All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

SMS பொங்கல் விழா - கருத்துப் பட்டிமன்றம் & பாடல் முடிவு

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை அருமை..
ஆழமான கருத்து விவாதத்தில் மிக நுணுக்கமான, நேர்த்தியான,பெரும் சிந்தனைவாய்ந்த உங்கள் காணோட்டமும்....அதை உயிர்பிக்கும் உங்கள் நடுநிலையான தீர்ப்பின் சாதகங்கள்....ஒவ்வென்றுக்கும் மிக எளிமையான எடுத்துக்காட்டு ஒப்பீடல்...அதில் இருக்கும் எச்சரிக்கை என்று...மிக அழகாக தொகுத்து சிறப்பு செய்துள்ளீர்கள் அக்கா......
வாழ்த்துக்கள்....💐💐💐💐
நன்றி கவி
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம் தொழமைகளே.... பொங்கல் நல்வாழ்த்துக்கள்......... நான் chitra Balaji.....
தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதகமான விளைவுகள்! என்னது வாதம்....

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஒருபுறமிருக்க, அதன் விளைவாக மனித குலத்துக்கு தீங்குகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. மக்களுக்கு இன்றைய காலத்தில் பெரும் தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கும் நவீன சாதனங்களில் ஒன்றாக ‘ஸ்மாட் போன்’ மாறியிருக்கின்றது.

‘ஸ்மாட் போன்’ கைத்தொலைபேசியின் வாயிலாக இன்றைய நவீன யுகத்தில் மக்களுக்குக் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பார்க்கிலும் பிரதிகூலங்களே கூடுதலாக ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஸ்மாட்போன்களின் பயன்பாட்டினால் தற்காலத்தில் ஏற்படுகின்ற விபத்துகளும், மரணங்களும் இதற்கு சான்றாக அமைகின்றன.

வீதியில் நடந்து செல்லும் போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், வீதிவிபத்துகள் பெருகியுள்ளன. பலர் காயமடைவதையும், மரணங்கள் சம்பவிப்பதையும் நாம் காண்கிறோம். கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியபடி தண்டவாளத்தின் மீது நடந்து சென்ற வேளையில் புகையிரதத்தால் மோதுண்டு உடல் சிதறிப் பலியாகிப் போனோரின் எண்ணிக்கையும் ஏராளம்.

இவ்வாறான மரணங்கள் துரதிர்ஷ்டமும் பரிதாபமும் மிகுந்தவையாகும். கைத்தொலைபேசிப் பாவனையில் காணப்படுகின்ற ஆபத்துகள் தொடர்பாக ஊடகங்களில் எச்சரிக்கை விளம்பரங்கள் வெளிவருகின்ற போதிலும் இவ்விடயத்தில் எதுவித பலனும் ஏற்பட்டதாக இல்லை. ‘ஸ்மாட் போன்’ பாவனையினால் விபத்துகளும் மரணங்களும் அதிகரித்தபடியே செல்கின்றன.

கல்வியறிவற்றோர் மாத்திரமன்றி நன்கு கற்றவர்களும் கூட கைத்தொலைபேசியின் பாவனையினால் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பதுதான் இங்கு வியப்புக்குரிய விடயம். சமீப காலமாக கைத்தொலைபேசியின் விளைவாக சம்பவித்துள்ள மரணங்களை எடுத்து நோக்கும் போது இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்றபடி ‘செல்பி’ எடுத்துக் கொண்ட வேளையில், நீருக்குள் தவறி விழுந்து வைத்தியர் ஒருவர் மரணமான சம்பவம் பதிவாகியிருக்கின்றது. ‘செல்பி ‘ மோகம் என்பது எவரையுமே விட்டு வைக்கவில்லையென்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வோர், விந்தைமிகு இடங்களில் நின்றபடி தங்களைப் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவது இன்று நேற்றுத் தோன்றிய அவா அல்ல. ஒளிப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மனிதனைப் பீடித்துள்ள ஆசை இது. ஆனால் ஒருவரை மற்றவர் ஒளிப்படம் எடுப்பதனால் விபத்தோ மரணமோ சம்பவித்தது கிடையாது.

