All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக அருமையான தலைப்பை தேர்வு செய்து..முதல் அடி எடுதது வைத்து.....அதனை விவாதம் செய்யலாம்....என அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி...அதற்காக பல ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்து..

என மிக அழகா கொண்டு போயிருக்கீங்க....வாழ்த்துக்கள்... 💖💖💐💐💐💐💐
@வாசுகி
@fathima nuhasa
@Varu thulasi
@Srisha

@Srisha தொடர்பு கொண்டபோது..மிகவும் மகிழ்ச்சியாக..பெருமையாக...உணர்ந்தேன்...மிகுந்த ஆர்வமாகவும்...

என ஆர்வம் எதிர்பார்ப்பு...அனைத்தையும் முழுமை செய்வதாக இங்கே ...விவாதம் நடந்தது ..

அதற்கு @RamyaRaj @Andal Arugan @Tamil novel lover @Samvaithi007 @Deepagovind @preti @Amudhakannan @Vidhyasuresh @meenakshi27 இவர்களின்..அருமையான..ஆழமான..தெளிவான கருத்து பகிர்வுகளே காரணம்..👌👌👌👏👏👏👏👏👏

பத்து மணிக்கு..அனைவரின் கருத்துக்களை தொகுப்பாக எடுத்து வருகிறேன்😍😍👍👍👍👍
முதல் முயற்சிக்கு நீங்கள் அளித்த ஒத்துழைப்பிற்கு எங்களின் ஆத்மார்த்தமான நன்றிகள்.. முன்பே சொன்னது போல் நீங்கள் எங்களோட இணைந்த பிறகே எங்களுக்கு முழு மூச்சுடன் செயலில் இறங்க தோன்றியது.. உங்களுடைய அன்பிற்கு மீண்டுமொருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏
 
Samvaithi007

Bronze Winner

இதுவும் சமுகத்தின் மீதான உங்களின் பார்வை மற்றும் தேடலே... வழி கோலியதும் சமுகமே...வழி சொல்லி கொடுத்தவர்கள் பெற்றோர்களாக இருக்கலாம்...பார்வை மற்றும் தேடல் உங்களுக்குள்ளிருந்து தான் பிறந்தது.. இ உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் ... உங்களது அடுத்த கட்டத்திற்கான பயணம்... இதுவும் முதிர்ச்சியே..💞💞💞💞💞
 
Puneet

Bronze Winner
உங்களை போல விவாதம் செய்யுற அளவு என்கிட்ட ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கா தெரியலை.
நான் சொல்வதை ஒரு குறுங்கதையா நெனச்சாலும் எனக்கு ஓகே தான்😊

நான் என்னோட சிறுவயது சூழலை பகிர்ந்துக்க நினைக்கறேன்..

நான் அக்மார்க் கிராமத்துல பொறந்து வளர்ந்தவ..
அப்பா மெக்கானிக்.. காலையில போனா நைட்தான் திரும்புவாரு..
அம்மா வயல் வேலையில பிஸி ஆகிருவாங்க..

இப்படி இரு.. அப்படி வளரு..
நீ எதிர்காலத்துல அப்படியாகனும்..
இதை செய்யாதே அதை பண்ணாதேன்னு யாரும் சொல்லி கொடுத்து வளர்க்கல👍
ஆனாலும் நாங்க கண்காணிப்பு வட்டத்துல கவனமாதான் வளர்ந்தோம்😍

எனது பால்ய பருவம் ரொம்ப அழகானது மட்டுமில்ல.. இன்றைய வாழ்வோடு ஒப்பிட்டால் சொர்கமும் கூட..
உள்ளூர் அரசு பள்ளி..
ஆங்கிலம்ன்னு ஒரு மொழி அறிமுகமே மூன்றாம் வகுப்புலதான்..
நிதானமான அதேநேரம் ஆழமான அனுபங்களை கோர்த்த கல்விமுறை😍
(அப்போ கல்வி வியாபாரம் ஆகல😍)

காலை ஊரே வயக்காட்டு வேலைக்கு போய்ரும் சில வயதானவங்களை தவிர..

