன், அங்கே கண்ட காட்சியில் புன்னகை மலர, பூனை போல் மெதுவாக சென்று அவளை பின்னிருந்து அணைத்தான்.

ஏற்கனவே பழங்குடிகளின் நினைவிலிருந்தவள், அதிர்ந்து திடுக்கிட்டு, தன்னையும் மறந்து "அம்மா….." என்று அலறியவாறு காதைப் பொத்திக்கொள்ள,

"ஹே அம்மு என்னடி ஆச்சு ?" என்று அவளை மென்மையாக அணைத்து தன்னுள் புதைத்து கொண்டான் ஆதீரநந்தன்.

அவன் குரலில் மீண்டும் நிஜ வாழ்வுக்குள் வந்தவள்,"தீரா என்ன விளையாட்டு இது பயந்துட்டேன்" என்றாள் உதடுகள் நடுங்க.

"ஆமாண்டி ஜூஸ் கொண்டு வர்றேன்னு சமயலறைக்குள் வந்து அரைமணி நேரமாவுது... காணோமேன்னு வந்து பாத்தா, சுவிச்ச கூட போடாம, அதுகூட டூயட் பாடிக்கிட்டிருந்துட்டு, என்னையே முறைக்கிறீயா... ஆமாடி... நா இப்படி தான் பண்ணுவேன். என்ன பண்ணுவே..." என்றவாறு அவள் கன்னத்தோடு உதடுகளை உரச முயல, அவளோ, அதைக் கருத்தில் கொள்ளாது, மிக்ஸியின் சுவிட்சை பார்த்தாள்.

'அடக்கடவுளே...' என்று தன் தலையைத் தட்டியவள், அசடு வழிந்தவாறு,

"நம்ம பயணத்தை பத்தி நினைச்சுட்டு இருந்தேனா..அந்த எஃபக்ட் தான் இது...ஹிஹிஹி" என்று சமாளிப்பாய் சிரித்தாள்.

"அசடு வழியுதுடி தங்கம் தொடச்சுக்கோ." என்றவாறு தன் காரியத்தில் கவனமாக, அவனுடைய அடர்ந்த மீசை கொடுத்த குறுகுறுப்பில்,

"சீ என்னது... விடுங்க... இது சமையலறை..." என்றவாறு அவனிடமிருந்து விடுபட முயல,

"ஏய்... சோ வாட்... நம்ம வீடு.. நம்ம சமையலறை... எங்கவேணும்னாலும் உன்னை..." என்றவன் மேலும் தன் மனைவியைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயல, வேகமாக அவனைதள்ளிவிட்டு விலக்கியவள்,

"ஆடி... அத்தி... இந்த ஆட்டத்துக்கு நா வரலப்பா..." என்றவாறு ஓட

"ஏய்.. உன்ன விடமாட்டேண்டி... ஜூஸ் கூட கொடுக்கல.. இப்போ நீதாண்டி எனக்கு ஜூஸ்..." என்றவாறு அவளைத் துரத்த,

அம்ருவோ,"சிறுத்தை சிக்கும் மச்சான்... ஆனா சில்வண்டு சிக்காது" என்றபடி மாடி படிகளில் ஏறினாள்.

"அடியேய்... சிறுத்தையே எனக்கு சில்வண்டுதாண்டி.. நீ என்ன பிரமாதம்... இரு வர்றேன்..." என்றவன் இரண்டெட்டு அவளை நெருங்கித் தன் கரங்களில் ஏந்திக்கொள்ள, பதட்டத்துடன் மேல்மாடியை பார்த்துவிட்டுக் கணவனைப் பார்த்து,

"தீரா.. உங்க அருமை பிள்ள உள்ள தான் இருக்கான். கீழே விடுங்க..." என்று சிணுங்கலாக கூறினாள்.

"அப்படியா அம்மு " என்றவன் "அவன் மேலேதானே இருக்கான்..." என்றவாறு, அருகிருந்த அறை கதவை திறந்து உள்ளே சென்று கதவை பூட்ட, அடுத்த நிமிடங்களில் பகல் கூட இரவானது அவர்களுக்கு.