தன்னைத் தானே ஒளிப்படம் எடுத்துக் கொள்வதற்கான ‘ஸ்மாட்போன்’ என்ற சாதனம் அறிமுகமானதன் பின்னரே விபரீதமும் வந்து சேர்ந்தது. புகையிரதப் பாதை, உயர்ந்த கட்டடங்களின் உச்சிகள், கடலோரம், நீர்வீழ்ச்சி, மலையுச்சிகள் என்றெல்லாம் பல்வேறு இடங்களுக்கும் மனிதனின் ‘ஷெல்பி’ ஆசை பரந்து விரிந்ததனால் பலர் அநியாயமாக உயிரிழந்து போயிருக்கிறார்கள்


லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர்.

இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள்.

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த இந்த இரண்டு இளம்பெண்கள் மட்டுமல்ல; இன்று உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. 'ஒளி மாசு' என்ற வார்த்தை, உலகை அச்சுறுத்தும் விஷயமாக உருவெடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சி காரணமாக, இன்று ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் அரிதாகிவிட்டனர். நம் வேலை நேரத்தில் மட்டுமல்ல; அதைத்தாண்டியும் இன்று நாம் செல்போன்களிலேயே உழன்று வருகிறோம். இரவு நேரமும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரித்து, அதற்கு நம் கண் பார்வையை தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


"நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாம் திடீரென நம் அறைக்குள் நுழையும்போது, சில நொடிகள் கண் இருண்டுவிட்டது போன்று போல் தோன்றும். நம் விழித்திரை பளீர் வெளிச்சத்தை எந்தளவுக்கு சந்திக்கின்றதோ அதே அளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும் என்பது அறிவியல்.

அதேபோல் ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கீரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் சாதாரண வெளிச்சத்தில் காட்சிகளை நாம் பார்க்கும்போது தெளிவாக தெரியாது, சில வினாடிகளுக்குப் பின்னர்தான் நம் கண்கள் இயல்பான பார்வையைப் பெற்று பொருட்களை பார்க்கநேரிடும். ஆனால் இதுவே தொடர்ந்தால் ஒருகட்டத்தில் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்” என்கிறார் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர் ஓமர் மஹ்ரு.


அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெற்றோரில் 27% க்கும் மேற்பட்டவர்களும், குழந்தைகளில் 50% க்கும் மேலானவர்களும் மொபைல் போனுக்கு அடிமையானவர்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இன்று பல வீடுகளில், குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைக்க கூடிய கருவியாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து, வீட்டிலேயே ஸ்மார்ட்போன்களில் பல மணிநேரம் விளையாடுவது, ரைம்ஸ் பாடல்கள் பார்க்க வைப்பது என்ற அளவுக்கு நிலைமை ஆகிவிட்டது.

இதை ஸ்மார்ட் மெத்தடாக கருதும் பெற்றோர்கள், குழந்தையின் கண்களையும் அவர்கள் உடல்நலனிலும் அக்கறைக்கொள்வதில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருந்தால் நலம்.


செல்போன்களை முழுமையாக பயன்படுத்தும் முதல்தலைமுறை நாம்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்வது நலம். செல்போன்களால் ஏற்படும் தீமைகள் இன்னும் முற்றாக வெளியுலகிற்கு கொண்டுவரப்படவில்லை. ஒளி மாசைத் தொடர்ந்து செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதனால் செல்போன் உபயோகத்தில் கட்டற்ற சுதந்திரத்தை கொஞ்சம் குறைத்து, கண்களை பாதுகாத்துக்கொள்வது நலம்.
கைதொலைபேசியில் குழந்தைகளின் பாதிப்பு....
மொபைல் விளையாட்டில் குழந்தைகளின் வெறித்தனம் அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும்

பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.



‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1 - 2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறவேண்டும்....
ஒழுக்க விழுமியங்களையும் கலாசார பண்பாடுகளையும் முகநூல் துடைத்தெறிந்து கொண்டிருப்பதையிட்டு சமூக ஆர்வலர்களும் கவலைப்படுவதைக் காண முடியவில்லை.

‘ஸ்மாட்போன்’ பாவனை மனிதனுக்குத் தீங்கு தருவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவராவது பேசுவது முடியாத காரியம். அக்கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு இளைஞர், யுவதிகள் தயாராக இல்லை.