விடியலில் வீட்டு பெண்கள் மாடு கன்று கவனிச்சு சமைக்க.. வயலுக்கு நீர்பாய்ச்ச போன பெரியவர்களுக்கு கூழ் கொண்டுபோற பணி பிள்ளைகளை(என்னை) சேர்ந்தது😍
பள்ளிக்கு நேரமாகிருமேன்னு பயந்து ஓட்டமும் நடையுமாய் போய் குடுத்துட்டு வருவேன் ( ஜாகிங் கெட்டது☺)

பள்ளி தெரியற தூரத்துல இருக்க வீட்டு திண்ணையில பாட்டி தாத்தாங்க அரட்டை..
எங்களுக்கான பாதுகாவலர்களும் அவங்க தான்👍
இன்ட்டர்வெல் பெல் அடிச்சா அங்கேத்தான் ஓடுவோம்..
(எங்க க்ரெச் அதுதான்☺☺)
சுருக்கு பையில இருக்க காசுல பத்து பைசா இருபது பைசான்னு குடுப்பாங்க..
என் பேத்தி.. இன்னார் பேத்தி ன்னு பாகுபாடில்லாம..

நான் அந்த இடத்துல என்னைச்சேர்ந்தவங்கன்னு இல்லாம எல்லோரையும் நேசிக்க கத்துக்கிட்டேன்👍

வயித்துவலி தொடங்கி காய்ச்சல் வரை அவங்க கை வைத்தியம் தான்..
(மருத்துவமும் வியாபாரம் ஆகல)
அம்மா அடிச்சா அரணைப்பை கண்டதும் அங்கேதான்..
பெரியவங்களை மதிக்கற நேசிக்கற பழக்கம் யாரும் சொல்லாமலே உணர்வுல கலந்துச்சு😍

வாரத்துல ஒருநாள் ஞாயிறு மட்டுமே டிவி க்கு அனுமதி.. அதுவும் ஊர்பொது பஞ்சாயத்துக்கு சேர்ந்தது.
மீறி மற்ற நாட்கள்ல போனா தென்னம்மட்டை சிதறுற அளவு அடி விழும்..
நானும் வாங்கியிருக்கேன் சிலநேரம்☺
பெரியவங்க சொன்ன மகாபாரதக்கதைகள்தான் எங்க டிவி..
தெருக்கூத்துகள்தான் சினிமா தியேட்டர்..
அவங்கதான் நாங்க மனசுவிட்டு பேசின உறவுகள்..

விடுமுறை நாட்கள்ல தோழமைகளோட சுள்ளி பொறுக்க போவோம்..
காலையில் போனா ஏரியில் கூடி விளையாடி இலந்தை கொடுக்காபுளி பப்பாளி பறிச்சு பசியாறி வீடு திரும்பினா மாலையாகிருக்கும்😍
ஆரோக்யம் பெருகுச்சு..
உயிர்தோழமை வட்டம் பெருசாச்சு😍

அச்சோ காலைல போன பிள்ளை என்னாச்சோ ன்னு பதறி தவிக்கல அவங்க..
ஊரில் ஒருத்தர் பார்வையில் இருந்தாலே போதும்..
மனிதர்கள் மேல் நம்பிக்கையும் இருந்தது👍

நோட்டு புத்தகங்கள் வாங்க காசு கேட்டாகூட வயல்ல வேலைபாக்க சொல்லி அதுக்கான கூலியாத்தான் அதை குடுப்பாங்க..
காசு பணத்தின் அருமை தெரிஞ்சுச்சு😍
விவசாயத்தோட அருமையும் புரிஞ்சுச்சு😍😍
வருடத்தில் இரண்டு முறை மட்டுமே புதுத்துணி.. (தீபாவளி பொங்கல்க்கு)
சோ தேவைக்கு மேல எதையும் வாங்கி பழகுற ஆடம்பரம் பயிலல😍

