All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

தாமரை

தாமரை
இன்றைய பெற்றோருக்கு தான் கடமையையும் பொறுப்பும் அதிகம் இருக்கிறது.
சமுகம் என்பது நாம் தான் நம்மால் இந்த சமூகம் பாதிக்க பட கூடாது.
நல்லதோ கெட்டதோ குழந்தைகள் அதை வீட்டிற்கு வெளியே தெரிந்து கொள்ளுவது தான் ஆபத்தை விளைவிக்கும்.
அதனால் அது சொல்லித் தரும் இடம் முதலில் வருவது வீடு தான்.....
அவங்க நம்மிடம் கேட்கும் எந்த அபத்தமான கேள்வியாக இருந்தாலும் நாம் பொறுமையாக அதை பற்றிய தெளிவை அவங்களுக்கு புரிய வைத்தால் போதும்.
அதே போல் நல்ல விஷயங்களை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும்.
குழந்தைகள் தங்கள் கடமையை செய்ய ஊக்கிவிக்க வேண்டும் அல்லாது இதை செய்தால் இது வாங்கி தருவேன் என அவர்கள் கடமையை முடிக்க நாமே பேரம் பேசுதல் கூடாது.
அதே மாதிரி பணிந்து போக கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெரியவர் சிறியவர் என அனைவரிடமும் அன்பாக இருக்க நாம் நம் உறவுகளை பலப்படுத்த வேண்டும்.
இன்றைய குழந்தை என்றுமே நம்மை விட அறிவும் சிந்திக்கும் திறனும் அதிகம் எனவே அவர்களை பேச விட்டு அவர்களுடன் நட்பாக இருந்தாலே அவர்கள் தவறினை நாம் அடையாள படுத்தி திருத்த முடியும்.
அவர்கள் அதிகம் இருக்கும் நட்பு வட்டத்தில் நாமும் நட்பாக தொடரலாம் அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.
என்றென்றால் நம்மை விட வயது சிறிய பிள்ளைகளிடம் விளையாட்டாக பேசும் போது சில நேரங்களில் நமக்கே என்னடா எனத் தோன்றும் ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் என வரும் போது நாம ரிஸ்க் எடுக்க தயங்க மாட்டோம் அதே போல் அந்த பிள்ளைகளும் நம்மிடம் நெருங்க அவர்களுக்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும்.
இப்போ இருக்கும் அதிவேக உலகில் தீமைகள் நம்மை பல வழிகளில் வந்தடையும் நம்மை சுற்றியுள்ள பல இடங்களில் இருக்கும் தவறுகள் எல்லாமே நாம் சரி செய்ய முடியாது இப்படி பட்ட உலகிற்கு கால் பதிக்கும் நம் பிள்ளைகளிடம் எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்பதும் நாம் சொல்லி புரிய வைக்க வேண்டும்.
இது தான் சரி என்று தினிக்காமல் நீ செய்தது சரியா,செய்யவிருக்கும் செயல் சரிதானா என கேள்வி கேட்கும் போது அவர்கள் கண்டிப்பாக சிந்திப்பார்கள்.
இது செய் என்பதை விட இது செய்தால் நல்லா இருக்கும் என்றும் நல்லா யோசிச்சு முடிவு செய் எனவும் அறிவுரை இல்லாமல் ஐடியா தரலாம். "அறிவுரை தரவங்களை விட ஐடியா தரவங்களத்தான் பிள்ளைகளுக்கு பிடிக்கும்"