சாதாரண தர வகுப்பு மாணவருக்கே அவர்களது பெற்றோர் ‘ஸ்மாட்போன்’ சாதனத்தை கட்டாயமாக வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற நிலைமை இப்போது உருவாகி விட்டது. அதனை பெற்றோரிடம் வலிந்து கேட்கும்படியாக இன்றைய எமது சமூகக் கட்டமைப்பு மாற்றம் பெற்றுவிட்டதென்பது புரிகின்றது.

‘ஸ்மாட்போன்’ சாதனத்துக்குள் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தேவையான பயனுள்ள ஏராளமான விடயங்கள் பொதிந்துள்ளன. அதேசமயம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சீரழிக்கக் கூடிய ஏராளமான ஆபத்துகள் அதற்குள் மறைந்துள்ளன. மனித சமுதாயத்துக்கு ஆக்கத்தைத் தந்துள்ள அறிவியல் வளர்ச்சியானது, அழிவுக்கும் வழிகோலும் போது யாரால்தான் அதனைத் தடுத்து நிறுத்த முடியும்? நன்றி....
வாழ்த்துக்கள் Chitra Balaji....
ஸ்மார்ட்போன்னால் ஏற்படும் அதீத கேடுகளை சல்லடை போட்டு தெரியப்படுத்தி ....பெற்றோர்களின் பகீர் நிலைய சக மனிதனாய் பகிர்ந்து கொண்ட விதம் அருமை....
💐💐💐💐💐👏👏👏👏
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகோதரி @gnanavani சார்பாக இந்த பதிவு,


ஐந்தாம் கருத்து :


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சாமணியருக்கு நன்மையே:



சாமானியர்கள் நா யாரு வேற யாரு கையில செல் ஓட இருக்க நம்ம எல்லாரும் தான் . செல் ஆங்கில சொல் அதுக்கு தமிழ்ல கைபேசி , அலைபேசி னு சொல்லுவோம் , எப்பவுமே கையிலேயே வச்சிகிட்டு அத பாது தான் எல்லாரும் வீணா போரங்கனு நமக்கு நாமே சொல்லுகிறோம் . ஆனா அது இல்லனா நமக்கு ஒரு நாள் இல்ல ஒருமணி நேரம் கூட ஓடாது சும்மா இல்ல காலையில எழுந்திரிக்க அலாரம் என்னென்ன வேல இருக்குனு ஞாபக படுத்தநு எல்லாத்துக்கும் செல் தான் அது மட்டுமா சமைக்க தெரியாதவங்க சமைக்க வரய தெரியாதவங்க வரைய எல்லாத்துக்கும் செல் வேண்டி இருக்கு . அதுல கூட புது புது விசியத்த சேத்து வருசத்துக்கு நாலு மொபைல் launch panranga .

சரி செல் தான்னு இல்லாம வேற என்ன தொழில் நுட்பம்னு பாத்தா விவசாயம் பெருசா எதுவும் இல்ல, நம்ம வீட்டுலயே பயிர் செய்ய என்னென்ன செய்யணும்னு இன்றைய தொழில்நுட்பம் சொல்லிதருது, ரசாயனம் இல்லாத காய்கறிகள், மண் இல்லாத செடி வளர்புநு எல்லாமே சொல்லி தர தான் கூகிள் இருக்கே, அதுபடி செஞ்சா தோட்டாக்களை தெரியாதுன்னு யாரையும் சொல்ல முடியாத நிலை , உறகுழி மறுசுழற்சி எல்லாமே சொல்லி தர வீட்ல பெரியவங்கலுக்கு எங்க அவங்களுக்கு நேரம் இருக்கு ...

அவங்களுக்கு பதில் தான் எல்லாத்துக்கும் தொழில்நுட்பம் இருக்கே வேலைக்கு போற தாய்மார்கள் தாய்ப்பால கூட பதபடுத்தி குழந்தைக்கு கொடுக்க முடியும்...

இப்ப பொண்ணுங்களுக்கு பாதுகாப்புக்கு புது புது செயலி (app) எல்லாமே நல்லதுக்கு தான செயலி நதும் தான் ஞாபகம் வருது பொண்ணுங்க மாதவிடாய் நாள் கூட அப்ல சேவ் பன்னா அதுவே மாசா மாசம் ஞாபக படுதுமாம்.


