All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் சரி..... நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள்., பல பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்ததே சமூகம்...... அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் போது குழந்தைகள், சமூகம் எவ்வாறு தவறாகும்....?????

நீங்கள் சொல்லும் அந்த சமூக தவறு., சிலர் தாம் ஒரு பெற்றோரும் என்பதை மறந்து அதனால் வரும் விளைவே....😔
இதை பற்றி நானும் பலமுறை சிந்தித்தது உண்டு தோழி.. ஒவ்வொருவரும் சரியான பாதையில் சென்றோமேயானால் வழி தவறுவது எங்கனம்.. அருமையான கருத்துக்கள்.. வாழ்த்துக்கள்..
 

Tamil novel lover

Bronze Winner
Amam da entha குழந்தை முறையான பெற்றோர் வளர்ப்பில் மெச்சூரிட்டி வளருதோ அது நல்வழில தான் போகும் எந்த தீய சக்தியும் அதை அண்ட முடியாது
சரியா சொன்னீர்கள் தோழி 👍👍👍
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் சரி..... நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள்., பல பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்ததே சமூகம்...... அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் போது குழந்தைகள், சமூகம் எவ்வாறு தவறாகும்....?????

நீங்கள் சொல்லும் அந்த சமூக தவறு., சிலர் தாம் ஒரு பெற்றோரும் என்பதை மறந்து அதனால் வரும் விளைவே....😔
சமூக சரி யெனில் சில பெற்றோர் தவறு பாதிப்பு இல்லை ஆனால் இங்க பலர் சரியாக பாதிக்கப்பட சமூகம் உதவி செய்கிறது
 

வாசுகி

Bronze Winner
அனைவரது கருத்துகளும் மிக அருமை... இத்துடன் விவாத நேரம் முடிவடைகிறது....


இனி பார்வையாளர்கள் நேரம்...

கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி....


இன்று இரவு தாமரை சகோதரி உங்களது கருத்துக்கு பாராட்டு மற்றும் முற்று கருத்து வைப்பார்.....

நன்றி நன்றி நன்றி மக்களே... !!!!!!

நிச்சயமாக இத்தகைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கவில்லை.


முதல் முயற்சி என்பதால் ஆரம்பம் முதலே பதற்றம் மட்டும் தான் எங்களிடம்...
எனினும் தொடர்ந்து முயற்சித்தோம்.. அதன் பலனை இங்கு கண் கூடாகக் காண்கிறோம்...


தாமரை மா.. @தாமரை எங்களை நம்பி தலைமை பொறுப்புக்கு வந்தமைக்கு மிக்க நன்றி..
இது தான் எங்களுக்கான முதல் உந்துதலாக அமைந்தது...

அடுத்தது தயங்காமல் கலந்து கொண்டு விவாதம் செய்தவர்களை பாராட்டியே ஆக வேண்டும்
@Tamil novel lover
@RamyaRaj
@meenakshi27
@Amudhakannan
@Samvaithi007
@preti
@Deepagovind
@Vidhyasuresh

ரொம்ப நன்றிகள்

இவை அனைத்திற்கும் முழு முதன் காரணமாக எங்களை இணைத்த sms site மற்றும் எங்களது கருத்துகளுக்கு எப்பொழுதும் மதிப்பளிக்கும் ஸ்ரீ மேமிற்கு @Sasimukesh நன்றிகள்

குறிப்பு - இந்த முறை எங்களால், நேரம் இன்மையால் பல பேரை தொடர்பு கொள்ள முடிய வில்லை அடுத்த முறை நிச்சயம் இன்னும் சிறப்பான விவாதத்துக்கு வழி வகுப்போம்....


மீண்டும் ஒரு முறை அணைவருக்கும் நன்றிகள்...

இப்படிக்கு,
கிருதிஷா😍
@வாசுகி
@Varu thulasi
@fathima nuhasa
@Srisha
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விவாதம் முடிந்ததா..??
எல்லோரும் அருமையாக அவங்கவங்க கருத்தைச் சொன்னீங்க.. அனைத்தும் வேல்யூவான பாயிண்ட்ஸ்..

இனி நான் என் கருத்தை சொல்லலாமா..
 

fathima nuhasa

Bronze Winner
விவாதம் முடிந்ததா..??
எல்லோரும் அருமையாக அவங்கவங்க கருத்தைச் சொன்னீங்க.. அனைத்தும் வேல்யூவான பாயிண்ட்ஸ்..

இனி நான் என் கருத்தை சொல்லலாமா..
சொல்லலாம்... 😍😍😍😍
 

Bruntha ( gashini)

Bronze Winner
எல்லாம் சரி..... நீங்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள்., பல பெற்றோரும் குழந்தைகளும் சேர்ந்ததே சமூகம்...... அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கும் போது குழந்தைகள், சமூகம் எவ்வாறு தவறாகும்....?????

