All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - (மாத்தி யோசி மற்றும் நன்றி நவிலும் கவிதை )

இதில் உங்கள் மனங்கவர்ந்த கவிதைகள் என்னென்ன..? மிகவும் பிடித்த மூன்று கவிதைகளுக்கு வாக்களிக்கலாம் 🌹

  • முதலாம் கவிதை ❤️

    Votes: 5 50.0%
  • இரண்டாம் கவிதை 💜

    Votes: 3 30.0%
  • மூன்றாம் கவிதை 🧡

    Votes: 1 10.0%
  • நான்காம் கவிதை 💛

    Votes: 1 10.0%
  • ஐந்தாம் கவிதை 💙

    Votes: 2 20.0%
  • ஆறாம் கவிதை 💟

    Votes: 3 30.0%
  • ஏழாம் கவிதை 💜

    Votes: 3 30.0%
  • எட்டாம் கவிதை 💚

    Votes: 2 20.0%
  • ஒன்பதாம் கவிதை 🖤

    Votes: 4 40.0%

  • Total voters
    10
  • Poll closed .
Status
Not open for further replies.

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதலாம் கவிதை :


காரிகைப்பெண்ணவளின் வாழ்க்கை முழுவதும் துன்பம் மட்டுமே தொடர்கதையாய்... கடவுள் அளித்த விந்தை அறியாள் அவள்...!

தினம் ஒரு போராட்டம் தனக்கு மட்டுமோ? நினைத்திருந்தாள் அவள்..!
தன்னை தவிர எல்லோரும் நன்றாய்த்தானே இப்பூவுலகில் வாழ்கிறார்கள் என்று?

யார் அவளிடம் சொல்வர்?
மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் தினம் ஒரு போராட்டம் உண்டென...!
பலர் அதை கடந்து வாழ்ந்திட முனைகிறார்கள்...!
அதில் சிலர் ஜெயித்தும் கொள்கிறார்கள்..!

யார் அவளிடம் சொல்வர்?
தன் கஷ்டத்தை விட அடுத்தவரின் கஷ்டம் பெரிதென நினைத்து, தன் வாழ்க்கையை, "இதுவும் கடந்து போகும்" என வாழ்ந்திட ஒரு சிறு நொடி போதுமென..?

யார் அவளிடம் சொல்வர்?
கடவுள் யாரயும் நிந்திப்பது இல்லையே?!
அரசன் அன்று கொள்வான்! தெய்வம் நின்று கொல்லும்!
பெண்ணே! சிலிர்த்தெழுந்திடு..!!!

நாம் வாழும் காலம் எத்தனை காலம்..!? - யாரும் அறியார்!
இருந்தது அதிகம்! இருப்பது குறைவு!
அதில் ஏன் வீண் குழப்பங்கள்?!

நமக்கென ஒரு வாழ்க்கை! அதை கடவுள் அளித்த வரமாய் போற்றி தடைகளை உடைத்து வாழ்ந்திட வேண்டாமோ?

வாழ்ந்து முடித்து இளைப்பாறும் தருணம்... திரும்பிப்பாரடி பெண்ணே...!!! தோன்றும் உனக்கும்! - நம் வாழ்க்கையும் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை தானோ என?!

எழுவோம் பீனிக்ஸ் பறவையாய்!!!
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டாம் கவிதை :



பெருவாழ்வே உனக்கொரு நன்றி!

வாழ்க்கையே எந்த வகையில் உனக்கு நன்றி சொல்ல?

தோழியாய் ஒரு தாய்.. இரண்டாம் அன்னையாய் ஒரு தந்தை…

ஆசானின் கண்டிப்புடன் ஒரு
சகோதரன்..

தந்தையின் பிரதியாய் ஒரு கணவன்..

தேவதையின் சாயலில் ஒரு மகள்..

இவை அனைத்திற்கும் உனக்கு முதல் நன்றி..

தடுக்கி விழும் போதெல்லாம் இது தான் நான் ( வாழ்க்கை)என
என்னை எழுந்து ஓடச் செய்தாயே!
எனது ஒவ்வொரு அனுபவத்திலும் ஒவ்வொரு படிப்பினையை கற்றுத் தந்தாயே!

என்னடா வாழ்க்கை இது என்று நான் சலிக்கும் போதெல்லாம்
சிரித்துக் கொண்டே உன் பன்முகத்தையும் காட்டி எனக்கு வலு கொடுத்தாயே!
இவை அனைத்திற்கும் அடுத்த நன்றி!!

