Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் வணக்கம் வணக்கம். மன்னிக்கணும் இந்த மனமுதிர்ச்சி என்கிறதில நா கொஞ்சம் குழம்பிட்டேன். நம்ம நாட்டில மன முதிர்ச்சின்னா நல்லதுக்கு தான் சொல்வாங்க. மனம் / அறிவு முதிர்ச்சியை (மெச்சூரிட்டி...) குறிப்பிடுவாங்க. நீங்க சொன்னதை வயதுக்கு மீறிய பேச்சு... அது முதிராத (இம்மெச்சூர்) அப்படின்னு சொல்லுவோம். அதுதான் நான் கொன்பியுஸ் ஆயிட்டேன் ஹீ ஹீ சரி என்னோட கருத்த சொல்லலாமா,
என்று ஒரு குழந்தை பூமியில் ஜனிக்கிறதோ, அது ஒரு சமூகத்தை சார்ந்ததாக அது மாறுகிறது. ஒரு சமூகம் என்பது ஒரு குடும்பத்தின் கூட்டமைப்பு. ஆக ஒரு சமூகத்தின் வளம், அதன் பெருமை, அதன் உயர்ச்சி அதன் கட்டமைப்பு அனைத்தும் ஒரு குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. ஆக ஒரு குழந்தை முதிராத நிலையில், தன இஷ்டத்துக்கு பேசுகிறது ஒரு செயலை செய்கிறது என்றால், அது அதற்க்கு முழுமுதல் காரணமும் அக் குழந்தையின் குடும்பமே.
ஒரு குழந்தையின் அஸ்திவாரம் உறுதியானதாக இருக்க வேண்டும் என்றால் அது நிச்சயம் அக்குழந்தையின் குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது. முன்பு எல்லாம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலத்தில் சரி தவறு என்பதை அந்த குடும்பமே சொல்லி கொடுத்து வளர்க்கும். நம்ம தமிழ் பாடல்களில் எல்லாமே அறிவையும், பன்பாயும், ஒழுக்கத்தையும் சொல்லி கொடுக்க கூடிய பாடல். குழந்தை பருவத்தில் தாய் அந்த குழந்தைக்கு ஒழுக்கம் சார்ந்த பாடல்களை சொல்லி கொடுப்பாள். தவிர, பெரியவர்களை கனம் பன்னு. அவர்களை மதித்து நாட அப்படி சொல்லி கொடுப்பார்கள். குழந்தை அதை பின்பற்றும். இன்றும் நம்மில் அதிகமானவர்களுக்கு ஆசிரியர்களை கண்டால் எழுந்திருக்கும் பழக்கம் இருக்கிறது. அது நம் வீட்டில் சொல்லிக்கொடுத்த ஒழுக்கம். இன்னிக்கு ஆசிரியராய் துரத்தி துரத்தி வெட்டுறது அதுவும் குடும்பம் சொல்லி கொடுத்த ஒழுக்கம்.
இதற்க்கு அடிப்படை காரணம் என்ன? பொருளாதார சிக்கல், தாய் தந்தை இருவரும் வேலைக்கு போக வேண்டிய காட்டாயம். கூட்டுக்குடும்பம் இல்லது தனித்து வாழ வேண்டிய நிலை. குழந்தை தாய் தந்தை பாசம் பெரிதளவில் கிடைக்காமலே வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. சுயநலமாக வாழ பழகிக்கொள்கிறது. தனித்திருக்கும் குழந்தைக்கு அதை சமாதான படுத்த அதற்க்கு வேண்டிய வேண்டா பொருட்களை கேட்க முதலே கண்ணிமைக்கும் நொடியில் அவர்களிடம் சமர்ப்பித்து விடுகிறார்கள். கேட்ட நொடியில் கிடைக்கும் போது அதற்க்கு அதன் அருமை தெரிவதில்லை. கஷ்டம் என்றாலும் அதுக்கு புரிவதில்லை. போதாதற்கு அது என்ன செய்தாலும் பெருமை வேறு. டே திருந்துங்கடா டி வாங்கித்தாரேன்.
ஒரு குழந்தை சரியான முறையில் வளர்க்கப்படுமேயானால், நிச்சயம் அந்த குழந்தை தப்பான பாதையை தேர்வு செய்யாது. தன வயதுக்கு மீறி ஒரு குழந்தை பேசுகிறது என்றால், அதை கண்டும் காணாமலும் கேட்டு ரசிக்கும் பெற்றோர் மாபெரும் குற்றவாளிகள். அவர்களுக்கு தெரிவதில்லை, நாளை சந்ததியே அந்த குழந்தையை பார்த்து சிரிக்கும் என்று. ஒரு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுக்காத குடும்பத்தின் பிள்ளைகள்தான் சில வருடங்கள் கழித்து பெண்மையை மதிக்காது சீரழித்து செல்கின்றனர்.. முதலில் பெற்றோர் குறிப்பாக தாய் குழந்தை முதலே அதனிடம், பெண்களை மதிக்க கற்றுக்கொள் பெரியவர்களை கணம் பானு என்று சொல்லி கொடுப்பது அவசியம்.
