உங்களை போல விவாதம் செய்யுற அளவு என்கிட்ட ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கா தெரியலை.
நான் சொல்வதை ஒரு குறுங்கதையா நெனச்சாலும் எனக்கு ஓகே தான்
நான் என்னோட சிறுவயது சூழலை பகிர்ந்துக்க நினைக்கறேன்..
நான் அக்மார்க் கிராமத்துல பொறந்து வளர்ந்தவ..
அப்பா மெக்கானிக்.. காலையில போனா நைட்தான் திரும்புவாரு..
அம்மா வயல் வேலையில பிஸி ஆகிருவாங்க..
இப்படி இரு.. அப்படி வளரு..
நீ எதிர்காலத்துல அப்படியாகனும்..
இதை செய்யாதே அதை பண்ணாதேன்னு யாரும் சொல்லி கொடுத்து வளர்க்கல
ஆனாலும் நாங்க கண்காணிப்பு வட்டத்துல கவனமாதான் வளர்ந்தோம்
எனது பால்ய பருவம் ரொம்ப அழகானது மட்டுமில்ல.. இன்றைய வாழ்வோடு ஒப்பிட்டால் சொர்கமும் கூட..
உள்ளூர் அரசு பள்ளி..
ஆங்கிலம்ன்னு ஒரு மொழி அறிமுகமே மூன்றாம் வகுப்புலதான்..
நிதானமான அதேநேரம் ஆழமான அனுபங்களை கோர்த்த கல்விமுறை
(அப்போ கல்வி வியாபாரம் ஆகல
)
காலை ஊரே வயக்காட்டு வேலைக்கு போய்ரும் சில வயதானவங்களை தவிர..
விடியலில் வீட்டு பெண்கள் மாடு கன்று கவனிச்சு சமைக்க.. வயலுக்கு நீர்பாய்ச்ச போன பெரியவர்களுக்கு கூழ் கொண்டுபோற பணி பிள்ளைகளை(என்னை) சேர்ந்தது
பள்ளிக்கு நேரமாகிருமேன்னு பயந்து ஓட்டமும் நடையுமாய் போய் குடுத்துட்டு வருவேன் ( ஜாகிங் கெட்டது☺)
பள்ளி தெரியற தூரத்துல இருக்க வீட்டு திண்ணையில பாட்டி தாத்தாங்க அரட்டை..
எங்களுக்கான பாதுகாவலர்களும் அவங்க தான்
இன்ட்டர்வெல் பெல் அடிச்சா அங்கேத்தான் ஓடுவோம்..
(எங்க க்ரெச் அதுதான்☺☺)
சுருக்கு பையில இருக்க காசுல பத்து பைசா இருபது பைசான்னு குடுப்பாங்க..
என் பேத்தி.. இன்னார் பேத்தி ன்னு பாகுபாடில்லாம..
நான் அந்த இடத்துல என்னைச்சேர்ந்தவங்கன்னு இல்லாம எல்லோரையும் நேசிக்க கத்துக்கிட்டேன்
வயித்துவலி தொடங்கி காய்ச்சல் வரை அவங்க கை வைத்தியம் தான்..
(மருத்துவமும் வியாபாரம் ஆகல)
அம்மா அடிச்சா அரணைப்பை கண்டதும் அங்கேதான்..
பெரியவங்களை மதிக்கற நேசிக்கற பழக்கம் யாரும் சொல்லாமலே உணர்வுல கலந்துச்சு
வாரத்துல ஒருநாள் ஞாயிறு மட்டுமே டிவி க்கு அனுமதி.. அதுவும் ஊர்பொது பஞ்சாயத்துக்கு சேர்ந்தது.
மீறி மற்ற நாட்கள்ல போனா தென்னம்மட்டை சிதறுற அளவு அடி விழும்..
நானும் வாங்கியிருக்கேன் சிலநேரம்☺
பெரியவங்க சொன்ன மகாபாரதக்கதைகள்தான் எங்க டிவி..
தெருக்கூத்துகள்தான் சினிமா தியேட்டர்..
அவங்கதான் நாங்க மனசுவிட்டு பேசின உறவுகள்..
விடுமுறை நாட்கள்ல தோழமைகளோட சுள்ளி பொறுக்க போவோம்..
