All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - (மாத்தி யோசி மற்றும் நன்றி நவிலும் கவிதை )

இதில் உங்கள் மனங்கவர்ந்த கவிதைகள் என்னென்ன..? மிகவும் பிடித்த மூன்று கவிதைகளுக்கு வாக்களிக்கலாம் 🌹

  • முதலாம் கவிதை ❤️

    Votes: 5 50.0%
  • இரண்டாம் கவிதை 💜

    Votes: 3 30.0%
  • மூன்றாம் கவிதை 🧡

    Votes: 1 10.0%
  • நான்காம் கவிதை 💛

    Votes: 1 10.0%
  • ஐந்தாம் கவிதை 💙

    Votes: 2 20.0%
  • ஆறாம் கவிதை 💟

    Votes: 3 30.0%
  • ஏழாம் கவிதை 💜

    Votes: 3 30.0%
  • எட்டாம் கவிதை 💚

    Votes: 2 20.0%
  • ஒன்பதாம் கவிதை 🖤

    Votes: 4 40.0%

  • Total voters
    10
  • Poll closed .
Status
Not open for further replies.

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம் நட்புகளே😍


இங்கு இரு நிகழ்ச்சிகளின் தொகுப்பு (மாத்தி யோசி மற்றும் நன்றி நவிலும் கவிதை ) பதியப்படும்


நிகழ்ச்சியின் பெயர் : திரைக்கதை பேசியும் ,பெரிதும் பேசப்படாத கதைகள் (மாத்தியோசி)



நிகழ்ச்சி நிகழும் நேரம் : இன்று
நண்பகல் 1.30 மணி

நிகழ்சியில் பங்கு கொள்ளும் படங்கள் :

1.காற்றின் மொழி...
2.பக்ரீத்....
3.பேரன்பு.....
4.TOLET......
5.நெடுநல்வாடை....
6.குரங்கு பொம்மை....
7.எட்டு தோட்டாக்கள்...
8.மிக மிக அவசரம்..
9.ஒத்தை செருப்பு....
10.இரண்டாம் உலக போர் கடைசி குண்டு


ஒருங்கிணைப்பாளர் :
சகோதரி @Navya & சகோதரி
@Chitra Balaji

நடுவர் : Polling முறை.

நடைமுறை :

இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள், அவர்கள் விமர்சிக்க விரும்பும் படத்தை தெளிவான விமர்சனமாக எழுதி, தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைப்பார்...ஒருங்கிணைப்பாளர் பெயர் குறிப்பிடாது அதனை polling வகையில் பதிவு செய்வார்...
இறுதி முடிவுகள் 18 ஆம் தேதி வெளியிடப்படும்...

விதிமுறை :
1.பங்கேற்பாளர்கள் தாங்கள் விமர்சிக்கும் படத்தின் கருத்தை , படத்தின் எந்த கலைஞரையும் குறை சொல்லி விமர்சிக்க கூடாது..
2.விமர்சனம் படத்தின் கதையோடு பொருந்தி இருக்க வேண்டும்.
3.இதை தாண்டி, மொழி, இன, அரசியல் மற்றும் சாதி குறித்த பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும்...


முக்கிய குறிப்பு :
ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படத்தின் விமர்சனம், திரைக்கதைக்கு சம்பத்தப்பட்டும், படத்தை பார்க்க தூண்ட கூடியதாகவும் உள்ளதோ அதுவே இறுதி போலிங்கில் பதியபடும்...

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் :

1. @iin~lava sis
2. @Raji anbu sis
3 . @gnanavani sis


தரமான விமர்சனங்களை பகிர்ந்து அந்த படத்தின் தாக்கத்தை நம்மில் கடத்த போகும் மூவருக்கும் என் வாழ்த்துகள்...

இந்த கருத்துகளை வாசிக்க வரும் பார்வையாளர்களுக்கு என் வரவேற்புகள் 🙏
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2. நிகழ்ச்சியின் பெயர் : நன்றி நவிலும் கவிதை...

நிகழ்ச்சி நிகழும் நேரம் : மாலை 6.30 மணி


நிகழ்ச்சியின் விபரம் :


அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் நிகழ்வுகள் பல, அதை தாண்டி நம் மனதில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள்...

என்ன பிரெண்ட்ஸ், கொண்டாட்டம்னு சொல்லிட்டு பிரச்சினை பற்றி பேசுறேன் என்று நினைக்கறீங்களா...