இதெல்லாம் சொல்ல நாம யோசித்தோம் என்றால் இந்த சமூகம் அதை யோசிக்காமல் கற்றுக் கொடுக்கும் ஆனால் அது நன்மையாக இருக்குமா என்பது தான் கேள்விக்குறி.
அதே போல் படிப்பு என்பது மார்க் என்று சொல்லாமல் அது உன் தகுதி மற்றும் உன் திறமை அறிவு இப்படி எது சொன்னால் அவங்க கவணம் அதில் திரும்புமோ அந்த டைமென்சனில் சொல்லி புரிய வைக்கலாம்.....
இது எனக்கு நடந்த சம்பவத்தை சொல்லி முடிக்கிறேன்"நானும் என் பையனும் அவனுக்கு கண் டெஸ்ட் ஹாஸ்பிடல் சென்று அங்கே மருத்துவரை காண காத்திருக்கும் போது என் இடப்பக்கம் நிறைமாத கற்பிணி பெண் என் வலப்பக்கம் இருபத்தி இரண்டு அல்லத மூனோ நாலோ வயதுடைய இளைஞனும் இருக்க இவன் ரொம்ப நேரமாக அந்த பெண்ணை பார்திருந்தான் கொஞ்ச நேரத்தில் என் ஆதிக்கு வந்ததே ஒரு டவுட்"அம்மா குழந்தை எப்படி பிறக்கும் "என கேட்க அடுத்திருந்தவனோஅதிர்ந்து ஆதியை பார்க்க நான் அவனை திட்டுவேன் என்ற மனநிலையில் என்னை யும் பார்க்க எனக்கு தெளிவாக புரிந்தது இவனுக்கு ஏன் இந்த டவுட் என்று
நான் சிசேரியன் முறையை மட்டும் கொஞ்சம் அவனுக்கு புரியும் படி சொல்ல ஆதியின் கண்ணில் ஒரு வேதனை சிறு மௌனம் பின் நான் பிறக்கும் போது உங்களுக்கும் வலித்ததா என்ற அவன் வார்த்தையில் வலியை என்னால் உணர்வும் முடிந்தது.
இப்படி அவன் குழந்தை பிறப்பின் இன்றைய சிசேரியன் முறை தெரிந்து கொண்டான் அதே நேரம் தாயின் வலியும் அவன் உணர்நது கொண்டான்.
சட்டென்று எனக்கு அந்த இளைஞன் நினைவு வந்து அவனை பார்க்கும் போது அவன் கண்ணில் சிறு புன்னகையுடன் அவன் வேலை செய்ய தொடங்கிட்டான் அது தாங்க மொபைல் நோண்டறது.
இந்த கேள்விக்கு நான் பதில் மலுப்பி இது தப்பு இப்படி கேட்க கூடாது என பல மாதிரி அவனை சமாளிச்சுருக்கலாம்.
ஆனால் இந்த அவன் டவுட் வேற யாரிடம் போய் கேட்டாலும் அது அவனுக்கு தான் கஷ்டமா போகும் கரைக்டான எந்த பதிலும் கிடைக்காமல் தேவையில்லாத பல தகவல்களை தெரிஞ்சுக்குவான் நாம என்ன தெரிஞ்சக்கூடாது என்று மறைக்கறோமோ அது தான் அவங்க முதலில் தெரியும் வாய்ப்பை இந்த சமூகம் மீடியா சினிமா இப்படி எல்லாமே கத்துக் கொடுக்கும்.
நான் சொன்னது டிபைட்டா என்று எனக்கு தெரியலை எனக்கு தெரிந்த சில விஷயங்கள் இஙகே நான் பகிர்ந்து கொண்டேன் என்னிடம் இந்த பகுதியில் வந்து கலந்து கொள்ள கேட்ட என் பிரண்ட்ஸ் எல்லோருக்கும் ரொம்ப நன்றி.
ஸ்ரீ மா உங்களுக்கு தான் என் லவ் அண்ட் லவ் எல்லாமே
இந்த மாதிரி ஒரு தளம் என் வீடு மாதிரி எனக்கு தோனுன எல்லாம் சொல்ல எனக்கு ஒரு மேடை நன்றி என்ற வார்த்தை ரொம்ப சிறியது தான் ஐ லவ் யூ ஸ்ரீ மா😍😍😍😍😍😍😍😍😍😍
சுபி டியர் அசத்தல்😍😍😍👌👌👌👌👌 :smiley55::smiley55::smiley3::smiley3:
 
