Puneet
Bronze Winner
நமக்கு அதுபோல ஒரு சூழல் அமைஞ்சதை நெனச்சி பெருமைப்படுற அதேநேரம் அந்த அனுபவத்தை முடிந்தவரை நம்ம பிள்ளைக்கும் தர முயற்சிக்கலாம்..Supera solli irunthenga punithama ...anusaranaiyaana aravanipaana samathaayathin madiyil thavanzhtha naam indru vealiyae poga anjum samuhathirkul moochi mutti vizhi pithungi nirkiraen...
உங்களைப் பற்றிய நினைவுகள் என்னையும் என்னை பற்றிய நிகழ்வுகள் மூழ்கடிச்சிடுச்சி...
அலைஅலையான அற்புதமான நிகழ்வுகளின் தாக்கங்கள்... நம் பிள்ளைகளுக்கு கிடைக்குமா....ஏக்கம் மட்டுமே மிஞ்சுகிறது...கபடியிலிருந்து கிட்டிபுல் வரை விளையாடி இருக்கிறேன்... இன்று டிவியில் மட்டுமே பார்க்கும் அறிய காட்சி பொருளாய் மாறிவிட்டது விளையாட்டு... பம்பரம் முதல் பாண்டி அத்தனை விளையாட்டுகளையும் பேதமற்று விளையாடி இருக்கிறேன்..... கொள்ளையிலே பிள்ளைகளோடு சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கி விளையாண்ட காலங்கள் மீண்டும் வருமா ... நினைவலைகள் பின்னோக்கி செல்ல செல்ல அந்த நாளுக்கான ஏக்கங்கள்... நம் பிள்ளைகள் காகித்தின் வழியே மட்டுமே கற்பனையேடு கற்பனையாக கடந்து விடுகின்றனர்... எப்படி பட்ட வாழ்க்கையை நம் பிள்ளைகளிடமிருந்து நாம் பறித்துவிட்டோம் ... அவர்களே எதை நோக்கி கடத்துகிறோம்...பொருளை மட்டுமே தேடும் இந்த தேடலின் பொருளும் ....அழகான நினைவலைகளில் வெளிவரும்.... வலி மட்டுமே மிஞ்சுகிறது... அந்த ஏகந்த வாழ்க்கையின் சிறு துளியாவது நம் சந்ததியினருக்கு காட்டி இருக்கின்றோமா... குற்றம் புரிந்த மனநிலைதான் மிஞ்சுகிறது....
நான் கூறிய சில சம்பவங்கள் சிலருக்கு கதையாக கூட தோணலாம்...இந்த சூழலில் வாழ்ந்து இன்று அந்த ஏக்கங்கள் அடி நெஞ்சில் ஆழ பதுக்கி வைத்திருருப்பவர்களுக்கு புரியும்.... அந்த வாழ்க்கையை எல்லோரும் ஒரு நாலாவது வாழ வேண்டும் ......ஆசை...... அப்பொழுது புரியும் அதன் சுவை...
இந்த ஏக்கங்களே அவர்களின் விளையாடும் பொழுது வேரெதையும் சொல்லி தடைசொல்லாமல் என் உள்ளத்துக்கு தடை சொன்ன நாட்களும் உண்டு.....இன்னும் எத்தனையே ....அத்தனையும் புதையலாக என்னுள்.... இதை நான் உங்களுடன் அசைபோடும் பொழுது என் கண்ணகளில் வலியுடன் கூடிய சந்தோஷம்... சந்தோஷம் எனக்கானது.... வலி அறிய வாழ்க்கையை இழக்க வைத்த நமது தேடலுக்கானது.......இன்னும் இன்னும் எத்தனை எத்தனையே.... கொட்டி கவிழ்க்க ஏங்குகிறது என் உள்ளம்.... தாங்குவீர்களா இந்த ரம்பத்தை என்றே நிறுத்திகொள்கிறேன்....
முடிந்தவரை விடுமுறை காலத்தையாவது நம்ம வீட்டு பெரியவர்கள் கிட்ட விட்டு வாழ்க்கையை வாழ்ந்து பாக்க விடலாம்