கூல் டவுன்.. கூல் டவுன்.. கூல் டவுன்... 😊😊


இது பிரச்சனைய பத்தி இல்லைங்க...நம்மளோட பாசிட்டிவிட்டி பற்றியது. ❣❣


தினந்தோறும் எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் பலர் அனுபவிக்கிறார்கள், சிலர் மன ரீதியாக, சிலர் பண ரீதியாக, இன்னும் சிலர் உடல் ரீதியாக

ஹா.. ஹா... டாப்பிக்கை மாத்த சொல்லி நீங்க சொல்லுறது கேட்குது...

அதனால் நாங்கள் கூற வருவது என்னவென்றால்...


நமக்கு கிடைத்த வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் மற்றவரை விட சிறந்தது தான்...


அந்த ஆசீர்வதிக்க பட்ட வாழ்க்கையை போற்றும் வகையில் உங்களது கவிதை இருக்க வேண்டும்...full of positivity. Spread postivity😍😍❣❣❣❣❣


நடைமுறை :

இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அவர்களது கவிதையை ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும்..
ஒருங்கிணைப்பாளர் பெயர் குறிப்பிடாது அதனை polling பதிவில் வைப்பார்...

போட்டியின் முடிவு ஜனவரி 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்...


விதிமுறை :

1.கவிதை நமக்கு கிடைத்திருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை போற்றும் வகையில் இருக்க வேண்டும்..
2.கவிதை வரிகள் குறைந்தபட்சம் 8-அதிகபட்சம் 20 வரை இருக்கலாம்.

(மொத்தமாக எல்லா கவிதைகளையும் படித்து, பிடித்ததை தேர்வு செய்ய இலகுவாக இருக்கும் வண்ணம் இதை குறிப்பிட்டுள்ளோம் )
3. அந்நிய மொழி கலக்காத சுத்த தமிழில் கவிதை இருக்க வேண்டும்..

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் : சகோதரி @Varu thulasi


நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் :


1. @Preethi pavi sis
2. @saranya R sis
3. @தாமரை sis
4. @DHARSHI sis
5. @RamyaRaj sis
6. @kowsik sis
7. @Sanjana rishi
8. @J.வாசுகி
9. @Samvaithi007

நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து கவிஞர்களுக்கும் என் வாழ்த்துகள்...
பார்வையாளர்களுக்கு என் வரவேற்புகள் 🙏🙏
 
Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாருக்கும் இனிய கானும் பொங்கல் தின வாழ்த்துக்கள் 🙂🙂🙂

இந்த கருத்து என்னோட சார்பாக special mention to all house wife, working women, Married ladies😍😍😍

காற்றின் மொழி:-

முதலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சரி பாப்போம் என்று பார்த்த படம்…. ஜோதிகா கடவுளே நடிப்பா அது!!!! பல இல்லத்தரசிகளின் மனவார்த்தையை அழகாக எடுத்துகாட்டும் படம்….

உனக்கு ஒன்றும் செய்ய வராது என்று குட்டும் குடும்பம்… மனைவியின் மீது அதீத காதல் இருந்தாலும் வேலை என்று வரும் போது யோசிக்கும் கணவன்…. அம்மாவை மட்டும் எதிர்பார்க்கும் மகன்!!! இவையெல்லாம் தாண்டி அவள் துடுக்குதனம் என்று காண்பிக்கப்படும் அவளின் ஆழ்மனது கனவு…..

எப்.எம் மூலமாக கேட்ட செய்தியை அவள் சொந்த முயற்சியில் முயன்று அதில் முதல் நாள் சேரும் போது அவள் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி அப்பப்பா என்ன ஒரு நிமிர்வு முதல் முறையாக வாழ்க்கையில் அந்த ஒற்றை சொல்லில் மொத்த கூட்டத்தையும் கட்டிப்போடும் வர்ணஜாலம் அழகிலும் அழகு…..

என்ன வார்த்தை??

ஹலோ!!!!!!

ஒவ்வொரு முறை அவர் அந்த வார்த்தையை சொல்லும் போதும் நாமும் கூட சேர்ந்து சொல்ல தூண்டும் மந்திரம் அவர் வாய்மொழி….