தவிர, எந்த தாய் தந்தையும் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதை குழந்தைகள் முன் காட்டாதிருப்பது ரொம்ப அவசியம்.. தன குழந்தைக்கு முன்பாக, கணவன் மனைவியையோ, இல்லை மனைவி கணவனையோ அடிப்பதை பார்க்கும் குழந்தைக்கு, அடிப்பது தவறானதாக தெரியாது. அது நாளை தன நண்பனை அடிக்கும்,. தன மனைவியை அடிக்கும். ஆசிரியனை அடிக்கும். ஏன் இந்த சமூகத்தையே அது நாறடிக்கும். பணம் ஈட்டுவது முக்கியமல்ல. பணத்தின் அருமையை சொல்லிக்கொடுப்பது மிக அவசியம். குழந்தையிடம் நீ டாக்டராகு, எஞ்சினியர் ஆகு, வக்கீலாக்கு என்று சொல்லி கொடுக்கும் தாய் தந்தை நல்ல மனிதனாக ஆகு என்று சொல்லி கொடுப்பதில்லை. அப்படி இருக்க அது எப்படி முதிர்ச்சி உள்ள குழந்தையாக (மெச்சூரிட்டி) வளரும்?
ஒரு குழந்தை அதிகப்பிரசிங்கித்தனமாக பேசுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். மூன்றாம் மனிதனாகிய நான்,(சமூகம்) அதனிடம் சென்று, இப்படி பேசாதே... அது தவறு என்று சொன்னேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதற்க்கு அதன் தாய் தந்தை என்ன செய்வார்கள். எண்கள் குழந்தைகளை வளர்க்க எங்களுக்கு தெரியும். நீ ஆணியே புடுங்க வேணாம். வேற வேலைய பார் என்று சொல்ல்வார்களா சொல்ல மாட்டார்களா. இதை பார்க்கும் குழந்தை எப்படி நம்மை மதிக்கும். இதையே அந்த குழந்தை தவறாக பேசும் பொது, "இபப்டி பேசுவது பண்பல்ல, மரியாதை கற்றுக்கொள்" என்று அதன் தாய் அல்லது தந்தை சொல்வார்களானால், நிச்சயம் அந்தக் குழந்தை தன்னை திருத்தி கொள்ளும்.
சமூகம் என்பது வேறல்ல. நான் என் தாய் என் தந்தை என் கணவன், என் குழந்தை இதெல்லாம் சேர்ந்த குடும்பம், என்னை சார்ந்த உறவு இதுவே சமூகம். குடும்பம் சிறப்பாக இருந்தா சமூகம் தானாக சிறப்பாக இருக்கும். ஒரு குடும்பத்தின் வேலை பண்பான சந்ததிகளை சமூகத்திடம் ஒப்படைப்பது. சமூகத்தின் வேலை அந்த சந்ததியை வழிநடத்தி உச்சியில் நிறுத்துவது. ஒரு சமூகம் என்பது குடும்பத்தின் கையிலேதான் இருக்கிறதே அன்றி, குடும்பம் சமூகத்தின் கையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் குடும்பத்தின் கையினில்... நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி, அந்த நல்ல குளந்தைகளை பெறுவதும், வளர்ப்பதும் குடும்பத்தின் கையினில், சாதி ஆகட்டும், சமயம் ஆகட்டும், இனம் ஆகட்டும் அனைத்தும் பிறக்கும் இடம் குடும்பமே... இளவயதில் நஞ்சு விதைக்கப்பட்டால், அது விருட்சமாகி சமூகத்தை அளிக்கும். நல்லது விதைக்கப்பட்டால், சமூகம் வளர்ச்சி அடையும்.
ஆக ஒரு குழந்தை மனமுதிர்ச்சி அடையாது இருப்பதற்கு முழு முதல் காரணம் குடும்பuமே குடும்பமே குடும்பமே.
யோவ் பட்டி மன்றம் பேசி இருக்கேன். சோடா கொண்டாங்கயா..
ஒரு டவுட் sis.
நீங்க முதிர்ச்சி இல்லாத குழந்தைகள் என்றா pesirkinga?????
உங்களோட first para புரியல?? Can u pls explain sis????