வணக்கம். எனது பெயர் சிவநயனி முகுந்தன். ஈழத்தின் யாழ் நகரை சேர்ந்தவள். வாசிப்பு எனது பொழுதுபோக்கு. எழுதுவது எனக்கு பிடித்தது. மாறுமோ நெஞ்சம் என்னும் ஒரு சிறுகதை தொகுப்பையும், வேல்விழியால் மறவன் என்கிற ஈழம் சார்ந்த வரலாற்று நீள் கதை ஒன்றையும் இங்கே கனடாவில் வெளியிட்டிருந்தேன். இந்த நீள்கதை ஈழத்தின் முதல் தமிழ் பெண் வரலாற்று நாவலாசிரியை என்கிற பெயரையும், கனடாவின் முதல் பெண் தமிழ் வரலாற்று நாவலாசிரியை என்கிற பெயரையும், கனடாவின் முதல் தமிழ் வரலாற்று நாவல் என்கிற பெயரையும் எனக்கு பெற்றுத்தந்தது. எது எப்படியாக இருந்தாலும் உங்கள் இணையத்தில் தொடரும் நாவலுக்கு நான் அடிமை. குறிப்பாக தலைவன் தலைவியின் ஊடலும், அதனோடு கூடிய ஊடலும், அவர்களுக்கு இடையில் நிலவும் மனத்தாங்கல் சண்டையும் அருமையாக இருக்கும். கூடவே அதனோடு இழையும் நகைச்சுவையும் அற்புதம். நாம் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கிறோம். நம் நேரத்தில் வாசிப்பிற்காக செலவிடும் நேரத்திலும் மனதில் கனமேற்றும் நாவல்களை படிப்பத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவன் தலைவிகளுக்கிடையில் ஏற்படும் விருப்பமின்மை, சண்டை, அதனோடு நூலிழையில் படரும் காதல், அது விருட்சமாகி காய்த்து கனிந்து வரும்போது வாசிப்பதற்கு மனதில் உள்ள பாரங்கள் எதோ ஒரு விதத்தில் காணாமல் போய்விடுகிறது. அருமையான எழுத்தாளர்கள். அருமையான கவி சொல்லும் கதைகள். உங்கள் இணையதத்திற்கு எனது மாமாமார்ந்த வாழ்த்துக்கள்.