நான் பெற்றோர் அரவணைப்புல கத்துக்கிட்டது என்னை பொறுத்தவரை 20% கூட இல்ல..
வளர்ந்த சூழல்தான் 80% என்னை வளர்த்தெடுத்தது😍👍

உன் சுயபுராணத்தை கேக்க வரல..
இதனால நீ என்ன சொல்ல வரன்னு கேக்குறது எனக்கு கேக்குது..

நவீனம்ங்கற பேருல எல்லாத்தையும் பழகிட்டோம் நாம..
தேவைக்கு மேலாக பாக்கெட்மணி..
நமக்கான நேரம் தேவைப்படுறப்ப குழந்தைகளுக்கு மொபைல் ன்னு கொடுத்து பழகிட்டோம்.

பெரியவங்களை தள்ளிவச்சு புருசன் பொண்டாட்டி அவங்க பிள்ளைன்னு கூடியிருக்கறதுதான் கூட்டுக்குடும்பம்ன்னு சுயநல வட்டத்துல நுழைஞ்ச பின்னே அந்த வீட்டுல குழந்தை கத்துக்க என்ன மிச்சமிருக்கும்???

கல்வி முதல் மருத்துவம் வரை வியாபாரமாக்கி அந்த சூழல்ல வளர்ற குழந்தையை வியாபாரியா வளத்து விட்டுட்டிருக்கோம்.

பெரியவங்களை ஒதுக்கி வச்சு மற்ற மனிதர்கள் மேலிருக்க நம்பிக்கையை தொலைச்சு இன்டோர் கேம்ஸ் பழகின்னு தெருவுல கூடி விளையாடுறதை இளக்காரமாவும்
இதை ஸ்டேட்டஸ் Symbol ஆகவும் மாத்திட்டு போறோம்..

வெறும் ஏட்டுக்கல்வியை கொடுத்து செக்குமாடா ஒரு இடத்துல சுத்த விட்டிருக்கோம்..
அதில் தோற்றா இந்த சமுதாயம் பேசுற பேச்சுக்களை எதிர்கொள்ளத்தெரியா கோழையா வளர்த்து விட்டிருக்கோம்..

என் சமுதாயம் எனக்கு எதை கொடுத்து ஒரு மனுஷியா உலவ விட்டுச்சோ அதே சமுதாயம் இன்னைக்கு இருக்க கொஞ்சநஞ்ச மனிதத்தன்மையையும் நசுக்கிட்டிருக்கு..
இங்கே சமுதாயம் என்பது பெற்றோரும் சேர்ந்ததுதான்👍

இப்போ எதை? யாரை? நான் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியும்..
அதான் நான் இங்கே யாரையும் குறிப்பிட்டு பேசி விவாதிக்காம மனம் நோக செய்யாம என்னைப்பற்றி மட்டுமே சொன்னேன்..

இதை எப்படி நீங்க எடுத்துக்கிட்டாலும் எனக்கு சந்தோஷமே..😊👍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்தனை கோணங்கள் எத்தனை பார்வைகள்.....

உங்கள் அனைவர கருத்தும் என்னை வியக்க வைக்கிறது.......

ஒரு சிறு விஷயத்தை கூட எத்தனை உன்னிப்பாக கூர்ந்து உள்ளீர்கள்....

அனைவரது கருத்தும் வரவேற்க தக்கது......

வாழ்த்துக்கள் உங்களது பதிவிற்கு

இப்பொழுது எனது தனிப்பட்ட கருத்து.....

விவாத தலைப்பு படி வயது மீறிய முதிர்ச்சியால் சில நல்லதும் நடந்து இருக்கிறது என்பது எனது கருத்து.....

