All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

Eswarikasirajan

Active member
"மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"

சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது.

குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது.

அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன

நம் நாட்டில் மும்பை ;கோவா; புனே;டெல்லி;பெங்களூரு; சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள்

“நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம்.

உலகம் முழுவதுமிருந்து பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள பெண்களைத் தேடி தாய்லாந்துக்கு வரும் கூட்டத்தைப் போல கோவாவுக்குக் குழந்தைகளைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.

‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்கவைத்துக்கொள்வார்கள்.

ஒரு நாள், மூன்று நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என பேக்கேஜெல்லாம் உண்டு. ஒரு நாளைக்கு ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை கட்டணங்கள் கைமாறும்.

இயற்கைக்கு மாறான என்னென்ன வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளிலும் குழந்தைகளை அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.

இதற்காக அங்கு அரசியல் பிரமுகர் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளில் கோடிகளில் பணம் விளையாடுகின்றன.

அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடங்களுமே நரகத்துக்குச் சமம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக கோவா மட்டுமல்லாமல், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘பீடோ ஃபைலிக்’ நோயாளிகள் சுற்றுலாப் பயணிகளாக சாரை சாரையாக வருகிறார்கள்.

தமிழகத்தில் சென்னை - வடபழனி, சாலிகிராமம், கே.கே.நகர், தி.நகர், கோடம்பாக்கம், போரூர் இங்கெல்லாம் பாலியல் தொழிலைவிட கூடுதல் வருமானம் கொட்டும் தொழிலாக மாறியிருக்கிறது ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’.

ஆண்குழந்தைகளும் பெண் குழந்தைகளும் இந்த தொழிலுக்காக குறி வைத்து கடத்தபடுகிறார்கள்

குழந்தைகள்தொலைந்துவிட்டால்...நாம் என்ன செய்ய வேண்டும்

விபத்தில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்குக் காணாமல்போன குழந்தைகளுக்கு முதல் இரண்டு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்’ என்கிறார்கள் காவல் துறையினர்.

எனவே, குழந்தை காணாமல்போனது உறுதியானால் உடனடியாக அவசர எண் 100, ‘சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098’ மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்துக்குக் குழந்தையின் அங்க அடையாளங்கள், உடையின் நிறம் உள்ளிட்ட தகவல்களைப் பதிவுசெய்யுங்கள். புகைப்படம் மிகமிக அவசியம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இணையம் வழியாக மாநகரக் காவல் துறை ஆணையருக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

வீட்டின், அலுவலகத்தின் பணியாளர்கள், ஓட்டுநர்கள், அக்கம்பக்கத்தில் யார் மீது சந்தேகம் என்றாலும் அவர்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு காவல் துறையிடம் தகவலைச் சொல்லுங்கள்

. இவையெல்லாம் முதல் ஒரு மணி நேரத்தில் நடக்க வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களையும் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் முழுவதுமாக தங்களது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள்.

கட்டணம் வசூலிக்கும் சுங்கச் சாவடிகள் தொடங்கி, சோதனைச் சாவடிகள், நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள், ‘ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு ஆகிய இருசக்கர வாகன அணியினரும் களமிறக்கப்படுவார்கள்

எந்த கடுமையான சட்டமும் யாரையும் கட்டுப்படுத்தாது. ஏனென்றால் நம் நாட்டில் சட்டத்திற்குள் ஓட்டை இல்லை ஓட்டைக்குள் தான் சட்டமே இருக்கிறது. நம் குழந்தைகளை முடிந்த வரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்

.இது அரசியல் பதிவு அல்ல. குழந்தைகளின் பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த Group active members எல்லாருமே இந்த பதிவை படிக்கனும் தங்கள் கருத்துக்களையும் குழந்தைகளின் பாதுக்காப்பிற்கான ஆலோசனைகளையும் பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!

- ஜி.அர்ச்சனாLLM. , PGDFL. , MBA. , DHE. ,
அரசு சிறப்பு குற்றப் பொது வழக்கறிஞர்
மாவட்ட விரைவு வழி மகளிர் நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்டம்

Wats up pathivu vizhipudan erukave intha pathivu
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Unmayile ippo natpukku romba thevayaana karuththai solli irukkeenga mam.. many many thanks...thanks...👏👏👏
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விவாததிற்கு வந்திருக்கும்
அனைவருக்கும் நமஸ்தே !!!! வந்தனம் !!!!

இனிய மாலை(advance) வணக்கங்கள் !!!!

எல்லாரும் நல்லா சாப்பிட்டு தெம்பா விவாத நிகழ்ச்சிக்கு வந்திருப்பிங்க .. ((ஐயோ lengthy dialogue ஆஹ் வருமோ... சரி நம்ம நேரடியா மேட்டர்க்கு போகலாம் ))

தளத்தில் பொழுதுபோக்கோடு ஆக்கபூர்வமான கருத்தை விவாதமாக வைக்க அனுமதி கேட்டதும் அனுமதி அளித்த ஸ்ரீ மேமிற்கு @ஶ்ரீகலா எங்களது முதல் நன்றிகள்....

அடுத்தாக கருத்தாளர்கள்,,, நேரம் கிடைத்து பங்கு பெற்று தங்களது வாதத்தை முன் வைக்க போகும் நண்பர்களுக்கு நன்றி .... !!!!

நேரமில்லாது கலந்து கொள்ளா விட்டாலும் தொடர்ந்து ஆதரவு தரும் மற்ற கருத்தாளர்களுக்கும் எங்களது நன்றி.... !!!!

இவை தாண்டி கேட்டதும் ஆதரவு அளித்து விவாதத்தின் நடுவராக களம் இறங்கும் நம் தாமரை சகோதரிக்கும் @தாமரை நன்றிகள் .... !!!!
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விவாதத்தின் தலைப்பு :::

இன்றைய குழந்தைகளின் வயதை மீறிய முதிர்ச்சிக்கு (இரண்டு விதத்திலும் )காரணம் பெற்றோரா???? அல்லது சமூகத்தின் வழி நடத்தலா????

விவாத நேரம் : இன்று மூன்று மணி
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விவாதத்தின் நேர்த்திக்காக சில விதிகள் :::

Rule 1: இங்கு அரசியல கருத்து கொண்டு பேச வேண்டாம்....

Rule 2 : விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் யார் மனதையும் புண்படும் படி பேசிட வேண்டாம என கேட்டு கொள்ள படுகிறது ....

இது சாதாரண கருத்து விவாதம் தான்.....

உங்களது கருத்துக்கள் அல்லது வாதங்கள் யாரையும் நேரடியாகவோ அல்லது உள்ளர்ந்தோ தாக்குவதாக இருக்காது பார்த்து கொள்ளுங்கள் ......

யாருடைய தனிப்பட்ட விஷயங்ளையும் கருத்து விவாதத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொள்கிறோம

Rule 3 : ஆங்கிலம் தவிர்த்து முடிந்த வரை முழுதும் தமிழில் பேச பாருங்கள்..... நீங்கள் சொல்லும் கருத்து அல்லது விவாத பொருள் அனைத்து மக்களையும் சேர போகிறது..... அதனால் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருப்பது அவசியம்
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்வையாளர்கள் உங்களது கருத்தை 4.30 முதல் 8 மணி வரை பகிர்ந்து கொள்ளலாம்......

உங்களது கருத்து மற்றும் எங்களது கருத்தாளர்களுக்கு உங்களது பாராட்டையும் அந்த நேரத்தில் சொல்லலாம்.....

நன்றி .... !!!!!
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Srisamyuktha

Bronze Winner
Top