பிரியதர்ஷினி.

பிரபல்யமான நகைக்கடை ஒன்றில், தனக்கு பொருத்தமான ஆரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்த நிவ்யாவைப் பார்த்து,

"நிவி..." என்று சற்றுப் பெருங்குரல் எடுத்து அழைத்தான் விக்ரம். அவன் அழைப்பில், திடுக்கிட்டு நிமிர்ந்தவள், தன் கணவனைப் பார்த்து முறைத்து,

"டேய் என்னடா, இப்படி கத்துற.. கடையில இருக்குற எல்லாரும் உன்னைத்தான் பார்த்துட்டு இருக்காங்க..." என்று நிவ்யா கோப முகம் காட்ட, தன் மனைவியின் கோபத்தைக் கண்டு உடனே அடங்கிய அஸிஸ்டெண்ட் கமிஷனர் விக்ரம்,

"சாரிமா... இந்த ஆரத்தைப் பார்த்தேனா... உனக்கு செம பொருத்தமா இருக்கும்னு நெனச்சேன்..." என்று பவளமும் முத்தும் பதித்த அழகிய வேலைப்பாடு கொண்ட கழுத்தாரத்தை அவள் முன் நீட்ட, அதன் அழகில் தன்னை மறந்தவள்,

"ஐயோ... செம அழகா இருக்கு விக்ரம்..." என்று முகம் மலர்ந்தவளை நெருங்கியவன், ஆரத்தை அவளிடம் கொடுக்காமல், தானே அவள் கழுத்தில் அணிந்து அழகு பார்க்க, அவள் சங்குக் கழுத்துக்கென்றே செய்தது போலிருந்தது அது.

அவள் அழகில், உலகமே மறந்து, அது பொது இடம் என்பதையும் துறந்து தன் மனைவியைப் பார்த்து ஜொள்ளுவிட, தன் கணவனின் பார்வையின் பொருளுணர்ந்து முகம் சிவந்தவளைக் கண்டு மேலும் சொக்கிப்போனவனாக, அவளைக் கடித்து உண்டு விடுவது போலப் பார்க்க, அந்தப் பார்வையின் மொழியைப் புரிந்துகொண்டவளாக, அவசரமாகக் கழுத்திலிருந்து ஆரத்தைப் பிரித்தெடுத்தவளாய், அதற்கு பில் போட ஓடினாள் நிவ்யா.

அதேநேரம், இருபத்தைந்து கிலோமீட்டருக்கு அப்பால், அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. உள்ளே வந்துகொண்டிருந்த உறவினர்களை இருகரம் நீட்டி வரவேற்றுக்கொண்டிருந்தான் ப்ருத்வி.

அவனுடைய மனைவி கீர்த்தனாவிற்கு இது ஏழாம் மாதம்... அதனால் வளைகாப்பு செய்வதற்காக அனைவரையும் அழைத்திருந்தான் அவன்.

கீர்த்தனாவை அலங்கரித்து மேடையில் அமர்த்திவிட்டுப் ப்ருத்வியை அழைக்க, புன்னகையுடன் உள்ளே வந்தவன், மேடையில் அமர்ந்திருந்த தன் மனைவியைக் கண்டதும் மெய்மறந்துபோனான்

அவன் கண்களுக்கு அவள் அழகிதான். ஆனால் தாய்மையின் பூரிப்பில் பேரழகியாகத் தெரிய, கண்கள் பணிக்கத் தன் மனைவியிடமிருந்து விழிகளை விலக்காமலே நெருங்கினான் அந்த அன்புக்கு கணவன்.

கருணை பொங்கும் தன் கணவனின் விழிகளில் தெரிந்த பரவசத்தைக் கண்ட கீர்த்தனாவின் முகம் நாணத்தால் சிவந்து போனது.

கடைக்கண்ணால் அவனைப் பார்க்க, அவனோ தன்னவளை நெருங்கி, நலுங்கு வைக்க, எப்போதும்போலத் தன் கணவனின் கரம் பட்டதும் சிலிர்த்துப்போனாள் கீர்த்தனா. தன்னை மறந்து கன்னத்தில் பதிந்த தன் கணவனின் கரத்தை பற்றியவளின் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.