முன்பு காட்டிலும் குழந்தைகள் சுயமாக சிந்திக்கிறார்கள்...... தனித்து இயங்குகிறார்கள்...... அவர்களுள் இருக்கும் திறமைகள் என்னை பல முறை வியக்க வைத்திருக்கிறது.......

இது போன்ற நல்லதில் தீங்குகளும் தவறாது நடந்து கொண்டு தான் இருக்கிறது.......

எல்லா தீங்கிலும் நன்மையையும் உண்டு
எல்லா நன்மையிலும் ஏதோ ஒரு வகையில் தீங்கும் இருக்கிறது..... அது போல தான் இந்த முதிர்ச்சி விஷயமும்........

நான் ஏன் நடைமுறை கருத்தை கூறாது இப்படி பேசுகிறேன் என எண்ணலாம்.......

எனது பார்வையில் இந்த தலைப்பு generation explosion....

நாம் அதாவது நமது சிறு வயதில் நம் உணர்ச்சிகளை ஏதோ ஒரு வகையில் உள்ளடக்கி இருப்போம்........ அது காலத்தின் கட்டாயம் ,,, குடும்ப சூழ்நிலை எந்த காரணமாகவும் இருக்கலாம்......

ஆனால் உணர்வுகள் அடக்கப்பட்டது உண்மையே......... அதன் வெளிப்பாடாக தான் இன்று நாம் நாமாக வாழ வேண்டும் எனக்காக வாழ வேண்டும் என்று எல்லாம் எண்ணுகிறோம்.......

அது ஒரு போதை...... அந்நிலையில் இந்த உண்மையை பலர் ஒத்துக்கொள்ள கூட மாட்டார்கள்........ நான் நானாக இருப்பேன் என்ற போதையில் நமது அடுத்த சந்ததிக்கு நாம் கற்ற moralities சொல்ல மறந்தும் போகிறோம்..... மறுத்தும் போகிறோம்........

கேள்வி என்னவாகினும் பதில் ஒன்று தான் எண்ணங்கள் தூய்மை ஆனால் உள்ளம் புனிதமாகும்.........

நீங்கள் யாராயினும் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அடுத்தவர் மனதில் அது விதை தான்....... அதை கொண்டு பல விதத்தில் பயணிக்கிறார்கள்.....

மாற்றம் நம்மில் இருந்து....... குழந்தைகள் மாறும் முன் நாம் முதலில் புனிதர் ஆக வேண்டும்......

இது எனது கருத்து....... vivathirkaga சொல்ல வில்லை..... மனதில் இருப்பதை padikirean....

நன்றிகள்.......
 
தாமரை

தாமரை
9002

9003

குழந்தைகளின் அதிகமான மனமுதிர்ச்சிக்கு காரணம் பெற்றோரா...சமூகமா…

மிக அருமையான விவாத பொருள்…

அந்த மனமுதிர்வு சரியா தவறா.??.தேவையா இல்லையா ..என்று அடுத்தும் பல கிளைக் கேள்விகள்...தோன்ற வைக்கும் அளவு விதை போல உயிரோட்டம் கொண்டது..

இது பற்றி எனது புரிதல்..

ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் வாய்ந்தது..ஒரே வயிற்றில் பிறந்த சகோதர சகோதரியே ஒரே போல் குணம், திறன், ஆற்றல் கொண்டு இருப்பதில்லை என்பது கண்கூடு....பெற்றோரும் ஒரே போலதான் வளர்க்கிறார்கள்...ஆனால் ஏன் வேறுபடுகிறார்கள்...ஜீனில் இருக்கும் ஆற்றலுடன் ….ஆர்வங்களுடன்...அமையும் சூழல்கள் தான் முக்கிய காரணிகள்...இதை நான் சொல்லவில்லை.. ஒரு மருத்துவ ஆராய்ச்சி சொல்கிறது…

பெற்றோரே குழந்தைகள் மனமுதிர்வடைய காரணம் என தோழிகள் மீனாட்சி,நந்தினி@நாவல் லவ்வர், ஆண்டாள்,தீபா...அருமையா சொன்னாங்க..