முதல் படியை தாண்டி வெளியில்
வரும் போது வரும் சின்ன சின்ன பிரச்சனைகள் தெளிவாக எடுத்துரைத்து அதற்கான அவளின் முடிவை ஒழுங்குபடுத்தி இறுதியில் அவள் திறமையை மொத்த பேரும் புரிந்துணர்ந்து நம்பிக்கை வைக்கும் தருணம் மொத்த குடும்பத்தையும் ஆண்டு மக்கள் மனதில் இடம் பிடிக்கும் ஒரு அழகான இல்லத்தரசியின் கனவு நினைவாகும் நிஜங்களே கதைக்கரு எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எளிமையாக அதேசமயம் எந்த தொய்யும் இல்லாமல் எடுத்துரைத்து என் அம்மாவின் மனதில் ஆழமாக இடம்பிடித்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று!!!!!

ஒவ்வொரு கதைமாந்தரும் அவரவர் பாத்திரத்தை சாதுர்யமாக வாழ்ந்துவிட்டு சென்றிருக்கின்றனர் முக்கியமாக எம்.எஸ்.பாஸ்கர் ஐயா கண்ணில் ஒரு துளி நீரை விழ வைத்துவிட்டே சென்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு படத்திற்கு…… ஆக மொத்தம் படம் சிறப்பு!!!!

நன்றி,
நவ்யா 😍😍
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது gnanavani sis சார்பாக 🙂🙂

Tolet:

இயக்குனர்: செழியன்

ஒன்றரை மணி நேர திரைப்படம்..... இதில் இளங்கோ அவர் மனைவி குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஒரு நடுத்தர வர்க்க குடும்பமும் அவர்கள் வசிக்கும் வாடகை வீடு அங்கு அவர்களது வாழ்க்கை முறை எல்லாமே இயல்பா படமாக்க பட்டிருக்கு , கதையோட நம்மலயும் கட்டிப்போடும் வசனங்கள் , சின்ன சின்ன மகிழ்ச்சி , அதவிட அதிகமான கஷ்டம், சீக்கிரமா வாடகைக்கு வேறு வீடு தேடும் நிலைன்னு அது படம் என்பதை மறந்து சூழ்நிலைகளில் நம்ம ஒன்றிட வைக்குது. எந்த இடத்துலயும் நடிகர்கள் நடித்தார்கள்ன்னு சொல்ல முடியாத அளவு ஒரு குடும்பமாக உணர வைத்தனர் சிறிய அளவில் ஒரு சிறந்த படம். இது குறுகிய காலத்தில் புதிய நடிகர்களால் எடுக்கப்பட்ட படம். எல்லாவற்றிலும் அவர்கள் உணர்வுகளை அழகாக படமாக்கியுள்ளனர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களுள் ஒன்று .

இது எனோட அனுபவம் எந்த அளவு சரியா சொன்னேனு தெரியல...
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்களது நோக்கம் பெரிதும் பேசப்படாத தமிழ் கதைகளை சிறபிப்பது மட்டுமே...
அந்த வரிசையில் பலர் இந்தப் படங்களை பார்த்ததில்லை என கூறி இருந்தீர்கள்.....
அந்த வரிசையில் உங்களுக்காக அந்த படங்கள் எங்கள் பார்வையில்🙂🙂

மிக மிக அவசரம்-
அவசரம் எதில்??? ஒரு பெண்காவலரின் அவஸ்தை... நுட்பமான உணர்வுகளில் அவள் பேசாமல் வெளிப்படுத்தும் தன்னிலை... எந்த பெரிய பட்டாளமும் இல்லாமல் அவள் சொல்லும் தன் கதையே படம்!!!!

பக்ரீத்:-
அன்பு என்பது
மனிதர்கள், மனிதர்களிடத்து மட்டும் காட்டுவது அல்ல, அதற்கு உலகமே கூட இலக்கல்ல, அன்பு எங்கும் நிறைந்தது. எல்லா உயிர்களுக்குமானது என்பதே படத்தின் கரு. படம்!!!

பேரன்பு :-
இயற்கையின்
கொடூரத்துக்கு சாட்சியாக நிற்கும் ஒரு அப்பா - மகளின் வாழ்வின் வழியே, நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது ராமின் 'பேரன்பு'.

'நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்' எனும் மம்மூட்டியின் வசனத்துடன் தொடங்குகிறது படம். இயற்கையின் வெறுப்பு, அதிசயம், சுதந்திரம் என பத்து அத்தியாயங்களாக விரிகின்றன காட்சிகள்.