காலையில் போனா ஏரியில் கூடி விளையாடி இலந்தை கொடுக்காபுளி பப்பாளி பறிச்சு பசியாறி வீடு திரும்பினா மாலையாகிருக்கும்
ஆரோக்யம் பெருகுச்சு..
உயிர்தோழமை வட்டம் பெருசாச்சு
அச்சோ காலைல போன பிள்ளை என்னாச்சோ ன்னு பதறி தவிக்கல அவங்க..
ஊரில் ஒருத்தர் பார்வையில் இருந்தாலே போதும்..
மனிதர்கள் மேல் நம்பிக்கையும் இருந்தது
நோட்டு புத்தகங்கள் வாங்க காசு கேட்டாகூட வயல்ல வேலைபாக்க சொல்லி அதுக்கான கூலியாத்தான் அதை குடுப்பாங்க..
காசு பணத்தின் அருமை தெரிஞ்சுச்சு
விவசாயத்தோட அருமையும் புரிஞ்சுச்சு
வருடத்தில் இரண்டு முறை மட்டுமே புதுத்துணி.. (தீபாவளி பொங்கல்க்கு)
சோ தேவைக்கு மேல எதையும் வாங்கி பழகுற ஆடம்பரம் பயிலல
நான் பெற்றோர் அரவணைப்புல கத்துக்கிட்டது என்னை பொறுத்தவரை 20% கூட இல்ல..
வளர்ந்த சூழல்தான் 80% என்னை வளர்த்தெடுத்தது
உன் சுயபுராணத்தை கேக்க வரல..
இதனால நீ என்ன சொல்ல வரன்னு கேக்குறது எனக்கு கேக்குது..
நவீனம்ங்கற பேருல எல்லாத்தையும் பழகிட்டோம் நாம..
தேவைக்கு மேலாக பாக்கெட்மணி..
நமக்கான நேரம் தேவைப்படுறப்ப குழந்தைகளுக்கு மொபைல் ன்னு கொடுத்து பழகிட்டோம்.
பெரியவங்களை தள்ளிவச்சு புருசன் பொண்டாட்டி அவங்க பிள்ளைன்னு கூடியிருக்கறதுதான் கூட்டுக்குடும்பம்ன்னு சுயநல வட்டத்துல நுழைஞ்ச பின்னே அந்த வீட்டுல குழந்தை கத்துக்க என்ன மிச்சமிருக்கும்???
கல்வி முதல் மருத்துவம் வரை வியாபாரமாக்கி அந்த சூழல்ல வளர்ற குழந்தையை வியாபாரியா வளத்து விட்டுட்டிருக்கோம்.
பெரியவங்களை ஒதுக்கி வச்சு மற்ற மனிதர்கள் மேலிருக்க நம்பிக்கையை தொலைச்சு இன்டோர் கேம்ஸ் பழகின்னு தெருவுல கூடி விளையாடுறதை இளக்காரமாவும்
இதை ஸ்டேட்டஸ் Symbol ஆகவும் மாத்திட்டு போறோம்..
வெறும் ஏட்டுக்கல்வியை கொடுத்து செக்குமாடா ஒரு இடத்துல சுத்த விட்டிருக்கோம்..
அதில் தோற்றா இந்த சமுதாயம் பேசுற பேச்சுக்களை எதிர்கொள்ளத்தெரியா கோழையா வளர்த்து விட்டிருக்கோம்..
என் சமுதாயம் எனக்கு எதை கொடுத்து ஒரு மனுஷியா உலவ விட்டுச்சோ அதே சமுதாயம் இன்னைக்கு இருக்க கொஞ்சநஞ்ச மனிதத்தன்மையையும் நசுக்கிட்டிருக்கு..
இங்கே சமுதாயம் என்பது பெற்றோரும் சேர்ந்ததுதான்
இப்போ எதை? யாரை? நான் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியும்..
அதான் நான் இங்கே யாரையும் குறிப்பிட்டு பேசி விவாதிக்காம மனம் நோக செய்யாம என்னைப்பற்றி மட்டுமே சொன்னேன்..
இதை எப்படி நீங்க எடுத்துக்கிட்டாலும் எனக்கு சந்தோஷமே..