ஒருவருடத்திற்கு முன்பு, கணவன் சந்தித்து வந்த ஆபத்தும், அவனுடன் தொடர்புகொள்ள முடியாமல் அவள் பட்ட அவஸ்த்தையும் வார்த்தைகளால் வடிக்கக் கூடியதா...? அவனை முழுதாகக் காணும்வரை அவள் உயிர் அவளது கைகளில் இல்லையே...

தன் மனைவியின் விழிகளில் தெரிந்த கண்ணீரைக் கண்டு கோபம்கொண்டான் ப்ருத்வி. இந்த விழாவிற்கு வாரியர்ஸ் 016 பயண நண்பர்களை அழைக்காததற்குக் காரணமே பழைய நினைவுகள் அவளைத் தாக்கும் என்பதால்தான். ஆனால், அவளோ இன்னும் அதை நினைத்துக் கலங்குகிறாளே... இவளை என்ன செய்தால் தகும். .

குனிந்து அவள் கன்னங்களைத் தன் இரு கரங்களாலும் பற்றி நிமிர்த்தியவன், வழிந்த கண்ணீரைப் பெருவிரலால் துடைத்து,

"எதுக்குடி இப்போ அழுறே..." என்றான் மெல்லிய கோபத்துடன்... மூக்கை உறிஞ்சியவள்,

"நா ஒன்னும் அழலை..." என்று உதடுகளை சுழிக்க, அந்த அழகில் சொக்கிப்போனவனாய் ஆட்கள் தம்மை பார்ப்பதும் மறந்து அவள் நெற்றி வகிட்டில் தன் உதடுகளைப் பொருத்தி எடுக்க, அதைக்கண்டு உறவினர்கள் வாய்பொத்திச் சிரிக்க, மேலும் சிவந்துபோனவள், வலி மறந்தவளாய் முகம்பொத்தித் தன்னை மறைத்துக்கொண்டாள் கீர்த்தனா.

ஆனந்தலக்ஷ்மி(கண்ணம்மா)

பச்சைமேனி பேர்த்தியிருக்கும் தன் வீட்டுத்தோட்டத்தின் புல்வெளியில், மேடிட்ட வயிற்றுடன் பெரிய மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்திருந்த தன் மனைவி கலையை மடியில் ஏந்தியவாறு, மனதை மயக்கும் அந்த ரம்மியமான தென்றல் காற்றை அனுபவித்துக்கொண்டு, அவளுடைய கால்களை அழுத்திக்கொடுத்து கொண்டிருந்தான் கிருஷ்ணா.

அப்பொழுது கலை, தனக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஸ்கெச் புத்தகத்தை எடுத்து கிருஷ்ணாவிடம் நீட்ட, தன் மனைவியின் காலிலிருந்து கையை எடுத்தவன் அதை வாங்கிப் புரட்டிப் பார்த்தான்.

கப்பல் பயணத்தின் ஒவ்வொரு சம்பவங்களையும் ஓவியமாக்கி அதில் வரைந்திருக்க, வியந்த பார்வையுடனும், மெச்சுதலாகவும் தன் மனைவியைப் பார்த்தான் கிருஷ்ணா.

"என்ன ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல கிருஷ்ணா? நம்ம குழந்தைக்கு சொல்ல செம த்ரில்லர் கதை இருக்கு நம்மகிட்ட” என்றவள், திடீர் என்று திடுக்கிட்டு நிமிர்ந்து நெளிய,

“ஹேய் கலை. என்னடா ஆச்சு?” எனப் பதறினான் கிருஷ்ணா.

அவளோ தன் வயிற்றை வருடிக் கொடுத்தவாறு,

“ம்... உங்க புள்ளைக்கு அந்த கதைய இப்பவே சொல்லணுமாம். எட்டி உதைக்கிறான்” என்றாள் பெருமையும், களைப்பும் மேலிட.