aishu

Bronze Winner
ஹாய் நண்பர்களே..

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ..

வயதை மீறிய மன முதிர்ச்சி நூறு வீதம் தவறானது என்று நான் சொல்ல மாட்டேன்... வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் தாக்கு பிடிக்க அவசியமான ஒன்று... அதில் பல எதிர்மறை விஷயங்களும் இருப்பது varuthamana விடயம்

இதற்கு அடி போடுபவர்கள் பெற்றோர்கள் தான் .. இயந்திர உலகில் ஓடி திரிபவர்களுக்கு குழந்தைகளை கவனிக்க நேரம் இல்லை... அடம் பிடிக்கும் அழும் குழந்தைகளுக்கு போனை தூக்கி தங்கள் பாரத்தை குறைத்து கொள்கிறார்கள்...

விளைவு குழந்தையே அனைத்தையும் கற்று கொள்கிறது... அந்த இடத்தில சமூகம் பங்கு வகிக்கிறது... ஆராம்பம் பெற்றோர் அதை வளர்த்து விடுவது சமூகம்..

அம்மா அப்பாக்கு தெரியாத விடயங்கள்.கூட குழந்தைக்கு.தெரிகிறது... சில இடங்களில் இது பெருமையான விஷயம்...ஆனால் இதனால் பல சமூக சீர்கேடுகள் நடப்பது மறுக்க முடியாத உண்மை.. போனை கொடுக்கும் போது குழந்தைகள் எது எல்லாம் பார்க்கலாம் பார்க்க கூடாது என்ற கட்டுப்பாட்டை ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டும்... அவர்கள் மீதான பெற்றோரின் முழு மூச்சான கவனிப்பு பிழை செய்ய ஆரம்பிக்கும் குழந்தைகளை அப்போதே திருந்த செய்ய முடியும்.. சமூகம் நல்லவை கெட்டவை உள்ளடக்கியது தான்..நல்ல விதமான சேர்க்கைகளை அடைபவன் நல்லவன் ஆகின்றான்.. கெட்ட சேர்க்கை அடைபவன் கெட்டவன் ஆகின்றான். .. ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் அவர்கள் சேர்க்கைகளை வரையறுத்தால் குழந்தைகளை நல்ல குடிமகனாக ஆக்க முடியும்.. சமூகத்தை மட்டும் குறை சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. அப்படின்னா எல்லாரும் கெட்டவர்களாக தான் இருக்க வேண்டும்...

" எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே .. அவன் நல்லவன் அவ்வதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.." இது நிஜம்

நன்றி
 
Tamil novel lover

Bronze Winner
Hi friends. Sorry I forgot to introduce me. Wherever I chat in the blog the friends over there knows my name. So I forgot here.
I’m “Nisha Nandini”

When I enter in this site for the first time I know nothing here. So I just gave this name. Now I cannot change.

வணக்கம் தோழிகளே நான் இந்த பக்கத்திற்கு வரும் பொழுது தெரியாமல் இந்த பெயரை கொடுத்து விட்டேன் பிறகு என்னால் மாற்ற முடியவில்லை.

நான் கருத்து பதியும் மற்ற பக்கங்களில் அனைத்து தோழிகளுக்கும் எனது பெயர் தெரியும். அதனால் இங்கு நான் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள மறந்து விட்டேன்.

நான் “நிஷா நந்தினி”
 
தாமரை

தாமரை
ஹாய் நண்பர்களே..

கொஞ்சம் லேட் ஆயிடுச்சு ..

வயதை மீறிய மன முதிர்ச்சி நூறு வீதம் தவறானது என்று நான் சொல்ல மாட்டேன்... வளர்ந்து வரும் டெக்னாலஜி உலகில் தாக்கு பிடிக்க அவசியமான ஒன்று... அதில் பல எதிர்மறை விஷயங்களும் இருப்பது varuthamana விடயம்

இதற்கு அடி போடுபவர்கள் பெற்றோர்கள் தான் .. இயந்திர உலகில் ஓடி திரிபவர்களுக்கு குழந்தைகளை கவனிக்க நேரம் இல்லை... அடம் பிடிக்கும் அழும் குழந்தைகளுக்கு போனை தூக்கி தங்கள் பாரத்தை குறைத்து கொள்கிறார்கள்...

விளைவு குழந்தையே அனைத்தையும் கற்று கொள்கிறது... அந்த இடத்தில சமூகம் பங்கு வகிக்கிறது... ஆராம்பம் பெற்றோர் அதை வளர்த்து விடுவது சமூகம்..

அம்மா அப்பாக்கு தெரியாத விடயங்கள்.கூட குழந்தைக்கு.தெரிகிறது... சில இடங்களில் இது பெருமையான விஷயம்...ஆனால் இதனால் பல சமூக சீர்கேடுகள் நடப்பது மறுக்க முடியாத உண்மை.. போனை கொடுக்கும் போது குழந்தைகள் எது எல்லாம் பார்க்கலாம் பார்க்க கூடாது என்ற கட்டுப்பாட்டை ஒவ்வொரு பெற்றோரும் கவனிக்க வேண்டும்... அவர்கள் மீதான பெற்றோரின் முழு மூச்சான கவனிப்பு பிழை செய்ய ஆரம்பிக்கும் குழந்தைகளை அப்போதே திருந்த செய்ய முடியும்.. சமூகம் நல்லவை கெட்டவை உள்ளடக்கியது தான்..நல்ல விதமான சேர்க்கைகளை அடைபவன் நல்லவன் ஆகின்றான்.. கெட்ட சேர்க்கை அடைபவன் கெட்டவன் ஆகின்றான். .. ஆரம்பத்திலேயே பெற்றோர்கள் அவர்கள் சேர்க்கைகளை வரையறுத்தால் குழந்தைகளை நல்ல குடிமகனாக ஆக்க முடியும்.. சமூகத்தை மட்டும் குறை சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.. அப்படின்னா எல்லாரும் கெட்டவர்களாக தான் இருக்க வேண்டும்...

" எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே .. அவன் நல்லவன் அவ்வதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.." இது நிஜம்

நன்றி
அருமையான பதிவு பேபிகுட்டி😍😍😍👌👌👌👌👌👌
 
வாசுகி

Bronze Winner
மிக அருமையான தலைப்பை தேர்வு செய்து..முதல் அடி எடுதது வைத்து.....அதனை விவாதம் செய்யலாம்....என அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி...அதற்காக பல ஏற்பாடுகளை செய்து ஒருங்கிணைத்து..

என மிக அழகா கொண்டு போயிருக்கீங்க....வாழ்த்துக்கள்... 💖💖💐💐💐💐💐
@வாசுகி
@fathima nuhasa
@Varu thulasi
@Srisha

@Srisha தொடர்பு கொண்டபோது..மிகவும் மகிழ்ச்சியாக..பெருமையாக...உணர்ந்தேன்...மிகுந்த ஆர்வமாகவும்...

என ஆர்வம் எதிர்பார்ப்பு...அனைத்தையும் முழுமை செய்வதாக இங்கே ...விவாதம் நடந்தது ..

அதற்கு @RamyaRaj @Andal Arugan @Tamil novel lover @Samvaithi007 @Deepagovind @preti @Amudhakannan @Vidhyasuresh @meenakshi27 இவர்களின்..அருமையான..ஆழமான..தெளிவான கருத்து பகிர்வுகளே காரணம்..👌👌👌👏👏👏👏👏👏

பத்து மணிக்கு..அனைவரின் கருத்துக்களை தொகுப்பாக எடுத்து வருகிறேன்😍😍👍👍👍👍
Romba tnx ka
 
fathima nuhasa

ரொம்ப ரொம்ப நன்றி கா... 😍😍😍😍
 
Samvaithi007

Bronze Winner
தோழிகளே முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .... இன்றைய குழந்தைகளின் முதிர்ச்சிக்கு காரணம் பெற்றோர்களா.... சமூகமா....

சற்று ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள்.... நன்மை எது தீமை எது .... எதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் .... இந்த சமுதாயத்தின் கட்டமைப்பு எப்படி பட்டது என்பதை பெற்றோர்களாகிய நாமே அவர்களுக்கு போதிக்கின்றோம்... பின்னரே சமுகத்தினரை சந்திக்கின்றனர்... மறுக்க முடியாத சத்தியமான உண்மை....

முதிர்ச்சி என்பது நமக்குள்ளே நாம் தேடுவது... தேடல் தொடங்கும் பொழுது வினாவாக உருவெடுக்கும் .... நன்மையாக இருந்தாலும் சரி தீமையாக இருந்தாலும் சரி..... விடைகாண முயலுகையில் கேள்வி எதை சார்ந்து பிறக்கிறதோ அங்கே தான் விடையும் கிடைக்கும்...அப்பொழுது அவர்களின் தேடல் கூட்டுக்குள் புழு அல்ல... பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தின் எதை சார்ந்ததாகவும் இருக்கும்...
முதிர்ச்சி என்பது என்பது மனம் சார்ந்த . முன்னனேற்றம்...தேடலை பெற்றோர்கள் வழி நடத்தலாம்.... அவர்களும் சமுகத்தை நோக்கி தான் பயணிக்கினறனர்... சமுகம் தனியான ஒன்றல்ல .... கட்டமைப்பான குடும்பங்களின்
கூட்டமைப்பே....நம் தேடுதல் என்பது நம்மை சார்ந்தாக மட்டும் இருக்காது... இந்த சமுகத்தின் உள்ளே அதையும் தாண்டி நம் தேடல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்....
சமுகத்தின் அங்கமான நாம் பிள்ளைகளின் முதிர்ச்சிக்கு காரணம் சமுகமே என்று கூறுகிறேன்...ஏனென்றால் . நாமும் அதனுள்ளே அதனோடு இசைந்து வாழ இனிமையாக வாழ தான் அத்தனையும் செய்கின்றோம்...

அதனோடு பயணித்து நம் தேடலையும் தொடர்கின்றோம்......
 
Top