இப்ப நம்ம வாழ்கையே தொழில் நுட்பத்த சார்ந்து தான் இருக்கு.படிக்கிற பசங்க ஏன் எப்ப பார்த்தாலும், செல் ஓட இருக்காங்க அதுல கூட படிக்கிறாங்க வாட்ஸ்அப் யூடியூப் எல்லாமே படிக்க அவ்ளோ பயன் படுது அது மட்டுமா யாருக்கோ ?எங்கயோ ஏதாவது தேவனா தானா ?
பதில் தர செல் இருக்கு , உண்ம தான் பல பிரச்சினையும் இருக்கு ..


ஆனா எல்லா இடத்துலயும் நன்மையை மட்டும் பாக்குற நம்மக்கு செல்நு ஓடனே ஏன் கேட்டது மட்டும் ஞாபகம் வருது இதுல நம்ம அண்ணபரவைய போல இருப்போமே தீதும் நன்றும் பிறர்தர வாரா நு சும்மாவா சொன்னாங்க நால்லத யோசிச்சா நல்லது தான் நடக்குமாம் நான் சொல்ல பெரியவங்க சொள்ளிருக்கங்க . எனக்கு கூட தொழில் நுட்பம் னு சொன்னதும் செல் தான் தோணுது அதுக்கு மட்டுமா இப்பலாம் சப்பாத்தி கு மாவு பிசைய கூட மெஷின் இருக்கு.கற்பனா சக்தி இப்ப உள்ள பசங்களுக்கு அதிகமா இருக்க தொழில்நுட்பம் தான காரணமாக இருக்கமுடியும்.


இவ்வளவு ஏன் இப்பகூட என்னோட கருத்த எல்லாருக்கும் தெரிவிக்க இணையம்னு ஒன்னு இருக்குரரதுநால தான் நானும் சரியோ தப்போ தோனுறதெல்லாம் சொல்லிகிட்டே இருக்கேன் என்ன சரியா சொல்ல நெனகிறத சொன்னானு தான் தெரியல , நல்லதே நினைப்போம் நல்லது தான் நடக்கும் .


நன்றி
Gnanavani
வாழ்த்துக்கள் Gnanavani...
மிக மிக எதார்த்தமாக ...நம் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிபோய்விட்ட கைப்பேசியின் பயன்களை எடுத்துக்காட்டியது உங்களின் தொகுப்பு...💐💐💐💐👍👍
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடுவர் மித்ரவருணா@செல்வி மா அவர்களுக்கு வணக்கம்.

சக கருத்துப் பகிர்வாளர்களுக்கு என் வந்தனம். இந்த பட்டிமன்றத்தை வடிவமைத்து எஸ் எம் எஸ் தளத்தின் பொங்கல் கொண்டாட்ட விழாவினை சிறப்பாக நடத்தும் ஸ்ரீஷா, வரதுளசி, நவ்யா, சரண்யா மற்றும் குழுவினருககு அன்பும் வாழ்த்துகளும்..


தொழில்நுட்பம்
ஆக்கமா அழிவா.. நன்மையா தீமையா.. இதில் தீமையே எனும் தலைப்பின் கீழ் பதிவிடுகிறேன்.
இந்தக் கேள்வி ஆதி காலம் தொட்டு இருந்திட்டே தான் இருக்கு.. தொழில் நுட்ப வளர்ச்சிகள் எல்லாமே.. மனிதர்களின் நன்மைக்கு கண்டுபிடிக்கப்பட்டது அப்படின்னு சொல்றது விட வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்டதுன்னு சொல்லலாம்..


கூட்டைப் பார்த்தான் ..

வீடு கட்டினான்..


பறவையப் பாத்தான்..

தானும் பறக்க நினைத்தான்..


மீனப் பாத்தான் தானும் நீந்த.. மிதக்க நினைத்தான்..


மொத்தத்தில பூமிய மட்டுமில்ல.. தன் கண்ணுல பட்டதெல்லாம் தனக்கு வேணும்னு மனிதனுக்கு ஆசை பேராசை.. அதற்கு தான் தொழில் நுட்பங்கள்..


அதே போல போட்டி, பொறாமை, சண்டை இதுதான் மனிதனின் அடிப்படை குணம். நம்ம இப்போ வசதிக்காக பயன்படுத்தும் அனைத்து பொருட்களும்.. மனிதன் போர் புரிய கண்டு பிடிச்சதுதான். தொலைதொடர்பு சாதனங்கள்.. வாகனங்கள்.. உபயோகப் பொருட்கள் எல்லாமும். அவை நன்மை தர்றது விட தீமைகளைத் தான் அதிகமா கொடுக்கின்றன.. என்னதான் இருந்தாலும் போர்க் கருவிகள் தானே.