நீங்கள் சொல்லும் அந்த சமூக தவறு., சிலர் தாம் ஒரு பெற்றோரும் என்பதை மறந்து அதனால் வரும் விளைவே....😔
சரியாக சொன்னீர்கள்,
 

Josyyy

Active member
ஆறு பேருமே உங்கள் கருத்துக்களை நல்லா ஆழமா பதிவு பண்ணியிருக்காங்க. முதலில் வாழ்த்துக்கள் சகோதரிகளே அறுவருக்கும். சமூகம் என்பது குழந்தைகள் பெற்றோர்கள் உறவினர்கள் சேர்ந்தது தான். ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தான் காரணம். இதில் பெற்றோருக்கு தான் முதல் முற்று கடமை இருக்கிறது மற்றும் தன் மக்களை நல்லவர்களாக சமூக பொறுப்பு உள்ளவர்களாக மாற்றுவது அவர்களின் கடமை மற்றும் உரிமையும் கூட. ஒரு குழந்தை பிறக்கும் பொழுதில் இருந்து விவரம், வெளி உலகம் தெரியும் வரை இருப்பது பெற்றோரிடம் முக்கியமாக தாயிடம். சிறு வயதில் பார்க்கும் கேட்கும் விசயங்கள் தாம் அவர்கள் வளரும் பொழுது சிற்சில தவறுகள் செய்யும் பொழுது அரணாக அவர்களை காக்கும். சிறு வயதிலேயே ஒரு குழந்தைக்கு நல்லவனாக வளர வேண்டிய அவசியத்தை சொல்லி தர வேண்டியது பெற்றோரின் கடமை. நற்பண்புகள் ஓட்டி வளர்க்க வேண்டியதும் அவர்கள் தாம். அப்படி வளர்த்தால் மட்டும் போதுமா? போதாது, அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம் கண்காணிப்பு இருக்க வேண்டும். அவன்/அவள் தவறு செய்யும் போது திருத்த வேண்டும். அடிமையாக நடத்தாமல் நண்பனாக நடத்தினால் அவர்கள் அனைத்தையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வார்கள். என்ன நடந்தாலும் பெற்றோரிடம் மறைக்காமல் சொல்லுவது போல் ஒரு சுமூகமான உறவு நிலை இருக்க வேண்டியது மிக அவசியம். பிள்ளைகளுக்கு வசதியை கொடுக்கலாம் தப்பில்லை அது எப்படி எவ்வளவு உழைப்பு அப்பறம் வருதுண்ணும் சொல்லணும் அது ரொம்ப அவசியம். சொகுசு வாழ்க்கை என்பது விட ஆரோக்கியமான வாழ்க்கை அமைத்து கொடுத்தால் நலம். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு எதுக்கு smartphone, அதுவும் பள்ளிக்கு கொண்டு செல்ல அனுமதிப்பது ரொம்பவே தவறு. 90களில் பள்ளி சென்றவர்கள் mobile இல்லாமல் படிக்கவில்லையா? இல்லை சாதிக்கதான் இல்லையா?. இப்பொழுது இருக்கும் கல்வி முறைக்கு தேவைப்பட்டாலும் அதை வீட்டில் ஒரு கணிணி வைத்து அவர்கள் தேவையை நிறைவேற்றலாம் அல்லது பெற்றோரின் அலைபேசியை உபயோகிக்கலாம் அவர்களின் மேற்பார்வையில். ஒவ்வொரு பெற்றோரும் அலைபேசியின் நன்மை தீமையத் தெரிந்து இருக்க வேண்டும். பகட்டுக்காக வாங்கி கொடுக்க கூடாது. படிக்காத பாமரர்களும் கூட பிள்ளையின் ஆசைக்காக வாங்கி தருகின்றனர். அவனின்/அவளின் ஆசை எங்கே தொடங்குகிறது சக தோழமைகளிடம் இருப்பதை பார்த்து தானே. என்னதான் தொலைக்காட்சி மூலமாக அலைபேசி பற்றி அறிந்தாலும் குடும்ப நிலை தெரிந்த பிள்ளை கேட்காது. அதையும் மீறி கேட்கிறது என்றால் கூட இருப்போரிடம் கெத்து காட்ட, அவர்களுக்கு ஈடாக தானும் வைத்திருக்க விரும்புவது தாம் முக்கிய காரணம். ஒரு மாணவனிடம் இருப்பது அவனுக்கு மட்டும் தீமை அல்ல கூட இருப்போருக்கும் தான். யாரிடமும் இல்லாத (தோழமைகளிடம்) ஒன்றை அவ்வளவு ஆர்வமாக பார்க்காது.
 

Josyyy

Active member
ஒவ்வொரு பெற்றோரும் தன் பொறுப்பு உணர்ந்து குழந்தைகளை வளர்த்தால் சமூகம் தன்னால் நல்வழியில் வந்து விடும். நாம் சீரியல் பார்ப்பதற்காக குழந்தைக்கு mobile, tab, iPad, laptop என்று குடுத்தால் அப்பறம் எப்படி சமூகம் வளரும். இணைய தளத்தில் ஒரு பக்கத்தில் நுழைவதற்கு முன்பு எவ்வளவு தேவை இல்லாத விளம்பரங்கள், காணொளி காட்சிகள், கவர்ச்சி புகைப்படங்கள் வருகிறது என்று தெரியாதவர்கள் அல்ல நாம். பருவ வயதில் இருப்போருக்கு ஒரு வித ஆர்வத்தை அது தூண்டி விடதான் செய்கிறது. எவ்வளவு adblockers போட்டாலும் அதையும் மீறி விளம்பரம் வரதான் செய்யுது. அவங்களுக்கு எது நல்லது, எது தேவை இல்லாதது அப்படினு கூட இருந்து சொல்லி கொடுத்து வழி நடத்தனும். Parenting அப்படிங்கரது சுலபமான வேலை கிடையாது அதுவும் இந்த காலத்தில். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் சொல்லவே தேவை இல்லை. ஊடகங்களுக்கு சமூக பொறுப்பு அப்படினு ஒன்னு இருக்கானே தெரியலை. இப்போ வர பெரும்பாலான படங்களும் சமூக பொறுப்பு இல்லாம தான் இருக்கு. அதை எல்லாம் பார்க்கும் குழந்தையின் மனநிலை மோசமாக தான் போகும். அவர்கள் பார்ப்தையும் அதன் சரி தவறையும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமையே.
 
Top