ஒரு புள்ளியாய் இருந்த எனக்குள் பன்முகத் திறமைகள் உள்ளன
என்று எனக்கே என்னை அறிய வைத்தாயே!

துவண்டு விடாதே தோல்வி நிலையல்ல என்று
என்னை தூக்கி நிறுத்தினாயே!
எனது செயல் அனைத்திற்கும் உறுதுணையாய் நின்று என்னை
உறுதிப்படுத்தினாயே! மொத்தமாய் உனக்கொரு நன்றி!!!

என் உயிர் உள்ள வரை என்னுடன் வரும் உனக்கு எனது நன்றி! நன்றி! நன்றி!
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மூன்றாம் கவிதை :


சலிப்பேறி வாழ்க்கை
சளைக்காமல் வார்த்தைகள்
புழுங்கி வெளிநடப்பு
செய்தேன்
நடை பாதை

வியாபார தலமா
என வெளிச்சத்தின்
அவசரத்தில் விழுந்தன
வீரியமிக்க வார்த்தைகள்

இரவில் படுக்யறையாக
பாதிக்கிறது
எனினும் கடக்கிறேன்
பாதகம் இல்லை யா

கூரை இருக்க
போர்வைக்குள் துயில்
இருக்க காம கண்களிடம்
பாதுகாப்பு இருக்க
உணவும் இருக்க

தடித்த வார்த்தைகளை
தடை செய்ய அன்பிருக்க
வேண்டியதை செய்ய
வரையறுக்கப்பட்ட
சுதந்திரம் தெளிவும்
கிடைக்க

இனி எதை நோக்கி
நகர என தீர்மானித்தபின்
புழுக்கம் புழுக்களுக்கு
நம்பிக்கை மணம்
என் மனம் நிறைய
திரும்பி திருந்தி
நான்.
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான்காம் கவிதை :

வாழும் வாழ்க்கை நமக்குரியது

அகம் விரித்து பாதை எங்கும் ஏதோ ஒருவகையில்

ஏதோ ஒரு நிழலில் ஆறுதல்...

முடிவடையும் வாழ்க்கையை விரைவாக வெற்றி பெற்று

முன்னேறி செல்ல ஒரு உந்துதல்...

ஏனோ தானோ என்கிற போக்கு பல சமயங்களில் மாறி

இது தான் இலக்கு என்று புதிய கோணம் கண் முன்...

வாழும் வாழ்க்கை நமக்குரியது

இதில் மகிழ்வு... மகிழ்வி... என்பது மட்டுமே மந்திரம்...

நன்றியரியா மனம் ஊனம்..

நிமிட நேரம் வாழ்வு கொடுத்த கடவுளுக்கு அநேக வணக்கம்...

வாழ்வில் துடிப்பு புகழ் சார்ந்தது.

புகழ் அறத்தின் வழி வருகையில் மனம் மகுடம் தரிக்கும்...

நிதானமான வாழ்வு

எதிர் படும் யாவரிடமும் ஒரு இதழ் விரிப்பு...

ஏதோ பல மயக்கங்கள் அனைத்திலும் முரண்..

இருந்தாலும் சின்ன நேசம்...

முழு வாழ்க்கைக்கும் ஊக்கம்...

வாழு என்பதை விட வாழ விடு

அதில் வாழ்ந்த கனிந்த மனங்கள் பல ஆசி கூறும்...

மயக்கங்கள் தீரா நல்ஊழ் துணை நின்று

வாழாத போன வாழ்க்கை மண் தேய்த்து உண்ட பலன் தான்...

ஓரிடம் மட்டுமே சென்றடைய அன்பு சமுத்திரம் அல்ல...

எங்கெங்கிலும் நீக்கமற நிறைந்து நின்று

தன்னுள் உள் வாங்கி தன்னையே பெயர்த்தெடுத்து துன்புற்றாலும்

தாயாய் தாங்கும் நிலமாய் அன்புருவதும் அன்பிருத்தலும்...

யாவிலும் யாதிலும் யாருடனும்... நேயமுரு...

இயற்க்கை கொடை வாழத உன்னத வாழ்வு...

அதில் நேயமுற்று.... நேசங்கோடுத்து...

நெஞ்சங்களின் பிணைப்பில் வாழும் வாழ்க்கை தனித்துவமானது...

புன்னகை கொண்டு மனதை செப்பனிடுவோம்..

வாழும் வாழ்க்கை நமக்குரியது...
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐந்தாம் கவிதை :



வான்மதியும் கதிரவனும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் தருணம்.....