“ஹாஹா... அப்படியா?” என்று கலையின் வயிற்றை காதலோடு வருடியவன், “தங்க குட்டி! அம்மாவுக்கு வலிக்கும்ல! அவசரப்படாதீங்க! நீங்க வெளியில வந்ததும் அப்பா கதை சொல்லுறது என்ன, எல்லாரையும் நேர்லயே காட்டுறேன். அவங்க நா சொல்லாம விட்ட கதை எல்லாம் பக்காவா... சொல்லுவாங்க.” என்றவன் தன் மனைவியை நோக்கிக் குனிந்து அவள் உதட்டில் மெல்லிய முத்தம் ஒன்றை வைத்தவன், தன்னைத் தந்தையாய் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தும் அந்த அற்புத பரிசுக்கு அழுந்த முத்தமிட்டு விலக, அந்த முத்த சுகத்தில் தன் விழிகளை மூடினாள் கலை. கூடவே மாதராய் மாறவிருக்கும் மடந்தை அவள் தன் மன்மதன் மார்பில் மஞ்சம் கொண்டாள் வெட்கத்தோடு.

விஜயமலர்

நிலவு பொழியும் இரவு வேளை... அந்தக் கடலைக் கிழித்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த நவீனரக யாஞ்ச்.

அதன் இரும்புப் பிடியைப் பற்றியவாறு, நிலவின் ஒளியில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக இருந்த கடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அவன் சிந்தனைகள் ஒரு நிலையில் இல்லாது எங்கோ தத்தளித்துக்கொண்டிருக்க, அவன் சிந்தனையைத் தடுக்கும் விதமாக அவனுடைய வயிற்றுக்கூடாகப் படர்ந்து வந்த இரண்டு தளிர்க்கரங்கள், பின் ஊர்ந்து மார்பினூடாகச் சென்று அங்கேயே தங்க, அதை உணர்ந்து கொண்டவனின் முகத்திலோ அதுவரையிருந்த யோசனை மாயமாய் மறைந்து போக, அங்கே எல்லையில்லா மகிழ்ச்சியும், காதலும் பொங்கியது.

தன் மார்பில் தங்கிய கரங்களைத் தன் பெரிய கரங்களால் பற்றி அழுத்திக் கொடுத்தவன், பின் அவற்றை உதடுகளில் பொருத்தி விடுவிக்க, அந்தக் கரங்களுக்குரிய பால்வண்ண முகமோ அவனுடைய பரந்த முதுகில் பதிந்து சற்று நேரம் இளைப்பாறியது. பின்,

"என்ன... ஐயாவுக்கு தூக்கம் வரவில்லையா?" என்றாள் தன் மதி மயக்கும் குரலால்.

தன் கரத்திலிருந்த அவளுடைய பிஞ்சு விரல்களைப் பெருவிரலால் வருடிக்கொடுத்தவன்,

"ப்ச்... இல்லேம்மா... தூக்கம் வரவில்லை..." என்றவனிடமிருந்து விலகியவள், அந்த இரும்புப் பிடியில் சாய்ந்து நின்றவாறு,

"என்ன... பழைய நினைவா..." என்றாள் மென்மையாய்.

அதற்கு அவன் பதில் கூறாது மௌனமாய் நிற்க, அதிலிருந்தே பதிலைப் பெற்றுக்கொண்டவள், எப்போதும்போல அவனை நெருங்கி இரும்புப் பிடிக்கும், அவனுக்கும் இடையில் வந்து நின்றவளாய், அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு,

"ஹே... இட்ஸ் ஓக்கே கண்ணா... இறந்தகாலம், நடந்து முடிஞ்சது... நம்மால அத மீளத் திருப்ப எடுத்துக்க முடியாது... வாழ்க்கைங்கிறது நிறைய அதிசயங்களை கொண்டது... நாளை என்ன நடக்கும்கிறது யாருக்கும் தெரியாது... முடிஞ்ச கதையை எண்ணி வருந்துவதும், நாளைக்கு என்னாகுமோன்னு பயப்படுறதும், புத்திசாலித்தனமில்லை ஆத்மன்... இந்தக் கணம்.. இந்த வினாடி இது மட்டும்தான் நிஜம்... உங்கள் கையணைப்பில் நான்... என்கையணைப்பில் நீங்கள்... கிடைச்ச இந்த வினாடியே அனுபவிக்கலாமே... என்று அண்ணாந்து பார்த்து அவனிடம் கேட்க, அவள் சொன்னதில் இருந்த நியாயம் புரிய அவனுடைய முகம் குறும்பாய் மலர்ந்து சிரித்தது.