வாகனங்கள்.. நேரத்தை மிச்சம் பண்ணிவிட்டன. தூரத்தை குறைத்து விட்டன.. உலகமே ஒரு சிறிய கிராமமா சுருங்கிடுச்சு. சரிதான். ஆனா.. மனிதனின் ஆடம்பரம் அதிகமாகிடுச்சு. பணத்தேவை.. சுயநலம், ஆசைகள் அதிகமாகிடுச்சு. வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்ளோ சீர்கேடு.. சொல்லவே தேவையில்ல சின்ன குழந்தை கூட சொல்லும். உலகஉருண்டைய இயந்திரங்கள் மற்றும் வாகனச் சூட்டில போட்டு வறுத்துட்டு இருக்கோம்.. அது பற்றி தெரிந்தும் கவலைப் பட்டும் அதே தான் செய்யறோம்.. நாளை பற்றி என்ன கவலை.. இன்று வாழ்ந்தால் போதும்னு எண்ணம்.. இதைக் கொடுத்தது தொழில்நுட்பங்கள் எனும் போதை..


அலைபேசிகள்.. அவற்றின் தீமைகள் கணக்கில் அடங்காது.. தகவல் தொடர்பு சாதனமா நம்ம கையில் கொடுக்கப் பட்டது.. இன்று கேமராவா.. செய்திகள் அறிவதா, அனுப்புவதா பல வேலைகள் செய்யுது.. அதே நேரம் தேவையற்ற ஆபத்தான விஷயங்களையும் கைக்குள்ளயே வச்சிருக்கோம்னு பதற்றத்தையும் கொடுக்குது.


செல்ஃபீ எடுக்க உயிரைக் கொடுத்த எவ்வளவு இளைஞர்கள்.. பாலியல் பற்றிய ஆபத்தான முறைகேடான தகவல்களால் திசைமாறும் இளைய தலைமுறை.. ஏன்.. இளம் பெண்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவித்த நிர்பயா..ப்ரியங்கா ரெட்டி.. பொள்ளாச்சி சம்பவங்கள் பற்றி ஆராய்ச்சிக்குப் போனா அதுல அடிப்படை அலைபேசியா தான் இருக்கும்..


இது போல பல தொழில் நுட்பங்களும் நன்மை விட தீமை தான் அதிகம்.


இயந்திரங்கள் உடலுழைப்பைக் குறைத்து நோயாளிகளா மாற்றுது.. நோயாளிகளை வளர்க்குது.. மருத்துவமனைகள் மருந்துகள் எனும் பெயரில் தொழில்நுடபங்கள் அவங்கள நோயாளிகளாகவே தக்க வச்சுக்குது..


இயற்கையை அழித்து செயற்கை.. செயற்கையின் பிடியில் இருந்து விடுபட்டு.. இயற்கை மீட்டு எடுக்கவே இயலாத நிலைக்கு இந்த தொழில் நுட்பங்கள் நம்மை தள்ளிக் கொண்டு போகின்றன.. என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.


மொத்தத்தில் தொழில்நுட்பங்கள் நமக்கு தருவது.. நன்மையை விட அதிகமாக தீமைகள் தான் என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.


இவ்விழாவில் என்னையும் பங்கு கொள்ள அன்போடு ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.வணக்கம்.

அன்புடன்,
தாமரை...🙏
அருமை தாமரை க்கா....
ஒரு விவாத மேடையில் இறுதியில் வருபவற்கு....எப்போதும் கூடுதல் பொறுப்பும் சிரமமும் இருக்கும்....

அதை மிகவும் அழகாக கையாண்டு உங்களின் தனிப்பட்ட விவாதத்தை முன் நிறுத்தி அசத்தல்....