மின்னிச் சிரித்தது போதுமென உறங்கச் செல்லும் நட்சத்திரக் கூட்டம்.....

மையிருட்டு மண்ணைவிட்டகலும் பொருட்டு கொக்கரிக்கும் சேவல்...

தருக்களினூடே விடியலை வரவேற்கும் குயில்களின் கானம்...

மெல்லிய பூங்காற்றாய் தேகம் சிலிர்க்கச் செய்யும் தென்றல் காற்று...

ஓர் துளியில் அழகை ஒளித்து வைத்துவிட முடியுமா என வியக்க வைக்கும் புல்லின் பனித்துளி...

பட படக்கும் சிறகுகளை விரித்து வானில் பறக்கும் புட்களின் இசை ஸ்வரங்கள்...

தாயின் மடி சேரும் பிள்ளையாய் கரையினை தொட்டுத் தொட்டுச் செல்லும் அலைகள்...

ஆழியான தன் மகனை தாயவள் இதழ்பதிக்கும் முன் தன்னவன் ஆதவன் முத்தமிட்டதை பார்த்த நிலவு மங்கை கோபம் கொண்டு மறைந்துவிட்டால்...

சமாதானப் படுத்த எண்ணி ஆதர்ஷனமான தன் கதிர்களை கொண்டு அரவணைத்தான் ஆதர்ஷன் தன் மனையாளான வெண்ணிலவினை....

பூக்கள் அலர்ந்து பூவை என் மனதில் மட்டுமல்லாது புவியெங்கும் மணம் கமழச் செய்யும் ரம்மியமான விடியல் பொழுது.....

ஒவ்வொரு நாளின் அழகியத் தொடக்கம்.....

தொடரும் தொடக்கமும் தினந்தோறும் இனிமையினை கொடுத்திட
இறைவன் அவனால் ஆசிர்வதிக்கப்பட்டவளாகிறேன்...

இத்தகு வாழ்வு தந்த இறைவா
உமக்கு நன்றி
என் இதயங் கனிந்த நன்றி...
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆறாம் கவிதை :


வானிற்கு நீலம் தந்தான்..
காலை மாலையில்
கண்கவர் மஞ்சள் தந்தான்..

நெருப்பிற்கு வெம்மை தந்தான்..
அதை அணைக்க நீரெனும் பொருளைத் தந்தான்..

நனவில் நலிவு தந்தான்..
அதை மறக்க
கண்களுக்குள் கனவு தந்தான்..

கற்பனைச் சிறகு தந்தான்..
பறந்து மகிழ எண்ணமெனும் பறவை தந்தான்..

இரவுக்கு நிலவு தந்தான்..
நிலவில்லா வேளையில் மினுக்கிடும் நட்சத்திரங்கள் தந்தான்..

நானே கடவுள் என்றான்.. இல்லையென்று மறுதலித்தால்.. உள்ளத்தின் நம்பிக்கையே கடவுள் என்றான்..

கடவுள் இல்லை என்றவரும் அன்பை; கருணையை கடவுள் என்றனரே..
மதங்கள் இல்லை என்பவரும்.. மனங்களின் சக்தியில் வலிமை உண்டு என்றனரே..

ஒன்றைக் கொடுத்து ஒன்றை பறிப்பதா கடவுள் குணம் என்றே மனிதர் சாடினரே..
எல்லாம் எடுத்தும் நம்பிக்கையாய் நான் உன்னுள் உறைகிறேனே.. அதுவே கடவுள் குணம் என்றானே..
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏழாம் கவிதை :

15899856357_e7f9b5a7a0_b.jpg




நன்றிக்கு வாழ்த்து..

நன்றி என்பது வார்த்தை அல்ல
அது வாழ்க்கை…

வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்க்கையை தந்த
கடவுளுக்கு மிக்க நன்றி…!!

கடவுளின் உருவில் நித்தம்
நம் மகிழ்ச்சிற்காக விட்டு
கொடுத்து வாழும் பெற்றோர்களுக்கு நன்றி…!!

நித்தமும் அன்பு மட்டுமே
ஊட்டும் காதலுக்கு
மிக்க நன்றி…

இனிக்க வைக்கும் தமிழுக்கு
நன்றி…

தட்டி தட்டி எழுப்பும் காற்றுக்கு
நன்றி…

கனவில் கரைய வைக்கும்
இரவிற்கும் நன்றி…

அந்த இரவில் பால் நிலாவை
காட்டிய ஏகாந்தத்திற்கு
நன்றி…
மழைச்சாரலுக்கு நன்றி..
அதோடு மணம் சேர்க்கும்
மண் வாசனைக்கும் நன்றி….