தங்களின் சோம்பலால் குழந்தைகளுக்கு டிவி,மொபைல், இணையம் அனைத்தையும் கொடுத்துவிட்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்..என்று சொல்லி வருந்தியிருந்தார்கள்..

தவறான ப்ரோக்ராம்கள் ..சீரியல்கள்..விளையாட்டுக்கள்..அனைத்தும்..அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம் னு சொல்லியிருந்தார்கள்..

சமூகமே என்று தம் கருத்துக்ளை முன்வைத்த தோழிகள் ரம்யா, வாசுகி@ சம்விதாய் ,ப்ரீதி ,வித்யா..ஊடகங்களின் ஆளுமையை சாடியிருந்தார்கள்..பள்ளிகளில் கல்வி, ஒழுக்கத்தின் நிலை பற்றி தங்களின ஆற்றாமையை சொல்லியிருந்தார்கள்.

விவாதப் பொருள்...மனமுதிர்விற்கு காரணம் யார்..பெற்றோரா..சமூகமா….அது சற்றே விலகி சமுதாயம் பற்றிய ஆற்றாமை ,பெற்றோரின் அலட்சியம் , அதனால் குழந்தைகள் நிலை பற்றிய கவலையாய்..கருத்துக்கள் மாறியிருந்தன..

மனம்... அது பிறக்கும் போது உருவாவது...குணம் ...அது பெற்றோரின் மற்றும் முன்னோரின் சீதனம்…

ஆனால் குழந்தையின்...நிலை மற்றும் வாழ்வு..அவற்றை..சமூகமே உருவாக்கி தருகிறது…

அந்த மனம் ஏன் மாறுது...முதிருது..கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் பின்பற்றலால்...

பெற்றோரின் வளர்ப்பு சரியா இருந்தால் அது தவறான வழிக்கு செல்லாது...அதே நேரத்தில் அதற்கு நட்பு,பள்ளி,ஆசிரியர்கள் , உள்ளடக்கிய சமூகமும் துணை செய்ய வேண்டும்..

பெற்றோரின் சரியான வழிகாட்டுதல் கண்காணிப்பில் இருக்கும் குழந்தைகள் வழி மாறுவதில்லை..அவர்கள் பெற்றோர்களின் கண்கள் வழியாக தான் உலகை காண்கிறார்கள்..கைகாட்டும் பாதையில் தான நடக்கிறாரகள்...

ஒரு சிறுகதை படித்தேன்...முன்பு..

கிராமத்தில் இருந்து தன்னை காண வரும் தாயிடம்...தன் குழந்தை தவறான வார்த்தைகளை பேசுவதாக..முரடாக இருப்பதாக ஒரு பெண் வருந்துவாள்..குழந்தையின் அறையில் இரு ஜன்னல்கள் இருக்கும்..அதில் ரோடை நோக்கிய ஜன்னலானது திறந்து இருக்கும்...

சந்தடிமிகுந்த நகரவாழ்வின் காட்சிகள் அதன் வழியே புலப்படும்..தாயார்...அதை அடைத்துவிட்டு...மறுபுற ஜன்னலை திறப்பார்.. நிர்மலமான வானும்,பசு மரக்கிளையும், அதில் பாடும் பறவைகளும் அங்கு இருக்கும்..

"நீ உன் குழந்தைககு எதை அறிமுகம் செய்கிறாயோ..எதை காட்டுகிறாயோ..அது தான் அவனுக்கு தெரியும்.. மனதில் பதியும்.. எந்த ஜன்னலை திறக்க வேண்டும் என்று நீதான் முடிவு செய்ய வேண்டும்..", என்பார்.

சமூகம் னு...தனியா ஏதும் கிடையாது..நாமெல்லோரம் சேர்ந்தது தான் சமூகம்..