நெடுநெல்வாடை :-
திருநெல்வேலி பக்கத்து ஒரு அழகிய கிராமத்துக் காதலும் தாத்தா - பேரன் இடையேயான பாசப் போராட்டமும், குடும்பத்திற்காக பேரன் செய்யும் காதல் தியாகமும் தான் நெடுநல்வாடை படத்தின் கரு.

குரங்கு பொம்மை:-
அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் மனிதனுக்கு அதனால் நேரக்கூடிய தீங்குகள் தான் படத்தின் மையக்கதை.

எட்டு தோட்டாக்கள்:-

வேலைக்கு சேர்ந்த புதிதிலேயே 8 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியை தொலைக்கும் இளம் போலீஸ் எஸ்.ஐ படும் பாடும் அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் சட்டவிரோத பயன்பாடும் தான் " 8 தோட்டாக்கள் " படத்தின் கரு.


ஒத்த செருப்பு :-
சட்டத்தின் பார்வையில் அனை வரும் சமம். ஆனால், எதார்த் தம் பல நேரங்களில் அப்படி இருப்பதில்லை. பின்புலம் ஏது மின்றி விளிம்பு வாழ்வில் அல்லா டும் சாமானிய மனிதர்கள் குற்ற வாளிகள் ஆகிவிடும்போது, இரும் புக் கரம் கொண்டு அவர்களிடம் கடுமை காட்டுகிறது காவல்துறை. அதுவே, எல்லா விதத்திலும் வலி யவர்களாக இருப்பவர்களைத் தெரிந்தே தப்பிக்கவிடுகிறது. காவல்துறையும் நீதி வழங்கும் அமைப்பும் காட்டும் இந்த பார பட்சத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தண்டனை யில் இருந்து தப்பிக்க முயலும் ஓர் எளிய மனிதனின் கதைதான் ‘ஒத்த செருப்பு-சைஸ் 7’.

இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு :-

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தாமல் விடப்பட்ட ஒரு வெடிகுண்டு, மாமல்ல புரம் கடற்கரையில் கரை ஒதுங்கு கிறது. அதை கைப்பற்றும் உள்ளூர் போலீஸார், காவல் நிலையத்தில் போட்டுவைக்க, பிறகு களவாடப் படும் அந்த குண்டு காயலான் கடைக்கு வருகிறது. அங்கே லாரி ஓட்டுநராக பணிபுரியும் செல்வத் தின் (தினேஷ்) லாரியில் பயணிக் கிறது. அதை தனதாக்கிக்கொள்ள முயல்கிறார் ஆயுத தரகர் ரத்தன் (ஜான் விஜய்). போலீஸாருக்கோ எப்படியாவது அதை மீட்க வேண் டுமே என்ற தலைவலி. இன்னொரு பக்கம் பத்திரிகையாளர் தன்யா (ரித்விகா) அந்த குண்டை கண்டு பிடிக்க விரைகிறார். அனைவரும் துரத்தும் அந்த குண்டு என்ன ஆனது, அதன் பின்னணியிலான அரசியல் என்ன ஆகிய கேள்வி களுக்கு விடை தருகிறது படம்.


இது எங்களின் சித்து சிஸ் மற்றும் நவ்யாவின் சிறு முயற்சியே....

நன்றி😍😍😍
நவ்யா மற்றும் சித்ரா பாலாஜி


 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் !வணக்கம் !வணக்கம் மக்களே !!


நமது தளத்தின் பொங்கல் கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்ச்சியான கவிதை போட்டி இப்போது நடக்கவுள்ளது.

நம் தோழிகளின் கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக இங்கு நான் பதிய உள்ளேன்.இதில் கலந்துகொண்டவர்கள்,

@Samvaithi
@தாமரை
@saranya R
@Sanjana rishi
@Preethi pavi
@RamyaRaj
@DHARSHI
@Deepagovind
@J.வாசுகி

அதற்கு எண்கள் மட்டுமே குறியீடாக இருக்கும்.( எடுத்து காட்டு :முதலாம், இரண்டாம், மூன்றாம் கவிதை )

அனைத்து கவிதைகளையும் படித்து பார்த்து தங்களுக்கு பிடித்த கவிதைகளுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து கவிதைகளையும் பதிந்த பின் போல்லிங் வைக்கிறேன்.

இதுவரை இந்த கொண்டாட்டத்தில் பங்குப்பெற்ற அனைவருக்கும்

நன்றி. !நன்றி !நன்றி !!🙏🙏🌹🌹
 
Last edited:
Status
Not open for further replies.
Top