தினமும் துயில் களையும்
சூரியனுக்கு நன்றி

அதையே மறைத்து விளையாடும்
மேகத்திற்கு நன்றி…

என்னையும் எழுத வைத்த
கவிதை க்கு நன்றி..

அதை படித்து கொண்டிருக்கும்
அன்பு உள்ளங்களுக்கு
கோடான கோடி நன்றி..

நாளும் நன்றி சொல்லுவோம்
சொல்லும் நன்றியே வாழ்க்கை
அர்த்தமாக்கும்…
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எட்டாம் கவிதை :

View attachment 11748

அனைவருக்கும் இனிய பொங்கல் தின சிறப்பு தின நல்வாழ்த்துக்கள்...

தமிழராய் முகமன் கூறி இந்த உலகத்தில் அறிமுகமானோம்...
தமிழையே தலைமயாய் கொண்டு இத்தளத்தில் அறிமுகமானோம்....

உழைப்பையும் உழவனையும் கொண்டாடும்
நாம்....
காலையையும் களப்பையையும் இத்திருநாளில்
மண்ணையும் அதன் மாண்பையும் போற்றும் இப்பெருநாளில்...

உங்களை எல்லாம் சந்திப்பதை தித்திப்பாய் உணர்கிறேன்....

கடந்த வந்த பாதையாய் கண் மூடி யேசிக்கின்றேன்....

என்னையே ஒரு முறை சபாஷ் சொல்லி தட்டிக்கொடுத்தகொள்கிறேன்....

ஆயிரமாயிரம் ஏக்கங்களை கனவுகளையும் சுமந்ததில்லை எனது விழிகளிலும் மனதிலும்....

ஆனாலும் இன்றும் ஏதோ ஒரு மூளையில் எனது எண்ணலைகள் ஆர்பறித்து கொண்டே இருக்கின்றது...

நீ மூச்சு விட்டு கொண்டிருக்கிறாய் என்பதை தவிர நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதற்கான சான்றாய் எதனை சொல்வாயென்று....

ஆயிரமாயிரம் சான்றுகள் சொல்ல முடியவில்லையென்றாலும் என் அன்பானவர்களே....

உங்களில் சிலரின் அன்பையே பொக்கிஷங்களின் மேலாக சம்பாதித்திக்கிறேன்...

இந்த வரத்தை எமக்களித்த இநத் வாழ்க்கைக்கு எத்தனை எத்தனை நன்றிகளை நான் சொன்னாலும் அத்தனையும் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து வருபவை....

உறவாய் அல்லாமல் உணர்வில் பிணைத்த இந்த நட்புகள் இலையுதிர் காலமான நேரங்களில் வசந்த காலமாய் மாற்றிய தருணங்கள்....

வாழ்க்கை க்கு நன்றி கூற சொன்னால் அதன் வாசப்படியை கூட எட்டாமல் என்னன்னவோ எழுதுகிறேன் நினைப்பது புரிகிறது.....

வாழ்க்கையில் என் கூட்டை விட்டு சிறிதே சிறிது வெளி வந்து எனக்கு மிக மிக உற்சாகமான தருணங்களை தந்தது வாழ்க்கை இத்தளத்திலே....

ஆயிரமாயிரம் எண்ணலைகள் என்னை புரட்டிப்போட்டு தட்டி தடுக்கி விழ முய்ற்சி செய்கையிலே.....

அத்துனையையும் தூர விரட்டி தவண்டு போகாமல் கடந்து வர காரணமாயிருந்தவர்கள் நீங்கள்....

ஆம் எழுத்துலகத்தில் நான் மூழ்கிவிடுவேன் என்று சொல்வதை விட எழுத்துலகம் என்னை முழுங்கி விடும் என்றே சொல்வேன்....

காலத்தின் கட்டாயங்களால் சமுதாய கட்டமைப்பால் கடந்து போன காலங்களை மாற்றமுடியவிட்டாலும்....

நடந்துப்போன சம்பவங்கள் நம் நெஞ்சத்திலிருந்து அழிக்க முடியாவிட்டாலும் ....

அழிக்க முடியா விட்டாலும் அமிழ்ந்து போகாமல் காப்பாற்றியது எழுத்துலகமே ....


நன்றி சொல்கிறேன் என் உயிருக்கும் இனியவர்களே....