நாம் நம் வீட்டின் வாசலில் நிற்கும் போது..காலடியில் பாதாள சாக்கடை ஓடிக்கொண்டு இருக்கும்..காற்றில் வாகனங்களின புகை கலந்துபோய் இருக்கும்..கடந்து தாண்டி , சகித்து தான் வாழ்கிறோம்..

நம் குழந்தைகளுக்கும் அதைதான் சொல்லவேண்டியதிருக்கிறது...சமூகம் நல்லது கெட்டது எல்லாம் கலந்தது..நன்மையை எடு . தீதை விடு..என்று கற்றுத்தர வேண்டியது..முதல் பொறுப்பு பெற்றோருக்கு..

அவர்களின் மனம் முதிர புறக்காரணிகள் பல இருக்கலாம்..சமூகம் ஊடகம் என்று...அதை அவர்கள் வசம் கொடுத்தது நிச்சயமாக பெற்றோராகத் தான் இருப்பார்கள்..

எனவே….
பெற்றோரே காரணம் என்று கூறி என் கருத்தை பதிவு செய்கிறேன்..

களம்..இழை அமைத்து..."சூப்பரா பண்ணுங்க" னு வாழ்த்திய ஸ்ரீகலா மா விற்கு முதல் நன்றி..

இவ்வாய்ப்பை வழங்கிய ஸ்ரீஷா..உடனுறை அறுவர் குழுவிற்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றி..

கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்த..எண்மருக்கு பாராட்டுதல்களுடன்
இணைந்த நன்றி..

விவாதப் பொருள் பற்றி அறிந்ததும்...குழந்தைகள் பற்றிய தமது அக்கறையை காட்டும் விதமாக ..மனமுவந்து நாடி வந்து தம் கருத்துக்களை தெளிவாக வழங்கிய

ஜோஸ், இராஜி அன்பு, (பொம்மு) ஐஷு, ம்ருதா (ப்ரியா ), சுபாஷினி அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.💐💐💐

விடைபெறுகிறேன் தோழமைகளே...அடுத்தும் வாய்ப்பு கிடைத்தால.. இந்த ஜோதியில் ஐக்கியமாகிக் கொள்வேன் என்ற உறுதியுடன்...

-
🌸தாமரை🌸

@வாசுகி
@Varu thulasi
@fathima nuhasa
@Srisha
@RamyaRaj
@meenakshi27
@Tamil novel lover
@Deepagovind
@Andal Arugan
@Samvaithi007
@preti
@Vidhyasuresh
@Raji anbu
@Priyam
@aishu
@Josyyy
@Subasini
 
Puneet

Bronze Winner
@தாமரை
அருமையான அர்த்தமுள்ள வார்த்தைகளா சொன்னீங்க தாமரைமா😍😍

நீங்க சொன்ன அந்த குட்டிக்கதை செம்ம😍

குழந்தைகள் மனசை பொறுத்துதான் சிறகு விரியும் அது பெத்தவங்களாலேதான் முடியும்ன்னு அழகா புரியவச்சீங்க😍😍
சூப்பர்👏👏👍👍
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 9002

View attachment 9003

Thank you sissy 😍😍😍😍பெருசா ungaluku thank பண்ணனும்... but how னு therila......

Hearty big thanks sis, 😍😍😍😍ur decision summary and tat short ஸ்டோரி எல்லாம் சூப்பர்......
 
ஶ்ரீகலா

Administrator
நானும் எனது கருத்தை பதிவு செய்கிறேன்... கொஞ்சம் லேட்டாகிருச்சு... 😁😁😁

பெற்றோர் தான் காரணம். இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்லவர்கள் தான். அவர்கள் நல்லவர்களாவதும், தீயவர்களாவதும் பெற்றோரின் வளர்ப்பினிலே... பங்கு பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் 👏👏👏
 
Thank you ஸ்ரீ mam😍😍
 
Top