"ஆமாம்டி என் பொண்டாட்டி... இந்த நிமிஷத்தை அனுபவித்துத்தான் புத்திசாலித்தனம்... இன்னொருவாட்டி அனுபவிக்கலாமா?" என்றவன், அவளை அவளை நோக்கி குனிய, அவன் நோக்கம் புரிந்தவளாக,

"அடி ஆத்தி.. ஆளை விடு சாமி..." என்றவாறு ஓட எத்தனிக்க, அவளை பாய்ந்து பற்றியவன், இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டான். மார்பில் விழுந்தவளின், இடை நோக்கிக் கரங்களை கொண்டு சென்று தன்னோடு இறுக அனைத்தவன், அவளுடைய உடல் சூட்டை உணர்ந்து கொண்டவனாய் எப்போதும் போல முகம் கனிய, விழிகள் விரிய,
"ஹே..." என்றான் கிசுகிசுப்பாய். இவள் அண்ணாந்து பாக்க,
"என் ஆதி நீ, அந்தம் நீ, திகட்டாத செல்வம் நீ, பொருள் நீ, என் உயிர் நீ, எல்லாமும் நீ..." என்றவன் அடுத்து அவளை இரு கரங்களிலும் ஏந்திக்கொண்டவனாக யாட்டின் உள்ளறை நோக்கிச் செல்ல, தன் கணவனின் சில்மிஷங்களில் தன்னை மறந்து கலகலவென்று சிரித்த சர்வமகியின் சிரிப்பை உதடுகள் கொண்டே அடக்கினான் அவளின் உயிரான கணவன் அநேகாத்மன்.

துமி

தங்கள் அறையில் இருந்த கண்ணாடியில் தன் சீருடை சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டிருந்த தியா, டையைக் கட்டுவதற்காகத் தயாராக, அவளை பின்னிருந்து பலம்பொருந்திய இரு கைகள் அணைத்துக்கொண்டன.

அவளை விட உயரத்தில் பெரியதாய் இருந்த ஆர்யன் சற்றே குனிந்து அவளின் வலப்புற தோளில் தன் நாடியைப் பதித்து, கண்ணாடியில் தெரிந்த இருவரின் பிம்பங்களைப் பார்த்து ரசிக்கத்தொடங்க, அவளும் அவனைப்போலவே கண்ணாடியில் இருவரின் பொருத்தத்தைக் கண்டு இரசிக்கத் தொடங்கினாள்.

இருவரும் வெள்ளை சீருடையில் கம்பீரமாய்... பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

காதல், கண்ணாடி வழியே நான்கு கண்களிலும் வழிந்து செல்ல, அதை உணர்ந்து கீற்றாய் புன்னைகை அவன் முகத்தில் பிறக்க, அது அவளையும் தொற்றிக்கொண்டது.

அவளுடைய வயிற்றை அழுந்தப்பற்றித் தன்னோடு நெருக்கியவன்,

"சோ கோ கேப்டன் ஆர் யு ரெடி?" எனப் புருவம் உயர்த்திக் கேட்க,

"வாழ்க்கை முழுக்க வரப்ப, கூட வேலைக்கு வரமாட்டேனா??" எனத் தன்னை அணைத்தவனின் கரங்களைத் தன் இருக்கரங்களாலும் இறுக்கியவாறு, அவனைப் போலவே புருவம் உயர்த்திக் கூறிவிட்டு, தன் கரத்திலிருந்த டையைத் தூக்கிக்காட்டி, "இதுமட்டும்தான் கட்டணும்..." என்றாள்.