உங்களை போல் அன்பானவர்களை அளித்தற்காகவே நான் இந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்வேன்....

போராட்டம் தான் வாழ்க்கையா என்று....
நம் மனமுழுவதும் பேயாட்டம் போட்டாலும்....
ஆங்கங்கே இளைப்பார....
இதமாய் சாய்ந்தாட....
தூளியாய் விளையாடிட....
துவண்டிடாமல் தாங்கிட....

அவரவர் இளைப்பார
நிழற்குடையாய்....
நீர்மோராய்....
இளநீராய்....
பழரசமாய்....
பதநீராய்....
பனகமாய்....

வாட்டம் நம்மை நாட்டமாய் ஆட்கொள்ளு(ல்லு)ம் பொழுதெல்லாம் தூரவிளக்கி துவளாமல் பாதுகாத்த இந்த வாழ்க்கைக்கு நன்றி!நன்றி!!நன்றி!!!

நமெல்லாம் ஒன்று சேர்ந்தே மீண்டும் மீண்டும் மீண்டெழ உதவும் இந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லிடுவோம்!!!!!
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒன்பதாம் கவிதை :

images (37).jpeg



மரம் செடியாய் பிறந்திட கூடாதா என்று நினைத்தேன் துன்பம் என்னை துளைத்தெடுத்த போது

உயிரினமாய் உதிக்க கூடாதா என்று நினைத்தேன் உதிரம் சொட்டும் வேதனை சூழ்ந்த போது

மழலையாய் மட்டுமே இருக்க நினைத்தேன் வளர்ந்த பின் கண்ட வலிகளை கண்ட போது

என்ன வாழ்க்கையென யோசித்த நொடி

வரமாய் வந்த வாழ்க்கையென நினைத்தேன்

என் உயிர் உறவுகளை கண்டநொடி

துன்பமெனை துளைத்த கணம் தோள் கொடுத்தான் தோழன்

வேதனை எனை சூழ்ந்த நொடி பாதுகாத்தான் தந்தை, (தந்தையென தனையன்)

வலிகள் வதைத்த கணம் தலை சாய்க்க மடி தந்தாள் தாய்

என் நலம் பேணும் சுற்றம் என் நகை(புன்னகை) காணும் உள்ளம்
என

வரமாய் அமைந்தது என் ஆசிர்வதிக்கபட்ட
வாழ்க்கை

எதுவும் கிடைக்க வில்லை என்று தவிப்பதை விட கிடைத்ததை வைத்து வாழ்வதே ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை

ஏனெனில் நம்மிலும் கீழ் உள்ளவர்கள் எத்தனையோ........

எண்ணம் மட்டுமே வாழ்வை நிர்ணையிக்கும்....

என்ன வாழ்க்கையென எண்ணுவதை விட்டு என்ன வாழ்க்கையென எண்ணினால் இன்பமே

ஏனெனில் கேள்வி குறிக்கும் ஆச்சிர்ய குறிக்கும் நூலிழை வித்தியாசமே.....

எண்ணம் போல் வாழ்க்கை.....
 
Last edited:

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே..! மீண்டும் நானே. !

பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான கவிதை போட்டியின் முடிவுகள்.

வெற்றி தோல்வி தாண்டி இதில் தங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டி எங்களுடன் இணைந்து இந்த பொங்கல் நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு கலந்துகொண்ட அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

முதல் பரிசு பெறுபவர் : @J.வாசுகி (முதலாம் கவிதை ❤️)🌹🌹

இரண்டாம் பரிசு பெறுபவர் : @saranya R (ஒன்பதாம் கவிதை 🖤)🌹🌹

பின் குறிப்பு :பரிசு என்னனு கேக்கப்டாது.. ஏனா அது எனக்கும் தெரியாது 🤭🤭🙈🙈😁😁


யார் கவிதை எது என்பது கீழ்வருமாறு

முதலாம் கவிதை @J.வாசுகி
இரண்டாம் கவிதை @Preethi pavi
மூன்றாம் கவிதை @Deepagovind
நான்காம் கவிதை @RamyaRaj
ஐந்தாம் கவிதை @Sanjana rishi
ஆறாம் கவிதை @தாமரை
ஏழாம் கவிதை @DHARSHI
எட்டாம் கவிதை @Samvaithi007
ஒன்பதாம் கவிதை @saranya R



ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்து தோழமைகளுக்கும் எங்களது நன்றிகளும் வணக்கங்களும் 🙏🙏🙏
 
Status
Not open for further replies.
Top