வாதத்தின் தொடக்கமே மனதனின் தேவை எது என்றும்...அந்த தேவையே இன்று அவனையும் அவனின் இயல்புகளையும் சீரழிக்கும் நிலைய நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் whistle moments .....👌👌💐💐💐😊😊
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் வணக்கம் வணக்கம் மக்களே😍😍😍

இப்போது நான் எதுக்கு வந்தேன்னா கலை பொங்கல் நிகழ்ச்சியின் ஒன்றான "இசையில் தொடங்குதம்மா" போட்டியின் முடிவை வெளிபடுத்தவே😎😎😎😎😎

ஏன்யா கொஞ்சம் தெய்வீக ராகத்தில் பாடல் கேட்டது குத்தமாயா😜😜😜😜😜எல்லாரும் நா இ்ல்ல நா இல்லனு தெரிச்சுட்டு ஓடுரீங்க 🤣🤣🤣🤣


ஆனாலும் எனக்கு வர பாட்ட நான் பாடீ அனுப்பி வைக்கவான்னு கேட்டு எனக்கு அனுப்பி வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏(கூடவே எனக்கு தொழில் நுட்பத்தில் உதவி செய்த @Srisha பேபிக்கும்😍😍😍😍😍)

அதே போல் நாங்கள் முன்பே சொன்னது போல நமது நடுவர் @தாமரை மா அவர்கள் அனைத்து பாடலையும் கேட்டு அதில் சிறந்த பாடலை தேர்ந்தெடுத்து நமக்கு நமது தளத்தின் "சூப்பர் சிங்கர்" ஐ நமக்கு அறிமுக படுத்தி உள்ளார் 😍😍😍😍😍

அப்படி தேர்ந்தெடுத்த நபர் யார் என்றால் 🤔🤔🤔🤔 அவர் வேறு யாரும் இல்லை நமது தளத்தின் எழுத்தாளர் சகோதரி @Sanjani அவர்களே😍😍😍😍😍😍🎊🎊🎊💃💃💃💃
இதோ அவர் எனக்கு அனுப்பி வைத்த பாடலை கீழே பதிவு செய்து உள்ளேன்....


....



வாழ்த்துகள் sis 😍 உங்களது பாடலிற்கும் , பங்கேர்பிற்கும் ,வெற்றிக்கும் 🎊🎉🎊🎉🎊🎉🎊
Wow...Wow...
Sanjani superb....👌👌👌
சின்ன தாய் அவள்...என்று எங்களை கண் கலங்க வைத்து விட்டு....
திடீர்னு நேர் எதிரான மற்றொரு அனுபவமாய் வலையோசை.....ஹா..ஹா...
அருமை...
இனிமையான குரல்....
மேலும் உங்களின் இசை பயணம் இனிமையாய் தொடரட்டும்....
💐💐💐💐👏👏👏💝💝
 

Chitra Balaji

Bronze Winner
வாழ்த்துக்கள் Chitra Balaji....
ஸ்மார்ட்போன்னால் ஏற்படும் அதீத கேடுகளை சல்லடை போட்டு தெரியப்படுத்தி ....பெற்றோர்களின் பகீர் நிலைய சக மனிதனாய் பகிர்ந்து கொண்ட விதம் அருமை....
💐💐💐💐💐👏👏👏👏
Thankyou maa
 

தாமரை

தாமரை
அருமை தாமரை க்கா....
ஒரு விவாத மேடையில் இறுதியில் வருபவற்கு....எப்போதும் கூடுதல் பொறுப்பும் சிரமமும் இருக்கும்....

அதை மிகவும் அழகாக கையாண்டு உங்களின் தனிப்பட்ட விவாதத்தை முன் நிறுத்தி அசத்தல்....

வாதத்தின் தொடக்கமே மனதனின் தேவை எது என்றும்...அந்த தேவையே இன்று அவனையும் அவனின் இயல்புகளையும் சீரழிக்கும் நிலைய நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் whistle moments .....👌👌💐💐💐😊😊
thanks da💖💖💖💖😍😍😍😍
 

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Srisha
Congratulations friends....
You and your dear team has really created some wonderful memories on the special eve...You all have nailed it...👍👍👍👍
Very proper coordination and prompt conductivity in and among events and participants....

May you all rock in coming days also...💐💐💐💐😊😊😊💝💝💝🎊🎊🎊🎊
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I know I am too late to have me here and congratulate you all...But couldn't help me out.... Sorry for late appreciations....
இனிய காலை வணக்கம் கவி, தாமதமாக வந்தாலும் தயங்காமல் தெளிவான கருத்து சொன்ன உன் மனம் மிக அழகு மா. அடுத்த நிகழ்வில் உன்பங்களிப்பு அனைவரையும் உயர்த்தட்டும் கவி .
 
Top