மெல்லியதாய் சிரித்தவன், அவள் கரத்திலிருந்த கருநீல டையைப் பறித்து எடுத்து, அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்து எடுத்து, அவளைத் தன்னை நோக்கித் திருப்பியவன், அவளுடைய காலரை நிமிர்த்தி, அதைச் சுற்றி டையைப் போட்டு, முடிச்சிட்டு மேலே கொண்டுசெல்ல, அவனைப்பார்த்து, ஒற்றைக்கண் அடித்து சிரித்தாள் தியா.

"என்ன சாரே... எனக்கு நீங்க ஒருவாட்டிதான் மூணு முடிச்சு போட்டீங்க... இப்போ பாருங்க... முன்னூறு முடிச்சு போட வச்சுட்டேன்..." என்று கிளுகிளுத்துச் சிரித்த மனைவியின் குறும்பில் கவரப்பட்டவனாய் சிரித்த உதடுகளை நோக்கிப் பயணிக்க, அடுத்து அவன் என்ன செய்வான் என்பதை அனுபவத்தில் புரிந்தவளாய் வலக்கரம் கொண்டு அவனுடைய உதட்டு ஒத்தடத்திற்கு தடைவிதித்தவள்,

"ஐயா சாமி... நேரத்தை பாருங்க.. ஒன்பது மணிக்கு அங்கே இருக்கணும்... " என்று கூற, எப்போதும் நேரத்தைக் கடைப்பிடிக்கும் ஆர்யன், அவசரமாய் அவளிடமிருந்து பிரிந்து,

"எல்லாம் உன்னால் வந்தது... சீக்கிரம் எழுந்து தயாரானால் என்னவாம்.. இப்போ பாரு... நேரம் போய்கிட்டிருக்கு..." என்று சீற,

க்ளுக் என்று சிரித்தவள்,

"அதுசரி... சீக்கிரம் எழ விட்டாதானே... செய்றதையும் செஞ்சுட்டு பேச்சைப்பாரு.." என்று கிண்டலடித்தவாறு நிமிர்ந்திருந்த காலரை சரிப்படுத்த, புன்னகைத்தவன், வரவேற்பாய் அவளை நோக்கித் தன் கரத்தை நீட்ட அக்கரத்தில் தன் கரத்தை பதிக்க, உயிராய் இறுக்கமாய் பற்றிக்கொண்டான் ஆர்யன் அறிவுடைநம்பி...

எதிர்பாராத பயங்கரங்களை, அளப்பரிய செல்வங்களை தன்னுள் கொண்ட ஆழ்கடலே தன் போக்கில் அமைதியாகத்தான் இருக்கிறது… வாழ்வும் அப்படித்தானே… வெற்றிகள் இன்பங்கள் மட்டுமல்லாது.. எதிர்பாராத நிகழ்வுகள், ஏற்கமுடியாத வலிகளும் கூடத் தான்.. அதையே எண்ணி வாழ்ந்துவிட்டால், வாழ்க்கை எப்படி சீராகும்... நடந்த கசப்புகளை ஓரமாய் போட்டுவிட்டு நடக்குமா நடக்காதா என்று தெரியாத எதிர்காலத்தை எண்ணி வருந்துவதை விடுத்து... இந்தக்கணம், இந்த வினாடி மட்டுமே உண்மையாய் புதிய தேடலுடன் பயணிக்கும் பயணம், என்றும் புதுமைதான்...

** முற்றியது**


http://srikalatamilnovel.com/commun...-016-கருத்துத்-திரி.1160/page-120#post-254823

வணக்கம் கண்ணுகளா இதோ எஸ் எம் எஸ் வாரியர் 016 கதையோட இறுதியாக முடிவுரை போட்டாகிவிட்டது. பதிந்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காம சொல்லுங்க. கதையா படித்து உங்கள் கருத்துக்களை கூறி எங்களை மகிழ்ச்சியின் சிகரத்திற்கு எடுத்துச்சென்ற அத்துணை வாசகர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
 
Status
Not open for further replies.
Top